Everything posted by கிருபன்
-
ஞானசாரதேரருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - ஜனாதிபதிக்கு பௌத்த மததலைவர்கள்கடிதம்
இனவெறியன் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு ஈழத்திலுள்ள இந்துக்களை பிரதிபலிக்காத மோடியின் குழு கோரிக்கை Vhg மே 23, 2024 மோடியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் RSS அமைப்பின் இலங்கை கிளையின் ஒரு பிரிவாக இலங்கை இந்து சம்மேளனம் என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பு மதவெறியன் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரி வருகிறது. இனவாதியான தேரர் பொதுபலசேனா என்ற அமைப்பின் செயலாளராக கடந்த காலத்தில் ஏனைய மதங்களை குறிப்பாக இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டும் போலீஸ் அதிகாரியை தாக்கியும் நீதிமன்றத்தை அவமதித்தும், இனக்கலவரங்களை தூண்டி இஸ்லாமியர்களின் உடைமைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உட்பட பலவித அதர்ம செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன் அடாவடி குற்றங்களையும் புரிந்து வந்துள்ளார். புலிகளுக்கு எதிரான போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக .கருத்து தெரிவித்த நிலையில் 2010 இல் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மறைவுக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய மனைவி சந்தியாவை அச்சுறுத்திய தேரர் youtube தளம் மூலம் தொடர்ச்சியாக பௌத்த சிங்கள இனவாத மதவாத கருத்துக்களை பரப்பி வந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2019 பதவிக்கு வந்த சக இனவாதியான கோத்தபாயவினால் ஜனாதிபதி மன்னிப்பு என்ற பெயரில் விடுவிக்கப்பட்டதோடு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு இனவெறி கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இலங்கையில் ஆயுதப்படையினர் மற்றும் இனவெறிக் கும்பல்களினால் அழிக்கப்பட்ட பல சைவ மற்றும் இந்துக் கோவில்களுக்கு எந்தவித ஆதரவையும் வழங்காத மோடியின் மதவாதக் குழு இலங்கையில் உட்புகுந்து இன வெறியன் ஞானசார தேரரின் விடுதலையை கோரி நிற்பது குறித்து ஈழத்தமிழர்களும் சைவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இதேவேளை ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தில் இருந்து பல்டி அடித்து தேரர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ள உலக தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றின் தற்போதைய கூட்டாளிகள் ஆகியுள்ள மகாநாயக்கர்களும் தேரர்களும் கூட தேர்தலுக்கு முன்னர் ஞானசார தேரரின் விடுதலையை கோரி நிற்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் செய்த எந்த ஒரு கொடுஞ் செயலுக்கும் தவறுகளுக்கும் வருந்தாத மன்னிப்பு கோராத இவரை விடுதலை செய்வது பொருத்தமானதா? மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகெலாம்! Dr முரளி வல்லிபுரநாதன் https://www.battinatham.com/2024/05/blog-post_202.html
-
இயற்கையை சீண்டியது போதும்
இயற்கையை சீண்டியது போதும் ச.சேகர் காலம் மாறிவிட்டது. காலநிலையும் மாறவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வேகமாக இயங்கும் உலகில், மனிதனின் தேவைகளும், நுகர்வு முறைகளும் மாறுபட்டுள்ளது. இதனால் சூழலுடன் ஒன்றித்து வாழும் வாழக்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூழலை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து, இயற்கையை சீண்டுமளவுக்கு மனிதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியாகியும், அவை தொடர்பில் மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வு இல்லையா அல்லது அவை தொடர்பில் அக்கறை இல்லையா என்பதைப் பற்றியே கேட்கத் தோன்றுகின்றது. ஆம், அண்மைக் காலமாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்தேறும் இயற்கை அழிவுச் சம்பவங்களை எடுத்துப் பார்த்தால், மனிதன் இயற்கையை எந்தளவுக்கு சீண்டியுள்ளான் என்பது தெளிவாகின்றது. சில உதாரணங்களாக டுபாயில் கடந்த மாதம் ஏற்பட்ட கடும் மழை, 1940 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் அந்நாட்டில் மழைவீழ்ச்சி பதிவு செய்வது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பதிவாகியிருந்த மிகவும் அதிகூடிய மழைவீழ்ச்சி 24 மணி நேரத்தினுள் பெய்திருந்தது. விமான நிலையம் உட்பட, நாட்டின் பிரதான வீதிகள், குடியிருப்புகள் அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கின. அந்நாட்டில் வடிகான் அமைப்பு முறையாக இன்மை இதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தாலும், ஒரு வருடத்தில் பெறப்பட வேண்டிய மழைவீழ்ச்சி, ஒரே நாளில் பெய்துத் தீர்த்தமை உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, பிரேசிலின் தென்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு வார காலப்பகுதிக்கு மேலாக பெய்த அடைமழை காரணமாக அங்கும் பெருமளவு உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டிருந்தன. இவ்வாறு ஒரு பகுதியை அடை மழை வாட்டி எடுக்க, மறுபுறம், ஆசிய பிராந்திய நாடுகளில் கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இலங்கை உட்பட, வியட்நாம், தாய்லாந்து அடங்கலாக இந்த வெயிலின் கடும் வெப்பத் தாக்கத்தை உணர முடிந்தது. வெப்பநிலை மனித உடலுக்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு 45 பாகை செல்சியசுக்கு அப்பால் பதிவாகியிருந்தது. இலங்கையிலும், வட பிராந்தியத்தில் அகோர வெயில் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தென்பகுதியில் காலி முதல் அம்பலங்கொட வரையான கரையோரப் பகுதியில் கடல்நீர் நிலத்தினுள் ஊடுருவும் சம்பவங்களும் பதிவாகியிருந்தன. வருடாந்தம் இந்த காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றமை வழமையாக இருந்தாலும், இம்முறை அதன் தாக்கம் அதிகரித்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இவ்வாறு வெப்பத்தின் தாக்கம் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் மழை வீழ்ச்சியும், அதனால் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் தாக்கமும், சேதங்களும் அதிகமாக இருக்கும். மலைநாட்டுப்பகுதியில் மண்சரிவுகள் தவிர்க்க முடியாத சம்பவங்களாக இருக்கும். இவ்வாறு தொடர்ந்து அசாதாரணமான முறையில் காலநிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, நீண்ட கால அடிப்படையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஏன் இவ்வாறான அசாதாரண மாற்றம் ஏற்படுகின்றது? எல்-நினோ, லா-நினோ என பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும், அவை ஏற்படவும் மனிதனின், இயற்கையை சீண்டும் செயற்பாடுகளே காரணமாகின்றன. நிலக்கரி எரிப்பில் ஆரம்பித்து, காடழிப்பதுடன், நீரோடைகளை மறித்து, அவற்றை நிரப்பி கட்டிடங்களை அமைப்பது முதல், பிளாஸ்ரிக் கழிவுகளை உருவாக்குதல் வரை என பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். புவி வெப்படைவது அதிகரிப்பதன் காரணமாக இந்த மாற்றம் ஏற்படுகின்றது. புவியின் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகள் உருகி, அவை கடல் நீருடன் கலந்து, கடல் நீர்மட்டம் அதிகரிப்பதும், புவி வெப்பச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதிகாரத்திலுள்ளவர்களும், தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, இவ்வாறான இயற்கையுடன் சீண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை காண முடிகின்றது. அண்மைக்காலத்தில் அவ்வாறு நடந்தேறிய ஒரு சம்பவத்துக்கான உதாரணமாக, மரம் வெட்டுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூழல்சார் செயற்பாட்டு அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்ட போது, அமைச்சருக்கு நெருக்கமான நபர் ஒருவர் “ஒட்சிசனை உண்ண முடியுமா?” என கேள்வி கேட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி, பலர் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இவ்வாறு உயர் மட்டத்திலிருக்கும் அதிகாரிகள் முதல் இந்த சூழல் மாசு, இயற்கையுடன் சீண்டுதல் போன்ற விடயங்கள் பற்றி போதிய அறிவின்மை தெளிவாகின்றது. சுற்றாடல் அமைச்சர் என ஒருவர் காணப்பட்டாலும், அந்த அமைச்சினால் சூழலை பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. வெறுமனே இங்கு குப்பை கொட்டினால் அபராதம், இது வனாந்தரப் பகுதி, உட்பிரவேசிக்கக் கூடாது, எதிர்கால சந்ததிகளுக்காக இந்த வளங்களை பாதுகாக்க வேண்டும் என ஆங்காங்கே அறிவுறுத்தல் பதாதைகள் மாத்திரம் நிறுவுவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த போதுமானதாக இல்லை. ஒவ்வொரு தடவையும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் போது, மனித உடலினால் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பநிலை நிலவும் போது, உயர்ந்த பகுதிக்கு செல்வது, தற்காலிகமாக தஞ்சமடைவது, வாயு குளிரூட்டிகளை பயன்படுத்துவது, நகரங்களை அண்மித்து வசிப்பவர்களாயின் அருகாமையிலுள்ள வாயு குளிரூட்டப்பட்ட அங்காடிக்கு அல்லது பல்பொருள் விற்பனை நிலையத்துக்கு சென்று குளிர் காற்று வாங்குவது போன்ற பாதிப்புகளிலிருந்து தம்மை உடனடியாக பாதுகாத்துக் கொள்ளும் விடயங்களில் கவனம் செலுத்துகின்றனறே தவிர, இவ்வாறான மாற்றம் ஏற்படக் காரணம் என்ன என்பதை உணர்ந்து செயலாற்ற மறுக்கின்றனர். மறுபக்கத்தில் வியாபார நிறுவனங்கள். இலாபமீட்டும் நோக்கில் இயங்குகின்றனவே தவிர, பெயருக்காக தாம் சூழலில் அக்கறை காண்பிக்கின்றோம், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் என தெரிவித்து செயற்பட்டாலும், உண்மையில் உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களினால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இல்லை என்பதே உண்மை. இதை எந்த பல்தேசிய நிறுவனமும் பகிரங்கமாக மறுத்ததாக இல்லை. அவ்வாறு வியாபார செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களினால் ஏற்படும் சூழல் பாதிப்பை கண்காணிப்பதற்கு விதிமுறைகள் உறுதியானதாக இல்லை. குறிப்பாக இவ்வாறான நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள், வெப்ப வெளியேற்றம், அபிவிருத்தி எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் விஸ்தரிப்புகள் போன்றன நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காலநிலை தாக்கத்துக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. நெருப்பை தீண்டினால் சுடும் என்பது தெரியும். அதனால் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதுபோலத்தான் இயற்கையும், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடும், சூழலில் தாக்கம் செலுத்தி, இயற்கையின் சீற்றத்துக்கு வித்திடுகின்றது. தொழில்நுட்ப விருத்தி எனும் பெயரில், மனிதன் ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி, இயற்கையுடன் ஒன்றித்துப் போவதாக தெரியவில்லை. இதில் துரிதமாக மாற்றம் ஏற்படாவிடின், எதிர்வரும் காலங்களில் இதை விட மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இயற்கையை-சீண்டியது-போதும்/91-337233
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
ஆரியகுளத்தை ஆக்கிரமித்த இராணுவத்தினர்! ஆதவன்) யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் அனுமதி பெறப்படாமல் தான் வெசாக் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார். மாநகரசபையின் ஆட்சிக்காலத்தில். யாழ்ப்பாணம் ஆரியகுளதில் எந்தவொரு அலங்காரத்தையும் முன்னெடுக்கும் போதும் அது தொடர்பில் மாநகரசபையிடம் அனுமதி பெறப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆட்சிக் காலத்தின்போது ஆரியகுளத்தில் மதம் சார்ந்த எந்தவொரு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது மாநகரசபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இராணுவத்தால் அங்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது; இராணுவத்தினர் ஆரியகுளத்தை துப்புரவு செய்து தரும்படியே கேட்டனர். ஆனால், அங்கு அலங்காரம் மேற்கொள்ள அனுமதி பெறவில்லை - என்றார். (ச) https://newuthayan.com/article/ஆரியகுளத்தில்_இராணுவத்தால்_அனுமதியின்றி_அலங்காரங்கள்
-
யாழுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி
யாழுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி adminMay 24, 2024 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு வானுர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர். வடக்கிற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார். அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதுடன் , 10 முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/203360/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நாளை வெள்ளி (24 மே) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 06) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றிபெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) RR எதிர் SRH ஆறு பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்லும் எனவும், நான்கு பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் எனவும் கணித்துள்ளனர். வெல்லும் அணியை சரியாகக் கணித்தவர்களுக்கு மூன்று புள்ளிகள் கிடைக்கும். மற்றையவர்கள் மூன்று புள்ளிகளை இழப்பார்கள்! போட்டியாளர் பதில் வீரப் பையன்26 RR முதல்வன் RR சுவி RR ஏராளன் RR நிலாமதி RR அஹஸ்தியன் CSK ஈழப்பிரியன் CSK கல்யாணி SRH கந்தப்பு SRH கறுப்பி SRH எப்போதும் தமிழன் RR வாதவூரான் CSK கிருபன் KKR நீர்வேலியான் CSK கோஷான் சே LSG நுணாவிலான் SRH புலவர் CSK
-
மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம்
மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024 மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா். https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்றைய இரண்டாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிடையே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் இறுதியில் ஒரு ஓவர் மீதமிருக்க 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி அடுத்த Qualifier 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது. ஒருவருமே இன்று விளையாடிய அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணிக்காததால் அனைவரும் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை ஆனால் தலா மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நிலாமதி 64 2 அஹஸ்தியன் 62 3 கல்யாணி 62 4 நுணாவிலான் 62 5 புலவர் 62 6 வீரப் பையன்26 56 7 முதல்வன் 56 8 சுவி 56 9 ஏராளன் 56 10 கந்தப்பு 56 11 எப்போதும் தமிழன் 56 12 வாதவூரான் 56 13 கிருபன் 56 14 நீர்வேலியான் 56 15 ஈழப்பிரியன் 52 16 கோஷான் சே 52 17 கறுப்பி 48
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@நிலாமதி அக்கா, பதில்களை புதிய பதிவில் தந்தாலும் பிரச்சினையில்லை! இது கிரிக்கெட் போட்டி! என்னதான் கனடா, அமெரிக்காவுக்கு விசுவாசம் இருந்தாலும் அவர்கள் சுப்பர் 8 க்கு வருவார்கள் என்பது ரொம்ப ஓவர்!!😱
-
பிரித்தானிய பொது தேர்தலுக்கான காலம் அறிவிப்பு
பிரித்தானிய பொது தேர்தலுக்கான காலம் அறிவிப்பு பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி நடைபெற இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளார். இதனிடையே, ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விடவும் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதுவரையான கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி 44 சதவிகிதத்துடனும் கன்சர்வேடிவ் கட்சி 23 சதவிகிதத்துடனும் உள்ளது. மக்கள் ஆதரவு இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் மார்ச் மாதம் 3.2 சதவிகிதமாக இருந்த விலைவாசி உயர்வு இன்று வெளியான அறிக்கையில் 2.3 சதவிகிதம் என பதிவாகியுள்ளது. அதாவது இங்கிலாந்து வங்கியின் 2 சதவிகிதம் என்ற இலக்கை மிகவும் நெருங்கியுள்ளதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், தேர்தல்களில் கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள கன்சர்வேடிவ் கட்சி பரப்புரையில் மக்கள் ஆதரவைப் பெற முடிந்தால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதேவேளை ரிஷி சுனக் கட்சி 474 கவுன்சிலர்களை இழந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி போட்டியிடுவதில்லை எனவும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/uk-general-election-latest-updates-1716396400
-
போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
“போர் உலா” இதுவரை படிக்காதவர்களுக்கு: https://noolaham.net/project/729/72885/72885.pdf
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மீண்டும் பதிவதில் பிரச்சினையில்லை. 20 அணிகள், முதல் சுற்று, சுப்பர் 8 என்று மாற்றிவிட்டதால் கேள்விகளும் அதிகம். கூகிள் ஷீற்றில் பதிந்தால், சுப்பர் 8 க்கு தெரிவாகக்கூடிய அணிகளைக் காட்டும். அவற்றைக்கொண்டு எப்படி போட்டிகள் நடக்கும். எந்த அணி வெல்லும் என்று இலகுவாகக் கணிக்கலாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள்..
-
தமிழ் சமூகத்தால் இளையராஜா பெற்றதென்ன? தந்ததென்ன?
தமிழ் சமூகத்தால் இளையராஜா பெற்றதென்ன? தந்ததென்ன? -சாவித்திரி கண்ணன் மேல்தட்டு வர்க்கத்தின் நலனுக்கான ஐ.ஐ.டியில் இசைப் பயிற்சிகள் தரவுள்ளாராம் இளையராஜா! இளையராஜா என்ற இசைஞானி உருவானது எப்படி? அவரது வளர்ச்சியின் முழுமையான பின்னணி என்ன? இன்றைக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள் யார்? என்ன நடந்து கொண்டிருக்கிறது..? ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்படவுள்ள இந்த சிறப்பு மையம், ஒரு ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என ஐஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இசைஞானி இளையராஜா தன் வாழ் நாளில் உருவாக்கிய அனைத்து இசைக்கான நோட்ஸ்களையும்( சங்கேதக் குறிப்புகள்) தானமாகத் தர உள்ளாராம்! தமிழகத்தின் தென் மேற்கு மாவட்டமான தேனி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான பண்ணைபுரத்தின் ஒரு எளிய குடும்பத்தில் இருந்து சென்னைக்கு வந்த ராசையா என்ற இளையராஜா இன்று இசையில் சாதனைகள் பல புரிந்து, வரலாறாக மாறி இருக்கிறார். அவர் இசைத் துறையில் விரைவில் பொன் விழா காணவுள்ளார்! இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே எந்த இசை அமைப்பாளரும் இவ்வளவு நீண்ட காலம் திரை இசையில் தங்கள் கொடியை பறக்கவிட முடிந்ததில்லை! ஏனென்றால், திரைஇசையின் ரசனைப் போக்குகள் மாறிக் கொண்டே இருப்பவை! அப்படி மாறிக் கொண்டிருக்கும் இசை உலகில் காலத்திற்கேற்ப தானும் மாறி புதுப்புது இசை வடிவங்களை தருவது தான் இளையராஜாவின் சாதனையாகும். தன் தாயிடமிருந்தும், தன்னைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்களிடம் இருந்தும் இசைப் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் இயல்பாகவே நாட்டுப் புற இசையில் காலூன்றி மேலெழுந்து வந்தவர் தான் இளையராஜா! அவர் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு எல்லாம் அடித்தளமிட்டது அவர் கேட்டும், பாடியும் வளர்ந்த கிராமிய இசை தான்! அதற்குப் பிறகு திரைப் பாடல்களை அப்படியே ஆர்மோனியத்தில் உள்வாங்கி இசை அமைக்கும் அவரது ஆற்றலுக்கு அடித்தளமிட்ட முதல் ஆசான் அவரது அண்ணன் பாவலர் வரதராஜன். பாவலர் வரதராஜன் பொதுவுடமைச் சமூக லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மக்கள் கலைஞர். அவருடன் பட்டிதொட்டியெங்கும் பயணித்த பத்தாண்டுகாலப் மேடைப் பயிற்சி தான் இளையராஜாவிற்கு ஒரு இசை அமைப்பாளனாகும் ஆர்வத்திற்கு அடிக்கோலமிட்டது. பாவலரும், சகோதரர்களும்! ஆயினும், பள்ளிப் படிப்பை கூட முடிக்க வசதி இல்லாத சூழலில், அவர் ஒரு தோட்டத் தொழிலாளியாகவும், கட்டுமானத் தொழிலாளியாகவும் உழன்று கொண்டே, இசைக் கனவில் திளைத்தார். பிறகு சென்னைக்கு சென்று போராடலாம் எனத் துணிந்து வந்து எட்டாண்டுகள் இயங்கிய காலத்தில் அவருக்கு திரை இசையில் நேரடி குருவானவர் ஜி.கே.வெங்கடேஷ்! அந்தக் குழுவில் உள்ள எளிய இசைக் கலைஞர்களுடன் பழகி தான், பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்க கற்றுக் கொண்டார் இளையராஜா! அவரே கூறியது போல, அந்த காலத்தில் இசையைச் சொல்லித் தர நல்ல பள்ளிகளும் இல்லை. கற்றுக் கொடுக்க ஆசிரியர்களும் இல்லை. கிடாரை வாசிப்பதற்கு விபரமறிந்தவர்களிடம் கேட்டுக் கேட்டுத் தெரிந்து தான் நானே என்னை வளர்த்துக் கொண்டேன். அதற்கடுத்த நிலையில் அவருக்கு மேற்கத்திய சங்கீத உலகை திறந்து காண்பித்தவர் மாஸ்டர் தன்ராஜ் தான். மயிலாப்பூர் லஸ் கார்னர் சாயி லாட்ஜ் 13 ஆம் நம்பர் அறையில் தான் அவர் பீத்தோவனையும், மொஸார்ட்டையும், பாஹ்கையும், மேண்டல்ஸனையும், ஷீபர்ட்டையும், சைக்காவ்ஸ்கியையும் அறிந்துணர்ந்தார். வறுமையில் உழன்ற மாஸ்டர் தன்ராஜ் தன்னுடைய மேதமை அனைத்தையும் இளையராஜாவிற்கு வஞ்சகமில்லாமல் வாரி வழங்கினார் – எந்தக் கட்டணமும் வாங்காமல்! ஒரு நல்ல சீடன் கிடைத்ததையே பாக்கியமாக கருதிய தன்ராஜ் போன்ற உன்னத ஆசான்களை ஆண்டவனுக்கு இணையாக சொல்லலாம். இசை மேதை தன்ராஜ் மாஸ்டருடன் இளையராஜா! இந்தப் பயிற்சிகளும், வாய்ப்புகளும் தாம் இளையராஜாவின் இன்றைய சாதனைகளுக்கு பின்புலமாகும். ஆனால், இளையராஜா எத்தனை சீடர்களை உருவாக்கினார்? அவரிடமிருந்து எத்தனை இசை அமைப்பாளர்கள் உருவானார்கள்..? தன்னைப் போன்ற கற்க வாய்ப்பில்லாத – ஆனால், இசை தாகம் கொண்ட எளியோர் எத்தனை பேரை அவர் உருவாக்கினார்? ஒரு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் இருந்து எம்.எஸ்.வி உருவானார். ஒரு எம்.எஸ்.வியிடம் இருந்து ஜி.கே.வெங்கடேசும், சங்கர்-கணேஸும் உருவாயினர்! இளையராஜா சுமார் 48 ஆண்டுகளில் எத்தனை பேரை உருவாக்கி இருக்கலாம்? இதோ தமிழ்நாடு அரசு நடத்தும் இயல், இசை நாடக கல்லூரியில் ஆண்டுதோறும் படிக்க வரும் மாணவர்கள் அனைவருமே எளிய குடும்பத்து பிள்ளைகளே! மாதத்திற்கு ஒரிரு மணி நேர வகுப்புகள் என்றாவது ஒரு நாள் சென்றதுண்டா..? ஆனால், இன்றைக்கு நீங்கள் ஜாதிய மேலாதிக்கத்தின் தலை நகரமாக விளங்கும் கல்வி ஸ்தாபனமாகிய ஐ.ஐ.டிக்குள் சென்று, ”கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள வந்த நான், இன்று என்னுடைய பெயரில் சென்டர் ஆரம்பித்து, இசை கற்றுக் கொடுக்கப் போகிறேன். இந்த மையத்தில் இருந்து குறைந்தது 200 இளையராஜா உருவாக வேண்டும்..”எனப் பேசி உள்ளீர்கள்! ஐ.ஐ.டி வளாக அரங்கில் பேசும் இளையராஜா! உங்கள் அளப்பரிய விலைமத்திப்பில்லா இசை ஞானத்தை முழுக்க, முழுக்க மேல்தட்டு வர்க்கத்திற்கு கடை விரிக்கிறீர்கள்! சென்னை ஐ.ஐ.டி உதவியுடன் உங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஸ்பிக் மேகே ( spicmacay) என்ற அமைப்பு இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கானவர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளும் பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இவர்கள் மத்திய அரசின் அளப்பரிய நிதியைப் பெற்று, மேல்தட்டு பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் கைக்கோர்த்து இயங்குபவர்கள்! நீங்கள் உருவானது எப்படி? உங்கள் வளர்ச்சியின் பின்னணி என்ன? இன்றைக்கு உங்களை பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள் யார்? இவர்கள் நம்மவர்களும் இல்லை. நல்லவர்களும் இல்லை. இவர்கள் நன்றி உணர்ச்சியே இல்லாதவர்கள்! நாட்டிய மேதை பாலசரஸ்வதி! இவர்கள் தான் கெளரி அம்மாள், பாலசரஸ்வதி போன்ற பாரம்பரிய நடனக் கலைஞர்களிடம் இருந்து ‘சதிராட்டம்’ என்ற நாட்டியக் கலையைத் திருடி, அதற்கு ‘பரதம்’ என்று பெயரிட்டு, அதன் மூலத்தையே மறைத்து, அதை நம்பி வாழ்ந்திருந்த தேவதாசி வம்சத்தையே வேரறுத்து, இன்று தங்கள் குலத்திற்கான தனிப் பெரும் சொத்தாக்கி கொண்டவர்கள்! இவர்கள் தான் தமிழிசையைத் திருடி, அதற்கு கர்நாடக இசை எனப் பெயர் சூட்டிய மேல்குலத்தின் வாரிசுகள்! தமிழ் இசை மும்மூர்த்திகளான முத்துத்தாண்டவர் (1560), அருணாசலக் கவிராயர் (1712 ), மாரிமுத்தாப் பிள்ளை (1717) போன்றோர், கர்நாடக இசை மும்மூர்த்திகளான தியாகராஜர் (1767), சியாமா சாஸ்திரிகள் (1762) முத்துசுவாமி தீட்சிதர் (1776) ஆகியோருக்கு முற்பட்டவர்கள் என்பதையும், தமிழிசை வாணர்களிடம் இருந்து பெற்றவற்றையே சற்றே மாற்றி அல்லது களவாண்டு கர்நாடக இசை உருவாக்கப்பட்டு இன்றைக்கு அது ஒரு குலத்தின் மேன்மைக்கான அடையாளமாகவும், கெளரவத்தின் சின்னமாகவும் மாறி நிற்கிறது என்ற ஒரு உண்மையை மறுதலிக்கும் கூட்டத்துடன் இளையராஜா கை கோர்ப்பதும், பயணிப்பதும் தான் நமக்கு வேதனை அளிக்கிறது. இதுவா, உங்களை உருவாக்கிய தமிழ்ச் சமூகத்திற்கு நீங்கள் திருப்பியளிக்கும் பரிசு! இது பரிசல்ல, இசை ஞானி அவர்களே! பச்சை துரோகம் ஐயா! ”கர்நாடக சங்கீதமே மிக உயர்வானது” என செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார் இளையராஜா! ஆனால், ‘அந்த கர்நாடக இசைக்கே மூலமானது தமிழ் இசை தான்’ என பல்வேறு தரவுகளுடன் நிருபித்தவர் ஆபிரகாம் பண்டிதர் தான்! இதை உலகம் முழுக்க உள்ள இசை விற்பன்னர்களை அழைத்து கருத்தரங்கள் நடத்திப் பேசியும், எழுதியும் பதிவு செய்துள்ளார் ஆபிரகாம் பண்டிதர். ஐ.ஐடி வளாக மேடையில் என்ன பேசினீர்கள்? ”என் அம்மா தந்த 400 ரூபாயுடன் சென்னை வந்தேன். சென்னைக்கு வந்த நாளில் இருந்து இதுநாள் வரை நான் இசையை கற்றுக் கொள்ளவில்லை. மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ, அதேபோலத் தான் எனக்கு இசையும் இயற்கையாக வருகிறது. என்னைப் பார்த்து யாராவது நன்றாக இசையமைக்கிறீர்கள் எனச் சொன்னால், நன்றாகச் சுவாசிக்கிறீர்கள் எனச் சொல்வது போலத் தான் இருக்கிறது. பாரதி சொன்னது தவறு, ‘எட்டுத்திக்கும் சென்று கலை கற்றுவந்து இங்குச் செயல்படுத்துங்கள்’ என்று அன்று பாரதியார் சொன்னார்..ஆனால், அது தவறு இங்கு இருந்து தான் எட்டுத்திக்கும் சென்று கலையைப் பரப்ப வேண்டும்” என்று பேசியுள்ளீர்கள்! இப்படித் தத்துவார்த்தமாகப் பேசி மக்களை மட்டுமல்ல, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்! பல ஆசான்களின் துணையும், ஆசீர்வாதங்களுமே இன்றைய உங்கள் உச்சத்திற்கு காரணம்! அத்துடன் பல்லாண்டு காலப் பயிற்சியும், அர்ப்பணிப்புமே சாதாரணமாக மூச்சு இழுத்து விடுவதைப் போல உங்களுக்கு இசை உருவாக்கத்தை எளிமையாக்கி உள்ளது. மேலும், ”சென்றீடுவீர் எட்டுத் திக்கும். கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என பாரதியார் பாடியதை தவறு என்றும் உபதேசிக்கிறீர்கள்! மேற்கத்திய இசை மாமேதைகள் பீத்தோவன், மொஸார்ட் உங்கள் இசை மேதமைக்கு மேற்கத்திய இசை மேதைகள் பீத்தோவனும், மொஸார்ட்டும், பாஹ்கும் எவ்வளவு ஆழமான தாக்கத்தை உருவாக்கினார்கள் என நீங்களே பல இடங்களில் பேசியும் ,எழுதியும் உள்ளீர்கள். இதன் விளைவாக பிரான்ஸுக்கும், ஜெர்மனிக்கும், வியன்னாவிற்கும் சென்று இவர்கள் வாழ்ந்த இடத்தையும், சாமாதியையும் பார்த்து விழுந்து வணங்கி வந்துள்ளீர்கள்! மேற்கத்திய இசையுடன் நம் நாட்டு இசையையும் இணைத்து நீங்கள் உருவாக்கிய இசை ஆல்பத்தை பிரான்ஸ் இசை கம்போஸ்ர் பால்மாரியாவிடமும், ஜெர்மனியின் கிளாசிக் மியூசி கண்டக்டர் அலெக்ஸாண்டரிடமும் தந்து வந்துள்ளீர்கள்! ஹவ் டூ நெம் இட், நத்திங் பட் விண்ட் ஆகியவை எப்படி உருவாகின? அன்று எப்படி சாதாரண இசை வேளாளர் குடும்பத்தில் உருவான எம்.எஸ்.சுப்புலட்சுமியை இந்த மேல்தட்டு வர்க்கம் தனக்கானதாக ஆக்கிக் கொண்டதோ, அதே போல இசைஞானி இளையராஜாவை விழுங்கி ஜீரணிக்க எத்தனிக்கிறது! இளையராஜாவும் இதற்கு பலியாகிறார்! ஆன்மீகவாதி போல பேசும் இளையராஜா அதிகாரமிக்க பதவியான ராஜ்யசபா எம்.பி பதவியை பெற்றார். பாஜகவின் சகவாசம் இளையராஜாவை இந்தச் சூழலுக்கு தள்ளியுள்ளது. ஐயா, இளையராஜா அவர்களே, உங்கள் பெயரில் ஒரு இசை கல்லூரியை நீங்களே உருவாக்குங்கள்! அதற்கான மாணவர்களை நீங்களே தேர்ந்தெடுங்கள்! இருநூறல்ல, ஈராயிரம் இளையராஜாக்களை உருவாக்குங்கள், எளிய சமூகப் பின்புலத்தில் இருந்து! அதுவே, உங்களை உருவாக்கி உச்சத்தில் வைத்த தமிழ்ச் சமூகத்திற்கு நீங்கள் செய்யும் கைம்மாறாகும்! சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ் https://aramonline.in/17947/ilayaraja-iit-join-hands/
-
போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
நண்பர்களை உருவாக்குவதற்கான போர்… அகரன் வீட்டின் பின்புறத்தில் மூங்கில் தடிகளை வெட்டி வீட்டுத்தோட்டத்திற்கு வேலி போட்டபடி இருந்தேன். மகள் என்னுடன் நிற்பதற்கு விரும்பினாள். அப்படி நிற்பதென்றால் நான் செய்யும் வேலையை நிறுத்தவேண்டும். வீட்டில் உள்ள சேவல் தன்னை கொத்திவிடும் என்று கத்துவாள். ஒரு சேவலுக்கு ஆறு பேடுகள் அவசியம் என்று எமக்கு கோழிகளை விற்ற பிரெஞ்சுப்பெண் சொன்னாள். இளம்பருவ சேவல் வளர்ந்து வர்ணங்களை வளர விட்டதோடு சண்டித்தனத்தை எங்களிடமும் காட்ட ஆரம்பித்திருந்தது. மகளைக்கண்டால் திரத்த ஆரம்பித்துவிடும். மகள் பெரிய தடியை வைத்திருந்தாலும் அதை தாக்கப் பயன்படுத்த மாட்டாள் என்பதை சேவல் எப்படியோ அறிந்து விட்டது. மகளுக்கு எப்போதும் ‘நீ பயம் கொள்வதை அறிந்துதான் அது உன்னை கொத்த வருகிறது. எதிர்த்து நில் ஓடிவிடும்’ என்பேன். அவள் கண்களை விரித்து கேட்பாள். ஆனால் ஒருபோதும் அதை எதிர்க்க மாட்டாள். நான் வேலையை விட்டுவிட்டு அருகே இருந்த கற்குந்தில் இருந்து அவளிடம் பேச ஆரம்பித்தேன். ‘இதோ உன்னை தாக்க வந்தால் நீ அடிக்கலாம். எதற்காக அஞ்சுகிறாய் ?’ என்றேன். ‘அப்பா, சேவலை நான் தொடர்ந்தும் எதிரியாக்க விரும்பவில்லை. நண்பனாக்க விரும்புகிறேன்’ என்று பிரெஞ்சு மொழியில் கூறினாள். என் சரீரம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. சூரியன் எங்களருகே விழுந்துகொண்டிருந்தது. பிளே வயல்களின் வருடல் காற்று வந்துகொண்டிருந்தது. என் மடியில் தடியோடு மகள் இருந்தாள். என் மூளை காற்றால் பிளக்கப்பட்டு பறப்பது போல இருந்தது. *** தமிழின் நவீன இலக்கியத்தில் போர் பற்றிய பதிவுகள் பலவும் இருக்கின்றன. எண்ணமுடியா நட்சத்திரம் போல் கவிதைகள் மற்றும் கட்டுரைகள். போரியல் நாவல் என்றால் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கப்பால்’ அதன் சிறிய பகுதியை ஆரம்பித்து வைத்தது. ஹெமிங்வே யின் படைப்புகளில் விருப்பும் பாதிப்பும் உடைய ப.சிங்காரம் தொடர்ந்து எழுதாமல் விட்டது நமக்கு இழப்பு. அவரைத் தொடர்ந்து ஈழம் 35 ஆண்டுகள் யுத்தத்தில் நனைந்தது. இருந்தும் அங்கிருந்து போரியல் நாவல்கள் மிகக்குறைவாகவே வெளியாகி உள்ளன. அசல் போரை பதிவு செய்யும் நாவல்களாக 1985 வெளியான ‘விடியலுக்கு முந்திய மரணங்கள்’ , 1992 இல் எழுதப்பட்ட ‘போருலா’. , தூயவனின் ‘போரும் மருத்துவமும்’ , குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’ , ‘அப்பால் ஒரு நிலம்’ மற்றும் முதலாம் உலக யுத்தம் பற்றிய ச.பாலமுருகனின் ‘டைகிறிஸ்’ . சுகாஸ் என்ற த. பாலகணேசனால் கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் பற்றிய விடிவுக்கு முந்திய மரணங்கள் முதலாவது போர்பற்றிய பதிவு. இதை எழுதும்போது பாலகணேசனுக்கு வயது 21. 21/11/1992 இல் பலாலி இராணுவமுகாம் தாக்குதலில் 57 பேர் சாவடைந்தனர். அதில் ‘லியோ’ என்ற வீரனும் சாவடைகிறான். அப்போது அவனுக்கு இருபது வயது. அவனது நெஞ்சுப் பையில் ஒரு கையெழுத்துப்பிரதி இருக்கிறது. அதை எடுத்தவர்கள் வாசித்ததும் நெருப்பில் விழுந்த ஈயத்துண்டுபோல் ஆகிவிடுகிறார்கள். மாங்குளத்தில் இருந்த இராணுவ முகாம் தாக்குதல் பற்றி தன் அனுபவங்களை ஒரு நாவலாக எழுதி பையில் வைத்திருந்தான் லியோ. அந்த நாவலின் முடிவில் ‘மாங்குள இராணுவ முகாம் தகர்ப்பு நினைவுகள் இத்தோடு முடிவுறுகிற போதும் அடுத்து சிலாவத்துறை நினைவுகள் என் நெஞ்சில் பாயத்தொடங்குகின்றன..’ என்று முடிக்கின்றான். அவன் சிலாவத்துறை பற்றி எழுத முதல் மரணமடைந்து விட்டான். லியோ எழுத்து உலகுக்கு அவன் தனது பெயரை ‘மலரவன்’ என்று பதிந்திருந்தான். அவனது தந்தை ஒரு மருத்துவர். அத்தோடு மூத்த அண்ணன் வைத்திய கலாநிதி. போரில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அண்ணனுக்கு தம்பியின் உடல் சென்றடைகிறது. அதுதான் அண்ணனின் கண்ணீரும் தம்பியின் இரத்தமும் கலந்த இடம். மலரவனின் அழகியலான மொழி, சமூகப்பார்வை, மரங்களுக்காக வடிக்கும் கண்ணீர், காடுகளில் விழி தூங்காதிருந்து வானத்தையும் , நட்சத்திரங்களையும் கண்ணிமைக்குள் அடைத்துப்பார்க்கும் கவிதைப் பார்வை போருலாவை இன்றும் படிக்கும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அவன் இறந்தாலும் அவனது படைப்பு மனம் ‘போர் உலாவில்’ பேசிக்கொண்டே இருக்கிறது. இந்த சிறிய வயதில் எப்படி இத்தனை அவதாரம் கொள்ள முடிந்தது என்று ஏங்குகிறது மனம். அவனை பார்க்க முடியாது. அவன் எழுதிவிட்டு செத்துப்போனவன். தான் எழுதியது நூலாகும் என்றுகூட அறியாத போராளி. 1990 கார்த்திகை 9ம் திகதி மாங்குளம் இராணுவ முகாமை தாக்குவதற்கு உழவு இயந்திரத்தில் மணலாற்றில் இருந்து புறப்படுகிறார்கள். களமுனையை சென்றடைய காடுகளூடாக நீண்ட பயணம். காடுகளுக்குள் மரங்களை வெட்டி குற்றிகளைப்போட்டு அதன் இடைவெளிகளில் மண்ணை நிரப்பி தேவையான இடங்களில் பாதை அமைத்து பயணிக்கிறார்கள். ‘பால்போல தெறித்த வெண்ணிலவை முகில்கள் வெட்டியோடின. விரைவில் அவற்றை கலைத்துவிட்டு நிலவு வெளியே வந்து சிரித்தது’ என்ற வரி மலரவனின் அழகியலுடைய குறியீட்டு மொழியின் வெளிச்சம். ‘எவ்வளவு நல்ல காடு, தாய் மாதிரி இவ்வளவு காலமும் எங்களை காத்தது இதுதானே, இனி எப்ப வரப்போறம் ? ஆவலை அடக்க முடியாமல் கைகளை உயர்த்தி ‘டாட்டா’ காட்டினேன்.’ இரவு வேளையில் போராளிகள் நகர்வை அறிந்து உலங்குவானூர்தி தாக்கத்தொடங்குகிறது. களமுனையை அடைய முதலே போர் வந்து சிவப்புப் பழங்களை அனுப்பி உயிர் கேட்கிறது. அத்தடையை நீக்கிக் கடந்தால் அலம்பில் ஊர் எங்கும் தென்னந்தோப்புகள். ‘பெரிய குடை போன்ற தென்னைகள் சுமக்க முடியாமல் தேங்காய்களைச் சுமந்த வண்ணம் காற்றில் தலைவிரிகோலமாக தள்ளாடுவது பார்க்க பயமாக இருந்தது’ இரவுப் பயணத்தில் தடுமாறிய உழவு இயந்திரம் பிரண்ட போது பெட்டிக்குள் நசிந்து போன வசந்தனின் ஒரு கையும் காலும் மோசமாக பாதிக்கப்படுகிறது. அருகே இருந்த கிராமத்து வீட்டில் அவசர வைத்தியம் நடகக்கிறது அங்கிருந்த இளம் பெண்ணைப் பார்த்து ‘ அக்கா நீங்கள் சரியா எங்கட மூத்தக்கா வித்தி மாரி’ என்கிறான். களப்படுக்கையில் குருதியில் தோய்ந்திருக்கும் தோழனைப்பார்த்து ‘தேங்காய் நெய்விளக்கு உருகி உருகி அழுதது.’ என்ற எழுத்தின் நுண்மை மனதின் அறையெங்கும் புகுந்துவிடக் கூடியது. முள்ளியவளை கடந்து முறிப்பு குளக்கட்டில் ஓய்வெடுக்கும் போது அவர்களை சூழ்ந்துகொண்ட மாணவர்கள், ‘நீங்கள் எத்தனை ஆமியை சுட்டனிங்கள் ?’ ‘ஏன் சுடவேணும் அவங்கள் பாவமல்லோ?’ ‘அப்ப.. எங்கட மாமாவை பெரியப்பாவை ஏன் சுட்டவங்கள் ?’ களமுனையில் பசியோடும் , தூக்கம் இன்றிய கண்களோடும் இருக்கும் போராளிகளை கண்ட தாய்மார் தங்கள் வீடுகளில் இருந்து உணவுடன் படையெடுத்த போது ‘அருவி பாய்கிறதா ? அன்பு பாய்கிறதா ? தெரியவில்லை’ என்று நெகிழ்ந்த சொல்லில் மலரவன் மொழியை மலர வைக்கிறான். மாங்குளம் இராணுவ முகாமை மறைந்திருந்து பார்வையிடுவதும் , அதன் இராணுவத்திட்டமிடல்களும் எந்த நேரத்திலும் இராணுவச் சூட்டுக்கு ஆளாகும் நிலையில் நடைபெறுகிறது. மயில் ஒன்று தூரத்தே அகவியது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னத்தொடங்கின. மாரி கால மழையில் உப்பிக்கிடந்த வெள்ளைச்சுவர்களில் சிறிது சிறிதாய் பொத்தான்கள் இடப்பட்டிருந்தன. கூரையூடாக வானத்தின் நிர்வாணம் தெளிவாய்த்தெரிந்தது.’ முப்பத்தி நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் மாங்குளத்தின் படத்தை மலரவனின் எழுத்து மனதில் வரைகிறது. அவர்கள் தாக்குதலுக்கு நேரடி உறுதிப்படுத்தல்களை மேற்கொள்ள 40 மீற்றரை கடக்க 40 மைல் சுற்றிவரவேண்டிஇருந்தது. தோழர்களின் இழப்போடும் கரும்புலி வீரன் போர்க்கின் சக்ககைவண்டித்தாக்குதலோடும் மாங்குளம் போராளிகளிடம் வீழ்கிறது. விமானங்கள் சகடை, புக்காரா, பைற்ரர் போராளிகளை குண்டுகளால் சல்லடை போட்டபோதும் மனதில் இருந்த அவர்களின் பலம் இயந்திரங்களை வென்று நிலத்தை மீட்கிறது. ‘மனிதன் உணவுக்காக மனிதனை கொல்லவில்லை. ஆக்கிரமிப்புக்காக கொல்கிறான்’ என்ற மலரவனின் ஏக்கம் மனித மூளையின் இருட்டான முரண்பாட்டுச்சிக்கலை கேள்வி கேட்கிறது. நாவலைப் படிக்கிறபோது சக போராளிகளின் அனுபவங்களும், அவர்களை ஆயுதமேந்தத்தூண்டிய கதைகளும், வேறுபட்ட மன உணர்வுகளோடு ஒன்றுசேர்ந்து ஓர்மமாகி நிற்கும் இளைஞர்களும் சுதந்திரத்திற்காக தாம் புன்னகையோடு தோளில் சுமந்தபாரத்தை இனிய மொழியில் பதிவு செய்கிறது. வாசகனை தாக்குதல் நடைபெறும் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது. போர் எத்தனை கொடியது ? எத்தனை மானுட வலி நிறைந்தது ? மனிதனை மனிதன் கொல்லும் அபந்தத்தின் சந்தியில் நிறுத்தி சிந்திக்கத் செய்கிறது. ஓர் போராளி இறந்த செய்தியை அவன்வீட்டுக்குச் சென்று தாயிடம் மரணச் செய்தியை சொல்லும் போராளிகளின் மனதையும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் அடிக்கடி மனம் போர்க் காலங்களில் சிந்திப்பதுண்டு. மலரவனின் வீட்டுக்கு அச்சத்தோடு சென்ற போராளிக்கு வேறு விதமான அனுபவம் கிட்டுகிறது. அழுது கொண்டிருந்த தாய் போராளிகளை கண்டாலும் அழுகையை நிறுத்திவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்துவந்து கொடுக்கிறார். அது வங்கிக்கணக்கு. மலரவன் பிறந்தபோது தந்தை அவன் பெயரில் இட்ட பணம் லச்சங்களாக பெருகி அதில் இருந்தது என்று பின்னுரையில் சு.ப தமிழ்ச்செல்வன் பதிவு செய்கிறார். என் மனம் மலரவனை இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய பாரத்தை புன்னகையோடு சுமந்திருக்கிறான் ? அத்தனை மலர்களின் வாழ்வும் அர்த்தமற்றதா ? என்று அங்கலாய்த்தபடிஇருந்தது. *** மகள் ‘சேவல் வருகிறது’ என்று என்மீது தொங்கி ஏறினாள். அவள் என்னிடம் ‘சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை’ என்ற சொல் கல் வீழ்ந்த குளமாக வட்டங்களை உருவாக்கியது. ‘மகளே, உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும் இதை நீ எங்கே கற்றுக்கொண்டாய் என்றேன்?’ தமிழிலும் பிரெஞ்சிலுமாக அவள் இப்படிச்சொன்னாள், ‘அப்பா, என் பள்ளியில் என்னை செயிம் , மக்சிம் , மரியா ஆகியோர் விளையாட்டுக்கு சேர்ப்பதில்லை. நான் போனால் விரும்பமாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் நான் இருந்தால் எழுந்து சென்றுவிடுவார்கள். ‘ ‘ஓ..என் செல்லமே நீ ஏன் மடம் லுனாவிடம் சொல்லவில்லை ?’ ‘இல்லை அப்பா. அப்படி சொன்னால் மடம் லுனா அவர்களை புனி செய்தால் அவர்கள் மேலும் எனக்கு எதிரி ஆகிவிடுவார்கள்’ ‘அப்படி என்றால் உன்னோடு யாரும் விளையாடமாரட்டார்களா ?’ ‘இல்லை. மற்றவர்கள் அவர்களோடு விளையாடுவதால் என்னை சேர்க்க மாட்டார்கள். ஆனால் நான் இப்போது தனியே விளையாடுவேன். ஒருநாள் அவர்கள் எனக்கு அமி ஆவார்கள். அப்போது நான் சேர்ந்து விளையாடுவேன். ‘உனக்கு வருத்தமாக இல்லையா ?’ ‘இல்லை. நான்தானே தனியே விளையாடப்பழகிவிட்டேன். அதனால்தான் சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை அப்பா. எனக்கு நண்பர்கள் வேண்டும்’ என்றாள். ௦௦௦ அகரன் பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார். https://akazhonline.com/?p=7333
-
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது?
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது? May 20, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு் முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை அடைந்ததையே நாம் கண்டோம். நாட்டைச் சின்னா பின்னப்படுத்திய போருக்கு காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணங்கத்தீர்வு ஒன்றைக் காணவேண்டிய தேவை ஒன்று இருக்கிறது என்று தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதியிடம் சிந்தனை இருப்பதாக தெரியவில்லை. இந்த பதினைந்து வருடங்களிலும் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஓரளவுக்கேனும் திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கிய திசையில் ஒரு அங்குலமேனும் நாடு முன்னோக்கி நகரவில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரசியலமைப்பின் அங்கமாக இருந்துவரும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது கூட இறுதியில் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. உலகின் வேறு எந்த நாட்டிலும் அரசியலமைப்பில் உள்ள ஒரு ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி அரசியல் சக்திகள் வீதிகளில் இறங்கி போராடியதாக நாம் இதுவரை அறியவில்லை. ஆனால் இலங்கையில் அது நடக்கிறது. இலங்கைப் பாதுகாப்பு படைகள் போரில் விடுதலை புலிகளை தோற்கடிப்பதற்கு துணிச்சலான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய பெருமைக்கு எப்போதும் உரிமை கோரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கள மக்களின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை வேண்டுமென்றே அலட்சியம் செய்து இலங்கையை நீண்டகாலத்துக்கு ஆட்சி செய்யும் கனவுடன் பெரும்பான்மை இனவாத அரசியலை மேலும் தீவிரமாக முன்னெடுத்தார். அவர் போர் வெற்றியை அதற்காக தாராளமாகப் பயன்படுத்தி முக்கிய பிரச்சினைகளில் இருந்து சிங்கள மக்களின் கவனத்தை திசைதிருப்பினார். அந்த தந்திரோபாயம் சில வருடங்களுக்கு அவரது குடும்பம் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு உதவியதே தவிர, சிங்கள மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டுவரவில்லை. பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் என்பது அடிப்படையில் தவறான ஆட்சி முறையையும் ஊழல் முறைகேடுகளையும் மூடிமறைப்பதற்கான ஒரு உபாயமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது என்ற உண்மை அம்பலமாவதற்கு நீண்டகாலம் எடுக்கவில்லை. என்றாலும் இன்னமும் கூட தென்னிலங்கை அதில் இருந்து முறையான பாடத்தைக் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கை அரசியல் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி ராஜபக்சாக்களை இரு வருடங்களுக்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டிய பின்னரும் கூட இன்னமும் அவர்கள் திரைக்குப் பி்ன்னால் இருந்து அரசாங்கத்தை இயக்கக்கூடியதாக இருப்பதும் தங்களது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெறும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று அவர்களால் கூறக்கூடியதாக இருப்பதும் பெரும் துரதிர்ஷ்டவசமானதாகும். மக்கள் கிளர்ச்சியும் அதற்கு பின்னரான அரசியல் நிலைவரமும் தென்னிலங்கை மக்களின் அரசியல் சிந்தனையில் ஏதாவது நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை தேசிய தேர்தல் ஒன்றின் மூலம் மாத்திரமே தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இன்னமும் நான்கு மாதங்களில் நடத்தப்படவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார நெருக்கடி மீதே பிரதான வேட்பாளர்கள் கவனம் செலுத்துவார்கள். வேறு பிரச்சினைகளுக்கு குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டிய அவசியம் குறித்து அவர்கள் அக்கறை செலுத்தக்கூடிய சாத்தியமில்லை. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணியில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது எதிர்கால அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள மக்களின் ஆதரவுடன் தீர்வைக் காணும் என்றும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் கூறினார். ஆனால், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதை அவர் குறிப்பிடுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக தமிழர்கள் அணுகக்கூடிய ஒரே சிங்களத் தலைவர் என்ற தோற்றப்பாடு ஒன்று அவருக்கு இருக்கின்ற போதிலும், சிங்கள தேசியவாத வாக்காளர்களை அந்நியப்படுத்தக்கூடியதாக இனிமேலும் எந்த அணுகுமுறையையும் கடைப்பிடிக்கும் துணிச்சலை அவர் காண்பிக்கக்கூடிய சாத்தியம் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையொன்றில் பதின்மூன்று பிளஸ் என்றோ அல்லது சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்றோ வாக்குறுதி வழங்குவதன் மூலம் தமிழர்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக பேரம் பேசப்போவதில்லை என்று கூறியிருந்தார். சகல சமூகங்களையும் அரவணைக்கும் வகையில் இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தப்போவதாக அவர் உறுதியளித்தார். அது தொடர்பில் அண்மையில் தனது கட்டுரை ஒன்றில் அரசியல் ஆய்வாளர் ராஜன் பிலிப்ஸ் ஏற்கெனவே ஒவ்வொருவரினதும் தேசிய அடையாள அட்டையிலும் கடவுச்சீட்டிலும் ஒரு வகை அடையாளம் இருக்கிறது. அநுரா குமார மேலதிகமாக என்ன அடையாளத்தைக் கொடுக்கப்போகிறாரோ என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியிருந்தார். சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சிங்கள மக்கள் விரும்பாத எந்தவொரு வாக்குறுதியையும் பிரதான வேட்பாளர்களில் எவரும் வழங்கப்போவதில்லை என்பது நிச்சயமானது. அதேவேளை தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டிய அவசியத்தை எந்த வேட்பாளரும் தங்களது தேர்தல் பிரசாரங்களில் சிங்கள மக்களிடம் உரத்து வலியுறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் தவறான சிந்தனைகளின் பின்னால் செல்கின்றவர்களாகவே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவந்த கடந்த காலப் பாதையில் இருந்து சிங்கள மக்களை சரியான பாதைக்கு திசைதிருப்பும் வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்த தலைவராக எவரையும் காண முடியவில்லை. இத்தகைய பின்புலத்தில், போருக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மாத்திரமல்ல, அவர்களின் வாழ்வாதார மனிதாபிமானப் பிரச்சினைகளும் கூட மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. அரசாங்கப் படைகளினதும் கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல் சக்திகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புகளில் இருந்து தங்களது நிலங்களை தமிழ் மக்களால் பாதுகாக்க முடியாமல் இருக்கிறது.போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு கூட அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. அத்தகைய நினைவுகூரல் நிகழ்வுகளை படையினரையும் பொலிசாரையும் பயன்படுத்தி தடுப்பது இனப்பாகுபாட்டின் குரூரமான ஒரு வடிவமாகும். இந்த தடவை பொலிசாரின் நடவடிக்கைகளில் ஒரு விசித்திரமான அணுகுமுறையை காணக்கூடியாக இருக்கிறது. வடமாகாணத்தில் நினைவு நிகழ்வுகளுக்கு எந்த இடையூறையும் செய்யாத பொலிசார் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் அவற்றை தடுக்கிறார்கள். இதன் பின்னால் உள்ள தர்க்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. போருக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை உரிய முறையில் வழிநடத்துவதற்கு உருப்படியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லை என்பது அவர்கள் எதிர்நோக்குகின்ற ஒரு முக்கியமான பிரச்சினையாகும். தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், கடந்தகால அவல அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் அவர்களை வழிநடத்துவதற்கு விவேகமான அரசியல் தலைவர்கள் இல்லை. போரின் முடிவுக்கு பிறகு வடக்கு,கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் வரலாற்றுப் பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் தானாக வந்துவீழ்ந்தது. அதை உகந்த முறையில் கையாண்டு மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான ஒரு அரசியல் சமுதாயத்தை நிறுவவுதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தவறினர். வெறுமனே கட்சி அரசியல் நலன்களை முன்னிறுத்தி அவர்கள் செயற்பட்டார்களே தவிர, போருக்கு பின்னரான சூழ்நிலைகளில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக்கூடிய ஒன்றிணைந்த பலமான ஒரு அரசியல் சக்தியாக கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டவில்லை. அதற்கான விவேகமோ அல்லது அர்ப்பணிப்போ அவர்களிடம் இருக்கவில்லை. அதன் விளைவாக இன்று தமிழர் அரசியல் சமுதாயம் சிதறுண்டு கிடக்கிறது. சகல தமிழ்க் கட்சிகளுமே ஏதோ ஒரு வகையில் பிளவுண்டு கிடக்கின்றன. அவர்கள் தங்களுக்கு இடையிலான தகராறுகளைத் தீர்ப்பதற்கே இயலாதவர்களாக இருக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் அக்கறை காட்டுவதற்கு நேரம் எங்கே இருக்கிறது? தமிழர்களுக்கு எவற்றைக் கொடுக்கக்கூடாது என்பதில் பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் சிங்கள அரசியல் சமுதாயம் பெரும்பாலும் ஐக்கியப்பட்ட ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற அதேவேளை, தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைக்் கோருவதற்கு ஐக்கியப்பட்ட ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாமல் தமிழ்க்கட்சிகள் இருக்கின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் அக்கறை அற்றதாக இருக்கும் நிலையில், ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தினதும் உலகத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்கு முன்னென்றும் இல்லாத வகையில் தமிழ் அரசியல் சக்திகளின் ஐக்கியம் அவசியமாக தேவைப்படுகின்ற வேளையில் அவர்கள் படுமோசமாக பிளவுண்டு கிடக்கும் கவலைக்குரிய நிலையைக் காண்கிறோம். அண்மைய வாரங்களாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனை தொடர்பில் தமிழ்க்கட்சிகள் கலந்தாலோசனைகளை நடத்திவருகின்ற போதிலும், அவர்கள் கருத்தொருமிப்புக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பது கஷ்டமானதாகும். சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்ற தான்தோன்றித்தனமான நகைப்புக்கிடமான கருத்துக்களை நோக்கும்போது அரசியல் சார்பற்ற கண்ணியமான பிரமுகர் எவரும் பொது வேட்பாளராகக் களமிறங்க முன்வருவாரா என்பது சந்தேகமே. அதேவேளை, கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடன் தமிழ் மக்களைக் கட்டிப்போடும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களில் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் போரில் அநியாயமாக கொன்றுகுவிக்கப்பட்ட மக்களையும் நினைவுகூரவும் கௌரவிக்கவும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், கற்பனைசெய்து பார்த்திருக்க முடியாத தியாகங்கள் நிறைந்த அந்த போராட்டங்கள் இறுதியில் அவலமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று சுயவிமர்சனம் செய்யாமல் வெறுமனே நினைவுகளுடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இதை விளங்கிக் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். இது இவ்வாறிருக்க, தமிழ் தேசிய அரசியலில் இரு புதிய ஆரோக்கியமற்ற போக்குகள் தீவிரமாக ஊடுருவுகின்றன. அதில் ஒன்று மதத்தீவிரவாதம். தமிழ்த் தேசியவாத அரசியல் தொடக்கத்தில் இருந்தே மதசார்பற்றதாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சகல மதப்பிரிவினரையும் அது அரவணைத்தது.பல தசாப்தங்களாக தமிழர்களின் தலைவராக மதிக்கப்பட்ட காலஞ்சென்ற எஸ்.ஜே வி. செல்வநாயகம் இந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் முஸ்லிம்கள் உட்பட தமிழ்பேசும் சமூகத்தின் சகல மதப்பிரிவினரும் அவரது தலைமையை ஏற்றுச் செயற்பட்ட காலம் ஒன்று இருந்தது. தமிழ்த் தேசியவாத அரசியலில் இருந்த மிகவும் குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான அம்சமாகவும் அது விளங்கியது. அண்மைக்காலமாக தமிழர் அரசியலை இந்துமதத்துடன் அடையாளப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளராக இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரே களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது மாத்திரமல்ல அண்மைக்காலமாக அரசியல் செயற்பாடுகளில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தும் இந்து துறவிகளில் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. இந்த முயற்சிகளில் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா முன்னெடுக்கும் இந்துத்வா கொள்கையின் தாக்கம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்றையது இலங்கைத் தமிழர் அரசியலில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரவாத நிலைப்பாட்டைக் கொண்ட சக்திகளின் அதிகரித்த செல்வாக்கு. புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு பயனுறுதியுடைய பங்களிப்பைச் செய்த நீண்ட காலகட்டம் ஒன்று இருந்தது. தமிழ் மக்கள் மீதான அரசாங்கங்களின் ஒடுக்குமுறையை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதில் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மகத்தான பங்களிப்பைச் செய்தது. ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில சக்திகள் அநாவசியமான ஆதிக்கத்தைச் செலுத்த முனைந்து நிற்கிறார்கள். இதனால் இன்றைய தமிழர் அரசியலில் முன்னென்றும் இல்லாத வகையில் ஊழல்தனமான போக்குகள் அதிகரித்திருக்கின்றன.வெளிநாட்டில் இருந்து அனுப்புகின்ற பணத்தின் மூலம் இலங்கைத் தமிழர் அரசியலின் திசைமார்க்கத்தை தீர்மானிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். நாட்டில் வாழும் தமிழர்களுக்கு எத்தகைய அரசியல் தீர்வு வேண்டும் என்பதை மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்துகொண்டு நடைமுறைச் சாத்தியமற்ற தீவிவாதம் பேசுகின்ற சக்திகள் ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது. வெளிநாட்டு தமிழ்ச் சக்திகளின் ஆரோக்கியமற்ற தலையீடுகள் தமிழ்ப் பகுதிகளில் சமூக விரோத செயற்பாடுகளுக்கும் ஊக்கமளிக்கின்றன. இன்றைய இலங்கைத் தமிழ்ச் சமூகம் நினைத்துப்பார்க்க முடியாத தியாகங்கள் நிறைந்த மூன்று தசாப்தகால விடுதலைப் போராட்டம் ஒன்றைக் கடந்துவந்த சமூகத்துக்கு இருக்கவேண்டிய எந்த குணாதிசயத்தையும் கொண்டதாக இல்லை. இவ்வாறாக, நிலைவரங்கள் தொடருமாக இருந்தால், உலகம் கவனிக்காத ஒரு மக்கள் கூட்டமாக இலங்கை தமிழர்களும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் முழக்கங்களைச் செய்துகொண்டு குடாநாட்டுக்குள் மாத்திரம் கொக்கரிக்கின்ற ஒரு கூட்டமாக தமிழ் அரசியல்வாதிகளும் மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. https://arangamnews.com/?p=10762
-
மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தியில் கனடா பிரதமர்
கனேடியப் பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை வெளிவிவகார அமைச்சு! இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடியப் பிரதமர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்காக எப்போதும் வாதிடுவோம் என தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே 2023ஆம் ஆண்டு 4 இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கனடா இலங்கையில் மனித உரிமைகளின் வலுவான பாதுகாவலராக உள்ளது. நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசிய மதிப்புகளான மதச் சுதந்திரம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவம் என்பவற்றுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து நேற்றைய தினம் (21) அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, கனேடியப் பிரதமரின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/302205
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: மேற்குக் கரையின் ஜெனினில் சுற்றிவளைப்பு பிடியாணையை நிராகரித்தார் நெதன்யாகு May 22, 2024 வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய துருப்புகள் நேற்று ஆழ ஊடுருவியதோடு அந்தக் குடியிருப்பு பகுதியை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் துவம்சம் செய்து வருகின்றன. தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேலின் உக்கிர தாக்குதல் தொடரும் நிலையில் அங்கு மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் வழக்கு மற்றும் தெற்கு முனையில் சம காலத்தில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பது அங்கு புதிதாக ஆயிரக்கணக்கான மக்களின் வெளியேற்றத்திற்கு காரணமாகியுள்ளது. மறுபுறும் எல்லைக் கடவைகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் உதவிகள் வருவதும் நிறுத்தப்பட்டு பஞ்சம் தீவிரம் அடையும் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது வெளியேறிய பலஸ்தீனர்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் புல்டோசர்களை பயன்படுத்தி குடியிருப்புகள் மற்றும் அருகில் இருக்கும் சந்தைப் பகுதியின் கடைகளை தரைமட்டமாக்கி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கு இஸ்ரேல் இரண்டு வாரங்களுக்கு முன்னரே தமது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இங்குள்ள ஹமாஸ் அமைப்பை ஒழித்ததாக சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் கூறியிருந்த நிலையிலேயே படைகளை அங்கு மீண்டும் அனுப்பியுள்ளது. ஜபலியா வீதிகள் மற்றும் இடிபாடுகளில் பல டஜன் உடல்கள் சிதறிக்கிடப்பதாக குறிப்பிட்டிருக்கும் காசா சுகாதார நிர்வாகம் மற்றும் சிவில் அவசர சேவை பிரிவு, மீட்புக் குழுக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியது. ‘இஸ்ரேல் மக்களுக்கு மேலால் முகாமை அழித்து வருதோடு குண்டு வீசுவது நிறுத்தப்படவில்லை. காசாவுக்கு மேலும் உணவுகள் நுழைய உலகம் அழைப்பு விடுக்கிறது. கூடுதல் உணவை அல்ல, உயிர்களையே காப்பற்ற வேண்டும்’ என்று காசா நகருக்கு அருகில் இடம்பெயர்ந்து வந்த ஜபலியா குடியிருப்பாளரான அபூ எல் நாசர், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ஜபலியாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனையை இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக முற்றுகையில் வைத்திருப்பதாகவும் அருகில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது சூடு நடத்தி வருவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகையில் உள்ள மருத்துவமனையில் 170 நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிக்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு முன்னதாக குறிப்பிட்டிருந்தது. ஜபலியா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கான் யூனிஸில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ‘எல்லா இடங்களிலும் குண்டு வீசுகிறார்கள். மக்கள் அச்சத்தில் வெளியேறி வருகின்றனர்’ என்று கான் யூனிஸைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் தொலைபேசி ஊடாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மறுபுறம் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரிலும் இஸ்ரேலிய படை சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது. தெற்கு காசாவின் ரபாவில் உள்ள யிப்னா அகதி முகாமில் உள்ள மக்கள் குழுவொன்றை இலக்கு வைத்து நேற்று இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படம் ஒன்றை அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டது. அதில் சிறுவர்களின் உடல்கள் சிதறி இருப்பது தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் கொல்லப்பட்டு மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த எட்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தொடர் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,647 ஆக அதிகரித்திருப்பதோடு 79,852 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. இனப் படுகொலை குற்றச்சாட்டு தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு சர்வதேச குற்றவில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருக்கும் நிலையில் அதனை இரு தரப்பினரும் நிராகரித்துள்ளனர். இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஹமாஸுக்கு எதிரான போரை அந்த நீதிமன்றத்தால் தடுத்துவிட முடியாது என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலிய இராணுவம் இன அழிப்பில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேலியத் தலைவர்களுக்கு எதிரான சர்வதேச நீதிமன்ற நடவடிக்கையை ஆதரிப்பதாகக் கூறிய ஹமாஸ், தனது தலைவர்களுக்கு எதிரான வழக்குத்தொடுநர் கானின் குற்றச்சாட்டை நிராகரித்தது. தாக்குதல் நடத்துபவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சர்வதேச நீதிமன்றம் சமமாய் நடத்த முயல்வதாக ஹமாஸ் சாடியது. இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகர் மீது இஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின்போது மருத்துவர் ஒருவர், ஆசிரியர் ஒருவர் மற்றும் மாணவர் ஒருவர் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் குறைந்தது 512 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். https://www.thinakaran.lk/2024/05/22/world/62323/காசாவில்-இஸ்ரேலின்-தாக்-2/
-
ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல்
ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல் May 22, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்ட நிலையில் ஈரானில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் இறுதித் தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்ற உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமனெய், ஜனாதிபதியின் மரணத்திற்கு ஐந்து நாள் துக்க தினத்தை அறிவித்திருப்பதோடு, துணை ஜனாதிபதியான 68 வயது மொஹமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் நீதித் துறை, அரசு மற்றும் பாராளுமன்ற தலைவர்களின் கூட்டத்தில் தேர்தல் திகதிக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பாதுகாவல் சபையினால் எடுக்கப்பட்ட ஆரம்ப உடன்பாட்டுக்கு அமைய 14ஆவது ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் உட்பட அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் பனிமூட்டம் கொண்ட மலைப்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஈரானின் தப்ரிஸ் நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு காலஞ்சென்ற ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை செலுத்திவருகின்றனர். ரைஸி பிறந்த மாஷாட் நகரில் நாளை (23) அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கிடையே விபத்தில் மாண்டோர் குறித்து அவதூறான கருத்துகளை இணையத்தில் வெளியிடுவோரைக் கைதுசெய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.thinakaran.lk/2024/05/22/world/62325/ஜூன்-28இல்-ஈரான்-ஜனாதிபதி-த/
-
ஜனாதிபதித் தேர்தலில் மீ்ண்டும் களமிறங்குகிறார் பொன்சேகா
ஜனாதிபதித் தேர்தலில் மீ்ண்டும் களமிறங்குகிறார் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன் தற்போதைய தலைவர் ஜூன் மாதம் இது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று பொன்சேகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. பொன்சேகா எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு சேராமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். எஸ்.ஜே.பி எம்.பி.க்கள் குழுவின் ஆதரவையும் பொன்சேகா பெற முடிந்துள்ளதாகவும், மற்ற அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பின்கதவு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. பொன்சேகாவின் பிரச்சாரம் ஊழலற்ற நாட்டை ஊக்குவிப்பதுடன் தேசிய பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கும் என்று டெய்லி மிரர் அறிகிறது. அவர் தனது பிரச்சாரத்தின் போது புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி போர் பற்றிய புத்தகத்தை வெளியிடுவதன் மூலம் தனது ஜனாதிபதி முயற்சியை அதிகரிக்க முற்படுவார் என்று டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது. இந்த புத்தகம் மோதல் தொடர்பான தகவல்களையும், அப்போது ராணுவ தளபதியாக அவர் ஆற்றிய பங்கையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக பொன்சேகாவை சந்திப்பதற்கு முன்னாள் இராஜதந்திரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்கிரமசிங்கவை சந்திப்பதை பொன்சேகா நிராகரிக்கவில்லை, ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை திரும்பப் பெறப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே ஜனாதிபதியுடன் பாராளுமன்றத்தில் கலந்துரையாடியுள்ளார். பொன்சேகா பல இராஜதந்திரிகளுடன் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும், தனது வரவிருக்கும் அறிவிப்பு குறித்து அவர்களுக்கு விளக்கமளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதாரத்தின்படி, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்டத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதித்-தேர்தலில்-மீ்ண்டும்-களமிறங்குகிறார்-பொன்சேகா/175-337677
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
இந்தியாவில் சிக்கிய ISIS இலங்கையர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்த இலங்கையை சேர்ந்த நான்கு பேர் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இவர்களை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்து நேற்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்நிறுத்தியதுடன், இதில் பல தகவல்கள் வெளியாகின. இதன்படி, கைது செய்யப்பட்ட 33 வயதான மொஹமட் நுஸ்ரத் என்ற நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பை சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான், 43 வயதான மொஹமட் ரஷ்டீன் மற்றும் 35 வயதான மொஹமட் ஃபரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஏனைய பயங்கரவாதிகளாவர். இவர்கள் இந் நாட்டிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் நகருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்தும் நான்கு பயங்கரவாதிகளும் மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரிக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து கைப்பேசி, இரு நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் விமானச் சீட்டுக்களும் ஒருவரின் பயணப் பொதியில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம் இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளதாகவும், பின்னர் இவர்கள் கடும்போக்கு ISIS சித்தாந்தவாதிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அபுவின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இலங்கை பணத்தில் 4 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு கூட தயாராகி இருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. இவர்களது கைப்பேசிகளை ஆய்வு செய்ததில், அகமதாபாத் நகருக்கு அருகில் உள்ள நானாசிடோலா பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 03 கைத்துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 20 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இந்தியாவில்-சிக்கிய-ISIS-இலங்கையர்கள்-குறித்து-அதிர்ச்சி-தகவல்கள்-வெளியாகின/150-337666
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரிந்து இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உள்ளனவா என்று சரி பாருங்கள் @நிலாமதி அக்கா! சில கேள்விகளுக்கு சுப்பர் 8 இல் அமெரிக்கா, நெதர்லாந்து எல்லாம் விளையாடும் என்று போட்டுள்ளீர்கள். கஷ்டப்பட்டும் கடைசியில் வரத்தான் இந்தப் பதில்கள் உதவும்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நாளை புதன் (22 மே) இரண்டாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 05) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) RR எதிர் RCB ஒருவரும் போட்டியில் உள்ள அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணிக்கவில்லை. எனவே அனைவரும் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்! போட்டியாளர் பதில் வீரப் பையன்26 KKR முதல்வன் KKR சுவி CSK ஏராளன் CSK நிலாமதி CSK அஹஸ்தியன் CSK ஈழப்பிரியன் LSG கல்யாணி SRH கந்தப்பு SRH கறுப்பி SRH எப்போதும் தமிழன் SRH வாதவூரான் SRH கிருபன் CSK நீர்வேலியான் KKR கோஷான் சே LSG நுணாவிலான் SRH புலவர் SRH
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@suvy ஐயா போட்டியில் பங்குபற்றியமைக்கு நன்றி பல! வெற்றிபெற வாழ்த்துக்கள். கூகிள் ஷீற்றில் 10 நிமிடங்களில் தெரிவுகளை மேற்கொண்டிருக்கலாம்!
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
தமையனின் இழப்பினால் துயருற்றிருக்கும் வாதவூரானுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்றைய முதலாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13.4 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் என சரியாக கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையவர்கள் அனைவரும் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நிலாமதி 67 2 அஹஸ்தியன் 65 3 கல்யாணி 65 4 நுணாவிலான் 65 5 புலவர் 65 6 வீரப் பையன்26 59 7 முதல்வன் 59 8 சுவி 59 9 ஏராளன் 59 10 கந்தப்பு 59 11 எப்போதும் தமிழன் 59 12 வாதவூரான் 59 13 கிருபன் 59 14 நீர்வேலியான் 59 15 ஈழப்பிரியன் 55 16 கோஷான் சே 55 17 கறுப்பி 51