Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33794
  • Joined

  • Days Won

    157

Everything posted by கிருபன்

  1. வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள். ஆகவே, சிங்களத் தலைவர்கள் “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  2. தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3) http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  3. நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
  4. போட்டியில் பங்குபற்றிய @பையன்26 க்கும் @முதல்வன் க்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இன்னும் 8 பேர் கலந்துகொண்டால்தான் போட்டி! போட்டி முடிவு திகதிக்குப் பின்னர் 36 ஆரம்பச் சுற்றுப்போட்டிகள் உள்ளன! ஒரே மாதிரியான பதில்கள் சறுக்கு மரத்தில் ஏற உதவாது!!😜
  5. இன்னும் நான்கு நாட்கள்தான் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு முன்னர் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி யாழ்களத்தில் நடக்கும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😀 @suvy, @ஏராளன், @Eppothum Thamizhan, @MEERA, @தமிழ் சிறி, @kalyani, @சுவைப்பிரியன், @வாதவூரான், @வாத்தியார், @nunavilan, @பிரபா, @Ahasthiyan, @புலவர், @நீர்வேலியான், @நந்தன், @முதல்வன், @nilmini, @ஈழப்பிரியன், @நிலாமதி, @குமாரசாமி, @goshan_che, @கறுப்பி, @Kandiah57
  6. அனுர குமாரவிடம் சில கேள்விகள் – நிலாந்தன்! adminApril 14, 2024 ஓரு நண்பர், அவர் ஒரு இலக்கியவாதி, தொலைபேசியில் அழைத்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அவரைப் பதட்டமடையச் செய்திருப்பதாகத் தெரிந்தது. பொது வேட்பாளர் என்ற தெரிவை அவர் கடுமையாக விமர்சித்தார். இனங்களுக்கு இடையே அது முரண்பாட்டைப் பெருப்பிக்கும் என்ற பொருள்படவும் அவர் கதைத்தார். அதாவது சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சில விமர்சகர்கள் கூறுவதை அவர் பிரதிபலித்தார். அதைவிட முக்கியமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தான் ஜேவிபிக்கு வாக்களித்ததாகவும் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியை விடவும் இப்பொழுது குறிப்பாக 2021 இல் நிகழ்ந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னர் ஜேவிபியின் கவர்ச்சி அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. எனவே அந்த இலக்கிய நண்பர் இந்த முறையும் ஜேவிபிக்குத்தான் வாக்களிக்க போகின்றார் என்று தெரிகிறது. அவரைப் போன்றவர்களை மயக்கக்கூடிய பேச்சாற்றலும் ஜனவசியமும் அனுரகுமாரடவிம் உண்டுதான். யாழ்ப்பாணத்திலும் கனடாவிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் இன முரண்பாடுகள் தொடர்பிலும் இன நல்லிணக்கம் தொடர்பிலும் அனுரகுமார ஆற்றிய உரைகள் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக லிபரல் ஜனநாயக வாதிகள் மத்தியில் அதிகம் கவனிப்பை பெற்றிருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டச் செயற்பாட்டாளரும் ஆகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், ஜேவிபியை ஆதரிப்பதன் மூலம் தென்னிலங்கை அரசியலில் தாக்கம் செலுத்த முடியுமா என்று. அப்பொழுது இருந்ததைவிடவும் இப்பொழுது, ஜேவிபியின் மவுசு கூடிவிட்டது. இரண்டு பிரதான கட்சிகளையும் விட ஜேவிபி பரவாயில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் கருதுகிறது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான எதிர்பார்ப்பு உண்டா ? உண்டாயின், அவ்வாறான எதிர்பார்ப்பு உள்ளவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு ஜேவிபி என்ன பதில் கூறுகிறது என்பதைக் கேட்டுத் தமிழ் மக்களுக்குக் கூறுவார்களா? முதலாவது கேள்வி, இலங்கை இனப் பிரச்சினை என்பது இலங்கைத் தீவின் பல் வகைமையை ஏற்றுக் கொள்ள மறுத்ததில் இருந்துதான் தொடங்கியது. இலங்கைத் தீவின் பல்வகைமை எனப்படுவது இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் உண்டு என்பதுதான். இந்த பல்வகைமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதம் அதாவது பெரிய இனம் ஏனைய சிறிய இனங்களின் தேசிய இருப்பை அழிக்க முற்பட்டமைதான் இனப் பிரச்சினையாகும். எனவே இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? இது முதலாவது தொகுதிக் கேள்விகள். அனுரகுமார கூறுகிறார் தமிழ் மக்களுக்கு மொழிப் பிரச்சினை, வழிபாட்டுப் பிரச்சினை, பாதுகாப்புப் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டு என்று. உண்டுதான். ஆனால் அவையனைத்தும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைக்குள் அடங்கும். தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கூட்டுரிமையைப் பாதுகாக்கும் ஒரு தீர்வை முன் வைத்தால் பிரச்சனை தீர்ந்து விடும். எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதுதான். இந்த அடிப்படையில் இரண்டாவது தொகுதிக் கேள்விகளைக் கேட்கலாம். இனப் பிரச்சினைக்கு ஜேவிபி முன் வைக்கும் தீர்வு என்ன? தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ மஹிந்த கூறுகிறார் 13 பிளஸ் என்று. ரணில் கூறுகிறார் 13 என்று. சஜித் கூறுகிறார் 13 பிளஸ் என்று. இந்த விடயத்தில் ஜேவிபி தமிழ் மக்களுக்கு முன் வைக்கும் தீர்வு என்ன? ஏனைய பெரிய காட்சிகளை விடத் தன் கை சுத்தம் என்று ஜேவிபி கூறுகின்றது. ஊழலற்ற, முறைகேடுகளற்ற, குடும்ப ஆதிக்கம் அற்ற ஒரு ஆட்சியைத் தன்னால் தர முடியும் என்று வாக்குறுதி அளிக்கின்றது. ஆனால் ஊழலும் முறைகேடும் குடும்ப ஆட்சியும் எங்கிருந்து வந்தன? இலங்கைத் தீவின் ஜனநாயக இதயம் எங்கே தோல்வி அடைந்தது? இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்த போதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தாய்ப் பிரச்சனை. அதை ஜேவிபி ஏற்றுக் கொள்கிறதா? ஆயின் அதற்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? ஏனைய கட்சிகளை விட வித்தியாசமான ஒரு தீர்வை அவர்கள் முன்வைப்பார்களா? அதைப் பகிரங்கமாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக் கூற ஜேவிபி தயாரா? தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுடைய பாரம்பரியத் தாயகம் ஆகிய வடக்கு கிழக்கு இணைப்பை ஜேவிபி ஏற்று கொள்கின்றதா? ஏற்கனவே வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்கு போட்டு சட்டரீதியாக அந்த இணைப்பை பிரித்தது ஜேவிபிதான். அதற்காக ஜேவிபி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்குமா? அல்லது தான் செய்தது சரி என்றால் அதற்குரிய விளக்கத்தை ஜேவிபி பகிரங்கமாகக் கூறுமா? அதாவது ஜே விபி பகிரங்கமாக பொறுப்புக் கூறுமா? இவை இரண்டாவது தொகுதி கேள்விகள். மூன்றாவது தொகுதி கேள்விகள் வருமாறு… யுத்த காலத்தில் ஜேவிபி படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. போர் வெற்றிகளைக் கொண்டாடியது. ஆனால் தமிழ் மக்கள் அந்த வெற்றிகளை இனப்படுகொலை என்று வர்ணிக்கின்றார்கள். இது தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாடு என்ன? அவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைக்கும் பொறி முறை ஒன்று ஐநாவில் செயற்பட்டு வருகின்றது. போரை ஆதரித்த, போரை வழிநடத்திய அனைவரும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஜேவிபி பொறுப்பு கூறுமா ? நான்காவது கேள்வி, ஜேவிபியானது அதன் முதலாவது ஆயுதப் போராட்டத்தின்போது புதிதாக இணைக்கும் அங்கத்தவர்களுக்கு நடத்திய அரசியல் வகுப்புகளில் ஐந்தாவது வகுப்பில் மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகள் என்று விவரித்தது. ஜேவிபி இப்பொழுதும் அதே நிலைப்பாட்டோடு தான் காணப்படுகின்றதா? இந்த விடயத்தில் மலையக மக்களுக்கு எதிரான தனது முன்னைய நிலைப்பாட்டுக்காக ஜேவிபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமா? மேற்படி கேள்விகளுக்கு ஜேவிபியும் ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் பதில் சொல்ல வேண்டும். கனடாவிலும் யாழ்ப்பாணத்திலும் அனுரகுமார ஆற்றிய உரைகளில் காணப்படும் கவர்ச்சியான மனித நேய வார்த்தைகளைக் கண்டு மயங்கும் தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை அல்ல. மொழி பிரச்சினை வழிபாட்டுப் பிரச்சினை போன்றனவும் உதிரிப் பிரச்சினைகள் அல்ல. அவை யாவும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் சம்பந்தப்பட்டவை. கூட்டு உரிமை என்று எப்பொழுது கேட்கலாம் என்றால் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான். ஆனால் ஜேவிபியும் அதற்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் அரசியல் அடர்த்தி மிக்க விடையங்களை மேலோட்டமாகவும் மனிதாபிமான வார்த்தைகளிலும் கதைத்து விட்டுப் போகப் பார்க்கின்றார்கள். அரசியல் விவகாரங்களை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி மிக்க சொற்களின் ஊடாகத்தான் உரையாடலாம். அடர்த்தி குறைந்த சொற்களுக்கு ஊடாக உரையாடுவதே ஓர் அரசியல் தான்; தந்திரம் தான். ஜேவிபி வெளிப்படையான அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தைகளில் இனப் பிரச்சினை தொடர்பில் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடினால் தென்னிலங்கையில் உள்ள சிங்கள பௌத்த வாக்குகளை அவர்கள் இழக்க வேண்டி வரலாம். எனவே இனப் பிரச்சினை தொடர்பில் ஜெவிபி தெளிவாகப் பேசாமல் ஆனால் கவர்ச்சியாக மனிதாபிமான நோக்கு நிலையில் இருந்து பேசி வருகிறது. ஜேவிபியில் முன்பு உறுப்பினராக இருந்து அதிலிருந்து விலகிய ஒருவர் எழுதிய நினைவுக் குறிப்பு ஒன்றில் அவர் பின்வரும் பொருள் பட கூறுகிறார். “ராஜபக்சக்கள் வெளிப்படையாகத் தெரியும் இனவாதிகள்.ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி “ என்று. இக்கூற்று உண்மையா இல்லையா என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஜேவிபிக்கு மட்டுமல்ல ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களுக்கும் உண்டு. https://globaltamilnews.net/2024/201781/
  7. இஸ்ரேலின் அடாவடியான நடவடிக்கைகளுக்கும், பலஸ்தீனர்களை பட்டினிபோட்டு, கைது செய்தவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதற்கும் ஒரு போதும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும் மத்தியகிழக்கில் ஒரு பாடம் படிக்கவேண்டும். ஆனாலும் ஈரானின் ஜனநாயகமற்ற மதவாதிகளுக்கும் ஆதரவு கிடையாது.
  8. ஏவல்பட்ட 300 ட்ரோன்களிலும், ஏவுகணைகளிலும் 99% க்கு மேல் இஸ்ரேலும், அமெரிக்க நாசகாரிக் கப்பல்களும் சுட்டுவீழ்த்திவிட்டன. இது ஈரானின் தாக்குதல் படுதோல்வி என்றுதான் காட்டுகின்றது. ஒரு சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேலின் அயர்ன் டோம் எதிர்ப்புப் பொறிமுறையை செயலிழக்கவைக்காமல் நடந்த தாக்குதல் வெறும் புஸ்வாணமாகப் போயிருக்கின்றது. பதிலுக்கு இதே மாதிரி ட்ரோன்களை இஸ்ரேல் ஏவினால் ஈரானில் பெரிய அழிவு வரலாம்.
  9. ஓ அப்படியா! இதெல்லாம் அறிவியல் என்று யாரோ அவிக்க அதை இஞ்சை காவி வந்து தாளிக்கச் செய்துள்ளார் குமாரசாமி ஐயா🤪 அதுகள் ஒன்றில் “சிவனே” என்று போய்க்கொண்டிருக்கும். இல்லாட்டி “ஆமைக்கறி” சாப்பிட ஆசைப்படுவர்களின் வயிற்றில் ஜீரணித்திருக்கும்😜
  10. சிரிப்போம் சிறப்போம் பகுதியில்தானே இருக்கின்றது. இது சீரியஸ் இல்லையே!
  11. குறைந்தது பத்துப் பேர் பங்குபற்றினால்தான் யாழ்களப்போட்டி நடக்கும்! இன்னும் ஒன்பது பேர் சேருவார்களா?🤔
  12. தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை April 12, 2024 — கருணாகரன் — 2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்று இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என சில இடங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது நல்லது என்று பொதுஜன பெரமுன உள்ளிட்ட சில தரப்புகள் வலியுறுத்துகின்றன. எதையும் தீர்மானிக்கின்ற ஒரே மனிதராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அவரே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை உருவாக்கியவர். அவருக்கு அடுத்தபடியாக அதனுடைய சுவையறிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் உறவினர்கள் மட்டுமல்ல, ஒரே மாதிரிச் சிந்திப்பவர்களும் செயற்படுகின்றவர்களும். இதனால் இருவரையும் தந்திரமிக்கவர்கள் (நரித்தனமுள்ளவர்கள்) எனச் சொல்லப்படுவதுண்டு. இருவருக்கும் ஒரேயொரு வித்தியாசம். ஜே.ஆர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி நடத்தியவர். அந்தப் பலத்தைப் பயன்படுத்தி எதிர்த்தரப்புகளின் முதுகெலும்பை உடைத்தவர். தன்னுடைய கட்சிக்காரர்களின் ராஜினாமாக் கடிதத்தை வாங்கிப் பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டு முழுமையான நிறைவேற்று அதிகாரத்துக்கு அப்பாலும் செயற்பட்டவர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிய – சாதாரண பெரும்பான்மை கூட ஆட்சியில் இல்லை. அவர் ஜனாதிபதியாகிய விதமே – விந்தையே வேறுவிதமானது. யானை மாலை போட்டதால் ராணியாகியதைப்போல, ராஜபக்ஸவினரின் கூட்டுத் தவறுகளின் விளைவாகவும் ஏனைய அரசியல் தலைவர்களின் பலவீனங்களுக்குள்ளாலும் மேலெழுந்து ஜனாதிபதியானவர். இதனால் கேள்விக்கிடமற்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆளாக மாறியிருக்கிறார் ரணில். ஆகவே இப்பொழுது ரணில் மிக வலுவான யானையாக உள்ளார். ஆனால், தேர்தலில் இந்த யானைப் பலம் அவருக்கு இருக்குமா? இல்லையா என்பது கேள்வியே. என்பதால்தான் எந்தத் தேர்தல் முதலில் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் தேர்வு எதுவோ அதுவே நடக்கப்போகிறது. எப்படியிருந்தாலும் 2024 தேர்தல் ஆண்டாக அமையும் என்று நம்பிக்கையாகச் சொல்ல முடியும். இலங்கைத் தேர்தல் ஆணையகமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் – அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்துள்ள சூழலில்தான் – இலங்கையின் அரசியற் செல்வழி அமையப்போகிறது. அதை மீறிச் செயற்படக் கூடிய நிகராற்றல் வேறெவரிடத்திலும் இல்லை. இதுதான் உண்மை நிலவரம். கவலையும் கூட. இதற்குள் அவரவர் தமக்கேற்ற விதத்தில் தம்மைத் தயார்ப்படுத்தத் தொடங்கியுள்ளனர். “எந்தத் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயார்” என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜனபெரமுனவின் தலைமைச் சக்தியுமாகிய மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். இருந்தாலும் கடுமையான குழப்பத்தில் இருப்பது, ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுனவாகும். முதலில் பாராளுமன்றத் தேர்தலையா அல்லது ஜனாதிபதித் தேர்தலையா எதிர்கொள்வது என்ற பதட்டத்தில் உள்ளது பெரமுன. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதற்கு யாரை நிறுத்தலாம் என்ற குழப்பம் அதற்குள் நீடிக்கிறது. ராஜபக்ஸக்களின் கனவு நாயகன் நாமல் ராஜபக்ஸவை நிறுத்தலாம் என ஆரம்பத்தில் பேச்சடிபட்டது. பிறகு பஸில் ராஜபக்ஸவின் பெயரடிபட்டது. இப்போது அவர்கள் ரணிலையே நிறுத்தினால் என்ன என்று யோசிப்பாகச் சொல்லப்படுகிறது. அடுத்ததாக உள்ள ஐ.தே.கவின் ஒரே தெரிவு ரணில் விக்கிரமசிங்கதான். அதற்குள் வேறு கவர்ச்சிகரமான ஆட்களில்லை. ஆனால் அதற்கு ரணில் தயாரா என்று தெரியவில்லை இன்னும். தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு இன்னும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் பெரமுனவினரும் (ராஜபக்கஸவினரும்) ரணிலையே விரும்புவதால் சிலவேளை இரு தரப்பின் வேட்பாளராக ரணில் போட்டியிடக் கூடும் – நிறுத்தப்படக் கூடும். இதற்குள் (இலங்கையின் தற்போதைய கையறு நிலையில்) தம்மை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று சிந்திக்கிறது தேசிய மக்கள் சக்தி என்கிற (மக்கள் விடுதலை முன்னணி) ஜே.வி.பி. அதற்காக அது தமிழ்ப்பரப்பிலும் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை விரிக்கப்பார்க்கிறது. கிளிநொச்சி தொடக்கம் கனடா வரையில் நிகழ்ந்துள்ள அநுர குமாரவின் பயணம் இதற்குச் சான்று. ராாஜபக்ஸவினரின் மீதான கசப்புணர்வு, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி, நிறுத்தப்படாத ஊழல், மர்மமாக மேற்கொள்ளப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகார அரசியல் போன்றவற்றுக்கு மாற்றாகத் தம்மை நிறுத்தி விடலாம் என்று ஜே.வி.பி சிந்திக்கிறது. இதற்கு அதனுடைய கவர்ச்சிகரமான தலைவரான அநுர குமார திஸநாயக்கவை நிறுத்தப் பார்க்கிறது. இதற்கெல்லாம் அப்பால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற சஜித் பிரேமதாசவின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்குத் தயாராகியுள்ளது. இதற்கான உடன்படிக்கைகள் கூடச் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன. இந்த நான்கு தரப்பின் மூன்று வேட்பாளர்களும் புதியனவற்றை இலங்கைத்தீவுக்குத் தருவார்கள் என்று நம்புவதற்கொன்றுமில்லை. ஜே.வி.பியிடமிருந்து சிறிய அளவில் மாற்றங்கள் ஏதும் நிகழலாம். அதுகூட இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நிகழச் சாத்தியமில்லை. ஏனென்றால் அதற்கான இடம் ஜே.வி.பியின் இதயத்திலும் இல்லை. மூளையிலும் இல்லை. அதனுடைய கற்பனை வேறு விதமானது. இனவாதத்திலிருந்து மீண்டு விடாத சீர்திருத்தத்தையே அது கொண்டுள்ளது. மெய்யான மாற்றத்தை அல்ல. மாற்றம் போன்ற தோற்றத்தை. ஆனால், சஜித், ரணில், ராஜபக்ஸவினரை விட வரலாறு அநுரகுமார விடம் அதிகமாக எதிர்பார்க்கிறது. வரலாற்றுச் சூழலும் அவருக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) வாய்ப்பாக உள்ளது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு சரியாகச் செயற்படுவதற்கு (துணிவாக முடிவெடுப்பதற்கு) அநுரகுமாரவும் தயாரில்லை. அவருடைய தேசிய மக்கள் சக்தியும் தயாராக இல்லை. சஜித் பிரேமதாச தன்னை மிகத் தெளிவாகவே நிரூபித்து விட்டார். இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் எந்தப் பெரிய நன்மைகளையும் அளிக்கக் கூடிய வல்லமை எதுவும் தன்னிடமில்லை என. அவர் முல்லைத்தீவு – முருகண்டிப் பகுதியில் அமைத்த முழுமையடையாத வீடுகள் இதற்குச் சாட்சியம். எந்தத் தீர்மானத்தையும் ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவர்தான் மீட்பரைப்போலத் தோற்றம் காட்டிக் கொண்டிருப்பவர். அவரைக் கடந்து சிந்திக்கக் கூடிய – செயற்படக் கூடியவர் யாராவது வந்தால்தான் இலங்கையில் மாற்றம் நிகழும். அது அரசியல், பொருளாதாரம் எனச் சகல தளங்களிலுமாக இருக்கும். ஆனால் அப்படியான மூளையும் நல்லிதயமும் உள்ள எவரையும் அண்மையில் காண முடியவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதைப்போல, யாரும் எங்கிருந்தும் களமிறங்கலாம். அல்லது களமிறக்கப்படலாம். அப்படித்தான் முன்னர் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சந்திரிகா குமாரதுங்க களமிறக்கப்பட்டார். 2010 இல் யாருமே எதிர்பாராத வகையில் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டார். ஒரு இராணுவத்தளபதி ஜனாதிபதி வேட்பாளரா என்று பலரும் புருவத்தை உயர்த்தி, முகத்தைச் சுழித்தனர். ஆனால், சரத் பொன்சேகா ஐம்பது லட்சம் வாக்குகளைப் பெற்றார். அதற்குப் பிறகு 2015 இல் கோட்டபாய ராஜபக்ஸ கூட அப்படியான ஒரு தெரிவினால் நிறுத்தப்பட்டவரே. உண்மையில் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவேன், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவேன், அந்த வெற்றியின் ருசியை அனுபவிக்க முன்பு பதவியிலிருந்து அவ்வளவு விரைவாக விரட்டப்படுவேன் என்று கோட்டபாய சிந்தித்திருக்கவே மாட்டார். அவ்வளவும் நடந்து முடிந்தன. ஆகவே இவற்றைப்போல எதிர்பாராத விதமாக நம்முடைய அவதானத்துக்கு வெளியிலிருந்து வேறு யாரும் கூடப் புதிதாக களமிறக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஏனென்றால் இலங்கை அரசியல், அண்மைய ஆண்டுகளில் இலங்கையர்களால் தீர்மானிக்கப்படும் நிலையிலிருந்து விலகிப் பிற சக்திகளால் தீர்மானிக்கப்படுவதாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்தியா, சீனா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஆகியன இதில் முழுதாக ஈடுபடுகின்றன. இவற்றின் சதுரங்க ஆட்டத்தின் விளைவுகளே இன்றைய இலங்கை, இன்றையை ஆட்சி, இன்றைய ஜனாதிபதி, இலங்கையில் உலக வங்கி உள்பட அனைத்தும். இதனுடைய தொடர்ச்சியாகவே இனிவரும் இலங்கையும் இருக்கும். அதற்கமைவாகவே ஆட்சியும் ஆட்சித் தலைவர்களும் தெரிவு செய்யப்படுவர். இந்தத் தரப்புகளின் விருப்பத்துக்கு மாறான தலைமைகள் அதிகாரத்துக்கு வந்தால் ராஜபக்ஸக்கள் எப்படி தூர விலக்கப்பட்டனரோ அவ்விதம் விலக்கப்படுவர். ஆகவே இங்கே தேர்தல், ஜனநாயகத் தெரிவு என்பதெல்லாம் வெறும் கனவே! இந்த யதார்த்தத்தை உணராமல், யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் நிற்கிறது தமிழ்த் தேசியத் தரப்பு. அது எப்போதையும்போல ஜனாதிபதித் தேர்தலிலும் தவறைச் செய்யவே முனைகிறது. கடந்த 11.03.2024 இல் தமிழ்த் தேசியத் தரப்பினர் யாழ்ப்பாணத்தில் கூடி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதைப் பற்றி யோசித்திருக்கின்றனர். இதன் காணொளியும் Yu tupe காணக்கிடைக்கிறது. அதைப் பார்த்தபோது “ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது” என்ற தமிழ்ப்பழமொழிதான் நினைவுக்கு வந்தது. இந்த மாதிரியான உணர்ச்சிகரமான எதிர்மறைச் சிந்தனைகளால் தமிழ்ச்சமூகம் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளது. குறிப்பாக சமானிய மக்கள். இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தத்தை இன்னும் புரிந்து கொள்ளாத – புரிந்து கொள்ள விரும்பாதவர்களின் கோமாளி விளையாட்டு அது. இதனுடைய விபரீதம் சாதாரணமானதல்ல. மேலும் சிங்களப் பேரினவாதத்தைக் கூர்மைப்படுத்தும் முட்டாள்தனமான யோசனை அது. புதிதாகச் சிந்திக்க முடியாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. வரலாற்றிலிருந்தும் சொந்த அனுபவங்களிலிருந்தும் கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு துயரமானது! தமிழ் வேட்பாளர் என்பது ஒன்றும் புதியதல்ல. முன்னர் குமார் பொன்னம்பலம் அப்படி நின்றார். பிறகு சிவாஜிலிங்கம். தமிழ் வாக்குகளின்றியே ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியும் என்பதற்கு கோட்டபாய ராஜபக்ஸ உதாரணம். எந்த வாக்குகளுமின்றியே ஒருவர் ஜனாதிபதியாக முடியும் என்பதற்கு ரணில் விக்கிரமசிங்க எளிய சான்று. இந்த நிலையிற்தான் தமிழ் வேட்பாளர் பற்றிய சிந்தனை இருக்கிறது. குறைந்த பட்சம் மலையக, முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய தமிழ் பேசும் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளர் என்று சிந்தித்தாற் கூடப் பரவாயில்லை. ஆக மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தற் களம் சேற்றுக் குழியாகக் கிடக்கிறது. இதற்குள் முத்தெடுப்பது எப்படி இலங்கை மக்கள்? https://arangamnews.com/?p=10617
  13. லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மூவினங்களைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா, இதுவரை இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களில் முதன்முறையாக புலம்பெயர் தமிழர்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே இச்சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார். நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலக அதிகாரிகள் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். அதேபோன்று தெற்கிலும், குறிப்பாக கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளை சந்தித்து உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர். அதேபோன்று வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பற்றிய தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாகத் திரட்டிவருவதாகவும், அவர்களுடனான முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாதம் ஆரம்பமாகும் எனவும் இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது லண்டன் சென்றிருக்கும் யுவி தங்கராஜா, எதிர்வரும் வார தொடக்கத்தில் பாரிஸிலும், 19 மற்றும் 20ஆம் திகதி வார இறுதி நாட்களில் லண்டனிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புக்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என மூவினங்களைச்சேர்ந்த இலங்கையர்களும் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களுக்கு உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் அதன்கீழ் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் ஆணைக்குழு என்பன தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள யுவி தங்கராஜா, அவர்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார். ‘இதற்கு முன்னர் இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களைப் பொறுத்தமட்டில், அவற்றில் புலம்பெயர் தமிழர்களோ அல்லது இலங்கையர்களோ பெரும்பாலும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் புலம்பெயர்ந்து சென்ற இலட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றனர். எனவே உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்பதற்கோ அல்லது அச்செயன்முறையில் பங்கேற்பதற்கோ புலம்பெயர் இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதன் ஓரங்கமாகவே இச்சந்திப்புக்களை நடத்துவதற்கு உத்தேசித்திருக்கின்றோம்’ என யுவி தங்கராஜா தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=273568
  14. மியன்மார் அடிமை முகாமிலிருந்து 8 இலங்கையர்கள் மீட்பு - விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை Rizwan Segu MohideenApril 12, 2024 – IT தொழில் என கூறி இணைய மோசடியில் மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள், தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 56 இலங்கையர்களில் எட்டு பேர் மியன்மார் அரசாங்க அதிகாரிகளால் மார்ச் மாத தொடக்கத்தில் மீட்கப்பட்டு மியாவாடி மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 6 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில் குறித்த குழுவினரை நேற்றையதினம் (11) மியன்மார் குடிவரவு அதிகாரிகள் தாய் – மியன்மார் நட்புறவு பாலத்தின் ஊடாக தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இலங்கையர்கள் நலமுடன் இருப்பதாகவும் தற்போது தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை வேலை வாய்ப்புகள் என்ற பொய்யான தொழில் வாய்ப்புக்காக, சுற்றுலா வீசாக்களில் ஏமாற்றி அழைக்கப்பட்டு, மியன்மாரில் ஒரு மோசமான இன ஆயுதக் குழுவால் சிறைப்பிடிக்கப்பட்ட 60 இலங்கையர்களைக் கொண்ட குழுவின் அவலநிலை தொடர்பில் 2023 டிசம்பரில், ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) உள்ள ஒரு குறிப்பிட்ட முகவரால் துபாயில் தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கு விண்ணப்பிக்குமாறு ஏமாற்றி, மியாவாடியில் இணைய அடிமை முகாமில் பணியாற்ற மியன்மாருக்கு கடத்தப்பட்டனர், அங்கு அவர்கள் இணைய மோசடிகளைச் செய்ய வேண்டிய பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களின்படி, அவர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து பணத்தை திருடுவதற்காக காதலர்கள் போன்று நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் சொன்னதைச் செய்ய மறுத்தால், மின்சாரம் பாய்ச்சுதல், நீர் நிரம்பிய சிறைகளில் அடைத்தல், கைகளில் கட்டி தொங்கவிடுதல், பட்டினியாக்குதல் போன்ற சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான Parnpree Bahiddha-Nukara உடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தொலைபேசியில் உரையாடினார். மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் வெளிவிவகார அமைச்சு, மனிதக் கடத்தலினால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியுள்ள சுமார் 56 இலங்கையர்களை மீட்டு நாட்டுக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கைத் தூதரகம் கடந்த ஆண்டு பயங்கரவாதக் குழுவிடமிருந்து 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/04/12/breaking-news/54772/மியன்மார்-அடிமை-முகாமிலி/
  15. பிரபாகரனாலையே தன்னை துரத்த முடியவில்லை என்கிறார், டக்ளஸ் தேவானந்தா! பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஆய்வறிக்கை கையில் கிடைத்தால் , அகழ்வு பணிகளுக்கான நடவடிக்கைகள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் சூளுரைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (11.04.24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். தன் மீதான அவதூறுகளை பரப்பும் செயற்பாட்டில் தமிழ் கட்சிகள் செயற்படுகின்றன. அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடரில் “மோட்டார் சைக்கிளில் அமைச்சர் தப்பியோட்டம் ” என ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன. இவ்வாறான சேறு பூசல்கள் மூலம் என்னை துரத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள். பிரபாகரனாலையே என்னை துரத்த முடியவில்லை எனும் போது, சில குடிகாரர்களால் என்னால் துரத்த முடியாது. பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு நீண்ட காலத்திற்கு முதலே ஆரம்பிக்கப்பட்ட திட்டம். கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் கால பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட அந்த திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளனர். தற்போது பொன்னாவெளியை சூழவுள்ள மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் உள்ளன. அவற்றினை மக்களுடனான சந்திப்பின் ஊடாக கேள்வி பதில் முறையான கலந்துரையாடலை நடத்தவே ்அங்கே சென்றோம். அதை தடுத்து நிறுத்த சில அரசியல்வாதிகள் குடிகாரர்கள் அன்றைய தினம் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். அன்று அங்கு கதைக்க கூடிய நிலையில் அங்கு யாரும் இல்லை. சிலர் தமது அரசியலுக்காக வந்திருந்தார்கள். மற்றையவர்கள் போதையில் நின்றார்கள். அதனால் அவர்களோட கதைக்க முடியாது என திரும்பி வந்தேன். மீண்டும் செல்வேன். மக்களின் வாழ்வாதரத்திற்காக தொடர்ந்து பயணிப்போன். அன்றைய தினம் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கையின் சாதக பாதக தன்மை தொடர்பிலான ஆரம்ப ஆய்வு பணிகளுக்கான 12 திணைக்களங்களை சேர்ந்தவர்களுடன் சென்ற போதே அங்கே குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். சுண்ணக்கல் அகழ்வுக்கான அனுமதிகள் வழங்குவதற்கான படிமுறைகள் உண்டு. அவற்றின் ஒரு கட்டமாகவே ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆய்வின் முடிவில் சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது. ஆய்வறிக்கையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டால் அகழ்வு நடவடிக்கைக்கான பணிகள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/201708/
  16. தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராகவே சுமந்திரன் செயற்படுகின்றார் என சுரேஷ் குற்றச்சாட்டு! ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலர் ஆதரவாக இருந்தாலும் சுமந்திரனே எதிராகவே இருக்கின்றார் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கானத் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆனால், இதுவரை வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும், மதங்களைக் கடந்து வடக்கு – கிழக்கைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவரே பிரேரிக்கப்படுவார். தமிழ்த் பொது வேட்பாளர் தொடர்பில் மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். ஆகையினால் அவர்களுடனும் பேசவுள்ளோம். அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இந்த விடயத்தில் சம்மதித்தால் அவர்களுடனும் பேச நாம் தயார். மேலும், தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதன் முக்கிய தலைவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் நிலைப்பாட்டில் ஆதரவாக உள்ளனர். ஆனாலும், அக்கட்சியின் சுமந்திரன் போன்றோர் இதற்கு எதிராகவே உள்ளனர்.” என்றார். http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளருக்கு/
  17. ஒஸ்லோவில் சமஸ்டியைப் பரிசீலிக்கின்றோம் என்று அன்ரன் பாலசிங்கமும், கருணா அம்மானும் ஒத்துக்கொண்டது தீவிர நிலைப்பாட்டில் இருந்த தமிழ்ச்செல்வன் தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அன்ரன் பாலசிங்கம் ஓரங்கட்டப்பட்டார். கருணா பிளவுக்கும் வழிகோலியது இந்தச் சம்பவம்தான். ரோக்கியோ போனால் சமஸ்டித் தீர்வுக்குள் “ பொக்ஸ்” அடித்துவிடுவார்கள் என்றுதான் போகவில்லை. ஆனால் சொல்லப்பட்ட காரணம் அமெரிக்காவுக்கு போக சமதரப்பாக அனுமதி கொடுக்கவில்லை என்பது.. ரோக்கியோ போயிருந்தாலும் முள்ளிவாய்க்கால் “பொக்ஸ்” போல ஒன்று நடந்திருக்கும்.
  18. Chai Time at Cinnamon Gardens - தெய்வீகன் ஈழத்தமிழ் பின்னணிகொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் எழுதிய "Chai Time at Cinnamon Gardens" நாவல் ஆஸ்திரேலியாவின் இலக்கியத்துக்கான Miles Franklin அதி உயர் விருதினை வென்றிருக்கிறது. சிட்னியில் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சங்கரி எழுதிய மூன்றாவது நாவல் இதுவாகும். Miles Franklin விருதுக்குழுவின் சார்பில் சங்கரியை அழைத்து இந்த வெற்றிச் செய்தியை அறிவித்தபோது, நான்கு தடவைகள் திரும்பத் திரும்பக் கூறிய பின்னரே, சங்கரி தனது வெற்றியை உணர்ந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. Miles Franklin விருதினை வெற்றிகொண்டுள்ள சங்கரிக்கு 60 ஆயிரம் டொலர் பணப்பொதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (தமிழ் இந்துவின் வெளியான முழுமையான கட்டுரை) காலனித்துவ ஆக்கிரமிப்பின் வழியாக உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தியதன் வழி உருவான நவ - ஆஸ்திரேலியா என்ற பெருந்தேசம் எழுபதுகள்வரை நிறவாதப் பெரும் திமிரோடு தன்னை உலக அரங்கில் பெருமையோடு முன்நிறுத்திய நாடாகும். அதன்பின்னர், உருவான சில கனிவான மாற்றங்கள், அரசாட்சியில் மெல்லிய ஜனநாயக விழுமியங்களைத் தூவத்தொடங்கியது. ஆட்சிப் பீடத்தில் ஒட்டியிருக்கும் பழைய கறைகளை கழுவிக்கொள்வதற்கு, நவ-ஆஸ்திரேலிய தேசமானது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல புண்ணியங்களைச் செய்து, ஜனநாயகத்தின் வழி பல பூஜை - புனஸ்காரங்களை நடத்திவருகிறது. ஒருபடி மேலே சென்று, ஜனநாயகம் என்றால் என்ன தெரியுமா? மக்கள் உரிமை என்றால் எவ்வளவு புனிதமானது தெரியுமா என்று ஏனைய நாடுகளுக்கே பாடங்களைச் சொல்லித்தருகிறது. ஆனால், நவ-ஆஸ்திரேலியாவின் இந்த மாற்றம் உண்மையிலேயே ஆத்மார்த்தமானதா? பெரும்பான்மை ஆஸ்திரேலியர்களின் மனதில், ஜனநாயகப் பண்பும் மக்களாட்சியின் மாண்பும் நீக்கமற நிலைக்கவேண்டும் என்ற தூய சிந்தனையுடன் கூடியதா? ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த - Miles Franklin - இலக்கிய விருதினை இந்த ஆண்டு வெற்றிக்கொண்டுள்ள சங்கரி சந்திரனின் Chai Time at Cinnamon Gardens என்ற நாவல், நவ-ஆஸ்திரேலிய சிந்தனையின் போலித்தனங்கனை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. சங்கரி சந்திரன், இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணத்தின் அளவெட்டி என்ற கிராமத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெற்றோர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், அங்கு பிறந்தவர். சட்டத்துறையில் கற்றுத் தேர்ந்து, தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். தற்போது, தலைநகர் கன்பராவில் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளோடு வசிக்கிறார். Chai Time at Cinnamon Gardens அவர் எழுதியுள்ள மூன்றாவது நாவல். Chai Time at Cinnamon Gardens நாவலின் மூலம் சங்கரி முன்வைத்திருக்கும் அதி முக்கிய கேள்வி - "இந்த நாட்டில் ஆஸ்திரேலியக் குடிமகனாக வசிப்பது என்பது எவ்வாறு? அதனை யார் தீர்மானிப்பது" எழுபதுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயரத்தொடங்கிய பல நாட்டவர்களினதும் வரவால், ஆஸ்திரேலிய தேசம் புதிய பரிணாமத்தை எட்டத்தொடங்கியது. அதன்பிறகுதான், ஆஸ்திரேலியா பல் கலாச்சார விழுமியங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் பரந்துபட்ட பண்பாட்டு ஞானத்தைப் பெற்றுக்கொண்டது. ஆனாலும், சொந்த நிலத்திலிருந்து வேரறுத்து வெளியேறி வந்த சமூகங்களின் குற்ற உணர்வு - எல்லா மேலைத்தேய நாடுகளைப்போலவும் - ஆஸ்திரேலியாவுக்கு வசதியான அதிகாரத்தினை கையளித்தது. போகப்போக வரலாற்று ரீதியாகப் புதிய வடிவங்களிலான திமிர்களை அரசுக்கு உருவாக்கியது. அந்தத் தேசிய இறுமாப்பின் வழியாக பல கொடூரமான குடிவரவுக் கொள்கைகள் எழுந்து, காலப்போக்கில் அவை சட்டங்களாகவும் மாறின. அந்த வகையில், வேறு நாடுகளிலிருந்து வந்து குடியுரிமை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் ஆஸ்திரேலியா இன்றுவரை அறைகூவிக்கொண்டிருக்கும் தேசிய முழக்கம்தான் "இந்த நாட்டில் நல்ல ஆஸ்திரேலியனாக இரு" (Be an Australian) சங்கரி தனது நாவலில், நவ-ஆஸ்திரேலியா பெருமையாகப் பீற்றிக்கொள்கின்ற இந்த அறைகூவலை கிழித்துத் தொங்கப்போட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா தனது பெருமைகளாகப் பேணிவைத்திருக்கும் பல்வேறு பாவனை விழுமியங்களையும் கடுமையாகக் கேள்விக்குட்படுத்துகின்ற இந்த நாவலை நிச்சயமாக ஆஸ்திரேலியாவில் யாரும் பதிப்பிக்க முன்வரப்போவதில்லை என்று தான் முன்னமே எண்ணிக்கொண்டதால், நாவலை முழுமையாக தான் நினைத்தபடி எழுதுவதில் எந்த மனத்தடையும் இருக்கவில்லை என்று நாவல் எழுதிய அனுபவம் குறித்துக் குறிப்பிடும்போது சங்கரி கூறியுள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சிட்னிக்கு வருகின்ற கணவனும் (ஸாகிர்) மனைவியும் (மாயா) தங்கள் வயதை ஒத்த முதியவர்களுக்கென, வயோதிபர் இல்லமொன்றை நடத்துகிறார்கள். அங்கு தங்குவதற்காக வருகின்ற பல்வேறு நாட்டு முதியவர்களின் ஊடாகவும் ஆஸ்திரேலிய தேசம் என்பது அவர்களுக்கு உண்மையில் எப்படிப்பட்ட புகலிடமாக அடைக்கலம் அளித்திருக்கிறது என்பதை விரித்துச் சொல்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு முதன் முதலாக வந்து இறங்கியவர் என்று நவ-ஆஸ்திரேலியர்களால் போற்றப்படுகின்ற கப்டன் குக் என்பவரது உருவச்சிலை, இந்த வயோதிபர் இல்ல வளாகத்தில் முன்னர் இருந்திருக்கிறது. அந்தச் சிலையை ஒருநாள், ஸாகிர் அகற்றிவிடுகிறார். அதனைப் பெருங்குற்றமாக அடையாளம் கண்டு, நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்கிறது அப்பகுதி கவுன்ஸில். இந்தச் சம்பவத்திலிருந்து Chai Time at Cinnamon Gardens நாவல் முற்றிலுமான ஒரு அரசியல் பிரதியாக - ஆஸ்திரேலிய அரசின் போலியான ஜனநாயகப் பெருமிதங்களை சவாலுடன் எதிர்க்கின்ற - வரலாற்று உண்மைகளை மீள ஞாபகமூட்டுகின்ற நூலாக - உருமாறிக்கொள்கிறது. ஆஸ்திரேலிய நிறவாத அரசியலை, இலங்கையின் இனவாத அரசியலுடன் சமாந்தரப்படுத்தி விரித்துச் சொல்லும் இந்த நாவல், வரலாற்று ரீதியாக ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் முகங்கொடுத்த பேரவலங்களைத்தான் சிறிலங்காவில் தமிழர்களும் எண்பதுகள் முதல் அனுபவித்துள்ளதாக சங்கரி, உண்மைச் சம்பவங்களோடு பாத்திரங்களைக் கோர்த்துச் சொல்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான வரலாறுடைய ஆஸ்திரேலியாவினை பின் தள்ளிவிட்டு, ஆஸ்திரேலிய வரலாறு என்பது கப்டன் குக் வந்து இறங்கிய காலத்துடன் ஆரம்பிப்பது என்று புனைந்து, வரலாற்றின் மீது நின்று பொய்யுரைக்கும் நவ-ஆஸ்திரேலிய சிந்தனையில் கிடக்கின்ற அதே கேவலத்தைத்தான், மஹாவம்ஸத்திலிருந்து இலங்கை வரலாறு தோன்றியதாக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்று தனது பூர்வீக நிலத்தினதும் புகலிட தேசத்தினதும் வரலாற்றுப் பெருங்குற்றத்தினை ஒருபுள்ளியில் இணைத்திருக்கிறார். நவ-ஆஸ்திரேலிய நிறவாதமெனப்படுவது மிகவும் நுட்பமானது. சாமர்த்தியமாக சனங்களுக்குள் நுழைத்து, தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சமன் செய்யக்கூடியது. அந்தவகையில், சட்டங்களை முன்வைத்து சனங்களைப் பயம்காட்டுவது என்பது அந்நிய நாடுகள் அனைத்திற்கும் சம்பிரதாயமான சாகசங்களில் ஒன்று. ஆனால், சங்கரி தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணி என்ற காரணத்தினால், நாவலின் முக்கிய இடங்களில், அஞ்சலி என்ற பாத்திரத்தின் வழியாக, ஒரு சட்டத்தரணியாகவே மாறிவிடுகிறார். தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சட்டங்களுக்குள் சடைந்து வைத்திருக்கும் அரசின் லாவகங்களை, தனது தர்க்கங்களால் உடைக்கிறார். முற்று முழுதாக ஒரு அரசியல் நாவலென்றாலும், இலங்கைக் குடும்பமொன்றின் அன்றாட ஆஸ்திரேலிய வாழ்வின் வழியாக, புலம்பெயரிகள் மீதான நுட்பமான தனது அவதானிப்புக்களை சங்கரி சுவைபடப் பதிவுசெய்திருக்கிறார். சன் டி.வியுடன் லயித்திருக்கும் சிட்னி வயோதிபர் இல்லமொன்றின் அன்றாடங்கள் எப்படியான - புதிரான - நிகழ்வுகளால் - உரையாடல்களால் - துயரங்களால் - எதிர்பார்ப்புக்களால் நிறைந்துகிடக்கிறது என்பதை பல இடங்களில் அங்கதச்சுவையோடு எழுதியிருக்கிறார். ஆஸ்திரேலிய அரசினைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி - அதன் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்துகின்ற - எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுவது இது முதல் தடவை அல்ல. ஆஸ்திரேலிய அரசினால் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீண்டகாலமாகக் குடிவரவு அமைச்சின் தடுப்பிலிருந்த ஈரானிய எழுத்தாளர் பெஹ்ரூஸ் பூச்சானி, தடுப்பிலிருந்துகொண்டு ஆஸ்திரேலிய அரசு தனக்கு இழைத்துள்ள கொடுமைகளை No Friend But the Mountains என்ற பெயரில் எழுதிய நூலுக்கு 2019 ஆம் ஆண்டு விக்டோரிய அரசாங்கத்தின் இலக்கியத்திற்கான உயரிய விருது வழங்கப்பட்டது. அப்போதுகூட, அவர் தடுப்பிலிருந்து விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரியின் Chai Time at Cinnamon Gardens நாவல், வெறுமனே ஆஸ்திரேலிய அரசின் பல்வேறுபட்ட முரண்பாடான குடிவரவு அணுகுமுறைகளை - அடிப்படை அரசியல் சிந்தாந்தங்களை - பாவனை ஆட்சிமுறையை - கேள்விக்கு உட்படுத்துவது என்பதற்கு அப்பால், சங்கரி என்ற புலம்பெயர்வின் எந்த வலியையும் அனுபவித்திராத ஒரு எழுத்தாளர், மிகக்கூர்மையான அரசியல் பிரதியொன்றை எவ்வாறு எழுதுவதற்கு களத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற பின்னணியையும் - தேவையையும்கூட - வெளிப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த Michelle de Kretser என்ற பெண்மணி 2013 ஆம் ஆண்டும் 2018 ஆம் ஆண்டுகளில் இதே Miles Franklin விருதினை வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.theivigan.co/post/10005
  19. ஆர்.எம்.வீரப்பனின் எழுச்சியும், வீழ்ச்சியும்! -சாவித்திரி கண்ணன் ஆர்.எம்.வீயின் வாழ்க்கை வெற்றிகளும், வீழ்ச்சிகளும் நிறைந்தது! எம்.ஜி.ஆரின் அனைத்து வெற்றிகளுக்கு பின்பும், ஆர்.எம்.வியின் அர்ப்பணிப்பு இருந்ததை போலவே, எம்.ஜி.ஆரின் வீழ்ச்சிக்கும் தன்னை அறியாமலே துணை போனவர்! தமிழகத்தின் முக்கியமான சில அரசியல் திருப்பு முனைகளுக்கு காரணமானவர்! பொதிகை தொலைகாட்சியில் 20 வருடத்திற்கு முன்பு நண்பர் லேனா. தமிழ்வாணனைக் கொண்டு நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நான் செய்து கொண்டிருந்த காலத்தில் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து ஒரு நேர்காணல் செய்தோம். ஏதோ ஒரு சந்திப்பு என்றில்லாமல் என்னைக் குறித்து அவர் முழுமையாக கேட்டறிந்த விதம், நிகழ்ச்சி குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதில் காட்டிய சிரத்தை என்னை ஆச்சரியப்படுத்தியது. எம்.ஜி.ஆர் ஏன் இவரை அருகே நெருக்கமாக வைத்துக் கொண்டார் என என்னால் நன்றாக உணர முடிந்தது. ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றிச் சொல்வதென்றால், சிறந்த நிர்வாகி. சிறிய விஷயங்களிலும் கூட சின்சியராக அக்கறை காட்டுவார்! நிகழ்ச்சியின் முடிவில் எம்.ஜி.ஆர் குறித்து அன்அவிஷயலாக ஒரு அரிய தகவலைச் சொன்னார். எனக்கு ஆர்.எம்.வீ மீது மிகவும் ஆர்வம் வந்துவிட்டது. இவர் உண்மையில் மனம் விட்டு பேசி, அது புத்தக வடிவம் பெற்றால், அந்த புத்தகம் தமிழக வரலாற்றையே கட்டுடைப்பு செய்யுமே! இந்த மனிதருக்குள் எம்.ஜி.ஆர் குறித்த எத்தனையோ அரிய ரகசியங்கள் உள்ளன. அதை எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என அவரிடம் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ”இந்த சமூகத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை சொல்லிவிட்டால் தான் என்ன..?” எனக் கேட்டேன். அவர் உடன்படவில்லை. அவர் உடன்படாதது அதிசயமல்ல. எம்.ஜி.ஆரைச் சுற்றிலும் ஒரு மாயபிம்பத்தை கட்டமைத்ததிலும், அதில் பலன் பெற்றதிலும் தலையானவர் அவர் தானே! ஆர்.எம்.வீரப்பன் இல்லாவிட்டால் நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை எம்.ஜி.ஆர் தயாரித்தே இருக்கமாட்டார் என்று தான் தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஆர்.எம்.வியை நம்பி முழு பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு, தன்னை சற்று சுதந்திரமாக வைத்துக் கொள்வாராம் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்.ஜி.ஆர் எடுத்த போது, ”நான் இந்த படத்திற்கு நிர்வாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றால், ஜெயலலிதாவை நீங்க இந்த படத்திற்கு கமிட் செய்யக் கூடாது” என்பது தான் ஆர்.எம்.வீரப்பன் வைத்த நிபந்தனை. எம்.ஜி.ஆர் ஆடிப் போனார். எவ்வளவோ சமாதானம் செய்தும் பார்த்தாராம். கடைசி வரை ஆர்.எம்.வி உடன்படவில்லை. ”மூன்று கதாநாயகிகளில் ஒருவர் தானே ஜெயலலிதா! இருந்துவிட்டு போகட்டுமே..” என சமாதானப்படுத்தி உள்ளார். ”இது தான் உங்க முடிவென்றால், நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் இருந்தே விலகி கொள்கிறேன். எனக்கு அடுத்த மாதத்தில் இருந்து ரூ500 சம்பளம் வேண்டாம்” என்றாராம். எம்.ஜி.ஆர் பல நாட்கள் காத்திருந்து பார்த்துவிட்டு, பிறகு ஆர்.எம்.வீரப்பன் நிபந்தனையை ஏற்று அழைத்தாராம். ஆர்.எம்.வீ இல்லாமல் சொந்த படத் தயாரிப்பை நினைத்தே பார்க்க முடியாது எம்.ஜி.ஆரால்! ஆர்.எம்.வியும், எம்.ஜி.ஆருக்கு நிறைய விட்டுக் கொடுத்து, நிறையவே பலன் பெற்றும் உள்ளார். ஆர்.எம்.விக்காக தெய்வத்தாய் தொடங்கி நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்‌ஷாகாரன்..என பல படங்கள் நடித்துக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்! தன்னிடம் வேலை செய்பவரே முதலாளியாகி, தன்னை வைத்தே படமெடுக்க உடன்படும் பெருந்தன்மையும் எம்.ஜி.ஆருக்கு இருந்ததென்றால், அது ஆர்.எம்.வியின் நேர்மைக்கும், திறமைக்கும் எம்.ஜி.ஆர் கொடுத்த வெகுமதி என்றும் பொருள் கொள்ளலாம். ரிக்‌ஷாகாரன் படத்திலேயே ஜெயலலிதாவை தவிர்த்து, மஞ்சுளாவை அறிமுகம் செய்தார் ஆர்.எம்.வி! எம்.ஜி.ஆரை வெற்றிகரமாக ஜெயலலிதாவிடம் இருந்து விடுவித்ததில் மட்டுமல்ல, மீண்டும் சுமார் பத்தாண்டுகளுக்கு உள்ளாக எம்.ஜி.ஆருடன் இணைத்து வைத்தவரும் அவர் தான்! திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் பணம் எண்ணுகின்ற விவகாரத்தில் அதன் நேர்மையான நிர்வாக அதிகாரி சுப்பிரமணிய பிள்ளையை அதிமுகவினர் கொலை செய்து விட்டனர்! அதை தற்கொலையாக காட்டும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வழக்கம் போல கமிஷன் ஒன்றை விசாரிக்க செய்து, விவகாரத்தை ஆறப் போடலாம் என எம்.ஜி.ஆர் சி.ஜே.ஆர். பால் என்ற நீதிபதியை கொண்டு விசாரணை கமிஷன் போட்டார். அவரோ மிக நேர்மையாக, ‘இது கொலை தான்’ என அறிக்கை தந்தவுடன், எம்.ஜி.ஆர் அந்த அறிக்கையை அமுக்கிவிடப் பார்த்தார். ஆனால், கருணாநிதியோ அதை பொதுவெளியில் வெளிப்படுத்தி விட ஏக களேபரம்! போதாக் குறைக்கு நீதி கேட்டு மதுரை முதல் திருச்செந்தூர் வரை பாத யாத்திரை வேறு கருணாநிதி நடத்தவும் எம்.ஜி.ஆருக்கு ஆர்.எம்.வீ மீது கடும் கோபம் ஏற்பட்டது. அறநிலையத் துறை அமைச்சரான ஆர்.எம்.வீயின் ஆட்கள் தான் இந்த கொலைக்கு காரணம்! இதை மூடி மறைக்க செய்த முயற்சிகள் யாவும் அம்பலப்பட்டு எம்.ஜி.ஆருக்கு பெருத்த அவமானம் ஆகிவிட்டது. ஆர்.எம்.வியை அழைத்து கடுமையாக சாடிய எம்.ஜி.ஆர், தொடர்ந்து ஆர்.எம்.வியை புறக்கணித்தும் வந்தார். இந்தச் சூழலில் எம்.ஜி.ஆரை எப்படி சமாதானப்படுத்துவது என்ற ஒற்றை சிந்தனையில் வலம் வந்து கொண்டிருந்த ஆர்.எம்.வி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்காக ராணி சீதை மன்றம் சென்ற போது யதேச்சையாக ஜெயலலிதாவை சந்திக்கிறார். ”எப்படிம்மா இருக்குறீங்க” என விசாரிக்க.. ”இருக்கேன். உங்களுக்கே தெரியுமே..எந்த வாய்ப்பும் இல்லாமல் ஏதோ இருக்கேன்” என சொல்லவும், ”உங்களுக்கு ஒரு முக்கிய நாட்டிய வாய்ப்பு ஒன்றை உருவாக்கி தருகிறேன் செய்கிறீர்களா?” எனக் கேட்க, ஜெயலலிதாவும் மகிழ்ச்சியாக ”நிச்சயமாக செய்கிறேன்” எனச் சொல்லி உள்ளார். அப்போது மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகள் போய்க் கொண்டிருந்தன. அதில் காவேரி தந்த கலைச் செல்வி என்ற ஒரு நாட்டிய நிகழ்வை அரங்கேற்றம் செய்யும் வாய்ப்பை ஜெயலலிதாவிற்கு வழங்கினார் ஆர்.எம்.வி. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் ஆட்டத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர் பரவசமானார். கடந்த சில நாட்களாக தன் மனதை அரித்துக் கொண்டிருந்த கவலைகள் யாவும் விலகி பிரகாசமானார் எம்.ஜி.ஆர். அந்த நிகழ்ச்சியிலேயே, ”நான் என்ன நினைக்கிறேனோ, அதை சொல்லாமலே என் மனதறிந்து நிறைவேற்றுபவர் தான் நமது ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்…” என பலவாறாக ஆர்.எம்.வீயை புகழ்ந்தார். எம்.ஜி.ஆரிடம் எப்படியோ தன் முக்கியத்துவம் மீண்டும் உயிர் பெற்று விட்டது என ஆர்.எம்.வியும் அகமகிழ்ந்தார். ‘இந்த நிகழ்ச்சியை துவக்கமாக வைத்து ஜெயலலிதா அரசியலில் பிரவேசிப்பார். அதிமுகவில் எம்.ஜிரையே ஆட்டுவிப்பார்…’ என அப்போதைக்கு அவர் யோசிக்கவில்லை. காலம் அதை நிகழ்த்திவிட்டது. அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் என மேலெழுந்து வந்து, கட்சியின் அதிகாரத்தையே மெல்ல, மெல்ல எம்.ஜி.ஆரிடம் இருந்து தன்னிடம் நகர்த்திக் கொண்டார் ஜெயலலிதா. டெல்லியில் இந்திராகாந்தி, பிரணாப் முகர்ஜி என உயர்அதிகார மையத்துடன் நெருங்கிப் பழகி எம்.ஜி.ஆரையே மிரள வைத்தார். எம்.ஜி.ஆரால் ஜெயலலிதா விஷயத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. ”என்னை முதல்வராக்க எம்.ஜி.ஆருக்கு அழுத்தம் தாங்க..” என ராஜிவ் காந்திக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா. ஆர்.எம்.வீரப்பன் எவ்வளவு முயன்றும் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய அளவில் வலுவாக இருந்த பிராமண லாபிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ”கருணாநிதி மீண்டும் மேலெழுந்து வருவதை தடுக்கும் ஆற்றல் ஆர்.எம்.வீரப்பனுக்கு இல்லை. அது ஜெயலலிதாவிற்கே உண்டு” என திமுகவை விரும்பாத தமிழக மக்களும் நம்பத் தொடங்கினர். ராஜிவ்காந்தி கொலை ஜெயலலிதாவுக்கு ஜாக்பாட் வெற்றியை பெற்றுத் தந்தது. ஜெயலலிதா முதல்வரானதும் சில காலம் அரசியலில் அஞ்ஞானவாசம் செய்த ஆர்.எம்.வீ, பிறகு ஜெயலலிதாவிடமே வந்து சேர்ந்ததோடு, மூச்சுக்கு முன்னூறு முறை ‘’புரட்சித் தலைவி’’ என அழைத்து புகழ்ந்தது அவர் மீதான மரியாதையை சிதைத்தது. ஜெயலலிதா திட்டமிட்டு ஆர்.எம்.வீயை ‘டம்மி பீசா’க்கினார். நிருபர்கள் முன்னிலையிலேயே ஆர்.எம்.வீயை அவர் அலட்சியமாக கையாண்டுள்ளதை நானே சில முறை பார்த்துள்ளேன். ரஜினியை வைத்து ‘பாட்ஷா’ என்ற வெற்றிப் படத்தை எடுத்தார் ஆர்.எம்.வீ. அந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், இயக்குனர் மணிரத்தினம் வீட்டில் குண்டு வெடித்தது. அந்த படத்தின் வெற்றி விழாவின் போது ரஜினிகாந்த், ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து வருகிறது. வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது” எனப் பேசினார்! இந்த பேச்சுக்கு பின்னணியில் ஜெயலலிதா முதல்வாரான பிறகு போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தில் இருந்து வெளியே வருவதும், போவதுமே ரஜினிக்கு பெரும் சவால் ஆயிற்று. பாதுகாப்பு கெடுபிடிகள் ரஜினியை காயப்படுத்தி இருந்தன. ஜெயலலிதா குறித்து பொதுத் தளத்தில் ஊழல், ஆடம்பரம், திமிர்த்தனம் ஆகிய பிம்பங்கள் உருவாகி இருந்த காலத்தில் ரஜினியின் இந்த பேச்சு பெரும் வரவேற்பு பெற்றது. கூடவே, அந்த மேடையில் ரஜினிக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்த ஆர்.எம்.வீயின் அமைச்சர் பதவியும் போனது. ஆர்.எம்.வீயை பொறுத்த அளவில் அவர் ஒரு வெற்றிகரமான சினிமா வணிகர். எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் சந்தையில் முன்னணியில் இருக்கும் கதாநாயகர்களைக் கொண்டு வணிகத்தில் தொடர் வெற்றியை ஈட்டியவர். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியவுடன் உடனே அதிமுகவில் ஆர்.எம்.வீரப்பன் சேரவில்லை. சேர்ந்தால் ஆட்சியில் உள்ள கருணாநிதி தன் சினிமா வணிகத்திற்கு இடையூறு செய்வார் என பயந்தார்! பிறகு எம்.ஜி.ஆருக்கு அமோக ஆதரவு பெருகியதை அடுத்து தான் இணைந்தார்! எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு கருணாநிதியுடன் கை கோர்த்தார். வணிக குலத்திற்கே உள்ள லாப, நஷ்ட கணக்கை கொண்டு தான் அவர் இயங்கினாரே அன்றி, அரசியலுக்கே தேவைப்படும் போராட்ட மனோபாவம் அவரிடம் எப்போதும் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. 1996-ல் ஆர்.எம்.வீ அவர்கள் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, திமுகவுடன் கூட்டு சேர்ந்து கருணாநிதியை வானாளவப் புகழ்ந்தது இன்னும் பெரிய வீழ்ச்சியானது. அது முதல் அதிமுக தொண்டர்களிடம் இருந்தும் அவர் அன்னியப்பட்டு போனார். பெரியார், அண்ணாவால் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கைக்கு வந்தவரான ஆர்.எம்.வீ காற்றடிக்கும் திசையில் எல்லாம் வெற்றிகரமாக ஓடம் விட்டு களைத்துப் போனார்! ஆனால், கடைசி வரை திராவிட இயக்க சித்தாந்தத்திற்கு எதிராக இந்துத்துவ அரசியல் பக்கம் அவர் செல்லவில்லை என்பது ஒரு ஆறுதல் தான்! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/17454/r-m-verappan-mgr-jayalalitha/
  20. மிஸோக்களுடன் சில நாள்கள்… ராமச்சந்திர குஹா மிஸோரம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் சில நாள்கள் இருந்தேன். அந்த மாநிலத்தின் அரசியல் வரலாறு ஓரளவுக்குத் தெரியும். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் ஒருமுறைகூட அங்கு நேரில் சென்றதில்லை. அந்த வாய்ப்பும் கிடைத்தது. முதலில் விமானம் மூலம் அசாம் தலைநகரம் குவாஹாட்டியை அடைந்தேன். அங்கு பழைய நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். பிரமிக்க வைக்கும், பிரம்மபுத்திரா நதியின் அழகை ரசித்தேன். அங்குள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களிடையே மகாத்மா காந்திஜியின் போதனைகள் குறித்துப் பேசினேன். அடுத்து அய்ஜால் செல்லும் விமானத்தில் ஏறியதும் ஓர இருக்கையை விரும்பிக் கேட்டு வாங்கி அமர்ந்தேன். விமானம் உயரக் கிளம்பியதும் மெல்லிய பஞ்சுப் பொதிகளாய் உடன் வந்த வெண் மேகங்களையும், மலைச் சிகரங்களை உரசிவிடுவதைப் போல சென்ற விமானியின் சாகசத்தையும் ரசித்தபடியே அய்ஜாலில் இறங்கினேன். விமான நிலையத்தில் ‘உள் எல்லை அனுமதி’ படிவத்தைப் பூர்த்திசெய்தேன், பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசின் தொன்மையான இந்த வழக்கம், இந்தியக் குடிமக்களிடம் இன்றும் பின்பற்றப்படுகிறது. போக்குவரத்து ஒழுங்கு கிராமங்களையும் வயல்வெளிகளையும் பார்த்து ரசிக்க ரயில் பயணம்தான் விமானப் பயணத்தைவிட சிறந்தது. ஆனால், காரில் செல்வது அதைவிடச் சிறந்தது. லெங்புய் விமான நிலையத்திலிருந்து மாநிலத் தலைநகர் அய்ஜால் செல்ல ஒன்றரை மணி நேரம் பிடித்தது; மாநிலத்தின் நிலப்பரப்பைக் கண்டு ரசிக்கவும் மக்களுடைய வாழ்க்கை நிலையை ஓரளவு ஊகிக்கவும் அது போதுமானது. மலைக் குன்றுகளின் அமைப்பு, ஒரு காலத்தில் நாங்கள் வசித்த உத்தர பிரதேச மலை மாவட்டத்தை (இப்போது உத்தராகண்டில் இருக்கிறது) நினைவுபடுத்தியது. அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன். அகலம் குறைவான சாலைகளும் வளைந்து வளைந்து செல்லும் அவற்றின் பாங்கும், அருகிலேயே வேகமாகப் பாயும் நீரோடைகளும் சிறுவயதுக் காட்சிகளை நினைவுபடுத்தின. இங்கு மரம்-செடி-கொடிகள் தோற்றத்தில் வேறு மாதிரியானவை. ஏராளமாக மூங்கில் வளர்ந்திருந்தது, கணிசமான அளவில் இலையுதிர் காட்டு மரங்கள் வளர்ந்திருந்தன. உத்தராகண்டில் ஊசியிலைக் காட்டு மரங்கள்தான் அதிகம். மக்கள்தொகையும் இங்கு அடர்த்தியாக இல்லை, மக்கள் வசிக்குமிடங்களும் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்தன. கடைசியாகச் சொன்னது தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. தலைநகர் அய்ஜாலில் குன்றின் ஒவ்வொரு அடுக்கிலும் அடுத்தடுத்து வீடுகளைக் கட்டியிருந்தார்கள்; அது உடனே நைனிதால், முசௌரி நகரங்களை நினைவூட்டியது. வாகனப் போக்குவரத்து மிக ஒழுங்குடன், வட இந்திய மாநிலங்களைப் போல அல்லாமல் இருந்தது. வாகன ஓட்டிகள் அவரவருக்குரிய சாலை தடத்திலேயே இருந்தனர், நெரிசல் நீங்கி வாகனங்கள் நகரும்வரை பொறுமையாகக் காத்திருந்தனர். வலப்புறமாக எட்டிப் பார்த்து கிடைக்கும் இடைவெளியில் நுழைந்து மற்ற வாகனங்களும் மேற்கொண்டு நகர முடியாமல் பாதையை அடைக்கவில்லை. மகளிர் மேம்பாடு அய்ஜாலில் பச்சுங்கா பல்கலைக்கழக கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். மாநிலத்திலேயே மிகவும் பழையதான அந்தக் கல்லூரி 1958இல் தொடங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஆண்-பெண் பேதமின்றி கலந்தே உட்கார்ந்திருந்தார்கள். உத்தர பிரதேசத்தின் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களிலும், கேரளத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாவட்டங்களிலும் இப்படிக் காண முடியாது. அந்தப் பகுதிகளிலும் கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். அங்கெல்லாம் பொறியியல் கல்லூரிகளில்கூட ஆண் – பெண் சேர்ந்து உட்காருவதை ஊக்குவிப்பதில்லை. அந்த வகையில், பச்சுங்கா பல்கலைக்கழக கல்லூரியானது மிஸோரம் மாநிலத்தின் பண்பாட்டை அப்படியே பிரதிபலித்தது. பெண்கள் இங்கு வீதிகளில் நடக்கும்போதும், கடைகளில் பொருள்களை வாங்கும்போதும், கடைகளில் காபி குடிக்கும்போதும் உடன் பயிலும், அல்லது வேலை செய்யும் ஆடவர்களுடன் சர்வ சாதாரணமாக கலந்தே செல்கின்றனர். மாநிலத்தில் மகளிர் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின்றனர் என்பதற்கு இது நல்ல உதாரணம். இதை மாநிலம் தொடர்பான புள்ளி விவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. பெண்கள் எழுத்தறிவில் அனைத்திந்திய அளவில் மிஸோரம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 60% மகளிர், வீடுகளில் அடைந்துவிடாமல் வேலைக்குச் செல்கின்றனர். இது அனைத்திந்திய சராசரியான 30% என்ற அளவைப் போல இரண்டு மடங்கு. பிற மாநிலங்களைவிட அதிக ஊதியம் - அதிக பொறுப்பு மிக்க பணிகளில் மிஜோரம் மகளிர் இருப்பது கூடுதல் சிறப்பு. சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், மேலாளர்கள் ஆகிய பொறுப்புகளில் மிஸோரம் மாநிலப் பெண்கள் 70.9% என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. சிக்கிம் 48.2%, மணிப்பூர் 45.1% அடுத்துவருகின்றன. மென்மையாக ஒரு முன்னேற்றம் புவியியல்ரீதியில் ஒதுக்கப்பட்ட மாநிலமாக இருந்தாலும், மிஸோக்களின் சமூக முன்னேற்றம் பெரும் வேறுபாட்டைக் காட்டுகிறது. அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த பல்லாண்டு ஆயுத மோதல்களின் சுவடே தெரியாதபடி வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்திய விமானப் படை மூலம் வானத்திலிருந்து தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டு கலவரத்தை ஒரு காலத்தில் ஒடுக்கிய மாநிலமா இது என்று வியக்க வைக்கும் அளவுக்கு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) என்ற தீவிரவாத அமைப்பு இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ஆயுதம் கொண்டு 1966இல் போரிட்டது. அந்தப் போராட்டத்துக்கு லால்டெங்கா தலைமை தாங்கினார். 1966க்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால் மிஸோ மலைப் பிரதேசம் முழுவதும் உணவு தானிய விளைச்சல் இல்லாமல் உணவுப் பற்றாக்குறையில் சிக்கியது. அதனால் மக்கள் பட்டினி கிடந்து செத்தனர். அன்றைக்கு தில்லியை ஆண்ட ஆட்சியாளர்கள் இதைப் போக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவில்லை. இனி இந்தியாவுடன் சேர்ந்திருப்பதால் பயனில்லை என்று முடிவெடுத்த லால்டெங்கா, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் ராணுவ அரசுடன் கைகோத்து, இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார். கிழக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களையும் தளவாடங்களையும் அளித்தது. கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) எல்லைக்குள் மிஸோ இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டன. நவீன ஆயுதங்களைக் கையாள பயிற்சி தரப்பட்டது. இதில் 1966 பிப்ரவரியில் எம்என்எஃப் தீவிரவாதிகள், அரசு அலுவலகங்களைத் தாக்கியதுடன் தகவல் தொடர்பையும் துண்டித்தனர். சுதந்திரமான மிஸோ குடியரசை நிறுவிவிட்டதாக அறிவித்தனர். லுங்லெ என்ற சிறு நகரைக்கூட கைப்பற்றிவிட்டனர். அடுத்து அய்ஜாலை நோக்கி முன்னேறத் தொடங்கினர். உடனே இந்திய அரசு தரைப்படைப் பிரிவுகளை அங்கு அனுப்பியதுடன் விமானப் படையையும் கலவரத்தை ஒடுக்குவதற்கு ஈடுபடுத்தியது. இப்படித்தான் மிஸோரம் மீது, விமானத் தாக்குதலை நடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு சுமார் இருபதாண்டுக் காலம் தீவிரவாதிகளும் அரசுப் படைகளும் மோதிக்கொண்டிருந்தன. அதற்குப் பிறகு ஏற்பட்ட சுமுக உடன்பாட்டுக்குப் பிறகு லால்டெங்கா, சுதந்திர மிஸோ குடியரசின் அதிபராகவோ, பிரதமராகவோ ஆவதற்குப் பதிலாக - மாநில முதல்வரானார். மிஸோக்களின் சமூக ஒற்றுமை அய்ஜாலில் என்னுடைய பேச்சைக் கேட்க வந்த இளைஞர்களின் தாத்தா - பாட்டிகள் அல்லது அப்பா அம்மாக்கள் கடுமையான அந்தக் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள்; மிஸோ தேசியத் தீவிரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையிலான சண்டையில் சிக்கித் தவித்திருப்பார்கள், அல்லது உயிரைக் காத்துக்கொள்ள காடுகளில் தஞ்சம் புகுந்திருப்பார்கள், நிம்மதியற்ற வாழ்க்கையை நிச்சயம் வாழ்ந்திருப்பார்கள். சமாதானம் ஏற்பட்ட பிறகு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குக் திரும்பியதுடன் மாநிலத்தின் அமைதி, வளர்ச்சிக்குப் பாடுபட்டது குறிப்பிடத்தக்கது. அது அவர்களுடைய துணிவையும் அறிவுக்கூர்மையையும் காட்டுகிறது. அரசுப் படைகளின் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள் பழிவாங்கும் உணர்வை வளர்த்துக்கொள்வார்கள். இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது தனிப்பட்ட முறையில் இழப்புகளையும் சோதனைகளையும் அனுபவித்தவர்களில் பலரும் ஜெர்மானியர்களின் இன ஒழிப்புக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்களும் இப்படிப் பழிக்குப் பழி வாங்கத் துடித்தது வரலாறு. ஆனால், மிஸோக்கள் துயரப்படும் பிற மக்கள் மீது இரக்கப்பட்டார்கள். அதனாலேயே மியான்மரிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் அகதிகளாக வந்தவர்களுக்கு உணவு, உடை தந்து உபசரிக்கிறார்கள். மிஸோக்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள், பௌத்தர்களும் உண்டு. மணிப்பூர் கலவரத்துக்குப் பிறகு உயிரைக் காத்துக்கொள்ள தப்பி ஓடிய குகிக்களுக்கும் மிஸோரம் மக்கள் புகலிடம் தந்து காத்தனர், இந்த வகையில் ஒன்றிய அரசு செய்திருக்க வேண்டிய கடமையை அவர்கள் நிறைவேற்றினார்கள். மிஸோ மக்களுடைய இந்த சமூக ஒற்றுமை உணர்வுக்கு முக்கிய காரணம் அவர்கள் விவசாயம் செய்வதற்கான விளைநிலங்களைப் பெற கையாளும் ‘ஜூம்’ என்ற பாரம்பரிய சமூக முறைதான் என்று ‘கிராஸ்ரூட்ஸ் ஆப்ஷன்ஸ்’ என்ற பருவ இதழ் கட்டுரை தெரிவிக்கிறது. ‘ஜூம்’ என்பது வேறொன்றுமில்லை மலைப் பிரதேசங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடிக்கு, ஏற்கெனவே வளர்ந்திருக்கும் செடி-கொடிகளை எரித்து, அந்தச் சாம்பலையே அந்த மண்ணுக்கு எருவாக்கி, பிறகு அதில் சாகுபடி செய்வது. காலப்போக்கில் அந்த மண்ணில் விளைச்சல் குறைந்தால் வேறிடத்துக்குச் சென்று அங்கு தாவரங்களை எரித்து அதை விளைநிலம் ஆக்குவார்கள். இப்படிச் செய்யும்போது அவர்களுக்குள் சமூக ஒற்றுமை வலுப்படும். அது அப்படியே மரபில் ஊறிவிட்டது. அதுவே மிஸோக்களின் சமூகப் பண்பாடாகிவிட்டது. ‘லாமங்கைய்னா’ என்று மிஸோ மொழியில் அதைச் சொல்கிறார்கள். ‘அடக்கமான சேவை’ என்பது அதன் பொருள். ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு, குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது சமுதாயக் கடமை என்று மிஸோக்கள் கருதுகின்றனர். மிஸோக்களிடம் நாம் கற்க வேண்டும்! வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் நுழைவதற்கு முன்னாலேயே மிஸோக்களிடம் இந்தச் சமுதாயப் பண்பு நிலவியது. கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்த உணர்வை அப்படியே ஆதரித்து ஊக்குவித்தன. இப்படி சுயநலம் பாராமல் உதவுவதும்கூட மிதமிஞ்சிய ‘தூய்மைவாத’மாக உருவெடுத்தது. மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் பழங்குடி மக்கள் உள்ளூரில் கிடைக்கும் நாட்டு மது வகைகளைக் குடிப்பது வழக்கம். தூய்மைவாதம் காரணமாகவும் கிறிஸ்தவ தேவாலயங்கள் தங்களை மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அரசால் அந்த மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இது பழங்குடிகளின் கோபத்தைக் கிளறிவிட்டது. அவர்கள் சட்டத்தை மீறி, நாட்டு மதுவகைகளைத் தொடர்ந்து குடித்தனர். இதனால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும் கடத்தி விற்பதும் அதிகரித்தது. மக்கள் உள்ளூர் சரக்கைச் சாப்பிட்டாலும் எவருக்கும் தொல்லை தராமல் அமைதியாகப் போய்விடுவதே வழக்கமாக இருந்தது. மதுவிலக்கை அமல்படுத்தியதுடன் காவல் துறையை விட்டு மிரட்டுவது, வீடுகளில் நுழைந்து சோதிப்பது என்பது போன்ற செயல்கள் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தின. மதுவிலக்கு அமல் காரணமாக மாநில அரசுகளுக்கு மதுபானங்கள் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி வருவாய் வெகுவாகக் குறைந்தது. அந்த வரி வருவாயைக் கொண்டு மாநிலத்தின் சேதமுற்ற சாலைகளைப் புதிதாகப் போட்டிருக்கலாம். மிஸோரத்தை அதன் வரலாற்றுப் புத்தகங்கள் வாயிலாகவும் வெளிநாடு வாழ் மிஸோக்களைச் சந்தித்தன் மூலமாகவும் அறிந்திருந்த எனக்கு, நேரில் பார்த்தது அம்மாநிலம் மீதான மதிப்பைப் பல மடங்கு கூட்டிவிட்டது. ஆனால், தில்லியில் ஆள்வோரிடம் - பிற வட கிழக்கு மாநிலங்களைப் போலவே மிஸோரமும், அதிக கவனம் பெறவில்லை. வட கிழக்கில் அதிக மக்களவைத் தொகுதிகள் கிடையாது என்பதால் ஒன்றிய அரசை ஆள்வோர் அந்த மாநிலங்களின் தேவைகளைப் புறக்கணிப்பதுடன், ஏதோ தங்கள் அருளால்தான் அந்த மாநிலங்கள் பிழைப்பதைப் போல நடந்துகொள்கின்றனர். இருந்தாலும் பிரதான நிலப்பகுதியில் வாழ்வோர் மிஸோரம் மக்களிடமிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு சமுதாயமாக சேர்ந்து வாழ்வது எப்படி, தோல்வியிலிருந்தும் மனச் சோர்விலிருந்தும் மீள்வது எப்படி, சாதி பேதமில்லாமல் சமமாக அனைவரையும் நடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். மிஸோக்களைப் போல பெண்களைச் சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்; இசையையும் வாழ்க்கையையும் ரசனையோடு அனுபவிக்க வேண்டும். https://www.arunchol.com/ramachandra-guha-article-on-a-spirit-that-shines
  21. பிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை! யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு: சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதை இன்னொருவர் எமக்கு எழுதித் தரவேண்டிய அவசியமில்லை. அதை இன்னொருவர் பறிக்கவும் முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசறிவியலாளன் இதழ் 6 நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- சுதந்திரக் காற்றை நீங்களாகச் சுவாசிக்க முடியாது. முன்னெடுப்புகள் இல்லாமல் எதையும் சாதித்து விடமுடியாது. இந்தியா ஒரு பெரிய நாடு. எத்தனையோ மொழிகளையும், எல்லைகள் அனைத்திலும் யங்கரமான பிரச்சினைகளைக் கொண் தொரு நாடு. ஆனால் அங்கு எல்லாமிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதற்காக புரட்சிதான் செய்யவேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லி விட்டு நான் வீட்டுக்குச் செல்லமுடியாது. யூதர்கள் அல்லது பலஸ்தீனியர்கள் முன்னர் எங்கு கண்டாலும் தங்களின் அடுத்த சந்திப்பு ஜெருசலேமில் என்று கைதட்டுவார்கள். நாங்கள் எங்களின் அடுத்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று கைதட்டுகின்றோமா? தற்போது தேசியம் கதைக்கிறவர்கள் ஆசியாவிலேயே பிஸியானவர்கள். வாழ்வதோ கொழும்பில். லண் டன் குடியுரிமையும் கொண்டுள்ள அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற சிறப்புரிமையையும் கொண்டுள்ளனர். பலஸ்தீனம் போன்று எமது மண் பறிபோகவில்லை. நாங்கள் தற்போது பலஸ்தீனியர்கள் போன்று அகதி முகாம்களிலிருக்கவில்லை. எங்கள் தாய்நிலத்தைப் பாதுகாப்பதற்கான போதிய அறிவு எம்மத்தியிலுள்ளது. ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் புரிந்துணர்வுப்பண்பு ஒவ்வொருவருக்கும் தேவையானதொன்று. ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் என்றார். https://newuthayan.com/article/பிறப்புரிமையான_சுதந்திரத்தை_எவரும்_எழுதித்தர_வேண்டியதில்லை!
  22. அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளருக்கு விசாரணை; அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளருக்கு விசாரணை; மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு! மாதவன். வடமராட்சி இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் மற்றும் வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகி பாடசாலையில் நிதி சேகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட சிலர் வாட்ஸப் சமூக ஊடக குழு ஒன்றின் மூலம் மாணவர்களின் பெற்றோரிடம் பணம் பெற்று வந்துள்ளதாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை செய்திகள் வெளியாகி இருந்தன. அந்தவகையில் குறித்த பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து நேற்றையதினம் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த நிதி சேகரிப்பு குறித்து விசாரணை நடாத்துவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/அதிபர்_மற்றும்_கல்விப்_பணிப்பாளரை_விசாரணைக்கு_அழைத்த_மனித_உரிமைகள்_ஆணைக்குழு!
  23. இதில் எதையுமே தமிழன்பன் குறிக்கவில்லை என்றுதான் படுகின்றது. தனது சொந்த நலனுக்காக மட்டுமே “உழைக்கும்” பிழைப்புவாதிதான் சுமந்திரன். தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக இருப்பதில்லை. அது போல அவரின் மதத்திற்கும், ஊருக்கும், சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை. ஒரு “எலீஸ்ரிஸ்ற்” ஆக இருக்க முனைவதால்தான் எப்போதும் அதிகாரத்தில் இருக்கும் சிங்களத் தலைவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றார்.
  24. இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு ஆதரவு இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இன்று (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார். அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் அர்பணிப்பாக பணியாற்றுவதாகவும் சலிவன் தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, இந்து-பசுபிக் வலயத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான இருநாடுகளினதும் அர்பணிப்பையும் வலியுறுத்துகிறது. http://www.samakalam.com/இலங்கையின்-இறைமை-பாதுகா/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.