Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..? February 10, 2026 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும், அமைப்புக்களுக்கும், அவர்களின் அரசியலுக்கும் மங்குசனி தொடங்கிய காலம் அது. இதனால் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வீட்டு சின்னத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற லேபல் புதுப்பித்து ஒட்டப்பட்டது. ஒரு வகையில் இதை “ஒப்பரேசன் தமிழரசு” என்று சொல்லமுடியும். இது முரண்பாடுகளைக்கொண்ட பலரை கூட்டமைப்பு என்ற சாக்குக்குள் போட்டு கட்டி புலிகள் அரசியல் பாடம் எடுத்த தருணம். இந்த புதிய லேபல் ஏற்படுத்திய பாராளுமன்ற பிரதிநிதித்துவ அதிகரிப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பால், 2009 க்கு பின்னர் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு இரா.சம்பந்தர், மாவை சேனாதிராசா ஆகியோரின் ஆளுமையற்ற தலைமைத்துவமும், தமிழ்த்தேசிய வாடையே படாத எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் முறையே சம்பந்தனாலும், முன்னாள் மட்டக்களப்பு புலிகளின் சிபார்சிலும் கட்சிக்குள் நுழைந்ததும் முக்கிய சாபக்கேடு. சாணக்கியனின் உள் நுழைவுக்கு முன்னாள் புலிகள், கி.துரைராசசிங்கம் ஊடாக சம்பந்தருக்கு வழங்கிய நற்சான்றிதழும் காரணமாக அமைந்தது. பலவீனமான கூட்டமைப்பு – தமிழரசு தலைமைகள் காரணமாக சுமந்திரன் படிப்படியாக கட்சிக்குள் தனது நிலையை பலப்படுத்திக்கொண்டார். சுமந்திரனின் அரசியலை ஏற்காத முன்னாள் புலிகள் சாணக்கியனை தமிழரசுக்கு வழங்கியது சுமந்திரனின் பலத்தை அதிகரிக்கவே உதவியது. இது முன்னாள் புலிகள் தங்களுக்கு தாங்களே சூனியம் செய்தகதை. இப்போது நாயைக்கடித்து, பேயைக்கடித்து, சிறிதரனை கடித்திருக்கிறது தமிழரசுக்கட்சி சுமந்திரன் அணி. 2024, ஜனவரி 21இல் , திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் சி.சிறிதரன் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கூட்ட மண்டபத்திற்கு வெளியே சிறிதரனின் கையை பிடித்து, ‘நண்பன் சிறிதரனுக்கு’ எனது முழு ஆதரவும் என்று சொன்ன சுமந்திரன் அடுத்த கணத்தில் இருந்தே அவருக்கு ஆப்பு வைக்கத் தொடங்கினார். தமிழரசுக்கட்சியின் அரசியல் வரலாறு மட்டும் அன்றி, அதன் நிர்வாக வரலாறும் ஜனநாயகத்தில் கறைபடிந்த கதைகளை கட்டுக்கட்டாக கொண்டது. இதற்கு சிறிதரனும் ஒரு காலத்தில் ஒத்து ஓடியவர் தான். இப்போது அந்த “ஜனநாயகம்” அவரையே கட்சியில் இருந்து துரத்தும் அளவுக்கு வந்து நிற்கிறது. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கு பின்னர் ஒரு அமிர்தலிங்கம் போன்று, இரா.சம்பந்தருக்கு பின்னர் ஒரு சுமந்திரன் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்து தன்னிஷ்ட அரசியல் செய்கிறார். இதனால்தான் இரு வேறுபட்ட சூழ்நிலைகளை கொண்ட அரசியல் செயற்பாடுகளாயினும் “சிறிதரன்” தமிழரசுக்கட்சியின் இன்னொரு இராசதுரையா? என்று கேட்க வேண்டியுள்ளது. அமிர்தலிங்கத்திற்கு மட்டக்களப்பில் ஒரு காசி ஆனந்தன். சுமந்திரனுக்கு மட்டக்களப்பில் ஒரு சாணக்கியன். அ.அமிர்தலிங்கம் தனக்கு ஆதரவான ஒரு குழுவை கட்சிக்குள் வைத்துக்கொண்டு செல்லையா இராசதுரைக்கு எதிரான தனது நடவடிக்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்தினார். இராசதுரைக்கு கிடைக்க வேண்டிய தமிழரசுக்கட்சி தலைமைத்துவத்தை சி.மு.இராசமாணிக்கத்திற்கு வழங்கி, நாங்கள் பிரதேசவாதம் அற்றவர்கள், ஜனநாயகவாதிகள் என கிழக்குமாகாண மக்களுக்கு காதில் பூச்சுத்தியது. இத்தனைக்கும் இராசமாணிக்கம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தமிழரசுக்கட்சிக்கு தாவியவர். இதை இராசதுரைக்கு எதிராக நியாயப்படுத்த கிழக்கிலும் ஆட்கள் இருந்தார்கள். அதேபோன்று இன்றும் இரா. சாணக்கியனை பாராளுமன்ற குழுத்தலைவராக நியமித்து சுமந்திரன் கிழக்கு மீதான தனது காதலையும், ஜனநாயகத்தின் மீதான பற்றையும் மத்திய குழு உறுப்பினர்களான பதில் தலைவர் சி.வி.கே .சிவஞானம், பாராளுமன்ற குழுவின் ஊடகப்பேச்சாளர் ஞா.சிறிதரன் ஆகியோரின் முரண்பட்ட கருத்துக்களுக்கு மத்தியிலும் வெளிப்படுத்தியுள்ளார். இத்தனைக்கும் இராசமாணிக்கத்தின் பேரன் சாணக்கியன் பட்டிருப்பு தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்து பாட்டன் வழியில் தமிழரசுக்கு தாவியவர். சிறிதரனிடம் இருந்து பறித்து சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை, இனிப்பு வழங்கியும், பட்டாசு கொழுத்தியும் கொண்டாட சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் மட்டக்களப்பில் இன்னும் ஆட்கள் இருக்கிறார்கள். “தமிழரசுக்கட்சியின் தற்போதுள்ள எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களது ஏகமனதான தெரிவாக இந்த தெரிவு இடம்பெறவில்லை. கட்சி பதில் செயலாளருடைய தனி விருப்பமாக தற்போது ஏற்கனவே பதவிவகித்த சிறிதரனின் பதவி மாற்றப்பட்டுள்ளது. இந்த விடயம் சரியா, தவறா என்பதை நான் விவாதிக்க விரும்பவில்லை.” என்று தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரன் பதிவு ஒன்றை இட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் பதில் செயலாளர் தனிவிருப்பமாக சிறிதரனின் பதவியை பறித்து இருக்கிறார் என்றால் அது அப்பட்டமான தவறு. ஜனநாயகத்தை மறுதலிக்கின்ற முடிவு. ஆனால் அதைப்பற்றி பேச அரியநேந்திரன் தயாரில்லை. இந்தப்பாணி தான் தமிழரசுக்கட்சியின் அரசியல் பாணி. ஜனநாயக மறுப்பு ஒன்றின் ஊடாக பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைந்த அரியநேந்திரனிடம் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்கமுடியும்.? அவரது கண்ணுக்கு குத்தியிருப்பது இனிப்பும், பட்டாசும். இந்த நடவடிக்கை பிரதேசவாதத்தின் வெளிப்பாடு என்ற சாரப்பட அவர் கூறுகிறார். தமிழரசுகட்சிக்குள் நிலவுகின்ற உட்கட்சி ஜனநாயகமின்மை, பக்கச்சார்பான பழிவாங்கல், பிரதேச வாதம், பதவிப்போட்டி கழுத்தறுப்பு….. போன்றவை பற்றி அரங்கம் மின்னிதழ் பத்திகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தது நூறு பதிவுகளாவது பல்வேறு பத்தியாளர்களால் எழுதப்பட்டுள்ளது. அப்போது எல்லாம் இவற்றை மறுத்தவர்களுள் இவரும் ஒருவர். ஏற்கனவே அரியநேந்திரன் வீட்டுக்கதவை தட்டிய சுமந்திரன் தற்போது சிறிதரன் வீட்டுக்கதவை தட்டியிருக்கிறார். அதைக்கூட அவரால் சரியா? தவறா? என்று சொல்லமுடியாத நிலை உள்ளது. சிறிதரன் நீக்கப்பட்டது ஒருவரின் தனி விருப்பம் என்றால் அது எப்படி சரியாக இருக்க முடியும்? தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவராக ஒருவரை தெரிவு செய்வது உலக நடைமுறையில் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சார்ந்தது. வேண்டுமானால் கட்சி ஆலோசனையை வழங்க முடியும். அந்த வகையில் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார். இது அவருக்கு அரசியல் அமைப்பு குழுவில் உறுப்பினராவதற்கும் உதவியது. சிறிதரனின் அரசியல் அமைப்பு குழுவில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினராக அல்ல. பிரதான எதிர்கட்சி தவிர்ந்த சிறிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாகவே குழுவில் இடம் பெறுகிறார். தமிழரசுக்கட்சி எம்.பி.க்களின் ஏழு வாக்குகள் சிறிதரனுக்கு கிடைத்ததாகவும் , சாணக்கியன் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற சாரப்பட சிறிதரன் ஊடகபேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சிறிதரனுக்கு ஜீவன் தொண்டமானை விடவும் ஒரு வாக்கு மேலதிகமாக கிடைத்தது. தனக்கு வாக்களித்த மாற்று கட்சியினர் யார், வாக்கு அளிக்காத தன்கட்சிக்காரர் யார் என்பதும் சிறிதரனுக்கு தெரியும். இப்போது உள்ள பிரச்சினை என்னவெனில் சுமந்திரன் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவிக்கும், அரசியல் அமைப்பு சபை உறுப்பினர் பதவிக்கும் முடிச்சுப்போடுவதுதான். உண்மையில் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியில் இருந்து சிறிதரனை கட்சி நீக்க முடியும். ஆனால் அது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதம் இன்றி இடம்பெற்றுள்ளது. ஆனால் ஞா. சிறிநேசன் எம்.பி.யைத்தவிர இது பற்றி பேச மற்றைய ஏழு பேரும் தயாரில்லை. ஏனெனில் சுமந்திரனின் ஜனநாயகம் அவர்களை கணுவில் வளையப் போட்டிருக்கிறது. அரசியல் அமைப்புச்சபை உறுப்பினர் பதவியை சிறிதரன் விரும்பி விலகினால் அன்றி அதை பறிக்க முடியாது என்பது சுமந்திரனுக்கு தெரியாததல்ல. அந்த பதவி முக்கியமானதும் அல்ல. ஆனால் அரசியல் அமைப்பு சபையில் சிறிதரனின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை பறித்து அதை சாணக்கியனுக்கு வழங்கி பாராளுமன்றக்குழுவை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே சுமந்திரன் அணியின் இலக்கு. அது அடையப்பட்டிருக்கிறது. சி.சிறிதரன் எம்.பி.மீதான குற்றச்சாட்டு அவர் எட்டு தடவைகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதும், முக்கியமாக இராணுவப்பிரிவு கணக்காய்வாளர் ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க ஆதரவளித்தார் என்பதாகும். இந்த குழுவில் அரசாங்கம் தான் சிபாரிசுகளை செய்கிறது. அதற்காக அனைத்து சிபாரிசுகளையும் சிறிதரன் நிராகரிக்கவேண்டும் என்று தமிழரசு எதிர்பார்க்க முடியாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நியமனங்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அப்பால் நோக்கப்படவேண்டியவை. அதை செய்வதற்கான உரிமை சிறிதரனுக்கு இருக்கிறது. எந்த சிபாரிசை ஆதரிப்பது எந்த சிபாரிசை எதிர்ப்பது என்று தமிழரசுக்கட்சி தீர்மானிக்க முடியாது. ஏனெனில் சிறிதரன் தமிழரசுக்கட்சியை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால் சர்ச்சைக்குரிய கணக்காய்வாளர் நாயக நியமனத்தில் அரசாங்கமும் அரசியல் செய்தது என்பது வெளிப்படையானது. கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தில் ஓய்வு பெற்று சென்றவருக்கு பின்னால் தகுதி, சேவைமூப்பு, அனுபவம் என்பன வற்றின் அடிப்படையில் ஒருவரல்ல ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்ற பொழுது இராணுவ சேவையில் இருந்து ஒரு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்காகவே எதிர்கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இந்த நிர்வாக ஒழுங்கீனத்தை முதன்மைப்படுத்தாது தமிழ்த்தேசிய கட்சிகள் “இராணுவம்” என்ற கண்ணாடியை மட்டும் போட்டுக்கொண்டு எதிர்க்கின்றனர். அதுவல்ல இங்கு பிரச்சினை ஜே.வி.பி. தனது கட்சியின் ஆதரவாளர் ஒருவரை, ஒப்பீட்டளவில் சேவை மூப்பு, தகுதி, அனுவம் குறைந்த ஒருவரை நியமித்து கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தை கட்சி அரசியலின் கீழ் கொண்டு வர முயற்சித்ததே பிரச்சினை. இந்த காரணங்களுக்காக சிறிதரன் அதை எதிர்த்து இருக்கவேண்டுமே ஒழிய இராணுவ அதிகாரி என்பதற்காக அல்ல. இது விடயமாக சிறிதரனும் பேசவில்லை, சுமந்திரனும் பேசவில்லை .கஜேந்திரகுமாரும் பேசவில்லை. ஏனெனில் இராணுவம் என்ற வார்த்தையே தமிழ்த்தேசிய அரசியலில் தாரகமந்திரம். எது எவ்வாறாயினும் சுமந்திரன், சாணக்கியன் வலையில் சிறிதரன் சிக்கியுள்ளார். சிறிதரனை கட்சியில் இருந்து கழட்டி விட்டால் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு உள்ள மிகப்பெரும் தமிழ்த்தேசிய தடை அகற்றப்பட்டுவிடும் என்று சுமந்திரன் கூட்டம், இவ்வாறான உட்கட்சி ஜனநாயகம் அற்ற முடிவுகளை நியாயப்படுத்துவதும், மௌனம்சாதிப்பதும் ஒன்றுதான். இதையே கிழக்கின் ஐந்து தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த நிலைப்பாடு சாணக்கியனை பலமாக்கவே உதவும். இப்பகுதியில் ஏற்கெனவே ஒரு தடவை குறிப்பிட்டது போன்று பாராளுமன்ற குழுத்தலலைவர் பதவி ஆரம்பத்திலேயே சாணக்கியனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை பதிவிட்டதற்காக பிரதேச வாதம் பேசுகிறோம் என்றவர்கள், இப்போது இனிப்பு வழங்குகிறார்கள். அவர்களை பிரதேச வாதம் பேசுகிறார்கள் என்று கூறுகிறார் அரியநேந்திரன். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் தமிழரசுக்கட்சியில் இருக்கிறார்கள். மேலும் சேவை மூப்பைத்தவிர எல்லா வகையிலும் தகுதியானவராகவும், பாராளுமன்ற நடைமுறைகளை கையாளக்கூடிய ஆற்றல் உள்ளவராகவும் சாணக்கியன் இருக்கிறார். ஆனால் தமிழரசுக்கட்சியின் வெடிப்புக்கு ஒட்டுப்போடக்கூடிய ஒருவராக சாணக்கியன் இல்லை. சுமந்திரனின் அரசியல் குணாம்சங்களையே அவரும் கொண்டு இருப்பதால் வடக்கில் மட்டும் அல்ல கிழக்கிலும் தமிழரசு சிதறப் போகிறது என்பதே ஜதார்த்தம். “விலகினேனா விலக்கப்பட்டேனா….?” என்று கேட்டார் செ.இராசதுரை. ” விலகேன் முடிந்தால் விலக்குங்கள்… பார்க்கலாம்…” என்று சவால் விடுகிறார் சி.சிறிதரன். இந்த அரசியலுக்கு வயது எழுபத்தியேழு என்ற பெருமை வேறு. பிறப்பின் அடிப்படையிலான மூப்பு அல்ல அரசியல் சாணக்கியம். தமிழரசுக்கட்சி தன்னை புதுமைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்தவேண்டும். ஜனநாயகம் படுத்தவேண்டும். அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களை செய்யவேண்டும். இல்லையேல் வருகின்ற வெள்ளத்தில் அது அடித்துச்செல்லப்படும்…….! அவ்வளவுதான்….!! https://arangamnews.com/?p=12666
  2. கியூபாவை “உடனடியாக” விட்டுவிடுங்கள்: அமெரிக்காவிற்கு சீனா அதிரடி எச்சரிக்கை! அமெரிக்க டொலருக்கு எதிராக சீன யுவான் உயர்வு! adminFebruary 12, 2026 கியூபாவை “உடனடியாக” விட்டுவிடுங்கள்: அமெரிக்காவிற்கு சீனா அதிரடி எச்சரிக்கை! அமெரிக்க டொலருக்கு எதிராக சீன யுவான் உயர்வு! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கியூபா மீதான அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு சீனா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. கியூபா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. எரிபொருள் மற்றும் அடிப்படைத் தேவைகளைத் தடுப்பதன் மூலம் கியூபா மக்களின் வாழ்வாதார உரிமையை அமெரிக்கா பறிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது. கியூபாவின் இறையாண்மையை சீனா என்றும் ஆதரிக்கும். அமெரிக்காவின் இந்த “ஒருதலைப்பட்சமான தடைகள்” சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், பிராந்திய அமைதியைக் குலைக்கும் செயல் என்றும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது. ________________________________________ அமெரிக்கப் பொருளாதாரச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், சீன நாணயமான யுவான் (Yuan) கடந்த 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக வலுவான நிலையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் நிதிச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால், டாலர் மீதான அதீத சார்பைக் குறைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, அமெரிக்க அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதைக் குறைத்து, தனது சொந்த நாணயத்தின் மதிப்பை நிலைநிறுத்த சீனா முயற்சிக்கிறது. இந்த மாற்றம் உலகளாவிய வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/228979/
  3. நாளை வெள்ளி 13 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS எதிர் ZIM 22 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸிம்பாப்வே நிலாமதி இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN எதிர் UAE 09 பேர் கனடா அணி வெல்லும் எனவும் 14 பேர் ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கனடா செம்பாட்டான் ஏராளன் சுவைப்பிரியன் வீரப் பையன்26 சுவி கிருபன் கோஷான் சே எப்போதும் தமிழன் பிரபா ஐக்கிய அமீரகம் வசீ புலவர் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் ரசோதரன் நிலாமதி நந்தன் இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED எதிர் USA 10 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் 13 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து ஏராளன் வசீ புலவர் நியூ பலன்ஸ் கறுப்பி வாதவூரான் சுவி அஹஸ்தியன் நியாயம் எப்போதும் தமிழன் ஐக்கிய அமெரிக்கா செம்பாட்டான் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே கந்தப்பு ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  4. இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிறிலங்கா அணி, பவன் ரத்னாயக்கவின் புயல்வேக 60 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தசுன் ஷானகவின் மின்னல்வேக 50 (20 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் அதிரடியான 61 (45 பந்துகள்) ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து இத் தொடரின் தற்போதைய அதிகூடிய 225 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் மொஹமட் நடீம் மாத்திரம் ஆட்டமிழக்காமல் 53 (56 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததால் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: சிறிலங்கா அணி 105 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நேபாளம் அணியின் வீரர்கள் ஒருவரும் நிலைத்து ஆடாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. பதிலுக்கு 124 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, சகோதரர்களான அந்தனி மொஸ்காவின் புயல்வேக ஆட்டமிழக்காத 62 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் அதிரடியான ஆட்டமிழக்காத 60 (44 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணியின் இஷான் கிஷனின் மின்னல்வேக 61 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹார்டிக் பாண்டியாவின் புயல்வேக 52 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பந்துவீச்சில் நமீபியா அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தாலும், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்ததனால் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: இந்தியா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  5. மொஸ்கா சகோதரர்கள் தூள் கிளப்பிவிட்டார்கள்।😁
  6. பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது February 12, 2026 11:53 am பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாம் திகதி சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் பாலிகான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்தக் குற்றம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஹாம்ப்ஷயர் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் வியான் சுரேந்திரநாதன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வகுப்பு ‘ஏ’ போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாலியல் செயல்பாடுகளுக்காக ஒருவரை முடக்கவோ அல்லது மயக்கமடையச் செய்யவோ இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உதவியின் கீழ் இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த இளம் சந்தேக நபர் சவுத்தாம்ப்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். https://oruvan.com/sri-lankan-tamil-youth-arrested-in-britain-on-sexual-abuse-charges/
  7. வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம் வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம்.யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஆவரங்கால் தொண்டைமானாறு வீதியை புனரமைக்கும் வேலைத் திட்டத்தை நேற்று புதன்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்காக 425 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையினுடைய கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தில் ஆவரங்கால் தொண்டைமானாறு வீதிக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் மக்கள் பிரச்சனைகளை விளங்கி கொள்ளும் எப்படியான அரசாங்கம் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினோம்.ஊழல்களை அழித்தொழிப்போம் எனத் தெரிவித்தோம். ஊழல் தர சுட்டெண்ணில் நாடு முன்னேறியுள்ளது.ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை ஒரு ரூபா பணத்தையும் ஊழல் செய்வதில்லை. வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது இரண்டு பேரை விலக்கியிருந்தார். அதற்கு காரணம் உங்களுக்குத் தெரியும் தானே? ஊழலை நாம் ஒழிப்போம். வாகனம், பாதுகாப்பு என்பதை எடுப்பதில்லை எனத் தீர்மானித்தோம். இங்கு எமக்கு போக்குவரத்து பொலிஸார் மட்டும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சஜித் பிரேமதாஸவுக்கு இதை விட பாதுகாப்பு வழங்கப்படும். சுமந்திரனுக்கும் பாதுகாப்பு உள்ளது. ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது தேவையானளவு மக்களை சந்தித்தார். அரசாங்கத்தினால் அளிக்கப்படும் வரப்பிரசாதத்தை முடிந்தவரை எடுப்பதில்லை. முப்பது வருட யுத்தம் மாத்திரம் பிரச்சினை இல்லை நூறு வருட வீதியும் பிரச்சினை தான். பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பாதுகாப்பு படையினரை திரும்ப பெற்றோம். மக்களின் காணிகளை மீள கையளித்து கொண்டு வருகிறோம். சில காணிகளை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. சில காணி உரிமையாளர்களை அடையாளம் காண முடியாதுள்ளது. இடத்தை கையளிக்க தயார் என்றாலும் வேலி அடைக்க பணம் இல்லை என்கிறார்கள். பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம்.வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம். நல்ல விடயம் மக்களை சென்றடையாத விதத்தில் அதனை விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் கல்வி மறுசீரமைப்பு திருத்தம். தேசிய மக்கள் சக்தி அனைவரும் படித்தவர்கள். ஆனால் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்ட சிறு பிழையை காரணம் காட்டி பெரிய போராட்டத்திற்கு தயாரானார். வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கல்வி மறுசீரமைப்பு கோஷங்களுடன் இணைந்து கொண்டனர் – என்றார். https://akkinikkunchu.com/359632/
  8. இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் ; தானே போரை நிறுத்தியதாகவும் ஆர்ப்பரிப்பு 12 Feb, 2026 | 01:55 PM கடந்த ஆண்டு நிலவிய இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் தான் சமாதான தூதுவர் போல செயற்பட்டு போரை தடுத்து நிறுத்தியதாகவும் ஊடகப் பேட்டியொன்றின்போது குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் போரை தடுப்பதில் தான் தீர்க்கமாக பங்களித்ததாக ட்ரம்ப் உறுதிபட பேட்டியில் தெரிவித்திருந்தார். இது ஒரு அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்றும் கூறிய ட்ரம்ப், இதுவரை நான் 8 போர்களை நிறுத்தியதாகவும் அவற்றில் 6 போர்களை வரி விதித்தே தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். “நீங்கள் இந்த போரை நிறுத்தவில்லை என்றால், நான் உங்களுக்கு அதிகளவு வரிகளை விதிப்பேன் என்று கூறினேன். அவர்கள் அதற்கு உடன்பட்டு போரை நிறுத்தியுள்ளனர். ‘ட்ரம்ப் எங்களது போரை நிறுத்தி, குறைந்தது 10 மில்லியன் மக்களின் உயிர்களை காப்பாற்றிவிட்டார்’ என பாகிஸ்தான் பிரதமரே என்னிடம் கூறியிருக்கிறார்” என ட்ரம்ப் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியமைக்கு தானே காரணம் என ட்ரம்ப் பல முறை தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு மே 10ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்து வரும் ட்ரம்ப், தற்போது அதையே 80வது முறையாக பெருமைபடக் கூறுவதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், மூன்றாம் தரப்பின் தலையீட்டை விரும்பாத இந்தியா ட்ரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. https://www.virakesari.lk/article/238479
  9. பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் எதற்கு? எம்.எஸ்.எம். ஐயூப் தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பலர் தெரிவித்த எதிர்ப்புகளை அடுத்து சட்ட மூலத்தை மீளாய்வு செய்து மீண்டும் சமர்ப்பிப்பதற்காகவே அதனை இடைநிறுததுவதாக கூறியுள்ளார். ஆயினும் இது முதன் முதலாக தமது அரசாங்கம் முன்வைக்கும் சட்டமூலமொன்றல்ல என்றும் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முன்வைத்த சட்டமூலமொன்றையே தமது அரசாங்கம் முன்வைத்துள்ளது என்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுகின்றனர். அதில் ஓரளவு உண்மை இருக்கிறது. இதனையொத்த சட்டமூலமொன்று 2023 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்ப்பட்டு இருந்தது என்று சட்டத்தரணி அரித்த விக்ரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார். கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பலர் எதிர்ப்பு தெரிவித்த போதும் அரசாங்கம் இவ்வாறே கூறியது. அச்சீர்திருத்தங்கள் முதன்முதலாவதாக தாம் முன்வைக்கவில்லை என்றும் 2019 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் முன்வைத்த சீர்திருத்தங்களில் சில மாற்றங்களை செய்தே தாம் சமர்ப்பத்ததாகவும் அரசாங்கம் கூறியது. இதுவும் உண்மையே. அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவர்களாக இருந்த தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் அண்மையில் அச்சீர்திருத்தங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். தேசிய மக்கள் சக்தியினர் அரசாங்கம் புதியதோர் அரசியலமைப்பை கொண்டுவருவதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தனர். இன்னமும் அதனை கூறி வருகின்றனர். அதேவேளை, அந்த புதிய அரசியலமைப்பு 2016 ஆம் ஆண்டு மைத்திரி-ரணில் அரசாங்கம் ஆரம்பித்த மக்கள் அபிப்பிராயம் ஆராயும் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படும் என்றும் கூறுகின்றனர். தற்போதைய அரசாங்கம் கோட்டாபய அரசாங்கம் ஆரம்பித்த சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தையும் தொடர்கிறது. 1979 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் அறிமுகப்படுத்திய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதனையும் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். அதேபோல் தாம் எதிர்த்த நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தையும் பயன்படுத்துகின்றனர். சமூக முறைமை மாற்றமே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால பிரதான சுலோகமாகியது. எனவே அக்கட்சியின் அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களின் திட்டங்களையே இவ்வாறு தொடர்வதை பலர் விமர்சிக்கின்றனர். அதில் ஓரளவுக்குத் தான் நியாயம் இருக்கிறது. ஏனெனில் முறைமை மாற்றம் என்றால் கடச்த கால அனைத்தையும் மாற்றுவதல்ல. சில நல்லவற்றையும் நிர்ப்பந்தமான விடயங்களையும் அரசாங்கம் தொடர வேண்டிய நிலை ஏற்படலாம் உதாரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை குறிப்பிடலாம். அந்நிதியம் வல்லரசுகளின் நலன்களை முதன்மையாகக் கொண்ட நிறுவனம் என்றதோர் கருத்தும் நிலவுகிறது. அது முற்றிலும் உண்மையானதல்ல. 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்த நிலைமையில் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காவிட்டால் நாட்டில் பஞ்சம் அதிகரித்து சிலவேளை இரத்தம் சிந்தும் கலவரங்களும் வெடித்திருக்கலாம். அன்று கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்நோக்கிய பிரதான பிரச்சினை வெளிநாட்டு செலாவணி கையிருப்பு முற்றாக வற்றிச் சென்றமையேயாகும். அன்று அமைச்சர்கள் கடனுக்கு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு மேற்கு ஆசிய நாடுகளில் அலைந்து திரிந்தனர். எண்ணெய் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் போக்குவரத்து முற்றாக தடைப்படும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக பொருட்களின் விலை மும்மடங்காகவும் நான்கு மடங்காகவும் அதிகரித்தது. இந்த நிலையில் முதலில் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதை நிராகரித்த கோட்டாபய ராஜபக்ஷ பின்னர் அந்நிதியத்திடம் உதவி கோரினார். அந்நிதியம் அதற்கு இணங்கிய உடனேயே உலக வங்கி இலங்iகைக்கு உதவ முன்வந்தது. நாணய நிதியமும் நான்கு ஆண்டுகளுக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வழங்க முன்வந்தது. அந்த ஒப்பந்தத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முறித்திருந்தால் நாடு மீண்டும் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும். எனவே முன்னைய அரசாங்கங்கள் எவ்வளவு தான் ஊழல் மலிந்தவையாக இருந்தாலும் குறிப்பிட்ட ஓர் காலம் வரை அவை ஆரம்பித்த சில விடயங்களை தொட்ரத் தான் வேண்டும். கல்வி சீரதிருத்தங்கள் போன்ற சில நல்ல விடயங்களை அவசியமான மாற்றங்களுடன் நிரந்தரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் பயங்கரவா தடுப்புச்ச சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை அரசாங்கம் ஏன் தொடர வேண்டும்.? பயங்கரவாத தடுப்புச் சட்டமானது 1979 ஆம் ஆண்டிலேயே நிறைவெற்றப்பட்டது. அது ஒரு சற்காலிக சட்டமாகும் என்று அதன் பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அது 47 வருடங்களாக சில மாற்றங்களுடன் இன்னமும் அமுலில் இருக்கிறது. இலங்கையில் முதன் முதலில் பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரேயாவர். 1971 ஆம் மக்கள் விடுதலை முன்னணி அப்போதைய அரச அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த போது அப்போதைய சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கம் அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பட்டது. கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் அவர்களை சிறையிலடைத்த குற்றவியல் நீதி ஆணைக்குழச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். எனவே தமிழ் ஆயுதக் குழுக்களை அடக்கும் நோக்குடன் 1979 ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் போது மக்கள் விடுதலை முன்னணி அதனை கடுமையாக எதிர்த்தது. அந்த எதிர்ப்பு கடந்த 47 வருடங்களில் ஒரு போதும் குறையவில்லை. கடந்த காலங்களில் சர்வதேச நெருக்குவாரங்களின் காரணமாக அச்சட்டத்துக்குப் பதிலாக சர்வதேச தரத்திலான மற்றொரு சட்டம் கொண்டு வரப்படும் என்று முன்னைய அரசாங்கங்கள் தெரிவித்தன. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாற்றுச் சட்டம் தேவையில்லை இருக்கும் சட்டத்தையும் முற்றாக இரத்துச் செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் அதனை பிரதான கட்சியாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியென்ற கூட்டணயும் கூறி வந்துள்ளன. நடைமுறையில் இருக்கும் ஏனைய சட்டங்கள் குற்றங்களை தடுக்க போதுமானவை என அக்கட்சியின் தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் இன்று தேசிய மக்கள் சக்தியும் பல குற்றங்கள் தொர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அருகம்பேயில் இஸ்ரேலிய உல்லாசப் பிரயாணிகளின் பாதுகாப்புக்கு குந்தகமாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி பெலிசார் இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முஹமமத் சுஹைல் என்ற 21 வயது மாணவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் ஆனால் 9 மாதங்களுக்குப் பின்னர் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தால் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். சில குற்றங்கள் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய பயங்கரவாத தடுப்புச் சட்த்தின் கிழ் மட்டுமே முடியும் எனவே சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் வரை அதன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் கடசிகளின் தலைவர்டகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின் போது குறிப்பிட்டு இருந்தார். புதிய சடட்ம் ஒன்று கொண்டவரப்படும் வரை இருக்கும் சட்டத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது என்று வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத்தும் கூறியிருந்தார். ஆயினும் பயங்கரவாத் தடுப்புச் சட்டம் எவ்வளவு மோசமான அடக்குமுறைச் சட்டம் என்பதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு புதிதாக கூறத்தேவையில்லை. எனவே முன்னைய அரசாங்கங்கள் சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி அளித்ததற்கு அமைய சர்வதேச தரத்திலான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்து அரசாங்கம் பயங்கரவாத்தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் முதன் முதலாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கததால் 2023 ஆம் ஆண்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட போது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் அதன் 53 வாசகங்களில் 31 வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளித்தது. அச்சட்டத்தின் மீதான நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது அந்த 31 வாசகங்களை திருத்துவதஙற்கான பரிந்துரைகளையும் நீதிமன்றம் வழங்கியது. ஆனால் ரனிலின் அரசாங்கம் அப் பரிந்துரைகளில் சிலவற்றை மட்டும் குழுநிலையின் போது உள்ளடக்கி 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதனை நிறைவேற்றிக் கொண்டது. இதனையும் கடுமையாக எதிர்த்த தேசிய மக்கள் சக்தி கருத்துச் சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கும் இந்தச் சட்டத்தை திருத்துவதாக வாக்குறுதி அளித்தது. இதுவும் அரசாங்கம் மிக எளிதில் செய்யக் கூடிய விடயமாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பயங்கரவாத-தடுப்புச்-சட்டம்-இன்னமும்-எதற்கு/91-372343
  10. சமூக வலைத்தளங்கள், வட்ஸப் எல்லாம் பிழையான தகவல்கள் வருகின்றன. நம்பகத்தன்மையானவர்களே பிழையான தகவல்களை பரப்புகின்றனர். பையனுக்கு 17 வயதுதான்.. அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்! வீட்டாருக்கு அச்சுறுத்தல்! அவதூறு பரப்பப்படுவதாக கவலை! adminFebruary 11, 2026 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. காவற்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவற்துறையினர் வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான். அது தொடர்பில் 10ஆம் திகதி காவற்துறையினர் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள். அந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதியே பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன. அல்லைப்பிட்டியில் உயிரிழந்த சிறுவனனின் குடும்பத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் ? அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவற்தறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் வீட்டாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை வட்டுக்கோட்டை காவல் நிலைய உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திக்கொண்டு , சிறுவனின் உடலத்துடன் நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளீர்களா என வினாவியுள்ளார். அதற்கு வீட்டார் தாம் அப்படி எதுவும் ஏற்பாடு செய்ய வில்லை என வீட்டார் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து , சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடக்கின்றன. நாங்கள் ஒரு திகதி சொல்லுவோம். அந்த திகதியில் நீதவானை சந்திக்க ஏற்பாடு செய்வோம். அன்றைய தினம் நீங்கள் நீதவானை சந்தித்து முழு விடயத்தையும் சொல்லலாம். இப்ப போராட்டம் எதுவும் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களுடன் கதைக்க வேண்டாம்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக உங்களை குழப்பலாம். நாங்கள் உங்கள் மகனின் விடயத்திற்கு நீதியை பெற்று தருவோம். நீங்கள் எந்த போராட்டங்கள் எதிர்ப்புக்கள் இன்றி மகனின் இறுதி கிரியைகளை செய்யுங்கள் என மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அல்லைப்பிட்டி சம்பவம் – உயிரிழந்த சிறுவன் தொடர்பில் அவதூறுகள் பரப்பபடுவதாக வீட்டார் கவலை! எமது பிள்ளையை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதால் , பிள்ளையை இழந்து வாடும் எமக்கு அந்த செய்திகள் மிக மனவருத்தத்தை தருகிறது என அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் வீட்டார் கவலை தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் உள்ள ஒருவரிடம் சம்பவ தினம் நடந்த அன்றே அந்த ஹயஸ் வாகனத்தை வாங்கி இருந்தோம். அன்று இரவு தான் வேலணைக்கு செல்லும் போது, உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை செலுத்தி சென்றார். ஆள் நடமாட்டம் அற்ற வீதியில் வாகனத்தை தான் செலுத்த போவதாக கேட்டதால் , வாகனத்தை கொடுத்தார். காவற்துறையினர் மறித்த போது நிற்காமல் ஓடியது மாத்திரமே அவன் செய்த தவறு. அதற்காக அவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவன் உயிரிழந்து விட்டான். ஆனால் சில ஊடகங்கள் அவன் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எமது காணி எல்லையில் நின்ற வேப்ப மரத்தை அயலவர் வெட்டினார். அந்த மரத்தின் விறகுகளில் பாதியை எமக்கு அவர் தந்திருக்க வேண்டும். அதனை அவர் தரவில்லை. அந்த கோவத்தில் , மகன் சில விறகுகளை தூக்கி எமது காணிக்குள் போட்டான். அது தொடர்பில் அந்த காணி உரிமையாளர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதன் பிரகாரம் மகனை அழைத்து விசாரித்தார்கள். அது மாத்திரமே அவனுக்கு எதிரான காவற்துறை முறைப்பாடு. இது நடந்து கூட சில வருடங்கள் ஆகி விட்டன என வீட்டார் தெரிவித்துள்ளனர் https://globaltamilnews.net/2026/228929/ சவப்பெட்டியுடன் வீதியில் ஆர்ப்பாட்டம் Janu / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 12:18 அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது. அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பு.கஜிந்தன் https://www.tamilmirror.lk/செய்திகள்/சவப்-பெட்டியுடன்-வீதியில்-ஆர்ப்பாட்டம்/175-372375
  11. நாளை வியாழன் 12 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL எதிர் OMA 22 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஓமான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஓமான் நிலாமதி இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA எதிர் NEP 06 பேர் இத்தாலி அணி வெல்லும் எனவும் 17 பேர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இத்தாலி சுவைப்பிரியன் ஈழப்பிரியன் சுவி கோஷான் சே ரசோதரன் நிலாமதி நேபாளம் செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 கிருபன் அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் பிரபா நந்தன் இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND எதிர் NAM 22 பேர் இந்தியா அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் மாத்திரம் நமீபியா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா நிலாமதி இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா?
  12. இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ரஹ்மனுல்லா குர்பாஸினின் மின்னல்வேக 84 (42) ஓட்டங்களின் உதவியுடன் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமப்படுத்தியது. லுங்கி என்கிடியும் கேஷவ் மஹராஜும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில், விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற முதலாவது சுப்பர் ஓவர் முடிவிலும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றது. 24 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 19 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி இரண்டாவது சுப்பர் ஓவர் முடிவில் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடியான 45 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஜொஷ் இங்லிஸின் மின்னல்வேக 37 (17 பந்துகள்) ஓட்டங்கள், மற் றென்ஷோ 37 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணியில் ஜோர்ஜ் டொக்ரல் 41 (29 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாகப் பவிலியனுக்குத் திரும்பியதால் 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. நாதன் எலிஸும் அடம் ஸாம்பாவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். முடிவு: அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் வேகமாக ஓட்டங்களைப் பெற்றதாலும், ஷேர்ஃபான் ரதர்போர்ட்டின் புயல்வேக 76 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டரின் மின்னல்வேக 33 (17 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் வேகமாக அடித்தாட முயன்று ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டதாலும், பின்னணி வீரர்கள் குறைவான ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்ததாலும், சாம் கரனின் ஆட்டமிழக்காது எடுத்த 43 (30 பந்துகளில்) ஓட்டங்களுடன் 19 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: இன்றைய முதல்வராக @வீரப் பையன்26 கதிரையில் வீற்றிருக்கின்றார்!
  13. சுப்பர் ஓவர்ஸுக்கு போகாமல் வெல்லவேண்டிய மட்ச். தேவையில்லாத ரண் அவுட்!
  14. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி adminFebruary 11, 2026 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (BC) டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 10, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாற்றில் மிக மோசமான பள்ளித் துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாக இச்சம்பவம் கருதப்படுகின்றது. நேற்று மதியம் 1:20 மணியளவில், டம்பிளர் ரிட்ஜ் மேல்நிலைப் பா்சாலையில் (Tumbler Ridge Secondary School) துப்பாக்கித் தாரி ஒருவர் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளாா். மொத்தமாக 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாடசாலையின் உள்ளே 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாடசாலையுடன் தொடர்புடைய ஒரு வீட்டில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். துப்பாக்கிதார தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் பாடசாலையின் உள்ளே கண்டெடுக்கப்பட்டார். சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிதாரி ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பழுப்பு நிற முடி (Brown hair) கொண்டவர் என்றும், ஒரு ஆடை (Dress) அணிந்திருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.காவல்துறையினா் அவரது அடையாளத்தை உறுதி செய்துள்ள போதிலும், தற்போதைய விசாரணைக் கட்டத்தில் அவரது பெயரை வெளியிடவில்லை. பிரதமர் மார்க் கார்னி (PM Mark Carney) இச்சம்பவத்தால் தான் கடும் வேதனை அடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மாகாண முதல்வர் டேவிட் ஈபி (Premier David Eby) டம்பிளர் ரிட்ஜ் சமூகம் முழுவதுமே இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார். டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/228864/
  15. வட்ஸப்பில் இருந்து.. 🚨 Van துப்பாக்கிச்சூடு சம்பவம் – போலீஸ் விளக்கம் வெளியீடு யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வேன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். ஆரம்பத்தில் 17 வயது ஓட்டுநர் சம்பந்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது தவறான தகவல் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர் 19 வயதுடைய பயணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தெரிவித்ததாவது: அல்லைப்பிட்டி சந்திப்பிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு சைகை செய்யப்பட்டது. ஆனால் வாகனம் நிற்காமல் சென்றதால் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் காயமடைந்த 19 வயது இளைஞர் பின்னர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
  16. நாளை புதன் 11 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA 05 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 18 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் செம்பாட்டான் நியூ பலன்ஸ் வாத்தியார் வாதவூரான் சுவி இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS எதிர் IRE அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா? 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG எதிர் WI 18 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் 05 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் செம்பாட்டான் வாத்தியார் வீரப் பையன்26 சுவி ரசோதரன் இந்தப் போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
  17. இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நமீபியா அணி, ஜான் நிகொல் லொஃப்டி-ஈட்டனின் 42 (38 பந்துகளில்) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, பஸ் டீ லீட்டின் ஆட்டமிழக்காத 72 (48 பந்துகளில்) ஓட்டங்களின் உதவியுடன் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, முஹமட் வஸீம் ஆட்டமிழக்காமல் எடுத்த 66 (45 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் 55 (47 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டிம் செய்ஃபேர்ட் மின்னல்வேக 89 (42 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஃபின் அலென் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 (50 பந்துகளின்) ஓட்டங்களுடன் 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 175 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி சஹிப்ஸடா பர்ஹானில் அதிரடியான 73 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், பாபர் அஸாமின் 46 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஷடாப் கான் மின்னல் வேகத்தில் எடுத்த 30 (12 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணியில் ஷுபம் ரஞ்சனே 51 (30 பந்துகளில்) ஓட்டங்களையும், ஷயான் ஜஹங்கிர் 49 (34 பந்துகளில்) ஓட்டங்களையும் எடுத்திருந்தாலும், இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல் மூன்று நாட்கள் முதல்வராக இருந்த @செம்பாட்டான் 13வது இடத்திற்கு சறுக்கிவிட்டார்!
  18. வட்ஸப்பில் இருந்து.. தற்போது மாடு களவில் ஈடுபடும் குழுவினர் சொகுசு கார்கள் மற்றும் வேன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்... நள்ளிரவு 1.18 மணியளவில் வயல் அரிவு வெட்டுக்கு ஆட்களை ஏற்ற சீட்கள் இல்லாத வாகனத்தில் சென்றார்கள் எனும் கதை சிறு பிள்ளையும் ஏற்றுக்கொள்ளாது. வடக்கில் சட்டவிரோத தொழில்கள் இளவயதினர் அதிகம் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குடும்பத்தினர் எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றனர் என்று பார்க்கின்றனரேயொழிய எவ்வகையில் சம்பாதிக்கின்றனர் என்று பார்ப்பதில்லை. ஒரு குடும்பத்தின் ஜீவனோபாயமாக இருக்கும் ஒரு மாட்டினை களவெடுத்து சென்று இறைச்சிக்காக விற்பவர்கள் அறிவதில்லை அந்த மாட்டை நம்பி இருக்கும் குடும்பத்தின் வலியினை. சாதாரணமாக மாட்டை கடத்தி பிடிபட்டால் நீதிமன்றம் ஊடாக கிடைக்கும் தண்டனை மிகவும் சொற்பமானது. கடத்தலில் ஈடுபட்டவர் அன்றே பிணையில் வெளியே வரலாம் குற்றக்காசும் மிகவும் குறைவே. இவ்வாறான சட்ட நிலைமை இருப்பதால்தான் துணிவாக மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாதோ அந்தளவுக்கு இவர்கள் செய்த சட்டவிரோத செயலும் ஏற்றுக்கொள்ள முடியாததே... தகவல் சுப்பிரமணிய பிரபா
  19. மணிபல்லவம்: இறகைப் போல விழும் வெடிகுண்டு- சிறில் அலெக்ஸ் அன்புள்ள ஜெ, வாசு முருகவேல் எழுதிய மணிபல்லவம் நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு சிறப்பான கவனத்தை பெற்றிருக்கிறது. நாவல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு The Zone of Interest என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆஷ்விட்ச்சின் (Auschwitz) தலைமை அதிகாரியான ரூடால்ஃப் ராஸ், அவரது குடும்பத்தினருடன் ஆஷ்விட்சை ஒட்டியிருந்த குடியிருப்பில் தங்கள் அன்றாட குடும்பவாழ்க்கையில் சாதாரணமாக தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பதுதான் படத்தின் கதையின் சாரம். பின்னணியில் உயர்ந்து நிற்கும் புகைபோக்கிகளில் என்னேரமும் கரும்புகை பொங்கி வானை நிறைத்துக்கொண்டிருக்கிறது. அவர் தன் பணியை ஒரு அரசாங்க சிப்பந்தியைப் போல செய்துகொண்டிருக்கிறார், வேலை போய்விடுமோ என கவலை கொள்கிறார். அங்கிருக்கும் கொலைக்கூடங்களின் திறனை அதிகரிப்பது குறித்து திட்டஙளிடுகிறார். அரசுக்கு அறிக்கைகளை அனுப்பி வைக்கிறார். வீட்டில் கணவனும் மனைவியும் குடும்ப சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். சமையல், துணி துவைப்பது, தோட்டத்தை பராமரிப்பது பிள்ளை வளர்ப்பு என அன்றாடப் பணிகள் அதனதன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பின்னணியில் புகைபோக்கிகள் ஓய்வின்றி வானைக் கரியாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்திற்கும் மணிபல்லவத்திற்கும் இரு தொடர்புகள் உள்ளன. முதலில் இரண்டாம் உலகப்போர் குறித்து இன்னும் சொல்லி முடிக்கப்படாத கதைகள் இருப்பதைப் போலவே ஈழப் போரும் இன்னும் சொல்லித் தீராத ஒன்றாகவே உள்ளது. வாசு வருடத்திற்கு ஒரு நாவல் என்பதற்குப் பதில் அன்றாடம் ஒன்று என எழுதினாலும் அதன் கதைகள் தீரப் போவதில்லையோ என்று தோன்றுகிறது. அவருடன் ஷோபா சக்தியும், அகரமுதல்வனும், சயந்தனும், காலம் செல்வமும் எனப் பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் எழுதுவார்கள். இரண்டாவது தொடர்பு அல்லது ஒற்றுமை இரண்டிலும் பெருங்கொடுமைகள் அன்றாட வாழ்க்கையைச் சுற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பது. (The Zone of Interest படம் ஹானா ஆரண்ட்டின் Banality of violence உடன் ஒப்பிடப் படுகிறது.) உண்மையில் ஒரு விபத்து அல்லது கொடூரம் நிகழும் ஒரு நொடிக்கு முன்புவரை வாழ்க்கை இயல்பானதாகவே உள்ளது. நம் அன்றாடங்களுக்கு மத்தியில்தான் ஒரு போரின் முதல் குண்டு வந்து விழுகிறது, ஒரு கொலைக்கு முன்பான முதல் சலசலப்பு நிகழ்கிறது. காலையில் எழுந்து முகம் கழுவி உடை மாற்றி சாப்பிட்டு விட்டு ஒரு படகிலேறும் தீவுவாசிகளின் அன்றாடத்தில் நேவி நுழைகிறது. வாசு இந்த நாவலில் அதிகம் சொல்லியிருப்பது ‘நயினாத் தீவின்’ அன்றாட வாழ்க்கையை, அங்கிருந்த ‘ஆமி காம்பின்’ அன்றாடத்தை, கதைநாயகி ஷோபாவின் அன்றாடத்தை. இவற்றை இத்தனை இயல்பானதாகச் சொல்லியிருப்பதால் நாவலின் பிற முக்கிய நிகழ்வுகள் தனித்து தெரிகின்றன போலும். அதாவது வாசு நாவலை எதை நோக்கியும் செலுத்தவில்லை. அவர் சில நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டு செல்கிறார். அந்த அன்றாடம் அசாதரணாமக மாறிய நாட்கள்கூட அதே நிதானத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசுவின் ஒடுக்கமான உடலிலிருந்து கூக்குரல் எழுவதில்லை அவர் நம்முடன் சாதாரணமாக உரையாட மட்டுமே செய்கிறார். அதுவும் தனக்கேயுரிய தயக்கத்துடன்… இந்த நாவலை வாசு எப்படி திட்டமிட்டிருபார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. என்னால் இந்த வடிவத்தை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் வாசு ‘ஏன் எடுத்த மாட்டிலேயே ஒரு நாடகத்தைப் பின்னவில்லை? ஏன் அவர் படைத் தளபதிகள் திட்டங்கள் தீட்டும் காட்சிகளை எழுதவில்லை, எதிரியின் கொக்கரிப்பை ‘ஹ ஹ ஹ’ என்று எழுதவில்லை? ஏன் அவர் கொல்லப்படுபவர்களின் பரிதாபப் பின்னணிகளைச் சொல்லவில்லை?, அவர் ஏன் அவர்களை குற்றமற்றவர்களாகக் கூட காண்பிக்க முயலவில்லை?’ என்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஒரு குறைந்த பட்ச கொந்தளிப்புகூட இல்லாமல் ஒரு கொடுமையை எழுதிவிட முடியுமா! வாசு அதைத்தான் செய்திருக்கிறார். ஷோபா காலையில் எழுகிறாள், மீன்வாங்குகிறாள், குளம்பு வைக்கிறாள், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறாள், தெருவில் சைக்கிளோடு விழுந்து கிடப்பவனுக்கு உதவுகிறாள், தன் வீட்டுக்கு வருபவர்களுக்கு கசந்த தேனிரைத் தந்து உபசரிக்கிறாள், அவர்களது அறிவுரைகளைக் கேட்கிறாள் (காதில் மட்டும்) ஒரு நாள் கிளம்பி குழந்தையை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்கிறாள். அன்றாட, சாதாரண, தினசரி நிகழ்வுகள்… சிலர் பழைய தினசரித் தாளில் பலகாரத்தைப் பொதிந்து எடுத்துச் செல்வார்கள், சிலர் தங்கத்தைப் பொதிந்து கொண்டு செல்வார்கள், வாசு இரத்தம் தோய்ந்த கொடுவாள் ஒன்றைப் பொதிந்து வைத்துள்ளார். வாசுவும் அவர் படைப்புகளும் அரசியலற்றவை அல்ல என்பதும் நமக்குத் தெரியும். அதில் அவர் வெளிப்படையானவர். ஆனால் அரசியல் எத்தனை கவனத்துடனும், நயத்துடனும் பேசப்படுகிறது என்பது மணிபல்லவத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. நாவலின் முதல் சில வரிகள் இவை… ‘ஷோபா அன்றைக்குக் காலையில் எழும்பும்போது மணி அதிகாலை ஐந்தரைதான். ஆறு மணிக்கு வழமை போல இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சாரம் நிறுத்தப்படும். ஓம், ஊரில் மின்சாரமும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.’ அந்த கடைசி வரியில் அவர் பல பக்கங்களில் எழுதப்பட வேண்டியவற்றை எழுதிவிடுகிறார். உண்மையில் இந்த நாவல் இருனூறு முன்னூறு பக்கங்களாக விரித்து எழுதப்படும் சாத்தியங்களை உள்ளடக்கியது. மணிபல்லவம் வாசக இடைவெளி மிகுந்த படைப்பாக உள்ளது. எனவே சிறிய நாவலாக இருந்தாலும் அதை ஒரே வாசிப்பில் முடிக்க இயல்வதில்லை. நாவலின் நிகழ்வுகளும் இடம், காலம் இன்றி முன்னும் பின்னுமாக அடுக்கப்பட்டுள்ளன எனவே சீரிய, தீவிர வாசிப்பைக் கோரும் நாவலாக அமைந்துள்ளது, அதே நேரம் மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக எளிய வகையிலேயே சொல்லிச் செல்கிறார். இந்த அம்சம் நாவலுக்கு ஒரு தனித்துவத்தை அளிக்கிறது. சில இடங்களில் என்ன நடக்கிறது என்பதை யூகிக்கத்தான் முடிகிறது, ஆனாலும் சுவாரஸ்யம் குறைவதில்லை உதாரணமாக கொத்தலாவ பாத்திரத்தின் இறுதிப் பகுதியைச் சொல்லலாம். மணிபல்லவம் பேசும் அரசியலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் தமிழர்கள் புத்தரையும் வணங்கியவர்கள். பின்னர் புத்தரை அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக ‘பிரித்தெடுத்தவர்கள் வந்தார்கள்’. நாகர்கள் மத்தியில் இருந்த பதவிப் போரை நிறுத்தி அமைதியைக் கொண்டு வந்த புத்தரின் கதையை உள்ளடக்கிய இந்த நாவல் தமிழர் சிங்களவர் ஒற்றுமைக்கும் புத்தரே காரணமாய் அமைந்திருக்கக் கூடும் எனும் ஏக்கத்தை முன்வைப்பதைப் போல உள்ளது. அதே நேரம் புத்த பிக்குகளே நேரடியாக அரசியலிலும் அரசியல் கொலைகளிலும் ஈடுபட்ட வரலாற்றையும் பதிவு செய்கிறது. அரசியல் கலந்த கதைகளை எழுதும்போது ஒற்றைப் படையான கதாபாத்திரங்களை முன்னிறுத்துவது எளிதானது. பல நேரங்களில் இது ஆசிரியர் அறியாமலேகூட நடந்துவிடுகிறது. ஆனால் வாசு இதை மிகச் சரியாக கையாண்டிருக்கிறார். இரு பக்கங்களிலும் சுற்றி நடக்கும் அரசியலை விரும்பியும் விரும்பாமலும் கவனித்தும் கவனிக்காமலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை நமக்குக் காண்பிக்கிறார். சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளால் தவிர்க்க முடியாமல் இந்தப் போர் அரசியலுக்குள் தள்ளப்படும் சில முக்கிய கதை மாந்தர்களும் உள்ளனர். இரு பக்கமும் தீவிர ஆதரவாளர்களும், கடும்போக்காளர்களும் உள்ளனர், இரு பக்கமும் சூழ்நிலைக் கைதிகள் உள்ளனர் இரு பக்கமும் தங்கள் இன அரசியலின் கடும்போக்குகளை ஆதரிக்காதவர்களும் உள்ளனர், இரு பக்கமுமே போருக்கு மத்தியில் தன் அன்றாட, சாதாரண வாழ்க்கையை நடத்திக்கொள்ளும் அப்பாவி மக்களும் உள்ளனர். இது நாவலுக்கும், நாவல் சொல்லும் அரசியலுக்கும் சமநிலையை அளிக்கிறது. ஒரு நியாயத் தராசில் எடைபோட்டதைப் போன்ற இந்த அமைப்பு நாவலுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது, கதை மாந்தர்கள் மீது ஈடுபாட்டைக் கொண்டு வருகிறது. வாசு ஒரு யுக்தியை சரியாகக் கையாண்டிருக்கிறார். அரசியலை நேரடியாக எழுதாமல் கதைமாந்தர்களின் பின்னணியில் சேர்த்து விடுகிறார். உதாரணமாக சிங்களம் கட்டாயமாக்கப்பட்டதால் ‘கவுரவமான’ அரசு வேலையை இழந்துவிட்ட ஒரு பாத்திரம் அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையைச் சொல்கிறது. ஆனால் அது அரசியல் என்று நம்மால் நேரடியாக உணர்ந்துவிட முடியாதபடி வாசு எழுதியுள்ளார். வேலை இழந்து வீட்டில் உள்ளவர்கள் மீது எரிச்சல் அடைந்து கிட்டத்தட்ட மன நலம் குன்றி அவர் சென்று சேரும் இடம் கவுரவமற்ற இன்னொரு ‘அரசுப்’ பணியில். இதே போல இயக்கத்துக்கு ஓடிச் செல்லும் மனிதர்களின் குடும்பங்களின் தவிப்பையும், சிறுவர்களை கடத்திச் சென்று போர்ப் பயிற்சி தரும் இயக்கத்தைக் குறித்தும் எழுதியிருக்கிறார். நாவலின் துவக்க வரிகளைச் சுட்டிக்காட்டியதுபோல நாவல் முழுவதும் வரும் ஆசிரியரின் கூற்றுக்கள் பலவும் அரசியலையும் சில வியப்பூட்டும் கண்ணோட்டங்களையும் முன்வைக்கின்றன. வாசுவின் எழுத்தில் இந்த முதிர்ச்சி வந்திருப்பதை அவரது முந்தைய நாவல்களை வாசித்தவர்கள் உணர முடியும். ‘வேறுபடுத்துபவர்கள் வந்தார்கள். அவர்கள் சிங்களவரில் இருந்துதான் வந்தார்கள், பவுத்தர்களில் இருந்து வந்திருக்க முடியாது இல்லையா!’ ‘உலகத்துக்கு இலங்கையும் ஒரு குட்டித் தீவுதான் என்பது குறித்துச் சிந்திக்கும் யாரும் இன்னும் இலங்கையை ஆண்டதாகத் தெரியவில்லை.’ ‘பண்டாரவின் உழைப்புக்கும் இலங்கையின் அத்தியாவசிய பொருட்களின் விலைக்குமான வித்தியாசம் கூடிக்கொண்டேதான் இருந்தது.’ ‘சமாதானத்தில்தான் சந்தேகங்களும் கேள்விகளும் அதிகம் தோன்றுகின்றன.’ ‘பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் வாழ்க்கை பலநேரம் ஒற்றையடிப் பாதையாகவே மாறிவிடுகிறது’ இதுபோன்ற பல வரிகளைச் சொல்ல முடியும். ‘போர்க்களத்தில் எல்லோருக்கும் சம பங்குதான். அது ஆணின் இரத்தமானாலும் பெண்ணின் சதையானாலும்.’ இந்த வரியில் பெண்ணின் ‘சதை’ என்ற பதம் சொல்லும் நுட்பமான செய்தி அல்லது அரசியலை ஒரு தேர்ந்த வாசகர் எளிதில் புரிந்து கொள்வார். அது வெறுமனே சொல் நயத்துக்காக எழுதப்பட்டதல்ல. மீண்டும் மீண்டும் எழுதப்பட்டாலும் முன்னர் நாம் அறிந்தேயிராத நிகழ்வுகள் பல ஈழத்தில் இருக்கின்றன என்பதை மணிபல்லவம் நினைவூட்டுகிறது. போரை பல நூற்றாண்டு வரலாற்றை துரிதப்படுத்தும் ஒரு நிகழ்வாகப் பார்க்கலாம். எல்லாப் போர்களுக்கும் நீண்ட வரலாற்றுக் காரணங்கள் அளிக்கப்படுகின்றன. பல காரணங்கள் புராண காலத்திலிருந்தே துவங்கவும் செய்கின்றன. அதேபோல நீண்ட வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை அல்லது பிழைகள் என தான் கருதுவதை தன் தலைமுறையிலேயே தீர்த்துவிட வேண்டும் என்று செயல்படும் தலைவர்கள் வருகின்றனர். போர்களின்போது வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தீவிரச் செயல்கள் ஒரு குறுகிய காலத்திலேயே நிகழ்ந்துவிடுகின்றன. எனவே போர் குறித்த இலக்கியங்கள் மீண்டும் மிண்டும் எழுதப்படுகின்றன. பல நிகழ்வுகள், பல கோணங்கள், பல மரணங்கள், பல பாடல்கள். மேலும் போர் மனிதனின் ஆதி குணங்களை மீட்டெடுக்கிறது. தன் விலங்கியல்பைக் கண்டு அவனே மலைத்துப் போகிறான். அதை மறுக்க பல காரணங்களைத் தேடிக் கொள்கிறான், அல்லது அtதை ஆராய்கிறான். எனவே போர் ஒரு முக்கிய பாடுபொருளாக இன்றும் இருந்து வருகிறது. மணிபல்லவத்தில் வாசு மனிதர்களை மட்டுமல்ல சில பொருட்களையும் மறக்க முடியாத படிமங்களாக மாற்றியுள்ளார். ‘தண்ணி நீலம்’ என்றொரு புதிய வண்ணத்தை அறிமுகப் படுத்துகிறார். அவ்வண்ணத்தில் ஒரு ‘கடுதாசிப் பூ’ உள்ளது. கடுதாசிப் பூக்கள் (போகைன் வில்லா) நாவலில் ஆங்காங்கே வந்துவிடுகின்றன. ஷோபாவுக்கு அவற்றைப் பிடிக்கும் இல்லையா? இப்பக்கமோ அப்பக்கமோ, வீசும் காற்றில் இழுபடும் பூக்கள். ஒரு தொப்பி, ஒரு சைக்கிள், சில மரச் சாமான்கள். ஒரு கண்காணிப்பு கோபுரம், அம்மாள் கோவிலில் கட்டப்படும் பச்சைக் கயிறு புத்த விகாரத்தில் கட்டப்படும் வெள்ளைக் கயிறு. நான் ஏன் இவற்றை நியாபகத்தில் வைத்துள்ளேன்! The Zone of Interest படத்தில் அகச்சிவப்பு கதிர் கொண்டு படம்பிடிக்கப்பட்ட ஒரு பகுதியில் யூத கைதிகள் நடந்து செல்லும் பாதையில் ஒரு சிறுமி பழங்களையும் ரொட்டித் துண்டுகளையும் மறைத்து வைக்கிறாள், ஆஷ்விட்ச்சின் உலையிலிருந்து தப்பியவர்கள் தந்த சாட்சியங்களின் அடிப்படையில் அந்த பெயர் தெரியாதவரின் இரக்கம், கரிசனை பதிவாக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தனக்கு பணிக்கப்பட்டதை, அது எத்தகையக் கொடூரமான செயலாக இருந்தாலும், செவ்வனே செய்து முடிக்கும் ஒரு அதிகாரி, அவனது குடும்பம். இன்னொருபுறம் ஒரு மாபெரும் கொலை எந்திரமாக மாறியிருந்த ஒட்டு மொத்த நாட்டையும் பற்றி கவலை கொள்ளாமல் தன் ‘எதிரியான’ சக மனிதனைக் குறித்த கவலை கொண்ட்ட அச்சிறுமி. போர் மனிதர்களுள் இருக்கும் விலங்குகளை மட்டுமல்ல தெய்வங்களையும் வெளிக் காட்டுகிறது. பெர்லின் சுவர் அருகே இருந்த அருங்காட்சியகத்திற்கு நாம் சென்றிருந்தபோது அங்கே பல புகைப்படங்களில் யூதர்களுக்கு உதவிய பிற ஜெர்மானியர்கள் மொட்டையடிக்கப்பட்ட பொதுவில் அவமானப் படுத்தப் பட்டதைக் கண்டது நினைவுக்கு வருகிறது. ஹிட்லரின் வதை முகாம்களில் 30,000 கிறித்தவர்கள் இதே காரணத்திற்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள். மணிபல்லவம் இந்த திரைக்கதையை ஒத்த அடிச் சரடுகளைக் கொண்டது. இரண்டுக்கும் அளவில் வித்தியாசம் இருந்தாலும் வீரியத்தில் இல்லை. நாவலின் அட்டைப்படத்தைக் குறிப்பிட வேண்டும். கதையைச் சரியாக உள்வாங்கி அதனால் தீவிரமாக உந்தப் பட்ட ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு அட்டைப் படத்தை வடிவமைக்க முடியும். சந்தோஷ் நாராயணன் பல புத்தகங்களுக்கும் சிறப்பாக வடிவமைப்பைச் செய்கிறார். என்னைப் பொறுத்தவரை மணிபல்லவத்தின் அட்டைப்படமே ஒரு தனித்த படைப்பாக உள்ளது என்பேன். நாவலைப் போலவே தொன்மத்தையும் நவீனத்தையும், அமைதியையும் வன்முறையையும், கடலையும் இரத்தத்தையும் அட்டைப்படம் காண்பிக்கிறது. மானுடத்தின் சில அடிப்படை விதிகள் எல்லா பண்பாடுகளிலும் உள்ளன. அவற்றில் ஒன்று ‘வலிமை மிகுந்தவன் எளியவனை தாக்கக் கூடாது’ என்பது. எல்லா பண்பாடுகளும் அதை மாபெரும் கோழைத்தனமாகவே கருதுகின்றன. அப்படி ஒரு நிகழ்வை நாவலின் மையமாக வைத்து ஒரு சிற்றுயிரை இரத்தச் சகதியில் உருளவிட்டு, அதுவும் அதற்கு முந்தைய பத்தி எந்த தொனியில், ஒரு நிகழ்வாக, எழுதப்பட்டிருந்ததோ அதே தொனியில் சொல்லிச்செல்லும் வாசு நினைத்திருந்தால் ஒரு கூக்குரலை எழுப்பியிருக்க முடியும், ஒரு ஒப்பாரியை நிகழ்த்தியிருக்கலாம், அறம் பாடியிருக்கலாம் நான்கு வார்த்தைகளில் ஒரு சாபத்தையாவது விட்டிருக்கலாம். கவலை வேண்டாம் வாசு மணிபல்லவத்தின் வாசகர்கள் அப்படிச் செய்யக் கூடும் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மணிபல்லவமோ மிக இயல்பாகத் தன் எதிரிக்கு அன்பு செய்த ஒரு பெண் ஒரு சிறு தெய்வமாக மாறிய கதை. வாசு முருகவேலுக்கு வாழ்த்துக்களும் அன்பின் முத்தங்களும். சிறில் அலெக்ஸ் மணிபல்லவம் வாங்க https://www.jeyamohan.in/228072/
  20. வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் இரு மாகாணங்களிலும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காக நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாண சபையால் ஏற்கனவே 32 மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டங்களைத் தற்போதைய சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மீள் பரிசீலனை செய்து, உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய திட்டங்களை வடிவமைக்கும் போதும், இருக்கும் திட்டங்களை மீளாய்வு செய்யும் போதும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார். திட்டங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். எமது மாகாண இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாக அவை அமைய வேண்டும். மாகாணத்தில் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் இயற்கை மற்றும் ஏனைய வளங்களைப் பயனுள்ள வகையில் கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். மாவட்ட ரீதியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். 'வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmlg78yf80006356nyj0z1hcm
  21. LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்! செய்திகள் இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது https://adaderanatamil.lk/news/cmlg7sx2h0002356nx3h9i10t

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.