கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  19,802
 • Joined

 • Days Won

  73

Everything posted by கிருபன்

 1. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகியுள்ள "இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்" இணையப் பக்கம் (நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகலாவிய ரீதியில் நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான இணையப்பக்கமொன்றை வெளிவிவகார அமைச்சு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக நாம் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' என்ற இணையப் பக்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இப்பக்கத்திற்கான இணைப்பை www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணைய முகவரியில் பிரவேசிப்பதன் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் அமைச்சின் வலைத்தள பக்கமான,www.mfa.gov.lk என்ற இணையத்தளம் மூலமாகவும் அனுகலாம். கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காகவும், விரைவான மற்றும் திறமையான சேவையை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நோக்கிலுமே இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி நிலையில் அவசரமான சந்தர்ப்பங்களில் வெளிவிவகார அமைச்சு தமது நாட்டின் பிரஜைகளை அணுகுவதற்கும், உதவுவதற்கும் ஏதுவான வகையில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் இந்த இணையப்பக்கத்தின் அடிப்படைச் செயற்பாடுகளில் தம்மைத் தாமாகவே பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உண்மையான தரவுகளின் அடிப்படையில் விரைவான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுப்பதற்கும் இந்த இணையத்தளம் உதவியாக அமையும். அதுமாத்திரமன்றி வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இவ்வலையமைப்பு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் இணைத்து வைக்கும். இந்த இணைய முகப்பினூடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களினால் வழங்கப்படும் தகவல்கள் அவர்களின் தனியுரிமையை உறுதிசெய்யும் வகையில் பாதுகாக்கப்படுவதுடன், உரிய நபரின் அனுமதியின்றிப் பகிரப்படாது. இந்த இணையப்பக்கமானது, குறிப்பாக அவசரமான காலங்களில் விரைவான பதில்களை வழங்குவதற்காகவும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான தற்போதைய சேவை விநியோகத்தை உயர்வான மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் உதவும் என்று நம்புகின்றோம். வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் இதனூடாகப் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கின்றோம். https://www.virakesari.lk/article/78741
 2. ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்- நாட்டிற்குள் நுழையும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் - பிரதமர் அறிவிப்பு- வர்த்தகர்களை காப்பாற்ற புதிய திட்டம்- 1 அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் இரண்டு வாரங்களிற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் இந்த விதிமுறைகள் அமுலிற்கு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பும் அவுஸ்திரேலியர்களை கையாள்வதில் நாங்கள் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை இந்த நடவடிக்கைகள் குறைக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு திரும்பும் அனைவரும் ஹோட்டல்களில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மாநில அரசாங்கங்கள் இதனை அமுல்படுத்தவுள்ள, பாதுகாப்பு தரப்பினரினதும் காவல்துறையினரினதும் உதவி நாடப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் வீடுகளிற்குள் தங்கியிருந்ததன் மூலம் பல அவுஸ்திரேலியர்கள் பலரின் உயிர்களை காப்பாற்றியுள்ளனர்,வாழ்வாதாரத்தை காப்பாற்றியுள்ளனர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். தாஸ்மேனியாவில் வசிக்குமட் ஒருவர் மெல்பேர்ன் ஊடாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தால் அவர் மெல்பேர்னிலேயே தங்கியிருக்கவேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளார். 2 அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு பிரஜையும் ஒவ்வொரு நிமிடமும் சமூக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மேர்பி தெரிவித்துள்ளார். வீடுகளில் இருந்து பணியாற்றுங்கள்,தேவையென்றால் மாத்திரம் வெளியே செல்லுங்கள் வணிக வளாகத்திலேயே வாகனத்தரிப்பிடத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து நிற்காதீர்கள் சமூக தனிமைப்படுத்தல் கைசுத்தம் ஆகியவற்றை பயன்படுத்துங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய மக்களின் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆனால் சமூக விலக்களை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சமூகத்திற்குள் பரவுதல் குறித்தே நாங்கள் உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளோம் விதிமுறைகளை மீறுவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 3 அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை செயல்அற்ற நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் குறித்து அரசாஙகம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன கொரோனா வைரசின் பின்னர் மீண்டும் வர்த்தகங்கள் கடனின்றி மீள்வதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கையை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. வர்த்தக உரிமையாளர்கள் கடனால் பாதிக்கப்படாத நிலையை உறுதி செய்வதற்கான திட்டத்தினை அவுஸ்திரேலியா உருவாக்கி வருகின்றது வங்கிகள், நிதி வழங்குநர்கள், சொத்து உரிமையாளர்கள் அனைவரும் சிறிது காலத்திற்கு கடினமான நிலையை சகித்துக்கொள்ளுமாறு கேட்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன அடுத்த ஆறு மாதங்களிற்கு வாடகைகள் குத்தகைள் போன்றன தள்ளுபடி செய்யப்படவுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் இன்று அது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் வர்த்தக நடவடிக்கைகளை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் மக்களின் சுகாதார நோக்கங்களின் அடிப்படையிலும் பொதுமக்கள் மீதான தாக்கத்தை குறைக்கும் நோக்கத்துடனும் இதனை முன்னெடுக்க விரும்புகின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பொருளாதார அடிப்படையிலான தாக்கங்கள் குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார் 4 மேற்கு அவுஸ்திரேலியாவில் பெண்மணியொருவர் தனிமைப்படுத்தப்பட்டு;ளார் என மாநிலத்தின் தனிமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். 14 நாட்களின் பின்னர் அவர் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் எந்த சூழ்நிலையில் அவர் பாதிக்கப்பட்டார் என்ற விபரத்தினை அதிகாரி வெளியிடவில்லை. 5 அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டு;ள்ள அச்சநிலையை இணைய வழி மோசடிக்காரர்கள் பயன்படுத்துகின்றனர் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆபத்தான இணைப்புகளை அழுத்துமாறு மக்களை கேட்டுக்கொள்கின்ற போலி மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்கள் குறித்து அவுஸ்திரேலியாவின் சைபர் பாதுகாப்பு நிலையம் எச்சரித்துள்ளது. வந்திருக்கும் செய்தியை கவனமாக வாசியுங்கள், சரியானதாக தென்படாத எதனையும் உன்னிப்பாக அவதானியுங்கள் என சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/78728
 3. சர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.! குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர். குடாரப்பு தரையிறக்கச் சமர் ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது. சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம். தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும். மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர் புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான். வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள். அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர். தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர். முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான். சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர். பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு 26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள். குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து. ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர். பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது. தாக்குதலின் பின்னணி குடாரப்புத் தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள். குடாரப்புத் தரையிறக்க மோதல் – குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர். கண்டி வீதியில் நிலை கொள்ளல் – குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பளை ஆட்லெறித் தள உள்நுழைவு – கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர். தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர். இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர். காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/119474
 4. அரசாங்கம் + கொரோனா = மக்கள் -இலட்சுமணன் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், தேவையற்ற விதத்திலான மக்களின் நடமாட்டமும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் கைதுகளும் 2,000க்கும் மேற்பட்டு இருப்பதும் சட்டத்தை மீறியதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வாகனங்களின் எண்ணிக்கையும், இவற்றைவிட இச்சட்டத்துக்குள் சிக்காமல் தொடர்ந்து திரியும் வாகனங்களினதும் மக்களினதும் தொகைகள் இவற்றைவிட அதிகம். இச் செயற்பாடுகளும் அதற்கெதிரான இவர்களது செயற்பாடுகளும், இவர்களது அசண்டையீனத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் வெளிக்காட்டி நிற்கின்றன. இச்சட்டத்துக்கு மதிப்பளிப்பதுடன் கௌரவமாகவும் தம் உயிர்களைத் துச்சமென மதித்துச் செயற்படும் வைத்தியர்களினதும் வைத்தியசாலை ஊழியர்களினதும் பாதுகாப்புப் படையினரதும் பிரதேச, உள்ளூராட்சி, மாநகர சபை, பணியாளர்களினதும், வங்கிகளின் உத்தியோகத்தர்களினதும் சுகாதார சேவையினரதும் பணி பாராட்டுக்குரியதோடு, அவர்கள் தொடர்பாக இந்நாடும் மக்களும் மிகுந்த நன்றிக்கடன் பட்டவர்களாகவும் உள்ளனர். இத்தகைய நிலையில், அன்றாடம் உழைத்து வாழும் மக்களது நிலைமை தொடர்பாக, அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள், அவர்களைச் சென்றடைய காலதாமதமாவது, இம்மக்களை விரக்தி நிலைக்குக் கொண்டுசெல்லும் நிலைமை, பிரிதொரு விடயமாக மேல் கிளம்பியுள்ளது. இதன் காரணமாக, மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்துக்காக ஏங்கும் நிலை உருவாகி வருகிறது. தினக்கூலிகள், தமது ஜீவனோபாயம் தொடர்பாக அச்சமடைந்து உள்ளனர். கூட்டுறவுச் சங்கங்கள், சதோச நிறுவனங்கள் மூலம் நிவாரண உதவிகளை அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அவை பெரும்பான்மை சமூகத்தை அடைந்துள்ள அளவுக்கு, வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அடையவில்லை என்று கூறலாம். வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்களினதும் சதோச விற்பனை நிறுவனங்களினதும் தொகையும் இப்பிரதேசத்தில் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் தேவைகளைப் போதுமான அளவுக்குப் பூர்த்தி செய்யக் கூடியவையாக அமையவில்லை. மத்திய வர்க்கம், பாமர மக்கள் பரிதவிக்கும் போது, வசதி படைத்தோர் இரண்டு, மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்து வைத்துள்ளதுடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் ஒவ்வொரு பொழுதுகளிலும் பொருள்களை மிதமிஞ்சிய அளவுகளில் சேகரிக்கத் தலைப்படுகின்றனர். நாட்டின் ஒரு பகுதி, உணவுக்கு அல்லற்பட, இன்னொரு பகுதி உணவுகளையும் பொருள்களையும் மிதமிஞ்சிய அளவு களஞ்சியப்படுத்தி வைத்துள்ளது. இத்தகைய சூழலில், இப்பிரதேசங்களில் அத்தியாவசிய பொருள்களான பருப்பு, மீன்டின் போன்றவை பதுக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறம் சார்ந்த வியாபார நிலையங்களில் இப்பொருள்கள் கையிருப்பில் இல்லை என அறிவிக்கப்படும் வேளையில், கிராமங்களில் இருக்கும் சில்லறை வியாபார நிலையங்களில் இவை அதிக விலையில் விற்கப்படும் நிலை தொடர்கிறது. மஞ்சள், பெருங்காயம், தேங்காய், பருப்பு, டின் மீன்,வெள்ளைப்பூடு இவற்றின் கட்டுப்பாடு விலைகள் ஒருபுறமிருக்க, ஏற்றுமதி இன்றி இருக்கும் கடல் உணவுகளின் விலை அதிகரிப்பானது, என்றுமில்லாத அளவு காணப்படுகிறது. கடற்கரையில் 300 - 400 ரூபாய்க்கு ஒரு கிலோ இறால், மீன், கணவாய் போன்றவைகள் கொள்வனவு செய்யப்பட்டு, 1,200 - 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலைமையானது நுவரெலியா, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வவுனியா பிரதேசங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. மேலும், மரக்கறி வகைகளின் விலையும் மிக மோசமாக உயர்ந்துள்ளது. பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 200 ரூபாய்க்கும் சின்னவெங்காயம் 350 - 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் உருளைக்கிழங்கு 300 ரூபாய்க்கும் 350 ரூபாவுக்கும் ஏனைய மரக்கறிகள் 500 - 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்ற சூழ்நிலையானது, அதிக அளவில் மட்டக்களப்பு பிரதேசத்தில் மேலோங்கிக் காணப்படுகிறது. நிலைமைகள் இவ்வாறிருக்க, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளையில், பணத்தை எடுப்பதற்காக வங்கிக்குச் செல்வோர், பணத்தை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பதும் பொருள்களைக் கொள்வனவு செய்யமுடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சம்பவங்களும் ஏராளமாக நடந்தேறி வருகின்றன. அந்த வேளையில் வியாபார நிலையங்களில் பொருள் கொள்வனவு தொடர்பான நெரிசலும் பொருள்களை வழங்க முடியாமல் திண்டாடிய வர்த்தக நிலையங்களின் நிலைமைகளும் அதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் எடுத்த முயற்சிகளும் சொல்லில் அடங்காதவை. இத்தகைய நிலைவரங்கள், எந்த நோக்கத்துக்காக அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதோ, அந்த நோக்கத்தைச் சிதைப்பதாகவே ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தும் போது, நிகழும் சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. மக்களின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், அந்த உத்தரவு தளர்த்தப்பட்டதும் அந்த நோக்கம் சிதைவுறும் வகையில், நடந்துகொள்வது, ஊரடங்குச் சட்டத்தின் கால அளவை நீடித்துச் செல்வதற்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, 10 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பின்னும், பாதுகாப்பான வர்த்தக பரிமாற்றங்கள் செய்யப்படாத இடத்தில், மிக வீரியத்துடனும் முழுவீச்சுடன் பரவும் சந்தர்ப்பத்தைத் திட்டமிடப்படாத செயற்பாடுகள் ஏற்படுத்தி விடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இயல்பு வாழ்க்கை, மக்களின் பாதுகாப்பு தொடர்பாகச் சீர்குலைந்து உள்ள வேளையில், இயல்பு வாழ்க்கைக்குத் திறந்து விடும் போது, மக்கள் ஆர்வத்துடன் உணவு தேடி முண்டியடிக்கும் நிலைமை அபாயமானது. இவ்வாறானதொரு நிலைமையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் பட்ட வேளையில், முகக்கவசம், கையுறை இன்றி வந்தவர்களை, இராணுவம், பொலிஸார் தடுத்து நிறுத்தி, அவற்றை அணியும்படி பணித்த பொழுது, முரண்பட்ட மக்களையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், பல்வேறு விழிப்புணர்வு செயற்பாட்டாளர்கள், இப்பணியைத் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் கையுறைகள் முகக் கவசங்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கியும் வழிப்படுத்தினர். கிழக்கில் மாநகர சபைகள், நகரசபை முகக் கவசங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதே போலவே, வேறு பிரதேசங்களின் சபைகளும் இவ் வேலைத் திட்டத்தை முன்னெடுத்திருந்தன. இத்தகைய சூழலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசங்களை மய்யமாகக் கொண்டு, முகக் கவசங்களையும் அறிவுரைகளையும் இப்பிரதேச பொதுச் சந்தைக்கு சென்றவர்களுக்கு கோவிந்தன் கருணாகரன் தலைமையில் வழங்கியதோடு, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் அங்கு வைத்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்த வேளையில், தமிழ் அரசியல் தரப்புகள் இவ்விடங்களில் மௌனம் சாதிப்பது தொடர்பாக, மக்கள் விசனம் தெரிவிப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம், இடைத் தேர்தல் பிரச்சாரமாக மக்கள்கருதி விடுவார்கள் என்ற அச்ச உணர்வும் காரணமாக இருக்கலாம். ஆயினும், மனிதாபிமான அடிப்படையில் தமிழ்த் தலைவர்கள் இப்பணியைப் பிரதேசங்களில் முன்னெடுக்கத் தவறுவது அவ்வளவு ஆரோக்கியமான செயற்பாடாகத் தெரியவில்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலில் கட்டுண்ட மக்களை இந்த ஆபத்தில் இருந்து மீட்டெடுக்க முறையான செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு ஒத்துழைப்பு, தனியாக முன்னெடுக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளதாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். எனவே, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதை விட, ஊரடங்கு இருக்கும் வேளையில், இது அத்தியாவசிய பொருள்களைக் குறித்த கிராமசேவகர் பிரிவுகளில் நன்கு திட்டமிட்ட வகையில் ஒரு கிராம சேவகர் பிரிவு குறைந்தது நான்கு வியாபாரத் தொகுதிகளை உருவாக்கி, அந்தந்தக் கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அங்கத்தவர்களில் ஒருவர் பொருள் கொள்வனவில் நாளைக்கு ஒரு தடவை அல்லது இருதடவைகள் வரையறுக்கப்பட்ட ஒரு நிலையத்துக்குக் குறித்த நேரத்துக்குள் செல்வதன் மூலம், ஒரு கிராம சேவகர் பிரிவில் ஆயிரத்து 500 குடும்பங்கள் இருப்பதாகக் கொண்டால், நான்கு தொகுதிகளாக ஏற்பாடு செய்யப்பட்டு வியாபாரத்தளங்களுக்குச் சென்று, கொள்வனவு செய்வது சிறந்ததாக இருக்கும். அவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் கூட, பரிசோதிக்க 300 குடும்பங்கள் 300 பேர் கொள்வனவில் பாதுகாப்பாக ஈடுபட முடியும். இதன் மூலம் வீடு வீடாகச் சென்று வழங்கும் எரிபொருள் விரையம் தடுக்கப்படுவதுடன் கொரோனா வைரஸ் தாக்கத்தையும் தடுக்க முடியும். எனவே, ஒரு தினத்துக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு என்ற அடிப்படையில், சுழற்சி முறையில் இந்தத் தற்காலிக அத்தியாவசிய செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம், மக்கள் ஒன்று கூடுவதையும் குறைக்கலாம். இதன்மூலம் மக்களுக்கு முறையாக அத்தியாவசிய சேவை சென்றடையும் என்பதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வியாபாரிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள், பாதுகாப்பு படை எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த முடியும். இதுவே, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கொண்டுள்ள அச்சத்துக்கும் ஆபத்துக்கும் ஓரளவுக்கு முடிவுகளைத் தேடித்தரும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசாங்கம்-கொரோனா-மக்கள்/91-247485
 5. ஊர்கூடித் தேரிழுப்போம் கொரோனா வைரஸ் அச்சம், இலங்கையெங்கும் பரவியுள்ளது. அச்சத்துக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில், உண்மை குறைவாகவும் பொய் அதிகமாகவும் உள்ளன. எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதைப் பிரித்தறியும் வாய்பற்ற நிலையே தொடருகிறது. ஏராளமான தவறான தகவல்கள் குறிப்பாக, எமது அலைபேசிகளை நிறைக்கின்றன. இவை, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்குகின்றன. முதலாவது, கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்தும் தொற்றுக்கான தீர்வு குறித்தும் பரப்பப்படும் செய்திகள், அறிவியலுக்கு முரணாக இருக்கின்றன. இவ்வாறான தீர்வுகளை மக்கள் பின்பற்றுமிடத்து, ஏற்படும் தீமைகள் அதிகம். எனவே, இவை சமூகத்தில் ஏற்படுத்தவுள்ள பாதிப்புகளின் தீவிரத்தை, நாம் அனுமானிக்க இயலாது. இரண்டாவது, தொடர்ந்து சொல்லப்படும் செய்திகளும் அச்சமூட்டல்களும், மக்கள் மத்தியில் ஒருவித பயத்தையும் நிச்சயமின்மையையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், இந்தச் செய்திகளைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது, ஒருவகையான கையறுநிலையைத் தோற்றுவிக்கும்; மனஅழுத்தத்துக்கு வழி செய்யும். சமூக வலைத்தளங்களில் பலர், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையை, கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகள் சரிவது போல, சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிகமான ஆள்கள் பாதிக்கப்படுவது, எதிரணி விக்கெட்டுகள் சரிவது போன்ற ஒரு மனப்போக்கை, இங்கு காணமுடிகிறது; இது வருந்தத்தக்கது. இன்னும் சிலர், தொடர்ச்சியாக, அவநம்பிக்கையை ஏற்படுத்தும் பதிவுகளைப் பதிவேற்றுகிறார்கள். நெருக்கடியான நேரங்களில்தான், மனிதர்களின் குரூரமுகம் வெளித்தெரிகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சில ஊடகங்கள், இதைத் தங்களை விளம்பரப்படுத்துவதற்கான களமாகப் பயன்படுத்துகின்றன. ‘ஒரு குடும்பத்துக்கு உதவுவோம்’ என்று தொடங்குகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில், மிகச்சாதாரணமாக மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுகிறார்கள்; கைகொடுக்கிறார்கள். இது இலங்கையர் அனைவரும் எப்போதுமே பெருமைப்படும் ஒரு அம்சம். இதைத் தாங்கள் தான் முன்னெடுத்தோம் என்று, உரிமை கோரும் கேவலமான விளம்பர உத்தியை என்னவென்னது. இந்தக் கேவலத்தின் உச்சம் என்னவென்றால், இதை அவர்கள் ‘புரட்சி’ என்று விளிக்கிறார்கள். அனைத்தையும் சினிமாவுக்குள் பார்த்துப் பழகிப்போனவர்களுக்கு, எல்லாம் புரட்சியாகவே தெரிகிறது. இன்று தேவைப்படுவது, அரசாங்கம் தனது கடமையைச் சரிவரச் செய்வதும், இலங்கையர்கள் சகோதரத்துவத்துடன் செயற்படுவதுமே ஆகும். இதையே நாம் இன்று வலியுறுத்த வேண்டியுள்ளது. இலங்கையர்கள் அனைவரதும் நலன்களைக் காக்க வேண்டியதும் உறுதிப்படுத்த வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையாகும். நாட்டில் உள்ள எளிய மக்களை, பொருளாதார ரீதியாக நிர்க்கதியாகி உள்ளவர்களைக் காக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உரியது. அதை நாம் அனைவரும் வலியுறுத்த வேண்டும். சாதாரண உழைக்கும் மக்கள் இப்போது நடைமுறையில் உள்ள ஊடரங்கால் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்கள். அதற்கான நிவாரணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். இதேவேளை, இன்று இந்த நோய்த்தொற்றைத் தடுப்பதில் முன்னணியில் நிற்கும் மருத்துவப் பணியாளர்களின் நலன்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மக்கள் வீடுகளில் இருப்பது, எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பும், உடல்,உள நலனும் பாதுகாக்கப்படுவதும் அவர்களது நலன்கள் பேணப்படுவதும் ஆகும். இதற்கு நாம் எல்லோரும் இணைந்து குரல் கொடுத்தாக வேண்டும். ஊடரங்கு தளர்த்தப்பட்ட வேளை, மக்கள் வரிசையில் நின்ற காட்சி கவலையானது. பலர் மணிக்கணக்காக கால்கடுக்க நின்றும் பலன் கிடைக்கவில்லை. பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றாக வேண்டும். தூரநோக்கிலான ஒரு திட்டம் தேவைப்படுகிறது. இந்த நிமிடம் வரை, அது அரசாங்கத்திடம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நாங்கள், இதைத் தாண்டி வந்தாக வேண்டும். இதைத் தனியே செய்ய இயலாது என்ற உண்மையும் நமக்கு விளங்க வேண்டும். இந்த நெருக்கடி நேரத்தில், நாம் இணைந்து பணியாற்றுவதும் சகோதரத்துவத்தை வளர்ப்பதும் அவசியமானது. அதுவே இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழியாகும். அதேவேளை, கொரோனா வைரஸை முன்னிறுத்தி, அரச இயந்திரம் மெதுமெதுவாக இராணுவமயமாகும் அபாயத்தையும் நாம் எதிர்நோக்கி உள்ளோம் என்பதை எச்சரிக்கை உணர்வுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. மக்கள் வேண்டி நிற்பது, பற்றிப் படர்வதற்கு நம்பிக்கை என்ற கொடியைத் தான். அதை நாம் செய்வோம்; ஊர்கூடித் தேரிழுத்தால், முடியாதது ஏதுமில்லை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஊர்கூடித்-தேரிழுப்போம்/91-247488
 6. கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 மார்ச் 26 இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை. இன்று ஏதாவதொரு வழியில், தீர்வுகளை நோக்கியே எல்லா அரசாங்கங்களும் ஓடுகின்றன. உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும் நோய்த்தொற்றைக் குறைப்பதுமே பிரதான நோக்காக உள்ளன. பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள், நடைமுறையில் உள்ள விதிகளை, உலக ஒழுங்கைக் காப்பாற்றுங்கள் போன்ற கோரிக்கைகள் எல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகப் போயுள்ளன. கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வுகளுக்கான வழி, பல வகைகளில் சோசலிசம் நோக்கிய திருப்பமாகவே இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்வதற்கு, முதலாளித்துவத்தின் செல்வச்செருக்கில் ஊறித் திளைத்தவர்கள், தயாராக இல்லை. அவர்கள், சோசலிச வன்மத்தை, ஊடகங்களிலும் சமூக ஊடகப் பொதுவெளிகளிலும் கக்குகிறார்கள். எனவே, இது குறித்துக் கொஞ்சம் சொல்லியாக வேண்டியுள்ளது. பாஞ்சாலியின் அழைப்புக்குக் கிருஷ்ணன் வந்தது போல, 2009இல் அமெரிக்கா வரும் என்று, எழுதியும் சொல்லியும் அவலத்துக்குள் தள்ளியோர் நிறைந்த சமூகத்திலேயே, நாம் வாழ்கிறோம் என்பதைத் துயரத்துடனும் எரிச்சலுடனும் நினைவூட்ட வேண்டியுள்ளது. அவலமும் நிச்சயமின்மையும் அச்சமும் நிலைகொண்டுள்ள இந்தக் காலத்தில், எமக்குத் தேவையானது நம்பிக்கையூட்டும் கதைகள் மட்டுமேயாகும். இத்தாலிக்கு உதவ வந்த கியூபா இந்த நோய்த்தொற்றால், அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நாடு இத்தாலி ஆகும். இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கியவுடனேயே, ஐரோப்பிய ஒன்றியத்திடமும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிடமும் உதவிகளை, இத்தாலி கேட்டது. ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை. ஏனைய நாடுகள், ஓரளவு உதவிகளை இத்தாலிக்குச் செய்திருந்தால், இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்க முடியும் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஏராளமான மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும், இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்களும் மருத்துவர்களும் இல்லாமல், இத்தாலி மிக மோசமான நிலையில் இருக்கிறது. இந்நிலையிலேயே, மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியின் லொம்பாடி நகருக்கு, 50க்கும் மேற்பட்ட கியூப மருத்துவர்களும் ஏனைய மருத்துவப் பணியாளர்களும், இந்தவாரம் வருகை தந்துள்ளனர். அவர்களை, விமானநிலையத்தில் எழுந்து நின்று, இத்தாலியர்கள் வரவேற்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக, இத்தாலிக்குக் கைகொடுத்துள்ள நாடு கியூபா ஆகும். இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ள மருத்துவக் குழுவானது, கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்காக, கியூபாவிலிருந்து அனுப்பப்பட்ட, ஆறாவது மருத்துவக் குழுவாகும். ஏற்கெனவே வெனிசுவேலா, நிக்கரகுவா, ஜெமேக்கா, சுரினாம், கிரனடா ஆகிய நாடுகளுக்கு, கியூப மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. கியூப மருத்துவர்களை, இத்தாலி வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளமை, பலவழிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் முதன்மையான முதலாளித்துவ நாடுகளில் ஒன்று, கரீபியக் குட்டி நாடொன்றிடம் உதவியை நாடி நின்றமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியமையாகும். அதுவும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு, கடந்த 60 ஆண்டுகளாக உட்பட்ட ஒரு நாடு, இன்று உதவிக்கரம் நீட்டுகிறது. அமெரிக்காவால் முடியாததை, ஐரோப்பாவால் முடியாததை, கியூபா செய்து காட்டுகிறது. கியூபாவின் மனிதாபிமானமும் மருத்துவமும் மார்ச் மாதம் 12ஆம் திகதி, பிரித்தானியாவுக்குச் சொந்தமான சொகுசுக் கப்பல் ஒன்றில் இருந்த 50 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கப்பலை ஒரு நாட்டின் துறைமுகத்தில் நிறுத்தி, பயணிகளை மீள அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கப்பல் இருந்த இடத்துக்கு அண்மையில் இருந்த நாடு பஹாமாஸ். எனவே, அங்கு நங்கூரமிட அனுமதி கோரப்பட்டது. பிரித்தானியர்களைப் பிரதானமாகக் கொண்ட பிரித்தானியக் கப்பலை, பிரித்தானிய முடியின் கீழ் உள்ள நாடான பஹாமாஸ் அனுமதிக்க மறுத்துவிட்டது. பிரித்தானிய வெளியுறவுத் துறையின் கடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரித்தானிய அரசியின் ஆட்சியின் கீழ் உள்ள பஹாமாஸின் நிலைப்பாடு, பிரித்தானியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 1,063 பேருடன் (682 பயணிகளும் 381 பணியாளர்களும்) செல்வதற்கு இடமின்றி, கடலில் இக்கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்நிலையிலேயே, மார்ச் 18ஆம் திகதி, கியூபா, இக்கப்பலைத் தனது துறைமுகத்தில் நங்கூரமிடவும், பயணிகளை நாட்டுக்குள் ஏற்கவும் உடன்பட்டது. இதையடுத்து, கப்பல் நங்கூரமிடப்பட்ட போது பயணிகள், ‘நன்றி கியூபா! உங்களை, நாங்கள் விரும்புகிறோம்’ என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். பயணிகள் இறக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர், பிரித்தானியாவுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த அனுபவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பயணி ஒருவர்; “எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. கையறு நிலையின் உச்சத்தை, நாம் உணர்ந்தோம். இங்கேயே நோய்த்தொற்றுக்கு உள்ளாகிப் பலியாகிவிடுவோமோ என்று அஞ்சினோம். கியூபா நீட்டிய உதவிக்கரமே, எங்களை இன்று உயிருடன் வைத்துள்ளது. கியூப மக்கள், வெறுப்புடன் எங்களை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். மாறாக, அன்புடன் எங்களை வரவேற்றார்கள். ஓர் ஏழ்மை நாடு, தங்கள் இதயத்தை எங்களுக்காகத் திறந்ததை, மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். பிரேஸில் நாட்டில், வறுமைக்கு உட்பட்ட பகுதிகளில், மனிதாபிமான மருத்துவத்தின் ஒரு பகுதியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த 8,000 கியூப மருத்துவர்களை, கடந்தாண்டு பிரேஸிலில் பதவிக்கு வந்த புதிய வலதுசாரி ஜனாதிபதி பொல்சனாரோ, திருப்பி அனுப்பினார். அதேபோல, பொலிவியாவில் சதியின் மூலம் கடந்தாண்டு, ஜனாதிபதி ஈவோ மொராலஸ் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றிய 700 கியூப மருத்துவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இன்று, பிரேஸில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. எந்த மருத்துவர்களை, பிரேஸில் ஜனாதிபதி திருப்பி அனுப்பினாரோ, அவர்களை மீளவும் பிரேஸிலுக்கு வந்து, அப்பாவி மக்களுக்காகப் பணியாற்றும்படி, கடந்த வாரம் வேண்டிக் கொண்டார். இப்போதைய கியூபாவின் இன்னொரு பேசுபொருள் Interferon Alpha 2B என்ற கியூப மருந்தாகும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு, மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், குறித்த மருந்தானது சீனாவில் தொற்றுக்குள்ளான நோயாளிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளில் ஒன்றாகும். சீனாவின் தேசிய உடல்நல ஆணைக்குழுவால் (Chinese National Heath Commission) பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளாக இருக்கக்கூடும் என, உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்கும் நான்கு மருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இது, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான, முற்றும் முழுமையான மருந்து அல்ல! இன்றுவரை, அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த மருந்து வினைத்திறனுடன் செயலாற்றுகிறது என்பதை, உலக சுகாதார நிறுவனம் ஒத்துக் கொள்கிறது. அதனாலேயே இம்மருந்தை அது பரிசீலித்துள்ளது. கொரோனா வைரஸுக்கான மருந்து உற்பத்தி என்பது, பலகோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள ஒரு வியாபாரம் ஆகும். மருந்து உற்பத்திக் கம்பெனிகள், தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று, இதற்காகவே முண்டியடிக்கின்றன. கடந்தவாரம், இதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஜேர்மன் நிறுவனம் அறிவித்ததையடுத்து, அந்த மருந்தைப் பெருந்தொகை பணத்துக்கு ‘அமெரிக்காவுக்கு மட்டும்’ என, பிரத்தியேகமாக விற்பனை செய்வதற்கு, அமெரிக்க ஜனாதிபதி கோரிய செய்தி வெளியானது. இது, ஜேர்மனியில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்தது. கியூபாவின் மருத்துவ உதவிகள் புதிதல்ல. குறிப்பாக, 2014ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடுகள், ‘எபோலா’ வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியபோது, கியூபா தனது மருத்துவப் பணியாளர்களை அனுப்பி, ஆபிரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தியது. கியூபாவின் இந்தச் செயல், ‘எபோலா’ வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவி, பெரும் தாக்கமாக உருமாறாமல் காப்பாற்றியது. இதற்காக, கியூபாவுக்கு ஐ.நா நன்றி சொன்னது. அமெரிக்காவின் தீவிர வலதுசாரி சோசலிச எதிர்ப்பு இதழான, ‘ரைம்’ - 2014 நவம்பர் மாத இதழில், ‘Why Cuba Is So Good at Fighting Ebola’ என்ற தலைப்பில், கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரை இவ்வாறு நிறைவு பெறுகிறது: ‘கியூபாவின் முன்மாதிரி, சர்வதேச சமூகத்துக்கு வலுவான செய்தி ஒன்றைச் சொல்கிறது. மிக எளிமையான மக்களே, உலகளாவிய மக்கள் நலனுக்கு, வினைத்திறனுடன் கூடியதும் நின்றுநிலைக்கக் கூடியதுமான பங்களிப்பைச் செய்கிறார்கள். ஏனையோர் நோய்கள், தொற்றுகள் வரும்போது, தயாரில்லாமல் திணறிப் போகிறார்கள். உலகளாவிய மருத்துவமும் திட்டமிடலும் முன்நோக்கிய பார்வை கொண்டதாகவும், மருத்துவம் சுகாதார அமைப்புகளை வலுவாக்கியதாக இருத்தல் வேண்டும் என்பதாக, கியூபா சொல்லும் பாடம் அமைந்துள்ளது. பேரிடர்கள் வரும்போது, விழித்து எழுவதாக அமையக்கூடாது’ என்பதாகும். கியூபா, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்குப் அப்பாற்பட்ட நாடல்ல. ஆனால், ஏனைய உலகநாடுகள் ஆபத்தில் இருக்கும் போது, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யத் தயங்கவில்லை. இன்று உலகளாவிய ரீதியில், 90,000 கியூப மருத்துவர்கள் உலகின் 107 நாடுகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள், உலகின் மிக எளிய மக்களின் மருத்துவ உடல்நலன் சார் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். கியூப மருத்துவர்களினதும் மருத்துவப் பணியாளர்களினதும் உதவிகளை வேண்டி நிற்பது, உலகின் எளிய உழைக்கும் மக்களேயாவர். விரைவுணவுகளைத் தின்று, செரித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அயோக்கியர்களுக்கு, இதன் பெறுமதி விளங்காது. நாளை, அவர்களது உயிரைக் காக்கவும் கூட, ஒரு கியூப மருத்துவரோ, கியூப மருந்தோ தேவைப்பட்டால், அதை முதலில் பெற்று, உயிரைக் காக்க முண்டியடிப்பதும் இந்த அயோக்கியர்களே ஆவர். 1967ஆம் ஆண்டு, பொலிவியாவில், சேகுவேராவைச் சுட்டுக் கொன்ற மரியோ தெரோன், கண்பார்வை இழந்து துன்பப்படுகையில், 2007ஆம் ஆண்டு, பொலிவியாவில் தங்களது கண் சிகிக்சை முகாமில், தெரோனுக்கு சத்திரசிகிக்சை செய்து, அவருக்குக் கண்பார்வையை மீள அளித்தவர்கள் கியூப மருத்துவர்கள் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19-கியூபா-கைகொடுக்கும்-பொழுதுகள்/91-247487
 7. கொரோனா – தொட்டுவிடும் தூரத்தில் மரணம் - யதீந்திரா கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மனிதரின் வாழ்வு நிர்மூலமாகவிடலாம் என்னும் ஒரு துயரநிலை தோன்றியிருக்கின்றது. மனிதர்களின் வாழ்வு இவ்வளவுதனா என்னும் கேள்விதான் ஒவ்வொருரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு வளம்நிறைந்த நாடு – இத்தாலி – செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றது. எல்லா இடங்களிலும் மரண ஓலம். கடவுள் மீதான மனித நம்பிக்கை அவர்களின் கண் முன்னாலேயே சிதைந்து கொண்டிருக்கின்றது. கடவுளின் இடங்களுக்கே செல்வது பாதுகாப்பில்லை என்னும் போது, இதுவரை அந்த இடங்கள் தொடர்பில் மனிதர்களுக்கு இருந்த நம்பிக்கையின் அர்த்தம் என்ன என்னும் கேள்வி எழலாம். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 24000தை தாண்டிவிட்டது. வரலாற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் யுவா நுவால் ஹராரியின் வார்த்தையில் கூறுவதானால் கடந்த ஒரு நூற்றாண்டில் மனித குலம் கண்ட மிகவும் மோசமான நோய்த் தொற்று என்று இதனைக் கூறலாம். மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேச முடியாது. ஒருவர் மற்றவரை தொட்டுப் பேச முடியாது. ஒருவருக்கு மற்றவர் கைலாகு கொடுக்க முடியாது. ஒருவர் தொட்ட உணவை மற்றவர் உண்ண முடியாது. மொத்தத்தில் ஒவ்வொருவரும் மற்றவர்களை சந்தேகத்துடனும் அச்சத்துடனும் பார்க்கும் நிலைமை. கடந்த ஒரு நூற்றாண்டில் இது போன்றதொரு அவலம் ஒரு போதும் நிகழ்ந்ததில்லை. 2ம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் முழு ஜரோப்பாவும் முதல் முதலாக முடங்கியிருக்கின்றது. ஒரு விடயம் நமக்கு புதிதாக அறிமுகம் ஆகின்ற போதுதான், இதற்கு முன்னர் உலகில் என்ன நிகழ்ந்தது? இது போன்ற நிலைமையை உலகம் இதற்கு முன்னர் எதிர்கொள்ளவில்லையா – என்னும் கேள்விகள் தலை நீட்டுகின்றன! காலத்திற்கு காலம் இது போன்ற வைரஸ்கள் மனித குலத்தை அழித்திருக்கின்றது. அதிலிருந்து தப்பி, எஞ்சியவர்கள்தான், இப்போதைய மனித குலம். 14ம் நூற்றாண்டில் கறுப்பு மரணம் (Black Death) அல்லது கிறேட் பிளேக் என்னும் நோய்த் தொற்றினால் 75 தொடக்கம் – 200 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் பத்திற்கு நால்வர் என்னும் அடிப்படையில் உயிரிழந்தனர். ஜரோப்பாவில் 30 தொடக்கம் 60 விகிதமான மக்கள் இறந்துபோயினர். 1520ல் சின்னம்மை தொற்றினால் மத்திய அமெரிக்கப் பகுயிலுள்ள மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இறந்துபோயினர். 1918இல் புளு வைரஸ் தொற்றினால் ஒரு வருடத்தில், ஏறத்தாள 100 மில்லியன் மக்கள் இறந்துபோயினர். இந்திய மொத்த சனத் தெகையில் 5 விகிதமான மக்கள் இறந்தனர். மீண்டும் 1967இல் சின்னம்மை தொற்றினால் 15 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் 20 மில்லியன் மக்கள் இறந்தனர். இறுதியில் தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக சின்னம்மை நோயை மருத்துவ ஆராய்ச்சி முற்றிலுமாக தோற்கடித்தது. 2002இல் சீனாவின் பொசான் நகரத்தில் சார்ஸ் என்னும் புதிய வகை வைரஸ் தொற்று பதிவானது. தற்போது வூகான் மானிலத்தில் அடையாளம் காணப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ்சிற்கும் சார்ஸ் வைரசிற்கும் ஒத்த தன்மைகள் இருக்கின்றனவா என்றவாறான ஆய்வுகளும் நடைபெறுகின்றன. 2014ல் மீண்டும் உலகம் எபோலா என்னும் புதிய வைரஸ் தொற்றால் அச்சுறுத்தப்பட்டது. இப்படி பல வகையான வைரஸ் தொற்றுக்களால் மனித குலம் காலத்திற்கு காலம் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றின் தொடர்ச்சியாக வந்திருப்பதுதான் கொரோனா. ஆனாலும் முன்னரைப் போன்றில்லாமல் முழு உலகத்தையும் புதிய வகையில் இந்த வைரஸ் தொற்று அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. இன்றுவரை இதன் தாக்கம் குறையவில்லை. இலங்கையைப் பொறுத்தவரைல் இது ஒரு புதிய சவால். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இலங்கையில் எவருமே உயிரிழக்கவில்லை. இதுவரை 102இற்கு மேம்பட்டவர்கள் கொரோனா தொற்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர் தாயகப் பகுதியை பொறுத்தவரையில் இதுவரை இரண்டு பேர்தான் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கில் ஒருவர் கிழக்கில் ஒருவர். இது ஒரு ஆறுதலான செய்தி. சிறிலங்கா அரசாங்கம் கொரோனா தொற்றை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடு;த்து வருகின்றது. இதன் மூலம் இந்த தொற்று வேகமாக பரவுவது பெருமளவு கட்டுப்படுப்பப்பட்டிருக்கின்றது என்பது உண்மைதான். உலகில் தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா இங்கிலாந்து. பிரான்ஸ் ஜேர்மனி போன்ற நாடுகளிலேயே, இந்த வைரஸ் தொற்று பெரும் நெருக்கடியாக மாறியிருக்கின்றது. இதுவரை வெளியான தகவல்களின்படி இந்த வைரஸ் தொற்றை மருத்துவ ரீதியில் கட்டுப்படுத்தக் கூடிய எந்தவொரு ஏற்பாடும் இல்லை. சமூக இடைவெளியை அதிகரிப்பதன் ஊடாகவே இந்தத் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்னும் நிலைமையை காணப்படுகின்றது. இந்த பின்புலத்தில்தான் சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பத்திலேயே பாடசாலைகளை முடியது. அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களை முடக்கியது. இறுதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவன் ஊடாக, மக்களை வீடுகளுக்குள் முடக்கியது. இந்த முறைமைகள் அனைத்தும் உலகின் பல பாகங்களிலும் தற்போது நiமுறையில் இருக்கின்ற முறைகள்தான். இதனைத் தவிர இந்த வைரஸ் தொற்றை தடுப்பதற்கு வேறு வழிமுறைகள் இல்லை. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், அரசாங்கம் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் பொது மக்கள் ஒத்துழைக்காது விட்டால், இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. அரசாங்கமும் மக்களும் ஒரு நேர் கோட்டில் பயணித்தால்தான் இந்த தொற்றிலிருந்து தற்காலிகமாக தப்ப முடியும். இதிலிருந்து நிரந்தரமாக தப்புவது என்பது, இதற்கான மருத்துவ வெற்றியினால் மட்டுமே சாத்தியப்படும். அதுவரை ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் இந்த விடயங்களை பார்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. எனெனில் இது மனிதர்கள் அனைவரதும் பிரச்சினை. சிறிலங்காவல் ஏற்கனவே புராயோடிப்போயுள்ள இன பாகுபாடுகளின் வழியாக இந்தப் பிரச்சினைகளை பார்கலாமா? இன்றைய நிலைமையில், சிறிலங்காவில் எவர் பாதிக்கப்பட்டாலும், அது இந்த அனைத்து மக்களுக்கான பாதிப்பு என்னும் பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் இந்த விடயத்தை நோக்க வேண்டும். சீனாவில் வூகான் என்னும் பெயரில் ஒரு மாகாணம் இருப்பது நேற்றுவரை எவருக்கும் தெரியாது. ஆனால் இன்று உலகின் அனைத்து பகுதிகளுக்கும் தெரிந்துவிட்டது. ஒரு வைரஸ் அதனை தெரியப்படுத்திவிட்டது. உலகில் ஏதோவொரு மூலையில், ஒரு இறைச்சி சந்தையில் ஏற்படும் கிருமி வெடிப்பானது, உலகு முழுவதையும் பாதிக்கக் கூடிய என்னும் உண்மை, இப்போது நம் கண் முன்னாலிருக்கின்றது. உலகில் எங்கோ நிகழுகின்ற விடயங்கள் ஒவ்வொன்றும், உலகின் இன்னொரு கோடியை தாக்கக் கூடியதாக இருக்கின்ற போது, தெற்கில், வடக்கில், கிழக்கில் ஒவ்வொருவரும் பாதிக்கப்படும் போது, அது நம் அனைவருக்குமான பாதிப்பாகும். இந்தப் புரிதலோடும், சிரத்தையோடும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், புத்திஜீவிகளும் மதத் தலைவர்களும் இந்த விடயத்தை நோக்க வேண்டும். இது நம் அவைருக்குமான பிரச்சினை என்னும் புரிதலோடு இந்த விடயத்தை அணுகினால் இதனை விரைவில் மக்களாக வெல்ல முடியும். இதனை இன்னொரு வகையில் சொல்வதானால், இது நமக்கு பழக்கமான இன அரசியலை கடந்து சிந்திக்க வேண்டிய தருணம். தற்போதைய நிலையில் உலகளவில் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்துவதற்கு ஒரேயொரு வழிமுறைதான் இருக்கின்றது. அதாவது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதற்கான சமூக இடைவெளியை (social distance ) கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. இதன் பொருள் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பது என்பதல்ல. மனிதர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்களை குறைப்பதும் தேவைப்பட்டால் இல்லாமல்லாக்குவதன் மூலம் நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம் என்னும் அடிப்படயில்தான் இந்த சமூக இடைவெளி என்னும் கருத்து பிரயோகிக்கப்படுகின்றது. மக்கள் மேலும் மேலும் ஒன்றிணைந்து செயலாற்றுதன் ஊடாகத்தான் ஒட்டுமொத்த மக்களுக்கான பிரச்சினையை, அனைவருமாக ஒன்றிணைந்து வெல்ல முடியும். இந்தக் கட்டுரை ஒரு நோய்த் தொற்றை தடுத்து, நம் அனைவரையும் காப்பாற்றுவதற்கான பொறிமுறை என்னும் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்கின்றது. வழமையான அரசியல் புரிதலால்; இந்தக் கட்டுரையை அணுகினால் அது தவறாகும். இந்தக் கட்டுரையாளளின் அரசியல் நிலப்பாடுகள் வேறானது. http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-தொட்டுவிடும்-தூ/
 8. கொரோனா வைரஸ்: இளம் வயதினருக்கு இருக்கும் ஆபத்துகள் என்ன? Getty Images நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "கொரோனா வைரஸ் வயதானவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களை மட்டும்தான் தாக்கும் என்றில்லை" என பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் எம்.பி-யும் மருத்துவருமான டாக்டர் ரோசேனா அல்லின்-கான் பிபிசியிடம் தெரிவித்தார். பிரிட்டனில் இந்த வைரஸ் தொற்றால் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 30 மற்றும் 40 வயதுகளில் நல்ல உடல்நிலையில் இருக்கும் சில நோயாளிகளுக்கு தாம் சிகிச்சை அளித்ததாகவும், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருவதாகவும் அல்லின்-கான் குறிப்பிட்டார். வெவ்வேறு வயதினரிடையே இருக்கும் ஆபத்துகள் என்ன? Getty Images ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால் வயதானவர்களுக்குதான் இந்த வைரஸ் தொற்றால் ஆபத்து அதிகம். ஒருவரது வயது மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட இருக்கும் வாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பை லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். வயதானவர்களே அதிகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அவசியமாகிறது என்பது அதில் தெரிய வந்தது. 50 வயதிற்குட்பட்டவர்களில் 5%க்கும் குறைவானவர்களே கொரோனா வைரஸ் அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், 70-79 வயதுடையவர்களுக்கு இது 24 சதவீதமாக இருக்கிறது. 40 வயதிற்கு உட்பட்டவர்களில் வெறும் 5 சதவீதத்தினருக்கே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவைப்பட்டது. 60களில் இருப்பவர்களுக்கு இது 27 சதவீதமாகவும், 70களில் இருப்பவர்களுக்கு 43 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது. கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம் Pandemic என்றால் என்ன? கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? முறையாக கை கழுவுதல் எப்படி? கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும் இதுவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 71 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டது. வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சீனா மற்றும் இத்தாலி நாடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இது கணக்கிடப்பட்டது. இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டோரின் சராசரி வயது 63 என ஓர் ஆய்வு கூறுகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 சதவீதம் பேர் 55 வயதிற்கு மேல் ஆனவர்கள் என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆரம்பக்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லது இந்த வைரஸ் தொற்றால் இறந்தவர்களை எடுத்துக் கொண்டால் மிகவும் வயதானவர்களே அதிகம். (உயிரிழந்தவர்களில் 80 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) சராசரி மட்டுமே இவையெல்லாம் சராசரிதான். இதற்குள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு மற்றும் உயிரிழந்த இளம் வயதினரும் அடங்குவர். Getty Images இத்தாலியில் 40களில் உள்ள, இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களில் 0.4% பேர் இறந்துள்ளனர். 80களில் இருந்தவர்களில் 19.7% பேர் உயிரிழந்துள்ளனர். அதுவே அமெரிக்காவில் 40களில் இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் 0.7% பேர் இறந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் உடல்நிலை மோசமாக இருந்தவர்கள்தான் இந்த கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள் என்றாலும் இது ஏதோ கணித விதிமுறை போன்று கிடையாது என்கிறார் அமெரிக்க ஒவ்வாமை மற்றும் பரவும் நோய்கள் மையத்தின் இயக்குநர் அந்தோனி ஃபாசி. "இளம் வயதுடையவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு, தீவிரமாக நோய்வாய்பட்டு உள்ளனர்" என்கிறார் அவர். ஏற்கனவே நம்மிடம் இருக்கும் ஆதாரங்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் மிகுந்த அபாயத்தில் இருப்பதாக கூறினாலும், குழந்தைகள் உட்பட இளம் வயதினரும் கொரோனாவால் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. "கொரோனா வைரஸ் சிறுவர்களைவிட முதியவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்று தெரிவிக்கப்பட்டாலும், சிறுவர்கள், முக்கியமாக பச்சிளம் குழந்தைகளுக்கு இத்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக" சீனாவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 2000 குழந்தைகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் எந்த வயதினராக இருந்தாலும், ஏற்கனவே ஒருவருக்கு இருக்கும் உடல்நலம் இதில் முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக, பிரிட்டனில் 4.3 மில்லியன் மக்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறது. வயதானவர்களைவிட, இவர்களுக்கு கொரோனாவால் மிகுந்த ஆபத்து ஏற்படக்கூடும். பரவலை கட்டுப்படுத்துவது இந்நிலையில், இளம் வயதினர் கொரோனாவால் கடுமையாக நோய்வாய்ப்படும் வாய்ப்பு குறைவாக இருந்தாலுமே, அவர்களால் மற்றவர்களுக்கு மிக எளிதாக வைரஸ் பரவலாம். இளம் வயதினருக்கு அவர்கள் பாதிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் வராமல் இருக்கலாம், அல்லது மிகக் குறைந்த அறிகுறிகளே தென்படலாம். Getty Images எந்த ஒரு காய்ச்சலையும்விட, கொரோனா தொற்று வேகமாக பரவும் என்று தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று இருக்கும் ஒருவர், சராசரியாக இரண்டிலிருந்து மூன்று பேருக்கு பரப்புவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த இரண்டு அல்லது மூன்று பேர், மேலும் இரண்டு அல்லது மூன்று பேருக்கு பரப்புவார்கள். இந்தக் கணக்கு இவ்வாறு போய் கொண்ட இருக்கும். இது பார்க்க குறைந்த எண்ணிக்கையாக இருக்கலாம். ஆனால் இது ஒரு கட்டத்தில் ஆயிர்க்கணக்கில் பரவத் தொடங்கும். ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகிக் கடைபிடிக்கப்படும் சமூக விலகல் இந்த பரவலைத் தடுக்க உதவும். https://www.bbc.com/tamil/science-52040950
 9. கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா? -வைரஸின் பரிமாண வளர்ச்சி Getty Images கோவிட் - 19 நோயில் இருந்து குணாகிவிட்டதாக, அனைத்துப் பரிசோதனைகளிலும் தேறிவிட்டதாகக் கூறப்பட்ட நோயாளிகளில் சிலருக்கு, பின்னர் நடந்த சோதனைகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவினால், சாதாரண சளியைப் போல நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இந்த விஷயத்தில் இந்த வைரஸ் எப்படி மாறுபட்டது? 70 வயதைக் கடந்த ஆண் ஒருவர் மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்றுக்கு ஆரம்ப கட்ட உதாரணமாக இருக்கும் நோயாளி. அதிர்ச்சிகரமான, கவலைதரக் கூடிய இந்த விஷயம் அவர் மூலமாகத்தான் மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது. அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, பரிசோதனையில் கண்டறியப்பட்ட பிறகு கடந்த பிப்ரவரி மாதம் டோக்கியோ மருத்துவமனையில் தனிமை வார்டில் அவர் வைக்கப்பட்டார். ஜப்பானின் செய்தி ஒளிபரப்பு நிறுவனம் என்.எச்.கே. வெளியிட்ட தகவலின்படி, அவர் குணமடைந்து, வீடு திரும்பி இயல்பு வாழ்வைத் தொடங்கிவிட்டார். பொதுப் போக்குவரத்து வசதிகளையும்கூட பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். சில வாரங்கள் கழித்து, அவர் மறுபடி நோயுற்றார், அவருக்குக் காய்ச்சல் வந்தது. Getty Images அவர் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். இந்த வைரஸ் பாதிப்பு அவருக்கு இருப்பதாக சோதனையில் தெரிய வந்தது அவருக்கும், மருத்துவர்களுக்கும் அதிர்ச்சி தந்தது. ஜப்பானில் இந்த நிலையில் இருப்பது அவர் மட்டுமல்ல. கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கிய நோயாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கிறது என்றாலும், கணிசமான எண்ணிக்கையாக உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது? வைரஸ் மீண்டும் தாக்குகிறதா முதலில் கோவிட்-19 பரிசோதனையின் போது, நோய் அறிகுறிகள் இல்லை என அறியப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 14 சதவீதம் பேருக்கு வேறொரு சமயத்தில் நடைபெறும் சோதனையின் போது, நோய் அறிகுறி கண்டறியப்படுகிறது என்று ஸ்பானிய தேசிய பயோடெக்னாலஜி மையத்தின் நச்சுயிரியல் நிபுணர் லூயிஸ் என்ஜுவானெஸ், பிபிசியிடம் கூறியுள்ளார். இது இரண்டாவது தாக்குதல் அல்ல என்றும், வைரஸ் `` முதல் வைரஸ் தொற்றே திருப்பித் தாக்கும்'' நிகழ்வு என்றும் அவர் நம்புகிறார். Getty Images ``பொதுவாக கொரோனா வைரஸ், மக்களிடம் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குகிறது. ஆனால் சிலருக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிக வலுவாக இல்லை என்பதுதான், மற்ற பல காரணங்களுடன், ஒரு காரணமாக இருக்கும் என்று நான் விளக்கம் அளித்து வருகிறேன்'' என்று அவர் கூறுகிறார். ``அந்த நோய் எதிர்ப்பாற்றல் குறையும்போது, உடலில் எங்காவது ஒளிந்திருக்கும் அந்த வைரஸ் மீண்டும் மேலே வருகிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார். உடலில் வைரஸ் ஒளிந்திருக்கலாம் சில வைரஸ்கள் நம் உடலில் 3 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலம் ஒளிந்திருக்கும். ``ஒருவருக்கு பரிசோதனையில் அறிகுறி நிலை பூஜ்யம் என்றோ, அல்லது நெகடிவ் என்றோ வரும்போது, அவருக்கு நோய் எதிர்ப்பாற்றல் உருவாகிவிட்டது என்பது அனுமானம். எனவே அந்த வைரஸ் மீண்டும் உருவாகக் கூடாது'' என்று என்ஜுவானெஸ் கூறுகிறார். ``மற்ற உறுப்புகளைப் போல உடலின் தற்காப்பு செயல்பாடுகளுக்கு ஆட்படாத உடலின் சில திசுக்களில், தொற்றுக் கிருமிகள் எங்காவது ஒளிந்திருக்கக் கூடும்.'' ஆனால் ஆய்வாளர்களுக்கு புதிராக இருக்கும் சில விஷயங்கள் கோவிட் - 19ல் உள்ளன. குணமடைந்த பிறகு, மீண்டும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு இடைப்பட்ட காலம்தான் புரிந்து கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம் Pandemic என்றால் என்ன? கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? முறையாக கை கழுவுதல் எப்படி? கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும் குழப்பமடைந்த ஆய்வாளர்கள் வெவ்வேறு நோய்களுக்கு, நோய் எதிர்ப்பாற்றல் வெவ்வேறு மாதிரி செயல்படும் என்பது எங்களுக்குத் தெரியும். Getty Images தட்டம்மைக்கு, குழந்தையாக இருக்கும்போது ஒரு முறை தடுப்பூசி போட்டாலே, வாழ்க்கை முழுக்க நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதாக அது இருக்கும். இருந்தபோதிலும், முதலில் போட்டதைவிட புதிய தடுப்பூசியை குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு போட்டுக் கொள்வது பாதுகாப்பானது என்று சில சுகாதார வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர். தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படாத சில வைரஸ்கள் இருக்கின்றன. எனவே குறிப்பிட்ட இடைவெளிகளில் நமது மருந்துகளை நாம் அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. சளிக் காய்ச்சல் அல்லது சாதாரண ப்ளூ போன்ற மற்ற தடுப்பூசிகளில், ஆண்டுதோறும் அதைப் போட்டுக் கொள்ள வேண்டும், ஏனெனில் வைரஸ்கள் அடுத்த பரிமாண நிலைக்கு மாறிவிடுகின்றன. புதிய வைரஸ் - புரிந்துகொள்ள முயற்சி கோவிட் - 19 புதிய வைரஸ் என்பதால், இரண்டு தொற்றுதல்களுக்கு இடைப்பட்ட காலம் குறுகியதாக இருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள ஆய்வாளர்கள் இன்னும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். Getty Images கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கும் நிகழ்வுகள் நடக்கலாம் என்றாலும், நோய் இல்லை என்று பரிசோதனை முடிவு வந்த பிறகு மீண்டும் கோவிட் - 19 தாக்குதல் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மாட்ரிட்டில் உள்ள கார்லோஸ்-III சுகாதார நிலையத்தின் ஆராய்ச்சியாளர் இசிடோரோ மார்ட்டினெஸ் கூறுகிறார். ``அடுத்த தொற்று பரவல்களின்போது, நோய் எதிர்ப்பாற்றல் நீடித்திருக்காவிட்டால், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில், உங்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். அது வழக்கமானதுதான்'' என்று பிபிசியிடம் மார்ட்டினெஸ் கூறினார். ``ஆனால் ஒருவிதமான வைரஸ் தாக்குதலில் குணமானவருக்கு, மீண்டும் அதே வகை வைரஸ் தாக்குதல் வருவது அபூர்வமானது. மேலும், நாங்கள் அறிந்த வரையில், ப்ளூ வைரஸ்கள் போல இந்தக் கொரோனா வைரஸ் மாறுவதாகத் தெரியவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார். தற்காலிக உயர்வு அவருடைய விளக்கம் என்ஜுவானெஸ் அளித்த விளக்கம் போலவே உள்ளது. ``கொரோனா தாக்கிய ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்ய்யப்பட்டபின், அவருக்கு மீண்டும் கொரோனா உள்ளது என்று முடிவுகள் வருவது தற்காலிகமாக நோய்த் தொற்று அதிகரிப்பதாக இருக்கக் கூடும்.'' ஆனால் கோவிட் - 19 பற்றி புரிந்து கொள்ள இன்னும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று இருவருமே எச்சரிக்கின்றனர். ``இந்தப் புதிய கோவிட் - 19 வைரஸ் பற்றி நாங்கள் தினம் தினம் புதிய விஷயங்களை கற்று வருகிறோம்'' என்று அமெரிக்க சுகாதார அமைப்பு - PAHO - பிபிசியிடம் கூறினார். எனவே மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகும் நேர்வுகள் பற்றி, நிச்சயமான விளக்கங்களை அளிப்பது சாத்தியமற்றது என்கிறார். ஆனால் எந்த வகையான பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி முடிவெடுப்பதில் அரசுகளுக்கு உதவியாக இருக்கும் வகையில், இதற்கு ஒரு பதிலைக் கண்டுபிடிக்க அறிவியல் முயற்சி செய்து கொண்டிருக்கிறது https://www.bbc.com/tamil/science-52026776
 10. கொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா - புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்பு; மற்ற நாடுகளில் நடப்பது என்ன? Coronavirus World update Getty Images 85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவை (1200) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில் (3169) ஆகியவை அதிக இழப்புகளை சந்தித்துள்ளன. உலகளவில் பார்க்கும்போது, 531,860 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,057 என்னும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. Getty Images கோப்புப்படம் திணறும் அமெரிக்கா; தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா “மிகவும் வேகமாக” மீண்டெழும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடு என்னும் நிலையை அமெரிக்கா பெற்றுள்ளது. இதன் மூலம், கடந்த டிசம்பர் மாதம், முதன் முதலில் கண்டறியப்பட்டு இந்த நோய்த்தொற்றின் மையமாக விளங்கிய சீனா, கடும் உயிரிழப்புகளை சந்தித்து வரும் இத்தாலி ஆகியவற்றுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய மையமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தினந்தோறும் வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப், “நாம் செய்து வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் பணிகளுக்கு திரும்ப வேண்டும், நாடும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இது மிகவும் விரைவில் நடக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார். சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து சந்தேகம் தெரிவித்த டிரம்ப், “சீனாவில் நிலவும் உண்மை நிலை குறித்து உங்களுக்கு தெரியாது” என்று கூறினார். Getty Images டிரம்ப் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வரவுள்ள கிறித்துவர்களின் முக்கிய பண்டிகையான உயிர்ப்பு ஞாயிறுக்கு (Eater Sunday) முன்னதாக இந்த முடக்க நிலையை திரும்ப பெறுவதற்கு டிரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளது அந்த நாட்டில் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. அமெரிக்க மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதை போன்ற உத்வேகத்தை அளிப்பதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டதாக கருதப்பட்டாலும், நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் 3.3 மில்லியன் மக்கள் இந்த நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனதாக அரசிடம் முறையிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல்லாயிரக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், சேவை மற்றும் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு கார் உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது பலத்த பொருளாதார சிக்கலை உண்டாக்கியுள்ளது. இதனால் மக்கள் அதிவேகமாக வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார பெருமந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது ஐந்து மடங்கு அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம் கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்? கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும் இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 5,52,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் பற்றிய மற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு: பிரிட்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐயும் தாண்டியுள்ள நிலையில், இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக கடுமையாக பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு அந்த நாடு முழுவதும் மக்கள் கரவொலி எழுப்பினர். வீடுகளின் பால்கனி, முகப்பு, தோட்டம் உள்ளிட்டவற்றில் நின்றுகொண்டிருந்தவாறு, நாட்டின் சுகாதார பணியாளர்களுக்கு கரவொலியின் மூலம் மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில், பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர்கள், பிரதமர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். முன்னதாக, இதே பாணியில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இந்தியாவில் மக்கள் கரவொலி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரஷ்யாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள ரஷ்யர்கள் உடனடியாக தங்களது இருப்பிடம் குறித்த தகவல்களை அளித்தால் அவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர வழிவகை செய்யப்படும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் உள்நாட்டு அளவில் கொரோனா வைரஸின் பரவல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தரவுத்தளங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் வருகையின் மூலம் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு தடை விதிப்பதற்கு சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக நாளை (சனிக்கிழமை) முதல் சீனாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. Getty Images தென் கொரியாவில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டும் பணிபுரிந்தால் போதும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகம் (927) ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவில் மூன்று வாரங்களுக்கு நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. “நமது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக நமது கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் களமிறங்குவதற்காக 21 நாட்களுக்கு முடக்க நிலை அறிவிக்கப்படுகிறது” என்று தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டியுள்ள நிலையிலும் அங்கு இதுவரை நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்படாதது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காணொளி காட்சி வழியாக நடந்த ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், “பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுக்கு தேவையான முக்கிய சுகாதாரத்துறை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஆஸ்திரேலியா உதவி செய்யும்” என்று கூறினார். மேலும், பெரு மற்றும் உருகுவே உள்ளிட்ட நாடுகளில் சிக்குண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. Getty Images கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்படாத அமெரிக்கர்கள் மூலம் தங்களுக்கு அந்த தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அமெரிக்காவுடனான எல்லையை மெக்ஸிகோ போராட்டக்காரர்கள் மூடியுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள மெக்ஸிகோ உடனான எல்லைப்பகுதியில் இந்த சம்பவம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது. முகக்கவசங்களை அணிந்திருந்த போராட்டக்காரர்கள், “அமெரிக்கர்கள் வீடுகளிலேயே இருங்கள்” என்று குறிப்பிடும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மனித குரங்குகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியதாக அறியப்படும் கொரோனா வைரஸின் பாதிப்பு இதுவரை விலங்குகளிடையே பரவுவதாக அறியப்படவில்லை. எனினும், மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மனித குரங்குகள், கொரில்லா, சிம்பன்சிகள், ஓராங்குட்டான்கள் ஆகிவை கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும் என்று அறியலாளர்கள் நேச்சர் சஞ்சிகையில் கட்டுரை வாயிலாக வலியுறுத்தியுள்ளனர். https://www.bbc.com/tamil/global-52059497
 11. ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; - மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்- இதுவரை 12 பேர் பலி 1 அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களில் 35000 பேர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கசினோக்கள் விமானசேவைகள் வர்த்தக நிலையங்கள் போன்றன பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன. புதன்கிழமை வெர்ஜின் அவுஸ்திரேலியா விமானசேவை 8000பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. கசினோ நிறுவனமான ஸ்டார் என்டர்டெய்மன்ட் 8100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. வெஸ்ட்பக்கின் பிரதம பொருளியல் நிபுணர் பில் இவான்ஸ் ஜூன் மாதத்திற்குள் 814,000 பேர் வேலைகளை இழப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதேவேளை கொரோனா வைரசினால் தாங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பல வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன 2 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 அவுஸ்திரேலியாவில் கொரோனவைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை இரவு 68 வயது கொவிட் நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு முன்னரே பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என குயின்லாந்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை உயிரிழந்த இருவர் 70 வயதினை தாண்டியவர்கள் என விக்டோரியாவின் பிரதம சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். 3 காவல்துறைக்கும் பாதிப்பு கொரோன வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் 200 ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 200 காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என விக்டோரியாவின் காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை விக்டோரியாவில் காவல்துறையினருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என காவல்துறையினரின் சங்கம் தெரிவித்துள்ளது. விக்டோரியாவில் போதியளவு முகக்கவசங்கள் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன ஆனால் அவற்றை காவல்துறையினருக்கு வழங்கவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் விக்டோரியா காவல்துறை இதனை நிராகரித்துள்ளதுடன் போதியளவு உபகரணங்கள் உள்ளன அவற்றை தேவைக்கேற்ப விநியோகிப்போம் என குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்கொண்டுள்ளனர் என சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது உறுதியானலோ உடனடியாக காவல்நிலையத்தையும் வாகனங்களையும் சுத்தம் செய்கின்றோம் என விக்டோரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 4 விக்டோரியாவின் சமூக தனிமைப்படுத்தல் கொள்கையை மீறி சிட்னி விமானநிலையத்தில் பெருமளவானவர்கள் நெருக்கமாக காணப்படுவதை காண்பிக்கும்; வீடியோக்கள் வெளியாகியுள்ளன. சிட்னியில் இன்று காலை இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பிட்ட வீடியோவில் பலர் நெருக்கமாகயிருப்பதை காணமுடிந்துள்ளது. வீடியோவை பதிவு செய்துள்ள நபர் பயணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். 5 அவுஸ்திரேலியா தன்வசம் உள்ள முகக்கவசங்கள் உட்பட பாதுகாப்பு கவசங்களின் கையிருப்பை பேணுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என அவுஸ்திரேலியாவின் மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இயங்கும் முகக்கவசங்கள் உட்பட பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் சீனா நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களை சீனாவிற்கு மாத்திரம் அனுப்பிவருவதை தொடர்ந்து அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/78671
 12. கொரோனாவுக்கு எதிராகக் கை கோர்ப்போம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மார்ச் 25 கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நாடு முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. நாடு பூராவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம், இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை, சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் தளர்த்தப்படுகின்றது. அதுவும், உணவுப்பொருள்கள் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் மட்டுமேயாகும். இவ்வாறான நிலை, இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று தெரிகிறது. ஒரு சில நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உயிரிழப்புகள், தற்போது இத்தாலியைப் படுபயங்கரமாக உலுக்கிக் கொண்டிருக்கின்றன. உலகம் பூராவும் 17,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ், ஒரு மனிதனை உடனடியாக உயிரிழப்பை நோக்கித் தள்ளும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டாலும், அந்த வைரஸ், மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியின் தன்மையைப் பொறுத்து, உயிரிழப்பை நோக்கிச் செலுத்தும் ஊக்கியாகச் செயற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்தோடு, கொரோனா வைரஸ், 70 ஆண்டுகளுக்கு முன்னரேயே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் தற்போதைய வடிவம் தொடர்பிலான சிக்கலும், அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாமையுமே, இவ்வாறு அது உலகை உலுக்கி வரக் காரணமாகும். இப்படியான நிலையில், தற்காப்பு என்கிற ஒற்றை வார்த்தையே, கொரோனா வைரஸிடம் இருந்து, உலகைக் காப்பாற்றும் பெரிய ஆயுதமாக இன்றைக்கு மாறியிருக்கின்றது. இரண்டு மாதங்களுக்கு முன்னர், சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று, மக்களை அச்சுறுத்துவதாகச் செய்தி வெளியானதும், உலகம் ஒருசில நாள்களுக்குச் சில முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை நோக்கிச் சென்றது. வைரஸ் தொற்றோடு குறிப்பாக, அதிக காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிக நடமாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்காமல், அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை, சில நாள்களின் பின்னர் கைவிடப்பட்டன. வெளிநாட்டவர்கள் கடந்து செல்லும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் எந்தவிதப் பரிசோதனைகளும் இன்றி பயணிகளுக்காகத் திறந்துவிடப்பட்டன. ஒரு மாதத்துக்குப் பின்னர், கொரோனா வைரஸ் தொற்று, எல்லா நாடுகளையும் நோக்கிக் கடத்தப்பட்டுவிட்டது. உலக நாடுகளின் அசட்டையீனமொன்று, இன்றைக்கு உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளவர்களை, அவரவர் வீடுகளுக்குள் முடக்கிப் போட்டிருக்கின்றது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஆரம்பமாக, வெளிநாட்டவர்கள் உள்நுழையும் விமான நிலையங்களை மூடிவிடுமாறு, சில வாரங்களுக்கு முன்னரேயே மருத்துவர்கள் அரசாங்கத்தைக் கோரியிருக்கிறார்கள். ஆனாலும், அதை ஒரு சரியான ஆலோசனையாக அரசாங்கம் கருத்தில் கொள்ளாமல், கடந்த 18ஆம் திகதி வரையில் விமான நிலையங்களை இயக்கியது. அதுவரையில், வெளிநாட்டவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அதுதான், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அடிப்படைக் காரணியாக இருந்திருக்கின்றது. அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள், அதை மறைத்துக் கொண்டு, நாட்டுக்குள் வருவதற்கும், மற்றவர்களுக்குப் பரப்புவதற்கும் காரணமாகி இருக்கின்றது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றோடு, முதலாவதாக இனங்காணப்பட்டவர் ஒரு சீனப் பெண்மணி. அவர், சிகிச்சை பெற்றுக் குணமாகி நாடு திரும்பினார். இந்தச் சம்பவம், இடம்பெற்ற காலப்பகுதி இரு வாரங்களாகும். ஆனால், அதன் பின்னரான கொரோனா வைரஸ் தொற்று என்பது, இத்தாலிய சுற்றுலாப் பயணிகளோடு தங்கியிருந்தவரோடு ஆரம்பித்தது. அதன் பின்னர், இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவ ஆரம்பித்த போது, அங்கிருத்து தப்பிவந்தவர்களால் ஏற்பட்டது. இந்தப் பத்தி எழுதப்படும் போது, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 102ஐ தாண்டிவிட்டது. அதில், ஒருவர் சுவிஸ் நாட்டிலிருந்து, மத போதனைக்காக யாழ்ப்பாணம் வந்து சென்ற, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மதபோதகர் ஒருவரோடு நெருங்கிப் பழகியவராவார். இப்போது, அந்த மதபோதகரோடும், அவரோடு பழகியதால் தொற்றுக்கு உள்ளானவரோடும் பழகியவர்களைத் தனிமைப்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுப்படுகின்றது. குறித்த மதபோதகர், இந்த மாதம் 15ஆம் திகதி, நாட்டிலிருந்து வெளியேறி இருக்கின்றார். அப்படி, இத்தாலி உள்ளிட்ட தொற்று அச்சுறுத்தலுள்ள நாடுகளில் இருந்து, இலங்கைக்குள் நுழைந்து, சுய தனிமைப்படுத்தல், கண்காணிப்பு இன்றி இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பில், அரசாங்கத்தால் முறையான கண்காணிப்பு செய்யப்படுகின்றதா என்கிற கேள்வி மக்களிடம் பெரும் அச்சமாக நீடிக்கின்றது. ஏனெனில், இறுதி நேரத்தில் நாட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில், கவனம் செலுத்தும் அளவுக்கு, ஆரம்ப கட்டங்களில் வைரஸ் தொற்றோடு வந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிக்கவில்லை. அதனால், அவர்கள் பெரும்பாலும் வைரஸ் காவிகளாக இருக்கிறார்கள். அது, பெரும் அச்சுறுத்தலாகும். ஊரடங்குச் சட்டம் என்பது, இலங்கை மக்களுக்கு புதிதான ஒன்றல்ல. தொடர்ச்சியாக யுத்தமும் வன்முறைகளும் நீடித்த நாட்டில், அவ்வப்போது ஊரடங்குச் சட்டத்துக்கும் வேலையிருந்தது. ஆனால், தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்துக்கும், முன்னையவற்றுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முன்னைய ஊரடங்குச் சட்டக் காலத்தில், அதை மீறினால், மீறுபவர்களுக்கு மாத்திரமே பாதிப்பு வரும். ஆனால், தற்போதைய ஊரடங்குச் சட்டத்தை மீறி, வைரஸ் தொற்றை வீட்டுக்குள் கொண்டு வருவதானது, சம்பந்தப்பட்ட நபரை மாத்திரமல்ல, அவரைச் சார்ந்தோரையும் பெரும் பாதிப்புக்குள் தள்ளிவிடும். அதனால், நாடு எதிர்கொண்டிருக்கின்ற அவசரகால நிலையைப் புரிந்துகொண்டு இயங்குவது அடிப்படையானது. அரசாங்கமும் அதன் நிர்வாகக் கட்டமைப்பும் விடுக்கின்ற அறிவுறுத்தல்களை உள்வாங்கி, சுகாதாரத்துறையின் ஆலோசனைகளுக்கு அமைய நடப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல், ஒத்துழைப்பின்றி செயற்படுவதானது, துரோகத்தனமான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். ஏனெனில், கொரோனா வைரஸ் தொற்றை, ஒரு சில வாரங்களுக்குள் கட்டுப்படுத்தாமல் விட்டால், அது இன்னும் மோசமான விளைவுளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அது மாத்திரமின்றி, நாளாந்தம் வேலை செய்தாலே அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்கிற கட்டத்தில் வாழும் மத்தியதர, அதற்கும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் அதிகமுள்ள இலங்கையில், ஊரடங்குச் சட்டத்தால் தொழில் முடக்கம் நீடித்தால், அது இன்னும் பாரிய இடர்பாடுகளை ஏற்படுத்தும். அதனால், ஒருசில நாள்களுக்குள், அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்குள் ஒட்டுமொத்தமாக அத்தியாவசிய நடவடிக்கைகளைப் பின்பற்றி, வைரஸ் தொற்றிலிருந்து மீளவேண்டும்; அதுதான், இப்போதைக்கு அவசியமானது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனாவுக்கு-எதிராகக்-கை-கோர்ப்போம்/91-247427
 13. நாட்டுக்குள் எவ்வாறு வைரஸ் புகுந்தது? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 மார்ச் 25 இலங்கை ஒரு தீவு. இங்கிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும், ஒரே ஒரு பிரதான வழி தான் இருக்கிறது. அது தான் கட்டுநாயக்க விமான நிலையம். தவிர, மத்தல, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்கள், கப்பல்கள் வரும் சில துறைமுகங்கள் ஆகியன இருந்த போதிலும், இவற்றின் மூலம் மிகச் சிலர் மட்டுமே வருகின்றனர். இவற்றையும் கணக்கில் எடுத்தாலும், பொதுவாக நாட்டுக்குள் நுழைவதற்காக மிகச் சில வாயில்களே இருக்கின்றன. எனவே, வருபவர்களை மிக இலகுவாகக் கண்காணிக்கலாம். ஆனால், வேறு நாடுகளுடனான நில எல்லைகள் இருக்கும் நாடுகளில், அவ்வாறு நாட்டுக்குள் வருபவர்களைக் கண்காணிப்பது மிகவும் கடினமாகும். உதாரணமாக, நேபாளத்திலிருந்து வெளியேற, 15 பிரதான வீதிகள் இருக்கின்றன. அவற்றில், 13 வீதிகள் இந்தியாவுக்கான வீதிகளாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மதிற்சுவரோ, வேலியோ போடப்பட்டு மூடப்படவில்லை. எனவே, அந்தப் பிரதான வீதிகளுக்குப் புறம்பாக, திருட்டுத்தனமாக நேபாளத்திருந்து இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கும் நுழையும் பல வழிகள் இருக்கின்றன. மெக்சிகோவிலிருந்து கள்ளத்தனமாக, பல மெக்சிக்கோகாரர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதாகக் குற்றஞ்சாட்டியே, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் மதிற்சுவர் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். இலங்கைக்குள் நுழைவதற்காக, அவ்வாறான வழிகள் இல்லாததாலும் இருக்கும் சட்டபூர்வமான வழிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருப்பதாலும், இலங்கைக்குள் வருபவர்களைக் கண்காணிப்பது இலகுவாக இருந்த போதிலும், கொரோனா வைரஸால் உலகமே அச்சுறுத்தப்பட்டு, இருந்த நிலையில், அந்த வைரஸ் தாக்கியவர்கள் பலர், நாட்டுக்குள் நுழைந்து, பலருக்கு அந்த நோயை எவ்வாறு பரப்பினார்கள்? இலங்கையின் சுகாதாரத் துறையினரும், கொள்கை வகுப்பாளர்களும் இந்த விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஜனவரி மாதம் 27 ஆம் திகதி, இலங்கையில் முதலாவது கொவிட்-19 நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். சீனப் பெண்ணான அவர், அடையாளம் காணப்பட்டவுடன், மக்கள் முகமூடி அணிய ஆரம்பித்தனர். ஓரிரு நாள்களிலேயே கடைகளில் முகமூடிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதாவது, மக்கள் அந்நோயின் பாரதுரத்தன்மையை அப்போதும், அறிந்து இருந்தார்கள். ஆனால், சுகாதார அதிகாரிகள், “முகமூடிகள் இப்போதைக்குத் தேவையில்லை” என்று கூறியதாலும், கடைகளில் முகமூடிகள் இல்லாதமையாலும், பிரத்தியேகமாக அக்கறை செலுத்தத் தவறிவிட்டனர். சீனப் பெண், கொவிட்-19 நோயாளி என அடையாளம் காணப்பட்டமையானது, சுகாதாரத் துறையினருக்கு, ஓர் எச்சரிக்கைச் செய்தியைக் கூறியது. அதாவது, வைரஸ் காவிகள், நாட்டுக்குள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதே ஆகும். ஆனால், எங்கே பிழைவிட்டோம் என்று பார்க்க, அதிகாரிகள் முற்படவில்லை. எந்தவொரு வெளிநாட்டவரும், தடையில்லாமல் நாட்டுக்குள் வரக்கூடிய நிலைமை தொடர்ந்தது. நோய் வேகமாகவும் பரவலாகவும் பரவியிருந்த சீனாவிலிருந்து வருவோரும், கண்டிப்பான முறையில் தனிமைப்படுத்தப்படவில்லை. அவர்கள், இலங்கையில் தாம் தங்கும் இடங்களிலேயே 14 நாள்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, அரசாங்கம் அறிவித்தது. அவர்கள், உண்மையிலேயே உரிய முறைப் படி தனிமைப்பட்டு இருந்தார்களா என்பதை, உறுதி செய்து கொள்ள முறையான பொறிமுறையொன்று இருக்கவும் இல்லை. மார்ச் மாதம் நடுப்பகுதி வரை, அந்த நிலை நீடித்தது. அப்போது இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில், கொவிட்-19 நோய் வேகமாகப் பரவிக் கொண்டு இருந்தது. அந்த நாடுகளில் இருந்து பலர், இலங்கைக்கு வருகை தந்து கொண்டும் இருந்தனர். ஆனால், அவர்களிடமிருந்து இலங்கையில் உள்ளவர்களுக்கு நோய் பரவாது என்பதைப் போன்றதோர் மனப்பாங்கிலேயே, இலங்கை அதிகாரிகள் நடந்து கொண்டனர். மார்ச் மாதம் 11 ஆம் திகதி, இலங்கைப் பிரஜை ஒருவரைக் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவர், உல்லாசப் பிரயாணிகளுக்கு வழிகாட்டும் ஒருவர்; மறுநாள், அந்த நபரது நண்பரொருவரும் வைரஸால் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அடுத்த நாள், மேலும் மூன்று கொவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் பழகியவர்கள் என்பதும் தெரிய வந்தது. அப்போது தான், அரசாங்கம் விழித்துக் கொண்டது. நோயுள்ளவர்கள் நாட்டுக்குள் வந்தால் மட்டுமே, நாட்டுக்குள் வைரஸ் பரவலாம்; உள்நாட்டவர்கள் நோய்வாய்ப்படலாம். ஏனெனில், ஏனைய நோய்களைப் போலன்றி, இந்த நோயின் காவி மனிதனே. உள்நாட்டவர்களை நோய் தாக்குவதாக இருந்தால், வெளிநாடுகளிலிருந்து நோய்க் காவிகள், விமான நிலையப் பாதுகாப்புக் கடவைகளை மீறி, உள்ளே சென்றிருக்கிறார்கள் என்பதற்கு இது ஆதாரமாகும். அதாவது, மேலும் பலரும் நோய்க்கு இரையாகி இருக்கலாம். இதையடுத்தே, அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுத்தது. முதலாவதாக, சீனாவை அடுத்து, மிகவும் கூடுதலாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இத்தாலி, தென் கொரியா, ஈரானிலிருந்து வருவோரை மட்டும், தனிமைப்படுத்தும் மய்யங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்படடது. இதுவும் விந்தையான நடவடிக்கையாகும். ஓரிரு நோயாளர்கள் இருக்கும் நாடொன்றிலிருந்து வருபவர் ஒருவர், நோய்க் காவியாக இருக்க முடியாதா? அவ்வாறானவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பத் தேவையில்லையா? தேவையில்லை என்றே அரசாங்கம் கருதியது. மார்ச் 14, 15, 16, 17 ஆகிய நாள்களில், இலங்கையில், தொடர்ச்சியாகப் புதிதாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை முறையே, 05, 08, 10, 15 என அதிகரித்துக் கொண்டே போகும் போது தான், அரசாங்கம் தாம் விட்ட சில பிழைகளை உணர்ந்தது. அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில், தமது பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டது. அவர்கள், எவரெவருடன் பழகினார்கள் என்பது, அதன் பின்னரே ஆராயப்பட்டது. அவர்கள் அதற்குள், ஆயிரக் கணக்கானவர்களுடன் பழகியிருப்பார்கள். அவர்கள் வைரஸ் காவிகளாக இருந்திருப்பின், அவர்கள் மேலும் பலருக்கு அவற்றைப் பரப்பி இருப்பார்கள். இவ்வாறு வைரஸ் தொற்றியவர்கள் தான், இப்போது நாளாந்தம் நோயாளராகக் கண்டறியப்படுகிறார்கள். குறைந்த பட்சம், மார்ச் முதலாம் திகதி, நாடு திரும்பியவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே, அவர்களை ஏதாவது ஒரு முறையில் தனிமைப்படுத்தி இருந்தால், நாட்டுக்குள் நோய் பரவுவதைப் பெருமளவில் குறைத்து இருக்கலாம். இலங்கை, தீவொன்றாக இருப்பதன் பயனை நாம் அடையவில்லை; இன்னமும் சீனர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் இல்லை. பொது மக்களும் இந்தத் தனிமைப்படுத்தலைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அதனால் தான், நாம் முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர், தனிமைப்படுத்தலை விரும்பாமல், தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் வசிக்கும் இடங்களுக்குச் சென்றார்கள். அவர்களது மனைவி, பிள்ளைகள், பெற்றோரும் அவர்களுக்கு நிலைமையை விளக்கிக் கூறாமல், அவர்களை வரவேற்றார்கள். வேறு சிலர், நிலைமையைப் புரிந்து கொள்ளாமல், தமது பிரதேசத்தில் தனிமைப்படுத்தும் நிலையங்களை நிறுவ வேண்டாம் எனப் போராட்டம் நடத்தினார்கள். மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல், நாளாந்தம் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு, மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, சுகாதார அதிகாரிகள் மக்களை அறிவுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையிலேயே, நாட்டின் பாடசாலைகளுக்கு இடையிலான மிக முக்கிய கிரிக்கெட் போட்டியாகக் கருதப்படும் றோயல்- தோமியன் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியைப் பார்க்கச் சென்ற ஒருவரும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது, ஓரிரு நாள்களுக்குப் பின்னர் தெரிய வந்தது. தாம், இந்தப் போட்டியை நடத்த வேண்டாம் எனப் போட்டி அமைப்பாளர்களுக்கு அறிவித்ததாகவும், ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் போட்டியை நடத்தி இருக்கிறார்கள் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கொவிட்-19 நோய் நிலைமை பற்றி, நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட செய்தியொன்றில் குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்தக் கூற்று, நாட்டில் முக்கிய பிரமுகர்களும் நிலைமையின் பாரதுரத் தன்மையை உணரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டாம் என, ஜனாதிபதி வெறுமனே கருத்துத் தெரிவிக்காமல், அதைத் தடை செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டு நிலைமை, அவ்வாறானதொரு போட்டியை நடத்துவதற்குப் பொருத்தமானதாக இல்லை என்பதை, உணர்ந்தமையாலேயே அவர் அதை நடத்த வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். அவ்வாறாயின், அதைச் சட்டப்படியே தடை செய்யாதது ஏன்? எல்லாவற்றையும் ஜனாதிபதியே செய்ய வேண்டுமா, ஜனாதிபதியின் ஆலோசனையின் படியே தான் செய்ய வேண்டுமா? அமைச்சர்களான பவித்திரா வன்னியாரச்சி, டலஸ் அலகப்பெரும ஆகியோரது கருத்தைப் பார்த்தால், ஜனாதிபதியின் ஆலோசனை இல்லாமல், அவர்கள் எதையும் செய்வதில்லைப் போல்த் தான் தெரிகிறது. எதற்கெடுத்தாலும், “அதி மேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் படி” என்றுதான் அவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், இந்தக் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தும், சுகாதார அமைச்சரோ, விளையாட்டுத்துறை அமைச்சரோ அதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை; ஏன்? அத்தோடு, இந்தப் போட்டியின் அமைப்பாளர்கள் படிக்காதவர்கள் அல்லர். அவர்கள், இந்தப் போட்டியை நிறுத்த வேண்டும் என, ஏன் நினைக்கவில்லை? இது, சாதாரண இரு பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியாக இருந்தால், ஜனாதிபதி வெறுமனே கருத்துத் தெரிவித்துவிட்டு, அமைதியாக இருந்திருப்பாரா? அமைச்சர்கள், அதிகாரிகள் போட்டியை நடத்த விட்டு இருப்பார்களா? போட்டி அமைப்பாளர்களும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்த பின்னர், போட்டியை நடத்தத் துணிந்திருப்பார்களா? அரசாங்கமும் அதிகாரிகளும், கொரோனா வைரஸ் பிரச்சினையை எந்தளவு பாரதுரமாகக் கணக்கில் எடுத்துள்ளார்கள் என்பதைக் காட்டும் முக்கியமான நிகழ்வாக, இந்தப் போட்டியும் அமைந்துள்ளது. பொது மக்களும் சரியாக நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை. எனவே, மக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தடுப்பதற்காக, அரசாங்கம் முதலில் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கிய போது, பலர் அந்த விடுமுறையைப் பாவித்து, உல்லாசப் பயணங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்; சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றிருந்தார்கள். மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல், இன்று வரை இலங்கையில் கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்படாத நாளே இல்லை. நோய் பரவும் நிலைமை, வழமை நிலைமைக்குத் திரும்பி வருவதாகவும் கூற முடியாது. சில நாள்களில் சுமார் ஐந்து நோயாளர்கள் கண்டறியப்பட்ட போதிலும், சில நாள்களில் அந்த எண்ணிக்கை ஒன்பதாகவும் பத்தாகவும் அதிகரித்திருந்தது. புதன்கிழமை (25) நோயாளர் எண்ணிக்கை 102ஐத் தாண்டி இருந்தது; அவர்களில் இருவரது நிலைமை மோசமாகவும் இருந்தது. உலகில் பல செல்வந்த நாடுகளே, கொரோனா வைரஸ் தாக்குதலால் செய்வதறியாது தடுமாறுகின்றன. இந்த நிலையில், வெளிநாட்டுக் கடனில் தங்கியிருக்கும் இலங்கை, மிக ஆபத்தான நிலையில் இருப்பதைச் சகலரும் உணர வேண்டியிருக்கிறது. பொறுப்புடன் நடந்து கொள்ள, எமது அகம்பாவம் சில வேளைகளில் இடங்கொடுக்காவிட்டாலும், அவ்வாறு நடந்து கொள்ள நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என்பதே உண்மை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாட்டுக்குள்-எவ்வாறு-வைரஸ்-புகுந்தது/91-247425
 14. மீள அறிவிக்கும் வரை யாழில் ஊடரங்கு Lயாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (27) காலை 6 மணிக்கு நீக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை மாலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வரும். பின்னர், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது. இதேவேளை, கொரோனா நோய்க்கிருமி தொற்று பரவும் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மள-அறவககம-வர-யழல-ஊடரஙக/150-247470
 15. திருநெல்வேலி சந்தையை பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க தீர்மானம் யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது நல்லூர் எல்லைக்குள் இருக்கும் திருநெல்வேலி சந்தைக்கு மக்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் நேற்று புதன்கிழமை பிரதேச சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்டு பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார். விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை தங்களின் இடங்களிலோ அவர்களது கிராமங்களிலோ விற்பனை செய்ய முடியும். பொதுமக்கள் திருநெல்வேலி சந்தைக்கு வரும் பாதைகளில் உள்ள மரக்கறி வியாபார நிலையங்களில் கொள்வனவுசெய்து எமக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.சந்தைக்கு வரும் வீதிகளில் பல இடங்களில் சந்தை வியாபாரத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். மக்கள் சந்தைக்கு வரும் வீதிகளில் உள்ள வியாபாரிகளிடம் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய முடியும் என மேலும் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/திருநெல்வேலி-சந்தையை-பல/
 16. ஹய்!! ரத்தி வந்திட்டா நான் லேட்டாக வந்திட்டன் போலிருக்கே!!
 17. ராத்திரி பத்து மணிக்கு நண்பர் ஒருவர் கன காலத்திற்குப் பின்னர் போனடித்தான். என்னடா நேரம்கெட்ட நேரத்தில் அடிக்கிறான் என்று போனை எடுத்தால் தனது லாப்ரொப் வேலை செய்யவில்லை. பார்க்கமுடியுமா என்று கேட்டான். என்ன மாதிரியான பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே கதையோடு கதையாக lockdown இல் வேலைக்கு போகிறாயா என்று கேட்டேன். தான் மூன்று கிழமை லீவில் நிற்பதாகச் சொன்னான். மகன் ஒரு வாரத்திற்கு முன்னர் காய்ச்சல், இருமலோடு அவதிப்பட்டு அது தனக்கும் தொத்திவிட்டது என்று சொன்னான். இப்ப இதுக்கெல்லாம் சுயதனிமைப்படுத்தலில் போகவேண்டுமல்லவா. அதனால் கொம்பனி மூன்று கிழமைக்கு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தது. இன்னும் ஒரு வாரம் தாண்டவில்லை, ஆனால் லாப்ரொப் திருத்த வரப்போகின்றேன் என்றால் என்ன செய்யமுடியும்? நான் கதையை மாத்தி இன்னும் மூன்று கிழமைக்கு பிறகு வா என்று சொல்லியுள்ளேன் சும்மா எழுப்பம் காட்டி ஏன் கொரோனா சீதேவியை நெஞ்சில சுமக்கவேண்டும்!
 18. நீங்கள் விரும்பியதை மட்டும் நான் பதிலாகத் தந்தால் அது criminal wastage of time (நன்றி நாதமுனி). வடகொரியாவுக்கு போய் வந்து மிச்சத்தை எழுதுங்கள்
 19. ஏனெனில் மேற்கு நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளது. டொலால்ட் ட்ரம்ப்பைக் கூட கேள்விகேட்டு சங்கடப்படுத்தமுடியும். ஆனால் சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளில் ஜனநாயகமோ, பத்திரிகைச் சுதந்திரமோ இல்லை. அரசு என்ன சொல்கின்றதோ, அதைத்தான் அவர்கள் கிளிப்பிள்ளைகள் மாதிரி ஒப்புவிக்கவேண்டும். அதனால்தான் சொல்லாதவை பற்றிய சந்தேகங்கள் எப்போதும் வரும். மேலும் கார்டியன் வலதுசாரிகளின் ஊதுகுழல் அல்ல. எப்போதுமே தாராளவாத சிந்தனையையும், சுதந்திரத்தையும் முன்னிலைப்படுத்தும் ஊடகம். பழமைவாதிகளைக் கேள்விகேட்கும் ஊடகம்.
 20. மொஸ்கோ மேஜர் கூட கேள்வி கேட்கின்றார். அவர் சி.ஐ.ஏ ஏஜென்ட் இல்லைத்தானே. Russian official questions Putin over coronavirus Moscow mayor Sergei Sobyanin tells president situation more serious than thought https://www.theguardian.com/world/2020/mar/24/russian-official-questions-putin-over-coronavirus
 21. சுனிதா ஜெயின் -கவிதை தமிழாக்கம்: கோரா அமெரிக்கன் தேசி* நீ பதினேழு வயதினள். அத்துடன் இன்னும் முத்தமிடப்படாத வாயில் கசப்பாக உணர்கிறாய், உன் பள்ளித் தோழிகள் அனைவரும் கன்னிமை இழந்தவர்கள் என்று அறிந்து கொண்டதால். வீட்டில், நீ அழுகிறாய். “என் கைகளைப் பிடித்துக்கொள், அப்பா நான் மிகவும் அச்சுறுத்தப் பட்டவளாகவும் தன்னந்தனியளாகவும் உணர்கிறேன்,” என்கிறாய். ஆனால் நீ வாழ்நாள் முழுதும் அறிந்திருக்கும் உன் அப்பா உன்னைத் தடுத்தவாறு எங்கோ பார்க்கிறார் உன் பெண்ணுடல் அவர் கண்களைச் சுடுகிறது நீ பதினேழு வயதினள் ஆனாலும் உன் தாய் உன்னைக் கடிந்து கொள்கிறாள் தன் இயல்பான திறமையுடன் – “அது சரியல்ல, கேட்கவே வேண்டாம். அவர்களைப் போன்றவர் அல்லர் நாம். எப்போதும் காம இச்சை கொண்டிருக்கும் மிருகங்கள்; நாம் வேறு வகை. நினைவுறுத்திக் கொள்வாயா?” எதை நினைவில் வைப்பது, அம்மா ? என் இதயம் விரைந்தோடும் குதிரை. என் ரத்தம் துள்ளி ஓடுகிறது கணைகள் பறக்கின்றன நாளெல்லாம். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தம் காருக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிச் சல்லாபிக்கையில் அவர்களின் பரிகாசத்துக்கு இலக்காகிறவள் நான். நீ பதினேழு வயதினள். மேலும் கன்னிமை இழந்தவள் அவர்கள் உனக்குப் பயண ஏற்பாடு செய்கிறார்கள், வேறு நாட்டிலுள்ள உன் சொந்த ஊருக்கு. அங்கே உன் உண்மையான ஆரம்பங்களின் வேர்களை அறிந்து கொள்ளக் கூடும். சுட்டெரிக்கும் புழுதிக் காற்றில் , உன் தொடைகள் வியர்வையில் நனைந்திருக்க, சரித்திரம் கசிந்து கொண்டிருக்கும் கடைத்தெருக்கள் வழியே நீ நடக்கிறாய். ஒரு கை உன் முலையைத் திடீரெனப் பிடிக்கிறது. கள்ளத் தனமாக, ஒரு விரல் உன் ஆசன மேட்டைக் கிள்ளுகிறது. நீ பதினேழு வயதினள். கைகளை மடக்கி மூடு திரையாக்கி உன் வெட்கத்துக்குரிய மார்பு வரியைப் போர்த்துகிறாய். வளைந்தும் நெளிந்தும், பாம்புத் தீண்டலை, காம வெறி கொண்ட கண்ணை, மொழி சாராத கண்ணியமற்ற காம அழைப்பைத் தவிர்க்கிறாய். “புதைத்து விடு அம்மா என்னை, ஒரு தொன்மையான குழியில்,” எனக் கதறுகிறாய். *** மூலக் கவிதை ஆசிரியர் வாழ்க்கைக் குறிப்பு : சுனிதா ஜெயின் (1940-2017) படிப்பு : BA MA Ph .D (university of nebraska-Lincoln) கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (ஹிந்தி, இங்கிலிஷ் ) பத்மஸ்ரீ மற்றும் பல விருதுகள் பெற்றவர். மொழி பெயர்ப்புக்கான கவிதை: American Desi and other Poems என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப் பட்டது . மூலக் கவிதை : AMERICAN DESI You are seventeen And your unkissed mouth is bitter With the knowledge That your friends at school Have lost their virginity. At home, you cry, “Holdme, Daddy I am so frightened And lonely.” But he Whom you have known all your life Looks away forbiddingly. Your woman’s body Scalds his eyes. You are seventeen And your mother pickles you With her native skills- “No. Don’t even ask. We are not like them. Always rutting. Such animals: We are different . Remember?” Remember what, mother? My heart’s a horse. My blood trots. The darts fly all day, And when they pound each other In their parked cars The butt of jokes is me. You are seventeen and lost. They arrange a trip to your Origins-another country. There you may learn the roots Of your real beginning. In the hot dusty wind, Your thighs moist with sweat. You walk through bazaars Oozing history. A hand grabs your breast Surreptitiously, a finger Pinches your butt’s reef. You are seventeen. You fold your arms Like a scarf over your shameful Bust line. You wriggle free Of the snacking touch,the leering Eye, the lewd calls in a language With broken hinges. “Bury me , mother,” you weep, “In some ancient pit of time”. https://solvanam.com/2020/03/21/சுனிதா-ஜெயின்-கவிதை/
 22. கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டுமா? மைக்கேல் ராபர்ட் பிபிசி சுகாதார பிரிவு ஆசிரியர் Getty Images உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். ஆனால் தற்போது நிலவும் நெருக்கடி சூழலில் 12 வாரங்கள் தங்களை தானே வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டு தற்காத்து கொள்ளும் புதிய திட்டம் பலரால் முன்னெடுக்கப்படுகிறது. உயிரைக்காக்கும் இந்த புதிய திட்டத்தை ஷீல்டிங் என்று அழைக்கின்றனர். பிரிட்டனில் இந்த ஷீல்டிங் முறையை பலர் பின்பற்ற துவங்கியுள்ளனர். கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம் Pandemic என்றால் என்ன? கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? முறையாக கை கழுவுதல் எப்படி? கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும் ஷீல்டிங் என்றால் என்ன ? ஷீல்டிங் என்றால் நாள் முழுக்க வீட்டில் இருக்க வேண்டும். கடைகளுக்கோ, பொது இடங்களுக்கோ செல்ல கூடாது. ஆனால் உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் வீட்டிற்குள் உங்களை தவிர யாரும் வர அனுமதிக்கக்கூடாது. உங்களை கவனித்துக்கொள்ள யாரையாவது அனுமதித்தால் அவர்களும் தங்கள் கைகளை கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். Getty Images உங்கள் வீட்டில் உள்ளவர்களும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவர்களும் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. தங்கள் அலுவலக பணிகளை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். அவர்களிடம் இருந்தும் நிங்கள் இரண்டு மீட்டர் தூரம் விலகி இருக்க வேண்டும். வீட்டில் உள்ள ஜன்னல்களை திறந்து வைத்துக்கொள்ளலாம். ஒருவர் பயன்படுத்திய துணியை வேறுயாரும் பயன்படுத்த கூடாது. முடிந்தால் தனித்தனி கழிப்பறைகள் மற்றும் படுக்கை அறைகளை பயன்படுத்தலாம். அல்லது கழிப்பறைகளை பயன்படுத்திய பின்னர் நிச்சயம் சுத்தம் செய்ய வேண்டும். சமையலறையில் இருந்து சமைத்து முடித்துவிட்டு, உணவை எடுத்து சென்று உங்கள் அறையில் அமர்ந்து உண்ணவும். உணவு சமைக்க தனித்தனி பாத்திரங்களை பயன்படுத்தவும். ஆனால் சோப், அல்லது தண்ணீர் ஊற்றி கழுவினால் வைரஸ் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது. Getty Images கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அனைவரும் பழகும் விதத்தையே மாற்றியுள்ளனர். ஒருவரிடம் இருந்து மற்றொவர் விலகி இருக்கின்றனர். நோய் தொற்று பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் உலகவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஏற்கனவே உடலில் பிரச்சனை உள்ள நபர்கள் இந்த நேரத்தில் தங்களை தற்காத்து கொள்வது அவசியமாக கருதப்படுகிறது. யாரெல்லாம் 12 வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் ? Science Photo Library ஏற்கனவே உடலில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் புற்று நோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுக்கொள்பவர்கள். நோய் எதிர்ப்பு சக்திக்காக மருந்து உட்கொள்பவர்கள். கர்பிணி பெண்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள். சுவாச பிரச்னையுள்ளவர்கள். மிகவும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு, உடலில் எதிர்ப்பு சக்தியும் இல்லாதவர்கள் நிச்சயம் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் உள்ள அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதாவது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால் ஷீல்டிங் முறையை பின்பற்ற வேண்டுமா ? என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்துக்கொள்ளலாம். ஷீல்டிங் என்பது நம்மை நாம் தற்காத்துக்கொள்வதற்கான முயற்சி மட்டுமே. https://www.bbc.com/tamil/global-52006264
 23. தகவல்களை வெளியே கசியவிடாமல் இறுக்கினால் எல்லாம் கட்டுக்குள் வந்தமாதிரித்தான் இருக்கும். புட்டின் இப்போது superhero போல கொரோனாவை அழிக்க தன்னைத் தயார்படுத்தியுள்ளார் என்று பிபிசி செய்தியில் கேட்டேன்!
 24. இத்தாலியில் 8 இலங்கையர்களுக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு இத்தாலியில் வசித்துவரும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அங்கு வசிக்கும் 70 வயதுடைய இலங்கையில் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இததலயல-8-இலஙகயரகளகக-கரன-ஒரவர-உயரழபப/150-247410
 25. தமிழர்களாகிய நாமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் – சிவஞானம் ஸ்ரீதரன் உலகின் பெரிய நாடுகளே அச்சத்தில் உறைந்திருக்க, தமிழர்களாகிய நாமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும். 4 இலட்சத்திற்கும் மேலான மக்கள் இடம்பெயர்ந்திருந்த வேளை 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகக் கூறி அனுப்பப்பட்ட பொருட்களையே பகிர்ந்துண்டு உயிரைக்காத்தவர்கள் நாங்கள்.அதைப்போன்று இருப்பவற்றைக்கொண்டு இல்லாதவர்களுக்கும் பகிர்ந்து பட்டினியில் இருந்தும் கொடூர நோயிலிருந்தும் எம்மை நாமே சுயமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற கொரோகா வைரஸ் இந்த உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.இந்நிலையில் இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தாவடிப் பகுதியில் ஒரு நோயாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 1,700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதனிடையே, வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்தியர்களுடனான சந்திப்பின்போது, எச்சரிக்கையின்றி விட்டால் இரண்டு நாட்களில் இருபது பேரைத் தாக்கும் என வைத்தியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என தற்போது எதிர்நோக்கியுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/தமிழர்களாகிய-நாமும்-மிக/