Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கடலிலே களம் அமைத்துத் துணிகரமாக போராடி வெற்றியினைத்தந்து வீரகாவியமானோர். ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின்எதிர்கால திட்டத்திற்கு அமைவாக அவரது ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் வழங்கல் அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில், 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப் கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தவேளையில் 55 கடல்மைல் தூரத்தில் இலங்கைக் கடற்படையின் டோறாப் பீரங்கிப் படகுகள் வழிமறிக்கமுற்பட்ட வேளையில் அக்கடற்படையினருடன் சண்டையிட்டு வந்து கொண்டிருந்தனர். அதே சமயம் தளபதி நிறோஐன் அவர்கள் தலைமையிலான சண்டைப்படகுகள் வந்து கடற்படையினரை வழிமறித்து தாக்குதல் நடாத்தி வழங்கல் படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த வேளையில், காங்கேசந்துறையிலிருந்து வந்தடோறாப்படகுகள் கப்டன் ஈழமைந்தன் அவர்களின் வழங்கல் படகை வழிமறிக்க முற்பட்டவேளையில் அக்கடற்படையினருடனான மோதலில் ஈழமைந்தனின் படகு பற்றி எரிந்து கடலில் மூழ்கியது. (ஈழமைந்தனின் படகு அன்றையதினம் எரிபொருள் ஏற்றிக்கொண்டு வந்தது .)தொடர்ந்து மேலதிகமாக வந்த பலடோறாப்படகுகளுடன் .தளபதி நிறோஐன் அவர்களின் சாதுர்யத்தால் (அதாவது கடற்படை வழங்கல் படகின்மீது தான் தாக்குதல்களை மேற்கொள்வான் ஏனெனில் வழங்கல் படகுகள் பொருட்களை ஏற்றி வருவதால் வேகம் குறைவாகத்தான் வரும் .ஆகவே சண்டைப்படகுகள் டோறா மீது தாக்குதல் நாடத்தி தூரத்திற்க்கு கலைத்தவிட்டு சண்டைப் படகுகள் வழங்கல் படகுகளின் வேகத்திற்கு ஏற்றமாதிரி வந்தார்கள்.இதனால் கடற்படைக்கு வழங்கல் படகுகளை இன ங்காணுவது மிகவும் இயலாதநிலையில் இருந்தது.இவ்யுக்தியைக் கையாண்டார் தளபதி நிறோஐன் அவர்கள்.) ஏனைய வழங்கல் படகுகள் பாதுகாப்பாக சாலைத் தளம் வந்தடைந்தது இந்நடவடிக்கையில் கடற்புலிகளின் பிரதான கட்டளைத் தளமான சாலைத் தளத்தின் ராடர் கட்டளைத்தளத்தின் பொறுப்பாளராகவும் வழங்கல் தொகுதிக் கட்டளை அதிகாரியுமான லெப் கேணல் தர்சன்/ தேவநேயன் உட்பட பதினொரு போராளிகள் அன்றைய தினம் கடலிலே காவியமானார்கள். லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்) முத்துக்குமார் கலைஞானசேகர் ஆழியவளை, தாழையடி, யாழப்பாணம் மேஜர் குணசீலன் மார்க்கண்டு கந்தசாமி அரசடி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு மேஜர் இமையகாந்தன் சண்முகம் சத்தியசேகர் சிலாவத்தை, முல்லைத்தீவு கப்டன் பருதி சின்னத்தம்பி ஜெகதீஸ்வரன் புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம் கப்டன் புதியவன் நித்தியானந்தம் உதயகுமாரன் ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் கப்டன் ஈழமைந்தன் நவரட்ணம் நவதீபன் குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி கப்டன் வான்கவி குமாரசாமி செல்வரஜினி கரணவாய் கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் லெப்டினன்ட் காண்டீபன் (ஈழவன்) அன்ரனிதாஸ் றொனால்ட் மாத்தளை, சிறிலங்கா 2ம் லெப்டினன்ட் தமிழீழவள் சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம் 2ம் லெப்டினன்ட் எழில்வள்ளி அற்புதலிஙகம் சுகிர்தா தொல்புரம் மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம் வீரவேங்கை மலையரசி காந்தீபராசா சகுந்தலாதேவி சங்கானை கிழக்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம் லெப். கேணல் தர்சனுக்கு ஏற்கனவே இரு சகோதரர்கள் மாவீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் அனைத்து நடவடிக்கைகளையும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் சாலைத் தளத்திலிருந்து வழிநடாத்தினார்.தொடர்ந்து படகுகளிற்க்கு பொருட்கள் வழங்கிய கப்பலை பற்றிய தகவல்களை இலங்கைக் கடற்படையினர் இந்தியக் கடற்படையினருக்குத் தெரிவித்தனர். அதற்கமைவாக 01.05.1999 அன்று மாலை இந்தியக்கடற்படையினர் இந்திய விமானப்படையின் உதவியுடன் பின்தொடர்ந்து கப்பலிலிருந்தவர்களை சரணடையச் சொல்லியும் எச்சரிக்கை வேட்டுக்கைளைத்தீர்த்தும் .கப்பலிலிருந்தவர்கள் தங்களைத் தாங்கள் அழிக்கவேண்டும் இல்லையேல் தங்களிடம் சரணடையவேண்டும் இதில் எதையாவது ஒன்றைச் செய்யவேண்டும் .என்பதற்காக கடும் அழுத்தத்தைத் தொடுத்தனர்.ஆனாலும் போகும் வரை போவோம் இல்லாவிட்டால் முடிவெடுப்பம் என்ற கப்பல் தலைவரின் உறுதிமிக்க செயற்பாட்டாலும் தலைவர் அவர்களின் ஆலோசனை மிக்க செயற்பாட்டாலும் .05.05.1999 அன்று இவர்களின் கப்பலானது கப்பல்கள் செல்லும் பிரதான பாதைக்குச் சென்று மற்றக் கப்பல்களுடன் சென்றபோது, ஏற்பட்ட காலநிலைமாற்றத்தால் உண்டான கடற்கொந்த ளிப்பால் இந்தியக் கடற்படையால் இவர்களது கப்பலை அடையாளம் காணமுடியாமல் போனதால் இவர்களது கப்பல் தங்களது பாதையில் சென்றது.உண்மையில் இந்த ஐந்து நாட்களும் கப்பலிலிருந்தவர்கள் தாங்களும் கப்பலும் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதில் உறுதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.கப்பல் தவைரின் செயற்பாடும் மிகவும் அளப்பரியது .கப்பல் தலைவரின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டால் தான் அன்றைய பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டது எனச் சொன்னால்.அது மிகையாகாது. எழுத்துருவாக்கம்..குணா. https://www.thaarakam.com/news/c2a57426-f787-4ba3-bdd3-5b1cb5c04ede
  2. பருத்தித்துறைப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ். பரதரராஜன் தியாகராஜா ஆத்தியடி, பருத்தித்துறை 12.9.1969 - 1.5.1989 நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...! என்றான். அவன் தான் மொறிஸ். 1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத்துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான். நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன. சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான். பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு. முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு. ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக் கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான். அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக M.O (Mines operator) என்று அழைப்பார்கள். 1987 ம் ஆண்டு யூலை 29 இல் இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் கால் வைத்தது. காந்தி பிறந்த தேசத்திலிருந்து அமைதி காக்க என்று சொல்லி வந்த படை ஆக்கிரமிப்புப் படையாகி புலிகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கியது. தாயக மண் மீட்பே தன் மூச்செனக் கொண்டு வடமராட்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்ட மொறிஸ் மீது ஆக்கிரமிப்புப் படையின் கவனம் காட்டமாக இருந்தது. எப்படியாவது அவனைப் பிடித்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் வெறி கொண்ட நாய் போல அவனைத் தேடி அலையத் தொடங்கியது ஆக்கிரமிப்புப் படை. மொறிஸோ இந்தியன் ஆமியின் கண்ணெதிரில் அகபபட்டும் அவர்கள் பால் தன் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களுக்குள் தான் அகப்படாது மாயமாய் மறைந்தான். ஐந்து தடவைகள் இந்தியப் படைகள் சுற்றி வளைத்த போதும் அவர்கள் கண்களுக்குள் அகபபடாது தப்பித்துக் கொண்டான். அவன் சாதாரண துப்பாக்கி வேட்டுக்களுக்கெல்லாம் அகபடுபவன் அல்ல. ஆறாவது தடவையாக இந்தியப் படையினரால் சுற்றி வளைச்கப் பட்ட போதும் கலங்காது நின்று போராடி வெற்றியும் கண்டான். அவனது நேரடி மோதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பலத்த இழப்புகளோடு தப்பியோடிய இந்தியப் படையினரில் பலர் பதவி இறக்கப்பட்டனர். உலகின் நாலாவது வல்லரசின் இராணுவச் சிப்பாய்கள் மொறிஸ் என்ற நாமம் கேட்டாலே நடுங்கினர். அவன் நாமம் சொன்ன அப்பாவி மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதைப் படுத்தினர். அவன் பெற்றோரை உடன் பிறப்புகளை மைத்துனரை எல்லாம் இராணுவ முகாம் வரை கொண்டு சென்று துன்புறுத்தினர். இதனால் மொறிஸின் மனம் வேதனையில் வாடினாலும் தமிழீழத்தின் மீது அவன் வைத்த நம்பிக்கை எள்ளளவேனும் குறையவில்லை. அவனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று. இந்தியப் படையின் தேடுதல் வேட்டைக்கு நடுவிலும் மொறிஸின் பணிகள் தொடர்ந்தன. இயக்க வளர்ச்சியில் அவன் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த அவன் கப்டன் பதவிவரை உயர்வு பெற்று மிகமிக ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் நடமாடி இயக்க வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எண்ணிலடங்காதவை. வெற்றிகள் பல ஈட்டி அளப்பரிய சாதனைகள் பல புரிந்து மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டான் கப்டன் மொறிஸ். நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானான். தன்சகாக்களை அன்புடன் நேசிப்பதில் அவனுக்கு நிகர் அவனேயானான். இயக்கத்தின் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் அவன் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் விசுவாசத்தையும், போராட்டத்தின் மீது அவன் கொண்டிருந்த தீர்க்கத்தையும் கடைசி நேரம் வரைக்கும் அவன் செய்த செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பருத்தித்துறை வாழ் மக்கள் அவனை மிகவும் நேசித்தனர். அவனும் மக்களை மிகவும் நேசித்தான். ஆனாலும் எட்டப்பர் கூட்டம் தம் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தவறவில்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பரை இல்லாது ஒழித்து அழிக்க வேண்டுமென அடிக்கடி சொன்னான். சொன்னதை அவன் செயற் படுத்தி முடிக்கமுன் எட்டப்பர் சூழ்ச்சிக்கு அவனே பலியானான். அன்று----1989 ம் ஆண்டு. மே முதலாம் திகதி. (1.5.89)- அதிகாலை. மொறிஸ் முதல் நாள் இரவு நீண்ட நேரமாகத் தன் நண்பர்களுடன் சில திட்டங்கள் பற்றிக் கதைத்து விட்டு நேரங்கழித்தே நித்திரைக்குச் சென்றான்.......காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்து தன் கடமைக்குத் தயாரானான். சாப்பாட்டுக்கு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும்:.அதற்கு முன் இயக்க சம்பந்தமான பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருந்ததால் தனது சகதோழர்கள் ஏழு பேர்களுடன் சேர்ந்து அந்தப் பரிசோதனையில் ஈடுபட்டான். அந்த நேரத்தில்தான் அவன் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப் படத் தொடங்கியிருந்தான். தான் ஒரு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப் பட்டு விட்டேன் என்பதோ, தான் அந்த நேரத்தில் சுற்றி வளைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவன் அதை அந்த இடத்தில், அந்த நேரத்தில் துளியும் எதிர்பாராது தன் கடமையில் கவனாமாயிருந்தான். 500க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் அவன் இருந்த வீடு இருந்த பகுதியை வரைபடத்துடன் சுற்றி வளைத்திருந்தனர். அவன் மீது நேசமும் பாசமும் கொண்ட பருத்தித்துறை வாழ் மக்கள், அவனுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க ஓடி வந்தனர். அவன் விடயத்தில் பலமுறை தோல்வியைத் தழுவிக் கொண்ட இந்தியப் படையினர் ஓடி வந்த மக்களை மேற் கொண்டு நகர விடாது அவ்விடங்களிலேயே அதாவது தெருவீதியிலேயே இருத்தி விட்டனர். சுற்றியுள்ள காணிகள், வீடுகள், வீதிகள் என்று எல்லா இடங்களிலும், எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்தியப் படையினர் நிறைந்து சுற்றி வளைத்திருந்தனர். நடுவில் மொறிஸ் தன் சகாக்களுடன் தனது பணியில் ஈடுபட்டிருந்தான். தான் காட்டிக் கொடுக்கப் பட்டதையும், சுற்றி வளைக்கப் பட்டிருப்பதையும், தன்நிலையையும் அறிந்த போது மொறிஸ் சிறிதும் கலங்கவில்லை. அஞ்சி ஓடவில்லை. தன் மெய்ப்பாது காவலனையும், காவல் கடமைக்குப் பொறுப்பான போராளியையும் மட்டும் தன்னுடன் நிற்கச் சொல்லி விட்டு இந்தியப் படையை நோக்கிச் சுட்டவாறே "நான் ஒரு கை பார்த்திட்டு வாறன். நீங்கள் ஓடுங்கடா" என்று கத்தினான். அவன் கட்டளைப் படி மிகுதி ஐவரும் அவன் சொன்ன பாதை வழியே சுட்டுக் கொண்டு ஓடினர். மொறிஸ் தொடர்ந்து இந்தியப் படையுடன் நேரடியாக மோதினான். அவனது துப்பாக்கி ரவைகள் இந்தியப்படையில் மூன்று பெரியவர்களைச் சுட்டு வீழ்த்தியது. இந்த நேரம் இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் போராளி சிறீதரன் (வெள்ளை) பலியானான். மொறிஸ் தொடர்ந்து போராடினான். இந்தியப் படையினர் சரமாரியாகச் சுட்ட சூடுகள் அனைத்துக்கும் தப்பித் தப்பிப் பாய்ந்த படி, அவர்களைச் சுட்டவாறே அவன் அடுத்த காணிக்குள் பாய முற்பட்டான். அந்த வேளையிலேயே பின் காணி முழவதும் இந்தியப்படை நிற்பதை அவதானித்தான். இந்த நிலையிலுங் கூட அவன் கலங்கவில்லை. தொடர்ந்து அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டும் அவர்களின் சூட்டிலிருந்து தப்பிக் கொண்டும் இருந்தான். துப்பாக்கி ரவையினால் அவனை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த இந்தியப் படையினர் அவன் நின்ற இடத்தைக் குறிபார்த்து பசூக்கா ஷெல்லும் அடித்து கிரனைட்டையும் எறிந்தார்கள். ஷெல் துண்டுகள் அவன் மார்பையும் தலையையும் பதம் பார்க்க கரும்புகை மண்டலத்துக்குள் இரத்த வெள்ளத்தோடு மண்ணுக்கு வித்தானான் மொறிஸ். பின் அவனின் மெய்ப் பாது காவலன் ஜெகேசன் (லெப். ரம்போ)இன் உடலையும் சல்லடையாக்கினர் இந்தியப் படையினர். மாவீரர்களான மொறிஸ், ரம்போ, வெள்ளை மூவரையும் இழந்து நாடே அழுதது. மொறிஸை விண்ணுலகுக்கு அனுப்பிய இந்தியப் படையினருக்குப் பதவி உயர்வாம்! விருந்தாம்! தங்கப்பதக்கமாம்! மொறிஸ் நாட்டில் மக்களுடன் மக்களாக நின்று போராடி மண்ணுக்கு வித்தானான்.மொறிஸின் தம்பி மயூரன் காட்டில் தலைவர் அருகில் நின்று- பின்னர் பூநகரிச் சமரில் 11.11.93 இல் மண்ணுக்கு வித்தானான். -எரிமலை https://www.thaarakam.com/news/522cc61b-7dbb-48bf-91bb-860ee7827570
  3. வெளியில் தெரியாத வேர் கேணல் மனோ மாஸ்டர் அவர்களின் வீரவணக்க நாள் April 29, 2021 கதிரவேல் சந்திரகாந்தன்-திருகோணமலை- கேணல் மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்திய படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த இறுக்கமான கொள்கையுடையாவராக இருந்தார்.மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பெறப்பட்ட பல்வேறு போரியல் வெற்றிகளுக்கு மட்டுமன்றி தமிழீழப் பரப்பெங்கும் களமாடிய ஜெயந்தன் படையணியின் வெற்றிகளுக்குப் பின்னாலும் இந்த மனிதரின் உழைப்பு உயர்ந்து நிற்கிறது.ஜெயசிக்குறு படைநடவடிக்கை காலத்தில் அவர் வன்னியில் நின்றபோது ஜெயந்தன்,அன்பரசி படையணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் மட்டுமன்றி பல்வேறு படையணிகள்,பிரிவுகளுக்கும் தனது தனது படைத்துறை பங்களிப்பை வழங்கினார்.முன்னாள் உயர்தரக் கணித ஆசிரியரான இவர் பௌதீகம்,வேதியல் பாடங்களிலும் சிறந்த அறிவைக்கொண்டிருந்தார். இதனால்தான் அவரால் போராளிகளை அரச மருத்துவர்களாகக் கூட ஆக்கிக்காட்ட முடிந்தது. தமிழ் அடிச்சுவடி அறியாத பல போராளிகளை இந்த மனிதரால் ஆங்கிலம் கூட பேசவைக்க முடிந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நாட்களில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டார். அவரது பணிகளில் சில இன்றுவரை நீட்சி பெறுவது அந்த மனிதரின் அன்றைய உழைப்பின் வெளிப்பாடு.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக கடினமாக உழைத்து 29.04.2009 அன்று முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மிக எளிமையான இந்த மனிதன் பற்றிய விரிவான பதிவொன்றை வலராற்றில் பதிக்கவேண்டியது இந்த போராட்டத்தில் அவருடன் பயணித்த அனைவரினதும் கடமையாகும். குறிப்பு – கேணல் மனோகரனுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தன், விழுப்புண் அடைந்திருந்தது பின்னர் வீரச்சாவடைந்த கேணல். கீர்த்தி ஆகியோரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் நிறுத்தி அவர்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம். https://www.meenagam.com/வெளியில்-தெரியாத-வேர்-கே/
  4. இனிய தோழர் புரட்சிக்கு மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  5. எதிரிக்குப் பேரிடி கொடுத்த லெப்.கேணல் நிர்மா .... லெப்.கேணல் நிர்மா ஞானாந்தன் மேரிசாந்தினி கனகபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 23.09.1973 வீரச்சாவு: 28.04.2001 கிளிநொச்சி பளை பகுதியில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம், இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர். ‘ஜீவன்’ கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப்.கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி) யிடம் படையியற் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த மகளிர் படையணியின் அந்த அணிக்கு, தாம் பயிற்சி முடித்துப் போய் அடித்துத்தான் கோட்டையைப் பிடிப்போம் என்று சொல்லிச் சொல்லி பயிற்சி எடுத்த அந்த அணிக்கு வெற்றிக் களிப்பையும் மீறி கவலை வந்தது. “எப்போது எங்களுக்குச் சண்டை?” எல்லோர் மனதிலும் இதே கேள்விதான். “நீங்கள் வரப்போறீங்கள் எண்ட பயத்திலேயே அவன் ஓடி விட்டான்.” பயிற்சியாசிரியர்கள் கேலி செய்தனர். “நாங்கள் போக முதலே இப்பிடியெண்டால், போயிருந்தால் என்ன நடந்திருக்கும்” என்று வீரம் பேசிச் சமாளித்துக் கொண்டனர் லெப்.கேணல் நிர்மா முதலான பயிற்சியாளர்கள் சண்டை ஒன்று வராமலா போகும் என்று தம்மை ஆறுதற்படுத்திக் கொண்டனர். அது இரண்டாம் ஈழப்போர்க் காலம். களங்கள் விரித்திருந்தன. பலாலிப் படைத்தளம் போராளிகளால் காவலிடப்பட்டது. கட்டுவன், வீமன்காமம் போன்ற பகுதிகளில் நிர்மாவும் நின்றார். இயல்பிலேயே ஆளுமையைக் கொண்டிருந்த நிர்மா தொடக்கத்திலேயே சிறு அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரிதும் பேசப்பட்ட எமது முதலாவது மரபு வழிமுறைப் போரான ஆனையிறவுத் தளம்மீதான ஆகாய கடல் வெளிச் சமருக்கும் அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராகவே போயிருந்தார். ஆனையிறவு எமது கையிலவிழாமல் தடுக்குமுகமாக வெற்றிலைக் கேணியில் தரையிறங்கி, ஆனையிறவு நோக்கி நகர்ந்த படையினரை வழிமறித்து வழிமறித்து நடந்த சண்டைகளின்போது புல்லாவெளியில் காயமடைந்தார். காயம் ஆறியதும் கண்ணி வெடிகள் தொடர்பான சிறப்புப் பயிற்சியில் கண்ணிவெடி அணியாகப் பயிற்சி முடித்து தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் வழங்கப்பட்ட சின்னங்களுடன் பணி செய்வதற்காய் வெளியேறினார். அதன் பின் தொடர்ந்த “கஜபார” எதிர் நடவடிக்கை (1992), “பலவேகய – 0”2 எதிர் நடவடிக்கை (1992) என்றவாறாக அவரின் களங்கள் தொடர்ந்தன. 1992ல் தொண்டமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான 150 காவலரண்கள் தகர்ப்பு நடவடிக்கைக்கு முன்னரான ஒழுங்கமைப்புக்களின்போது பகல் நேர கண்காணிப்பிற்கென ஒரு பகுதி நிர்மாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் எமது வேவு அணிகளுடன் முன்னகர்ந்து, தாக்குதல் அணிகள் உள்நுழையவுள்ள பாதைகளில் கிடக்கும் எதிரிகளின் கண்ணிகளை அகற்றுதல், பகலில் தொடர்ச்சியாக மழையில் நனைந்து வெயிலில் காய்ந்தவாறு கண்காணித்தல், மறுபடி இரவு கண்ணிவெடி அகற்றல் என்று கடைசி ஐந்தாறு நாட்களிலும் ஓய்வேயில்லாத கடும் பணி. இடையில் நிர்மாவின் அணியை வந்து பார்த்த நிர்மாவின் பொறுப்பாளர், எல்லோரையுமே பின்னணிக்குப் போய்க் குளித்துவிட்டு வருமாறு பணித்தார். பகல் நேரக் கண்காணிப்புத்தானே என்று முழுப் பேருமே போகாமல் தன்னோடு ஒருவரை நிறுத்திக்கொண்டு ஏனையவர்களைக் குளிக்க அனுப்பினார் நிர்மா. சண்டை தொடங்க இன்னும் ஓரிரண்டு நாட்களே இருக்கும் போது தமது கவனக்குறைவால் ஏற்படப்போகும் சிறு தவறுகூட நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாகவே இருந்தார். நிலைமை சிக்கலில்லை என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு நிர்மாவுடையது. பலாலி விமானத் தளப் பகுதியினுள் பகலில் நடமாட்டம் கூடுதலாக இருப்பதால், சாப்பிடுவதற்குக்கூட மரத்தை விட்டு இறங்காமல் தொலைநோக்குக் கருவியால் கண்காணித்தவாறே இருந்தார். சண்டை தொடங்கும்போது நிர்மாவுக்கு பின்னணியில் நின்று காயக்காரர்களை வெளியேற்றும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகச் சண்டையில் தன் பங்கு இல்லை என்பது நிர்மாவால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. இருளில் நகர்ந்து கொண்டிருந்த அணிகளுடன் சேர்ந்து நகரத் தொடங்கிய நிர்மாவை அவரின் பொறுப்பாளரின் கூர்மையான விழிகள் கண்டுகொண்டன. உடனடியாகவே ஆளைப் பின்னணிக்கு அனுப்பி விட்டார். சண்டை தொடங்கி முதற்தொகுதி காயக்காரர்களைப் பின்னணிக்கு நகர்த்திக் கொடுத்து விட்டு காவும்குழு மறுமுறை முன்னணிக்கு நகர்ந்தபோது நிர்மா அவர்களோடு இணைந்து கொண்டார். 1993ல் ஆனையிறவிலிருந்து ‘யாழ்தேவி’ நடவடிக்கையில் திருப்பி அனுப்பப்பட்ட வழியெங்கும் படையினர் விதைத்துச் சென்ற கண்ணிகளை அகற்றும் பணியில் நிர்மாவின் அணியும் ஈடுபட்டது. கண்ணிகளை அகற்றும்போது, வெடிக்காமல் விழுந்து கிடந்த எறிகணைகளையும் அகற்றினர். எறிகணைகளைக் கையாளுவது வேறு தனியான அணியினரின் வேலையாக இருந்தபோதும், அது மக்கள் வாழ்ந்த பகுதி என்பதால் திடீரென வருகின்ற மக்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க முயன்றார் நிர்மா. தன் அணியினரைக்கூட அனுமதிக்காது தானே எறிகணைகளை அகற்றினார். வேலைகளைப் பார்வையிட வந்த பொறுப்பாளர் நிர்மாவை மிகவும் கண்டித்து, “வெடிக்காமல் கிடக்கும் எறிகணைகளை எடுக்க உங்களுக்கு அனுமதியே இல்லை” என்று கடுமையாகச் சொல்லும் வரை நிர்மா எறிகணைகளையும் சேர்த்தே அகற்றினார். அதன் பின் எறிகணைகளருகே அடையாளத்துக்காகத் தடிகளைக் குத்தி விட்டு, எழுதுமட்டுவாளிலிருந்து கறுக்காய் வரையான பகுதிக்குள் கண்ணிவெடிகளை அகற்றினார். ஆனால் அந்த வேலை முடிந்ததும் தானாகவே பொறுப்பாளரிடம் கேட்டு, வெடிக்காத எறிகணைகளை அகற்றும் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். இதுதான் நிர்மா. தனக்குத் தெரியாது என்று எதையுமே விட்டு வைக்க எப்போதுமே அவர் விரும்பியதில்லை. இதன் பின் பூநகரிப் படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் பங்கு கொண்டு, அங்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி செய்தார். இவரது பணியைப் பல களங்கள் வேண்டி நின்றன. “சூரியக்கதிர் – 01” எதிர் நடவடிக்கைக் களமுனையில் கண்ணிகளை விதைக்கும் பணியை இவரின் அணி செய்தது. அது மிகவும் நெருக்கடி மிகுந்த களம். ஒவ்வொரு நாளும் களமுனை இடம் மாறிக்கொண்டேயிருக்கும். சண்டையின் நிலைமைக்கேற்ப, சண்டையணிகளின் நகர்வுக்கேற்ப நிலக்கண்ணிகளை விதைப்பதும், வரைபடத்தில் குறிப்பதும், அணிகள் இடம் மாறும்போது அகற்றுவதும், மறுபடி விதைப்பதுமாக மிகச் சிரமமான பணி அது. கண்ணிவெடி அணியினரின் கைகள் காய்த்து விட்டிருந்தன. இடர்கள் நிறைந்த “சூரியக்கதிர் – 01” களமுனையில் நிர்மா காயமடைந்தார். காயம் ஆறிய பின் புதிய அணி ஒன்றுக்கு கண்ணிவெடிகள் பற்றிய பயிற்சிகளை வழங்கும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில், சூரியக் கதிர் – 02 களம் நிர்மாவை அழைத்தது. அங்குலம் அங்குலமாகத் தடவி ஆயிரம் ஆயிரம் கண்ணிகளை அகற்றி, பயமின்றி மக்கள் நடமாட வழிவகுத்த பெரும் பணியில் நிர்மாவின் பங்கு முக்கியமானது. வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக்கைச் சமர்முனையில் கண்ணி வெடிப்பிரிவின் பகுதிப் பொறுப்பாளராகப் பணியாற்றிய கடினமான அந்த நாட்கள்… “ஓயாத அலைகள் – 02” கிளிநொச்சி மீட்பு நடவடிக்கையில் ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியின் கண்ணிவெடிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். எறிகணை வீச்சிலே தலையில் காயமடைந்தார். தொடர்ந்தும் எறிகணை வீச்சிலேயே நிர்மா காயமடைவதைத் தோழிகள் கேலி செய்தார்கள். “எறிகணைக்கு என்மேல் அத்தனை அக்கறை. அதுதான் தேடிவருகிறது.” என்று சிரித்தார் நிர்மா. விடுதலைப் புலிகள் மகளிர் படையணியோடு இருந்த கண்ணிவெடி அணி, பின் மாலதி படையணியின் கண்ணிவெடிப் பிரிவாகி, பின் 1999.04.28ல் லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி மகளிர் அணியாகப் புதுத்தோற்றம் பெற்ற போது நிர்மா அந்த அணியின் 2வது பொறுப்பாளராக எமது தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி அணியை விரிவாக்கம் செய்யவென வந்திருந்த புதிய போராளிகளின் தொடக்க படையியற் பயிற்சியையும், மேலதிக சிறப்புப் பயிற்சியையும் நேரடிப் பொறுப்பெடுத்துச் செய்தார். இன்று களமெங்கும் பரந்து நிற்கும் கண்ணிவெடி மகளிர் அணியின் அடித்தளம் சின்னச்சின்ன விடயங்களில் கூட கவனமெடுத்து நிர்மா போட்ட அடித்தளம். பயிற்சி முடித்த புதிய அணி பணி செய்யப் புறப்பட்ட போது நிர்மா கண்ணிவெடி மகளிர் அணியின் நிர்வாகப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தார். அலை மூன்றில் நாம் ஏறி, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சிக்குள் படை நகர்த்தி எம் பலத்தை பகைவருக்கு உணர்த்திக் கொண்டிருந்த நாட்கள் அவை. களங்கள் அகல விரிந்திருந்தன. பளைப் பகுதியில் கண்ணிவெடி சார்ந்த வேலை களுக்குப் பொறுப்பாக நிர்மா நின்றார். ஓயாத அலைகள்- 01, 02, 03, 04 எல்லாவற்றிலுமே நிர்மாவின் பங்கு கணிச மாக இருந்தது. நாங்கள் அமைதியாக இருந்தோம். பகைவரோ பரபரப்பாக இருந்தனர். ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை நான்கு மாதங்கள் வரை பொறுமையாக நீடித்தோம். பகைவரோ போர் நிறுத்த மீறல்களிலேயே காலத்தை நீடித்தனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த அந்த நாளில், பகைவரின் பெரும் எடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையைத் தடுப்பதற்குத் தயாராக நாம் நின்றோம். அந்நிய நாட்டு நிபுணர்களின் ஆலோசனையோடும், அவர்கள் வழங்கிய ஆயுத, உபகரண உதவிகளோடும் சிறிலங்காப் படைத்தரப்பினர் ஆனையிறவில் சிங்கக் கொடி பறக்கவிடும் கனவோடு செய்த தீச்சுவாலை- 01 படை நடவடிக்கையை எமது பெரும் பலத்தால் மூன்றே நாளில் அணைத்தோம். படையினர் பலர் எறிகணைகளாலும் கண்ணிவெடிகளாலும் பெருமளவில் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் படை அதிகாரிகள் தெரிவிக்கும் அளவுக்கு, களத்திலே நிர்மாவின் பங்கு பாரியது. இப்படி இப்படியெல்லாம் கண்ணிகளை விதைக்குமாறு எமது தலைவர் அவர்கள் தயாரித்த திட்டத்தை, தனது அணியினரை வைத்துச் செவ்வனே செய்து முடித்த நிர்மா, “எறிகணைகளாலேயே எப்போதும் காயமடைகின்ற நிர்மா, “எறிகணைக்கு என்மேல் அவ்வளவு அக்கறை . அதுதான் தேடி வருகிறது” என்று சிரிக்கின்ற நிர்மாவைத்தேடி அந்த எறிகணை, கடைசி எறிகணை வந்தது. “தீச்சுவாலை- 01” எதிர் நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்து, அணிகள் மீளமைக்கப்பட்டு, எரிந்த வேலிகளும் சிதைந்த காப்பரண்களும் போராளிகளால் திருத்தப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில் இந்தச் செய்தி வந்தது. நிர்மா எங்களோடில்லை. கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரி தனது பழைய மாணவியை, ஒரு கூடைப் பந்தாட்ட வீராங்கனையை இழந்தது. இழப்புக்கள் எப்போதுமே துயரத்தைத் தருபவை. ஆனால் உலகத்தில் எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமலும், ஈகங்கள் புரியாமலும் விடுதலை பெற்றதில்லை. எமது தலைவர் அவர்கள் சொல்வது போல் மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை – அவர்களது அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள்- இவை எல்லாவற்றினதும் ஒட்டு மொத்த வெளிப்பாடாகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. ஆக்கம்: செந்தூரநிலா சுதந்திரப்பறவைகள் (ஐப்பசி – கார்த்திகை 2002) https://www.thaarakam.com/news/898b373c-c590-4d28-8ed1-4b73861eb14d
  6. இப்பவும் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இவர் கருணா பிளவுக்கு முன்னர் புலிகளுடன் வேலை செய்தவரா?
  7. 22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. 22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும்புக்கு அனுப்பும்வகையில் பாரவூர்திகளில் செல்லுபவர்களிடம் தங்ககவிடுதிகளில் உள்ள படையினரும் துறைமுகப்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காவலரனில் உள்ள படையினரும் பல்வேறு தொந்தரவுகளில் ஈடுபட்டனர். இப்படையினர் மீது ஒருதாக்குதல் நடாத்தவேண்டிய நிலைக்கு விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர். அதற்கமைவாக அப்போதைய யாழ்மாவட்டத்தளபதி ராதா அவர்களினால் துரிதகதியில் வேவுத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வேவுத்தரவுகளை தலைவர் அவர்களிடம் கொடுத்தார்.தளபதி ராதா அவர்கள். வேவுத்தரவுகளை பார்த்து அதன் சாதக பாதக நிலைகளை தளபதி ராதா அவர்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பாளர்களில் பெரும்பாலானவர்களை இத்தாக்குதலுக்கு அனுப்பிவைத்ததுடன் இத்தாக்குதலுக்கான பயிற்சிகளை வடமராட்சியில் நடாத்தும்படி தளபதி ராதா அவர்களிடம் கூறிப்பிட்டார் தலைவர் அவர்கள்.அதற்கமைவாக பயிற்சிகள் வடமராட்சியில் நடைபெற்றன பயிற்சிகளை தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதலுக்கான திட்டம் தளபதி ராதா அவர்களினால் விளங்கப்படுத்தப்பட்டன. அதற்கமைவாக இரண்டு பாரவூர்தியில் சென்று திகைப்பூட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பிவருவதே திட்டமாகும் .ஒரு பாரவூர்தியில் சொர்ணம் (சொா்ணம் அவர்கள் அந்தக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் பிரிவிற்க்கு இரண்டாவது பொறுப்பாளாரக இருந்தார் இவரே பிரிகேடியர் சொர்ணம் ஆவார் வீரச்சாவு 15.05.2009)அவர்கள் தலைமையில் செல்லும் போராளிகள படையினர் தங்கும் தங்ககம் (விடுதி)மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதேசமயம் மற்றுமொரு பாரவூர்தியில் கப்டன் ஐயா தலைமையில் செல்லும் போராளிகள் காவலரன்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதற்கமைவாக 22.04.1987 அன்று இரவு 10.00 மணியளவில் ஆரம்பித்த இத்தாக்குதல் குறிப்பிட்ட நிமிடத்திற்க்குள் காவலரன்கள் முழுமையான கைப்பற்றப்பட்டதுடன் அக்காவலரனில் உள்ள ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன .அதே சமயம் கண்காணிப்புகோபுரத்திலிருந்த படையினர் இவர்கள்மீது தாக்குதல் நடாத்த இதைக் கவனித்த சுபன்(மன்னார் மாவட்டச் சிறப்புத்தளபதி வீரச்சாவு.25.09.1992 )இன்னொரு போராளியிடம் கூற அவரோ படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆர்.பி.ஐி எடுத்து கண்காணிப்புக்கோபுரத்தின் மீது குறிதவறாமல் தாக்குதல் மேற்கொள்ள கண்காணிப்புக்கோபுரம் தகர்த்தெறியப்பட்டது.அன்று அப்போராளி அக்கண்காணிப்புக்கோபுரத்தின் மீது மேற்கொண்டதாக்குதல் தவறினால் நிலைமை மோசமாகியிருக்கும்.இன்னொரு காவலரனில் போராளிக்கும் படையினருக்கும் கைகலப்பில் படையனரைக் கொன்றான் அப்போராளி இப்படியான பல்வேறு சாகசங்களையும் நிகழத்திய வெற்றிகரத்தாக்குதலில் பன்னிரன்டிற்க்கும் மேற்பட்ட படையினர் கொல்லபபட்டதுடன் அதி நவீன ஆயதங்களும் கைப்பற்ப்பட்ட இவ்வெற்றிகரத்தாக்குதலில்.ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவ் வெற்றிகரகொமாண்டோத்தாக்குதலை அப்போதைய யாழ்மாவட்டத் தளபதி ராதா அவர்கள் காங்கேசன்துறையிலிருந்து வழிநடாத்தினார். இச்சம்பவமானது அக்களமுனையில் களமாடியவரின் உள்ளத்திலிருந்து. இச்சமரில் வீரச்சாவடைந்தவர்கள் விபரம் வருமாறு. கப்டன் பவான்( ஐயா). லெப்ரினன்ட் கிர்மானி. 2ம் லெப்டினன்ட் குணம். 2ம் லெப்ரினன்ட் குலம். வீரவேங்கை தாஸ். வீரவேங்கை சுவர்ணன். https://www.thaarakam.com/news/a8d19f17-1c32-4753-8c38-089c69ea3c29
  8. நானும் அப்படித்தான். அவ்வளவுக்கும் எனது தந்தையார் பெரிய பக்திமான். நல்லதோர் பதிவு. தற்செயலாக உருவான பிரபஞ்சத்தில் தற்செயலாக உருவான பூமிப்பந்தில் தற்செயலாக உருவான உயிரிகளில் நாங்களும் அடக்கம்! எனக்கு தமிழ் கற்பித்த பண்டிதர் சதாசிவம் திருநீற்றுப் பூச்சும், சந்தனப் பொட்டும், பூவும் தவறாமல் இட்டு வருவார். அதேவேளை பாடசாலையில் சைவசமயம் கற்பித்த பண்டிதர் பரந்தாமன் சமயநம்பிக்கை இல்லாதவராக இருந்தபோதும் கணீர் என்ற குரலில் சைவ சமய தத்துவங்களை சொல்லுவார். பக்திக்கு அப்பால் சைவ/இந்து சமய தத்துவங்களில் ஈடுபாடு வர அவரது கற்பித்தல்முறைதான் காரணம்.
  9. போராளிகளை வளர்த்து விடும் ஆசான் லெப். கேணல் சேரமான். லெப்.கேணல் சேரமான் கதிர்காமத்தம்பி சஞ்சயன் இளவாலை வடக்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 27.12.1972 வீரச்சாவு: 21.04.2001 முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் வலிந்த தாக்குதலில் வீரச்சாவு கடற்சிறுத்தை படையணி தளபதி லெப். கேணல் சேரமான் 1991 ஆண்டு பிற்பகுதியில் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சேரமான் கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்து பின்னர் தலைவரின் சிந்தனைக்கு அமைவாகவும் கடற்புலிகளின் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடும் பலகரையோரப் பிரதேசங்கள். கடற்புலிகளுக்கு அரசியல் பணிகளுக்காக வழங்கப்படுகிறது. அந்தவகையில் இவரும் அந்த அரசியல் பணிக்கு செல்கிறாா். 28.02.1992 அன்று யாழ். மாவட்டம் தாளையடிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருக்கு எதிராக ஒரு வலிந்த தாக்குதல் முயற்சி மேற்கொளளப்பட்டது; அம்முயற்சி வெற்றியளிக்காத போதிலும் அம்முற்சியில் நாம் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் கடற்புலிகள் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி ஆரம்பிக்கப்படுகிறது. இவ் பயிற்சிக் கல்லூரிக்கு போராளிகள் உள்வாங்கப்பட்டபோது சேரமானும் உள்வாங்கப்படுகிறார். அங்கு பயிற்சி முடிவடைந்தும் ஆசீர் படையணியில் இணைக்கப்படுகிறாா். (இப்படையணியானது கடல் விநியோகம் மற்றும் கடற் தாக்குதலனியாகவும் செயற்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்திற்க்கும் – வன்னிக்குமான போக்குவரத்துப் பாதையாக செயற்பட்ட கிளாலி நீரேரியில் மக்களுக்கான பாதுகாப்பையும் இப் படையணியினரே வழங்கினர்.) அங்கு ஏனைய பயிற்சிகளைவிட தொலைத்தொடர்புத் துறையில் முன்னனி வகித்ததால், தொலைத் தொடர்புத்துறைக்கு உள்வாங்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதன் பின் போராளிகளுக்கு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்புகள் எடுத்துக் கொண்டிருநத வேளையிலும் கடற்சமர்களில் பங்குகொண்டு தனது திறமையையும் வெளிக்காட்டத் தவறவில்லை. அவ் வேளையில் தான் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச கடற்பரப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த போராளிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் தமிழீழத்தில் முல்லைத்தீவு இராணுவ முகாம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற் சிறுத்தைகளின் பொறுப்பாளரான லெப். கேணல் சேரனின் இடத்திற்க்கு சேரமான் பொறுப்பாளராக 17.09.1996 அன்று நியமிக்கப்படுகிறார். தமிழீழத்தில் நடைபெற்ற பல கடற்சமர்களில் கடற்புலிகளுக்கு உதவியாகவும், தனித்துவமாகவும் இச் சிறுத்தைப் படையணி பங்குபற்றியது. அதன் பின் தலைவரின் கட்டளைக்கு அமைவாக கடற் சிறுத்தைப் படையணி கடற்புலிகளுடன் இணைக்கப்படுகிறது. அவ்வேளையில் தனது படையணியனருடன் கடற்புலிகளுக்கு வந்த சேரமான் கடற்புலிகளின் விநியோகப் பாதுகாப்பிற்கான சமரிலும் சரி கடற்புலிகளால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட வலிந்த தாக்குதலாகிலும் சரி தனது ஆற்றலை வெளிப்படுத்தத் தவறவில்லை. அத்தோடு ஒய்வுநேரங்களில் போராளிகளுக்கு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்புகள் எடுப்பதிலும் தனது கடல் அனுபவமாகிலும் சரி தனது கடற்சண்டை அனுபவங்களையும் நகைச்சுவையோடும் சொல்லிக்கொடுத்த ஒரு ஆசான். இப்படியாக ஒவ்வொரு விடயத்திலும் போராளிகளை வளர்த்து விடவேண்டும் என்கிற அவா அவனுள் இருந்து இப்படியான ஒரு உன்னத போராளி. 21.04.2001 அன்று எமது விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுககொண்டிருந்த கடற்தாக்குதல் அணிமீது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினரின் வலிந்த தாக்குதலில் இறுதிவரை எப்படி சண்டை பிடித்தார் என அவரது கட்டளைகள் எப்படி இருந்ததென்று கட்டளை மையத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும். இறுதிவரையும் உறுதி தளராமல் பதற்றமில்லாமல் கட்டளைகள் பிறப்பித்தபடி அணிகளை (படகுகளை) பிரியவிடாமல் எல்லோரையும் ஒன்றாக்கியபடி ஒரு மூர்க்கத்தனமாக போராடி லெப். கேணல் சேரமான், மேஜர் ஜீவகன், மேஜர் ஆழியன், மேஜர் கருவேலன், மேஜர் ஆர்வலன், மேஜர் மஞ்சரி, கப்டன் சிவகுமரன் / சந்திரன், கப்டன் உலகநம்பி, கப்டன் மாலினி, கப்டன் மைதிலி / சுரேகா, லெப்டினன்ட் சோலையரசன், லெப்டினன்ட் அறிஞன், 2ம் லெப்டினன்ட் வண்ணன் / ஆனந்தன், 2ம் லெப்டினன்ட் அன்புக்கிளி, வீரவேங்கை செம்பியவண்ணன் ஆகிய வேங்கைகள் வீரச்சாவடைந்தார். https://www.thaarakam.com/news/0639860d-f489-4e74-91b0-52c5d33937a1
  10. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  11. மாவீரன் அன்புவின் 36வது வீரவணக்க நாள் இன்றாகும்! AdminApril 16, 2021 நண்பர்களுடன் உணவருந்தும்போது, எதிர்பாராது கைக்குண்டு கழன்றுவிட, அந்நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக குண்டை தனது வயிறோடு அணைத்து வீரகாவியமான மாவீரன் அன்புவின் 36வது வீரவணக்க நாள் இன்றாகும். ஓ எம் தோழா உன் அன்பான நடத்தையால் உனக்கு அன்பாக நாமிட்ட பெயர் அன்பு. உன்னை இழந்தோம். எம் அன்பை இழந்தோம். அன்பு என்ற பெயரைக் கேட்டு சிலர் உன்னை சிறுவன் என்றோ மிருதுவான தோற்றமுடையவன் என்றோ நினைக்கலாம். 6 அடிக்கும் கூடிய உனது உயர்ந்த தோற்றத்தையும், தினவெடுத்த திரண்ட தோள்களையும் எம்மால் என்றும் மறக்கமுடியாது. உன்னால் பயிற்றப்பட்ட எம் இளைஞர்கள் நீ இறந்த செய்தி கேட்டு உன்மீது கொண்ட அன்பால் அவர்கள் அடைந்த துயர் சொல்லமுடியாது. உன் வீரம் செறிந்த தியாக வரலாறு ஒவ்வொரு மக்களும் அறியவேண்டியது. யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலின்போது குருநகர் இராணுவ முகாமில் இருந்து பொலிஸ் நிலையத்திற்கு உதவி கிடைக்காமல் தடைசெய்யும் பணியை செவ்வனே செய்து முடித்தவன். பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கு முன்பாகவே குருநகர் முகாமுக்கு மிக அண்மையில் சென்று கண்ணிவெடியை நிலைப்படுத்த வேண்டும். இது சரிவர நடந்தேறினால் மட்டுமே பொலிஸ் நிலையத் தாக்குதல் நடைபெற முடியும். இச்செயல் இடையில் குழம்புமானால் பொலிஸ் நிலையத் தாக்குதல் மட்டுமல்ல அதை நோக்கி அசைந்துகொண்டிருக்கும் எம் ஏனைய தோழர்கள் கூட உயிராபத்தை எதிர்நோக்கும் இக்கட்டான நிலைமை. இராணுவத்தினர் இரவு ரோந்துக்கு புறப்படுமுன்னர் கண்ணிவெடியை நிலைப்படுத்தவும் வேண்டும். பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கும்வரை அமைதியைப் பேண வேண்டிய பொறுப்பான வேலைக்காக வெடிமருந்து (explosive) தேர்ச்சிபெற்ற அன்பு நியமிக்கப்பட்டான். வெற்றிகரமாக கண்ணிவெடிகளை நிலைப்படுத்திய அன்பு G3A3 என்ற தானியங்கி ரைபிளை தாங்கி பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கியதும், முகாமை விட்டுப் புறப்பட்ட இராணுவத்தினர் மீது G3A3 ஆல் சரமாரியாக ‘இந்தா இந்தா’ என்று சுட்டு அவர்களை விரட்டிய அழகை இப்போதும் தோழர்கள் நினைவுகூர்ந்து கண்ணீர் சொரிகின்றனர். யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கி எமது தோழர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறும் வரை மிகப் பலம் பொருந்திய குருநகர் முகாமில் இருந்து எந்த ஒரு கவச வாகனமோ அல்லது இராணுவப் பிரிவையோ வெளியேறாமல் தடுத்து எம் வெற்றிக்கு உறுதி அளித்தவன் அன்பு. எம்மோடு தங்கி இருக்கும் போது ஒருநாள் அன்பு தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை மெதுவாக வெளியே எடுத்தான். ஒரு நிழற்படம் கையிலிந்து நழுவிக் கீழே நிலத்தில் வீழ்ந்தது. அன்பு அதை எடுத்தான். அவன் நெஞ்சு படபடத்தது. படத்திலிருந்து அவனை நோக்கியது பழக்கமான, அழகிய அவனின் காதலியின் உருவம். சாறி அணிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் இசைந்திருந்தது. ஒடிசலான கொடி இடையுடைய அந்த அந்த அழகிய பெண்ணின் ஒளிவீசும் பெரிய வட்ட விழிகள் அன்பை ஊடுருவும் நோக்குடன் பார்த்துக் கொண்டிருந்தன. அன்பு அந்த விழிகளை நெடுநேரம் நோக்கியவாறு இருந்தான். அவன் உள்ளம் இனந்தெரியாத இனிய சோகத்தால் நிறைந்தது. விருப்பமான சோகப்பாட்டு ஒன்று மாலை வேளையில் தூரத்திலிருந்து கேட்கும்போது உணர்வது போன்ற சோகம் அது. நிழற்படத்தின் மறுபக்கம் அன்பே மறந்துவிடாதே என்று எழுதப்பட்டு இருந்தது அதனுடன் இருந்த கடிதத்தை மீண்டும் படித்தான். கணக்கிட முடியாத தடவைகள் மீண்டும் மீண்டும் படித்ததால் கடிதம் கசங்கி கசங்கி மடிப்புகளில் விடத் தொடங்கி இருந்தது. நிழற்படத்தை மீண்டும் பார்த்தான். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாயா? எதிர்பார்! எதிர்பார்! காதலிக்கிறாயா? காதலி! காதலி! இனியவளே, தமிழீழம் கிடைக்கட்டும். நாம் இன்பமாக வாழலாம் என்று அவன் முணுமுணுத்தது எம் காதுகளுக்கு கேட்டதோ அல்லது நாம் உணர்ந்து கொண்டோமோ தெரியவில்லை. நாம் தாக்குதலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் ரொக்கட் லோஞ்சரை அன்புதான் எடுப்பான். அதை தூக்கிச் செல்லும் உடல் வலுவும் சிறந்த பயிற்சியும் அன்புவிடம் இருந்ததால் அவனை நாம் ‘டேய் லோஞ்சா’ என்று அன்பாக அழைத்தோம். அன்று காலை நாம் எல்லோருமாக காலை உணவருந்திக் கொண்டிருக்கின்றோம். வெளியில் இருந்து வந்த அன்பு தானும் எம்முடன் சாப்பிடுவதற்காக பாயில் இருந்து சாப்பிடத் தொடங்குகின்றான். அவனுடைய பார்சலில் ஒரு வடை இருந்ததைக் கண்ட நண்பன் அதை பாய்ந்து எடுத்தான். அன்பான பறிபாடு, அன்பான ஒப்பந்தம், அன்பான பங்கிடல் மூலம் வடையை பங்கிட்டுக்கொண்டு மிக சந்தோசமாக குதூகலமாக உணவருந்திக் கொண்டிருந்தார்கள். கீழே பாயிலிருந்து சாப்பிடுவதால் தான் இடுப்பில் அணிந்திருந்த கைக்குண்டை அன்பு வெளியில் எடுக்கும்போது கைக்குண்டின் தடை நீக்கப்பட்டுவிட்டது. அன்புவின் முகம் மாறுகின்றது. கைக்குண்டை உடனே வெளியே எறிய வேண்டும். வெளியிலும் தோழர்கள் அமர்ந்திருந்தனர். உடனே தன்னுடைய வயிற்றோடு குண்டை அணைத்துக்கொண்டான். வெடியதிர்வுகளோ, அல்லது குண்டுச் சிதறல்களோ மற்றைய தோழர்களை பாதிக்கவிடாமல் அவை அனைத்தையும் தன் உடலால் ஏற்றுக்கொண்டான். ‘டமார்’ என்ற பெரிய சத்தம். புகைமண்டலம். நாம் தூக்கி வீசப்பட்டோம். புகை விலகியபோது ஓ… கோரம்… அறை எங்கும் இரத்த வெள்ளம். அறைகளில் எல்லாம் சதைத் துண்டங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கைக்குண்டால் துண்டாடப்பட்ட உடலின் பாகங்கள் மூன்று துண்டங்களாக்கப்பட்ட உடல்… எம்மை எல்லாம் காப்பதற்காக தன்னுடைய உடலால் வெடிகுண்டைத் தாங்கிய அன்பு, துண்டுகளாகக் காணப்பட்டான். எம்மோடு பேசிக்கொண்டிருந்தவன், சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், திடீரென்று துண்டுகளாகக் கிடக்கும் போது எப்படித்தான் எம்மால் ஜீரணித்துக் கொள்ளமுடியும்? உடலை அகற்றும்போது அன்புவின் டயறியின் பக்கங்கள் இரத்தத்தில் தோய்ந்து காணப்பட்டன. அதில் ஒரு பக்கத்தில் மரணம் ஒருவனை அழிப்பதில்லை என்ற வசனம் காணப்பட்டது. ஆம் அன்புவின் மரணம், தியாகம் இன்னும் எத்தனையோ அன்புக்களை உருவாக்கியிருக்கிறது. வீரவேங்கை அன்பு முத்ததம்பி தனபாலசிங்கம் முள்ளியான்.வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம். நன்றி எரிமலை http://www.errimalai.com/?p=63197
  12. ‘சோபியின் உலகம்’ – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை — அகரன் — தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிகச்சிறந்த அவசியமான ஒரு நாவல். மொழிபெயர்ப்பு நூல்கள் பொதுவாகவே ஒரு பேயைக் கண்ட பயத்தைத் தருவதுண்டு. ஆனால் இந்நூல் ஒரு இனிமையான அனுபவம். தேனில் கலந்து வேப்பெண்ணை மருந்து குடிப்பதுபோல.. நாவல் வடிவில் 15 வயது தொட்டு வாழ்வின் கதவுவரையுள்ளவர்கள் வாசிக்கக்கூடிய ‘உலக தத்துவவியலின்’ மிக எளிய அறிமுகம். உலக அளவில் 50 மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் தத்துவ மாணவர்களுக்கான பாடத்திட்டம் போன்று கருதப்படுகிறது. (உனக்கெப்படித்தெரியும்? ஒரு பிரஞ்சுக்காரர் ஒருவரிடமும் உறுதிப்படுத்தினேன். அவர் இதை வாசித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது) தமிழ் உலகில் இன்று பணம் சம்பாதிக்கும் பாடத்திட்டங்கள் நோய்போல் நீடிப்பதால் அடர்ந்த அறிவுத்தேடல்கள் அழிந்துகொண்டருப்பது அருவருக்கத்தக்க மனித நீட்சி. *** ஐ.நாவுக்காக லெபனானில் பணியாற்ற செல்ல இருந்த நோர்வே நாட்டு இராணுவ ஜெனரல் தன் மகளுக்கு ஒரு தத்துவப்புத்தகம் வாங்க புத்தகக்கடைக்குப் போகிறார். அங்கு தனது 14 வயது மகள் இந்த உலகை புரிந்துகொள்ளத்தக்க ஒரு தத்துவ நூலும் கிடைக்கவில்லை. லெபனானில் இருந்து தன் மகளுக்கு சோஃபி என்ற அவளது வயதுடைய கதாபாத்திரம் மூலம் விளக்குகிறார். இறுதியில் பணிமுடிந்து வீடு வரும்போது மகள் பள்ளியில் படிக்கவே முடியாத தத்துவங்களை தந்தை மூலம் கற்றுவிட்டிருக்கிறாள். இளம் பிள்ளைகளின் மனநிலையிலே நாவல் கேள்விகளால் நகர்கிறது. நாமும் சோஃபியின் உலகில் வாழ்ந்துவிடுகிறோம். *** இந்த உலகம், பூமி, வாழ்க்கை இவை எல்லாம் எப்படி வந்தன? என்ற கேள்வி ஒலிம்பிக்கில் யார் அதிகம் தங்கப்பதக்கம் வென்றார்கள்? என்பதைவிட முக்கியமானது. புராணக்கதைகள் தத்துவங்களை விதைத்தன. நம் சமூகம் மூடநம்பிக்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டது. ஸ்கண்டிநேவிய புராணக்கதைகளுக்கும் இந்திய புராணக்கதைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த பிரபஞ்சத்தின் தூசிபோன்ற ஒருகோளில் வாழும் உயிர்த்தூசியான மனிதன் யார்? எப்படி வந்தான்? ஏன் சாகின்றான்? ஆன்மாவின் முடிவிடம் எது? கடவுளைப் படைத்தது யார்? இந்த உயிர்க்கோள் நீளுமா? இன்று உயிர்கோளின் கிருமி (மனிதன்) அதையே சம்மட்டியால் அடிக்கிறான். அழிவு யார் கையில்? மனிதப் பரிணாமம் 4.6 கோடி வயதுப் பூமியில் எத்தனை காலம்? இப்படிக் கேள்விகளால் உலகின் 2500 வருடங்கள் சிந்தித்த தத்துவ மேதைகளின் பதில்களை இந்த நூல் உங்களுக்குத்தரும். 2500 ஆண்டுகளின் முன் வாழ்ந்த சாக்கிரட்டீஸ் தத்துவத்தின் முழு வரலாற்றுக்கும் புதிரான ஆளுமை. ‘’தனக்கு தெரியாது என்று எவனுக்குத் தெரிகிறதோ அவனே விவேகமானவன்’’ என்று நிரூபித்தவர். ஆனால் ஒரு சொல்கூட எழுதவில்லை. இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஜரோப்பிய தத்துவவியலின் அடிப்படையே அவர்தான். சாக்கிரட்டீஸ், யேசு இருவரும் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அவர்கள் காலத்தில். ஆனால் இன்று? இடைக்காலம் :- மதங்களை வைத்து மனிதரை பூச்சாண்டி காட்டிய காலம். மறுமலர்ச்சிக்காலம் :- தெய்கார்த், ஸ்பினோசா, லாக், கியூம், பார்க்கிலி, என்று முன்னர் கிரேக்கத் தத்துவவாதிகளின் பாதையில் தனித்தனியே தத்துவத்தை வளர்த்தெடுத்தனர். அறிவொளிக்காலம் :- காண்ட், ஹெகல், ரூசோ கீர்க்ககாட், மார்க்ஸ், டார்வின், ஃப்ராய்ட் என்று எண்ணற்ற தத்துவப் பேரரசர்களால் பூச்சாண்டிகள் மொத்தமும் விரட்டப்பட்டு அறிவின் கண்கொண்ட பார்வை பரவியது. ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மூன்று தேசங்களும் அறிவியலில் உச்சங்கொள்ள அறிவொளிக்கால தத்துவவாதிகளே காரணம். இன்றயகாலம் :- இயந்திரவியல், சூழலியலை படுகொலை செய்து ஆபத்தான உயிரியாக மனிதன் நிற்கிறான். உயிர்க்கோளத்திற்கு ஆபத்தில்லாத வாழ்வைக் கட்டமைக்க தத்துவ பேரறிஞனுக்கான தேவையில் நிற்கிறது 17000 அணுகுண்டுகளை வைத்திருக்கிற மனிதம். அந்த ஒப்பற்ற தத்துவத்தை நீங்களும் படைக்கலாம். நீங்கள் செவ்வாய்க்கு போவதைவிட முக்கியமானது தத்துவவியல். அவசரப்படாமல் அவசியம் சோஃபியின் உலகத்தை படியுங்கள். *** சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒஸ்லோ சென்றிருந்தேன். அந்த அமைதியும், அழகும் கொண்ட நகரில் ஒரு புத்தகக்கடையை கண்டேன். அழகாக இருந்தது. அங்கு தமிழ்ப்புத்தகம் இருக்காது என்பதை தெரிந்தும் அந்த அழகை அனுபவிக்க நுழைந்தேன். புத்தகங்கள் அழகிய இருக்கைகளில் வைத்திருந்தார்கள். அரச இருக்கைபோன்ற ஒன்றில் இந்த ‘சோபியின் உலகம்’ என்ற புத்தகம் இருந்தது. உள்ளே பார்த்தேன் ஒரு படமும் இல்லை. அந்தப் புத்தகத்தை தமிழில் வாசிக்க கிடைத்ததும் அதிசயம். அண்மைக்காலத்தில் உலகின் நல்ல படைப்புக்களை தமிழில் எந்த எதிர்பார்ப்புமற்று தமிழை மட்டும் வாசிக்கக்கூடிய என்னைப்போன்றவர்களுக்காக மொழிபெயர்ப்பவர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம்?. கடந்த ஆண்டு வெளியாகிய ’குமிழி‘யின் ஆசிரியர் திரு ரவி அவர்களே எளிய நடையில் ஒரு முழுமையான தத்துவ நூல் வெளியாகி இருக்கிறது என்றார். அந்த நூல் சென்னையில் இருந்து கொரோனாவின் அனுமதியுடன் வந்து சேர்ந்தபோதுதான் அது ஒஸ்லோவில் கையில் எடுத்துப்பார்த்துவிட்டு ‘வாய்ப்பே இல்லை’ என்று வைத்துவிட்டு வந்த நூல் என்பது தெரிந்தது. சில ஆழ்மனப்படிமங்கள் எப்படியும் சாத்தியமாகிவிடுமோ என்னவோ? « நான் ஒன்றைப் பார்த்தால் நம்புவேன் என்று வழக்கமாக மக்கள் சொல்வார்கள். ஆனால், பார்ப்பதையும் நீங்கள் நம்பாதீர்கள் » -கான்ற்- பகுத்தறிவும், கல்வி அறிவும் பரவலாக நடைமுறையில் வந்துவிட்டால் மனித குலம் மாபெரும் வளர்ச்சி அடையும். -அறிவொளிக்கால அறிஞர்கள்- https://arangamnews.com/?p=4692
  13. தேசியத் தலைவர் கரங்களால் கைத்துப்பாக்கி பரிசாக பெற்றவர் -லெப் கேணல் கருணா..! லெப் கேணல் கருணா நாகேந்திரம் நாகசுதாகர். வீரச்சாவு. 15.04.2009 சம்பவம்..புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது. இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட கருணா மேலதிக பயிற்சிகள் மற்றும் வகுப்புகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்குச் செல்கிறான். அங்கு மாவீரரான லெப்.கேணல் நரேஸ் அவர்களின் தலைமையில் பயிற்சிகளில் மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய கருணா குறிப்பாக நீச்சலில் முன்னிலை வகித்தான். இவனது நீச்சல் உள்ள ஆர்வம் மற்றும் குறிப்பிட்டளவு தூரத்தை மிகவும் வேகமாக நீந்திக் கடந்ததை அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்கள் இவனது சொந்த இடம் மயிலிட்டி என்பதால் இவனை காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் கடல் மற்றும் தரை வேவுக்காகச் அனுப்புகிறார். அங்கு சிறப்பாகச் செயற்பட்டு அனைவரினதும் பாராட்டைப் பெற்று வேவில் தனக்கான முத்திரையைப் பதிக்கிறான். குறிப்பாக முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி விரச்சாவடைந்த தாக்குதலில் கருணாவின் வேவுப்பங்கும் அளப்பரியது. அதனைத் தொடர்ந்து கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவிற்குள் உள்வாங்கப்பட்ட கருணா அங்கு கடற்புலிகளின் தளபதி கங்கைஅமரன் அவர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றான். தொடர்ச்சியாக நீரடிநீச்சல் பிரிவில் இருந்த கருணா அங்கும் பயிற்சியில் இவன்காட்டிய ஆர்வத்தாலும் ஏனைய செயற்பாட்டில் இவனுக்கிருந்த ஈடுபாட்டாலும் வெளிநாடொன்றிலிருந்து ஆழ்கடல் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு வந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களால் வழங்கப்பட்ட பயிற்சியிலும் பங்குபற்றி தனக்கிருந்த திறமையை வெளிக்காட்டினான். அப்பயிற்சியில் இவனது செயற்பாட்டை நன்கு அவதானித்த அப்பயிற்சிப் பொறுப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளருமாக செயற்பட்ட சங்கரண்ணா இவனைப்பற்றி தலைவர் அவர்களிடமும் தெரியப்படுத்தினார். அதற்கமைவாக நீரடி நீச்சல் சம்பந்தமாக மேலதிக பயிற்சிக்காக வெளிநாடொன்றுக்கு சென்று அங்கு பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பனான். இங்கு வந்து சிறிது காலத்தில் நீரடிநீச்சல் பிரிவுக்கு பொறுப்பாளனாக தான் வெளிநாட்டில் கற்றவைகளை சகபோராளிகளுக்கு சொல்லிக்கொடுத்து பலபோராளிகளை உருவாக்கினான். அதன் பின் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கிற பணியினை மேற்கொள்வதற்கான மன்னாருக்குச் சென்று ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாகச் சென்று ரோலரில் வரும் பொருட்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பாதுகாத்து சிறிய படகுகள் மூலம் இலுப்பைக்கடவைக்கு அனுப்பிவைத்தான். இவைகள் எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் இவர்கள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல. இப்படியாக செய்து கொண்டிருக்கையில் மாவீரரான லெப்.கேணல் கோகுலன் அவர்கள் வேறு பணிக்காக சென்றதால் கருணா மறுபடியும் நீரடிநீச்சல் பிரிவுப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான். அத்தோடு புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி ஆசிரியராகவும் செவ்வனவே செயற்பட்டான். கருணாவின் செயற்பாட்டை அவதானித்த தலைவர் அவர்கள் கருணாவிற்க்கு கைத்துப்பாக்கியை தனது கரங்களால் வழங்கி மதிப்பளித்தார். இக் காலப்பகுதியில் சில சிறப்புத் தளபதியின் பாதுகாப்புப்பிரிவிலும் நின்றான். அத்தோடு மட்டுமல்லாமல் கடற்தாக்குதலனியின் ஒத்திகைப் பயிற்சிகளில் தானும் தன்னோடு உள்ள சகபோராளிகளையும் பங்குபற்றி அப்படையணிகளுடனும் இணைந்து செயற்பட்டதோடு அப்படையணியுடன் இணைந்து விநியோக மற்றும் கடற்சமர்களிலும் ஈடுபட்டான். அதன் ஒரு கட்டமாக கிழக்குமாகாண விநியோகமும் இப்படையணிக்கு சிறப்புத் தளபதியால் வழங்கப்பட்டதோடு சிறிய சண்டைப் படகுத் தொகுதியும் வழங்கப்படுகிறது. கருணா தலைமையிலான இவ் அணி கடலில் ஒருதாக்குதல் நடாத்த தேடித்திரிந்த பொழுது தான் மன்னாா் பேசாலையில் கடற்படையின் படகுத் தொகுதி ரோந்தில் செல்வது தெரியவர அதற்கான வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரு வலிந்த தாக்குதல் அக் கடற்படையினருக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது. இவ்வெற்றிகரத் தாக்குதலில் பத்தொன்பது சிறிலங்காக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் பகலிலே இடம்பெற்றதுடன் இப் படையணியினரின் முதலாவது தாக்குதலுமாகும். இத் தாக்குதலின் வெவற்றிக்காக தலைவர் அவர்களால் கருணாவிற்க்கு ஒரு டபிள்கப் வாகனம்பரிசாக வழங்கப்பட்டது. இத் தாக்குதல் கடலில் நீண்ட அனுபவம் கொண்ட மாவீரரான லெப் கேணல் எழிற்கண்ணன் அவர்களின் பங்கும் முக்கியமானது. அதன் பின்னர் லெப் கேணல் டேவிற் படையணிப் பொறுப்பாளனாக மன்னார் கொக்குப்படையானுக்குச் சென்றான். அங்கு தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணியான கப்பலிலிருந்து ரோலர் மூலம் வரும் பொருட்களை பாதுகாத்து பின்னர் பாதுகாப்பாக மன்னார் சுட்டபிட்டிக்கு அனுப்புவதாகும். இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில் கொக்குப்படையானும் அதனை அண்டிய பகுதிகளும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இருந்தாலும் எவ்வித இழப்புகளுமின்றி சாதுர்யமாக செயற்பட்டு படைக்காவலரன்களைத் தாக்கியழித்து அம்முற்றுகையிலிருந்து அணிகளுடன் வெளியேறினான். அதன் பின்னர் பழையபடி சண்டைப்படகுகளின் தொகுதிக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு விநியோகப்பாதுகாப்பு மற்றும் வலிந்த தாக்குதலிலும் தனக்கான முத்திரையைப் பதிக்கிறான். அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் களமுனைக் தளபதியாக நியமிக்கப்பட்டு செவ்வனவே பணியாற்றிக்கொண்டிருந்தவேளையில் மணலாற்று கட்டளைப் பணியத்தின் கடற்கரையோரம் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டபோது இவன் தனது அணியினருடன் அங்கு சென்றான். அங்கு காவலரன்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இராணுவத்தின் குறிசூட்டுத் தாக்குதலில் மயிரிழையில் தபபினான். தொடர்ந்தும் களமுனையில் நின்றாலும் தென் தமிழீழத்திற்கான விநியோக நடவடிக்கையிலும் பங்குபற்றத் தவறவில்லை. இப்படியாக பல்வேறு துறைகளில் பல் வேறுபட்ட இடங்களில் பெரும் இக்கட்டான இராணுவப் பிரதேசங்களில் நின்றவன். பெரும் சவாலான வேலை என்றாலும் அதைச் செய்துமுடிக்கிற ஆர்வம் தலைமையில் வைத்த பற்று எந்தப் புறச்சூழலிலும் இயக்கக் கட்டுப்பாட்டை மீறாத பண்பு மாவீரர்களை நேசித்த விதம் போராளிகளைக் கையாள்கிற விதம், கட்டளைகளுக்கேற்ப செயற்படுகிற வேகம், சக போராளிகளுடன் பழகுகிற விதம் . இப்படியானவன் திருகோணமலைக்கு விநியோக நடவடிக்குச் சென்று சேர்க்க வேண்டியவைகளைச் சேர்த்துவிட்டு வரும்போது சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் 15.04.2009 அன்று வீரச்சாவடைகிறான். -.சு.குணா https://www.thaarakam.com/news/241ebedd-12eb-4f74-b3c5-1261c41429ff
  14. கேணல் கீதன் மாஸ்ரர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவில் - கீதனுடன் ஒரு உரையாடல் .! கேணல் கீதன் மாஸ்டர் இந்த இடத்தில் இந்த போராளியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனது குடும்பம் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழீழ விடுதலையை தன் உயிர் மூச்சாக நினைத்து பீசிங் எனப்படும் முட்டு வருத்தத்தின் மத்தியிலும் தலைவனையும் சக போராளிகளையும் உயிராக நேசித்த உன்னதமான போராளி கேணல் கீதன் தன் ஏலாத உடல் நிலையிலும் தலைவரின் எண்ணங்களுக்கு 100% செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று தானும் கால நேரம் பாராமல் செயல்பட்டு தன் சக போராளிகளையும் செயற்பட வைத்த அரிய செயல்பாட்டாளன். லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவு தொடங்கி லெப் கேணல் திலீபன் கல்லூரி வரை தலைவரின் எண்ணக்கருவுக்கு ஏற்ப உருவாக்கி திறம்பட செயலாற்றிய அரிய தளபதிகளில் ஒருவர் பல திறமையான போராளிகளை இனங்கண்டு தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்ற அற்புதமான தளபதி.பூனகரிபடையணி உருவாக்கத்தின் கதாநாயகன். மன்னார் களமுனை தொடக்கம் முள்ளிவாய்க்கால்களமுனை வரைபூனகரிப்படையணியின் அற்புதமான வரலாற்று சமர்களை கேணல் ஈழப்பிரியனோடு சேர்ந்து வழிநடத்தி சாதனைகள் செய்த அற்புத தளபதிக்கு வீரவணக்கம். இவருடன் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கம் கீதனுடன் உரையாடுகின்ற வாய்ப்பின்மூலம் நாம் பல புதிய செய்திகளை அறியக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு விடுதலைப் போராளி. போராளிகளுக்கான கல்விப் பிரிவிலும் இயங்கிவருகிறவர். பல கள முனைகளில் நின்று களமாடிய வீரன். மாவீரர்கள் பற்றி நெஞ்சு கணக்கும் கதைகளைச் சுமந்துதிரிகிறவர். விடுதலைப் போராளிகளின்இடத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகள் வளர்ந்து வருகிறதாக சொல்கிறார். கலைஇலக்கியச்செயற்பாடுகள் மூலமும் தாம் சமூக விழிப்புணர்வை ஊட்டப் பாடுபடுவ தாகச் சொல்கிறார். விடுதலையின் தரிசனர்களாகபோராளிகள் திகழ்கிறார்கள், உண்மையை அவர்கள் தேடிப் பயணப்படுகிறார்கள், நல்ல மனிதர்களாக இருக்கின்றார்கள் .அத்தகைய பண்புகள் நிறைந்த போராளிகளில் ஒருவரான கீதனிடம் நாம் பல கேள்விகளைக் கேட்டோம். மாவீரர்கள் பற்றியும் அவர் கதை கதையாகச் சொன்னார் அவற்றையெல்லாம் இங்கு பதிந்து விட முடிய வில்லை எதிர்காலத்தில் அவற்றை பதிவாக்க முயல்வோம். பல வேலைப் பளுக்களுக்கு மத்தியிலும் நீண்ட நேரமாக சமூக மானுட விடுதலை குறித்து அவர் உரையாடினைார். அத்தகைய உரையாடலின் ஒரு பகுதி யையே இங்கு தருகிறோம் கேள்வி :போராளிகளுக்கான கல்விச் செயற்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்? கீதன்: எங்கட விடுதலைப் போராட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கு விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில்இருநதது உள்ள வரலாறு பற்றியும் விடுதலைப் போராட்டம் பற்றியும் கற்பிக்கப்படும். அதை வழி நடத்திக்கொண்டிருக்கும் தேசியத் தலைவர் அவர்களுடைய வரலாறு குறித்தும் சொல்லப்படும். சண்டைக்களங்களிலும்சமர்க்களங்களிலும், யுத்தங்களிலும் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்கள் குறித்த முழுமையான வரலாற்றைக் கற்பிப்பதுமாக இக்கல்விச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன வரலாறுதான் வழி காட்டி எனத் தலைவர் சொன்னதற்கமைய உலகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் அந்த விடுதலைப் போராட்டங்கள் நகர்ந்த விதங்கள் பற்றியும் மக்களும் போராளிகளுமாக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதுபற்றியும் அறிவதாக இது அமைந்திருகின்றது உலகில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் இராணுவ ரீதியாக அரசியல்ரீதியாக எவ்வாறு இயங்கின என்பவற்றையும் போராளிகளுக்கு கற்பிப்போம் .(வேர்கள் இணையம்) இதை விட தமிழர்களுடைய வரலாறு, சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய வரலாறு, அண்டை நாடுகளின் வரலாறு என்பன கற்பிக்கப்படும். மேலும் தமிழ் மக்கள் மீது காலம்காலமாக அடக்கு முறையைப் பிரயோகித்து வரும் வரலாறு குறித்தும் தமிழ் மக்களுடைய வாழ்வியல் உரிமைகளும்அரசியல் உரிமைகளும் எவ்வாறு பறிக்கப்பட்டன என்பது குறித்தும், பேரினவாதத்தினுடைய அடிப்படைச் சிந்தனை உளவியல் குறித்தும் கல்வி கற்பிக்கப்படுகிறது எங்களுடைய பணிகள் தொடர்பான கல்வி ஊட்டலும் நடைபெறுகிறது. சமர்க்களங்களில் போராளிகளின் செயற்பாடுகள் நிர்வாகத் துறையில் போராளிகளின் செயற்பாடுகள் என பரந்துபட்டதாக முன்னெடுக்கப்படுகிறது கேள்வி : லெப்டின் கேணல் ராஜன் கல்விப் பிரிவு பற்றியும் அது மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் குறிப்பிடுங்கள்? கீதன்: லெப்டின் கேணல் ராஐன் அண்ணன் அவர்கள் பல சமர்க்களங்களில் நின்று சமராடியவர் . நீண்ட போரிடும் ஆற்றலும் அனுபவமும் கொண்ட ஒருவர். களத்தில் பல வெற்றிகளை ஈட்டித்தந்தவர். அவர் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையின் தளபதியாக இருந்தவர். எமது விடுதலைப் போராட்டத்தின் மூத்த தளபதி ச.பொட்டம்மான் அவர்கள் எழுதிய கட்டுரையில் சிறப்பாக அவர் பற்றி எழுதுகிறார். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையின் நெருப்பாற்றின் நீச்சலில் பத்தாண்டுகள் என்ற நூலில் அவர் தொடர்பான கட்டுரைகளை நீங்கள் படிக்கலாம் எங்கட விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக போராளிகளுக்கான அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி நடத்தப்பட்டது. அக்கல்லூரியின் பொறுப்பாளராக ராஜன் அண்ணனே இருந்தார் ஆளுமையும், அறிவும், பலமும், உறுதியும், திடமும் மிக்கவர்களாக வளர்ப்பதில் அவர் காட்டிய அக்கறை அவரின் வழி நடத்தல் போன்ற பல்வேறு விடயங்களைக்கருத்தில் கொண்டே அவரது பெயரில் லெப்டின் கேணல் ராஜன் கல்விப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது போராளிகளின் கல்வி சம்பந்தமான விடயங்களிலும் அறிவு மேம்பாட்டு விடயங்களிலும் அக்கறை கொண்டு செயற்படும் அமைப்புத்தான் லெப்டின் கேணல் ராஐன் கல்விப் பிரிவு போரினால் பாதிக்கப்பட்ட மாணவர் சமூகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதற்காக பலதரபட்ட செயற்பாடுகளில் ஆழமாக அது இயங்குகிறது சிறீலங்கா பேரினவாத அரசால் தயாரிக்கப்படுகின்ற பாடநூல்கள் தான் எமது மாணவர்களுக்கான பாட நூலாக இருக்கிறது என்றால் யோசித்துப் பாருங்கள் நிலைமை எவ்வாறு இருக்குமென்று. யாழ் பொது சன நூல் நிலையத்தை எரியூட்டி அழித்தவர்கள் எமது இனத்தின் வரலாற்றுச் சுவடுகளையேஅழித்துவிட முயன்றிருக்கிறார்கள் வேர்கள்.கொம் அந்த வரலாற்றுச் சான்று நூல்களை அழித்துவிட்டு தமது வரலாறுகளை எம் மீது திணிப்பதற்கான திட்டமிட்ட நடவடிககையாக அதனைப்பார்க்கலாம் கந்தளாய் குளத்தை குளக் கோட்ட மன்னன் கட்டினான் என்பது வரலாறு. சிங்கள வரலாற்றுப் பாட நூல்களில் அதைச் சிங்கள மன்னனே கட்டினான் என ஒரு பொய்ப்புனைவை கட்டி எழுப்புகிறார்கள். வரலாறு என்பது கற்பனையான ஒன்றல்ல. அது உண்மைகளின் விரிவு. இந்த நிலையில் எங்களுடைய வரலாற்றை நாங்களே எழுதுதல் என்பதும் எமது கடமைகளுள் ஒன்றாகிறது போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்துதல் வகுப்புக்கள் நடாத்துதல் என பணிகள் விரிந்துகிடக்கிறது. உண்மையில் ஒரு நாடு நாடாக இருக்கவேணும் என்றால் ஒரு இனம் இனமாக இருக்கவேண்டும் என்றால், இரண்டு விடயங்களை முக்கியமானதாகக்ககருதுகிறேன். ஒன்று வீரம், இரண்டு அறிவு வீரத்தையும் அறிவையும் ஒருங்கிணைத்து பலம் கொண்ட சக்தியாக வளரும் பொழுதுதான் ஒரு நாடு யாருக்கும் அடிமைப்படாமல் இருக்க முடியும். இந்த இரண்டு விடயங்களைக் கட்டி வளர்த்துச் செல்வதும் எமது கல்விப் பிரிவின் பிரதான நோக்கங்களாக இருக்கின்றன அறிவாற்றலை வளர்ப்போம் அவனியில் உயர்வோம்’இதுவே கல்லூரியின் பிரதானமான கோஷமாக, தாரக மந்திரமாக இருக்கிறது கேள்வி :மகாவம்சம் போன்ற புனைவுகளை வரலாற்று ஆதாரமாக சிங்கள பேரினவாதம் கொண்டுள்ளமை குறித்து.? கீதன்: சிங்கள பேரினவாதம் என்பது அடிப்படையில் ஒரு கற்பனையான கதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது திட்டமிட்டு திரித்து எழுதப்பட்ட மகாவம்சத்தினுடையஅடிப்படையில் அது இயங்குகிறது. தமிழ் மக்களுடைய வாழ்வை , தேசியப் பண்புகளை திட்டமிட்டு அழிக்கவென்றே புனையப்பட்ட மிகப் பிரமாண்டமான ஒரு பொய் மூட்டையின் கட்டுத்தான் இந்த மகாவம்சம். அந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே சிறீலங்கா பேரினவாதம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மகாவம்சம் என்ன சொல்கிறதென்றால் இலங்கைத் தீவில் ‘வாழப் பிறந்தவனும் ஆளப் பிறந்தவனும் சிங்களவனே’ இலங்கைத் தீவென்பது; ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி, ஒரு அரசு, ஒரு ஆட்சி என்கிற அம்சங்களுக்குள்தான் இருக்க முடியும் என அது சொல்கிறது அதைச் சிங்கள மக்களிடையே ஆழமாகப் போதித்துக்கொண்டும் வருகிறது. அதற்கூடாக காலம் காலமாக தமிழ் மீது அநீதியான போரையும் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களிடம் பூர்விக நிலங்கள் உள்ளன. பாரம்பரியமான மொழி இருக்கிறது. தனித்துவமான கலை பண்பாடு இருக்கிறது. நீண்ட வரலாறு இருக்கிறது. தனித்து வாழக் கூடிய பொருளாதாரம் இருக்கிறது. ஒரு தேசிய இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துப் பண்புகளும் எங்களுடைய இததுககு இருககிறது . எங்களுடைய பாரம்பரியமான வாழ் நிலங்களை திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஊடாக சிங்கள அரசு நிலப்பறிப்புசெய்து வந்தது, வருகிறது. 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்தே தமிழர்களின் குடியியல் வாழ்வுக்கு பெரும் தொல்லை இழைப்பதாக அது இயங்கி வருகிறது. எங்களுடைய நிலங்களை அழிக்க வெளிக்கிட்டது. எங்களுடைய நிலங்களை பறிக்க வெளிக்கிட்டது. எங்கட மக்களை மண்ணில் இருந்து அடித்து விரட்டி அகதியாக்கியது சிங்கள பேரினவாதம். அடையாள அழிப்புக்கள் நிலப் பறிப்புக்கள், மொழி அழிப்புக்கள், பண்பாட்டு சிதைப்புக்கள், பொருளாதார சிதைப்புக்கள் போன்றவற்றுக்கூடாக தமிழர் வாழ்வை சீரழித்து தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல என்பதை நிறுவமுயன்றது. கேள்வி :இனவாத அரசின் அடக்குமுறை சட்டங்கள் தமிழ் மாணவர் சமூகத்தை எவ்வாறு சீரழிக்கத்தொடங்கியது? கீதன்: கல்வி ரீதியான அடக்குமுறைச் சட்டங்களில் மொழி முக்கியமான இடத்தை வகித்தது. 1956ம் ஆண்டுகளிலிருந்தே தமிழ் மொழி அழிப்புத் தொடர்பான செயலில் சிங்கள அரசாங்கம் திட்டமிட்டு இயங்கத்தொடங்குகிறது. தனிச்சிங்களமும் 1961 ம் ஆண்டு நீதிமன்ற மொழி சட்ட மூலத்தைக் கொண்டுவந்ததன் மூலமும் அது தனது அழிப்பு நடவடிக்கையை தொடங்கிவிட்டது . நீதிமன்றங்களில் சிங்கள மொழியில் தான் வழக்குகள் நடைபெறும் என்பதாக அந்தச் சட்ட மூலம் இருந்தது. 1970 ம் ஆண்டுகளில் தரப்படுத்தல் சட்டம் என்று சொல்லி தமிழ் மாணவர்களுடைய கல்வித் தரத்தை , தமிழ் மாணவர்களுடைய மேன் நிலை அடைகிற சூழலை புறக்கணித்து ஒரு கீழ் நிலைக்குத் தள்ளும் முயற்சிகளைத் தொடங்கிற்று. ஆரம்ப காலங்களில் தமிழ் மொழி அழிப்பு நடவடிக்கையை சட்டத்திட்டங்கள் மூலம் முயன்ற பேரினவாதம் யுத்த காலத்திலோ ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை மூலம் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. பாடசாலை மாணவர்களை சிறைப்டிபிடித்து அவர்களை கொன்றொழித்தது. பாடசாலைகள் மீது விமானங்கள் குண்டுவீச்சு தாககுதல்களை நிகழ்த்தியது. வெள்ளைச் சீருடையுடன் போன பள்ளி சிறார்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தது பாடசாலைக்கான வளங்களை பல தடைகளுக்கூடாகத் தடுத்து நிறுத்தியது. இடங்களைப் பிடிச்சு எங்கட மக்களை அகதிகளாக்கி மாணவர்களின் கல்வியைச் சிதைத்த பிறகு நேரடியான யுத்தத்துக்கூடாகவும் ஆக்கிரமிப்புக்கூடாகவும் கல்வியை மாணவர் சமூகத்தை காலம் காலமாக திட்டமிட்டு சிங்களப் பேரினவாதம் அழித்தே வருகிறது. கேள்வி :சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசு, தமிழ் மாணவர்களுடைய கல்வியை திட்டமிட்டுச் சீரழித்து வந்திருக்கும் இந்த நிலையில் தமிழ் சிறார்கள் மீது அக்கறைப்படுவதாக காட்டிக்கொள்ளும் அதன் உளவியல் குறித்து பேச முடியுமா? கீதன்: காலம் காலமாக எங்கட மாணவர் சமூகத்தை , இளம் சமூகத்தை, துடிப்புள்ள தேசத்தை அடுத்தகட்டத்திற்கு வளர்த்துச்செல்கிற எங்கட சமூகத்தை, சிறீலங்கா அரசாங்கமும் அதன் ஆக்கிரமிப்பு படைகளும் அழித்த வரலாற்றை நீங்கள் ஆழமாக அறிந்திருப்பீர்கள் இப்பேற்ப்பட்ட சிறீலங்கா பேரினவாத ஆட்சியாளர்கள் சிறுவர்களைப் பற்றி அக்கறை கொள்வதாக சர்வதேச சமூகத்திடம் கதை அளந்துகொண்டிருக்கின்றனர் இவர்கள் செய்த கொடுரங்களைச் சொல்வதென்றால் சொல்லி கொண்டே போகலாம் 1958 ம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட இன கலவரத்தின் போது பிறந்து கிடந்த குழந்தையை இரண்டாகக் கிழித்துக்கொன்றவர்கள். கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் குழந்தையைத் தூக்கி எறிந்து கொன்ற்வர்கள். ஒரு தமிழ் குழந்தை பிறந்துவளர்ந்து வரக்கூடாது என்பதற்காக பிறப்பிலேயே அழித்தவர்கள். கருவிலேயே அழித்தவர்கள் வயிற்றுக்குள்ளேயே அழித்தவர்கள். அப்படி நிகழ்ந்த கதைகளும் இன்றும் வரலாறுகளாக உள்ளன. அப்பேர்ப்பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கம் இன்று தமிழ் சிறார்கள் மீது அக்கறை கொள்வதாக காட்டிக்கொள்கிறது நவாலிப் படுகொலையாக இருக்கலாம், புதுக் குடியிருப்பில் நடைபெற்ற மண்டுவில் படுகொலையாக இருக்கலாம், தென்தமிழீழத்தில் நடைபெற்ற படுகொலைகளாக இருக்கலாம் எல்லாம் அவர்களின் மனித விரோத செயற்பாடுகளின் உச்சங்களாக விளங்குகின்றன. பாடசாலைக்குப் போன பிள்ளைகளின் சடலங்களே வீட்டுக்குத் திரும்பி வந்த வரலாறுகள் இன்னும் அழிந்து விடவில்லை . இளம் மாணவசமுதாயத்தை அழித்துக்கொன்ற வரலாற்றின் ஈரம் இன்னும் காய்ந்துபோகவில்லை போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான தொழில்நுட்பக் கல்லூரியை புனர்வாழ்வுக் கழகம் நடத்தி வருகிறது அவர்களிடம் நீங்கள் சந்தித்துப் பேசினால், சிங்களப் பேரினவாதத்தால் அவர்களுடைய கல்வி எவ்வாறு பாதிப்புக்குள்ளாகியது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அண்மைக் காலச் சம்பவங்களைக் கூட நான் உங்களுக்கு சொல்லலாம். அண்மையில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின்அதிபரும் கோப்பாய் எழுச்சிப் பேரவைச் செயலாளருமான திருநடராஜா சிவகடாட்சம் சுட்டுக்கொல்லப்பட்டார் இராணுவப் புலனாய்வு அமைப்பும் அவர்களோடு சேர்ந்து இயங்குகிற ஒட்டு அமைப்பும் சேர்ந் இந்தப் படுகொலைகளைச் செய்திருக்கிறதுர்கள், மாணவர்களைக் கல்வியிலும் கலைபண்பாடுகளிலும் தேசிய உணர்விலும் விடுதலை உணர்விலும்கட்டி வளர்க்கும் நோக்குடன் உன்னதமாகச் செயற்பட்டுவருபவர்கள். அவர்களை ஏன் சுட்டுக்கொன்றது என்றால் மாணவர் சமூகத்தை இக்கட்டான சூழலுக்குள் தள்ளுவதற்குத்தான். எழுச்சி கொண்ட, அறிவுகொண்ட, ஆற்றல் கொண்டசமூகமாக தமிழ்ச் சமூகம் வளரக்கூடாது என்பதற்காக, வழிநடத்துகிற முதல்வரை ஆற்றலுள்ளவரை இந்தச் சமாதானகாலத்திலே, அதுவும் தமிழர் படை, தமிழர் தேசம் உயர்ந்துநிற்கிற நேரத்தில இண்டைக்கும் இதைச் சிறீலங்கா அரசாங்கம் செய்துகொண்டுதான் இருக்கு எங்களுடைய விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்ட நிலையில் சர்வதேசக் கவனத்தை ஈர்த்த நிலையில் இருக்கிறது அவுஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் தமிழீழத்திற்கு வந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப்பார்வையிட்டார். கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும், தேசகட்டுமானங்களையும் பார்வையிட்டார். அவர் அவுஸ்ரேலியப்பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது “நான் சுனாமியால்பாதிக்கப்பட்ட தமிழர் தேசப் பகுதிகளைப் பார்த்தேன் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தமிழர்களுடைய தாயகப் பகுதியையும் பாத்தேன் அவர்களுடைய தேசக் கட்டுமானங்களையும் பார்த்தேன் அத்தோடு தமிழீழத்தில் ஒரு நடைமுறை அரசு இயங்கிவாறதைப் பார்த்தேன். தமிழ் மக்களுடைய தாயகத்தை, தன்னாட்சி உரிமையை சர்வதேசம் அங்கீகரிக்கவேணும் அல்லது தமிழர் தாயகத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கவேணும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் எங்கட உண்மை நிலையம் , எங்கட செயற்பாடுகளும், எங்கட உன்னதமான பக்கங்களும் சர்வதேசத்திற்கு புரிந்திருக்கிறது எங்களுடைய மாணவர்களையும், மக்களையும், கல்விச் சமூகத்தையும் அழிப்பதற்கும் ஆக்கிரமிப்பதற்கும் சிறீலங்கா பேரினவாத ஆட்சியாளர்கள், அவர்களுக்குச் சேவகம் செய்கின்ற கனவான்கள், அதன் பிரமுகர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுதமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வந்தனர். அவதூறுகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் பரப்பி வந்தனர் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிக்க முயன்றனர் . உண்மைக்கு புறம்பான பொய் பரப்புரையை மேற்கொண்டு தமிழ் மக்கள் மீது ஆக்கிரமிப்புயுத்தத்தை திணிைப்பதே அதன் முழு நோக்காக இருந்து வந்தது. வெளிநாடுகளின் ஆயுத உதவியையும், பண உதவியையும்பெற்று எமது பாடசாலைகள் மீதும் எமது வாழ்விடங்கள் மீதும் குண்டுகளைப் பொழிந்தது. சர்வதேச சமூகத்திடம், எமது மக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் குரல் எழுப்பினார்கள் எங்களுக்கொரு நீதியில்லையா, எங்களுக்கொரு நியாயம் இல்லையா” என அவர்கள் கேட்டார்கள்உணரமாட்டீர்களா எங்களை பார்க்க மாட்டீர்களா” என கத்திக் கத்திக் கேட்டார்கள். உலகத்திலிருக்கிற எந்த மனித நேய அமைப்புக்களும் செவிமடுக்கவி இந்த நேரத்தில், எங்களுடைய தேசத்தின் மீது யார் அவலத்தை விதைத்தானோ அவனுக்கே அந்த அவலத்தை திருப்பிக் கொடுத்தோம். எதிரியின்ர முதுகெலும்பை நாங்கள் உடைத்தோம். எங்களுடைய போரிடும் சக்திக்கூடாகவே சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்த்தது. எங்களுடைய நிலைப்பாட்டைத் திரும்பிப் பார்த்தது. பலம் கொண்ட சக்தியாக நிமிர்ந்து நின்ற பொழுதுதான் சர்வதேசம் தலையிடும் சக்தியாகமாறியது. இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி வேர்கள் .கொம் சர்வதேச சமூகத்துக்கும்எங்களுக்குமிடையில் ஒரு உறவுநிலை வளர்ந்தது. விடுதலைப்போராட்டத்தினுடைய பிரதிநிதிகள், வெளிநாடுகளுக்கு வந்ததும் எமது பிரச்சனையை எடுத்துச் சொன்னதும் இதன் அடிப்படையில்தான். அங்கிருந்தும் பலர் வந்தார்கள் யதார்த்தத்தைப்புரிந்துக்கொண்டார்கள். இவ்வளவு மாவீரர்கள் ஏன் மடிந்தார்கள் தலைவர் பிரபாகரன் ஏன் இந்த விடுதலைப் போரை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார். போன்ற விடயங்களை அவர்கள் உணரத்தொடங்கினார்கள். சிறீலங்கா அரசாங்கத்தின் சதி முயல்வுகள் அம்பலமாகத் தொடங்கினை சிறீலங்கா அரசாங்கத்தின் பேரினவாத முகத்திரையை எமது செயற்பாடுகளும், எமது போராட்டமுமே கிழித்துக்காட்டினை இந்த நிலையில் இன்றும் சர்வதேச ரீதியாக எம் மீது பயங்கரவாதமுத்திரையைகுத்தும்நோக்கில்அவர்கள்செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பிரச்சாரத்துக்கான காரணிகளை அவர்கள் தேடுகிறார்கள் . அப்படியான காரணிகள் இல்லாத போது பொய்யான குற்றச்சாட்டுக்கை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்றுதான்இ ந்த சிறார்கள் பிரச்சனையும். தோல்வியைத தழுவும் சிங்களதேசத்தின் ஆற்றாமையின் வெளிப்பாடும்தான் இது . கேள்வி :சமர்க் களங்களை, கல்வி நிலையில் எவ்வாறு பதிவாக மேற்கொள்கிறீர்கள்? கீதன் : சண்டைக்களங்களில் நின்று செயற்படும் பொழுது கூட பலதரபட்ட வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். சண்டைக் களங்களில்பதுங்கு அகழிகளுக்குள் இருந்து நூல்களை வாசித்துக்கொண்டிருப்போம். ஒரு மகிழ்ச்சியான சூழலில் இருப்பதை போன்றே நாம் அங்கும் இருப்போம். புளியங்குளத்தில் நடந்தது எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு. ஒரு போராளி காவலுக்கு நிற்க ஏனைய போராளிகள் பதுங்கு அகழிகளுக்குள் இருந்து புத்தகங்களை வாசிப்போம். கடந்த கால வரலாறுகளை பற்றி போராட்ட வரலாறுகளை பறறி, தலைவரைப் பற்றி விடுதலையைப் பற்றி நாங்கள் படித்துக்கொண்டிருப்போம் அல்லது இதில் ஆற்றல் மிக்க போராளி ஒருவர் வகுப்பெடுத்துக்கொண்டிருப்பார். பத்திரிகைகள் படித்துக்கொண்டிருப்போம். எங்களுக்கென வரும் துண்டு பிரசுரங்களை வாசிப்போம். வானொலி கேட்போம் எமது பணிகளில் முக்கியமானது, ஒரு சமர்நடந்துகொண்டிருக்கிறது என்றால் அச்சமர் பற்றிய முழு விபரங்களையும் பதிவாக்குவது எதிரி எப்படி முன்னேறுகிறான், எத்தனை படை வீரர்களோடு எத்தனை மணிக்கு முன்னேறுகிறான், என்னென்ன படைக் கலங்களோடு முன்னேறுகிறான், எந்தளவிற்கு உச்சமான தாக்குதலை அவன் தொடுக்க முனைகிறான் என எதிரி பற்றிய முழு விபரங்களையும் நாங்கள் துல்லியமாக பதிவோம் அன்றைய நாளின் அவனது முழு நடவடிக்கைகளையும் நாம் பதிவுககுளுக்குள்ளாக்குவோம் எங்களுடைய போராளிகள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பது பற்றி அவர்களுடைய அர்ப்பணிப்புக்கள் அவர்களுடைய தியாகங்கள் பற்றி பதிவோம். புளியங்குளத்தில் போராளிகள்ம்சொல்லிக்கொண்டிருப்பார்கள் “நாங்கள் உயிரோடு இருக்கும் வரையும் புளியங்குளத்தை நெருங்கேலாது. எதிரி பிடிக்கிறது என்று சொன்னால் எங்கட உடலைத்தாண்டித்தான் போய் பிடிக்கலாமே ஒழிய மற்றும்படி நடக்காது” புளியங்குளத்தில ஒரு போராளி கண்களில் காயப்பட்டுவிடுகிறார். கண்களில் இரத்தம் வழிகிறது. அவர் இரண்டு கண்களும் பார்வையை இழந்துபோன சமயத்திலும், அய்யோ எனக்கு கண் தெரியவில்லை என்று கதறவில்லை . தனது “ஆயுதம் எங்கே” என்று கேட்டதைத்தான் எங்களால் கேட்க்க முடிந்தது. அவரின் அழுகையை அவர் அந்த நேரத்திலும் வெளிப்படுத்தவில்லை . அவ்வளவு உறுதியும்உரமும் மிக்க போராளியாக எம்முன் நின்றார். எமது மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் அவர்கள் தங்கள் உயிரை துச்சம் என மதித்து நிற்கும் பண்புகளையும் பதிவாக்குவோம் பிறகு அந்த சமர் பற்றி போராளிகளுக்கு கற்பிப்போம். எமது பணிகள் எல்லாவற்றையும் இவ்விடத்தில் பகிர்ந்துகொள்ளமுடியாதிருக்கிறது கேள்வி :சமூக விடுதலைக்கான கல்வியும் கற்பிக்கப்படுகிறதா? கீதன்: மானிட வாழ்க்கை என்பது குடியியல் வாழ்க்கையையும்அரசியல் வாழ்க்கையையும் கொண்டது. குடியியல் வாழ்க்கை என்றால் ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டி நாளாந்தம் தன்சீவியத்தை தனது வாழ்க்கையை வாழ்ந்துகொள்வதாக சொல்லலாம். அரசியல் வாழ்க்கை என்றால் எங்கட இடத்தில நாங்கள் வாழவேண்டும். எங்கட மொழியைப் பேசவேண்டும். எங்கட- கலைபண்பாட்டை நாங்கள் பின்பற்றவேண்டும். எங்கட கலைபண்பாட்டுக்கேற்ற மாதிரி நாங்கள் வாழவேண்டும். எங்கட வரலாற்றை நாங்கள் படிக்கவேண்டும். எங்கட வரலாற்றுக்கேற்றமாதிரி எங்கட வாழ்க்கையை நடத்தவேண்டும். எங்கட பொருளாதார பலத்தில் நாங்கள் நிமிர்ந்து நிற்கவேண்டும். இதுதான் எங்கட அடிப்படை அரசியல் உரிமைகள். இப்படி ஒரு வாழ்கையை ஒரு காலத்தில நாங்கள் வாழ்ந்தோம் . எஙங்கட சமூகமும் சிறப்புற இருந்தது. யாருக்கும் அடிமைப்படாத வாழ்க்கையை வாழ்ந்தது அனால் ஒரு கால கட்டத்துள் சாதியம் , சமயம், சீதனம்பிரதேசவாதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் என எல்லாம் புகுநது எமது சமூகததை சிதைததது அதனால் ஒரு கட்டத்தில எங்கட மக்களுக்குள் ஏற்பட்ட உடைவுகளாலும் பிரிவுகளாலும் நாங்கள் பின்தங்கிபோக நேர்ந்தது. இதன் காரணமாகவும்தான் நாம் எமது அரசியல் உரிமைகளையும் இழக்க நேரிட்டது. தமிழர்கள் வீரமுள்ளவர்களாக இருந்தார்கள். தமிழர்கள்அறிவுள்ளவர்களா இருந்தார்கள் உலகத்தில் ஒரு இனம் எப்படி வாழக்கூடாதோ அப்படி வாழ்ந்தோம். உலகத்தில் ஒரு இனம் எப்படி சாகடிக்கப்படக்கூடாதோ அப்படி சாகடிக்கப்பட்டோம் அடிமைப்பட்ட மக்களாய் போனோம். மற்றவர்களால் சுரண்டப்பட்டோம். அப்போ எங்களுக்கொரு தலைவர் இருக்கவில்லை எங்களுக்கொரு படை பலமும் இருக்கவில்லை தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்களின்விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். தேசியஉணர்வை கட்டி எழுப்பினார். அவரே மக்களின் விடுதலைக்கா மக்கள் படையைக் கடடி எழுப்பினார் சமூக விடுதலையையும் அரசியல் விடுதலையையும் ஒரு சேர இணைத்தே இந்தப் போராட்டத்தை தலைவர் வழி நடத்திச்செல்கிறார் . இவை பற்றியும் போராளிகளுக்கு விரிவாக கற்பிப்போம். பேட்டி கண்டவர் : சுபாஸ் இதழ் வெளியீடு :எரிமலை இதழ் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/6aa0eeca-195b-4198-b94d-8d5c10f774e8
  15. பாஞ் ஐயாவுக்கும், புலவர் ஐயாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  16. இத்தனை வருஷமாக பெளத்திரமாக வைச்சிருக்கிறியள் எண்டால் இப்பத்தான் பாவனைக்கு இறங்குப்பெட்டிக்குள்ளால எடுத்திருக்கிறியளாக்கும்😁 எனக்கு முறுக்கு, பருத்துறை வடை, பயித்தம்பணியாரம் எல்லாம் எவ்வளவு சாப்பிட்டாலும் “கெலி” அடங்காது! முறுக்கு சுட உரல் இல்லை என்பதால் கடையில்தான் வாங்குவது. அது வெறும் மாவாக இருக்கும். ஆனால் சில வீடுகளில் நல்ல தரமாக சுட்டு விற்கிறவர்கள். சின்ன ஓர்டர் என்றால் செய்ய பின்னடிப்பார்கள். அதனால் இடைக்கிடை அவர்களிடம் வாங்குவதுண்டு.
  17. படங்கள் அந்த மாதிரி இருக்கு😀 முறுக்கு மொறுக்குமொறுக்கு என்று இருக்கு!
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  19. ஐபோன் மூலம் மூன்று படங்களை ஒன்றாக்கி இணைத்துள்ளேன்😀 முதலாவது படத்தில் + இருக்கின்றது. அதை கிளிக்கினால் இரண்டாவது படத்த்தில் இருக்கிற மாதிரி மெனு வரும். Gallery Image ஐ கிளிக் பண்ணவேண்டும். அதன் பின்னர் மூன்றாவது படத்தில் உள்ள பக்கம் வரும். விம்பகத்தில் படங்களை இணைக்கலாம்.. அல்லது உங்கள் பெயரில் ஒரு அல்பம் தயாரித்து இணைக்கலாம். விம்பகத்தை அல்லது உங்கள் பிரத்தியேக அல்பத்தை கிளிக்கினால் ஒரு பெரிய + வரும். அதைக் கிளிக் பண்ணி தேவையான படங்களை விம்பகத்தில் (அல்லது உங்கள் அல்பத்தில்) தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.
  20. சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம். ஒழுங்காக படத்தை தரவேற்றினால் முத்தத்தை காத்தில பறக்கவிடுங்கள்😍
  21. சிங்கலெ என்று பெயர் மாறுகின்றதோ இல்லையோ, சிங்களவர்கள் முழுத்தீவையும் சிங்கள மயமாக்கும் திட்டத்தை வேகமாக முன்நகர்த்துவார்கள். சிங்கள மக்கள் காலைச்சாப்பாடாக பாணையும், சம்பலையும் உண்ண வழியில்லாத போதும், அவர்களை எஞ்சி இருக்கும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் காட்டி பயம்காட்டி தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்வார்கள் ராஜபக்‌ஷக்கள். சிங்களவர்களின் பொருளாதாரம் மிகவும் மோசமாக மாற சீனாவும், மேற்கும், மேற்கின் கூட்டான இந்தியாவும் விடாது. மாறி மாறி உதவி வழங்கி தங்கள் பக்கம் இழுக்கப் பார்ப்பார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் தமது நிலப்பரப்பு சுருங்கினாலும் பார்வையாளர்களாக இருப்பார்கள்..
  22. பட்டக்காடு நாவலை முன்வைத்து சிறந்த தத்துவவாதியான Nassim Nicholas Taleb தனது ‘The Bed of Procrustes’ நூலில் “What we call fiction is, when you look deep, much less fictional than nonfiction; but it is usually less imaginative” என்ற கருத்தைப்பதிவிடுகிறார். இது ‘பட்டக்காடு’ எனும் படைப்பின் மீதான் விமர்சனங்களுக்கான எதிர்வினையாக கொள்ள முடியும். நாவல் என்பதை இவ்வாறுதான் வரைய வேண்டும் என்று ஓர் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. ஆனால் நாவலானது எவ்வாறான குணாம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை குறிப்பிட முடியும்.ஓர் வாசகனின் ஒற்றைப்படையான கருத்தியலை மாத்திரம் கொண்டு ஓர் நாவலை இலக்கியத்தரமற்றதாக கண்ணை மூடிக்கொண்டு கடந்து சென்றுவிடவும் முடியாதல்லவா. அமல்ராஜ் பிரான்சிஸின் ‘பட்டக்காடு’ zero degree பதிப்பகத்தால் வெளியிட்டிருக்கின்ற 2020இன் முக்கியமானதோர் நாவல். இதை நான் குறிப்பிடக்காரணம் இல்லாமலில்லை. இன்றைய சூழலில் ஓர் படைப்பு எந்த பதிப்பகத்தில் வெளியாகிறது என்பது கூட சில சமயங்களில் அதை அடுத்த கட்ட மார்கட்டிங் லெவலிற்கு கொண்டு சென்று விடும். ஒரு வகையில் இலகுவில் அது வாசகர்களை அடைந்துவிடும் என்பது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயம். ஒரு படைப்பை எந்தப்புள்ளி நாவலாக மாற்றுகிறது என்பது மிகவும் முக்கியமானதொன்று. எல்லா படைப்பாளிகளாலும் ஓர் நாவலை இலகுவில் கட்டமைத்துவிட முடியாது.நாவல் கோட்பாட்டை விரும்பியோ விரும்பாமலோ தன்னுள் பொதித்திருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. (இரண்டாவது நிபந்தனையை பிறகு கூறுகிறேன்) அந்த வகையில் பட்டக்காடு நாவல் அந்நிபந்தனையைப் பூர்த்தி செய்திராமல் இல்லை. காதல்,கடல்,நாடு, நட்பு என்ற பல கருத்தாடல்களின் இடைவெட்டுத்தான் இந்நாவல். இதில் எழுத்தாளர் கூறவந்த விடயங்கள், அதை அவர் கூறிமுடித்த மொடியூலேசன் மற்றும் அதை பிரஸ்தாபிக்க அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனத்தையும் பற்றியெல்லாம் பேசேவண்டியுருக்கிறது. முதலில் கடல். ஒரு நாவலுக்குள் ஓர் தலைப்பு சார்ந்து நாம் நிறையவே தகவல்களை உட்புகுத்த முடியும் ஆனால் ஓர் சிறிய கோட்டிற்கு அப்பால் அது வாசகனை திகட்ட வைத்துவிடும். அது நாவலுக்கான வாசகனின் பிரேமத்தை குறைத்துவிடும் வல்லமை கொண்ட அதேவேளை தனியாள் வேறுபாடும் கொண்டது.ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, ஜோ டி க்ரூஸின் ‘ஆழி சூழ் உலகு’,மொண்டகோமெரியின் ‘தி சோல் ஒப் என் ஒக்டோபஸ்’ என்று நாம் அறிந்த படைப்புகளுக்கும் அது பொருந்திப்போகிறது. ஆனால் எப்போது பொதுத்தன்மையிலிருந்து விலகி வேறுபட்ட உரையாடல் தளத்திற்கு நாவல்கள் வாசகனை கூட்டிச்செல்வதானது அது பற்றிய உரையாடலுக்கான காரணமாய் அமைந்து விடுகிறது.பட்டக்காட்டை பொறுத்தவரையில் ;ஓர் தொடராக பத்திரிகையில் வாராந்தம் வெளியான கதையொன்றை எப்படி நாவலாக மாற்றுவது என்பதை சரியாகத்தான் பெரும்பாலான இடங்களில் செய்து முடித்திருக்கிறார்.கடலும் அது சார் பட்டக்காடு மக்களின் உணவுமுறையைக்கூட சலிக்காமல்தான் சில பகுதிகளில் தந்திருக்கிறார் என்று சொல்ல முடியும். இதுவரை நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும்; அங்கதச்சுவையை தனியே வைத்துவிட்டு வெறுமனே நாவலை பார்த்துவிட முடியாது என்பது. அது எழுத்தாளரின் இயல்புத்தன்மையின் வெளிப்பாடாகத்தான் இருக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அந்தோனியுடனான மதனின் உரையாடல்களை செதுக்குவதில் உள்ள நிலையும் அந்த தொகையில் அடங்கிப்போய்விடும். இப்போதும் நாங்கள் நண்பர்களுடனான எதிர்வினைகளை இவ்வாறே கட்டமைத்துக்கொள்வதால் இளையவரை அது கவரும் உத்தியாக நாவலுக்கு அது பலம் சேர்த்து விடுகிறது. அந்தோனிதான் பரம்பொருளாக இருந்து மதனுக்கு பல இடங்களிலும் புத்தியுரைப்பது hamlet & horatio ஐ ஞாபகப்படுத்திச்சென்றது. கயல் என்ற பாத்திரத்தை ஆரம்பத்தில் அமல்ராஜ் அவர்கள் வடிவமைத்தருக்கும் விதம் மெச்சத்தக்கதாயினும் கதையின் கிளைமெக்ஸ் சற்று மிகைப்படுத்தலான மனோநிலையை வழங்கவல்லது. ஆணின் காதலின் போதான மூளைக்குடைச்சல்களையும் கிறுக்குத்தனங்களையும் அவர் வரைந்த விதம் சிறப்பு. கயலை ஓர் போராளியாக காட்டவேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்திலிருந்தே அந்த பாத்திரத்தை bold ஆனதோர் வகையறாவில் படைத்தாரா இல்லை அது எதேர்ச்சையாக நகர்ந்ததா என்ற கேள்வி எனக்குள் உண்டு. உதாரணமாக, //கயல் தொடர்பில் என்னை எப்பொழுதுமே ஆச்சரியப்படுத்தும் ஒரு விடயம் என்றால் அது அவளுடைய தைரியம்தான். புற உலக அச்சுறுத்தல்களால் அவளுடைய ஓட்டத்தை ஒருபோதுமே தடுக்கமுடியாது. தன் சுயநிலைப்பாடு சார்ந்து இறுதிவரை தைரியமாகப் போராடும் ஒரு பெருங்குணம் படைத்த பெண் அவள். எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மனத்தைரியம் எல்லாப் பெண்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. கயலுக்கு அது பெருங்கொடையாக அருளப்பட்டிருக்கிறது.// நிவேதாவுக்கும் இது பொருந்தும்.எழுத்தாளரை சிறந்த கதைசொல்லியாக இது உருமாற்றியிருக்கிறது. எழுத்தாளர் அமல்ராஜ் பிரான்சிஸ் நாவலின் அடிப்படையிலேயே போர் இழையோடியிருந்தாலும் நேரடியாக எதிர்கொண்ட துன்பவியலை அடிநாதமாக இல்லாமல், போரானது வன்னிக்கு வெளியே நெஞ்சின் உரத்தையும் நேச உறவுகளையும் எவ்வாறு தாக்கியது என்றுதான் பேசி முடித்திருப்பார். இயக்கங்கள் சார்புநிலை விடயங்களில் கருதுக்களை பதிவு செய்திருப்பினும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபாடுடற்ற மனோநிலையை அந்தோனியும் ஜோசப் மாஸ்டரும் கூட வெளிப்படுத்தித்தான் இருப்பார்கள். போர் சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பற்றி எவ்வளவோ பேசியாயிற்று என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இரண்டாவது நிபந்தனைதான் வாசகர் பார்வையில் நாவல் எப்படியானது என்பது. அந்தவகையில் பல பாசிடிவ் கருத்துகளை காணமுடிகிறது.மேலும் உண்மைக்கும் நாவலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகளை காணக்கூடியதாக இருக்கிறது. நாவலில் பிரஞ்சை, எதிர்வினை, வியாகூலம் போன்ற சொற்களின் repetition குறைக்கப்பபட்டிருந்தால் இன்னும் சில தாள்களை மிச்சப்படுத்தக்கூடியதாய் இருந்திருக்கும். ‘பட்டக்காடு’ வாசித்து உரையாடப்படவேண்டிய நாவல். – ஷாதிர் https://vanemmagazine.com/பட்டக்காடு-நாவலை-முன்வ/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.