Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா. கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா! எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவளைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன அவளது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச்செய்யும். “எங்கட பாமாக்காவோ?” என்று அவளைப்பற்றிக் கூறி கண்கலங்கும் போராளிகள் அனேகம். நேற்றுவரை இந்தப் தென்னந்தோட்டங்களிலும், கடலின் உப்பு நீரிலும் கால்களை நீள நீள வைத்தபடி உலா வந்தவள். இன்று எங்கள் நினைவுக்குள் நீளமாய் உறைந்து போனாள். பருத்திதுறையிலுள்ள இன்பருட்டி கடற்கரை ஓரத்தில் சின்னக் குழந்தையாய் விளையாடி சிப்பிகளும் கிழிஞ்சல்களும் பொறுக்கி……… அவள் குழப்படிக்காரியாகத்தான் இருந்தாள். சண்முகசுந்தரம் ஐயாவுக்கும், இரத்தினேஸ்வரி அம்மாவுக்கும் நாலாவது பிள்ளையான அவள் சியாமளாவாக வலம்வந்து அந்த வீட்டை நிறைய வைத்தவள். 1971.03.28ல் அவள் பிறந்த போது அந்த வீடு நிறைந்துதான் போனது. சியாமளா சரியான துடியாட்டக்காரி அம்மாவுக்கு விளையாட்டுக் காட்டிவிட்டு, இன்பருட்டிக் கடற்கரை ஓரங்களில் கால்கள் மண்ணிற் புதைய, சின்னக் குழந்தையாய் தத்தித் தத்தி வருவாள். தொடுவானைப் பார்த்தபடி, எறிகின்ற அலைகளில் நனைந்தபடி நீண்ட நேரங்கள் நிற்பாள். அம்மா அவளைக் காணாது தேடிவரும் வேளைகளில் ஓடி ஒளித்து, அவளது குழந்தைக் காலக் குழப்படிகள் சொல்லிமாளாது. அவள் தனது பள்ளிக்கூட வாழ்க்கையிலும் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தனது உயர்தரக் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்ற் கல்லூரியில் கற்றபோது உயிரியல் மருத்துவத்தை தேர்ந்தெடுத்திருந்தாள். படிபபிலும் சரி, விளையாட்டிலும் சரி என்றுமே பின்தங்கியது இல்லை. விளையாட்டுப் போட்டிகளில் அவள் பெற்ற சான்றிதழ்கள் ஏராளம். இப்படி இருந்தவளது வாழ்வின் அமைதியை இந்தியப் படை நடவடிக்கைகள் குலைத்தன. அவளது அண்ணன் கடற்புலி லெப்டினன்ட் வெங்கடேஸ் வீரச்சாவைத் தழுவிக் கொண்டபோது, படிப்பை விட நாடடுப்பணி மேலாகப்பட்டது. அண்ணன் கொண்ட இலட்சியப்பணியைத் தொடர சியமளா இயக்கத்தில் இணைந்தாள். 1989 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அவள் இயக்கத்துக்கு வந்தநேரம். தமிழீழத்தில் வழுக்கி விழுகிற இடமெல்லாம் இந்திய இராணுவம். புலிகளை இரவும் பகலும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த நேரம். புலிகளின் முக்கியமான நடவடிக்கைகள் யாவும் காட்டிலே மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்த சூழ்நிலையில் இயக்கத்தில் போராளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதுவும் பெண் போராளிகளின் எண்ணிக்கை ஒரு சில நூறுகளுக்குள் மட்டுமே. இத்தகைய சூழ்நிலையில் சியாமளா, பாமாவாக தன் பெயரை வைத்துக் கொண்டு நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தாள். பயிற்சிகளில் அவள் காட்டிய திறமையும் உயர்ந்த திடமான உடல் அமைப்பும் அவளை 50 கலிபர் துப்பாக்கியின் உதவிச் சூட்டாளராக செயற்பட வைத்தது. தனது கனரக ஆயுதத்தை தோளிலே சுமந்தபடி இணைப்பிகளை (லிங்குகள்) தோளின் குறுக்காகப் போட்டபடி அவள் நடப்பது தனியான கம்பீரம்! காட்டுக்குள் நீண்ட தூரங்கள் நடந்து, காடு முறித்து, எமக்குத் தேவையான பொருட்களை நாம் சுமந்து வருவது வழக்கம் பெரும் சுமைகள் தோளை அழுத்த அந்த வேளையிலும் இவள் கலகலத்தபடி வருவாள். எங்களுக்குப் பாரங்குறைந்தது போற்தோன்றும். 1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய படைகள் எம் நாட்டைவிட்டு வெளியேறிய போது, காட்டில் இருந்த இருநூறு பேர் கொண்ட குழு யாழ்ப்பாணம் வந்தது. இக் குழுவில் பாமாவும் ஒருத்தியாக இருந்தாள். அன்றிலிருந்து விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில் அவளது தடயங்கள் பதிந்த வண்ணமிருந்தன. கோட்டை, பலாலி, காரைநகர், சிலாவத்துறை, பலவேகய ஒன்று, மணலாறு என்ற நீண்ட பட்டியலில் அங்குள்ள காவலரண்களில் அவளது கால்கள் அகலப்பதிந்தன. பாமா! குறிப்பிட்ட சில காலப்பகுதியினுள்ளே இவளது வளர்ச்சி அபாரமானது. இவளின் உறுதியான செயற்பாடுகளும் நினைத்தகைச் சாதிக்கும் பண்பும் இவளைப் படிப்படியாக வளரச் செய்தன. பலாலி காவலரண்களில் பாமா நின்றபோது அவளது செயற்பாடுகள் யாவும் மறக்க முடியாதவை. எந்த வேலையையும் எனக்கு தெரியாது என்று இவள் தலையாட்டியதை நாங்கள் காணவில்லை. “வீட்டிலிருந்து எல்லாம் தெரிஞ்சு கொண்டே வந்தனாங்கள். இயக்கத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டோம். எல்லாம் முயற்சியாலைதான்” என்று அடிக்கடி கூறுவாள். அவற்றை நாம் பலாலியில் நேரில் கண்டோம். அது 1990ம் ஆண்டின் மழைக்காலப் பகுதி. பலாலியின் செம்பாட்டுமண் மழை ஈரத்தில் பிசுபிசுத்தது. கால்கள் சேற்றில் புதைந்தன. சேற்றுக் குழம்புகளின் நடுவே இருந்த அந்தக் காவலரண் அடிக்கடி எதிரியின் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது. ஓயாமல் எறிகணைகள் விழுந்ததால், நிலம் கரியாகிப் போனது. அடிக்கடி அவ்விடத்துக்கு முன்னேற படையினர் முயற்சிப்பதும் நாம் அடித்துத் துரத்துவதும் வழக்கமான ஒரு நிகழ்வாகிப் போனது. இத்தருணத்தில், முதல் நாள் நடந்த கடுமையான சண்டையில் பதின்னான்கு பேர் காயம் அடைந்தனர். எதிரியின் இலக்கான அந்த இடத்தில் தொடர்ந்தும் எமது குழுவை நிலை நிறுத்துவதற்கு நாம் ஒரு பொறுப்பான ஆளைத் தேடிக் கொண்டிருந்தபோது பாமாவின் செயற்பாடு நம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது. “நான் குறூப்பை கொண்டு போறன்.” அவள் எழுந்து சொன்னாள். இதுவரையும் பெரிய களங்களைக் கண்டவள் அல்ல அவள். ஆனால் அவளிடம் ஒரு வித்தியாசமான திறமை இருக்கத்தான் செய்தது. அவளுக்குக் கொடுக்கப்பட்ட குழுவை திறமையாகச் செயற்படுத்திய விதம் எமக்கு நிறைவைத்தந்தது. அடிக்கடி படையினருக்குத் தலையிடி கொடுப்பதும் பாமாவின் வேலையாக இருந்தது. அந்தக் காலங்களில் பலாலியின் பனை வெளிகளை ஊடறுத்தபடி எதிரியின் தேடொளி இரவைப் பகலாக்கும். மிகமிகக் கிட்டவாக தனது ஒளியைப் பாய்ச்சியபடி இருக்கும்போதெல்லாம் பாமா அதற்கு குறி வைப்பாள் அவளது ‘பிறண்’ குறி தவறியதாக நாங்கள் கேள்விப்படவேயில்லை. பயிற்சி முகாமிலும் சரி… சண்டைகளிலும் சரி அவள் நன்றாக குறிபார்த்துச் சுடும் திறமை பெற்றவளாக இருந்தாள். அப்படி ஒரு இடத்தில் தேடொளி உடைய, மறு இடத்தில் எதிரி அதைப் பொருத்த மீண்டும் உடைய வைத்து, உண்மையில் அவர்களைச் சலிப்படையவே செய்துவிட்டாள். அந்த நீண்ட பனைகளில் நிலையெடுத்தபடி இராணுவக் காவலரண்களை நோக்கி அடிக்கடி அருள் 89 ஐ அடிப்பாள். அது ஒரு விளையாட்டுப் போல…….. ஆனால் குறி தப்பாத ஒன்றாக அவளுக்கு இருக்கும். இப்படி எத்தனை நிகழ்வுகள்! பாமாவின் துடிப்பான அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பலாலியின் புழுதி படிந்த செம்பாட்டுமண் சொல்லும் கனத்த காற்று சொல்லும். பலாலிக்கு பிறகு பெரிய களமாக இவளுக்கு ஆனையிறவுக்களம் அமைந்தபோது, அதிலும் தன் திறமைகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. ஆ.க.வெ நடவடிக்கையில் மகளிர் படையணியின் பக்கம் மும்முரமான சண்டையில் இவள் நின்றாள். உக்கிரமான மோதல், மழை போல ரவைகள் காதை உரசுவதாக வரும் மயிரிழையில் தப்பித்த எறிகணை வீச்சுக்கள்……. பாமாவின் குழுவிலும் அனேகம்பேர் காயம்பட்டுத்தான் போனார்கள். எதிரி பின்வாங்கும் வரை பாமா மட்டும் தனித்து நின்று அடிபட்டதை நினைக்கிறோம். கடைசியாக காலிலே பலத்த காயமடைந்த ஒரு போராளியை அந்தக் கும்மிருடடு நேரத்திலே கண்டுபிடித்து பின்னுக்கு கொண்டு வந்து இவள் மூச்சுவிட்ட போது தனியொருத்தியாக நின்று தடயங்கள் எல்லாவற்றையும் பொறுக்கியபோது………. ஆனையிறவுச் சண்டையில் இவள் தலையில் காயப்பட்டாள். இவள் தப்பி வருவாள் என்பதில் எங்களுக்கு ஒரு துளியளவு நம்பிக்கையே இருந்தது. ஆனால் பாமாவின் திடமான உடல் அமைப்பும் உறுதியுமே அவளைத் தப்ப வைத்தது. மீண்டும் பழைய நிலைக்கு இயங்கவைத்தது. நிறையக் களங்கண்ட ஒரு போராளியாக, ஒரு குறுமபுக்காரியாக, எல்லோருக்குமே உதவுகின்ற இளகிய மனம் படைத்தவளாக நாம் அவளைக் கண்டோம். இப்படித்தான் ஒருநாள்…….. அது லெப். கேணல் ராஜனின் வழிநடத்தலில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி. அதில் இவள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது, இவளது முகாமுக்கு ஒரு சிறுமியும் சிறுவனும் சாப்பாடு கேட்டு வந்தனர். அப்போது அங்கு உணவேதும் இருக்கவில்லை. இதை அவதானித்த இவள், எல்லோரிடமும் இருக்கும் காசு எல்லாவற்iயும் சேர்க்க ஐம்பது ரூபா வந்தது. அதை அவளிடம் கொடுக்கச் சென்றபோது, அச்சிறுமியிடம்; உங்களது பெயர் என்ன? என்று கேட்க, அப்பிள்ளை வாய்திறக்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு இவள்…. ஏன் என்று விசாரித்தாள். விமான குண்டு வீச்சின்போது சன்னமொன்று தாடைக்குள் தாக்கியதால் வாய்திறக்க முடியாது என்ற விபரத்தை அந்தச் சிறுமி சைகை மூலம் கூற, இவளது கண்கள் குளமாகின. அந்தக் காசைக் கொடுத்து அனுப்பிவிட்டு, “இந்தச் சின்னப் பிள்ளை என்ன பாவம் செய்தது.? இதுக்கு இவங்களிற்கு முறையான பாடம் படிப்பிக்கவேணும்” என்று சொல்லிய போது, இவளது குரல் தழுதழுத்தது. அடிக்கடி “இந்தத் கஸ்ரமெல்லாம் எங்களோட முடிஞ்சிடவேணும். எங்கட சின்னனுகள் அனுபவிக்க கூடாது. அதுகள் சந்தோசமாக தங்கட தாய், தகப்பனோட வாழனும்” என்று கூறி, அவள் கண்கள் கலங்கி தவித்ததை நினைக்கும் போது……….. அன்று படைத்துறைக் கல்லூரியில், தொலைத்தொடர்பு பற்றிய வகுப்பு, புதிய வகைகள், புதிய தொழிற்பாடுபாடுகள் நுட்பமாக ஆராய்ந்து விளக்கப்பட்டது. இறுதியாக விரிவுரையாளர் “இந்த (ci 25) வோக்கி புதிசு. இதன் தொழிற்பாட்டை நான் உங்களுக்கு சொல்லித்தரமாட்டன். நீங்கள்தான் இதை ஆராய்ந்து கண்டு பிடிக்கவேணும். குறிப்பிட்ட காலம் தருவன்;” என்று கூறி முடித்த போது பாமா அதோடு முழு மூச்சாய் அதனோடு ஒன்றி அதன் தொழிற்பாட்டை அறிவதில் நேரங்காலம் இல்லாது கண்ணாய் இருந்ததை இப்போது நினைத்தாலும்…………….. அந்த முயற்சியில் அவள் வெற்றி பெற்றாள். அதன் தொழிற்பாட்டை, முதலில் கண்டு பிடித்து விளங்கப்படுத்தினாள். அப்போது எல்லாப் போராளிகள் மத்தியிலும் இவளின் திறமை வெளிப்பட்டது. இவளின் விடாமுயற்சியை நாம் எங்களுக்குள் சொல்லிச் சொல்லி வியந்து போனோம். சதுரங்கம் விளையாடுவது இவளுக்கு பிடித்தமான ஒரு விளையாட்டு. நுட்பமாகவும் திறமையாகவும் அவன் விளையாடுவது யாவரையும் வியக்கவைக்கும். பார்ப்பவரைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் போல நினைக்கத் தூண்டும். அவளின் இராசாவும் இராணியும் தோற்றதாக வரலாறு இல்லை. அந்தளவுக்கு எதிரே விளையாடுபவரை விழுத்துவதில் குறியாக இருப்பாள். அவளின் இன்னொரு விருப்பமான விளையாட்டு கரப்பந்தாட்டம். மாலை நேரத்தில் அவள் விளையாட வந்துவிட்டாள் என்றால், விளையாட்டுத்திடல் கலகலத்துப்போகும். தள்ளி எட்டி ஓடி ஓடி அடிப்பது அவளுக்கொரு கலையாகத்தான் இருந்தது. இவளது குறும்புகளுக்கும் குறைச்சலில்லை. நேரங்காலம் பாராமல், சுற்றி நிற்பவர்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்து விட்டு நழுவிவிடுவாள். ஒரு தடவை இவளது தோழியும் ஒரு உந்துருளியில் இரவு ஒன்பது முப்பது மணியளவில், வடமராட்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டு இருந்தனர். அவளது உந்துருளியில் வெளிச்சம் மிகவும் மங்கலானது. பாதை தெளிவாகத் தெரியவில்லை. புறாப்பொறுக்கியடியில் வந்துகொண்டிருந்தபோது ஒரு சரக்குந்துருளி மிகுதியான ஒளியைப் பாய்ச்சியபடி எதிர்ப்பக்கமிருந்து வந்துகொண்டிருந்தது. பாமா உடனடியாகத் தனது வெளிச்சத்தை அணைத்துவிட்டு கையைமேல் நோக்கிக் காட்டினால். உடனே சரக்கு உந்துருளியின் ஓட்டுனர், உலங்குவானூர்த்தி வருவதாக எண்ணி, தனது வெளிச்சத்தை அணைத்துவிட்டு, ஓரமாக வாகனத்தை நிறுத்தவும், இவள் தனது உந்துருளியை வேகமாக ஓட்டிச்சென்று விட்டாள். இப்படி நான்கு, ஐந்து வாகனங்களை நிறுத்தி, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி தன் வாகனத்தை ஓட்டினாள். முனியப்பர் கோயிலடியில் செல்லும்போது ஒரு வாகனம் வர அதற்கும் அவள் மேல்நோக்கி கையைக் காட்டி நிறுத்திய பின்னர்தான் பார்த்தாள், அது எமது போராளிகளின் வாகனம். ஒரு நிமிடம் அதிர்ந்து போனாலும் உடனே விறுவிறு என்று உந்துருளியை அதிவேகமாக ஒட்டியபடி வந்து சேர்ந்து. சிரிசிரிஎன்று சிரித்த பாமா, இப்போதும் கண்ணுக்குள்ளேதான் நிற்கின்றாள். இவளுக்கு எதுவும் ஏறுமாறாகச் சொல்லி கோபபட வைப்பது எங்களுக்கு பெரிய விளையாட்டுப்பார்த்தாக இருக்கும். எதற்காவது இவளுக்கு கோபம் வந்தால் கடகடவென்று பேசிவிட்டு அடுத்த நிமிடம் மறந்து போய் நின்று சிரிப்பாள். பேசுவது முழுக்க அடுக்கு மொழியில் தான். கதைக்கும் போது வேகமாக கதைப்பதால் அவளது கதை மற்றவர்களுக்கு விளங்குவது கடினம். அதனால் அவளை ‘நடுங்கல்’ என்று கேளிசெய்வோம். இப்படிக்கேலி செய்தால் ஓடித்தூரத்தி அடித்துவிடுவாள். 1992.03.01 இல் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டது. அன்று கடற்புலிகள் மகளிர் அணி தோற்றம் பெற்ற நாள். எங்கள் தலைவரின் கனவுகளுக்கு அபார நம்பிக்கை ஊட்டும்படியாக கடற்புலிகளின் வளர்ச்சியில் பாமா வகித்த பங்கு அளப்பரியது. 1992ம் ஆண்டின் பிற்பகுதியில் பாமா கடற்புலிகளின் அணியில் தன்னை இணைத்துக் கொண்டாள். அன்றிலிருந்து கடற்புலிகள் மகளிர் படையணியை வளர்ப்பதில் அவள் தீவிர அக்கறை செலுத்தினாள். சகபோராளிகளுக்கு அணிநடை பழக்குவதிலிருந்து முக்கியமான வகுப்புக்களை எடுப்பது வரை, எல்லாவற்றிலும் பங்கேற்றாள். தலைமையேற்று நடத்தினாள். கிளாலில் மக்கள் பாதுகாப்புக்காக எம்மால் நடத்தப்படும் பாதுகாப்புப் பணியில், இவளுடன் ஒரு குழு பங்களித்துக் கொண்டிருந்தது. கிளாலிக் கடலில் கொட்டும் பனியிலும், மழையிலும் ஊசியாகக் குத்தும் உப்புக் காற்றின் மத்தியிலும் அவள் விடிய விடிய காத்திருந்த காலங்களை நினைக்கின்றோம். தூரத்தே புள்ளியாய் விசைப்படகுகள் தெரியும். கடற்பரப்பில் மக்களின் படகுகள் ஆடிச் செல்லும். நெஞ்சு நீரற்று வரண்டு போய் கண்கள் பீதியாய் வழிய துயரப்படும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய கடற் சண்டைகளில் பாமா பங்கேற்றதை நினைக்கிறோம். ‘நீ வீட்டில் மிகுந்த பிடிவாதக்காரியாய் இருந்தாயாமே? நினைத்ததைச் செய்து முடித்து நினைத்ததை வாங்கித் தரும்படி அந்தப் பிடிவாதம்தான் கடலிலும் உன்னைச் சாதிக்க வைத்ததோ…. “வோட்டர் ஜெட்டை ஏன் நீங்கள் எடுக்கவில்லை?” என்று பாமாவின் மாமா கேட்ட பொழுது “மாமா அதைக் கொண்டு வந்து விட்டுதான் உங்களுடன் கதைப்பேன்”. என்று கூறினாளாம். இதைக் கண்கலங்கியவாறு மாமா கூறினார். நினைத்ததைச் சாதித்து முடிக்கும் அந்த இயல்பு பாமாவுடன் கூடப்பிறந்தது. என்பதை நாம் பல நிகழ்வுகளில் கண்டோம். இத்தகைய நினைத்ததைச் சாதிக்கும் பண்புதான் சாவின் இறுதிக் கணங்களிலும் அவளை இறுகப் பற்றியிருந்து. பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது. இத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி முக்கிய பங்கேற்றது. இந்தச் சமரில் கடற்புலிகளின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் நாகதேவன்துறையில் கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு, ஒரு படகுப் பொறுப்பாளராக பாமா அனுப்பப்பட்டாள். சண்டைக்குத் தனது படகைத் தயார் படுத்திக் கொண்டிருந்த பாமா கரையில் நின்ற போராளிகளிடம் ஆளை ஆள் தெரியாத இருளில், நம்பிக்கை தொனிக்க, “இந்தச் சண்டையிலே நாங்கள் வோட்டர் ஜெட் ஒண்டைக் கொண்டு வருவோம்” என்று சொல்லிவிட்டுப் போனாள். சொன்னபடி நாகதேவன் படைத்தளத்தை தகர்த்துவிட்டு ஒரு நீருந்து விசைப்படகோடு முகமெல்லாம் சிரிப்பாக வெற்றிப் பூரிப்போடு கரைக்கு வந்தாள். அதிகாலை திரும்பவும் அவளை வருமாறு தொலைத்தொடர்பு கருவி கூப்பிட்டது. எல்லா ஆயுதங்களுடனும் அவளது படகு ஒரு குருவியைப் போல புறப்பட்டுப் புள்ளியாய்ப் போனது. ஏதோ ஒன்று அவளிடம் வித்தியாசமாகத் தென்பட்டது. வழமைக்கு மாறாக ஏதையோ கூற நினைப்பது போல அவளது கையசைப்பு அந்த இருளில் மங்கலாகத் தெரிந்தது. காற்றைக் கிழித்தபடி ஓயாத ரவைகள். காதை உரசுவதான அவற்றின் சத்தங்கள். அவைகளின் மத்தியில் அவளது படகு தூரத்தே மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கடலலைகள் ஆர்த்தெழுந்து படகை மறைத்தன. நிலவை விழுங்கிய வானத்தில் ஒளிப்பொட்டாய் விளங்கிய நட்சத்திரங்கள். வானம் அமைதியாகத்தான் இருந்தது. கனதியான குண்டுச் சத்தங்கள் கண்ணிமைக்கும் இடைவெளியில் அதற்கும் இடைவிடாத நேர இடைவெளிகளில் ஓசைகள் கேட்டு கொண்டே இருந்தன. “பாமா… பாமா வோக்கி கூப்பிட்டது. விரைவாக தொடர் எடுக்க முயன்று தோற்றுப் போய் …… ஒரு ரவை அவளது காலை ஆழமாக பிய்த்துச் சென்றது. பீறிட்ட இரத்தக்குளியலில் பாமா வீழ்ந்த போது……….. மீண்டும் மங்கலான குரலில் அவள் கட்டளை பிறப்பித்துக் கொண்டுதான் இருந்தாள். மெல்ல மெல்ல குரல் மங்கி, துடிப்படங்கி……. “காலிலைதான் காயம் என்று……. பிரச்சனை இல்லை என்ற எங்கள் எல்லலோரினதும் நம்பிக்கைகளை பொய்யாக்கிக் கொண்டு மெல்ல மௌனித்துப் போனாள். அந்தப் பிடிவாதக்காரி. உப்புக் கரிக்கும் கடல் நீரேரியில் கலந்து போனாள். கிளாலிக் கடல் உதிரத்தில் தோய்ந்தபடி மீண்டும் மீண்டும் பொங்கியெழுந்தது. ஆயிரம் ஆயிரம் மாவீரர்களோடு எங்கள் பாமா, விடுதலையின் பெருநெருப்பை சுவாசித்தபடி….. வெற்றியின் வேராய் உறங்கட்டும் அமைதியாய்… நினைவுப்பகிர்வு:- சுதாமதி. களத்தில் இதழ் (16.09.1994). https://www.thaarakam.com/news/d18d52aa-6e58-4ed4-86b4-a5c622483296
  2. பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள் . பூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள். இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக் கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..! வெளியீடு : – உயிராயுதம் நூல் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/8e8888ba-faf2-4187-b3ad-5d96d5f2881a
  3. ஒரு உண்மை வீரனின் கதை - லெப்.கேணல் நவநீதன் ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி விழித்தான் பழம்பாசியில் ஒரு சண்டை. பால்ராஜ் அவர்கள் வன்னிக்குத் தளபதியாக இருந்த போது அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்தவன் நவநீதன் தான். தவிர்க்க முடியாத ஒரு பயணம்; தளபதி போகவேண்டியிருந்தது. அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த லெப்ரினன்ட் கேணல் சந்திரனும் கூட. போயே ஆகவேண்டும்; நோக்கம் முக்கியமானது. அது இந்தியப்படைக் காலம்; இடறுப்படும் இடங்களிலெல்லாம் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்த ஒரு சூழ்நிலை. மிக நெருக்கடியான ஒரு நேரம் இடமும் அப்படித்தான்; மைய இலக்கு வைத்து இந்தியர்கள் படை நடாத்திக்கொண்டிருந்த மணலாற்றின் வேலியோடு குறைந்தளவு வீரர்களையே கொண்டு நகர்ந்து கொண்டிருந்த எமது அணிக்கு, திசையறி கருவி வழிகாட்டிக்கொண்டு இருந்தது. தண்ணிமுறிப்பு வீதியைக் கடந்து பழம்பாசிக் காட்டுக்குள் இறங்கிய போது வழமை போல முதலாவது ஆளாகச் சென்று கொண்டிருந்த நவநீதன், திடீரென நடை தயங்கி, ‘அலேட் பொசிசனில்’ வைத்திருந்த ‘எம் -16’, உயர்த்தி, மூக்கைச் சுழித்துக் கொண்டு திரும்பினான். அநேகமான தடவைகளில் இந்தியர்களின் அரவம் காட்டி, எம்மை அரட்டி விடுகின்ற அந்த ‘மணம்’ – சற்றுக் கூடுதலாகவே சுவாசத்தோடு கலந்தது. காட்டுப் பாதை இடைக்கிடை நாம் பயன்படுத்துகின்ற தடம் தான் – அவதானித்திருக்கக்கூடிய எதிரி. இரை தேடி வந்திருந்தான். “இந்தியப்படையின் விசேட அதிரடிக் கொமாண்டோக்கள்” – தடயங்களை வைத்து புலிகள் ஊகித்துக் கொண்டனர். எங்கள் பாதையின் ஏதோ ஓர் இடத்தில் நிச்சயமாக எதிரி நிலை எடுத்திருப்பான் நம்பிக்கை உறுதியாக இருந்தது. கைவிட முடியாத பயணம்; தேவை பெரியது. இது ஒரு புறம் போகஇ ‘அடிக்கப் போகின்றவனுக்குத் திருப்பி அடித்தே ஆக வேண்டும்’ என்ற ஆவேசமும் எழுந்தது. நவநீதனே முனைப்பாக நின்றான். தளபதி ஒழுங்கமைத்தார்; அணி இரண்டாக்கப்பட்டது. பிரதான குழுவிலிருந்து குறிப்பிட்ட ஒரு தூரத்தில் துணைக்குழு நகரும். ஒரு பதுங்கித் தாக்குதலானது பலவகைப்பட்டதாக அமையும். வலது புறமிருந்து வரலாம் இடது புறமிருந்தும் வரலாம். நேரெதிரிலிருந்து வரலாம். சில சமயம், வலது அல்லது அடது புறத்தோடு எதிர்ப்பக்கத்திலிருந்தும் “L” வடிவத்தில் வரலாம். இவற்றில் எது நடந்தாலும் எதிர்கொள்ளக் கூடியவாறு திட்மிடப்பட்டது பிரதான குழு தாக்குதலைச் சந்திக்க, துணைக்கழு காட்டுக்குள் இறங்கி, வளைத்து, எதிரியை நாரிப்பக்கத்தால் தாக்க வேண்டும். நவநீதன் தான் கொமாண்டர். அணி அசையத் துவங்கியது வழமை போல நவநீதன் முன்னுக்கு. அது அவனுக்கே உரிய துணிவு கத்திக்கொண்டு பறந்த ஒரு காட்டுக் குருவியைத் தவிர நிசப்தம் தன் முழு ஆதிக்கத்தையும் செலுத்தியிருந்தது; ‘மயான அமைதி’யை விடப் பயங்கரமானது ‘வன அமைதி’ எதிர்பார்க்கும் சண்டை; எதிர்ப்படப்போகும் நேரத்தை எதிர்கொள்ளத் துணிந்த மனது. அதிகரிக்கும் இதயத்துடிப்போடு கலந்த ஆக்ரோசம். சுடத் தயாரான துப்பாக்கிகளின் குழல்வாய்கள் நிமிர்த்தி – பாயத்தயாரான புலிகளின் பதுங்கல் நகர்வு. சருகு நெரிபடும் சத்தத்தோடு மட்டும், அடிமேல் அடிவைத்து அணி சகர்ந்து கொண்டு… திடீரென, இயல்பு மாறிப்போயிருந்த காடு; இயற்கை குலைந்து போயிருந்தது வனம். சூரியனை நோக்கி வளர வேண்டிய மரக்கிளைகள் சில, வளைந்து, பூமியை நோக்கி இருந்தன. இருக்கக்கூடாத இடங்களில், சருகுகள் கூடுதலாய். சருகுகளின் மறைப்பினூடாக மின்னுகிற எல்.எம்.ஜி.குழல்; இலை குழைகளின் உருமறைப்பிற்குள் வெட்டிவெட்டி முழிக்கும் கண்கள்; மெல்ல அசையும் ‘ஹெல்மட்’டுகள். கண்டுகொண்ட நவநீதன் நிதானிக்க, பார்த்துவிட்ட தளபதி சைகை செய்ய, தாசனின் துணைக்குழு காட்டுக்குள் இறங்க – மூர்க்கத்தனமான சண்டையைத் தொடங்கி வைத்தான் நவநீதன். எட்டித்தொடும் தூரத்திற்குள் இயந்திரத் துப்பாக்கிகளின் குமுறல்; எம்.16 சுடுகுழல் சிவக்க, எதிரிகளின் உச்சந் தலையைக் குறிவைத்தான் அந்த வீரன். இந்தியக் கொமாண்டோக்களின் முன்வரிசை அணியை, பதுங்கிய இடத்திலேயே அவன் பதுங்க வைத்தது, பிரமிப்பூட்டுகிற வேகம். முதலாவது ஆளைச் சுட்டதிலிருந்து, சண்டையை நடாத்தி துரத்தித் துரத்தி அடித்து, ஆயுதங்களை எடுத்து முடித்துவைத்து – எல்லாமே அவன் தான். ‘அதிரடியை முறியடித்து அதிரடித்தல்’ – படையியல் விஞ்ஞானத்தில் இதற்கு ‘Counter Ambush’ என்று பெயர். எங்கள் போராட்ட வரலாற்றில் இது ஒரு முக்கிய சம்பவம்; தளபதி பால்ராஜின் நெறிப்படுத்தலில் செய்வித்து முடித்தலன் நவநீதன். ஆனால், தினேசுக்கு இதயத்துக்கப் பக்கத்தில் வெடிகொழுவிக் கொண்டது. பீறிட்டுப் பாய்ந்த இரத்தத்திற்கு சாரத்தைக் கிழித்துக் கட்டுப்போட்டு, தடிமுறித்து ‘ஸ்ரெச்சர்’ கட்டித்தூக்க முற்பட்ட போதும், வேதனையின் முனகலோடு தினேஸ் மறுத்துவிட்டான். ஆசையோடு தளபதியின் கன்னங்களைத் தடவினான்; கூடவந்த தோழர்களின் நிலைமைகளை விசாரித்தான், பெற்றெடுத்த ஆயுதங்களைத் தொட்டுப் பார்த்துப் பூரித்தான், எங்கள் ‘டடி’ முகாமில் – மற்றத் தோழர்களுக்குப் பக்கத்தில் தான் தன்னையும் புதைக்குமாறு வேண்டியவன். முனகி, முனகி மெல்ல அடங்கி எல்லோரையும் பார்த்து விழிகளை மூடிய போது, வெற்றியின் ஆயுதங்களைக்காட்டி அதற்கு வித்தாகிப் போனவனை வழியனுப்பி வைத்துவிட்டு, நவநீதன் இறுகிப் போய் நின்றான். வரலாற்றில் பொறிக்கப்பட்ட மாங்குளம் முகாம் தகர்ப்பு – தமிழீழத்தின் நெஞ்சத்தின் மீது குந்தியிருந்த பக்கத்து நாட்டுப் படைகளைக் குடியெழுப்ப நிகழ்த்தப்பட்ட தாக்குதல். இரண்டாவது தடவையாகவும் – நிச்சயமாக இறுதியானது என முடிவு செய்யப்பட்ட சமர். முதல் நாள் நள்ளிரவுக்குச் சற்று முன்னர் ஆரம்பித்த சண்டை, மறுநாள் விடிந்து மதியமாகியும் நடந்து கொண்டிருந்தது. தென்முனை முற்றாகவே எதிரிக்குச் சாதகமான பிரதேசம். அது வயல்வெளி; அங்கு அவனது கைதான் ஓங்கியது. கூடுதலாக இழப்பைச் சந்தித்ததால், எங்கள் தாக்குதலணி காலையிலேயே பின்னால் எடுக்கப்பட்டு விட்டது. தென்முனை வழியான தாக்குதல் நிறுத்தப்பட்டு விட்டது. வடமுனையில் தனது முழுச் சக்தியையும் பிரயோகித்து எதிரி தடுத்து நின்றும், அவனது அரண்களையும், மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய புலிகளின் அணி, பிரதான முகாமிற்கு அருகில், ‘ஹெலி’ இறங்கு தளத்தில் – கடும் எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எதிரிஇ தனது பலமான அரணொன்றிலிருந்து மூர்க்கத்தனமாக மோதினான்; தனது முழுப் பலத்தையும் திரட்டிச் சண்டையிட்டான். ஏனெனில் ‘ஹெலி’ இறங்கு தளம் யாருடைய கைக்குப் போகின்றதோ அந்தப்பக்கம் தான் வெல்லும். அவனிடம் போய்விட்டால் உதவி எடுத்து புத்துயிர் பெற்று விடுவான்; எங்களிடம் வீழ்ந்து விட்டால் தனித்து விடப்பட்டு குற்றுயிர் ஆகிடுவான். எனவே எதிரி இறுதி முயற்சியாக மோதினான். உயிர் பிரிகின்ற நேரத்தில் ஒரு அசுர பலம் வருமாமேஇ அந்தப் பலம் கொண்டு தாக்கினான். சண்டை உக்கிரமடைய அடைய, எங்கள் தாக்குதலணி பலவீனப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் கைவிட முடியாது; ஹெலித்தளத்தை விட்டுச் சற்றுப் பின்னால் வந்தால் கூட, நாங்கள் தோல்வியடைந்ததற்குச் சமம். எதிரி நிலத்தோடு மட்டுமே மோதினான்; நாங்களோ வானத்தோடும் மோத வேண்டியிருந்தது. நேரம் நீள நீள எங்கள் கை சோர்ந்து கொண்டு போனது. அவனா? நாங்களா? என்ற நிலை. சண்டையை நடத்திக் கொண்டிருந்த தளபதி, நிலைமையின் இக்கட்டைப் பிரதான கட்டளையகத்துக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தான். கைவிடமுடியாது; ஏற்கெனவே இந்த முகாமை அழிப்பதற்காக நாங்கள் செலுத்திவிட்ட விலை பெறுமதியானது; திரும்பவும் ஒரு தடவை அற்புதமான உயிர்களைக் கொடுக்க முடியாது. துவங்கியதோடு அடித்துடைத்து முடித்து விட வேண்டும்; இனி விட இயலாது. கடைசி வழிமுறை ஒன்றைக் கையாள கட்டளைப்பீடம் முடிவு செய்தது. கைவசம் வைத்திருந்த, தேர்ச்சி பெற்ற வீரர்களைக் கொண்ட மேலதிக தாக்குதலணி ஒன்றை – நுட்பமான ஒரு தந்திரோபாயத்தோடு பிரயோகித்து ஒரு இறுதி எத்தனிப்பைச் செய்வதே அது. அவனா? நாங்களா? என்ற எதிர்பார்ப்புக்கு விடை தரப்போகும் அடி; அந்த வரலாற்றுத் தாக்குதலின் வெற்றியை நிர்ணயிக்கப் போகிற அதிரடி. இதன் முக்கியத்துவம் முக்கியமானது. ஹெலித்தளத்தில் சண்டையிடும் எதிரியை கிழக்குத் திசை வழியாக மேலால் மேவி வளைத்து, அவனை வலது பக்கத்தால் நெருங்கி, அறைந்து நொருக்க வேண்டும். வான் ஆதிக்கத்தைத் தனது கையில் வைத்திருப்பவனின் கண்களுக்கு மண் தூவி – நில ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போரிடுகின்றவனின் பார்வையில் பட்டுவிடாமல் – அவனை அண்மிப்பது என்பது, அந்த உச்சி வெயில் பகலில் ஒரு இமாலயக் காரியம். எதிரியை எதிர்கொள்ளும் நேரம் வiர் தன்னைச் சேதப்பட்டு விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த அணிக்கு உண்டு; தோல்வியைத் தழுவும் நிலையிலிருந்து அந்தத் தாக்குதலை மீட்க வேண்டிய பொறுப்பும் அதற்குத்தான் உண்டு. எனவேஇ அந்தச் சிக்கலான சூழ்நிலையிலும் சரியான முறையில் நகர்த்திச் சென்று சரியான நேரத்தில் – சரியான இடத்தில் – தாக்குதலைத் தொடுத்து, அந்த அணியை வழிநடாத்தக்கூடிய திறமை அதன் கொமாண்டருக்கு இருக்க வேண்டும். அணியின் தளபதியாக நகரத் துவங்கியவன் நவநீதன். தாக்கிக் கொண்டிருந்த எமதணி தளர்ந்துகொண்டிருந்த வேளை, அனுப்பி வைத்த தளபதி காத்திருந்த நேரம், என்ன முடிவோ என நாங்கள் ஏங்கி நின்ற பொழுது – மூர்க்கங்கொன்ட புலிகளாய் பாய்ந்தனர் வீரர்கள். ஆக்ரோசமான தாக்குதல் தடைகளை உடைத்து, தானை சிதைந்து, பகைவன் சின்னாபின்னமாகிப் போக – புதிய தெம்புடனும், புதிய வேகத்துடனும் பிரதான முகாமைக் குறிவைத்தனர் புலிகள். எங்கள் கதாநாயகனுக்கு வெடி; இடுப்பு எலும்பை நொருக்கிச் சென்று விட்டது சன்னம். காலுக்கு மணல் மூடை கட்டித் தொங்க விட்டு, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் படுத்தருந்து, “இந்தச் சுமையின் வேதனையை விட, மாங்குளத்தை வென்றதே மனதுக்கு மகிழ்வு” என்றவன் 7 மாதங்களுக்குப் பிறகு எழுந்து நடக்கத் துவங்கிய போது, இடதுகாலில் ஒரு அங்குலம் கட்டையாகிப் போயிருந்தது. முல்லைத்தீவில் ஒரு படையெடுப்பு – நவநீதன் அப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தளபதி; லெப்ரினன்ட் கேணல் நரேசுக்குத் துணைவனாய் நின்று, நிர்வாக வேலைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தான். தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக தளபதி தீபனும், நரேசும் எமது படையணிகளை எடுத்து வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றிருந்த வேளை, ‘சத்பல’ என்று பெயர் சூட்டிக்கொண்டு முல்லைத்தீவிலிருந்து படையெடுத்தான் எதிரி; ஆயிரக்கணக்கான துருப்புக்கள், யுத்த வானூர்திகள் பலம் சேர்க்க பெருமெடுப்பில் முன்னேறத் துவங்கினர். ஆனால் காவலரணில் இருந்ததோ சண்டைக்குத் தேர்ச்சி பெறாத போராளிகள். சண்டை செய்யக்கூடியவர்கள் என்று எவருமே இல்லை. இருந்தவர்களைத் தான் பொறுக்கி எடுத்து அனுப்பியாகி விட்டதே. இருப்பவர்கள் சண்டைக்கு அனுபவப்படாதவர்கள் புதியவர்கள். அவர்களை வைத்துக் கொண்டு எதிரி முகாமின் வாசலிலேயே களத்தைத் திறந்தான் நவநீதன். ஒரு முழுநாள் – ‘நவநீதன் சண்டையைச் செய்வித்தான்’ என்பதைவிட, ‘நவநீதன் தான் சண்டை செய்தான்’ என்றுதான் சொல்ல வேண்டும். திரண்டு நகர்ந்த அந்நியச் சேனையை திறமையுடனும் – துணிவுடனும் தடுத்துத் தாமதப்படுத்தினான் அந்தப் போர்வீரன். மறுநாள் எமது படைப்பிரிவுகள் வந்து சேருகின்ற போது, தந்திரமாகச் சண்டையிட்டு, திரண்டு நதர்ந்த பகைவர்களை அவன் தடுமாற வைத்திருந்தான். அந்த முதல் நாள் சண்டையில் தங்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக சிறீலங்கா வானொலி அறிவித்தது. “இனியாவது என்ர பொடியனை வீட்ட விடுவியளே?” என்று கேட்காத, கேட்க நினையாத – “எப்ப தம்பி எங்களுக்கு சுதந்திரம் எடுத்துத் தரப்போறியள்?” என்று மட்டும் மனதார ஆதங்கப்படுகின்ற – ஒரு தமிழன்னையின் மடியில், அந்தப் பூ முகையவிழ்த்தது. அது – 1969 ஆம் ஆண்டு, கார்த்திகை 12 ஆம் நாள். திருலோகநாதன் என்று திருநாமம் சூட்டினார்கள். “குவா……குவா……!” சத்தத்தோடுஇ அந்தக் குழந்தை – தவழ்ந்து, உருண்டு, மண்ணளைந்து, தத்தித் தடுமாறி எழுந்து நடக்கத் துவங்கிய அந்த ஓலைக்குடிசையில், அவனுக்கு முன்னமே ஏழ்மை பிறந்து விட்டது. நிரந்தரத் தொழில் இல்லை. நிலபுலங்கள் எதுவும் இல்லை. இரண்டு நேரம் சாப்பிடக்கூட வழியில்லை; வறுமை கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தவன், 7ஆம் வகுப்போடு – குடும்பத்தின் ஏழ்மைச் சிலுவைக்குத் தோள் கொடுக்க, வீட்டில் நின்று கொண்டான். இருந்தாற்போல் ஒருநாள் – திடீரென அப்பா தில்லையம்பலத்தார் மீளாத் துயில் கொண்டுவிட்ட போது, துன்பமும் ஏழ்மையும் சேர்ந்து அழுத்திய பெருஞ்சுமைக்குள் அந்தக் குடும்பம் சிக்குண்டது; வதங்கியது இத்தகைய – துயர்படிந்த ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து, அவன் போராட்டததுக்கு வந்த போது, அவனுக்கு 16 வயது. தளபதி பசீலனின் அரவணைப்பில் அந்தச் சின்னப் போராளி வளரத் துவங்கினான். அவனுக்குப் போர் ஆசானாகி நின்ற, அவனது போராட்ட வாழ்வின் ஆரம்பத்தை வழிப்படுத்தி விட்ட குருஇ அவர்தான். துப்பாக்கிகள் தந்து, சிறந்த வீரர்களுக்கு நிகரானவனாகச் சுடப்பழக்கி, பயிற்சிகள் வழங்கி – அந்தச் சின்ன வயதிலேயே, நவநீதனுக்குள் மாபெரும் வீரத் தன்மைக்கு வித்திட்ட பெருமை, பசீலனையே சாரும். தளபதி பசீலின் மெய்ப்பாதுகாவலனாக, ‘எம் 16’ உடன் கூடத்திரிந்த நாட்கள், அவனுக்குள் ஆரம்பித்த நினைவுகள்; அந்தக் காலத்தில் அவர் சொல்லித் தந்த சண்டை முறைகள்; மறத்தலற்ற மனப்பாடங்கள். நவநீதன் பகைவரைச் சந்தித்த முதற்களம் என்று குறிப்பிடக்கூடியது, முந்திரிகைக்குளம் தாக்குதல். மணலாற்றில் சிங்களக் குடியேற்றதுக்கு விழுந்த பலமான முதல் அடி அது. அந்தப் பெரு வெற்றியைப் பெற்றத் தந்தவன் பசீலன். அப்போது – ‘கென்ற்’, ‘டொலர்’ பண்ணைகளில் மட்டுமே தொற்றியிருந்த அந்த விசக்கிருமிகள் பல்கிப் பெருகி மணலாற்றில் படரத் துவங்கிய பிரதான அசைவுப் பாதையை, பதவியாவிலிருந்து மேற்குக் கரை நோக்கி காட்டினூடு அமைத்துக் கொண்டிருந்த இராணவ அணியே தாக்கப்பட்டது. வியூகம் அமைத்து நின்று, தளபதி பசீலன் தாக்குதலை நடாத்திய போது – அவரது நிழலாக நின்று பொறி கக்கினான் நவநீதன். கொல்லப்பட்ட 20 வரையான படையினரில் சிலரது உடல்களில், அந்தச் சின்ன வீரனது துப்பாக்கி தான் கோலம் போட்டதாம்…… சண்டை முடிந்தபோது புலிகள் இயக்கத்தின் ஆயுத இருப்பில் 12, ‘ரி 56’ கள் கூடியிருந்தன் சிங்களக் குடியேற்றத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன்இ திட்டத்தின் அந்த பிரதான அசைவுப் பாதை, நிரந்தரமாகவே கைவிடப்பட்டது. இந்தியப் போர் ஆரம்பித்த போது – இந்தியப் படையின் ‘புகழ்பெற்ற யாழ்ப்பாணச் சமரில்’, கோப்பாய்ச் சண்டை எமது முல்லைத்தீவு மாவட்டப் படையணியால் எதிர்கொள்ளப்பட்டது. தளபதி பசீலனின் அந்த அணியில் நவநீதனும் களத்தில் நின்றான். இந்தியர்களின் இரண்டு ‘B.M.P ராங்க்’குகள் நொருக்கப்பட்டதுடன், அங்குலமும் அசையாமல் தடுத்துநிறுத்தப்பட்ட அந்த நாட்கணக்கான சண்டையில் சொல்லிக் காட்டக்கூடியளவு திறமையுடன் நவநீதன் போரிட்டான். கோப்பாயில் சண்டையை முடித்துக் கொண்டு திரும்பிய படையணி, முல்லைத்தீவில் போர் அரங்கைத் திரைநீக்கம் செய்த போது – துயரம்! கொடுந்துயரம்; முல்லைத்தீவில் ஒரு சண்டைக் களத்தில், மாபெரும் வீரன் பசீலன் வீழ்ந்து போனான்; முல்லை மண் துடித்தது. அதன் மடியில் பிறந்த குழந்தை அவன்; அந்த மண்ணின் வரலாற்றில் பொறிக்கப்பட்ட தளபதி அவன். நவநீதன் கலங்கினான்; கதறினான்; அவனால் தாங்க முடியவில்லை. அடிபட்ட நாகமாய் அலையத் துவங்கினர் புலிகள். பதிலடி கொடுக்கப் பகலிரவாய்த் திரிந்தவர்களிடம் வசமாகச் சிக்கியது ஒரு இந்திய அணி – பசீலனை எம்மிடமிருந்து பிரித்தது இதே அணிதான் என்பது முக்கியமானது – தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால், தளபதி பால்ராஜின் தலைமையில் எம் இரண்டு அணிகள். ஒன்றுக்குக் கொமாண்டர் போர்க்; அடுத்ததுக்கு நவநீதன். மூர்கத்தனமான சண்டை. நவநீதனின் நெஞ்சுக்குள் பசீலண்ணனின் நினைவுகள் கனன்றன. பகைவர்களை நெருப்பெனச் சுட்டெரித்தான் அந்த வீரன். இந்தியரின் முதலாவது குழு தாக்கியழிக்கப்பட்ட பின்னர், மீட்கவந்த அடுத்த குழு தாக்கப்பட்டது. 25 பேரளவில் கொல்லப்பட்ட சண்டையில், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இரண்டு பிறண் எல்.எம்.ஜிகள். இந்தியர்கள் ‘ஒப்பரேசன் செக் மேற்’றை நடாத்திக் கொண்டிருந்தார்கள். பெரும் போர்களைக் கண்ட உலகின் 4வது பெரிய தரைப்படையின் 30,000 துருப்புக்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மையக் கருவைக் கிள்ளியெறிய நகர்த்தப்பட்ட வரலாற்றுச் சமர், பிரசித்திபெற்ற மணலாற்றுப் படையெடுப்பு. குமுழமுனை மலைமுகாம் என்ற இந்தியத் தளம் தான் ‘செக்மேற்’றின் மையம்; கட்டளைப்பீடம்; உயர் தளபதிகள் தங்கியிருந்து ‘பிரபாகரனைக் கொல்லும்’ போரை நெறிப்படுத்திய தலைமையகம். இந்த முகாமில் ஒரு தாக்குதலைச் செய்வதன் மூலம், ‘செக்மேற்’றுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கவும், இந்தியரின் கவனத்தைத் திசைதிருப்பவும் திட்டமிடப்பட்டது. ஒரு புலர்வுப் பொழுதில், அந்த முகாமின் தலைவாசலைத் தாக்கினர் புலிகள். மேஜர் கிண்ணிக்குத் துணைக் கொமாண்டராய்ச் சென்று வெற்றியைப் பெற்று வந்தவன் நவநீதன். எதிர்பாராத மையத்தில் விழுந்த அதிரடி – புலிகள் கொடுத்த நெற்றியடி. இந்தியத் தளபதிகள் குழம்பிப் போயினர். செய்வதறியாது திகைத்தனர். படை நகர்த்தும் பீடத்தைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு ‘செக்மேற்’ நிறுத்தப்பட்டது. தங்கள் இலக்கு மீது இந்தியர்கள் கொடுத்த நெருக்கடி தளர்ந்தது. இந்த வெற்றியில் நவநீதனுக்குப் பெரும் பங்குண்டு. நவநீதனைப் பற்றிச் சொல்வதானால் – சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். போர் தான் அவனுடைய ‘தனிச் சிறப்புக் கலை’ போரில் தான் அவன் ‘துறைசார் வல்லுனன்’. எங்கள் இயக்கத்தில் தலைசிறந்த சண்டை வீரர்கள் என்று தேர்ந்தெடுத்தால்இ நவநீதன் தவறமாட்டான். எதிரிகளை எதிர்கொள்ளும் வேளைகளில் எல்லோரையும் மேவி முன்னால் நின்று – அவனுடைய துப்பாக்கி தீ உமிழும். கணப்பொழுதுக்குள் எதிரியின் மூச்சுப்படும் தூரத்துக்கு நெருங்கி, அவன் சுழன்றடித்துச் சுட்டு வீழ்த்தும் லாவகம் – மெய் சிலிர்க்க வைக்கும்.(verkal.net) அவனொரு ‘Quick Gunner’ – ‘மின்னல் வேகத் துப்பாக்கி வீரன்;.’ போர்களங்களில், எதிரி காணும் முன் எதிரியைக்கண்டு துப்பாக்கியை புயலின் வேகத்தில் இயக்குவான். அந்த வேகத்திலும், குறி பிசகாமல், நிதானமாகக்குறி வைக்கும் வல்லமை, அவனது தனி ஆற்றல். அவனது சண்டைகள் பார்ப்பவர்களை வியக்கவைக்கும்; சண்டை தெரிந்தவர்களைக் கூட ஆச்சரியப்படுத்தும். சமர்க்களங்களின் நடுவில் சிக்கலான சூழ்நிலைகள் பிறக்கும் போது, மதிநுட்பம் வாய்ந்த விதமாக முடிவெடுத்து – எச்சரிக்கையாகவும்,, அவதானமாகவும் செயற்பட்டு – இடையூறுகளை வெற்றிகரமாகச் சமாளித்து விடும் திறமை மிக்கவன் அந்தத் தளபதி. போர் வீரர்கள் இரண்டு வகையானவர்களாகக் காணப்படுவார்கள். ஒருவகை – குழுச்சண்டை வீரர்கள.; அடுத்தவகை தனிச் சண்டை வீரர்கள். குழுச்சண்டையானது படையாட்கள் எல்லோருக்கும் பொதுவானது. யுத்தப் பயிற்சி பெற்ற எல்லோருமே செய்யக்கூடியது. ஆனால் தனிச்சண்டை அப்படியானதல்ல் அதற்குத் தனித்தன்மையான நிபுணத்துவம் தேவை. குறிப்பிட்ட சிலர் தான் அதில் வல்லவர்களாக இருப்பார்கள். நவநீதன் ஒரு தனிச் சண்டைக்காரன். நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொண்ட ஒரு சேனையை தனித்து நின்று எதிர்கொள்ளக்கூடிய மனத்துணிவும், புத்திக் கூர்மையும் செயற்திறனும் அவனிடம் உண்டு. போரன்றி வேறேதும் நினையாத புலிவீரன் அவன். பயிற்சியைப் பற்றியும், வேவைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும், சண்டையைப் பற்றியுமே அவன் பேசிக்கொண்டிருப்பான். தூக்கத்தில் வருகின்ற கனவுகள் கூட அவனுக்குக் கள நிகழ்வுகளாகத்தான் இருந்திருக்கும். எல்லாப் போராளிகளுமே அவனோடு சண்டைக்களத்துக்குப் போக விருப்பப்படுவார்கள். அவர்களுக்கொல்லாம் அவன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இயக்கத்தின் உயர் தளபதிகளினதும் அதீத நம்பிக்கைக்குப் பாத்திரமான போராளியாக அவன் திகழ்ந்தான். தனது செயல்களாலே அவன் வளர்த்துக் கொண்ட நம்பிக்கை அது. ஆம், செயலால் மட்டும். சமர் அரங்கொன்றின் பின் முனையிலிருந்து நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கும் கட்டளைத் தளபதி. சண்டை சிக்கல்படுகின்ற சில சூழ்நிலைகளில், “இந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டும்” என நினைக்கின்றாரோ, சண்டையின் முன் முனையில் வழிநடாத்தும் நவநீதன் அப்படியே செய்து முடிப்பான். அந்தளவுக்கு போர் பற்றிய அறிவை – ஞானத்தை – அவன் பெற்றிருந்தான். கட்டையாகிப்போன காலைப் பற்றி அவன் கருத்திலெடுப்பதேயில்லை. சண்டைகளில் அவன் முன்னுக்கு ஓடித்திரிந்து தாக்கும் போதும், தாக்குதலுக்காக நாங்கள் நீண்ட தூரத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் – மனஞ்சோராமல் உற்சாகத்தோடு நடக்கும் போதும், அவன் தனது மனவுறுதியைக் காட்டுவான்; அது வியப்பைத் தரும். நவநீதன் அன்பானவன். மிக அமைதியானவன். மென்மையான சுபாவத்தைக் கொண்டவன். “நவநீதன் பேசிப்போட்டான்” என்று, யாருமே சொல்லாத அளவுக்குப் பண்பானவன். அவன் அதிகம் கதைக்கமாட்டான் – இடைக்கிடை பகிடி சொல்லுவான்; மற்றவர்களது மனங்களை நோக வைக்காமல், எப்போதாவது யாரையும் கிண்டல் செய்வான் அவ்வளவோடு சரி. நிர்வாக வேலைகளைச் செய்யும் போது வளைந்துகொடுத்து எல்லோரையும் சமாளித்து, விடயங்களை ஒப்பேற்றி விடுகின்ற திறமையைக் கொண்டவன். எல்லா வகையான மனப்போக்கு உடையவர்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக நடந்து கொள்ளும் பக்குவம் மிக்கவன். எப்போதும் ஒரு அப்பாவித் தனம் அவனது விழிகளில் மிதக்கும். எப்போதும், ஒரு குழந்தைத் தனம் அவனது முகத்தில் குடியிருக்கும். எங்கள் நெஞ்சுக்குள் பொந்து அமைத்து வாழ்ந்த மாடப்புறா அவன். பகைவர்களுக்கு முன்னால் யுத்தசன்னத்தனாகி நெருப்பென நிற்கும் அந்த வீரன், எங்களுக்குள் – பனிநீராய்ப் படர்ந்து குளிர்மையாக வருடுகின்ற நண்பன். எவ்வளவு ஆற்றல்கள் அவனுக்குள் குவிந்து கிடந்தன! எத்துணை திறமைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக அவன் உலா வந்தான்! ஆனாலும் அவன் வெளியில் மிளிராத போர் வீரன்; தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள விரும்பாத விடுதலைப் புலி. இலைமறைகாயாக இருந்து, பிரளயங்களைப் படைத்துக் கொண்டிருந்த பிரபாகரனின் பிள்ளை. இறுதிக்காலத்தில் சண்டைகளுக்குப் பின்னாலேயே அவன் வைத்திருக்கப்பட்டான். ஏற்கெனவே ஏராளமான சண்டைகளுக்குள் நின்றவன்; மாங்குளத்தில் வெடி வாங்கி காலைச் சின்னதாக்கிக் கொண்டவன். சண்டைகளில், அவன் பயன்படுத்துவதை விட, அவன் பட்டறிந்து பெற்றிருக்கும் அனுபவம் மிகுந்த பயன்பாட்டைத் தரும். எனவே தான், இயக்கத்திற்காகவும் அவனுக்காகவும் சமர்களில் பின்முனையிலேயே அவன் வைத்திருக்கப்படுவான். ஆனாலும், பின்னுக்கே நின்று ஒழுங்குகளைச் செய்து கொண்டிருப்பவன், சண்டை வெடித்த அடுத்த நிமிடங்களில் முன்னுக்கே தான் போய்விடுவான். புலோப்பளைச் சண்டையைப் பாருங்கள். அதில் அவன் பங்கு முக்கியமானது; குறிப்பிடத்தக்கது. பூநகரிக்குப் படையெடுக்க நாங்கள் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த போதுதான், எதிரியானவன் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்தான். ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து ஆரவாரமான ஏற்பாடுகளுடன் ‘யாழ்தேவி’ புறப்பட்டவுடனேயே நவநீதனது குழுதான் அங்க அனுப்பப்பட்டது. பகைவர் சேனைக்கு வாசலிலேயே வரவேற்புக்கொடுக்க அல்ல் அவர்களின் அசைவுகளை அவதானித்துத் தகவல் சொல்ல மட்டும். ஒரு படையெடுப்பை முறியடிக்க முனையும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் போர் வியூகமாகும். எமது படைவீரர்களை சரியானதோர் வியூகமைத்து நிறுத்தி வைக்கும் போதுதான், எதிரிப்படையை அதற்குள் தப்பும் வழியற்றுச் சிக்கவைத்துத் தாக்கி அழிக்க முடியும். அவ்வளவு நேர்த்தியாக வியூகம் அமைக்க வேண்டுமானால், எதிரியின் நகர்வு பற்றி மிகத் துல்லியமாக தகவல்கள் தேவை. படையினரின் தொகை என்ன? ஆயுத – படைக்கல வகைகள் என்னென்ன? படையூர்திகள் மற்றும் வசதிகள் எப்படி? என்ன ஒழுங்குமுறையைக் கையாண்டு எதிரி படை நகர்த்துகின்றான்? என்ற தரவுகள் எந்தப் பிசகுமின்றிக் கிடைக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் தான் – நாம் சிறந்ததொரு வியூகத்தை அமைத்து, நம்பிக்கையோடு காத்திருக்க முடியம். புலோப்பளையில் இந்தப் பணியைச் செய்து முடித்தவன் நவநீதன். நாங்கள் காவியம் படைத்த அந்தப் பெருஞ்சமரில், வெற்றி வாகை சூடக்கூடியவாறு, நுட்ப தந்திரோபாயமான போர் வியூகத்தை அமைக்க சரியான தகவல்களைத் தந்தது மட்டுமல்ல – இரவிரவாக நடந்து திரிந்து சண்டைக்கேற்ற ‘நிலை இடம்’ தேடுவதில் நவநீதன் தளபதிகளுக்கு உதவினான். எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்பும், மீண்டும் முன்னுக்கே சென்று இறுதிவரை எதிரியின் நகர்வுகளைப் பற்றிய தகவல்களைத் தந்து கொண்டிருந்தவனுக்கு, சண்டை தொடங்கியவுடன் பின்னுக்கு வந்துவிடுமாறுதான் சொல்லப்பட்டது. ஆனால், உரிய இடத்திற்குள் எதிரியின் படையணி வர, எமது முதலணியோடு களத்திலிறங்கிச் சமரை ஆரம்பித்தது அவன் தான். அடுத்தது தான் பூநகரிச் சமர் – புலிகள் இயக்கத்தின் போரிடும் சக்தியைப் பற்றி சர்வதேச செய்தி அலைவரிசைகளையெல்லாம் வியந்துரைக்க வைத்தது செருக்களம். அவலப்பட்ட மக்களுக்குப் பாதை திறக்கக் கேட்ட போது – அரசியல் பேரம் பேசி அகங்காரம் செய்தோர்க்கு உச்சந்தலையடி கொடுத்த போர் அரங்கு. அந்தக் கூட்டுத்தளத்தின், ‘வில்லடி’ கட்டளை முகாமைத் தாக்கும் பெரும் படையணிக்குள், உப குழுவொன்றுக்கு நவநீதன் தளபதி. ஒதுக்கப்பட்ட ஒரு காவலரண் தொகுதியைத் தாக்கி அழித்த பின் முகாமின் மையத்தைத் தாக்கும் பிரதான படைப்பிரிவுக்குத் துணைக்குழுவாக இறங்கவேண்டுமென்பது தான், அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணி. ‘வில்லடி’ முகாம் தான், கூட்டுத்தளத்தின் கட்டளை முகாம். அது மிகப் பலமானது. 91ஆம் ஆண்டு ஆளையிறவுத் தளத்தை நாம் வெற்றி கொள்ள முற்பட்ட போது அது இருந்ததைப்போல, ஏறக்குறைய அதேயளவு பலத்துடன் தான் இது இருந்தது. நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் சண்டை ஆரம்பித்தது. விடிந்த போது நவநீதனுக்கான காவலரண் தொகுதி தாக்கியழிக்கப்பட்டு விட்டது. ஆனால் கட்டளை முகாமில், ‘ராங்க்’குகளையும், பெருந்தொகை ஆயுதங்களையும் இழந்த எதிரி, சிறு பகுதியொன்றில் எஞ்சியிருந்தான். அர்த்தசாம இருளில் சிதறியோடிப்போன சிப்பாய்களும், விடிந்த பின் கட்டளை முகாமை நோக்கி ஓடிவர, திடீரென எதிரி அசுர பலம் பெற்றான். எதிரி, ‘அடுக்குமுறைப் பாதுகாப்பு முறையில்’, (Depth Defence System) ஒன்றன் பின் ஒன்றாக அமைத்திருந்த காவலரண்களைத் தகர்த்தெறிந்து கொண்டு, ‘கனரக மோட்டார் பீரங்கி’ உள்ள தளத்தை நோக்கி முன்னேறிய எமதணி அதனைக்கைப்பற்றும் போது, அணி பெருமளவில் சேதப்பட்டு விட்டது; பொழுதும் விடிந்து விட்டது. அந்த நேரத்திலேயே – துணைக் குழுக்களை அழைத்து பீரங்கிகளை அப்புறப்படுத்த முன்னர் – எதிரி புதுப்பலம் கொண்டு கடுமையாகத் தாக்கத் துவங்கினான். பீரங்கித் தளம் வெளியான தரையமைப்பைக் கொண்டது. முற்றாக அவனுக்குச் சாதகமான களம். அத்தோடு, திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்பட்ட சக்தி மிக்க அரண்களிலிருந்து எதிரி தாக்கி முன்னேறினான்; விடிந்துவேறுவிட்டது. வானூர்திகள் பார்த்துப் பார்த்துக் குண்டடித்தன. இரவுச் சண்டையிலேயே மிகுந்தளவில் பலவீனப்பட்டுப் போன எமதணி இயலுமானவரை போரிட்டது; ஆனால் ஏறக்குறைய அது முற்றாகவே சேதப்பட்டு விட்ட நிலையில், பீரங்கிகளை மீட்க முடியாமலேயே பின்வாங்க நேரிட்டது. கைப்பற்றப்பட்ட பீரங்கித் தளமும், பீரங்கிகளும் கைவிடப்பட்டு விட்டன. இப்போது பீரங்கித் தனம் நடுவில். அதன் பின்னால் எதிரிப்படை; முன்னால் புலிகள் படை. பீரங்கிகள் அநாதரவாகக் கிடந்தன – அவனுக்குப் பக்கத்தில், எங்களுக்கு எட்டத்தில். திரும்பவும் தாக்கி அவற்றைக் கைப்பற்றியே ஆக வேண்டும். ஆனால் பகலில்…….? அது முற்று முழுதாகவே பகைவனுக்குச் சாதகமான சூழ்நிலை. பெரும் இழப்பைக் கொடுத்து, மிகுந்த சிரமத்துடனேயே நாம் மோத வேண்டியிருக்கும். அப்படியானால் இரவு….? இல்லை; இருளும் வரை காத்திருக்க முடியாது. எதிரி மீண்டும் சுதாகரித்து, முழுப்பலத்தையும் திரட்டி முன்னேறி, பீரங்கிகளைத் திரும்ப கைப்பற்றிடக் கூடும். அதனால், அவனுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனடியாகத் தாக்கதலை நடாத்த வேண்டும். இது ஒரு சிக்கல் நிறைந்த களநிலைமை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நவநீதன் அழைக்கப்பட்டான்; அவன்தான் அதற்கு உரித்தானவன். தேர்ந்தெடுத்த வீரர்களைக் கொண்டு உடனடியாக ஒரு தாக்குதலணி தயார் செய்யப்பட்டது. அந்த அணியின் கொமாண்டராகி சண்டையைத் துவக்கினான் தளபதி. முரட்டுத்தனமான முன்னேற்றம். அது அவனுக்குப் பழக்கப்பட்ட வேகம். ‘பீரங்கிகள்’ – என்ற ஒரே உறுதியுடன் பாய்ந்தனர் வேங்கைகள். நிலைமையைப் புரிந்து கொண்ட எதிரி பலம் கொண்ட மட்டும் மோதினான்; தாக்குதலை முறியடிக்க தன் சக்திக்கு மீறிச் சண்டையிட்டான். இருந்தபோதும் – பீரங்கிகளை அடையும் வரை நவநீதன் சண்டையை நடாத்திச் சென்றான். எதிரியின் வெறித்தனமான தாக்குதலுக்கு மத்தியிலும் தளத்தைக் கைப்பற்றினர் புலிகள். பீரங்கிகள் இரண்டு. முதலாவதைக் கழற்றி எடுத்துப் பின்னுக்கு அனுப்பிவிட்ட போது – உற்சாகம் பொங்கியது. நெருப்பு மழைக்குள்ளும் இரண்டாவதைக் கழற்றிக் கொண்டிருந்த போது தான்……. அந்தத் துயரம் நடந்தது! எங்கள் கதாநாயகனுக்குப் பக்கத்தில்…… மிக அருகில்…… எதிரி ஏவிய மோட்டார் குண்டொன்று விழுந்து வெடித்தது… அவனை…… ஓ! அதை எப்படிச் சொல்ல……? எங்கள் கண்களுக்கு முன்னாலேயே எங்கள் நெஞ்சினிய நண்பன்…… கை…… கால்…… இடுப்பு…… நெஞ்சு…… முகம்…… எல்லாமே பிய்ந்து போய்…… தசைகள் தொங்கி…… இறைச்சியாய்…… ஓ! அதை எப்படி விபரிக்க…… இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்து கொண்டும் எங்கள் நவநீதன் கத்தினான்…… “மோட்டரை எடுங்கோடா……மோட்டரை விடாதேங்கோடா……” உயிரின் கடைத்துளி சிந்தும் போதும், சத்தமில்லாமல் அவனது வாய் அசைந்து கொண்டேயிருந்தது…… அது “மோட்டரை விடாதேங்கோடா……” என்ற கட்டளையாகத்தான் இருந்திருக்கும் அவன் சொல்லிவிட்டுப் போயி விட்டான். நாங்கள் விடவில்லை. கொண்டுதான் வந்தோம்! விடுதலைப்புலிகள் இதழ் (சித்திரை – 1994). https://www.thaarakam.com/news/0f92c17e-162b-44cf-8d03-fef8bcafd5be
  4. பிரான்சில் உணர்வடைந்த கேணல் பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! AdminNovember 8, 2021 பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 9 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2021) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பகல் 11.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு அரசின் கொரோனா சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கேணல் பரிதி அவர்களின் கல்லறைமீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச்செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச் சுடரினை கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க கல்லறைக்கான மலர் மாலையினை கேணல் பரிதியில் துணைவியார் அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் வணக்கம் செய்தனர். தொடர்ந்து நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களும் ஆற்றியிருந்ததுடன் லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றுசெல் அவர்கள் கேணல் பரிதி அவர்களின் நினைவாக உணர்வோடு பிரெஞ்சுமொழியில் தகவல்களைப் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கல்லறைவணக்க நிகழ்வு நிறைவடைந்தது. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப் பிரிவு) http://www.errimalai.com/?p=68874
  5. இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசிலன்.! முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசிலன்.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லா போராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில் சண்டைக்காறர்களில் சிறப்பானவன் என பெயரெடுத்தான் மேஜர் பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்த கால கட்டங்களில் எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அமைதிப் படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து பல தளபதிகளை வளர்த்த பெருமை மேஜர் பசீலனை சாரும் அந்த வகையில் தான் ‘பசீலன் அண்ணை தான் தனக்கு சண்டை பழக்கியவர் என்று பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் அடிக்கடி தனது பேச்சுக்களில் சொல்வார்” அந்த அளவிற்கு சிறப்பான சண்டை வீரனாக அன்று பசீலன் காணப்பட்டான். ஒரு கெரில்லா போராளியாக செயற்பட்டு பின்னர் வன்னி மாவட்ட படைத் தளபதியாக திகழ்ந்த பசீலன் வன்னியில் படையினருக்கு எதிரான அனைத்து தாக்குதல்களிலும் சிறப்புற செயற்பட்டான். யாழ்ப்பாணத்தில் கோப்பாய்பகுதியில் இந்தியஅமைதிப் படையினருக்கு திரான தாக்குதல் நடத்தி ராங்கிகளை சேதமடைய செய்தான் அதேபோல் ஒட்டிசுட்டான் முதன்மை வீதியில் கூளாமுறிப்பிற்கு அருகில் ஒர் இடத்தில் இந்திய அமைதிப் படையினரின் ராங்கிகள் மீது தாக்கதல் நடத்தி இழப்பினை ஏற்படுத்தினான் இவ்வாறு பல தாக்கதல்களை தொடுத்த இவன் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களை வன்னிக்கு அழைத்து வருவதாற்கான பொறுப்பினை ஏற்று மேஜர் பசீலன், பிரிகேடியர் பால்ராஜ், லெப்ரினன் கேணல் நவம் உள்ளிட்டவர்கள் வன்னியின் சிறந்த தாக்குதல் வீரர்களாக அன்று காணப்படுகின்றார்கள் அன்று பசீலனின் அணியின் பொறுப்பில் தான் தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றார் இதன் பின்பும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல தாக்குதல்களை தொடுத்த இவன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பசீலன் என்றால் பயம் வரும் அளவிற்கு இந்திய அமைதிப்படையினருக்கு கலக்கத்ததை ஏற்படுத்தினான் முல்லைத்தீவு பகுதியில் இந்தியப் படையினருடன் சண்டை நடத்திக் கொண்டிருந்த வேளை 08.11.1987 அன்று எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். பின்னர் பசீலனின் நினைவாக பசீலன் பயிற்சிபாசறை, பசீலன் – 2000 என்று விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட பீரங்கி என்பன பசீலனின் வரலாற்றை சொல்லி நிக்கின்றன. சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். சிங்களப் பேரினவாத அரசு மாநில சுயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள். ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படுவதையும் சொந்தக் கிராமங்களிலிருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டு, உணவின்றி, தங்க இடமின்றி அநாதைகளாக்கப்டுவதையும் காரணமின்றி எமக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ் இளைய சமுதாயம். சிறீலங்கா அரசு மக்களை இம்சிப்பதையும் வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் கைதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களைச் சிங்களக் கைதிகளும், சிங்கள இராணுவமும் இணைந்து, திட்டமிட்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்ததையும் கண்டு ஈழ விடுதலையே இறுதித் தீர்வு என்ற உறுதியான முடிவிற்கு வந்தான் முள்ளியவளையைச் சேர்ந்த ஓர் இளைஞன். உறுதியான கொள்கையையும், தளம்பாத தலைமையையும், தமிழீழ விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் கெரில்லாப் படையையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே இது சாத்தியம் என்பதை உணர்ந்து அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட அமிர்தலிங்கம் என்ற இளைஞன்தான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பசிலன். தமிழர்க் கெதிரான இன அழிப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் சிறீலங்கா கூலிப்படை மீது பசிலன் மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை. வன்னியின் சண்டைக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை. இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்தலையில் குட்டிவிடுவதில் வல்லவன். வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில் புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள் நீந்தி விளையாடினார்கள். மேஜர் பசீலன் அண்ணனின் அணியில் தளபதி பால்ராஜ் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது. இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்கு படுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது. எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார். போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர் திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார். எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும் அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில் போராளிகள் நிலையெடுக்க வேண்டும். ஒரு திகிலூட்டும் திட்டத்தை மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார். கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை. ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார். கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள் கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி நிலையெடுப்பர் அந்தப் பகுதியை தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது. எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம். துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு.அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும் அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும் இராணுவ ஆற்றலும் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார் அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி பால்ராஜ். தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை தளபதி பால்ராஜ் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன். இன்னொரு முறை , முந்திரிகைக்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு பன்னிரு கூலிப்படையினரைக் கொன்றதுடன் தமிழினத்தை அழிக்க பயன்படும் 12 துப்பாக்கிகளை எடுத்ததன் மூலம் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை தோற்றுவித்தான் வவுனியா மாவட்ட தாக்குதற் பிரிவின் தலைவன் மேஜர் பசிலன். கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலின் போது காயமடைந்த பசிலன் கிளிநொச்சியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இனப் படுகொலைகளை நிறுத்த விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரிலும் முக்கிய பங்கு வகித்தான். ஒரு கெரில்லா போராளியின் திறமைகளைத் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்த பசிலன் ஒரு சிறந்த விகடகவியும், நடிகனுமாவான். தமிழீழத்தின் மரபு நாடகங்கள் இவன் நடிப்பினால் மெருகூட்டப்பட்டது என்பது மிகையாகாது. தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் களைப்புற்ற சக தோழர்களைச் சிரிக்க வைத்துவிடுபவன் இவன். மக்களுக்குப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டிவிடும் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையாக நடிக்கும் பசிலன் தன்னுடைய கலகலப்பான சுபாவத்தால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் போராளியாவான். தமிழீழமெங்கும் சிறீலங்கா அரசானது தமிழீழ மக்கள் மீது ஓர் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து இன வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில், அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போர் ஓர் புதிய சகாப்பத்தைப் படைத்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில், தமது சொந்த நலன்களுக்காக, அந்நிய நாட்டிலிருந்து மனித விரோதிகளை அமைதிப்படை என்ற பெயரில் அழைத்து வந்து மக்களைப் பலி கொள்ளும் தேச விரோதிகளின் செயல் கண்டு குமுறினான் பசிலன். கோப்பாய்யில் இந்திய அழிவுப் படையை எதிர்த்து தரைப் படை டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி, விடுதலைப் புலி கெரில்லாக்கள் பற்றி இந்திய இராணுவத்திற்கு ஓர் பீதியைத் தோற்றுவித்த பசிலன் முல்லைத்தீவில் நேரடி மோதலின் போது இந்தியப்படையின் எறிகணைத் தாக்குதலால் 08.11.1987 அன்று வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான். தமிழீழ மண்ணிலிருந்து மறைந்தாலும் ஈழ விடுதலை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தில்….. மேஜர் பசிலன் அண்ணன் . -போராட்டத்தில் நிழலில். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/0e1439e4-1737-48ac-bafd-c0894bcbdec0
  6. வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்ட தளபதி பரிதி என்ற பரிமாணம்! AdminNovember 8, 2021 தளபதி பரிதி என்ற பரிமாணம். நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 ஆம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைப்பீடம் சூட்டிய பெயர் றீகன். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தமிழீழம் திரும்பினார் தளபதி கேணல் பரிதி. களம்பல கண்ட நாயகன். தமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்பாணம், வன்னி என்று தமிழீழத்தின் முக்கியமான போர்முனைகளிலெல்லாம் வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்டார். இவரது போரிடும் ஆற்றல் இவரை குறுகிய காலத்துக்குள்ளேயே மத்தியநிலை தளபதியாக உயர்த்தியது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் களம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் பரிதி என்ற பெயருடன் பிரான்ஸ் நாட்டுக்கான அரசியல் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து, புலம்பெயர் களத்திலும் ஒரு தளபதியாக, முழுநேர தேசியச் செயற்பாட்டாளனாக தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காகப் பணியாற்றிய தளபதி கேணல் பரிதி அவர்கள், தனது இறுதி மூச்சு வரை அந்த இலட்சியத்துக்காகவே போராடி, அந்த இலட்சியப் பணியில் ஈடுபட்டிருந்த போதே சிங்கள புலனாய்வாளர்களின் ஒட்டுக்குழுவால் கோழைத்தனமாகவும், கோரத்தனமான முறையிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின் பின்னணி என்ன? 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் போரட்டத்தினதும் தமிழ் மக்களினும் கவசங்களாக விளங்கிய ஆயதங்களை மௌனமாக்குவதற்கான சிங்கள அரசின் சூழ்சித் திட்டம் 2000 ஆம் ஆண்டிலேயே தீட்டப்பட்டிருந்தது. அது யாதெனில், தமிழர்களுடைய சுதந்திர தாகத்தை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் படுகொலைசெய்யக் கூடிய தளபதிகளை படுகொலை செய்வது, ஏனைய முக்கிய உறுப்பினர்களின் நடமாட்டங்களை முடக்குவது. அதன் அடிப்படையிலேயே, சிறீலங்கா படைத்துறையில் ஆழ ஊடுருவும் படையணி உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் விமானப் படைத்தளபதியாகவும் விளங்கிய கேணல் சங்கர் அவர்களை படுகொலை செய்ததுடன் 2001 ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமான ஆழ ஊடுருவும் படையணியின் நரபலி வேட்டை, 2008 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை தளபதிகளில் முதன்மையானவரான கேணல் சாள்ஸ் அவர்களை மன்னார் மாவட்டத்தில் இலக்குவைத்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பின் உச்சக் கட்டம் தாண்டவமாடியதோடு முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்காலோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றுப்பெற்றுப் போகும் என எண்ணிய சிங்களத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி பெரும் பூதாகாரமான ஆபத்தாக உருவெடுத்தது. இதன்பின்னணியில் யார், யார் உள்ளார்கள் என்று உளவுப் பணியை முடக்கி விட்ட சிங்களத்துக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் தளபதி பரிதி என்பது தெரியவந்தது. ஆதலால், புலம்பெயர் தேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆழ ஊடுருவும் படையணிக்கு இணையான படுகொலை படலத்தின் முதல் இலக்காக தளபதி பரிதியை இலக்கு வைப்பதனூடாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை அழிக்கலாம் அல்லது முடக்கலாம் என்று கணக்குப் போட்டது சிங்கள தேசம். தளபதி பரிதி இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? படுகொலைசெய்யப்பட்ட தளபதி கேணல் பரிதி, முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்பட்ட பின்னரும் ஓர்மத்தோடும் விடுதலை வேட்கையோடும் வெளிப்படையாக இயங்கிய மூத்த தளபதி. உயிர் அச்சுறுத்தல்கள் எத்தனை வந்தபோதும், எதற்கும் அடிபணியாது, அனைத்தையும் எதிர்த்து நின்று விடுதலைக்காக மூழுமூச்சுடன் பணியாற்றினார். அமைதியான சுபாவமுடைய தளபதி பரிதி அவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரும் பெறுமதியும், அதிக கனதியும் இருந்தது. ஆதலால், இளையோர் தொடக்கம் முதியோர் வரை பரிதி அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்தது மட்டுமன்றி, வீரத்தளபதிக்கு பின்னால் அணிதிரண்டனர். இது, சிங்கள தேசத்துக்கும், அவர்களின் கைக்கூலிகளுக்கும் அச்சத்தை உண்டுபண்ணியது. ஏனெனில், தளபதி பரிதி அவர்களின் அர்ப்பணிப்பும், தலைமைத்துவமும் தமிழீழ விடுதலையை அடைவதற்கான படிக்கற்களை விரைவுபடுத்தின. ஆகவே, தளபதி பரிதி அவர்களை படுகொலை செய்வதனூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பேரிழப்பையும் பெருவெற்றிடத்தையும் உருவாக்குவதே சிங்கள அரச பயங்கரவாதத்தின் திட்டம். அத்துடன், புலம்பெயர் தமிழர் தேசத்துக்கு எதிரான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் உளவியல் போரில் இது முக்கியமானதொரு நடவடிக்கை. இதனூடாக, புலம்பெயர் தேசங்களில் வாழும் ஏனைய செய்ற்பாட்டாளர்களுக்கு அச்சத்தையும் அழுத்தத்தையும் உண்டுபண்ணுவதானூடாக அவர்களினுடைய செயற்பாடுகளை முடக்குவது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முக்கிய நிகழ்சி நிரலில் ஒன்று. அத்துடன், தமிழர் தரப்புகளுக்கிடையில் பிளவுகளை மேலும் தீவிரப்படுத்துவதனூடாகத் தொடரும் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மேலும் நெருக்கடிக்குட் தள்ளுவதும் முக்கிய நிகழச்சி நிரலிலுள்ள விடயம். அத்தகைய விடயங்கள் அனைத்தையும், தளபதி பரிதி அவர்களைப் படுகொலை செய்வதனூடாக முன்னெடுக்கலாம் என்ற அடிப்டையிலேயே, தளபதி பரிதியை எல்லை கடந்த சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவது இரையாக்;கியது. இதிலிருந்தே, தளபதி கேணல் பரிதி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பு தெட்டதெளிவாகிறது. தளபதி பரிதிக்காக தமிழ்மக்கள் செய்ய வேண்டியது என்ன? தளபதி கேணல் பரிதி அவர்களின் இழப்பென்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய போராட்ட வழிமுறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இவரது இழப்பால், தமிழர் தேசம் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளது. ஆனால், தமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தன்னுயிரை அர்ப்பணித்த தளபதி கேணல் பரிதியின் வீரச்சாவுக்கு கண்ணீர் சிந்துவதும் கவலையடைவதும் மட்டும் போதாது. இத்தருணத்தில், தளபதி கேணல் பரிதி எந்த உயரிய இலட்சியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து, அதற்காகவே தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்தாரோ, அந்த இலட்சியப் பயணம் இலக்கினை அடையும் வரை தளராமல் போராடுவதே ஒவ்வொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களதும், உணர்வாளர்களதும், மற்றும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களினதும் வராலற்றுப் பொறுப்பும் தார்மீகக் கடமையுமாகும். இதன் ஊடாகவே, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதோடு, சுதந்திர தமிழீழம் என்ற உயரிய இலக்கை அடையலாம். தளபதி கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவு என்பது, அடுத்த கட்ட போராட்டத்தின் திருப்புமுனை சக்தியாக உருவாக்கம்பெற்றுள்ள புலம்பெயர் களத்தில் தமிழர்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது. இன்றே போராட புறப்படு தமிழா! இல்லை நாளையென்பது நமக்கில்லை. இ.மதியழகன் – http://www.errimalai.com/?p=8696
  7. நான் முதலாவதை பரீட்சித்தபோது வேலை செய்தது. திரி ஒன்றை முன்னர் பார்க்காவிட்டால் முதலாவது கருத்துக்குப் போகலாம்.
  8. @ரதி, @நிலாமதி அக்கா, நீங்கள் உங்கள் கணக்கில் உள்ள settings ஐ மாத்தினால் சரிவரும் என்று நினைக்கின்றேன். https://yarl.com/forum3/settings/ இதில் உள்ள Content view Behavior மூன்று தெரிவுகள் இருக்கின்றன. Take me to comments I haven't read Take me to the beginning Take me to the latest comment எனக்கு இரண்டாவதாக உள்ளதுதான் தெரிவாகி இருந்தது. ஆனால் நான் திரிகளில் நுழையாமல் Activity ஊடாகப் போவதால் பிரச்சினையைக் காணவில்லை. இப்போது முதலாவதைத் தெரிவு செய்து Save பண்ணியுள்ளேன். நீங்கள் விரும்பினால் முதலாவதையோ அல்லது மூன்றாவதையோ தெரிவு செய்து Save பண்ணினால் சிக்கல் தீரும்!
  9. மேஜர் கணேஸ்(மூதூர் பிராந்திய தளபதி) சித்திரவேல் சிற்றம்பலம் பேராறு, கந்தளாய், திருகோணமலை. வீரப்பிறப்பு:09.04.1961 வீரச்சாவு:05.11.1986 நிகழ்வு:திருகோணமலை திருமலை மூதூரில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவு
  10. கூட்டாளிகளின் வாழ்த்து! ஒரு மட்டு மரியாதை வேண்டாம்😂
  11. “ஜியாங் ரோங்” இன் ‘’ஓநாய் குலசின்னம்’’ November 4, 2021 — அகரன் — அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி கலிபோர்னிய வறட்சி பற்றிய விபரணத்தை வெளியிட்டது. அங்கு ஒர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் முற்றிலும் காணாமல்போய்விட்டது. அப்பகுதி மக்கள் பெற்றோல் பங்கில் 15 டொலர் கட்டி வாரத்தில் குளிக்கிறார்கள். ஒரு வயதான பெண்மணி கடந்த மாதம் 1000 டாலருக்கு தண்ணீர் வேண்டினேன் என்று கலங்கினார். அங்கு 2018இல் நீர் நிறைந்திருந்த ஏரியில் சிறுகோடுபோல தண்ணீர் இருக்கிறது. உலகின் வல்லரசு ஒன்றின் நிலத்தில் நடக்கும் கோரமான நிலை இது. அண்மையில் உலக நாடுகளின் சூழல் விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கை ‘’மனித நடவடிக்கைகள் ஆபத்தான நோயை பூமிக்கு வழங்கிவிட்டன. காலம் பிந்திவிட்டது. கடந்த பத்தாண்டுகளின் புவி வெப்பநிலை ஏற்றம் ஆபத்தின் கூக்குரல்’’ என்றது. கரியமில வாயுவை கட்டுப்படுத்த நாடுகள் கூட்டம்விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்சீனா ஹைதரசன் குண்டை பரிசோதித்திருக்கிறது. மோசமான அதிகார வெறி இந்த பூமியை அழிப்பதை பார்த்துக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆபத்தானவன்தான். இப்படியான ஒரு நாளில்தான் ‘’ஓநாய் குலசின்னம்’’ என்ற நாவலை படித்தேன். இந்த நாவல் ஜியாங் ரோங் என்பவரால் சீனமொழியில் 2004இல் வெளியிடப்பட்டது. இதை ஆங்கிலத்தில் படித்த திரு வெற்றிமாறன் இதை வெளியிடவே அதிர்வு என்ற பதிப்பகத்தை ஏற்படுத்தி சி.மோகன் என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு 2012இல் தமிழில் வெளியாகியது. இச்சேதியே இந்த நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்தும். இதை படித்ததும் வளர்ச்சி என்ற சொல்லே வெறுப்பை தந்தது. இயற்கையை சிதைத்துவிட்டு எதை நாம் வளர்க்கப்போகிறோம்?அழிவையும், மரணங்களையும்தானே? ** நாவல் மையங்கொள்வது மொங்கோலிய புல்வெளிகள் பற்றியது. சீன மறுமலர்ச்சியில் மாவோ கிராமங்களை வளர்க்க மாணவர்களை எங்கும் அனுப்புகிறார். அப்படித்தான் மொங்கோலிய புல்வெளி ஓலான் புலாக்கிற்கும் சீன மாணவர்கள் வருகிறார்கள். அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள். அதில் ஒரு மாணவன் ஜென்சின். அவனுக்கு அந்த மக்கள் வாழ்வு பிடித்துப்போகிறது. மொங்கோலிய புல்வெளிகளின் உண்மையான ராஜா ஓநாய்கள்தான். ஓநாய்கள் தங்கள் மந்தைகளை கொன்றாலும், புல்வெளி நிலைத்திருக்க ஓநாய்கள்அவசியம் என்று அந்த மக்கள் விரும்புகிறார்கள். ஓநாய்களுக்கும் கடவுளுக்கும் தொடர்பிருப்பதாகஅவர்கள் கருதுகிறார்கள். ஓநாய்கள் ஊளைஇடும்போது அவை வானத்தைப்பார்த்து கடவுளிடம் முறையிடுகின்றன. அதைப்பார்த்தே மனிதனும் வானத்தைப் பார்த்து வணங்க கற்றுக்கொண்டான் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரு காலத்தில் பத்தாயிரம் மான்கள் கூட்டமாக அந்தப்புல்வெளியில் புல்மேயும். மான்களின் உயிர்ப்பெருக்கத்தை சமநிலையில் வைத்திருப்பவை ஓநாய்கள். அதைவிட எலிகள், ஒரான்குட்டான்கள், முயல்கள் என்று எல்லாவற்றையும் இயற்கை சமநிலை பேணி நிலைக்க வைத்திருப்பவை ஓநாய்கள். இறந்த விலங்குகளில் இருந்து கிருமிகள் வெளியேறாமல் எலும்புகளைத்தவிர எல்லாவற்றையும் உண்பதால் புல்வெளி சுத்தமாக இருக்கும். ஓணாய்கள் தங்கள் உடமையை தாக்கினாலும் அவற்றை மொங்கோலிய புல்வெளி மக்கள் குலதெய்வமாகவே பார்த்தார்கள். இதைவிட ஓநாய்களின் சிறப்பியல்புகள் ஜென்னை வியப்பில் நிறுத்துகின்றன. தம் உணவுத்தேவைக்கு அதிகமாக அவை உயிர்களை கொல்லாதவை. யுத்ததந்திரங்களில் அவற்றை அடிக்க யாருமில்லை. தமக்கு சாதகமான நிலை வருமட்டும் பதுங்கி இருப்பவை. இரவில் பெரும் தாக்குதலை நடத்ததலைமை ஓநாயின் கட்டளைப்படி நகர்வதோடு தாக்குதலுக்கான புலனாய்வு நடவடிக்கையைக்கூட இரகசியமாக பல நாட்களின் முன்னே செய்பவை. மொங்கோலிய குதிரைகளின் வேகம் அதிகரித்ததற்கு ஓணாய்களே காரணம். இந்த நிலத்திலிருந்து செங்கிஸ்கான் என்ற மாபெரும் மனிதபோர் அலையை இந்த ஓநாய்களே ஏற்படுத்திஇருக்கும் என்பது இதில் இருந்து தெரிகிறது. இந்த நிலையில் ஓநாய் குகையில் ஓர் ஓநாய் குட்டியை எடுத்து ஜென் வளர்க்கிறான். ஒரு குழந்தையை தாய் வளர்ப்பதுபோல அவன் அக்கறை காட்டுகிறான். ஓநாய் வளர்க்க பல இடையூறுகள் வருகின்றன. நாய்களோடு சேர்த்து வளர்த்தாலும் அது ஓநாயாகவே வளர்கிறது. அதன் தனித்தன்மையை எந்த நிலையிலும் அது இழக்கவில்லை. இப்படியான நிலையில் /ஓநாய்கள் மந்தைகளைகொல்கின்றன. உற்பத்தியை பெருக்க விவசாய நிலமாக அவற்றை மாற்ற அரசு முயற்சிக்கிறது. /எல்லாவற்றுக்கும் ஓநாய்களை அழிக்க வேண்டும் என்று அதிகாரவர்க்கம் முடிவெடுக்கிறது. புல்வெளி முதியவர்களின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறது. ஓநாய்களை இராணுவம் சுட்டுக்கொல்கிறது. சீனர்கள் வருகிறார்கள். விவசாயம் வருகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு நடந்த வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. ஓநாய்கள் இல்லாததால் எலிகள் பெருகி நிலமெங்கும் ஓட்டைபோட்டு வளைகள் வருகிறது. குதிரைகள் அந்த ஓட்டைகளில் கால்விட்டு கால் முறிகிறது. ஓநாய்களை அடுத்து மான்கள் வேட்டை நடக்கிறது. வெறும் 20 ஆண்டுகளில் புல்வெளிபாலை நிலம்போல் மாறுகிறது. அங்கு விவசாயம்கூடசெய்ய நீரற்றுப்போகிறது. ஆற்றில் மணல் மட்டும் அடையாளமாக கிடக்கிறது. இப்போது அந்த மண்வெளியில் இருந்து மணல்புயல் சீனாவின் பீஜிங் ஐ அடிக்கடி தாக்குகிறது. நாவலின் இறுதியில் வளர்த்த ஓநாயை தன்கையாலே கொல்லவேண்டி ஏற்படுகிறது. தன் குழந்தையை கொன்றதுபோல ஜென் துடிக்கின்றான். இந்த நாவலில் புல்வெளியின் ஆன்மா போன்ற ஓர் முதியவர் வருகிறார் அவர் பில்ஜி. ஜென்னை தன் மகன்போல கருதி அந்த வாழ்வைகற்றுக் கொடுக்கிறார். அவர் புல் வெளிபற்றி கூறும் வார்த்தைகள் அதிர்வை தருபவை. « இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றயவை சிறிய உயிர். புல்லை தின்னும் ஜீவன்கள் இறைச்சி தின்னும் உயிர்களைவிட மோசமானவை. மான்களைவிட புல் இரக்கத்துக்குரியவை. மான்களுக்கு தாகம் எடுத்தால் அவை நதியை தேட முடியும். குளிர் எடுத்தால் மலையில் இதமான இடத்துக்கு நகரமுடியும். புல்? அது பெரிய உயிர். அதன் வேர்கள் அழமற்றவை. அதனால் ஓட முடியாது. எவரும் அவற்றின்மீது ஏறி மிதிக்கலாம், உண்ணலாம். அவை பூப்பதில்லை. தம் விதைகளை அவற்றால் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புற்களைவிட வேறேதும் இரக்கத்திற்குரியதல்ல » புல்வெளியை அழித்த சீனா இன்று அதன் பெறுபேற்றை அனுபவிக்கிறது. ஏரல் என்ற கடலை சோவியத் தின்றதையும், பாலைவனத்தை இன்று மெல்வதையும் பார்க்கிறோம். அமேசன் காடுகள் பூமியின் நுரையீரல்! அந்த அரசாங்கமே காட்டை எரித்து விவசாய நிலத்தை ஏற்படுத்துகிறது. எல்லாம் வளர்ச்சிக்காக!!! இன்று வல்லமை நாடுகளிடம் 17000 அணுகுண்டுகள் சட்டப்படி இருக்கின்றன. அதைவிட வலிமைகூடிய நைடரஜன் குண்டுகள் வலம்வருகின்றன. இவை எல்லாம் எங்கு பயன்படுத்த காத்திருக்கின்றன ? அதற்கு முதல் ஒரு கேள்வி. பூமியில் நீரும், பிராணவாயுவும் இல்லாதபோது எந்த நாடு இருக்கும்?! யார் யாரை எதிர்ப்பார்கள்? « ஓநாய்கள் தம் பசியை மீறி உயிரை கொல்லாது, பிள்ளைத்தாச்சி விலங்கை கொல்லாது பிறந்த குட்டிகளை உண்ணாது» மனிதனைவிட எவ்வளவு மேலானவை?!! ‘’ஓணாய் குல சின்னம்’’ இந்த நூற்றாண்டின் அவசிய நாவல்!! https://arangamnews.com/?p=6700
  12. யாழ்கள வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  13. சுவிற்சலாந்தின் மலைகளும், ஏரிகளும் எப்போதும் ரம்மியமானவை. கோடையிலும், பனிக்காலத்திலும் போகவேண்டிய இடங்கள்.
  14. 23.10.2000 அன்று பேரினவாத சிங்கள கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் மூழ்கடித்த கடற்கரும்புலிகள் கடற்கரும்புலி லெப். கேணல் ரெஜி, கடற்கரும்புலி மேஜர் றோஸ்மன், கடற்கரும்புலி மேஜர் திருமாறன், கடற்கரும்புலி மேஜர் நித்தி, கடற்கரும்புலி மேஜர் நிதர்சன், கடற்கரும்புலி மேஜர் மயூரன் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் வைத்து 23.10.2000 அன்று சிறிலங்கா கடற்படையின் மூன்று போர்க்கப்பல் கலங்களை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ரெஜி, கடற்கரும்புலி மேஜர் றோஸ்மன், கடற்கரும்புலி மேஜர் திருமாறன், கடற்கரும்புலி மேஜர் நித்தி, கடற்கரும்புலி மேஜர் நிதர்சன், கடற்கரும்புலி மேஜர் மயூரன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலைக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.! திருகோணமலை துறைமுகத்தின் மீது 23.10.2000 அன்று கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா கடற்படை பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. மார்பிள் பீச் பகுதியிலிருந்து துறைமுகத்தினை நோக்கி கடுமையான மோட்டார் தாக்குதல் நடாத்தப்பட துறைமுகத்திற்குள் உள்நுழைந்த கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் சிறிலங்கா கடற்படையுடன் கடுமையாகச் சமரிட்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் (படைக்காவி), போர்ப்படகு உட்பட மூன்று கடற்படைக் கலங்கள் கடற்கரும்புலிகளால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன. மேலும் இரு போக்குவரத்துக் கப்பல்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. மார்பிள் பீச் பகுதியிலிருந்து துறைமுகம் மீது எறிகணை வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/0f17476b-f47c-4ccb-bd94-adc4117eaee1
  15. கரும்புலி லெப். கேணல் இளங்கோ உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.! கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலைப் போராட்ட வரலாற்றில் 22.10.2007 அன்று “எல்லாளன் நடவடிக்கை”யின் போது சிறிலங்காவில் உள்ள அனுராதபுர வான்படைத்தளத் தளத்தில் ஊடுருவி கரும்புலிகளும் – வான்புலிகளும் தகர்த்தழித்த வரலாற்றுச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய 21 கரும்புலி மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து சிறிங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்திசிறிலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பாதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம். தாய்மண்ணில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன்.! தேசப்புயல்களின் நினைவில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்…! விடுதலைக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் உயிராயுதங்கள்.! கரும்புலி லெப். கேணல் இளங்கோ…! அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது. எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும். உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது. சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது. கரும்புலி லெப். கேணல் வீமன்…..! பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார். மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன. வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான். வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர். அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான். கரும்புலி லெப். கேணல் மதிவதனன்……! என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது. அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது. பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். கரும்புலி மேஜர் இளம்புலி ….! இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது. இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். கரும்புலி மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன், கரும்புலி மேஜர் காவலன்…என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன், கரும்புலி மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன், கரும்புலி மேஜர் கனிக்கீதன்….என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி, கரும்புலி கப்டன் தர்மினி…என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கரும்புலி கப்டன் புரட்சி…என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன், கரும்புலி கப்டன் கருவேந்தன்…என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார், கரும்புலி கப்டன் புகழ்மணி….என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன், கரும்புலி கப்டன் புலிமன்னன்…என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார், கரும்புலி கப்டன் அன்புக்கதிர்…என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார், கரும்புலி கப்டன் சுபேசன்….என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ், கரும்புலி கப்டன் செந்தூரன்…என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ், கரும்புலி கப்டன் பஞ்சீலன்…என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா…என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி, கரும்புலி கப்டன் அறிவுமலர்…என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா, கரும்புலி கப்டன் ஈழத்தேவன்…என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் கரும்புலி லெப். அருண்….என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/06cbef23-02d1-4fe0-afe2-98d70bc044fb
  16. வாழ்த்துக்கள் 🏃🏾 @இணையவன்👏👏👏 மரதன் ஓடுவது இலகுவானது அல்ல என்பதை 25 கிலோமீற்றர்கள் அண்மையில் நடந்தபோது தெரிந்துகொண்டேன்.
  17. ஒரு கலகக்காரனின் கதை – ஜே. ஜே. சில குறிப்புகள் நாவல் – இராயகிரி சங்கர் October 16, 2021 1981ல் எழுதப்பட்ட நாவல் ஜே.ஜே.சில குறிப்புகள். எழுத்தாளன் மீது பெரும் பித்துக்கொண்ட வாசகன் ஒருவனின் பார்வையில் சொல்லப்படும் புனைவு. ஜோசஃப் ஜேம்ஸ் என்கிற மலையாள எழுத்தாளனை வாசிக்க நேர்ந்து அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளத்துடிக்கும் பாலு என்கிற இளைஞனின் பரவசத்துடன் நாவல் ஆரம்பம் ஆகிறது. பாலுவின் பார்வையின் ஊடாக .ஜே.ஜே. வின் மொத்த வாழ்க்கையும் நாவலில் குறிப்புகளாக, நினைவோடை உத்தியில் பிறரின் சொற்களாக, ஜே.ஜே.வே எழுதிய நாட்குறிப்புகளாக விரிகிறது. வெளியாகி கிட்டத்தட்ட முப்பந்தைந்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இந்நாவலின் முக்கியத்துவம் என்ன? அதற்குமுன் இந்த நாவலின் பேசுபொருள் என்ன என்பதும், அறிமுக வாசகர்கள் எதிர்கொள்ள இருக்கும் தடைகள் எவை என்பதையும் கொஞ்சம் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். இந்நாவல் நடக்கும் காலம் சுதந்திரப் போராட்டம் நடந்து முடிந்து பொன்னுலகம் வாய்க்கும் என்று நம்பி ஏமாந்து, மனித மனத்தின் பேராசைகளால் தியாகங்கள், லட்சியவாதங்கள் துார்ந்து போயிருந்த காலம். பொதுவுடைமைச் சித்தாந்தம் அவ்வெற்றிடத்தை நிரப்பும் என்று ஏகமனதாக அறிவுஜீவிகள் நம்பி, பெரும் ஊக்கத்தோடு அவர்களை இயங்கச்செய்திருந்த காலமும்கூட. இலக்கியத்தில் கலை கலைக்காக என்றும், கலை மக்களுக்காக என்றும் தனித்தனி அலைகள் குமுறிக்கொண்டிருந்த காலம். முன் மாதிரிகள் ஏதும் இந்நாவலின் வடிவத்திற்கு தமிழில் இல்லை. கலைஞனின் தேடலில் விழைந்த வடிவம். கூறுமுறையும் முன்னர் அனுபவப்படாதது. இதுவே ஆரம்ப வாசகர்களிடம் இந்நாவல் ஒருவித அந்நியத்தன்மை கொள்ள காரணமாக அமைகிறது. ஜே.ஜே. இடதுசாரி சிந்தனைகளின் மீது ஈர்ப்புக்கொண்டவன். நாளடைவில் தோழர்களிடம் தத்துவம் அவர்களின் சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள வாய்த்த ஒரு உபாயமாக மாறிப்போனதைக்கண்டு கலங்கி, அவற்றில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டவன். இது அப்போதைய காலகட்டத்தில் பரவலாக நிழந்த உண்மை. சுந்தர ராமசாமியே ஆரம்பத்தில் முற்போக்குக் கதைகள் எழுதியவர்தான். தண்ணீர், கோவில்காளையும் உழவுமாடும் போன்ற கதைகள் அக்காலத்தியவை. அதன்பின் ஸ்டாலினிய நிர்வாகத்தினால் மனம்நொந்து அக்கிருந்து வெளியேறுகிறார். ஏழைப்பங்காளிகளின் உலகத்தை சமத்காரமாக ரத்தமும் சதையுமாக எழுதிப் பேரும் புகழும் பெற்றுவரும் முல்லைக்கல் மாதவன் நாயர் மீது ஜே. ஜே. வைக்கும் விமர்சனங்கள் இன்றைக்கும் முக்கியமானவை. முல்லைக்கல் நாயர் ஒரு போலி என்ற ஜே.ஜேயின் அவதானிப்பு கடும் விமர்சனமாக உருவெடுக்கிறது. எழுதுவதும் வாழ்வதும் வெவ்வேறாக இருக்கும்போது புரட்சியாளன் பிம்பத்தை முல்லைக்கல்லுக்கு அளிக்க ஜே.ஜே. ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையைக் காணும் வேட்கை, அதை எழுத்தில் பதிவுசெய்யத்துடித்த வேகம் என்று தன் செயல்களால் தொடர்ந்து எதிரிகளைச் சம்பாதித்துக்கொள்கிறான் ஜே.ஜே. தன்னுடைய மொழியான மலையாள இலக்கிய உலகத்தின் மீது அவன் காட்டும் சமரசமற்ற கறாரான விமர்சனம் அவனுக்கு அளிப்பது புறக்கணிப்பையும் பரம்பரையாகத் தொடர வாய்ப்புள்ள பகைகளையும். பாலு ஜே.ஜேயை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நுால்தான் இந்நாவல். தொடர்கதைகளும் நெடுங்கதைகளும் பரவலாக எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்நாவலின் வடிவம் அளித்த அந்நியத்தன்மை இன்றும் வாசகர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இதில் வாசக ஊகங்களுக்கான இடைவெளி ஏராளம். காலம் முன்பின்னாக ஊஞ்சலாடி குதிக்கிறது. ஜே.ஜே. என்கிற எழுத்தாளன் தமிழில் உள்ளவன் என்றும் ஒரு கற்பனைக்காக புதுமைப்பித்தன் என்றும் கொண்டு மலையாள இலக்கிய உலகத்தின் மீது ஜே.ஜே.கொட்டும் விமர்சனங்கள் தமிழ் இலக்கிய உலகம் சார்ந்தவை என்றும் கற்பனை செய்துகொண்டால் இந்நாவலின் முக்கியமான பரிமாணம் பிடிபடும். மொத்த நாவலும் சிந்திக்கும் மனிதர்களின் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான விமர்சனங்களை முன்னிறுத்துகிறது. போலிகளைக்கண்டு கொந்தளிக்கிறது. துவேசம்கொள்கிறது. ஏளனம்செய்து சபையில் இருந்து விரட்டி அடிக்கிறது. சிந்தனை என்ற பெயரில் நடக்கும் மொண்ணைத்தனங்களை செவிட்டில் அறைந்து அது சிந்தனை அல்ல சிந்தனைப் போலி என்று உரக்கச் சொல்கிறது. மேலும் பொதுவுடைமை தத்துவத்தை பாவித்தவர்கள் குறித்த துல்லியமான விமர்சனம் நாவலில் பெரும்பாலான இடங்களில் வருகிறது. எண்பதுகளில் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், நம் அறிவுலகக் சீரழிவுகள் எவை என்பதையும் விமர்சனப்பூர்வமாக பதிவுசெய்துள்ளது என்பதே இந்நாவலின் முக்கியத்துவம். இரண்டாவதாக தமிழ்ச்சமூகத்தின் மீது சுந்தர ராமசாமிக்கு இருந்த விமர்சனங்கள். அவை இன்றும் மாறாமல் தொடரந்து கொண்டிருக்கின்றன. வணிக எழுத்தின் மீது சு.ரா.விற்கு இருந்த எண்ணம் இந்நாவலில் ஓரிடத்தில் பதிவாகியுள்ளது. ”மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புக்களை ஓயாமல் நம்மேல் உரசிக்கொண்டிருக்கும் அற்பங்கள்” என்று அது வெளிப்படுகிறது. அக்கவலை “சீதபேதியில் தமிழ் சீதபேதி என்றும், வேசைத்தனத்தில் தமிழ்வேசைத்தனம் என்றும் உண்டா? என்று சினங்கொள்கிறது. சு.ரா.வின் பாலயத்தில் இலக்கிய உலகம் எப்படி இருந்தது என்பதை ”நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தபோது என் மனத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியவன் ஜே.ஜே. தமிழ் நாவல்களில் அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது தமிழ்த் தொடர்கதைகளில் என் மனத்தைப் பறிகொடுத்திருந்த காலம். அன்று வானவிற்கள் ஆகாயத்தை மறைத்திருக்க, தடாகங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உலகத்துப் புழுதியை மறைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள். ஆஹா தொடர்கதைகள் ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசுச் சீட்டு யாருக்கு விழும், கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால்.” என்று வர்ணிக்கிறார். ஆன்மீக வாதிகளிடம் அவருக்கு ஏற்படும் அவநம்பிக்கை துரதிருஷ்டவசமானது. நாராயணகுருவின் சீடர் என்று தன்னைச் சொல்லிக்கொண்ட ஒருவரை சந்தித்து கொஞ்ச நாட்கள் அவரோடு தங்க நேரிடுகிறது பாலுவுக்கு. விரைவிலேயே அவரின் நம்பிக்கைகளால் ஒன்றும் இம்மண்ணில் விளையப்போவதில்லை என்று சோர்வுற்று விலகிச்செல்கிறார். ஆயினும் அவரைப்போன்ற லட்சியவாதிகளின், சந்நியாசிகளின் அத்தனை உழைப்பும் ஏன் வீணாகிப்போகிறது என்ற துக்கம் அவரை வாட்டுகிறது. பாலு ஜே.ஜே.யைச் சந்திக்க எழுத்தாளர் மாநாட்டுக்குச் செல்கிறான். அங்கு அவனுக்கு சரித்திர நாவலாசிரியர் திருச்சூர் கோபாலன் நாயரைச் சந்திக்க நேரிடுகிறது. அப்போது அவரின் நாவல்கள் குறித்து ஜே.ஜே. சொல்லும் வரிகள் அங்கதம் நிரம்பியவை. ”கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குடடியை அவளைத்துரத்திய அரசர்களிடமிருந்தும். முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் நாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால் , சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையில் இருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும்”, “பாவம் திருச்சூர், கற்பனைக் குதிரைகள் மண்டிக் கிடக்கும் லாயம் அவருடையது. ஏதோ சிலவற்றை அவிழ்த்துவிடுகிறார். அவை விண்ணென்று மேலே போய் மேகக் கூட்டங்களிடையே புரண்டு உடல் வலியைப் போக்கிக்கொண்டு சூரியனைப் பின்னங்காலால் உதைத்துதள்ளி, கிரகங்களை முட்டிக்குப்புறச் சாய்த்து சில நட்சத்திரங்களையும் விழுங்கிவிட்டு சந்திரனின் ஒரு துண்டை வாயில் கவ்விக்கொண்டு திரும்பி வந்து சேருகின்றன.” என்கிறான். அதைவிட உச்சபட்ச அங்கதம். ஜே.ஜே.பாலுவைச் சந்தித்த உடன் கேட்கும் கேள்வி. ”சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?”. இந்நாவலின் சில தருணங்களை ஜெயமோகன் கைப்பற்றி பின்தொடரும் நிழலின் குரல் என்ற பெரிய நாவலாக எழுதியிருக்கிறார். முல்லைக்கல் மாதவன் நாயரிடம் ஜே.ஜே.யைப்பற்றி விவரிக்கும் அரவிந்தாட்ச மேனன் ஆல்பெர்ட் என்கிற இடதுசாரி தொழிற்சங்க வாதி ஒருவரைப்பற்றி சொல்கிறார். தனியாளாக மலைக்காட்டில் சங்கங்களை ஏற்படுத்தியவன் என்றும் பின்னாளில் கார் பங்களா நிலம் என்று ஒரு குட்டி முதலாளியாக தன்னை நிறுவிக்கொண்டவன் என்றும் வருகிறது. ஜே.ஜே.யின் நாட்குறிப்பு பகுதியில் ஒரு வரியில் ட்ராட்ஸ்கி ட்ராட்ஸ்கி என்று மாணவர்கள் புலம்பிக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறார். பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் கதைக்களத்தை ஜெயமோகன் இந்நாவலின் வரிகளில் இருந்தும் அதன்பின் அவருக்கு ஏற்பட்ட தொழிற்சங்க அனுபவங்களில் இருந்தும் எழுதியிருக்கலாம். அந்நாவலும் இந்நாவலைப்போன்ற வடிவ ஒற்றுமை கொண்டுள்ளது என்பது இந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. உண்மையான கலைவெளிப்பாட்டின் இயல்பு என்ன என்பதற்கு நாவலில் வரும் ஒரு காட்சிச்சித்தரிப்பு உதாரணமாக அமைகிறது. அது ஜே.ஜே. டயரிக்குறிப்பாக வருகிறது. “முல்லைக்கல் உன் எழுத்தை நான் மனத்தால் வெறுக்கிறேன். மாட்டுக்குச்சொறிந்து கொடு அது நல்ல காரியம். ஆனால் மனிதனுக்கு ஒருபோதும் சொறிந்துகொடுக்காதே…லுாக்கோசின் மகள் ஏலியம்மாவின் வீணை வாசிப்பை நான் கேட்கச் சென்றிருந்தபோது அவளுடைய தனி அறையில் வீணையின் கம்பிகள் அதிர்ந்தன. ஏலிக்குட்டியோ எங்களுடன் இருந்தாள். நாங்கள் வேகமாக ஓடிக் கதவைத்திறந்து பார்த்தபோது கம்பிகள் தானாக அதிர்ந்துகொண்டிருந்தன. மேல்மாடி உத்தரத்தில் ஒரு தச்சன் ஒரு ஆப்பை மரச்சுத்தியலால் அறைந்துகொண்டிருந்தான். இதுதான் மனிதாபிமானம்.” நாவலில் அநேகம் இடங்கள் கவிதைவரிகளாக கவித்துவம் கொண்டிருக்கின்றன. சம்பத் காணும் கனவு அதன் வரலாற்றுப்பின்புலம், கரும்புள்ளிகளாத்தெரிந்து யானை உருப்பெற்று மீண்டும் கரும்புள்ளிகளாக யானை மறையும் மாயத்தோற்றம். சம்பத் காணும் பரவசமான சூரிய உதயம் என்று நாவல் முழுதும் சிந்தனையின் பாய்ச்சலையும் கலைவெளிப்பாட்டையும் காணலாம். படைப்பு மொழியோ சன்னதம் வந்து வேட்டைக்கு ஏகும் சாமியாடியுடையது. மந்திரங்கள் போன்று இந்நாவல் வெளிவந்த காலங்களில் சிலவரிகள் இலக்கிய வாசகர்களால் ஓதப்பட்டு வந்தன. அவற்றில் சில ”எனது குடி தற்காலிகத் தற்கொலை – நான் உயிர்வாழ அவ்வப்போது தற்கொலைகள் அவசியமாகின்றன”” ”மூலதனம் இல்லாமல் முதலாளி ஆக இன்று இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தொழிற்சங்கம் , மற்றொன்று பாஷை. பாஷை என்பது மொழி மூலம் மக்களின் உணர்ச்சியை, முக்கியமாக மேடைகளில் துாண்டுவதற்கான ஆற்றல். மக்களின் மனத்தேவைகளைப் பெரும் மாளிகைகளாக எழுப்பி அவர்கள் முன் காட்டும் காரியம்.” ”சஞ்சலமின்றி முடிவெடுப்பது. சரியோ தவறோ அதன்பின் அதில் ஆழ்ந்து விடுவது. அதன்பின் எதிர்நிலைகளைப் பற்றி உணர்வில்லாமல் இருப்பது. உயர்வோ தாழ்வோ இவை நிம்மதியானவை. மனநிம்மதி எப்போதும் மந்தத்தைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறது போலிருக்கிறது” ”பாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம். கால்தடத்தை நாம் உற்றுப்பார்க்கும்போது வேட்டைநாய் வெகுதுாரம் போயிருக்கும்.” ”ஆத்மாவை ஜேப்படிக்க ஒரு உடலுக்குள்தான் எத்தனை கைகள்” தமிழ்ச் சமூகத்தின் போலித்தனத்தின் மேல், சிந்தனைச்சோம்பல் மேல் சுந்தர ராமசாமிக்கு இருந்த எண்ணங்கள்தான் இந்நாவலாக உருப்பெற்றுள்ளது. தமிழில் இதுபோன்று தன் உடல்முழுக்க சிந்தனையின் முத்திரைகள் கொண்ட வேறொரு நாவல் இல்லை. அது ஒன்றே இந்நாவலின் பேரழகு. https://mayir.in/essays/rayakirisankar/1788/
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி வர்ணம்🎉🎉🎉

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.