Everything posted by கிருபன்
-
உகண கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகளின் நினைவு
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.! கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். குடாவில் நிலை கொண்டிருக்கும் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் காங்கேசன்துறைத் துறைமுகம் நோக்கி டோறா பீரங்கிப் படகுகளின் வழித்துணையுடன் சென்ற “உகண” கப்பல் 26.06.2000ம் அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது. சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்தது. இத்தாக்குதலின்போது ஆறு கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈர்ந்து கடலன்னை மடியில் வீரகாவியமாகினர். விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.! கடற்கரும்புலி லெப்.கேணல் ஞானேஸ்வரன்:- மீன் பாடும் தேன் நாடாம் இதுதான் இவன் பிறந்த மண். மட்டக்களப்பு 12ம் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன் கனரக ஆயுதப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டான். இதன்பின்னர் யாழ்.மாவட்டம் வந்து வேவுப்பயிர்சிகளை நிறைவு செய்தவன், பல தாக்குதல்களுக்கான வேவு நடவடிக்கைகளில் முன்னின்று செயற்படுகிறான். கொக்குத்தொடுவாய்ச் சமர், ஓயாத அலைகள் 01, ஓயாத அலைகள் 02, ஜெயசிக்குறு என தனது வேவுத்திறனை வெளிப்படுத்திய ஞானேஸ்வரன் சென்றகளமேல்லாம் வீரவடு ஏந்தி வென்று வந்திருந்தான். கடற்கரும்புலிகள் அணியில் தன்னை சேர்த்துக்கொண்டிருந்த இவன், உகணக் கப்பலை தகர்த்து வீரவரலாறாகிப் போனான். கடற்கரும்புலி மேஜர் சூரன்:- மன்னார் மாவட்ட தாக்குதல் அணியில் இருந்துதான் இவனது செயற்பாடு தொடங்கியது. பல தாக்குதல்களில் சண்டைசெய்த சூரன், தவளைத் தாக்குதலில் தனது இடதுகாலை தொடையுடன் இழந்தான். இதன் பின்னர் புலனாய்வுத்துறையில் சிலகாலம் தனது செயற்பாட்டை விரித்திருந்தான். இந்தக் காலப்பகுதியில்த் தான் தனது சுயவிருப்பில் கடற்கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொள்ளுகின்றான். இவனிற்கான கரும்புலிப் படகு வழங்கப்பட்ட போது, தனது படகு இயந்திரங்களைப் படியவிடுதல், ஆயுதங்களை சுத்தம் செய்தல், தொலைத்தொடர்பு சாதனங்களை சீர்செய்தல் என படகின் முழுப் பராமரிப்பு வேலைகளையும் ஒருகையில் ஊன்றுகோலுடன் கடற்கரை மணலில் ஓடிஓடிச் செய்வான். இவ்வாறாக இவன் பெருவிருப்புடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. தேசவிடியலை நெஞ்சினில் சுமந்த கனவுகள் மெய்ப்பட உகண கப்பலை தகர்த்து வீரவரலாற்றை எழுதினான். கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன்:- எந்த இறுக்கமான கடற்சண்டையாக இருந்தாலும் சரி, நடவடிக்கைப் படியாக இருந்தாலும் சரி, பழுதடையும் இயந்திரங்களை இலகுவாக சீர் செய்து கொண்டு அந்த இடத்துக்கு விரையும் நல்லப்பன் மற்றவர்களால் மதிக்கப்படும் சிறந்த இயந்திரப் பொறியியலாளன். இயந்திரம் சீர்செய்யும் களத்தில் இவனது பணி ஆழமானது. திருத்த முடியாது என கைவிடப்படும் இயந்திரங்களை எல்லாம் தன் பெரு முயற்சிகளினால் சீர் செய்துவிடும் நல்ல தற்துணிவு இவனிடத்தில் இருந்தது. அமைதியான அவனது சுபாவம். தானும் தனது வேலையென ஒதுங்கிப்போகும் பக்குவம் எல்லோரையும் இவனிடத்தில் ஈர்க்கவைத்தது. படகோட்டியாக, தொலைத்தொடர்பாளனாக, சகல ஆயுதங்களையும் இயக்கி சண்டை செய்யக்கூடிய வல்லமை பெற்றிருந்த நல்லப்பன் பல கடற்சமர்களில் பங்கெடுத்தான். கடற்கரும்புலிகள் அணியில் இணைந்திருந்த நல்லப்பன், ஆழகடலேங்கும் விடுதலைக்கு பலம் சேர்க்கும் பணியிலும் தனது கடமையைச் செய்திருந்தான். இவ்வாறாக விடுதலைக்காக உழைத்த நல்லப்பன். எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வீரவரலாறு படைத்தான். கடற்கரும்புலி மேஜர் சந்தனா:- சுறுசுறுப்பு, சுட்டித்தனம், மிடுக்கான கதை, மற்றவர் மனத்தைக் கவரும் நகைச்சுவையான பேச்சு இவை எல்லாவற்றிற்கும் சொந்தக்காரிதான் கடற்கரும்புலி மேஜர் சந்தனா. 1990ம் ஆண்டு தன்னைப் போராளியாக மாற்றிக்கொண்டவள். மகளிர் படையணியின் தாக்குதலணியில் செயற்ப்பட்ட சந்தனா களங்கள் பலதை எதிர்கொண்டாள். இருமுறை பலமான விழுப்புண்களையும் தாங்கிக்கொண்டாள். இதன்பின்னர் தமிழீழ சட்டக்கல்லூரியில் கற்பதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் சந்தனாவும் ஒருவர். தமிழீழத் தேசியத் தலைவர் முன்னிலையில் சட்டவாளராக உறுதிப் பிரமாணம் செய்து வெளியேறிய சந்தனா நீதியான, நேர்மையான செயற்பாட்டின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டாள். எனினும் மக்களின் நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்த சந்தனா, கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து இலக்கிற்காக நீண்டகாலம் காத்திருக்க நேருகிறது. நீண்டகாலமாய் காத்திருந்த இவள் பொறுமைக்கு வாய்பாய் உயரக்கடலில் எதிரியின் எண்ணைக் கப்பலான உகணக் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொள்ளுவதே இவளது இலக்கானது. உகண கப்பலில் மோதியபோது உப்புநீரில் தீ மூண்டு வீரவரலாறாகிப் போனாள். கடற்கரும்புலி கப்டன் பாமினி:- தொடக்கத்தில் மக்களுக்கான அரசியல்ப் பணியை செய்துவன்தவள் பின்னாளில் கடற்புலிகளின் சுகன்யா தரைத்தாக்குதல் அணியோடு இணைந்து ஓயாத அலைகள் 01, சத்ஜெய எதிர்ச்சமர், ஜெயசிக்குறு எதிச்சமர் என எ.கே எல்,எம்.ஜி (AK – LMG) உடன் அணித்தலைவியாக நின்று களங்களை எதிர்கொண்டாள். இந்த அமைதியானவளுக்கு கிடைத்த இலக்கு ஆழமானது. சிறிலங்கா படைகளுக்கு விநியோகப் பணியில் ஈடுபட்ட உகண கப்பல் மீது துணிகரத் தாக்குதலில் வெற்றிச்செய்தியை பரிசாக்கி வீரகாவியமானாள் எங்கள் பாமினி. கடற்கரும்புலி கப்டன் இளமதி:- தீவகம் வேலணை இதுதான் இவளது சொந்தமான். இந்தமண் 1990ம் ஆண்டு சிறிலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போது நமது மண்ணை எதிரியிடமிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக தன்னையும் போராளியாக மாற்றிக்கொண்டவள் தான் இளமதி. பிறப்பிலே இவளது கால் ஒன்று இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் தன்னால் பயிற்சிகளை எடுத்து ஒரு போராளியாக முடியும் என்ற இவளது நம்பிக்கை வெற்றியைத் தந்தது. பயிற்சியின் பின்பு தொலைத்தொடர்புக் கல்வியைப் பெற்றிருந்த இளமதி கடற்புலிகளின் தரையோர பாதுகாப்பு நிலையத்தில் தனது கடமையைச் செய்தாள். இந்த நேரத்தில் கொக்குத்தொடுவாய்ச் சமரில் இவளது சகோதரி வீரச்சாவடைந்த போது இவளுக்குள் இருந்த விடுதலை உணர்வு இன்னும் இன்னும் பெருவீச்சாகியது. இதுவே கடற்கரும்புலியாக இவளை மாற்றியது. செவ்வானம் படையணியில் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சிகளை நிறைவு செய்தவளுக்கு, இலக்கு இலகுவில் கிடைக்கவில்லை. தொடர்ந்து தனது மனதை தளரவிடாது கடற்தாக்குதல் அணியில் தொலைத்தொடர்பாளராக, படகுச் சாரதியாக, இயந்திரத் திருத்துனராக தனது பணியைச் செய்திருந்த இளமதி எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாளும் வந்தது. கூட நின்ற தோழியருக்கு இனி நான் வரமாட்டேன் வெற்றிச் செய்திதான் வரும் என்று கூறிச்சென்றவள் எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வெற்றிச் செய்தியைத் தந்து வீரகாவியமாகிப் போனாள். https://www.thaarakam.com/news/c446d938-e356-4f2b-b44a-2a701833ee1a
-
எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.!
எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.! 19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.இம்மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம். எங்கள் விடுதலைக்கான பயணத்தில் அவளது இழப்பு எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஒரு தனி மனிதப்பிறவி. போராளி என்பதை மீறி, தன்னை அர்ப்பணித்து அவள் ஆற்றிய பணி அதிகம். எத்தனையோ போராளிகள் கூட்டிணைந்து நடத்தும் தாக்கு தல்களின் வெற்றிக்கு மூலவேர்களைத் தாங்கி நின்றவள் முகுந்தா. சாதாரண சம்பவங்களை அல்லாமல் தான் வாழ்ந்த கடைசி நிமிடம்வரை மறக்க முடியாத எத்தனையோ மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்களைச் சந்தித்து, அவற்றி லிருந்து விரிந்த புதிய சிந்தனை களைக் கொண்டு மேலும் மேலும் கட்டியெழுப்பப்படவேண்டிய எங்கள் படையணியைப்பற்றி அடிக்கடி கனவு கண்டவள். விடுதலை நெருப்பைக் கண்ணினுள் எரியவிட்டு, கண்ணி வயல்களுக்குள்ளால் ஊர்ந்து தவழ்ந்து பனி, மழை, வெயில், பகல், இரவு பாராது அவள் எடுத்த வேவுத் தகவல்கள்தான் சமர்க்களங்களில் எமது தாக்குதலுக்கான மூலாதாரமாகியது. தம்மால் செய்யமுடியாது என்று வேறு யாரும் கைவிட்ட வேலைகளை என்னால் முடியும். நான் செய்கிறேன் என்று முன் வந்து செய்து முடித்தபோது அவளுள் பிரகாசித்துக் கொண்டிருந்த ஆளுமையை எம்மால் இனம்காண முடிந்தது. 1990 இல் நடுப்பகுதியில் வல்வெட் டித்துறையிலிருந்த தனது குடும்பத்தை விட்டு, விடுதலைப் போராட்டப் பாதையில்முகுந்தாவும் வந்து சேர்ந்தாள். 1991இல் வேவுப் பயிற்சிக்கென விடுதலைப் புலிகள் மகளிர் படையணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரத்தில் தனது பெயர் இல்லை என்பதைப் பார்த்துவிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து அடம்பிடித்து அந்தக்கடினமான பணியில்தன்னைச் சேர்த்துக் கொண்டாள். அன்றிலிருந்து தொடங்கிய வேலை அவள் இல்லாத சண்டைகளும் வேவுகளும் இல்லையென்று சொல்லு மளவுக்கு நீண்டிருந்தது. கட்டைக்காடு, பூநகரி, மண்டைதீவு, கொக்குத் தொடுவாய், வெற்றிலைக் கேணி, சூரியக்கதிர் 1-2, 1996இல் ஆனையிறவுதட்டுவன்கொட்டி, முல்லைத்தீவு, சத்ஜெய என்று விரிந்து சென்ற சமர்க்களங்களில் எமது தாக்குதலுக்கு உயிர்நாடியாக அவளது வேவுத் தகவல்கள் இருந்தன. அவள் வேவுபார்த்த நடவடிக்கைகளில் சூரியக்கதிர்-2 சற்று வித்தியாசமானது. மக்களோடு மக்களாக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் சென்றவர்களோடு சேலை கட்டி, தென்மராட்சி முகாமொன்றுக்குச் சென்று, இராணுவத்தினரிடம் நீர்வாங்கிக் குடித்து அங்கிருந்து ஆயுத தளபாடங்கள், நிலைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுவந்து சேர்த்ததுவரை தனியாகச் சென்ற துணிவு, எத்தகைய வேலை யையும் இந்த மண்ணுக்காய் ஏற்றுச் செய்து முடிப்பாள் இவள் என்பதை நிரூபித்தது. தானும் ஒரு கரும்புலியாகச் சென்று தனது அர்ப்பணிப்பின் மூலம் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற கனவு முகுந்தாவுள்ளும் விரிந்தது. 1994இல் அண்ணைக்குக் கடிதம் எழுதியபோது வேவுப்பணியையும் தான் அவ்வாறுதான் நினைக்கின்றேன் என்று அண்ணையிடம் இருந்து பதில் கிடைக்க, தொடர்ந்தும் தனது பணியில் முழுமூச்சாக முகுந்தா ஈடுபடத் தொடங்கி விட்டாள். தாக்குதலுக்குமுன் மாதக்கணக்காக வேவுபார்த்து சண்டைக்கு வழிகாட்டி, தாக்குதலில் பங்குபற்றி, விழுப்புண் ணேற்று அவை குணமடைய மீண்டும் வேவுக்குச் சென்று......... இப்படி ஒரு சுழற்சிமுறையில் மீண்டும் எமக்கருகில் அவள் வந்து விடுவாள். இவ்வளவுக்கு நடுவில் அவள் ஒரு குஷியான பேர்வழி, முகாமில் அவள் நிற்கிறாள் என்பது வாசலில் நிற்கும் போதே தெரிந்து விடுமளவிற்குப் பெரிய தொண்டை . இதனால் "தொண்டா" என்றே எல்லோரும் அவளை கூப்பிடத் தொடங்கி விட்டனர். மரணப் பொறிக்குள் நின்று கொண்டு எந்தவித நெருக்கடிக்குள்ளும் குறித்த வேலையைச் செய்து முடிக்கும் அவளது செயலாற்றலும் திறமையுமே இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் சிறப்புப் படையணி ஒன்றுக்கு பொறுப்பாளராக அவளை நியமிக்க வைத்தது. அந்தப் படையணியைத் திறம்பட வழிநடத்தி பெரிய பெரிய விடயங்களையெல்லாம் பெண் போராளிகள் சாதிக்க வேண்டும் என்று தனது சின்னஞ்சிறிய இதயத்துக்குள் ஏராளமான கனவுகளைச் சுமந்து கொண்டிருந்தாள் அவள். 199706-18 அன்று அவளது துடிப்பு அடங்கிப்போன வேளையில் அந்தக்கனவு மொட்டுக்கள் முகையவிழ்த்து பூக்களா கியிருந்தன. அவற்றை அள்ளியெடுத்து எமது இதயங்களோடு இறுகத் தழுவிக் கொண்டு எம்மால் நிமிர்ந்து நிற்கமுடிந்ததே தவிர, கண்ணீர் சொரிய முடியவில்லை . ஆம் அவளுக்கும் அதுதான் விருப்பம். அவளது நினைவுகளை மீட்டுப் பார்க்கும் இந்தச் சிறிய பக்கத்தில் மட்டும், நாம் எழுதிய மொழியில் மட்டும் அடங்கி விடாது. நீண்டு பரந்து எம்மில் வியாபித்து....... முகுந்தா மறந்துவிட முடியாத ஒருத்தி. https://www.thaarakam.com/news/e24a96ac-2034-4870-9a44-552f9d12df5c
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பையனைக் கண்டது சந்தோஷம்😀. ஆனாலும் தேர்தலுக்கு பின்னால் இவ்வளவு காலம் ஒதுங்கியிருக்காமல் இருந்திருக்கலாம்☺️ பச்சை குத்தும் அனுமதி கிடைத்தால் @அன்புத்தம்பி க்கு பார்த்து பதமாக குத்துங்கோ. அவர்தான் இப்ப பக்திப் பிரவாகமாக இறைவனிடம் கையேந்துங்கள் என்கின்றார்!
-
தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்ந்த மேஜர் டேவிட்.
தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்ந்த மேஜர் டேவிட். ஒரு போராளியின் புனிதப்பயணம். தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன். தென்தமிழீழ எல்லையில், சிங்களத்தின் நிலப்பறிப்பில் 1963ம் ஆண்டு காலப்பகுதியில் உருவான அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்ற பழந்தமிழ் ஊரில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் என அடையாளப் படுத்தப்பட்ட இடத்தில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்திலிருந்து எழுந்த விடுதலைப் போராளிபற்றிய நினைவுப்பதிவில் தொடக்கத்தின் முதல் அத்தியாயமாக நாம் கண்ட போராளிகளில் ஒருவராக டேவிட் அவர்களின் போராளி வாழ்க்கை அமைந்திருந்தது. அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாது எல்லைத் தமிழ் ஊர்களில் எழுச்சிமிகு மக்களையும் அணைத்துக்கொண்டு, கொண்ட இலட்சியத்திற்காக குறிக்கோள் தவறாது சென்றதையும் டேவிட்டின் போராளிப்பயணம் வெளிப்படுத்தியிருந்தது. தமிழ்ப்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகப் பகுதியான இவ்வூர்களில் தமிழர்கள் என்ற அடையாளத்தில் வாழ்ந்த மக்கள் விசாலமான நிலப்பரப்பைக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் பசுமை நிறைந்த, தமிழர் வரலாற்றில் நால்வகை நிலங்களை உள்ளடக்கிய இவ்வூர்களில் என்றும் தமிழர்கள், தமிழர்களாக வாழ்ந்து வந்தனர். சிங்கள பேரினவாத அடக்கு முறைகளில் நிலப்பறிப்பு, திட்டமிட்ட குடியேற்றத்தினால் சிங்கள மாவட்டமாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்ற அம்பாறையில் தமிழர் விடுதலைக்காக எழுந்த ஆரம்பப் போராளிகளில் மேஜர் .டேவிட் அவர்களும் ஒருவராவர். லெப்.சைமன், லெப் ஜோசெப், 2வது லெப் நிசாம் ஆகிய ஆரம்பப் போராளிகளுடன் இவருடைய விடுதலைப் பயணமும் ஆரம்பமாகியது. 1983ம் ஆண்டு யூலை தமிழின அழிப்பின் மத்தியில் உருவான விடுதலையின் வெளிச்சங்களாக களமிறங்கிய மேஜர் டேவிட் இந்தியாவின் முதல் பாசறையில் பயிற்சிபெற்று வெளியேறிய நிலையில் தாய்மண் நோக்கிய பயணத்தில் விடுதலைக்காக தலைமையின் பணிப்பில் செயல்திறன்மிக்க போராளியாக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார். 1983ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் பல இயக்கங்களின் மத்தியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளாக அறிமுகமானவர்களில் மேஜர் டேவிட் அவர்களும் இணைந்திருந்தார். 1983ம் ஆண்டு ஆரம்பத்தில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் முதல் போராளி யோகன் (பாதர்) அவர்கள் பொறுப்பாளராகவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமு என்கின்ற போராளியின் செயல்பாடு மாவட்டத் தொடர்புகளிலும் இயக்கத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. ராமு அவர்களின் இடமாற்றத்திற்கு பின்பு, 1983ம் ஆண்டு தமிழின அழிப்பைத் தொடர்ந்து படைத்துறைப் பயிற்சிக்காக போராளிகளின் இணைப்பும், யோகனின் பயணமும் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்கள் தொடர்பாளராக செயலாற்றினார். முதல் பாசறை முடிவில் இம்மாவட்டத்திற்கு வந்தவர்களில் மேஜர். டேவிட் அவர்களும் ஒருவராகவிருந்தார். 1983ம் ஆண்டு யூலை தமிழின அழிப்பைத் தொடர்ந்து கொழும்பு வெலிக்கடை, போகம்பர சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட போராளிகளில் அழிக்கப்பட்டவர்கள்போக மீதிப் போராளிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டிருந்தனர். 1983.09.23 ம் நாள் அன்று தமிழ் மக்களின் ஒத்துழைப்புடன் சிறை உடைக்கப்பட்டு போராளிகள் வெளியேறியிருந்தனர். இவர்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் அரசியல் கைதியான நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் தப்பிப்போக முடியாத நிலையில் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். . நிர்மலா நித்தியானந்தன் அவர்களை சிறையிலிருந்து மீட்கும் ஒரு நடவடிக்கையை விடுதலைப் புலிகள் திட்டமிட்டபோது மேஜர் டேவிட் அவர்களும் ஒருவராக களமிறங்கினார். இது மட்டக்களப்பில் இவருடைய முதல் நடவடிக்கையாக இருந்தது. இந்த நடவடிக்கையில் மேஜர் பிரான்சிஸ் அவர்களும் முக்கியமானவராக இருந்தார். 1984. 06.10ம் நாள் அன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்த நடவடிக்கையில் நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டார். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களிலிருந்து முதல் பாசறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20 போராளிகளில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு போராளிகளும் அடங்கியிருந்தனர். இவர்களில் மேஜர். டேவிட் ஒருவராகவும், லெப். சைமன், லெப். ஜோசெப் , 2வது லெப். நிசாம் போன்றவர்களும் உட்பட்டிருந்தனர். போராளி ஒருவர் உருவாகும் விதம், போராளியாக மக்கள் மத்தியில் அறிமுகமாகும்போது மக்களால் மதிக்கப்படும்விதம், என்பவற்றில் மேஜர். டேவிட் பொருத்தமானவராக தென்பட்டார். இவருடைய பக்குவமான போராளி வாழ்க்கையால் தேசியத்தலைவரால் அம்பாறை மாவட்டத்தின் முதல் பொறுப்பாளராகவும், முதல் தளபதியாகவும் நியமனம் பெற்று செயல்பட்டார். கிழக்கின் மூத்த போராளிகளில் ஒருவரான இவருடைய போராளி வாழ்க்கையில் கஞ்சிக்குடியாறு ஊரை அண்டியுள்ள காட்டுப்பகுதி மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பிட்ட சில போராளிகளுடன் இக் காட்டுப்பகுதியில் முகாம் அமைத்து வாழ்ந்த இவரையும், போராளிகளையும் அவ்வூர்களிலுள்ள மக்கள் விசுவாசத்துடன் நேசித்ததையும் அவதானிக்க முடிந்தது. 1983ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியான நாவற்கேணி ஊரிலும், வந்தாறுமூலையிலும், ஆரையம்பதியிலும் போராளிகள் தங்கியிருந்தனர். இவர்களினால் இம்மாவட்டத்தில்1984. 09.22 ம் நாள் அன்று மேற்கொள்ளப்பட்ட முதல் சிங்கள காவல் நிலையத்தாக்குதலிலும் மேஜர்.டேவிட் பங்குபற்றியிருந்தார்.போராட்ட வரலாற்றில் முக்கியத்துவப் பதிவைப்பெற்ற களுவாஞ்சிக்குடி சிங்கள காவல்நிலையத் தாக்குதலில் பங்குபற்றியதன்மூலம் வரலாற்றுப் பதிவிலும் மேஜர். டேவிட் இடம்பெற்றிருந்தார். அளவான உயரம், நிமிர்ந்தநடை, கறுப்பு நிறத்தில் சுருளான தலை முடியைக்கொண்ட அமைதியான சுபாவம், பதட்டமில்லாமல் முடிவெடுக்கும் தன்மை என்பன அடங்கிய சிறந்த போராளியான மேஜர். டேவிட் சகபோராளிகள் உட்பட மக்கள் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார். ஒரு போராளியின் புனிதப் பயணம், கல்லும் ,முள்ளும் நிறைந்த கடினமானதுதான் ஆனால் உறுதி தளம்பாது, உண்மை வீரனாக மக்களுக்காக, மக்களோடு பயணிப்பது என்பதில் மேஜர். டேவிட் விதிவிலக்கானவராக இருக்கவில்லை. இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்திற்கான வரலாற்றில் வாழ்கின்ற இனங்களில் தமிழரின் சொந்த பூமியான இத்தீவில் வந்தேறு குடிகளான சிங்களவர்களைவிட பூர்வீகக் குடிகளாக தமிழர்கள் வாழ்ந்ததாக வரலாற்றுக்குறிப்புக்கள் சொல்லுகின்ற நிலையில் தற்பொழுது வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய தாயகமாகவும் சொந்த மண்ணாகவும் பேணப்படுகின்றன. இம் மாகாணங்கள், ஆட்சியிலுள்ள சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றபொழுது, விடுதலைக்கான போராட்டங்கள் நடப்பது இயற்கையான ஒன்றாகும்.இலங்கைத்தீவின் வரலாற்றை அறிந்துகொள்வதும், எமது தன்னாட்சி உரிமைக்கான நியாயங்களைத் தெரிந்துகொள்வதும் தமிழர்களாகிய எமக்கு அவசியமான ஒன்றாகும். மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட முதல் தாக்குதல் தளபதி லெப். பரமதேவாவின் வீரச்சாவைத் தொடர்ந்து, 1984ம் ஆண்டு இறுதிப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் படைத்துறைத்தளபதியாக அருணாவின் வரவு அமைந்திருந்தது. இதற்கு முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக யோகன் (பாதர்), பசிர் ஆகியோர் செயலாற்றியிருந்தனர். இக்காலகட்டங்களில் பெரும்பாலான தமிழ்மக்களின், அறிவாளர்களின் ஆதரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தது. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் தளபதி அருணா அவர்களினால் நிருவாகம் ஒழுங்குபடுத்தப்பட்டபோது. தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தளபதியாக மேஜர். டேவிட் அவர்களும், மாவட்ட அரசியல் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேஜர். டயஸ் அவர்களும், தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிருந்தன் மாஸ்டர் அவர்களும், 1987ம் ஆண்டு இறுதிப்பகுதியில் இவருக்கு பின் அம்பாறை மாவட்ட தளபதியாக பணியாற்றிய மேஜர். அன்ரனி தாக்குதல் தளபதியாகவும் பணியில் இருந்தனர். இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொலைத் தொடர்பு பணியும் ஆரம்பமானது. இதற்காக 48 என்ற குறியீட்டுடன் அம்பாறையிலும், 46 குறியீட்டுடன் மட்டக்களப்பிலும், 45 குறியீட்டுடன் மூதூரிலும், செயல்பட தொடங்கியது என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும் இம் மாவட்டங்களின் முதல் பயிற்சிப் பாசறை வந்தாறுமூலை ஊரை அண்டியுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஈரளக்குளம் மதிரையடி என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அருணா தளபதியாக பணியிலிருந்தவேளையில், தளபதி அருணாவின் தலைமையில் நடத்தப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல்நிலையத்தாக்குதல், அம்பாறை மாவட்ட தம்பட்டை இராணுவ வழிமறிப்புத் தாக்குதலிலும், மேஜர்.டேவிட் பங்குபற்றியிருந்தார். 1985 ஆண்டு சிங்கள ரோந்துப் படைக்கெதிரான தாக்குதல் தளபதி அருணாவின் வழிநடத்தலில் அம்பாறை மாவட்ட தளபதி டேவிட் அவர்களின் தலைமையில் நடந்தது. அக்காலத்தில் பாரிய தாக்குதலாகவும், சிங்களப் படைகளை அச்சமூட்டும் தாக்குதலாகவும் இது அமைந்திருந்தது. தளபதி சொர்ணம் அவர்களின் ஆர்.பி. ஜி உந்துகணைத்தாக்குதலில் கவாசவாகனம் தாக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில் பல படையினரும் அழிக்கப்பட்டனர். குறிப்பிட்ட சில மணித்தியாலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப் பகுதியை மீட்பதற்கு கடல் வழியைப் பயன்படுத்துமளவுக்கு சிங்களப்படை நெருக்கடியைச் சந்தித்த தாக்குதலாகும், போராளிகளின் உறுதியான போர் நடவடிக்கையைத் தெரியப்படுத்தும் தாக்குதலாகவும் அக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டன. இத் தாக்குதலில் போராளி நசார் அவர்களும், ஒரு ஆதரவாளரும் விழுப்புண்ணடைந்திருந்தனர். தம்பட்டைத் தாக்குதல் மட்-அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எழுச்சியை சிங்கள அரசுக்கும், சிங்களப் படைகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தன. தென் தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் மேஜர். டேவிட் ஒரு தூணாக செயல்பட்டார். அதுமட்டுமல்லாமல் இவரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் பின்னாளில் சிறந்து விளங்கினார்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் இலட்சியத்திற்கான பயணம் ஓர் தேசிய இனத்தின் எழுச்சியில் எழுந்த பேரலையாக அமைந்திருந்தன. இந்த நூற்றாண்டுகளில் உலகத்தில் நடத்தப்பட்ட நீதியான தேசிய விடுதலைப்போராட்டம் எமது தாய்மண்ணின் விடுதலைக்கான போராட்டமாகும். உலகம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நிலையில், ஒரு நாட்டில் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குகெதிராக மக்கள் கிளர்ந்தெழ துணை போகின்ற இந்நாடுகள் சிறுபான்மை இனமாக விடுதலைக்காகப் போராடுகின்ற தேசிய இனத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத்தவறுவது ஏன் ? என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. எந்த அணியையும் சாரா சொந்த மக்களின் பலத்துடன் அளப்பெரிய தற்கொடைகளைப் புரிந்து விடுதலைப்போர் நடத்திய விடுதலைப் புலிகள் தமிழீழத் தாய்மண்ணை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்து அதற்குத் தளபதிகளை நியமித்திருந்தனர். யாழ்ப்பாணம், வன்னிப் பெருநிலப்பரப்பு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு – அம்பாறை என வகுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கேணல்.கிட்டு, மாத்தையா, லெப். கேணல்.விக்டர், லெப்.கேணல்.சந்தோசம், லெப்.கேணல்.புலேந்திரன், அருணா, போன்றோருடன் அம்பாறை, மூதூர் போன்ற கோட்டங்களுக்கு முறையே மேஜர். டேவிட், மேஜர்.கணேஷ் ஆகியோரும் தளபதிகளாக பணிபுரிந்தனர். உணர்வோடு, உயர்ந்த இலட்சியத்திற்காக எமது தாய்மண்ணிலிருந்து எழுந்த தமிழ்த் தேசியத்தின் தலைவர் வழியில் முன்னிலையில் பின்தொடர்ந்த மேஜர்.டேவிட் போன்றவர்களின் உணர்வு, வீரம் என்றும் அளவிட முடியாதது. எதற்கும் அஞ்சாது எண்ணிக்கையில் குறைந்தளவு போராளிகளைத் தன்னுடன் இணைத்து சிங்களத்திற்கு எதிராக தாய்மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் பாதுகாப்புக்காகவும் போரிட்ட மேஜர். டேவிட் தென் தமிழீழத்தின் எழுந்த விடுதலைக்கான போராளிகளில் ஒருவராக வரலாற்றில் பதிவுசெயயப்பட்டுள்ளார். போராளி என்ற உணர்வுமயமான சொல்லுக்கு இணையாக வாழ்ந்த மேஜர். டேவிட் அம்பாறை மாவட்டத்தின் தொடக்கத்தின் ஆரம்பம் என்றும் குறிப்பிடமுடியும். வாழ்ந்தால் தலைநிமிர்ந்து வாழ்வோம் இல்லையேல் தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்வோம் என்று தன்மானத்துடன் களமாடி வீழ்ந்தவர்களில் மேஜர். டேவிட் அவர்களையும் இணைத்துக்கொள்வோம். 1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சுமார் 35 போராளிகளுடன் கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியிலிருந்து வெளியேறி வந்த மேஜர். டேவிட் குழுவினரைப் பார்த்தவுடன் மண்ணின் விடுதலைக்காக தங்களை இழந்து விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்மக்கள் தனி உரிமையுடன், தன்மான உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உறுதி ஒவ்வொரு போராளியின் முகத்திலும் தென்பட்டதைப் பார்க்கமுடிந்தது. அன்று ஒவ்வொரு போராளியிடமிருந்த அர்ப்பணிப்பு பின்பு இல்லாமல் போனதற்கு இம் மாவட்டங்களில் சுயநலமுள்ள உறுப்பினர்களின் வளர்ச்சி போராட்டத்தை அழிப்பதற்கு காரணமாகவிருந்தன. காலத்தால் அழியாத பதிவை மேஜர்.டேவிட் பெற்றுக்கொண்டதற்கு குறிப்பிட்ட காலப்போராளி வாழ்க்கையே காரணமாகும். ஒரு போராளிக்கு சாவில்தான் ஒய்வு என்பதற்கமைய வீரத்துடன் வாழ்ந்து போனவர்களில் ஒருவராகத்தான் மேஜர். டேவிட் அவர்களை கணிக்கமுடிகின்றது. 1990ம் ஆண்டு யூன் மாதம் 11ம் நாள் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் தாய்மண் நோக்கிய சிறிலங்கா படை நகர்வினை தடுத்து நிறுத்தும் தாக்குதல் வியூகத்தை வகுக்கும் நோக்கில், பொத்துவில் பாணமை சாலையில் அமைந்துள்ள லகுகல என்ற இடத்தில், பொத்துவில் வட்ட அரசியல் பொறுப்பாளர் லெப். பாருக் (முகமது ராபிக்) அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சிங்களப் படையினரின் பதுங்கித் தாக்குதலில் 1990. 06. 15ம் நாள் அன்று இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழத்தில் பல ஊர்களில் பல தாக்குதல்களில் பங்கு கொண்ட மேஜர். டேவிட் தான் பிறந்த மண்ணில் தனது விடுதலைக்கான இறுதிப்பயணத்தை முடித்துக்கொண்டார். லெப். பாருக் பொத்துவில் மண் ஈன்றெடுத்த இஸ்லாமியத் தமிழ் வீரன். உணர்வோடு எழுந்து , தமிழ் உறவோடு கலந்து உன்னத விடுதலைப் பயணத்தில் கால் பதித்தவன். தாய் மொழி ஒன்றாக, வெவ்வேறு மார்க்கங்களில் பயணித்தும் தாய் மொழிக்காக ஒன்றிணைந்து தாய் மொழியின் விடுதலையில் களமாடி தன்னை இழந்து தமிழ்மானம் காத்தவன். அன்பும், பண்பும் நிறைந்த அரசியல் போராளியாக பொத்துவில் மக்களுக்கு பணிபுரிந்து உறவுப் பாலமாக திகழ்ந்து உயிரிலும் மேலான விடுதலைக்காக வீழ்ந்தவன். இவன் வரலாறு என்றும் அழியாது. பொத்துவில் மண்ணின் காவிய நாயகர்களில் இவனும் ஒருவனாக உயர்ந்து நிற்கின்றான் மேஜர். டேவிட் உடன் களமாடி வீழ்ந்தவர்கள் மண்ணின் பெருமையை காத்துநிற்கின்றனர். எந்த மூலையிலும், எவ்வளவு ஆக்கிரமிப்புக்குள்ளும் வாழ்ந்த போதும், தமிழனின் பெருமையோடு வாழ்ந்த தலை சிறந்த போராளிகளை அம்பாறை மாவட்டம் பெற்றுக்கொண்டதற்கு மேஜர். டேவிட் போன்றவர்களின் தளபதி நிலையும், தளராத மனஉறுதியும் மானங்கெட்டு மண்டியிடாத தன்மையும் அளவுகோலாக இருந்தது. மேஜர் டேவிட் தளபதியாக இருந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் வீரச்சாவடைந்தவர்களான, பாண்டிருப்பை சேர்ந்த 2ம் லெப் கனெக்ஸ் (ஞானமுத்து பேன்ட் வேலன்), ராஜ்குமார் (நல்லதம்பி சந்திரதாஸ்). கல்முனையை சேர்ந்த விஸ்வம் (முத்துலிங்கம் கருணாநிதி) , ராஜேஸ் (இராசையா ஜெகநாதன்) ,நெல்சன் (சின்னதுரை உதயகுமார்), பரிசுத்தம் (கணபதிப்பிள்ளை அத்மராஜா), பன்னீர் (இரத்தினம் பன்னீச்செல்வம்),லெப். கமலன் (சிவசுந்தரம் இராசநாயகம்), லெப். விக்கிரம் (சண்முகம் முத்துராமன்). காரைதீவை சேர்ந்த நாதன் (இளையதம்பி பாக்கியராஜா), சுந்தர் (நல்லதம்பி சுந்தரலிங்கம்), அஜந்தன் (சீனித்தம்பி குணசிங்கம்), குரு (சீனித்தம்பி பத்மநாதன்), 2ம் லெப் கல்கி (சாமித்தம்பி குகநாதன்), சுமன் (துரைராஜா ஜெயக்குமார்), திருமால் (வெள்ளைக்குட்டி துரையன்), நந்தன் (செ. குலசிங்கம்). வீரமுனையை சேர்ந்த கோபு (சண்முகம் இளங்கோ) மத்திய முகாமைச் சேர்ந்த மணி (இளையதம்பி மாசிலாமணி) அக்கரைப்பற்றைச் சேர்ந்த கப்டன்.பாருக் (அகமது லெவ்வை முகமது கனிபா), ரவி (தேவராசா), 2ம் லெப் ரமேஸ் (சி, லோகநாதன்), சந்திரன் (இ.சந்திரன்) பனங்காடுவை சேர்ந்த சுதர்சன் (ஐயம்பெருமாள் கருணாகரன்), தம்பிலுவில்லைச் ரவிக்குமார் (ம. புண்ணியமுர்த்தி), பவான் (கிருஷ்ணபிள்ளை சுவேந்திரராஜா), நிலம் (மயில்வாகனம் சிவகுமார்), லெப் வன்னி (வேலுப்பிள்ளை வன்னியசிங்கம்). திருக்கோயிலைச் சேர்ந்த தவம் (ஜெயரத்தினம் தவராஜா), விஜயன் (தம்பிராஜா முத்துலிங்கம்), ரகு (செல்லத்தம்பி யோகராஜா), ரோனி ஐயர் (வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை). தாண்டியடியைச் சேர்ந்த அசோக் (தம்பியப்பா சித்திரவேல்) பொத்துவில்லைச்சேர்ந்த கப்டன்நகுலன் (இளையதம்பி அருளானந்தம்) ஆகியோரையும் எமது தமிழினமும், எமது தாய்மண்ணும் வரலாற்றில் பெற்றுக்கொண்டது. இவர்களைப் போன்று எமது மண்ணில் வாழ்வது தொடர்ந்தால்தான் எமது உரிமையை நாம் பெற்றுக்கொள்ள முடியும். சுயநலம் அகன்று, தமிழ் நலன் ஒன்றே வாழ் நலமாக இருக்கின்றபோது எமது வரலாறு காட்டிய வழியில் இலட்சியத்தை வெல்லும்வரை ஓயாது தொடரமுடியும். காலவோட்டத்தில் தமிழ்மக்களின் பதிலில் ……………… தமிழ்காந் https://www.meenagam.com/தமிழர்கள்-தலைநிமிர்ந்து/
-
உயர்சாதி அரசியல் - சுப. சோமசுந்தரம்
சரியான கருத்து.👍🏾 ஆனால் வலதுசாரி பா.ஜ.க. மோடியை ஒரு மதத்தலைவர் போன்று காண்பித்து, இந்துத்துவத்தை நிறுவனமயப்படுத்தி, இந்தியாவில் பிளவுபட்ட சமூகங்களை மேலும் பிளவுபடுத்தும். இந்திய மக்கள் மதத்தலைவர், சாமியார் போன்ற தோற்றப்பாட்டைக் காட்டுபவர்கள் தவறுகள் புரிந்தாலும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பதால், மோடியும் பரிவாரங்களும் எப்படியும் தமிழ்நாட்டிலும் காலூன்றி, வலதுசாரி சிந்தனையை ஒரு பகுதி மக்களுக்கு ஊட்டிவிடுவார்கள். இதனை சமத்துவ சமூகக்கொள்கையில் அக்கறை உள்ளோர் எதிர்கொண்டு முறியடிக்கவேண்டும்.
-
சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்!
இந்தோனேசியாவிலிருந்து படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவரால் பணிக்கப்பட்டிருந்தது. இந்தோனேசியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பிலிருந்த போராளிகளுக்கு பணிக்கப்பட்டிருந்தது அதற்கமைவாக மாவீரரான லெப்.கேணல் வெற்றியரசன்( ஸ்ரிபன்) அவர்கள் தலைமையிலான கப்பல் ஒருபடகையும் மேஐர் நிர்மலன் தலைமையிலான கப்பல் இன்னொருபடகையும் என பொறுப்பெடுத்தது அதன்படி லெப்.கேணல் ரஞ்சன் தலைமையிலான கப்பலின் இழப்பிற்க்குப் பின் நடக்கும் முதல் விநியோகம் என்பதால் மிகவும் அவதானத்துடன் இந் நடவடிக்கை இடம்பெற்றது .இந்நடவடிக்கையானது ஸ்ரிபன் தான் கொண்டு செல்லும் படகை கரையிலிருந்து இருநூற்றம்பது மையிலில் தூரத்தில் வைத்து நிர்மலனிடம் கொடுக்க நிர்மலன் அந்த இருபடகுகளையும் முல்லைத்தீவு கடலிலிருந்து இருநூறு கடல்மைல் தூரத்தில் அப்படகுகளை விட அப்படகுகள் கடற்புலிகளின் கடற்சண்டைப்படகுகளின் துணையுடன் அப்படகுகள் தமிழீழத்தை வந்தடையும் இதுவே திட்டமாகும்.திட்டத்திற்கமைவாக முதலாவதாக நிர்மலனின் கப்பல் படகுகளை விடவேண்டிய இடத்திற்க்குப் தனது படகுடன் புறப்பட அதன் பின் இரண்டாவது நாள் ஸ்ரிபனது கப்பல் தனது படகுடன் புறப்பட்டது .புறப்பட்ட அன்றிரவு மூன்று கப்பல்கள் சுமார் நான்கு கடல்மைலகள் தூரத்தில் கிடையாக வேகமாக சென்றதை ஸ்ரிபனது கப்பலிலிருந்தவர்கள் ராடர் மூலமாக கண்காணித்தனர். இருந்தாலும் இரவென்பதாலும் கப்பல்களின் போக்குவரத்துப் பாதையென்பதாலும் இவர்கள் அக்கப்பல்களைக் கருத்திலெடுக்காமல் தங்களது பயனத்தைத் தொடர்ந்தனர்.14.06.2003அன்று அதிகாலை கடற்படைக்கப்பல்கள் நிர்மலனின் கப்பலை வழிமறிக்க இத்தகவல்களை உடனடியாக ஸ்ரிபனுக்கு நிர்மலன் கூற ஸ்ரிபன் தனது கப்பலை சர்வதேச கப்பல் பாதையில் சென்றார்.நிர்மலனது கப்பல் கூட்டி வந்த படகில் லெப்.கேணல் தென்னவனுடன் இன்னொரு போராளியும் உடனிருந்தார் . இவ் இக்கட்டான சூழலில் நிர்மலனின் கப்பலிலிருந்த லெப் கேணல் வீரமனி கப்பலிலிருந்து படகை கட்டியிளுத்து வந்த கயிற்றை வெட்டி இம்முற்றுகையிலிருந்து தப்புமாறு பணித்தான் .படகில் முற்றுகையை விட்டுத் தப்ப முயற்சித்தபோதும் கடற்படைக்கப்பல்கள் விடவில்லை இருந்தாலும் ஒருகட்டத்தில் கடற்படைக் கப்பலை மோதுவதைப்போல படகிலிருந்தவர்கள் முயற்சித்தபோது கடற்படைக்கப்பல்கள் விலகின அம் முற்றுகையிலிருந்து படகும் வெளியேறியது .அந்நேரம் சமாதானச் சூழல் என்பதால் இவர்களை மீட்கப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது .ஒருகட்டத்தில் கப்பலிலிருந்தவர்களுடன் தொடர்பிலிருந்த தென்னவன் கப்பலுக்கு வரவா எனக் கேட்க கப்பலுக்கு கட்ற்படைகப்பல்கள் தாக்குதல் மேற் கொள்கின்றன வரவேண்டாம் நீங்கள் தப்புங்கோ என்றவுடன் கப்பலிலிருந்தவர்களுடன் படகிலிருந்தவர்களின் தொடர்பும் துண்டிக்கப் படுகிறது.பேச்சுவார்த்தைகள் பயனின்றிப் போக நீண்ட கடலனுபவம் கொண்ட போரளிகள் பதினொருவரும் நாட்டுப்பற்றாளர் ஒருவருமாக கடலிலே காவியமானார்கள்.லெப் கேணல் தென்னவனின் படகு அன்றிரவு ஸ்ரிபனின் கப்பலால் மீட்கப்படுகிறது. இந்நடவடிக்கையில் செவ்வனவே பங்காற்றி வெவ்வேறு சம்பவங்களில் கடலிலே காவியமான. லெப் கேணல் ஸ்ரிபன் வீரச்சாவு .17.09.2006 லெப் கேணல் தென்னவன். வீரச்சாவு .28.02.2007 எழுத்துருவாக்கம்..சு.குணா. https://www.thaarakam.com/news/8faf5982-2895-4087-804d-ce2183a9cc5e
-
சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்!
சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்! 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய கப்பல் கப்டன் நிர்மலன், சீவ் ஒவிசர் கதிர், 2ம் ஒவிசர் வீரமணி, 3ம் ஒவிசர் கன்னியநாடன், றேடியோ ஓவிசர் கஜேந்திரன், சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன், 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன், 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால், எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன், போஸன் கடற்கரும்புலி மணியரசன், ஏபிள் சீமன் செழியன், நாட்டுப்பற்றாளர் மோகன் ஆகிய ஆழக் கடலோடிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் .! எம்.ரி சொய்சின் கப்பலில் தரணிமுழுவதும் கடலில் மேவி தமிழீழ விடியலை எண்ணி விழிமூடிய மாவீரர்கள்.! https://www.thaarakam.com/news/8f44676e-ffa0-48a0-95c2-482b931bebe1
-
நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலும்! – லெப்.கேணல் றெஜித்தனும்!
நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலும்! – லெப்.கேணல் றெஜித்தனும்! லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது என்று விரும்பினோம். சிலவேளை றெஜித்தன் அண்ணா எங்களை மறந்திருக்கலாமென்று ஒருவன் சொன்னான். ஆனால் அவர் அப்படிப்பட்டவரில்லை. செய்திக்காக நாம் காத்திருப்போமென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே இப்படியொரு செய்தியைச் சொல்வேன் எனச் சொல்லிவிட்டுத்தான் முன்னுக்குச் சென்றிருந்தார். அன்றிரவு முழுவதும் கடும்மழை பொழிந்துகொண்டிருந்தது. உள்ளேபோனவர்கள் படக்கூடியபாடுகளை நினைத்துக் கொண்டோம். மழைகாரணமாகவும் திட்டத்தில் ஏதும் பிசகு நடந்திருக்குமோ, எல்லாம் சரியாக நடந்தாலும் நாளைக் காலையில் நாம் எதிர்பார்த்தபடி எதிரி நடந்துகொள்வானோ, நாளைக் காலையும் மழைபெய்தால் என்ன நடக்கும்? என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தபோது றெஜித்தன் அண்ணாவிடமிருந்து தகவல் வந்தது. ‘படுங்கோ. விடிய வந்து கதைக்கிறன்’ என்பதாக அத்தகவல் இருந்தது. ஏதோ பிசகு நடந்துவிட்டதென்று விளங்கியது. நாங்கள் இப்போது நிற்பது வடமராட்சியின் செம்பியன்பற்றுப் பகுதியில். எமது தளத்திலிருந்து ஒரு தாக்குதல் நடவடிக்கைக்காகச் சென்ற அணியினர் சரியாகப் போய்ச்சேர்ந்தனரா என்ற தகவலைத்தான் எதிர்பார்த்திருந்தோம். அதிகாலையில்தான் தெரிந்தது, போனவர்கள் அனைவரும் திரும்பவும் வந்துவிட்டார்களென்பது. அதுவொரு பதுங்கித் தாக்குதல் திட்டம். நாகர்கோவில் முன்னணிக் காப்பரண் வரிசையிலிருக்கும் இராணுவத்தினர் காலைநேரத்தில் காப்பரண் வரிசைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. காலை ஆறுமணிக்கு ரோந்து அணி காப்பரண் வரிசையிலிருந்து புறப்பட்டு நகரத் தொடங்கும். அந்த அணி மீது எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வைத்துத் தாக்குதல் நடத்துவதுதான் எமது திட்டம். தாக்குதல் திட்டம் மிகச்சிறியளவில்தான் தொடங்கப்பட்டது. பின்னர் பெரிதாகிப் பெரிதாகி இறுதியில் தலைவரே நேரடியாகக் கவனமெடுத்து நடத்தும் ஒரு தாக்குதலாக வந்துவிட்டது. இந்த ரோந்து அணி மீதான தாக்குதல் தனியே கண்ணிவெடித் தாக்குதலாகவும், அதன்பின்னர் தேவைக்கேற்ப எறிகணைவீச்சுத் தாக்குதலாகவும் தீர்மானிக்கப்பட்டது. நேரடியான ஆயுதச்சண்டையில் எமது அணியினர் ஈடுபடுவதில்லை என்று திட்டமிடப்பட்டது. எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும் வெளியேறுவதும் நீரேரி – கண்டல்காடு வழியாகவே. உண்மையில் இந்த நீரேரி-கண்டல்காடு என்பது இரு தரப்புக்கும் பெரிய சாதக பாதகங்களைக் கொண்டிருந்தது. இருதரப்புமே மற்றப் பகுதிக்குள் இலகுவாக ஊடுருவ இந்தக் கண்டல்காடு உதவியாகவிருந்தது. இப்போது எமது அணியினரும் இக்கண்டல்காடு வழியாக ஊடுருவி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு உடனடியாகவே தளம் திரும்பிவிடுவர். இருவர் மட்டுமே அங்கே தங்கியிருந்து தாக்குதலைச் செய்யவேண்டும். எறிகணைகளுக்கான திருத்தங்களையும் களநிலைமையையும் அவர்களே கட்டளைப்பீடத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இருட்டியபின்னர் வெளியேறித் தளம் திரும்ப வேண்டும். இந்தப் பதுங்கித் தாக்குதலுக்குப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்ட கண்ணிவெடி ‘இராகவன் கண்ணிவெடி’. என் அறிவுக்கெட்டியவரையில் முதன்முதலில் பதுங்கித் தாக்குதலுக்கு இக்கண்ணிவெடியைப் பயன்படுத்தியது இத்தாக்குதலுக்கே ஆகும். ‘இராகவன்’ என்ற இக்கண்ணிவெடி இயக்கத் தயாரிப்பு. சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதியாகவிருந்து ஓயாத அலைகள்-3 இல் வீரச்சாவடைந்த லெப்.கேணல் இராகவனின் நினைவாக இக்கண்ணிவெடிக்குப் பெயர் சூட்டப்பட்டது. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று. எதிரியின் பகுதிக்குள் ஊடுருவி இக்கண்ணிவெடியைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென்பது இலகுவான காரியமன்று. சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய இக்கண்ணிவெடி ஐம்பதாயிரம் சிதறுதுண்டுகளைக் கொண்டது. வழமையான கிளைமோர்கள் போலன்றி 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் உரல் போன்ற வடிவிலும் அளவிலும் இருக்கும் இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று. ஆனால் நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலுக்கு இராகவன் கண்ணிவெடியைப் பயன்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டபோது முதலில் ‘இதென்ன விசர்வேலை?’ என்றுதான் தோன்றியது. ஆனால் அகிலன் வெட்டையில் நடந்த இராகவன் பரிசோதனை வெடிப்புக்குப் போன எல்லோருக்குமே அக்கண்ணிவெடி மீது ஒரு விருப்பு இருந்தது. அதுஏற்படுத்தும் தாக்கம், சேதம், சத்தம் என்பவற்றை அறிந்தவர்கள், அதைக் கொண்டு எப்படியாவது எதிரிமீது ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டுமென்ற அவாவைக் கொண்டிருந்தார்கள். இங்கும் தாக்குதலைச் செய்யவென ஒழுங்கமைக்கப்பட்ட அணியினர் ஏற்கனவே இராகவன் கண்ணிவெடிப் பரிசோதனைக்கு வந்திருந்தவர்கள். இதுவொரு மிகக்கடினமான பணியென்பதைத் தெரிந்தும் அவர்கள் இராகவனைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென முடிவெடுத்தார்கள். இப்போது தாக்குதலை நடத்துவதற்கென ஒழுங்கமைப்பட்ட அணியானது கரும்புலிகளுக்கான வேவு அணியே. ஐவரைக் கொண்ட இவ்வணி இரவோடிரவாக நகர்ந்து கண்ணிவெடியை உரியவிடத்தில் நிலைப்படுத்திவிட்டு மூவர் உடனேயே திரும்பிவந்துவிட இருவர் மட்டும் தம்மை நிலைப்படுத்திக் கொண்டுவிட வேண்டும். திட்டத்திலே நேரம் மிகமிக முக்கியமானதாக இருந்தது. இருளத் தொடங்கியதும் எமது தளத்திலிருந்து புறப்பட்டால், அதிகாலை நான்குமணிக்கும் மீளவும் எமது தளத்துக்கு அந்த மூவரும் திரும்பிவிடவேண்டும். இடையிலே நீருக்குள்ளால், பற்றைகளுக்குள்ளால் நகர்வது, அதுவும் அந்த உருப்படியைக் கொண்டு நகர்வதென்பது இலகுவான செயலன்று. இவையெல்லாம் கவனத்திலெடுக்கப்பட்டு பயிற்சிகள் தொடங்கின. அந்நேரத்தில் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்பு அணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மேலாளர் றெஜித்தன் அண்ணாவின் மேற்பார்வையிலேயே இத்தாக்குதலும், அதற்கான பயிற்சிகள் உட்பட ஏனைய நிர்வாக வேலைகளும் விடப்பட்டிருந்தன. ஏற்கனவே வெடிபொருள், கண்ணிவெடிப் பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும் இது தாக்குதலணிக்குப் புதியது. மின்கம்பி வழியில்லாமல் தொலைக் கட்டுப்பாட்டு முறைமூலமாக தாக்குதலை நடத்தப்போவதால் அக்கருவிகள் தொடர்பிலும் மேலதிகப் பயிற்சிகள் பெறவேண்டியிருந்தது. இராகவன் கண்ணிவெடி, தொலைக்கட்டுப்பாட்டு வெடித்தற் பொறிமுறை என்பவற்றைக் கற்பிக்கவும் பயிற்றுவிக்கவும் கேணல் ராயு அண்ணையிடமிருந்து ஒருவர் வந்திருந்தார். தாக்குதலுக்கான நாள் குறிக்கப்படவில்லை; ஆனால் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போதைய யுத்தச் சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்வதும் முக்கியம். எல்லாவிடத்திலும் போர் மந்தமடைந்திருந்தது. அவ்வாண்டின் ஏப்ரலில் நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் எந்தப் பெரிய சண்டையும் நடைபெறவில்லை. ஆங்காங்கே பதுங்கித் தாக்குதல்கள் மட்டும் எப்போதாவது நடந்துகொண்டிருக்கும். முன்னணிக் காப்பரணில் பதுங்கிச் சுடுவதும், இடையிடையே எறிகணை வீசிக்கொள்வதுமென்றுதான் களமுனை மந்தமாக நகர்ந்து கொண்டிருந்தது. வன்னியின் மறுமுனையில் மணலாறு, வவுனியா, மன்னார் முனைகளிலும் எல்லாமே அமைதியாக இருந்தது. ஆனால் ஆள ஊடுருவும் அணிகள் இருதரப்பிலும் மாறிமாறி ஊடுருவித் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் நாகர்கோவில் பகுதியில் இப்படியொரு பதுங்கித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஜூலை மாசத்தின் நடுப்பகுதியிலிருந்து எமது பயிற்சிகள் தொடங்கியிருந்தன. தாக்குதல் நடத்துவதற்கான நாள் குறிக்கப்படாமல் பயிற்சி மட்டும் நகர்ந்துகொண்டிருந்தது. ‘எப்ப அடிக்கப் போறியள்? ஏதாவது பிரச்சினையெண்டா சொல்லுங்கோ’ என்று தலைவரும் இரண்டு மூன்றுதரம் கேட்டாலும் தாக்குதல் நடக்கவில்லை. ஏன் இழுபட்டுக்கொண்டிருந்தது என்று சரியாக நினைவில்லை. நாளை மறுநாள் தாக்குதல் நடத்துவது என்று நாம் தீர்மானித்து, நாளைக்கு இரவு அணி நகர்வதற்குரிய இறுதித் தயார்ப்படுத்தல்களை முடித்து நித்திரைகொண்டு எழும்பினால் யாரோ வேறொரு முனையில் தாக்குதலைத் தொடங்கியிருந்தார்கள். ஆம்! அது 24/07/2001 அதிகாலை. சிறிலங்காவின் தலைநகரில் தாக்குதல் தொடங்கிவிட்டிருந்தது. கட்டுநாயக்கா விமானத்தளம் எரிந்துகொண்டிருந்தது. உண்மையில் அதேநாளில் எமது தாக்குதலும் நடந்திருக்க வேண்டுமென்பது தலைவரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால் சரியான ஆயத்தமற்ற நிலையில் எம்மை அவசரப்படுத்தக்கூடாதென்பதற்காக விட்டிருக்கலாம். இப்போது எமது நிலை சற்றுச் சங்கடமாகப் போய்விட்டது. இன்றிரவு நகர்வதா இல்லையா என்பது முடிவில்லை. சிறப்புத் தளபதியிடமிருந்து மதியமளவில் செய்தி வந்தது இன்றிரவு நகரவேண்டாமென்று. அன்று முழுவதும் கட்டுநாயாக்காத் தாக்குதல் செய்திகளோடு எமது பொழுது போனது. எமது தரைக்கரும்புலிகள் அணியிலிருந்தும் கரும்புலிகள் சிலர் கட்டுநாயக்காத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 27 ஆம் திகதி இரவு நகர்வதென்றும் 28 ஆம் திகதி காலை தாக்குதல் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க எமது அணி அன்றிரவு ஊடுருவியது. தாக்குதலணியை வழிநடத்தவும், மறுநாள் கண்ணிவெடித்தாக்குதல், எறிகணைத் தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவுமென றெஜித்தன் அண்ணா நாகர்கோவில் பகுதிக்கு நகர்ந்திருந்தார். உள்நுழைந்த அணி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு இருவரை விட்டுவிட்டு மிகுதி மூவரும் திரும்பிவந்துவிட்டால் எமக்குத் தகவல் தருவதாகச் சொல்லிவிட்டுத்தான் றெஜித்தன் அண்ணா போயிருந்தார். அவரிடமிருந்து வந்த தகவல், எமது திட்டம் சரிவரவில்லை என்பதை உணர்த்தியது. காலை ஆறுமணிக்கெல்லாம் றெஜித்தன் அண்ணா எமது இடத்துக்கு வந்துவிட்டார். என்ன சிக்கல் நடந்ததென்று கேட்டறிந்து கொண்டோம். சிக்கலை இன்றே நிவர்த்திசெய்து இன்றிரவே மீள ஊடுருவ வேண்டுமென்பது அவரின் திட்டமாக இருந்தது. அன்றையநாள் எனக்கு அலைச்சலாக அமைந்தது. -இளந்தீரன்- https://www.thaarakam.com/news/40ef8f9e-2053-485e-ac67-614a1ea7e065
-
தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். லெப். கேணல் டேவிட்
தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். லெப். கேணல் டேவிட் கடலில் கலந்த கவிதை…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம் தாயகத்தின், தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டன. எமது விடுதலைப் போராட்டத்தில், கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின், அதே அளவு இடத்தை, எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான். அவனது இளமையிலேயே கடல் அவனை அழைத்தது. அவனது குடும்ப நிலை அவனை கடலுக்கு அனுப்பியது. “இயக்கம் கடலில் பிரயாணம் செய்ய வேண்டி வரும்” என்ற காலம் போய், “இயக்கத்தின் பிரயாணம் கடலில் தான்” என்று வந்துவிட்ட 1983-ல் இயக்கத்திற்காய் கடலில் இறங்கினான். தமிழீழத்தின் ஒவ்வொரு கரையிலும் கால் பதித்தான். நீண்ட பெரும் கடற்பரப்பு, கடற்பரப்பில் புள்ளியாய் நகரும் படகு, படகினைப் போல் பல்மடங்கு விரிந்து, எழுந்து, விழுங்க வரும் அலைகள், சமுத்திர ராட்சதனின் அலைவாய் மூடமுதல், விரைந்து, தத்திப் பாய்ந்து, வெளியேறி, திரும்பிப்பார்க்கும் லாவசம். திரும்பிய பார்வை நேரே நோக்க அடுத்த பெரும் அலை. படகினை பல்மடங்கு வேகத்துடன் துரத்தி, தீ உமிழும் பீரங்கி வாய்கள், அவற்றின் பல்முக நகர்வுகளிலும் தப்பி, தத்திச் செல்லும் வேகம், பின்னால் வரும் எதிரியின் கை அதிகமாய் நெருங்கின், நின்று – நிதானித்து இயந்திரத் துப்பாக்கியை இயக்க ஆணையிடும் உறுதி, அந்தக் கணத்தில் எதிரி அடையும் அதிர்ச்சி டேவிட்டை பல தடவைகள் கரை சேர்த்துள்ளது. அவனது கடற்பயணங்கள் மெய்சிலிர்க்கும் பல அனுபவங்களைக் கொண்டது. அவனது ஆசான்களும், நல்ல நண்பர்களும் கடலிலேயே கலந்து விட்டனர். அப்போதெல்லாம் கூட, அவன் கடலில் நிலைத்து நின்றான். அவனது தப்பியோடும் வாலகமும், தேவையின் போது எதிர்த்து நின்று எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுமே அவனை நிற்க வைத்தது. இன்று இயக்கத்தின் வசமுள்ள பெருமளவு ஆயுதங்களுக்கு டேவிட்டை தெரியும். ஆம்! ஆவை எமது கைகளுக்க கிடைப்பதற்கிடையில் டேவிட் இருந்திருப்பான். அநேகமாக எப்போதுமே நாம் கரையில் காணும் டேவிட்டைக் கடலில் சந்திக்க முடியாது. ஒருங்கிணைந்த சிந்தனையுடன், தன்னை நம்பி படகில் ஏறிய “நீந்தத் தெரியாத சுமைகளுக்கு” உத்தரவிடும் டேவிட், கடுமையான வசைகளால் ஓட்டிமாரை கட்டுப்படுத்தும் மாலுமி. கடலில் டேவிட்டை, டேவிட்டாக பார்ப்பது கடினம். எப்போதாவது மிக அபூர்வமாக, சீரான, நேவியில்லாத ஒதுக்குப்புறபடகில், நல்ல நிலவும் சேர்ந்தால் அவனது படகு நிற்கும். இயந்திரச் சத்தத்தை மேவி அவன் குரல் ஒலிக்கும். “கடல் மேல் பிறக்க வைத்தான்…” அவனது குரல் இனிய சங்கீதம் இல்லைதான். ஆனாலும் அவன் பாடினால் நின்று, நிதானித்துக் கேட்கவைக்கும் வசீகரம். அந்த வசீகரம் அவனது குரலுக்கா? அல்லது அவன் பாடும் பாடல்களுக்கா? அவனது குரலில்; பாடல் கம்பீரம் பெறுவது தெரியும். அந்தக் குரலுக்கு, அவன் தெரிவு செய்யும் பாடல்களை விட, வேறுபாடல் எடுபடாதென்பதும் புரியும். அவனைத் தெரிந்த, அவனுடன் பழகாத எல்லோராலும் கூறப்படும், எண்ணப்படும், எண்ண வடிவங்களுக்கு அப்பாற்பட்ட போராளி. அநேக போராளிகளைப் போல் அவனுக்கும் “பழஞ்சோறு குழைத்துக் கையில் கொடுக்கும் அம்மா” “ஆமியின் வெடி கேட்டும் சிறுபற்றை சரசரக்காமல் தேத்தண்ணிச் செம்புடன் அண்ணனை, அண்ணனின் தோழர்களை தேடும் தங்கைகள்”. வீட்டின் நிலையை எண்ணுவதா? நாடா? என்ற கேள்விக்கு எப்போதுமே குழப்பமில்லாத பதிலைத் தன் வசம் வைத்திருந்த போராளி. மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் “தங்கச்சியவை” என்று கூறிக் கண்கலங்கும் அண்ணன். எப்பேற்பட்ட வேலையாக இருந்தாலும் அவ் வேலையின் முக்கியத்துவம் விளங்கவைக்கப்பட்டால், அந்த வேலையை செய்து முடிக்கும் வரை அவன் ஓய்வது அபூர்வம். அவனது நினைவுகள் மீட்டப்படும் போது திரும்ப திரும்ப அவனது அக்குணநலனே எவருக்கும் முன்நிற்கும். தமிழீழத்தின் கடற்பரப்பில் மட்டுமல்ல, தமிழீழத்தின் தரைப் போர் வாழ்க்கையிலும் அவன் சாதித்தவை அதிகம். அதிலும் வடமராட்சியில் நடைபெற்ற அநேகமான சண்டைகளில் அவனது சுவடுகள் பதிந்திருந்தன. இந்திய இராணுவத்திற்கு முந்திய போர் வாழ்வில், ஒப்பிரேசன் லிபரேசனுக்கு முன்பும் பின்பும் வடமராட்சியில் அவன் பங்கு அதிகம். ஒப்பிரேசன் லிபரேசனுக்கென ஆமி புறப்பட்டதிலிருந்து, நெல்லியடி முகாமிற்குள் மில்லர் புகுந்தது வரை அவன் ஓயவில்லை. இந்திய இராணுவ யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழ் நாட்டில் தங்கியிருந்தவன். யுத்தம் ஆரம்பித்து, கொழுந்துவிட்ட நேரத்தில் தள்ளியிருக்க முடியாமல், ஒரு கட்டுமரத்தில் வந்து சேர்ந்தான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சியில் இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்ததில், அவன் பங்கு மிகப் பெரியது. அனேகமாக இயக்கத்தை எல்லாத் துறைகளிலும் தனது முத்திரை பதித்தவன். அரசியல்? அவன் அரசியல் வித்தகன் இல்லைதான் எனினும், தான் ஏந்திய துப்பாக்கி எதற்காக என்பதில் குழப்பமில்லாதவன். மக்களுடன் பழகும் போதினில் அந்த மக்களில் ஒருவனாக நின்று சிந்திக்கத் தெரிந்தவன். எல்லாத் தலைமறைவுக்கால வாழ்க்கையிலும், மக்களால் பாதுகாக்கப்பட்டவன். டேவிட் நின்றால் ஆமி பார்த்துச் சொல்லவதற்கென ஒரு முதியோர் படையே திரளும். அவன் உலவும் ஊர்களில் சிறுகுழந்தைக்கும் அறிமுகமாகிவிடும் முகராசி. சிறுவர்களை ஒருதடவை சந்தித்தால், மறுதடவை சந்திக்கும் போது அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் நட்புணர்வு அல்லது அவர்கள் வெட்கத்தில் முகம் சிவக்க இவன் ஒரு பெயர் வைத்திருப்பான். சிறுவர்கள் என்றல்ல எவருடனுமே நட்பைப் பேணுவதில் தனித்துவமானவன், பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் தனியான ஆர்வமுள்ளவன். எப்போதோ ஒருமுறை “வண்டி விட்ட கரையில்” லாம்பு வெளிச்சத்தில் சாப்பாடு கொடுத்தவரை யாழ்ப்பாணத்தில் கண்டு “என்னைத் தெரியேல்லையே, களுவன்கேணியில் றால் கறியோடை புட்டுச் சாப்பிட்ட நாங்கள் எல்லே” என்று கேட்டு அசத்துவான். பழைய நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், மறந்துவிட்ட, திருப்பக் கிடைக்காத, நினைவுகளை மீட்டுவது டேவிட் தான். இவனது நட்பைப் பேணும் பண்பால் பலராலும் விரும்பப்பட்டவன். சில வேளைகளில் வேலை நேரங்களிலும் “நட்பைப் பேணப் போய்” வாங்கிக்கட்டிக் கொண்டு தலையைச் சொறிவான். இயக்கம் மிக அரிதாகச் சந்தித்த “எல்லா வேலைகளிலும் வல்லுனர்களாக விளங்கக்கூடிய” சிலரில் டேவிட் ஒருவன். ஆனால் கடல் என்பது ‘பெரிய கடலாக’ இருந்தது. அதில் இயக்கத்தின் கடற்பிரிவு மிகச் சிறியதாக இருந்ததால் அவனால் கடலை விட்டுவிட்டு வர முடியவில்லை. அவனது குறைந்த பாடசாலைக் கல்வியின் போதும் கூட பெரிய திட்டமிடல் திறன் இருந்தது. அது புரிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அவனது எதிர்பார்ப்புக்களுக்கெல்லாம் அவனுக்கு களம் கிடைக்கவில்லை. கடல் அவனை மறித்து வைத்திருந்தது. அது ஒரு முக்கிய கடற்பயணம், தேவை பெரியது, டேவிட் தேவையான ஒழுங்குகளை வழமைபோல் சரிபார்க்கிறான். கடல் தெரிந்தவர்கள் கடலில் ஓடத்தயங்கும் காலநிலை. ஆனாலும் பிரயாணம் அவசியமானதானவும், ஒத்திவைக்க முடியாததாகவும் இருந்தது. கடலைத் தவிர எல்லாமே வழமைபோலத்தான். வழமையான தடபுடல்இ வேகமான பிக்கப்……, பெரிய நம்பிக்கை விதையை டேவிட் நெஞ்சில் விதைத்து விட்டு ஆயத்தமாகிறான். வழமையாக ஓடித்திரியும் நேவியையும் காணவில்லை. எல்லாமே நம்பிக்கையடன் இருக்கிறது. வண்டி புறப்படும், அதுவும் டேவிட் நேரில் புறப்படும் காரணம் சொல்லப்படாவிட்டாலும், வழமை போலவே ஊகித்துக் கொண்டு வழியனுப்புகிறார்கள். டேவிட்டை அன்புடன் வளர்த்துப் பாதுகாத்த மக்கள் – அவனுடன் மிக அன்பாகப் பழகியவர்களில் நல்லாய்க் கடல் தெரிந்தவர்கள் அன்று கரைக்கு வரவில்லை. படகு நீரில் இறங்குகிறது. “குழந்தைப் பிள்ளையை கையிலே பிடித்துக் கூட்டிச்செல்லும் வாஞ்சையுடன்” இரு கரையிலும் ஆட்கள் வரிசையாய் நின்று, படகினை கடலினுள் இழுத்துச் செல்கிறார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய பின்னர், அணியத்தில் நின்ற அரி தடியால் ஊன்ற படகு தள்ளாடி, நகர, அண்ணாந்து நின்ற இஞ்சின் வால்கள் தண்ணீரில் குளிக்க, எல்லாம் வழமைபோலவே. “நல்லாய் சேவிஸ் போட்ட இஞ்சின் ஒரு இழுவையில் ஸ்ராட்வர”இ இருட்டில் நின்ற தோழர்களும் மக்களும் வண்டியில் நிற்பவர்களுக்கு “தெரியாது என்று தெரிந்தும்”இ கையை உயர்த்தி மெல்ல அசைக்கிறார்கள். வண்டியில் நின்றவர்களும் கையசைத்திருப்பார்கள்…….? ஒரு இஞ்சினில் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் நின்று தயாராகையில்இ “துணியில் பொத்தி ரோச்லைட் அடிப்பது” தெரிகிறது. அல்பா, அல்பா…… என்னமாதிரி? பிரச்சினையில்லை, குதிரைக்கு சாப்பாடு கொடுக்கினம்…… கரிகாலனின் பதில் வோக்கியில் கேட்கிறது. பின் ஒவ்வொரு இஞ்சினாக சத்தமிட படகு நகராமலே இஞ்சின் சத்தம் அதிகரித்து, குறைந்து, மிக அதிகரித்து, தணிவது கேட்கிறது. படகு வழமைபோல வலப்புறமாய் வட்டமிட்டு நிழலாய் நகர்கிறது. “எப்போதும் போல், ‘தேவையும் கடலும் தவிர’ மற்ற எல்லாம் வழமை போல்” நீரைக்கிழித்து, வெண்நுரை கிளம்ப, அலையில் எழும்பிப் பாய்ந்து…… படகு புறப்பட்டுவிட்டது. அதிகரித்த சத்தமும், கரையில் கூடிய கூட்டமும் சிறிது சிறிதாய் மறைய கடல் தெரியாதவர்களின் திருப்தி பெரு மூச்சுடன், கடலைத் தெரிந்தவர்களின் கனத்த பெருமூச்சு கலந்தபோது, “வண்டி வெளிக்கிட்டு விட்டது” இஞ்சின் சத்தம் கரைவதற்கு முன்னரே, கரையிலுள்ள வோக்கி…, அல்பா……… அல்பா என அழைத்தது. “தண்ணியடிக்குது தானே வோக்கியை அதுதான் லொக் ரியூப்பிலை வைத்திட்டினம் போல” எனக் கூறிவிட்டு, முயற்சியை கைவிடும் போதும் கூட, இஞ்சின் சத்தம் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது. நேரம் கரைய, முகாமுக்கு திரும்ப நினைக்கும் வேளையில், தூரத்து முகாம் வோக்கியில் ஒரு அவசர அழைப்பு. “வோக்கியில் அல்பா தொடர்பெடுத்தது…….” “என்னவாம்”…… “கிளியரில்லை, சரியாக விளங்கேல்லை பிறவோ…… பிறவோ…… என்று அவையள் கூப்பிட்டமாதிரியிருந்தது…… “சொல்லு”…… “போட்வெடிச்சிட்டுது, வண்டி அனுப்புங்கோ, எண்ட மாதிரிக் கிடந்தது. அவையளின்ரை கிளியரில்லை, ஒண்டும் விளங்கவில்லை”…… “ஆர் கதைச்சது……” “டேவிட் அண்ணை மாதிரித்தான் கிடந்தது, ஒண்டும் விளங்கேல்லை…… அடுத்த படகினை ஆயத்தம் செய்த வேளை, இஞ்சின் எடுக்கப் பிக்கப் விரைந்த வேளை, உறுதியற்ற வோக்கிச் செய்தியை நம்புவதா, இல்லையா என்று யோசித்த வேளை, நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அலை விரித்துக் கொண்டிருந்தது. “சன்னதம் கொண்டு நின்றது கடல். தேடப்போகும் படகினை, தேடப்போகவென மற்றப்படகை, தயாராக வைக்க, வைக்கும் கடல்!” நேரம் செல்லச் செல்ல “வோக்கிச் செய்தி பிரமையோ?” என நினைக்க வைக்கும், வெறுமையுடன் காத்திருக்கும் வேளையில், தேடப்போன படகின் வோக்கி அழைக்கிறது. அரியைக் கண்டிட்டம், தூரத்தில் இன்னுமொரு ஆள் தெரியுது…… என்னமாதிரி…… என்னமாதிரி…… என்ற வோக்கிக்கு பதில் சொல்லாமல் தேடும் படகு கரைநோக்கி வர, “படகில் அரியுடன் ரட்ணா.” “என்ன நடந்தது?” “வோட் பிரிஞ்சிட்டுது, நடுவாலை முறிஞ்சு அணியம் தனிய, கடயார் தனிய ரெண்டாப் போச்சுது” “மற்றாக்கள் என்ன மாதிரி? டேவிட் அண்ணை என்ன மாதிரி?” “இருட்டுக்கை எல்லாரையும் கூப்பிட்டு ஒண்டாக்கினவர். எல்லாரையும் நீந்தச் சொல்லிப்போட்டு, அவர் கரிகாலனைக் கூப்பிட்டு தன்னட்டை எடுத்தவர். முழுவிடயங்களையும் சொல்லமுடியாது அரியும், ரட்ணாவும் மயங்கி விட்டார்கள். மீட்கப்பட்ட இருவரும் உப்பு நீரால் உதடுகள் வெடித்து, முகம் புண்ணாகி “கோலம் கெட்டுப்போய்”; இருந்தார்கள். படகுகள் போயின வந்தன. செய்தி கேள்விப்பட்ட சனமெல்லாம் கரைமுழுக்க கூடி நின்று தேடினர். படகுகளின் தேடுதலுக்கு மேலாக, டேவிட்டின் திறமையில் எவ்லோரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். “முதலும் இரண்டு நாள் கடலுக்கை கிடந்து, வந்து சேர்ந்தவன் தானே” “மன்னாரிலை ஒருக்கா இரண்டு பொம்பிளைப்பிள்ளையளைத், தனியக் கொண்டு வந்து சேர்த்தவனெல்லே” டேவிட்டின் நீச்சல் திறமையில் எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது. “உந்த மட்டு மட்டு நீச்சல் பெடியள் வந்து சேந்திட்டாங்களாம் டேவிட் ஏன் வரமாட்டான்?” எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதும், அரி வைத்தியசாலையில் கூறிக் கொண்டிருந்தான் “எங்களை நீந்தச் சொல்லிப் போட்டு கரிகாலனைத்தான், இழுத்துக் கொண்டு நிண்டவர்” படகில் சென்றவர்களில் “கடலுடன் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத, நீச்சல் தெரியாதவன்” கரிகாலன் மட்டும் தான். எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதும், அரியையும், ரட்ணாவையும் தவிர வேறு எவரும் வரவில்லை…… கரிகாலன் வரவில்லை…… டேவிட்டும் வரவில்லை…… டேவிட் பங்கு கொண்ட தாக்குதல்கள் 1985 ஆம் ஆண்டு மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதல் நடைபெற்ற போது தாக்குதற் குழுவை படகில் ஏற்றி மறுகரைக்கு (மன்னார் தீவுக்குள்) கொண்டு சேர்க்கும் கடற்புலிகள் குழுவின் உதவிப் பொறுப்பாளராக இருந்தார். படகில் சென்று பாதுகாப்பாக இறங்குவதே தாக்குதலின் முதல் வெற்றி எனக் கருதப்பட்டது. இத்தாக்குதல் முடிந்த பின்பு அப்போதைய மன்னார்த் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களால் டேவிட் பாராட்டப்பட்டான். 1987 ஆம் ஆண்டில் ஆனையிறவு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேற முயன்ற போது கிட்டு அண்ணா தலைமை தாங்கிய தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த லெப். அங்கிளின் குழுவில் ஒருவராகச் சண்டை செய்து தோளில் காயமடைந்தார். 1987 ஆம் ஆண்டு யாழ். தொலைத் தொடர்பு நிலையத் தாக்குதலில் (8 இராணுவத்தினரைக் கைது செய்த போது) 50 கலிபர் துப்பாக்கியுடன் ஒரு குழுவை வழிநடத்தினார். 1987 ஆம் ஆண்டு பூநகரிக் கோட்டைத் தாக்குதலின் போதும் 50 கலிபர் குழு ஒன்றுடன் சென்று சண்டையில் ஈடுபட்டார். 1989 நெல்லியடியில் இந்திய இராணுவக் காவலரண் மீதான தாக்குதலின் போது அத்தாக்குதற் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகச் சென்றார். 1990 ஆம் ஆண்டு வடமராட்சிக் கடலில் சிறீலங்காக் கடற்படையின் தாய்க்கப்பல் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் (கரும்புலி மேஜர் காந்தரூபன், கரும்புலி கப்டன் வினோத், கரும்புலி கப்டன் கொலின்ஸ் ) நடவடிக்கையினை தலைமை தாங்கியவர் இவரே. நினைவுப்பகிர்வு: ச.பொட்டு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். விடுதலைப்புலிகள் குரல்: 26 https://www.thaarakam.com/news/5504b56c-a41d-4191-bff3-cced8496238f
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இணையத்தில் பரவலாக இருக்கும் விடயங்களை ரஞ்சித் தொகுத்துத் தருகின்றார். அவற்றில் தவறுகள் இருந்தால் அவற்றினை இந்தத் திரியிலேயே சுட்டிக் காட்டலாமே. நான் முழுமையாகப் படிக்கவில்லை. எனினும் படித்த அளவில் ரஞ்சித் புனைந்து எழுதியதாகத் தெரியவில்லை. சிலவேளை 10 - 17 வருடங்களுக்கு முன்னர் வந்தவற்றைப் இப்போது பார்க்கும்போது புனைவாகவும், தவறாகவும் தெரிவது பார்வையில்தான் உள்ளது!
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
நான் அஸ்ராஸெனிக்கா இரண்டும் போட்டுவிட்டேன். முதலாவதற்கு அடுத்த நாள் சில மணிநேரம் குளிர் காய்ச்சல் மாதிரி இருந்தது. தோள்மூட்டில் இரண்டு மூன்றுநாள் நோ இருந்தது. இரண்டாவதற்கு நோவைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஊசி போடாவிட்டால் சிலவேளை இந்திய கொரோனா அம்மன் ஆட்கொண்டு சுத்தியாட்டினாலும் ஆட்டுவார்!
-
பிஸ்டல் காய் மேஜர் சுவர்ணன்.!
- லெப் கேணல் வீரமணி
- கேணல் ரமணன் வீரவணக்கம் 21.05.2006
புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாம்! மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் 15ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் தெரிவித்த கருத்து மீள் பதிவு. ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும். 1987 இன் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மையாக உள்ள அம்பிலாந்துறைக் கிராமத்தில் சிறிலங்கா படையினருடைய நகர்வு ஒன்றைத் தடுத்து நடத்திய சண்டை ஒன்றிலேயே எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகச் செயற்பட்டிருந்தார். மட்டக்களப்பு அம்பாறை காடு, மேடுகள், வயல்வெளிகள் எல்லாவற்றிலும் நாம் நீண்ட பயணங்களை நீண்ட நாள்கள் ஒன்றாகச் செய்திருந்தோம். பல்வேறு நடவடிக்கைகளிலே அவர் சேர்ந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகவும் அதன் பின்னர் றீகனின் அணியிலே ஒரு பகுதிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். அவரது குடும்பத்தினரதும் போராட்டப் பங்களிப்புக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டிலே ஒருவராக இணைக்க நான் விரும்பியிருந்தேன். ஆனாலும், மாவட்டத்தின் தேவை கருதி அங்கே ஒரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக அவர் தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார். அவர் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலத்திலே வெற்றிகரமான பல நடவடிக்கைகளைச் செய்திருந்தார். அவற்றில் நான் நேரடியாக தொடர்புபட்டிருக்காத போதிலும் கூட அவருடைய நடவடிக்கைகள் எனக்கு வியப்பையும், பெருமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தத்தக்க வெற்றிகளை அவர் பெற்றிருந்தார். குறிப்பாகச் சொல்வதானால், சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரி சகபந்து என்பவர் மீது ஒரு வெற்றிகரமான கரும்புலி நடவடிக்கையையும், அதனைத் தொடர்ந்து இன்று கருணா போல் அன்று செயற்பட்ட ராசிக் என்ற துரோகி மீதான வெற்றிகரமான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளையும் அவரது புலனாய்வுச் செயற்திறன் சார்ந்த வெற்றிகளாக மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகின. கருணாவின் துரோகம் வெளிப்பட்ட வேளையிலே ரமணன் அதிர்ச்சியுற்றிருந்தார். இவ்வாறு துரோகத்திற்கான செயற்பாட்டை மனதிலே வைத்துக் கொண்டு இந்த மனிதரால் எவ்வளவு தூரம் இவ்வாறு நடிக்க முடிந்தது என அவர் ஆச்சரியப்பட்டிருக்கின்றார். அந்தத் துரோகத்தை முறியடிப்பதிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிக ஆபத்தான பணிகளை பொறுப்பேற்றுக் களத்திலே இறங்கியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும். தமிழீழத் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த மாறாத பற்றுறுதியும் விடுதலை என்பதில் அவருக்கிருந்த பூரணமான தெளிவும் தான் அவ்வாறான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்ததென்றால் மிகையில்லை என்றார் பொட்டு அம்மான். மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன் மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன் ஆகிய மாவீரரின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணிபோல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும்போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்துவைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம். படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அடித்தளமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு விளையாட்டுத்திடலும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் ஆய்வு கூடமும் அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள். அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பள்ளியை ஒரு உழுவூர்தி நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழுவூர்தியை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் நிறைவு தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக் குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு. உழுவூர்தியின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் இயல்பான பொது உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழுவூர்தியைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல. தலை தெறிக்கத் தப்பி ஓடியோர்போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன். அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் அகவை அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது. கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல ஆண்டுகளை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து தமிழீழக் காவற்றுறையில் பணியாற்றுபவர். போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் எதிர்கொண்ட துயரங்களும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டி யவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு. நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல் களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப் பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்தி ரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று,” என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு. இந்தியப் படைகளின் ஆக்கிரமிப் புக் காலத்தில் தனித்துவமான திட்டங்களைத் தீட்டி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய ரமணன் தம்பிலுவில் துரோகிகளின் முகாம் தகர்ப் பில் ஒரு பகுதித் தலைமையை ஏற்றுச் சமர் செய்தவர். அந்தச் சமரில் விழுப்புண்ணடைந்தவர். அதன் பின், பூநகரித் தவளைச் சமரிலும், ஆனையிறவுப் பீரங்கித் தளத்தின் மீதான தாக்குதலிலும் அணித் தலைமைப் பங்கேற்றுப் படை நடத்தியவர். ஜயசிக்குரு விஞ்ஞானகுளச் சமரின்போது விழுப்புண்ணடைந்தார். கேணல் ரமணனின் போராட்ட வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப் பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும் போது அவர்களுக்குப் பயமும் ஏற்படு வதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்ட மிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.” என்றார். படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம். 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில் இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள் நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல் அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது. அதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் செய்த பெரும்பாலான சதிகளை முறியடித்து மாவடி முன்மாரிப் கோட்டத்தின் காவலனாகவும் மட்டக்களப்பின் துணைத் தளபதியாகவும் இருந்த கேணல் ரமணன் வவுணதீவிலுள்ள போராளிகளின் காவலரண் களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது எதிரியின் சதிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைகிறார். மண்ணின் மணத்தோடும் அதற்கேயுரிய இயல்புகளோடும் சீற்றத்தோடும் வளர்ந்த ரமணன் அந்த மண்ணின் தனிச் சிறப்பான கலைகளிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவர். பூநகரித் தகர்ப்பின் பின் எழுதுமட்டுவாள் ஜெயந்தன் முகாமில் அவர் எலும்புக்கூட்டு உடையணிந்து நடனமாடியதைப் பார்த்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். தளங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் பாடியதோடு மட்டுமல்லாது தான் கற்றதும், எதிரியை மறைந்திருந்து சுட்டதுமான பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஈகைச்சுடர் திலீபன் நினைவு நிகழ்வின்போது தனது உற்றவரும் பெற்றவரும் பார்த்திருக்க தலைவனைப் பற்றிய பாடலைப் பாடியதும் அனைவரது கண் முன்னும் அகலாது நிற்கும். கலைகளோடு மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் நேரே பங்கெடுத்து போராளிகளுடன் விளையாடி தளத்தை உற்சாகமாக வைத்திருந்த நாட்களும் பதிவுகளுக்குரியவை. சுனாமியின் பின்னான நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டபோது, எதிரியால் இலக்குவைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மக்களோடு நின்றதும் நினைவழியா நிகழ்வுகள். பன்சேனைக் கிராமத்தில் திலீபன் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவரின் காத்திரமான பங்களிப்பு அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் கண்முன் ஆடும். பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும் ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும். தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார். வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் 2006 https://www.thaarakam.com/news/c8c5354e-88a7-46ee-ad4a-fa302cadb4f5- மாவீரன் பால்ராஜ்
- என் கொறோனா அனுபவம்
கொரோனா தொற்று வந்து தனியே இருக்கும்போது உதவிக்கு ஒருவரும் இல்லாவிட்டால் மிகவும் அவதிப்படவேண்டும். ராசவன்னியர் கொரோனாவில் இருந்து மீண்டது சந்தோசம். உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நானும் இரண்டாவது அஸ்ற்றா ஸெனிக்கா தடுப்பூசியை நேற்று ஏற்றிக்கொண்டேன். 😃 இனி ஹொலிடே போக எப்ப விடுவார்கள் என்று பார்த்துக்கொண்டிகின்றேன்!- முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய லெப்.கேணல் தமிழ்மாறன்….!
- லெப். கேணல் நவம் வீழ்ந்தாலும் வித்துக்களாக மடிந்தாலும் மக்களுக்காக………..!
- படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்!
- இறுதிமூச்சுவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்!
- கவச அணி நாயகன் லெப்ரினன் கேணல் சிந்து
11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். https://www.thaarakam.com/news/213483a9-7ecb-4072-8fb2-db4dab35fd91- தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்...
தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்... “வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில் இருந்தவர்களின் முகத்தில் ஏதோ ஒரு வித மாற்றம் வரும். அவர் போராளிகளுக்குக் கொடுக்கின்ற பயிற்சி அவ்வளவு கடினம் மட்டுமல்லாது பயிற்சியை முறையாகச் செய்யாதவர்களுக்கு அடிப்பதும் காரணமாக இருந்தது. அவரிடம் பயிர்ச்சி பெற்றவர்களுக்கு அவர் மீது எவ்வளவு கோவம் இருந்ததோ அதை விட மேலாக பாசமும் இருந்தது. “கடும் பயிற்சி; இலகுவான சண்டை” என்ற அண்ணையின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் எங்கள் வசந்தன் மாஸ்ரர். 1993 காலப்பகுதியில் எனக்கு மாஸ்ரருடன் பழகும் சந்தர்ப்பம் அதிகம் கிடைக்கவில்லை, 1995 க்கு முன்பு நான் மாஸ்டரை எப்போதாவது ஒரு முறை எமக்குப் பயிற்சி அளிப்பதற்கு வரும்போது மட்டும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். 1995 எமக்கான பயிற்ச்சி திடடத்திற்கு வசந்தன் மாஸ்ரர் அவர்களிடமே முழுமையான பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது, எமது பயிற்சி திடடத்திற்காக மாஸ்டர் எம்முடைய முகாமிலேயே தங்கி இருந்தார். அங்கு அவர் தனக்கென ஒரு கொட்டில் அமைத்து அதில் தனது பயிற்சிக்கான உபகரணங்களையும் (குத்துச் சண்டை, பளு தூக்கல் போன்றவற்றிற்கான) ஒழுங்கு செய்திருந்தார். மாஸ்ரர் எப்பொழுதும் தனக்கான பாதுகாப்பை அவரே உறுதி செய்து விட்டு தான்நித்திரைக்கு செல்வது வழமை. மாஸ்டர் எமது முகாமில் தங்கி எமக்கு பயிற்சி அளித்ததால் அவரை நாம் நன்றாகவிளங்கிக்கொள்ள முடிந்தது , இரவு எத்தனை மணிக்கு பயிற்சி முடிந்தாலும் அல்லது வெளியில் பணி நிமித்தம் சென்று வந்தாலும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்ய என்றுமே தவறியதில்லை. பயிற்சி ஆரம்பிக்க முன்பு தனக்கான பயிற்சிகளை முடித்து விட்டு வந்து எம்முடனும் பயிற்சி செய்வார் ; நாம் செய்யும் அத்தனை பயிற்சிகளையும் தானும் இணைந்து செய்வார் , கராத்தே, சிலம்பு, மழு, வாள், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற பயிற்சிகள் முழுமையாக பயிற்றுவித்ததோடு குங்க்பூ, வர்மம் போன்ற கலைகளையும் பயிற்றுவித்தார். கோபம் அவரது இயல்பு அல்ல. தலைவரின் சிந்தனைக்கு சரியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய சிந்தனையாக எப்போதும் இருந்தது. இதை அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பர். அதற்குப் பயிற்சி எடுக்கும் போராளிகள் ஒத்துழைக்காத போது வருவது தான் அவரது கோபம். பயிற்சி முடிந்த ஓய்வு வேளைகளில் அவர் எம்முடன் பழகும் அந்தத் தருணங்கள் அதை எமக்குத் தெளிவாக உணர்த்தும். பயிற்சிஅளித்துக்கொண்டிருக்கும் போது அவரது உடம்பில் இருக்கும் காயங்களில் இருந்து உள்ளிருக்கும் குண்டு சிதறல்கள் சில சமயங்களில் வெளிவரும். அதை எடுத்து எறிந்துவிட்டு பயிற்சி தருவார். அந்த வேளையில் அவருடைய அர்ப்பணிப்பு எம்மை வியக்க வைக்கும். எம்மிடம் உள்ள பயத்தினை இல்லாதொழிக்க, சூட்டுப்பயிற்சி நேரங்களில் நாம் இலக்குகளைக் குறிபார்த்து சுடுகின்ற போது எம்மை நம்பி எமது சூட்டிலக்கிற்கு (target) அருகில் நின்று பார்ப்பார், நாம் மாஸ்ரர் நிற்கிறார் என்பதற்காக இன்னும் கவனமாக குறிபார்த்து சுடுவோம். எமக்கான ஒரு தந்தையாக, தாயாக, அண்ணனாக, ஆசானாக, எம்மில் ஒருவராக கலந்திருந்தது பயிற்சி அளிக்கும் தருணத்தில் சம்பவம் ஒன்று மனதை வருட்டியது , ஒருநாள் இளந்தென்றல் என்னும் போராளிக்கு (வீரச்சாவெய்திவிட்டார்) வட்டவாரியின் பென்சிலை வைத்து அழுத்திப்பிடிக்க இருக்கும் வளையம் ஒன்று தொலைந்து விட்டது அதற்கு ஒரு கம்பு நார் ஆகிரளவு அடித்துவிட்டார் ,அந்த நேரம் எனது சமையல் நாள், 11 .௦௦ மணிக்கு தேநீர் (பால்) எடுப்பதற்காக சமையல்கூடம் சென்றுவிடடேன் , நான் தேநீருடன் வரும் போது அனைவர் முகத்திலும் ஒரு கலக்கம், அடிவிழுந்தது இளசுக்குத்தான் ஆனால் அவனுடைய நண்பர்களும் அழுதுகொண்டிருந்தார்கள், நான் அவர்களிடம் கேட்டபோது தான் சம்பவம் புரிந்தது , அன்று ஒரு சின்ன வடடவாரியின் பாகம் தொலைத்தத்துக்காக இந்த அடியா என்று எண்ண தோன்றும் , ஆனால் அன்று அந்த வட்டவாரியின் பாகம் தொலைக்கும் போது நாம் என்ன பணிக்காக பயிற்சி பெற்றிருந்தோம் என்பதை அறிந்தவர்களால் அதனுடைய தாக்கம் நிச்சயமாகப் புரிந்திருக்கும். அன்று எமக்கான பணி முக்கியமானது. சிறு தவறுக்கும் நாம் இடமளிக்க கூடாது என்பது தான் அன்றைய எமது நிலை , முதலில் நாமும் கோவப்பட்டோம், எமது அணிக்கான பொறுப்பாளரும் அந்த சூழலை அன்று ஏற்க மறுத்துத்தான் இருந்தார், பின்பு எங்களில் சற்று முதிந்தவர்கள் அவரை சமாதானம் செய்த போது நிலைமையை புரிந்து கொண்டார்கள் , எமது பயணம் தாமதிக்காமல் பயணிக்க விரும்பினோம், மாஸ்ரரும் இளசுக்கு அன்று நடந்த சம்பவத்தை நினைத்து மனம் வருந்தினார். அதை பலமுறை எம்முடன் உரையாடும் போது வேதனையோடு சொல்லுவார் , கண்டிப்பாக மாஸ்ரரை பற்றி சொல்லும் போது இதையும் குறிப்பிட விரும்புகிறேன், வசந்தன் மாஸ்ரருக்கு பயணத் தேவைகளுக்காக ஒரு MD 90 உந்துருளி கொடுக்கப்பட்டிருந்தது, அவர் பயிற்சி கொடுப்பதற்கு செல்லும்போது அவரது பாவனைக்காக ஒரு மாதத்திற்கு 5 லீட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும். அதை ஒரு லிட்டருக்கு நாலு லீற்றர் மண்ணெண்ணெய் கலந்து 40 கிலோ மீற்றர் அளவு வேகத்துக்கு எண்ணையின் பாவனை அளவைக் குறைத்துப் பாவித்து மேலதிக வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் , தன்னைப்போல தற்காப்புக்கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகளிலும் போராளிகளைச் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதை தன்னால் முடிந்தளவு செய்தும் இருக்கிறார். பயிற்சிகளில் நாம் விடும் தவறுக்கு பலமுறை அடிவாங்கியிருக்கின்றோம் அந்த அடித்தான் கடினமான பயிற்சிகளையும் இலகுவாகப் பெற்று சிறப்பாக முடிக்க முடிந்தது என்பதை இன்று நான் உணர்கின்றேன், நாம் பெற்ற பயிற்சிகள் போல அனைத்துப் பயிற்ச்சிகளையும் எல்லா போராளிகளும் பயின்றிருக்க வேண்டும் என்று எம்மில் ஐந்து பேர் பயிற்சியாசிரியர்களாக நியமிக்கப்படடோம்,34 பேர் கொண்ட அணியாக பயணித்த எங்களுக்கு இடையிடையே பணிக்காக நாம் பிரிந்து செல்லும் நிலையும் வந்தது. 34 பேர் கொண்ட அணியில் தேசியத்தலைவரின் பாதுகாப்பிற்காக 17 பேர் எம்மிலிருந்து சென்றுவிடடார்கள் அப்போது நாம் கராத்தேயில் மண்ணிறப்பட்டி நிறைவுடன் இருந்த காலம் , அவர்களின் பிரிவு சிறிது வேதனையாக இருந்தாலும் தலைவரின் பாதுகாப்புக்கென்பதால் ஆறுதல் அடைந்தோம்; பெருமையடைந்தோம். அந்த சமயங்களில் ஒருநாள் நாம் பயிற்சி கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது எனது அம்மா என்னை கண்டுகொண்டார், நானும் கண்டுவிடடேன் ஆனால் மாஸ்ரரிடம் நான் சொல்லவில்லை. அப்படியே சென்று விட்டேன், பயிற்சி முடித்து திரும்பி வரும்போதும் அம்மா அதிலேயே நின்று அழுதுகொண்டிருந்தா, மாஸ்ரர் கிட்ட சென்று, அம்மா ஏன் அழுகிறீர்கள்? நான் போகும்போதும் உங்களை பார்த்தேன் அழுது கொண்டிருந்தீர்கள் என வினவினார், அம்மா அழுகை பலமானபோது என்னை கேட்டார், உனக்கு தெரியுமா? நீயும் போகும் போது வடிவாக பார்த்துக்கொண்டுதான் வந்தாய் என்று. நான் அப்போது தான் சொன்னேன் அது எனது அம்மா என்று. நான் அம்மாவை பார்த்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது , எமக்கு விடுமுறையில் செல்வதற்கான அனுமதி அப்போது தடைசெய்யப்பட்டிருந்தது , அப்போது அம்மாவிடம் அவர் இருக்கும் இடம் பற்றிய விபரத்தை கேட்டு விட்டு வந்துகொண்டிருந்த போது என்னுடன் அது சார்ந்த எந்த கதையும் கதைக்காமல் வழமை போல பயிற்சியளிப்பது சார்ந்த கதைகளை சொல்லிக்கொண்டு வந்தார். நான் எனக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன், மாஸ்டர் பயணிக்கும் போது என்றாலும் சரி தூங்கும் போது என்றாலும் சரி மிகக் கவனமா இருப்பார். பின்பு ஒருநாள் அனுமதி பெற்று அம்மாவை பாக்கிறசந்தர்ப்பத்தை உருவாக்கி என்னுடன் தானும் வந்தார் , அதன் பின் அம்மாவை நான் பார்க்கவில்லை அம்மா காலமாகிவிட்டார், அன்று மாஸ்ரரின் உதவியால் என் அம்மாவை ஒருமுறையேனும் பாக்கிற சந்தர்ப்பம் கிடைத்தது, எனது அன்னையின் முகத்தை ஒருமுறையேனும் பாக்கிற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய நன்றிநன்றிமாஸ்ரரை இந்தத் தருணத்தில் நன்றியுடன் நினைவுபடுத்திக் கொள்கின்றேன். வசந்தன் மாஸ்டர் தூங்கும் போது எப்போதும் அவரது கைத்துப்பாக்கி அவரது தலையணைக்கு அடியில் வைத்துதான் தூங்குவார் , அவர் தூக்கத்திலிருந்து எழும்ப முன்பாக யாரேனும் அவரை எழுப்பவேண்டும் என்றால் சற்று தள்ளி நின்று மாஸ்ரர் என்றால் போதும் கைத்துப்பாக்கியுடன் வந்து கதைத்துச்செல்வார், தெரியாதவர்கள் அருகில் சென்று அவரை தொட்டு எழுப்பினால் கைத்துப்பாக்கியைச் சுடும் நிலைக்கு கொண்டு வந்தபடியே தான் எழும்புவார். அங்கிருப்பவர்கள் பயந்திடுவார்கள். இது பலமுறை நடந்தும் இருக்கிறது,,., அவரது கைத்துப்பாக்கிதான் மாஸ்ரரின்அவருடைய வீரச்சாவுக்கும் காரணமானது, அவரது கைத்துப்பாக்கியை இராணுவ எறிகணைத் தாக்குதலில் இருந்து மீட்கச் சென்ற போது அந்த எறிகணைத் தாக்குதலிலேயே அவரும் கொண்டாடக்கூடிய வீரச்சாவடைந்தார். எங்களை வளர்த்த எங்களின் ஆசானின் வித்துடலைக் கூடக் காணக்கூடிய இடத்தில் அன்று நான் இருக்கவில்லை. என் மனதுக்குள் உறுதி எடுத்துக்கொண்டேன், 1998 ஒன்பதாம் மாதம் கறுத்தப்பட்டி வழங்கும் வைபவம் , தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் கையால் அதை நாம் பெற்றுக் கொண்டோம். தலைவரின் வருகையை மங்கள வாத்தியமான தவில் வாத்தியதுடன் வரவேற்கவேண்டும் என்று மாஸ்ரர் விரும்பினார் , எம்மில் பலர் கலைகளிலும் சிறந்தவர்களாக இருந்தவர்கள். தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான தமிழீழ படைத்துறைப்பள்ளியில் எல்லா கலைகளும் பயில்வதற்கான சந்தர்பத்தையும் நாம் பெற்றுக் கொண்டோம். நானும் ரவியும் (ரவி தவறுதலான வெடி விபத்தில் சாவடைந்துவிடடார் ) தவிலும் , எழில்வண்ணன் ,இளவழகன் நாதஸ்வரமும் வாசித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்களை வரவேற்றது வசந்தன் மாஸ்ரருக்கு அளவில்லா மகிழ்ச்சியினைக் கொடுத்தது என்பதனை அவரது முகத்தின் பூரிப்பிலிருந்து நாம் அறிந்து கொண்டோம்., தலைவரின் செல்லை பிள்ளை போன்று எப்பவும் அண்ணையுடன் அவர் இருக்கும் போது சின்னப்பிள்ளை போல இருப்பர், அது எங்கள் தேசியத் தலைவர் மீதும் எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவர் கொண்ட அளவு கடந்த பற்றின் வெளிப்பாடு என்றே சொல்லலாம்.அதிலிருந்து என்றும் விலகியதில்லை. தான் நேசித்த மக்களுக்காக எம் தலைவன் வழியில் கேணல். வசந்தன் என்ற மாவீரனாக அர்ப்பணித்துக் கொண்டார். அவரின் இலட்சியக் கனவுகளை எமது கரங்களுக்கு தந்து விட்டார். எமது இனத்தின் விடுதலைக்காக வித்தான வீர மறவர்களின் தாயகக் கனவுடன் கேணல். வசந்தன் என்ற மாவீரனது கனவினையும் எம் கடமை என ஒற்றுமையாகப் பயணிப்போம். நினைவுப்பகிர்வு :அன்பு https://www.thaarakam.com/news/1508d668-89c8-4a1e-bc82-03e61cee94d3- முள்ளிவாய்கால் மண்ணில் தமிழினத்தின் விடிவிற்காய் விதையானார் லெப்.கேணல் அன்பழகன்
முள்ளிவாய்கால் மண்ணில் தமிழினத்தின் விடிவிற்காய் விதையானார் லெப்.கேணல் அன்பழகன். லெப்.கேணல் அன்பழகன் கைலாயபிள்ளை ஜெயகாந்தன் பலாலி வீரப்பிறப்பு: 18.08.1972 வீரச்சாவு: 05.05.2009 05.05.2009 அன்று முல்லைத்தீவு பகுதியில் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினருடன் களமாடி வீரச்சாவு ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட மண் ஆகும். இவ்வூரிலே பல நிலபுலங்களுக்கு உரித்துடையவர்களாகவும் நற்பண்புகள் நிறைந்த "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்பதற்கொப்ப வாழ்ந்தவர்களான திரு.திருமதி கைலாயபிள்ளை, காமாட்சி இணையருக்கு இரண்டு சகோதரிகள், மூன்று சகோதரர்களுடன் நான்காவது மகனாக 18.08.1972 அன்று ஜெயகாந்தன் எனும் இயற்பெயருடன் அன்பழகன் பிறந்தார். அவரை வீட்டில் ஜெயம் என்று செல்லமாக அழைத்தார்கள். அவர் சிறு வயது முதற்கொண்டே படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். 'ஜெயம்" என்ற அவரது இயற்பெயருக்கேற்ப அவரது வாழ்விலும் எந்த காரியம் என்றாலும் அதில் எப்படியாவது வெற்றி பெற்று வரும் தனித் திறமை அவரிடம் காணப்பட்டிருந்தது. "விடாமுயற்சி பெரு வெற்றி" என்ற சொற்றொடருக்கேற்ப எந்த கடினமான பணி என்றாலும் அதனை முழுமையாக முடித்து விட வேண்டும் என்ற தன்மையை அவரது சிறு அகவை முதல் அவரிடம் இனங்காணக்கூடியதாக இருந்தது. ஜெயம் தனது தொடக்கக் கல்வியை ஆண்டு ஐந்து வரை பலாலி சித்தி விநாயகர் வித்தியாலயத்திலும் பின்பு ஆண்டு ஆறிலிருந்து க.பொ.த சாதாரணதரம் வரை வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திலும் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1988இல் அவர் க.பொ.த சாதாரணம் கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஈழத்தில் இந்திய இராணுவத்தினரின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடியது. அத்துடன் ஒட்டுக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் ஒட்டுக்குழு நடவடிக்கைகளிற்கான கட்டாய ஆட்சேர்ப்பு, பிள்ளைபிடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தகைய காரணங்களினால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயத்தினால் தனது க.பொ.த சாதாரணதரத்தை ஒழுங்கான முறையில் கற்க முடியாதிருந்த போதிலும் அவருக்கு கல்வி கற்றலின் மீதிருந்த அவாவினால் விடாது முயன்று கல்வி கற்று க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி சித்தியடைந்தார். பின்பு ஏற்பட்ட தொடர் இடப்பெயர்வுகள், இழப்புகளினால் அவரால் க.பொ.த உயர்தரத்தை தொடர முடியாத நிலை காணப்பட்ட போதிலும் கற்றலின் மேலுள்ள பேரவாவினால் 1993 வரை யாழ்.உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் தனது மின்னியல் தொடர்பான கற்கைநெறியினைத் தொடர்ந்தார். எமது விடுதலைப்புலிகள் இயக்கமானது மக்களுக்காக போராடுபவர்கள். மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டவர்கள். மக்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மாலியன்ற வழிகளில் பங்கெடுக்காவிட்டால் ஈழவிடுதலையைப் பெற முடியாது என்று கருதுபவர்கள். எமது விடுதலைப் போராட்டத்தை அளப்பெரிய ஈகங்களாலும் மக்கள்மயப்பட்ட போராட்டத்தினாலும் மட்டுமே வென்றெடுக்க முடியும் என்ற ஆழமான அரசியல் தெளிவின் வெளிப்பாடுகள் இவை. எமது கழுத்தை நெரிக்க வரும் இனவெறிக் கரங்களை தறித்துப் போட எமது கைகளில் ஆயுதங்களைத் தூக்கி எமக்கான உரிமைக்காக போராட வேண்டியது இன்றியமையாதது. இந்த போராட்டத்தில் இணைந்த பலரும் தமது இருப்பிற்காக, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அல்லது வாழ வழியில்லாமல், வாழத் தெரியாமல் வந்தவர்கள் அல்ல. அனைவரும் வாழ தெரிந்தவர்கள், வாழ விருப்பமுள்ளவர்கள். ஆனால் மற்றவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக, வருந்தலைமுறை விடுதலைபெற்று வாழ வேண்டும் என்பதற்காகப் போராட வந்தவர்கள். எமது இனத்திலுள்ளோர் எங்கோ, யாரோ பாதிக்கப்படுகின்றபோது, இனத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, எமது தேசம் ஒடுக்கப்படுகின்றது என்பதற்காகப் போராடப் புறப்பட்டவர்கள். தாம் வாழ வேண்டும், ஆள வேண்டும் என்றால் கழுத்தில் நஞ்சைக் கட்டிக் கொண்டு, கையில் ஆயுதத்துடன் சாவதற்கு துணிந்திருக்க மாட்டார்கள். உண்மையில் இவ்விடுதலைப் பயணத்தில் இணைந்தவர்கள் மிகவும் இளகிய உள்ளம் கொண்டவர்கள். அதாவது யாரோ பாதிக்கப்படுகின்றபோது அதனைப் பார்த்து உள்ளம் பொறுக்க முடியாமல் ஏற்பட்ட தவிப்பினால் போராட வந்தவர்கள். இவ்வாறுதான் ஜெயமும் தனது குடும்பத்தில் வசதிகள், மலர்ப்படுக்கை வாழ்க்கை வாழும் வாய்ப்புக்கள் இருந்தபோதும், தனது இனத்தின் விடுதலைக்காக புலிகளின் பாசறையை நோக்கி 1993 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் புறப்பட்டான். இம்ரான் பாண்டியன் படையணியின் சரத்பாபு ஏழாவது பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியை நிறைவுசெய்த ஜெயம் அன்பழகன் விமலன் என்ற இயக்கப் பெயருடன் தன்னை ஒரு முழுமையான போராளியாக ஆக்கிக்கொண்டான். அடிப்படைப் பயிற்சி காலப்பகுதியில் 1993 நவம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளின் முதலாவது ஈரூடகத்தாக்குதலான "தவளை" நடவடிக்கைக்கு சென்ற உதவி அணியில் அன்பழகனும் சென்றிருந்தார். அன்றைய காலகட்டங்களில் விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல் அல்லது சிங்கள படைகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான தாக்குதல்கள் என ஏதாவது படை நடவடிக்கைகள் எப்பொழுதும் நடைபெற்ற வண்ணமே இருக்கும். அந்த நடவடிக்கைகளுக்கான களமுனை உதவிப் பணிகளில் புதிய போராளிகளை ஈடுபடுத்தி உதவிப் பணிகளை செய்துகொள்வதுடன், புதியவர்களுக்கு கள அனுபவம் ஊட்டப்படுகிறது. இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. அடிப்படை பயிற்சிகள் நிறைவுற்று போராளிகள் பல்வேறு பணிகளுக்காக அனுப்பப்படுவார்கள். சில சிறப்பு கடமைகளுக்கு எடுக்கப்படும் போராளிகளுக்கு சண்டை அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பென்பது பின்னாளில் எட்டாக் கனியாக கூட போகலாம் என்பதால், பயிற்சிக் காலத்திலேயே சண்டை அணிகளில் ஈடுபடுத்துவதால் மீண்டும் அவர்களுக்கான சண்டைக்கான வாய்ப்பை தாமதப்படுத்தி சிறப்பு பணிகளில் ஈடுபடுத்த முடியும். சில சிறப்புப் பணிகளில் ஈடுபடுபவர்களை அடிக்கடி களமுனைக்கு அனுப்ப முடியாது. இரகசியம் மற்றும் புதியவர்களை அப்பணியில் ஈடுபடுத்துவதிலுள்ள சிக்கல்களை கருத்திற்கொண்டு; புதிதாக பணிக்கு எடுக்கும் போது, அவர்கள் தாமாக கேட்டு களமுனைக்கு செல்ல முனைய மாட்டோம் என எழுத்து வடிவ உறுதிப்பாட்டை அளிக்க வேண்டியும் ஏற்படுவதுண்டு. இவ்வாறான உறுதிப்படுத்தல் அன்பழகனின் பணியிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பயிற்சி நிறைவில் போராளிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பணிகளுக்காக அனுப்பப்பட்டனர். இதன்போது அன்பழகனும் இன்னும் இருபது போராளிகளும் சிறப்பு கடமைக்காக தெரிவு செய்யப்பட்டு அதற்கான கல்வியையும், பயிற்சிகளையும் 1994.04.01 தொடக்கம் 1994.07.31 வரை யாழ் மாவட்டம், வலிகாமம் பகுதியிலிருந்த சிறப்பு முகாமொன்றில் பயிற்சிபெற்றுக் கொண்டனர். இப்பயிற்சிக் காலத்திலேயே அவர்கள் தொடர்பான துல்லியமான மதிப்பீடுகளும் இடம்பெறும். கடமைக்கான பயிற்சியும், கற்கைநெறிகளும் நிறைவடைந்த நிலையில் கடமையுணர்வு, செய்நேர்த்தி மற்றும் அர்ப்பணிப்புமிக்க போராளியாக இனங்காணப்பட்ட அன்பழகன் அலுவலக கடமைக்காக தெரிவாகி தனது பணியை மிகவும் நேர்த்தியாக செய்து வந்தார். 1995 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியும், 1996 முற்பகுதியும் தமிழினத்தைப் பொறுத்தவரை மிகவும் நெருக்கடியானதும், சோதனைகள் நிறைந்ததாகவும் இருந்தது. யாழ். வலிகாமம் பகுதியை எமது முதன்மை நிருவாக நடுவமாகப் பேணிவந்த எமக்கு, சிங்களப் படைகளின் யாழ் நகர் நோக்கிய வன்கவர்வு நோக்கிலான முன்னேற்றமும், அதன் பின்னர் தென்மராட்சி பகுதியை விட்டு வெளியேறியமையும் மிகுந்த நெருக்கடியாக அமைந்தது. இக்காலத்தில் அன்பழகனும் தனது அலுவலக ஆவணங்களை பாதுகாத்து, நகர்த்தும் பணியில் சிறப்பாக செயற்பட்டார். இடப்பெயர்வு காரணமாக போராளிகளின் பரம்பல் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு நகர்ந்ததனால் அவர்களுக்கான நிருவாகப்பணிகளும் விரிவாக்கப்பட வேண்டியதாயிற்று. இச்சூழ்நிலையின் போது அணியின் நிருவாகப் பொறுப்பாளராக இருந்த மாவீரர் வேல்ராஜ் அவர்கள் வேறு கடமைக்கு சென்றதனால், அன்பழகன் அணியின் நிருவாகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தொடர் இடப்பெயர்வுகளால் இயக்கமே நெருக்கடி நிலையில் இருக்கின்றபோது நிருவாகப் பொறுப்பை செய்வதென்பது "கல்லில் நார் உரிப்பது" போன்றதாகும். எனினும் தனது திறமையாலும் கடின உழைப்பாலும் போராளிகளின் தேவைகளை நிறைவுசெய்து தனது நிருவாகக் கடமையை எந்தவித குறையுமின்றி சிறப்பாக செய்ததன் மூலமாக தனது அணி போராளிகளின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்ற பொறுப்பாளனாக உருவானார் அன்பழகன். பின்னர் 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இம்ரான் பாண்டியன் படையணியின் செயற்பாடுகள் வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் வியாபித்திருந்தது. இதன் காரணமாக, படையணி போராளிகளுக்கான பாதுகாப்பு மற்றும் விடுமுறை - சந்திப்பு ஏற்பாடுகள் ஒழுங்கமைத்தல் என்பனவும் மிக முதன்மையானதாகவும், எச்சரிக்கை நிறைந்ததாகவும் அமைய வேண்டியதாயிற்று. வன்னிப் பெருநிலப்பரப்பில், இடங்களை கண்டுபிடிப்பதென்பது ஆரம்பத்தில் எம்மவர்களுக்கு மிகுந்த சோதனையாகவே இருந்தது. அத்துடன் இப்பணிக்கான பயணங்கள் பகல் - இரவு என்ற வேறுபாடின்றி தொடரும். எனவே இப்பணிகளை நேரடியாகச் சென்று ஒழுங்கமைக்கும் பொறுப்பு நிலைக்கு ஏற்றவராக அன்பழகன் தெரிவு செய்யப்பட்டார். இவரின் அறிவுக்கூர்மையும், கடமையுணர்வும், மிடுக்கான தோற்றமும் இப்பணிக்குப் பெரிதும் உதவியது. இக்காலப் பகுதியில் இம்ரான் பாண்டியன் படையணியானது இயக்கத்தின் பல முதன்மையான மற்றும் இரகசிய பிரிவுகளை தன்னகத்தே கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. படையணியின் சிறப்புத் தளபதியாக பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்கள் இருந்ததுடன், அன்றைய காலப்பகுதியில் தலைவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், இயக்கத்தின் பல கட்டமைப்புகளை வழிநடாத்திய, வேலைப்பளுமிக்க தளபதியாகவும் ஆதவன் அவர்களே இருந்தார் என்றால் மிகையில்லை. படையணியின் இரகசியங்கள் மற்றும் முதன்மைப் பணிகள் என்பன எள்ளளவும் வெளியில் தெரியாதவாறு அல்லது சென்றுவிடாதவாறு பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்துப் போராளிகளிடமும் இருந்தபோதிலும், தெரிந்தோ தெரியாமலோ சில போராளிகளின் செயற்பாடுகளால் இரகசியங்கள் கசியும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், படையணியின் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு (அதிரடியான) செயற்பாடுகளூடாக இரகசிய கசிவுகள் தடுக்கப்பட்டன. சிங்களப் படைகளுடன் ஆயுதரீதியாக மோதி, அவர்களை எமது மண்ணை விட்டு துரத்தியடிப்பதே பணியென வந்த அன்பழகன் போன்ற பல போராளிகளுக்கு இக்கடமையானது ஆரம்பத்தில் மிகவும் சங்கடமானதாக இருந்தாலும், அதன் முதன்மை மற்றும் தேவை உணரப்பட்டதும் அதில் முழுத்தெளிவு ஏற்பட்டு விடுகிறது. ஆனாலும் இப்பணிக்கு வெளியில் இருக்கும் போராளிகளில் சிலருக்கு இப்பணி தொடர்பான குழப்பங்கள் இருப்பதுடன், இப்பணியை ஆற்றும் போராளிகளையும், இவர்களின் பணிகளையும் அறிந்திருக்க வாய்ப்புகளிருக்கவில்லை. எது எப்படியிருந்தபோதிலும்; அனைத்து தரப்பு போராளிகளிடமும் அன்பழகனுக்கு ஒரு தனியான மதிப்பும், மரியாதையும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு கீழ் கடமையாற்றுபவர்களாயினும் சரி, கடமை அடிப்படையில் தொடர்புடைய இயக்கத்தின் துறை மற்றும் படையணி சார்ந்த பொறுப்பாளர்கள், போராளிகள் என அனைவருக்கும் இவரை பிடித்துவிடும். அதாவது அனைவருடனும் ஒத்துப்போகின்ற மிகச்சிறந்த பண்பு இவரிடம் குடிகொண்டிருந்தது. எவருடனும் முரண்படாத, கோபித்துக் கொள்ளாத, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சிறந்த போராளி அன்பழகன். இவருக்குரிய நண்பர்கள் வட்டம் என்பது மிகப் பெரியதாகவும், பரந்துபட்டதாகவும் அமைந்திருந்தமை அன்பழகனின் சிறந்த குணவியல்பிற்கான சான்றாகும். 1997 தொடக்கம் 1999 வரையும் இப்பணியை சிறப்பாக ஆற்றிவந்த நிலையில், 2000 ஆண்டு காலப்பகுதியில் அணிப் பொறுப்பாளராக அன்பழகன் நியமிக்கப்பட்டார். உண்மையில் இப்பணியென்பது மிகவும் இரகசியத் தன்மை கொண்டதாகும். இப்பணிகளுக்கான தகைமைகள் என்கின்றபோது இலட்சியப் பற்று, தலைமை மீதான விசுவாசம், இரகசியம் காத்தல், சுய கட்டுப்பாடு என்பன மிக முதன்மையானவையாகும். இரகசியம் காத்தல் என்ற விடயத்தில் மூன்று விதமான இரகசியங்கள் உள்ளது. நிகழ்வுகள் நிகழும் வரை பாதுகாக்கப்பட வேண்டியவை, நிகழ்வுகள் நடைபெற்று குறிப்பிட்ட காலம்வரை பாதுகாக்கப்பட வேண்டியவை அல்லது நாமாக வெளிப்படுத்த முடியாதவை, அடுத்தது எக்காலத்திலும் வெளிப்படுத்த கூடாதவை அல்லது முடியாதவை. அன்பழகனின் பணியின் பெரும்பாலானவை எக்காலத்திலும் வெளிப்படுத்த கூடாதவை என்பதே உண்மை. இதற்கேற்பவே அவர் தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்திருந்தார். இந்த அணியில் கடமையாற்றியவர்களும் இதையே தமது தாரக மந்திரமாக கொண்டு செயற்பட்டார்கள். எனவே அந்த இரகசியங்களை பொதுவெளியில் உரைக்காது இருப்பதே இந்த மானமாவீரர்களையும், அவர்கள் செய்த பணிக்கான தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் பொருளுள்ளதாக்கும். இப்பணியை செய்யும் ஒவ்வொரு போராளிகளும் இரகசியம் காத்தலுடன் சுயகட்டுப்பாட்டை பேணக்கூடியவர்களாக இருக்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது. சுய கட்டுப்பாடு இல்லாதவர்களால் இந்த அணியில் தொடர்ந்து பயணிக்க முடிவதில்லை என்பதுடன் அனுமதிக்கப்படுவதுமில்லை. மேற்படி தகைமையுடன் கட்டுப்பாடான சூழலுக்குள் செயற்பட முடியாதவர்கள் சிலர் விலகிச்சென்றமையும் உண்டு. விலகிச் செல்வதற்காக அவர்கள் ஏதேதோ காரணங்களை தெரிவித்திருந்தாலும் அடிப்படைக் காரணம் இதுவே. உண்மையில் அன்பழகன் அவர்கள் அத்தனை தடைகளையும் தாண்டி 17 ஆண்டுகளாக இந்த விடுதலைப் பணியில் தன்னை அர்ப்பணித்திருந்தார். 2001 ஆம் ஆண்டு காலப்பகுதி சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் காலமாக இருந்தது. அணியின் பொறுப்பை ஆற்றிவந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு யூன் மாதம் 27 ஆம் நாள் இல்லறவாழ்வில் இணைந்து கொண்டார். ஒரு போராளி என்பவன் எல்லா விடயங்களிலும் தன்னை தியாகம் செய்கிறான் என்பதே உண்மை. அந்த வகையில் தனக்கான வாழ்க்கைத் துணையாக ஒரு போராளியை தேர்ந்தெடுப்பதென்பதும் அப்படியான பண்பின் வழிப்பட்டதே. எமது சமூகத்தைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவரும் முழுநேர உழைப்பாளிகளாக இருப்பது அன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமானது. அதிலும் ஒரு பெண் தனது வீட்டுக்கான பணிகளையும் ஆற்றிக்கொண்டு இயக்கப்பணியையும் செய்வதென்பது சுமைநிறைந்தது என்றே கூற வேண்டும். பின்பு 2003 இல் ஒரு பெண் குழந்தைக்கும் பின் 2009 இல் ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையானார். 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்பிற்கமைய, புலனாய்வு அணியிலிருந்து நிதித்துறை புலனாய்வு பணிக்கென ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது. அந்த குழுவின் உதவிப் பொறுப்பாளனாக அன்பழகன் நியமிக்கப்பட்டார். நிதிப்புலனாய்வுப் பகுதியின் பணிக்கு வந்த காலத்தில் இருந்து நிதித்துறைப் போராளிகளுடன் அன்புடனும் சிரித்த முகத்துடனும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தார். துணைப்பொறுப்பாளராக இருந்து புலனாய்வுபணியின் விரிவாக்கத்திற்கும் ஆழமான செயற்பாட்டிற்கும் தன்னை முழுமையாக அரப்பணித்து உழைத்தார். அக்காலப்பகுதியில் இக்குழுவினரின் செயற்பாடுகளினூடாக தவறுகள் கண்டறியப்பட்டதுடன், தவறுகள் நடைபெறாதபடியான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதில் 2006 ஆம் ஆண்டு அமைதிப்பேச்சுகளுக்கான கதவுகள் பூட்டப்பட்டு சிங்கள படைகளுடன் இறுதிப்போர் ஆரம்பமாகியிருந்தது. வட போர்முனையில் கடும் போர் நடந்துகொண்டிருந்த சமநேரத்தில் மன்னார், வ்வுனியா, மணலாறு என களமுனைகள் திறக்கப்பட்டு வன்னி முழுமையும் போரரங்காக மாறியிருந்தது. இந்நிலையில் முகமாலைப் பகுதியில் சண்டையில் நின்ற நிதித்துறைப் படையணி பின் நகர்த்தப்பட்டு படையணி ஒழுங்குபடுத்தலுடன் மன்னார் தம்பனை, பண்டிவிரிச்சான் பகுதிகளைப் பொறுப்பேற்று சிங்களப் படைகளின் முன்நகர்வுகளை தடுத்து சண்டையிட்டுக்கொண்டிருந்தது. தொடர்ந்தும் மன்னாரில் இருத்து முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம் வரை நிதித்துறைப்படையணி போரிட்டிருந்தது. 2009 இன் தொடக்கமே கிளிநொச்சி இடம்பெயர்வும் நெருக்கமான சண்டைகளும் பின்நகர்வுகளுமாக இருந்த காலம். அக்களச்சூழலில் நிதித்துறையின் ஆளுகைக் கட்டமைப்புகளில் உள்ள போராளிகள் படையணிக்கு மாற்றப்பட்டு களமுனைகளில் சண்டையிட்டுக்கொண்டிருந்த போது அன்பழகனும் போராளிகளை வழிநடத்தும் பொறுப்பாளனாய் களமுனையில் நின்றிருந்தார். அந்நேரத்தில் எதிரியுடனான சண்டையில் நெற்றிப் பகுதியில் விழுப்புண்ணடைந்து மருத்துவமனையில் சேர்ககப்பட்டு சிகிச்சைபெற்ற பின் மருத்துவ ஓய்வில் நின்றார். அவருடைய காயம் முழுமையாக குணமடையாத நிலையில் சண்டைக் களங்களில் காணப்பட்ட ஆளணிப் பற்றாக்குறை காரணத்தினால் திரும்பவும் இரட்டை வாய்க்கால் போர் முன்னரங்கப் பகுதியில் ஒர் அணிக்குப் பொறுப்பாளராக களப்பணியாற்றினார். அப்போதும் எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் உடல் முழுவதும் சிறு சிறு விழுப் புண்களுக்குள்ளாகி மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருந்த போது காயங்கள் முழுமையாக குணமடையாத போதும் களப்பணிக்கு விரைந்து படையணிகள் மீள் ஒழுங்குபடுத்த வேண்டிய நெருக்கடியான அக்கணத்தில் மீண்டும் படையணியுடன் இணைக்கப்பட்டு ஒரு தாக்குதல் அணியின் பொறுப்பாளராக களமுனை சென்றார். அவ் அணி குறுகிய காலப் பயிற்சியுடன் முள்ளிவாய்கால் காப்பணையை பலப்படும் பணியில் ஈடுபட்டிருந்தது. அந்நாட்களில் சிங்களப்படை காப்பணையை அண்மித்திருந்த நிலையில் கண்ணிவெடிப் பிரிவின் அணி ஒன்றுடன் முன்னகர்ந்து அணையை கடந்து சென்ற போது சிங்களப்படையின் குறி சூட்டணியின் தாக்குதலில் நெற்றியில் குண்டேந்தி முள்ளிவாய்கால் மண்ணில் தமிழினத்தின் விடிவிற்காய் மாவீரர் லெப் கேணல் அன்பழகனாக தமிழீழத்திற்கான கனவை நெஞ்சினில் சுமந்து கொண்டு தன்னுயிர் ஈந்து விதையானார். -நிலா தமிழ் https://www.thaarakam.com/news/aa3061c3-d377-42c0-bb05-3d78a31a94c7- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதுவும் யாழ் களம் வழங்கும் சேவைதானே.😉 - லெப் கேணல் வீரமணி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.