Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. லெப்.கேணல் விக்ரர் (மன்னார் மாவட்டத் தளபதி) மருசலின் பியூஸ்லஸ் பனங்கட்டிக்கொட்டு, மன்னார். வீரப்பிறப்பு:24.11.1967 வீரச்சாவு:12.10.1986 நிகழ்வு:மன்னார் அடம்பனில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் சமரில் வீரச்சாவு வீர வணக்கங்கள்
  2. அக்டோபர் 9, சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம் – பேரா. எஸ். மோகனா உலகின் எங்கு ஏகாதிபத்தியம் என்றாலும் எழும் சே ”உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” – சே .. “உண்மையில் நான் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவன் மேலும் கியூபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவைச் சேர்ந்தவன், ஆசியாவைச் சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவைச் சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன்”… எர்னெஸ்டோ சே குவேரா எந்த நாட்டின் விடுதலைக்கு என் உயிர் தயார்.. சே “நான் அர்ஜெண்டினாவில் பிறந்தேன். அது ஒன்றும் ரகசியமல்ல, நான் ஒரு அர்ஜென்டிணன், ஒரு கியூபன், அதே சமயம் அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேச பக்தனாகவும் உணர்கிறேன். யாருடைய வேண்டுகோளும் இன்றி, இதில் எந்த ஒரு நாட்டின் விடுதலைக்காகவும் நான் என் உயிரைத் தரவும் தயாராக இருக்கிறேன்”… சே . புரட்சியாளன் எர்னெஸ்டோ சே குவரா, மருத்துவர் வரலாற்று நாயகன், நமக்கெல்லாம் ஆதர்ச புருஷராகவும், உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் போராளியாகவும் உள்ள, நம்மால் செல்லமாக சே என்று அன்போடும் தோழமையோடும் அழைக்கப்படும் சேவின் பெயர், எர்னஸ்டோ சே குவேரா. எர்னஸ்டோ சே குவேராவின் வீரம் செறிந்த புரட்சிக் குரல் ஒலிக்க என்றும் நம்மிடையே வாழ்கின்ற சேவின் நினைவு தினம் அக்டோபர் 9 , (Ernesto “Che” Guevara June 14,1928 – October 9, 1967). புரட்சியாளர் எர்னஸ்டோ சே குவரா அர்ஜெண்டினாவின் மார்க்சிய புரட்சியாளர், மருத்துவர், ஒரு கட்டுரையாளர், அறிவுஜீவி, கொரில்லாப் போராளி & ராணுவ புரட்சியாளர். கியூபாவின் புரட்சியில், ஜனநாயக அமைப்பில் சேவின் பங்கு ஏராளம், சே என்ற அர்ஜெண்டினா பேருக்கு நண்பர்/ தோழர் என்று பொருளாம். சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்.. போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். கியூபப் புரட்சியின் முக்கிய கதாநாயகன். தாயிடம் அன்பு பொழிந்த சே தன் சிறுவயதில் தாயிடம் ஏராளமான அன்பு வைத்திருந்தவர். தாயிடம் மிகவும் நெருக்கம் உள்ளவராகவும் இருந்தார். நோய்வாய்ப்பட்டதால் அதிகமாகப் புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார். புத்தகம் படிப்பதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் எர்னஸ்டோ சே. ஆஸ்துமாவின் அழுத்தத்தினால் 9 வயதிலேயே அதிகம் பாதிக்கப்பட்டவர் சே. எனவே அன்னைக்குச் சேயின் மேல் அதீத அன்பு. வீட்டிலேயே தாயின் கவனிப்பில் படித்தார் சே. 2 & 3வது வகுப்புகள் மட்டுமே முறையாகப் பள்ளிக்கூடத்தில் கற்றார். சிறுவயதில் போர் செய்தி சேகரிப்பு சேவின் 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு போர்ச்செய்திகள் சேகரித்தார். அப்போது சே சிறுவயதிலேயே போர் தொடர்பான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார் எர்னெஸ்டோ. அங்கிருந்து துவங்கியதுதான் எர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் அரிச்சுவடி.. அது முதல் சேவை இந்த அலை சமூகத்தின் அவலங்களைத் தேட வைத்தது. ஆஸ்துமாவும், ரக்பி விளையாட்டும் இளம் வயதில் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு. மோட்டார் சைக்கிள் பயணமும், புரட்சியும் தனது வயதில் 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் தன் நண்பருடன் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையிலிருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்தார். இதற்காகத் தீர்வுகளை யோசித்த சே “பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்குப் புரட்சி மூலமே தீர்வு காணமுடியும்” என நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாத்தமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது. இயற்கை ஈடுபாடும் பயணம், கவிதையும் சே-வின் மனம் மக்களின் பாதிப்பில் மூழ்கினாலும் மனம் சில சமயம் இயற்கையுடன் கொஞ்சியது. எர்னெஸ்டோவும், ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என காற்றில் பறக்கும் புரவியாக பறந்தது. மனம் அவர்களை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என எர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் எர்னெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே எர்னெஸ்டோ காற்றில் மிதப்பார். சே மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது, எடுத்த குறிப்புக்களை வைத்து “மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூல் எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாக அது தேர்வு செய்யப்பட்டது. புரட்சியின் குரல் சே தனது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து போராட்டங்களையும், போர்களையும் இடைவிடாமல் சந்தித்து வெற்றிகண்ட அயர்விலா போராளி சே..! சே என்ற ஒரு சொல் ஒரு தனி மனிதரைக் குறிக்கவில்லை. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும், அடிமைப்பட்ட மக்களின் மனசாட்சி அது..! அனைத்து உலக மக்களின் புரட்சியின், போராளியின் சின்னம் சே..! சேகுவேரா பிறப்பால் ஒரு அர்ஜென்டினராக இருந்தாலும் கியூபாவின் விடுதலைக்காக தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். 1959 ல் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது. இங்கு சேவுக்கு பெரிய பதவிகள் தரப்பட்டன. ஆனால் அதற்குப் பின் பொலிவியாவில் போராட்டம் நடப்பதாக அறிந்து கியூபாவை விட்டு, அனைத்துப் பதவிகளையும் துறந்து, 1965 ல் தனியாளாக கியூபாவை விட்டு வெளியேறி பொலிவியா சென்றார். அங்கே அடர்ந்த காட்டினூடே படைகளைத் திரட்டினார். சமரசமில்ல போராளி சே யின் கொலை கொரில்லா போர் பற்றி எர்னெஸ்டோ பல நூல்கள் எழுதியுள்ளார். சமரசமில்லாத போராளி சே. பொலிவியாவில் கொரில்லாப் போரின் போது காலிலும் தொழிலும் குண்டு பட்டு அவதிப்பட்டார் எர்னஸ்டோ. ஆனால் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தில் ஒரு இராணுவ நடவடிக்கையின்போது சே கைது செய்யப்படுகிறார். பொலிவிய இராணுவத்தின் அதிகாரியான மரியா டெரான் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் எர்னெஸ்டோ சே குவாராவை அக்டோபர் 9-1967 இல் சுட்டுக் கொல்கிறான். அதற்கு முன்பே, அமெரிக்க உளவுத்துறை அதிகாரியான பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவனும் சே -வைக் கொல்ல ஆணை பிறப்பிக்கிறான். இதானால் மரியா டெரான் ஆணவமும், அதிகார வெறியும் கொண்டு, தன் பிறந்த நாளில் அருந்தியிருந்த மதுவின் போதையில் எர்னெஸ்டோ சே குவாராவை சுட்டுக் கொல்கிறான். மரணிப்பு நிரூபிக்க மணிக்கட்டுக்கள் துண்டாடல் தன் நெஞ்சில் சுடப்படுவதற்கு முன், டெரானைப் பார்த்து அனல் கக்கும் வார்த்தைகளைக் கக்குகிறார் சே. என்னை நீ சுடப்போகிறாய் என்று தெரியும், சுடு குள்ள நரியே ..! நீ ஓர் ஆண்மகனைக் கொல்லப் போகிறாய் என்றதுதான் தாமதம், உடனே சே -வின் உடல் துப்பாக்கி குண்டுகளால் சல்லடைத் துளையாக்கப்பட்டது. உடலை சின்னாபின்னமாக சிதைக்கின்றனர் ராணுவத்தினர். சே -வுடன் இன்னும் 6 புரட்சியாளர்களும் கொல்லப்பட்டனர். சே கொல்லப்பட்டதை , வெளி உலகுக்குச் சொல்ல, நிஜமாகவே இறந்து விட்டார் என்பதை உறுதி செய்ய, அவரின் கை ரேகைகளைப் பதிக்க ஏர்னஸ்டோவின் கைகளை மணிக்கட்டுடன் வெட்டி கொண்டு போகின்றனர் பாவிகள். எழுந்து நின்று சுடச்சொன்ன சே பின்னர் எர்னெஸ்டோவின் கைகள் கியூபா அரசுக்கு வந்து சேர்ந்தன. உடலினை இராணுவம் விமானத்தின் ஊடு தளத்தில் புதைத்தது. சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது. கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்ற போராளி, அஞ்சா நெஞ்சர் எர்னெஸ்டோ. தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார். (காலில் அப்போது குண்டடிபட்டிருந்தது) கொன்றவன் வாக்கு மூலம் & எலும்புகள கண்டுபிடிப்பு சே குவேராவின் இறப்பு பற்றி பின்னர் 1997 ம் ஆண்டு, அமெரிக்க உளவாளி ரோட்ரிக், உத்தரவிட்ட பிராடோ மற்றும் கொலை செய்த மரியா டெரான் வாக்கு மூலம் அளித்தனர். 30 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் புதைக்கப் பட்டிருந்த எர்னஸ்டோவின் புதைவிடம் தோண்டப்பட்டது. புதை பொருள் ஆய்வாளர்களால் விமான ஊடு பாதையிலிருந்து எடுத்த அந்த 7 எலும்புகளும் இனம் காணப்பட்டன. 1967 ம் ஆண்டு, அக்டோபர் 10 ம் நாள் எழுதிய பிரேத சோதனையின் குறிப்புகளிலிருந்தும், வெட்டி எடுத்து வைத்திருந்த மணிக்கட்டுடன் கூடிய கைகளிலிருந்தும், கிடைத்த தடயங்களான மணிக்கட்டின் அமைப்பு, பற்களின் அமைப்பு, துப்பாக்கி சூட்டின் தழும்புகள் ஆகியவற்றைக் கொண்டு ஏழு பேரின் எலும்புகளும் அடையாளம் காணப்பட்டன. தேசிய எல்லைகளை உடைத்த சர்வதேச புரட்சியாளர்கள் என அவர்களின் பெயர்கள் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரியாதை செய்யப்பட சே வின் எலும்புகள் 1997 ல் சேவின் எலும்புகளுக்கு மரியாதை செலுத்தும் மக்கள் புரட்சியாளர்களின் எலும்புகள் இராணுவ மரியாதையுடன் 1997 , ஜுலை 2 ம் நாள் பொலிவியாவுக்கு சிறப்பு விமானம் மூலம் வருகிறது. 30௦ ஆண்டுகள் கழிந்த பின் பொலிவியாவின் ஹவான புரட்சி மாளிகையின், சர்வதேச புரட்சியாளர்களின் எலும்புகள் மரக் கலசத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 40 லட்சம் மக்களின் கண்ணீர் அன்பளிப்புகளுடன் , அவர்கள் சாந்தா கிளாரா என்ற இடத்தில் கல்லறையில் வைக்கப்பட்டனர். அமைக்கப்பட்டது. நினைவுச் சின்னம் அக்டோபர் 17 ம் நாள் அந்த இடத்தில் அவர்களது நினைவுச் சின்னம் கியூபாவில் நிறுவப்பட்டது. அந்த இடம்தான் கியூபாவில் எர்னெஸ்டோ போரிட்ட கியூபாவின் போர்க் கொத்தளம். அவன் வென்ற இடம். சே வெற்றி பெற்ற இடத்திலேயே இன்று மீளா ஆழ்துயிலில் இருக்கிறார். துப்பாக்கி குண்டின் முன்னே சே யின் கவிதை பிடலுக்கு துப்பாக்கி குண்டுகள் நெஞ்சைத் துளைக்க வந்தபோது, எர்னெஸ்டோ சொன்ன கவிதை பிடலுக்கு ஒரு பாடல் என்று.: “எம் வழியில் ஈய ரவை குறுக்கிடுமேயானால் நாம் கேட்பதெல்லாம் எமது கொரில்லா எலும்புகளை மூட, அமெரிக்கக் வரலாற்றுத் திசை வழியில் கியூபக் கண்ணீரில் ஒரு மூடுதுணி வேறெதுவும் வேண்டேன்”. இன்று புரட்சிப் பூவின் நினைவு நாள். அவருக்காக இந்த கட்டுரை. மோகனா. https://bookday.in/october-9-is-the-anniversary-of-the-international-revolutionary-che-guevara-prof-s-mohana/
  3. 2ஆம் லெப். மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று! AdminOctober 10, 2021 தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 34வது நினைவுநாள் இன்று! தமிழீழ விடுதலைப் போரில் களப்பலியான முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களுக்கு வீரவணக்கம். தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப் போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆழப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது M16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி. அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத் தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது. “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், “என்ர ஆயுதம் பத்திரம்.என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ”எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். http://www.errimalai.com/?p=24278
  4. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! AdminOctober 5, 2021 இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்கபலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல்குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்.) திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று,திருகோணமலை.) மேஜர் அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் –சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) கப்டன் பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா– வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன் கரன் (வைத்திலிங்கம் மனோகரன் –சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.) கப்டன் மிரேஸ் (தவராஜா மோகனராஜா –வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன் நளன் (கணபதிப்பிளளை குணேந்திரராஜா –பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.) லெப்டினன்ட் அன்பழகன் (தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்.) லெப்டினன்ட் தவக்குமார் (சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.) 2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட் (கபிரியேல் பேனாட்மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.) 2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (ஞானபிரகாசம்பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு,யாழ்ப்பாணம்.) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்டபோது 06.10.1987 அன்று கப்டன் ரகுவப்பா (இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை,யாழ்ப்பாணம்.) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமதுஇன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூருகிறோம். http://www.errimalai.com/?p=8078
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎈🎊 வாழ்க வளமுடன்🎂
  6. அமைதியான ஆளுமை, ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல் - லெப். கேணல் சித்தார்த்தன்.! மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல் விருத்திக்கு அது அடித்தளமாகவும் இருந்தது. “பாவம் நல்லா மாட்டுப்பட்டுத்துகள், எப்படித்தான் நிண்டு பிடிக்கப்போகுதுகளோ” மூத்தபோராளி ஒருவன் பரிதாபப்பட்டான். “ஏன் அண்ண, உயிரையும் கொடுப்பம் எண்டுதானே போராட வந்தனாங்க, நிட்சயம் எதுக்கும் நிண்டுபிடிப்பம்.” மிக அமைதியான சுபாவம் கொண்ட அந்தப் புதிய போராளியிடமிருந்து வந்த நம்பிக்கையும், உறுதியுமிக்க வார்த்தைகள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன. “தம்பி உங்கட பேரென்ன?” “சித்தார்த்தன்” ஆம். அவனிடம் தொனித்த அந்த நம்பிக்கை, உறுதி அவன் போராளியாக வாழ்ந்த காலம் முழுவதும் அவனிடம் நிறைந்தே இருந்தது… இன்னும் வலிமையாய்…. மட்டக்களப்பில் 1992இல் தனது தொடக்கப்பயிற்சியை நிறைவுசெய்த “சித்தா” (நாங்கள் அவனை அப்படித்தான் அழைப்போம்) படைத்துறைப் பயிற்சிப் பிரிவில் இணைக்கப்படுகின்றான். இந்தப் பிரிவில் நின்றுபிடிப்பது கஸ்டம் என்று கூறப்பட்ட அந்த நாட்களில் அவன் இங்கு தன்னை மிக விரைவாக தகவமைத்துக் கொண்டான். தொடர்ச்சியான பயிற்சிகள், மிகக் கடினமான வேலைகள், புதிரான பாடங்கள், எதிரியின் தாக்குதல்கள், எமது வலிந்த தாக்குதல் முன்னெடுப்புகள் என்றிருந்த அந்த நாட்களில், சராசரிக்கு மேற்பட்ட ஒரு போராளியாக அவன் இனங்காணப்பட்டான். மிக அமைதியான சுபாவமும், உதவும் பண்பும், கடினமான வேலைகளைக்கூட தானாக விரும்பி ஏற்றுச் செய்யும் பக்குவமும், அவனது செயற்திறணும் போராளிகள் மத்தியில் அவனுக்கென்றொரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. பூநகரி கூட்டுப்படை முகாம் மீதான “தவளை” நடவடிக்கையே வடதமிழீழத்தின் அவனது முதற் களமாக அமைந்தது. சமர் முடிந்த கையோடு எழுதுமட்டுவாள் பகுதியில் பயிற்சி ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இப் பயிற்சிக் காலத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களே பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவனது செயற்பாடுகள் அமைந்திருந்தன. அதேபோன்று, அவன் பயிற்சி வழங்கத் தொடங்கியபோது, வழமையான “பயிற்சி ஆசிரியர்கள்” என்ற தோற்றப்பாட்டிற்கு அப்பால் ஒரு வேறுபாடான பயிற்சி ஆசிரியராக அவன் இனங்காணப்பட்டான். செயற்திறண், முன்மாதிரி, அணுகுமுறை என்பவற்றால் “சித்தா மாஸ்ரர்” என்ற பெயர் போராளிகளின் மனங்களில் நிலைபெற்ற ஒன்றாக மாறிவிட்டிருந்தது. படைத்துறை தொடர்பிலான தொழிநுட்பக் கற்கைநெறி ஒன்றினைப் நிறைவு செய்து தென்தமிழீழம் திரும்பத் தயாரான வேளை சிறிலங்காப் படையினரால் “முன்னேறிப்பாய்தல்” நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்பட்ட “புலிப்பாய்ச்சல்” உட்பட்ட தாக்குதல்களில் பங்கு கொண்டான். இவற்றைத் தொடர்ந்து கொக்குளாய் இராணுவமுகாம் தாக்குதலிலும் பங்கெடுத்தான். அவன் சார்ந்திருந்த ஜெயந்தன் படையணி மீண்டும் தென்தமிழீழம் திரும்பியபோது சித்தாவும் புறப்பட்டான். பயிற்சி ஆசிரியர் பிரிவில் 1992 இல் இணைந்து கொண்டவன் மிக விரைவிலேயே அப்பிரிவின் பொறுப்பாளராக உயர்ந்தான். இக் காலகட்டத்தில் மட்டக்களப்புப் பகுதியில் இடம்பெற்ற பல தாக்குதல்களில் பங்கு கொண்டான். 1993இல் ஜெயந்தியாய இராணுவ முகாம் தாக்குதலுடன் தொடங்கிய இவனது சமர்க்களப் பட்டறிவு, மாவடிவேம்பு படை முகாம் , கிண்ணையடி படை முகாம், குடாப்பொக்கணை காவல்துறை நிலையம், புளுகுணாவ சிறப்பு அதிரடிப்படை முகாம், மாவடிவேம்பு படை முகாம், கறப்பள படை முகாம், வவுணதீவு படை முகாம் என விரிந்ததுடன் எம்மால் நடாத்தப்பட்ட பல்வேறு பதுங்கித் தாக்குதல்களும் முற்றுகை முறியடிப்புகளும் அப்பட்டறிவிற்கு மேலும் வலுச்சேர்த்தன. யாழ்.குடாநாட்டிற்கு பாதை திறக்கவென சிறிலங்காப் படைத்தரப்பு முன்னெடுத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை தொடங்கப்பட்டபோது மீண்டும் தென்தமிழீழப் படையணிகள் வன்னி நோக்கி விரைந்தன. எதிர்கொள்ளப் போகும் சமரின் பரிமாணத்தைக் கருத்தில் கொண்டு ஜெயந்தன் படையணி மீள் ஒழுங்கு செய்யப்பட்டது. இதன்போது ஆற்றல் மிக்க அணித்தலைவர்களின் தேவையும் உணரப்பட்டது. இவ் அடிப்படையில் ஒரு கொம்பனி கொமாண்டராக சித்தா நியமனம் பெற்றான். அந்நாட்களில் கொம்பனி கொமாண்டராக, கொம்பனி மேலாளராக, குறித்ததொரு வேளையில் படையணியின் தாக்குதற் தளபதி என, பொறுப்பேற்று களங்களில் அணிகளை வழிநடத்தினான். “ஜெயசிக்குறு” எதிர்ச் சமர்முனையின் மாங்குளப் பகுதி, முன்னணிக் காவலரண் பகுதியில் அவனை சந்திக்கிறோம். கையில் ஏற்பட்ட விழுப்புண் முற்றாக மாறாத நிலையில் அவன் இயல்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான். “என்ன சித்தா வழமைபோல காயம் மாறமுதல் வந்தாச்சி போல…. இது எத்தனையாவது….” சித்தாவிடமிருந்து அந்த வழமையான புன்னகையே பதிலாகக் கிடைத்தது. “முதல் மூண்டு… ஜெயசிக்குறுவில நாலு…. மொத்தம் ஏழு” அருகில் நின்ற போராளி அழுத்தமாய் கூறுகின்றான். ஓ… இவன் என்ன மாதிரியான மனிதன். ஏற்கனவே மூன்றுமுறை, அதில் கறப்பளையில் மார்பை ஊடறுத்த ரவை அவனை சாவின் வாசலுக்கே கொண்டுசென்றது. தாண்டிக்குளத்தில் காயமடைந்து அது மாறமுன்பே களம் வந்தான், மீண்டும் பெரியமடுவில்… அது மாறுமுன் மீண்டும் களம், அடுத்தது ஓமந்தையில்… குணமாகும் முன் மாங்குளம் வந்தான், மாங்குளத்திலும் அவனைத்தேடி ரவை வந்தது. இதோ இப்போது கைக்காயத்துடன் முன்னணியில்…. ஓயாத அலைகள் – 2. கிளிநொச்சி பிரிகேட் தளத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல்கள் தொடங்கின. இத் தாக்குதல்களில் ஜெயந்தன் படையணியின் கொம்பனிகள் வெவ்வேறு முனைகளில் சண்டையிட வேண்டியிருந்தது. சித்தாவின் அணிக்கு கிளிநொச்சி குளப்பகுதி முன்னணி அரண் வரிசையைக் கைப்பற்றி குறித்த இலக்கு நோக்கி தாக்குதல் தொடுக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. நீர் நிறைந்திருந்த குளத்தின் ஊடாக மிக இரகசியமாக நகரவேண்டியிருந்தது. நகர்வை மிகச் சிறப்பாகச் செய்த அவ்வணி குள பண்டை கடந்து கொண்டிருந்தபோது அங்கு சண்டை மூண்டது. சாதகமற்றதொரு சூழ்நிலையில், தரையமைப்பில் சண்டை தொடங்கி விட்டது. உக்கிரமான தாக்குதல், அந்த அணியின் வீரர்கள் அதன் தலைவனைப்போல் உறுதியானவர்கள், இறுதிவரை போராடக்கூடியவர்கள்….. அடுத்த நாள் கிளிநொச்சி பிரிகேட் தளம் அழிக்கப்பட்டு, கிளிநொச்சி நகர் மீட்பு வெற்றிச் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது…. குறித்ததொரு பயிற்சித் திட்டம் தொடர்பாகக் கதைப்பதற்காக தேசியத் தலைவரால் அழைக்கப்பட்டிருந்தோம். மூத்த தளபதிகள் சிலருடன் தேசியத் தலைவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எல்லைப்படை வீரர்களுக்கான பயிற்சிப் பாசறைக்கு பொருத்தமான பெயர் சூட்ட வேண்டும் என மூத்த தளபதி ஒருவர் கோரிக்கை வைக்கிறார். பலரும் பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர். தேசியத் தலைவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்…. “சித்தா பயிற்சிப் பாசறை என்று பெயர் வையுங்கோ.” “லெப். கேணல் சித்தா ஒரு அமைதியான சுபாவம் கொண்ட ஆற்றல் மிக்க லீடர், ஒரு நல்ல பயிற்சி ஆசிரியர், களத்தில் பலதடவை காயப்பட்டவர், கடைசிச் சண்டையில்கூட மிக உறுதியாகச் செயற்பட்டவர்….” என சித்தா மாஸ்ரரைப் பற்றி தேசியத் தலைவர் கூறிக்கொண்டு போக எமக்கு ஆச்சரியமாகவும், அதேவேளை மிகப் பெருமையாகவும் இருந்தது. ஒரு உண்மை வீரனுக்குக் கிடைக்கக்கூடிய அதியுயர் மதிப்பு இதைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?. எமது போராட்ட வரலாற்றில் ஒரே களத்தில் நான்குமுறை விழுப்புண் ஏற்று ஒவ்வொரு விழுப்புண்ணும் மாறும் முன்பே களம் வந்து படைநடத்திய வீரன் அவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெரும் சமர்க்களத்தில் அவன் ஐந்தாவது முறையாகவும் காயப்பட்டான். மீண்டும் அவன் களம் வரவில்லை, வரவேயில்லை. சித்தா….அமைதியான ஆழுமை. ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல். நினைவுப்பகிர்வு:- சுடரவன். விடுதலைப்புலிகள் (மார்கழி 2005 – தை 2006) https://www.thaarakam.com/news/8cc6303e-8121-4064-8fb1-38879ce975fb
  7. நீண்ட கடற்சண்டையில் அனுபவமுள்ள உத்வேகமான போராளி லெப்.கேணல் சீராளன்... லெப்.கேணல் சீராளன் தேவதாஸ் சூரியவதணன் - 12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:-13.11.1980 வீரச்சாவு: - 24.09.2006 நிகழ்வு: -திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவு 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன் அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில் சிறந்து விளங்கியதுடன் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினான். இவனது செயற்பாடுகளைக் கவனித்த அப்போது கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளரான மாவீரரான லெப் கேணல். நரேஸ் அவர்கள் ராடர் நிலையத்திற்க்கு செல்லும் போது இவனையும் அழைத்துச் சென்று அங்கே ராடரில் எப்படி இலக்குகளை இணங்கானுவது போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் அதன் நுணுக்கங்களையும் அவனுக்கு விளங்கக்கூடிய வகையில் சொல்லிக் கொடுத்து அவனை ஒரு சிறந்த தொலைத்தொடர்பாளனாக வளர்த்துக் கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் நிலஆக்கிரமிப்பு நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கைக்கெதிரான விடுதலைப்புலிகளின் புலிப்பாய்ச்சலுக்கான கடற்சமரில் லெப்.கேணல் நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய சீராளனோ தனித்துவிட்டவனாக உணர்ந்தபோதும் தலைவர் அவர்களையும் மாவீரர்களையும் மனதில் நினைத்து தனது வழமையான செயற்பாடுகளில் புதிய உத்வேகத்துடன் ஈடுபட்டான்.தொடர்ந்து லெப் கேணல் நரேஸ் அவர்களின் நினைவாக கடற்தாக்குதல் படையணி உருவாக்கப்பட்டபோது இவனும் அங்கே சென்றான். மேலதிக பயிற்சிகளை முடித்தவன்.கடல் விநியோகப் பாதுகாப்புச் மற்றும் கடற்சமர்களிலும் பங்குபற்றியவன். தொடர்ந்து மாவீரரான லெப் கேணல் மங்களேஸ் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தென் தமிழீழத்திற்கான விநியோக நடவடிக்கையிலும் செவ்வனவே பங்குபற்றினான்.அதனைத்தொடர்ந்து புதிய கனரக ஆயுதங்களின் வரவினையடுத்து அக்கனரக ஆயுதப் பயிற்சிக்கென உள்வாங்கப்பட்டவர்களுள் ஒருவனாக வந்த சீராளன் அப் பயிற்சியிலும் சிறந்து விளங்கினான்.சிறந்த சூட்டாளனாக பயிற்சியை முடித்து வெளியேறியவன் கடற்புலிகளின் சாள்ஸ் படையணியில் இணைக்கப்பட்டு அக்கனரக ஆயுதத்துடன் கடற்சண்டைகளில் ஈடுபட்டான் .தொடர்ந்து தனது தனிப்பட்ட முயற்சியால் சண்டைப் படகின் தொலைத்தொடர்பாளனாக இரண்டாம் நிலைக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான். சமாதன காலப்பகுதியில் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கடற்புலிகளின் கடற்படைக்கான கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சிக் கல்லூரியான லெப் கேணல் நிரோஐன் கடற்படைக் கல்லூரிப் பொறுப்பாளனாக சிறப்புத்தளபதி அவர்களாள் நியமிக்கப்படுகிறான்.அப்பணியிலும் சிறந்து விளங்கி பல போராளிகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதுடன் தனது களஅனுபவங்களையும் சகபோராளிகளுக்கு படிப்பித்தான். சண்டை தொடங்கியவுடன் சண்டைப்படகின் கட்டளை அதிகாரயாகவும் .தொடர்ந்து சண்டைப் படகுகளின் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான்.கடற்சண்டைகளில் மிகவும் திறம்பட படகுகளை ஒருங்கினைத்து செவ்வனவே வழிநடாத்தினான்.இப்படியாக படிப்படியாக வளர்ந்த ஒரு போராளி , நீண்ட கடற்சண்டை அனுபவமுள்ள ஒரு சண்டைக்காரன்,தனக்குத் தெரிந்தவைகளை சகபோராளிகளுக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசான், எந்த வேலையாகிலும் அதை சரியான முறையில் திருப்தியுடன் செய்த வீரன். சக போராளிகளை மதிக்கிற பன்பு. ஒரு சிறந்த நிர்வாகி . இப்படியாக சீராளனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படிப்பட்ட ஒரு வீரனை 24.09.2006 அன்று தென்தமிழீழ விநியோகப் பாதுகாப்பு சமரின் போது புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலின்போது நாம் இழந்துவிட்டோம். எழுத்துருவாக்கம்..சு.குணா. https://www.thaarakam.com/news/8524e8fa-8c8d-46cf-aaad-bdfc17027183
  8. 19.09.1994 அன்று “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடித்து வெற்றிக்கு வித்திட்ட மறவர்கள் நினைவில் கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன், கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 27 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.! தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/d80be2e2-d745-4a55-b148-6d79dd43204b
  9. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…! AdminSeptember 15, 2021 செப்.15 – 1987 🔴தியாக பயணத்தின் முதலாவது நாள்! காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடை பெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வாக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம். 🔴தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா தள்ளாத சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத் திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப் போனார். 🔴போராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்) காலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன. 🔴ஐந்து அம்ச கோரிக்கை 1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும். 2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும். 3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும். 4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக் கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும். பிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக் கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணா விரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 🔴வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன் அதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப் பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றுக் பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன். 15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின், யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். 🔴மாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்… அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி பாட்டுக் கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். “அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க் குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது. கவிதைத் தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத் தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார். 🔴திலீபனின் தியாகப் பயணம் ஓர்….. ஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார்? சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான். 🔴நல்லூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடம்…. உலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா? இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க் கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன். அப்போது ஒர் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணா விரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார். 🔴தமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார். இந்தக் காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பது போல் கைகளை தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார். அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால் தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச் சென்றார். ட வருகை! அன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பை கெடுத்துக் கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார். முதல் நாள் முடிவு, அதிகாலை 1.30 இற்கு உறங்கினார். அவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கிய போது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார். தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொதுமக்களும் கொட்டக் கொட்ட கண்விழித்துக் கொண்டிருந்தனர். இந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது. – தியாக வேள்வி தொடரும்…. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” http://www.errimalai.com/?p=56007
  10. களிறன்ன நறுமாமலர் – ஜெயமோகனின் இரவு: கா.சிவா – அகழ் எழுத்தாளர் ஜெயமோகன் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, கொற்றவை போன்ற பெருநாவல்களையும் வெண்முரசு என்ற பெயரில் 26 நாவல்கள் கொண்ட தொகுதியையும் படைத்துள்ளார். பிரமாண்டமான இவற்றின் நிழலில், அவர் எழுதிய சிறு நாவல்களான ரப்பர், கன்னியாகுமரி, ஏழாம் உலகம், அனல் காற்று, இரவு, உலோகம் போன்றவை மறைந்து கிடக்கின்றன. இவை மட்டுமல்லாமல் குறு நாவல்களும் சிறுகதைகளும் தனியாக குவிந்துள்ளன. இவற்றுள் கன்னியாகுமரி, அனல் காற்று, இரவு மூன்றும் மனிதர்களுக்குள் காமத்தினால் ஏற்படும் சிக்கல்களையும் அதனால் மனதில் உண்டாகும் உலைதல்கள், கொந்தளிப்புகளை பேசுபொருளாகக் கொண்டவை. இவற்றுள் இரவு முதன்மையான நாவலாகும். எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாய் சுட்டிக் காட்டி வெம்மையின் மொழியில் பேசும் பகல் தந்தையைப் போல. பகலை முழுக்க அறியமுடிவதால் சற்று விலக்கம் ஏற்படுகிறது. பெரும்பாலானவற்றை மறைத்து தேவையானதை மட்டும் காட்டி, தண்மையான மொழியில் பேசும் இரவு தாய் போல. இதை முழுவதுமாய் அறியமுடியாததாலேயே அணுக்கமானதாகவும் பிரியத்திற்குரியதாகவும் உள்ளது. பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான சூரியன்களில் ஒன்றை மட்டுமே பகலில் காணமுடிகிறது. ஆனால், இரவில் அளவிட முடியாத தொலைவுகளில் இருக்கும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் காணமுடிகிறது. இப்படி பகலுக்கில்லாத இரவின் தனித்துவ சிறப்புகள் பலபல. அவற்றுள் இரவு நாவலும் ஒன்று. மனிதர்கள் அனைவருமே இரவு வாழ்வை அறிந்தவர்கள்தான். பகலின் வெம்மையை தணித்துக் கொள்ள, பகலின் ஓட்டத்திலிருந்து ஓய்வு கொள்ள, பகலின் கொந்தளிப்புகளை ஆற்றிக்கொள்ள இரவு தேவைப்படுகிறது. ஆறுதல் கொள்ள இரவு இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் பலர் பகலையே எதிர் கொள்கிறார்கள். இரவில் துளிர்க்கும் இன்பத்தை சுவைக்காத எவரும் இப்புவியில் இல்லை. ஆனால், இரவு வாழ்க்கை திணிக்கப்பட்ட காவலர்கள், பாதுகாவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், மென்பொருள் பணியாளர்கள் போன்ற சிலரைத் தவிர பிறருக்கு இரவில் மட்டும் வாழ்வதைப் பற்றி ஒருபோதும் எண்ணம் எழுவதில்லை. கடமைக்கென இல்லாமல் இயல்பான இரவு வாழ்க்கை அமைந்தால் எப்படியிருக்கும் என்பதைக் காட்டுகிறது இந்நாவல். சென்னையில் பெரும் வருமானம் ஈட்டும் ஆடிட்டர் சரவணன் ஒரு மாதம் தனிமையிலிருந்து பணியாற்றுவதற்காக கேரளாவின் எர்ணாகுளத்தை ஒட்டிய காயல்களுக்கு அருகில் அமைந்த இடத்திற்குச் செல்கிறான். அங்கே, அண்டை வீடு இரவில் களியாட்டங்களுடனும் பகலில் தூங்கி வழிந்து கொண்டிருப்பதையும் கண்டு, ஓர் ஆர்வத்தினால் மறுநாள் இரவு அங்கு செல்கிறான். அங்கிருப்பவர்கள் அவனைப் பார்த்தவுடனேயே அன்புடன் வரவேற்று தங்களில் ஒருவனாக உணர வைக்கிறார்கள். இரவுலாவிகளாக வாழும் அவர்களுடைய இனிமையும் உற்சாகமும் அதீதமாக உடைய வாழ்வை, புதிதாக பள்ளிக்கு செல்லும் இளம் பிள்ளையின் ஆர்வத்துடன் பார்க்கிறான். இதுவரை உணராத அந்த வாழ்வின் மாயத்தால் ஈர்க்கப்படும் சரவணன் அவ்வாழ்வில் நீடித்தானா வெளியேறினானா என்பதை நாவல் இரவுக்கேயுரிய நளின மொழியில் கூறுகிறது. அருமையான வாசிப்பனுபவத்தைத் தரும் இந்நாவலின் கதையை கூறி அவ்வின்பத்தைக் குலைக்காமல், அதன் சிறப்புகள் என நான் எண்ணுபவற்றை மட்டும் கூறுகிறேன். விஜயன் மேனன் – கமலா தம்பதிகள் மட்டுமே இரவின் இனிமையை உணர்ந்து அதற்குள் வந்தவர்கள். நீலிமா, மஜீத், பிரசண்டானந்தா, முகர்ஜி, தாமஸ் போன்றவர்களெல்லாம் பகலில் வாழமுடியாமல் இரவு வாழ்க்கைக்கு வந்தவர்கள். இரவு வாழ்க்கைக்குள் வந்தவுடன் தேனில் சிக்கிய சிற்றுயிரென அதன் இனிமையிலிருந்து வெளியேற முடியாதவர்களாகிறார்கள். இரவின் கொந்தளிப்பும் பரவசமும் துயரும் உச்சத்திலேயே உள்ள வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சாக்த வழிமுறைகளை கடைபிடிக்கும் பிரசண்டானந்தா சீடர்களுடன் இரவுக்கு ஏற்ற மாதிரி தனது ஆசிரமத்தில் வழிபாடுகளை நடத்துகிறார். பாதிரியார் தாமஸ் தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வருபவர்களுக்காக இரவு பிரார்த்தணை நடத்துகிறார். பெரும் துயரத்தால் உண்டான அதிர்ச்சியில் மூளை நரம்பில் பிரச்சனை ஏற்பட்டதால், பகலைக் காண முடியாமலான நீலிமா இரவு வாழ்க்கைக்குள் வருகிறாள். இவளுக்காக இவளுடைய அப்பாவும். இவர்களின் வாழ்க்கை முறை கற்பனை என்று ஒரு கணமும் எண்ணமெழுந்திடாத வகையில் இயல்பாக காட்டப்பட்டுள்ளது. சரவணனை நீலிமா பாலைமணல் நீரை ஈர்த்துக் கொள்வதுபோல ஏந்திக் கொள்கிறாள். சரவணனை முதலில் கவர்வதும், தொடர்ந்து அவளை நோக்கி அவனை ஈர்ப்பதும் அவளின் மனமல்ல உடல்தான். இரவின் மயக்கும் பூடகத் தன்மையுடன் அவளும் இருப்பதனாலேயே இவன் மனம் ஏனென்றே புரியாமல் அவளை நோக்கியே அலைவுறுகிறது. அவள் நடத்தைகள் ஒருவித அசௌகரியத்தை அளித்தாலும், பிரிந்து சென்றாலும் கவலையில்லை என அவள் கூறினாலும் கடுமணத்தின் மேல் உண்டாகும் பிரியம்போல சரவணனின் மனம் அவளை நோக்கியே செல்கிறது. தன் புதிர்த்தன்மையாலேயே விலக்கவும் ஈர்க்கவும் செய்யும் இரவின் ஒரு குறியீடு போலவே நீலிமா பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இரவுதான் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான பொழுது என்பதை பல்வேறு தர்க்கப்பூர்வமான காட்சிகளினால் விவரிக்கிறது நாவல். காணும் காட்சிகளில் வெளிப்படும் அழகு, தண்மையான வெளி, மென்மையான ஒளி, உற்சாகமான மனநிலை எல்லாம் இரவில்தானே அமைந்துள்ளது. மனிதனின் அத்தனை கலை வடிவங்களும் இரவில் நிகழ்த்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன எனக் கூறுவதையும் யாராலும் மறுக்கமுடியாது. ஆசிரியரின் பெரும்பாலான கதைகளில் வாசகர்கள் தங்களின் உணர்வால் சிந்தனையால் முன்சென்று உணர்வற்கான இடைவெளி இருக்கும். ஆனால் இந்நாவலில் ஒரு அத்தியாயத்தில் வாசகனின் தர்க்க மனம் ஏற்காதவாறு ஒரு சம்பவம் நிகழும். அடுத்த அத்தியாயங்களில் ஏன் அப்படி நிகழ்ந்தது என்பதை தர்க்கப்பூர்வமாக விவரிக்கப் பட்டிருக்கும். உதாரணமாக சரவணனை முதல் முறையாக பார்த்தவுடனேயே நீலிமா காதல் கொள்வதாக காட்டப்பட்டிருக்கும். இதை வாசித்தவுடன் இதென்ன திரைப்படக் காட்சிபோல பெரும் கற்பனையாக உள்ளதே எனத் தோன்றும். சில அத்தியாயங்களுக்குப் பிறகு வாசிப்பவர் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இதற்கான விளக்கம் இருக்கும். ஒரு நிர்வாண சடங்கு முறையைக் கண்டவுடன் சரவணன் மயங்கி விழுகிறான். ஏன் இது நிகழ்கிறது என்பதற்கான பதில் அடுத்த அத்தியாயங்களில் விவரிக்கப் பட்டிருக்கும். பொதுவாக இம்மாதிரியானவற்றை வாசகனே உய்த்துணருமாறு விடுபவர் இதில் விவரிப்பதற்கு காரணம், தவறான ஒன்றை எண்ணிக் கொள்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால்தான் என நான் கருதுகிறேன். இரவில் மட்டும் மீன் பிடிக்கும் தோமா, பெரியச்சன் பாத்திரங்கள் மூலம் பொருளீட்டுவதற்காக இரவு வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்களையும் அறிய முடிகிறது. அம்மீனவர்களுக்கு உணவு அளிக்கும் கடைக்காரர்களும் இரவுலாவிகள்தான். ஆனால் இவர்களெல்லாம் பெரும் பரவசம் ஏதுமின்றி, பெரும் கலைக்கோவிலினுள் அதன் சிற்பத்தையோ மரபையோ அறியாது கடமைக்கென பணியாற்றும் அதிகாரிகள் போல, விதிக்கப்பட்டதெனவே இரவு வாழ்வை வாழ்கிறார்கள். மீனவர்களுடன் சிறு படகில் காயல் வழியாக கடலுக்குள் செல்லும் சரவணன் சுற்றிலும் விளக்கொளி இல்லாத இருளில், தொலைவில் வானில் சுடரும் விண்மீன்களையும் கடலில் பிரதிபலிக்கும் அவற்றின் ஒளியையும் கண்டு இயற்கையின் பிரமாண்ட அழகையும் விரிவையும் உணர்கிறான். இதனால், பெரும் மனவெழுச்சியடைந்து இரவு வாழ்க்கையை விட்டு விலகுவதென எடுத்த முடிவை கைவிடுகிறான். இக்காட்சி இரு பேரிலக்கிய காட்சிகளை நினைவுக்கு கொண்டுவருகிறது. ஒன்று, லேய் தல்ஸ்தாயின் “போரும் அமைதியும் ” நாவலில் நீல வானின் பின்னணியில் நெப்போலியனைக் காணும் போது மனிதர்களின் இருப்பும், அவன் லட்சியமும், வாழ்வும் எத்தனை சிறியது என பிரின்ஸ் ஆண்ட்ரூஸ் அடையும் தரிசனம். மற்றொன்று, பியோதர் தஸ்தவேஸ்கியின் “கரமோசவ் சகோதரர்கள்” நாவலில் அல்யோஷா, முதியவர் ஸோசிமாவின் உடலில் இருந்து துர்நாற்றம் வெளிவந்ததால் உண்டான மன சஞ்சலத்துடன் இருக்கும்போது, கருநீல வானத்தையும் நட்சத்திரங்களையும் கண்டு உள்ளெழுச்சியுடன் மனமுறுகி பூமியை முத்தமிட்டு உலகிலுள்ள அனைவரையும் மன்னிக்கவும், அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும் விரும்பும் இடம். இம்மூன்று காட்சிகளையும் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும்போது பெரும் மனயெழுச்சி உண்டாகிறது. அதே நேரத்தில், சூழ்ந்து, விரிந்திருக்கும் ஒளிர் வானத்தை பார்க்காமல் வாழும் மனிதர்கள்தான் குறுகிய மனதுடன் வாழ்கிறார்களோ, அதனைக் கண்டால் மனம் விரிந்துவிடுவார்களோ என்றும் எண்ணம் தோன்றுகிறது. நாவல், சரவணனின் எண்ணவோட்டங்களாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் இரு அத்தியாயங்களில் இரவை பற்றிய அவன் எண்ணங்கள் பொதுவான மன நிலையுடன் ஒரு தட்டையான பார்வையாகவே உள்ளது. பிறகு மெல்ல மெல்ல அவ்வாழ்க்கைக்குள் நுழையும்போது, அவன் பார்வையும் எண்ணவோட்டமும் இரவின் நுணுக்கமான செதுக்குகளையும் உணரும் அளவிற்கு கூர் கொள்வதைக் காட்டி அவனின் பரிணாமத்தைச் சுட்டுகிறது. வாசிப்பவர்களின் உள்ளமும் அதில் தோய்கிறது. மேனன் இரவை அறியும் கணம் ஒரு கவித்துவ தருணமாக உள்ளது. மரநாயின் மரகதக்கல் போன்ற பசும் விழிகள் அவரை இரவின் அற்புதத்திற்குள் இழுக்கிறது. கொன்னைப் பூக்குவியலில் செய்யப்பட்டது போன்ற சிறுத்தையின் மீசை முடிகளில் தண்ணீர்த்துளி ஜொலித்ததை கண்டவுடன் மேனனின் இரவுக்கான அகவிழிகள் திறக்கின்றன. சரவணனின் அகவிழி திறக்கும் கணமும் பெரும் தரிசனம் போலவே காட்டப்பட்டுள்ளது. இதுவரை வானத்தை சாவகாசமாய் பார்த்தேயிராதவன் பார்க்க ஆரம்பிக்கிறான். பல்லாயிரம் விழிகளென சூழ்ந்து, விண்மீன்கள் இவனை பார்க்கின்றன. அவையும் சில கணங்களில் உணர்வுகள் வெளிப்படும் மிருகங்களின் விழிகளாக தெரிய ஆரம்பிக்கின்றன. அவை இரவின் விழிகளேதான். இந்தப் பார்வை மூலம் மேனன் மற்றும் சரவணனின் அகவிழிகள் திறப்பதாக ஓர் எண்ணம் எழுந்தாலும் இரவு தன்னை இவர்களுக்கு காட்டி உள்ளிழுக்கிறது என்பதே உண்மையெனத் தோன்றுகிறது. இந்நாவலை உவமைகளாலேயே கட்டமைத்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு உவமைகளையும் வாசித்து அதை கற்பனையில் காண்பது பேரனுபவமாக உள்ளது. உதாரணமாக இரவு வாழ்க்கைக்கு பழகியபின் சரவணன் பகலைக் காணும் காட்சி. //அதிக வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல பளீரென்று வெளிறிக்கிடந்தது தென்னந்தோப்பு. மரநிழல்கள் நடுவே பீய்ச்சியிருந்த ஒளி சுண்ணாம்பு நீரை வீசி வீசிக் கொட்டியது போலிருந்தது. கீழே கிடந்த காய்ந்த தென்னையோலைகள் சாம்பல்நிறமாக, செத்து மட்கிய கால்நடைகளின் விலா எலும்புகள் போலக் கண்களை உறுத்தின. தென்னைமரங்களின் தடியே இந்த அளவுக்கு அசிங்கமான சாம்பல்நிறம் என்பதை அப்போதுதான் கவனித்தேன். ஓலைகள் உதிர்ந்த வடுக்கள் புண்தழும்புகள் போலிருக்க பிரம்மாண்டமான சிலந்தியொன்றின் நூற்றுக்கணக்கான கால்கள் போல அவை நின்றன. முற்றத்தில் மண் மீது தென்னை ஓலைகளின் நிழல்கள் ஆடிய வெயில் வழுவழுப்பான திரவம் போல சிந்திப் பரவிக் கிடந்தது // மேலும் ஒரு திகைக்க வைக்கும் உவமை “தூங்கும் மிருகம் ஒன்றின் உடல் வழியாக ஊர்ந்து செல்லும் பேன் போல நகரில் சென்றது டாக்ஸி”. இன்னும் ஒரு புதுமையான உவமை “ஜெட் விமானத்தின் பின் பக்கம் நெருப்பு உமிழும் உக்கிரமான இயந்திரம் போல என் இலக்குகள் என்னை ஒவ்வொரு கணமும் தூக்கிச் சென்று கொண்டிருந்தன”. இவற்றைப் போன்ற உவமைகள்தான் வாசிப்பவரை நாவலுக்குள்ளேயே லயித்திருக்கச் செய்கின்றன. ஜெயமோகன் எழுதி, இப்போது வெளிவந்துள்ள “பத்து லட்சம் காலடிகள்” சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஔசேபச்சன் கதைகளுக்கு சுவைகூட்டும் உரையாடல்களுக்கு முன்னோடியான தொடக்கம் இந்நாவலில் உள்ளது. நாயருக்கும் தாமஸுக்குமான உரையாடலின் போது //இந்த நாயர்கள் அடிப்படையில் போலீஸ்காரர்கள். அதாவது படைவீரர்கள். அவர்கள் தத்துவஞானிகளாக இருக்கலாம். கலைஞர்களாக இருக்கலாம். அரசியல்வாதிகளாக இருக்கலாம். ஒரு லார்ஜ் உள்ளே போனால் எல்லா நாயரும் படைநாயர்தான். அதன் பிறகு லெ·ப்ட் ரைட் மட்டும்தான் மண்டைக்குள் இருக்கும்// என்று தாமஸ் கூறுவதும், அதற்கு நாயர் //இவனோட பிஷப்புக்கு ஒரு நான்கு லார்ஜ் ஊற்றிக்கொடுத்துப்பாரு. சங்ஙனாச்சேரியிலே அவன் அப்பூப்பன் பரட்டுக்காட்டு தோமாச்சன் வாத்து மேய்க்கிறப்ப சொல்ற எல்லா கெட்டவார்த்தையும் அவன் வாயிலேயும் வரும்//. எல்லா மதத்தவரும் பிற மதத்தினருடன் எத்தனை இணக்கமாக இருந்திருந்தால் இத்தனை உரிமையோடு பேசிக் கொண்டிருக்கமுடியும் என்ற எண்ணத்துடன் பெருமூச்சு எழுகிறது. ஜெயமோகன், யட்சிகளை மையமாக வைத்து பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்நூலை யட்சி நாவல் என்றும் சொல்லலாம். கமலா மற்றும் நீலிமாவின் பாத்திரங்கள் யட்சிகளைப் போலவே படைக்கப்பட்டுள்ளன. பகலில் பெண்களாயிருப்பவர்கள் இரவில் யட்சிகளாகிறார்கள் என்ற விளக்கம் பொருத்தமாக உள்ளது. நள்ளிரவில் ஆம்பல் குளத்தருகே புழக்கமின்றி இருக்கும் யட்சி கோவிலும், அதன் அருகே அரவம் சூழ பூத்திருக்கும் நிஷாகந்தி மலரை பறித்து வரும் நீலிமாவைப் பற்றிய சித்தரிப்பும், கொடுங்கல்லூர் ஆலய வழிபாட்டைக் கூறும் காட்சியும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தைத் தருகிறது. அந்த வாழ்வுக்குள்ளேயே இருப்பவர்கள் இதற்கு மேல் அடுத்து என்ன என உந்தும் மனதிற்கு செவிகொடுப்பதன் மூலம், உள்ளிழுத்து அழிக்கும் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் புதிதாக நுழையும் சரவணன் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு நீருக்குள் இறங்குபவனைப் போல எப்போதும் திரும்புவதற்கான ஒரு கதவை திறந்து வைத்தபடியே உள்நுழைகிறான். சற்று விலகி நின்று ஐயத்துடனேயே அணுகுகிறான். இதனால் அவர்கள் போல உக்கிரத்துடன் சென்று மாட்டிக் கொள்ளாமலும் மேல்மட்டத்திலேயே நின்று தவிக்காமலும் அவ்வாழ்வில் திளைக்கிறான். அவ்வாழ்வினால் ஏற்படக் கூடிய இன்னல்களை லாவகமாகத் தவிர்த்து இனிமையாக வாழத் தொடங்குகிறான். இயல்பாக செல்லும் கதை சட்டென ஒரு உச்சத்தை அடைந்துவிடுவதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வை மனம் ஏற்கத் தயங்குகிறது. எல்லாச் சம்பவங்களுக்கும் விளக்கமிருக்கையில் பலரின் வாழ்வைப் பாதிக்கும் முதன்மையான திருப்பத்திற்கு விளக்கம் சரிவர அளிக்கப்படவில்லை எனத் தோன்றுகிறது. மேலும், இரவுலாவிகளாய் இருப்பவர்கள் பகலில் சந்திப்பதாக கூறப்படுவது சற்று முரணாகவும் படுகிறது. ஆனால் வாசித்து முடித்தபின் நாவலைப்பற்றி எண்ணினால் மேனன் மற்றும் சரவணன் இரவு வாழ்க்கையில் அடைந்த பரவச கணங்கள் மட்டுமே மனதில் இனிமையாக நீடிக்கிறது. இதற்கு காரணம், நாவலின் கட்டமைப்பில் அந்த பரவசக் காட்சிகள் நேரடியாக காட்டப்பட்டுள்ளதும், அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் மற்றொருவரின் கூற்றாக அமைந்துள்ளதும்தான். இரவின் சிறப்பான கூறுகளில் ஒன்றான தேவையானதின் மீது மட்டும் ஒளி பாய்ச்சி பார்த்துக் கொள்ளலாம் என்பதை சுட்டும் வண்ணம் முக்கியத்துவம் எனத் தான் கருதுவதை மட்டும் காட்சிப் படுத்தியுள்ளார் ஆசிரியர். இந்த இலக்கிய நாவலை சுவாரசியமான த்ரில்லராக ஜெயமோகன் எழுதியுள்ளார். இதைப் போன்றே இவரின் “உலோகம்” நாவலும் விறுவிறுப்பான கதையோட்டத்துடன் எழுதப்பட்டிருந்தாலும் வாழ்வு முறையின் பல்வேறு சாத்தியங்களை காட்டுவதிலும், நிகர் வாழ்வனுபவத்தைத் தருவதிலும் “இரவு” நாவல் வேறுபட்டு முன்நிற்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக பகலில் விழித்து வாழ்ந்து பழகிய முன்னோர்களைக் கொண்ட வாசகனின் உள்ளத்தில் இரவு வாழ்க்கைக்குள் செல்ல வேண்டுமென்ற விழைவை, அந்த இனிமையை சுவைத்துவிட வேண்டுமென்ற பேராவலை ஒரு கணமேனும் ஏற்படுத்திவிடுவது இந்நாவலின் வெற்றியாகும். ஆனால் அந்த எண்ணத்தை இரண்டு காரணிகள் தடுக்கின்றன. ஒன்று உக்கிரமான இன்ப வாழ்வை உணர்த்தபின் எளிய அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப முடியாதென்பது. மற்றொன்று, பெரும் பணம் சேமிப்பிலிருக்க வேண்டுமென்பது. ஒரே இரவில் வாசித்து முடிக்கக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள இந்நாவலை வாசிப்பதற்கு முன் மனதில் இருந்த மர்மமான, அழகான, தண்மையான இரவைப்பற்றிய சித்திரம் வாசித்து முடித்தபின் பல மடங்கு அதிகமாகிவிட்டது. இதுவரை சாதாரண கல்லென எண்ணிப் புழங்கிக் கொண்டிருந்த ஒன்றின் மீது ஒளியைப் பாய்ச்சி, அது இதுவரை காணாத பலவித வணணங்களாக பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டி அதனை வைரமென உணரவைப்பதைப் போல இரவின் பல பரிமானங்களைக் காட்டுகிறார் ஆசிரியர். இருளுக்குள் உறைந்திருக்கும் பிரமாண்ட விஷ்ணு சிலையை காண்பதற்காக காட்டப்படும் தீபம், இன்னும் பல மடங்கு பெரியதாக,அரூபமானதாக, எண்ணும் போதெல்லாம் பரவசத்தை தருவதாக மனதுள் நிலைக்க வைப்பதைப் போல இந்நாவல் மூலம் இரவை விளக்க முற்படுவதான பாவனையில் அதனை பரவசமாக எண்ணித் திளைக்குமாறு வாசகர் மனதில் பெரும் படிமமாக உறையவைக்கிறார் ஜெயமோகன். பொதுவாக விமர்சனக் கட்டுரைகள் நூலை இயந்திரத்தின் பாகங்களை பிரித்து பரப்பி வைத்து இப்பாகங்கள் இதனுடன் இணைகிறது. இப்பாகத்தின் சிறப்பு இது. இவை இணைவதன் பயன் இவை என விளக்குவதாகவோ அல்லது படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதாகவோ இருக்கும். ஆனால், அழுத்தினாலே கசங்கி கன்றிவிடும், மெல்லிய கடுமணம் வீசும் வெண்மையான மென் நிஷாகந்தி மலர் போன்ற இரவு நாவலை அவ்வாறு பிரித்து ஆராய என் மனம் ஒப்பவில்லை. அது என் மனதில் ஏற்படுத்திய உணர்வுகளையும் அது தொட்ட நினைவுகளையும் மட்டுமே கூறியுள்ளேன். விமர்சனத்தை எதிர்பார்த்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக ஒன்று… “மிருகங்களிலேயே யானையை பழக்குவதுதான் மிகமிக எளிமையானது. ஆனால் ஒருபோதும் முழுமையாக பழக்கிவிட முடியாத மிருகமும் யானைதான்” என்று இரவை வரையறுக்க முயலும் ஒரு கூற்று இந்நாவலில் உள்ளது. இது “இரவு” நாவலுக்கும் பொருந்தும். வாசிக்க எளிமையான நாவல்தான் இது. ஆனால் ஒரு போதும் முழுமையாக வாசித்துவிடவும் முடியாது. கா. சிவா கா.சிவா ‘விரிசல்’ சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். https://akazhonline.com/?p=3533
  11. அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு! AdminSeptember 12, 2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன்/லோறன்ஸ், வீரவேங்கை கவியரசி/ அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரிகாலன், வீரவேங்கை சுதாகரி, வீரவேங்கை இசைவாணன், வீரவேங்கை பல்லவன் உட்பட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு யேர்மனி, பிரான்சு, பிரித்தானியா, நோர்வே, நெதர்லாந்து, பெல்சியம், இத்தாலி, பின்லாந்து, டென்மார்க் ஆகியநாடுகளில் மிகவும் உணர்பூர்வமாக நடைபெற்றுள்ளது. http://www.errimalai.com/?p=66974
  12. 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்ற ஆழக்கடலோடிகள் உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது )அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்க்கும் அறிவித்தார். மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கின . இச்சம்பவத்தில் அதிலிருந்த போராளிகளும் இயக்க மரபிற்கிணங்கசயனைற் அருந்தி கடலிலே காவியமானார்கள்.முன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த மோட்டாரை பயன்படுத்தி கடற்படையினர் மீது தாக்குதல் நாடாத்த கடற்படையின் கப்பலுக்கருகில் வீழ்ந்த எறிகணையால் சற்று நிலைகுலைந்த கடற்படையினர் கிட்டநெருங்காமல் தொலைவிலிலிருந்தே தாக்குதலை தொடர்ந்தனர் . இருந்தாலும் இவர்களும் தாக்குதல்களை தொடர்ந்து நாடத்தியவாறு ஓடிக்கொண்டிருந்தனர்.ஒரு கட்டத்தில் அதாவது அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணியளவில் கடற்படைக்கப்பலின் பாரிய குண்டுத் தாக்குதலொன்று இவர்களது கப்பலின் அடிப்பகுதியில் தாக்க கப்பல் கடலிலே மூழ்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களது தியாகமும் வீரமும் கற்பனைபண்ணிக்கூடப் பார்க்கமுடியாது இக்கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சயனைற் இல்லாதிருந்ததால் அங்கிருந்த மருத்துவப் போராளியான லெப் கேணல் தமிழ்மாறன் இருமருந்துகளைக் கலந்து நஞ்சாக்கி ஊசியில் ஏற்றி சயனைற் இல்லாதிருந்தவர்களுக் கொடுத்தார். அடுத்தது லெப்.கேணல் வேங்கை மற்றும் லெப் கேணல் திருவருள் தரையில் மட்டுமே பயன்படுத்தும் 120mm மோட்டாரை கப்பலில் வெல்டிங் பண்ணி நிலைப்படுத்திக்கொடுக்க சகபோராளிகள் அம்மோட்டாரின் மூலம் கடற்படைக்கெதிராக தாக்குதல் நடாத்தினார்கள் . இதற்கிடையில் மேஐர் தமிழ்நம்பி கப்டன் அருணன் கப்பலின் ஒருபகுதியை எரித்தபோது அத்தீயை அணைத்து கொண்டிருக்கும் சமநேரத்திலும் அத்தீக்குள்ளாலும் சகபோராளிகள் மோட்டார் எறிகணைகளை எடுத்து வந்து கடற்படைகெதிராக தாக்குல் நடாத்தினார்கள் இறுதிவரை மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்கள். எழுத்துருவாக்கம்.சு.குணா. https://www.thaarakam.com/news/d29d99ce-e2f0-4ac9-a4ad-1a121e646ea1
  13. கரும்புலி லெப். கேணல் வினோதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.! கரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை (கரும்புலித்) தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டகரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. “தேசப்புயல்களின் நினைவில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்” “வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் புயல்கள்” https://www.thaarakam.com/news/c29a5345-f250-40f8-a456-beea4b7acfe6
  14. தேசியத் தலைவரின் கைக்கு இறுக்கமாக வலுவூட்டிய குடும்பத்தில் பிறந்த கப்டன்அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று வாழ்ந்த நாம் 'விடுதலை இயக்கம்' என்ற விரிந்த பரப்புக்குள் வந்ததால் , எத்தனை விதமான உள்ளங்களை , சந்தோசங்களை, பிரிவுத்துயரங்களை வாழ்வின்உண்மைகளைக் கண்டுகொண்டிருக்கிறோம். எமது போராட்ட வாழ்வில் உன்னதமான உள்ளங்களோடு பழகும்போது சந்தோசப்படும் நாங்கள், பிரிவு என்று வருகின்ற போது அதிகமாகத்தாக்கப்படுவதென்னவோ உண்மைதான். கப்டன் அக்கினோவின் உள்ளம் கூட அந்த உன்னதமான உள்ளங்களில் ஒன்றுதான். மிகவும் வசதியான குடும்பம். வாழ்வில் பொருளாதாரக் கஸ்டங்களையோ , துன்பங்களையோ கண்டிராத செல்வந்தமானகுடும் பச்சூழலின் கடைசிப்பிள்ளை தான் அக்கினோ. "நாங்கள் செல்லமாக வளந்தனாங்கள், போராட்ட கஸ்டங்களை எங்களால் தாங்க ஏலாது" என்று சொல்கின்றவர்களுக்கு அக்கினோ வாழ்ந்து காட்டி இருக்கின்றாள். விடுதலை உணர்வுக்கு முன்னால் வேறெந்தப்புறஉலக உணர்வுகளும் தாக்குப்பிடிக்க முடியாது என நிரூபித்திருக்கின்றாள். ஏனென்றால் ? அக்கினோவும் ஒரு செல்லப்பிள்ளைதான். பாடசாலை நாட்களில் அக்கினோவைக் கண்டவர்கள், பழகியவர்கள் அக்கினோவைப் பற்றிக்கூறும் தகவல்கள். "இவள் எப்படி இந்த வாழ்வை ஏற்றுக்கொண்டாள்?" என ஆச்சரியப்படவைக்கும். அக்கினோவின் எடுப்பான தோற்றம் அவளைப் பற்றியபார்வையில் ஒரு தவறான கணிப்பைக் கொடுத்திருக்கலாம். ஏன்? நாம் கூட. "இவள் எப்படி எல்லாப் போராளிகளோடும் ஏற்றத் தாழ்வின்றிப் பழகப் போகிறாள்?" என நினைத்ததுண்டு. ஆனால் பழகிய போது புரிந்தது. அவள் இதயத்தில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்று . அக்கினோவின் அப்பா தமிழீழத்தின் நேதாஜி மாமனிதர். (நன்றி வேர்கள் இணையம்)தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் எங்கள் தலைவனின் கைக்குஇறுக்கமாகவலுவூட்டியவர். உண்மைதான் இப்படி ஒரு தந்தைக்குப் பிறந்த குழந்தைகள் எப்படி எங்கள் மண்ணை நேசிக்காமல் இருக்கமுடியும்? அக்கினோவின் அப்பா மட்டுமல்ல அவளது அக்கா கூட எங்கள் அமைப்பில்தான் இருக்கின்றாள்.அப்பாவின் தலைமறைவு வாழ்க்கைக்காலத்திலும், அப்பாவின்நிரந்தரமறைவின் பின்னான வாழ்க்கைக் காலத்திலும், அந்தத் துன்ப நிகழ்வுகளின் தாக்கம் அம்மாவை அதிகம் தாக்காது இருப்பதற்காக தனது கலகலப்பையே தாயின் கவசமாக்கினாள் அக்கினோ. இன்று எல்லாத் துயரங்களைமே அம்மா தனியாகச் சுமந்துகொண் டிருக்கிறாள் . அக்கினோ எம்மோடு இருந்த போது ஒருநாள். 'அப்பாவின்ரை படத்துக்கு இட துபக்கம் என்ரை படமும் வலது பக்கம் அக்காவின்றை படமும் வைக்க இடம் விடுங்கோ அம்மா' என்று தாயிடம் சொன்னதாகச் சொன்னாள். எங்களுடைய ஒவ்வொரு போராளிகளும் ஒன்றை ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள்.என்றோ ஒருநாள் அது இன்றோ....... நாளையோ ....... அல்லது இன்னும் சில காலங்களில் பின்னோ. இந்த மண்ணிற்கான மரணத்தை நாம் சந்திப்போம் என்ற உண்மை தான் அது. அதனால் தான் என்னவோ , சண்டைக்கு போக வேண்டும் என்று எல்லோரும் சண்டை பிடித்துக்கொள்கிறார்கள். அப்படித்தான் அக்கினோவும். சண்டை என்றதும் அவள் சந்தோசப்படுகின்ற கணங்களைத் தான் பார்த்திருக்கின்றோம். விடுதலைபுலிகள் எல்லோருமே கூறுகின்ற, 'நல்லா அடிபட வேணும். நிறைய அயுதங்கள் எடுக்கவேணும் அதுக்குப்பிறகுதான் சாகவேணும் என்பதைத் தான் அக்கினோவும் சொல்லிக் கொண்டிருப்பாள். கட்டுவன்சந்தி இராணுவ மினி முகாம் முன்னால் இவள் காவல்நின்ற காலம்...... இவள் தான் குழுவின் இரண்டாவது பொறுப்பாளர் பலாலி இராணுவத்தினர் அடிக்கடி வெளியேற முற்படும் முக்கிய பாதைகளில் கட்டுவன் சந்தியும் ஒன்று. இந்தமினிமுகாமிற்கு முன்னால் காவல்நிற் கும் எங்கள் குழுவில் அடிக்கடி உறுப்பினர்களை மாற்றவேண்டிவரும். ஏனென்றால் அடிக்கடி தாக்குதல் நடக்கும்போதோ, அல்லது வெளியேறும்போதோ எம்மில் பல போராளிகள் வீழ்ந்திருப்பார்கள். அல்லது காயப்பட் டிருப்பார்கள். அக்கினோ வருவதற்கு ஐந்து நாட்கள் முதல்தான் கட்டுவன் நிலையிலிருந்து வெளியேற முற்பட்ட இராணுவத்தினருடன் மோதியதில் சுந்தரியுடன் எட்டுப் போராளிகள் வீரமரணமடைந்தனர். அக்கினோ சென்ற நான்கு நாட்களுக்குள் திரும்பவும் அந்த இடத்தில் இராணுவம் வெளியேறியது. கப்டன் சுந்தரி வீரச்சாவடைந்த தாக்குதலில் ஏற்பட்ட எமது தரப்பு இழப்பு அவளை உற்சாகப்படுத் தியிருந்தது போலும், அனால் அன்றைய சண்டை முடிவோவேறு மாதிரி இருந்தது. அன்று எதிரிகளை பின்வாங்கச் செய்ததில் அக்கினோவின் துப்பாக்கிக்கு அதிகபங்குண்டு. அக்கினோவுக்கு கணிசமான ஆங்கில அறிவுண்டு. அத்தோடு எந்தத்துறையிலும் விடயங்களை கிரகிக்கும் ஆற்றலுண்டு. தான் பெற்றிருக்கும் அறிவினை சக போராளிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்பு அவளுக்கு நிறையவே இருந்தது. அதனால்தான் பயிற்சி முகாமில் கூட கடும் பயிற்சிகளுக்கு நடுவேயும் அவள் இரவில் அவர்களுக்காக ஒரு மணிநேரம் ஒதுக்கி வைத்திருந் தாள். வவுனியாவில் இராணுவம் வெளியே வந்த காலத்தில் காட்டின் ஒரு பக்கத்தில் இவளின் குழுவும் நின்றது. திசைகாட்டியை (கொம்பாஸ்) எவ்வாறு படிக்க வேண்டும், என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். எந்த நேரமும்வந்து விழுந்து வெடித்துக் கொண்டிருக்கும் செல்களுக்கும் நடுவே ஒரு இடத்தைக் குறிவைத்து திசைகாட்டி மூலம் அந்த இடத்துக்குப் போய் வந்து, பின்னர் தனது குழுவினருக்கும் அவ்வாறே காட்டிக் கொடுத்து, போய்வரப் பழக்கினாள். காட்டிலே போர் நடக்கும் போது காடுமாற நேரிட்டால் அதுவே போராளிகளின் இழப்புக்கு மிகப் பெரிய காரணமாகிவிடும். போராளிகளின் இழப்பு ஒரு புறமும், இராணுவ முன்னேற்றம் மறுபுறமுமாகப்பாதகமான தாக்கங்களுக்கு, தான்காரணமாயிருக்கக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.வவுனியாவில் இருந்து வந்தவுடன் ஆனையிறவுச்சண்டை ஆரம்பித்துவிட்டது. வெட்ட வெளிகளில் இராணுவத்தினரை இறக்க விடாது காவல் செய்யும்பகுதியில் அவள்கடமையிலீடுபட்டிருந்தாள். அடுத்தடுத்துச் சண்டைகள். ஓய்வெடுக்க எமது போராளிக ளுக்கு நேரமில்லை . குண்டுச்சத்தங்களுக்கும் குருதிவெள்ளத்துக்கும் நடுவே எங்கே நாங்கள் ஓய்வைத் தேடுவது? எப்படி ஓய் வெடுப்பது? முப்படைத் தாக்குதலுக்கும் முகம் கொடுத்தபடி முன்னேற வேண்டியவர்களாயிற்றே நாங்கள். களைப்பும் அலுப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவையே எங்களைக் கட்டுப்படுத்திவிட முடியுமா? நித்திரை என்பது எங்களை விட்டு நிரந்தரமாகவே வெளியேறிவிட்டால் என்ன வென்று எண்ணுபவர்கள் நாங்கள். கண்ணுக்குள் நித்திரைசுழன்று கொண்டிருக்கும். அரைக் கண்ணில் ஆடி ஆடித் தான் நடந்தாலும் கண் மூடிவிடமுடியுமா? கண்முடக் கண் மூட எம் தேசம் காணாமல் போய் விடுமல்லவா? அதனால் தான்..... ஓய்வு இல்லாத தேசத்தின் எந்த எல்லையில் சண்டை நடந்தாலும் அங்கு எட்டி நடந்து கொண்டிருக்கின்றோம். ஆனையிறவுச்சண்டையின் வேகம் குறைய மணலாற்றில் சண்டை ஆரம்பித்துவிட்டது. அக்கினோவின் குழுவும் மணலாற்றிற்கு விரைகிறது. மணலாறு எங்கள் தேசத்தின் மையப்புள்ளி. மணலாற்றுக்காடு தான் எங்கள் தாய்வீடு. பிராந்துகளிடமிருந்து செட்டைக்குள்ளாய் எமை வளர்த்த தாய்க் கோழி. பிராந்திய வல்லரசு ஒன்றை எமது பிரதேசத்திலிருந்து பின்வாங்கச் செய்யுமளவிற்கு அவர்களுக்கு இழப்பைஏற்படுத்திய இடம். அங்குலம் அங்குலமாக அந்நிய இராணுவம் கால் பதித்து தேடியபோதும் தமிழீழத் தின் தலைவரை தக்க வைத்துக் காத்த பெருமை மணலாற்றிற்கு மட்டும் தான் உண்டு. குண்டு களைத்தாங்கித் தாங்கியே மணலாற்றுக்காடு வலிமை பெற்றுவிட்டது. உரிமைப்போர் அல்லவா. உக்கிரமான சண்டைதான். காடு பற்றி எரிகின்றது. எங்கும் ஒரே புகை மண்டலம் தான். மண லாறு மண் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. முதல் நாள் சண்டையின் போது அக்கினோ நின்ற பக்கமாக இராணுவம் முன்னேறியது. அங்குல நிலம் கூட எதிரியை அசையவிடாத சண்டை. அக்கினோவின் குழுவில் இரண்டு போராளிகள் விழுந்து விட்டார்கள். ஒரு உடல் கைப்பற்றக் கூடியதாக இருந்தது. ஆனால் அடுத்த து...... எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ...... அவர்களுக்கு மிக நெருக்கமாக..... வீழ்ந்த போராளிகளின் உடல்களை மீட்பதற்காகவே புதிய போராளிகள் விழுகின்றவரலாறுதானே எம்வரலாறு. போர்நிலமை உடனுக்குடன் பொறுப்பாளருக்கு அறிவிக்கப்படவேண் டும். அக்கினோ அறிவிக்கின்றாள்."உடலை எடுப்பது கஸ்டம் தான் அக்கா. ஆனால் எப்படியும் நான் எடுப்பேன்"தலைநிமிர்த்த முடியாதளவுக்கு தரையோடு தரையாக வரும் துப்பாக்கி சூடுகளுக்கு அடியில் ஊர்ந்து முன்னேறினாள். எப்படியோ உடலை எடுத்துவிடுகிறாள். அந்த இடத்தில் அனைவருக்கும் ஒரு உறுதி பிறக்கிறது. கடைசிவரைக்கும் இச்சண்டை யில் எந்த உடலும் எம்மால் கைவிடப்படக் கூடாது என்பதில் எல்லோரும் முனைப்பாக இருந்தோம். ஒத்துழைக்க மறுத்தகாட்டுச் சூழலாலும், நித்திரையோ குளிப்போ இல்லாத கடமையின் இறுக்கத்தாலும் அநேகமான போராளிகளுக்கு காய்ச்சல் வந்துவிடுகின்றது. அக்கினோவுக் கும்காய்ச்சல் தான்.காய்ச்சலுடன்தான் மணலாற்றுப்பகுதியில் மகளிர் பிரிவுக்கான மருந்து, உணவு, ரவை விநியோகங்களைப் பொறுப்பெடுத்துச் செய்து கொண்டிருந்தாள். இராணுவத்தினர் ஒரு பக்கமாக முன்னேற முயற்சிக்க, அக்கினோ அந்த இடத்துக்கு விரைந்து, போராளிகளுக்கு நிலைமையை விளங்கிக் கொண் டிருக்கும்போது, அவளது அடுத்த குழு நின்ற பக்கமாக விமானம் பதிந்து எழுந்தது. நிலைமையை நேரில் பார்ப்பதற்காகஅக்கினோ அந்த இடத்திற்கு ஓடினாள். உருக்கும்போது விளங்கிகளுக்குஇன்னொரு தடவை அந்த விமானம் பதிந்து எழுந்தது. அக்கினோவின் தசைத்துணுக்குகளும், குருதித்துளிகளும் மணலாற்று மரங்களில் தெறித்தன. அக்கினோபோன்ற நூற்றுக்கணக்கானோரின் இறுதிக் கணங்களை அறிந்து கொண்ட அந்த மணலாற்றுக்காடு இன்று மீட்கப்பட்டுவிட்டது. இந்தியப் போரின் பின் இது இரண்டாவது சண்டை, முன்னையை விட இப்போது உறுதியாய் நிற்கும். மணலாற்றுக் காடு இனி வரும் காலங்களில் இன்னும் உறுதியாய் எழுந்து நிற்கும். ஏனென்றால் அதற்குத் தெரியும் தன்னுள் உறங்கும் எங்கள் நண்பர்களைப்பற்றி. |வெளியீடு -களத்தில் |நன்றி வேர்கள் இணையம் https://www.thaarakam.com/news/827bdd36-a986-4d5c-bd67-558c0c87063b

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.