Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தனிக்காட்டுராஜா ஆகிய முனிவர்ஜீக்கும் கிளுகிளு கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  3. மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும் - கரும்புலி மேஜர் டாம்போ கரும்புலி மேஜர் டாம்போ காசிப்பிள்ளை தயாபரன் நாச்சிக்குடா சந்தி, கிளிநொச்சி வீரப்பிறப்பு:17.08.1967 வீரச்சாவு:19.03.1991 நிகழ்வு:மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவு 1991 மூன்றாம் மாத நடுப்பகுதி: சிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. “அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் என்பது முடிவானது. சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். “எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்” களத்தில் கட்டளை பிறக்கிறது. ”முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்” சொல்லி விட்டு டாம்போ ஊர்தியில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். “நானும் கொஞ்சதூரம் வாறன்” நண்பன் கூற, “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்” கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது. மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, ஊர்தியை இலாவகமாக ஓட்டும் திறமையே. கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு நாள் குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். “டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்” என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று…. மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான். “நான் போறன், வருவனோ தெரியாது” என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும். டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்… அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன – அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்…. நினைத்துப்பார்க்கிறோம்…. “வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா… சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.” ”இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.” ”நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.” ”நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது…” ”ஆம்! டாம்போ! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.” https://www.thaarakam.com/news/1ccbdf82-250e-4be7-b50b-02a1427711ca
  4. ஓஹோ.. நீங்கள் குருதி உறைந்துவிடும் என்று பயந்த ஆட்கள்..! தடுப்பூசி சும்மா களைப்பை தருகிற மாதிரி இருக்கும். ஆனால் எல்லாம் இரண்டொரு நாளில் சரியாகிவிடும். ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சில நாடுகள் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா குருதி உறைவில் பிரச்சினை தரும் என்று சொன்னதும் சிலர் பயந்து அதனைப் போடாமல் no show ஆகியதால் எனக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தது! போய்க் குத்திவிட்டு வந்தேன். அன்று ஏதும் செய்யவில்லை. அவர்கள் தந்த பிரசுரத்தில் இருந்ததில் side effects இல் ஒன்றிரண்டு அடுத்தநாள் வந்தது. முதலில் உடல் சில்லென்று சில மணிநேரம் குளிர்ந்த மாதிரி இருந்தது. பின்னர் சாடையாக சூடாகவும் அடிச்சுப் போட்ட மாதிரியும் இருந்தது. ஊசி போட்ட இடத்தில் நோ இருந்தது. ஆனால் 24 மணி நேரத்திலேயே எல்லாம் நோமலாகிவிட்டது!😀
  5. வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கிய லெப்.கேணல் ரவி குமாரவேல் ரவீந்திரகுமார் விசுவமடு – முல்லைத்தீவு வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட தொடக்க காலங்களில் லெப்.கேணல் ரவி அவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிறிலங்கா படைகளிற்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார். அமைதி காக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த இந்தியப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த படைகளின் போர்க்கருவிகள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார். மாங்குளம் தளத்தைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 படை நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர் நிலங்களிலும் நின்று சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மன உறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து லெப்.கேணல் ரவி களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் சூடுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார். 1993ல் யாழ்தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாகக் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார். பூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப்.கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசஊர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும். எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17-03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர். -எரிமலை இதழ் https://www.thaarakam.com/news/ab8d20e2-cc10-4d89-9aba-a6812bbe1fa1
  6. ராணித் தேனீக்கு உதவியாக ஆண் தேனீக்கள் இருப்பதுபோல மனிதரும் இருந்திருக்கலாம். 😀 கன காலத்திற்குப் பின்னர் கவிதாநிகழ்வு ஒன்றுக்குப் போன உணர்வு! ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்!! ”பெண்ணுக்கு எல்லாமே வேண்டும். ஆண் முரடனாகவும் இருக்கவேண்டும்; சொன்னபேச்சும் கேட்கவேண்டும். கல்வியும் வேண்டும்; செல்வமும் வேண்டும்; புகழும் வேண்டும். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான்”
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகலவன்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  8. கருணா அம்மான் வடக்கைப் போல கிழக்கிலும் பெரும்படைகள் கட்டவேண்டும் என்று சமாதானக் காலத்தில் கோயில் திருவிழாக் காலங்களிலும் கட்டாயமாக அள்ளிக்கொண்டு போனவர்தானே. பிரிவுக்குப் பின்னாலும் இரு பகுதியும் பிள்ளைகளைப் பிடிப்பதில் மட்டும் ஒற்றுமையாக இருந்தார்கள்.
  9. அதை ஒரு கெட்டித்தனமாக நினைத்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளவும் செய்வார்கள். 😂
  10. பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் அவதரித்தான்! முல்லை நிலமும், மருத நிலமும் ஒருங்கே அடி கொளிரும் மாவீரன் பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் (ஆனந்தன்) அவதரித்தான். முல்லைத்தீவு பாண்டியன் குளம் பிரதேசத்தில் கரும்புள்ளியான் எனும் கிராமத்தில் சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளுக்கு எட்டாவது மகனாக பிறந்தான் கிருசாகரன் ஆரம்பக்கல்வியை பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ்/ தெல்லிப்பழை மகாஜன கல்லூரியிலும் கல்விக்களம் கண்டான். கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளை கண்ணெதிரே கண்டு வருந்தினான். 15 வயதினில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது தென்பகுதியிலிருந்து இந்திய வாழ் மலையகத் தமிழ்மக்களை சிங்களவர்கள் அடித்து துரத்திய போது , அத் தமிழர்கள் வன்னிப்பகுதிகளில் வந்து தஞ்சமடைந்தார்கள். அவ்வேளை அந்த மக்கள் பட்ட துயரங்கள் , வறுமைகள் இவன் மனதை வெகுவாக பாதித்தது. கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி வெகுவாக பாதித்தது. கல்வி பொது சாதாரண தர பரீட்சை ( O/L) எழுதுவதற்கு சிரமப்பட்டு எழுதியுள்ளான். கல்வி பொது உயர் தர வகுப்பு ( A/L) வகுப்பு படிக்கும் போது பல இடையூறுகள் ஏற்பட்டன. இவனது கிராம மக்களும் ,நண்பர்களும் இவனை “ அப்பன்” என்று செல்லப் பெயர் கொண்டு அழைப்பார்கள் . இவனும் அனைவரிடத்திலும் அன்பு காட்டுவான். பணிவுடனும் தன்னடக்கத்துடனும் பேசுவான் . யார் எவர் என்று பார்க்காமல் உதவி புரிவான். 1988,1989 காலப்பகுதியில் இந்திய இராணுவம் அமைதிப்படை எனும் பெயரில் எம் தாய் நிலத்தில் போராளிகள் மீது போரை திணித்து , சிங்கள இராணுவம் எதையெல்லாம் செய்ததோ அதனை இந்திய இராணுவ அமைதிபடையும் செய்தது. இக் காலத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன், தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உண்ணா நோன்பு இருந்து தன்னை உயிரை மெழுகாய் உருக்கினார். மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், மக்கள் மத்தியில் பெருங் கொந்தளிப்பு காட்டுத்தீ போல் பரவியது. இந்திய இராணுவம் வெளியேறிய பின் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மரபு வழிப்போருக்கு தயாரான போது இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப்புலிகள் பாசறை நோக்கி புறப்பட்டார்கள். போராடினால் தான் எம்மக்களுக்கான வாழ்வு என தீர்மானித்தார்கள். 1991ஆம் ஆண்டு கிருசாகரன்/ அப்பன் தனது கிராமத்திலிருந்து உறவினர், நண்பர்கள் ஐந்து பேர் முல்லைத்தீவு, கற்சிலைமடு விடுதலைப்புலிகள் செயலகத்தில் போராளிகளாக இணைந்தார்கள்.நட்டான் கண்டல் சந்திரன் முதலாவது அணியில் பயிற்சி பெற்று போராளி ஆனந்தன் எனும் நாமத்துடன் முல்லை மாவட்ட போராளியாக களத்தில் இருந்தான். 1991ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் முதன்முதல் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி உருவாக்கப்பட்டது. சாள்ஸ் அன்ரனி தாக்குதல் அணிக்கு மாற்றப்பட்ட ஆனந்தன் 50 கலிபர் (விமான எதிர்ப்பு) துப்பாக்கி பயிற்சி பெற்று 50 கலிபர் அணியின் தலைவராக செயற்பட்டு, வன்னி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் களத்தில் தடம் பதித்தார். 1993ஆம் ஆண்டு நிதித்துறைக்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் போராளிகள் அனுப்பப்பட்டார்கள். வன்னி சாள்ஸ்அன்ரனி சிறப்புபடையணியிலிருந்து அனுப்பிய போராளிகளில் ஆனந்தனும் ஒருவர். நிதித்துறைக்கு போனவுடன் நிதித்துறைப் பொறுப்பாளர், பிரிகேடியர் தமிழேந்தி அவர்களால் ஆனந்தனுக்கு சுடரன்பன் என பெயர் மாற்றப்பட்டது. கணக்கியல் கல்வி கற்று கணக்காய்வுப் பணியினை சிறப்பாக பணியாற்றினார் . 1995 ஆண்டு புலிப்பாச்சல் தாக்குதல் நடவடிக்கையின் போது நிதித்துறை படையணி களம் கண்டது. அச்சமரில் சுடரன்பன் வலது கையில் விழுப்புண் அடைந்தார். அதன் பின்னர் இடப் பெயர்வுகளின் விளைவாக 1996 காலப்பகுதியில் கிளிநொச்சிப் பகுதியில் களக்காப்புப் பணி மேற்கொண்டு அக்காலப்பகுதியில் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்கி அழிப்பு நடவடிக்கையின் போது பின் தளப் பணியினை மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ,கிளிநொச்சி இராணுவ முகாம் தாக்கி அழிப்பு சமர், ஓயாத அலைகள் தாக்குதல் 1,2 தாக்குதல்களில் பின் தளப்பணிகளையும் மேற்கொண்டார் . ஆனையிறவு படைத்தள தாக்கியழிப்புச் சமரிலும் பின்தள வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். 2006 மீண்டும் போர் ஆரம்பமாகிய பின்னர் நிதித்துறைப் படையணிபோராளிகளும் கள முனையில் களம் கண்டனர். நிர்வாகத்தில் உள்ள போராளிகளும் சுழற்சி முறையில் களமுனையில் பணியாற்றினர். சுடரன்பனும் அப்பணியில் ஈடுபட்டாலும் கணக்காய்வுப் பணியினையும் எந்த இடையூறும் இன்றி மேற்கொண்டார் . 2008,2009 காலப்பகுதிகளில் போர்ச்சூழலில் நிர்வாக்கட்டமைப்புக்களை நகர்த்துவதில் பல இடையூறுகள் , நெருக்கடிகள் இருந்தும் திறம்பட திட்டமிட்டு செயலாற்றினார். தேவிபுரம் , சோழன் அரிசி ஆலைக்கு அம்பகாமம் பகுதியிலிருந்து இலங்கை இராணுவம் ஏவிய எறிகணைத் தாக்குதலின் போது பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். சுடரன்பன் நூலிலையில் உயிர் தப்பினார். அத்துடன் ஆச்சி கோட்டப்பகுதியில் பின்னகர்வு பணியின் போது சுதந்திரப்பகுதியிலிருந்து இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் நூலிலையில் உயிர் தப்பினார். குயிலன் என்ற போராளி சிறு விழுப்புண் அடைந்தார். தேவிபுரம் ஊடாக இரணைப்பாலைக்கு இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்த போது நிதித்துறைப் படையணி ஆண்,மகளிர் அணி சமர் புரிந்த வண்ணம் இருந்தது. அப்போது படையணிக்கு பொறுப்பாக இருந்த அகச்சுடர் என்ற போராளி விழுப்புண் அடைய சுடரன்பனை பொறுப்பாக நியமித்தார் நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழ்குமரன் அவர்கள். அணியினை வழிநடாத்திய சுடரன்பன் அவர்கள் 13.03.2009 இலங்கை இராணுவத்தின் எதிர் சமரின் போது விழுப்புண் அடைந்து 14.03.2009 அன்று லெப்.கேணல் சுடரன்பன் ஆக வீரச்சாவு அடைந்தார். லெப்.கேணல் சுடரன்பன் / ஆனந்தன் அவர்கள் 2000ஆம் ஆண்டு சோதியாபடையணியைச் சேர்ந்த போராளி வைஸ்ணவி (இராசையா மல்லிகாதேவி) என்பவரை திருமணம் செய்து இரு பெண் பிள்ளைகளுக்கு (துளசிகா,சங்கவி) தந்தையுமாவார். https://www.thaarakam.com/news/19814663-3e8a-451a-b405-fbd4778aef0f
  11. லெப்.கேணல் ஜொனி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று! AdminMarch 13, 2021 லெப்.கேணல் ஜொனி அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். ஜொனி மிதிவெடிபற்றி அறியாதவர்கள் இல்லை எனும் அளவிற்கு ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல் எனவே பார்க்கப் படுகின்றது. ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது. இந்த மிதிவெடியை உருவாக்கியபோது புலிகளமைப்பில் 400 இற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களில் இருந்து “ஜொனி” என்ற பெயரை தலைவர் ஏன் தெரிவு செய்தார்? இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும். லெப். கேணல் ஜொனி அண்ணை 1980களின் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழகப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னை போராட்டத்தில் இணைத்திருந்தார். இவரது ஆரம்பகால போராட்ட வாழ்க்கை கிட்டண்ணையுடனேயே ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தான் இந்திய அரசு புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தது. இந்த பயிற்சிக்கு முன்னரே புலிகளமைப்பு சுயமாகவே ஆயுதப் பயிற்சியை உருவாக்கி, தங்களை வளர்த்திருந்தனர். இந்தப் பயிற்சிக்கு முன்னரே சிங்கள இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதலை புலிகள் செய்திருந்தனர். அதில், இந்த உலகையே திருப்பிப் போட்ட திருநெல்வேலித் தாக்குதலும் அடங்கும். இந்திய அரசின் முதலாவது பயிற்சிக்காக ஜொனி அண்ணையும் தமிழ்நாடு சென்றார். அங்கு அவர் இராணுவப் பயிற்சிக்கு செல்லாமல் இந்திய அரசு அளித்த தொலைத்தொடர்பு பற்றிய பயிற்சி ஒன்றுக்கு தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டார். ஒரு கட்டுக்கோப்பான அடிப்படைப் பயிற்சியின் அறிமுகத் தேவை கருதியே புலிகள் அன்றைய பயிற்சியில் பங்கெடுத்தனர். இன்னொன்றையும் இதில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். இந்திய இராணுவத்தின் ஆயுதங்களால் புலிகளமைப்பு வளர்க்கப்பட்டதான குற்றச் சாட்டையும் நான் மறுக்கவே செய்வேன். ஏனெனில், இந்திய இராணுவத்திடம் SLR, 303 போன்ற “ஒரு சூட்டுத் துப்பாக்கிகள்” (இப்போதும் தானியங்கி SLR துப்பாக்கி மற்றும் போலீஸ்303துப்பாக்கி பாவனையில் உள்ளது) பாவனையில் இருக்கும் போது, அந்த நேரத்தில் புலிகளிடம் AK-47, AK.MS, M-16, M-16.203, RPG, M-60.LMG போன்ற, அன்றைய அதி நவீன ஆயுதங்கள் புலிகளிடமிருந்தன. சரியாக சொல்வதானால் சிங்கள அரசிடம் கூட இந்த ஆயுதங்கள் அப்போது இருக்கவில்லை. புலிகளின் தொலைத்தொடர்பை பற்றி உலகறியும். அன்றைய நேரத்து அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் புலிகள்வசம் இருந்தது. இந்திய அரசு பயிற்சி என்ற பெயரில் கோடு தான் போட்டது. அதில் தங்கள் முயற்சியால் ரோடு போட்டது புலிகளே. அதன் வெளிப்பாடே புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளும், அதன் மூலம் கிட்டிய சாதனைகளும். ஜொனியண்ணை பயிற்சியின் பின் கிட்டண்ணையுடனேயே பயணித்தார். 1980களில் யாழ். குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணையால் கொண்டு வரப்பட்டது. கிட்டண்ணையால் சிங்களப்படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட, வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனியண்ணை முன்னின்று களமாடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவான போது கிட்டண்ணையுடன் தமிழகம் சென்றார். அங்கிருக்கும் போதே தாயகத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் சண்டையிட ஆரம்பித்திருந்தனர். இதனால் கிட்டண்ணையுடன் ஜொனி அண்ணையையும் சேர்த்து சில போராளிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதே நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் கடும் யுத்தம் மூண்டிருந்தது. சண்டையின் ஆரம்பத்திலேயே சந்தோசம் மாஸ்டர் உட்பட முக்கிய போராளிகளை நாம் இழந்திருந்தோம். அப்போது யாழில் இருந்து தலைவர் பத்திரமாக வன்னிக்கு நகர்ந்திருந்தார். இந்திய இராணுவத்தினர் தலைவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது குழம்பி நின்றனர். இந்திய இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய TELO, EPRALF, ENDELF போன்ற சமூக விரோதக் கும்பல்களும் தலைவர் பற்றிய தகவல் அறிவதற்கு மக்கள் மீது பெரும் அட்டூழியத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தது. அப்போது சிங்கள அரசின் உதவியையும் நாடினர். அதனைத் தொடந்து சிங்கள உளவுத்துறையினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் அமைப்பும் தங்கள் பங்குக்கு மக்களையே வதம் செய்தனர். கடைசிவரை தலைவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியாமல் முழித்தனர். இதே நேரத்தில் வீட்டுக் காவலில் இருந்த கிட்டண்ணை குழுவினருக்கு வெளித்தொடர்பை நிறுத்தி, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே இவர்களுக்கு கூறப்பட்டது. அதில் போராளிகள் அழிகின்றார்கள், இன்னும் சிறிது காலத்துக்குள் தலைவரை கொன்றுவிடுவார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டதால் கிட்டண்ணை குழுவினர் மனம் கலங்கினர். ஒரு பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த கிட்டண்ணை முடிவெடுத்து, இந்திய அரசுடன் பேசினார். இதைத்தான் அவர்களும் விரும்பினர். போரை நிறுத்துவதற்கு தலைவரின் அனுமதியை கேட்பதற்கு ஜொனியண்ணையை தூதுவராக அனுப்ப முடிவானது. சில இழுபறிகளுக்கு பின் வவுனியா வரை ஜொனியண்ணையை இவர்களது உலங்குவானூர்தியில் கொண்டுபோய் விடுவதென்றும், அதுவரை போர் நிறுத்தம் ஒன்றை செய்வதாகவும் இந்திய அரசு அறிவித்தது. அவர் தலைவரை சந்தித்தபின் மீண்டும் குறிப்பிட்ட இடமொன்றில், ஜொனியண்ணையை இவர்கள் சந்திப்பதென்பதும் முடிவாகி இருந்தது. அதன்படி ஜொனியண்ணை 1988ம் ஆண்டு இரண்டாம் மாத இறுதியில் வவுனியா நெடுங்கேணியில் இறக்கி விடப்பட்டார். இவரை அங்கு விடுவதற்கு முன்னர் இந்திய உளவுத்துறையினரின் ஏற்பாட்டில், இந்திய இராணுவத்தினரும் அவர்களின் கூட்டாளிகளான மாற்றுக்குழுவினரும் அவரை பின் தொடர்ந்து கண்காணிக்க ஊரெல்லாம் இறக்கி விடப்பட்டனர். இந்திய இராணுவத்தினர் தலைவர் இருக்குமிடமென மன்னார்க்காடு, மணலாற்றுக்காடு, அல்லது திரிகோணமலைக்காடு ஆகிய மூன்றில் ஒன்றில் தான் அவர் இருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தனர். அவர்களுக்கு தேவை மூன்றில் எது என்பது உறுதியாக தெரியவேண்டும். அதற்காக ஜொனியண்ணையின் பாதத்தை பின் பற்றி தொடர ஆரம்பித்தனர். இந்திய உளவுத்துறைகளின் கபட நோக்கத்தை முன்னமே புலிகளும் ஊகித்திருந்தனர். அதனால் அவர்களின் கண்ணில் மண்ணைத்தூவ புலிகளும் ஆயத்தமாகினர். அதன்படி குறிப்பிட்ட இடமொன்றுக்கு வந்து சேர்ந்த ஜொனியண்ணையை, கின்னியண்ணை அணியினர் அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைவரைக்கும் அழைத்து வந்தனர். இந்திய இராணுவத்தினர் தமிழர் தேசமெங்கும் கரையான் புத்துகள் போன்று பரவியிருந்தனர். இதனால் புலிகள் பயணிக்கும் போது குறிப்பிட்ட ஊரைக்கடப்பதற்கு அங்கு மறைப்பில் இருந்து போராடும் போராளிகளின் உதவி நாட்டப்படும். ஏனெனில் அவர்களுக்கு தான் இந்திய இராணுவத்தின் நடமாட்டம் நன்கு தெரியும். அவர்கள் போய்வருவதற்காக பாதுகாப்பான பாதை ஒன்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த பாதைகளை உபயோகித்து பாதுகாப்பாக புலிகள் நகர்வார்கள். கிட்டத்தட்ட தடி குடுத்து (றிலே) போடுவதுபோல் அது இருக்கும். ஜொனியண்ணையை அழைத்து வருவதற்கு யோகியண்ணையையும் அவர்க்கு உதவியாக மேஜர்.தங்கேஸ் அண்ணையையும் தலைவர் அனுப்பினார். அவர்களை சந்தித்த ஜொனியண்ணை இரகசியமாக பயணப்பட்டு தலைவரிடம் வந்து சேர்ந்தார். தலைவரிடம் வந்ததும் தலைவர் அவரிடம் தலைக்காயம் எப்படி இருக்கென்று நலம் விசாரித்தார். ஏனெனில் நெற்றியில் பட்டு காதுவழியே துப்பாக்கி ரவை ஒன்று சென்றதால் நெற்றியில் ஒரு இடத்தில் கடினமில்லாது மென்மையாக இருக்கும். இதனால் அவர் அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுவார். இது தான் தலைவர் எதுவுமே மறக்காது நினைவில் வைத்திருப்பார். தலைவரிடம் வந்தபின் தான் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளின் வெற்றிகரத் தாக்குதலை அறியமுடிந்தது. அப்போதுதான் இந்திய அரசு தங்களுக்கு பொய்களை மட்டுமே கூறியது அவருக்கு புரிந்தது. அவருக்கு அங்கேயே தலைவருடன் தங்கிவிட விருப்பம். ஆனால் தலைவரோ, இந்திய அரசின் தூதுவராக வந்துள்ளீர், அவர்களுக்கு எமது பதிலைக் கூறவேண்டும். ஆகவே திரும்பவும் அங்கு சென்று பதிலைக் கூறிவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் மீண்டும் திரும்பவும் இங்கு வரும்படி கட்டளை இட்டார். இதன் மூலம் இந்திய அரசின் வஞ்சகத்தையும்,தலைவரின் நேர்மையையும் நீங்கள் அறியமுடியும்.! அதன் படி சூட்டியண்ணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர்களுக்கு உதவியாக லெப்.கேணல்.சந்திரண்ணை இடையில் வைத்து உதவினார். இவர்கள் புதுக்குடியிருப்பு கடந்து தேராவில் பகுதிக்கு வரும் போது, அங்கு பதுங்கியிருந்த இந்திய இராணுவத்தினர் தங்கள் வாக்குறுதியை மீறி நயவஞ்சகமாக ஜொனியண்ணை மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதில் அவர் வீரச்சாவடைந்தார். இதன் மூலம் இந்திய இராணுவத்தினர், புலிகளின் முக்கிய தளபதி ஒருவரை கொன்றும், தலைவரின் இருப்பிடப்பகுதியையும் குத்துமதிப்பாக இனம் கண்டனர். ஜொனியண்ணை மீதான தாக்குதல் தலைவரை சினம் கொள்ள வைத்தது. இந்திய இராணுவத்தினர் தலைவரின் இருப்பிடம் தெரிந்ததும் “செக்மேட்” என்றனர். அடுத்து இந்திய இராணுவத்தினரின் தாக்குதல் சில வாரங்களில் தொடங்கும் என்பதை தலைவர் உணர்ந்தார். அப்போது மணலாற்றில் குறைந்தளவான போராளிகளே இருந்தனர். மேலதிக போராளிகள் அவசர அவசரமாக மணலாற்றுக்கு வரவழைத்து, சண்டைக்குரிய சாதகமான இடங்கங்கள் ஆராயப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதே நேரம் குவியல், குவியல்களாக வரவிருக்கும்,பல்லாயிரம் இந்திய இராணுவத்தை, சில நூறு போராளிகளுடன் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியே இரவு பகலாக தலைவர் யோசித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் அதிகாலை எழுந்த தலைவர் நேராக இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் முகாமுக்கு சென்று ராஜூஅண்ணை, மற்றும் மணியண்ணையை (பசிலன்) கூப்பிடு, தனது எண்ணத்தில் தோன்றிய மிதிவெடியை பற்றி கூறி, அதை உருவாக்க கட்டளை இட்டார். அதன்படி 6இஞ்சி நீளமும் 3இஞ்சி அகலமும், 2இஞ்சி உயரமும் கொண்ட பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது. பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது. இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தரையப்பட்டது. (புரியா விட்டால் மிதிவெடியின் படத்தை பாக்கவும்) இதே போல கீழேயும் தகடு வைக்கப்பட்டது. அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. (இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும்)இது தான் அந்த பொறி முறை இது சாதாரணமாக சிலருக்கு தோன்றலாம்.? இது பெரும் சேதத்தை எதிரிக்கு அன்று கொடுத்தது.! ஆம், தலைவர் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டே அந்த மிதிவெடியை தயாரித்தார். பல கட்ட சோதனைக்கு பின் மிதிவெடி இறுதிவடிவம் பெற்றது. பகுதி பகுதியாக செய்யப்பட்டு பின் ஒன்றாக்கி முழுமையான தயாரிப்பில் எல்லோரும் பங்களித்தனர். அந்த மிதிவெடிக்கு காரணப்பெயராக ஜொனியண்ணையின் பெயரையே தலைவர் சூட்டினார்.! அப்போது மிதிவெடியை புதைக்க ஆயத்தமான போது பெரும் பிரச்னை ஒன்றை நாம் அப்போது எதிர்கொண்டோம்.! அதாவது மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும். எல்லோருக்கும் குழப்பத்தில் இருக்கும் போது, தலைவரிடமிருந்தே அதற்கான தீர்வு வந்தது.! மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர். இதற்காகவே சில போராளிகளை தெரிவு செய்து, இதற்கான பயிச்சிகளைக் கொடுத்து, இரவோடு இரவாக இராணுவம் வரும் பாதைகள் எங்கும் புதைக்கப்பட்டது. தனக்கான மரணக்குழி வெட்டப்பட்டது தெரியாது, இந்திய இராணுவத்தினர் “ஒப்ரேஷன் பவான்”எனப் பெயரிட்டு தலைவரை அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்த நடவடிக்கை 1,2,3 என வருடக்கணக்கில் நீண்டபோதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. ஆனால், ஜொனியண்ணையின் பாதத்தைப் பின்பற்றி வந்த இந்திய இராணுவத்தினர் நூற்றுக்கணக்கில் தங்கள் பாதங்களை இழந்தனர்.! இராணுவரீதியாக போரில் ஒருவரைக் கொல்வதை விட காயப்படுத்துவது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்களின் மரண ஓலம்,போரிடும் இராணுவத்தின் உளவுரணைச் சிதைத்து போரிடும் வேகத்தை குறைக்கும். அன்று இந்த ஜொனி மிதிவெடியினால் இந்திய இராணுவம் சின்ன பின்னமாகி கதிகலங்கியது. அன்றைய தலைவரின் இராணுவ ஆளுமை எம் போராட்டத்தை காத்து நின்றது. பின்னைய நாளில் அந்த மிதிவெடி நவீனமயப்படுத்தி,எதிரிக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணியது. தாயகப்போராட்டத்தில் எல்லாத் துறைகளிலும் தலைவரின் ஆளுமையும், நெறியாழ்கையும் தங்கு தடையின்றி இருந்தது. வரலாற்றுடன் துரோணர்.!! http://www.errimalai.com/?p=37709
  12. 10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் காவியமான கடலோடிகள் நினைவு சுமந்த காணொளி . 10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் காவியமான கடலோடிகள் நினைவு சுமந்த காணொளி விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலில் காவியமானவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி ‘கப்பல் கப்டன்’ லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். எமது விடுதலைப் போராட்டத்திற்கு அடி நாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களை கொண்டுவந்து சேர்க்கவும். அடக்கு முறையாளர்களின் தடைகளால் அல்லலுறும் எம் மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவந்து கரை சேர்க்கவும் என கடற்புலிகளின் கப்பல்கள் வையப்பரப்பிலுள்ள கடலெல்லாம் சென்று வந்தன. “வெளியே தெரிந்ததுமாய் உள்ளே மட்டும் அறிந்ததுமாய்” அளப்பெரிய பணிகளை இந்தக் கடலோடிகள் செய்து முடித்தனர். உயிரைக் கூட துச்சமாக மதித்து சர்வதேசக் கடற்பரப்பின் விரிப்பில் ஒர்மமுள்ள எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் முலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்கமுடியாத பெரும் தீயாக முளாசி எரிகின்றது. எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் கடற்புலிகள் ஆற்றிய சாதனைகள் கால வரலாறாக விளங்கும். இந்த மானமறவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் முக்கிய குறிப்பு :- you tube போன்ற வலைத்தளத்தில் தமிழர்கள் பதிவு செய்யும் தமிழீழ விடுதலைப்போர் ஆவணங்கள் திட்டமிட்டு அகற்றப்படுகிறது இதை முறியடிக்க எமது வரலாற்றை பாதுகாக்க இந்த காணொளியை ஆவணப்படுத்துமாறு Home-Tamtube - TamTube நிறுவனத்திடம் கேட்டதற்கிணங்க இந்த காணொளி அவர்களின் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்று ஆவணங்களை சுமந்து எமது அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் காணொளித்தளமான Home-Tamtube - TamTube நிறுவனத்தினருக்கு நன்றி... https://www.thaarakam.com/news/49be86e8-f1b6-4a54-81aa-e49fe9b6b6ab
  13. ஆமா.. ஆமா.. ஆமை நல்ல விருப்பம்😀
  14. கற்பனை இறக்கை கட்டி பறக்கின்றது நிலாமதி அக்கா!
  15. தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதி லெப் கேணல் மங்களேஸ்.! நினைவுகளில் நிலைத்துநிற்கும் லெப். கேணல் மங்களேஸ்… தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ் அண்ணா அவர்கள். 1990ம் ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவது வயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ‘மங்களேஸ்’ என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழிமூடும் நாள்வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிக நீண்டது. தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ள வேண்டிய படையப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையா அவர்களின் தாக்குதலணியில் தனது களப்பணிகளை முன்னெடுத்திருந்தார். 1991ம் ஆண்டு யூலை மாதத்தில் ஆனையிறவுப் படைத்தளம் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆகாயக் கடல் வெளி’ நடவடிக்கையில் ஒரு போராளியாகப் பங்கெடுத்திருந்தவர். அதனைத் தொடர்ந்து மணலாற்றில் சிறிலங்காப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல் நடவடிக்கையிலும் தனது போராற்றலை வெளிப்படுத்தியிருந்தார் மங்களேசண்ணா. 1992ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகள் அணிக்கு பிரிவுமாற்றம் பெற்றுவந்த மங்களேசண்ணா வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைத்தொடர்ந்து கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின் பிரதானதளமான சாலைத்தளத்தில் நின்று விடுதலைப் போராட்டத்திற்கு வளம் சேர்க்கின்ற பலம் சேர்க்கின்ற நடவடிக்கையான ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு சிறப்புத்தளபதி சூசை அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கினார். அவரது ஆளுமையை இனம் கண்டுகொண்ட சூசை அவர்கள் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப்பகுதியில் மங்களேசண்ணா கடற்புலிகளின் வன்னி மாவட்டத் தளபதியாகவும் குறிப்பிட்டகாலம் செயற்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ் குடாநாடு முழுமையாக அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து விடுதலைப்புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப் பகுதியிலும் ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த மங்களேசண்ணா 1996ம் ஆண்டு யூலை மாதத்தில் விடுதலைப்புலிகளால் ‘ஓயாதஅலைகள்-01’ எனப்பெயரிடப்பட்டு முல்லைத்தீவுப் படைத்தளத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெற்றிச்சமரின் போதும் படையினருக்கு உதவுவதற்காக கடல்வழியாக கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து குறித்த முல்லைப் படைத்தளம் வெற்றி கொள்ளப்படுவதற்கு மங்களேசண்ணாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் காத்திரமானது. இதன் பின்னரான காலப்பகுதியில் மணலாறு, செம்மலையைத் தளமாகக்கொண்டு செயற்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி விநியோக அணிக்குப் பொறுப்பாளராகச் செயற்பட்ட மங்களேசண்ணா அந்த விநியோக நடவடிக்கைகளிலும் பங்கெடுத்திருந்தார். குறித்த இந்த கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி நடவடிக்கையின்போது ஒரு சந்தர்ப்பத்தில் திருகோணமலை புடவைக்கட்டுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட கடற்சமரில் மங்களேசண்ணா வயிற்றுப்பகுதியில் விழுப்புண்பட்டிருந்தார். தீவிர மருத்துவச் சிகீச்சைகளின் மூலம் தேறிய மங்களேசண்ணா மீண்டும் களப்பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதனைவிட வேறுபல தாக்குதல்களிலும் மங்களேசண்ணா விழுப்புண்பட்டிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது. கிழக்குமாகாண விநியோக நடவடிக்கையைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தைத் தளமாகக்கொண்டு இந்தியா, தமிழ்நாட்டிலிருந்து எமது போராட்டடத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்கள் உபகரணங்கள் மற்றும் ஏனைய மூலவளங்களையும் கடல்வழியாகத் தாயகத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கின்ற உயரிய பணிகளையும் செவ்வனே செய்திருந்தார் மங்களேசண்ணா. ஆழ்கடல் நடவடிக்கை கிழக்கு மாகாணத்திற்கான கடல் நடவடிக்கை மன்னார் – தமிழ்நாடு கடல்நடவடிக்கை என அனைத்து சவால்கள் நிறைந்த கடல் நடவடிக்கைகளிலும் பங்குகொண்டிருந்த மங்களேசண்ணா அந்த நடவடிக்கைகளில் பல கடற்சமர்களையும் கண்டிருந்தார். 1999ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த “ஓயாதஅலைகள் – 03” நடவடிக்கையில் வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்கள் விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது சமநேரத்தில் கட்டைக்காட்டிற்கும் ஆனையிறவிற்கும் இடைப்பட்டபகுதியிலுள்ள புல்லாவெளி என்னும் இடத்தில் அமைந்திருந்த படையினரின் முகாமை கைப்பற்றுகின்ற பொறுப்பு மங்களேசண்ணாவிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. புல்லாவெளிக்கு தாக்குதலணிகளை நகர்த்துவதானால் சுண்டிக்குளம் நீரேரியூடாக படகுகளில்த்தான் அணிகளை நகர்த்தவேண்டியிருந்தது. அதற்கமைவாக மங்களேசண்ணா தலைமையிலான தாக்குதலணி இயந்திரங்கள் பொருத்தப்பட்ட சிறியவகைப் படகுகளில் சுண்டிக்குளம நீரேரியூடாகச் சென்று முகாமை அண்மித்ததும் இயந்திரத்தின் சத்தங்கள் படையினருக்கு கேட்கும் என்பதால் குறிப்பிட்ட தூரம்வரைக்கும் தண்ணீருக்குள்ளால் படகுகளை தள்ளிச்சென்று புல்லாவெளியில் தரையிறங்கி புல்லாவெளி படைமுகாம்மீது தாக்குதல்களைத் தொடுத்து அந்த முகாமை வெற்றிகொண்டனர். வெற்றிலைக்கேணி கட்டைக்காடு புல்லாவெளி படைத்தளங்களின் வெற்றியே தொடர்ந்துவந்த ஆனையிறவுப்படைத்தளத்தின் வெற்றிக்கு திறவுகோல்களாக அமைந்திருந்தன. ஆனையிறவுப் படைத்தளத்தை வெற்றிகொள்வதற்காக 26.03.2000 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின் போது வெற்றிலைக்கேணியைத் தளமாகக்கொண்டு தரையிறங்க வேண்டிய அணிகளை படகுகளில் ஏற்றி அனுப்புகின்ற பிரதான பொறுப்பாளராக மங்களேசண்ணா தேர்வு செய்யப்பட்டிருந்தார். லெப் கேணல் பாக்கியண்ணாவின் உதவியோடு தரையிறங்கவேண்டிய ஆயிரத்துஇருநூறு போராளிகளையும் குறித்தநேரத்திற்குள் படகுகளில் ஏற்றி அனுப்பிவைத்து குடாரப்பு தரையிறக்கநடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு மங்களேசண்ணாவின் அர்ப்பணிப்பும் உழைப்பும் மிகவும் முக்கியமானது. 2001ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் மங்களேசண்ணா கடற்புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். (அதாவது சிறப்புத் தளபதிக்கு அடுத்தநிலையான பொறுப்பு) கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம், கடற்புலிகளின் அரசியல்த்துறை, கடற்புலிகளின் புலனாய்வுத்துறை, கடற்புலிகளின் மருத்துவப்பகுதி முதலான கடற்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்தையும் நேர்த்தியுடன் நிர்வகித்தமை. மக்கள் சந்திப்புக்கள். மக்கள் அபிவிருத்திக் கட்டமைப்புக்கள். மீள்குடியேற்றம். சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில் சுனாமி மீள்கட்டுமானப்பணிகள். 2005, 2006ம் ஆண்டு காலப்பகுதிகளில் மணலாறு – நாயாற்றுப் பகுதியைத் தளமாகக்கொண்டு திருவடி மக்கள் படைக் கட்டுமானப் பயிற்சிப் பாசறையை நிறுவி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மக்கள் படைப் பயிற்சிகளை வழங்கி ஒருவலுவான மக்கள் படைக் கட்டுமானத்தை உருவாக்கியது என அவர் கடற்புலிகளின் தளபதியாகப் பொறுப்புவகித்த சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் நீண்டு கொண்டே செல்கின்றது. இந்தக் காலப்பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கடற்புலிகளில் முதன்மையாகச் செயற்பட்ட பதினொரு இளநிலைத் தளபதிகளை அழைத்து அவர்களை கௌரவித்து கைத்துப்பாக்கிகள் (பிஸ்ரல்) வழங்கியபோது அந்த அணியில் மங்களேசண்ணாவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பணி நிமிர்த்தமாக போர்க்கருவித் தொழிலகத்திற்கு பிரிவுமாற்றம் பெற்றுச்சென்று அங்கு குறுகியகாலம் கடமையாற்றிவிட்டு பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக படையப் புலனாய்வுப் பிரிவில் மங்களேசண்ணா உள்வாங்கப்பட்டு மன்னார் மாவட்டத்தில் குறித்த ஒரு பகுதிக் களமுனைக்கு கட்டளைத் தளபதியாக மங்களேசண்ணா நியமிக்கப்பட்டு அங்கு களநடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தார். 08.03.2008 அன்று அரச படையினர் ஆக்கிரமித்திருந்த ஒருபகுதியை மங்களேசண்ணா தலைமையிலான அணி அரசபடையினர்மீது தாக்குதலைத்தொடுத்து படையினரை அங்கிருந்து விரட்டியடித்ததையடுத்து அந்தப் பகுதியை கிளியர்பண்ணிக் கொண்டிருக்கையில் படையினர் புதைத்துவிட்டுச்சென்ற மிதிவெடிகள் அடுத்தடுத்து வெடித்ததில் போராளிகளாலும், பொதுமக்களாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட எங்கள் மங்களேசண்ணா தாய்மண்ணை முத்தமிட்டு வீரச்சாவைத்தழுவிக்கொண்டார். சுமார் பதினெட்டு ஆண்டுகளாக தமிழீழமண் விடுதலையே உயிர்மூச்சாக வாழ்ந்து அந்த மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக விழிமூடிக்கொண்ட மங்களேசண்ணாவினதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் நினைவுகளுடன் எமது விடுதலைப்பயணத்தைத்தொடர்வோமாக… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு:- கொற்றவன். https://www.thaarakam.com/news/6785b2c3-18f5-4664-88be-7af6bbb78c5d
  16. வவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா. மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும், சோதனையும் நிறைந்த காலமாகவே இருந்தது. மட்டுநகர் காடுகளை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றுமுழுதாக ஆக்கிரமித்திருந்த காலமது. அடிப்படை வசதிகள் கூட இன்றிய நிலையில், நம்பிக்கையும் மனவுறுதியும் மட்டும் பலமாகக் கொண்ட தருணங்களில் மதனா ஒருபோதும் சோர்வடைந்ததில்லை. தனது தோழிகளுக்குத் தெம்பூட்டி உற்சாகப்படுத்துவாள். இதன் பின்னர் படையணியைத் திரட்டி, அப்படையணிகள் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிகளில் பங்குபற்ற வகைசெய்தாள். கட்டுமுறிவு இராணுவமுகாம் தகர்ப்பு, தரவைக்குளம் இராணுவ முகாம் தகர்ப்பு, 4 ஆம் முச்சந்தி இராணுவமுகாம் தகர்ப்பு போன்ற பாரிய தாக்குதல்களிலும் அனைத்து பதுங்கித் தாக்குதல்களிலும் திறம்பட செயலாற்றினாள். 4 ஆம் முச்சந்தி முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளும் மதனாவுடன் சேர்ந்து படையணியின் வளர்ச்சிக்கு தோளோடு தோள்கொடுத்து உதவியவள். இவளது ஞாபகமாகவே மட்டு அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற முதுநிலைப் படைத்துறை ஆணையாளருள் ஒருவரான கருணா அம்மான் அவர்கள் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார். அன்போடும் அரவணைப்போடும் தன் தோழிகளுடன் ஆடிப்பாடி மகிழ்வாள். முகாமில் தாயாகவும் கடமையில் கண்ணியமாகவும், களத்தில் படை நடத்தும் தளபதியாகவும் நின்று போராளிகளை வழி நடத்திக் கொண்டிருந்தாள். இவளுக்கு சக தோழிகளுடன் சேர்ந்து விளையாடுவதேன்றாலே அலாதிப்பிரியம். பின்னேரம் நான்கு மணியாகிவிட்டால் தன் படையணியினரை முகாமில் தங்க விடமாட்டாள். கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வட்டக்காவடி எனப் பல்வேறு விளையாட்டுக்களை சக தோழியர் அனைவரையுமே விளையாடுவதற்கு உற்சாகப்படுத்தி தானும் சேர்ந்து விளையாடுவாள். இதனால் ஒவ்வொரு போராளியின் மனநிலையும் சமநிலைப்படுகின்றது என்பது அவளின் எண்ணம். மதனா பங்குபற்றிய தாக்குதல்களில் மக்கள் நிறைந்து வாழும் சந்தவெளி, முறக்கொட்டான்சேனை, மாவடிவேம்பு ஆகிய இடங்களில் ரோந்துசென்ற சிங்கள இராணுவத்தினர்மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தன. இதில் பெருமளவு எதிரிகளும் இராணுவ தளபாடங்களும் அழிக்கப்பட்டன. மதனாவின் வழிநடத்தலில் பெண்புலிகளின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். மக்கள் அதிசயித்தனர். புளுகுணாவி வெற்றிச் சமரிலும் மதனா தனது படையணியினருடன் பெரும் பங்காற்றினாள். மட்டக்களப்பில் இவளின் பாதம் படாத மண்ணே இல்லையெனலாம். கிழக்குக் காடுகளின் காட்டுமரங்கள், மலைகள், அருவிகள் அத்தனையும் இவளை அறியும். 1997.03.05 இல் கஜபாகு சிறப்புப்படையினர் நிலைகொண்டிருந்த வவுணுதீவு ஆக்கிரமிப்பு இராணுவமுகாம் மீதான தாக்குதலில் இவளது அணிக்கு ஒரு இலக்குக் கொடுக்கப்பட்டது. அதிகாலை 1.05 மணிக்கு சண்டை ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து எட்டுமணி நேரம் உக்கிரமோதல் தொடர்ந்தது. நூறுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் எஞ்சிய எதிரிகள் திகில் அடைந்து ஓடத் தொடங்கினர். தனக்குக் கொடுக்கப்பட்ட பகுதியை வெற்றிகரமாகக் கைப்பற்றிய மதனாவின் குரல் ஆர்வத்துடன் தொலைத்தொடர்பு சாதனத்தில் ஒலித்தது. “நாங்கள் எங்கள் பகுதியை முற்றாகப் பிடித்து கிளியர் பண்ணிவிட்டோம்”. களத்தில் அவளது பணி முடிந்தபின்னர் கூவிச்சென்ற எறிகணை ஒன்று இவளது உயிரைப் பறித்துக்கொண்டது. காயம்பட்ட தோழி ஒருத்தி மதனாவின் உடலைச் சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள். மதனா……..மகளிர் படைநடத்திய இளைய தளபதி அவள். அவளது பெயர் சொல்ல இன்று நீண்ட அணியாய் அவர்கள். மதனா பங்குபற்றிய தாக்குதல்களில் மக்கள் நிறைந்து வாழும் சந்தவெளி, முறக்கொட்டான்சேனை, மாவடிவேம்பு ஆகிய இடங்களில் ரோந்துசென்ற சிங்கள இராணுவத்தினர்மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தன. இதில் பெருமளவு எதிரிகளும் இராணுவ தளபாடங்களும் அழிக்கப்பட்டன. மதனாவின் வழிநடத்தலில் பெண்புலிகளின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். மக்கள் அதிசயித்தனர். புளுகுணாவி வெற்றிச் சமரிலும் மதனா தனது படையணியினருடன் பெரும் பங்காற்றினாள். மட்டக்களப்பில் இவளின் பாதம் படாத மண்ணே இல்லையெனலாம். கிழக்குக் காடுகளின் காட்டுமரங்கள், மலைகள், அருவிகள் அத்தனையும் இவளை அறியும். நினைவில் நிறைந்த தோழிகள் களத்தில் (10.09.1997) https://www.thaarakam.com/news/a6106dfc-a2dc-4967-8fd1-98c764792927
  17. கதை தொடங்கவேயில்லை! எப்படி அடுத்த பகுதியில் முடியும்?
  18. வாழ்க்கை என்பதே ஒரு தொடர் போராட்டம்தான். அதிலும் குடும்பத்தில் மாறி மாறி ஓயாமல் வரும் சவால்களுக்கிடையில் கொரோனாவும் வந்து ஆட்டிப்படைக்கும்போது சோர்வும் பயமும் வரத்தான் செய்யும். ஆனால் எத்தகைய இடர்களையும் தாண்டி எதிர்நீச்சல் போடும் மன தைரியத்தை மட்டும் இழக்கக்கூடாது.
  19. அம்மாவுக்கு சொல்ல எப்பவும் மூட்டைமூட்டையாகக் கதைகள் இருக்கும்தானே. ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லுங்கள்😁 பல மணித்தியாலங்கள் கதைத்தாலும் சொல்லமுடியாதவற்றை கடிதம் மூலம் சொல்லலாம். ஆனால் இப்போது யார் கடிதம் எழுதுகின்றார்கள்?
  20. அதுதானே. இலண்டன் மாப்பிள்ளையை (சொத்தை என்றாலும் பவுணெல்லோ!) வேண்டாம் என்று சொன்னா, சொல்லுறவுக்குத்தானே வாழ்க்கையில் நல்லா இருக்கக் கொடுத்து வைக்கேலை. சொக்கத் தங்கமா இருக்கிற இலண்டன் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணுங்க நிரையில வந்து நிற்பாளுக😜
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.