Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம் 07 Sep, 2025 | 03:51 PM பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம், பிரிட்டனின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார். பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்கு 1980 இல் பிறந்த ஷபானா, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். 2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார். கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்த ஷபானா, 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது, உள்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/224459
  2. கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை 07 Sep, 2025 | 11:11 AM (நா.தனுஜா) இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 13 பேரை சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்துச்சென்று, அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அந்நாட்டு அரசாங்கம், அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு இந்நகர்வு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் மேற்படி செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் பங்கேற்பதற்கு இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரங்களுக்கான கூட்டாட்சித் திணைக்களத்தின் சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செயலாளரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அக்கட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கலாநிதி உபாலி பன்னிலகே, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்ததின் செயலாளர் சந்திம ஹெட்டியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான நிலாந்தி கொட்டஹச்சி மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.சி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் இதில் பங்கேற்கவுள்ளனர். சுவிட்ஸர்லாந்தில் 8 நாட்கள் நடைபெறவுள்ள இச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்படவிருப்பதுடன் முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளன. இச்செயலமர்வானது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குமான வாய்ப்பை இலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற், இலங்கை அரசியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சுவிஸ் அரசியல் முறைமையின் முக்கிய கூறுகளை உள்வாங்குவதற்கும், பல்லின மற்றும் பன்மொழி சமூகங்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து அறிந்துகொள்வதற்கும் இது உதவும் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/224431
  3. மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும் தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர். மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்தின் இரண்டு வருடம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது. எனினும் இந்த அறவழிப் போராட்டத்தில் அடைந்த நன்மைகள் குறைவு. மேய்ச்சல் தரைக்காக. ஒதுக்கப்பட்ட 3025 ஹெக்டயர் நிலப்பரப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பின்னர் 3000 ஏக்கர் தருவோம் என கூறப்பட்ட போதிலும் இன்னமும் அதற்கான எந்த பதிவும் இடம்பெறவில்லை. இந்த இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்டு எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என நினைக்கின்றோம் கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடையவில்லை. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வருகிறது. எனவே கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmf96frfb0092qplpb12op5d2
  4. விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்றும் இதன்போது நடைபெற உள்ளது. வோல்கர் டர்க்கின் இலங்கை விஜயத்திற்குப் பிறகும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்தும் நடைபெறும் இந்த மாநாட்டில், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க முடியும். இந்த ஆண்டு மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் பங்கேற்கவுள்ளார். https://adaderanatamil.lk/news/cmf98vnf100a2o29nty78ym4a
  5. உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது. இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதை கீவ் நகரின் நிர்வாக தலைவரும் உறுதி செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது. அதில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு வார காலத்தில் உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட மிக தீவிர ட்ரோன் தாக்குதலில் இது இரண்டாவதாக அமைந்துள்ளது. தீ பற்றிய அரசு தலைமையக அலுவலக கட்டிடத்தில் உக்ரேன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வசிப்பதாக தகவல். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவில் உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை சிதைக்கும் வகையில் எண்ணெய் குழாய் வழிதடத்தை ட்ரோன் மூலம் உக்ரேன் தாக்கியது. இதை உக்ரைனின் ட்ரோன் படை தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதி செய்துள்ளார். அண்மையில் உக்ரேன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரேன் வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2022-ல் தொடங்கிய ரஷ்யா - உக்ரேன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. இந்த சூழலில் உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை தொடர்கிறது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உக்ரேன்-மீது-800-ட்ரோன்களை-ஏவிய-ரஷ்யா/50-364136
  6. இலங்கை இராணுவத்தால் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆவது நினைவு தினம்! adminSeptember 7, 2025 செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.09.25) நடந்தது. கிருசாந்தி வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் நடந்தது. படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அத்தோடு “வாசலிலே கிருசாந்தி” எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. https://globaltamilnews.net/2025/220176/
  7. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம் September 6, 2025 8:00 pm பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார். அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார். அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்! https://oruvan.com/we-will-provide-solutions-to-the-problems-of-the-tamil-people-and-build-reconciliation/
  8. மன்னாரில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை 06 Sep, 2025 | 05:19 PM மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வியாழக்கிழமை (04) தீர்ப்பளித்தார். குற்றத்தின் பாரதூர தன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான குற்றங்கள் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்ற தன் அடிப்படையில் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சகோதரர் குறித்த வயது குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவி புரிந்தமைக்காக இரண்டாம் எதிரிக்கு அதே தண்டனை அதாவது 7 ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர். வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224391
  9. அஜீவன் அண்ணாவுடன் யாழ்கள உறுப்பினர்களின் சந்திப்பு பற்றிய திரி
  10. இளந்தாரி வழிபாடு தி. செல்வமனோகரன் அறிமுகம் எந்த உயிரியின் பரிணாமத்திலும் வளர்ச்சியிலும் இளமைப் பருவம் முக்கியமானதாகும். மனிதரில் இளைஞர்களை வாலிபர், இளைஞர் – இளந்தாரி என்று சுட்டுதல் வழக்கம். போர், காதல், உழைப்பு என எல்லாத்தளங்களிலும் இளமை தவிர்க்க முடியாத பிரதானமான அம்சமாகத் திகழ்கிறது. வாழ்வில் துடுக்குத்தனமும் அளவற்ற செயற்பாடுகளும் உடைய அப்பருவம் ஒவ்வொரு மனிதராலும் மறக்க முடியாத ஒன்றாகும். போரிலும் வீரத்திலும் ஆற்றலிலும் இளந்தாரிப் பருவம் தவிர்க்க முடியாத பருவமாகின்றது. மண், பொன், காதல் என்பவற்றுக்காகத் தன்னை அழித்துக் கொள்கின்ற – தியாகித்துக் கொள்கின்ற பருவமும் இதுதான். அதீத கோபம் இதன் தவிர்க்க முடியாத குணமாகின்றது. ஆதலால் விபரீத முடிவுகளையும் இது எடுத்துவிடுகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வில் ஈழத்துப்புலத்தின் தனித்துவமான தெய்வங்களுள் ஒன்றாக இளந்தாரி காணப்படுகின்றார். இளந்தாரி எனும் தெய்வம் இளந்தாரி எனும் சொல்லை வாலிபனைக் குறிக்கும் சொல்லாகவே அகராதிகள் சுட்டுகின்றன. ஆனால் பஞ்சவன்னத் தூது ‘குலதேவன், ஊரை என்றும் காக்கும் தெய்வம், செஞ்சடா முடித்தேவன், மாதர் போற்றும் அண்ணல், கரந்தை சூடி அருள்புரிதூயன், கறையர் கண்டன், அருள் பெற்ற தெய்வம், கந்தமாமலரப் பொற்பதன், நற்றவர் போற்றும் மெய்த்தெய்வம், எத்திசையும் புகழ் – கருணை சேரும் கைலாயன்’ எனப் பலவாறு சுட்டுகிறது. இளந்தாரி வழிபாடு இடம்பெறும் இடங்கள் பொதுவில் இணுவிலில் மட்டுமே இளந்தாரி வழிபாடு காணப்படுவதாக நூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இளந்தாரி வழிபாட்டுக்கான பெருங்கோயில் இணுவைப் பேரூரிலேயே இருப்பதாக தமிழ்வேள் க.இ.க. கந்தசாமி குறிப்பிடுவது உண்மைதான். ஆயினும் இளந்தாரி வழிபாடு வன்னியில் – பூநகரியில் இருந்து மன்னார் செல்லும் வழியில் உள்ளமைந்திருக்கும் ஊர்களான கிராஞ்சி, வேரவில், கல்லாவில் போன்றவற்றிலும் காணப்படுகின்றது. சாமுவல் லிவிங்ஸ்ரன் (Samuel Livingston) தனது ‘The Sinhalese of Ceylon and The Aryan Theory’ எனும் நூலில் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ‘கலாவெவ’ குளம் உள்ளிட்ட குளங்களுக்குக் காவல் தெய்வமாக ‘Kadavara, Ilandari deviyo’ என்பன காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். இங்கு குறிப்பிடப்படும் இளந்தாரி தெய்யோ என்பது குளத்தோடு தொடர்புபட்டதாகவும், அவ்வழிபாடு அனுராதபுரத்தில் நிகழ்ந்ததாகவும் காணப்படுகின்றது (P.34). தவிர, இங்கு இடம்பெறும் காடவர – காட்டுவைரவராகச் சுட்டப்படுகின்றார். வரணியில் உள்ள குருநாத சுவாமி கோயிலில் ‘இளந்தாரி’ வைரவர் எனும் தெய்வம் பரிவாரமாக இருப்பதை அந்த ஆலயத்தின் பூசாரியும் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளருமான சி.கா. கமலநாதன் எமக்கு உறுதிப்படுத்தினார். அது காவல் தெய்வமாகவே கருதப்படுகிறது. அதுபோல புங்குடுதீவில் இளந்தாரி நாச்சியார் கோயில் என்கின்ற மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில் இன்றும் சிறப்புடன் திகழ்கிறது. நானூறு வருடப்பழமை கொண்ட இக்கோயில் இளந்தாரி நாச்சியார் கோயில் என அழைக்கப்பட்டமைக்கான தெளிவான காரணமெதனையும் அறிய முடியவில்லை. மட்டக்களப்புத் தேசத்தில் வழக்கத்தில் உள்ள வதனமார் வழிபாட்டோடு இணைந்த இலக்கியங்களில் ஒன்றாகவும், வழிபாட்டில் பாடப்படுவதாகவும் உள்ள ‘வதனமார் குழுமாடு கட்டு அகவலில்’ பத்துப்பாலர் பிறந்த பாடலின் பின் “பிறந்து வளர்ந்தாரோ பெரிய இளந்தாரி பத்து வயதும் பதினாறுஞ் சென்ற பின்பு” என வரும் வரிகள் மங்கலனாரை பெரிய இளந்தாரியாகச் சுட்டி வழிபடுதலைக் குறிக்கின்றது. குழு மாடுகளைப் பிடித்து பட்டியில் உள்ள ஏனைய மாடுகளோடு இணைத்து விடுதல் வழக்கம். இது ஒரு வீர விளையாட்டாகவும் கருதப்படுகின்றது. குழுமாட்டினைப் பிடிக்கச் செல்லும் வதனமாரை ‘இளந்தாரிமார் கூட்டம்’ எனச் சொல்வதாக ஈழத்துப் பூராடனார் (2000) குறிப்பிடுதல் கவனத்திற்குரிய ஒன்றாகும். ஆக இளந்தாரி எனும் வழக்காறு இளைஞர்களைக் குறிக்கின்றது எனப் பொதுவில் குறிப்பிடப்படினும் இது இளந்தாரியான தெய்வத்தைக் குறிக்க நாட்டாரியலில் பயன்படுத்தப்படுகின்றமையையும், இளந்தாரி தெய்வம் ஈழத்துக்கே உரிய தெய்வமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இணுவில் இளந்தாரி கோவில் பற்றிய ஆய்வை நண்பர்களான கோ. விஜிகரன், கு. டனிஸ்ரன் ஆகியோருடனும், கிராஞ்சி, வேரவில் பிராந்திய இளந்தாரி கோவில்கள் பற்றிய கள ஆய்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் சி. செரஞ்சன், ஆய்வு ஆர்வலர் கோ. விஜிகரன் ஆகியோரின் துணையோடும் மேற்கொண்டோம். இளந்தாரி பற்றிய கதைகள் 1. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கியவர் காலிங்கராயன் என்பவர். காலிங்கராயனின் பின் ஆட்சிக்கு வந்த அவனுடைய மகனே கைலாயநாதன் என்கின்ற இளந்தாரி ஆவான். உடலுறுதி உள்ள துடிப்பான இளைஞர்களை இளந்தாரி என்று அழைப்பர். இவனது வீரம், கொடை, விருந்தோம்பல், ஆட்சித் திறன், இறைவழிபாடு ஆகிய சிறந்த பண்புகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது நூலாலும் செவிவழிச் செய்திகளாலும் அறிய முடிகிறது. இளந்தாரி, தனது உலகு நீத்தலை மக்களுக்கு முன்பே குறிப்பாக உணர்த்தியிருந்தார் எனவும், ஒருநாள் ஒரு புளியமரத்தின் வழியே உருக்கரந்து விண்ணுலகு சென்றார் எனவும் கூறப்படுகிறது. அதனை அறிந்த மக்கள் அங்கு அவரைத் துதித்தனர் என்றும், இளந்தாரி அம்மக்கள் முன் தோன்றி அருளினார் என்றும் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய ‘கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது’ நூலில் கூறப்படுகிறது. 2. சாதாரண சனங்களை நேர்கண்டபோதும், இணுவில் இளந்தாரி கோயில் பூசாரியாக இருந்த ஆறுமுகராசாவின் மனைவி சின்னாச்சி (வயது 94) என்பவரை நேர்காணல் செய்த போதும் கூறப்பட்ட கதை வேறாக இருந்தது. இணுவில் கிழக்கில் கிணறு வெட்டுவதற்காக ஒரு குடும்பம் ஏழாலையிலிருந்து துலா கொண்டுவந்து வேலை செய்தார்கள். தாய் – தந்தையர், இரு இளந்தாரி மகன்கள் என அந்தக் குடும்பம் காணப்பட்டது. ஒருநாள் வீட்டில் நின்ற கன்று தாய்ப் பசுவில் பாலைக் குடித்துவிட்டது. தாயார் குளிப்பதற்கு இவர்கள் கிணற்றிலிருந்து நீரும் அள்ளிக் கொடுக்கவில்லை. இதனால் இரு இளந்தாரி மகன்மாரையும் தந்தையார் கடிந்து கொண்டார். இதனால் இவ்விரு இளந்தாரிகளும் கோபித்துக்கொண்டு புளியமரத்தில் ஏறிக் காணாமல்போன அற்புதம் நிகழ்ந்தது. இவர்களுக்கு உதவியாளராக இருந்தவர் “நான் என்ன செய்ய” என அவர்களிடம் கேட்க “நீ பனையில் ஏறு” என்று அந்த இருவரும் கூற, அவரும் சற்றுத் தூரத்தில் இருந்த பனை மரத்தில் ஏறிக் காணாமல் போனார். மக்கள் யாவரும் திகைத்து வணங்கி நிற்க “எமக்கு காய்மடை, பூமடை வைத்து வழிபடுங்கள் நல்லன நிகழும்” என புளிய மரத்தடியில் அசரீரி கேட்டது. அன்றிலிருந்து இவ்வழிபாடு நிகழ்ந்து வருகின்றது. இங்கு இளந்தாரிகள் இருவரும் வேளாளர் சமூகத்தவராகவும் பனையில் ஏறியவர் பள்ளர் சமூகத்தவராகவும் இருந்தனர். தாமேறிய மரத்தில் அவரை ஏற்றாதது அக்காலச்சமூகத்தில் இருந்த அடுக்கமைவின் இறுக்கத்தை தெற்றெனப் புலப்படுத்துகிறது. இளந்தாரிகளை வேளாளரும், பனையில் ஏறியவரை அவரது சமூகத்தவரும் ஆதரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று பனைமரம் இல்லை. அதில் வளர்ந்த ஆலமரமே உண்டு. அவர் அண்ணமாராக பொல்லு வைத்து வழிபடப்படுகின்றார். இளந்தாரி கோயிலில் புளியமரம் பரந்து நிற்கிறது. அதன் அடியில் பாதம் வழிபடப்பட்டதாகக் கூறப்படினும் இன்று அது இல்லை. நடுகல் வழிபாடு தொடர்ந்து காணப்படுகின்றது. வேல், சூலம் என்பனவும் உள்ளன (நேர்காணல் – பரமானந்தராசா வாகீசன்). கிராஞ்சி, வேரவில், அனுராதபுரம் கிழக்குப் பிராந்தியங்களில் இவ்வாறான கதைகள் எதனையும் அறிய முடியவில்லை. இணுவில் இளந்தாரி கோயில் இணுவில் பகுதியை ஆட்சி செய்த அரச வம்சத்தவராகவும், அருளாளராகவும் தனது உயிர் நீத்தலை முன்பே அறிந்திருந்த தீர்க்கதரிசியாகவும் கருதப்படுகின்ற கைலாயநாதன் வாழ்ந்த அரண்மனையாகவும், வேளாள இளந்தாரிகளின் வீடாகவும் கருதப்படும் வளவில் சிறுகோயில் அமைத்து வழிபடப்பட்டு வந்துள்ளது. அவர்கள் தம் உருவை மறைத்த (உருக்கரந்த) தினம் பெருவிழாவாகக் கொண்டாட்டப்பட்டு வந்துள்ளது. (கந்தசுவாமி,க.இ.க.(பதி), (1998), பஞ்ச பஞ்சவன்னத் தூது, பக், 62 – 74) காலப்போக்கில் இளந்தாரிகள் மறைந்த புளிய மரத்தடியில் இவ்வழிபாடு நிகழ்த்தப்பட, இவர்களது உதவியாளரது வழிபாடு பனை மரத்தடியில் நிகழ்த்தப்பட்டது. இப்புளியமரத்தடி வழிபாடு வைத்திலிங்கம் அவர்களால் கொட்டிலமைத்து தொடக்கிவைக்கப்பட்டது. அவரது மகன் நாகலிங்கம், பின்னர் ஆறுமுகராசா, பரமானந்தபிள்ளை இன்று கானமூர்த்தி மற்றும் சகோதரர்கள் என ஆண்வழிப் பூசாரிகளை கொண்ட வழிபாட்டு முறையாக நிகழ்ந்து வருகிறது. சிறுகொட்டிலாக ஆரம்பித்து 1968 இன் பின்னர், 2024இல் பிராமணர்களால் கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டதாயினும், இப்பூசாரிகளே நாளாந்தப் பூசை தொட்டு வருடாந்த மடை வரை யாவற்றையும் செய்து வருகின்றனர். இந்த ஆலயத்தின் சிறப்பு, நடுகல் வழிபாடு காணப்படுதலாகும். கருவறையில் புளியமரத்தின் ஒரு பகுதி, நடுகல், வேல், சூலம் போன்றன காணப்படுகின்றன. அருகில் பனைமரத்தடியில் உள்ள அண்ணமார் கோயில் கிருஷ்ணன் கோயிலாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலும் கிருஷ்ணன் சிலை வைக்கப்பட்டிருந்தாலும், இது ஆகமமயப்படவில்லை; கிருஷ்ணர் மூலமூர்த்தியாக்கப்படவுமில்லை. கிராஞ்சி குறிப்பன் இளந்தாரி கோயில் கிராஞ்சி, பிருந்தாவனம் பகுதியில் இரண்டு இளந்தாரி கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று கிராஞ்சி பிருந்தாவன சந்தியில் புளிய மரத்தடியின் கீழ் அமைந்துள்ளது. குறிப்பன் இளந்தாரி கோயில் நீண்ட காலமாக அமைந்திருக்கும் கோயிலாயினும் வீரன், கந்தையா, செல்வரத்தினம் , இளையராசா எனும் நான்கு தலைமுறைப் பூசாரிகளையே அறியமுடிகிறது. இதில் கந்தையா என்பாரின் மனைவி பூரணம், யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் (தகவல் ஜீவமலர் விக்னேஸ்வரன், செல்வரத்தினம் பூசாரியின் மகள்). இன்றும் ஓலைக் கொட்டிலாலான சிறு கோயிலாகவே அமைந்துள்ளது. முன்புறம் நான்கு தூண்கள் கூரையின்றிக் காணப்படுகின்றன. விழாக்காலத்தில் பந்தலிடப்படும். மூலத்தில் சூலம் மூன்று வெவ்வேறு அளவுகளில் நாட்டப்பட்டிருந்தது. மையத்தில் இருந்த சூலம் உயரமாகவும், திருசூல இடைவெளியில் கண்ணாடி வைக்கப்பட்டும் இருந்தது. சூலத்தின் இடைப்பகுதியில் இரு கொம்புகள் அல்லது கொழுக்கிகள், ஒன்று மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும், இருபுறமாகவும் காணப்படுகின்றன. இந்த ஆலயத்துக்கு எதிர்ப்பக்கத்தில் புதிய இளந்தாரி ஆலயம் அமைக்கப்பட்டிருப்பினும், ஒரு வருடமே பூசை நடாத்தப்பட்டது. இன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இளந்தாரி கோயிலுக்கு மடைப்பண்டம் வைக்கப்படுகின்ற கிராஞ்சி பட்டிமோட்டை நாகபூசணியம்மன் ஆலயம், இவ்வாலயத்திலிருந்து 100M அளவு தூரத்தில் உள்ளது. அவ்வாலய முன்றலில் உள்ள ஆலமரத்தின் கீழ் குறிப்பன் கோயில் உள்ளது. அங்குள்ள குறிப்பன் தெய்வத்துக்கான சூலம் இளந்தாரி சூலத்துடன் ஒத்திருப்பதும், இவை பட்டிமாட்டுடன் இணைந்த வழிபாடாக சிறுகுடி வேளாள சமூகமான பள்ளர் சமூகத்துடன் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராஞ்சி இளந்தாரி ஆலயத்தை ஒத்த மரபுகளே வேரவில், கல்லாவில் ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வழிபாட்டு மரபுகள் இணுவில் ஆலயத்தில் நாளாந்தம் விளக்கு வைத்து சிறு படையல் இட்டு வழிபடும் முறை காணப்படுகிறது. கிராஞ்சி கோயிலில் வெள்ளிக்கிழமைகள் தோறும் விளக்கு வைக்கப்படுகிறது. இதைவிட தைப்பொங்கல், சித்திர வருடப்பிறப்பு மற்றும் வருடாந்த மடை உள்ளிட்ட விசேட தினங்களில் விசேட பூஜை உண்டு. இணுவில் இளந்தாரி ஆலயத்தில் மரத்தில் ஏறி உரு மறைப்புச் செய்த நாளினை மையமாகக்கொண்டு வருடாந்த மடை நடைபெறுகிறது. வருடாந்தப் பொங்கலுக்குரிய நாளை மூ. சிவலிங்கம் சித்திரை வருடப் பிறப்புக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமை எனவும், கந்தசாமி வருடப் பிறப்புக்கு பின்பு வரும் செவ்வாய்க்கிழமை எனவும் தத்தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இதில் வருடப்பிறப்புக்கு முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமையில் முதலாம் மடை என்கின்ற முதலியார் மடை நடைபெறும். இதுவே பெருவழிபாடாக, பெருவிழாவாகக் கொண்டாடப்படும். வருடப் பிறப்புக்கு பின்பு வரும் செவ்வாய்க்கிழமை எட்டாம் மடையாக அமையும். இது பெரிய அளவில் நிகழ்த்தப்படாமல் சிறப்பு வழிபாடாக நடைபெறும் என ஆலயத்தின் பரிபாலகர்கள் விளக்கம் தருகின்றனர். முதல் மடை நிகழும் நாளை ஒரு மாதத்திற்கு முன்பே பூசாரி ஊரவர்க்கு அறிவிப்பார். அடியவர்கள் கூடி வீடுகள் தோறும் சென்று காணிக்கை பெற்று வருவர். பணம், அரிசி, மரக்கறிகள், தேங்காய், பழம், இளநீர் உள்ளிட்டவை காணிக்கையாகக் கிடைக்கப்பெறும். ஆலயமுன்றலில் மண்பானையில் வளந்து வைக்கப்பட்டு பொங்கல் இடம்பெறும். இதன்போது வாத்தியங்கள் இசைக்கப்பட்டு பூசை நடைபெறும். பூசாரி உருவேறி தெய்வமாடுவார். ஒரு கையில் பிரம்பும் மறுகையில் தீபமும் ஏந்தி வருவார்; கையில் கற்பூரமேற்றி அதனை அடுப்பில் இட்டு பொங்கலை ஆரம்பித்து வைப்பார். அதன்பின் வளந்துப் பானைக்கு அருகே சோறு, கறிகளுக்கான அடுப்புகளும் மூட்டப்பட்டு படையலுணவு ஆக்கப்படும். பலகாரங்களும் படைக்கப்படும். மக்களும் நேர்த்திக்கடனுக்கான பொங்கலைப் பொங்குவர். வளந்து கட்டலின் பின் சின்னத்தம்பிப்புலவரின் பஞ்சவன்னத் தூது ஏடு படிக்கப்படும். இன்று பஞ்சவன்னத் தூது ஏடு நூலுருப் பெற்று இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. இதன்பின் இளந்தாரி வழிபட்ட சிவகாமியம்மன், காளியாச்சி, வைரவர் தெய்வங்களுக்கு படையல்கள் எடுத்துச் செல்லப்படும். அந்தப் பயணத்தில் சங்கு, பறை, முழவு, சேமக்கலம் முதலிய வாத்தியங்கள் இசைக்கப்படும். இளந்தாரி திருவீதியுலாப் பாடல், திருமுறைகள் என்பன பாடப்படும். அந்த ஆலயங்களில் படையல் முடிந்தபின் இளந்தாரியின் ஏவலின்வழி பனைமரத்தில் ஏறிக் காணாமல்போன உதவியாளரின் ஆலயத்திற்குச் (அண்ணமார்) சென்று படையல் படைத்து வழிபாடு இயற்றப்படும். அதன்பின்பே இளந்தாரி கோயிலுக்கு வந்து படையல் வைக்கப்படும். சோறு கறியோடு பழம், வெற்றிலை, பாக்கு, பலகார வகைகள் படைக்கப்பட்டு பூசை இடம்பெறும். பூசாரி தெய்வமேறி, கலையாடி, குறி சொல்லி, விபூதி இடுவர். இறுதியில் கும்ப நீரினை இளந்தாரியின் காலடி இருந்ததாக நம்பப்படும் புளிய மரத்தடியில் ஊற்றி வழிபடுவர். இது காலடி நீர் வார்த்தலாக – காலடி வழிபாடாகச் சொல்லப்படுகின்றது. இவற்றைவிட தீமிதித்தல் முக்கிய வழிபாட்டு முறையாக இன்றுவரை காணப்படுகிறது. கடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தெய்வத்தை வழிபட்டு நோய் நீக்கம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதேபோல கிராஞ்சி கோயிலிலும் தனித்துவமான வழிபாட்டு மரபு காணப்படுகிறது. காட்டுப் பிள்ளையார், அம்மன், குறிப்பன், இளந்தாரி எனும் தெய்வங்களுக்கான வளந்துகள் குறிப்பன் கோயிலில் வைத்தெடுக்கப்பட்டு முதலில் பிள்ளையாருக்கும் பின்பு அம்மனுக்கும் பொங்கலிடப்படும். பின்பு குறிப்பன் முன்றலில் குறிப்பனுக்கும் இளந்தாரிக்கும் பொங்கலிடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் வெற்றிலை மடை வைக்கப்படும். இளந்தாரிக்கான படையல், குறிப்பன் முன்றலில் இருந்தே எடுத்துச் செல்லப்படும். அதில் பொங்கல் இடம்பெறுவதில்லை. இணுவில் இளந்தாரி கூறியது போல காய்மடை, பூமடையே வைக்கப்படுகிறது. பழங்கள் சிறப்பாகப் படைக்கப்படுகின்றன. இங்கும் பறை, சங்கு, சேமக்கலம் முதலான இசைக்கருவிகளின் இசையோடு பூசை நடாத்தப்படுகிறது. அதன்போது பூசாரி தெய்வமேறிக் கலையாடுவார். குறிசொல்லி விபூதியிடுவார். இந்தக் கோயிலின் பூசாரியாக இருந்த செல்வரத்தினம் உருவேறி, கும்பம் ஏந்திச் சென்றபோது (2006) பகைவர் மந்திரத்தால் கட்டியதால் கும்பத்தை இறக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், பின்பு அவரது தம்பியே கும்பம் இறக்கியதாகவும் கூறப்படுகிறது. இணுவில் இளந்தாரி கோயில் போலவே இங்கும் வருடப்பிறப்பை ஒட்டி மடை வைக்கப்படுகிறது. மடையில் ‘நிறைமணி’யாக மோதகம், பழம், பஞ்சாமிர்தம் என்பன வைக்கப்படும். சித்திரை வருடப்பிறப்புக் கழிய வரும் திங்களில், விளக்கு வைப்பர். செவ்வாய் தினத்தில் பொங்கல் வைப்பர். மூன்றாம் நாளே எட்டாம் மடை வைக்கப்படுகிறது. இணுவிலில் எட்டாம் நாளே எட்டாம் மடை வைக்கப்படுகிறது. இளந்தாரி கோயிலில் நீத்துக்காய், இளநீர் என்பன வெட்டிக் கழிப்புச்செய்யும் முறையுண்டு. ஏனைய நாட்களில் நீத்துக்காய் வெட்டும் மரபு இல்லை. தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் நீத்துக்காய் வெட்டப்படாது குத்தி உடைக்கப்படும். இம்மரபு இணுவிலில் இல்லை. கிராஞ்சியில் கழிப்புக் கழித்தல் பிரதான சடங்காக, சாதாரண நாட்களிலும் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பலியிடல் காணப்பட்டாலும், இப்போது பலியிடப்படுவது இல்லை. வழிவெட்டல் சடங்கு நிகழ்த்தும் காலத்தில் தூளி குடித்தல், தூளி பிடித்தல் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. பிரம்பு, பொல்லு, பாவாடை, கெண்டையம் அணிந்து வரும் பூசாரி தெய்வமேறிய நிலையில் ஒன்பதுமுறை மடையை வலம்வந்து இறுதியில் மடைகளை அள்ளி ஒன்றாக முகர்ந்து பார்த்து, பின் அள்ளி எறிந்தபடி ஓடுதல் தூளி குடித்தல் எனப்படுகிறது. அதேபோல எல்லாப் பரிகலங்களையும் அழைத்து, பச்சரிசி எறிந்த பின், நீரைத் தெளித்துத் தெளித்து, எல்லாத் தெய்வங்களும் ஒன்றாக நின்றாடுதல் தூளி பிடித்தல் எனப்படுகிறது. வழிவெட்டல் சடங்குகளில் இன்றும் பெண்கள், சிறுவர்கள் என்போருக்கு அனுமதி இல்லை. எல்லா இளந்தாரி ஆலயங்களிலும் இரண்டாம் மடையாக ஆனித்திங்களில் விழா நடைபெற்று வருகின்றது. பட்டிமோட்டை அம்மனிற்கு, இளந்தாரி உருவேறிய பூசாரியே கொடித்தடி தேடி வெட்டி எடுத்து வருவார். பின்பு இளந்தாரி கோயிலில் வைத்து வேப்பமிலை, அம்மன்கொடி, மாலை என்பன கட்டி பறை மேளத்தோடு எடுத்துச் செல்லப்படும் வழக்கம் கிராஞ்சியில் இன்றும் காணப்படுகிறது. சிங்கள இளந்தாரி கிராஞ்சியில் உள்ள கரும்புக்காரன் கோயிலில் பொங்கல் விழாக்காலத்தில் உருவேறி நின்றாடும் தெய்வங்களில் ஒன்றாக சிங்கள இளந்தாரித் தெய்வம் காணப்படுகின்றார். இவர் ஏனைய தெய்வங்களோடு தெய்வமாடுவதோடு பூசையில் பயன்படுத்தப்படும் மாட்டை இனங்காட்டும் தெய்வமாகவும் விளங்குகிறார். இந்த சிங்கள இளந்தாரி வெள்ளை, சிவப்பு இணைந்த ஆடைகளோடே தெய்வமாடுவார். இவர் தெய்வமாடும் போது பேசுகின்ற பாஷை யாருக்குமே புரிவதில்லை என்பதனால் அவர் சிங்கள இளந்தாரி எனப்படுகின்றார் (தகவல் பா. செல்வம், கிராஞ்சி, வயது 66). சிங்கள மக்கள், பிறருக்கு விளங்காமல் கதைப்பதை தமிழைப் போல் இருக்கிறது எனக் கூறுவதாக பேராசிரியர் கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்தில் ‘தானறியாச் (தானடாச்) சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்’ என்ற பழமொழி நின்று நிலவுகிறது. சில அவதானிப்புகள் இளந்தாரி பற்றிய இருகதை மரபுகள் காணப்படுகின்றன. அரச பரம்பரையோடு இணைந்த கதையை இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் பஞ்சவன்னத் தூதிலேயே காணமுடிகிறது. சாதாரண சனங்களின் கதை நிலவுடமைச் சமூக மனிதர்களின் கதையாக, இரு இளைஞர்களினதும் அவர்களது உதவியாளரதும் கதையாகவே நின்று நிலவுகிறது. இளந்தாரி, இணுவிலில் வேளாளரின் தெய்வமாகக் காணப்படினும் ஏனைய இடங்களில் சிறுகுடி வேளாளரின் தெய்வமாகவே விளங்குகிறது. இளந்தாரி ஆலயங்கள் யாவற்றிலும் பூசாரிகளே இன்றும் பூசை செய்கின்றனர். இணுவில் அண்ணமார் கோயில் மேனிலையாக்கமுற்ற போதும் இளந்தாரி வழிபாடு நாட்டாரியல் மரபோடு தான் விளங்குகிறது. இளந்தாரி என்ற சொல் பல தெய்வங்களோடு இணைந்த சொல்லாகக் காணப்படினும் தனித்தெய்வமாக வணங்கப்படுவதற்கு இக்கோயில்கள் சான்றாகின்றன. கறிசோறு மடை, பழமடை, வெற்றிலை மடை என்பனவே முதன்மை பெறுகின்றன. பொங்கல் இடம்பெறுவதில்லை. பூசாரி, கலையாடி குறிசொல்லும் மரபு இக்கோயில்களில் காணப்பட்டபோதும் இன்று இணுவிலில் அது இல்லாமல் போய்விட்டது. இணுவில் இளந்தாரி மடை இன்று சிவகாமி அம்மன், காளி, வைரவர், அண்ணமாருக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதன் பின்னணியில் சூழல், நேரம், சமூக மாற்றம் எனப் பல காரணிகள் காணப்படுகின்றன. கிராஞ்சி, கல்லாவில், வேரவில் இளந்தாரி கோயில்கள் மந்திரம், சடங்கு என்பனவற்றோடும் கழிப்புக்கழித்தல் மற்றும் தீய கட்டுக்களுடனும் பின்னிப்பிணைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. நாம் சென்றபோது, கிராஞ்சி இளந்தாரி கோயிலில் கழிப்புக்கழிக்க பயன்பட்ட தேசிக்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் ஆலய முன்றலில் எங்கும் பரவிக் கிடந்தன. சிங்கள இளந்தாரி எனும் சொல்லாடல் இனத்துவ, மொழி சார் பண்பாடு பற்றிய மனப்பாங்கின் சொல்லாடலாக விளங்குகிறது. முடிவுரை ஈழத்துப் புலத்துக்கேயான தனித்துவமான நாட்டார் தெய்வமாக இளந்தாரி விளங்குகின்றது. இளந்தாரி பற்றிய கதைகள் சமூக அடுக்கமைவினதும் மனப்பாங்கினதும் வெளிப்பாடாக அமைந்துள்ளன. இத்தெய்வத்தை கயிலைநாதன் எனும் ஓர் இளந்தாரியாக பஞ்சவன்னத் தூது கூற, மக்கள் வாய்மொழிக் கதைகளோ அண்ணன், தம்பி ஆகிய இருவரே இளந்தாரிமார் என உரைப்பதும் (கோயிலின் பின்புறத்தில் மரத்தின் கீழ் இருவருடைய சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன). பனையில் ஏறியவரை மெய்ப்பாதுகாவலர் எனத் தூதிலக்கியம் கூற, மக்களின் வாய்மொழிக் கதைகளோ சிறுகுடி வேளாளர் என உரைப்பதும் மேற்சொன்ன கூற்றைத் தெளிவுபடுத்துகிறது. சமூக மேனிலையாக்கம் மற்றும் சாதிய நீக்கத்தின் வழி அண்ணமார் வேணுகோபாலனாக மாற்றப்பட்டார். இளந்தாரி இன்றும் நாட்டார் தெய்வமாகவே நின்றுநிலவுகிறார். பூசாரி உருவேறி ஆடும்போது பிரம்பேந்தி வருவது விவசாய – கால்நடைத் தெய்வ வழிபாட்டு மரபுடன் இது இணைவதைத் தெளிவுபடுத்துகிறது. முன்பு பலியிடல் காணப்பட்டபோதும் இன்று எவ்வாலயத்திலும் அது நிகழ்வதில்லை. தீமிதித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் தீர்த்தல் மரபுகள் பல காணப்படுகின்றன. கிராஞ்சி, வேரவில், கல்லாவில் போன்ற இடங்களில் துதிப்பாடல்கள் இல்லையாயினும்; மந்திரக்கட்டு, சடங்காசாரங்கள் நின்றுநிலவும் இடங்களாக அவை காணப்படுகின்றன. இளந்தாரி வலிமையின் – வீரத்தின் அடையாளம். ஆதலால் அது நடுகல்லின் வழியும் சூலத்தின் வழியும் நின்று நிலவுகின்றது. https://www.ezhunaonline.com/ilandari-worship/
  11. ஆழ்ந்த இரங்கல்கள். அஜீவன் அண்ணாவுடனான கருத்தாடல்கள் நினைவுக்கு வந்து போகின்றன.
  12. இல்லை. IMDb இல் பல ஆண்டுகளாக ரசிகர்களின் விருப்பமான படங்களில் முதலாவது இடத்தில் உள்ளது https://www.imdb.com/search/title/?groups=top_100&sort=user_rating,desc&ref_=ext_shr_lnk நான் பல தடவைகள் பார்த்தும் இன்னும் அலுக்கவில்லை! ஆனாலும் எனது விருப்பமான படம் Pulp Fiction. இங்கிலாந்துக்கு வந்த பின்னர் திரையில் பார்த்த இரண்டாவது படம்! எப்படியும் 20 தடவைக்கு மேல் VHS, DVD, BlueRay, Streaming இல் பார்த்திருப்பேன். எனக்கு பிடித்த லைன்! "I'm Winston Wolf, I solve problems”
  13. விமர்சனம் : காந்தி கண்ணாடி 6 Sep 2025, 12:51 PM ஹீரோவாக ஜெயித்தாரா கேபிஒய் பாலா? டைட்டிலை பார்த்தவுடனேயே ‘இதென்ன இப்படியிருக்கு’ என்றே பெரும்பாலும் எண்ணத் தோன்றும். கூடவே, இந்த டைட்டிலை வைத்துக்கொண்டு கதையில் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமும் எழும். ஆனால், அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதையே தங்களது பலமாக எண்ணிக் களமிறங்கியிருக்கிறது ‘காந்தி கண்ணாடி’ படக்குழு. ரணம் பட இயக்குனர் ஷெரீஃப் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கலக்கப் போவது யாரு’ பாலா நாயகனாக நடித்திருக்கிறார். ‘ஃபால்’, ‘நவம்பர் ஸ்டோரி’ ‘ட்ரிபிள்ஸ்’ வெப்சீரிஸ்களில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி இதில் நாயகி. இவர்களோடு பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா இருவரும் ஜோடியாக இதில் தோன்றியிருக்கின்றனர். விவேக் – மெர்வின் இணை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறது. சரி, ‘காந்தி கண்ணாடி’ தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளதா? ‘நெகிழ்ச்சி’ தருணங்கள்! ஒரு ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் கதிர் (கேபிஒய் பாலா). அவரது காதலி கீதா (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதனை நிர்வகித்து வருகிறார். நண்பர்கள் சிலர் (மதன், ஜீவா சுப்பிரமணியன்) அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். பணம் மட்டுமே பிரதானம் என்றிருக்கும் கதிர், தங்களது பணியாளர் வராவிட்டால் அந்த வேலையைத் தானே செய்யக் கூடியவர். அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்ளக் கூடியவர். அப்படிப்பட்டவர் ‘அறுபதாம் கல்யாணம் செய்ய வேண்டும்’ என்று தன்னைத் தேடி வரும் காந்தியைக் (பாலாஜி சக்திவேல்) காண்கிறார். மனைவி கண்ணம்மாவின் (அர்ச்சனா) ஏக்கம் அது என்பதை உணர்ந்து, அதனைச் செயல்படுத்தத் துணிகிறார். தனது சம்பளம், சேமிப்பு ஆகியவற்றைத் தாண்டி ஒரு பெரிய தொகையில் அந்த நிகழ்வை நடத்த ஆசைப்படுகிறார். காந்தி ஒரு பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் அவர் சிறு வயதில் நடனமாடும் கண்ணம்மாவை விரும்புகிறார். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழ முடியாது என்பதை உணர்ந்து, இருவரும் சென்னைக்கு வந்துவிடுகின்றனர். அப்போது முதல் கண்ணம்மாவின் வார்த்தைகள் எதையும் காந்தி மீறியதில்லை. முதல்முறையாக, அவரது வார்த்தையை மீறித் தனது ஜமீன் குடும்பத்து சொத்துக்களை விற்றாவது இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கேற்ப, அவர் கைவசம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. அதனைக் கொண்டு எளிதாகத் தனது கண்ணம்மாவின் ஆசையைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறார் காந்தி. அந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கிறது மத்திய அரசு. அதன்பிறகு தனது கையில் இருக்கும் லட்சக்கணக்கான பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கிறார் காந்தி. அவரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று கதிரும் கைவிரிக்கிறார். அதன்பிறகு என்ன ஆனது? காந்திக்கு கதிர் உதவிகள் செய்தாரா என்று பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி. ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் கதிர், அங்கிருந்த காந்தி காணாமல் போனதை அறிந்ததும் துணுக்குறுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அதுவே ‘பிளாஷ்பேக்’குகள் நிறைந்த இப்படத்தைச் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்தக் கதையில் சாதாரண ரசிகர்கள் நெகிழ்ச்சியுறும்விதமாகச் சில தருணங்கள் உள்ளன. பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் வங்கி வாசலில் மக்கள் காத்துக் கிடப்பது போன்றவை அப்படிப்பட்டவை. கூடவே, ‘அதான் நீ இருக்கியே’, ‘தயிர்சாதம் சூப்பர்’ என்று பாலாஜி சக்திவேல் பேசுகிற வசனங்கள் தொடக்கத்தில் செயற்கைத்தனமாகவும், பிறகு நம்மை நெகிழவைக்கும் விதமாகவும் உள்ளன. ‘பொண்டாட்டி செஞ்சதை சாப்பிட்டு, அது நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலைன்னா, நீங்கள்லாம் என்ன …க்கு கல்யாணம் பண்றீங்க’ என்று அவர் வசனம் பேசுகிற இடத்தில் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. அந்த வகையில் முதல் பாதி இளைய தலைமுறைக்கானதாகவும் இரண்டாம் பாதி வயதானவர்களுக்காகவும் அமைந்திருப்பதே இப்படத்தின் சிறப்பு. திருப்தி கிடைத்ததா? இடைவேளை வரை ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டியவாறு நகர்கிறது திரைக்கதை. அதன்பிறகு அதில் நிறையவே தொய்வு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் ‘இவ்ளோ கஷ்டப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள்ள இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்தனுமா’ என்று எண்ணும் அளவுக்குக் காட்சிகள் ‘சோக கீதம்’ வாசிக்கின்றன. ’முனுக்கென்றால் கோபம் வந்துவிடும்’ என்பது போலச் சட்டென்று கண்ணீரை உதிர்க்கக்கூடியவர்கள் தேம்பி அழும் அளவுக்கு இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கின்றன. அக்காட்சிகளில் தெரிகிறது இயக்குனர் ஷெரீஃபின் வித்தை. இப்படத்தில் திருவிழா காட்சிகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றில் மட்டும் கொஞ்சம் பிரமாண்டம் தெரிகிறது. மற்றபடி இது சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. முடிந்தவரை அந்த எண்ணம் வராத அளவுக்குக் காட்சியாக்கத்தைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன், தயாரிப்பு வடிவமைப்பாளர் மணிமொழியான் ராமதுரை கூட்டணி. ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ போன்ற அம்சங்கள் காட்சிகளைச் செறிவாக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. திரையில் கமர்ஷியல் சினிமாவுக்கான ‘ஜிகினாத்தனம்’ தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருப்பது அருமை. அந்த வகையில் காட்சியாக்கத்தில் யதார்த்தம் நிறைந்திருக்கிறது. அதனைத் தாண்டி, திரையில் தெரியும் பிம்பங்களின் வழியே வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கடத்த தூண்டுகோலாய் இருக்கிறது விவேக் – மெர்வினின் பின்னணி இசை. ‘திமிருக்காரி’ பாடல் ‘காந்தி கண்ணாடி’யின் அடையாளமாக உள்ளது. இது போக ‘புல்லட் வண்டி’, ‘ஹிந்தி நஹி மாலும்’ பாடல்களும் கேட்டவுடன் பிடிக்கும்விதமாக உள்ளன. அனைத்தையும் தாண்டி கிளைமேக்ஸ் பகுதியில் யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலிக்கிற ‘மெலடி மெட்டு’ நம் மனதைப் பிசையும்விதமாக உள்ளது. அதுவரை இப்படத்துடன் ஒன்றாதவர்கள் கூட, அந்த இடத்தில் இக்கதையோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள் என்பதே நிஜம். ‘காந்தி கண்ணாடி’ கதையில் முதன்மையாக வரும் நான்கு பாத்திரங்களின் பின்னணி ‘விலாவாரியாக’ விளக்கப்படவில்லை. போலவே, இதர பாத்திரங்களும் காட்சிகளில் வருகின்றன, போகின்றன. அவற்றின் பின்னணியைக் கொஞ்சம் விளக்கியிருந்தால் இன்னும் முழுமையானதாகத் திரையனுபவம் மாறியிருக்கும். ஆனால், அந்த குறையை மறக்கடிக்கும்விதமாக இதில் நடிகர்களின் ‘பெர்பார்மன்ஸ்’ உள்ளது. அந்த வகையில் நாயகன் நாயகியை விட நம்மை வசீகரிப்பது பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா ஜோடி தான். அவர்களைப் புகழ்வது கடல் நீரில் பெருமழை பெய்வதைப் போலானது என்பதால் அடுத்திருப்பவர்களை உற்றுநோக்கலாம். பாலாவுக்கு இது நாயகனாக முதல் படம். அதனை உணர்ந்து சிரத்தை காண்பித்திருக்கிறார். தனது உடல் திரையில் கம்பீரமாகத் தெரிய மெனக்கெட்டிருப்பவர், முக பாவனைகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல், முதல் பாதியில் அவர் கருமியாகவும் சுயநலமானவராகவும் இருப்பது தெளிவாகச் சித்தரிக்கப்படாதது ஒரு குறையே. மற்றபடி, தன்னைக் கொண்டாடுகிற ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அளவுக்கு இப்படத்தைத் தந்திருக்கிறார். அதிகமாக ‘காமெடி கவுண்டர்கள்’ அடிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார். நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி அழகாக இருக்கிறார். தனக்கு ‘ஸ்கோப்’ இருக்கிற இடங்களில் அழகாக நடித்திருக்கிறார். ஆனாலும், அது போதுமானதாக இல்லை. ஒருவேளை நாயகன் நாயகி இருவருக்குமே அதிகளவில் ‘குளோஸ் அப்’ ஷாட்கள் வைக்காதது இயக்குனரின் குறையா என்றும் தெரியவில்லை. இவர்கள் தவிர்த்து ஜீவா சுப்பிரமணியன், மதன் மற்றும் பண மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாக நடித்தவர்கள் என்று சிலர் வந்து போயிருக்கின்றனர். அமுதவாணன், நிகிலா சங்கர் ஜோடிக்குத் திரைக்கதையில் உரிய இடம் தரப்படவில்லை. பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் மனோஜ் பிரபு – ஆராத்யா ஜோடி சட்டென்று மனதில் பதிகிறது. அதே நேரத்தில், அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதற்கான காரண காரியங்கள் இன்னும் தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கலாம் என்றெண்ணுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த படத்தின் முடிவு சில ரசிகர்களுக்குத் திருப்தியைத் தராமல் போகலாம்; இவ்வளவு சோக முடிவு தேவையா என்ற கேள்வியை எழுப்பலாம். ‘இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்’ என்றும் தோன்றலாம். அனைத்தையும் தாண்டி சில மனிதர்கள், அவர்களது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் என்ற வகையில் நமக்கு இன்னொரு உலகத்தைக் காட்டுகிறது ‘காந்தி கண்ணாடி’. பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்குள் நுழைந்தால் இப்படம் ஓரளவுக்கு ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் தரக்கூடும். https://minnambalam.com/gandhi-kannadi-movie-review-2025/
  14. கிருஷாந்தி நினைவேந்தல் சனி, 06 செப்டம்பர் 2025 01:43 AM 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைத்து வருகிறது. நிகழ்ச்சி நிரல்: காலை 9.00 – நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் காலை 9.30 – நினைவுப் பகிர்வு காலை 10.00 – “வாசலிலே கிருசாந்தி” கவிதைத் தொகுப்பு வெளியீடு காலை 10.30 – ஆவண காட்சிப்படுத்தல் மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றார்கள். https://jaffnazone.com/news/50435
  15. செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 230க்கும் அதிகமான என்புக்கூடுகள் மீட்பு சனி, 06 செப்டம்பர் 2025 11:13 AM செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது , அகழ்வாய்த்தளம் - 1 மற்றும் அகழ்வாய்வு தளம் - 02 என அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது அகழ்வாய்த்தளம் - 01 புதைகுழியில் கட்டம் கட்டமாக 54 நாட்களாக , அண்ணளவாக 30 அடி அகலமும் 50 அடி நீளமும் , 05 அடி ஆழத்திலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது குறித்த புதைகுழியில் இருந்து 231 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. குறித்த புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகவும் குவியல் ஆகவும், அமர்ந்த நிலையிலும் என சிறுவர் , சிசுக்கள் உள்ளிட்டவர்களின் என்புக்கூடுகளும் அடையாளம் கண்டு மீட்கப்பட்டிருந்தன. அதேவேளை அகழ்வாய்வுத் தளம் - 02 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 09 என்புக்கூடுகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/50440
  16. அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு September 6, 2025 12:42 pm தமிழ்நாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் காலவகாசம் விதித்துள்ள நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தார். இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பெரும்பான்மை தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக அதிமுக ஒன்றுபட வேண்டுமென கோரிக்கையை முன் வைத்ததாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே, பரப்புரை பயணத்திற்காக திண்டுக்கல்லில் தங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. https://oruvan.com/sengottaiyan-removed-from-all-responsibilities-of-aiadmk/
  17. 2025 ஆம் ஆண்டில் இதுவரை 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 50 பேர் உயிரிழப்பு கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார். இதன்மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 50 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர். கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு: கடந்த 12 மணி நேரத்தில் நடந்த முதல் துப்பாக்கிச் சூடு, நேற்று (05) இரவு 11:45 மணியளவில் கிரேண்ட்பாஸ், மகாவத்தை கடிகார கோபுரம் அருகே நடைபெற்றது. இதில் 27 வயதான ஹேஷான் சலிந்த புஷ்பகுமார உயிரிழந்தார். பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூடு: இதற்கு சற்று பின்னர், அதிகாலை 1:40 மணியளவில் மருதானையில் உள்ள பஞ்சிகாவத்தை பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் காயமடைந்த செந்தில் மோகன் (வயது 44), பஞ்சிகாவத்தையைச் சேர்ந்தவர், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் மோகன், “நெவில்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு, “கெசல்வத்தே கவி” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நீர்கொழும்பு குட்டிதுவ துப்பாக்கிச் சூடு: இதேவேளை, நீர்கொழும்பு குட்டிதுவ பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (06) அதிகாலை 1:30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு வீட்டின் மீது 9 மிமீ துப்பாக்கியால் ஒரு முறை மட்டும் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அலுபோமுல்ல சந்தகலவத்தை துப்பாக்கிச் சூடு: இன்று காலை 9:45 மணியளவில், பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்தை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், N99 துப்பாக்கியால் விற்பனை நிலையத்தில் இருந்த பெண்ணை குறிவைத்து சுட்டுள்ளனர். எனினும், இந்தச் சம்பவத்தில் குறித்த பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. https://adaderanatamil.lk/news/cmf7yzacs008qqplpfnjgoxuw
  18. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்! சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது. அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்றையதினம் (04) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது. இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://newuthayan.com/article/அரசியல்_கைதிகளின்_விடுதலையை_வலியுறுத்தி_இந்தியாவில்_இருந்து_வந்த_விடுதலை_நீர்!
  19. யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம் யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலு வகிப்பார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966-1970 ஆம் ஆண்டு பயின்ற குமாரவடிவேல் பௌதீகத் துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். 2006 - 2007 ஆம் ஆண்டுகளில், மிக நெருக்கடியான காலகட்டத்தில், யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்போடு சிறப்புப் பணியாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2015 முதல் 2020 வரை அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் அவர் பணி புரிந்தவர். பல்கலைக்கழக முன்னாள் சட்ட விரிவுரையாளர் சட்டத்தரணி கு.குருபரனின் தந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-பல்கலை-வேந்தராகப்-பேராசிரியர்-ராஜரட்ணம்-குமாரவடிவேல்-நியமனம்/175-364092
  20. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 06 Sep, 2025 | 01:23 PM காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை(இன்று) அதிகாலை வரை தொடர்ந்தது. பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/224365
  21. மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை! adminSeptember 6, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் அடிப்படையாக அமைந்த மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இத்தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரியுள்ளது. நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை https://globaltamilnews.net/2025/220156/
  22. பென்டகனை போர்த் திணைக்களமாக மாற்றுவதற்கு தீர்மானம் - ட்ரம்ப் 05 Sep, 2025 | 09:25 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்புத் திணைக்களமான பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற தீர்மானித்துள்ளார். மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன அமெரிக்க ஆயுதப்படைகளை மேற்பார்வையிடும் பென்டகன், போர்த் திணைக்களத்தின் வாரிசு ஆகும், இது முதன்முதலில் 1789 இல் அமைச்சரவை அளவிலான நிறுவனமாக நிறுவப்பட்டு 1947 வரை நீடித்தது. நிர்வாகத் திணைக்களத்தை உருவாக்கும் பொறுப்பு அமெரிக்க காங்கிரஸிடம் உள்ளது. அதாவது திணைக்களத்தின் பெயரை உத்தியோகபூர்வமாக மாற்ற ஒரு திருத்தம் தேவைப்படும் https://www.virakesari.lk/article/224251
  23. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 05 Sep, 2025 | 09:47 AM ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை(நேற்று) இரவு 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு நாட்களில் மூன்றாவது நிலநடுக்கமாக இது ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. குறித்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி 20.56 அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதுடன், அந்த பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், காயமடைந்த சுமார் 17 பேர் குனார் மாகாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,368 பேர் உயிரிழந்ததுடன், 2,180 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/224250
  24. கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை 04 September 2025 குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏறாவூர் நீதிவான் முன்னிலையில் மாணவர்கள் 16 பேரும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல குறித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தினமும் மாலை 05 மணிக்கும் 06 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏறாவூர் காவல்நிலையத்துக்கு சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிவான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் குறித்த 16 மாணவர்களும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 07 மாணவிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. Hiru Newsகிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணைகிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை . Most visited website in Sri Lanka.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.