Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஞாயிறு 20 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 05 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் பிரபா செம்பாட்டான் எப்போதும் தமிழன் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 12 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 11 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் ஈழப்பிரியன் வீரப் பையன்26 பிரபா செம்பாட்டான் கந்தப்பு தமிழ் சிறி குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் நிலாமதி சுவி சுவைப்பிரியன் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் கிருபன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் எவரும் அரைச் சதங்கள் அடிக்காவிட்டாலும் வேகமாக அடித்தாடியதால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்தது. அவர்கள் அடித்த வேகத்திற்கு இன்னும் 20 - 30 ஓட்டங்கள் கூட எடுத்திருக்க வாய்ப்பிருந்தது, ஆனால் இறுக்கமான இறுதி ஓவர்களினால் அதிக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களான சாய் சுதர்சன், ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த ஜொஸ் பட்லர் ஆகியோரின் மிகவேகமான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக முன்னேறி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்களான எய்டன் மார்க்கம், ஆயுஷ் படோனி ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும் அப்துல் சமட்டின் நான்கு சிக்ஸர்களின் உதவியுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் உள்நுழைந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வேகமான 74 ஓட்டங்களுடனும், ரியான் பராக்கின் 39 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியபோதும் 18 வது ஓவரில் இருவரும் விக்கெட்டைப் பறிகொடுத்தமையாலும், இறுதி ஓவரை ஆவேஷ் கான் ஹெட்மயரின் விக்கெட்டை எடுத்ததோடு ஓட்டங்களைக் கொடுக்காது மட்டுப்படுத்தியதாலும் இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களையே எடுத்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. விலகலுக்கு காரணம் இதுதான்… துரை வைகோ அறிக்கை முழு விவரம்! 19 Apr 2025, 12:55 PM அண்மைக்காலமாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் மோதல் முற்றிய நிலையில், முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ இன்று (ஏப்ரல் 19) விலகியுள்ளார். தன்னுடைய விலகலுக்கான காரணத்தை பட்டியலிட்டு துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லை சத்யாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக துரை வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியினரின் அன்பு நெகிழச் செய்தது! அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான், உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர், ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன். இந்த சூழ்நிலையில் தான் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வைகோ உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். வைகோ இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தொண்டர்களின் எதிர்பார்ப்பு! வைகோ மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது. இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் வைகோ உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை தலைவருக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக வைகோ பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மதிமுகவை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாட்டில் திமுகவை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் மதிமுக குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது. மதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் வைகோ அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த போது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர். தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த வைகோ, நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். எந்த பதவியையும் விரும்பியதில்லை! நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கட்சியில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மதிமுகவில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், வைகோவுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்றத் தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும், அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன். அதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததும் எல்லா மாநகராட்சிகளிலும் கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் பேரூராட்சி நகராட்சிகளில் கட்சியினர் உறுப்பினர்களாக பதவிக்குச் செல்லவும் நான் என்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டேன். மதிமுகவில் புத்துணர்ச்சி! அதற்காக கூட்டணி தலைமையுடன் பல நேரங்களில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றி இருக்கிறேன். தமிழகத்தில் நகராட்சி தலைவராக மாங்காடு முருகன் மனைவி சுமதி முருகன் பொறுப்பு ஏற்கவும், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பொறுப்பை சூர்யகுமார் ஏற்கவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துணைத் தலைவர்களாக கட்சி தோழர்கள் இடம் பெற செய்யவும் என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றோம் என்பதை கட்சி தோழர்கள் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டு அரசியலில் மதிமுக நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெற்றி நடை போடத் தொடங்கியதும் இயக்கத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கினேன். இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தலைவருக்கு துணையாகவும் செயல்பட்டு வரும் எனக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் ஊக்கமளித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் நமது கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கனிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்த போது கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினேன். ஆனால், நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்தான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று திருச்சி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை நாம் பெற்றோம். வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம்! எனக்கு வாய்ப்பினை தந்த மதிமுகவிற்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் நாடாளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்துகிறேன். திருச்சி தொகுதியில் மக்கள் கட்சிக்கு பேராதரவு தரும் வகையிலும் ,தொகுதி பிரச்சனைகளுக்கு வேண்டிய தீர்வு கிடைக்கும் வகையிலும் பணியாற்றுகிறேன். ஒன்றிய அமைச்சர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு வைகோவை அழைத்துக் கொண்டு நேரடியாக போய் சந்தித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முனைந்து வருகிறேன். அதைப்போல மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மதிமுகவுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்பதால் தளராத ஊக்கத்துடன் மக்கள் பணியை செய்து வருகிறேன். வைகோவை நேசிப்பதை போல என்னையும் கட்சியின் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன். வைகோ உருவாக்கிய மதிமுக என்கிற இந்த திராவிட இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைப்பதை போல நானும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும்” வாழ்நாள் போராளி”என்கிற விருது மட்டும்தான். மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள். வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல் தான் எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார். சிவகாசி ரவி தீக்குளித்த போது எழுந்த மன வேதனையில் இருந்து வைகோ மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது. அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால், அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். https://minnambalam.com/durai-vaiko-lists-out-why-he-resigned-from-mdmk-post/
  4. வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான் 19 Apr 2025, 8:33 AM மே 18-ஆம் தேதி கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து சென்றால் ஸ்டாலின், விஜய் ஆகியோர் தேர்தலில் நிற்க உடனடியாக சீட் கொடுத்துவிடுவார்கள். இந்தப் படையை சரியாக வழிநடத்திக் கொண்டுபோய் நான் வென்று காட்டுவேன் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் என்னுடன் வாருங்கள். உங்களுக்கு ஒதுக்கும் தொகுதியில் நீங்கள் வென்று காட்ட வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்றால் பாடையில் ஏற்றி மாலை போடுவேன். எப்படி பார்த்தாலும் மாலை கன்ஃபார்ம். தோற்றால் சிறிது பால்டாயிலை வாங்கி குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள். வேறு வழியே கிடையாது. நம்முடைய கட்சி பிளக்ஸ் பேனரில் தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். தறுதலைகளை போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு ஃபோட்டோ வைக்க கூடாது. எங்கெங்கு நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ அங்கு நம்முடைய குரல் ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். https://minnambalam.com/ntk-seeman-speech-about-win-in-2026-election/
  5. யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கமும் எங்கே போனது ? யுத்தம் முடிவடைந்த பின்னர் 220 கிலோ தங்கம் வடக்கில் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுதா கிரியடேஷன் என்ற யூடிப் தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே முன்னாள் இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். அதன்போது சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, யுத்தம் முடிவடைந்து மூன்று மாதங்களில் நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகிவிட்டேன். ஆனால் நான் இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் 220 கிலோ தங்கத்தை பல்வேறு இடங்களில் குழிகளில் இருந்து மீட்டோம். இரும்பு பெட்டிகளில் அவை இருந்தன. அந்தத் தங்கம் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்கள் அடகு வைத்தவையாகும். அடகு வைத்தவர்களின் பெயர், ஊர் விபரங்கள் அந்தந்த நகைகளில் பொலித்தினால் சுற்றப்பட்டிருந்தன. அவற்றை நாங்கள் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்தோம். எனினும் அதற்கு பின்னர் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் அதேபோன்று பெருமளவு தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 110 கிலோ தங்கம் கிடைத்திருந்தது என்று பஸில் ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தார். அப்படியென்றால் அதில் அரைவாசியை பையில் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இதேவேளை திறைசேரியில் இருந்த ஆறாயிரம் கிலோ தங்கம் ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் ஜப்பானுக்கு விற்கப்பட்டுள்ளதாக உள்ளக விசாரணைகள் நடக்கின்றன. அப்படியென்றால் அரச பொறுப்பில் இருந்த தங்கத்திற்கும் வேலையை காட்டியுள்ளார்கள் என்றே கூற வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=321235
  6. ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்! adminApril 18, 2025 1970 களில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) ஆகியன ஆற்றிய பங்களிப்பின் போது முக்கிய தோழியாக, மூத்த செயற்பாட்டாளராக இயங்கியவர் புஸ்பராணி. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அஞ்சாது, துஞ்சாது, அயராது, தளராது, எந்த இடர் வந்த போதும் கலங்காது ஏறு நடை போட்ட ஈழப் போராட்டத்தின் போராளியாக விளங்கியவர். 1970களின்முற்பகுதியில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சுடராக ஒளிர்ந்தவர் புஸ்பராணி என்ற ஆளுமை. ஒரு காலத்தின் சரித்திரக் குறியீடு . 1970 களின் முற்பகுதியில் அவர் அனுபவித்த சிறை வதை வாழ்வு அன்றைய ஊடகங்களில் மனித உரிமை ஸ்தாபனங்களின் அறிக்கைகளில் நீக்கமற இடம் பெற்றன .4 ஆம்மாடியின் இருண்ட வதை கூடங்கள் அறிமுகமான காலமது . 1970களின்முற்பகுதியில் தெற்கிலும் வடக்கு கிழக்கிலும் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு சவாலாக எழுந்த தெற்கு வடக்கு இளைஞர்களின் கதை வதைகளின் கதைகளான காலமது. பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் பல தசாப்தங்கள் கடந்து 1970களின் அனுபவத்தை புதிய புலம் பெயர் மற்றும் சமூக அனுபவ வெளிச்சத்தில் அகாலம் என்ற தலைப்பில் எழுதினார். பிரான்சின் ஈழ முற்போக்கு அணியின் பெண் ஆளுமை அவர். தமிழ் சிங்கள ஆளும் வர்க்க மன நிலை இந்த புத்தகத்தின் ஊடாக உணர்த்தப்படுகிறது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை சமூக பிரக்ஞையுடன் முன்னெடுத்த இளைஞர் இயக்க வரலாற்றில் மறைந்த புஷ்பராஜா அவரது சகோதரிபுஸ்பராணி அவர்களின் பங்களிப்பு குறித்துரைக்கப்பட வேண்டியது இவர்கள் ஈழப் போராட்ட இளைஞர் இயக்க வரலாற்றின் முன்னோடிகள் சின்னங்களாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். மூலம் – Sritharan Thirunavukarsu – Varathar Rajan Perumal https://globaltamilnews.net/2025/214472/
  7. தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்! adminApril 19, 2025 தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.விபி யினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அனுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணமாக இருந்தனர். இவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை திசை திருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர். ஆனால் இன்று குத்துக்கரணம் அடித்து மக்களை ஏமாற்றி எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கின்றனர். இனவாதத்தை தூண்டும் இந்த தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை கூறி அவர்களது உச்சபட்ச இனவாதத்தின் வெளிப்பாட்டை காட்டுகின்றனர். முன்னைய அரச தலைவரான கோட்டாவுக்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது அவரது உண்மை முகத்தைக் காட்ட, ஆனால் இந்த ஜேவிபியின் உண்மையான முகம் 6 மாதங்களுக்கள் வெளிப்படுவிட்டது. முன்னைய அரசாங்கத்தவர்கள் இனவாதிகள். அதை அவர்கள் வெளிப்படையாகவே காட்டினர். ஆனால் இவர்கள் அதைவிட மோசமனவர்கள். மக்களை நம்பவைத்து தம்வசப்படுத்தி கழுத்தறுக்க முயற்சிக்கின்றனர். இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் தமிழ் மக்களின் இருப்பை சூட்சகமாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாகவே முன்னெடுப்பதாக உள்ளது. இது அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் போக்காகவே இருக்கின்றது. மக்களின் ஆதரவை பெறுவதற்காக பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் அந்த வாக்குறுதிகளுள் ஒன்றைக்கூட நிறைவேற்றாது மீண்டும் புதிய பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றது. இது தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடும் முயற்சியாக இருக்கின்றதே தவிர தமிழ் மக்களின் நலன்களுக்கானதாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இதை எமது மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் இதன் வெளிப்பாட்டை உள்ளூராட்சித் தேர்தலிலும் வெளிப்படுத்த வேண்டும். அந்தவகையில் தமக்கு வாக்களித்தால்தான் பிரதேச சபைகளுக்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கருத்தானது ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா? என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/214483/
  8. இப்பத்தான் பாதிக்கிணறு தாண்டி இருக்கு! எல்லாம் அடுத்த பாதியில் தலைகீழாக மாறும்! அதனால் நம்பிக்கையுடன் பொறுத்திருந்து உன்னிப்பாக அவதானிக்கவேண்டும். அணிகளின் தற்போதைய நிலைகள்: தற்போது பட்டியல் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளில் ஒன்றை ஐபில் சம்பியனாகக் கணித்தவர்கள்! DC - 0 PBKS - 0 GT - 0 RCB - 3
  9. பிள்ளையானின் சாரதி ஜெயந்தன் சிஐடியினரால் கைது செய்திகள் மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் சாரதியான ஜெயந்தன், இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த 8ஆம் திகதி பிள்ளையான் அவரது அலுவலகத்தில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளைத் தொடர்ந்து, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிள்ளையானின் சாரதி ஜெயந்தனை, கொழும்பிலிருந்து வந்த சிஐடி அதிகாரிகள், வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cm9mx35gp00hyhyg3leur5p0n
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா🎉🎂🎊🎈
  11. சனி 19 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 17 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிலாமதி சுவி கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 18 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 05 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சுவி கந்தப்பு ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  12. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 34வது போட்டி மழை காரணமாகத் தாமதமாகியதால் 14 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் ரிம் டேவிட்டின் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களும் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் வெற்றி இலக்கை அடையக்கூடிய ஓட்டவிகிதம் குறைவாக இருந்தமையால் ஆட்டமிழக்கால் 33 ஓட்டங்கள் எடுத்த நெஹால் வதேராவின் பங்களிப்புடன் 12.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 98 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதலாவது இடத்தை @நந்தன் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பாதுகாப்பாகத் தக்கவைத்துள்ளார். @goshan_che மீண்டும் தனக்குப் பிரியமான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!
  13. ஒருத்தருடனும் டீல் கிடையாது. என்ன பதிலாகத் தந்தார்களோ, அதற்கேற்பத்தான் படி அளக்கப்படும்! கொப்பியடித்தால் வெல்லமுடியாது. கும்பலில் “கோவிந்தா”தான் போடமுடியும்😝
  14. 90களின் நடுப்பகுதியில் இருந்து நம்ம கொண்டாட்டங்களின் டிஜேயாக ட்ரிங்கோ வசி இருந்தவர்.. 😃
  15. ஆமா! “கதம் கதம், முடிஞ்சது முடிஞ்சு போச்சு”
  16. மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்! 17 Apr 2025, 5:18 PM இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகாவில் பிறந்தவரான இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரான பிரவீன் குமாரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரவீன் குமாரை விவாகரத்து செய்தார். விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதில் பதிந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்று, அதில் மக்களின் ஆதரவுடன் இரண்டாவது வெற்றியாளர் ஆனார். இதற்கிடையே பிரியங்காவின் அம்மா, தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக மேட்ரிமோனியில் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தான் நேற்று தனது காதலரான வசி என்பவரை திடீரென திருமணம் செய்துள்ளார். டிஜே மற்றும் ஈவெண்ட் மேனஜராக பணியாற்றி வருகிறார் வசி. இருவீட்டு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் அமீர் – பாவனி ஜோடி, நிரூப், சுனிதா, அன்ஷிதா உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமீபத்தில் தன்னுடைய பக்கெட் லிஸ்ட் பற்றி பிரியங்கா அளித்த பேட்டியில், “பிக் பாஸ் போக வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது.. இனி நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.. என்னை என்னுடைய கணவர் தாங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். தற்போது அவரது திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து குவிந்து வருகிறது. https://minnambalam.com/priyanka-deshpande-marraige-hits-social-media/
  17. அன்னை பூபதியின் நினைவு தினம் ; சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை 18 Apr, 2025 | 12:32 PM சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு காத்தான்குடி மற்றும் கொக்குவில் பொலிஸாரினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கடிதமானது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தனது மொழி உரிமை மீறப் பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரான ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 19 ஆம் திகதி அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் மேற்படி விசாரணைகள் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/212279
  18. இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஹமாஸ் இஸ்ரேல் முன்மொழிந்த இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் உத்தியோகப்பூர்வமாக நிராகரித்துள்ளது. பாலஸ்தீனத்துடன் 45 நாட்களுக்கான போர் நிறுத்த திட்டத்தை முன்மொழிந்த இஸ்ரேல், 10 பணயக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இணங்கியது. எனினும் இவ்வாறான பகுதியளவான போர்நிறுத்த ஒப்பந்தங்களை தாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும், அவை பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கானவை என்றும் ஹமாஸின் பிரதானப் பேச்சாளர் காலில் அல் ஹய்யா தெரிவித்துள்ளார். தாங்கள் நிறைவானதும், முழுமையானதுமான போர் நிறுத்த ஏற்பாட்டையே எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.hirunews.lk/tamil/403155/இடைக்கால-போர்-நிறுத்தத்-திட்டத்தை-நிராகரித்தது-ஹமாஸ்
  19. வடக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோர் மிகவிரைவில் சிறைக்குச் செல்வர்! அமைச்சர் சந்திரசேகர் உறுதி வடமாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோரும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரும், மணல் கடத்தலில் ஈடுபடுவோரும் மிக விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது: 'கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராகச் சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகும். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பியெண்ணி வருகின்றனர். அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயற்படும். நாம் இவ்வாறு செயற்படும்போது தேசிய மக்கள் சக்தியினர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக கொக்கரிக்கின்றனர். எமக்கு எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் கிடையாது. குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. சட்டத்தை நாம் கையில் எடுக்கமாட்டோம். நீதிமன்றம் ஊடாகவே அதற்குரிய பணிகள் இடம்பெறும். வடக்கிலும் மணல் கடத்தல்காரர்கள் உள்ளனர், ஆட்களை கடத்தியவர்கள் உள்ளனர், ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள், மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நிம்மதியை சீர்குலைத்தவர்கள், தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளனர். சந்திரசேகரன் ரௌடி எனவும் கூறத்தொடங்கியுள்ளனர். என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி. மக்களுக்காக செயற்படுகின்றபோது, மக்களுக்காக குரல் கொடுக்கின்றபோது, மக்களுக்காக எம்மை அர்ப்பணிக்கின்றபோது அதை பார்த்து ரௌடித்தனம் என்கின்றனர். இதுதான் ரௌடித்தனம் எனில் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பைல்களை தூக்கித் திரிந்தவர்கள்தான் இப்படிச் சொல்கின்றனர். புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டபோது அதனை வரவேற்றவர்கள், இன்றைக்கு தாங்கள்தான் புலிகள் அமைப்பின் அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். புலிகள் காலத்தில் துரோகி முத்திரை குத்தப்பட்டவர்கள் இவர்கள்' -என்றார். https://newuthayan.com/article/வடக்கு_மாகாணத்தில்_ஊடகவியலாளர்களைக்_கொன்றோர்_மிகவிரைவில்_சிறைக்குச்_செல்வர்!
  20. யாழ். வரணியில் நீரில் மூழ்கி இறந்த காதலனின் செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு! வரணி சிட்டிவேரம் (சுட்டிபுரம்) பகுதியில் உள்ள குளமொன்றில் நீராடிய இளைஞர், குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 23வயதுடைய சிவராசு சிலுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் கோவில் பகுதியில் உள்ள திம்புருவில் குளத்தில் நீராடியுள்ளனர். அப்போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், வரணி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் உயிர்மாய்த்துள்ளார். வரணி பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/யாழ்._வரணியில்_நீரில்_மூழ்கி_இறந்த_காதலனின்_செய்தி_கேட்டு_காதலி_உயிர்மாய்ப்பு!
  21. காணிகளை விடுவிப்போம் – யாழில் ஜனாதிபதி உறுதி adminApril 17, 2025 மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் மக்களை பிரித்துள்ளன. ஆனால் கடந்த பொது தேர்தலின் போது வடக்கு, கிழக்கு, தெற்கு, தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்தனர். அப்படிப்பட்ட ஒன்றிணைந்த தேர்தல்களே வேண்டும். மீள பிரிய மக்கள் பிரிந்து வாக்களிக்க வேண்டாம். தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு மக்களாக ஒன்றாக வாழ வேண்டும். சகல மக்களுககும் சமனான உரிமை வேண்டும். அவ்வாறான நாடு தான் எமக்கு தேவை. கடந்த காலங்களில் போர் புரிந்தோம் அதனால் என்ன நடந்தது ? அழிவுகளை தான் சந்தித்தோம். எம் உறவுகளை இழந்தோம். வடக்கிலும் தெற்கிலும் அதே நடந்தது. மீள அப்படி ஒரு நிலை எமக்கு வேண்டாம் எங்கள் தலைமுறைகள் போர் புரிந்தோம் அடுத்த தலைமுறைகள் போர் இல்லாது சமாதானமாக அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். போர் இனவாத அரசியல்வாதிகளுக்கே தேவை எமக்கு தேவையில்லை. அரசியல்வாதிகளின் தலையீடு இல்லை எனில் திஸ்ஸ விகாரை பிரச்சனையை தீர்ப்போம் யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சனை இருக்கின்றது. அதனை இலகுவாக தீர்க்க முடியும். அதற்கு அந்த விகாரையை வைத்து வடக்கில் அரசியல் செய்பவர்கள் அதில் இருந்து விலக வேண்டும். அதேபோன்று தெற்கிலும் அந்த விகாரையை வைத்து அரசியல் செய்பவர்கள். அந்த அரசியலை கைவிட வேண்டும். அவ்வாறு அரசியல்வாதிகள் விகாரை பிரச்சனையில் இருந்து விலகுவார்களாக இருந்தால் எம்மால் அந்த பிரச்னையை மிக இலகுவாக தீர்க்க முடியும். விகாரை காணி உரிமையாளர்கள் , விகாரைக்குரிய விகாராதிபதி , நாக விகாரை விகாராதிபதி ஆகியோர் இணைந்து பேசி அதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். நாட்டில் தொல்பொருள் எச்சங்கள் காணப்பட்டால் , அது தமிழா , சிங்களமா முஸ்லிமா , இந்துவா பௌத்தமா என பார்க்காது எமது நாட்டின் தொல்லியல் மரபு எமது பண்பாடு என ஒரு நாட்டு மக்களாக சிந்திக்க வேண்டும் ஆனால் இனவாதிகள் அப்படி பார்ப்பதில்லை. அதன் ஊடாக இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர். அப்படியான இனவாத குழுக்களை மக்கள் இனம் கண்டு , அவர்களை தோற்கடித்துள்ளார்கள். இனி அவர்கள் எந்த வேடம் அணிந்து வந்தாலும் அவர்கள் இனவாதிகள் என்பதனை மக்கள் இனம்கண்டு அவர்களை தோற்கடிப்பார்கள். அதேவேளை தேசிய மக்கள் சக்தியும் இனியும் இனவாதம் நாட்டில் தோண்ட இடமளிக்க மாட்டாது. யாழில் இருந்து புதிய அணி நாடாளுமன்றம் வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பல பாரம்பரிய கட்சிகள் உள்ளன. கடந்த பொது தேர்தலில் அவற்றினை தவிர்த்து எமது கட்சியை சார்ந்த மூவரை தெரிவு செய்துள்ளீர்கள். புதிய ஒரு அணி யாழில் இருந்து நாடாளுமன்றம் வந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு அஞ்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாது இருக்கமாட்டோம். நாம் தேசிய ஒருமைப்பாட்டுக்காக என்றும் உழைப்போம். காணிகளை விடுவிப்போம். பாதுகாப்பு காரணங்களுக்கு என தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தபட்டுள்ளது. அந்த காணிகளை பாதுகாப்பு தரப்பிடம் இருந்து மீள பெற்று காணி உரிமையாளர்களுக்கு கையளிப்போம். இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்றும் என்ற அச்சத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை கடந்த அரசாங்கம் மீள கையளிக்கவில்லை. ஆனால் நாங்கள் இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்கு என காணிகள் தேவையில்லை. விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்போம். மூடப்பட்ட வீதிகளையும் படிப்படியாக திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கிறோம். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மூடப்பட்டு இருந்த வீதிகளை திறந்துள்ளோம். கொழும்பில் பாதுகாப்பு காரணமாக என மூடப்பட்ட வீதிகளை திறக்கும் போது ஏன் யாழ்ப்பாணத்தில் வீதிகளை திறக்க கூடாது. நாட்டில் பாதுகாப்பு காரணமாக என மூட்டப்பட்ட வீதிகளை திறப்போம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என வெளிப்படுத்துவோம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களையும் வெளிப்படுத்துவோம். அரசாங்கத்திடம் , பொலிசாரிடம் , இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துவோம். ஒருவர் இறந்தால் அவருக்காக அழுது , அவருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை செய்து சில காலத்தில் ஆறுதல் அடைவோம். ஆனால காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது ? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா ? இல்லையா ? என்பது தெரியாமல் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன். எனது சகோதரர் கூட காணாமல் ஆக்கப்பட்டவரே. அதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலி எனக்கு புரியும். எமக்கு அமைதி தேவை. அதற்காக அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறிந்து வெளிப்படுத்துவோம். நாங்கள் நாட்டை பொறுப்பெடுத்த காலம் முதல் நாட்டை வளப்படுத்தி வருகின்றோம். எதிர்வரும் 5 வருடத்தில் அந்நிய செலவாணியை அதிகரிப்போம். கைவிடப்பட்ட பல செயற்திட்டங்களை தற்போது மீள ஆரம்பித்துள்ளோம். காவல்துறை முப்படைகளில் வேலை வாய்ப்பு அதேபோன்று பல வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். குறிப்பாக தமிழ் இளையோர் 2 ஆயிரம் பேருக்கு காவல்துறை திணைக்களத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். அதேபோன்று இராணுவம் , கடற்படை விமான படையிலும் தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் அதற்கு இங்குள்ள பெரியவர்கள் பெற்றோர்கள் இளையோர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எடுத்து கூற வேண்டும். காங்கேசன்துறையில் ஒரு ஜனாதிபதி மாளிகை உள்ளது. அது எமக்கு தேவையில்லை. அதனை யாழ்ப்பாண மக்களுக்கு பயன்பட கூடியவாறு மக்களுக்காக அதனை வழங்கவுள்ளோம் யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தார்கள். அது எமது இதயங்களை காயப்படுத்தி உள்ளது. நூலகம் எரிக்கப்பட்டது இனவாதத்தின் உச்சமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதற்காகவே நூலகத்தை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளோம் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றார்கள் அவர்கள் வடக்கு செல்வது குறைவாக உள்ளது. உள்ளூர் விமான சேவையை மேம்படுத்துவோம் அதனால் நாம் உள்ளூர் விமான சேவைகளை வலுப்படுத்த உள்ளோம். அதன் ஊடாக சுற்றுலா பயணிகளை வடக்குக்கு செல்ல வைக்க முடியும். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அழகிய கடற்கரைகள் உள்ளன. அவற்றினை சுற்றுலா தளங்களாக மேம்படுத்துவோம் அதேவேளை யாழ்ப்பாணத்தய் அதன் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவோம் வடக்கு கடல் வளத்தை பாதுகாப்போம் வடக்கு கடற்பரப்பில் உள்ள கடல் வளங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம். அந்த கடல் வளங்களை நம்பி பெருமளவான கடற்தொழிலாளர்கள் உள்ள போது , அந்த வளங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அனுமதிக்க முடியாது. வடக்கு கடல் வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுங்கள் என கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்ப வர வேண்டும். வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும். எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை நாட்டில் மேற்கொள்ள வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியொழுப்ப நாட்டிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டில் கடந்த காலங்களில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு இருந்தது. இனிஅவ்வாறு இருக்காது. அனைவருக்கு சட்டம் பொதுவானதாக இருக்கும். முதலமைச்சர்கள் சிறைகளில் தற்போது வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்கள் சிறையில் உள்ளனர். பல அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன. முன்னாள் ஜனாதிபதியின் இரு மகன்களுக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன. குற்றம் செய்த யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. வெளியில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன நாம் ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி , நாடாளுமன்றில் அறுதி பெரும்பான்மை என்பன எங்கள் கைகளில் உண்டு ஆனால் கிராமத்தை கட்டியொழுப்ப எமக்கு மக்கள் ஆதரவு வேண்டும். உள்ளூர் சபைகளையும் எம்மிடம் தாருங்கள் பிரதேச சபைகளில் இருந்து வரும் முன் மொழிவுகளில் இருந்தே கிராமத்தை கட்டி எழுப்ப முடியும். பிரதேச சபைகள் நகர சபைகள் மாநகர சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம் வேறு யாருடைய கைகளில் சபைகள் சென்றால் அவர்களின் முன் மொழிவுகளை பத்து தடவைகளுக்கு மேல் யோசனை செய்தே நிதி ஒதுக்குவோம். ஏனெனில் கடந்த காலங்களில் பல ஊழல்கள் இடம்பெறுள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி ஊழலற்ற அரசாங்கம். மத்தியில் ஊழலற்ற அரசாங்கமாக காணப்படும் போது , கிராம அபிவிருத்திகளில் ஊழல் செய்ய முடியாது. எனவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளையும் எமக்கு தாருங்கள். கடந்த காலங்களில் தெற்கு மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனை தொடர்பில் அறிந்து கொண்ட அளவுக்கு வடக்கு மக்களை நாம் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை அறியவில்லை எனும் உண்மையை நாம் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் வடக்கு மக்கள் எங்களை நம்பியுள்ளீர்கள். கடந்த பொது தேர்தலில் எங்கள் கைகளை பிடித்து பலப்படுத்தியுள்ளீர்கள். எந்த கைகளை மேலும் பலப்படுத்துங்கள். உங்கள் கைகளை நாம் இறுக பற்றிக்கொண்டுள்ளோம். உங்கள் பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்து வைத்து , நாட்டில் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம் என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார் https://globaltamilnews.net/2025/214460/
  22. ஆன்ரிமாரின் ரோதனையால் த்ரிஷாவையும் பிரியா வாரியாரையும் ரசிக்கமுடியாமல் போன கடுப்பில் கதை எல்லாம் வராது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.