Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று (04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜரை கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத் துவங்களிடமும் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் பகிரங்க கோரிக்கையை முன் வைக்கின்றோம். இதுவரை காலமும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறவில்லை. இதற்கு பிரதான காரணம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வு குறித்த ஏகோபித்த உடன்பாடு காணப்படாமையும் ஜக்கியமின்மையுமே காரணமாகும். இந்நிலையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் இந்திய பிரதமரை நேரடியாக சந்திப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வாக அமையுமென தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வலியுறுத்துகின்றார்கள். இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதனை மறுக்க முடியாத ஒன்று. எனவே தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் ஏகோபித்த குரலில் ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். இதுவே, தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு செய்கின்ற அரசியல் கடமையாகும். அவ்வகையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் இந்திய பிரதமரிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கையானது, 'இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்பதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cm93qe3th00kp10a6avxuhx2z
  2. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.
  3. GMT நேரப்படி நாளை சனி 05 ஏப்ரல் முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 02:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி செம்பாட்டான் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 14 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ சுவி வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  4. ஐபிஎல் 2025 இன் 16வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மிச்சல் மார்ஷினனதும் எய்டன் மார்கத்தினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஹார்டிக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 17 ஓட்டங்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேற பின்னர் வந்த சூரியகுமார் யாதவின் அதிரடியான 67 ஓட்டங்களுடன் வெற்றியை நோக்கி நகர்ந்தாலும் திலக் வர்மா மெதுவாகவே ஓட்டங்களை எடுத்து பந்துகளை வீணாக்கியதாலும் இறுதி ஓவர்களின் ஓட்டங்களை எடுக்கத் திணறியதாலும் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 191 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் பதவியை @alvayan ஓரடி முன்னகர்ந்து கைப்பற்ற @செம்பாட்டான் பின்னே கால்வைத்து அடுத்த நிலையில் தற்காப்பு வேலியைப் போட்டுள்ளார்! கூடவே மூக்குச் சாத்திரம் பார்த்த @நந்தன் உம் நிற்கின்றார்.
  5. மும்பை கொடுத்த காசு காணாது! SKY அவுட்
  6. அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும் April 4, 2025 11:20 am இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரி உலக வர்த்தக போருக்கு காரண – காரியமாக அமையும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தகப் பலவீனங்களையே இந்த வரி எடுத்துக் காண்பிக்கிறது. ஜனபதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள் இந்த வரி தெற்காசியாவை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் என கூறப்பட்டாலும், இந்திய – சீன முரண்பாடுகள் அதற்குச் சாத்தியமானதாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே பிறிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பொது நாணயத்தை உருவாக்குவது பற்றிய பேச்சுகள் வெற்றிபெறவில்லை. ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சியடைந்தவை. அத்துடன் ஒற்றுமையாகச் செயற்படும் நாடுகள். இதனால் அமெரிக்க டொலருக்கு எதிரான யூரோ நாணயம் வெற்றிபெற்றது. ஆனால் பிறிக்ஸில் அங்கம் வகிக்கும் நாடுகள் மத்தியில் அவ்வாறன ஒற்றுமை ஒல்லை. இந்த நிலையில், சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற ‘பிறிக்ஸ் பிரேசில் 2025’ என்ற இணையவழி பேட்டியில் பிரேசியல் நிதி அமைச்சின் சர்வதேச விவகாங்களுக்கான செயலாளர் டாட்டியான ரோசிட்டோ, ‘பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே தேசிய நாணயங்களை பயன்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளார். பிரேசிலின் பொருளாதார அமைச்சு அதற்கான திட்டங்களை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். பிறிக்ஸ் நாடுகளுக்கிடையே வர்த்தகம் செய்யும்போது அமெரிக்க டொலரின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிக்கு பிரேசில் ஆதரவளிக்கும் என்று கூறியிருக்கிறார். இதனை ரசிய ஊடகமான டாஸ் (TASS) வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வரி அறிவிப்புக்கு மத்தியில், தேசிய நாணயங்களை பயன்படுத்துவது பற்றி பேசியிருப்பது டொனல்ட் ட்ரம்ப்புக்கு சவாலாக இருக்கும் என்றும், தேசிய நாணயம் மட்டுமல்லாது, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கிக்கு மாற்றாக, ”புதிய வளர்ச்சி வங்கி” (New Development Bank – NDB) என்ற வங்கி ஒன்றை உருவாக்கவும் பிறிக்ஸ் நாடுகள் தீவிரமாக முயன்று வருவதாக இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இப் பின்னணியிலேதான் தேசிய நாணயத்தில் வர்த்தகத்தை தொடங்குவது பற்றி பிறிக்ஸ் நாடுகள் ஏற்கெனவே பேசி வந்த நிலையில், இதற்கான சரியான தருணம் இதுதான் என்று டாட்டியானா ரோசிட்டோ கூறியிருக்கிறார். அநேகமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிறிக்ஸ் மாநாட்டில் இது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என ரசிய ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்புக்கான ”பொது நாணயம்” பற்றிய பேச்சுக்கள் எழுந்த 2020 இல் இந்தியா அமைதி காத்தது. அது மாத்திரமல்ல பிறிக்ஸ் நாணயம் சாத்தியப்படக்கூடியதல்ல என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவிடம் உறுதியாகக் கூறியிருந்தார். இப் பின்புலத்தில் இந்திய வர்த்தகச் செயற்பாடுகளில் தம்முடன் இணைந்திருக்கும் என்று நியுயோர்க் டைம்ஸ் செய்தி அப்போது வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜெய்சங்கர் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனிடம் பிறிக்ஸ் நாணயம் பற்றிய பேச்சில் இந்திய பங்கெடுக்காது என்று உறுதியளித்திருந்தார். இப் பின்னணியில் அதுவும் அமெரிக்க வரி விதிப்புக்குப் பின்னரான நிலையில், பிறிக்ஸ் நாடுகளின் தேசிய நாணயங்களை வர்த்தகச் செயற்பாட்டில் பயன்படுத்தலாம் என்ற யோசனை எவ்வளவு தூரம் சாதியமாகும் என்ற கேள்விகள் இல்லாமில்லை. ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு குறைந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச வர்த்தகம் பற்றி ஆய்வு செய்யும் அமைப்பான குளோபல் ரேட் றிசேச் இனிவேற்றீவ் (Global Trade Research Initiative) தரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சகல துறைகளிலும் உற்பத்திகளை வேகப்படுத்தினால் இந்தியாவுக்கு அமெரிக்க வரி விதிப்பு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று அறிவுரை வழங்கியுள்ளது. சீனா 32 வீதம், தைவான், 32வீதம் ஐரோப்பிய ஒன்றியம், 20 வீதம் இந்தியா 26வீதம், ஜப்பான் 24 வீதம், வியட்நாம் 46 வீதம், தாய்லாந்து 26 வீதம் பிரிட்டன் 10 விதம், இலங்கை 44 வீதம் என்ற அடிப்படையில் பெருமளவு வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடபட்டுக் கொண்டிருக்கும் இந்தியா உள்ளூர் உற்பதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை அமெரிக்க வரி தூண்டியிருப்பதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனாலும் இதற்காக இந்தியா மிகக் கடுமையாக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்றும், முக்கியமான துறைகளிலும் சொந்த உற்பத்தி என்பது மிகச் சுலபமானது அல்ல என்றும் இந்த நிறுவனம் எச்சரித்திருக்கிறது. ஓட்டோ மொபைல் பாகங்கள் மற்றும் பொம்மை உற்பத்தி துறைகளில் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் முன்னிலை வகிக்கின்றன. ஆனாலும் இந்த உற்பதிகளுக்கு இந்த நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்திருக்கிறது. இதனைச் சாதமாக்கி இந்தியா அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்தால் வரியின் பாதிப்பிலிருந்து இந்தியா தப்பித்துக்கொள்ள முடியும் என்று மற்றொரு இந்திய பொருளியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை போன்ற சிறிய நாடுகளுடன் வா்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியங்கள் குறித்தும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம் மிகவும் சிறிய அயல்நாடான இலங்கை 44 வீத விரியை எதிர் கொண்டிலுருக்கிறது. ஆடை உறப்த்தி மாத்திரமே இலங்கையின் ஏற்றுமதியாகும். முன்னர் 12 வீதம் என்றிருந்த வரியை டொனால்ட் ட்ரம்ப் 44 வீதமாக உயர்த்தியதன் மூலம் இலங்கையின் ஆடை ஏற்றுமதி பாதிப்படையும் என பெருளாதார நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்சா டி சில்வா சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்திய மற்றும் பங்களாதேஸ் ஆடைகள் அமெரிக்க ஏற்றுமதியில் கூடுதல் பங்காற்றியிருந்தன. இலங்கையின் தைத்த ஆடைகளைவிடவும் இந்த நாடுகளின் தைத்த ஆடைகள் அமெரிக்க மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியிருந்த நிலையில் இந்த வரி அதிகரிப்பு இலங்கையைப் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இப் பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இந்திய முதலீட்டாளர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தைத்த அடைகளுக்கு வேறு சர்வதேச் சந்தைகளை இலங்கை பெற முடியாத சூழல் இருப்பதாகவும் இந்திய ஒத்துழைப்பை கோரவுள்ளதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை, குறிப்பாக சர்வதேசக் கடன்களை செலுத்த முடியாமல் 2028 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் கோரியிருக்கும் இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி பெரும் பாதிப்பைச் செலுத்தும் என்பது பகிரங்கமான உண்மை. இந்த நிலையில், கொழும்புக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேறு பொருளாதார சலுகைகளுக்கான உறுதிமொழி வழங்குவார் என அரசாங்கம் நம்புகின்றது. ஏற்கனவே இந்தியாவுடன் கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்தாமல் தாமதிக்கப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்படலாம் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கூறுகிறார். அதேநேரம் இலங்கை மீதான வரியைக் குறைப்பதானால் இலங்கையின் சில முக்கிய தளங்களை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டிய ஆபத்துகள் நேரலாம் என்ற அச்சங்களும் உண்டு. எவ்வாறாயினும் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்த ஜேவிபி குறிப்பாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க வரிக்குப் பின்னரான சூழலில் இந்தியாவா? சீனாவா? என்ற திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம். அதாவது வர்த்தகச் செயற்பாடுகளில் சீனாவுடன் முழுமையாகச் செல்வாதா அல்லது இந்தியாவை நம்புவதா என்ற பெரும் குழப்பத்துக்குள் இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. எண்பது வருட இனப் பிரச்சினைக்குரிய நிரந்த அரசியல் தீர்வை முன்வைத்து வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் பொருளாதாரத்தை முன்னேற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற கட்டமைப்பை மாற்றி பன்முகத் தன்மை கொண்ட அரசாக மாற்றாமல் அது சாத்தியமாகது என சிங்கள ஆய்வாளர் அசோன லியனகே 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களும் இனியாவது உணரத் தலைப்பட வேண்டும். அ.நிக்ஸன் https://oruvan.com/us-tariffs-and-india-sri-lanka-trade/
  7. கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை – இருவர் கைது April 4, 2025 9:45 am கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் நகரின் சோலஸ் வீதியிலுள்ள வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். குறித்த வீட்டில் 20 வயது நிலக்ஷி ரகுதாஸ் மற்றும் 26 வயது ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அந்த வீட்டில் ஒரு நாய் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலக்ஷி ரகுதாஸ் உயிரிழந்தார். இந்நிலையில், சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸார், துப்பாக்கிச் சூடு இலக்கு வைக்கப்பட்ட ஒன்று என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 வயதான ஏக்வோன் முர்ரே மற்றும் 35 வயதான ஹெஷ்மத் ரசூலி-கலந்தர்சேட் ஆகியோர் டொராண்டோவில் கைது செய்யப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக முதல் நிலை கொலை, கொலை முயற்சி, விலங்குகளைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் உள்ளனர் என்றும், இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலக்ஷி ரகுதாஸ் தனது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வசித்து வந்த சோலஸ் வீதியில் அமைந்துள்ள வீடு, 2018 முதல் குறைந்தது ஐந்து முறை குறிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னை குமார் என்று மட்டுமே அடையாளம் கண்டுகொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த ஐந்து சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நடந்ததாக கூறினார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் https://oruvan.com/two-arrested-in-connection-with-the-shooting-death-of-nilakshi-raguthas/
  8. வட்டுவாகலில் சட்டவிரோத வலைகள்,படகுகள் பறிமுதல் ஒன்றுகூடிய உரிமையாளர்களினால் பெரும் பதற்ற நிலை சட்டவிரோத வலைகள் மற்றும் சட்டவிரோத படகுகளை அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில் அவற்றின் உரிமையாளர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்த்து அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டதுடன் 6 பேர் கைது செய்யப்பட்டநிலையில் ஒருவர் கை விலங்குடன் தப்பியோடியுள்ளார் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடற்தொழில் திணைக்களம் , வட்டுவாகல் கடற்படை, கடற்தொழில் இணையம், கடற்தொழில் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வட்டுவாகல் களப்பில் நேற்று வியாழக்கிழமை 50 வலைத் தொகுதிகளும், 9 படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன . இந்நிலையில் வலை, படகுகளின் உரிமையாளர்கள் 50க்கு மேற்பட்டோர் வட்டுவாகல் பாலத்தடியில் ஒன்று கூடியதனை தொடர்ந்து குறித்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. இதனால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அத்தோடு கைது செய்யப்பட்ட ஒரு நபர் கைவிலங்குடன் தப்பியோடியுள்ளார்.இதனையடுத்தே குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அவ்விடத்திற்கு பொலிஸார், விஷேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மந்துவில் , வலைஞர்மடம் புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.குறித்த ஐவரையும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு கைவிலங்குடன் ஓடிய நபரை கைது செய்ய திறந்த பிடியாணையும் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீர்வள திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் மோகனகுமார் கருத்து தெரிவிக்கும் போது, குறித்த களப்பில் மூன்றரை இஞ்சிக்கு குறைந்த எந்தவொரு வலையும் பாவிக்க முடியாது, முக்கூட்டு வலை பாவிக்க முடியாது, தங்கூசி வலை அனைத்து இடங்களிலும் தடை, சட்டவிரோத படகு இவ்வாறு தடை செய்யப்பட்ட வலைகள் , படகுகளையே கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். நாளாந்தம் இவ்வாறு சட்டவிரோத தொழில்களை கண்காணித்து இல்லாதொழிக்க முயல்கின்றோம். அவ்வாறிருந்தும் சட்டவிரோத செயற்பாடுகள் குறையவே இல்லை.வட்டுவாகல் களப்பு தற்போதும் நல்லதொரு நிலையில் இருக்கிறது. என்பதற்கு நாளாந்தம் பிடிக்கப்படும் இறால் ஒரு சான்றுப் பொருளாக இருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மிகவும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது இந்த நந்திக்கடல் இதனை மக்களோ, திணைக்களமோ, சமூகமோ இதனை அழிவடைய விடுவதனை அனுமதிக்க மாட்டோம் என்றார். https://akkinikkunchu.com/?p=319113
  9. தமிழ் தேசிய கட்சிகளுடன் மோடி நாளை சந்திப்பு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நாளை சனிக்கிழமை (5) பிற்பகல் 3மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கை வரவிருக்கும் இந்திய பிரதமர் மோடி,ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வடக்கு – கிழக்கு, மலையக அரசியல் தலைவர்களை சந்திக்கவிருக்கிறார். இந்நிலையில் நாளை சனிக்கிழமை மாலை தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களை கொழும்பில் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் இருவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த வேளையில் 13 ஆவது திருத்த சட்டம் சம்பந்தமாக எந்த பேச்சும் இடம்பெறவில்லை.அதேபோல் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திலும் 13 குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பேசமாட்டார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ் தேசிய தலைவர்கள் மோடியுடனான சந்திப்பிற்கு எவ்வாறு தங்களை தயார்படுத்திக்கொண்டு அல்லது எவ்வாறான திட்டத்துடன் சொல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ் பரப்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது. https://akkinikkunchu.com/?p=319119
  10. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுக்களை ஆராய்ந்த பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. https://adaderanatamil.lk/news/cm92cshwb0028hyg31ff9xj4b
  11. தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள் தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணிக்குள் அத்துமீறிக் கட்டப்பட்ட தையிட்டி விகாரை விடுவிப்பு குறித்த கலந்துரையாடல் இன்று நாக விகாரையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர் முனீர் முலாபீர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்ட அதேவேளை, தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகப் பிரதிநிதிகள், யாழ் மாவட்ட சர்வமதப் பேரவைப் பிரதிநிகள் தையிட்டி காணி உரிமையாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வெளியே வந்த அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரதான நுழைவாயிலில் ஊடகவியலாளர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் மாற்றுப் பாதை வழியாக வெளியேறிச் சென்றனர். மேலும் குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர், குறித்த விவகாரத்துக்கு சுமுகமான ஓர் தீர்வை வழங்குவதற்கு தாம் முனைப்புக் காட்டும்போதும், தேர்தல் காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்களில் தம் ஈடுபடுவது பொருத்தமற்றது எனக் கூறி வெளியேறியுள்ளதாக கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திருவரங்கன், குறித்த விவகாரத்தில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முனைப்புடன் இருக்கிறது என்பதே தமக்குள் இருக்கும் கேள்வி என குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் விவகாரத்தய் காரணம் காட்டி அமைச்சர்கள் வெளியேறினாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இலகுவாக தீர்க்கக்கூடிய ஒரு பிரச்னை இது என்பதுடன், நீதி யார் பக்கம் என்பது தொடர்பான தெளிவு அனைவருக்கும் உண்டு. எனினும் குறித்த விவகாரத்துக்கான தீர்வை எட்டுவதற்கான முன்முனைப்பை முன்வைக்க அவர்கள் தயங்குகிறார்கள் என குற்றம் சாட்டினார். இந்த தயக்கம் தொடருமா இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த தயக்கத்தில் இருந்து வெளியே வர வேண்டும் எனத் தெரிவித்தார். https://www.samakalam.com/தையிட்டி-விவகார-தீர்வு-க/
  12. GMT நேரப்படி நாளை வெள்ளி 04 ஏப்ரல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI 06 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் பிரபா நந்தன் புலவர் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  13. ஐபிஎல் 2025 இன் 15வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களிலேயே இழந்திருந்தாலும் பின்னர் வந்த வீரர்களாக அய்ங்கியா ரஹானே, அரைச் சதங்களை எடுத்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள் எல்லோரும் மிகவும் குறைந்த ஓட்டங்களிலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பியதால் 16.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 120 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  14. ஆட அறுக்க முன்னம் டுபுக்கு வேணும் எண்டு கேட்கப்படாது!😜 கிளாசனும் கம்மிங்ஸும் நிற்கின்றார்கள்!
  15. என்ன அபிஷேகம்? பால், தேன், தயிர், பன்னீர், சந்தணம் எல்லாம் காவ்யா மேடம் மேல் பூசின ஐயர் மாதிரிக் கதைக்கிறியள் ஐசே!🤪
  16. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–1 BookDay18/02/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–1 வெகுளியான அந்தப் பறவை கொல்லப்பட்டது ஏன்? – அ. குமரேசன் அரசியல், மதம், சமூகம் என எதை எடுத்துக்கொண்டாலும், அதில் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் தங்களுடைய எதிரிகளை விடவும் அஞ்சுகிற ஒன்று இருக்கிறது. அதுதான் புத்தகம்! ஏன் அஞ்சுகிறார்கள் என்றால், புத்தகம் சிந்திக்க வைக்கிறது, கேள்விகள் கேட்கத் தூண்டுகிறது, சரியான கேள்விகளை எழுப்ப வழிகாட்டுகிறது, மக்களிடையே உண்மைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது, மாற்றங்களை நிகழ்த்துவதற்கு சமுதாயத்தைத் தயார்ப்படுத்துகிறது. அடக்குமுறையாளர்களுக்கு இதுவெல்லாம் ஆகாதவையாயிற்றே, ஆகவே அவர்கள் புத்தகங்களை வெறுக்கிறார்கள், முடக்கிவைக்க விரும்புகிறார்கள். அவ்வாறு முடக்கப்பட்ட புத்தகங்கள் பின்னர் காலத்தை வென்று புகழடைந்திருக்கின்றன. அவற்றில் பேசப்படும் நிலைமைகள் இன்றைக்கும் நீடிக்கின்றன. அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான இயக்கங்களும் தொடர்கின்றன. கருத்துச் சுதந்திரம் மேலோங்கிய நாடு என்று கருதப்படும் அமெரிக்காவிலேயே முக்கியமான கதைப் புத்தகங்கள் முடக்கப்பட்ட கதைகள் உண்டு. இத்தனைக்கும் அந்த நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது என்பதுதான்! 1771 அது அங்கே நடைமுறைக்கு வந்தது. ஆயினும் அதில் உள்ள சில வாசகங்களுக்கு ஆளுக்காள் ஒரு புதிய விளக்கம் கொடுத்து, சில சிறப்பான புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கச் சட்டப்படி, மாநில அரசுகளுக்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும், பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் தன்னாட்சி அதிகாரங்கள் உண்டு. அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தித்தான் உள்ளூரளவில் பல புத்தகங்கள் வாசகர்களுக்குக் கிடைக்காமல் தடுக்கப்பட்டன. இந்தியா உட்படப் பல நாடுகளிலும் இப்படி நடந்திருக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது. தடைகளைத் தகர்த்து வரலாற்றில் இடம் பிடித்த சில புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இன்று முதலாவதாக–. டு கில் எ மாக்கிங்பேர்ட் (ஒரு கிண்டல் பறவையைக் கொல்ல) ஹார்ப்பர் லீ (Harper Lee) ஹார்ப்பர் லீ எழுதிய நாவல். 1960ஆம் ஆண்டில் ஜே.பி. லிப்பின்காட் அன் கோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. வெளியான அடுத்த ஆண்டிலேயே புலிட்சர் விருது பெற்றது. ஆனால் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களின் நூலகங்களிலும் கல்விநிலையங்களிலும் அந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது. நாவல் கூறும் கதை என்ன? 1930களில் அலபாமா மாநிலத்தின் மேகோம்ப் (அது ஒரு கற்பனையான ஊர்) நகரத்தில் நடக்கும் நிகழ்வுகள் கதையாகப் பின்னப்பட்டுள்ளன. கொள்கை நெறியுடன் தொழில் நடத்துபவர் வழக்குரைஞர் அட்டிகஸ். அவருடைய மகள் ஸ்கவுட்., மகன் ஜெம். கோடை விடுமுறையில் அந்த நகரத்திற்கு வரும் குழந்தைகள் அங்கே டில் என்ற சிறுவனுடன் நட்புக்கொள்கிறார்கள். அண்டை வீட்டுக்காரரான பூ ராட்லி வெளியே யாருடனும் பழகாதவர், வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பவர். ஊரில் அவரைப் பற்றிப் பல கட்டுக்கதைகள். அந்தக் கதைகளை முதலில் நம்புகிற பசங்கள் அந்தப் பக்கம் போகவே பயப்படுகிறார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். மயெல்லா ஏவெல் என்ற வெள்ளையினப் பெண்ணை வன்புணர்ந்ததாக டாம் ராபின்சன் என்ற கறுப்பின இளைஞன் கைது செய்யப்படுகிறான். நீதிமன்றத்தில் அவனுக்காக வாதாட அட்டிகஸ் நியமிக்கப்படுகிறார். விசாரணையில் டாம் குற்றவாளி அல்ல என்றும், மயெல்லாவின் தந்தை பாப் ஏவெல் கறுப்பினத்தவர்கள் மீதான வெறுப்புடன் பொய்யாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் என்றும் அட்டிகஸ் நிறுவுகிறார். உண்மையில் டாம் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தவன்தான். ஆனால் அவள்தான் அவனைப் பாலியல் இச்சையுடன் நெருங்குகிறாள். அதைப் பார்த்துவிடும் பாப் ஏவல், தன் மகள்தான் குற்றவாளி என்று வெளியே தெரிந்தால் தன் கௌரவம் குலைந்துவிடும் என்று அஞ்சுகிறான். ஏற்கெனவே அவன் கறுப்பின மக்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதி பகைமையோடு இருப்பவன்தான். மேலும், வெள்ளை இனத்திலேயே அவன் ஒரு கீழ்த்தட்டுச் சமூகத்தில் இருப்பவன். போலியாகக் குற்றம் சாட்டிக் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் தன் சமூக நிலையை உயர்வாகக் காட்டிக்கொள்ள முயல்கிறான். அதற்கு அவனுடைய மகளும் உடன்படுகிறாள். இதையெல்லாம் அட்டிகஸ் தன் விசாரணைத் திறமையாலும் ஆதாரங்களாலும் நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். ஆனால், இன ஆணவம் கொண்ட வெள்ளையினத்தவர்கள் மட்டுமே இருக்கிற நடுவர்கள் (ஜூரி) குழு டாம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கிறது. மேல்முறையீடு முயற்சிகள் நடக்கிறபோதே சிறையிலிருந்து தப்பிக்க முயலும் டாம், சுட்டுக் கொல்லப்படுகிறான். முன்னதாக, ஒரு பாதிரியாரின் உதவியுடன், நீதிமன்றத்தில் கலப்பின மக்களுக்கான பிரிவில் அமர்ந்து விசாரணைகளையும் தீர்ப்பையும் கவனிக்கும் குழந்தைகள் அதிர்ச்சியடைகிறார்கள். இனவெறியின் கொடூரத்தையும் கேவலத்தையும் உணர்கிறார்கள். தனது பொய் அம்பலமானதால் ஆத்திரப்படும் பாப் ஏவல், குழந்தைகளைத் தாக்க முயல்கிறான். வெளியே வராதவனான பூ இப்போது வெளியே வந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறான். கொலை செய்யப்பட்ட பாப் ஏவெல் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. சிறுவன் ஜெம்தான் அதைச் செய்திருப்பான் என்று பலரும் நினைத்திருக்க, கொன்றவன் பூ ராட்லி என்று சரியாக ஊகிக்கிறார் நகரத் காவல்துறைத் தலைவர். அவனைக் காப்பாற்ற முடிவு செய்கிறார். உண்மையை மறைக்கிறார். மர்மக் கொலையாகவே அது போய்விடுகிறது. இந்த நிகழ்வுகளையெல்லாம் சிறுமி ஸ்கவுட் சொல்வதாகவே இந்தக் கதை தொடங்கி முடிகிறது. மாக்கிங்பேர்ட் (கிண்டல் பறவை) எனப்படும் நம் ஊர் சிட்டுக்குருவிகள் போன்ற பறவையினம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கின்றன. மற்ற பறவைகளின் ஒலிகளைக் கேட்டு அதே போல் திரும்பவும் உச்சரிப்பதில், ராகம் போட்டுப் பாடுவது போல அந்த ஒலிகளைத் தொடர்ச்சியாக எழுப்புவதிலும் வல்லவை அந்தப் பறவைகள். யாருக்கும் கெடுதல் செய்யாமல், வெகுளித்தனமாகப் பேசுகிற, செயல்படுகிறவர்களை மாக்கிங்பேர்ட் என்று ஒப்பிடுகிறார் எழுத்தாளர். டாம் அப்படிப்பட்ட ஒரு வெகுளிதான். அந்த பூ ராட்லியும் கூட ஒரு மாக்கிங்பேர்ட் எனலாம். பொய்யான குற்றச்சாட்டும், வன்மமான இனப்பாகுபாடும் சேர்ந்து எளியவர்களையும், சமூகத்தின் உண்மையான மாண்பையும் ஒடுக்குகின்றன என்ற பொருளில், நாவலுக்கு இந்தத் தலைப்பு மிகவும் பொருந்துகிறது. இதில் நூலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் என்ன பிரச்சினை? 1930ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இனவெறி எந்த அளவுக்கு இருந்தது என்று அப்பட்டமாகப் பேசுகிறது நாவல். உழைப்பாளி மக்கள் சுரண்டப்படுவது பற்றிக் கூறுகிறது. பெண்கள் குறித்த ஆண் வக்கிரங்களைச் சாடுகிறது. ஆனால், கதாபாத்திரங்களின் உரையாடல்களில் சொச்சையான சொற்கள் நிறைய இருக்கின்றன. இது வளரும் தலைமுறைகளுக்கு ஆகாது என்று சிலர் விவகாரமாக்கினார்கள். உண்மையில் கசப்பான வரலாறுகள் நினைவூட்டப்படுவதை அவர்கள் விரும்பாததே தடைக்குக் காரணம் என்று நாம் புரிந்துகொள்ளலாம். காலப்போக்கில் தடைகள் நீர்த்துப்போயின என்றாலும், இப்போதும் சில பகுதிகளில் நீடிக்கின்றன. ஆனால் புத்தகம் விற்பனைக் கூடங்களிலும் மற்ற நூலகங்களிலும் இப்போது இணைய வழியாகவும் தாராளமாகக் கிடைக்கிறது. “ஒரு பெண்ணாக, மனித உரிமைகளுக்காக நிற்பவளாக, இனப் பாகுபாட்டின் இழிவை உலகமறியச் செய்ய விரும்பினேன். அதற்காகவே இந்த நாவலை எழுதினேன்,” என்றார் ஹார்ப்பர் லீ. இந்த நாவலுக்குப் பிறகு புதிய நாவல் எதையும் எழுதவில்லை அவர். ஏனென்று கேட்கப்பட்டபோது, ”அந்த நாவலிலேயே நான் சொல்ல நினைத்த அனைத்தையும் சொல்லிவிட்டேன். அவற்றையேதான் திரும்பத் திரும்பச் சொல்வேன்,” என்றார். தடை நடவடிக்கைகள் கொஞ்சம் சோர்வை ஏற்படுத்தியிருந்தன. ஆயினும் நாவல் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்று வந்தார். தடைகளை மீறி நாவலுக்குக் கிடைத்த வரவேற்பும் விருதும் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து, அது போல இன்னொன்று எழுத முடியுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாலும் அவர் தொடர்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆயினும், இதை எழுதுவதற்கு முன் தயாரித்து வைத்திருந்த, இதன் முதல் பாகம் என்று சொல்லத்தக்க ஒரு நாவலை (கோ செட் எ வாட்ச்மேன்) 2015இல் வெளியிட்டார். அதற்கடுத்த ஆண்டில் தமது 89ஆவது வயதில் காலமானார். இன்றும் அமெரிக்காவில் பல வகைகளில் இனப் பாகுபாடுகள் தொடரும் நிலையில் களப்போராளிகளுக்கும் இந்த நாவல் ஒரு கைவிளக்காக இருக்கிறது. https://bookday.in/books-that-overcame-obstacles-written-by-kumaresan-asak/
  17. பிரித்தானிய தடை: துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….! April 3, 2025 — அழகு குணசீலன் — இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது பாதுகாப்பு படையினர் தரப்பிலும், படையினருக்கு உதவியாக செயற்பட்ட அரச ஆதரவு குழுவினர் தரப்பிலும் இடம்பெற்ற யுத்த மீறல்களுக்காக நான்கு பேருக்கு பிரித்தானியா பயணத் தடையையும், சொத்துமுடக்கத்தையும் அறிவித்திருக்கிறது. பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னா கொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாக இருந்து 2004 இல் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிரிந்து சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானுக்கும் இந்த தடைவிதிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை இலங்கை படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிப்போரில் இடம்பெற்ற யுத்த மீறல்களை அடிப்படையாகக்கொண்டது. இலங்கை இராணுவத்தின் யுத்தமீறல்கள் போன்றே, விடுதலைப்புலிகளாலும் யுத்தமீறல்கள் செய்யப்பட்டுள்ளன என்பது சர்வதேசத்தின் பொதுவான பார்வை. தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் இந்த கருத்திற்கு ஆதரவாகவே இருதரப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று கோரியிருக்கின்றனர் அல்லது ஏற்றுக்கொண்டுள்ளனர். உண்மையில் இந்த நீதிக்கான அணுகுமுறை முழுமையானதும் சரியானதுமாக இருக்கவேண்டுமானால் 1970 களின் ஆரம்பத்தில் இருந்து 2009 வரையான காலப்பகுதிக்குள் சகல படைத்தரப்பும், சகல தமிழ் ஆயுதப்போராட்ட அமைப்புக்களும், இந்திய படைத்தரப்பும் , அவர்களுக்கு பின்னால் இருந்த குழுக்களும் இந்த யுத்த மீறல்களுக்கு தனியாகவும், கூட்டாகவும் பொறுப்பானவர்கள்.” என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 30 ஆண்டு காலத்திற்கும் மேலான உள்நாட்டு யுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிற்பகுதியை மட்டும் – இறுதியுத்த பகுதியை மட்டும் கருத்தில் கொண்டு யுத்த மீறல்களை கருத்தில் கொள்வது பொருத்தமற்றது. இதனால்தான் தமிழ்த்தேசிய தரப்பு இன அழிப்பு என்று வருகின்றபோது 1956 ம் ஆண்டில் இருந்து கணக்கு காட்டுகிறது. இவை அனைத்துமே ஏதோ ஒருவகையில் படையினருடன் தொடர்பு பட்ட உரிமை மீறல்கள். ஆனால் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளும், மற்றைய ஆயுதப்போராட்ட குழுக்களும், இந்திய ஆதரவு குழுக்களும் இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கொள்ள அரச படையினரும், கருணா அணியினரும் குறிவைக்கப்பட்டிருப்பது ஒரு பக்கச்சார்பான செயற்பாடு. தப்ப வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளாலும், அவர்களால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாலும் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மறுப்புக்கள், பாலியல் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் தற்போது தப்பிப்பிழைத்தோம் என்று மூச்சு விடுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்கும் சேர்த்து மாற்று தரப்பினருக்கு தண்டனை கோரும் அளவுக்கு புனிதர்களாக நிலத்திலும், புலத்திலும் தமிழ்த்தேசிய அரசியல் செய்கிறார்கள். சகல தரப்பிலும் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் அதுவல்ல இந்த பதிவின் பேசுபொருள். மாறாக நான்கு தனிநபர்கள் மீதான பிரித்தானியாவின் இந்த தடைகள் குறித்து துள்ளிக்குதித்து கொண்டாடவும், ஒப்பாரி வைக்கவும் என்ன இருக்கிறது? என்ற கேள்வியும், இன்றைய பூகோள அரசியல் இந்த தடையை இப்போது ஏன் ? செய்திருக்கிறது என்பதுமே பேசப்படவேண்டியவை. இலங்கையை பொறுத்த மட்டில் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை வெறும் பூகோள அரசியல் “சமிக்ஞை விளைவு” (SIGNAL EFFECT) மட்டுமே என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது. அமெரிக்க வாஷிங்டன் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய பாதுகாப்பு, பொருளாதார கொள்கை சர்வதேசத்தில் இருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்திகொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் அல்ல இலங்கை போன்ற சிறிய வறியநாடுகள் கூட இந்த கொள்கைகளுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒதுங்கி இருக்கின்ற பிரித்தானியாவுக்கு ஐரோப்பாவோடு இணைந்து போவதா? அமெரிக்காவை திருப்திப்படுத்துவதா? என்ற நிலைமை காணப்படுகிறது. பிரித்தானிய பொருளாதாரம் அகலபாதாளத்தில் வீழ்ந்து விட்டது. வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அமெரிக்க புதிய பொருளாதார வரிக்கொள்கை பற்றி அலட்டிக்கொள்ளாமல் பிரித்தானியா இருப்பது, அது அமெரிக்காவுடன் முரண்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கியை வெள்ளைமாளிகைக்கு அழைத்து காதைப்பிடித்து “திருகி” இருக்கிறார் ட்ரம்ப். மறுபக்கத்தில் ரஷ்ய, இஸ்ரேல் தலைவர்களுடன் தோளில் கை போடுகிறார். வரலாற்றில் பாலஸ்தீனத்தில் ஹாமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக சொந்த மக்கள் திரண்டெழுகிறார்கள். இது இதுவரை மேற்குலகில் ஹாமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கிறது . முள்ளிவாய்க்கால் இறுதிப்போரிலும் இந்த நிலை ஏற்பட்டபோது புலிகள் மக்களுக்கு எதிராக ஆயதங்களை திருப்பினர். அதற்குள் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த இடத்தில் வெள்ளைக்கொடி கொலைகள் பற்றி ஒரு பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதற்கு பிரித்தானிய தடைவிதித்த நான்கு நபர்கள் காரணம் என்றும் கதை சொல்கிறார்கள். வெள்ளைக்கொடியோடு சரணடையுங்கள் என்று புலிகளுக்கு சொன்னவர்கள் யார்? அதற்கான அனைத்து தொடர்பாடல்களையும் , பாதுகாப்பு உத்தரவாதங்களையும், செய்தவர்கள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்து, தடைசெய்த மேற்குநாடுகள். பூகோள அரசியலில் புலிகளை சரணடையச்செய்து கூண்டோடு அழிப்பதே இந்த மேற்குலக அணியின் முக்கிய இலக்காக இருந்தது என்பதை அவர்களிடம் நீதி, நியாயம் கோருவோர் இன்னும் அறியவில்லையா? ஆக, வெள்ளைக்கொடி கொலைகளுக்கு யார் பொறுப்பு…..? இனி……, இலங்கையின் இன்றைய அரசாங்கத்தின் போக்கு மேற்குலகை விட்டு விலகி நகர்வதாக உள்ளது. பாரம்பரிய மேற்கு உறவையும், காலனித்துவம் கட்டிப்போட்ட உறவையும் தவிர்த்து மாற்று பிராந்திய உறவை என்.பி.பி. அரசாங்கம் நாடுகிறது. இந்தியா, சீனா, மத்திய கிழக்கு, வியட்நாம் என்று இலங்கையின் பிராந்திய உறவு வலுவடைகிறது. இதனை அமெரிக்காவினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் பிரித்தானியா அமெரிக்க கையாளாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் வாஷிங்டன் செல்வதற்கு முன்னர் தூரவைத்தே அநுரவின் காதை திருகியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதற்காக வெளியிடப்பட்ட பூகோள அரசியல் அறிவிப்பே இந்த நான்கு தனிநபர்கள் மீதான தடை. இதன் மூலம் இலங்கை தங்கள் கைகளில் இருந்து விலகிப்போவதை தடுத்து மூக்கணாங்கயிறுபோடும் முயற்சி இந்த தடைக்கு பின்னால் இருக்கிறது. கனடா நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியும், பிரித்தானிய லேபர் எம்.பி. உமாகுமாரனும் இந்த பயண, சொத்து தடைகளை வரவேற்று இருக்கிறார்கள். வரவேற்பதை விடவும் இவர்களால் வேறு என்னத்தை செய்ய முடியும். நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலின் தொடர் அரசியலையே டயஸ்போராவை வைத்து இவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் செய்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குளுக்காக ஏங்குகின்ற கட்சிகள் தங்கள் சொந்த அரசியலுக்காக இவர்களை பயன்படுத்துகிறார்கள். கனடிய, பிரித்தானிய அரசியல் வாதி ஒருவரை “யாழ்ப்பாணத்தமிழர்” என்று பெருமையுடன் அழைப்பதன் மூலம் அடையாள அரசியல் அற்ற மேற்குலக கொள்கை அரசியலில் நம்மவர்கள் சாயம் பூசியே அரசியல் செய்ய முனைகிறார்கள் என்பது தெளிவாகிறது. சாயம் வெளிறினால் அரசியல் முடிந்து விடும். இது இதுவரை பல நாடுகளில் நடந்திருக்கிறது. பிரித்தானியாவின் தடையை கண்டித்து விமல்வீரவன்ச, உதய கம்மன்வல, நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச போன்றோர் இராணுவத்தரப்புக்கு ஆதரவாக கருத்துவெளியிட்டுள்ளனர். இவர்களின் இந்த “ஒப்பாரி ராகமும்”, தமிழ் அரசியல்வாதிகளின் “துள்ளிக்குதித்தல் நடன தாளமும்” வெறும் அரசியல் பூச்சாண்டி . இதனை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தரப்பும், பாதிப்பை செய்த தரப்பும் தங்கள் தங்கள் கட்சி அரசியலை செய்யப்பார்க்கிறார்கள். தடைவிதிக்கப்பட்டுள்ள நான்கு தனிநபர்களும் பிரித்தானியாவுக்கு பயணம் செய்யமுடியா விட்டால் அதனால் அவர்கள் எவற்றை இழந்தார்கள்? பிரித்தானியாவில் சொத்து முடக்கம் என்றால் இருந்தால்தானே முடக்கலாம் (?). பிரித்தானியாவை விடவும் பயணம் செய்வதற்கும், சொத்து சேர்ப்பதற்கும் உலகில் வேறு நாடுகள் இல்லையா? இவர்கள் இலங்கையில் சொத்துக்கள் சேர்க்க தடையிருக்கிறதா? கனடா, அமெரிக்கா ராஜபக்சாக்களுக்கு விதித்த தடையின் செயற்றிறன் என்ன? அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன? ஆக, மொத்தத்தில் அமெரிக்க சார்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பட்டலந்த அறிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அநுரகுமார அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் எதிர்தரப்பை பிரித்தானியாவின் பெயரில் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது அமெரிக்கா. போரின் பிராந்திய பங்காளர்களான இந்தியாவும், சீனாவும் இந்த சிமிக்ஞை விளைவு பழக்கப்பட்டு புளித்துப்போன ஒன்று என்று கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன. சர்வதேச மேலாதிக்க அரசியல் இதுவரை நாடுகள், அவற்றின் தலைவர்களுக்கு எல்லாம் ஐ.நா.வின், பெயரிலும், அமெரிக்க அணியின் பெயரிலும் விதித்த தடைகள் 20 வீதம் இலக்கை கூட எட்டவில்லை என்பது சர்வதேச நிபுணர்களின் கருத்து. போயும்… போயும்.. இலங்கையைச் சேர்ந்த நான்கு தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் அநுர அரசுக்கு மூக்கணாங்கயிறு குத்தவும், தென்னிலங்கை பேரினவாத சக்திகளை மேலும் வளர்த்து விடவுமே உதவும். இந்த சிக்னல் தடையால் இராணுவத்தை காட்டிக்கொடுக்கமாட்டோம், உள்நாட்டு பொறிமுறையைத்தவிர வேறு எந்த பொறிமுறையும் நிராகரிக்கிறோம் என்று இந்த போரின் பின்னணியில் இருந்து செயற்பட்ட ஜே.வி.பி/என்.பி.பி. யை, எந்த குற்றங்களுக்காக பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருக்கிறதோ அந்த குற்றங்களை செய்திருக்கின்ற, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கின்றன ஜே.வி.பி.யை இவ்வாறான அழுத்தங்கள் மூலம் திருத்தலாம் என்று அமெரிக்காவும், பிரித்தானியாவும் நினைத்தால் அது போன்ற சிறுபிள்ளை அரசியல் உலகில் எங்கும் இல்லை. அநுரவுக்கு தலைவலியை கொடுக்கலாம், ஆனால் அதைக் குணப்படுத்துவதற்கான மாத்திரயை இந்தியாவும், சீனாவும் ஏற்கனவே கொழும்புக்கு அனுப்பிவிட்டன. அதில் ஒரு பகுதியை தன்னோடு எடுத்துக் கொண்டுதான் ஹேரத் அமெரிக்கா போகிறார். பட்டலந்தையை திசை திருப்ப விதிக்கப்பட்டுள்ள இந்த தடையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் என்.பி.பி.க்கு தலையில் குட்டுவதும் , சேதாரத்தை ஏற்படுத்துவதும் திரைமறைவில் இடம் பெறுகிறது. https://arangamnews.com/?p=11919
  18. அருண் தம்பிமுத்து கைது தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் பாசிக்குடாவில் வைத்து சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். Thinakkural.lkஅருண் தம்பிமுத்து கைதுதமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் […]
  19. தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் 03 Apr, 2025 | 11:16 AM எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இம்மாதம் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அநுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய இடங்களுக்கு முதலாம் கட்டமாக விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் கொழும்புக்குத் திரும்புபவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இரண்டாம் கட்ட விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, பண்டிகைக் காலத்திற்கு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு வசதியாக 9 ஆம் திகதி முதல் 500 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/210995
  20. தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி மட்டுமே தீர்வு காணும் - றஜீவன் எம்பி 03 Apr, 2025 | 11:11 AM நீண்ட காலமாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி மட்டுமே தீர்வு காணும் என யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாகத்தை நவாலிப் பகுதியில் புதன்கிழமை (02) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார். றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மேலும் தெரிவிக்கையில், ஒரு பயிரை விதையிட்டு வளர்த்து பின்னர் பூத்து காய், கனி தரும் வரை மக்கள் அந்த பயிரை பாதுகாத்து பலன் பெறுவர். அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் கனிகளைப் பெறும் வரை மக்கள் ஆதரவு தந்து அதன் பயனைப் பெற வேண்டும். இந்த முறையும் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து கிராமங்களை எம்முடன் இணைந்து மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நவாலி பிரதேச சபை வேட்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/210997
  21. இது அச்சமடையவேண்டிய தருணமில்லை - டிரம்பின் வரி அறிவிப்பு குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர Published By: Rajeeban 03 Apr, 2025 | 11:06 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு ,அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர இது அச்சப்படவேண்டிய தருணமில்லை என தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு ,அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வரிகட்டமைப்பு ஒருஇரவில் ஏற்படுத்தப்பட்டதல்ல,இது கடந்த காலகொள்கை வழிகாட்டுதல்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை பிரதிபலிக்கின்றது. ஆனால் இதற்கு சிந்தனையுடன் சீராக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தீர்வு காணும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். உலகளாவிய சந்தையில் தங்கள் இடத்தை பெறுவதற்கு எங்கள் ஏற்றுமதியாளர்கள் ,தொழிலாளர்கள், தொழில்முனைவோர்,எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.இந்த அரசாங்கம் அந்த முயற்சிகளை பாதுகாப்பதற்கான அனைத்தையும், அவதானமான இராஜதந்திர முயற்சிகள்,நடைமுறை செயற்பாடுகள்,எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்படுதல் ,போன்றவற்றின் மூலம் செய்யும். நாங்கள் எங்கள் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்போம். இது அச்சப்படவேண்டிய தருணம் இல்லை,இது கவனத்தை குவிக்கவேண்டிய தருணம்,நாங்கள் கவனம் செலுத்திவருகின்றோம். இலங்கை அமைதியாக,நம்பிக்கையுடன் இணைந்து முன்னேறும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210998
  22. மன்னார் தீவு ; சூழல் அடிப்படையில் மிகவும் முக்கியமான உணர்வுபூர்வமான பகுதியை பாதுகாப்பது அவசியம் - சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் 03 Apr, 2025 | 11:34 AM காற்றாலை மின் திட்டங்கள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டால், சூழலிற்கும், உள்ளுர் மக்களின் சமூக பொருளாதார நலன்களிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகளை அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என சூழல்; பாதுகாப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மன்னார் தீவு 126.5 சதுரகிலோமீற்றர் அளவு பகுதியை கொண்டது,அதனை சுற்றி பாதுகாக்கப்பட்ட பல பகுதிகள் உள்ளன.மேலும் இங்கு சுமார் 70,000 மக்கள் வசிக்கின்றனர்,பிரதானமாக மீன்பிடித்தொழில் ஈடுபட்டுள்ளனர். சூழல் நீதிக்கான நிலையம், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்;பு சமூகம்.சூழல் பாதுகாப்பு மன்றம் உட்பட்;ட அமைப்புகள உத்தேச 250 மெகாவோட் காற்றாலை மின் திட்டம் இந்த தீவில் அமைவதை தடுக்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தன. அதானிகிறீன்ஸ் எனேர்ஜி லிமிடட் இலங்கை முதலீட்டு சபைக்கு இந்த திட்டத்திலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து ,சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்;றத்தின் முன்னிலையில் இதனை அறிவித்ததை தொடர்ந்த மனுக்களை சம்மந்தப்பட்ட தரப்பினர் விலக்கிக்கொண்டனர். மீள்சக்தியை பிரதான சக்தியாக கொண்டு நீண்டகால மின்உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தி;ன் திட்டத்தை மேற்குறிப்பிட்ட தரப்புகள் முழுமையாக வரவேற்கும் அதேவேளை மின்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான எந்த இடத்தை தெரிவு செய்வதற்கு முன்னர் மூலோபாய மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். மன்னார் தீவின் முக்கியத்துவம் மணல்மேடுகள்,கடல்புற்கள்,சேற்று உப்பு நிலம், பவளப்பறைகள்,உலர் மண்டல புதர்க்காடு,மற்றும் வனதிணைக்களம் ஆகியவற்றால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகியன முக்கியமான சுற்றுசூழல் அமைப்பு சேவைகளை வழங்குவதுடன்,அபூர்வமான, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களிறகு( இவற்றில் பல சர்வதேச அளவில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளவை) பாதுகாப்பை அளிக்கின்றன. மத்திய ஆசிய பறக்கும்பாதைக்குள் உள்ள வலசப்பறவைகளிற்கு முக்கியமான தளமாக சர்வதேச அளவில் மன்னார் தீவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.வருடாந்தம் 15 மில்லியன் வலசப்பறவைகள் வருகின்றன. இலங்கையின் அமைவிடம் இலங்கையை உலகின் மிக முக்கியமான பறவை வாழ்விடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இலங்கை வலசப்பறவைகள் பாதுகாப்பு தொடர்பான சமவாயத்தில் கைச்சாத்திட்டுள்ளது.இதன் மூலம் இதன் அதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. சூழல் விவகார அமைச்சு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு மன்னார் தீவை சூழல் அடிப்படையில் உணர்வுபூர்வமான பகுதியாக இனம்கண்டுள்ளது. 52 காற்று விசையாழிகள் 220 மீற்றர் உயரத்தில் இந்த தீவில் கட்டப்பட்டுள்ளமை இந்த பகுதியை பொறுத்தவரை அளவுகதிகமானது என்பதுடன் பலவீனமான சுற்றுசூழலிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. உள்ளுர் மக்களின் சமூக பொருளாதார தாக்கம் இந்த உத்தேசதிட்டம்70,000 மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது,குறிப்பாக மீனவசமூகத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே மீனவசமூகத்தினை ஏற்கனவே கரைக்கு வெளியே தள்ளியுள்ளன என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர், பாரம்பரிய மீன்பிடிமுறைகளில் தொடர்வதை கடினமான விடயமாக்கியுள்ளன. 46 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், தங்கள் எதிர்ப்புகளை மனுக்கள், மூலம் வெளியிட்டனர்,விசையாழி அதிர்வுகள் மீன்களை ஆழ்கடலை நோக்கி தள்ளிவிடும் என தெரிவித்தனர்.இது அவர்களது வருமானத்திற்கு மாத்திரமல்ல பாதுகாப்பிற்கும் ஆபத்தான விடயம். மன்னாரில் காணப்படும் வெள்ளநிலைமைக்கும் இந்த விசையாழிகளே காரணம்.மேலும் பல விசையாழிகள் அமைக்கப்பட்டால், பல சமூகங்கள் வாழமுடியாத பகுதியாக மன்னார் தீவு மாறும். சுற்றுசூழல் சுற்றுலா சுற்றுசூழல் நிபுணர்கள் மன்னார் தீவில் சுற்றுசூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கவேண்டும் என பரப்புரை செய்கின்றனர்.சர்வதேச வலசப்பறவைகளின் தளம் என்ற மன்னார் தீவின் முக்கியத்துவத்தை பயன்படுத்தவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அணுகுமுறை தீவின் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதேவேளை நிலையான வருமானத்தை கொண்டுவரும். சர்ச்சைக்குரிய காற்றாலை மின்திட்டம் போல அல்லாமல், சுற்றுச்சூழல் சுற்றுலா என்பது சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன் தொடர்புபட்ட இணைந்த விடயமாகும். முன்னோக்கி நகருதல் - மூலோபாய திட்டமிடலிற்கான அழைப்பு மன்னார் தீவை பாதுகாப்பது குறித்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு, சமநிலையான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றது.இது வலுசக்திதிட்டங்களால் இலங்கையின் இயற்கை சூழல் மற்றும் சமூக நலன் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்கின்றது. சூழல் நீதிக்கான நிலையம், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்;பு சமூகம்.சூழல் பாதுகாப்பு மன்றம் ரொகான் பெத்தியாகொட ஆகியோர் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டத்திற்காக மன்னார்தீவிற்கு பதில் வேறு இடத்தை ஆராயவேண்டும்; வேண்டுகோள் விடுக்கின்றனர். முன்னைய அறிக்கைகளில் காற்றாலை மின்திட்டத்தை அமைப்பதற்கு மன்னாரே மிகவும் பொருத்தமற்ற இடம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொறுப்புணர்வு மீள்சக்தி திட்ட திட்டமிடல் சூழல் மற்றும் உள்ளுர் வாழ்வாதாரங்களை பலிகொடுக்காமல் பேண்தகு முன்னேற்றத்தை அடைவதற்கு முக்கியமானது. நாங்க்ள மீள்சக்தி திட்டங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை முழுமையாக வரவேற்கின்றோம். அதேவேளை மன்னார் தீவை விட பொருத்தமான இடங்களை அரசாங்கம் ஆராயவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். காற்றாலை மின் திட்டங்கள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டால், சூழலிற்கும், உள்ளுர் மக்களின் சமூக பொருளாதார நலன்களிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகளை அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம். https://www.virakesari.lk/article/211004

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.