Everything posted by கிருபன்
- IMG_0412.jpeg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வடமராட்சியில் செம்பாட்டு மண் இருக்கு. புகையிலை, மிளகாய் எல்லாம் விளையிற இடம்.. இப்போது கல்யாண முருங்கையால் நிறைந்திருக்கு!
-
இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை
இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை Vhg மார்ச் 29, 2025 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தொடர்பாக, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று, ஒட்டாவாவில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை பிரெட் ஜி. பாரெட் அரினா – மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நினைவுகூர திட்டமிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவு அதேநேரம் வட கரோலினாவில் உள்ள தமிழ் அமைப்புகள், கேரி, NCஇல் தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளன. மேலும் FeTNA தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை இணையவழியாக இரவு 9 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், கனடா நாடாளுமன்றம் இலங்கையில் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அறிவித்தது. இதனையடுத்து 2023 மே 18 அன்று, கனடா பிரதமர் முதல் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை அறிவித்தார். இந்தநிலையில் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர். நல்லிணக்கத்திற்கான முதல் படி இதேவேளை ஒன்டாரியோ அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம்”, ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று முடிவடையும் ஏழு நாள் காலத்தை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரமாக அறிவித்துள்ளது. இதேவேளை இந்த செயற்பாடுகள், தமிழ் இனப்படுகொலையால் இழந்த உயிர்களை கௌரவிப்பதுடன் மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் தலைமுறை தலைமுறையாக அதிர்ச்சியடைந்தவர்களுக்கு நம்பிக்கையையும் அளிக்கிறது. அத்துடன் ஆற்றுப்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கான முதல் படியைக் குறிக்கிறது என்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.battinatham.com/2025/03/tgm.html
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னுடைய அட்ரஸே செம்பாடுதான்! 😁
-
ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு
ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு March 29, 2025 12:14 pm நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று சனிக்கிழமை மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில், அரச இலட்சினையில் இங்கு உற்பத்தியாகும் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுமன கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை ஊடாக கூடுதல் நிவாரண விலையில் ‘ரஜ லுணு’ என்ற வர்த்தக நாமத்தில் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/elephant-pass-salt-factory-to-be-handed-over-today/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை சனி 29 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 07 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் பிரபா ஏராளன் நுணாவிலான் எப்போதும் தமிழன் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒருத்தர் விதிவிலக்கு! மாறி உள்ளே அகப்பட்டுவிட்டார்!😉
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025 இன் 08வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பல வீரர்கள் பந்துகளை வீணாக்காமல் வேகமாக அடித்தாடியதால், ராஜட் படிதாரின் அரைச் சதத்துடன் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திராவையும் இறுதியில் வந்து வாணவேடிக்கை காட்டிய தோனியையும் தவிர மிகுதி அனைவரும் வேகமாக விக்கெட்டுகளை இழந்ததால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வராக @செம்பாட்டான் நீடிக்கின்றார். பதில் முதல்வராக @suvy ஐயா பறந்துவந்துள்ளார்!
- IMG_0407.jpeg
-
நானும் ஊர்க் காணியும்
கேப்பாபிலவு ஊர் போல உங்கள் காணி இருக்கிறதே! ஒரு ரிசோர்ட்டாக மாத்தலாம்! எனக்குத் தெரிஞ்சவர் இருக்கின்றார் இப்படியான ஐடியாவில்.. உங்கள் காணியை லீஸுக்குத் தருவீங்களா?🤪
-
மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்
மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள் VigneshkumarUpdated: Friday, March 28, 2025, 12:49 [IST] மியான்மர்: மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டது. இதில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பூமிக்கு அடியில் பல்வேறு டெக்டோனிக் தட்டுகள் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதற்கிடையே மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.7 & 6.4 என்று அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. https://tamil.oneindia.com/news/international/myanmar-earthquake-strong-tremors-felt-in-myanmar-and-thailand-691213.html
-
மீனவர்களின் நலன்கருதி முல்லையில் வெளிச்சவீடு அமைக்கப்படவேண்டும் ; ரவிகரன் எம்.பி
மீனவர்களின் நலன்கருதி முல்லையில் வெளிச்சவீடு அமைக்கப்படவேண்டும் ; ரவிகரன் எம்.பி 28 Mar, 2025 | 10:58 AM முல்லைத்தீவில் வெளிச்சவீடு இன்மையால் கடலுக்குச்செல்லும் மீனவர்கள் கரைதிரும்புவதில் பாரிய இடர்பாடுகளை நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றனர். எனவே மீனவர்களின் நலன்கருதி முல்லைத்தீவு கடற்கரையில் வெளிச்சவீடொன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது. குறித்த தீர்மானம் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பிவைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்பு முல்லைத்தீவு - மணற்குடியிருப்புப் பகுதியில் வெளிச்சவீடொன்று இருந்தது. அது தற்போது முற்று முழுதாக அழிவடைந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொக்கிளாயிலிருந்து பேப்பாரப்பிட்டிவரை சுமார் 74 கிலோமீற்றர் வரையிலான கடற்கரையோரத்தில் அதிகளவான மீன்பிடித் துறைகளிலிருந்து, மீனவர்கள் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேரந்த மீனவர்கள், முன்பு வெளிச்சவீட்டின் உதவியுடன் இடர்பாடுகளின்றி கடலுக்குச்சென்று தமது துறைகளில் கரையேறுவார்கள். தற்போது வெளிச்சவீடு முற்றாக அழிவடைந்துள்ளதால் மீனவர்கள், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரையேறுவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றில், கடற்றொழில் அமைச்சருடனும் பேசியுள்ளேன். அவரும் வெளிச்சவீட்டினை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். எனவே இந்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், ஏற்கனவே முன்பிருந்த இடத்தில் வெளிச்சவீட்டை அமைப்பதென ஒரு தீர்மானத்தை எடுப்பதுடன், அந்தத்தீர்மானத்தை கடற்றொழில் மைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் நடவடிக்கைக்காக் அனுப்பிவைப்பதென்ற ஒரு தீர்மானத்தையும் எடுப்போம் என்றார். இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், குறித்த தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அனுப்பிவைப்பதென்ற முடிவும் எடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/210418
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
பொன்சேகா மீது பிரிட்டன் ஏன் தடை விதிக்கவில்லை.. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். “யுத்த காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித படுகொலைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளான சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட மற்றும் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு எதிராகப் பிரித்தானியா தடை விதித்துள்ளது. அதேபோல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகித்தார். அவரது கட்டளைகளையே சவேந்திர சில்வா, ஜகத் ஜயசூரிய ஆகியோர் பதவி நிலை அதிகாரிகள் என்ற அடிப்படையில் செயற்படுத்தினார்கள். அவ்வாறாயின் ஏன் சரத் பொன்சேகாவுக்குப் பிரித்தானியா தடை விதிக்கவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பினர் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதை அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவே தடுத்தார். 1815 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் மனிதப் படுகொலைகளை படுமோசமாக நடத்தி, காடுகளை அழித்து பல்லாயிரக்கணக்கான யானைகளைக் கொன்று, தந்தங்களையும், பெறுமதியான சொத்துக்களையும் கடத்திச் சென்ற பெரிய பிரித்தானியா இன்று மனித உரிமைகள் குறித்து இலங்கைக்குப் பாடம் கற்பிக்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைவாதிகளில் பெருமளவிலானோர் பிரித்தானியாவில் வாழ்கின்றார்கள். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே பிரித்தானியா தற்போது இந்தத் தடையை விதித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் இன்றும் நாட்டில் உள்ளார்கள். பிரித்தானியாவில் தற்போதைய முறையற்ற செயற்பாடு அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உயிர்ப்பிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் நாட்டில் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தரப்பினர் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். நினைவேந்தல் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது” என்றார். https://newuthayan.com/article/பொன்சேகா_மீது_பிரிட்டன்_ஏன்_தடை_விதிக்கவில்லை..
-
புகையிலைத் தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!
புகையிலைத் தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது! நான்கு அடி உயரமான செடியும் மீட்பு யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில், புகையிலைத் தோட்டத்துக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா வளர்த்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தோட்டத்துக்குள் இருந்து நான்கு அடி உயரத்துக்கு வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடியும் மீட்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார். https://newuthayan.com/article/புகையிலைத்_தோட்டத்தில்_கஞ்சா_வளர்த்தவர்_கைது!
-
யாழில் மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது
யாழில் மாணவிக்கு தடியால் அடி – பிரபல பாடசாலையின் ஆசிரியர் கைது! பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி தனது விடைத்தாளினை திருத்திய மாணவியிடம், விடைத்தாளில் பிழையான விடை காணப்பட்டால் அவற்றை சரியாக்கி அதிக மதிப்பெண் வரும் வகையில் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கேற்றவாறே அந்த மாணவியும் பிழையான விடைகள் எழுதப்பட்ட போதிலும் சரியானதாக குறிப்பிட்டு அதிக மதிப்பெண்ணை போட்டுள்ளார். இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த நிலையில் அவரும் சக மாணவியின் அறிவுறுத்தலில் தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முறைகேடான வகையில் மதிப்பெண்களை அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து இவ்வாறு செய்வது தவறு என சுட்டிக்காட்டியதுடன் கண்டிக்கும் வகையில் மெதுவாக அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த மாணவியை, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முந்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றைய தினம் கைது செய்த பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை ஒன்றுகூடியிருந்தனர். பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர். இதன் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பருத்தித்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். https://newuthayan.com/article/யாழில்_மாணவிக்கு_தடியால்_அடி_–_பிரபல_பாடசாலையின்_ஆசிரியர்_கைது!
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி!
இந்தியப் பிரதமர் ஏப்ரல் 4 இலங்கை வருகிறார் – 6 வரையில் தங்கியிருப்பார்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 04 முதல் 06 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியில் வழிபாடு நடத்த உள்ளார். மேலும், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.samakalam.com/இந்தியப்-பிரதமர்-ஏப்ரல்-4/
-
”கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” - சுமந்திரன்
”கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” - சுமந்திரன் வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது பிற்போடப்பட்ட தேர்தல். முன்னர் நடந்திருக்க வேண்டிய தேர்தல். காலம் தாழ்த்தி தற்போது நடைபெறுகிறது. இந்த தேர்தல் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால் அப்பொழுது நாட்டில் இருந்த சூழ்நிலை சற்று வித்தியாசமானதாக இருந்திருக்க கூடும். ஆனால் தற்போது இந்த தேர்தல் நடைபெறும் சூழ் நிலையில் எங்களுக்கான சவால்கள் அதிகமாக இருக்கின்றன. புதிய சவால்களை எப்படி எதிர் நோக்குவது என்று யோசித்து செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம். மக்கள் மத்தியில் பாரம்பரிய கட்சிகளுக்கு எதிரான ஒரு மனப்பாங்கு உருவாகி இருக்கிறது. பொதுவாக இந்த நாட்டை குட்டிச் சுவர்களாகியது நீண்டகாலம் இருந்த கட்சிகள் என அங்கலாய்த்து, அடிப்படையான மாற்றம் தேவை என்று தான் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் நிலையில் முன் எப்போதும் இல்லாத மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒரு எதிர்பார்ப்போடு இந்த மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். எவரிடமும் நம்பிக்கை வைத்து கொண்டு வந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்பு இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்தமையால் தான் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக தங்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. தமது உடனடித் தேவைகளை தீர்க்கின்ற அளவில் செயற்படுகின்றோமா என்பது பற்றி மக்கள் மத்தியில் ஒரு கேள்வி இருக்கிறது. நாங்கள் எமது இனத்தின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதை நாங்கள் செய்கின்றோம். அதை நாங்கள் சொல்கின்றோம். ஆட்சி அதிகாரங்கள் எமது கைகளில் வந்து சேர வேண்டும். தமிழ் மக்களின் கைகளில் வர வேண்டும் என 75 வருடமாக உழைக்கின்ற, முயற்சி செய்கின்ற ஒரு கட்சி. அதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை. அதை செய்கின்ற அதேவேளை, மக்களுக்கு நாளாந்த பிரச்சனைகள் பல உள்ளன. உள்ளுராட்சி மன்றங்களிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் நாளாந்த பிரச்சனைகளை சந்திக்கக் கூடியதான அதிகாரங்கள். ஆகையினால், தான் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை அறிந்து அதை நாம் செயற்படுத்துகின்ற போது, மக்களுடைய நாளாந்த பிரச்சனைகளை தீர்க்கின்ற வகையில், அதிகாரங்கள் எமது கைகளில் வருகின்ற போது அதை திறம்பட செயலாற்றுபவர்கள் நாங்கள் என்பதை மக்களுக்கு காண்பிக்க முடியும். அதை இவர்கள் செய்வார்களா இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனெனில், எமது வாய்களில் இருந்து வருகின்ற வார்த்தைகள் எல்லாம் எமது விடுதலை பற்றியதும், அதிகார பகிர்வு பற்றியதும், தேசத்தின் விடுவிப்பு பற்றியதாகவும் தான் இருக்கிறது. அது தவறில்லை. அதற்காகத் தான் நாங்கள் இருக்கின்றோம். அதற்காக பேசுகின்ற, அதேவேளை அடிமட்டத்தில் மக்களது நாளாந்த பிரச்சனைகள் சம்மந்தமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு கொடுத்திருக்கின்ற அதிகாரங்களையும் நாம் பிரயோகிக்க வல்லவர்கள் என்பதையும் காண்பிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த அதிகாரங்களை கையாள தெரியாதவர்கள என்று மக்கள் நினைத்தால் அரசியல் அதிகாரங்களை கோருவது தேவையற்றது எனவும், சரியாக கையாண்டால் இவர்களிடம் கொடுப்பது நல்ல விடயம் எனவும் கருதுவார்கள். உள்ளூராட்சி சபைக்கு அதிகாரங்கள் இருக்கின்றன. அதை கேட்டுப் பெற வேண்டியதில்லை. மாகாண சபைக்கு அதிகாரங்களை கேட்டு பெற வேண்டும். சமஸ்டிக்காக உழைக்கின்றோம். மாற்றத்தினால் மக்களது வாழ்க்கையில் எதுவித மாற்றமும் நிகழப் போவதில்லை என்கின்ற சந்தேகம் தற்போது மக்களிடம் வந்துள்ளது. 6 மாத காலத்திற்குள் வந்துள்ளது. அந்த நம்பிக்கை வீண் போகின்ற வகையில் இந்த ஆட்சி செல்கின்ற திசையை பார்த்து மக்களது மனதில் உதித்துள்ளது. பொறுப்பு கூறல் சம்மந்தமாக பல சர்வதேச தலைவர்களுடன் பேசி, பல விதமான பொறிமுறைகள் ஊடாக அழுத்தங்களை நாம் கொடுத்திருக்கின்ற போது, தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் அந்தக் காலத்தில் பேசாமல் இருந்தார்கள். 2016, 2017 ஆம் ஆண்டுகளில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்க பாராளுமன்றத்தில் நாம் செயற்பட்ட போது எங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள். அது குறித்து பேசினார்கள். நிலம் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களை விட கூடுதலாக சொன்னார்கள். அந்த நிலைமைகள் 6 மாத காலத்திற்குள் தலைகீழாக மாறி விட்டது. எதிர்கட்சியில் இருந்ததைப் போல் அவர்கள் இப்போது இல்லை. வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும். தமிழ் மக்களது ஆணை வந்து விட்டது. தீர்வு நாங்கள் கொடுப்பது தான் என அவர்கள் சொல்ல தலைப்படுவதை முளையில் கிள்ளி எறிய வேண்டும். கிழக்கில் மட்டக்களப்பை தவிர, நிலைமை மோசமாக உள்ளது. வடக்கில் இருந்து வரும் செய்தி மிக முக்கியமான செய்தியாக இருக்க வேண்டும். மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் முக்கியமானவை. அதன் சொல்லிலேயே ஒரு அடையாளம் இருக்கிறது. அது எமது கைகளில் இருக்க வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். https://www.samakalam.com/கொக்கரிக்கின்ற-ஆட்சியாள/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அஞ்சுபேர் போட்டி முடிவிலும் வீர தீர சூரனோடு கூட்டமாகத்தான் நிற்பினம் 😜
-
கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்ற இருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது March 27, 2025 1:29 pm கனடாவின் பிக்கரிங் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனடாவின் மார்க்கமில் வசிக்கும் 24 வயதான கோகிலன் பாலமுரளி மற்றும் டொராண்டோவில் வசிக்கும் 24 வயதான பிரானன் பாலசேகர்ஆகியோர் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டனர். முதலாவதாக, கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் மார்ச் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட இருவரிடன் ஏன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை பொலிஸார் அப்போது அறிவித்திருக்கவில்லை. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, கொலை செய்ய சதி செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும், திருட்டு என இரண்டு குற்றச்சாட்டுகளையும் பொலிஸார் அவர்கள் மீது சுமத்தினர். கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் வேலைக்காக கனடா சென்று அங்கு குடியேறியவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு கொலைகளில் ஒன்று, உணவகத்தில் பணிபுரியும் போது ஏற்பட்ட சம்பள தகராறில் நடந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குற்றத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள சி.சி.டி.வி கேமரா அமைப்புகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களின் முகங்களை வரைந்து, மாகாணத்தின் ஒவ்வொரு இடத்திலும் அவற்றைக் காட்டிய பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில், குறித்த இரண்டு சந்தேகநபர்களும் எதிர்வரும் 11ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/two-men-who-went-to-canada-from-jaffna-arrested-on-murder-charges/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வெள்ளி 28 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK எதிர் RCB 18 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் மாத்திரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுவி செம்பாட்டான் ரசோதரன் நந்தன் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025 இன் 07வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இரு விக்கெட்டுகளை மூன்றாவது ஓவரில் இழந்திருந்தும் ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடியான 47 ஓட்டங்களுடன் அனிகெற் வேர்மாவின் ஐந்து சிக்ஸர்களுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மிச்செல் மார்ஷினதும் மின்னல் அடி நிக்கொலஸ் பூரனினது 70 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
- IMG_0396.jpeg
-
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’ March 27, 2025 10:55 am இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ரவீந்திரன், பறவை ஆய்வாளர்கள் பைஜு, மைத்ரி, பேராசிரியர் ரவிச்சந்திரன், உயிரியலாளர் மார்சல் இணைந்த குழுவினர், ராமநாதபுர வனத்துறையின் வன உயிரின பிரிவுடன் இணைந்து தங்களின் தொடர் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். இது குறித்த ஆய்வறிக்கை ‘journal of threatened taxa’ வில் வெளியாகி உள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை ராமநாதபுரம் வனத்துறையுடன் இணைந்து அம்மாவட்ட பறவை சரணாலயங்களில் பறவைகளின் வருகை, இனப்பெருக்கம், வலசை பறவைகளின் வருகை,எண்ணிக்கை, புதிய வாழ்விட பகுதிகளை கண்டறிவது என பணி செய்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் அனுமன் உப்புகொத்தி, நண்டுண்ணி உள்ளான், ஆழிக் கழுகு, கண்டங்கள் கடந்து வரும் ஆல்பட்ரஸ், ஆர்ட்டிக் ஸ்குவா, பழுப்பு ஆலா, மற்றும் அரிய ஆழ் கடல் பகுதிகளில் மட்டுமே வாழும் பறவை இனங்களை கண்டறிந்து மன்னார் வளைகுடா பகுதியின் அரிய பறவையினங்களை பட்டியல் இட்டு உள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆழ் கடல் பறவையினங்களின் வருகையை பதிவு செய்து கொண்டு இருந்த போது பிரிட்ல்டு ஆலா , சாண்டர்ஸ் ஆலா, சிறிய ஆலா, பெரிய கொண்டை ஆலா மற்றும் ரோஸேட் ஆலா மற்றும் சிறிய பெரிய பழுப்பு ஆலாக்களின் (Bridled Tern, Saunder’s Tern, Little Tern, Greater Crested Tern and Roseate Tern, Brown Noddy) எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகரிப்பது கண்டு அங்குள்ள மணற்திட்டுக்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் இந்திய கிழக்குக் கடற்கரை பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் ஆலா பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டது. குறிப்பாக மூன்று மற்றும் ஏழாம் மணற்திட்டு பகுதியில் பண்ணிரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான ஆலா பறவைகள் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. ஆறு வெவ்வேறு ஆலா பறவை இனங்கள் ஒரே பகுதியை தேர்வு செய்து ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கம் செய்வது ஒரு அரிய நிகழ்வாகும். ஆனால், இதன் முக்கியத்துவத்தை இப்பகுதியில் உள்ள மீனவர்களோ, கடலோர காவல் படையினரோ அறிந்திருக்க வில்லை. ஆலா பறவைகளின் இனப்பெருக்க காலத்தில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் ஆலா பறவைகளின் முட்டைகள், குஞ்சுகளை திருடிச் செல்வது உள்ளூர் மீனவர்களால் உறுதி செய்யப்பட்டது. இந்த அரிய வகை ஆலா பறவை இனங்களை பாதுகாப்பது குறித்து உள்ளூர் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவற்றை அவர்கள் பில்லுக் குஞ்சி என்று அழைக்கிறார்கள். பொதுவாக ஆலா பறவைகளை கடலில் மீன்கள் அதிகம் இருக்கும் பகுதியை அடையாளம் காட்டும் பறவைகளாக மூத்த மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். நீர்நிலைகளின் நடுவில் மரங்களில் கூடு கட்டும் பறவைகளின் வாழ்விடங்களை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவிக்கிறதோ, அது போல நிலத்தில், மணற்திட்டுகளில் அதிக எண்ணிக்கையில் கூடு கட்டி வாழும் பறவையினங்கள் உள்ள பகுதிகளையும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கப் பட்ட சரணாலயப் பகுதிகளாக அறிவித்து இந்தியாவின் பல்லுயிர்த் தன்மையை பாதுகாக்க வேண்டும். https://oruvan.com/rare-seabird-ala-spotted-on-ram-setu-sandbar-connecting-sri-lanka-and-india/
-
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு March 27, 2025 10:57 am காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்து 742 பேர் படையினர் மற்றும் பொலிஸார் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 ஆயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 2000ஆம் ஆண்டிற்கு பின்பு 7 ஆயிரத்து 406 பேரும், 2000ஆம் ஆண்டிற்குப் முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலே 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன 7ஆயிரத்து 406 பேரில் 6 ஆயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது. நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம். அவை விரைவில் வெளிவரும். அதேவேளை 2 ஆயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபார்சை பெற்றுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்திற்கு 4ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவித்தார். https://oruvan.com/announcement-that-19-missing-persons-have-been-found/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வியாழன் 27 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 20 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சுவி ஏராளன் அகஸ்தியன் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?