Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இலங்கை மீதான வரியை நிறுத்தி வைத்தார் டிரம்ப் இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சீனாவிற்கு எதிரான வரிகள் 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா இன்று (9) முதல் 104% வரி விதித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீன நிதி அமைச்சகம் இன்று பிற்பகல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரி விதிக்கப்போவதாக அறிவித்தது. அதன்படி, சீனாவின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மீண்டும் ஒருமுறை வரி விகிதத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இலங்கை-மீதான-வரியை-நிறுத்தி-வைத்தார்-டிரம்ப்/50-355396
  2. நாவற்குழியில் பாலியல் விடுதி; மூன்று பெண்கள் கைது யாழ்ப்பாணம் - நாவற்குழிப் பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே, மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 40, 42 மற்றும் 53 வயதுடையவர்கள் என்றும், விடுதியை நடத்திவந்த உரிமையாளர் 68 வயதுடையவர் என்றும் பொலிஸார் தமது விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://newuthayan.com/article/நாவற்குழியில்_பாலியல்_விடுதி;_மூன்று_பெண்கள்_கைது
  3. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை தவறாக வழிநடத்திய புலனாய்வு உத்தியோகத்தர் கைது! Vhg ஏப்ரல் 09, 2025 மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை கொலை செய்த சம்பவத்தை சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய மட்டு. கரடியனாறு தேசிய புலனாய்வுத்துறை சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சி.ஜ.டியினர் கொழும்பில் வைத்து நேற்று இரவு (08-04-2025) கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப் புலிகளிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த அஜந்தன் இந்த படுகொலையை செய்ததாக அறிக்கையிட்டதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியை கொழும்பிலுள்ள சி.ஜ.டி நான்காம் மாடியில் தடுத்துவைத்த நிலையில் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் ஸஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் ஸஹரானின் சாரதியான முகமது சரிப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ். நில்காம் உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்தது. அதன்பின்னர் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர். இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றம் சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதனுடன் தொடர்புடைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் தேசிய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவரையும் சி.ஜ.டியினர் வரவழைத்து அவர்களிடம் விசாரணையை முன்னெடுத்த நிலையில் மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை நேற்று கொழும்புக்கு வரவழைத்த சி.ஜ.டியினர் கைதுசெய்தனர். https://www.battinatham.com/2025/04/blog-post_66.html
  4. ரவீந்திரநாத் பிள்ளையான் கும்பலால் எப்படி கடத்தப்பட்டார்! Vhg ஏப்ரல் 10, 2025 துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்கள் மார்கழி 15, 2006 அன்று "Triploli Platoon-பிள்ளையான்" கூட்டு கும்பலால் கடத்தி காணாமலாக்கப்பட்டார் புரட்டாதி 20, 2006 முதல் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பல்வேறு வழிகளில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டார் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கிழக்கு பல்கலை கழக துணைவேந்தராக இருக்க முடியாது என்கின்ற தோரணையில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது தொலைபேசி வழியில் தொடங்கிய அச்சுறுத்தல்கள் ஒரு கட்டத்தில் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பால சுகுமாரை கடத்திச் சென்று பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்தால், கலாநிதி பால சுகுமாரை விடுவிப்போம் என கட்டாயப்படுத்த்துமளவிற்கு எல்லை மீறியது இராணுவம் மற்றும் பொலிஸ் கண் முன்னே அவர்கள் வேடிக்கை பார்க்க இவை நடந்தேறின இவ்வாறான நெருக்கடிகளால் பாதுகாப்புமின்றி பணியாற்ற முடியாத சூழலில் துணைவேந்தர் ஐப்பசி 1, 2006 அன்று இரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குப் இடம்பெயர்ந்தார் மறுநாள், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் 30.10.2006 திகதியிட்டு தனது ராஜினாமாவையும் சமர்ப்பித்தார் ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக அவரை கொழும்பிலிருந்து பணியாற்றுமாறு பணித்தது. துணைவேந்தர் ஒருவரின் ராஜினாமாவை தங்களால் ஏற்று கொள்ள முடியாது என வாதிட்டது இந்த நெருக்கடிகள் குறித்து பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பொலிஸ் யில் மேற்கொண்ட முறைப்பாடுகளும் தட்டி கழிக்கப்பட்டன பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களை பாதுகாக்க கோட்டாபய ராஜபக்சவின் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சே ஆட்சியாளர்களும் முயற்சிக்க வில்லை மாறாக இராணுவ புலனாய்வாளர்களும் ஒட்டுக்குழுக்களும் தாங்கள் நினைத்ததை செய்ய கூடிய சுதந்திரத்தை வழங்கியிருந்தார்கள் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்குபற்றிய Sri Lanka Association for the Advancement of Science யின் Conference யில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பங்குபற்றினர் கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த Vidya Mawatha (பௌத்தலோக மாவத்தைக்கு அருகில்), கொழும்பு 7 இல் நடைபெற்ற இவ் Conference நடைபெற்றது அன்று 8.30 மணிக்கு, பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களை அவரது மகளின் தெஹிவளை அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து Conference இற்கு பல்கலை கழக காரில் சென்றிருந்தார் மதியம் 12.25 மணிக்கு, பேராசிரியர் ரவீந்திரநாத் தனது சாரதிக்கு தொலைபேசியில் பேசியிருந்தார் பழுதுபார்க்கும் பணி இன்னும் நடந்து கொண்டிருப்பதால், உடனடியாக வர முடியாமல் இருக்கின்றது என சாரதி துணைவேந்தருக்கு பதிலளித்திருக்கின்றார் இதை தொடர்ந்து துணைவேந்தர் தனது சாரதியை மதியம் 2.00 மணிக்கு தன்னை அழைத்து செல்ல வருமாறு அறிவுறுத்தியிருக்கின்றார். இதற்கு பின் Conference மண்டபத்திலிருந்து மற்றுமொரு தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க வெளியேறிய சில நிமிடங்களில் அவர் கடத்தப்பட்டார் என சொல்லப்படுகின்றது இவ்வாறு கடத்தப்பட்ட அவர் அங்கிருந்து 300 KM தொலைவில் இராணுவ முகாம்களுக்கு மத்தியிலிருந்த தீவுசேனை பிள்ளையான் முகாமிற்கு கொண்டு வரப்பட்டார் இருதநோயாளியான அவரை தனக்குரிய மருந்துகளை கூட எடுக்க அனுமதிக்காமல் பங்கர் ஒன்றில் 3 நாட்கள் பிள்ளையான் தடுத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகின்றது இலங்கை இராணுவத்தின் Triploli Platoon பிள்ளையனோடு சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியிருந்தார்கள் கோத்தபாயா ராஜபக்சே, மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, பிரிகேடியர் அமல் கருணாசேன உட்பட புலனாய்வு கட்டமைப்பின் ஒத்துழைப்பு வழங்க உயர் பாதுகாப்பு வலயத்தில் கடத்தப்பட்ட துணைவேந்தரை எவ்வித தடையுமின்றி 300 KM தொலைவிற்கு Triploli Platoon-பிள்ளையான் கூட்டு கொண்டு சென்றது இந்த சம்பவத்தில் மேஜர் பிரபாத் புலத்வத்தே மற்றும் கேணல் சாமி குணரத்தின கீழ் இயங்கிய Triploli Platoon யின் தொடர்பை பிள்ளையான் கூட்டாளி அஸாத் மௌலானா உறுதி செய்கின்றார் அதே போல அக் காலப்பகுதியில் பிள்ளையான் குழுவிற்கு பொறுப்பாகவிருந்து பிள்ளையானை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே வழிநடாத்தியதாக அஸாத் மௌலானா பதிவு செய்கின்றார் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் அவரது விடுதலையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடையவும் இச் சம்பவத்தின் பின்னணியிலிருந்து மேற்படி இராணுவ தொடர்புகளே காரணமாக இருந்தது மஹிந்த ராஜபக்சே அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டார்கள். கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். கருணா -பிள்ளையான் குழுவுடன் நேரடியாகப் பேசினர்கள் மனித உரிமை கண்காணிப்பகம் , சர்வதேச மன்னிப்பு சபை , UN High Commissioner for Human Rights, புகழ்பெற்ற சர்வதேச கல்வியாளர்கள் உட்பட என சகல தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன ஆரம்பத்தில் துணைவேந்தரின் ராஜினாமாவை ஏற்று கொள்ள மறுத்த பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அவர் கடத்தப்பட்ட பின்னர் 19 தை 2007 யன்று அவர் இராஜினாமாவை ஏற்று கொண்ட போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை . பிள்ளையானை பயன்படுத்தி வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை கூர்மைப்படுத்த இராணுவ புலனாய்வு கட்டமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களை காணாமலாக்கியது இப்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் இச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார் ஆனால் பிள்ளையானை இயக்கிய கோத்தபாயா ராஜபக்சே அடங்கலான புலனாய்வு வலையமைப்பை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே சம்பவத்தின் முழு பின்னணியையும் கண்டறிந்து குற்றச்செயலை உறுதிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு பெற்று கொள்ளலாம். https://www.battinatham.com/2025/04/blog-post_10.html
  5. GMT நேரப்படி நாளை வியாழன் 10 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி கந்தப்பு ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  6. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 23வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சனின் அதிரடியான 82 ஒட்டங்களுடனும், வேகமாக அடித்தாடிய ஜொஸ் பட்லர், ஷாரூக் கான், ராகுல் தெவதியா, ரஷீட் கான் ஆகியோரின் பங்களிப்புடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை எடுதது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களில் ஷிம்ரொன் ஹெட்மயரைத் தவிரப் பிறர் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @goshan_che இரட்டை இலக்கப் புள்ளிகளை எடுத்திருந்தாலும் முதல் எட்டு, கடைசி எட்டு நிலைகளில் மாற்றங்கள் இல்லை!
  7. @நிலாமதி உங்கள் பதில்களை மீளவும் பார்த்தேன். சரியாகவே கூகிள் சீற்றில் தரவேற்றியுள்ளேன். நீலவர்ணப் பதில்களும், ஊதா வர்ணப் பதில்களும் இனி வரவுள்ள போட்டிகளுக்கான பதில்கள் 😄
  8. GMT நேரப்படி நாளை புதன் 09 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 18 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 05 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் வாத்தியார் சுவி நுணாவிலான் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  9. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக அடித்தாடி சிறந்த அடித்தளத்தைக் கொடுத்ததால், எய்டன் மார்க்கத்தின் 47 ஓட்டங்கள், மிச்சல் மார்ஷின் 81 ஓட்டங்கள் மற்றும் நிக்கொலஸ் பூரனின் ஆட்டமிழக்காமல் எடுத்த 87 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் சவாலான வெற்றி இலக்கை நோக்கி வேகமாக அடித்தாடியதால் வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. சுனில் நாரயேனின் 30 ஓட்டங்கள், அய்ங்கியா ரஹானேயின் 61 ஓட்டங்கள், வெங்கடேஷ் ஐயரின் 45 ஓட்டங்கள், ரிங்கு சிங்கின் 38 ஓட்டங்கள் இலக்கை அண்மிக்க உதவின. எனினும் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்ததால் இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் மின்னல் வேக சதத்துடனும், விக்கெட்டுகள் சரியச் சரிய பின்னர் வந்த ஷஷாங் சிங்கின் அதிரடியான ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் மற்றும் மார்கோ ஜென்ஸெனின் வேகமான ஆட்டமிழக்காமல் எடுத்த 34 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ரச்சின் ரவீந்திராவும், 69 ஓட்டங்கள் எடுத்த டெவொன் கொன்வேயும் சிறந்தச் அடித்தளத்தைக் கொடுத்த போதிலும் பின்னர் வந்த வீரர்களில் ஷிவம் டுபேயின் 42 ஓட்டங்களையும், வாணவேடிக்கை காட்டிய தோனியின் 27 ஓட்டங்களும் வெற்றி இலக்கை அடைய உதவவில்லை. இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  10. மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும் April 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல், பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பித்த அரசாங்கத்தின் செயல், இரு வாரங்களாக தலைமறைவாக இருந்த இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை, முன்னாள் இராணுவ தலைவர்கள் சிலர் மீது பிரிட்டன் விதித்திருக்கும் தடைகள் ஆகியவையே அந்த சம்பவங்களாகும். முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க பெப்ரவரி மாதம் லண்டனில் வைத்து அல் ஜசீராவின் ‘ஹெட் ரு ஹெட்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல் மார்ச் 6 ஆம் திகதி ஒளிபரப்பானது. தனது அரசியல் அனுபவம், அறிவு மற்றும் சாதுரியத்தில் அதீத நம்பிக்கை கொண்டவரான விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, அவருக்கு விரோதமான சபையோரின் முன்னிலையில் இடம்பெற்ற அந்த நிகழ்ச்சி உண்மையில் பெரிய அனர்த்தமாக போய்விட்டது. அல் ஜசீரா செய்தியாளர் மெஹ்டி ஹசன் பிறப்பதற்கு முன்னரே தான் அரசியலுக்கு வந்து விட்டதாக அவரிடம் கூறவேண்டிய அளவுக்கு ஒரு நிர்ப்பந்த நிலை விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது பரிதாபமானதாகும். நேர்காணலைப் பற்றி உள்நாட்டில் விமர்சனம் செய்தவர்களில் அனேகமாக சகலருமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவர் இணங்கியிருக்கக் கூடாது என்றே கூறினார்கள். மெஹ்டி ஹசன் விக்கிரமசிங்கவை நேர்காணல் செய்த விதம் பெருமளவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. கேள்விகளுக்கு பதிலளிப்பவர் தனது பதிலை நிறைவு செய்யவிடாமல் அட்டகாசமான முறையில் குறுக்கீடு செய்வதும் ஒரு எதிரியை நோக்கி கேள்வி கேட்பதைப் போன்ற தொனியில் மூத்த அரசியல் தலைவர்களுடன் பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஊடகத்துறைச் செயற்பாடாக இருக்க முடியாது. இரு மணித்தியாலங்கள் பதிவு செய்யப்பட்ட தனது நேர்காணலில் முக்கியமான பகுதிகளை திட்டமிட்டு நீக்கிவிட்டு அல் ஜசீரா ஒரு மணித்தியாலமே அதை ஒளிபரப்பியதாக விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) யின் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் (1988 — 1990 ) கம்பஹா மாவட்டத்தில் உள்ள பட்டலந்த பிரதேசத்தில் இயங்கிய தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை முகாம் தொடர்பாக தொடுக்கப்பட்ட கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி அளித்த நழுவல் போக்கிலான பதில்தான் இறுதியில் 27 வருடங்கள் பழமையான பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தூசி தட்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கத்துக்கு தைரியத்தைக் கொடுத்தது. அல் ஜசீரா நேர்காணல் ஒளிபரப்பாகாமல் இருந்திருந்தால் ஆணைக்குழு அறிக்கை தற்போதைக்கு வெளியில் வந்திருக்குமா என்பது சந்தேகமே. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 1995 செப்டெம்பரில் நியமிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழு அதன் அறிக்கையை 1998 ஆம் ஆண்டில் அவரிடம் கையளித்தது. ஆனால், அதன் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் திருமதி குமாரதுங்கவோ அல்லது அவருக்கு பிறகு ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர்களோ ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. ஆனால், ஆணைக்குழு அறிக்கையின் மென்பிரதிகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் ஏற்கெனவே பகிரப்பட்டிருந்தது என்கிற அதேவேளை, விக்கிரமசிங்க தன்னிடம் பட்டலந்த முகாம் பற்றி மெஹ்டி ஹசன் கேட்டபோது ” ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே ?” என்று பொருத்தமில்லாத வகையில் பதில் கேள்வி எழுப்பினார். கொழும்பில் முன்னாள் பி.பி.சி. செய்தியாளராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் ஆணைக்குழு அறிக்கையின் பிரதி ஒன்றை அவருக்கு காண்பித்தபோது “அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை” என்று விக்கிரமசிங்க கூறினார். பட்டலந்த விவகாரத்தில் உரக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வீடமைப்பு தொகுதியை பொலிசார் பயன்படுத்துவதற்கு அனுமதித்ததில், அன்றைய கைத்தொழில்துறை அமைச்சர் என்ற வகையில், உரிய நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று மாத்திரமே தன் மீது அறிக்கையில் குறை கூறப்பட்டிருப்பதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இனிமேல் தான் பட்டலந்த விவகாரம் குறித்து எதுவும் பேசப் போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்னர் ‘அத தெரண’ வின் ஹைட் பார்க் 24 நேர்காணலில் கூறினார். அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஏப்ரில் 10 திகதியும் பிறிதொரு தினத்திலும் விவாதம் நடைபெறவிருக்கிறது.. ஆணைக்குழுவின் அறிக்கையில் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் ஜே.வி.பி. யினர் செய்த அட்டூழியங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதால் பாராளுமன்ற விவாதத்துக்கு பிறகு எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு சிக்கலை எதிர்நோக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிரமசிங்கவுக்கு பிரச்சினையைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் அரசாங்கம் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் அவசரம் காட்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவரது குடியியல் உரிமைகளை பறிக்க முடியும் என்று கூட அரசாங்க அரசியல்வாதிகள் சிலர் பேசினார்கள். தென்னிலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கையில் அக்கறை காட்டுகின்ற அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்நாட்டுப்போரின் போது இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பல்வேறு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி. உதாரணத்துக்கு கூறுவது என்றால், சர்வதேச சமூகத்தின் நெருக்குதலை அடுத்து 15 பிரத்தியேகமான உரிமைமீறல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2006 ஆம் ஆண்டில் நியமித்த உடலாகம ஆணைக்குழு அறிக்கை, போரின் முடிவுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டில் அவர் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு 2013 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை, முன்னைய ஆணைக்குழுக்கள் சகலவற்றினதும் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டில் நியமித்த நவாஸ் ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்த அறிக்கை என்று போர்க்கால மீறல்கள் தொடர்பிலான பல அறிக்கைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. அரசியல் அனுகூலத்துக்காக ‘தெரிந்தெடுத்த முறையில்’ பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையில் எடுத்திருக்கிறது. உரிமை மீறல்கள் என்று வருகின்றபோது பாரபட்சமின்றி முன்னைய சகல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் கவனத்தில் எடுக்கக்கூடிய அரசியல் துணிவாற்றல் அரசாங்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அடுத்ததாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர் வீட்டில் இருந்து மூன்று வேளை உணவையும் வரவழைத்துக்கொண்டு விளக்கமறியலில் இருக்கிறார். முக்கியமான புள்ளிகள் விளக்கமறியலுக்கு அனுப்பப்படும்போது அவர்களை உடனே தொற்றிக்கொள்ளும் ஒருவகை “நோய்” தேசபந்துவை பீடிக்கவில்லை. இன்னமும் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. அவரை பதவி நீக்குவதற்கான பிரேரணையை ஆளும் கட்சியின் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள். அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியதை அடுத்து தேசபந்துவை பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி விக்கிரமசிங்க நியமித்தார். அந்த அங்கீகாரத்தை வழங்குவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சபாநாயகர் நடந்துகொண்ட முறை குறித்து சர்ச்சை கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது நியமனத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் ஒன்பது அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அவர் பொலிஸ்மா அதிபராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் பொலிஸ்மா அதிபராக பதவியில் இருப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது என்பதால் அவருக்கு எதிராக பூர்வாங்க சான்றுகள் இருப்பதாகவும் அந்த பிரேரணையில் கூறப்பட்டிருக்கிறது. தேசபந்து தனது நடத்தைகள் மூலமாக பொலிஸ்மா அதிபர் பதவிக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாகவும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குறிப்பிட்ட சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றும் பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார்கள். குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கு சபாநாயகர் குழுவொன்றை நியமித்து அதன் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதே நடைமுறை. ஆனால், தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பிரேரணை ஏப்ரில் 8, 9 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொலிஸ்மா அதிபர் ஒருவர் இரு வாரங்களாக தலைமறைவாகி இருந்து இறுதியில் ஆடம்பர வாகனம் ஒன்றில் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தது உலகிலேயே இலங்கையில்தான் முதற் தடவையாக நடந்திருக்கிறது எனலாம். இது இவ்வாறிருக்க, கடந்த வாரம் இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவ தலைவர்களுக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு தளபதி கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் எதிராக பிரிட்டன் தடைகளை விதித்திருக்கிறது. ஆயுதப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோரே தடைகள் விதிக்கப்பட்ட இராணுவ தலைவர்களாவர். பிரிட்டனுக்கான பயணத்தடையும் சொத்துக்கள் முடக்கமும் இந்த தடைகளில் அடங்கும். “உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகக்களுக்கு பொறுப்புக்கூற வைத்தல் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய இராச்சிய அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருக்கிறது” என்று மார்ச் 24 ஆம் திகதி தடைகள் விதிப்பை அறிவித்த வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இணையமைச்சர் டேவிட் லாமி கூறினார். வெளிநாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக இவ்வாறு தடைகளை விதிப்பது இதுதான் முதற்தடவை அல்ல. ஏற்கெனவே சவேந்திர சில்வாவுக்கு எதிராக 2020 பெப்ரவரியில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்தது. அதன் பிரகாரம் அவரும் உடனடிக் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாது. அதே போன்றே முன்னாள் ஜனாதிபதிகளான சகோதரர்கள் மகிந்த ராஜபக்சவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் 2023 ஜனவரி 10 ஆம் திகதி கனடா அதன் விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைகளை விதித்தது. தற்போது மூன்று இராணுவ தலைவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை ஆட்சேபித்திருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சு வெளிநாடுகளினால் இவ்வாறாக ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கச் செயன்முறைகளுக்கு உதவப்போவதில்லை, மாறாக அந்த செயன்முறைகளை சிக்கலாக்கும் என்று கூறியிருக்கிறது. இது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக்கிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் செயன்முறைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது என்றும் கடந்த காலத்தின் எந்தவொரு மனித உரிமைமீறலும் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாகவே கையாளப்பட வேண்டும் என்றும் ஹேரத் கூறியிருக்கிறார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயன்முறைகளைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்னைய அரசாங்கங்களின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபட்டதாக அமையப்போவதில்லை. சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஹேரத் இதை திட்டவட்டமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் வெளிநாடுகள் தடைகளை விதித்த முன்னைய சந்தர்ப்பங்களில் கிளம்பியதைப் போன்ற கண்டங்கள் சிங்கள தேசியவாத சக்திகளிடமிருந்து தற்போதும் கிளம்பியிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்த இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்களை ஐக்கிய இராச்சியம் எவ்வாறு தண்டிக்க முடியும் என்று மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியிருக்கிறார். வழமை போன்று விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் பிரிட்டனை கடுமையாக கண்டனம் செய்திருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னரான மக்கள் கிளர்ச்சியையும் கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களையும் அடுத்து பெரும் பின்னடைவைக் கண்ட தேசியவாத சக்திகள் மீண்டும் அரசியலில் தலையெடுப்பதற்கு இத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்தும் என்பது தெரிந்ததே. முன்னாள் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதித்த பிரிட்டனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையாக கண்டனம் செய்யவில்லை என்று விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் கூட அண்மைக்காலமாக சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலக நாடுகள் மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கையுடன் பாரபட்சமான முறையில் நடந்துவருவதாக குற்றம் சாட்டிவருகிறார். மத்திய கிழக்கில் காசா போர் மற்றும் உக்ரெயின் போரைப் பொறுத்தவரை ஒரு விதமாகவும் இலங்கை விவகாரத்தில் வேறு வீதமாகவும் மேற்குலகம் இரட்டைத்தனமாக செயற்படுவதை சுட்டிக்காட்டும் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை வெளியேற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். டொனால்ட் ட்ரம்ப் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற முடியுமானால் இலங்கையினால் ஏன் முடியாது என்று அவர் கேள்வியும் வேறு எழுப்புகிறார். அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக வெளிநாடுகள் விதித்த முன்னைய தடைகளினால் இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதில் எந்தளவுக்கு நிர்ப்பந்திக்க முடிந்தது? என்ற ஒரு கேள்வி இருக்கிறது. தேசியவாத சக்திகள் மீண்டும் தலையெடுப்பதற்கான வாய்ப்புக்களை தோற்றுவிப்பதை தவிர இந்த தடைவிதிப்புகளினால் வேறு எதையும் உருப்படியாகச் செய்ய முடியாமலும் போகலாம். ஏனென்றால், இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும் உள்நாட்டுப் போரின்போது உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினர் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நெருக்குதல்கள் அதிகரிக்குமானால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மேலும் தீவிரமான தேசியவாத நிலைப்பாட்டை நோக்கிச் செல்லக்கூடிய சாத்தியமே இருக்கிறது. ஐக்கிய இராச்சியம் கடந்தவாரம் விதித்த தடைகளை தமிழ் அரசியல் கட்சிகள் வழமை போன்று வரவேற்றிருக்கின்றன. கடந்த பதினாறு வருடகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தமிழர்கள் நெடுகவும் கானல் நீரை விரட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான் விதியோ என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. https://arangamnews.com/?p=11926
  11. மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்? April 7, 2025 — கருணாகரன் — உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அரசியற் கூட்டுகள் சில புதிதாக உருவாகியுள்ளன. இந்தக் கூட்டுகளின் பிரதான நோக்கம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதாகும். இரண்டாவது, தமிழ்த்தேசிய அரசியலை அல்லது பிராந்திய அரசியலை (சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics) மற்றும் புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) மேலும் தொடர்வது. பிராந்திய அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலமே அரசியல் அரங்கில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை. இதற்காக அவை தமது கொள்கை (அப்படி ஏதேனும் இருந்தால்) கோட்பாடு, உடன்பாடு, முரண்பாடு எல்லாவற்றையும் கடந்து கூட்டு வைத்துள்ளன; அணி சேர்ந்துள்ளன. 1. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடியில் இயங்கும் அதிதீவிர நிலைப்பாட்டையுடைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி ‘தமிழ்த்தேசியப் பேரவை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸோடு ஸ்ரீகாந்தா – சிவாஜிலிங்கம் இரட்டையர்களின் தமிழ்த்தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர் தவராஜாவின் ஜனநாயகத் தமிழசுக் கட்சி, ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் சாவகச்சேரி அருந்தவபாலன், புங்குடுதீவு நாவலன் எனச் சில உதிரியாட்களின் அணி என இணைந்துள்ளன. 2. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இதில் ஏற்கனவே உள்ள ஈ.பி.ஆர். எல்.எவ், புளொட், ரெலோ, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடு புதிதாக இணைந்திருப்பது முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியாகும். ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவையும் இந்தக் கூட்டில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை தனித்தே நிற்கும்படியாகி விட்டது. 3. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு. இதில் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சதாசிவம் வியாழேந்திரனின் தமிழர் முற்போக்குக் கழகம் ஆகியவை 15. 03. 2025 இல் ஒரு உடன்படிக்கையைச் செய்து இணைந்திருந்தன. பின்னர் 22.03.2025 அன்று கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இந்தக் கூட்டில் இணைந்துள்ளது. ஆனாலும் இந்தக் கூட்டுக்கு முன்னோடியாக இருந்தது, கிழக்குத் தமிழர் ஒன்றியமாகும். 2018 இல் செங்கதிரோன் என்றழைக்கப்படும் த. கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த. சிவநாதன் ஆகியோர் இணைந்து கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்காக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினை உருவாக்கினர். இதனுடைய அரசியற் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் இணைந்து கொள்ளுமாறு அப்போது சம்மந்தப்பட்ட தரப்பினரால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் கருணா அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பைப் புறக்கணித்தவர்கள் இப்பொழுது அதே பெயரில் ஒரு கூட்டமைப்பை பிரகடனப்படுத்தியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இப்படி ஒவ்வொரு கூட்டுக்கு உள்ளும் புறமுமாகப் பல சங்கதிகள் உண்டு. எப்படியோ வழமையைப்போல தேர்தற்காலத் திருவிழாவின் ஓரம்சமாகத் தமிழ்க் கட்சிகளின் அரசியற் கூட்டுகள் இந்தத் தடவையும் நிகழ்ந்திருக்கின்றன. இதொன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனாலும் ஆச்சரியமாக இருப்பது, இந்தக் கூட்டுகளின் பின்னாலுள்ள சில விடயங்கள். 1. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடியில் இயங்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இதுவரையிலும் வேறு எவரோடும் கூட்டு வைத்துக் கொள்ளாமல் தன்னைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தது. அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றையும் முன்னணி துரோகிப் பட்டியலில் தள்ளி விட்டுத் தான் மட்டுமே சுத்தமான தங்கம் என்று தன்னைப் புனிதப்படுத்தி முயற்சித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது இதிலிருந்து படியிறங்கி தான் ஒதுக்கி வைத்த தரப்புகளோடு அரசியற் கூட்டொன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணிக்கு தமிழ்த்தேசியப் பேரவை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், தேசிய மக்கள் சக்தி வடக்குக் கிழக்கில் வெற்றியடைவதைத் தடுப்பதும் ஏனைய தமிழ்த்தரப்புகளை விட, தமிழ்க் காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதுமாகும். பாராளுமன்றத் தேர்தலில் ஒரேயொரு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் கட்சியாக (தரப்பாக) தமிழ்க் காங்கிரஸ் இருப்பதால், அரசியல் அரங்கில் முதன்மையிடத்தைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் கஜேந்திரகுமார். இதற்காகவே அவர் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுவதற்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தரப்புகளை ஒருங்கிணைத்து, அதற்குத் தலைமை தாங்குவதற்கு முயற்சித்தார். அதற்காகவே சிறிதரனின் வீடு தேடிச் சென்றதும் பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்துடன் பேச்சுகளை கஜேந்திரகுமார் நடத்தியதுமாகும். ஆனாலும் கஜேந்திரகுமாரின் கனவுத்திட்டம் உருப்படாமல் சுமந்திரனால் சமயோசிதமாகத் தடுக்கப்பட்டு விட்டது. இதையும் நிரப்பி, தன்னை எப்படியாவது முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக விலக்கி வைத்த கனிகளையே புசிக்கத் தொடங்கியிருக்கிறார் கஜேந்திகுமார். இதுவரையிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தன்னைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்றே அடையாளப்படுத்தி வந்தது. ஆனாலும் முன்னணியைப் பதிவு செய்யாமல் காங்கிரஸையே தேர்தலுக்குப் பயன்படுத்தி வந்தார் கஜேந்திரகுமார். காரணம், காங்கிரசுக்கு நீண்டகால அரசியற் பாரம்பரியம் உண்டு என்பதோடு கஜேந்திரகுமாரின் பேரன் ஜீ.ஜீ.பொன்னலம்பலம் உருவாக்கிய கட்சி. அதற்குப் பிறகு கஜேந்திரகுமாரின் தந்தை குமார் பொன்னம்பலம் தலைவராக இருந்தார் என்று ஒரு குடும்பப் பாரம்பரியமும் அதற்குண்டு என்பதேயாகும். ஆகவேதான் முன்னணி என்ற பெயரைத் தமிழ் மக்களின் அரசியலுக்கான ஒரு முகமூடியாகப் பயன்படுத்திக் கொண்டே காங்கிரஸில் கட்சியின் நடவடிக்கைகளை வலுவாக மேற்கொண்டு வந்தார் கஜேந்திரகுமார். அதாவது குடும்பத்தின் அரசியல் அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் இழக்காமல் பேணுவதே முதன்மை நோக்கமாக இருந்தது. இப்பொழுது இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன், அருந்தவபாலன், தவராஜா எல்லோரும் ஒருங்கிணைந்து உதவுகிறார்கள். இவர்கள் காங்கிரஸை நெருங்கக் காரணம், தமிழ் மக்களுடைய சமூக, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்காகவோ நலனுக்காகவோ தமிழ்மக்களைப் பாதுகாப்பதற்காகவோ அல்ல. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியை – அதனுடைய வெற்றியைத் தடுப்பதற்காகவேயாகும். தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியானது, தமிழ்த்தேசியக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளையெல்லாம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் தவிர்க்க முடியாமல் முடிந்தளவுக்கு விட்டுக் கொடுப்புகளோடு, இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அரசியற் கூட்டுகளை உருவாக்க வேண்டிய நிலை இந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வகையிற்தான் முன்னணியின் அரசியற் கூட்டும் அமைந்திருக்கிறது. ஆனால், இதற்கு கஜேந்திரகுமார் கொடுக்கும் விளக்கம்தான் சிரிப்பூட்டுகிறது. கொள்கை வழியில் விட்டுக் கொடுப்புகளற்ற அணியாகத் தம்முடைய தமிழ்த்தேசியப் பேரவையே உள்ளதால், கொள்கையை ஆதரிக்கும் மக்கள் தமக்கே – தமது கூட்டுக்கே ஆதரவழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒன்றும் புதியதோ ஆச்சரியமானதோ அல்ல. அது ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்வார்களே. அதுதான். அதாவது ஏட்டுச்சுரைக்காயில் கறியை வைக்க முடியாது. ஆகவே நடைமுறைக்குப் பொருந்தாத கற்பனாவாதக் கருத்தியலில் தன்னைக் கட்டி வைத்திருக்கும் தமிழ்க் காங்கிரஸ் – கஜேந்திரகுமார் அணி, இலங்கைத்தீவின் யதார்த்தத்துக்கு முரணாகச் சிந்திக்கும் அரசியற் கட்சிகளில் ஒன்றாகும். அதிதீவிரவாத நிலைப்பாடே இதனுடைய அடிப்படையாகும். இதைப்போன்ற சிங்களக் கட்சிகளும் உண்டு. உதாரணமாக விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெலஉறுமய போன்றவை. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப்போராட்டத்துக்கும் தீர்வுக்கும் எந்த வகையிலும் பொருத்தமற்ற – நடைமுறைச் சாத்தியங்களற்ற அரசியல் நிலைப்பாட்டைத் தன்னுடைய தலையில் சுமந்து கொண்டிருக்கும் தமிழ்க் காங்கிரஸோடு, ஏனைய கட்சிகளும் அணிகளும் அரசியற் கூட்டுக்கு இணங்கியிருப்பது ஒரு வகையில் ஆச்சரியமானதே. முன்னணி படியிறங்கியதற்குக் காரணம், தன்னுடைய அரசியலை எந்த வகையிலாவது பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயேயாகும். ஆனால், இலங்கைத்தீவின் யதார்த்தமோ அதிதீவிர நிலைப்பாட்டையும் இனவாதத்தையும் விட்டு விலகும் தன்மையைப் கொண்டுள்ளது என்பதால்தான் வடக்குக் கிழக்கு, மலையகம் உள்பட நாடுமுழுவதிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியைப் பெறக் கூடியதாக இருந்தது. அதாவது சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics), புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) போன்றவற்றின் தேவையை அல்லது அதனுடைய போக்கை மக்கள் விட்டு விலகிச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர் எனலாம். இந்த இரண்டு வகையான அரசியலினாலும் குறித்த தமிழ், முஸ்லிம்,மலையகச் சமூகங்கள் பெற்றுக் கொண்டதை விட இழந்தது அதிகம் என்பதால்,அவை வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், அதற்காக இந்தச் சமூகங்களின் அக – புற அரசியல் பிரச்சினைகளை தேசிய மக்கள் சக்தியோ அல்லது தற்போதையை அரசாங்கமோ முழுமையாகத் தீர்த்து வைக்கும் என்றுமில்லை. எனிலும் மக்கள் வேறு வழியின்றி வேறு வகையான தெரிவுகளுக்கே முயற்சிக்கிறார்கள். இதை எப்படியாவது தடுத்து, மறுபடியும் சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics), புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) போன்றவற்றிற்குள் திணித்து விடுவதற்கே கஜேந்திரகுமார் போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள். இதில் அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, நாவலன், அருந்தவபாலன், ஐங்கரநேசன், கஜேந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் எப்போதும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்களேயாகும். ஆனால், இது வடக்கிற்குள்தான். வடக்கிற்கு வெளியே இப்படித் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர் என்றால், அது அரியநேத்திரன் மட்டும்தான். இந்த அணியில் இன்னொருவர் மட்டும் இதுவரையில் சேராமல் இருக்கிறார். அது சிவஞானம் சிறிதரன். தமிழரசுக் கட்சியிலிருந்து சிறிதரன் வெளியேறும் நிலை வந்தால் நிச்சயமாக அவர் இந்தக் கூட்டில்தான் சேருவார். காரணம், அவரும் ஒரு கற்பனாவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றவர். ஆக இப்பொழுது அதிதீவிர தேசியவாதிகளின் அணி தமிழ்த்தேசியப் பேரவை என்ற கூட்டில் இணைந்துள்ளது. இதனை மக்கள் எப்படி நோக்கப்போகிறார்கள்? எவ்வாறான ஆதரவு இந்தக் கூட்டுக்கு எதிர்காலத்தில் கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே தமிழ் அரசியலின் எதிர்காலமும் இலங்கைத்தீவின் எதிர்காலமும் இருக்கப்போகிறது. இப்போது இந்தக் கூட்டுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒரு உறுப்பினரை மட்டும் கொண்டுள்ளது. அது காங்கிரஸைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமாகும். 2. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியற் கூட்டாகும். ஈ.பி.ஆர். எல்.எவ், புளொட், ரெலோ, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடும் புதிதாக இணைந்திருப்பது முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியாகும். இவை அனைத்தும் கடந்த கால ஆயுதப்போராட்ட அரசியலோடு ஒரு வகையில் சம்மந்தப்பட்டவை அல்லது அந்தப் பின்னணியைக் கொண்டவையாகும். முன்னணியின் தலைமையிலான கூட்டு, அதிதீவிரநிலைப்பாடும் முழுமையான மிதவாதப் பின்னணியைக் கொண்டது என்றால், இது ஆயுதப்போராட்ட அரசியலை வரலாறாகக் கொண்டது. ஆனால், ஒரு சிறிய வேறுபாடு இந்தக் கூட்டிற்கு உண்டு. அது என்னவென்றால், இது யதார்தத்த்தை – நடைமுறையைக் கவனத்திற் கொண்ட கூட்டாகும். அதாவது ஆயுதப்போராட்ட அரசியல் அனுபவத்தின் வழியாகவும் மிதவாத அரசியற் போராட்டத்தின் அனுபத்திற்கூடாகவும் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட தரப்பாகக் காணப்படுகிறது. ஆனால், இந்த அணிக்குப் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்புரிமையே உண்டு. ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதன் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கான இந்தக் கூட்டின் வேட்புமனுக்கள் அதிகமாக நிராகரிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கூட்டின் அரசியல் சிக்கலுக் குள்ளாகியுள்ளது. இந்தக் கூட்டின் தலைக்குள்ளும் இருப்பது தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சிந்தனையே. கூடவே தமிழ்த் தேசியப் பேரவையுடனும் இது மோதக் கூடிய அடிப்படைகளையும் இயல்பையும் கொண்டுள்ளது. கூட்டுகளுக்கு எதிராகத் தனித்த நிற்கும் தரப்பு. இலங்கைத் தமிழரசுக் கட்சியே இதுவாகும். தேசிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசியப் பேரவை என்ற கஜேந்திரகுமார் அணி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக தன்னை நிறுத்தியிருக்கும் தனித் தரப்பாக இதை நோக்கலாம். வடக்குக் கிழக்கில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிராந்தியக் கட்சியும் இப்போது இதுதான். ஆகவே உள்ளுராட்சித் தேர்தலில் இதனுடைய செல்வாக்கு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அது எந்தளவுக்கு இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அதனை அந்தக் கட்சியின் பேச்சாளரும் பதிற் செயலாளருமான திரு. ஆபிரகாம் சுமந்திரன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அதாவது NPP அலை இன்னும் ஓயவில்லை. அதற்குள்தான் நாம் வெற்றியைப் பெற வேண்டியுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை யாரும் பெறப்போவதில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் தம்மை – தமிழரசுக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாக – எதிர்பார்ப்பதாக. ஆனால், தமிழரசுக் கட்சி என்பது எப்போதோ காலாவதியாகிப்போன ஒன்று. அதற்கு உயிரூட்ட முயற்சிப்பது இறந்த உடலுக்கு saline ஏற்றுவதைப்போன்றதாகும். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது. ஆக, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தியோடு தமிழ்க் கட்சிகள் மோதப்போகின்றன. அதைப்போலத் தமிழ்க்கட்சிகளோடு தேசிய மக்கள் சக்தி மோதப்போகிறது. இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியோடும் ஏனைய தமிழ்த் தரப்புகள் ஒவ்வொன்றும் மோதவுள்ளன. ஆக கடுமையான ஒரு போட்டிக்களமாகவே இருக்கப்போகிறது வடக்குக் கிழக்கின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தற்களம். மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்? https://arangamnews.com/?p=11923
  12. அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது; ஈ.பி.டி.பி தெரிவிப்பு அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என அந்தக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தல்கள் வரும் சந்தர்ப்பங்களில் எமது கட்சியின் மீது அவதூறுகளும், சேறடிப்புகளும் மேற்கொள்ளப்படுவது இது புதியதொன்று அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், குறிப்பாக, 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு சில தினங்கள் முன்னதாக நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. உண்மையிலேயே 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த தேர்தல் வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிலர் காயப்பட்டிருந்தனர். இவ்வாறான சம்பவங்கள் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இருந்தாலும் குறித்த விவகாரம் தற்போதும் நீதிமன்றில் இருக்கின்ற நிலையில் அதுதொடர்பாக நாம் தற்போதைக்கு எந்தவிதமான கருத்தினையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையிலே, எம்மீது சேறடித்தாவது ஈ.பி.டி.பி. கட்சியை வேலணை பிரதேச சபையிலே தோல்வியடைச் செய்ய வேண்டும் என்ற நோக்குடனேயே இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சேறடிப்புக்கள் எமது கட்சியைப் பொறுத்தவரையில் புதிய விடயங்கள் அல்ல. கடந்த காலங்களிலும் தேர்தல் காலங்களில் பலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=319632
  13. இலங்கையின் சனத்தொகை விபரம் வெளியீடு : வடக்கில் குறந்தளவு சனத்தொகை! April 8, 2025 தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை நேற்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத் தொகை 21,763,170 ஆகும். அதாவது, இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்து காணப்படுகிறது. 15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டது. நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது. மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது. 2,433,685 பேருடன் கம்பஹா மாவட்டம் சனத்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 2,374,461 பேருடன் கொழும்பு மாவட்டம் அதிகளவான சனத் தொகையை கொண்டுள்ளது. குருணாகல், கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களும் தலா 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படுகின்றனர். மறுபுறம், வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாக தொடர்ந்து காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதேவேளை முல்லைத்தீவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் வசிக்கின்றார்கள். https://www.ilakku.org/sri-lankas-population-details-released-5-3-percent-in-the-northern-province/
  14. டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார். புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள், அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றன இந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வரியைக் குறைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்த கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கடிதம் தங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் https://www.hirunews.lk/tamil/402320/டொனால்ட்-ட்ரம்பிற்கு-கடிதம்-அனுப்பிய-ஜனாதிபதி-அநுர
  15. பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி விளக்கம் ஏற்கனவே நடந்து வரும் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி முறைப்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறுகிறார். நேற்று (ஏப்ரல் 07) காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை எடுத்துரைத்தார். இந்தியாவுடனான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக ஜனாதிபதி வெளிப்படுத்தினார், இந்தியாவுடனான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறது என்பதை தெளிவுபடுத்தினார். பிராந்திய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாம் முன்னேறுவதற்கு மிகவும் முன்னேறிய நாடுகளின் ஆதரவின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இலங்கை விஜயத்தின் போது, இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. "இந்தியாவின் நலன்கள் மீதான அவரது உணர்திறன் காரணமாக ஜனாதிபதி திசாநாயக்காவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பாதுகாப்பு ஒத்துழைப்புத் துறையில் செய்யப்பட்ட முக்கியமான ஒப்பந்தங்களை நாங்கள் வரவேற்கிறோம். கொழும்பு பாதுகாப்பு மாநாடு மற்றும் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்றவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்," என்று பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/பாதுகாப்பு-ஒப்பந்தம்-குறித்து-ஜனாதிபதி-விளக்கம்/175-355276
  16. நாளை செவ்வாய் 08 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 21) செவ்வாய் 08 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 19 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS எதிர் CSK இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் நந்தன் இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  17. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 20வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான விராட் கோலி, டேவ்டத் படிக்கல் ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காமல் எடுத்த 40 ஓட்ட விளாசலுடனும் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை அடைய ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடமுனைந்தாலும் வீரர்கள் நிலைத்து நிற்காமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். திலக் வர்மாவும், ஹார்டிக் பாண்டியாவும் வெற்றியை நோக்கி வேகமாக அடித்தாடி செல்ல முனைந்தபோது விக்கெட்டுகளை இழந்தமையால் பின்னர் வந்தவர்களும் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  18. மட்டக்களப்பிற்கு இவ்வாண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவை மாத்திரமே அரசாங்கம் ஒதுக்கியுள்ளது - இரா.சாணக்கியன் 07 Apr, 2025 | 10:03 AM கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிதிகள் அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது, மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். https://www.virakesari.lk/article/211357
  19. தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன் 07 Apr, 2025 | 09:00 AM நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சமூக செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன், தேசிய மக்கள் சக்தி என்ற போர்வைக்குள் இருக்கின்ற இனவாத ஜே.வி.பியின் கைகளுக்கு சென்றால் அது தமிழ் மக்களின் இருப்புக்கே ஆபத்து என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகள் தத்தமது பிரதேசங்களை உள்ளடக்கிய தமிழ் தேசிய கட்சிகளை நோக்கியதாகவே இருப்பது அவசியமானது. இதை மக்கள் உணர்ந்துகொள்வதும் அவசியமாகும். ஏனெனில் தமிழ் மக்களின் இருப்பையும் உரிமைகளையும் பறித்து ஜே.வி.பி என்ற வன்முறைக் குழு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையில் தம்மை உருமாற்றிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்ற முற்படுகின்றது. இந்த வேடதாரிகளின் பொறிக்குள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வீழ்த்தப்பட்டதனால் இன்று தமிழரது உரிமைகள் விடயமாகவோ, அரசியல் கைதிகள் விடயமாகவோ அன்றி அபிவிருத்திகள் தொடர்பிலோ தீர்வுகள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது அந்தரிக்கும் நிலையில் இருக்க நேரிட்டுள்ளது. இதைவிட கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவந்த மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களைக் கூட இந்த தேசிய மக்கள் சக்தி என்ற ஜேவிபியின் ஆளுமையற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர் குழப்பி எமது மக்களின் அடிப்படை தேவைகளை கூட தடுக்க முற்படுகின்றனர். அனைவருக்கும் சம உரிமை, சட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சமமானவை, ஊழலை இல்லாதொழிப்போம் என்று கோசமிட்டு ஆட்சியை பிடித்தா இந்த வன்முறைக் குழு இன்று தமது உண்மையான முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாவீரர்களை நினைவு கூரமுடியும் என்றவர்கள் ஆட்சியை பிடித்தபின் நினைவுகூர்ந்த மக்களை கைது செய்து பயங்கரவாத சட்டத்தில் தடுத்து சித்திரவதை செய்கின்றனர். மத்தியில் தமது அதிகாரமே இருக்கின்றது என கூறி பிரதேசங்களின் அதிகாரங்களை சூறையாட தற்போது மக்களாகிய உங்களிடம் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் வரக் கூடும். சில சலுகைகளை தரலாம் என்றும் கூற முற்படுவார்கள். அந்த பசப்பு வார்த்தைகளை நம்பி மக்களாகிய நீங்கள் இனியொரு தடவை ஏமாந்துவிடாதீர்கள். உள்ளூராட்சி அதிகாரங்கள் அந்த இனவாத தேசிய மக்கள் சக்தி என்ற ஜே்விபியினரிடம் சென்றால் இருக்கின்ற காணி நிலங்கள் கூட எமக்கு இல்லாது போகும் நிலை உருவாகும். குறிப்பாக பலாலி விமான நிலையத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார்கள். இந்த விமான நிலையம் ஏற்கனவே இந்திய அரசின் அனுசரணையுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக வியாபித்திருக்கின்றது. இந்நிலையில் அதை மீளவும் அபிவிருத்தி செய்ய போவதாக கூறுவது காணிகளை சுவீகரிப்பதற்கான முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே இவ்வாறான போக்கு உடையவர்களை எமது பிரதேசங்களில் காலூன்ற விடாது எமது மக்களின் தீர்ப்பு தமிழ் தரப்பின்பால் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211355
  20. இந்திய அரசியல் நாடகத்தை கவனித்தல் இந்தியாவிடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, கற்கத் தவறிய விடயங்கள் பற்றி பலரும் சிந்திக்கிறார்கள். இருந்தாலும், இப்போதும் இந்தியாவையே தங்களுடைய அரசியல் தீர்வுக்காக நம்பியும் இருக்கின்றனர். அதே நேரத்தில், சிங்களவர்களும் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன என்பதை மறந்தும் விடுகின்றனர். ஏனென்றால், தமிழர்களுடைய விடயத்தில் அவர்கள் இந்தியா தமக்குச் சார்பான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது . என்பதால் அது மறுக்கப்படுவதாக இருக்கிறது என்பதே யதார்த்தம். உலக நடைமுறைகள், மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் கட்டமைக்கப்படாமையும், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமையும், அனுசரிக்காமையும்தான் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் இதுவரையில் நிறைவேறா ஒன்றாக இருந்து வருவதற்கு காரணமாகும். கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்திய பிரதமரின் இலங்கை வருகை விட்டுச் சென்றிருப்பதும் இதனையே ஆகும். 2024 செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். அவருக்கு இலங்கை மித்ர விபூஷண் விருதை இலங்கை வழங்கியிருக்கிறது. அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு உறவுகள், நல்லிணக்கம், இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மீளாய்வு செய்து கொண்டனர். அதே நேரத்தில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா தொடர்ந்து உதவுவதற்குப் பிரதமர் உறுதியளித்திருந்தார். அந்த வகையில் ஜனாதிபதி அனுரகுமார பொருளாதார ஸ்திரம் குறித்துப் பேசிய கருத்து இந்த இடத்தில் அடிபட்டுப் போனது. எரிசக்தி மின்சார துறைகளுக்கான உதவிகள், சம்பூர் சூரிய மின்சக்தி திட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்பிப்பு மற்றும் பல்வேறு அபிவிருத்தி ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகியுள்ளன. இதற்கிடையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது விடுபட்டுப் போன இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. இந்தியப் பிரதமரின் ஊடக அறிக்கையில், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்றும் இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தியப் பிரதமரின் அபிவிருத்தி, இந்திய மீனவர் பிரச்சினை போன்ற பல்வேறு கருத்துக்களுக்கு பதிலளித்திருக்கிற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழர்களுடைய அரசியல் அபிலாசை, மாகாண சபை; தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து ஒரு வார்த்தையேனும் பகரவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் வட கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். மலையக அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தமிழரது அரசியல், தமிழ் அரசியல் தரப்பினருடைய நிலைப்பாடுகள் காரணமாக இறுக்கமான முடிவுகளுக்கு உரியதாக இல்லை என்ற குறைபாடே காணப்படுகிறது என்று கொள்ளலாம். ஜே.வி.பியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் என்கிற அலையில் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியல் அடிபட்டுப் போனது எல்லோருக்கும் வெளிப்படையானது. இந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அனுரகுமார திசாநாயக்கவை இந்தியா, புதுடெல்லிக்கு அழைத்துப் பேசியது. அது அவர்களுக்கு மேலும் ஒரு சக்தியைக் கொடுத்திருந்தது. இதனையடுத்து, அனுரகுமார ஜனாதிபதியானதும் முதல் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டார். இப்போது உள்ளூராட்சித் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அது கூடவும் அவர்களுக்குச் சாதகமாகவே அமையும். அதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. வடக்குக் கிழக்கில் உருவாகியிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் வெறுப்பு என்கிற பாதகத்தை விளங்கிக் கொள்ளாத தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் இப்போதும் தமது வெறுப்புணர்வுகளையும், வெப்பு சாரங்களையும் கோப தாபங்களையும், இறுமாப்புகளையும், வெட்டுக்குத்துக்களையுமே வெளிப்படுத்தியே வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் கூட இவ்வாறான சிந்தனைகளும் செயற்பாடுகளும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரிடம் காணப்படுவது நல்லவிதமான முன்னேற்றத்தைக் கொடுக்கப்போவதில்லை. அது தமிழர்களின் அபிலாசை நிறைவேற்றத்துக்கு எதிரான நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தும். இது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமானது.வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் போராட்ட இயக்கங்களிடையே இருந்த ஒற்றுமை சீர்குலைவை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திகளை உருவாக்கிக் கொண்டது. அதே நேரத்தில், அண்டை நாடான இலங்கையின் இனப்பிரச்சினை தமக்குச் சாதகமான மாற்றிக் கொண்டது. பயன்படுத்தவும் ஆரம்பித்தது. அது இந்தியாவுக்கு அதிக பயனையே கொடுத்தது எனலாம். எப்போதும் இந்தியா கைக்கொள்ளும் தமக்குச் சாதகமான ஆட்சிகளையே வைத்துக்கொள்ளல் நிலைப்பாடு ஒவ்வொரு நாட்டிலும் வாய்ப்பதில்லை. ஆனால், நாடி பிடிப்புக்காக அனுரகுமாரவை இந்தியாவுக்கு அழைத்ததன் காரணமாக இப்போது ஒரு சிறப்பான நட்பு அரசாங்கமாக அதனைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம். அது இலங்கை மித்ர விபூஷண் இந்தியப் பிரதமருக்கு வழங்கும் அளவுக்கு நிலைமை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் தவறு செய்துவிட்டோமோ என்று தலையில் கை வைக்காமல் அதனையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலே இப்போது நடைபெறுகிறது. இது இலங்கைக்கும் பொருந்தும். இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலின் ஒற்றுமை முக்கியம் உடையதாக இருக்கிறது. இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கு வெறுமனே புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்புத் திருத்தம் தீர்வாக அமைந்து விடப் போவதிதில்லை. இதய சுத்தியுடனான அதிகாரப் பகிர்தல் ஒன்று நடைபெற வேண்டும். அதற்குச் சிங்கள அடிப்படைவாதம் இடம் கொடுக்க வேண்டும். அது ஒற்றையாட்சியை உடைய இலங்கையில் ஒருபோதும் சாத்தியமில்லை.இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடா கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா தம்முடைய முழுமையான பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தைக் கூட முழுமையாக அமல்படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுப்பதில்லை. ஆனால், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றம், இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல் என்பவை 13ஆவது திருத்தத்தையே சுட்டி நிற்கிறது என்ற வகையில் இந்தியா ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பது தெரிகிறது. இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியப் பிரதமரின் இக்கருத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். இருந்தாலும் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாத ஒற்றுமை காரணமாக அதன் பயன் முழுமையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காது என்றே சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைகளை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற தமிழர்கள் தமிழரின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலேனும் குறைந்தது ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி முறையை அமைப்பது தொடர்பில் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமாக இருந்தால் சிறப்பு. அவ்வாறானால், ஒருமித்த தமிழர் நிலைப்பாடு ஒன்றுக்குத் தமிழ்த் தரப்பு வருதல் முக்கியமாகும். அதே நேரத்தில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்தல் உடனடியாக நடைபெற வேண்டும். அதற்குக் காலம் தாழ்த்துதல் கூடாது. பூனைக்கு மணி கட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதனைக் கட்டாது தவறவிட்டால் இறுதியில் பூனையைத் தேட வேண்டி ஏற்படலாம். இங்கு நடைபெற்ற யுத்தத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்தியா தமிழீழ விடுதலைப் போரை நசுக்குவதிலும், இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணமாக அமைந்திருந்தது, அதனால் தான், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலம்பெயர் மக்களின் நீதிக்கான போராட்டங்கள் ஊடாக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா தான் அதை நீர்த்துப் போகச் செய்தது. இன்னொரு விதத்தில். இந்தியா வல்லாதிக்கம் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளல் முக்கியம். லக்ஸ்மன் https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-அரசியல்-நாடகத்தை-கவனித்தல்/91-355182
  21. எமது இறக்குமதி வரி விதிப்பை மீட்டுப் பார்க்க வைக்கும் ட்ரம்பின் வரி விதிப்பு ச.சேகர் சில மாதங்களாக பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் சர்வதேச இறக்குமதி வரி விதிப்பு பற்றி, கடந்த வாரம் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல தளம்பல்களை அவதானிக்க முடிந்திருந்தது. உலக பொருளாதார வல்லரசாக அறியப்படும் அமெரிக்கா, உலக நாடுகளுடன் வணிகங்களை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர் சங்கிலி முறை அடிப்படையில் உலகின் சகல நாடுகளும் பெருமளவில் இந்த வரி விதிப்பின் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளன. அமெரிக்காவின் பிரதான எதிரியாக கருதப்படும் சீனா, இந்த வரி விதிப்புக்கு எதிராக, தாமும் அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு வரி விதிப்பை அதிகரிக்கவுள்ளதாக பதிலடி கொடுக்கும் வகையில் அறிவித்துள்ளது. இந்த வரிசையில் எமது நாட்டுக்கு என்ன நடந்தது என்பதை பார்த்தால், அமெரிக்கா இலங்கைக்கு 44சதவீதம் வரி விதிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மேற்கொள்கையில், அமெரிக்க அதிபர், இலங்கையினால் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியின் அளவு பற்றி ஏளனமாக குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை 88 சதவீத வரிவிதிப்பை கொண்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவு இறக்குமதி வரி விதித்துள்ள நாடுகள் வரிசையில் இலங்கை உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளது. இலங்கையின் சர்வதேச விவகாரங்களில் அவதானம் செலுத்தியவர்கள் ஓரளவு உறக்க நிலையில், அல்லது இலங்கைக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்று துளியளவிலும் சிந்தித்துக்கூட பார்க்காத நிலையில் இருந்திருப்பார்கள் போலும். ஏனெனில், அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகிய கடந்த வியாழக் கிழமை காலைப் பொழுதில், நாட்டின் வணிகத் துறை அமைச்சர் முதலில் ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவலில், இலங்கைக்கு இதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படாது என்பதைப் போன்றதொரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களில் ஒருவராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகையில், இந்த வரிவிதிப்பு இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இது பற்றி அமெரிக்காவுடன் கலந்துரையாட நாம் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது தற்போது அறவிடப்படும் 88 சதவீத வரியை நீக்குவது அல்லது அதனை ஒற்றை இலக்க பெறுமதி வரை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அரசாங்கமும் இந்த வரி விதிப்பால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தது. உண்மையில் இந்த வரி விதிப்பினால் இலங்கையின் நிலை என்ன? என்ன நடக்கப்போகிறது? அமெரிக்காவுக்கு இலங்கையிலிருந்து அதிகளவில் என்ன ஏற்றுமதி செய்யப்படுகிறது? இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களை பார்க்கும் போது, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 20 – 25 சதவீதமானவை அமெரிக்காவுக்கு செல்கின்றன. அதில் ஆடை உற்பத்திகள் முதலிடம் பெறுகின்றன. குறிப்பாக, பெண்களுக்கான உள்ளாடைகள் மற்றும் விளையாட்டுகள், உடற்பயிற்சிகளின் போது அணியும் ஆடைகள் இதில் அதிகம் அடங்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து, வாகன டயர் வகைகள் போன்ற இறப்பர் உற்பத்திகள், கருவா போன்ற வாசனைத்திரவியங்கள் மற்றும் சில விவசாய உற்பத்திகள் ஏற்றுமதியாகின்றன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பண்டங்களின் பெறுமதி சுமார் 300 – 400 மில்லியன் டொலர்களாக அமைந்திருந்த போதிலும், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களின் பெறுமதி 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளன. இந்த வரி விதிப்பின் காரணமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும். இதனால் அமெரிக்கர்களின் இறக்குமதி நுகர்வு குறைவடையும். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களாக அமைந்திருப்பதன் காரணமாக, அவற்றை நுகர்வதை அந்நாட்டு மக்கள் குறைக்கலாம். இதனால் அமெரிக்காவுக்கான இலங்கையின் ஏற்றுமதி வீழ்ச்சியடையும். ஆடைகள் ஏற்றுமதியில் இலங்கைக்கு போட்டியாளராக திகழும் பங்களாதேஷை எடுத்துக்கொண்டால், அந்நாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியின் அளவு இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ளதை விட குறைவானதாக அமைந்துள்ளது. அதுபோன்று, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பனவும் குறைவானதாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஆடை இறக்குமதியில் இலங்கையின் தயாரிப்புகள் மீதான விலை பெருமளவு அதிகரிப்பதன் காரணமாக, பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நுகரும் தன்மை அங்கு அதிகரிக்கும். இதனால் இலங்கையின் ஏற்றுமதி குறைவடையும். இதனால், இலங்கையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தியில் ஈடுபடும் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும் ஓடர்கள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படலாம். அதனால், உள்நாட்டில் ஆடைத் தொழிற்துறையில் பணியாற்றுவோருக்கு வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். இலங்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, அதிலிருந்து மீண்ட வண்ணமுள்ளது. அந்நியச் செலாவணி இருப்பு, வரத்து என்பது இலங்கைக்கு கண்டிப்பான தேவையாக அமைந்துள்ளது. ஆடை உற்பத்தி தொழிற்துறை என்பது, இலங்கைக்கு அந்நியச் செலாவணியை தேடித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அதில் சுமார் 20 முதல் 25 சதவீதம் பாதிப்படையும் என்பது, நாட்டின் பொருளாதாரத்தில் உணரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, அமெரிக்க டொலரின் பெறுமதி தற்போது பேணப்படும் சராசரி 300 ரூபாய் எனும் பெறுமதியிலிருந்து அதிகரிக்கக்கூடிய நிலை எழும். இதனால் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கூட உள்நாட்டில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். இன்னும் எளிமையாக குறிப்பிடுவதானால், இலங்கை வருமானமாக பெறும் 5 அமெரிக்க டொலர்களில் 1 அமெரிக்க டொலர் அமெரிக்காவிலிருந்தே இலங்கைக்கு வருகிறது. இவ்வாறான சூழலில், எமது இறக்குமதி வரி முறைமை தொடர்பில், பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தினால் மீண்டும் கவனம் செலுத்தக்கூடிய ஒரு சிறந்த காலப்பகுதி எழுந்துள்ளது. அமெரிக்காவுடன் வரி விதிப்பு பற்றி பேச முன்வந்துள்ள இந்த அரசாங்கம், தற்போது அமுலிலுள்ள இலங்கைக்கான ஒட்டு மொத்த இறக்குமதி வரி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும். அரசாங்கத்தின் கடந்த கால தேர்தல் வாக்குறுதியிலும் புதிய இறக்குமதி வரிக்கொள்கை அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் இப்போது மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம். இறக்குமதி வரி குறைக்கப்படுவதுடன், அவை எளிமைப்படுத்தப்பட வேண்டும். சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் CESS, PAL போன்ற இதர வரிகள் அகற்றப்பட்டாலே, இறக்குமதி வரி குறைந்துவிடும். விதிக்கப்படும் இறக்குமதி வரி உறுதியான பெறுமதிகளாக, இலகுவாக பின்பற்றக்கூடியதாக இருத்தல் வேண்டும். சாதாரணமாக, இறக்குமதிகளில் ஈடுபடுவோருக்கு இலங்கையின் இறக்குமதி வரி விதிப்பு எந்தளவு சிக்கல்கள் நிறைந்தது என்பது நன்கு தெரியும். இதனூடாக உள்நாட்டில் சுங்க வரித் திணைக்களத்தில் நடைபெறும் மோசடிகள், ஊழல்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். அந்த உறுதியான தீர்மானத்தை இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் இறக்குமதி வரி நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை பாதிக்கிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பதால், தரமான தயாரிப்புகளை தமது தேவைகளில் பயன்படுத்தும் உரிமை மக்களுக்கு மறுக்கப்படுவதுடன், தெரிவுகளும் குறைந்து, விலையில் குறைந்த, தரத்திலும் குறைந்த தயாரிப்புகளுக்கு மக்கள் நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், இறக்குமதி வரியினூடாக, அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கிறது, அதனை குறைப்பதால் அல்லது நீக்குவதால், அரசின் வருமானம் குறையும் என பிரதிவாதங்கள் எழுந்தாலும், மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும் போது, மக்கள் மீது நேரடியாக வரி அறவிட்டு, இழந்த தொகையை சீர் செய்து கொள்ளலாம். நாட்டின் ஏற்றுமதிக்காக அமெரிக்கா தவிர்த்து மாற்று நாடுகளை உடனடியாக நாட வேண்டிய தேவை இலங்கைக்கு நிலவுகிறது. இதனை அரசாங்கத்தினால் நேரடியாக மேற்கொள்ள முடியாவிடினும், அதற்கான உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம். எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி தாம் விதித்துள்ள இந்த வரியை மீள்பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் குறிப்பிட்டுள்ளமை ஒருவிதமான நேர்த்தியான சமிக்ஞையை வழங்கியிருந்தாலும், அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு வார்த்தைக்கு செல்லும் முன்னர், அமெரிக்க பொருட்களுக்கு இலங்கை விதித்துள்ள வரியை நீக்கி அல்லது அதில் கணிசமான குறைப்பை மேற்கொண்டு, அந்த தகவலுடன் பேச்சு வார்த்தைக்கு சென்றால், சாதகமான பெறுபேற்றை பெறக்கூடியதாக இருக்கும் என்பது எமது அவதானிப்பாக உள்ளது. https://www.tamilmirror.lk/வணிகம்/எமது-இறக்குமதி-வரி-விதிப்பை-மீட்டுப்-பார்க்க-வைக்கும்-ட்ரம்பின்-வரி-விதிப்பு/47-355170
  22. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்! நீதிமன்ற அறிவுறுத்தலின் பின்பே ஏனையவற்றுக்கு விநியோகம் தபால் மூல வாக்காளர் அட்டைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இரு உள்ளூராட்சிச் சபைகளுக்கு மட்டுமே தற்போது தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பான நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் கிடைத்ததும் தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தெரிவித்தார். உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகத்துக்காக அவற்றை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகளே இன்று விநியோகிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 64 பேர் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று 768 தபால் மூல வாக்காளர் அட்டைகளே விநியோகிக்கப்படவுள்ளன. பருத்தித்துறை நகர சபையில் 463 பேரும், வேலணை பிரதேச சபையில் 305 பேரும் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பாக நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் கிடைத்த பின்னர் அவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/இரண்டு_சபைகளுக்கே_வாக்காளர்_அட்டைகள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.