Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் - 80 பேர் பலி காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 80 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரவு முழுவதும் தொடர்ந்து வரும் நிலையில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்டு வரும் வைத்தியசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. எவ்வித முன்னறிவிப்புகளும் இன்றி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காசா மீதான இஸ்ரேலின் இதுவரையான தாக்குதல்களில் 50,423 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 114,638 பேர் காயமடைந்ததாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.hirunews.lk/tamil/401948/காசா-மீது-இஸ்ரேல்-தாக்குதல்-80-பேர்-பலி
  2. இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்! இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார். உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும், அமெரிக்கத் தொழில்களை ஊக்குவிப்பதுமே இந்தப் புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது. கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷூக்கு 37 சதவீதமும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும், இந்தியாவிற்கு 26 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்தே அதிக அளவில் ஆடை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதுடன், இந்த வரி விதிப்புடன் அந்தத் துறைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்ததுடன், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 346 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. https://www.samakalam.com/இலங்கை-பொருட்களுக்கு-வரி/
  3. இந்தியப் பிரதமரிடம் யாழ் மீனவர்கள் பகிரங்க கோரிக்கை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக்கோரிக்கையை மீனவர்கள் விடுத்துள்ளனர். இதற்கமைய பிரதமர் மோடிக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் இன்றையதினம் (02) கையளித்துள்ளனர். இதன் பின்னர் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதீசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையினால் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக நாங்கள் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறோம். ஆனால் இலங்கை, இந்திய அரசுகள் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்காத நிலைமையே காணப்படுகிறது. எனவே இலங்கைக்கு வருகின்ற இந்தியப் பிரதமர், இலங்கை – இந்திய மீனவர் விவகாரத்திற்கு சரியான தீர்வொன்றை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம். அதாவது எமது கடற்பரப்பிற்குள் எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்கள் அத்துமீறி வரக்கூடாது. அதனையும் மீறி வந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழத்துள்ள எமது மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளோம். மேலும் தொடர்ந்தும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பி முன்னரைப் போன்று போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார். https://www.samakalam.com/இந்தியப்-பிரதமரிடம்-யாழ்/
  4. இறந்துவிட்டதாக கூறப்பட்ட நித்தியானந்தா நேரலையில் வந்தார்! தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக பெரும் சர்ச்சசைகளுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பேஸ்புக் நேரலையில் வந்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு நேரலையில் தோன்றிய நித்தியானந்தா, தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். “இன்று, ஏப்ரல் மூன்றாம் திகதி, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடைசியாக வெளியிட்ட காணொளி பழையது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கான உலகின் முதல் ஆன்மிக ஏஐ செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன் மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன். பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். எவ்வாறாயினும், அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்” என்றார். மேலும், இந்த காணொளி நேரலை தான் என்பதை உறுதிப்படுத்த யூடியூப் லைவில் கமென்ட் ஒன்றை அவர் படித்து காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/இறந்துவிட்டதாக-கூறப்பட்/
  5. வடக்கில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகமும் இளவயது கர்ப்பமும்! சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள நிலைமை ஆய்வு தொடர்பாகவும் விளக்கமளித்தனர். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப் அமைப்பு பல்வேறு வகையான உதவிகளை எமது மக்களுக்குச் செய்து வருகின்றது. அதற்கான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன. மேலும், வடக்கு மாகாணம் தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை சேர்க்கும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பொருளாதாரப் பாதிப்பால் ஏற்பட்ட வறுமை நிலைமை ஒரு காரணமாக உள்ளபோதும், பெற்றோர் மறுமணம் செய்வதால்தான் பெரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. சிறுவர் இல்லங்களில் சிறுவர்களை இணைப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சிறுவர் இல்லங்களை நோக்கி வருபவர்களை இணைக்காமல்விட்டாலும், பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.எனவே இது எமக்கு சிக்கலான நிலைமையாக உள்ளது என ஆளுநர் சுட்டிக்காட்டிக்காட்டினார். இந்தச் சந்திப்பில் யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியோனா அஸ்லான்சிவிலுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர். https://www.samakalam.com/வடக்கில்-அதிகரித்துள்ள-ச/
  6. GMT நேரப்படி நாளை வியாழன் 03 ஏப்ரல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 18 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே சன்ரைசர்ஸ் ஐதராபாத் சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  7. ஐபிஎல் 2025 இன் 14வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக விக்கெடுக்களை இழந்து வெளியேறியதால், பின்னர் ஆடவந்த லியம் லிவிங்ஸ்டனின் அரைச் சதத்துடனும், ஜிதேஷ் ஷர்மா, ரிம் டேவிட் போன்றோரின் அதிரடி ஆட்டத்துடன் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், ஷேர்ஃபான் ரதஃபோர்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்துடனும், ஜொஸ் பட்லரின் மின்னல் அடியுடன் ஆட்டமிழக்காமல் எடுத்த 73 ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  8. நித்தி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? – கைலாசா சொன்ன தகவல்! 2 Apr 2025, 7:48 AM பாலியல் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தா, தலைமறைவாக இருந்து வருகிறார். ஈகுவடார் நாட்டில் உள்ள நிலத்தில் தீவை வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு நித்யானந்தா அங்கு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நித்யானந்தா சமாதி அடைந்து விட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. நித்யானந்தா உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் மிகவும் பாதுகாப்பான உடல்நலத்துடன் இருப்பதாக கைலாசா நேற்று (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கைலாசா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இந்து மதத்தின் உச்சப் போதகர் (SPH) நித்யானந்தா இறந்துவிட்டதாக இந்துத்துவ வெறுப்பு ஊடகங்கள் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் விதமாக குற்றவியல் ரீதியாக தகவல்களை பரப்பி வருகின்றன. நித்யானந்தா மிகவும் ஆரோக்கியமுடனும் பாதுகாப்புடனும் சுறுசுறுப்புடனும் இருக்கிறார். மார்ச் 30-ஆம் தேதி உகாதி பண்டிகையை ஒட்டி, நித்யானந்தா நேரலையில் தோன்றி அனைத்து இந்து பக்தர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நித்யானந்தாவை இழிவுபடுத்தவும், தீங்கிழைக்கவும் மேற்கொள்ளப்படும் இந்த அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கிறது. மேலும், இந்த செய்தியால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது. பல ஊடகங்களிலும் ஒரே நேரத்தில் இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம், நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு உத்தியை கையாளுகின்றனர். இந்து விரோத சக்திகளால் நித்யானந்தா மீது 70-க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. நேரடி தாக்குதலால் தோல்வியடைந்தவர்கள், தற்போது மறைமுகமாக வதந்திகளை பரப்ப ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். நித்யானந்தா உயிரிழந்தாக வெளியாகும் செய்தியை இந்து விரோத சக்திகள், கொண்டாடுவது அவர்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தி காட்டுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது https://minnambalam.com/tamil-nadu/kailasa-denies-nithyananda-health-condition/
  9. இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன்ஆங்கிலஅர்த்தங்களை சாதாரணமாக கூறிய சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயதுடைய சிறுமி சாதனை படைத்துள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயதுடைய சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார். தந்தையார் முச்சக்கர வண்டிஓடுனராகவும் தாயார்குடும்ப பெண்ணாகவும் கொண்டபெரியஅளவிலான பின்புலங்கள் இல்லாதகுடும்பத்தில் பிறந்தகுறித்த குழந்தையானது இதுவரைஏடுதொடக்க பாடாத நிலையில் இவ்வாறு அதி சிறந்த ஞாபகசக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யாழ்ஊடகஅமையத்தில் இவ்விடயம் குறித்து ஊடகசந்திப்பொன்றை பெற்றோர் புதன்கிழமை(03) முன்னெடுத்திருந்த துடன்குறித்த சிறுமியின் அசாத்திய திறனைவெளிக்கொண்டு வருவதுடன் அந்தஆற்றலைஉலகசாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிதர்சன் வினோத் https://www.tamilmirror.lk/செய்திகள்/இரண்டரை-வயது-சிறுமியின்-அசாத்திய-திறன்/175-354874
  10. GMT நேரப்படி நாளை புதன் 02 ஏப்ரல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  11. ஐபிஎல் 2025 இன் 13வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததாலும், நிக்கொலஸ் பூரனையும் அயூஷ் படோனியையும் தவிர எவரும் 40 க்கு மேல் ஓட்டங்கள் எடுக்காததாலும், 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  12. பிரப்சிம்ரான் லக்னோவுக்கும் எங்களுக்கும் இண்டைக்கு சங்கூதப் போறார்!😜
  13. “🪰ஈயடிச்சான் கொப்பியடிச்சான்” வேண்டாம்!😫
  14. நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் தகவல் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார். பின் நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்ட நிலையில், தலைமறைவானார். சகோதரி மகன் தகவல் அதனையடுத்து திடீரென கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அது இந்துக்களுக்கான நாடு, தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக சிறிது அமைதியாக இருந்த நித்தியானந்தா, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் சில நாட்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamilnadu.com/article/nithyananda-died-his-sister-son-announces-1743488615
  15. 3 வது முறையாகவும் ஜனாதிபதியாக ஆசைப்படும் ட்ரம்ப் மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை நான் கூறுவது நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்த விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. தற்போது கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று, 2ஆவது முறையாக ஜனாதிபதியானார். 3ஆவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் போட்டியிடுவார். ஆனால் அமெரிக்க தேர்தல் விதிப்படி போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து ட்ரம்ப் கூறுகையில் : 3ஆவது முறையாக ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நான் கூறுவது நகைச்சுவை அல்ல. இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்ற வரம்பைத் தவிர்ப்பதற்கு முறைகள் இருக்கிறது. இது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுப்பேன். நிறைய அமெரிக்கர்கள் தான் மூன்றாவது முறையாகவும் பதவியேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது கவனம் முழுவதையும், 2ஆவது ஜனாதிபதி பதவிக் காலம் மீது வைத்துள்ளேன். என்று கூறியுள்ளார். https://akkinikkunchu.com/?p=318632
  16. 2021 , 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது – ஜனாதிபதி April 1, 2025 பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும். அதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பெற்றுக்கொள்ளப்படும். மாவட்ட மட்டத்திலான தேவைகள் கோரப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் 8 ஆம் திகதி நடத்தவே எதிர்பார்த்திருந்தோம். எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே மே 06 ஆம் திகதிக்கு தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது. ஊழல்வாதிகளை நீதிமன்றமே தண்டிக்கும். இன்னும் ஓரிரு மாதங்களில் பல சிறந்த செய்திகளை மக்கள் அறிந்துக்கொள்வார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மொனராகலை புத்தல பகுதியில் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த கால அரசாங்கங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான அறிக்கைகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுகின்றன. அண்மையில் ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.அதனை இன்னும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. மே 09 சம்பவத்தின் போது தனமன்வில பகுதியில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரோ, காணியின் உரிமையாளரோ இழப்பீடு பெற்றுக்கொள்ளவில்லை. இழப்பீட்டினை ராஜபக்ஷர்களில் ஒருவர் பெற்றுக்கொள்வார்.இந்த விடயம் வெகுவிரைவில் வெளிவரும். அரசியல் பலம், ஊடக பலம் ஆகியன எமக்கு எதிரான இருந்த போது மக்கள் பலத்துடன் ஆட்சியமைத்துள்ளோம்.ஆகவே எமது ஆட்சியை வீழ்த்த முடியாது. வீழ்த்தவும் யாருமில்லை.நாட்டை கட்டியெழுப்பியதன் பின்னரே எமது பயணத்தை பின்னோக்கிப் பார்ப்போம். நிறைவடைந்துள்ள ஆறுமாத காலப்பகுதியில் எந்த அரசாங்கங்களும் செய்யாத பல விடயங்களை நாட்டுக்காக நாங்கள் செயற்படுத்தியுள்ளோம். பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகளுடனான அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திகளுக்கான ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்.இல்லையேல் அந்த நிதியை திறைச்சேரிக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் நிதி பயன்படுத்தாமைக்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வோம். தற்போது வழங்கப்படும் 10 இலட்சம் ரூபா காப்புறுதி கொடுப்பனவை 250000 ரூபாவாக வரையறுப்போம்.வாகன அனுமதிப்பத்திரம் ஏதும் வழங்க போவதில்லை.அமைச்சரவை அமைச்சர்களின் கொடுப்பனவு மற்றும் சலுகைகளை வரையறுத்து அரச செலவுகளை குறைப்போம். பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவு எனக்கு வேண்டாம் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளேன். நாட்டை கட்டியெழுப்பும் பணிகளை எம்மில் இருந்து ஆரம்பித்துள்ளோம். ஆகவே அரச சேவையாளர்கள் மக்களுக்காக வினைத்திறனுடன் செயற்பட வேண்டும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். எதிர்வரும் ஜீன் மாதம் 4 இலட்சம் குடும்பங்களுக்கு முதல் பட்டியலுக்கு அமைய அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும். விவசாய துறையை மேம்படுத்துவதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு எந்நாளும் இருக்க முடியாது. 2028 ஆம் ஆண்டு வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த வேண்டும். வெளிநாட்டு கையிருப்பியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் அந்நிய செலாவணி ஆகிய துறைகள் ஊடாக வெளிநாட்டு கையிருப்பு அதிகளவில் ஈட்டிக்கொள்ளப்படும். தேசிய உற்பத்திகளை சிறந்த முறையில் மேம்படுத்திக் கொண்டால் இறக்குமதி செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். தேசிய உற்பத்தி மேம்பாட்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 25 ஆயிரம் ஹேக்கர் நிலப்பரப்பில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு 5000 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சீனி இறக்குமதிக்கு அதிகளவில் டொலர் செலவிடப்படுகிறது.செவலனல, பெலவத்த மற்றும் ஹிங்குரான ஆகிய சீனி கைத்தொழிற்சாலைகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது. இந்த நாட்டை நாங்கள் சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம். தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆகவே அதற்கு உள்ளுராட்சிமன்ற அதிகாரத்தை எமக்கு தாருங்கள். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.அதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் ஜீன் மாதம் முதல் பெற்றுக்கொள்ளப்படும்.மாவட்ட மட்டத்திலான தேவைகள் கோரப்படும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் 8 ஆம் திகதி நடத்தவே எதிர்பார்த்திருந்தோம்.வரவு செலவுத் திட்டம் நிறைவடையும் வரை தேர்தல் திகதியை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தின. இதனால் தான் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மே மாதம் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்காகவே ஜுலை மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை ஸ்தாபிக்க வேண்டும் என்று வர்த்தமானியில் அறிவித்துள்ளோம். ஊழல் மோசடியாளர்களை தண்டிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. முறையான விசாரணைகளுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம். நீதிமன்றம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய ஊழல் மோசடிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் சட்டம் பொதுவானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளேன். இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களுக்கு தேவையான சிறந்த செய்திகள் கிடைக்கும் என்றார். https://www.ilakku.org/the-situation-of-2021-and-2022-will-never-happen-again-president/
  17. கிழக்கில் பிரதேசவாத அரசியல் இனியும் எடுபடாது-பா.அரியநேத்திரன் April 1, 2025 உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் வழமையான தேர்தல் கூட்டுக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ளன. வடக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சில ஒன்றிணையும் கூட்டுக்கள் ஒருபுறமும், கிழக்கில் தமிழ்தேசியத்திற்கு எதிரான பிரதேச வாதத்தை முன்னிலைப்படுத்தும் கூட்டு மறுபுறமும் இப் போது பேசும் பொருளாக உள்ளது. ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 15/03/2025, ம் திகதி இடம் பெற்று சரியாக ஒருவாரம் கடந்த நிலையில் கடந்த 22/03/2025, ல் கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையானுடன் இணைந்து இருவரும் மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர். ஆனால் 2018ம் ஆண்டு கிழக்கு மாகாணத் தில் கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த.சிவ நாதன் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்கிய ஓர் அமைப்பே ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ ஆகும். என 2018, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழ்தேசியத்துக்கு எதிராக பிரதேசவாத மூல தனமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பை கிழக்கு மக்கள் புறக்கணித்தனர் அதில் உள்ளவர்களே விலகியதே வரலாறு அந்த 2018, ஆரம்பித்து செயலற்றுக்கிடந்ததை தூசி தட்டி இப்போது 2025, உள்ளூராட்சி தேர்தலில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என படம் காட்டப்படுகிறதே தவிர இது எந்த மாற்றத்தையும் கொண்டுவரப்போதில்லை. கிழக்குமாகாணத்தில் அரசியல் பலத்தை கட்டி எழுப்பி அபிவிருத்திகளை செய்வதாகவும், தனித்துவமாக கிழக்கு மாகாணத்தை வழி நடத்துவதாகவும் ஊடகங்களில் கருத்து கூறிய பிள்ளையான், வியாழேந்திரன், கருணா இணைந்த வடகிழக்கு கொள்கைக்கு முரணாக பிரதேச வாத கருத்தையே இவர்கள் மீண்டும் உயிர்ப்பிப்பதாகவே இவர்களுடைய கருத்துகளும் செயற்பாடுகளும் எதிர்வரும் உள்ளூ ராட்சி சபை தேர்தலில் அமையும். இவர்கள் மூவரும் கிழக்கு என்ற பெயரை மட்டக்களப்பில் மட்டுமே பயன்படுத்தி அரசியல் செய்வதே கடந்தகால வரலாறாகும். இதையே தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் உள்ளூராட்சி தேர்தலில் பயன்படுத்துவார்கள் என்பதே உண்மை. பிள்ளையானும், வியாழேந்திரனும் செய்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா இணைந்த தன் மூலம் இருக்கும் செல்வாக்கும் இல்லாமல் போகும் நிலையே தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த 24/03/2025 ம் திகதி முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருடன் கருணா என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதர னுக்கும் ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது. அதற்கமைய இவர்கள் நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற் கொள் வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கருணாவை பிரித்தானியா தடை செய்த செய்தி வந்து மறுநாள் 25/03/2025 கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதானியில் ஒருவரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த மாதம் ஏப்ரல் 1, வரை விளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ளார். கருணாவை பிள்ளையான் தமது அணியில் இணைத்தமையால் இருந்த செல்வாக்கும் இழக்கும் நிலைமையும், வியா ழேந்திரனை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைதால் இப்போது உள்ளூராட்சி சபைத்தேர்தலில் எதிர் பார்த்த ஆசனங்களை கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பெற முடியாமல் போகலாம். பிள்ளையான், வியாழேந்திரன், கருணா இந்த மூவரும் இணைந்து ஒருவாரம் கடக்கும் முன்னே இருவருக்கு முகத்தில் கரிபூசப் பட்டுள்ளது, கருணாவுக்கு பிரித்தானியா தடை போட்டுள்ளது, வியாழேந்திரன் ஊழல் தடுப்பு பிரிவால் கைதாகியுள்ளார். எஞ்சிய பிள்ளையான் செய்வதறியாது விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப்போன்று உள்ளூராட்சி சபை தேர்தலில் முகம்கொடுக்கிறார் இது நல்ல சகுனமாக அவர்களுக்கு இல்லை. அதற்காக இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது கிழக்கில் பல்வேறு கட்சிகளுக்கும் ஆதரவு சென்றடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இருந்தும் தேர்தல் பிரசாரங்கள் கிழக்கில் இன்னும் களைகட்டவில்லை மந்த நிலையிலேயே சகல கட்சிகளும், சுயேட்சை குழுக்க ளும் வேட்பாளர்கள் தனியாகவும், ஒரு சில ஆதர வாளர்களை அழைத்துக்கொண்டும் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு ஒவ்வொரு வட்டாரத்திலும் பத்து பதினாறு பேர் ஊர் களில் வேட்பாளர்களை பல கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் நிறுத்தி உள்ளதால் கட்சி அரசியலை விட ஊர் செல்வாக்கு, ஊர் சமூக செல்வாக்கு, அந்தந்த வேட்பாளர்களின் கடந்த கால செயல்பாடுகளை பொறுத்தும் மக்கள் வாக்களிப்பதால் பலர் தாம் யாருடைய ஆதரவாளர்கள் என்பதை வெளிக்காட்டாமல் மௌ னமாக இருந்து தேர்தல் தினத்தில் வாக்களிக்கலாம் என்ற மனோநிலையில்தான் கிழக்கு மாகாணத்தில் பலர் உள்ளதை அவதானிக்க முடிகிறது. தேர்தல் முறை கலப்பு தேர்தல் முறை என்பதால் கட்சி அரசியலை விட தனி நபர் செல்வாக்கே இந்த தேர்தலில் உறுப்பினர்களின் ஆசனங்களை நிர்ணயிக்கும். “நாடு அநுராவோடு ஊர் எங்களோடு” என கனவு காணும் சில தமிழ்த்தேசியகட்சிகளுக்கு வடக்கிலும்,கிழக்கிலும் ஊரும் அநுராவோடு உள்ள நிலையில் தற்போது பல தமிழ் இளைஞர்கள் இன்றும் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகுவதாக தெரியவில்லை. இதற்கான முழுப்பொறுப்பும் அனைத்து தமிழ்தேசிய கட்சிகளையுமே சாரும். கடந்த பொதுத்தேர்தலில் கற்றுக்கொண்ட பாடத்தில் இருந்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலி லும் அவர்கள் திருந்தியதாக இன்னும் இல்லை. கிழக்கில் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் இன்னுமொரு புதிய அணுகுமுறையை கடந்த பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டி யிட்டு படு தோல்வியை தழுவிய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக எல்லா பிரதேச சபைகளிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாநகர சபையிலும் போட்டியிடவில்லை அவர்கள் சுயேட்சை குழுக் களாகபோட்டியிடுவதையும் காணமுடிகிறது. இதில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் போட்டி யிட சங்குச்சின்னத்தை ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது குத்து விளக்கு சின்னத்தை மாற்றி சங்கு சின்னத்தை தமது கட்சி சின்னமாக காட்டி பிரசாரம் செய்தபோதும் தமிழ்மக்கள் அவர்களை பொதுத்தேர்தலில் ஒரு பொருட்டாக ஏற்கவில்லை இதனால் உள்ளூராட்சி சபை தேர்தலில் இந்த தடவை அநேகமான பிரதேச சபைகளில் சங்கு சின்னத்தை அவர்கள் கிழக்கில் பயன்படுத்தாமல் சுயேட்சையாகவும் பல சபைக ளில் போட்டியிடுவதையும் காணலாம். https://www.ilakku.org/கிழக்கில்-பிரதேசவாத-அரசி/
  18. இஸ்ரேலிய படையினர் 15 மருத்துவபணியாளர்களையும் மீட்பு பணியாளரையும் ஒவ்;வொருவராக சுட்டுக்கொன்ற பின்னர் பாரிய மனித புதைகுழிக்குள் புதைத்தனர் - ஐநா Published By: Rajeeban 01 Apr, 2025 | 11:49 AM இஸ்ரேலிய படையினர் 15 மருத்துவஉதவியாளர்களையும் மீட்பு பணியாளர் ஒருவரையும் ஒவ்வொருவராக சுட்டுக்கொன்ற பின்னர் பாரிய மனித புதைகுழியில் புதைத்தனர் என ஐநா தெரிவித்துள்ளது. பாலஸ்தீன செம்பிறை சமூகத்தின் பணியாளர்களும், சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் இஸ்ரேலிய படையினரால் சுடப்பட்ட தங்கள் சகாவை மீட்பதற்காக சென்றுகொண்டிருந்தனர் என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்காக அலுவலகம் ,அவர்களின் வாகனத்தில் செஞ்சிலுவை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளது. ரபா நகரின் டெல் அல் சுல்தான் நகரில் இஸ்ரேலிய படையினர் அவர்களின் வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள ஐநா உயிரிழந்த ஒருவரின் கரங்கள் பின்னால் கட்டப்பட்டுள்ளன இதன் காரணமாக இவர் கைதுசெய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளார் என கருதலாம் என தெரிவித்துள்ளது. எகிப்தின் எல்லையில் உள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்த மார்ச்23ம்திகதியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மற்றுமொரு செம்பிறை பணியாளர் காணாமல்போயுள்ளார். ஏழு நாட்களிற்கு முன்னர் சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் பாலஸ்தீன செம்பிறை சமூக பணியாளர்களும் அம்புலன்ஸ் மூலம் இந்த பகுதிக்கு வந்தனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்திற்கான ஐக்கியநாடுகள் மனிதாபிமான அலுவலகத்தின் தலைவர் ஜொனதன் விட்டல்,அவர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து இலக்குவைக்கப்பட்டனர், பின்னர் அவர்களது உடல்களை எடுத்து பாரிய மனித புதைகுழிக்குள் புதைத்தனர் என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அவர்களின் உடல்களை அவர்களின் சீருடைகள் கையுறைகள் போன்றவற்றுடன் மீட்டோம், அவர்கள் உயிர்களை காப்பாற்றுவதற்காகவே இங்கு வந்தனர்,ஆனால் அவர்களின் வாழ்க்கையே மனித புதைகுழிக்குள் முடிந்துபோய்விட்டது என விட்டல் தெரிவித்துள்ளார். இந்த அம்புலன்ஸ்கள மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்டன,ஐநாவின் வாகனமும் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொல்லப்பட்டவர்களில் ஐநாவின்பணியாளர் ஒருவரும் உள்ளார் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் மனிதாபிமான அமைப்பின் தலைவர் பிலிப்பே லசரானி தெரிவித்துள்ளார். ரபாவில் கொல்லப்பட்ட எங்கள் சகாக்களின் உடல் நேற்று மீட்கப்பட்டது,மனிதாபிமான பணியாளர்களின் உடல்களுடன் சேர்த்து அவருடைய உடலை மீட்டோம்,அவர்கள் அனைவரும் ஆழமற்ற புதைகுழிகளில் கைவிடப்பட்டிருந்தனர்,இது மனித கௌரவத்தை மோசமாக மீறும் செயல்,என லசரானி சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். ஹெட்லைட்கள் அல்லது அவசரகால சமிக்ஞைகள் இல்லாமல் தங்கள் படையினரை நோக்கி சந்தேகத்திற்கு இடமான முறையில் முன்னேறிய பல வாகனங்கள் மீது தங்கள் படையினர்துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டமை ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்கள் அந்த பகுதிக்கு தாங்கள் வரவுள்ளமை குறித்து இஸ்ரேலிய படையினருக்கு தகவல் வழங்கவில்லை ,அந்த பகுதி மோதல் இடம்பெறும் பகுதியாக காணப்பட்டது,என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும் டெல் அல் சுல்தான் பகுதி பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகின்றது,அந்த பகுதிக்கு செல்வதற்கு நாங்கள் இஸ்ரேலிய படையினருடன் தொடர்புகொள்ளவேண்டியதில்லை என செம்பிறைசமூகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/210816
  19. தமிழரசுக் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று (31) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் என்பவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று இரவு மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அந்தநேரத்தில் வீட்டில் மனைவி, பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் பிரேமாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வீட்டின் கூரையின் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீற் எரிந்துள்ளதாகவும் வேறு சேதங்கள் ஏற்படவில்லையெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cm8y3k5cg00he10a6ppfpj5lq
  20. இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை லக்ஸ்மன் இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல் பாலைவனமாக மாறுகின்ற நிலை ஏற்படும். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள். இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும். கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தி மீன்களை அள்ளும் இழுவை மடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித் தொழிலாளர்களே. அந்த செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இந்திய மீனவர்கள் நமது நாட்டுக் கடற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து இந்தியாவின் அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அறிந்திருக்கின்றனர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை புதிய அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற ஆரம்பித்ததல்ல. மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற பிரச்சினையாகும். இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற் பரப்புக்குள் நுழைவதும், அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களுடைய உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதும், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதும், தண்டனை வழங்கப்படுவதும், விடுவிக்கப்படுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறைந்தபாடுமில்லை. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வந்ததுமில்லை. இந்தநிலையில், கடந்த வாரத்தில் இந்திய இலங்கை மீனவர் சங்கத்தினர்களுக் கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படடுள்ளது. இருந்தாலும், இரு தரப்பினரும் இப்பிரச்சினைக்கான தீர்வு அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படக்கூடியது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இருந்தாலும், கடந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் முதல் உத்தியோகபூர்வ விஜயத்தில் புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் மீனவர் பிரச்சினையை ‘முக்கியமானது’ என அடையாளம் கண்டிருந்தனர். மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வுகாண வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர். ஆனால், மீனவர் பிரச்சினை விடயத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் இனி பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை என மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் டிசெம்பர் இறுதியில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் நிறுத்தப்படமாட்டாது எனவும், தொழில்நுட்பம், தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல் தொடரும் என்றும் அவர் தெரிவித்ததற்கமைய இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகக் கொள்ளலாம். ஆனால், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இராஜதந்திர மட்டத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல. இராஜதந்திர ரீதியில் எவ்வளவு விவாதித்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்திய மீனவர்கள் வடக்குக் கடலில் மீன்பிடிப்பது குற்றவியல் ஆக்கிரமிப்பு போன்ற நிலைப்பாடுகள் இலங்கையின் அமைச்சு வட்டம் வரையில் இருக்கின்ற நிலையில் இரு நாட்டு அரசுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைக்குச் சாத்தியமிருக்கிறதா? என்பது கேள்வியானதே. எது எவ்வாறானாலும், எங்களின் கடல் வளங்களையும், மீனவர்களையும் பாதுகாக்க இந்த விடயத்தில் எப்போதும் தலையீடு செய்து கொண்டுதான் இருப்போம் என்கிற நிலைப்பாட்டில் இலங்கை அரசும், ஏதோ நடப்பது நடக்கட்டும். நமது மீனவர்களைக் கட்டுப்படுத்தினால் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகி அரசுக்கெதிரான சிந்தனையை ஏற்படுத்தி விடும் என்ற முடிவில் இந்திய அரசும், சுமுகமான மீன்பிடிக்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்திய மீனவர்களும் இருக்கையில் முரண்பாடே மிஞ்சும். இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையில் இருக்கும் தாண்டிய மீன்பிடி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசும் தமிழ்நாட்டு அரசும் தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அந்த முயற்சி இலங்கை நாட்டின் இறமை, ஆட்புல ஒருமைப்பாட்டினைப் பாதிக்காத வகையில் இருந்தால் சரி. 1921ஆம் ஆண்டு இந்திய - இலங்கை பிரிட்டிஷினால் செய்து கொள்ளப்பட்ட மீன்பிடி ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களுக்குப் பாக்கு நீரிணையில் அதிக கடல்பகுதியும், இலங்கை மீனவர்களுக்கு குறைவான கடல் பகுதியும் பிரிக்கப்பட்டது. அதில் கச்சத்தீவு உள்ளிட்ட 28 கடல் மைல் பகுதிகள் இந்தியாவுக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட 12 கடல் மைல் கடல் பகுதிகள் இலங்கைக்கும் என பிரிக்கப்பட்டன. 1974இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதனால் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வசமாகியது. இதனால், தமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பறிபோனதாக இந்திய மீனவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்துப்படி, இந்த 500 சதுர கி.மீ. பரப்பளவில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க உரிமையுள்ளது. இருந்தாலும், பாக்கு நீரிணைப் பகுதியில் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனாலேயுமே பிரச்சினைகள் எழுகின்றன. இந்திய இலங்கை மீனவர்களிடையே இருக்க வேண்டிய ஒற்றுமை சீர்குலைவுக்கும் இதுவே காரணம். பாக்கு நீரிணை கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட இழுவை வலையைப் பயன்படுத்தக்கூடாது என்பது இலங்கை மீனவர்களின் ஒரு கோரிக்கை. இழுவைப் படகுகளின் செயற்பாட்டினால், இலங்கைக் கடற்பரப்பிலுள்ள மீனும் பிற வளங்களும் அழிகின்றன. அதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. நீண்டகாலத்தில் எதிர்கால மீன்பிடியே அழியவேண்டி ஏற்படலாம் என்பது அச்சமே. ஒவ்வொருவரும் தம் பக்கமே நிற்பர் என்பது போல் இந்திய அரசும், தமிழ் நாட்டு அரசும் தமிழக மீனவர்களின் பக்கமாகவே இருந்து விடுகின்றன. இதனால், பாதிக்கப்படுவது இருதரப்புமே என்பதுதான் உண்மை. கடந்த வாரத்தில் வவுனியாவில் நடைபெற்ற இந்திய-இலங்கை மீனவர் சங்க உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் கூட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவேளையில், கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் வாடும் இந்திய மீனவர்களைப் பார்வையிடுதலுடன் தான் நடைபெற்றிருக்கிறது. தீர்க்கப்படாமல் இழுபட்டுச் செல்லும் இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருந்தாலும், இழுவை மடிகளைக் கொண்ட ரோலர் படகுகள் கடல் வளத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதனை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றிருக்கையில், தீர்வு எவ்வாறு கிடைக்கும் என்பதுதான் இந்த இடத்தில் சிக்கலானது. இந்தச் சிக்கல் பார்த்தும் பாராமல் தொடருமா? அல்லது ஓயுமா? என்பது பதிலில்லா தொடரே. இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம், மீன்பிடிப் பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அறிக்கைகள், ஊடக சந்திப்புக்கள் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் எல்லை மீன்பிடிப் பிரச்சினை தீர்க்கப்படாதா என்ற சந்தேகம் ஏற்படுவதற்குத் தாமதிப்பும் இழுத்தடிப்புகளுமே காரணமாக இருக்கிறது. இந்தியா இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வை முன்வைக்கும் என்று எல்லோரும் எண்ணினாலும், தமிழக அரசும் பல வழிகளிலும் இந்திய மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசை கோரினாலும் இந்திய மத்திய அரசாங்கமானது வருடத்தில் குறிப்பிட்ட அளவான நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோருகிறதே தவிர ஏதும் நடைபெறவில்லை. ஆனாலும், இந்தியா கைக்கொள்ளும் அரசுகள் தலையிடாது மீனவர்களே தம் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வுக்கு வரட்டும் என்ற நிலைப்பாட்டைதான் நாம் விளங்கி நடந்து கொள்ளவேண்டும். இல்லையேல் இப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படப்போவதில்லை. அது தவிர, எல்லை தாண்டலை ஒரு குற்றமாகக் கொள்ளாது கைதுகளை விடுத்து ஏதோ நடக்கட்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேண்டும். 2025.03.31 https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசுகள்-தலையிடாக்-கொள்கை/91-354740
  21. வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வியாழேந்திரனின்-விளக்கமறியல்-நீடிப்பு/175-354815
  22. விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் தீப்பற்றியது! adminMarch 30, 2025 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுப்பியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவின் லுபியங்காவில் அமைந்துள்ள எப்எஸ்பி தலைமையகத்திற்கு அருகில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு தொழில்நுட்பட மிக்க கார் ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, அருகிலுள்ள உணவகத்தின் ஊழியர்கள் தீப்பற்றிய காரின் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அந்த வீடியோ காட்சிகளில் காரிலிருந்து அடர்ந்த கரும் புகை கிளம்புவதையும், காரின் பின்புறம் சேதம் அடைந்ததையும் காணமுடிகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காரின் இயந்திரத்தில் தீப் பற்றியதாகவும், அதிலிருந்து புகை வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, வௌிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘புடின் விரைவில் இறந்துவிடுவார், இரு நாடுகளுக்கும் இடையிலான போரும் விரைவில் முடிவுக்கு வரும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது’ என்று கூறினார். ரஷ்ய ஜனாதிபதி புடினின் கார் எரிந்ததை அடுத்து, அவரது மரணம் தொடர்பான தகவல்களை ஜெலென்ஸ்கி கணித்துள்ளதாக பல கதைகள் வெளிவருகின்றன. அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி புடினின் உத்தியோகபூர் கார் ஒன்று தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/213999/
  23. GMT நேரப்படி நாளை செவ்வாய் 01 ஏப்ரல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் அகஸ்தியன் பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.