Everything posted by கிருபன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025 இன் 06வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததால் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலகுவான வெற்றி இலக்கை ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த குயின்ரன் டிகொக்கின் அதிரடி ஆட்டத்தால் 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
- IMG_0395.jpeg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று KKR வெல்லும்! 152 ஓட்டங்களை எடுப்பது ஈஸி!
-
கவிதையின் கடமைகள்- கல்பற்றா நாராயணன்
கவிதையின் கடமைகள்- கல்பற்றா நாராயணன் தமிழில்- அழகிய மணவாளன் கவிதையின் கடமையும் கவிஞனின் கடமையும் ஒன்றல்ல. கவிஞன் சாமானியனாகவோ, அசாதாரணமானவனாகவோ இருக்கலாம். ஆனால் கவிதை அசாதாரணமானதாகத்தான் இருக்கவேண்டும். தன் கவிதைகளைவிட உயிர்ப்பு கொண்ட கவிஞன் நம்மை கவர்வதில்லை. கவிஞனை, அவன் ஆளுமையைவிட உயிர்துடிப்புகொண்ட கவிதைகள்தான் நம்மை பிரமிக்கச்செய்கின்றன. கவிஞனின் உடலில் காய்த்த இன்னொரு உடல்தான் கவிதை என்றாலும் அவனை சாராத தனிஇருப்பு அதற்கு உண்டு. கவிஞன் அல்லாமல் அது தன் வடிவை அடைவதில்லை என்றாலும் அது அவன் அல்லாமலேயே நிலைநிற்கக்கூடியது. அது கவிஞன் உத்தேசித்ததையும் மீறிச்செல்லும். ” வைரம் துளைத்த அருமணிகளின் ஊடே நான் கடந்துசெல்கிறேன், என் அதிர்ஷ்டம், நான் வெறும் நூல்தான்” இது அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரியின் கவிதைவரி. இப்படி தன்னடக்கம் கொள்ள கவிஞனால் இயலும். அருமணிகளால் அப்படி உணரமுடியாது இல்லையா? ஆனாலும் கவிஞனின் இருப்பும் கவிதையின் இருப்பும் முழுக்கமுழுக்க வெவ்வேறானவை என்றும் சொல்லமுடியாது. சந்தான கோபாலம்1 என்ற மலையாள காவியத்தை எழுதிய பூந்தானம் நம்பூதிரி(1547-1640) பற்றி நவீன கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன் இப்படி எழுதுகிறார்: ” குழந்தை இல்லாமையின் அசல் துயரை அவ்வளவு உணர்ந்தவனால்தான் வடிவப்பிசிறுகள் இல்லாத இந்த காவியத்தை எழுதமுடியும்.” குசேலவிருத்தம் என்ற காவியத்தை எழுதிய ராமபுரத்து வாரியர்2 (1703-1753) குசேலனின் கதையை பாட தனக்கு இருக்கும் அதிகபட்ச தகுதியைப்பற்றி இப்படி எழுதுகிறார்: வரியவனில் வரியவன் என்பதால், தாழ்ந்தவனில் தாழ்ந்தவன் என்பதால் ஞானமும் இல்லாததால், எனக்கு இறைவன் தானே வந்து துணைநிற்கிறான் அதனால் நான் இந்த பாடலை பாடுகிறேன் நான் இல்லாமல் இது முழுமையுறாது என்பது உறுதி. ஆனாலும் பூந்தானம் நம்பூதிரி எழுதிய காவியத்தில் விவரிக்கும் பிராமண கதாப்பாத்திரம் அவர் அல்ல. ராமபுரத்து வாரியரின் சுயசரிதை அல்ல குசேல விருத்தம். பலாச்சுளை பலாமரம் அல்ல, பலாமரத்திற்கு இல்லாத சுவையோ மணமோ பலாப்பழத்திற்கு உண்டு. பூ என்பது அது பூத்த செடி அல்ல, செடிக்கு இல்லாத நிறமோ, மணமோ பூவில் உள்ளது. குறிப்பிட்ட ஒரு பலாமரத்தின் பலாப்பழத்திற்கோ, குறிப்பிட்ட ஒரு செடியில் பூக்கும் பூவிற்கோ உள்ள தனித்தன்மைக்கு அந்த பலாமரமோ, செடியோ காரணமாக இருக்கலாம். பாகவதத்தில் இப்படி ஒரு வரி உண்டு “ஒரு மரத்தின் வேர்முதல் இலைநுனிவரை அதன் சாறு சுவையாக இல்லாவிட்டாலும் அது பழமாக ஆகும்போது எல்லோருக்கும் பிடித்தமானதாக ஆகிவிடுகிறது “ இந்த உதாரணங்கள் வழியாகக்கூட கவிஞனுக்கும் கவிதைக்கும் இடையே உள்ள முரணியக்க உறவை முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாது. உதாரணங்கள் வரைபடங்களை(Map) போல. எந்த நிலப்பரப்பின் வரைபடமும் அதை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்திவிடமுடியாது. போர்ஹே தன் சிறுகதையில் இதை சுட்டிக்காட்டுகிறார். அந்த சிறுகதையில் ஊர்மக்கள் தங்கள் ஊரின் எல்லா தனித்தன்மைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வரைபடத்தை உருவாக்குகிறார்கள். அந்த ஊரின் புறவடிவத்தின் அதே அளவுகொண்ட, எதையுமே தவறவிடாத நிழல்போன்ற வரைபடம். ஊரை முழுக்க மூடிவிடக்கூடிய வரைபடம். அவ்வளவு பெரிய வரைபடத்தை பயன்படுத்தமுடியாது என்பதால் இயல்பாகவே அந்த வரைபடம் புறக்கணிக்கப்படுகிறது. அந்த ஊரில் உள்ள பல இடங்களில் பயனின்றி புறக்கணிக்கப்பட்ட அந்த வரைபடத்தின் எச்சங்களை காணலாம். இந்த சிறுகதை வழியாக முழுமுற்றாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற உந்துதலையும் , அது சார்ந்த வீண்முயற்சிகளையும் பகடிசெய்கிறார் போர்ஹே. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை அந்த அசலான இடத்தைவிட அதிகமாக வெளிப்படுத்தும் வரைபடம்தான் கவிதை. ஒரு குறிப்பிட்ட ஊரின் நிலவரைபடத்தில் வேறொரு ஊரின் நிலத்தின் இயல்புகளையும் சேர்த்து வெளிப்படுத்தும் விசித்திரமான வரைபடம். ’அதற்கப்பால்’ தான் கவிதையின் முக்கியமான கடமை. தாய் மகனை அல்ல, மகன்தான் அம்மாவை பெற்றெடுக்கிறான் என்று ஒவ்வொரு தாய்க்கும் தெரியும். கண்ணே, உன்னை நானல்ல, என்னை நீ அல்லவா வரையறுக்கிறாய்? உனக்கு தேவையான வகையில் என்னை உருவகித்துக்கொண்டதும் நீதானே? அதேபோல கவிஞனும் கவிதையை உருவாக்குவதில்லை, கவிதைதான் கவிஞனை பெற்றெடுக்கிறது. கவிதைக்கு வடிவம் அளிக்க அளிக்க கவிஞன் உருக்கொள்கிறான் ( சிற்பியை சிற்பம்தான் வடிவமைக்கிறது. கிரேக்க தொன்மத்தில் வரும் பிக்மாலியன்(Pygmalion) தன் படைப்பை அவ்வளவு காதலிப்பது அதனால்தான்). படைத்தல் வழியாகத்தான் படைப்பாளி என்ற இருப்பு அர்த்தமுள்ளதாக ஆகிறது. பழைய கவிஞர்களை ஆராய்ந்தால் இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக உணரமுடியும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு புறவயமான வாழ்க்கை வரலாறு இல்லை. எஞ்சியிருப்பது அவர்கள் எழுதிய கவிதைகளிலிருந்து வாசகமனம் உருவாக்கிக்கொண்ட வாழ்க்கைக்கதைகள் அல்லது தொன்மங்கள். ஹோமரோ, வால்மீகியோ காளிதாசனோ, எழுத்தச்சனோ, உண்ணாயி வாரியரோ யாரும் தாய் பெற்ற குழந்தைகள் இல்லை. கவிதை பெற்றெடுத்த தந்தையர்கள் அவர்கள். இல்லாததை காணமுடிந்ததால்தான் ஹோமர் தொன்மங்களில் குருடனாக ஆனார். சாமானிய தளத்தில் பார்வையாளனால் எந்த வகையிலும் காணமுடியாதை மிகமிக நுண்மையுடன் ஹோமரால் காணமுடிந்தது. ராமாயணம் உணர்த்தக்கூடிய அசாதாரணமான தனிமையின் ஊற்றுமுகம் எது ? இந்த கேள்விக்கான பதிலை கண்டடைய நாம் பிற்காலத்தில் வால்மீகியின் சொந்த வாழ்க்கைக்கதையை உருவாக்கிக்கொண்டோம். திருடன் ரத்னாகரன்தான் பின்னர் வால்மீகியாக ஆகிறான் என்ற கதை. ரத்னாகரனின் குற்றத்தை பங்கிட அவன் குடும்பத்தில் யாருமே முன்வரவில்லை. அவனின் தாளமுடியாத குற்றவுணர்வும் தனிமையும்தான் ராமாயணத்தில் வெளிப்படும் மகத்தான தனிமைக்கான உறைவிடம் என்று நாம் புரிந்துகொண்டோம். காளிதாசனின் மேக-சந்தேசத்தில் குபேரனால் சாபமிடப்பட்டு தன் சக்திகளை இழந்து நாடுகடத்தப்படும் யக்ஷனையும், தான் அமர்ந்திருக்கும் மரக்கிளையையே வெட்டும்4 முட்டாள் கவிஞனையும் தந்தைமகன் என்றல்லாமல் வேறென்ன சொல்லமுடியும்? தொல்பழங்காலத்தில் மனிதன் எதிர்கொண்ட வாழ்க்கைப்புதிர்களை புரிந்துகொள்வதற்காகத்தான் பிற்காலத்தில் தொன்மங்களும், நம்பிக்கைகளும் உருவாக்கப்பட்டன. பழைய ஹீப்ரு மொழி பேசும் மக்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யும் நாட்களாகவும், ஒரு நாளை ஒய்வுக்கான விடுமுறை நாளாகவும் ஒரு வாரத்தை முறைமைப்படுத்தினர். அதற்கு எவ்வளவோ காலத்திற்கு பிறகுதான் கடவுள் ஆறு நாட்களில் பிரபஞ்சத்தை உருவாக்கி, ஒருநாள் ஓய்வெடுத்தார் என்று கடவுளின் வரலாற்றாசிரியரான ரெஸா அஸ்லான் சொல்கிறார். (God- A Human History by Reza Aslan). எல்லா மதங்களின் கடவுள்களுக்கும் ’மனிதத்தன்மை’ என்ற எல்லை உருவானதற்கு காரணம் மனிதன் கடவுளை படைத்ததால் உருவாகியிருக்கலாம். சூழியல் அழிவுகளுக்கு ஒருவகையில் கடவுளும் பொறுப்பானவர். கடவுள் சிறுத்தையின், பல்லி, பூராணின், மரத்தின் கடவுள் அல்ல, அவற்றை பாதுகாப்பவரும் அல்ல. நதியின், காட்டின், மலையின் மனிதப்பயன்பாட்டு சார்ந்த அர்த்தத்தைத்தான் கடவுளால் கிரகித்துக்கொள்ள முடியும். உன் புனித மேசை மீது மனிதனின் அகராதிதான் இருக்கிறது! கவிதையின் கச்சாப்பொருள் மொழி. கதை, நாடகம் போன்ற மற்ற இலக்கிய வடிவங்களின் ஊடகமும் மொழிதான் என்றாலும் அவற்றை மொழியிலிருந்து பிரிக்கவே முடியாது என்று சொல்லமுடியாது. இரண்டாக பிளந்தால் ஜராசந்தனைப்போல கவிதை செத்துப்போய்விடும். (இன்று மலையாளத்தில் சாதாரணமாக வாசிக்கக்கிடைக்கும் மொழிபெயர்ப்பு கவிதைகள் மொழியின் மிக மோசமான வெளிப்பாடுகளாக இருக்கின்றன என்றாலும் அதற்கான காரணம் கவிதை என்ற வடிவத்தின் மொழி சார்ந்த தனித்தன்மைதான்). ஒவ்வொரு கவிதையும் அதை எழுதிய கவிஞனுடையது மட்டுமல்ல, அது எழுதப்பட்ட மொழியின் படைப்பும்கூட. The Armenian Language is the Home of Armenian- Moushegh Ishkhan. துஞ்சத்து எழுத்தச்சன் எழுதும்போது சிறகு முளைப்பது மொழிக்குதான். காலப்போக்கில் தொடர்புறுத்தும்தன்மையை இழந்த, ராமாயணத்தில் வரும் சம்பாதியைப்போல சிறகு கரிந்து நிலத்தில் விழுந்த பயன்பாட்டுமொழியின் உயிர்தெழுல் கவிதைவழியாகத்தான் நிகழ்கிறது. மொழி அளவுக்குதான் மனிதன் என்றார் விட்கென்ஸ்டைன்(wittgenstein). அவர் பார்வையில் முதலில் பட்டது கவிதைகள்தான். மொழியை உயர்த்தினால் மனிதனை உயர்த்தலாம் என்று அவர் அறிந்ததும் கவிதை வழியாகத்தான். நான் உங்களுக்காக உயிர்த்தெழுகிறேன் என்று கிருஸ்துவைப்போல கவிதையாலும் சொல்லமுடியும். விட்கென்ஸ்டைன் மனிதன் மொழியால் ஆன விலங்கு( language Animal). மற்ற உயிரினங்களுக்கும் அவை உயிர்வாழ்வதற்கு அவசியமான தொடர்புறுத்தும் முறைமைகள் உண்டு என்றாலும் அவற்றிடம் மொழி இல்லை. தொடர்புறுத்தலுக்கான மென்பொருள் அவற்றின் கையில் இல்லை, அது இயற்கையிடம் இருக்கிறது. மொழியை உருவாக்கவோ, புதுமையாக்கவோ, சிதைக்கவோ(deconstruction) அவற்றால் முடியாது. மனிதன் உயிர்வாழ உடனடியாக உணர்வுகளை சுட்டும் இடைச்சொற்கள் (உதாரணம்: ஓ!, ஐயோ!, ஆ!) மட்டும் போதுமானதாக இல்லை. சொற்பொருள் ஆய்வு (semantics), குறியியல் (semiotics) போன்ற அறிவுத்துறைகள் உருவாகும் அளவுக்கு நம் மொழி உட்சிக்கலும், அடர்த்தியும் கொண்டதாக ஆகியது. சொல்லக்கூடியதும், சொல்லாமல் உணர்த்தக்கூடிய குறியீடுகளும், படிமங்களும் நிறைந்த மொழி. மொழி உருவான காலகட்டத்தில் அது கவிதையைப்போலவே சொல்லமுடியாதவற்றை சுட்டும் மொழியாக இருந்தது. ”ஆதியில் சொல் இருந்தது” என்ற பைபிள் வரியில் அதற்குப்பின்பு உருவானவையெல்லாம் மொழியிலிருந்து உருவானவை என்ற கண்டடைதல் இருக்கிறது. மொழி உருவாக்குவதற்கு தேவையான கச்சாபொருளை மனிதன் தன் இயல்பான மேதமையால் உருவாக்கினான். அதன்பின் வெவ்வேறான மொழிகளை உருவாக்குவதற்கான மென்பொருளை ஒவ்வொரு சமூகமும் தனித்தனியாக உருவாக்கிக்கொண்டன. வீட்டை உருவாக்கியவன் இல்லறத்தான் ஆனதுபோல மொழியை உருவாக்கியவன் பேசக்கூடியவனாக ஆனான். அதன்பின் அவனது சஞ்சாரம் மொழிவழியாக மட்டுமே நிகழ்ந்தது. அவனது சாத்தியங்கள் மொழியின் சாத்தியங்களாக மட்டுமே ஆனது. விளக்கமுடியாமைகளும், பெயரிடமுடியாதவைகளும் இருப்பற்றவைகளாக ஆகிவிட்டன. ” இங்கு எண்ணுவதை செய்யமுடியாது, செய்ய அனுமதி கிடைத்தாலும் எண்ணங்கள் இல்லாமல் ஆவதில்லை” குமாரன் ஆசானின் இந்த வரி ஒருவகையில் இந்த மொழி உருவாக்கிய உலகின் உள்ளார்ந்த அலைக்கழிப்பு. மனிதன் கண்டடைந்த உண்மையின் பிரதிநிதியாக மொழி ஆகவில்லை, மொழி உருவாக்கிய உண்மை அவனின் உண்மையாக மாறியது. மொழி சிருஷ்டித்த இடம் அசலான இடத்தைவிட விசாலமானதாக இல்லை. இன்று நாம் வாழும் எந்த நிலப்பரப்பும் மூச்சுத்திணரவைக்கும் மொழிப்பிராந்தியமும்கூட. மொழி உருவான பிறகு நாம் சொல்லாததை கேட்கமுடியாத, எழுதாததை வாசிக்கமுடியாத எல்லைக்குட்பட்ட உலகில் வாழ ஆரம்பித்துவிட்டோம். ”உணவு அல்லாத எதையும் நம்மால் உட்கொள்ள முடிவதில்லை”என்ற குஞ்ஞுண்ணியின் கவிதைவரி சுட்டுவது மொழி சார்ந்துதான் இன்னும் முக்கியமனாதாக ஆகிறது. நாம் உள்ளுர உணர்வதை மொழி அனுமதிக்கும் குறுகிய எல்லைக்குள் மட்டுமே நம்மால் வெளிப்படுத்த முடிகிறது. மொழியின் எல்லையால் பத்தி தாழ்த்தப்பட்ட பாம்புபோல நிறைவின்மைகொண்ட சில மனங்கள் மொழியில் நிகழ்த்தும் எல்லைமீறலாக கவிதையை நாம் யோசித்து பார்க்கலாம். போதாமைகள் கொண்ட மொழியிலிருந்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலகட்டத்தால் சென்றடைந்துவிடமுடியாத மொழியை நோக்கிய சாகசப்பயணம்தான் கவிதையெழுத்து. முன்கூட்டியே அறியமுடியாத வடிவின் வெளிப்பாடுதான் காவியகலை. அதை “ யாரும் உன் வடிவை அறிவதில்லை” என்று குமாரன் ஆசான் சொல்கிறார். சாதாரணமாக வெளிப்பட சாத்தியமில்லாததை வெளிப்படுத்துவதுதான் எல்லா கலைவடிவங்களின் இலக்கு. ஆனாலும் கவிதை மட்டும்தான் தன் வெளிப்பாட்டில் மொழியையும் புதுமையாக்கியபடி நிகழவேண்டும் என்ற இலக்கை கொண்டிருக்கிறது. அப்படி அல்லாமல் கவிதை சாத்தியமும் அல்ல. பேச்சுமொழி உட்பட பிற எல்லா மொழிவடிவங்களுக்கும் போதுமானது கவிதைக்கு போதுமானது அல்ல. அடியிலா ஆழத்தின் உண்மையை மொழி அறியும்போது மனிதர்கள் ஏன் பூசலிட்டுக்கொள்கிறார்கள்? என்கிறார் இடச்சேரி கோவிந்தன் நாயர் தன் ”பேசாவிலங்குகள்” என்ற கவிதையில். வசைச்சொல்லை விஞ்சும் வசைச்சொல்! மொழி என்பது அடியிலா ஆழத்தை அறிவதற்கான பயணம்தான். அதன் வாகனமாக இருப்பதுதான் கவிதையின் கடமை. சொல்லமுடியாததை சொல்வது என்ற மொழியின் புராதானமான கடமை கவிதையில் ஒவ்வொருமுறையும் நிறைவேற்றப்படுகிறது. மொழி இழந்துவிட்ட கவித்துவ ஆற்றல் கவிதையில் உயிர்த்தெழுகிறது. அதுவரை சாத்தியமல்லாமல் இருந்ததை நிகழ்த்துகிறது கவிதை. அதைத்தான் அக்கித்தம் நம்பூதிரி தன் கவிதையில் ‘பச்சைமரமாக இருந்தபோது என்னால் அது முடியாமலிருந்தது’ என்கிறார். வேறு எந்த வழிமுறையாலும் வெளிப்படுத்த முடியாத சுயத்தை வெளிப்படுத்த ஒருவன் கவிதையை தேர்ந்தெடுக்கிறான். சொல்லி புரியவைக்க முடியாத சிலவை பூமியில் இருந்திருக்கலாம் அதனால்தான் படைத்தவன் உடலை இப்படி உருவாக்கியிருக்கிறான் போல என்ற ஐயப்ப பணிக்கரின் கவிதையில் உள்ள படைத்தவனை காவியஆசிரியனாகவும் பார்க்கலாம் அல்லவா. கவிதை என்ற உடல் அவனால் சென்றுசேரமுடியாத இடத்திற்கு அவனை கொண்டுசேர்க்கிறது. அவனுக்கு முன் ‘சொல்’ அதன் அசல் ஆற்றலுடன் தோன்றி, வெளிப்படுத்த முடியாததை வெளிப்படுத்த துணை நிற்கிறது. அடியொழுக்குகள் ஒருங்கமைகின்றன. ஒட்டுமொத்தமான இணைதல். ’உண்மை’ அதன் உயிர்த்தன்மையுடன், ஆற்றலுடன் வெளிப்படுகிறது. தூங்கி எழுந்தவர்களிடம் நாம் சாதாரணமாக கேட்கும் ” எழுந்தாச்சா?” என்ற கேள்வியை நாம் நோயாளியிடம் கேட்டால் அந்த கேள்வியில் கொஞ்சம் கவித்துவமான இனிமை கலந்துவிடுகிறது. ” அந்த ஒளி அணைந்துவிட்டது” என்று நேரு சொன்னது அப்படியல்லாமல் விளக்கமுடியாத ஒரு இன்மையை விவரிக்க. இருட்டில் நிற்பவன் ‘வெளிச்சம்’ என்று கேட்கும்போது அவன் உரைநடை மொழியை சார்ந்திருக்கிறான், ஆனால் ஒளியில் இருப்பவன் ‘வெளிச்சம், வெளிச்சம்’ என்று கேட்கும்போது மொழியின் கவித்துவத்தை சார்ந்திருக்கிறான். உரைநடையில் குறிப்பான் (signifier), குறிக்கப்படுவது (signified) இரண்டுமே திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டது. கவிதையில் அவை வரையறுக்கப்படுவதில்லை. “என்னை திறந்துவிடுங்கள், நான் கொஞ்சம் வானில் பறக்கிறேன் “ என்பது கூட்டிலுள்ள பறவையின் அலைக்கழிப்பு மட்டுமல்ல. அதற்கு நிகரான அலைக்கழிப்பை அடைந்தவர்கள் அனைவருக்குமான மொழி அது. பல்வேறு வகையில் சிறைப்படுத்தப்பட்டவர்களை இந்த வரியால் விவரிக்கமுடியும். நுட்பமாக பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் சிறைப்படுத்தப்பட்டவர்கள் என்பதால் நம் அனைவரின் அந்தரங்க உணர்வாக அந்த வரியை சொல்லலாம். கெ.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதை கேட்பதுபோல ” நம்மை வெளியேறச்செய்த வீட்டுத்திண்ணையை விட்டு நாம் எவ்வளவு தூரம் விலகிச்சென்றிருக்கிறோம்? ”. அக்கித்தம் நம்பூதிரியின் கவிதையில் உள்ள ” எனக்கும் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள் இருந்தன” என்ற வரியை தனிமனிதன் சமூகத்தின் பகுதியாக ஆகிவிட்ட, அதில் கரைந்துவிட்ட காலகட்டத்தில் அவன் தன் பழைய காலத்தை எண்ணுவதாக வாசிக்கலாம். சமூகத்தில் கரைந்ததும் அவன் முக்கியமில்லாமல் ஆகிவிடுகிறான், அவன் சமூகங்கள் உருவாவதற்கு முன்பிருந்த ’தன்னை’ நினைவேக்கத்துடனும், இழப்புணர்வுடன் எண்ணிக்கொள்வதை அந்த வரி சுட்டுகிறது. நளன் தமயந்தி கதையில் ஒரு உதாரணம். தமயந்தியிடம் தன் காதலையும், அது தன்னை எப்படி வதைக்கிறது என்பதையும் எப்படி தெரியப்படுத்துவது என்று பலவாறாக யோசித்தும் ஒருவழிமுறையையும் கண்டடைய முடியாமல் அலைக்கழிகிறான் நளன். அரண்மனையில் இருக்க பிடிக்காமல் மலர்வனத்திற்கு செல்கிறான். அங்குள்ள தடாகத்தில் அன்னப்பறவைகள் இருப்பதை பார்க்கிறான். அன்னப்பறவை ஒன்றை அவளுக்கு தூது அனுப்பினால் என்ன என்று யோசிக்கிறான். அங்குள்ள அன்னப்பறவைகளில் இருப்பதிலேயே அழகான, பிற அன்னப்பறவைகளுக்கு இல்லாத பொன்நிறமும், அழகும், மேன்மையும் கொண்ட அன்னப்பறவையை நளன் தேர்ந்தெடுத்து அதை கையால் பிடிக்கிறான். என்ன காரணத்திற்காக தன்னை பிடித்தான் என்பது அதற்கு தெரியவில்லை. எத்தனையோ அன்னப்பறவைகள் இருந்தும் நளன் ஏன் தன்னை தேர்ந்தெடுத்தான் என்று குழம்புகிறது அந்த பறவை. தன்னை அவன் கொல்லப்போகிறான் என்று நினைக்க ஆரம்பிக்கிறது. மரணமுனையில் அந்த அன்னப்பறவை ”என் மேன்மை எவ்வளவுபெரிய தீங்காக ஆகிவிட்டது” என்று எண்ணுவதாக நளசரிதம் ஆட்டக்கதையை எழுதிய உண்ணாயி வாரியார் விவரித்திருக்கிறார். அன்னப்பறவையின் இந்த வரி டெல்லியை சேர்ந்த நிர்பயா என்ற பெண்ணுக்கும் பொருந்தும். மட்டுமல்ல, அறமின்மைக்கு முன் தங்கள் கண்டனங்களை நேரடியாக வெளிப்படுத்தியதால் வேட்டையாடப்பட்ட நீதிமான்களுக்கும் பொருந்தக்கூடியது. சொல்லின், சொல்லாட்சிகளின், காவியத்தின் படிமத்தன்மையை பயன்படுத்திதான் நவீன கவிதையும் செயல்படுகிறது. தன் பின்னாலேயே வந்துகொண்டிருக்கும் மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான அபயம் தேடி ஓடிக்கொண்டிருக்கும் மார்க்கண்டேயனில் ’மர்த்யன்4’ எல்லா இயல்புகளும் முழுமையாக வெளிப்படுகிறது இல்லையா? அங்கே சென்றுசேர துடிக்கிறான் மர்த்யன் அழிவின்மை என்ற கற்பிதத்தின் தளராத சிறகுகளுடன். (*மர்த்யன் என்ற இந்திய சொல்லைப்பற்றிய அறிதல் இருந்திருந்தால் ஹைடெகர் தன் தத்துவ அமைப்பில் அதை முக்கியமான இடத்தில் வைத்திருந்திருப்பார்). அந்த ஒற்றைச்சொல்லில் உள்ள சாராம்சத்தை அகமழிந்து கொண்டாடுகிறது இடச்சேரி கோவிந்தன் நாயரின் ‘மார்க்கண்டேயன்’ என்ற கவிதை. கடைசியாக ஒரு கேள்வி. கவிதை வாசகனின் பங்கு என்ன? வாசக பங்கேற்பு வழியாகத்தான் கவிதையின் பணி நிறைவேறுகிறது. சிறந்த கவிதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதுவழியாக தங்களுடைய சொந்த கவிதையைத்தான் எழுதுகிறார்கள். நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா “எனக்கு பின்தொடர்பவர்கள்(followers) வேண்டாம், இணைப்படைப்பாளிகள்(Co-creators) போதும்” என்கிறான். கவிதை சொல்வதும் இதைத்தான். அதுவாக இருப்பது என்பதைவிட அதுவழியாக பிறிதொன்றாக ஆவதை, அதைவிட மேலானதாக ஆவதை. கவிதையின் பொறுப்பு என்ற இந்த உரையில் அதன் சமூகக்கடமையையோ, அரசியல்நிலையையோ தவிர்க்கப்பட்டுவிட்டது என்று எண்ண வேண்டாம். முன்பு குறிப்பிட்டதுபோல கவிதை ஒரு அதிகுறியீடு (Excessive signifier). ஒரு கவிதையால் அது கவிதையாக இருந்துகொண்டிருப்பதை தவிர வேறெந்த கடமையையும் நிறைவேற்றமுடியாது. அந்த வடிவில் அல்லாமல் வேறெப்படியும் வெளிப்படுத்தமுடியாததை சிருஷ்டிப்பதுதான் கவிதையின் கடமை. நாம் அலைக்கழிப்பில் ‘ ஒரு வடிவமும் கிடைக்கவில்லை (இது மலையாள பழமொழியின் மொழிபெயர்ப்பு)’ என்று சொல்கிறோம். நீண்ட நெருக்கடிக்கும் யோசனைகளுக்கும் இடையே தன்னிச்சையாக நாம் தீர்வை கண்டடைந்ததும் ‘இப்போதுதான் வடிவம் கிடைத்தது’ என்று ஆசுவாசமடைகிறோம். அந்த ‘வடிவம்’ போல ஒருவகையான ஆசுவாசமும் தீர்வும்தான் கவிதை வடிவமும். கவிதையின் ஒரே கடமையான வடிவமுழுமை என்ற அம்சத்துடன் கூடுமானவரை இணைந்திருப்பதுதான் கவிஞனின் முக்கிய கடமையும் என்பதை இந்த உரை நினைவுபடுத்தட்டும். (இது கல்பற்றா நாராயணன் கோழிக்கோடு பல்கலைகழகத்தின் மலையாள மொழித்துறையின் பொன்விழாவில் நிகழ்த்திய மலையாள சொற்பொழிவின் தமிழ் மொழிபெயர்ப்பு) ——————————————————————————————————————– ”சந்தானகோபாலம்” பாகவதத்தில் உள்ள கதை. துவாரகையில் பிராமணன் ஒருவனின் எட்டு குழந்தைகள் பிறந்தவுடனேயே இறந்துவிடுகின்றன. பிராமணனின் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள். துவாரகைக்கு வந்திருந்த அர்ஜுனனிடம் தன் நிலை பிராமணன் சொன்னதும், அர்ஜுனன் அடுத்து பிறக்கப்போகும் குழந்தையை காப்பாற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறான். அர்ஜுனனின் பாதுகாப்பையும் மீறி குழந்தை இறந்துவிடும். அர்ஜுனன் யமலோகத்தில் தேடியும் கிடைக்கவில்லை, நீண்ட அலைக்கழிதல்களுக்கு பிறகு கடைசியாக ஸ்ரீவைகுண்டத்தில் அர்ஜுனன் குழந்தையை கண்டடைந்து அதை மீட்கும் கதை. பூந்தானம் நம்பூதிரி நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்ததாகவும், பல வருடங்களுக்கு பிறகு குருவாயூர் கிருஷ்ணனின் அருளால் அவருக்கு குழந்தை பிறந்தாலும் பாகவதத்தில் உள்ள ‘சந்தானகோபாலம்’ கதையில் வருவது போலவே அது பிறந்தவுடனேயே இறந்துவிடுகிறது. அந்த துயரம் தாளமுடியாத அவர் அந்த பாகவத கதையை அடிப்படையாக வைத்து “சந்தானகோபாலம் பான” என்ற பெயரில் மலையாள காவியம் ஒன்றை எழுதினார் என்ற தொன்மம் உண்டு. ராமபுரத்து வாரியார் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் அவையில் இருந்தவர். ஒருமுறை அரசனுடன் படகில் செல்லும்போது குசேலனின் கதையை ”குசேலவிருத்தம்” என்ற காவியத்தை பாடுகிறார். பயணம் முடிந்து அரசன் தனி அறைக்கு சென்ற யோசித்தபிறகுதான் ”குசேலவிருத்தம்” காவியத்தில் விவரிக்கப்படும் குசேலனின் வறுமையும், வருத்தமும், பசியும் உண்மையில் ராமபுரத்து வாரியரின் சொந்த துயரமும் ஏழ்மையும்தான் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவருக்கு பொருளாதார உதவி செய்து புது வீடும் கட்டிக்கொடுத்தாக தொன்மம் உண்டு யோசனையின்றி தன் சொந்த நிலைநிற்பையே இல்லாமலாக்கும் செயல்கள் செய்வது, ஆபத்திற்கான கையிருப்பு தொகையையும் பணயம் வைத்து சூதாடுவது என ஒரு எல்லையில் சாகபூர்வமான இன்னொரு எல்லையில் முட்டாளத்தனமான செயல்களை சுட்டுவது’ அமர்ந்திருக்கும் மரக்கிளையையே வெட்டுவது’ என்ற பழமொழி. எல்லா உயிரினங்களுக்கும் மரணம் உண்டு, அவை அழியக்கூடியவை. மனிதனுக்கும் அதே நிலைதான். அதைக்குறிக்க மலையாளத்தில் மர்த்ய(மரணமுள்ள) என்ற சொல் உண்டு. ஆங்கிலத்தில் mortal என்ற சொல்லுக்கு நிகரான சொல். மனிதன் என்பது பொதுவான சொல். மனிதனை ’மர்த்யன் (மரணமுள்ளவன்)’ என்று அழைத்தால் ’ தற்காலிகமான இருப்பு கொண்டவன் ‘ ’அழியக்கூடியவன்’ என்ற தொனி உருவாகிறது. ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு. https://akazhonline.com/?p=9795
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கெரி ஆனந்த சங்கரி உள்ளதாக குற்றச்சாட்டு! நாட்டின் பாதுகாப்பு முன்னாள் பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரால் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே பிரித்தானியா இந்த தடையை விதித்துள்ளது. இது தொடர்பில் எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது கலாநிதி தயான் ஜயதிலக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய நீதியமைச்சர் கெரி ஆனந்தசங்கரி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இன அழிப்பு இடம்பெற்றதாக கனேடிய நாடாளுமன்றில் யோசனை ஒன்றை முன்வைத்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய அரசியல்வாதியாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் இராஜதந்திர ரீதியான தாக்குதலாகும். எனவே, இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய உயர்ஸ்தானிகளை அழைத்து இது தொடர்பில் வினவியிருக்க வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/401147/பிரித்தானியா-தடை-விதித்ததன்-பின்னணியில்-கெரி-ஆனந்த-சங்கரி-உள்ளதாக-குற்றச்சாட்டு
-
அனுர போட்ட முடிச்சு
அனுர போட்ட முடிச்சு லக்ஸ்மன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் ஒரு முடிச்சைப் போட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாருடத்துக்கான வரவு-செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்தார். மிகவும் லாவகமான பேச்சுக்கள் மூலம் மக்களை தம்வசம் இழுத்து வைத்துக் கொள்வதில் அனுரவுக்கு நல்ல இயலுமை இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு பேச்சும் இலங்கை மக்களின் உள்ளிருக்கும் பல விடயங்களை வெளியே எடுத்து விடுவதைச் செய்து விடுகின்றன. பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் தமது அரசு மீதுள்ள கோபத்திலும் வேதனையிலும் தான் விமர்சனங்களை முன்வைத்தன என்று கூறினார். தேர்தல் காலத்தில் பிரசாரங்களைச் செய்கின்ற போது, பலவாறு பலதையும் கூறிய ஜனாதிபதி இப்போது யதார்த்தத்திலும் உத்தியோகப்பூர்வமாகவும் வங்குரோத்து அடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம் என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் தேர்தல் கால வாக்குறுதிகளைக் கணக்கிலெடுக்காதீர்கள் என்பதாகக் கூட இருக்கலாம். 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் நாடு பெற்றுள்ள கடன்களின் வட்டிகளைச் செலுத்துவதற்காக 2950 பில்லியன் ரூபாவும், அரச சேவை சம்பளத்திற்காக 1352 பில்லியன் ரூபாவும், ஓய்வூதிய கொடுப்பனவைச் செலுத்துவதற்காக 442 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் செலவினத்தைக் குறைப்பதற்காக வருவாயை அதிகரிக்கவென அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் நீக்கப்பட்டு அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அதிலிருந்து கழிக்கப்படுகின்றவைகள் அதிகமாகியிருக்கின்றன. இது அரச ஊழியர்களுக்காக செலவிடப்படும் தொகையைக் குறைக்கும். இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே இருக்கிறது. அவ்வாறானால் அரச ஊழியர்களின் கைகளுக்குக் கிடைக்கும் பணத்தின் அளவு இப்போதைக்குக் குறைவாகவே இருக்கப்போகிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி போதாது, பிரதேசங்களுக்கான நிதிகள் குறைவு என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில்தான் இவ்வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேறியிருக்கிறது. அனுர ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்குச் சென்று வந்தார் பின்னர் சீனாவுக்குச் சென்றார். வேறு பல நாடுகளுக்கும் பயணமாக இருக்கிறார். அவரது பதவிக்காலத்தின் ஆறு மாத காலத்துக்குள் நாட்டு மக்களுக்காக அவர் செய்து முடித்திருக்கின்றார் என்று கேள்வி கேட்பதனை விடுத்து இவ்வாறு கதைகளை அடித்துவிடுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சாதாரணமாக இருக்கிறது. ஒன்றுக்காக ஒன்றைப் பதிலீடாகக் கொடுக்கின்ற அல்லது காண்பிக்கின்ற சம்பவங்கள் வழமையாகவே நடைபெற்றுவருவதுதான். ஆனால் இங்கு வழமையைவிடவும் அதிகமாக நடைபெறுகிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பொருளாதார கொள்கையை எடுத்த எடுப்பில் மாற்றிவிடுவது சாத்தியமற்ற ஒன்றே. இதற்குள் தேசிய மக்கள் சக்தி சொல்வதைப்போல் பொருளாதாரத்தை மக்களுக்கு ஏற்றால் மாற்றியமைப்பது மிகச் சிரமாகவே இருக்கும். வரவு-செலவுத் திட்ட முன்வைப்பின்போது, எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுவதும், விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் வெறுமனே விலக்கி விடப்படாமல் சாதகமான விடயங்கள் பரிசீலிக்கப்படுதல் நாட்டுக்குச் சிறப்பானதாகும். இந்நிலையில் பொருளாதார நிலைப்பாட்டினை நோக்குகையில், தேசிய மக்கள் சக்தி தங்கள் தேர்தல் கால பிரசாரத்தில் முன்வைத்திருந்த, ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச நாணயநிதியத்தின் கடன் வசதிக்காகக் காண்பித்த எதிர்ப்புகள் இப்போது எங்கே போயின என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கின்ற சர்வதேச நாணய நிதியத்தின் பரந்தளவிலான கடன் வசதிகளுடன் நாட்டைக் கொண்டுசெல்லுதல் என்ற வழியே அவர்களுக்கு இருக்கிறது என்பது மாத்திரமே நிலைமை. இந்த நிலைமையில் இருந்து கொண்டு பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்து விட்டது என்ற கதையை எவ்வாறு அனுரவால் சொல்ல முடிகிறது என்பது தான் வேடிக்கை. ஆனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என்று கூறமுடியும். இந்தியாவும் சீனாவும் மாத்திரமே ஏட்டிக்குப் போட்டியாக தங்களுடைய ஆதிக்கத்தை நிலைப்படுத்துவதற்காகவும், அதிகரித்துக் கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் வேலைகள் நாட்டில் நூறு வீதம் பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தி விடாது என்பது மறக்கப்படக் கூடாதது. இந்நிலையில்தான், தன்னுடைய நாட்டு நலன்களைப் பிரதான நோக்காகக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அவ்வேளையில், பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட இருக்கின்றன. முக்கியமாக சம்பூர் மின் நிலையத்துக்கான நிர்மாணத்தை இந்தியப் பிரதமர் ஆரம்பித்து வைப்பார். அதனை தவிர, வேறு ஒன்றும் நடைபெறப்போவதில்லை. அயல் நாட்டின் தலைவரின் வருகைக்குப் பொருளாதார ஸ்திரநிலையைக் கொண்டு முடிச்சிடுவது எந்தவகையில் பொருந்தும் என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 159 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையுடன் மக்களின் மகிழ்ச்சிக்கான, நிம்மதியான வாழ்வுக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதே நல்லதாகும். அதனை விடுத்து, தேசபந்துவைக் கைது செய்வதே ஒரு பெரும் விடயமாகக் காண்பிக்கப்படுவதும் பாராளுமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி வரையில் அதற்காகக் கருத்து வெளியிடுவதும். அதில், அவ்வளவு அக்கறையாக இருப்பது எந்தளவுக்கானது என்பது தெரியவில்லை. தேசபந்து தேடப்பட்டார், தலைமறைவாக இருந்தார்.அவருக்காகப் பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. இறுதியில் அவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். இப்போது சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதிலென்ன வேடிக்கையென்றால், அவர் கடமையாற்றிய பொலிஸ்த் துறையின் உத்தியோகத்தர்களாலேயே அவர் வேட்டையாடப்பட்டிருக்கிறார். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தேசபந்துவின் விளம்பரம் தேசிய மக்கள் சக்திக்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால், மூன்று வாரங்களாக நாட்டின் உளவுத்துறையால் அவரை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. கைது செய்யத் திறந்த பிடியாணை உள்ள ஒருவர், ஒரு சொகுசு காரில் நீதிமன்றத்தில் தோன்றி எப்படி வந்தார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று காவல்துறைக்குத் தெரியாததா? அல்லது அவர் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தாரா? அல்லது அவரைக் கைது செய்ய விரும்பவில்லையா? போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதும், ஆட்சி கலைக்கப்பட்டு அமைக்கப்பட்ட காபந்து அரசாங்கம் முன்னைய ஜனாதிபதி முதல், அமைச்சர்கள், பிரதானிகள் கைவசம் வைத்திருந்த வாகனங்கள் மீளப் பெறப்பட்ட, துரத்திப் பிடிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டு ஒரு விளம்பரம் நடத்தப்பட்டது. அது சற்று ஓய்ந்து போகவே ஊழல் தொடர்பான விடயங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைந்த புதிய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களால் மருத்துவச் செலவுக்கான பணம் பெறப்பட்டவைகள் வெளிப்படுத்தப்பட்டன. பின்னர். ‘அரகலய’ போராட்டத்தில் பற்றவைக்கப்பட்ட சொத்துக்களுக்காக அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட இழப்பீடுகள் வெளிக்கு வந்தன. பின் சுத்தமான இலங்கை ( கிளீன் சிறிலங்கா). அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் பட்டலந்த ஆணைக்குழு விவகாரம் பூதாகாரமாக்கப்பட்டது. இவ்வாறு நகரும் அரசு தனக்குரிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கிறது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது.அனுரகுமார ஜனாதிபதியானவுடன், பாராளுமன்றத்தைக் கலைத்து அந்தச் சூட்டுடனேயே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், அந்தச் சூட்டுடன் நடத்த முடியாது போன உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான சூடாக வரவு-செலவு திட்டம் பயன்படுத்தப்படப் போகிறது. இருந்தாலும், இன்னமும் இரண்டு மாதங்களில்தான் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடான பிரதிபலிப்பு தெரிய வரும். அதுவரையில் காலம் தாழ்த்தாது இத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலின் பின்னரே மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வர்.இவ்வாறான நிலையில், “காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த” கதையாக நடைபெறுவனவற்றைக் கொண்டு ஒட்டுமொத்தமான முடிவுக்கு வருவதும் கருத்துக்களை வெளியிடுவதும் பொருத்தப்பாடற்றதாகவே தோன்றுகிறது. நாடு ஸ்த்திரநிலையை எட்டிவிட்டதா? இல்லையா? என்பதை மக்களிடமே கேட்க வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அனுர-போட்ட-முடிச்சு/91-354307
-
யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்
யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம் யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை இடைமறித்தமையால் பதற்றம் நிலவி வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்தபோதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறிக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் okபேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனவும் அறியப்படுகிறது. நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/242043-2/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை புதன் 26 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR எதிர் KKR 09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரப் பையன்26 நிலாமதி சுவி செம்பாட்டான் வாதவூரான் தமிழ் சிறி குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025 இன் 05வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியன்ஷ் ஆர்யா, ஷஷாங் சிங், ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் மின்னல் துடுப்பாட்டங்களால் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை நோக்கி சாய் சுதர்சன், ஜொஸ் பட்லர், சுப்மன் கில், ஷேர்ஃபான் ரதஃபோட் போன்றோரின் வேகமான ஆட்டங்களால் போயிருந்தும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 4 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!
வியாழேந்திரன் கைது கடந்த ஆண்டு 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அமைப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக இன்று (25) எஸ். வியாழேந்திரன், கொழும்பு புதுக்கடை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி, மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்து, வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றதற்காக, முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகியோர் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப் பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர், அந்தச் சம்பவத்திற்கு அமைச்சரும் உடந்தையாக இருந்துள்ளார் எனக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, விசாரணை விபரங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று (25) புதுக்கடை நீதிமன்றப் பகுதியில் வைத்து எஸ். வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி, அவரது பிரத்தியேக செயலாளராக இருந்த அவரது சகோதரர், ஒரு காணிக்காக 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற நிலையில், மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cm8og367300bz10a6r60xxfpf
-
நெல்லியடியில் பெண்கள், சிறுவர்களை தாம் தாக்கவில்லையாம்
நெல்லியடியில் பெண்கள், சிறுவர்களை தாம் தாக்கவில்லையாம் மறுக்கின்றது பொலிஸ் தரப்பு யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மாடு ஒன்றை இறைச்சியாக்கிய விசாரணைகளுக்காக பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போதே, அவர்கள் தம்மைத் தாக்கினார்கள் என்று அந்த வீட்டில் இருந்தவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். எனினும், இந்தத் தகவல்களை பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 'நாங்கள் எவரையும் தாக்கவில்லை. சட்டவிரோதமாக மாட்டை இறைச்சியாக்கிய நபர் வீட்டுக்குள் மறைந்திருந்தார். அவரைக் கைதுசெய்ய முற்பட்டபோது அந்த வீட்டிலிருந்த பெண்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தனர். சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காக வீட்டின் கதவையே உதைத்தோம். ஆனால் நாங்கள் எவரையும் தாக்கவில்லை' என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/article/நெல்லியடியில்_பெண்கள்,_சிறுவர்களை_தாம்_தாக்கவில்லையாம்
-
கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்
சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கடை உரிமையாளர்! வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மருத்துவ அதிகாரி மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். குறித்தபகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றதாகவும் அங்கு இனிப்பு வகையை கையாடியதாக கூறி கடையின் உரிமையாளரான பெண் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி அன்று இரவு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட மருத்துவ அதிகாரி சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதன் காரணமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவமனையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் ஊடாக மருதங்கேணிப் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணிப் பொலிஸார் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் வைத்து சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற போது மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படும் பெண்ணின் வீட்டுக்கு பொலிஸார் சென்றபோது அங்கு வீடு பூட்டி இருந்ததனால் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக அவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சிறுமியை_மின்கம்பத்தில்_கட்டி_வைத்து_தாக்கிய_கடை_உரிமையாளர்!
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் பங்கேற்காததால் அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை editorenglishMarch 25, 2025 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரை இன்று அடையாள அணிவகுப்புக்கு அழைத்து வருவதற்கு இருந்த போதிலும், சம்பவத்தை எதிர்கொண்ட பெண் வைத்தியர் அதற்கு பங்கேற்காததால் அந்த அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/213782/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை செவ்வாய் 25 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 19 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் சுவி செம்பாட்டான் கோஷான் சே இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மிச்சல் மார்ஷினதும் நிக்கொலஸ் பூரனினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவும் நிலையில் இருந்தபோதும் இடைவரிசை வீரர்களான ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸ், விப்ரஜ் நிகம், ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை எடுத்த அஷுரோஷ் சர்மா ஆகியோரின் அதிரடியான ஆட்டங்களால் வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: ஐபிஎல் போட்டிகளை இரசிக்க ஆரம்பித்துள்ள @செம்பாட்டான் முதல்வராக அவையமைந்துள்ளார்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனி ஒவ்வொரு வருஷமும் ஐபிஎல் பார்க்கத்தான் போகின்றீர்கள்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி வெல்லுமா? ஆறு ரன்ஸ் ஆறு பந்தில்! டெல்லி வெற்றி!
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு Published By: Rajeeban 24 Mar, 2025 | 09:05 PM இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய பாதுகாப்பிற்குஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் பிரிட்டன் எப்போதும் ஈடுபட்டுவந்துள்ளது. பிரிட்டனால் தடைவிதிக்கப்பட்டவர்கள் முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய.பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் கருணா அம்மான்.இவர் பின்னர் அதிலிருந்து பிரிந்து, துணை இராணுவக்குழுவை உருவாக்கினார் அந்த அமைப்பு இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டது. https://www.virakesari.lk/article/210107 UK sanctions for human rights violations and abuses during the Sri Lankan civil war The UK has today sanctioned figures responsible for serious human rights violations and abuses during the civil war in Sri Lanka. Foreign, Commonwealth & Development Office the UK sanctions former Sri Lankan commanders and an ex–Liberation Tigers of Tamil Eelam (LTTE) commander responsible for serious human rights violations and abuses during the civil war sanctions aim to seek accountability for serious human rights violations and abuses, committed during the civil war, and to prevent a culture of impunity UK is committed to working with new Sri Lankan government on human rights, welcoming their commitments to national unity The UK government has imposed sanctions on 4 individuals responsible for serious human rights abuses and violations during the Sri Lanka civil war, including extrajudicial killings, torture and/or perpetration of sexual violence. The individuals sanctioned by the UK today include former senior Sri Lankan military commanders, and a former LTTE military commander who later led the paramilitary Karuna Group, operating on behalf of the Sri Lankan military against the LTTE. The measures, which include UK travel bans and asset freezes, target individuals responsible for a range of violations and abuses, such as extrajudicial killings, during the civil war. Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs, David Lammy, said: During her January visit to Sri Lanka, Minister for the Indo-Pacific, Catherine West MP, held constructive discussions on human rights with the Prime Minister, Foreign Minister, civil society organisations, as well as political leaders in the north of Sri Lanka. For communities to move forward together, there must be acknowledgement, and accountability for past wrongdoing, which the sanctions listings introduced today will support. We want all Sri Lanka communities to be able to grow and prosper. The UK remains committed to working constructively with the Sri Lankan Government on human rights improvements as well as their broader reform agenda including economic growth and stability. As part of our Plan for Change, the UK recognises that promoting stability overseas is good for our national security. The UK has long led international efforts to promote accountability in Sri Lanka alongside partners in the Core Group on Sri Lanka at the UN Human Rights Council, which includes Canada, Malawi, Montenegro, and North Macedonia. Background Those sanctioned are: former Head of the Sri Lankan Armed Forces, Shavendra Silva former Navy Commander, Wasantha Karannagoda former Commander of the Sri Lankan Army, Jagath Jayasuriya former military commander of the terrorist group, the Liberation Tigers of Tamil Eelam, Vinayagamoorthy Muralitharan. Also known as Karuna Amman, he subsequently created and led the paramilitary Karuna Group, which worked on behalf of the Sri Lankan Army The UK has supported Sri Lanka’s economic reform through the International Monetary Fund (IMF) programme, supporting debt restructuring as a member of Sri Lanka’s Official Creditor Committee and providing technical assistance to Sri Lanka’s Inland Revenue Department. The UK and Sri Lanka share strong cultural, economic and people to people ties, including through our educational systems. The UK has widened educational access in Sri Lanka through the British Council on English language training and work on transnational education to offer internationally accredited qualifications. View the full UK Sanctions List. https://www.gov.uk/government/news/uk-sanctions-for-human-rights-violations-and-abuses-during-the-sri-lankan-civil-war
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி 100 அடிக்குமா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG 08 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 15 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 14 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 09 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் ரசோதரன் நந்தன் புலவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றியீட்டியதால் 09 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 19 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 04 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி சுவைப்பிரியன் வாதவூரான் ஏராளன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியீட்டியதால் 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 19 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 04 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். மும்பை இந்தியன்ஸ் வாத்தியார் சுவி ரசோதரன் கோஷான் சே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியதால் 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் மூன்று போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உண்மை என்ன? March 24, 2025 — கலாநிதி சு.சிவரெத்தினம் — சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் அரசியல் கூட்டணியினை 15.03.2025 அன்று உருவாக்கியுள்ளனர். ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்பது சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோருடைய சிந்தனையில் முகிழ்ந்த முத்தல்ல. 2018ம் ஆண்டு கிழக்குத் தமிழர்களின் அரசியல் சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு கண்டு அவற்றை நிவர்த்திக்கும் முகமாக த.கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த.சிவநாதன் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்கிய ஓர் அமைப்பே ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ ஆகும். கிழக்குத் தமிழர் ஒன்றியமானது அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தில் எதிர்காலத் தேர்தல்கள் அனைத்திலும் கிழக்கில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து, அனைத்துத் தமிழ் கட்சிகளையும் அழைத்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒரு கூட்டத்தினையும் நடாத்தியிருந்தது. அங்கு நடந்த பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்குப் பின் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிப்பது என்றும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடான கட்சிகள் அதில் கையொப்பம் இட்டு கூட்டமைப்பை உருவாக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டதுக்கு இணங்க கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உருவாக்கம் பெற்றது. இந்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டபோது அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர் விடுதலைக் கூட்டணி,(TULF) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP), வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் தங்களுடைய உடன்பாட்டைத் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் பின்பு வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகிய இரு கட்சிகளும் விலகிக் கொண்டன. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் கைச்சாத்திடுவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைத் தவிர்த்துக் கொண்டது. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாபையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அதன் அங்கீகாரத்துக்காக 2019ம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தது. எனவே ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரைப் பயன்படுத்துவதற்கான தார்மீக உரிமை இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மேற்படி இரு கட்சிகளுக்கும் உரியதே தவிர இதனை புறக்கணித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். இன்று கிழக்குத் தமிழர் ஒற்றுமை பற்றிப் பேசுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டுத் தேர்தலில் தங்களது கட்சி நலன் சார்ந்தே சிந்தித்தார்கள். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதை அவர்கள் விரும்பவேயில்லை. தங்களுடைய கட்சியின் பெயரும் படகுச் சின்னத்தையும் கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஆனால் அகில இலங்கை தமிழர் மகாசபை கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக மட்டக்களப்பில் தன்னை தியாகம் செய்யத் தீர்மானித்தது. அந்தவகையில் மட்டக்களப்பில் தனித்து தேர்தலில் போட்டியிடாது படகுச் சின்னத்தை ஆதரிப்பது என்றும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் தங்களுடைய இரு வேட்பாளர்களை நியமிப்பது என்றும் இது போன்று அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது சின்னமான கப்பல் சின்னத்தில் போட்டியிடுவதென்றும் அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரித்து தனது வேட்பாளர்களை கப்பல் சின்னத்தில் நிறுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி மட்டக்களப்பில் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது வேட்பாளர்களை படகுச் சின்னத்தில் நிறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குச் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் வேட்பாளர் பட்டியலுக்கு தங்களுடைய வேட்பாளர்களை நியமிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. அத்தோடு வி.முரளிதரன் (கருணா) அகில இலங்கை தமிழர் மகாசபையில் இணைந்து அம்பாறையில் போட்டியிட்டதையும் ஆட்சேபித்தார்கள். இவர்களுடைய இவ்வாறான சுயநலமான நடத்தையினால் அம்பாறையில் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரேயொரு தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இத்தேர்தலில் இழக்கப்பட்டது. அதற்கான பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே சாரும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் கிழக்கில் போட்டியிட்டிருந்தால் 2020ம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பில் இரு பிரதிநிதித்துவமும் அம்பாறையில் ஒரு பிரதிநிதித்துவமும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்புப் பெற்று அத்துடன் மேலதிகமாக தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைக்கப் பெற்று கிழக்கில் தனித்துவம் பேணும் ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருவாகியிருக்க வேண்டிய கூட்டமைப்பை அப்போது இல்லாமலாக்கியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியேயாகும். தேர்தலில் வெற்றியீட்டிய பின் மாற்று அரசியல் கலாசாரத்தினையும் கிழக்கிற்கான சிறந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உருவாக்கிச் செயற்பட வேண்டும் என்ற தூர சிந்தனை கொண்டு உழைத்த த.கோபாலகிருஸ்ணன் அவர்களை தேர்தலில் வென்றியீட்டிய சிவநேசதுரை சந்திரகாந்தன் எள்ளவும் பொருட்படுத்தாது தன்னுடைய நலனுக்காக எல்லாரும் சேர்ந்து உழைத்த வெற்றியினைப் பயன்படுத்திக் கொண்டார். அதற்கான பலனை 2024ம் ஆண்டு மக்கள் அவருக்கு வழங்கினர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டில் அவர்களுக்கிருந்த அனுதாப அலையினையும் அபிவிருத்தி நோக்கையும் வைத்து தாம் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையில் கிழக்கின் அரசியல் ஒற்றுமையினைச் சீர்குலைத்தார்கள். ஆனால் இன்று 2024ம் ஆண்டுத் தேர்தலில் கற்ற பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போது கிழக்குத் தமிழர்களின் அரசியல் ஒற்றுமை, எதிர்கால நலன் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். இவர்கள் பேசுகின்ற இந்த ஒற்றுமை, நலன் என்பவை தாம் இழந்த அரசியல் நலன்களையும் சுகபோகங்களையும் மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக போடப்படும் அரசியல் கபட நாடகமேயாகும். எனவே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இந்தக் கபட நாடகத்துக்குப் பின்னால் உள்ள சுயநல நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமக்கான அரசியல் திசையை எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டும். https://arangamnews.com/?p=11912
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் இணைவு; கிழக்குத் தமிழருக்கு ஆபத்தான கூட்டு கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற,வடக்கு,கிழக்கில் பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யம் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோர் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதனை உருவாக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறப்பட்டிருக்கின்றது. பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. நாங்கள் சொல்லவில்லை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பு அமைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்கலாம் .ஆனால் அந்த கூட்டமைப்புக்கு உரியவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.ஒரு காலத்தில் ஒரு விடுதலை போராட்டம் என்பதனை உரிமையோடு போராடிய ஒரு கட்டமைப்பில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை பிளந்து கொண்டு வந்து அந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் என்று கூட சொல்லுகின்றார்கள் மக்கள். ஆகவே இவ்வாறானவர்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று கூறுகின்றார்கள். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்றால் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கில் நாங்கள் இணைந்து செயல்படுகின்ற போதுதான் நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருக்க முடியும். மாறாக கிழக்கு என்றும், வடக்கு என்றும், மலையகம் என்றும், மட்டக்களப்பு என்றும், யாழ்ப்பாணம் என்றும் நாங்கள் பிரிந்து செயல்படுகின்ற போது எங்களுடைய பலமான சக்தியை அழிக்கின்ற செயற்பாடாக தான் இருக்கும். ஆகவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர்களின் பலத்தை குறைக்கின்ற அல்லது வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளுகின்ற ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றது. கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டி போட்டு அங்கு தமிழ் பிரதிநிதியாக வரவேண்டிய கோடீஸ்வரனின் வெற்றியை தடுத்து அதாவுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் தான் இப்போது இந்த கூட்டமைப்பில் வந்து சேர்ந்திருக்கின்றார். கடந்த காலத்தில் பல்வேறுபட்ட தவறான செயற்பாடுகளில்,அதாவது லஞ்சம் வாங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் கட்சிகள் கூட இதில் இணைந்திருக்கின்றன. எனவே கொலை,கொள்ளை,கப்பம்,கடத்தல்,காணாமல் ஆக்குதல்,திருட்டு, லஞ்சம்,தரகு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள். எனவே இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற கூட்டமைப்பு என்பதை விட பேரினவாத்திற்கு துணை போகின்றவர்கள் எனலாம். கடந்த காலத்தில் பெரும்பான்மை இன பேரிடவாதத்திற்கு துணை போய் அங்கு பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள்,இராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். கடந்த காலத்தில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்,மக்களின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று பல்வேறு பட்டவர்கள் இணைந்து செயல்படுகின்ற போது நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும். ஆகவே நீதிமன்ற தீர்ப்புகள் சட்ட நடவடிக்கைகள் என்று எல்லாம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இந்த கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை. இவர்கள் கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மாதவனை மைலத்தமடு இடங்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி குடியேறிய போது ஒரு சத்தமும் போடாதவர்கள் தான் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். ஆகவே மக்கள் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதற்கு வாக்களிக்க கூடாது வாக்களிக்க மாட்டார்கள் என்றார். https://akkinikkunchu.com/?p=317491
-
புதிய அரசமைப்பு உருவாக்கம் விரைவாக நடப்பது அவசியம்! கரு ஜயசூரிய வலியுறுத்துகின்றார்
புதிய அரசமைப்பு உருவாக்கம் விரைவாக நடப்பது அவசியம்! கரு ஜயசூரிய வலியுறுத்துகின்றார் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை விரைவில் களையப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பை விரைவில் இயற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். டி.எஸ். சேனாநாயக்கவின் 73 ஆவது நினைவு தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- பல நாடுகளில் உயிர் தியாகம் செய்தே சுதந்திரம் பெற்றனர். எமக்கு இலகுவில் சுதந்திரம் கிடைக்கப்பெற்றதால் சுதந்திரத்தின் பெறுமதி எமக்குச் சரியாகப் புரியவில்லை. அதனால்தான் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு நாடு பின்நோக்கிச் சென்றது. அண்மையில் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியின்போது இளைஞர்கள் இன, மத, குல பேதங்களை முழுமையாக நிராகரித்தனர். காலிமுகத்திடலிலும் ஏனைய இடங்களிலும் அதைக் கண்டோம். நாடாளுமன்றத்தில் இன்றுள்ள கட்சிகள் இனவாதத்தை நிராகரித்துள்ளன. இது வரவேற்ககூடிய விடயமாகும். இதனை தொடர்ந்து முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும். இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வரவேண்டும். அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது. இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு சிறு குழுவொன்று முயற்சித்தாலும் அது வெற்றியளிக்காது. அன்று அனைத்து இன மக்களும் ஒன்றாக கல்வி பயின்றனர், ஒன்றாக விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 1960களில்தான் இந்தநிலைமை மாறுபட்டது. இன, மத ரீதியாக மாணவர்கள் பிளவுபட்டனர். இன நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் பேசுகின்றது. இதற்குரிய பணிகள் விரைவில் செய்யப்பட்டால் நல்லது-என்றார். https://newuthayan.com/article/புதிய_அரசமைப்பு_உருவாக்கம்_விரைவாக_நடப்பது_அவசியம்!_கரு_ஜயசூரிய_வலியுறுத்துகின்றார்
-
இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!
இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்! 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டுக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தநிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டு வளவிலேயே அடக்கம் செய்துள்ளார். பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர். நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/இந்திய_இராணுவத்தின்_துப்பாக்கிச்_சூட்டில்_படுகொலையான_இருவரின்_உடல்கள்_38_ஆண்டுகளின்_பின்_தீயுடன்_சங்கமம்!