Everything posted by கிருபன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை திங்கள் 07 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 20) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுவி சுவைப்பிரியன் ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கூல் டவுன் ப்ரோ! எல்லா விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.. நல்லா இல்லா விடயங்களை ஏன் நல்லா இல்லை என்று சொல்லவேண்டும்.. எழுதுபவர்களுக்காக இல்லை என்றாலும் வாசிப்பவர்களுக்காக செய்யவேண்டும்.. கிரிக்கெட் போட்டியில் 19 போட்டிகளில் 10 புள்ளிகளுக்கு மேல் அரங்கமுடியாமல் நிற்பவர்களிடம் இருந்து கனல் பறக்கும் வசனங்கள் வந்தால் அதை passion என்று பார்க்கவேண்டும்😀
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 19வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடத் திணறி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்ததனால் இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. மொஹமட் சிராஜ் 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இரு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களில் இழந்திருந்தாலும், சுப்மன் கில்லின் அதிரடியுடன் ஆட்டமிழக்காமல் பெற்ற 61 ஓட்டங்களுடனும், பந்துகளை எல்லைக்கோட்டைத் தாண்டி பறக்கவைத்த வாஷிங்டன் சுந்தரின் 49 ஓட்டங்களுடனும் 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயா தொடர்ந்தும் முதல்வராக நிலைக்கின்றார். கூடவே @நந்தன் உம் இரண்டாம் இடத்தில் சமமான புள்ளிகளுடன் நிற்கின்றார்.
- IMG_0450.jpeg
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா? 6 Apr 2025, 11:59 AM சென்னையை அடுத்துள்ள காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். Seeman meets Nirmala Sitharaman இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசியதாக தவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையன், ஏற்கனவே டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்தநிலையில், நேற்று மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். இதேபோல, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிர்மலா சீதாராமனை சந்தித்து 2026 கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சீமான் அளித்துள்ள பேட்டியில், “நான் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசவில்லை. ஒருவேளை நான் சந்தித்திருந்தால் வெளிப்படையாக சொல்லப்போகிறேன். அதில் எனக்கு எந்த ஒரு தயக்கமோ பயமோ இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தியை வேட்பாளராக நியமிக்கப்போவதாக ஊடகங்களில் நேற்று செய்தி வெளியீட்டீர்கள். நான் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போகிறேன் என்றால் வேட்பாளரை ஏன் அறிவிக்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 6) தமிழகம் வந்துள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் நடத்திய அடுத்தடுத்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://minnambalam.com/does-seeman-meets-nirmala-sitharaman/
-
முல்லைத்தீவு - புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி
முல்லைத்தீவு – புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி வாடி அமைக்கும் சிங்கள மீனவர்கள்! April 6, 2025 முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் – புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கடந்த வருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடி அமைப்பதற்கு சில பெரும்பான்மையின மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். இத்தகைய சூழலில் மீளவும், புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில சிங்கள மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்துள்ளனர். அத்துடன் அவர்களின் மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமை தொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதன்படி, அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேச செயலக் காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது https://www.ilakku.org/sinhala-fishermen-encroaching-on-the-mullaitivu-pulibaindhakal-area-and-setting-up-a-wharf/
-
அமெரிக்க நகரங்களில் ஜனாதிபதி டரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்!
டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அங்குள்ள முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. 'கைகளை விடுங்கள்' என்ற கோஷங்களை எழுப்பி மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை அமெரிக்க ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் உள்ள குறைகளை, போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அமெரிக்காவின் புதிய வரித் திட்டம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்பவற்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் விமர்சித்துள்ளனர். https://www.hirunews.lk/tamil/402206/டொனால்ட்-ட்ரம்ப்பிற்கு-எதிராக-ஆர்ப்பாட்டங்கள்-முன்னெடுப்பு
-
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு!
இந்திய வம்சாவளியினருக்கு கடல்கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்த்தை கோரும் மனோ கணேசன் எம்.பி இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் சுலபமாகக் கடல்கடந்த இந்தியப் பிரஜை எனும் அந்தஸ்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். அத்துடன், தங்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது என்பதுவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். நேற்றைய தினம் இந்தியப் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், 13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். https://www.hirunews.lk/tamil/402208/இந்திய-வம்சாவளியினருக்கு-கடல்கடந்த-இந்தியப்-பிரஜை-அந்தஸ்த்தை-கோரும்-மனோ-கணேசன்-எம்-பி
-
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெயரை தொடர்ந்து அனுமதியின்றி பயன்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் - கோபாலகிருஸ்ணன்
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெயரை தொடர்ந்து அனுமதியின்றி பயன்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் - கோபாலகிருஸ்ணன் தங்களின் அனுமதியின்றி கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெயர் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் தம்முடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் கட்சியின் பெயரைப் பயன்படுத்த முடியாது என அப்போதே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், தொடர்ந்தும் அந்த பெயர் பயன்படுத்தப்பட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் கூறியுள்ளார். https://www.hirunews.lk/tamil/402215/கிழக்கு-தமிழர்-கூட்டமைப்பின்-பெயரை-தொடர்ந்து-அனுமதியின்றி-பயன்படுத்தினால்-நீதிமன்றத்தை-நாடுவோம்-கோபாலகிருஸ்ணன்
-
மஹவ – ஓமந்தை ரயில் பாதையை இந்திய பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் இணைந்து திறந்து வைத்தனர்!!
மஹவ – ஓமந்தை ரயில் பாதையை இந்திய பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் இணைந்து திறந்து வைத்தனர்!! April 6, 2025 அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். அதன்பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவுடன் இணைந்து நவீனமயமாக்கப்பட்ட மஹவ – ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பை மக்கள் பயன்பாட்டிற்காக இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், “அநுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம். அதேபோல மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு பொறிமுறையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட சமிக்ஞை தொகுதி திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் அபிவிருத்தி பயணத்தின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான ஆதரவை நல்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கின்றது என குறிப்பிட்டுள்ளார். https://eelanadu.lk/மஹவ-ஓமந்தை-ரயில்-பாதையை-இ/
-
இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதியில் மோடி வழிபாடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அனுராதபுரத்தை வந்தடைந்தார். வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளார். https://www.samakalam.com/அனுராதபுரம்-ஸ்ரீ-மகாபோதி/
-
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு!
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு! adminApril 5, 2025 இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மலையக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டார். இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என இந்திய பிரதமர் தமது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். https://globaltamilnews.net/2025/214150/
-
பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? - நிலாந்தன்
பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? - நிலாந்தன் பிரித்தானியா இலங்கையில் போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு தடை விதித்திருக்கிறது. இதுவரை காலமும் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. பிரித்தானியா இவ்வாறு தடை விதித்திருப்பது இதுதான் முதல் தடவை. முதலில் இந்த தடை வெளிவந்திருக்கும் பின்னணியைப் பார்க்கலாம். 58 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது. அக்கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பிரித்தானியாவின் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இரு கிழமைகளுக்கு முன்பு ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில்,அல்ஜசிராவின் “ஹெட் டு ஹெட்” நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியும் இப்பொழுது வெளிவந்திருக்கும் பிரித்தானியாவின் தடையும் ஏறக்குறைய ஒரே நோக்கத்தை கொண்டவை. சீன இடதுசாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இரண்டு வரையறைகளை உணர்த்துவதே இந்தத் தடை மற்றும் அல்ஜசீராவின் நேர்காணல் இரண்டினதும் நோக்கம் எனலாம். முதலாவது வரையறை இந்த அரசாங்கம் சீனாவை நோக்கிச் சாய்வதில் உள்ள வரையறை. இரண்டாவது இனப்பிரச்சினை தொடர்பில் பொறுப்புக்கூறாமல் தப்புவதில் உள்ள வரையறை. இதை இன்னும் அறுத்துறுத்துச் சொன்னால்,பொறுப்புக்கூறல் என்ற கவர்ச்சியான தலைப்பின் கீழ் இலங்கை அரசாங்கத்தை தமது செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்திருப்பதற்கான அழுத்தங்கள். பிரித்தானியாவின் தடை நான்கு பேர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் மூவர் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த அரச படைப்பிரதானிகள். ஒருவர் தமிழ்த் தரப்பில் ஒரு தளபதியாகவிருந்து பின்னர் அரச தரப்புடன் இணைந்த கருணா. இந்த நால்வரும் இலங்கைத்தீவின் சிவில் யுத்தத்தில் செய்த குற்றங்களுக்கு எதிராகவே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரித்தானிய அரசின் வெளிவிவகார,பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில்,கருணாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த காலமும் பின்னர் அரச தரப்போடு இணைந்து செயல்பட்ட காலமும் உள்ளிட்ட சிவில் யுத்த காலகட்டத்தில் செய்த குற்றங்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தியோகபூர்வ குறிப்பில் கருணா தொடர்பாக கூறப்படுகையில் “பயங்கரவாதக் குழுவான விடுதலைப் புலிகள் இயக்கம்” என்ற சொற்பிரயோகம் உண்டு. நாலாம் கட்ட ஈழப்போரில் கருணா அரச தரப்புடன் இணைந்து செயல்பட்டதை வைத்து இந்த தடை அரசு படைப்பிரதானிகளுக்கும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்ட கருணாவுக்கும் எதிரானது என்றுதான் ஒரு பொதுவான தமிழ் விளக்கம் காணப்படுகின்றது. ஆனால் அது முழு உண்மையல்ல. இந்தத் தடைக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் உண்டு. ஏற்கனவே ஐநாவின் அறிக்கைகளில் “போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும்” எதிராக என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்ல மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளிலும்“மனித உரிமை மீறல்கள்,மனித உரிமைத் துஷ்பிரயோகங்கள்” போன்ற வார்த்தைகள்தான் காணப்படுகின்றன. இன அழிப்பு என்ற வார்த்தை இல்லை. அதாவது பிரித்தானியாவின் தடையானது நடந்தது இனஅழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 15ஆண்டுகளாக ஐநாவின் அறிக்கைகளிலும் அதுதான் காணப்படுகின்றது. அங்கேயும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றவை இனஅழிப்பு என்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதில் ஒப்பீட்டளவில் கனடாவில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்கள் இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொள்கின்றன. தீர்மானங்களில் இன அழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கனடாவின் இலங்கை தொடர்பான வெளியுறவு அணுகுமுறைகளில் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானமாக எடுக்கப்படவில்லை. அதாவது ஒரு ராஜதந்திர முடிவாக அது நடைமுறையில் இல்லை. எனவே கடந்த 15 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக எடுக்கும் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் அங்கே ஒரு பொதுத் தன்மையைத் தமிழர்கள் கண்டுபிடிக்கலாம். அது என்னவென்றால் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வ வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடாக மேற்கு நாடுகள் இதுவரை எடுத்திருக்கவில்லை. ஐநாவும் அது இனப்படுகொலை என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது முதலாவது. இரண்டாவது,கடந்த 15 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடைகளை எல்லா நாடுகளும் தொடர்ந்து பேணுகின்றன. தாயகத்தில் செயல்படாத ஒரு அமைப்புக்கு எதிராகத் தடையைத் தொடர்ந்து பேணுவதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு உணர்த்த முற்படும் வரையறைகள் எவை? மூன்றாவது, ஐநாவில் இலங்கை இனப்பிரச்சினையானது வரையறுக்கப்பட்ட ஆணையைக் கொண்ட ஐநாவின் உறுப்பாகிய மனித உரிமைகள் பேரவைக்குள்தான் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையானது ஐநாவின் 8 உறுப்புகளில் ஒன்று. பாதுகாப்புச் சபை, பொதுச் சபை போன்று அதிகாரம் மிக்கதல்ல. ஒரு நாட்டுக்கு எதிராக படையினரை அனுப்புவதற்கோ அல்லது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கோ தேவையான ஆணை மனித உரிமைகள் பேரவைக்குக் கிடையாது. சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே மனித உரிமைகள் பேரவை அந்த நாட்டில் இறங்கி வேலை செய்யலாம். குறிப்பாக 2021 ஆம் ஆண்டிலிருந்து ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் ஓர் அலுவலகம் இயங்கி வருகிறது.இலங்கைத்தீவின் போர்க்களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் அது. அப்படி ஒரு பொறிமுறை வேண்டும் என்று 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக ஒரு கடிதத்தை எழுதின.அந்தப் பொறிமுறையானது மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே பொறுப்பு கூறலைக் கொண்டு போகவேண்டும் என்பது கடிதத்தின் சாராம்சம் ஆகும். மேலும் அந்தப் பொறிமுறைக்கு ஒரு கால வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தப் பொறிமுறையானது ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு உட்பட்ட ஓர் அலுவலகமாகத்தான் உருவாக்கப்பட்டது. அதாவது பலவீனமான ஆணையை கொண்டது. இதுதான் ஐநாவில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடியவற்றின் வரையறை. இவ்வாறு கடந்த 15 ஆண்டு காலமாக மேற்கை மையமாகக் கொண்ட, அல்லது ஐநாவை மையமாகக் கொண்ட நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் சித்திரம் கிடைக்கும். மேற்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் அதே சமயம் நீதிக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.அதோடு தமிழ் மக்களுக்கு அனைத்துலக அளவில் இருக்கக்கூடிய ராஜதந்திர வாய்ப்புகளின் வரையறைகளையும் அவை உணர்த்துபவைகளாகக் காணப்படுகின்றன. எனினும் 15 ஆண்டுகளின் பின்னரும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்ட வழியில் தமிழ் மக்கள் மெதுமெதுவாக முன்னேறி வருகிறார்கள் என்பதனை பிரித்தானியாவின் தடை உணர்த்துகின்றது. குறிப்பாக நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெற்ற ஆகப்பிந்திய வெற்றியாகவும் அதைக் கூறலாம். அண்மையில் கனேடிய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அத்தகையதே.கனடாவில் நிறைவேற்றப்படட இனஅழிப்பு அறிவூட்டடல் தீர்மானத்திற்கு எதிரான வழக்கில்,கனேடிய உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டுவது. இவை யாவும் வரையறைக்குட்பட்ட வெற்றிகள்தான்.நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் மேலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.கனடா, அமெரிக்கா,பிரித்தானியா போன்ற நாடுகள் விதித்திருக்கும் தடைகளும் குறிப்பாக கனடாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உற்சாகமூட்டுபவை.அதேசமயம் மேற்கு நாடுகளின் மேற்படி நகர்வுகள் யாவும் அந்தந்த நாடுகளின் பூகோள ராணுவ அரசியல் பொருளாதார நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான் என்பதையும் தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதை அவர்கள் தமிழ் மக்களின் பெயரால் “பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பின் கீழ் ராஜதந்திரமாக முன்னெடுக்கின்றார்கள். இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் மட்டுமல்ல இந்தியா,சீனா,ஐநா முதலாக உலகில் எந்த ஒர் அரசுக் கட்டமைப்பும் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் அவ்வாறுதான் முடிவுகளை எடுக்கும்.அரசுகள் எப்பொழுதும் தங்களுடைய ராணுவப் பொருளாதார அரசியல் நோக்கு நிலைகளில் இருந்துதான் முடிவுகளை எடுக்கும்.ஏன் கடவுளுக்கு ஓர் அரசிருந்து அங்கு முடிவு எடுக்கப்பட்டாலும் அப்படித்தான் அமையும். இதில் தமிழர்கள்தான் தங்களுடைய நலன்களும் வெளி அரசுகளின் நலன்களும் இடை வெட்டும் ஒரு பொதுப் புள்ளியைக் கண்டுபிடித்து அங்கிருந்து தொடங்கி தமக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வாய்ப்புகளை எப்படி முழு வெற்றியாக மாற்றுவது என்று திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.அதாவது தமிழ் மக்கள் உலக அளவில் தங்களுக்குள்ள வரையறைகளையும் வாய்ப்புகளையும் நன்கு விளங்கி வைத்திருக்க வேண்டும்.கிடைத்திருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வரையறைகளை எப்படிக் கடப்பது அல்லது உடைப்பது என்று திட்டமிட்டுச் செயற்பட வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட தடைகளும் தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த உற்சாகமூட்டும் வெற்றிகளாகும். தமிழ் மக்கள் யாருக்கு எதிராக நீதியைக் கேட்டு போராடுகிறார்களோ அவர்கள் அங்கு தண்டிக்கப்படுகிறார்கள்.மேற்கு நாடுகளின் தடைகள் ஒருவிதத்தில் தமிழ் மக்களுக்கும் வரையறைகளை உணர்த்துபவைதான்.என்றாலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக அதன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளாக அவை காணப்படுகின்றன.இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் தங்களோடு முழுமையாக இல்லை என்று கருதி தமிழ் மக்கள் அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தேவையில்லை. தடைகள் விடயத்தில் மேற்கும் ஐநாவும் அரைவாசி அளவுக்கு தமிழ் மக்களுக்குச் சாதகமாக நிற்கின்றன.எனவே தமக்கு கிடைத்திருக்கும் பாதியளவு சாதகமான ராஜதந்திர வாய்ப்புகளை முழு அளவு சாதகமானவைகளாக எப்படி மாற்றுவது என்றுதான் தமிழ்த் தரப்பு சிந்திக்க வேண்டும். வெளியரசுகள் அவற்றின் நலன் சார்ந்து எடுக்கும் நகர்வுகளை எப்படி ஈழத் தமிழர்கள் தமது நலன் சார்ந்து வெற்றிகரமாகக் கையாளலாம் என்று சிந்திக்க வேண்டும். இதைத் தொகுத்துச் சொன்னால் தமிழ் மக்கள் ஓர் அரசு போல சிந்திக்க வேண்டும். ஒரு அரசு இன்னொரு அரசோடு கொள்ளும் உறவுகளில் இரண்டு தரப்புக்கும் பொதுவான நலன்கள் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளியில்தான் உறவுகள் விருத்தி அடைகின்றன. எனவே ஈழத் தமிழர்கள் ஓர் அரசு போல சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ராஜதந்திரத்தில் நலன்கள்தான் முக்கியம். அறம்;தர்மம்;நீதி போன்றவை அங்கே கிடையாது. தொப்புள்கொடி உறவு;இதயமும் இதயமும் கலக்கும் உறவு; என்பவையெல்லாம் கிடையாது. நலன்களும் நலன்களும் இடை வெட்டும் புள்ளிகளைத் தீர்க்க தரிசனமாகக் கையாள்வதுதான் ராஜதந்திரம். எனவே ஓர் அரசுபோலச் சிந்தித்து ஈழத் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.பிரித்தானியாவின் தடை தமிழ் மக்களுக்கு அண்மையில் கிடைத்திருக்கும் ஒரு வெற்றி. அந்த வெற்றி முழுமையானது இல்லை. அதை எப்படி ஒரு முழுமையான ராஜதந்திர வெற்றியாக மாற்றுவது என்பது ஈழத் தமிழர்கள் ஓர் அரசுபோலச் சிந்தித்து முடிவெடுப்பதில்தான் தங்கியிருக்கின்றது. ஆனால் ஓர் அரசு போல் சிந்திப்பதென்றால் அதற்கு முதலில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள வேண்டும் https://www.nillanthan.com/7265/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தகவலுக்கு நன்றி @கந்தப்பு . மாற்றிவிடுகின்றேன். பிஸியில் ராமநவமியைக் கவனிக்கவில்லை! கவனிக்கின்றேன்! கூகிள் ஷீற்றை மாற்றாமல் இவற்றை ஒழுங்கில் போடுகின்றேன்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை ஞாயிறு 06 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 17 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ சுவி ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீர தீர சூரனைக் கொப்பியடித்ததாக ஒப்புக்கொண்ட @புலவர் ஐயா ஐந்தாம் இடத்தில் இருக்கின்றார். வீர தீர சூரனும் அவருடன் கோரஸ் பாடுபவர்களும் 17 ஆம் இடத்திலிருந்து தவிக்கின்றார்கள். அதற்குள் புள்ளிவிபரங்களைக் கரைத்துக் குடித்த @கந்தப்பு வும் நானும் எப்படி மாட்டுப்பட்டோம் என்று தெரியவில்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேஎல் ராஹுலின் அதிரடியான 77 ஓட்டங்களின் துணையுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் விஜய் சங்கரைத் தவிர பிறர் நிலைத்து ஆடாததால் விஜய் சங்கரின் ஆட்டமிழக்காது எடுத்த 69 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 158 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான 67 ஓட்டங்களுடனும் பிற வீரர்களின் வேகமான துடுப்பாட்டங்களாலும் 4 விக்கெட் இழப்பிற்கு203 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பலர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால், நெஹால் வதேராவின் 62 ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயா சத்தமில்லாமல் முதல்வராக வந்துள்ளார். எனினும் @செம்பாட்டான் உம், @நந்தன் உன் சமமான புள்ளிகளில் முதல்வர் பதவியைக் குறிவைத்து நிற்கின்றனர்! @alvayan நாலாம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். இதில் சதிவேலை எதுவும் கிடையாது என்பதை புள்ளிவிபரத்துறை அறியத் தந்துள்ளது.😁
- IMG_0447.jpeg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அல்வாயன் கதிரையை விட்டு இறங்க விரும்பாததால் புள்ளிகள் கொடுக்கத் தாமதமாகும்.. 😉
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
CSK 20-2 முட்டை பார்சல்கள் ரெடி பண்ணுகின்றார்கள்😩
-
பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி [காணொலி]
பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி 5 ஏப்ரல் 2025, 04:12 GMT கருணா அம்மான், பிள்ளையான் நேர்காணல் - பிபிசி தமிழ் எக்ஸ்க்ளூசிவ் இலங்கையின் இன்றைய அரசியல் களம் குறித்தும், கடந்து வந்த தங்களின் பாதைகள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளும் அந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுமான கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) மற்றும் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) கூறுவது என்ன? போர் முடிந்து 15 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எங்கே? அவரின் உடல் எப்படி அடையாளம் காணப்பட்டது என்ற கேள்வி பிபிசி தமிழால் முன்வைக்கப்பட்டது. புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் தன்னிடம் கேட்கும் முக்கியமான கேள்வி இதுவென்று கூறிய கருணா அம்மான், பிரபாகரனின் உடலை அடையாளப்படுத்தும் பணிக்காக சென்றிருந்தேன் என்று தெரிவித்தார். அடையாளம் காட்டிவிட்டு வந்த பிறகு, என்ன நடந்தது என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை என்று பதில் அளித்தார். "அவரின் உடலை அடையாளப்படுத்தி உலகுக்கு அவர் மரணித்த செய்தியை தெரிவித்தேன். உடல் எங்கே என்பதை அறிந்து கொள்வதற்கான அதிகாரம் கொண்டு செயல்படும் சூழலும் அன்று இல்லை. ராணுவ மேலாதிக்கம் அங்கே மேலோங்கி இருந்தது. அந்த ராணுவ கட்டமைப்பை உடைத்துவிட்டு ஆராய்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவில்லை என்பது தான் உண்மை," என்று கூறினார் அவர். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், பலர் அவர்களின் வீடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது, "ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டாய ஆள்சேர்ப்பு இருந்தது என்பதை பல இடங்களில் இயக்கம் ஒப்புக் கொண்டது. ஆயுத இயக்கத்தில் விரும்பி இணைந்தவர்களும் உண்டு. வயதில் சிறியவர்கள் இணைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு வந்த போது, அவர்களை நாங்கள் தேடிக் கண்டறிந்து வீட்டிற்கு அனுப்பியும் வைத்துள்ளோம். ஆனால் அது தொடர்பான முறையான தகவல்களை போலீஸுக்கு அவர்கள் வழங்கியதில்லை," என்று பிள்ளையான் பதில் கூறினார். ஒரு சூழ்ச்சி மூலமாக இருவரையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து முன்னாள் அதிபரும், பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கே பிரித்து வந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது குறித்து உங்களின் கருத்து என்ன என்ற கேள்வியை முன்வைத்தது பிபிசி தமிழ். "சூழ்ச்சி மூலம் இயக்கத்தில் இருந்து வெளியேறினேன் என்று கூறுவது மிகவும் தவறானது. போராளிகளும் தளபதிகளும் உண்மையில் இயக்கத்தின் மீது வெறுப்படைந்திருந்தனர். தலைவருக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் எங்களின் அணி தான் அவரை காப்பாற்றியது. மெய்க்காவலர்களைக் கூட நாங்கள் தான் தேர்வு செய்து அனுப்புவோம். 25-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை இயக்கம் கொண்டிருந்தாலும் கிழக்கு மாகாண பொறுப்பாளர்கள் இல்லை. இந்த சமமற்ற சூழலை நான் வேலுப்பிள்ளையிடம் நான் அடிக்கடி சுட்டிக்காட்டினேன். ஆனால் என்னைத் தவிர முக்கியப் பொறுப்பில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் இடம் பெறவில்லை. மேலும் தளபதி மாத்தையா பிரபாகரனை கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு பிறகு, தலைமைக்குழுவில் இருந்த சந்தேகம் காரணமாக பிரபாகரன் யாரையும் வளர விரும்பவில்லை. மேலும் கிழக்கு மாகாண 'ஜெயந்தன் படை' மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பைப் இயக்கத்தில் பலரும் விரும்பவில்லை. அவர்கள் தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர். சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை காரணம் காட்டவே நாங்கள் அப்படியே இயக்கத்தில் இருந்து வெளியேற நேரிட்டது," என்று கருணா அம்மான் தெரிவித்தார். 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக பிரிந்திருந்த இருவரும் இணைய காரணம் என்ன? இது குறித்து கருணா அம்மானும், பிள்ளையானும் கூறுவதும் என்ன? முழு விவரம் காணொளியில்... https://www.bbc.com/tamil/articles/cqj4zpxy8yyo
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் Bookday25/02/2025 அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் (ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’) தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–2 – அ. குமரேசன் நல்லதொரு இலக்கியப் படைப்பு வாசித்து மகிழ வைப்பதோடு தனது வேலை முடிந்ததென்று நிற்பதில்லை. சித்தரிக்கப்பட்ட உண்மைகளை உரசிப் பார்க்கச் செய்யும். பொய்மைகளைப் புரிந்துகொள்ள உதவும். நிலைமைகளை மாற்றுவதற்குப் போராடுகிறவர்களோடு இணைந்திருக்கத் தூண்டும். அதன் காரணமாகவே உண்மைகளை மறைத்துப் பொய்மைகளைப் பரப்புகிறவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும். யாரும் அதைப் படிக்க இயலாமல் தடை போட முடுக்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு நாவல்தான் ‘ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து நான்கு’. பிரிட்டானிய எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய இந்த நாவல் ‘1984’ என்று எண்ணாகக் குறிப்பிடும் தலைப்பிலும் வெளியானது. 1984ஆம் ஆண்டில் மைக்கேல் ரோட்ஃபோர்ட் இயக்கத்தில் திரைப்படமாகவும் அரங்குகளுக்கு வந்தது. அதற்கு முன் அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன் உள்ளிட்ட சில நாடுகளில் புத்தகம் தடை செய்யப்பட்டது. வேறு சில நாடுகளில் எதிர்ப்புக்கு உள்ளானது. பிரிட்டனில் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்படவில்லை என்றாலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. பள்ளிகளிலும் இதர நூலகங்களிலும் சிறிது காலம் புத்தகம் எளிதில் கிடைக்காது என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டது. சீனாவில் புத்தகம் கிடைத்தது, ஆயினும் அதன் மீதான விவாதங்கள், குறிப்பாக இணையவழி விவாதங்கள் கண்காணிக்கப்பட்டன, தணிக்கைக்கு உள்ளாகின. அத்தகைய முட்டுக்கட்டைகளைத் தாண்டி இன்று எங்கேயும் கிடைக்கிறது, உலகின் பல மொழிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) இதில் ஒரு வேடிக்கையும் நடந்தது. சோவியத் யூனியனில், சோசலிசக் கொள்கைகளுக்கு எதிரான சிந்தனைகளை முன்வைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த நாவலுக்கு, அமெரிக்காவின் பல மாநிலங்களில் கம்யூனிசச் சிந்தனைகளைப் பரப்புகிறது என்ற கண்டனத்துடன் தடை விதிக்கப்பட்டது! பாலியல் உறவைச் சித்தரிப்பதாகக் கூறி பள்ளி நூலகங்களிலிருந்து விலக்கப்பட்டது. பிரிட்டனில், அரசின் முழு அதிகாரத்தை நாவல் கேள்விக்கு உட்படுத்துகிறது என்ற அடிப்படையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. வெவ்வேறு கோணங்களில் எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொண்ட நாவலின் கதை இப்படியாக இருக்க, நாவல் சொல்லும் கதை என்ன? சுதந்திரமான பொன்மயமான எதிர்காலம் பற்றிய கற்பனை சூழ் கனவுலகத்தை ஆங்கிலத்தில் ‘உட்டோப்பியன்’ என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். அதற்கு நேர்மாறான, அடக்குமுறைகளும் துயரங்களும் நிறைந்ததோர் எதிர்காலம் பற்றிய கற்பனையை ‘டிஸ்டோபியன்’ என்பார்கள். 1949இல் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதி வெளியான இந்த நாவல், 35 ஆண்டுகளுக்குப் பிந்தைய ஒரு வல்லாட்சி நாட்டையும் அதன் குடிமக்களையும் கற்பனையாக முன்வைக்கிறது. எதிர்காலக் கற்பனை என்றாலும், அது நாவல் வெளியான காலக்கட்டத்தின் மெய்யான நடப்புகள் பற்றிய மறைமுக விமர்சனம்தான். ‘1984’ கதைச் சுருக்கம் உறுதியாகத் தெரிய வராத, 1984 ஆக இருக்கலாம் என ஊகிக்கப்படும் ஆண்டில், போர்களாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் உலகமே சீரழிந்து போயிருக்கிறது. எல்லா நாடுகளும் மூன்றே மூன்று அனைத்ததிகார வல்லரசுகளின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்த மூன்றில் ஒன்றான ஓசியானியா பேரரசுக்கு உட்பட்ட ஏர்ஸ்ட்ரிப் ஒன் என்ற பகுதியாக பிரிட்டன் மாறியுள்ளது. ஓசியானியாவை “கட்சி” (தி பார்ட்டி) என்ற குழு ஆள்கிறது. அதன் கொள்கை “இங்க்சாக்” (இங்கிலீஷ் சோசலிசம் என்பதன் சுருக்கம்) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து நவீன வசதிகளுடனும் (கிட்டத்தட்ட செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் போன்றவை) இருக்கும் பேரரசின் ஆகப்பெரும் அதிபதி “பெரிய அண்ணன்” (பிக் ப்ரதர்). அவர் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துக் குடிமக்களை ஒடுக்கி வைத்திருக்கிறார். கட்டுப்பாடுகளை மீறினால் கடும் தண்டனைகள் நிச்சயம். அதைக் கண்காணிக்க “சிந்தனைக் காவல்” (தாட் போலீஸ்) என்ற படையே இயங்குகிறது. ஆட்சிக்கு எதிராகச் செல்கிறவர்கள் “ஆளல்லாதவர்கள்” (அன்பெர்சன்ஸ்) என அறிவிக்கப்பட்டு அவர்கள் இருந்ததற்கான தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே மக்கள் அச்சத்துடன் அவரைப் போற்றுகிறவர்களாக மாறியிருக்கிறார்கள். கட்சியின் வெளியமைப்பு உறுப்பினரான விஸ்டன் ஸ்மித் அரசின் உண்மை அமைச்சகத்தில் ஊழியராக இருக்கிறான். வரலாற்று ஆவணங்களைத் திருத்தி தலைமை கூறுவது போலப் பதிவு செய்வது அவனுடைய வேலை. பழைய ஆவணங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிடும். வேலைகளில் ஈடுபடும்போது உண்மைகளை அறிய நேரிடும் வின்ஸ்டன் முந்தைய வரலாறுகளைத் தேடித் தெரிந்துகொள்ள முயல்கிறான். மனதளவில் தலைமையை வெறுக்கிறான். அதை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடப்பதாகவும் தானும் அவற்றில் பங்கேற்பதாகவும் கனவு காண்கிறான். தான் ஒரு “சிந்தனைக் குற்றவாளி” என்று புரிந்துவைத்திருக்கிற அவன் எதிர்காலத்தில் சிறைவாசம் உண்டு என்ற தெளிவோடும் இருக்கிறான். 1950இல் நடந்த கலவரத்தில் பெற்றோரை இழந்தவனும், மனைவியைப் பிரிந்தவனுமான வின்ஸ்டன், பொதுமக்களுக்கு அரசியல் நிலைமைகளில் பெரிதாக அக்கறையில்லாமல் இருப்பதைக் கண்டு ஏமாற்றமடைகிறான். இந்நிலையில் அமைச்சகத்தில், அரசின் நோக்கங்களுக்கு ஏற்ற கதைகளை எழுதிக்கொடுக்கும் எந்திரங்களைப் பராமரிக்கும் சக ஊழியரான ஜூலியா அவனுடைய கவனத்திற்கு உள்ளாகிறாள். அவள் மீது தொடக்கத்தில் சந்தேகம் கொள்கிறான். அவள் தலைமையின் உளவாளியாக இருக்கலாம் என்று நினைக்கிறான். ஆட்சியின் உள்ளமைப்பில் இருக்கும் ஒ’ப்ரையன் என்ற அதிகாரி, அரசுக்கு எதிரான “சகோதரத்துவம்” என்ற ரகசிய இயக்கத்தின் உறுப்பினராக இருக்கக்கூடும் என்றும் ஊகிக்கிறான். நாட்களின் ஓட்டத்தில் ஜூலியாவும் ஆட்சியை வெறுப்பவள்தான் என்று அவனுக்குத் தெரியவருகிறது. இருவரும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். இங்க்சாக் சட்டப்படி, அரசின் அனுமதியின்றி யாரும் உறவுகொள்ள முடியாது. ஆகவே இவர்களது காதல் ரகசியமாகவே தொடர்கிறது. அவர்கள் சந்தித்துக்கொள்வதற்கு சாரிங்டன் என்ற கடைக்காரர் உதவி செய்கிறார். இருவரும் தங்களது குடும்பப் பின்னணிகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். விஸ்டனைத் தனியாக வீட்டுக்கு வரவழைக்கும் ஓ‘ப்ரையன், அவன் ஊகித்தது போலவே தன்னை சகோதரத்துவ இயக்கத்தின் உறுப்பினர்தான் என்று வெளிப்படுத்திக்கொள்கிறார். எமானுவேல் கோல்ட்ஸ்டீன் என்பவர் எழுதிய ‘ஆட்சிக் கூட்டமைப்பின் கோட்பாடும் நடைமுறையும்’ என்ற புத்தகத்தைத் தருகிறார். இதனிடையே ஓசியானியாவின் எதிரி அரசாகிய யூரேசியா (ஐரோப்பிய ஆசியா) திடீரென ஈஸ்டேசியா (கீழை ஆசியா) என மாறுகிறது, அது பெரிதாகக் கவனிக்கப்படாமல் போகிறது. விஸ்டன் அந்தப் புத்தகத்தை படிக்கிறான். ஆட்சிக்குழு எப்படி அதிகாரத்தைக் கையாளுகிறது என்பதை அந்த நூல் விளக்குகிறது. அரசால் விளம்பரப்படுத்தப்படும் பல்வேறு முழக்கங்களின் உண்மை நோக்கங்களையும் கூறுகிறது. ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது எப்படி என்ற அத்தியாயத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அவனும் ஜூலியாவும் கைது செய்யப்படுகிறார்கள். சாரிங்டன் உண்மையில் சிந்தனைக் காவல் படையின் கையாள் என்றும், ஒ’ப்ரையன் கூட அதிகாரபீடத்தின் அடியாள்தான் என்றும் அப்போதுதான் தெரியவருகிறது. சிறையில் விஸ்டன் பட்டினி போடப்படுகிறான். கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகிறான். சிறையதிகாரிகள் அவனை ஆட்சியின் விசுவாசியாக மாற்ற முயல்கிறார்கள். சகோதரத்துவம் என்ற இயக்கம் உண்மையிலேயே இருக்கிறதா என்று அவன் ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது என்கிறார் ஓ‘ப்ரையன். கோல்ட்ஸ்டீன் எழுதியதாகக் கொடுத்த புத்தகமே கூட அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டதுதான் என்று கூறுகிறார். லட்சியத்தை அடைவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை, அதிகாரத்தை அடைவதுதான் லட்சியமே என்றும் தெளிவுபடுத்துகிறார். விஸ்டனை “அறை 101” எனப்படும் கூடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். கொண்டுவரப்படும் ஒவ்வொரு கைதியின் பயம் என்ன என்று அறிந்து அந்தச் சூழல் ஏற்படுத்தப்படுகிற அறை அது. விஸ்டனின் மிகப்பெரிய பயம் எலிகள். எலிகள் நிறைந்த ஒரு கூண்டு அவன் முகத்தோடு சேர்த்துக் கட்டப்படுகிறது. அந்த எலிகள் கடித்துக் குதறிவிடும் என்ற அச்சத்தில் வின்ஸ்டன் விஸ்டன் ஜூலியாவைக் கைவிடுகிறான், கட்சியை ஏற்பதாக அறிவிக்கிறான். விடுவிக்கப்படும் வின்ஸ்டன், உணவகத்திற்குச் செல்கிறான். அங்கே, பல ஐரோப்பிய ஆசிய நாடுகளை ஒசியானா கைப்பற்றிவிட்ட செய்தி ஒலிபரப்பாகிறது. அதைக் கேட்டு மகிழ்கிறான். ஒருநாள் அங்கே ஜூலியாவைச் சந்திக்கிறான். இருவருமே ஒருவர்க்கொருவர் துரோகம் செய்ததை ஒப்புக்கொள்கிறார்கள். கடைசியில், முற்றிலுமாக ஆட்சியின் விசுவாசியாக மாறும் வின்ஸ்டன் பெரிய அண்ணனை முழுமையாக நேசிக்கவும் தொடங்குகிறான். ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) நாவலாசிரியரின் முந்தைய நூல்களும் அதிகார அமைப்புகளை விமர்சிப்பவைதான். குறிப்பாக, அவருடைய ‘விலங்குப் பண்ணை’ (அனிமல் ஃபார்ம்) சோசலிசத்தின் சமத்துவக் கொள்கைகளைக் கிண்டலடித்து எழுதப்பட்டதுதான். புதிதாக உருவாகி வளர்ந்து வந்த சோசலிச சோவியத் யூனியனுக்கு ஏகாதிபத்திய நாடுகளால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல், உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டுவதற்கான சதி, அந்த நிலையில் மேற்கொள்ள நேர்ந்த கடுமையான சில நடவடிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டிருந்தால் அந்த நாவலை அப்படி எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை. ஆயினும், கலை இலக்கியப் படைப்பின் கருத்துச் சுதந்திரமும் விமர்சன உரிமையும் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியவை. சோசலிசத்தைக் கட்ட முயலும் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்ற பிரச்சாரத்தைத் தங்களது ஆயுதமாக முதலாளித்துவ சக்திகள் பயன்படுத்துவது தெரிந்ததுதான். ஆனால், முதலாளிய நாடுகளில் அறிவிக்காமலே செயல்படுத்தப்படும் கருத்துரிமை ஒடுக்குமுறைகளை அந்த சக்திகளோ, அவர்களின் ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை. ‘1984’ நாவலைத் தழுவியே தமிழ்நாட்டில் எழுத்தாளர் சுஜாதா ‘ஜினோ’ என்ற, சமத்துவ அரசுக் கொள்கைகளைப் பகடி செய்யும் அறிவியல் புனைவை எழுதியது கவனத்தில் கொள்ளத்தக்கது. 1903இல், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த வங்காள மாகாணத்தின் மோத்திஹரி நகரில் (இன்று அது பிஹார் மாநிலத்தில் இருக்கிறது) வெள்ளையின அதிகாரியின் குடும்பத்தில் பிறந்தவர் எரிக் ஆர்தர் பிளெய்ர். பின்னர் லண்டனுக்குத் திரும்பிச் சென்ற பிறகு, இலக்கியத்தில் ஈடுபட்டவர், ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதலானார். ‘டௌன் அன் அவுட் இன் பாரிஸ் அன் லண்டன்’ (1933), ‘தி ரோட் விகான் பியெர்’ (1937), ‘ஹோமேஜ் டு கட்டாலோனியா (1938), ‘அனிமல் ஃபார்ம்’ (1945) ஆகிய நாவல்களைப் படைத்தவர், 1949ஆம் ஆண்டில் ‘1984’ நாவலை வழங்கினார். அது வெளியான அடுத்த ஆண்டிலேயே, அதற்குக் கிடைத்த வரவேற்பு, எதிர்ப்பு இரண்டையுமே காணாமல், அவரை நெடுங்காலமாக வாட்டிவந்த எலும்புருக்கி நோய் முற்றிய நிலையில் காலமானார். இறப்புக்குப் பின் நாவல் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றது. இன்று அரசியலில் அடிக்கடி கையாளப்படுகிற, அதிகார ஆணவத்தைக் குறிப்பிடும் “பெரிய அண்ணன்”, அரசுப் பீடங்களால் மக்களிடையே புகுத்தப்படும் சொல்லாடல்களைக் குறிக்கும் “நியூஸ்பீக்”. முரண்பாடான இரண்டு நிலைபாடுகளைக் கொணடிருக்கும் போக்கை அடையாளப்படுத்தும் “டபுள்திங்க்”, கொடிய ஆட்சிக்கு எதிராகச் சிந்திப்பதைக் கூட குற்றமாக்கும் குதர்க்கத்தைச் சுட்டிக்காட்டும் “தாட்கிரைம்”, அரியாசனவாதிகளுக்குச் சாதகமாக வரலாற்றுத் தடயங்களும், ஆதாரங்களும் அழிக்கப்படும் சூழ்ச்சியின் குறியீடாக “மெமரிஹோல்” என்ற ஆங்கிலச் சொற்கள் மேற்கத்திய நாடுகளின் அரசியல் களத்தில் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அந்தச் சொற்கள் ‘1984’ நாவலிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவைதான். பாசிசம், சர்வாதிகாரம் ஆகியவற்றையும் சாடுகிற, ஜனநாயகப்பூர்வமான சமத்துவத்தையும், மதவாதங்களை மறுக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் வலியுறுத்துகிற கட்டுரைகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களைத் தந்தமைக்காக இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிறவர். இன்று அவரது நூல்கள் இடம்பெறாத நூலகங்களே உலகில் இல்லை எனலாம். கல்வி, மொழி என அனைத்திலும் அதிகாரக் குவிப்புகள் உறுத்தலே இல்லாமல் நிகழ்த்தப்படும் காலக்கட்டத்தில் ‘1984’ போன்ற படைப்புகள், இக்கட்டுரையின் தொடக்கப் பத்தியில் கூறப்பட்டுள்ள வேலையைச் செய்யும்தானே? https://bookday.in/books-that-overcame-obstacles-series-2-written-by-kumaresan-asak/
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
நன்மையின் நம்பிக்கையுரு கிங்கிலியர் தி. செல்வமனோகரன் பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது. அறிமுகம் நாட்டுப்புறவியலின் இயங்கு தளங்களில் ஒன்றாக மந்திரம் காணப்படுகின்றது. இறையியல், சமயவியல் பற்றிய கருத்தாக்கத்திற்கு சமமாகவும் சமாந்தரமாகவும் மந்திரம் முதன்மை பெறுகின்றது. ஆவியுலக நம்பிக்கை, முன்னோர் வழிபாடு போன்றன தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை மந்திரம், மனிதர்களிடம் – அந்நம்பிக்கைகளை உடைய இனக் குழுக்களிடம் செல்வாக்குற்றுள்ளது. ‘இயற்கையை, அதன் அதீத ஆற்றல்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆதிமனிதர்கள், அதன் மீதான திகைப்பு, பயம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதனைக் கட்டுப்படுத்தவும் தனக்குத் தேவையான பயன்களைப் பெற்றுக் கொள்ளவும் உருவாக்கிய ஒன்றே மந்திரம்’ எனப்படுகின்றது. இது ஒலி ‘வழி’ நிகழ்த்தப்படுவது. கற்பனை ஒன்றைத் தோற்றுவிப்பதன் மூலம் உண்மையை – இயற்கையைக் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தின் வழி மந்திரம் உருவாக்கம் பெற்றது. அறிவும் திறனும் அதன் வழி தொழில்நுட்பமும் மேலோங்காத காலத்தில் உருவான ‘கற்பனையான தொழில்நுட்பம் (Thomson, Geroge, 1980:4) என மந்திரம் விளங்கப்படுகிறது. இது சமயத்துக்கும் முன் உருப் பெற்றதாகும். ஒரு விருப்ப நிறைவேற்றுக் கற்பனையான மந்திரம், மனிதர் தம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயத்துக்கு முன்னோடியாகிறது. அதேவேளை மந்திரம், இயற்கை நிகழ்ச்சிகளை உற்று நோக்கியதன் விளைவு என்றும் கூறப்படுகின்றது. மந்திரமானது விருப்பு, சொல், செயல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. விருப்பின் அடிப்படையிலேயே மந்திரம் (சொல்) ஓதப்பட்டு செயல்நிலைப் (சடங்கு) படுத்தப்படுகின்றது. மந்திரங்கள் ஒத்தது ஒத்ததை உருவாக்குவது; ஒரு தடவை தொடர்பு கொண்டது எப்போதும் தொடர்பைக் கொண்டிருக்கும் எனக் (frazer 1976:52) கருதப்படுகின்றது. முதல்வகை மந்திரக் கருத்தியல் ஒத்த மந்திரம், தொத்து மந்திரம் என வகைப்படுத்தப்படுகிறது. திருமண வீட்டில் விதவையை முன்னிறுத்தாமை, ஒட்டி இருக்கும் இரட்டை வாழைப்பழங்களை உண்பவள் இரணைப் பிள்ளைகளைப் பெறுவாள் போன்றன இதற்கு உதாரணங்கள். கன்று ஈன்ற பசு மாட்டின் இளங்கொடியை பால் மரத்தில் (ஆல், கிளுவை, அத்தி..) கட்டுவதனால் பசு அதீதமாகப் பால் சுரக்கும் என்பதை தொத்து மந்திரத்திற்கு எடுத்துக்காட்டாக உரைப்பர். இம்மந்திரங்கள், மந்திரங்களின் வழி நிகழ்த்தப்படும் சடங்குகள் என்பவற்றின் நோக்கை அடிப்படையாகக் கொண்டு அவற்றைத் தூய மந்திரம் ( நன்மை பயப்பது), தீய மந்திரம் (தீமை விளைப்பது) என இரண்டாகப் பகுப்பர். தீய மந்திரங்களுக்கு உதாரணமாக பில்லி, சூனியம், வசியம் முதலானவற்றைக் கூறலாம். தூய மந்திரங்களோ மருத்துவம், யுத்தம், துன்ப நீக்கம் முதலியவற்றுக்கு உதவுவன. இச்சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் தெய்வங்களை, நன்மை செய்யும் தெய்வங்கள் அல்லது தீமையிலிருந்து காக்கும் தெய்வங்கள், தீமைக்கான தெய்வங்கள், நன்மைக்கும் தீமைக்குமாகப் பயன்படுத்தப்படும் தெய்வங்கள் என மூன்று வகையினதாக எடுத்தாளலாம். பில்லி, சூனியம், வசியம் போன்றன தீய மந்திரச் சடங்குகளிலிருந்து மக்களைக் காக்கும் தெய்வமாகவே கிங்கிலியர் உருநிலைப்படுத்தப்படுகிறார். கிங்கிலியர் கிங்கிலியர் பற்றிய ஆய்வுகள் தமிழ்ச் சூழலில் பெரிதும் முன்னெடுக்கப்படவில்லை. இத் தெய்வம் பற்றி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை மட்டுமே நான்கு வரிகளாலான பந்தியில் (1996:56) குறிப்பிட்டுள்ளார். மாந்திரீகத் தொடர்புபட்ட தெய்வமாக இருத்தல் இதற்குக் காரணமாக இருக்கவும் கூடும். கிங்கிலியர் பற்றிய கதையாடல்கள் சில உண்டு. தங்களுக்கு நன்மை செய்யும் மூதாதையாகக் கிங்கிலி கருதப்படுகிறார். கருட புராணம் உள்ளிட்டவை, மரணத்துக்கு முன்பும் பின்புமாக உயிர்களை அச்சுறுத்தவும், பாதுகாத்து அன்பினைக் காட்டவும் இறந்த பின் அழைத்துச் செல்லவும் என மூன்று நபர்கள் வருகிறார்கள்; அவர்கள் யமதூதர்கள்; அவர்களே ‘கிங்கிரர்கள்’ என்கின்றன. கிங்கிரர் என்ற சொல்லே கிங்கிலி – கிங்கிலியர் என மருவியிருக்க வேண்டும். ஆனால் யமகிங்கிரர்கள் பாவஞ் செய்பவர்களையே அழைத்துச் செல்வர் என்றும் நன்மை புரிந்தவர்களை இறைத்தூதர்கள் – தேவர்களே அழைத்துச் செல்வர் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு. ‘குங்குலியம்’ துர்மணத்தை நீக்கி நறுமணத்தை தருவது போல தீமைகளை நீக்கி நன்மை பயப்பவர் குங்கிலியர். அச்சொல்லே மருவி கிங்கிலியர் என்பதாயிற்று என்பர். ஈழத்தில் கிங்கிலியர் வழிபாட்டிடங்கள் ஈழத்தில் தமிழர் வாழும் பாகங்களில் கிங்கிலியர் வழிபாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சங்கானை, திருநெல்வேலி, வசாவிளான், இருபாலை உள்ளிட்ட பிரதேசங்களிலும் கிளிநொச்சியில் முரசுமோட்டையிலும் இவ்வழிபாடு இருப்பதனை கள ஆய்வினூடாக எம்மால் உறுதிப்படுத்த முடிகிறது. பலாலி விமான நிலைய எல்லையில் இருந்த கிங்கிலியரையே தொண்ணூறு இடம்பெயர்வின் பின் வசாவிளானில் வைத்துக் வணங்குவதாக அவர்கள் கூறுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் தனிக் காணிகளிலும், வீட்டு வளவினுள்ளும் சிறு கோயில் அமைத்தோ வெளியில் வைத்தோ வழிபடும் மரபே காணப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பில் கிராமியக் கோயில்களில் பரிவாரமாக வைத்து வழிபடும் மரபும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரணமாக எருவில் கண்ணகையம்மன் ஆலயத்தில் கிங்கிலியர் பரிவாரத் தெய்வமாக இருப்பதைக் குறிப்பிட முடியும். திருகோணமலை ஆலங்கேணியில் தனிக்கோயில் உண்டு. பில்லி சூனியமும் கிங்கிலியர் பற்றிய கதைகளும் மாந்திரிகம் என்பது ஒரு மனிதன் தன் சகமனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அழிப்பதாகவோதான் கருதப்படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். காலம்காலமாய் மாந்திரிகம் என்பது அமானுசம் நிறைந்த ஒரு கலையாகவே கருதப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில்; பொருளையும் நிம்மதியையும் அழிக்கிறது. மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டுப்படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரத்தால் ஒருவனை மனநோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும் எனப்படுகிறது. சூன்யம் என்றால் வெறுமை என்பது பொருள். சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கைகால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்குத் தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளைச் செலுத்திவிடலாம், கருவில் உள்ள குழந்தையைக் கூட கொன்றுவிடலாம் எனப்படுகிறது. மந்திரசக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவிவிட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய பண்பாகும். இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரை முற்றிலுமாக கைவசப்படுத்தி அவரை ஏவலாளாக ஆக்கிவிடமுடியும். தனது சொந்த விருப்பத்தின்படி செயற்பட்டு, இலாபத்தையும் வெற்றிகளையும் அநுபவித்து வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பிவிட்டு கீழ் நிலைக்குத் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும். மந்திர வழியிலோ மருத்து வழியிலோ ஒரு பொருளை ஆடையில், உடம்பில் தடவி விட்டு அல்லது உண்ணக் கொடுத்து அவர்களை வசியப்படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும். இவ்வாறான விடயங்களை எழுதுவது மூடநம்பிக்கைகளை பரப்புவதாகக கருதப்பட்டாலும் இவற்றோடு ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள், வழிபடப்பட்ட தெய்வங்கள் என்பன நாட்டார் வழிபாட்டில் முதன்மைப் பெறுவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். “ஆட்டின் பித்தெடுப்பேன் அடியடியாய் மண்ணெடுப்பேன் கொண்டை மயிர் எடுப்பேன் – மச்சி உன்ன கொண்டு வர என் காலடிக்கு” “உள்ளான் குருவியின்ர உள்ளிருக்கும் பித்தெடுத்து சேர்த்தி மருந்தரைத்து மச்சி உன்ன சேர வைப்பேன் என் காலடிக்கு” “கரையாக்கன் பூவாயின்றி கை வசமாய் கொண்டு வந்து வைரவனை முன் நிறுத்தி உன்ன வரவழைத்தன் காலடிக்கு” “போறாக வன்னியனார் பொத்துவிலப் பார்ப்பமெண்டு – என்ன மருந்துகளை போட்டு மயக்குறாளோ தேவடியாள்” (பாலசுந்தரம், இ.,1979:418-420) எனும் நாட்டார் பாடல்வரிகளின் ஊடாக மட்டக்களப்புப் பிராந்திய மக்களின் மந்திரங்கள், சடங்குகள் தொடர்பான நம்பிக்கைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தீயமந்திரங்களின் வழி தமக்கு விருப்பமில்லாத, பகையான மனிதர்களை அவர்களது குடும்பங்களைத் துன்பப்படுத்தவும், சீரழிக்கவும் செய்யப்படுகின்ற பில்லி, சூனியம், செய்வினை போன்றன பெருந்துயரங்களை, தொடர் மரணங்களைத் தரவல்லன. இவை, குறித்த வீட்டில் இருந்து அல்லது காணியிலிருந்து எடுக்கப்பட்டதன் பின், கிங்கிலியரை சூலத்திலோ கல்லிலோ வாலாயம் பண்ணி காணியின் ஒரு சிறுபகுதியைப் புனிதமாக்கி அங்கு அத்தெய்வத்தை நிலைநிறுத்துவர். பிற்காலத்தில், இயந்திரத்தட்டில் ஆவாகனம் செய்து பூஜையறையில் வைத்து வழிபடும் முறையே முதன்மை பெற்று இன்றுவரை காணப்படுகின்றது. நம்பிக்கை தரும் நம்பிக்கையுருவாகக் கிங்கிலியர் நம்பப்படுகிறார். அவர் தீமையிலிருந்து காப்பவர். இது தொடர்பான கதைகளை களவாய்வின் போது கேட்க முடிந்தது. கந்தையா பூரணம் என்பவர் வீட்டில், அவர்களுடைய உறவினரால் செய்வினை செய்யப்பட்டது என்றும், அதனால் ஐம்பத்தொரு நாட்களுக்குள் கந்தையாவும் அவருடைய இரு மகள்களும் மரணித்தனர் என்றும், அதன் பின் சாத்திரியார் வருகை தந்து தலைமயிர் உள்ளிட்ட பில்லி – சூனிய – செய்வினைப் பொருட்களை வீட்டு வாயிலிலிருந்து எடுத்தார் என்றும், வாயில்லா ஜீவன் ஒன்றின் இறப்போடு இவை வலுவிழக்கும் என்று கூறி வெள்ளை நிறக் கல் ஒன்றில் கிங்கிலியரை ஆவாகனம் செய்து படலை (gate) அருகே வைத்துவிட்டு விளக்கேற்றி வணங்குமாறு கூறினார் என்றும், அதன் பின்பு வீடு அமைதி கண்டது என்றும் அறிய முடிந்தது. தன் கணவன் மரணத்துக்கு அருகிருப்பவர்கள் செய்த பில்லி, சூனியமே காரணம் என நம்பிய தங்கம்மா சாத்திரியின் உதவியோடு அதனைத் தேடி எடுத்ததாகவும் பின் கிங்கிலியரை வைத்து வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. பில்லி, சூனியத்தால் வயல் விளைச்சலின்றி பாழடைகிறது என நம்பிய கிளிநொச்சி முரசுமோட்டை வயல்காரர் ஒருவர் தனது வயலின் நடுவே கிங்கிலியரை வைத்து வழிபட்டு வருகின்றார். இந்தக் கதைகள் பில்லி, சூனியம், வசியம் முதலான தீமைசார் நடத்தைகள் பற்றிய நம்பிக்கைகள் ஆழ இவர்களிடம் வேரூன்றி இருப்பதைக் காட்டுகிறது. அந்தத் தீமைகளை விலக்கவல்ல தெய்வமாக கிங்கிலியரை இவர்கள் முழுமையாக நம்புவதையும் அவதானிக்க முடிகிறது. மனித இனக்குழுவின் வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை, இவ்வாறான நம்பிக்கைகள் மக்களிடம் நிலவிவருகின்றன. இவை அறிவியலுக்கு ஒவ்வாதவை என அறிஞர்கள் வாதிடவும் எள்ளல் செய்யவும் கூடும். ஆயினும் நிதர்சனத்தில் மக்களிடையே இந்நம்பிக்கைகள் இன்றும் நிலவி வருகின்றன என்பதே உண்மை. திருகோணமலை – ஆலங்கேணி, கிண்ணியா பகுதியில் கிங்கிலியருக்குக் கோயில் அமைத்த மார்க்கண்டு இராசமாணிக்கம் பன்னீர்செல்வம் அவர்கள், குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தை கட்டியபோது அதற்கு காவல் தெய்வமாக கிங்கிலியரை ஸ்தாபித்தான் என்றும் தான் சிறு வயதில் மாடு மேய்க்கச் சென்றபோது அத்தெய்வம் தன்னில் ஏறியதாகவும் பின்பு தான் இந்த கோயிலை அமைத்ததாகவும் கூறுகிறார். அங்கு பில்லி, சூனியம் பற்றிய கருத்தாடல் இல்லை. மக்கள் இடர் களையும் தெய்வமாகவே கிங்கிலியர் கருதப்படுகிறார். பீடத்தில் ஒரு கல் வைத்து வழிபடப்படுகிறது. வடமராட்சியில் துரும்பர் குளத்தருகே கிங்கிலியர் வழிபாடு இருந்ததாகவும் அது துரும்பர் தெய்வம் எனக் கூறப்பட்டதாகவும் ஊரவர்கள் சிலர் அடையாளப்படுத்தினும், கிங்கிலியர் சாதியத்துக்கு அப்பாலான தீய மந்திரச் சடங்குகளால் பாதிக்கப்பட்ட மக்களின் தெய்வமாக இருப்பதையே காணமுடிகின்றது. கிங்கிலியர் கல்லாலான தெய்வமாகக் காணப்பட்டாலும் சிற்சில இடங்களில் சூலத்திலும் வைத்து வழிபடப்படுகிறார். அவருக்கென ஒரு உருவம் எங்கும் கூறப்படவில்லை. ஆனால் சிற்சில கதைகள் கூறப்படுகின்றன. தன்னுடைய அம்மம்மாவின் இளமைக் காலத்தில் அவர் தன் ஆச்சியுடன் (அம்மா) அதிகாலையில் தங்களது பனங்காணியில் பழம் பொறுக்கச் செல்வதாகவும் ஒரு நாள் முழு நிலவின் ஒளியினால் நேரம் தெரியாது மிக வேளைக்குச் சென்றதாகவும் அப்போது ஒரு நிழல் ஆச்சிக்குப் பின்சென்ற தனது அம்மம்மாவைக் கிளித்தட்டு மறிப்பது போல மறித்ததாகவும் அதனைக் கண்ட ஆச்சி அவரை ஏசிக் கூப்பிட்டதாகவும் அந்த நிழல் உடனே விலகி வழிவிட்டதாகவும் அதன் பின்பு இருவரும் கோயில் வாசலில் இருந்து விட்டு பின்பு விடியற்பொழுதில் பனம்பழம் பொறுக்கிச் சென்றதாகவும் கூறப்பட்டது (நேர்காணல் : திருமதி.சி. செல்வமனோகரி) சாமப்பொழுதுகளில் வெள்ளை வேட்டி, நீண்ட சால்வை, தோளில் தொங்க வெண்மையான சுருள் முடியும் தாடியும் கையில் பிரம்பும் கொண்டு காற்சதங்கைச் சத்தம் கேட்க, வீதியால் காவலுக்கு கிங்கிலியர் நடந்து போவாராம் (நேர்காணல்: திருமதி.ச. இராஜேஸ்வரி) யமதூதர்களான கிங்கிரர்களின் கருமைத் தோற்றத்துக்கு மாறாக வெண்மை இங்கு சுட்டப்படுவது கவனத்திற்குரியது. வெண்மை பொதுவில் தூய்மையின் – நல்லதன் குறியீடாகவே கருதப்படுகின்றது. இங்கு தோற்றப்பொலிவு சொல்லப்பட்டாலும் ‘உருவவியல்’ முன்னிறுத்தப்படவில்லை. அனைத்துத் தகவல் வழங்கிகளினாலும் கிங்கிலியர் அருவமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வழிபாட்டு முறை கிங்கிலியரை வீடுகளில் வைத்து ஆதரிப்பவர்கள் பொதுவில் பொங்கல் பொங்கி மடை பரவுகின்றனர். சில இடங்களில் கோழி, ஆடு பலியிடப்படுவதும் மச்சம் சமைத்து படைக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது. திருகோணமலை ஆலங்கேணி கிங்கிலியர் கோயிலில் வைகாசி அமாவாசை தோறும் மழை மடை பரவி வழிபடுவதோடு கருத்தக் கடா ஆடு பலியிடப்படுவதையும் அறிய முடிகின்றது. மந்திர சித்திக்காகவும் காரிய சித்திக்காகவும் அட்சரம் போட்டு கிங்கிலியரை அதிலே ஆவாகணம் செய்து அந்த இயந்திரத்தகட்டை வெற்றிலையிலே வைத்து இரு கைகளாலும் ஏந்தி சுடலையில் நின்றும் தமக்கு ஏதுவான இடங்களில் நின்றும் உருச் செபிப்பர் (கணபதிப்பிள்ளை, க., 1996:53). இதன் ஊடாக தமது எண்ணம் சித்திக்கும் என்பது அவரது நம்பிக்கை. இத்தெய்வம் தம்மை துயரங்களில் இருந்து காக்கும் என்ற நம்பிக்கையின் வழி நேர்த்திக்கடன் வைப்பதும் பொங்கல் இடுவதும் நடைபெற்று வருகின்றது. சமகாலப் பயில்வு இன்று பில்லி, சூனியம், வசியம் முதலான தீய மந்திரங்கள், சடங்குகள் பற்றிய நம்பிக்கைகள் வலுவிழந்து வருகின்றன. அவற்றை உரையாடுவதும் எழுதுவதும் அநாகரிகமானதாக கருதப்படுகின்றது. அது படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளின் நம்பிக்கை என்று கருதப்படுகின்றது. அதற்குச் சமாந்தரமாக துன்புற்றவர்களிடம் இவை பற்றிய நம்பிக்கைகள் தொடர்கதைகளாக காணப்பட்டுவருகின்றன. இணையத்தில் கிங்கிலியர் என தட்டச்சு செய்யும் இடத்து கிங்கிலியர் மந்திரம் – இயந்திரம் பற்றிய குறிப்புகள், மந்திரங்கள், இயந்திரத் தகடுகள், அவற்றின் விலைகள், அசைவப் பலியுடன் படையல் எனும் பெறுபேறுகள் அதிகம் கிடைப்பதே இதற்கு உதாரணம். இவை நவீன சமய ‘வர்த்தக’ முறைகளாக, இந்நம்பிக்கையின் வீழாத் தொடர்ச்சியின் சான்றுகளாகக் காணப்படுகின்றன. ஆனால் கிங்கிலியர் வழிபாடு மிகவும் வலுவிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது. சாதாரண மக்களுக்கு கிங்கிலியர் பற்றித் தெரியாது இருக்கின்றமையை களவாய்வின் வழி அவதானிக்க முடிந்தது. இதற்கு மூன்று காரணங்களை பிரதானமானவையாகச் சுட்டலாம். பில்லி, சூனியம் முதலான நம்பிக்கைகள் வலு இழந்து வருதல். கிங்கிலியர், கிங்கிலிய வைரவராக – வைரவராக மேல்நிலை ஆக்கமும் உருமாற்றம் அல்லது உருமறைப்புச் செய்யப்படுகின்றமை. பொதுவாக கிராம வழிபாடுகள் கைவிடப்பட்டு வருகின்ற தன்மை. இங்கு கூறப்பட்ட மூன்றாவது விடயம் பொதுவானது எனினும் முதல் இரண்டு விடயங்களும் கிங்கிலிய வழிபாட்டுக்கு மட்டுமே உரியவை. இன்றைய சமூகத்தில் ஏற்பட்டு வரும் பகுத்தறிவு வாதம், சமய ஈடுபாடற்ற அல்லது சமயத்துக்கு நேரம் ஒதுக்க முடியாத பொருளாதார நோக்குடைய இயந்திர வாழ்வு, பழமையைக் கைவிடுதல், புதுமை நாட்டம், மதமாற்றம் முதலான பல காரணிகள் இதன் பின்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னிலைப்பட்ட தெய்வத்தை சமஸ்கிருதமயமாதல் என்னும் பிராமண மயப்படுத்தும் மேல்நிலை ஆக்கச் செயல்முறை கிங்கிலி எனும் தெய்வத் தொன்மத்தை அழிப்பு நிலை செய்து வைரவராக உயர்நிலைப்படுத்துகின்றது. இதன் வழி கிங்கிலியர் மக்களின் நம்பிக்கைகளில் இருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றார். முடிவுரை மக்களின் காவல் தெய்வமாக வறுமை, துயர் என்பனவற்றில் இருந்து மட்டுமின்றி பிறரால் தம்மை, தமது குடும்பத்தை அழிவுக்கு உட்படுத்தும் நோக்கோடு செய்யப்பட்ட தீமைகளான பில்லி, சூனியம், வசியம் உள்ளிட்டவற்றைத் தடுத்து அழித்து காப்பாற்றும் நம்பிக்கை உருவானவர் கிங்கிலியர். அரூப தெய்வமாக, பேதமற மக்களால் பொதுநிலையில் வழிபடப்பட்ட தெய்வமே கிங்கிலியர். மக்களின் தெய்வமாய் நன்மையின் படிமமாய் எந்த உருவுமற்று கல்லிலும் சூலத்திலும் தனி வழிபாடுகளின் வழி வழிபடப்பட்ட தொன்மத் தெய்வம் கிங்கிலியர். இது சிறுகோயில், பரிவாரத் தெய்வம் என்ற நிலையில் இரண்டாம் கட்ட வளர்நிலையினைப் பெற்றது. ஆயினும் நம்பிக்கைகள், மந்திரங்கள், சடங்குகள் என்பனவற்றில் ஏற்பட்ட நம்பிக்கையீனம், பகுத்தறிவுச் சிந்தனை வளர்ச்சி இவ்வழிபாட்டில் கீழ்நிலையை ஏற்படுத்தின. ‘கிங்கிலியசுவாமி’ ‘கிங்கிலியத் தகடாக’ உருமாற்றம் பெற்றார். இன்று அவர் பூஜை அறைகளில் இயந்திரத் தகடாகவும் உடலில் அச்சரக்கூடுகளாகி அணிகலன்களாகவும் மாற்றம் பெற்று வர்த்தகப் பண்டமாக்கப்பட்டுள்ளார். தொடரும். https://www.ezhunaonline.com/folk-god-kingiliyar/
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
மோடியை வரவேற்றுகும் பதாகையில் தமிழ் மொழியை புறக்கணித்த அரசாங்கம் April 5, 2025 10:47 am இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் காலி முத்திடல் உட்பட பல பகுதிகளில் அரச தரப்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகளில் சிங்களம் மற்றும் ஆங்கில் மொழிகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. இதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://oruvan.com/government-ignores-tamil-language-in-its-slogan-welcoming-modi/
-
மத்திய யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 18 பேர் பலி
மத்திய யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 18 பேர் பலி மத்திய யுக்ரேன் நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ வளர்ந்த நகரான கிரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் குடியிருப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, 'இராணுவ தரப்பினர் மற்றும் மேற்கத்தேய பயிற்றுவிப்பாளர்களை" இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த விடயம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.hirunews.lk/tamil/402123/மத்திய-யுக்ரேன்-மீது-ரஷ்யா-ஏவுகணை-தாக்குதல்-18-பேர்-பலி