Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. அப்படி அன்பாய்க் கதைக்கவேண்டியதில்லை. அதட்டியும் கதைக்கவேண்டியதில்லை. ஒருவரின் வேலையை அவர் முன்னர் செய்த இடத்தில் எப்படிச் செய்தார் என்று பார்க்கவேண்டும். நன்கு நம்பிக்கையானவர்களின் சிபார்சு என்றாலும் முழு நம்பிக்கை வைக்காமல் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்து பிடிக்காவிட்டால் உடனேயே அனுப்பிவிடவேண்டும். ஆட்களைப் பிடிப்பது கடினம் என்பதற்காக சொட்டை வேலைக்காரரை வைத்து அவர்கள் சொறி வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கும் ஊரில் போய் இருக்கும் ஐடியா இருக்கு. இன்னும் பல வருடங்கள் ஆகலாம்!
  2. அதுக்கு வேலை வாங்குகிற வல்லமை இருக்கோணும்! ஆன்ரிக்கு இருக்கிறமாதிரித் தெரியவில்லை.. விறாய்ப்பாய்க் கதைச்சு வேலை வாங்கமுடியாது!!
  3. பிரசவச் செவிலி கொத்தியாத்தை தி. செல்வமனோகரன் June 10, 2024 | Ezhuna பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது. அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தக்க, விரும்பத்தகாத அல்லது நன்மை, தீமையின் பாற்பட்ட அனுபவத்தின் வழி தன்னால் கட்டியமைக்க முடியாத விடயங்களை இயல்பிறந்த ஆற்றல்களாகக் கருதத் தலைப்பட்டான். ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணமாக தெய்வங்கள் உருப்பெறத் தொடங்கின. நன்மை செய்யும் தெய்வங்கள், தீமை செய்யும் தெய்வங்கள் என அவை உரைக்கப்பட்டன. நிலத்தெய்வம், ஐம்பூதங்களின் தெய்வம், மரத்தெய்வம், உருவம் உள்ள தெய்வம், உருவம் அற்ற தெய்வம், முன்னோர், அவலச்சாவுற்ற மனிதர், ஆவியாய் இயல்பிறந்த ஆற்றல் பெற்று தெய்வமாதல் அல்லது பேயாதல் எனப் பல்வேறு தெய்வங்களும் நம்பிக்கைகளும் காணப்பட்டன, காணப்படுகின்றன. மக்களின் வாழ்வியலோடு இணைந்து பயணிக்கும் தெய்வங்களும் பேய்களும் பற்றிய உரையாடல்களும் உள்ளன. இந்நாட்டார் தெய்வங்கள், அவற்றின் ஆற்றல்கள் பற்றி பல கதைகள், பாடல்கள் இன்றும் நின்று நிலவி வருகின்றன. ஆதிகாலத்தில் இயல்பிறந்த பல ஆற்றல்களை உடைய இராட்சதன் ஒருவன் வாழ்ந்து வந்ததாகவும், அவன் தன் ஆற்றல்களால் நாட்டார் தெய்வங்கள் பலவற்றை வருத்தி அழித்தான் என்றும், அதனால் அத்தெய்வங்கள் அவனைக் கண்டு அஞ்சி ஒளிந்தன என்றும் கூறப்படுகிறது (சிவபெருமானிடம் எதைத் தான் தொட்டாலும் சாம்பலாகும் வரம் பெற்ற பஸ்மாசுரனைக் கண்டு வரங்கொடுத்த சாமியான சிவபெருமானே ஓடியொழித்த வரலாற்றை இது ஞாபகப்படுத்துகின்றது). சில தெய்வங்கள் மக்களிடம் சென்று அடைக்கலம் பெற்றன. அத்தெய்வங்கள் அவ்வவ் மக்களின் குல தெய்வங்களுமாயின. இவற்றுள் ‘கொத்தி’ எனும் தெய்வம், பிள்ளை பெறும் வீடு ஒன்றினுள் சென்று ஒளித்தது. பிள்ளைப்பேறுக்கு மருத்துவிச்சிக்கு உதவியது. இதனால் மருத்துவிச்சியின் தெய்வமாகவும் பிரசவ தெய்வமாகவும் கொத்தி கருதப்படுகின்றார். கொத்தி கொல் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த சொற்களே கொற்றி, கொற்றவை, கொத்தி எனத் திரிபடைந்திருக்க வேண்டும். தமிழர் மரபில் கொற்றவைக்குத் தனியிடமுண்டு. தமிழரின் வாய்மொழி வழக்காறு காலத்திலிருந்து கொற்றவை வழிபடுதெய்வமாக இருந்து வருகிறாள். இயற்கை நெறிக்கால திணையியலில் பாலை நிலத்தெய்வமாக வீரம் தீரம் நிறைந்த, கொடூரமான தெய்வமாக, பேயாக அவள் சித்திரிக்கப்படுகின்றாள். கலிங்கத்துப்பரணி அவளை பேயாகவே ஆக்கிவிடுகிறது. கொற்றவை, கொற்றி, துர்க்கை, காளி, காடுகாள், சூர், சூரீ, பழையாள், தொல்குடி குமரி எனப் பலவாறு அமையும் ஒரு பொருட்பன்மொழிகளாகவே இவை கருதப்படுகின்றன. தாய்மை மிக்கவள், அவள் மகன் வேலன், காட்டிடை வாழ்பவள், பேய் முழிகளை (கண்கள்) உடையவள், நஞ்சருந்தியும் சாவாதிருப்பவள் என அவள் பலவாறு இலக்கியங்களில் சித்திரிக்கப்படுகின்றாள். ஈழத்துப்புலத்தில் காலனிய காலத்தொடக்கத்தில் போர்த்துக்கேயர் சமய ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வழிபாட்டிடங்களை இடித்தழித்தனர். பின் ஆட்சிக்கு வந்த ஒல்லாந்தர் சமயவழிபாடுகளையும் அனுட்டானங்களையும் தடைசெய்தனர். இதற்கு மாற்றீடாக நாட்டார் வழிபாட்டில் கல், சூல, வேல் வழிபாடுகள் முதன்மை பெறத்தொடங்கின. உருவமற்ற அரூபத்தெய்வங்கள் மக்கள் மனங்களை வென்றெடுத்தன. அவற்றுள் பிறப்பு – இறப்பு சார்ந்த பெண் தெய்வமாக கொத்தி முதன்மை பெற்றமை குறிப்பிடத்தக்கது. கொத்தித் தெய்வம் பற்றிய தொல்கதை ஒன்று உண்டு. “அன்று நல்ல மழை, நீர் சூழ்ந்து விட்டது. ஒரு பெண்ணின் பேறுநாள் அன்று. வலியால் அவள் துடிக்கிறாள். ஊர் மருத்துவிச்சிக்கு சொல்லிவிட்டாயிற்று. சிறிது நேரத்தில் மருத்துவிச்சி மட்டும் வருகின்றாள். பிரசவ வேதனையால் பெண் துடிக்கின்றாள். வந்த மருத்துவிச்சி உரிய வகையில் மருத்துவம் பார்க்கின்றாள். குழந்தை சுகமாகப் பிரசவிக்கப்படுகின்றது. தாயும் சேயும் நலம். மருத்துவச்சி புறப்பட்டுவிட்டாள். சிறிது நேரத்தின் பின் மருத்துவிச்சியை அழைக்க சென்றவனும் மருத்துவிச்சியும் வருகிறார்கள். நீர் குறுக்கிட்டதால் வரத் தாமதமாகிவிட்டது எனக்கூற, வீட்டில் இருந்தவர்கள் திகைக்கிறார்கள். அப்படியாயின் ‘உங்களைப் போன்றே ஒரு பெண் வந்து மருத்துவம் பார்த்தாளே’ என்கின்றனர். உண்மை விளங்குகின்றது. அது தெய்வ அருள்; அவள் கொத்தித்தெய்வம் என்கிறாள் மருத்துவிச்சி.” மக்கள், பிள்ளை பெறுதலின் போது அது சுகநலமாக நடைபெறவும் மருத்துவிச்சிகள் பிள்ளைகளை சுகமாகப் பெறச் செய்யவும் – தொழில் நிமித்தமும் கொத்தியை வழிபட்டனர். கொத்தி கொத்தியாச்சியாகவும், கொத்தியாத்தையாகவும் வழிபடப்பட்டார். ஆத்தா, ஆத்தை என்பன தாயைக் குறிக்கும் சொற்கள் (கோத்தை என்ற வழக்கம் யாழ்ப்பாணத்தில் உண்டு). ஆச்சி, அம்மளாச்சி என அம்மனைக் குறிப்பிடுவதும் உண்டு. கொற்றவையை தெய்வீக உணர்வுடன் வணங்கும் அதேவேளை கொடூரமான, அச்ச உணர்வினை ஊட்டுகின்ற தெய்வமாகப் பார்ப்பதைப் போலவே கொத்தியும் வணங்கப்பட்டார். பிள்ளைப்பேறு காலத்தில் தாய்க்கும் அக் குடும்பத்திற்கும் பிள்ளைப்பேறைப் பார்க்கும் மருத்துவிச்சிக்குமான நம்பிக்கைத்தெய்வமே கொத்தி. சமூகத்துக்கும் அத்தெய்வத்துக்குமான உறவுநிலை என்பவற்றின் வழி கொற்றவையில் இருந்து தனித்த ஒரு தெய்வமாகவே இவளைப் பார்க்க முடிகின்றது. கொத்திப் பேய் கொத்தித் தெய்வம், குறித்த காலகட்டத்தின் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில், கொத்திப்பேயாகவே பார்க்கப்பட்டாள். அது அவளின் கொடூரப் பண்பை முன்னிறுத்தியதன் விளைவாகவிருக்கலாம். பிற்காலத்தில் கொத்திப்பேய் குழந்தைகளைத் துன்புறுத்தும், நோய்க்குள்ளாக்கும் என்ற கருத்துகளும் காணப்பட்டது. கருத்தரித்த பெண்ணுக்குள் காவலாய், இரத்தப்பெருக்கு ஏற்படாமலும், குறைப்பிரசவம் நிகழாமலும், உடனிருந்து அருள்பவள் கொத்தியாத்தை; குழந்தையை சுகமாகப் பிரசவிக்கச் செய்பவளும் கொத்தியாத்தை; அதே அவள் நலமாகப் பிறந்த குழந்தையின் அழகினில் மயங்கி, குழந்தையின் மேல் ஆசை கொண்டு அதைத் தூக்கிக் கொண்டு ஓடுவதற்குப் பார்ப்பாள். தூக்கிச் செல்ல முடியாத இடத்து, காத்திருந்து காத்திருந்து ‘அலுத்துப் போய்’ (சலிப்பு), ஏமாற்றமுற்று, கோபம் கொண்டு குழந்தையை துன்புறுத்தவோ, நோய்நொடி ஏற்படுத்தவோ முற்படும் போது கொத்திப்பேய் எனப்படுகின்றாள். கொத்திப்பேய் விரட்டல் நவீன வைத்தியசாலைகள் உருவாவதற்கு முன் அவரவர் வீடுகளிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. வீடுகளில் தனியறை அல்லது தனியிடம் ஒதுக்கப்பட்டு அது தூய்மையாகப் பேணப்படும். பிரசவவலி பெண்ணுக்கு ஏற்பட்டவுடன் மருத்துவிச்சியை அப்பெண்ணின் கணவன் அழைத்துவருவான். அவள் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தவுடன் அதனைக் குறியீட்டு ரீதியில் குடும்பத்தார்க்கு அல்லது வீட்டுக்கு வெளியில் நிற்பவர்களுக்குத் தெரிவிப்பாள். அதனை: “பன்னீர்க் குடமுடைந்து பாலகன் பிறந்திடவே நன்னீர்பை கொண்டு நயந்து நயந்து எல்லோரும் பெண்பிள்ளையல்ல இது பேருலகில் எங்களுக்கு ஆண் பிள்ளை யென்றே அகமகிழ்ந்து கூரை தட்டி வாயார வாழ்த்தி வரிசையுடன் கோலெறிந்து……” எனும் நாட்டார் பாடல் (கனகரத்தினம், இரா.வை., 1991) உணர்த்தி நிற்கின்றது. இதில் ஆண்பிள்ளை வேண்டிநிற்கும் மனப்பாங்கும், ஆண்பிள்ளை பிறந்தால் கூரையின் மேல் தட்டுதல், கூரையின் மேல் கோலெறிதல் எனும் செயற்பாடுகளின் மூலம் அறிவிக்கும் சம்பிரதாயமும் கூறப்பட்டுள்ளது. பெண்பிள்ளை பிறத்தல் அம்மியில் தட்டுதல், கூரையின் மீது விளக்குமாறு எறிதல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து ஐந்தாம் நாள் மருத்துவிச்சி தாயை முழுக வைப்பாள். குழந்தையைச் சுத்தப்படுத்துவாள். அவ்வீட்டில் சோறு சமைத்து பலவகைக் கறிகள் ஆக்கப்படும். அவற்றோடு ஒடியல் மா, குரக்கன் மா போன்றவற்றில் பிட்டு அவிக்கப்படும். மச்ச உணவு (மீன்கறி, பொரியல்) விசேடமாகச் செய்யப்படும். வடமராட்சிப் பிரதேசத்தில் மேற்சொன்ன உணவு வகைகளோடு கோழிக்கறி, கருவாடு, வெள்ளைக்கறி எனும் மிளகாய்த்தூளிடாத கத்தரிக்காய், வாழைக் காய்கறிகள், முட்டைப் பொரியல் மற்றும் மீனை வாலுடன் பொரித்த பொரியல், சுறாச்சுண்டல், கோழிக்குஞ்சு விறாத்துக்கறி என்பனவும் ஆக்கப்படுகின்றன (இரகுவரன், பா. 2012). இவ்வுணவு வகைகள் யாவற்றையும் மருத்துவிச்சி அல்லது அவளிடத்துக்கு ஒரு வயதான பெண் சுளகில் (முறம்) இட்டு கொத்திக்குப் படையல் வைப்பார். இதேவேளை பிள்ளை பிறந்து முதல் ஐந்து நாளும் தாய்க்கு வழங்கப்பட்ட உணவில் சிறிதை எடுத்து தாய் படுத்திருக்கும் பாயின் கால்மாட்டின் கீழ் வைப்பர். ஆனால் நெடுந்தீவில் இது ‘கொத்தி கிண்டல்’ எனும் தனிச்சடங்காகக் காணப்படுகின்றது. (விஜயரங்கன், நேர்காணல்,2024.06.04) வீட்டுமுற்றத்தின் ஒதுக்குப்புறமாக சிறு கிடங்கு ஒன்று வெட்டப்பட்டு பிரசவித்த தாய்க்கு வழங்கப்படும் உணவில் சிறிதளவை எடுத்து முதலில் கொத்திக்கு என்று இட்ட பின்பே ஒவ்வொரு நாளும் உண்ணக் கொடுக்கும் மரபு காணப்படுகிறது. இந்த உணவையும் ஐந்தாம் நாள் சுளகுப் படையலோடு இணைத்துக் கொள்வர். இது ‘கொத்திப்படையல்’ எனப் பொதுவில் சொல்லப்படுகின்றது. இப்படையலில் சிறப்பாகக் கொத்திக்கு அதிகம் பிடித்த பொருட்களாக வெற்றிலையும் சுருட்டும் படைக்கப்படுகின்றது. இப்படையலின் பின் தாய், சேயை வீட்டின் தலைவாசலுக்கு இட்டுவந்து புதுப்பாயினாலோ புதுச்சேலையாலோ புதுச்சுளகாலோ வசதிக்கேற்ப மூடிவிடுவர். அதன்பின் தென்னம்பாளையைக் கீறிக் கட்டி, தீப்பந்தம் (சூள்) தயாரித்து, அதனைக் கொளுத்தி மறைப்புள் மறைத்துள்ள தாயையும் சேயையும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தபின் பிரசவம் நிகழ்ந்த இடத்தில் ஒளியூட்டுவர். ‘தாயும் சேயும் சுகம் சுகம்’ என்று பாடியோ கூறியோ வாழ்த்துவர். மருத்துவிச்சி, பின்னர் வீட்டின் மூலை முடக்கெல்லாம்: “ஓடாதே கொத்தி ஒளியாதே கொத்தி பாங்காதே கொத்தி பதுங்காதே கொத்தி கொத்தி புறப்படு கொத்தி புறப்படு” என்ற பாடலையோ “செத்தைக்க பத்தைக்க நில்லாத எங்கட பிள்ளைய எங்கும் எடுக்காத கொத்தியாத்தே நில்லாம வோடு ஊர விட்டோடு கொத்தியாத்தே” என்ற பாடலைப் பாடியபடி படையலையும், பிரசவத்தின் போது பயன்படுத்திய பாய், தலையணை, தாய் குழந்தை பயன்படுத்திய துணிமணிகள் உள்ளிட்டவற்றோடு கொத்திப் பேயையும் (ஐதீகப்படி) அழைத்துக் கொண்டு ஆளரவமில்லா இடத்துக்கு மருத்துவிச்சி போவார். அங்கு உள்ள பால்மரங்களில் அவற்றை வைப்பார். குறிப்பாக ஆலமரத்தில் கொத்தி உறைவதாக நம்புவதால் அம் மரத்தடியையே தேர்வு செய்வர். கொண்டு சென்ற பொருட்கள் யாவற்றையும் அங்கே ‘கழிப்பு’ கழித்துவிட்டு, நெருப்பினையும் (சூள்) அணைத்துவிட்டு, காறி உமிழ் நீரைத் துப்பியபின் மருத்துவிச்சி திரும்புவார். கொண்டு சென்ற நெருப்பை அணைக்காவிட்டால் கொத்தி திரும்பவும் அவ்வீட்டுக்கு வந்து விடுவாள் என்பது ஐதீகம் (அனந்தராஜ்,2022). இதன்பின் மருத்துவிச்சி தன்வீடு திரும்புவார். ஆனால் சில இடங்களில் அவ்வாறில்லை. சடங்கை முடித்துவிட்டு வரும் மருத்துவிச்சி கிணற்றடியில் அல்லது வாசலில் வைக்கப்பட்டுள்ள நீரில் கைகால், முகம் அலம்பிக் காறித்துப்பி வீட்டினுள் வரவேண்டும். அதன் பின்பு மருத்துவிச்சி அவ்வீட்டுக் கூரையினைத் தட்டி ‘தாயும் பிள்ளையும் சுகமா?’ என மூன்று முறை வினாவுவார். வீட்டில் உள்ளவர்கள் ‘தாயும் பிள்ளையும் சுகம் சுகம்’ என்று விடையளிப்பர். அதன்பின் மருத்துவிச்சி நான்கு பக்கமும் மும்மூன்று முறை காறித் துப்புவார். மறைப்பை நீக்கி தாயையும் பிள்ளையையும் வெளியே வரச் சொல்லி வாழ்த்திப் பாடுவார். இத்தோடு மருத்துவிச்சியின் பணி முடிவுற்று, அவருக்குத் தக்க சன்மானம் வழங்கி மகிழ்வுடன் அனுப்பி வைப்பர். அதேவேளை நெடுந்தீவில் பிள்ளை பிறந்து 15 ஆம் நாள் கொத்திக்குக் காவல் செய்து காப்புக்கட்டும் வழக்கம் இருந்துள்ளது. இது ‘பௌமானம் காட்டல்’ எனப்படுகின்றது. கொத்தியை விரட்டும் அல்லது கழித்தல் பாடல்கள் சிலசில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. நெடுந்தீவில்: “வீட்டைக் காராதே கொத்தி பாலைக் காராதே கொத்தி படுக்கையைக் காராதே கொத்தி” எனத்தொடங்கி படுக்கையில் தலைமாடு, கால்மாடு, விளக்கு, அம்மி, அடுப்படி, சோத்துப்பானை, காயச் சட்டி, மஞ்சள், உள்ளி, இஞ்சி, எண்ணெய் என்பவற்றைக் காராதே எனக்கூறிக் கூறி இறுதியில், “பிள்ளையைக் காராதே கொத்தி கொத்தி புறப்படு கொத்தி புறப்படு” எனப் பாடி முடிப்பர். யாழ்ப்பாணத்தில்: “செத்தேக்க நிற்கிறேன் என்று சொல்லாத கொத்தியாத்தை பத்தேக்க நிக்கிறேன் என்று சொல்லாத கொத்தியாத்தை” எனச் சாக்குப்போக்குச் சொல்லிப் பாடி வீட்டில், வீட்டுச் சூழலில் தங்கிநிற்கும் கொத்தியாத்தையை விரட்டுவர். கொத்திப் படையலைப் அப்படியே கழிப்பிடத்தில் கொண்டு சென்று கொட்டிவிடும் அல்லது போட்டுவிடும் வழக்கமே காணப்படுகிறது. ஆயினும் சில இடங்களில் படையலில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றிலும் சிறிது சிறிது கிள்ளியெடுத்து மூடுபெட்டியில் கொண்டு சென்று ஆலில் வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. சடங்கு யாவும் முடிந்த பின் படையலுக்கு நீர் தெளித்துவிட்டு அதனை மூத்தவர்கள் வயதானவர்கள் உண்ணும் வழக்கமும் உண்டு. கிழக்கிலங்கையில் கொத்தி வட இலங்கையைப் போலவே பிரசவ காலத்தில் மருத்துவிச்சி அழைக்கப்படுவாள். அதேபோன்று ஊர்க் குடிமகனான சலவைத் தொழிலாளிக்குப் பிரசவம் அறிவிக்கப்படும். அவனது வீட்டுப்பெண் மாத்துச்சேலை (மாற்றுச்சேலை) கொண்டு வருவார். இது அவரது உரிமையாகக் கருதப்படுகிறது. இன்றும் இந்த வழக்கம் மட்டக்களப்பில் உள்ளது. (மேகலா,சி.,2022) அக்கரைப்பற்று, ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் முன்பு கொத்தி வழிபாடு காணப்பட்டதாகவும் இப்போது வழக்கொழிந்து விட்டதாகவும் (நேர்காணல், அபிசனா, களுவாஞ்சிக்குடி) அறிய முடிகின்றது. ஆனால் கொத்தியாத்தியை ஒத்த தெய்வமாக ‘குத்துக்கிழவி’ காணப்படுகிறார். அம்மன் ஆலயச் சடங்குகளில் கலையாடுகின்ற தேவாதியானவர் குத்துக்கிழவியாக உருமாறி அலங்கரித்து வந்து, சேலை மறைப்பில் மருந்தரைத்து, வந்திருக்கும் பக்தருக்கு வழங்குவார். அம் மருந்து தீரா நோயையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி சனாதன முனிவர்களுக்கு அவர்கள் கேட்ட வரத்திற்கமைய கொடுத்துவிட்டு, பின் கிழவி ரூபத்தில் குடிசையொன்றில் காத்திருந்து, அவ்வழி வந்த இம் முனிவருக்கு நீரைக் கொடுத்துவிட்டு சிவனை மீட்டதாகவும், அவரே குத்துக்கிழவி ஆனதாகவும் கூறப்படுகிறது. பிரசவம் பார்த்துவிட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடும் என்ற கொத்தியின் கதையும் இதற்குச் சமமாக உள்ளது. இதேவேளை அக்கரைப்பற்றில் நூறு வருடங்களுக்கு முன், ‘குத்துக்கரையாக்கன்’ என்ற பேய் குழந்தை பிறந்து பன்னிரு நாட்களுக்குள் தூக்கிச் சென்று விடும் என்றும் அல்லது நோய் நொடியைக் கொடுக்கும் என்றும் கருதி ‘கடப்படியில்’ (தாய்பிள்ளை இருக்கும் அறை வாசல்) வேப்பிலை, இரும்பாலான பொருட்களைக் கட்டிவிடுவர். பூசாரியிடம் நீரோதிப் பெற்று காவலுக்கு வைப்பர். தற்போது இப்பேயின் பெயர் வழக்கற்றுப் போய், ‘காத்தணவு’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் கொத்தி வழிபாட்டிடங்கள் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவுப்பகுதிகளில் கொத்தி வழிபாடு காணப்பட்டுள்ளது. ஏலவே கூறியது போல கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்று, ஆரையம்பதி போன்ற இடங்களில் முன்பு கொத்தி வழிபாடு காணப்பட்டுள்ளது. மலையகம், திருகோணமலை போன்ற இடங்களில் கொத்தி வழிபாடு இருந்ததா என்பதை அறிய முடியவில்லை. கொத்தித் தெய்வத்துக்கோ அன்றி பேய்க்கோ தனி உருவம் எதுவும் இல்லை. அது பெண்ணாகவே கூறப்படுகிறது. அக்கறைப்பற்றில் ‘குத்துக்கரையாக்கன்’ எனும் தெய்வப்பெயர் ஆண் பெயராகவும், பிற்காலத்தில் வழங்கும் ‘காத்தணவு’ எனும் சொல் (நேர்காணல் – சந்தோசனா, அக்கரைப்பற்று) பொதுப்பெயராகவும் உள்ளது. கொத்தி ‘பால்’ மரங்களில் உறைகின்றாள் என்பதே ஐதீகம். குறிப்பாக ஆலமரங்களில் அவள் விரும்பி உறைவதாகக் கூறப்படுகிறது. கொத்தி உறையும் ‘ஆல்’ கொத்தியால் எனப்படுகிறது. வடமராட்சியில் கொத்தியாலடி என ஒரு இடம் உண்டு. சுன்னாகத்தில் ‘றொட்டியாலடி’ எனுமிடமுண்டு. அதன் அர்த்தத்தை நேர்காணலில் கேட்டபோது யாவரும் தெரியாது என்றே கூறினர். கொத்தியாலடி என்பதே இவ்வாறு திரிபடைந்திருக்கலாம். கொத்தி சென்ற வீதிகள், இருந்த இடங்கள் என்பன இன்றும் கொத்தியொழுங்கை, கொத்தித்தெரு எனப்படுகின்றன. பொதுவாக வீட்டில் இருண்ட மூலை, ஆட்கள் அதிகம் புழங்காத இடம் கொத்தி மூலை எனப்படுகிறது. அதேபோல் ஆளரவமற்ற அமைதியான இடங்கள் ஊர் வழக்கில் கொத்திமூலை எனப்படுகின்றது. அது பய உணர்வின் அடிப்படையில் அமைந்ததாகும். கொத்திக்கான வழிபாடு பொதுவில் பிள்ளைப்பேறு நடந்த வீடுகளிலேயே நடைபெறுகின்றது. ஆயினும் வடமராட்சி, கரவெட்டிக்கு வடக்கே ஒரு கொத்தியார் கோயிலும், நெடுந்தீவில் குருக்கள் மடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் மூன்றாம் வட்டாரத்தில் ஒரு கொத்தியார் கோயிலும் காணப்படுகின்றன. இதில் கரவெட்டிக் கோயிலை எம்மால் அடையாளப்படுத்த முடியவில்லை. வழிபாட்டு முறைகள் பிரசவ வீடுகளில் குழந்தை பிறந்து ஐந்தாம்நாள்; சோறு, பிட்டு என்பவற்றோடு மரக்கறி, மச்சம், மாமிசம் என்பன படைத்து வழிபடப்பட்டுப் பின் கொத்தியைக் கழித்து ஆளரவமற்ற பொது இடத்தில், ஆலமரத்தில் விட்டுவருதல் எனும் சடங்கு நடைபெறும். இச்சடங்கு பரியெரித்தல் அல்லது மருக்கைச்சடங்கு எனச் சுட்டப்படுகிறது. நெடுந்தீவு கொத்தியம்மன் கோயிலில் பூசாரிகளாக உள்ளவர்கள் ‘உடுக்கர் பரம்பரை’ எனக் கூறப்படுகின்றனர். இவ்வாலயக் கொத்தியம்மன் சூலவடிவிலேயே வழிபடப்படுகிறாள். இங்கு சித்திரா பௌர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் சடங்குகளில் பூரண கும்பம் வைத்தல், நிறைநாழி வைத்தல், சரக்குப் பொருட்கள் (பத்தியத்துக்கானது) வைத்துப் பாடல் பாடுதல் ஆகியன இடம்பெறும். பின் ஆலய பரிபாலனத்தவர்களால் நாயகப் பானையும் மற்றவர்களால் தனித்தனிப் பானைகளும் வைத்து பொங்கல் பொங்கப்படும். அன்று பந்தலமைத்து சித்திரபுத்திரனார் கதை, அபிராமி கதை போன்றன படிக்கப்படுகின்றன. தயிரடியன் கூட்டத்தினர் மாதா மாதம் மாறிமாறி விளக்கேற்றுகின்றனர். இங்கு ‘கல் போட்டு’ வணங்கும் முறை காணப்படுகின்றது. இது சாத்தானார் வழிபாட்டை ஒத்துள்ளது. மேலும் பிறந்த குழந்தையை முற்பத்தோராம் நாள் கோயிலில் கிடத்தி, பொங்கல் பொங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் காணப்படுகின்றது. சமகாலப் பயில்வு இன்று வீடுகளில் பிரசவங்கள் நடைபெறுவதில்லை. அதனால் ஊர் மருத்துவிச்சிகளும் இல்லாது போயினர். கொத்தி வழிபாடும் வழக்கிழந்து காணப்படுகின்றது. பேய்கள் பற்றிய நம்பிக்கையும் வலுவற்று வருகிறது. மரங்களின் கீழ் மயங்குதல், பயமுறுத்தும் ஓலம் முதலியனவற்றுக்கு அறிவியல் விளக்கங்கள் கூறப்படுகின்றன. முன்பே கொத்திக்கு கோயில்கள் இல்லை. நெடுந்தீவுக் கோயிலில் சித்திராப் பௌர்ணமி பூசைக்கு சமஸ்கிருத மந்திரம் சொல்லும் குருக்களை அழைக்கும் வழக்கம் உருவாகிவிட்டது. ஆயினும் கொத்தி, நாட்டார் நம்பிக்கைகளுக்கு உரிய தெய்வமாகவும் பேயாகவுமே கருதப்படுகின்றாள். மேன்னிலையாக்கம் பெறவில்லை; மாறாக செல்வாக்கு இழந்து வருகின்றாள். அவளின் பெயரிலான சொற்கள், வழக்காறுகள் தமிழில், தமிழ்ப் பண்பாட்டில் வழக்கொழிந்து வருகின்றன. நிறைவுரை பிறப்பு, இறப்புச் சார்ந்த மருத்துவ வசதிகள் குறைந்த காலத்தில் கடவுளை மட்டுமே நம்பிய தமிழ்ச் சமூகம் இருந்தது. அது கொத்தியை ஆத்தையாக வணங்கியது. பேயாக விரட்டியது; கழிப்புக் கழித்தது. இதில் உள்ள சமூகச் சிக்கலை நாம் முடிச்சவிழ்க்கலாம். பிரசவ காலத்தில் தாயாகக் கொண்டாடி, பின்பு பேயாக்கி விரட்டும் சடங்கு கொத்திக்கு நடைபெற்றது. அதேபோல வீடு குடிபுகுதல் போன்ற பிரவேசச் சடங்கில் வீட்டு வேலைகள் முடிந்து குடி புகுவதற்கு முதல்நாள், தச்சுப்பொங்கல் பொங்கி ‘தச்சன் காளி விரட்டல்’ நடைபெறும். இரு சடங்கிலும் உரியவர் படையல் படைப்பார். அவரே கொண்டு செல்வார். தகுந்த சன்மானம் வழங்கப்படும். அதன் பின் அவர்கள் வீட்டினுள் வருவதில்லை; வரமுடியாது. பிரசவத்தோடு தொடர்புறும் மருத்துவிச்சியும், மாத்துச்சேலை கொண்டுவரும் குடிமையும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். தீட்டுக்காலத்தில் தேவையின் பொருட்டு வீட்டினுள் விடப்பட்ட இவர்கள், தேவை நிறைவேற்றப்பட்ட பின் கொத்திப்பேயோடு சேர்ந்து வீட்டினுள் வராது தடுக்கப்பட்ட சமூக வரலாற்றின் ஆவணமாக கொத்தியாத்தை திகழ்கின்றாள். கொத்தி வழிபாட்டின் வீழ்ச்சியை சாதியத்தின் வீழ்ச்சியாகவும் கருதலாம். மனித வாழ்வியலில் நம்பிக்கைகள், வழக்காறுகள் உருவாவதும், தேய்வடைவதும் தவிர்க்க முடியாததுதான். தொடரும். https://www.ezhunaonline.com/god-of-obstetrician-koththi/
  4. ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக… Bookday04/03/2025 ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக ‘டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’… தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–3 – அ. குமரேசன் “உண்மையைச் சொல், சொன்னபின் ஓடிவிடு.” “எனது கல்வியில் எனது பள்ளிப் படிப்பு தலையிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.” “புன்னகை என்பது மின்சாரம். தருபவரை மங்கிவிடச் செய்யாமல் பெறுபவரை ஒளிரச் செய்யும் வாழ்க்கை.” “எப்போதும் மற்றவர்களின் இறுதிநிகழ்வுகளுக்குச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுடையதற்கு அவர்கள் வர மாட்டார்கள்.” – இப்படியெல்லாம் எழுதியவர் மார்க் ட்வெய்ன் (Mark Twain) (1835–1910). தமது சமூக நையாண்டிப் படைப்புகளுக்காகவும் நகைச்சுவை இழையோடும் தெறிப்புகளுக்காகவும் உலகெங்கும் வாசிக்கப்படுபவர். ‘டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’, ‘ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்’, ‘அரசனும் ஆண்டியும்’, ‘மிசிசிப்பி வாழ்க்கை’, ‘முலாம் பூசிய காலம் – இன்றைய கதை’ ‘புடன்ஹெட் வில்சன்’ உள்ளிட்ட நாவல்கள் புகழ்பெற்றவை என இலக்கிய நேயர்கள் தெரிவிக்கிறார்கள். மார்க் ட்வெய்ன் (Mark Twain) டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’ நாவலின் தொடர்ச்சியாகவும், தனியாக வாசிக்க தக்கதாகவும் 1884இல் வந்தது ‘ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்’. இனவாதத்தைத் தூண்டுகிறது, கறுப்பின மக்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புகிறது, கெட்டவார்த்தைகளைப் பேசுகிறது என்று குற்றம் சாட்டப்பட்ட அந்த நாவல் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. பிரிட்டன் உள்பட வேறு பல நாடுகளில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இன்று உலக இலக்கியங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கும் அந்த நாவல் கூறுகிற இருவரின் பயணக் கதைக்குள் நாமும் பயணிப்போம். கதைச் சுருக்கம் 1840களில் நடக்கிற கதை. மிசோரி மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தைச் சேர்ந்த சிறுவன் ஹக்கிள் பெர்ரி ஃபின். நண்பனான டாம் சாயர் சாகசங்களின் பலனாகப் பெருந்தொகை ஒன்றைப் பெறுகிறான். கணவரை இழந்தவரான டக்ளஸ், அவரது சகோதரி மிஸ் வாட்சன் இருவரும் ஹக்கைத் தங்கள் பாதுகாப்பில் வளர்க்கிறார்கள். சுதந்திரமான வாழ்க்கையை விரும்பினாலும் அவன் டாம் சாயரின் கூட்டத்தோடு இருப்பதற்காக அங்கேயே தங்குகிறான். குடிகாரனான தகப்பன் பாப் தனது பணத்தைக் கைப்பற்ற முயன்றதைத் தடுக்கிறான் ஹக். ஆத்திரத்துடன் அவனை வெகுதொலைவில் ஒரு தனி அறையில் அடைத்து வைக்கிறான். பாப் நிதானம் இழந்த போதையில் ஹக்கைக் கொல்லவும் முயல்கிறான். ஹக் தான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக நாடகமாடி ஒரு தீவுக்குத் தப்பிச் செல்கிறான். அங்கே மிஸ் வாட்சனின் அடிமையான கறுப்பின இளைஞன் ஜிம் அவனுடன் பழகுகிறான். அவள் தன்னை விற்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்து தப்பி ஓடத் திட்டமிட்டிருப்பதைக் கூறுகிறான். அவனுடன், ஹக்கும் இணைகிறான். இருவரும் மிசிசிப்பி நதியில் ஒரு கட்டுமரத்தில் பயணம் செய்கிறார்கள். ஒரு வெள்ளப் பெருக்கின்போது கரையொதுங்கும், அவர்கள் ஒரு படகு வீட்டைக் காண்கிறார்கள், அங்கு ஜிம், துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடக்கும் ஒருவரது உடலைக் காண்கிறான். ஆனால், ஹக் அதைப் பார்க்க வேண்டாமென்று தடுத்துவிடுகிறான். நகருக்குள் செல்லும் ஹக் அங்கே ஜிம்மைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதை அறிகிறான். ஹக்கை ஜிம்தான் கொலை செய்துவிட்டதாக கதை பரவியிருக்கிறது. ஜிம்மிடம் திரும்பி வருகிறான். இருவரும் மறுபடியும் தங்கள் கட்டுமரத்தில் தப்புகிறார்கள். ஓரிடத்தில் தரைதட்டி நிற்கும் ஒரு நீராவிப் படகைப் பார்க்கிறார்கள். அதில் இரண்டு திருடர்கள், மூன்றாவது நபரைக் கொல்லப் போவதாகக் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹக்கும் ஜிம்மும் அந்தத் திருடர்களின் படகில் தப்பிச் செல்கிறார்கள். இதற்கிடையே பயணத்தில் பல சவால்கள் குறுக்கிடுகின்றன. சமாளித்துத் தொடர்கிறார்கள்.. திடீரெனப் படகு மூழ்கிவிடுகிறது. இருவரும் பனி மூட்டத்தில் பிரிந்துவிடுகிறார்கள். ஒருவழியாக மீண்டும் சந்திக்கிறபோது, இப்படி நடக்கும் என்று தன் கனவில் வந்ததாக ஹக் பொய்யாகச் சொல்கிறான். உண்மை தெரியவரும்போது ஜிம் மிகவும் வருத்தமடைகிறான். தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்தவனான ஜிம் எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறான் என்று அறியும் ஹக் அவனைப் புண்படுத்திவிட்டதை எண்ணி தானும் வருந்துகிறான். இருவரும் நெருக்கமாகிறார்கள். சில வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். எசமானர்களிடமிருந்து ஓடிப்போன கறுப்பின அடிமைகளைப் பிடிக்க வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஹக் அப்படி யாரையும் பார்க்கவில்லை என்று கூறி, ஜிம்மைக் காப்பாற்றுகிறான். ஒரு கட்டுமரத்தில் பயணம் தொடரும் நிலையில் ஒரு நீராவிக் கப்பல் வந்து மோதுகிறது. ஹக்கும் ஜிம்மும் மீண்டும் பிரிகிறார்கள். வழியில், கிரேஞ்சர் ஃபோர்டு குடும்பத்தை சந்திக்கிறான் ஹக்.. அந்தக் குடும்பத்திற்கு சீப்பர்ட்சன் குடும்பத்துடன் முப்பது ஆண்டுகாலப் பகை. இப்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த இருவர் காதலித்து ஓடிப்போன பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.. இரு தரப்பினரின் மோதல் ஒரு கொலையில் முடிகிறது.அங்கிருந்து தப்பிக்கும் ஹக் மறுபடியும் ஜிம்முடன் இணைகிறான். மன்னர் குடும்பம் என்று கூறிக்கொள்ளும் இரண்டு மோசடிக்காரர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மோசடிகளுக்கு ஹக்கையும் ஜிம்மையும் உதவ வைக்கிறார்கள். ஒரு நகரத்தில் மோசடிக்காரர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் மேடை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். மூன்றாம் நாள் இரவில், ஏமாற்றப்பட்டதை அறிந்து பழிவாங்கத் துடிக்கும் முந்தைய காட்சியின் பார்வையாளர்களிடம் தந்திரமாகக் கட்டணத்தை வசூலிக்கும், மோசடிக்காரர்கள் ஓடிவிடுகிறார்கள். அந்த இருவரும் அடுத்த நகரத்தில் அண்மையில் இறந்துவிட்ட பீட்டர் வில்க்ஸ் என்பவரின் சகோதரர்களைப் போல் நடித்து, அவரது சொத்தை திருட முயல்கிறார்கள். ஆதரவற்றவர்களாக நிற்கும் அவருடைய மருமகள்களுக்காக அந்தச் சொத்தை மீட்க ஹக் உதவுகிறான். வில்க்ஸின் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு மேலும் இரண்டு பேர் வருகிறார்கள், குழப்பம் ஏற்படுகிறது. ஹக்கை மோசடிக்காரர்கள் பிடித்து வைக்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஜிம்மைப் பிடித்து பெல்ப்ஸ் என்பவரிடம் விற்றுவிட்டதை ஹக் கண்டறிகிறான். அவனை விடுவிக்க உறுதியேற்கிறான். இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பித்து அங்கே போகிறான். பெல்ப்ஸ் ஹக்கை தங்கள் மருமகன் டாம் சாயர் என்று தவறாக நினைக்கிறார்கள். அவர்களுடன் இணக்கமாகப் பழகுகிறான். திரும்பி வரும் டாம் சாயர் நடப்பதைப் புரிந்துகொண்டு ஹக்கின் நாடகத்திற்கு ஒத்துழைக்கிறான். மன்னர் குடும்பம் என்று ஏமாற்றி வந்தவர்கள் பற்றி எல்லோருக்கும் தெரிவிக்கிறான் ஹக். ஊரார் அவர்களின் முகத்தில் தார் பூசி இறகுகள் ஒட்டி நகரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள். ஜிம்மைத் தப்பிக்க வைக்கும் முயற்சியில் டாம் சாயர் காயமடைகிறான். தப்பித்துச் செல்ல இருந்த ஜிம் அவனைக் கவனித்துக் கொள்வதற்காகத் தங்குகிறான். அப்போது கைது செய்யப்பட்டு பெல்ப்ஸிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறான். அந்நேரம் டாமின் அத்தை பாலி வருகிறார். ஹக், டாம் இருவரது உண்மையான அடையாளங்களை வெளிப்படுத்துகிறார். மிஸ் வாட்சன் இறந்துவிட்டதையும், அவர் தனது உயிலில் ஜிம்மை விடுவித்துவிட்டதாக எழுதியிருப்பதையும் பாலி விளக்குகிறார். டாம் அந்த விசயம் தனக்குத் தெரியும் என்றும், வேண்டுமென்றே அதை மறைத்து ஜிம்மை ஒரு விறுவிறுப்பான முறையில் மீட்க விரும்பியதாகவும் தெரிவிக்கிறான். படகு வீட்டில் இறந்து கிடந்தது ஹக்கின் அப்பா பாப்தான் என்று கூறுகிறான் ஜிம். பெல்ப்ஸ் குடும்பத்தினரால் தத்தெடுத்து வளர்க்கப்படுவதிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக வாழ விரும்பும் ஹக் பூர்வகுடிமக்கள் வாழும் பகுதிக்குச் செல்கிறான். உடைபட்ட தடை குழந்தைகளின் ரசனைக்கான சாகசக் கதையாக எழுதப்பட்ட இந்த நாவல் உண்மையில் கறுப்பின மக்களை எப்படியெல்லாம் வெள்ளையினக் கனவான்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று காட்டுகிறது. ஒரு சிறுவனின் சாகசப் பயணத்தை வைத்து, சமூக நிலவரங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. உண்மை நிலையைக் காட்டுவதற்காக, வசனங்களில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த கடுமையான சொற்களையும் வசவுகளையும் சேர்த்திருக்கிறார் மார்க் ட்வெய்ன் (Mark Twain). வெள்ளைச் சமூகத்தினருக்கு அவர்களது இனவாத ஆணவங்களை அம்பலப்படுத்தியதால் நாவல் பிடிக்காமல் போனது. போலியான காரணங்களைக் கூறி தடை விதிக்க வற்புறுத்தினார்கள். மனசாட்சிப்படி செயல்பட விரும்பும் ஹக் பாத்திரம், மத போதனைகளை மீறுவதாக இருக்கிறது என்று அன்றைய கிறிஸ்துவ மதவாதிகளும் எதிர்த்தார்கள். இனவாத, மதவாதப் பார்வைகளுடன் இருந்த அமெரிக்க மாநிலங்களின் ஆட்சியாளர்கள் நாவலுக்குத் தடை விதித்தார்கள். பல ஆண்டுகள் கடந்த பின்னரே தடை விலக்கப்பட்டது. ‘தி அட்வெஞ்ச்சர்ஸ் ஆஃப் ஹக்கிள்பெர்ரி ஃபின்” (Adventures of Huckleberry Finn) நாவல் வெளியான காலத்தில் பெரிய விருதுகள் ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும், காலப்போக்கில் இந்த நாவல் இலக்கிய உலகில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது. அமெரிக்க இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான படக்கதை வடிவத்திலும், சில திரைப்படங்களாகவும் மக்களிடம் வந்திருக்கிறது. அமெரிக்க இலக்கியத்தின் போக்கை மாற்றியமைத்த புத்தகங்களில் ஒன்று என்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறது. அடிமைத்தனத்திற்கு, இனவெறிக்கு எதிராகக் களம் இறங்குவோருக்கு ஒரு இலக்கியத் துணை என்ற இடத்தையும் பிடித்திருக்கிறது. எழுதியவர்: அ.குமரேசன் https://bookday.in/books-beyond-obstacles-3-the-adventures-of-tom-sawyer-novel-oriented-article-written-by-a-kumaresan/
  5. வாட்ஸப்பில் அரியம் ஐயா.. — வெருகலில் மரணித்த போராளிகளும் மாவீரர்களே..! நேற்று(10/04/2024) வெருகல் படுகொலையின் 21, வது ஆண்டு நினைவு தினம் இடம் பெற்றதாகவும் அதில் முதல் தடவையாக கருணா கலந்துகொண்டார் எனவும் ஊடகப்பரப்பில் செய்திகள் வந்தன. இந்த மோதல் ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணாதான். 2004, மார்ச்,03.ல் விடுதலைப்புலிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாக ஊடகத்தில் கருணா அறிவித்தார். 2004, மார்ச்,06,ல் விடுதலைப்புலிகளில் இருந்து கருணாவை நீக்கிவிட்டதாகவும், அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லைஎன அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஊடகங்களில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார். அதன்பின்னர் தாம் கிழக்குப்புலிகள், வன்னிப்புலிகள், என்ற பிரதேசவாதக்கருத்தை கருணாதரப்பினர் பரப்பி மட்டக்களப்பு நகர்பகுதி, செங்கலடி பகுதி எங்கும் யாழ்ப்பாண வர்தர்கள், யாழ் பொதுமக்கள் மீது பிரதேசவாதக்கருத்தை பரப்பி அவர்களை வெளியேற்றும் காடைத்தனத்தை புரிந்தனர். 2004,ஏப்ரல்,04, பாராளுமன்ற பொதுத்தேர்தல். தேர்தல் முடியும் வரை விடுதலைப்புலிகள் கருணா குழு மீது எந்த நடவடிக்கையையும் செய்யவில்லை. (தேர்தலில் 22, தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு) 2004, ஏப்ரல்,09, இரவு தொடக்கம் 2004, ஏப்ரல்,10, வரை வாகரைக்கும், வெருகல் பாலத்துக்கும்(அப்போது பாலம் இல்லை) இடையில் ஏற்பட்ட மோதலில் கருணாதரப்பை சேர்ந்த போராளிகள் சிலர் உயிரிழந்தனர். 2004,ஏப்ரல்,20, ல் கிளிநொச்சியில் தலைமைச்செயலகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலானாய்வுப்பொறுப்பாளர் பொட்டம்மான், மற்றும் புலிகளின் தளபதிகள் உள்ளிட்டவர்கள் 22, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தினர். அதுதான் 22, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தலைவரின் முதல் சந்திப்பு. இந்த சந்திப்பின்போது நான்(பா.அரியநேத்திரன்) தலைவரிடம் கேட்டேன் கடந்த 2004, ஏப்ரல், 10, ம் திகதி கருணா குழுவினருடன் இடம்பெற்ற மோதலில் கருணாதரப்பில் மரணித்த போராளிகளை மாவீர்ர் பட்டியலில் இணைக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் இனவிடுதலைக்காக போராடவே இயக்கத்தில் இணைந்தார்கள் அவர்களை தவறாக கருணாதான் பயன்படுத்தினார் என்றேன். தலைவர் பதில் கூறுவதற்கு முன்னம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்னிடம் கூறினார் அண்ணர் இந்த விடயங்களை எல்லாம் நாம் இங்கு கேட்ககூடாது என்ரார். அப்போது உடனே தலைவர் தமது கையால் செ.கஜேந்திரனை பேசவேண்டாம். என சைகைகாட்டிவிட்டு” அரியம் அண்ணர் கேட்டதில் என்னதவறு உள்ளது அந்த போராளிகள் இனவிடுதலைக்காகத்தானே போராட்டத்தில் இணைந்தவர்கள் அவர்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது உண்மை .அரியம் அண்ணர் கேட்டது சரி அந்த போராளிகள் அனைவரையும் மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்கிறேன்” என்ரார். (இதற்கு சாட்சியாக அப்போது இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போதும் சிலர் உள்ளனர்) இந்த செய்தி மறுநாள் கிளிநொச்சியில் இருந்து வெளிவந்த ஊடகங்களில் வெளியிடப்பட்டது. கடந்த 21, வருடங்களாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியால் வெருகல் படுகொலை என்ற பெயரில் இதனை நினைவு கூருகிறார்கள். ஆனால் இந்த உயிர் நீத்த அத்தனை போராளிகளும் தலைவரின் கட்டளைப்படி மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டு கார்த்திகை.27, ல் மாவீர்ர் தினநாளில் அவர்களுக்காகவுமே தீபச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது என்பதே உண்மை. “வெருகல் படுகொலை” என வேறுபடுகொலை தினம் உண்டு. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் உள்ளவர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் 1986, காலப்பகுதியில் முதன்முதலாக ஓர் இடப்பெயர்வு இடம்பெற்று ஈச்சலம்பற்றுவில் ஒரு அமைக்கப்பட்டிருந்து. அந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை 1986.யூன்,12 அன்று சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் இராணுவம் மற்றும் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் அந்த படுகொலையையே “வெருகல் படுகொலை” என நினைவு கூருவது குறிப்பிடத்தக்கதாகும். -பா.அரியநேத்திரன்- 11/04/2025
  6. நாளை சனி 12 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் சுவைப்பிரியன் செம்பாட்டான் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 22 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ரசோதரன் இந்தப் போட்டியில் 22 பேர் முட்டைகளைப் பெறுவார்களா அல்லது ஒருவருக்கு மாத்திரம் முட்டைகளா?
  7. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 25வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஐபிஎல் போட்டி என்பதை மறந்து விளையாடியதால் விக்கெட்டுகளை வேகமாகப் பறிகொடுத்துப் பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு தொடரின் 103 ஓட்டங்களையே எடுத்தது. இது தொடரின் அதிகுறைந்த ஓட்டங்களாக வரச் சாத்தியம் உள்ளது! பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகக் குறைந்த வெற்றி இலக்கை விரைவில் அடையும் நோக்கில் வேகமாக அடித்தாடினர். சுனில் நாரயனின் மின்னல் வேக அடியுடனான 44 ஓட்டங்களின் உதவியுடன் 10.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 107 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  8. நான் இன்று கோரஸ் பாடுவதிலிருந்து வெளிநடப்பு செய்யப்போகின்றேன் 😃 😹
  9. வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு rep104April 11, 2025 ருத்திரன் வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் ‘சிவப்பு சித்திரை’ வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று வியாழக் கிழைமை மாலை(10) நினைவு கூறப்பட்டது. நிகழ்வானது தமிழ் மொழி வாழ்த்து பாடலுடன் ஆரம்பிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கான மலர் அஞ்சலியுடன் மௌன வீர அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுச் சுடர் ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை கடந்த 21 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் முதன் முதலாக நிகழ்வில் பங்கு கொண்டு பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார். வழமையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நிகழ்வில் பங்கு கொள்வது வழக்கமாகும். அவர் தனிநபர் ஒருவரின் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதன் காரணத்தால் அவருக்கு பதிலாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் ஜெயம் என்று அழைக்கப்படும் நா.திரவியம் கலந்துகொண்டு நிகழ்விற்கு தலைமை வகித்தார்.இதன்போது உயிர் நீத்தவர்களின் உறவுகள் தங்களது உறவுகளை நினைத்து ஈகைச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதேவேளை தேர்தல் காலம் என்பதால் இம்முறை குறித்த நிகழ்வானது வழமை போன்று ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் சட்ட விதிகளுக்கு ஏற்ற வகையில் நடைமுறைகளை பின்பற்றி நினைவு கூறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கிழக்கு பிளவின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உருவானது. இதன்போது வடக்குப் புலிகள் வன்னிப் புலிகள் என அழைக்கப்பட்டனர். இதனால் இரு சாராருக்குமிடையில் இதே நாள் கதிரவெளி மற்றும் வெருகல் எல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற திடிர் மோதல் காரணமாக வன்னி புலிகளின் தாக்குதல் காரணமாக சுமார் 179 கிழக்கைச் சேர்ந்த ஆண்,பெண் உள்ளிட்ட இரு பாலாரும் கொல்லப்பட்டிருந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இவ் நிகழ்வை நினைவு கூர்ந்து வருகின்றமை வழக்கமாகும். இவ் நிகழ்வில் கலந்து கொண்ட கருணா அம்மான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அன்று போராட்டத்தில் வீனான உயிரிழப்புக்களை தவீர்த்து இராஜ தந்திர ரீதியாக பேச்சுவார்த்தை ஊடாக எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கோடு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலைமையில் நான் உட்பட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம். ஒஸ்லோவிலே இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையிலே எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது. சமஸ்டி முறையிலான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் அடிப்படையில் சமஸ்டி உடன் படிக்கையிலே கைச்சாத்திட்டதன் பிரகாரம் தவறாக புரிந்து கொண்ட தலைமைத்துவம் பிழையான கண்ணோட்டத்தில் பார்வையிட்டது. ஆகவே மீண்டும் ஒரு யுத்தத்தை தொடக்கி வைத்து உயிரிழப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. வடக்கில் இருக்கும் போராளிகளோ கிழக்கில் இருக்கும் போராளிகளாயினும் சரி பெரும் தொகையான போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம் ‘ஜெயசிக்குரு மற்றும் ஆனையிறவு’ சமர் ஆகிய சமர்களில் களமாடிய வீரர்களின் உயிர்களின் இழப்புக்களை சந்தித்திருக்கின்றோம். ஆகவே இந்த இழப்பை தவீர்க்க முற்பட்ட வேளையில்தான் எங்களுக்கிடையில் பிளவு என்பது ஏற்பட்டது. இதன்போது தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் கருத்து முரன்பாடு ஏற்பட்டது. அந்த யுத்தத்தில் இருந்து ஒதுங்கியிருந்தோம். எங்களது போராளிகளை நிராயுத பாணிகளாக யுத்தத்தில் ஈடுபடாது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு பணித்திருந்தோம். அந்த வேளையிலேதான் வன்னியிலிருந்து வந்த புலிகள் கிட்டத்தட்ட 500 போராளிகளை சுட்டு கொலை செய்தார்கள். இது மதிப்புக்குரிய தேசிய தலைவருக்கு தெரிந்து நடந்ததா,தெரியாமல் நடந்ததா என்பது வேறு விடயம். இதனை நான் அறியேன். ஆனால் இங்கு நடந்த கொடுமைகளை நாங்கள் மறக்க முடியாது. தலைவரைக் காப்பாற்ற வன்னிக் களமுனைகளில் இருந்த தளபதிகள் பலர் சரணடைந்த பிற்பாடும் உயிருடன் எரியூட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது போன்ற வேதனையான,கொடுமையான விடயங்கள் எல்லாம் நடந்தேறியது. அதன் பிரகாரம் அரசியல் நீரோட்டத்தில் ஊக்கப்படுத்துக் கொண்டிருந்த வேளையிலே இராஜன் சத்தியமூர்த்தி அண்ணன் கிங்சிலி இராசநாயகம் அவர்கள் சுடப்பட்டனர். இவ்வாறு வகை, தொகையின்றி பொது மக்கள் நிராயுதபானிகள் மற்றும் போராளிகள் எல்லாம்; புலிகளால் கொள்ளப்பட்டனர். அன்று நாங்கள் விலகி இருந்தது என்பது நாங்கள் காட்டிக் கொடுப்பதற்கோ துரோகம் செய்வதற்கோ அல்ல மாறான ஆயுதங்களை கைவிட்டு ஒரு ஜனநாயக ரீதியாக போராட வேண்டும் என்றே ஆயுதங்களை கைவிட்டோம். ஆனால் அந்த காலத்திலே இருந்த ஊடகங்கள் அதனை திரிபுபடுத்தி கிழக்கு மாகானத்தில் உள்ள போராளிகள் அனைவரும் துரோகிகள் என்ற பட்டத்தைச் சூட்டி தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டனர். குறிப்பாக ஜ.பி.சி ஊடகவியலாளர் நிராஜ்டேவிட் என்பவர் சம்பவங்களை நேரடியாக கண்டது போன்று பல விடயங்களை திரிபுபடுத்தி இளைஞர்களுக்கு அவர் ஊட்டியிருந்தார். இன்று அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இன்று பல போராளிகள் தளபதிகள் உலக நாடுகளில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இதனை நிச்சயம் புரிந்திருப்பார்கள். கிழக்கு மாகாண போராளிகளாக யாராவது துரோகியாக இருந்திருந்தால் வன்னியிலே நடந்த போர்க்களத்தில் இருந்த இராணுவ முகாம்களில் நின்றிருப்பார்கள். ஆகவே ஒரு போராளியாவது அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்கள் அதனை நிருபிக்கட்டும் அதன் பிற்பாடு நாங்கள் இந்த கருத்தை வாபஸ் பெறுவோம். ஆனால் நிராயுத பானிகளாக இருந்த இளைஞர்களை புலிகள் துரத்தி துரத்தி கொலை செய்தனர். வேறு வழியில்லை அதனால் அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்கள். தவீர்க்க முடியாத விடயம் அது. அவர்கள் வந்து சுடும் போது தலையை கொடுப்பதற்கு இங்குள்ள இளைஞர்கள் எல்லாம் முட்டாள்களும் அல்ல மடையர்களும் அல்ல. ஆகவே அன்று விடுதலைப் புலிகள் அரசியல் தலைமைகள் சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டிருந்தால் இன்ற அரசியலில் வெற்றி கண்டு உலகமே போற்றுகின்ற அளவிற்கு வடக்கு கிழக்கிலே பாரிய கட்டமைப்போடு இருந்திருக்கலாம். இவற்றையெல்லாம் வருங்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று 21 வருடம் எனவே பிளவிற்கு பின்பு பிறந்த இளைஞனின் வயது 21 ஆகும். எனவே அவ்வாறன இளைஞர்களுக்கு வரலாறுகள் தெரியாது. ஆகவே திரிபுபடுத்துகின்ற வரலாறுகளை ஏற்றுக்கொள்ளாமல் வரலாறுகளை தெரிந்து கொண்டவர்கள் நாங்கள் உங்கள் மத்தியிலே இருக்கிறோம் எங்கள் பின்னால் அணிதிரண்டு எங்களுடைய மாவீரர்கள் குடும்பங்கள் போராளிகள் குடும்பங்களை உயர்த்துவதற்கும் அவர்களது தியாகங்களை கௌரவப்படுத்துவதற்கும் அனைத்து மக்களும் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்றார். எனவே ஒவ் வொரு வருடமும் இதனை செயற்படுத்தி வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார். https://www.supeedsam.com/230624/
  10. நாங்கள் இப்பவும் ரஜினி படம் என்னா “தலீவா” என்று தியேட்டர்வரை போய்க் கொண்டாடுகிறோம்! சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு தோனி “தல”. அந்தக் கொண்டாட்டம் வற்றும் மட்டும் வயசாளி விளையாடுவார்😜
  11. நவக்கிரி சித்த வைத்தியசாலை காணி விடுவிப்பு யாழ்ப்பாணம், அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர். நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியையும் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் கையகப்படுத்தி நிலை கொண்டிருந்தனர். அந்நிலையில் நேற்று (10) குறித்த காணியை மீள கையளித்துள்ளனர். சித்த மருத்துவமனைக்கு தேவையான மூலிகைகளை பயிரிடும் காணியாக குறித்த காணி காணப்பட்ட நிலையில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினர் காணியை கையகப்படுத்தி கடந்த 30 ஆண்டு காலமாக நிலை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cm9c9bqma007mhyg3qjup5zps
  12. ஈஸ்டர் தாக்குதல் இரகசியங்களை அம்பலப்படுத்திய பிள்ளையான் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ! ShanaApril 11, 2025 சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் 10ஆம் திகதி வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; எந்த ஒரு குற்றச்செயல்களையும் எமது அரசாங்கம் மறைக்கபோவதில்லை. அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகின என்றார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குறிப்பிட்டது போல கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவரது சமூக பதிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அவர் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதில் குறிப்பாக சிலர் உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களாக இருந்துள்ளனர். இதனடிப்படையிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார். https://www.battinews.com/2025/04/blog-post_720.html
  13. GMT நேரப்படி நாளை வெள்ளி 11 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 18 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 05 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிரபா வாதவூரான் நுணாவிலான் கிருபன் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  14. ஐபிஎல் 2025 இன் 24வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபில் சால்ற்றினதும் இறுதியில் வந்த ரிம் டேவிட்டினதும் அதிரடி ஆட்டங்களைத் தவிர மற்றைய வீரர்கள் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களையே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் மூன்று வீரர்களும் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் தோல்விக்கான அபாயம் இருந்தது. எனினும் கேஎல் ராகுலின் ஆட்டமிழக்காது பெற்ற 93 ஓட்டங்களுடனும் ட் ரிஸ்ரன் ஸ்ரப்ஸின் வேகமான 38 ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு கோரஸ் கூட்டத்தில் இருந்து சற்று மேலே முன்னேறியுள்ளார் 😁
  15. யாழ் – கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்! April 10, 2025 ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது. யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை யூலை மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும். அதற்கான முன் ஏற்பாடு ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் புனித பாதயாத்திரைக் குழுவில் பக்திபூர்வமான முறையில் பங்குபெறவிரும்பும் அடியவர்கள் ( 0763084791 ) குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார். மகிமைகள் பொருந்திய இவ்வருட 2025 கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 9ம் திகதி சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.supeedsam.com/230585/
  16. படலந்த மற்றும் மாத்தளை தவிர வேறு சித்திரவதைக் கூடங்கள் இருந்தவனா? April 10, 2025 11:21 am ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்களை விசாரிக்க ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட மத்திய வலைய ஆணைக்குழுவின் செயலாளர், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP), இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS) மற்றும் இலங்கை பிரச்சாரம் (SLC) ஆகியவற்றால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் மூலம் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் 200ற்கும் மேற்பட்ட சித்திரவதைக் கூடங்களைக் காட்டும் முதல் வரைபடத்தை தொகுக்கப்பட்ட ITJP மற்றும் JDS வெளியிட்ட மாத்தளை சித்திரவதைக் கூடங்கள் மற்றும் காணாமல் போன சம்பவங்களில் கோட்டாபய ராஜபக்சவின் பங்கு குறித்து 2022 மற்றும் அதற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து விசாரணை செய்ய எந்த அரசாங்கமும் ஆர்வம் காட்டவில்லை. http://www.jdslanka.org/images/documents/18_06_2020_itjp_jds_press_release.pdf தேர்தல் காலத்தில் படலந்த சித்திரவதைக் கூடம் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்த தற்போதைய அரசாங்கம் அவசரமாக ஆர்வம் காட்டுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அது குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் அல் ஜசீரா சர்வதேச ஊடக வலையமைப்பு ஏற்படுத்திய தாக்கமே காரணமாக அமைந்துள்ளது. கடந்த தசாப்தத்தில் மாத்தளை, மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த விடயத்தில் நாடாளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு எந்த அரசாங்கமும் முன்மொழியவில்லை. 1980களின் பிற்பகுதியில் நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களை விசாரணை செய்ய ஜனாதிபதி சந்திரிக்காவால் நிறுவப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் மத்திய வலைய செயலாளர் எம்.சி.எம்.இக்பால் அண்மையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படலந்த வெறும் ஒரு சித்திரவதை கூடம் என்பதை வெளிப்படுத்துகிறார். “ஆனால் படலந்த எனப்படுவது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட பல தடுப்பு மையங்களில் ஒன்று அவ்வளவுதான். உதாரணமாக, கண்டியில் உள்ள புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் ஒரு சித்திரவதைக் கூடம் இருந்தது.” அந்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது மற்ற தோழர்களைப் போல மரணத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, தற்செயலாக தனது உயிரைக் காப்பாற்றப்பட்டதற்காக ‘சான்ஸ் காரயா’ என்ற புனைப்பெயரைப் பெற்ற ஒரு இளைஞன், காணாமல் போனோர் தொடர்பிலான மத்திய வலைய ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியத்திலிருந்து தான் இதைப் பற்றி அறிந்துகொண்டதாக இக்பால் குறிப்பிடுகின்றார். இக்பால் சொன்னதை கேட்க – https://x.com/JDSLanka/status/1909262030101422349 இது மீண்டுவர அனுமதிக்கப்படாத பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவரின் கதை மாத்திரமே. இது பதுளையில் உள்ள ஹாலிஎல மோட்டர்ஸ் சித்திரவதை கூடம் பற்றிய கதை – https://x.com/SLcampaign/status/1909656056642306527?t=KG-1pG4p8rahfzRmlOWdAA&s=09 மத்திய வலைய ஆணைக்குழுவால் ஆவணப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழு பட்டியலையும் இந்த இணைப்பில் அறிந்துகொள்ள முடியும். – http://tinyurl.com/2zyhxeek https://oruvan.com/were-there-other-torture-chambers-besides-patalanda-and-matale/
  17. ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு புதின் அழைப்பு April 10, 2025 11:50 am எதிர்வரும் மே மாதம் 9-ம் திகதி நடைபெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இரண்டாவது உலக போரில் ஜெர்மனியும் அப்போதைய சோவியத் யூனியனும் கடுமையாக மோதிக் கொண்டன. பின்னர் 1945-ம் ஆண்டு சோவியத் யூனியன் தாக்குதலை சமாளிக்க முடியாத ஜெர்மனியின் நாஜி படைகள் சரணடைந்தன. அதன்படி 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் திகதி பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ நேற்றுமுன்தினம் தெரிவித்தார். பிரதமர் மோடி பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று ஆண்ட்ரே கூறினார். மோடியும் புதினும் 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது தொலைபேசியில் பேசிக் கொள்கின்றனர். மோடி கடந்த ஆண்டு ரஷ்ய பயணம் மேற்கொண்டார். அப்போது புதினுடன் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி புதின் இந்த ஆண்டுக்குள் இந்தியா வருகை தருவார் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியது. https://oruvan.com/putin-invites-modi-to-attend-russian-victory-day-celebrations/
  18. திருடப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை பல வரலாற்றுப் பதிவுகளும் இடம்பெறவுள்ளன.அதாவது, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகளவான அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடும் தேர்தல்,அதிகளவான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட தேர்தலாகும். நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 339 உள்ளூராட்சி சபைகளுக்கு இத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 8,300க்கு மேற்பட்ட ஆசனங்களுக்காக 80,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் களமிறங்குகின்றனர். இதில், சில கூட்டணிகள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டபோதிலும், பல கூட்டணிகளின் பேச்சுக்கள் தோல்வியடைந்து கூட்டணி முறிவுகளும் இடம்பெற்றுள்ளன. இதில் பிரதான சில தமிழ்த் தேசிய கட்சிகள் தேர்தல் முடிவடைந்த பின்னர் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போது ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்த ஆட்சியமைப்பது தொடர்பில் பேசலாம் என்ற திட்டத்துடனும் உள்ளன. இவ்வாறாக வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற அமைக்கப்பட்ட கூட்டணிகளில் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற கூட்டணி விசித்திர கூட்டமைப்பாக அமைந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற கூட்டணியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (தற்போது சிறையில்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (ஆட்கடத்தல்கள், படுகொலைகள் குற்றச்சாட்டுக்களினால் பிரிட்டன் அரசால் தடை விதிக்கப்பட்டவர்) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் அமல் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (தற்போது சிறையில்) தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகம் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ள பிள்ளையான், கருணா அம்மான் அடுத்தவரான சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இந்த மூவரின் மீதும் தமது தலைமைகளை காட்டிக் கொடுத்தல், தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்தல், குற்றச்சாட்டுக்களை விடவும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், கப்பம் கோரல்கள், மணல் கடத்தல்கள், காணி பிடிப்புக்கள், இலஞ்சம் கோரல், ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதில் பிள்ளையான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக 2015 அக்டோபர் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிள்ளையான் சிறையில் இருந்தவாறே 2020 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். இதனையடுத்து, 2020 நவம்பர் 24 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார். இந்நிலையில், பிள்ளையான் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் வாக்குமூலங்களையும் அளித்துள்ளார். இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நேர்மையாக நடைபெறுமாகவிருந்தால் பிள்ளையான் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்று கூறப்படுகின்றது. இதற்கிடையில் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை (08) இரவு பிள்ளையான் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. அடுத்தவரான கருணா அம்மான், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004இல் வெளியேறி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். அரசின் ஒட்டுக்குழுவானார். இதற்கிடையில் கருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர், மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை அடுத்து, 2007 அரசினால் போலிக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, ரகசியமாக லண்டனுக்குச் சென்ற கருணா அம்மான், போலி கடவுச்சீட்டு வைத்திருந்ததாக அங்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில், அரசியலில் நுழைந்த அவர், 2008 அக்டோபர் 7ஆம் திகதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். பின்னர், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து, உப தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இவர், 2010 பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர், மக்கள் செல்வாக்கை இழந்த இவர், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தபோதும் அரசியலில் ஒதுங்கியே இருந்தார். இவர் மீது பல்வேறு படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் உள்ளன. இவ்வாறான நிலையில்தான் இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகக் கருதப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூரியா, ஆகியோருடன் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய கருணா அம்மானுக்கும் பிரிட்டன் அரசு அண்மையில் தடை விதித்தது. அடுத்தவர் சதாசிவம் வியாழேந்திரன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினரான இவர், 2015 பாராளுமன்றத் தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது, 2018 ஒக்டோபர் 26இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக அறிவித்தார். இதனையடுத்து, மஹிந்த ராஜபக்‌ஷ தனது பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்‌ஷவின் நியமனத்தினை எதிர்த்த நிலையில், வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளித்து கட்சி தாவினார். இவருக்கு 2018 நவம்பர் 2இல் ராஜபக்‌ஷவின் அரசில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் இவருக்கு மஹிந்த அரசில் தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இறுதியாக நடந்த தேர்தலில் போட்டியிட முனைந்தபோதும், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டது. ஆக, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையமாக வைத்து ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாக உள்ளவர்களில் ஒருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க சிவநேசதுரை சந்திரகாந்தன், கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமல் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய மூவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவே உள்ளனர். அதுமட்டுமல்ல, ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரை முறையற்ற விதத்தில் தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, மேற்படி கூட்டுக்கு எமது அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றோம். தொடர்ந்தும் பெயரைப் பயன்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உண்மையான தலைவர், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 15.03.2025 அன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவனேதுரை சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் தலைமையிலான தமிழ் மக்கள் வி டுதலைப் புலிகள் கட்சியும் தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைத்துள்ளனர். ஆனால், 2018ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ‘கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின்’ அரசியல் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரிலான அரசியல் கட்சியொன்று தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் தலைமையில் 2018இல் உருவாகி அதற்குத் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கடிதத் தொடர்பாடல்கள் 2019ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற கூட்டணியின் தலைவர்களும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களாகவும் சிறைகளில் இருந்தவர்களாகவும் இருப்பவர்களாகவும் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ம் இன்னொருவரிடமிருந்து திருடப்பட்டதாகவும் உள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திருடப்பட்ட-கூட்டமைப்பு/91-355411
  19. இலங்கை மீதான வரியை நிறுத்தி வைத்தார் டிரம்ப் இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சீனாவிற்கு எதிரான வரிகள் 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா இன்று (9) முதல் 104% வரி விதித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீன நிதி அமைச்சகம் இன்று பிற்பகல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரி விதிக்கப்போவதாக அறிவித்தது. அதன்படி, சீனாவின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மீண்டும் ஒருமுறை வரி விகிதத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இலங்கை-மீதான-வரியை-நிறுத்தி-வைத்தார்-டிரம்ப்/50-355396
  20. நாவற்குழியில் பாலியல் விடுதி; மூன்று பெண்கள் கைது யாழ்ப்பாணம் - நாவற்குழிப் பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே, மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 40, 42 மற்றும் 53 வயதுடையவர்கள் என்றும், விடுதியை நடத்திவந்த உரிமையாளர் 68 வயதுடையவர் என்றும் பொலிஸார் தமது விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://newuthayan.com/article/நாவற்குழியில்_பாலியல்_விடுதி;_மூன்று_பெண்கள்_கைது
  21. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை தவறாக வழிநடத்திய புலனாய்வு உத்தியோகத்தர் கைது! Vhg ஏப்ரல் 09, 2025 மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை கொலை செய்த சம்பவத்தை சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய மட்டு. கரடியனாறு தேசிய புலனாய்வுத்துறை சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சி.ஜ.டியினர் கொழும்பில் வைத்து நேற்று இரவு (08-04-2025) கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப் புலிகளிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த அஜந்தன் இந்த படுகொலையை செய்ததாக அறிக்கையிட்டதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியை கொழும்பிலுள்ள சி.ஜ.டி நான்காம் மாடியில் தடுத்துவைத்த நிலையில் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் ஸஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் ஸஹரானின் சாரதியான முகமது சரிப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ். நில்காம் உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்தது. அதன்பின்னர் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர். இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றம் சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதனுடன் தொடர்புடைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் தேசிய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவரையும் சி.ஜ.டியினர் வரவழைத்து அவர்களிடம் விசாரணையை முன்னெடுத்த நிலையில் மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை நேற்று கொழும்புக்கு வரவழைத்த சி.ஜ.டியினர் கைதுசெய்தனர். https://www.battinatham.com/2025/04/blog-post_66.html
  22. ரவீந்திரநாத் பிள்ளையான் கும்பலால் எப்படி கடத்தப்பட்டார்! Vhg ஏப்ரல் 10, 2025 துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்கள் மார்கழி 15, 2006 அன்று "Triploli Platoon-பிள்ளையான்" கூட்டு கும்பலால் கடத்தி காணாமலாக்கப்பட்டார் புரட்டாதி 20, 2006 முதல் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பல்வேறு வழிகளில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டார் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கிழக்கு பல்கலை கழக துணைவேந்தராக இருக்க முடியாது என்கின்ற தோரணையில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது தொலைபேசி வழியில் தொடங்கிய அச்சுறுத்தல்கள் ஒரு கட்டத்தில் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பால சுகுமாரை கடத்திச் சென்று பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்தால், கலாநிதி பால சுகுமாரை விடுவிப்போம் என கட்டாயப்படுத்த்துமளவிற்கு எல்லை மீறியது இராணுவம் மற்றும் பொலிஸ் கண் முன்னே அவர்கள் வேடிக்கை பார்க்க இவை நடந்தேறின இவ்வாறான நெருக்கடிகளால் பாதுகாப்புமின்றி பணியாற்ற முடியாத சூழலில் துணைவேந்தர் ஐப்பசி 1, 2006 அன்று இரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குப் இடம்பெயர்ந்தார் மறுநாள், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் 30.10.2006 திகதியிட்டு தனது ராஜினாமாவையும் சமர்ப்பித்தார் ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக அவரை கொழும்பிலிருந்து பணியாற்றுமாறு பணித்தது. துணைவேந்தர் ஒருவரின் ராஜினாமாவை தங்களால் ஏற்று கொள்ள முடியாது என வாதிட்டது இந்த நெருக்கடிகள் குறித்து பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பொலிஸ் யில் மேற்கொண்ட முறைப்பாடுகளும் தட்டி கழிக்கப்பட்டன பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களை பாதுகாக்க கோட்டாபய ராஜபக்சவின் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சே ஆட்சியாளர்களும் முயற்சிக்க வில்லை மாறாக இராணுவ புலனாய்வாளர்களும் ஒட்டுக்குழுக்களும் தாங்கள் நினைத்ததை செய்ய கூடிய சுதந்திரத்தை வழங்கியிருந்தார்கள் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்குபற்றிய Sri Lanka Association for the Advancement of Science யின் Conference யில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பங்குபற்றினர் கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த Vidya Mawatha (பௌத்தலோக மாவத்தைக்கு அருகில்), கொழும்பு 7 இல் நடைபெற்ற இவ் Conference நடைபெற்றது அன்று 8.30 மணிக்கு, பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களை அவரது மகளின் தெஹிவளை அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து Conference இற்கு பல்கலை கழக காரில் சென்றிருந்தார் மதியம் 12.25 மணிக்கு, பேராசிரியர் ரவீந்திரநாத் தனது சாரதிக்கு தொலைபேசியில் பேசியிருந்தார் பழுதுபார்க்கும் பணி இன்னும் நடந்து கொண்டிருப்பதால், உடனடியாக வர முடியாமல் இருக்கின்றது என சாரதி துணைவேந்தருக்கு பதிலளித்திருக்கின்றார் இதை தொடர்ந்து துணைவேந்தர் தனது சாரதியை மதியம் 2.00 மணிக்கு தன்னை அழைத்து செல்ல வருமாறு அறிவுறுத்தியிருக்கின்றார். இதற்கு பின் Conference மண்டபத்திலிருந்து மற்றுமொரு தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க வெளியேறிய சில நிமிடங்களில் அவர் கடத்தப்பட்டார் என சொல்லப்படுகின்றது இவ்வாறு கடத்தப்பட்ட அவர் அங்கிருந்து 300 KM தொலைவில் இராணுவ முகாம்களுக்கு மத்தியிலிருந்த தீவுசேனை பிள்ளையான் முகாமிற்கு கொண்டு வரப்பட்டார் இருதநோயாளியான அவரை தனக்குரிய மருந்துகளை கூட எடுக்க அனுமதிக்காமல் பங்கர் ஒன்றில் 3 நாட்கள் பிள்ளையான் தடுத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகின்றது இலங்கை இராணுவத்தின் Triploli Platoon பிள்ளையனோடு சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியிருந்தார்கள் கோத்தபாயா ராஜபக்சே, மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, பிரிகேடியர் அமல் கருணாசேன உட்பட புலனாய்வு கட்டமைப்பின் ஒத்துழைப்பு வழங்க உயர் பாதுகாப்பு வலயத்தில் கடத்தப்பட்ட துணைவேந்தரை எவ்வித தடையுமின்றி 300 KM தொலைவிற்கு Triploli Platoon-பிள்ளையான் கூட்டு கொண்டு சென்றது இந்த சம்பவத்தில் மேஜர் பிரபாத் புலத்வத்தே மற்றும் கேணல் சாமி குணரத்தின கீழ் இயங்கிய Triploli Platoon யின் தொடர்பை பிள்ளையான் கூட்டாளி அஸாத் மௌலானா உறுதி செய்கின்றார் அதே போல அக் காலப்பகுதியில் பிள்ளையான் குழுவிற்கு பொறுப்பாகவிருந்து பிள்ளையானை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே வழிநடாத்தியதாக அஸாத் மௌலானா பதிவு செய்கின்றார் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் அவரது விடுதலையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடையவும் இச் சம்பவத்தின் பின்னணியிலிருந்து மேற்படி இராணுவ தொடர்புகளே காரணமாக இருந்தது மஹிந்த ராஜபக்சே அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டார்கள். கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். கருணா -பிள்ளையான் குழுவுடன் நேரடியாகப் பேசினர்கள் மனித உரிமை கண்காணிப்பகம் , சர்வதேச மன்னிப்பு சபை , UN High Commissioner for Human Rights, புகழ்பெற்ற சர்வதேச கல்வியாளர்கள் உட்பட என சகல தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன ஆரம்பத்தில் துணைவேந்தரின் ராஜினாமாவை ஏற்று கொள்ள மறுத்த பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அவர் கடத்தப்பட்ட பின்னர் 19 தை 2007 யன்று அவர் இராஜினாமாவை ஏற்று கொண்ட போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை . பிள்ளையானை பயன்படுத்தி வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை கூர்மைப்படுத்த இராணுவ புலனாய்வு கட்டமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களை காணாமலாக்கியது இப்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் இச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார் ஆனால் பிள்ளையானை இயக்கிய கோத்தபாயா ராஜபக்சே அடங்கலான புலனாய்வு வலையமைப்பை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே சம்பவத்தின் முழு பின்னணியையும் கண்டறிந்து குற்றச்செயலை உறுதிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு பெற்று கொள்ளலாம். https://www.battinatham.com/2025/04/blog-post_10.html
  23. GMT நேரப்படி நாளை வியாழன் 10 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி கந்தப்பு ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.