Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. பிள்ளையானுடன் கலந்துரையாட விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் உள்ள 'பிள்ளையான்' எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை அழைத்து, உரிய வாய்ப்பை கோரியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. தடுப்புக்காவலில் உள்ள ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் கலந்துரையாடுவது சட்டவிரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இருப்பினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் வழக்கறிஞராகச் செயல்படும் உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புவதாகக் கூறி கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, உதய கம்மன்பிலவுக்கு சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையிலும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cm9i25f2o00cnhyg39tp5hgrh
  2. GMT நேரப்படி நாளை செவ்வாய் 15 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 21 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் செம்பாட்டான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 30வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளை இழந்ததனால் ரிஷப் பந்தின் 63 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் வெல்லும் வாய்ப்பு குறைந்திருந்தது. எனினும் ஷிவம் டுபேயின் நிதானமான 43 ஓட்டங்களுடனும் இறுதியில் வாணவேடிக்கை காட்டிய தோனியின் 26 ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  4. காவல் தெய்வம் சேவகர் தி. செல்வமனோகரன் July 10, 2024 | Ezhuna மனிதர் ஆதிகாலத்தில் நாகரிகமுற்று நிலையான குடியிருப்புகளை அமைத்து வாழத்தலைப்பட்ட காலத்தில் அவர்களது வாழ்வு இரு அடிப்படைகளைக் கொண்டமைந்தது. ஒன்று காதல்; காமம் உள்ளிட்ட உணர்வுகளைச் சார்ந்த அகவியல் அம்சங்கள். மற்றையது வீரம்; கொடை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட புறவியல் அம்சங்கள். வீரம் என்பது பகை வெல்லல், தலைமை தாங்குதல், வேட்டையாடுதல், உடலுள வலிமை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. இனக் குழுத்தலைவன் அல்லது வீரன் தன் இனத்திற்காக உயிர் துறக்கும் போது தெய்வமாக மதிக்கப்பட்டான். நீத்தார் பெருமை பேசப்பட்டது. முன்னோர் வழிபாட்டில் அதுவும் ஓரங்கமாயிற்று. இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்களால் நிகழும் ஆபத்துகளில் இருந்து தம்மைக் காப்பாற்றிய வீரனை மக்கள் கொண்டாடினர். அவனைத் தலைவனாக்கினர் அல்லது தலைவனுக்குச் சமமாகவோ அடுத்த தரத்திலோ வைத்து மரியாதை தந்தனர். அவன் இறந்தானாகில் அது நினைவு நாளாயிற்று; அவன் வழிபடப்பட்டான். தமிழகத்தில் இவ்வழிபாடு கல்லாக, நடுகல்லாக, வீரக்கல்லாக, கற்திட்டையாக, கற்பதுக்கையாக, பள்ளிப்படையாக பல்பரிமாணமுற்றுக் காணப்படுகின்றது. மனிதர்கள், தெய்வங்களை உருவகம் செய்த பொருட்களில் ‘கல்’ பிரதானமானது என்பது குறிப்பிடத்தக்கது. ‘நடுகல் வழிபாடு’ இன்றும் ஈழத்துப்புலத்தில் சிறப்புற்றுக் காணப்படுகின்றது. வீரர்களைக் கொண்டாடும் மரபு ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. அண்ணமார், கூட்டத்தார், முதலி உள்ளிட்ட தெய்வங்கள் இதற்கு உதாரணங்களாகின்றன. ஈழத்துப்புலத்தில் இவ்வாறான கிராமியத் தெய்வங்கள் பல காணப்பட்டுள்ள போதும் சில இற்றைவரை உரிய வகையில் அடையாளப்படுத்தப்படவோ, ஆய்வுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. அந்த வகையில் ‘சேவகர்’ தெய்வமும் அவற்றுள் ஒன்றாக விளங்குகின்றது. சேவகர் யாழ்ப்பாணத்தோடு இணைந்துள்ள தீவுகளில் ஒன்று காரைநகர் ஆகும். இலங்கையில் காரைதீவு என்ற பெயர் மூன்று இடங்களில் வழங்கப்படுதலால் யாழ்ப்பாணத்துடன் இணைந்துள்ள இத்தீவு காரைநகராயிற்று. ‘திண்ணைப்புரத் திரியந்தாதி’ தந்த கார்த்திகேய ஐயரே நூற்காப்பில் காரைநகர் என்னும் சொல்லை முதன்முதலில் கையாண்டுள்ளார். 1887 இல் தட்சிண கைலாசபுராணத்தைப் பதிப்பித்தவரான சிவசிதம்பர ஐயர் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார். 1923.9.12 இல் இப்பெயர் அரசு அங்கீகாரம் பெற்றது. இந்த ஊரில் தான் ‘சேவகர்’ எனும் தெய்வம் வழிபடப்பட்டு வருகிறது. இப்பெயரிலான தெய்வம் வேறெங்கும் இருப்பதாக அறிய முடியவில்லை. தமிழ் அகராதிகள் ‘சேவகம்’ என்ற சொல்லுக்கு சேவகத்தொழில், சோம்பு, துயில், பேயுள்ளி, யானைத் துயிலிடம், வணக்கம், வீரம், வேலை எனவும் ‘சேவகனார்’ என்பதற்கு ஐயனார் எனவும் ‘சேவகன்’ என்பதற்கு ஐயன், சிற்றாமுட்டி, பணிவிடைக்காரன, பேயுள்ளி, வீரன் எனவும் பொருள் சுட்டுகின்றன. இங்கு சேவகனார் என்பது ஐயனார் எனவும், சேவகன் என்பது ஐயன் எனவும் வருதல் கொண்டு இது ஐயனார் வழிபாடு எனக் கொள்ளலாமா எனின், ஐயனார் வழிபாடு இவ்வூரில் தனித்துக் காணப்படுகின்றமை சுட்டதக்கது. ஆக, இங்கு ஐயன் (தலைவன்), பணிவிடைக்காரன், வேலைக்காரன், வீரன் என்பனவே பொதுநிலையில் நிற்கின்றன. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தைப் பதிப்பித்து அடிக்குறிப்பும் எழுதியவரான உ.வே. சாமிநாதையர், வீரர்களைச் சான்றோர் எனக் கூறும் மரபு உண்டு எனக் கூறி ‘தானைச் சான்றோர்’ (பதிற்றுப்பத்து – 82,13) என்பதனை எடுத்துக்காட்டுகின்றார். சான்றோர் என்பது போரிடுவதில் சிறந்தவர் என்றாகின்றது. பதிற்றுப்பத்தில் சேரமன்னர்கள் ‘சான்றோர் மெய்ம்மறை’ (பதிற்றுப்பத்தில் – 14,12; 52,11) எனப்படுகின்றனர். போர் வீரருக்குக் கவசம் போல சேரன் முன்னால் நின்றான் என இது விளக்கப்படுகிறது. புறநானூறும் போர்வீரரை ‘தேர் தர சான்றோர்’ (63;5) என்கின்றது. பல்வேறு குடிகளைச் சேர்ந்தவர்களும் போர்வீரர்களாக இருந்துள்ளனர். ஆக, பல குடிகளின் கூட்டாகப் போர்ப்படை இருந்துள்ளமை கவனத்திற்குரியது. கேரளதேசத்தின் (சேரநாடு) ‘சோகன், சோகொன், சேகுவன்’ எனும் பெயர்கள் ஈழவர் என்னும் ஜாதியினருக்கு வழங்கப்படுவதாகவும், இவர்கள் ஈழதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. சான்றோர் எனும் சொல்லின் வழிவந்த சொல்லே சேவகன் என்றும், சேவகன் எனும் சொல்லின் திரிபே ‘சோகன், சோகொன், சேகுவன்’ என்றும் பி.எல். சாமி குறிப்பிடுகின்றார்(சாமி,பி.எல்.,1982, 87). சேவகன் என்னும் சொல் பல்லவர் கால, சோழர் காலக் கல்வெட்டுகள், நடுகற்கள் பலவற்றிலும் காணப்படுகின்றது. சடையவர்மன் சுந்தரச் சோழ பாண்டியன் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் “திருவொற்றைச் சேவக மாயலட்டியோன்” எனும் சொற்றொடர் காணப்படுகிறது. பாண்டியர் கல்வெட்டுகளிலும் ‘ஒற்றைச் சேவகன்’ எனும் சொற்றொடர் காணப்படுகிறது. இதே போல அட்டாலைச் சேவகன் (சமையற்காரனாகவும் போர் வீரனாகவும் இருப்பவன்) முதலான சேவகர் பற்றிய குறிப்புகள் உண்டு. போர்வீரர்கள், நடுகற்கள் வைத்து வழிபடப்பட்டனர். சங்கம் தொட்டு நடுகற்கள் மக்களால் மலரிட்டு விளக்கேற்றி வழிபடப்பட்டன. அதேவேளை நடுகற்கள் போர் வீரருக்கு மட்டுமானவையல்ல. போர் வீரருக்கான முக்கிய வழிபாட்டுக் கட்டுமானம் ‘பள்ளிப்படை’ ஆகும். போரில் வீரத்துடன் ஈடுபட்டு மரணித்த மன்னருக்குக் கட்டப்படுவதே பள்ளிப்படை என்று ஒரு சாரார் கூறினாலும் படைத்தலைவர்களுக்கும் பள்ளிப்படை அமைக்கப்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் சான்றுபடுத்துகின்றனர். தமிழகத்தில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் நடுகற்களும், சமாதியமைத்து வழிபடும் வழிபாட்டு முறைகளுமே காணப்பட்டுள்ளன. வீரருக்கான சமாதிக் கோயில்களே பள்ளிப்படைக் கோயில்களாகப் பரிணமித்ததாக அறியமுடிகிறது. முன்னோர் வழிபாட்டின் வழி தோற்றம் பெற்ற கோயிலின் ஒரு கட்ட அல்லது ஆரம்பகட்ட நிலையாகப் பள்ளிப்படை அமைந்துள்ளது என்பர். திருவாசகத்திலும் ‘சேவகன்’, ‘அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க’ (திருவண்டப் பகுதி,20), ‘சேவகனாகித் திண் சிலையேந்தி’ (போற்றித் திருவாகவல், 2.81) எனும் வரிகள் வீரமுடையானைக் குறித்தே பயன்படுத்தப்படுகின்றன. எது எவ்வாறு இருப்பினும் ‘சேவகன்’ என்ற பெயரிலான தெய்வ வழிபாட்டு முறை பெருமெடுப்பில் இருந்ததாக அறியமுடியவில்லை. சோழராட்சியின் முடிவில் அல்லது அதற்குப் பின் தோன்றிய கந்தபுராணத்தில், “எய்யும் வார்சிலை யெயினர் மாதராள் உய்யுமாறு தன்னருவ நீத்தெழீஇச் செய்ய பேரருள் செய்து சேவகன் மையன் மானுட வடிவந் தாங்கினான்” (வள்ளி திருமணப்படலம், 65) என முருகனைப் போர்வீரனாக, சேவகனாகக் கச்சியப்பர் சுட்டுகின்றார். தமிழகப்புலத்தில் இவ்வாறு இருக்க, ஈழத்தில் சேவகன் எனும் சொல் கொண்ட கல்வெட்டுகளையோ, நடுகற்களையோ, காரைநகர் தவிர்ந்த இடங்களில் கோயில்களையோ காணமுடியவில்லை. காரைநகரில் சேவகர் கோயில்கள் காரைநகரில் வலந்தலை, களபூமி, பலிகாடு, கருங்காலி, தங்கோடை, கோவளம் எனும் பெருங்குறிச்சிகள் உள்ளன. இவற்றுள் வலந்தலைக் குறிச்சியிலும் அதனை ஒட்டிய ஊர்களிலுமே சேவகர் வழிபாடு காணப்படுகின்றது. வலந்தலைப் பகுதியில் காரைநகர் தியாகராசா மகாவித்தியாலயம் என முன்னர் குறிப்பிடப்பட்ட காரைநகர் இந்துக் கல்லூரியை அண்மித்து, சேவகர் கோயில் ஒன்று உண்டு. அது சிறுகோயில்; அரசமரத்தின் கீழ் உள்ள சமாதியின் மீது கட்டப்பட்டதாக அக்கோயிலை ஆதரித்து வருகின்றவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல ‘மாப்பாண ஊரி’யில் (இது சோனகடைப்பள்ளி என்று முன்பு கூறப்பட்டது) இரு சேவகர் கோயில்கள் உள்ளன. வெறுங்காணி ஒன்றில் பனைமரத்தின் கீழ் இத்தெய்வம் இருந்ததாகவும், அது வேளாளர் ஒருவரின் காணி எனவும், அக்காணியில் முக்குவர் குலத்தவரான தம்மை உட்செல்லவிடாது வேலியடைத்ததாகவும், அதனால் தனது தமையனார் அதற்கு எதிரேயுள்ள தனது காணியில் புதுக்கோயில் ஒன்றை உருவாக்கியதாகவும், தற்போது இரு கோயில்களையும் பராமரித்துவரும் திரு.க. நவரத்தினராசா (வயது 65) தெரிவித்தார். வெடியரசன் வீதியை அண்மித்துள்ள ‘ஆயிலி’ எனும் இடத்தில் சேவகர் கோயில் ஒன்று உண்டு. கொல்ல(ர)டைப்பு, வேரப்பிட்டி, மல்லிகை போன்ற குறிச்சிகளிலும் சேவகர் கோயில்கள் காணப்படுகின்றன. வேரப்பிட்டி, மல்லிகை எனும் இரு இடங்களிலும் ‘சேவகர் வீதி’ என கோயிலுக்கான வீதிக்குப் பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது. இவ் ஏழு கோயில்களையுமே எம்மால் அடையாளப்படுத்த முடிந்தன. இந்தக் களவாய்வுக்கு உதவிபுரிந்த திருமதி மகிழினி கோடீஸ்வரன் மற்றும் சுவிந்தன், நவிசா ஆகியோரின் உதவியோடு இக்கோயில்கள் இருக்கின்ற சமூகங்கள் பற்றி ஆராய்ந்தோம். இதில் இரு கோயில்கள் வேளாளருடையது; இரு கோயில்கள் முக்குவருடையவை; மேலும் இரு கோயில்கள் பள்ளர் சமூகத்திற்குரியவை; மிகுதி ஒன்று கொல்லர் சமூகத்திற்குரியது என்பதும் கவனத்திற்குரியது. ஆகவே இத்தெய்வம் பல்சமூக வழிபாட்டுக்குரியது என்பது தெளிவாகின்றது. தமிழக அறிஞர் பி.எல். சாமி ‘சான்றான், சேகுவர், சோகன, சேகொன், சாணார்’ எனும் சொற்கள் கேரள ‘ஈழவர்’ சமூகத்தைக் குறிப்பதாகப் பல ஆதாரங்கள் வழி எடுத்துரைக்கின்றார். பல்லவர் காலத்தில் தமிழகம் வந்த ஈழத்தவர்களே தென்னைகளை, அவற்றிலிருந்து கள் இறக்குதலை அறிமுகம் செய்தவர்கள் என்றும் இவர்கள் போர்வீரர்களாக இருந்தமையையும் ஆதாரப்படுத்துகிறார். போரற்றுப் போன காலத்தில் கள்ளிறக்குபவர்களாக மட்டும் இருந்ததனால் ஈழவர் சாதி, சாணார் சாதியாகக் கீழ்நிலைப்படுத்தப்பட்டது என்கிறார். ஈழத்தில் சாணாரை ஒத்த நளவர் சமூகத்தின் தெய்வமா சேவகர்? எனும் வினா எழுகிறது. இக்கருத்துரு, சீவல் தொழிலாளர்களின் (நளவர் சமூகத்தின்) தெய்வமாகிய கூட்டத்தாரைக் குறிக்க வாய்ப்புண்டு. காரைநகரில் நிலவும் சேவகர் தெய்வத்தை பல்சமூகத்தினர் வழிபடுகின்றனர். இங்கிருக்கும் சீவல் தொழிலாளர்கள் (கள் இறக்குபவர்கள்) பள்ளர் சமூகத்தவரே என்பதும், சேவகர் வழிபாடு நிகழும் இவ்வேழு கோயில்களும் உள்ள குறிச்சிகளில் நளவர் சமூகத்தினர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்வழி கூட்டத்தார் தெய்வம் வேறு, சேவகர் வேறு என்பது தெளிவாகின்றது. சேவகர் தெய்வம் பற்றிய கதையாடல் சேவகர் கோயில்களைப் பராமரித்து வரும் நபர்களோடு உரையாடிய போது, சேவகர் யார் என்பதையோ அத்தெய்வ வழிபாடு எப்படி வந்தது என்பதையோ அவ்வழிபாட்டின் தொடக்ககாலம் பற்றியோ அவர்களால் உறுதிப்பட எந்தத் தகவலையும் தர முடியவில்லை. அப்பா, தாத்தா, அம்மா, அப்பம்மா, சித்தப்பா ஆதரித்தார்கள் எனத் தாமறிந்த ஒருவரை சுட்டமுடிகின்றதேயன்றி பிறிதொரு தகவலையும் தரமுடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணங்களாக, 1. 1990 இல் உள்நாட்டு யுத்தத்தால் இம்மக்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்தமையும் அதனால் இளைய தலைமுறைக்கு உரிய வகையில் பாரம்பரியங்கள் கடத்தப்படாமையும்; 2. பூர்வகுடிகள் பலர் காரைநகரில் இன்று இல்லை; முதிய தலைமுறையும் இல்லை. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு முப்பத்தைந்து வயதுக்குட்பட்ட தலைமுறையே இன்றைய முதிய தலைமுறையாக அங்கு உள்ளனர்; என்பவற்றைக் குறிப்பிடலாம். அதனால்தானோ என்னவோ சேவகர் கோயிலை அறிந்திருப்போரும் இன்று அரிதாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயில்கள் அமைந்திருக்கும் பெரிய குறிச்சி, வலந்தலை என்பதாகும். வலந்தலை என்பதன் பொருள் என்ன? வலம் தரும் தலை – ஆரம்ப இடம் – வெற்றியைப் பிரகடனப்படுத்தும் இடம் – கடற்பற்றில் வரும் எல்லைத் தலைமுகப்பு என விளங்கப்படுகிறது (சிவப்பிரகாசம்.மு.சு, 1988, விக்ஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு, மத்திய சனசமூகநிலையம், தொல்புரம், ப.135). இந்தப் பிராந்தியத்தில் முக்கிய சம்பவங்கள் இரண்டு நடைபெற்றதை ஐதீகக் கதைகளின் வழியும் சிவப்பிரகாசத்தின் நூலின் வழியும் அறிய முடிகின்றது. 1. முருகப்பெருமான், கைலாயமாகிய இந்தத் தீவுப் பகுதிகளில் சூரபத்மனோடு யுத்தம் புரிந்து பெற்ற வெற்றியைப் பிரகடனம் செய்த இடம் இது. 2. முக்குவர் குலத்தலைவனும், தீவுப்பகுதியை ஆண்டவனுமான வெடியரசன் தனது ஒவ்வொரு யுத்தத்திலும் பெற்ற வெற்றியை, தன் சகவீரர்களுடன் வந்து பிரகடனம் செய்த இடம் இது. ஆகவே போர் வெற்றியைப் பிரகடனம் செய்யும் வலந்தலையில் தொன்மையான இரு சேவகர் கோயில் இருப்பது வியப்பன்று. அதிலும் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சேவகர் கோயில் சமாதியோடு இணைந்தது என்பது போர்வீரருக்கான பள்ளிப்படைக் கோயிலை ஒத்துள்ளது என்பதோடு, மலரிட்டு விளக்கு வைக்கும் முறைமையே இங்கு காணப்படுவதும், சேவகர் வழிபாடு போர்வீரர் சார்ந்த வழிபாடு என்றே கருத வைக்கிறது. அதேவேளை கந்தபுராணக் கதையோடு வலந்தலை இணைக்கப்பட்டு இருப்பதும், யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரத்தோடு இணைந்திருப்பதும், கந்தபுராணம் முருகனை ‘சேவகன்’ என போர்வீரனாகச் சுட்டி நிற்பதும் (வள்ளி., 65), மல்லிகைக் குறிச்சிக் கோயில் மணியக்காரரான கனகு, ‘சேவகரை சிவனின் ஒரு அம்சம்’ எனக் கூறுவதும், முருக வழிபாட்டோடு இவ் வீரவழிபாட்டை இணைத்துச் சிந்திக்க வைக்கின்றது. சேவகர் பற்றி ‘மாப்பாண ஊரி’ க. நவரத்தினராசா, தனது தாயார் சுருட்டைப் பற்றி விட்டு குறைச்சுருட்டை வைப்பதாகவும், அது காணாமற் போவதாகவும், பின்பு ஒருநாள் ஒரு மனித உருவம் நடுச்சாமத்தில் அதனை எடுத்துப் போவதைக் கண்டதாகவும், அதன்பின் அக்கோயிலை ஆதரிக்கத் தொடங்கியதாகவும், அதன்பின் தம் வளம் பெருகியதாகவும், இன்றும் அவரை வழிபாட்டே நற்காரியங்களைத் தொடங்குவதாகவும் கூறினார். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள ஆலய அறங்காவலர்களும் மீன்பிடிக்கச் செல்வோரும் இத்தெய்வத்தை வழிபட்டே செல்வர் என்றும், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் கடற்படையினர் சிலர் வந்து சுருட்டுப் பற்றியபடி வந்த மனிதர் யார்? அவர் எங்கே என விசாரித்ததாகவும், அப்படி ஒருவர் வரவில்லை என்றும், அது இச்சேவகர் தெய்வமாக இருக்கலாம் எனத் தாம் கூறியதாகவும், பின் அக் கடற்படையினர் பொங்கலுக்கு உரிய பொருட்களைப் பயபக்தியோடு தந்து வணங்கிச் சென்றதாகவும் கூறுகின்றனர். கொல்லடைப்பு – ஆயிலி சேவகராலயப் பரிபாலனத்தினைச் செய்து வருவோர், தாம் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா போனதாகவும், அங்கு பிள்ளையார் கோயிலைக் கட்டி வழிபட்டதாகவும், இத்தெய்வம் தங்களை இருக்கவிடாது பல சிக்கல்களைத் தந்ததாகவும், தாம் மீள இங்கு வந்து இத்தெய்வத்தை ஆதரிக்கத் தொடங்கிய பின் அச் சிக்கல்கள் நீங்கியதாகவும் கூறுகின்றனர். சேவகரின் உருவம் என்பது வெள்ளை வேட்டி கட்டிய முதியமனிதர், மேலாடை அணியாதவர், சுருட்டுக் குடிப்பவர் என வலந்தலை ஆலயங்களின் பரிபாலகர்கள் கூறினர். சேவகர் வழிபாட்டு முறைகள் சேவகரை வழிபடும் முறை ‘கல்’ ரூபமாகவே இருந்தது. வெள்ளைக்கல்; அது அளவுகளில் வேறுபடுகின்றது. இன்று வழிபடும் கற்களோடு அருகில் உருவங்கள் (செப்பு, சீமெந்து, இரும்பு, சூலம்) வைத்து வழிபடப்படுகின்றன. பனை, ஆல், வேம்பு ஆகிய மரங்களை ஒட்டியவையாகவே சேவகர் வழிபாடு இடம் பெறுகின்றது. சேவகருக்குப் பொங்கல் பொங்கி, மடைபரவி, சைவமரபு வழிநின்றே வழிபாடு இயற்றுகின்றனர். இங்கு பலியிடலோ மச்சப் படையலோ இல்லை. மாப்பாண ஊரியில் உள்ள இரு கோயில்களிலும் சுருட்டு வைத்து வழிபடும் மரபு காணப்படுகின்றது. நேர்த்திக் கடன்கள் வைத்து, அது நிறைவேறியவுடன் பொங்கிப் படைத்தல் நடைபெறுகிறது. இதைத் தவிர தைப்பொங்கல், சித்திரவருடப் பிறப்பு போன்ற விக்ஷேட தினங்களில் இங்கு சிறப்பாக வழிபாடுகள் இயற்றப்படுகின்றன. பொதுவில் அவரவர் நீராட்டி, விளக்கு வைத்து, பூச்சூடி வழிபடும் முறையே காணப்பட்டு வருகின்றது. குறைந்தது ஒரு நேரமேனும் ஒவ்வொரு நாளும் விளக்கு வைக்கப்படுகின்றது. சமகாலப் பயில்வு கொல்லடைப்பு, மாப்பாண ஊரி கோயில்கள் கற்கோயில்கள் ஆக்கப்பட்டு, வேறு எந்தவித மாற்றமும் இன்றி அவ்வச் சமூகத்தவர்களாலேயே விளக்கு வைத்து வழிபடப்படுகின்றது. மல்லிகைக் குறிச்சி சேவகராலயத்திற்கு கருவறை, முன்மண்டபம், மடப்பள்ளி என்பன கட்டப்பட்டு பிராமணரை அழைத்து கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டது. ஆயினும் நித்திய பூசையை மணியக்காரர் ‘கனகு’ அவர்களே செய்து வருகின்றார். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள சமாதிக்கோயில், சேவகர் கல்லோடு ஐயனார் உருவமும் வைத்து வழிபடப்படுகிறது. பூசை, ஆலயப் பரிபாலகராலேயே நிகழ்த்தப்படுகின்றது. ஆனால் வேரப்பிட்டி, ஆயிலி ஆகிய குறிச்சிகளில் உள்ள சேவகர் ஆலயங்கள் முற்றுமுழுதாக பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மூலஸ்தானத்தில் வைரவர் சூலம் வைக்கப்பட்டுள்ளது. வேரப்பிட்டி ஆலயத்தில் விநாயகர் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அங்கு பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறுகின்றது. முந்திய பூசகர், ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆயிலி – ஆத்தியடி சேவகராலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 15 நாட்கள் அலங்கார உற்சவம் இடம்பெறுகிறது. அங்கும் பிராமணர் மட்டுமே பூசை செய்கின்றனர். முடிவுரை தமிழ்ச் சமூகத்தில் அதிகம் அறியப்படாத தெய்வங்களுள் ஒன்றாகவும் காரைநகரில் வாழும் தெய்வமாகவும் ‘சேவகர்’ காணப்படுகின்றார். சேவகர் பற்றிய அறிவு, பரிபாலகருக்கோ காரைநகர் மக்களுக்கோ இல்லை என்பது துக்கம் தரும் செய்தியாகும். சேவகர் பற்றிய ஊகமே இந்த ஆய்வில் விரவிக்கிடக்கிறது. தொன்மை சார்ந்த விடயங்கள் எதையும் அறிய முடியவில்லை. சேவகன் என்ற சொல் சிவன் – முருகனோடும், போர் வீரரோடும் இணைக்கப்படுவதும், அதையொட்டிய உரையாடலுக்கு வலந்தலைக் குறிச்சி பற்றிய விளக்கம் இடம் தருவதும் சிறப்பித்துச் சொல்லத்தக்கது. பன்முகச் சமூகத்தின் தெய்வம் இளையதலைமுறையிடம் கையளிக்கப்பட வேண்டும். கொல்லடைப்புக் கோயிலில் 14 வயதுச் சிறுவனே பூசாரியாக இருப்பது சமூகக் கையளிப்பாகவே நோக்க வைக்கின்றது. மேனிலையாக்க முயற்சிகள், ஈழத்திலேயே காணப்படும் ஆனால் மக்களால் அதிகம் அறியப்படாததுமான சேவகரை மேலும் அறியவிடாது தடுக்கும் செயலாகவே அமைந்துவிடும். பொருளாதார – சமூக வளர்ச்சி என்பன, குறித்த இனத்தின் அடையாளங்களை வளர்க்கவும் மீட்டுருவாக்கம் செய்யவும் உதவ வேண்டுமேயன்றி அழிப்பதற்கானதாக இருக்கக் கூடாது. தொடரும். https://www.ezhunaonline.com/sevakar-a-tutelary-deity/
  5. சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும் April 13, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — கடந்தவார இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் பல அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஒரு தசாப்த காலத்திற்குள் நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு இந்திய பிரதமராக மாத்திரமல்ல, ஒரேயொரு வெளிநாட்டுத் தலைவராகவும் மோடியே விளங்குகிறார். கடந்தவார விஜயத்துக்கு முன்னதாக அவர் மூன்று தடவைகள் இலங்கைக்கு வந்திருந்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட மூன்று நாள் விஜயம் 28 வருடங்களுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவரின் இலங்கைக்கான முதலாவது இரு தரப்பு விஜயமாக அமைந்தது. ( அதற்கு முதல் இறுதியாக இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியே ஆவார். இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக அவர் வந்தார்) தனது முதலாவது விஜயத்தின் போது இலங்கை பாராளுமன்றத்திலும் மோடி உரையாற்றினார். அடுத்ததாக அவர் 2017 மே மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக மோடி கலந்து கொண்டார். 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு ஆறு வாரங்கள் கழித்து ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் மோடி மீண்டும் இலங்கைக்கு வந்தார். தாக்குதல்கள் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டதுடன் அவர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு தனது நாட்டின் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டினார். அவரின் அந்த மூன்று விஜயங்களும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்திலேயே இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டதால் மோடியால் அடுத்தடுத்து நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடியதாக இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றும் இல்லாத பொருளாதார நெருக்கடியை அடுத்து மூண்ட மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு பெருமளவுக்கு மாற்றமடைந்த அரசியல் சூழ்நிலையில் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரி அரசியல் கட்சி ஒன்று, அதுவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஒரு கட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கும் பின்புலத்தில் விஜயம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு தலைவராக மோடி விளங்குகிறார். மோடியின் கடந்த வாரத்தைய விஜயம் குறித்து கருத்துக்களை வெளியிட்ட அரசியல் அவதானிகள் பலரும் ஊடகங்களும் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ அரசியல் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின்( ஜே.வி.பி.) இந்திய விரோத கடந்த காலத்தை நினைவுபடுத்துவதற்கு தவறவில்லை. 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை அடுத்து ஜே.வி.பி. மிகவும் தீவிரமான இந்திய விரோத பிரச்சாரத்துடன் அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்த காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவனாக அந்த இயக்கத்தில் இணைந்து செயற்படத் தொடங்கிய ஜனாதிபதி திசாநாயக்க தற்போது ஒரு இந்திய பிரதமரை வரவேற்கிறார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து தனியாக இயங்குவோரின் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி, 54 வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சி தொடங்கிய அதேதினத்தில் (ஏப்ரில் 5) ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் “விஸ்தரிப்புவாத” இந்தியாவின் பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு அளிப்பதாக குற்றஞ்சாட்டியதையும் காணக்கூடியதாக இருந்தது. ஜே.வி.பி. இந்திய விரோத கடந்த காலத்தைக் கொண்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால், அந்த கட்சியினர் கடந்தகால கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் பெருமளவுக்கு கைவிட்டு சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் நிவைரங்களுக்கு இசைவான முறையில் தங்களை தகவமைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? இந்திய விரோதக் கொள்கைகளை ஜே.வி.பி. தொடர்ந்தும் உறுதியாக கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பதா அதன் கடந்த காலத்தை நினைவுபடுத்தி விமர்சனங்களை முன்வைப்பவர்களின் விருப்பம்? ஜே.வி.பி.யின் கடந்த காலத்தைப் பற்றி இந்தியாவே கவலைப்படாத நிலையில் அத்தகைய விமர்சனங்கள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன. அண்மைக் காலத்தில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்படும் ஒரு இலங்கை அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடையாளம் காணப்படுவது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். ஜே.வி.பி.யின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கம் ஒன்று புதுடில்லியுடன் நட்பார்வமில்லாத ஒரு உறவுமுறையையே கொண்டிருக்கும் என்றும் இந்தியாவுக்கு பாதகமான முறையில் சீனாவுடனான உறவுகளுக்கே அது கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைகளில் தேசிய மக்கள் சக்தி பெருமளவுக்கு உணர்திறனை வெளிக்காட்டாமல் போகக்கூடும் என எதிர்பார்த்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கம் அதன் செயற்பாடுகள் மூலம் பொய்யாக்கிவிட்டது. பிரதமர் மோடியின் விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமானவையாக இருப்பதையும் புதுடில்லியுடன் உறவுகளை மேம்படுத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கருத்தூன்றிய அக்கறையுடன் செயற்படுவதையும் தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. வெளிநாட்டு தலைவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் அதியுயர் கௌரவ விருதான ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ மோடிக்கு வழங்கப்பட்டிருப்பதையும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதையும் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவுகளுக்கு சான்றாக இந்தியாவின் முக்கியமான சில தேசியப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் சுட்டிக்காட்டியிருந்தன. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை (11/4) “மோடியின் விஜயம் புதுடில்லிக்கு நெருக்கமாக கொழும்பைக் கொண்டுவந்திருக்கிறது” என்ற தலைப்பில் தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் “பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மூலோபாய நம்பிக்கையை வலுப்படுத்தியிருப்பதுடன் ஒத்துழைப்பை மேலும் வளர்த்து இரு நாடுகளுக்கும் இடையில் தீர்வுகாணப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை கையாளுவதற்கான அரங்கை அமைத்துக் கொடுத்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது. மோடியின் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். அந்த உடன்படிக்கையை பொறுத்தவரை, இலங்கை சுதந்திரமடைந்தபோது பிரிட்டனுடன் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கைக்கு (அது பண்டாரநாயக்க ஆட்சியில் 1956 ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்டது) பிறகு அதையொத்த உடன்படிக்கை ஒன்று முதன் முதலாக வெளிநாடு ஒன்றுடன் இலங்கை அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயம் உட்பட முன்னைய சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது சாத்தியமாகியிருக்கிறது. ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்புத்துறையில் நிலவும் ஒத்துழைப்பு செயற்பாடுகளை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருவதாக இந்த உடன்படிக்கை அமைந்திருக்கிறது என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி கொழும்பில் ஊடகங்களிடம் கூறினார். இந்தியாவும் இலங்கையும் பொதுவான பாதுகாப்பு நலன்களைக் கொண்டிருப்பதுடன் அவற்றின் பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததாக மாத்திரமல்ல, பரஸ்பரம் தங்கியிருக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் நலன்கள் மீது ஜனாதிபதி திசாநாயக்க கொண்டிருக்கும் அக்கறைக்காக நன்றியுடையவனாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதேவேளை, ஜனாதிபதி திசாநாயக்க முன்னைய சந்தர்ப்பங்களில் கூறியதைப் போன்று இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கும் எதிராக இலங்கையின் பிராந்தியம் பயன்படுத்தப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று மீண்டும் உறுதியளித்தார். சென்னை ‘தி இந்து’ பத்திரிகை ஏப்ரில் 8 ஆம் திகதி அதன் ஆசிரிய தலையங்கத்தில் பாதுகாப்புத்துறையில் குறிப்பிட்ட சில ஏற்பாடுகளை புரிந்துணர்வு உடன்படிக்கை இருதரப்பு அடிப்படையில் விதிமுறைப்படுத்தியிருக்கின்ற போதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பில் கருத்தூன்றிய கவனத்துடன் செயற்படுவதில் மெய்யான அக்கறை கொண்டிருப்பதை நிரூபிக்க வேண்டியது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பேயாகும் என்றும் திருகோணமலை துறைமுகமோ அல்லது இலங்கையின் வேறு எந்த துறைமுகமுமோ இந்தியாவுக்கு எதிராக மூன்றாவது நாடொன்றினால் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று 1987 ஆம் ஆண்டில் காணப்பட்ட புரிந்துணர்வு இந்தியாவின் ஐயுறவுகளை அகற்றுவதற்கு உதவவில்லை என்பதை இலங்கை உணர்ந்து கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. பிரதமர் மோடியினதும் ஜனாதிபதி திசாநாயக்கவினதும் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு புறம்பாக மின்விநியோகம், சுகாதாரம், மருந்து உற்பத்தி, டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக வேறு ஆறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின. இந்த உடன்படிக்கைகளில் அடங்கியிருக்கும் ஏற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளினால் கிளப்பப்படும் சந்தேகங்களுக்கு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சகல உடன்படிக்கைகளும் அமைச்சரவையினாலும் சட்டமா அதிபரினாலும் அங்கீகரிக்கப்பட்டவையே என்றும் அவற்றில் எந்த ஒன்றுமே சட்டவிரோதமானவை அல்ல என்றும் கூறினார். பாக்குநீரிணை மீனவர் தகராறு: ================== இது இவ்வாறிருக்க, கடந்த வாரத்தைய பேச்சுவார்த்தைகளின்போது இரு தரப்புகளுக்கும் இடையில் ஓரளவு முரண்பாடு வெளிக்காட்டப்பட்ட விவகாரம் என்றால் அது மீனவர் பிரச்சினையேயாகும். இரு தலைவர்களும் மீனவர் பிரச்சினை குறித்து தாங்கள் ஆராயந்ததாக அறிக்கைகளில் குறிப்பிட்டனர். மீனவர் பிரச்சினையில் ‘மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் இணங்கிக்கொண்டதாக கூறிய பிரதமர் மோடி இந்திய மீனவர்களும் அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்திய அதேவேளை, ‘நிலைபேறான தீர்வொன்றைக் காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறை அவசியம்’ என்று ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தினார். இழுவைப் படகுகளினால் கடல்சார் சுற்றுச் சூழலுக்கு விழைவிக்கப்படுகின்ற சேதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவதற்கு உடனடியாக தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இலங்கையின் வடபகுதி மீனவர்களை பெரிதும் பாதிக்கின்ற மீனவர் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வொன்றைக் காணுமுகமாக இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று இந்திய பிரதமரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர். கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் மீனவர் பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் கணிசமானளவுக்கு விரிவாக ஆராய்ந்ததாகவும் இது மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அண்மைக்காலத்தில் எடுத்த குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை இலங்கையினால் மீள்பரிசீலனை செய்யமுடியும் என்று பிரதமர் மோடி பேச்சுக்களின்போது வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை கைதுசெய்வதையும் அவர்களின் படகுகளை கைப்பற்றுவதையுமே இலங்கை மேற்கொண்ட — மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அண்மைக்கால நடவடிக்கைகள் என்று மோடி கூறியிருக்கிறார் என்பது தெளிவானது. இனப்பிரச்சினை இதனிடையே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு அசௌகரியத்தைக் கொடுக்கக்கூடிய அணுகுமுறை எதையும் இனிமேல் கடைப்பிடிக்கப் போவதில்லை என்பதையும் பிரதமர் மோடியின் விஜயம் வெளிக் காட்டியிருக்கிறது. இருதரப்பு உறவுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்குள் தமிழர் பிரச்சினையை இந்தியா கொண்டு வருவதை கொழும்பு இனிமேலும் விரும்பவில்லை என்பது ஏற்கெனவே தெளிவாக வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. அண்மைய தசாப்தங்களாக இந்திய அரசாங்கங்களும் தமிழர் பிரச்சினையில் இலங்கையுடன் முரண்படக்கூடிய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதை தவிர்த்து வந்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயங்களின்போது அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்கவிடம் அவ்வாறு பிரத்தியேகமாக வலியுறுத்துவதை தவிர்த்தார். உள்நாட்டில் திசாநாயக்கவுக்கு பிரச்சினைகளை ஏற்டுத்தக்கூடியதாக எதையும் சொல்லி விடக்கூடாது என்பதில் மோடி எச்சரிக்கையாக இருக்கிறார் என்று தெரிகிறது. புதுடில்லியில் திசாநாயக்கவுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் மோடி இலங்கை அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். கடந்தவாரம் கொழும்பில் கூட்டு செய்தியாளர்கள் மகாநாட்டிலும் மோடி மீண்டும் அதையே கூறினார். 13 வது திருத்தம் பற்றி எதையும் அவர் கூறவில்லை. “இலங்கை ஜனாதிபதியுடன் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக ஆராய்ந்தேன். சகல சமூகங்களையும் அரவணைக்கும் தனது அணுகுமுறையை எனக்கு அவர் விளக்கிக் கூறினார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் என்றும் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பிலான கடப்பாட்டை நிறைவு செய்யும் என்றும் நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்” என்று மோடி கூறினார். ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லியிலும் கொழும்பிலும் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமர் விடுத்த வேண்டுகோள்களுக்கு பதிலளிப்பதை தவிர்த்தார். உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக மோடியிடம் திசாநாயக்க கூறியதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி சில கொழும்பு பத்திரிகைகள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன. தமிழ்க்கட்சிகள் சந்திப்பு இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட் ), தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் இந்திய பிரதமரைச் சந்தித்து தங்களது நிலைப்பாடுகளை எடுத்துக்கூறினர். அர்த்தமுடைய அதிகாரப் பரவலாக்கலை நோக்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா ஊக்குவிக்க வேண்டும் என்று அவரிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஜனாதிபதி திசாநாயக்க முன்னிலையில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கூறியதை தவிர வேறு எதையும் பிரதமர் மோடி தமிழ் அரசியல் தலைவர்களிடம் கூறியதாக தெரிய வரவில்லை. ஆனால், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு அனுசரணையாகச் செயற்படுவதில் இந்தியாவின் பாத்திரத்தையும் 1987 இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்கு தமிழ்க்கட்சிகளுக்கு மோடியின் விஜயம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. மலையக கட்சிகள்: =========== மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தாங்கள் இந்திய பிரதமரிடம் அரசியல் கோரிக்கை எதையும் முன்வைத்து அவர்களுக்கு சுமையை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் மலையக மக்களின் நல்வாழ்வுக்காக சமூக – பொருளாதார உதவிகளையே தற்போது இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுக்கும்போது மலையக மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதை நோக்கிய யோசனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக மனோ கணேசன் குறிப்பிட்டார். சமகால புவிசார் அரசியல் நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தீவிரமான அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கக்கூடிய அணுகுமுறைகளை தவிர்த்து இந்தியாவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை பேணிக்காப்பதில் மோடி அரசாங்கம் மிகுந்த நிதானத்துடன் செயற்படுகின்றது என்பதுமே தற்போதைய இந்திய — இலங்கை உறவுச்சமநிலையில் இருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய யதார்த்தமாகும். தேசிய மக்கள் சக்திக்கு சீனாவுடன் அரசியல் ரீதியில் என்னதான் நெருக்கம் இருந்தாலும், சீனாவையும் இந்தியாவையும் சமதூரத்தில் வைத்து உறவுகளைப் பேணவேண்டிய நிர்ப்பந்த நிலையில் அரசாங்கம் இருக்கிறது. இன்றைய புவிசார் அரசியல் நிலைவரங்களின் அடிப்படையில் நோக்கும்போது அரசாங்கம் ஒன்று அதிகாரத்தில் நீடிப்பதற்கு உள்நாட்டில் மக்களின் ஆதரவு மாத்திரமல்ல, சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளின் ஆதரவும் அனுசரணையும் கூட அவசியமாகிறது. அதனால், ஜனாதிபதி திசாநாயக்க தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கு அயல்நாடான இந்தியாவின் ஒத்துழைப்பின் அவசியத்தை நிச்சயமாக புரிந்துகொண்டிருப்பார் என்று நம்பலாம். மாறிவரும் மனோபாவம்: ============== தேசிய மக்கள் சக்தி / ஜே.வி.பி.யின் கடந்தகால இந்திய விரோத கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தென்னிலங்கையில் இந்திய விரோத சிந்தனைகளிலும் ஒரு மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது போன்று தெரிகிறது. இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படாவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீட்சி பெறமுடியாது என்றும் கடந்தகால மனோபாவங்களை கைவிட்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் இலங்கை தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரவலாக ஒரு எண்ணம் வளர ஆரம்பித்திருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பெருமளவுக்கு சுமுகமானவையாக இருக்கும் என்றும் பொருளாதார ஊடாட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கும் என்றும் முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்களும் அவதானிகளும் அபிப்பிராயம் வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவுக்கு விரோதமான கொள்கையுடன் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் தலைமையின் கீழான ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகள் மற்றைய கட்சிகளின் அண்மைய ஆட்சிக் காலங்களில் இருந்ததையும் விட மிகவும் சுமுகமானதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்ற ஒரு சுவாரஸ்யமான அரசியல் நிலைவரத்தைக் காண்கிறோம். இதனிடையே ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தாங்கள் அல்ல இந்தியாதான் மாறியிருக்கிறது என்றும் இந்தியா முன்னரைப் போன்று இப்போது இல்லை என்பதாலேயே இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கைகளை செய்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றும் கூறுகின்றார். https://arangamnews.com/?p=11949
  6. வவுனியாவில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயற்சி – செல்வம் எம்.பி மீது குற்றம் சுமத்தும் கஜேந்திரன் வவுனியாவில் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயல்கிறார்கள். இதை சுட்டிக் காட்ட முதுகெலும்பற்ற அடைக்கலநாதன் தான் வரவு செலவுத் திட்டத்தில் நன்மை இருப்பதாக கூறி அதை ஆதரித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் முன்னால் அவர் அரசை பாதுகாக்கின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் எமது விடுதலைப் போராட்டத்தை அரசாங்கம் அடக்கிய போது எதிர்வரும் 50 வருடங்களுக்கு தமிழ் மக்கள் தமது இருப்பை பற்றி சிந்திக்க கூடாது என்று கருதியே கொடூரமாக செயற்பட்டது. பலர் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்கள். ஆனல் இன்று வேட்பாளர்களை பார்க்கின்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எமது தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்கான குரல் வலுவாக இருக்கின்றது. ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு இல்லை என்பது தெட்டத்தெளிவானது. நாங்கள் தோற்றுப் போனாலும் ஒரு கொள்கையோடு நின்று தோற்றுப் போனார்கள் என்ற வரலாறு பதியட்டும் என்று தான் கடந்த காலங்களில் இருந்து செயற்பட்டு வருகின்றோம். தமிழ் தேசிய பேரவை உதயமாகியதை நினைத்து மகிழ்சியடைகின்றோம். மரணித்த மாவீரர்களின் தியாகங்களுக்கு வலிமை இருக்கின்றது என்று உணர்கின்றேன். அடிமையாக வாழக் கூடாது என்பதற்காக நாம் எப்படி செயற்பட வேண்டும் என்று தான் பாடங்களை படிக்க வேண்டும். நாங்கள் பொறுப்பற்ற முடிவுகளை எடுத்திருக்கவில்லை. மக்களுடைய இருப்பு சார்ந்தே ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்துள்ளோம். அழிவின் விளிம்பில் இருக்கின்ற இந்த மாவட்டத்தை பாதுகாப்பதற்காக யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்கு பின்பும் இளைஞர்கள் உயிர் கொடுக்கும் வகையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெடுக்குநாறி மலையில் புத்த விகாரையை நிறுவி அதனை பௌத்தமயமாக்க முயன்ற போது மக்கள் திரண்டு அதற்கு எதிராக போராடியிருக்கிறார்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றாலும் மக்கள் போராட்டங்களே அந்த ஆக்கிரமிப்பை தடுத்துள்ளது. இந்த இளைஞர்களை கட்டுப்படுத்த தொல்பொருட் திணைக்களமும், பொலிசாரும் இணைந்து செயற்பட்டனர். வவுனியா சிறைச்சாலைக்குள் மிருகங்கள் கூட வாழ முடியாது. அவ்வாறாக சிறைச்சாலைக்குள் எமது இளைஞர்கள் அடைக்கப்பட்டார்கள். இதன் மூலம் அவர்களை முடக்க நடவடிக்கை எடுத்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தமிழினமாக ஒற்றுபட்டு போராடி அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. அவர்கள் போராடி இருக்கவில்லை என்றால் குருந்தூர் மலை போன்று வெடுக்குநாறியில் புத்தர் கோவில் இருந்திருக்கும். 2009 ஆம் ஆண்டுக்கு பின் தமிழ் மக்களின் தலைமைச் சக்தி என்று தாம்பாளத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கொடுக்கப்பட்டது. 2009 வரை விடுதலைப் புலிகள் ஆக்கிரமிப்பை தடுத்தார்கள். 2009 இற்கு பின் 2013 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ அரசால் கொக்கசான்குளம் பகுதியில் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டு 2015 இல் நல்லாட்சிக் காலத்தில் வவுனியா சைவப்பிரகாச கல்லூரியில் வைத்து உறுதிகள் வழங்கப்பட்டது. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனும், செல்வம் அடைக்கலநாதனும், மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்து சிங்கள குடும்பங்களுக்கு உறுதிகளை வழங்கி வைத்தார்கள். இன்று வவுனியா வடக்கு பிரதேச சபையில் 5 சிங்கள பிரதிநிதிகள் வருவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. சிங்கள பேரினவாதம் மட்டும் எங்களது அழிவுக்கு காரணமாக இருக்கவில்லை. காலம் காலமாக சிங்கள பேரினவாதிகள் எங்களது தரப்பில் இருந்து விலைபோகக் கூடிய சலுகைகளுக்கு அடிபணியக் கூடியவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் அனைத்து காரியங்களையும் ஒப்பேற்றியுள்ளார்கள். இந்த நிலமை தடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் எங்களது அணி வெற்றி பெற வேண்டும். மக்கள் சக்திக்கு ஒரு வலிமை இருக்கிறது. அது உறுதியாக இருந்தால் வெற்றி பெறும். ஆகவே, உறுதியாக நிற்கக் கூடிய ஒரு தரப்பை பலப்படுதத வேண்டியது மக்களது கடமை. அந்த கடமையை மககள் சரியாக செயதால் ஒவ்வொருவரும் சபைகளில வெற்றி பெற்று, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் உங்கள் கருத்துக்களுக்கு பெறுமதி இருக்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பின்னால் நீங்கள் எலலோரும் இருக்கின்றீர்கள் என்றால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய கருத்துக்கு வலிமை இருக்கும். அதனை சர்வதேச சமூகம் தட்டிக் கழிக்க முடியது. ஆகவே, நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்பது மக்களிடம் சென்று நியாயங்களை சொல்லுங்கள். தமிழ் தேசியத்தின் பால் உறுதி கொண்டவர்கள் எம்முடன் கை கோர்த்துள்ளார்கள். ஜனநாயக தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கட்சி, அருந்தவபாலன் ஐயா, ஐங்கரநேசன் ஐயா என எம்முடன் இணைந்துள்ளார்கள். சிறிகாந்தா ஐயா ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் இருந்தார்கள். செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றார்கள். ஆனாலும், அவர் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தமையை எதிர்த்தார்கள். அது பிழையானது எனக் கூட்டிக் காட்டிய சிறிகாந்தா ஐயா, சிவாஜிலிங்கம் ஐயா அவர்கள் அதில் இருந்து வெளியேறினார்கள். இன்று கொள்கைக்காக எம்மோடு இணைந்துள்ளார்கள். கீழ் மல்லவத்து ஓயா திட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 1500 சிங்கள குடியேற்றங்களை குடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தந்திரிமலை பகுதியில் நீர்த்தேககம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 1500 குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இத் திட்டத்தால் உண்மையில் அங்கு 15 முஸ்லிம் குடும்பங்கள் நிலங்களை இழந்தன. ஆனால் நீர்திட்டம் எனற பெயரில் சர்வ தேச நிதியில் எமது பிரதேசததில் சிங்கள குடியேற்றத்தை கொணடு வர முயல்கிறார்கள். இதை சுட்டிக் காட்ட முதுகெலும்பற்ற அடைக்கலநாதன் தான் வரவு செலவுத் திட்டத்தில் நன்மை இருப்பதாக கூறி அதை ஆதரித்துள்ளார். ஏன் என்று சொன்னால் சர்வதேச சமூகத்தின் முன்னால் அவர் அரசை பாதுகாக்கின்றார். அனுரகுமார திஸாநாயக்கா இனவாதத்தின் மொத்த வடிவம். முதல் இருந்த அரசாங்கங்கள் நேரடியாக யுத்த குற்றங்களில் சம்மந்தப்பட்டுள்ளார்கள். ஆனால் அனுர அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, இராணுவத்திற்கு ஆட்களை திரட்டிக் கொடுத்தார்கள். இவர்கள் புதியவர்கள் என்ற மாயைத் தோற்றம் கட்டியெழுப்பபடுகிறது. அதை வைத்து தமிழ் மக்களது ஆதரவை பெற்று தமிழ் இனப்படுகொலையை மறைத்து இங்கு அபிவிருத்தி தான் பிரச்சனை என எமது மக்களை வைத்து சொல்ல வைக்கும் செயற்பாடு நடைபெறுகிறது. எமது விரலை வைத்து கண்ணை குத்தும் செயற்பாடு நடக்கிறது. ஆகவே, எம்மை நாம் ஆளும் நிலை உருவாக வேண்டும். பேரினவாத கட்சிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும். அவர்களது முகவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். கொள்கை மாறாத ஒரு தலைமைத்துவத்தை பலப்படுத்த, எமது சமத்துவமான நிர்வாகத்தை ஏறபடுத்த ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள். உள்ளுர் அதிகாரத்தை கைப்பற்றி தேசிய ரீதியல் இனப் பிச்சனைக்கு தீர்வு காண ஆணை தாருங்கள் எனத் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=320532
  7. சூரிய மின்சக்தி படலங்களை நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை வேண்டுகோள் ! 14 Apr, 2025 | 10:19 AM நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சூரிய மின்சக்தி படலங்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையும் நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அனைத்து கூரைகளிலும் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி படலங்களை நிறுத்துமாறு சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் கடும் வெப்பநிலை காரணமாக சூரிய மின்சக்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் விடுமுறை காலம் என்பதால் பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் குறைந்தளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால் அதிகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டால் அது அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது மின்சார கட்டமைப்பில் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211976
  8. புத்தாண்டுக்கு வீடு வந்த மகள் - விபத்தில் தந்தை பலி! பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். \ புன்னாலை கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் கிழக்கு பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது 62) என்பவர் உயிரிழந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு பேருந்தில் வந்த மகளை அழைத்துச் செல்வதற்காக, உயிரிழந்த நபர் அதிகாலையில் பலாலியில் உள்ள தனது வீட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பழுதடைந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன் மோட்டார் சைக்களில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cm9fodxpw00b1hyg3p8xuri93
  9. CSK இப்ப உள்ள நிலையில் உங்கள் நால்வருக்கும் யோகம் அடிக்க வாய்ப்பிருக்கு😃
  10. GMT நேரப்படி நாளை திங்கள் 14 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 04 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 19 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  11. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெஸ்வாலின் அதிரடியான 75 ஓட்டங்களுடன் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஃபில் சால்ட்டின் சிக்ஸர்ஸ், பவுண்டரிகளுடனான 65 ஓட்டங்கள் மழையெனப் பொழிந்ததாலும், விராட் கோலியின் நிதானமான ஆட்டமிழக்காமல் பெற்ற 62 ஓட்டங்களுடனும் 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அதிகமான ஓட்டங்களைக் குவிக்கும் நோக்குடன் வேகமாக அடித்தாடும் உத்தியுடன் விளையாடியதால் திலக் வர்மாவின் 59 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை அடையும் நோக்கோடு ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடி விளையாடினர். குறிப்பாக கருண் நாயர் 89 ஓட்டங்களை மின்னல் வேக அடியின் உதவியுடன் எடுத்திருந்தார். எனினும் கேஎல் ராகுலின் விக்கெட் விழுந்ததோடு வெற்றிபெறும் வாய்ப்பை இழந்து இறுதி மூன்று பந்துகளின் மூன்று பேர் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்ததால் 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 193 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @சுவைப்பிரியன் உம், @Eppothum Thamizhan உம் @goshan_che க்கு உதவியாக அருகணைந்து இறுதிப் படிகளில் நிற்கின்றனர்!
  12. கானா முதல் கமலாலயம் வரை! யார் இந்த நயினார் நாகேந்திரன்? 13 Apr 2025, 11:21 AM பாஜகவின் புதிய மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். ஏப்ரல் 12 ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில், பாஜகவின் புதிய மாநில தலைவராக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பொறுப்பேற்றிருக்கிறார் நயினார் நாகேந்திரன். தற்போதைய தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்திருக்கும், இந்த முக்கியமான கால கட்டத்தில் மாநிலத் தலைவராகியிருக்கிறார். ஏற்கனவே மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை அதிரடியாக செயல்பட்டு வந்த நிலையில் நயினார் இயல்பாகவே சாந்தமான பேச்சுக்கு சொந்தக்காரர். சட்டமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவை பேணி வருபவர். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்துக்கே உரிய பண்புகள் இவரிடம் சற்று அதிகமாகவே உண்டு. பதவியேற்ற பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், “இனி தமிழ்நாடு எங்கும் தாமரைக் கொடி பறக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அண்ணாமலை ஒரு புயல், நான் ஒரு தென்றல் என்றும் பேசியிருக்கிறார். திருநெல்வேலியின் தண்டையார் குளம் என்ற கிராமத்தில் இருந்து இப்போது கமலாலயம் வரை வந்திருக்கும் இந்த தென்றலின் பின்னணி என்ன? யார் இந்த நயினார் நாகேந்திரன்? திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே உள்ள தண்டையார் குளம் கிராமத்தில் 1960 இல் பிறந்தவர் நாகேந்திரன். இவரது தந்தையார் பெயர் நயினார். பார், பார்க்கிங் குத்தகை என பல பிசினஸ் செய்தவர் நயினார். அதனால் வசதியான குடும்பம்தான். நாகேந்திரன் பள்ளிப்படிப்பு முடித்து ஆரல்வாய்மொழி கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பு படித்தார். கானாவிடம் கற்ற அரசியல்! அப்போது அவருடைய தந்தை நாகேந்திரனை அதிமுகவின் முக்கிய புள்ளியாக அந்த காலத்தில் திகழ்ந்த கருப்பசாமி பாண்டியனிடம் அழைத்துச் சென்றார். கருப்பசாமி பாண்டியன் எம்,.ஜி.,ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர், ‘பையனுக்கு ஜாதகம் பார்த்தேன். அரசியல் தான் நல்லா வரும்னு சொல்றாங்க. அதனால உங்கள நம்பி ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லி கருப்பசாமி பாண்டியனிடம் தனது மகன் நாகேந்திரனை ஒப்படைத்தார் அவருடைய தந்தை. கருப்பசாமி பாண்டியனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் சால்வைகள் அணிவிப்பார்கள். இந்த சால்வைகளை எடுத்து மடித்து வைக்கும் வேலைதான் நாகேந்திரனுக்கு. அரசியலுக்காக தன் தந்தை பெயரையும் சேர்த்து நயினார் நாகேந்திரன் ஆனார். கொஞ்சம் கொஞ்சமாக கருப்பசாமி பாண்டியன் அருகே இருந்து திருநெல்வேலியின் அரசியல் களங்களை அறியத் தொடங்கினார். கானா எங்கே சென்றாலும் அங்கே நயினாரும் இருப்பார். கானாவை பார்க்க வருகிறவர்களிடத்திலெல்லாம் தன் அன்பாலும், தன்மையான பேச்சாலும் தனி இடம் பிடித்தார் நயினார் நாகேந்திரன். வளர்ச்சியில் துணை நின்ற சமுதாய பலம்! அரசியலுக்கு எப்போதுமே சமுதாய பலம் மிக முக்கியம். இந்த வகையில் கள்ளர், மறவர், அகமுடையோர் என்ற மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கிய முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய சமுதாயம் நயினார் நாகேந்திரன் அரசியலுக்கு பெரும் பலமாக இருந்தது. மறவர் சமுதாயத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன், ஆப்பநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் என்ற மெஜாரிட்டி பிரிவை சேர்ந்தவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் இதே பிரிவைத்தான் சேர்ந்தவர். கருப்பசாமி பாண்டியனுடைய அன்பும் ஆதரவும் பெற்று வளர்ந்து கொண்டிருந்தார் நாகேந்திரன். அப்போது திருநெல்வேலி மாவட்ட அதிமுகவின் இலக்கிய அணியில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பணகுடி நகர செயலாளர் பதவியை பெற்றார். தனது சமுதாயத்தின் பலத்தோடு சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் வரை நெருங்கினார் நயினார் நாகேந்திரன். அவர் ஒரு கட்டத்தில் தினகரனின் பரிபூரண ஆதரவோடு மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உயர்ந்தார். அதிமுகவில் முக்கியமான சக்தியாக இருந்த கருப்பசாமி பாண்டியன் 2000 ஆண்டு வாக்கில் திமுகவுக்கு சென்று விட்ட நிலையில்… அந்த இடத்தை தனது சமுதாய பலம் காரணமாக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் நயினார் நாகேந்திரன். இதன் காரணமாக 2001 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி அதிமுக வேட்பாளராக களம் இறங்கினார். முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரனுக்கு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைத்தது. அதுவும் தொழில்துறை , மின்சாரம் போக்குவரத்து துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை அந்த காலகட்டத்தில் அவர் வகித்தார். நயினார் நாகேந்திரன் அண்ணன் வீர பெருமாள் திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளராக இருந்தவர். அதிமுகவில் நயினார் நாகேந்திரன், திமுகவில் அவரது அண்ணன் என இருவரும் நெல்லை மாவட்ட அரசியலில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அதன் பின் வீரபெருமாளும் அதிமுகவுக்கு வந்துவிட்டார். இப்போது நயினார் நாகேந்திரனின் அண்ணன் வீரபெருமாள் அதிமுகவில் மாநில பொறுப்பில் இருக்கிறார். முதல்வர் ரேஸில் இடம்பெற்ற நயினார் 2001- 2006 காலகட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டரீதியான நெருக்கடி ஏற்பட்டு அவர் பதவி விலகியபோது… யாரை இடைக்கால முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பரிசளிக்கப்பட்ட பெயர்களில் ஓபிஎஸ் இன் பெயரோடு நயினார் நாகேந்திரன் பெயரும் இடம் பெற்றிருந்தது. இது பற்றி விவரம் அறிந்த அதிமுகவினர் நம்மிடம் பேசும்போது, “அம்மாவுக்கு பதில் யாரை முதலமைச்சராக போடலாம் என்ற ஆலோசனையில் அப்போது ஜாதகம் முக்கியமான பங்கு வகித்தது. அந்த வகையில் நயினார் நாகேந்திரனின் ஜாதகமும் போயஸ் கார்டனில் ஆராயப்பட்டது. நயினார் நாகேந்திரன் ஜாதகப்படி அப்போது அந்த பொறுப்பை அவரிடம் கொடுத்தால் திரும்ப பெற முடியாது என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள் அப்போதே சசிகலாவின் கடைக் கண் கடுமைப் பார்வைக்கு இலக்காக ஆரம்பித்தார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து அதிமுகவில் அவரது செல்வாக்கு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. 2006 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி மாலைராஜாவிடம் வெறும் 600 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன். அதன் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் ஆக்கப்படவில்லை. பாஜகவில் ஐக்கியம்! தொடர்ந்து அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தவர் 2016 ஜெயலலிதா மறைவுக்கு பிறகு… 2017 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்பதவி அளிக்கப்படவில்லை. 2021 சட்டமன்ற த் தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். பாஜக மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தவருக்கு பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியே கிடைத்தது. தனது கட்சி தலைவர்கள் உடனும் மற்ற கட்சி தலைவர்களுடனும் தனக்கே உரிய சுமுகமான அமைதியான பணிவான அணுகு முறையில் தொடர்ந்து நல்லுறவோடு இருந்தார் நயினார் நாகேந்திரன். காரணம் கருப்பசாமி பாண்டியனிடம் அவர் கற்ற அரசியல். இவருடைய பழகும் தன்மைக்கு ஓர் உதாரணம் அரசியல் வட்டாரத்தில் சொல்வார்கள். நயினார் நாகேந்திரன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கால கட்டம்… கலைஞர் அப்போது எதிர்க்கட்சி. தேர்தல் பிரச்சாரத்துக்காக கலைஞரின் வாகனம் தயாரானது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர்கள், அந்த பிரசார வாகனத்தின் பதிவு விவகாரத்தில் சற்று மறந்துவிட்டார்கள். பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக வாகனத்தை பயன்படுத்த வேண்டிய சூழல். அப்போது திமுகவில் இருந்து போக்குவரதுத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரனை அணுகியுள்ளனர். சில மணி நேரங்களில் அப்பிரச்சினையை முடித்துக் கொடுத்திருக்கிறார் நயினார். இதுபோல் மாற்றுக் கட்சியினருக்கும் தனது கட்சியினருக்கும் பல உதவிகளை சத்தமில்லாமல் செய்திருக்கிறார் நயினார். சர்ச்சையில் நயினார் அரசியல் வாழ்விலேயே அவர் அதிரடியாக பேசியது என்றால், 2018 காலகட்டத்தில் வைரமுத்து ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக சர்ச்சை எழுந்ததல்லவா? அப்போது வைரமுத்துவை கண்டித்து பாஜக பல ஆர்பாட்டங்களை நடத்தியது. நெல்லையில் நடந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் பேசும்போது, வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தர ரெடியாக இருப்பதாகவும் கூறினார். நயினார் நாகேந்திரனா இப்படி பேசுவது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். நயினார் நாகேந்திரன் சந்தித்த லேட்டஸ்ட் சர்ச்சை…கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சந்தித்த நான்கு கோடி ரூபாய் சர்ச்சைதான். நயினார் நாகேந்திரன் நெல்லை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். 2024 ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். இது தொடர்பாக வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இப்போதும் இருக்கிறது. அந்த பணம் நயினார் நாகேந்திரனுடைய பணம்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்தது. இந்த வழக்கு இன்னும் சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இன்னமும் நெல்லை வட்டாரத்தில் நயினார் நாகேந்திரனை பண்ணையார் என்று அழைக்கும் பழக்கம் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. அதென்ன பண்ணையார்? நெல்லை கிராமங்களில் ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த நிலக்கிழார்களை பண்ணையார் என்று அழைத்து வருகின்றனர். நயினார் நாகேந்திரன் ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து ஹோட்டல் பிசினசில் ஈடுபட்டார். அப்போது நயினாரையும் பண்ணையார் என்று அழைக்கத் தொடங்கி, அதுவே அவரது நெல்லை அரசியலில் அடையாளப் பெயராகவும் மாறிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தேவை என முடிவெடுத்த அமித்ஷா அதற்கு ஏற்ற மாநில தலைவர் வேண்டும் என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரன் இப்போது பாஜகவின் புதிய மாநில தலைவராக பதவி ஏற்றிருக்கிறார். விசாகப்பட்டினம் பெல்லாரி வரைக்கும் இவருக்கு கிரானைட் குவாரி பிசினஸ் பெருமளவில் இருக்கிறது. இதனால் பணத்துக்கு பஞ்சம் இல்லாதவர். மறவர் என்ற சமுதாய பலம் நயினாருக்கு பெரும் சாதகமாக இருக்கிறது. இவர்தான் அடுத்த பாஜக தலைவர் என்ற தகவல் உறுதியான உடனேயே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்குலத்து அரசியல் புள்ளிகள் நயினாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நயினார் இதுவரை தலைவர்களுக்கு கீழே செயல்பட்டவராகத்தான் இருந்துள்ளார். இப்போதுதான் தேசிய கட்சியில் மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக எப்படி நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்! https://minnambalam.com/the-background-of-tn-bjp-president-nainar-nagendran/
  13. அநுர – மோடி பற்றிக் கொண்ட கரங்களுக்குப் பின்னால்… — கருணாகரன் — April 12, 2025 கருணாகரன் — அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, அவர் இந்தியாவுக்குச் செய்த விஜயமும் அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ததும் அரசியல் நோக்கர்களிடத்தில் பலவிதமான அபிப்பிராயங்களை உருவாக்கியுள்ளது. கூடவே சில விமர்சனங்களையும். உருவாகிய காலத்திலிருந்தே (1970 களில்) இந்திய எதிர்ப்பு உளநிலையிலிருந்த ஜே.வி.பியினரின் அரசாங்கம் இந்தியாவுடனான உறவை எப்படிப் பேணப்போகிறது? என்.பி.பியின் ஆட்சியில் இலங்கை – இந்திய உறவு நிலை எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் பலரிடத்திலும் எழுந்திருந்தன. மட்டுமல்ல, ஐ.எம். எவ் உடனான ஒப்பந்தத்தின் எதிர்காலம் அல்லது அதனுடைய தொடர் நடவடிக்கை, மேற்குலகத்துடனான உறவு என்பனவற்றிலும் கேள்விகள் இருந்தன. குறிப்பாக அரசியற் கட்சிகளும் அரசியல் நோக்கர்களும் இதைக்குறித்து ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அநுரகுமார திசநாயக்க பதவியேற்ற கையோடு ஜே.வி.பியின் அடையாளத்தையே மாற்றிப்போடுவதாக இந்தியாவுக்கே முதற்பயணத்தைச் செய்தார். அதைப்போல ஐ.எம்.எவ்வுடனான தொடர் நடவடிக்கை பற்றிப் பேசினார். இதன்மூலம் தம்மைப்பற்றியிருந்த வெளி அபிப்பிராயத்தை மாற்றியது என்.பி.பி. அநுரவின் (என்.பி.பியின்) இந்த நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. பலரும் கேள்விகளோடும் குழப்பங்களின் முன்பும் குந்தியிருந்தார்கள். எதிர்க்கட்சிகள் வழமையைப்போல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் என். பி. பி மிக வேகமாக அதிரடி ஆட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதிகாரத்திலிருக்கும் தரப்புகளின் பொதுக் குணம் இது. அதிகாரத்துக்கு வெளியே (அதிகாரம் இல்லாதபோது) பேசியதை எல்லாம் அதிகாரத்திலிருக்கும்போது எதிர்பார்க்க முடியாது. அதிகாரம் என்பது வேறான ஒன்று. அதை விளங்குவதற்கு வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பலருக்கும் என்ன குழப்பம் என்றால், நீண்டகாலமாக இவற்றையெல்லாம் கடுமையாக எதிர்த்து வந்த ஜே.வி. பி அல்லது என்.பி.பி, இப்பொழுது எப்படிக் குத்துக்கரணமடித்து இப்படிச் சமரசத்துக்கு வந்தது? அப்படிச் சமரசத்துக்கு வந்ததைப் பற்றி – அதனுடைய நியாயங்களைப் பற்றி – அது பகிரங்கமாகச் சொன்னதா? அதாவது அது தன்னுடைய கொள்கை மாற்றத்தைப் பற்றிப் பொதுத்தளத்தில் எங்கேயாவது பேசியுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்படுகின்றன. எந்தக் கேள்விக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ ஜே.வி.பியோ அல்லது என்.பி.பியோ பதிலே சொல்லவில்லை. சொல்லப்போவதுமில்லை. அவர்களைப் பொறுத்தவரை தம்மை நோக்கி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கான பதில் என்பது செயல்தான் எனக் கருதுகிறார்கள். அதாவது செயற்பாடு அல்லது நடவடிக்கை. எதையும் சொல்வதை விட, எதற்கும் விளக்கமளிப்பதை விட, உரிய காரியங்களைச் செய்வதே சரியானது. அதுவே அரசியற் பெறுமானமுடையது. அதுவே அவசியமானது. அதுவே பொருத்தமானது என்பதுதான் அவர்களுடைய நம்பிக்கை. அதாவது தாம் ஒரு மாற்றுச் சக்தி என்பது, தமது செயல்களின் அடையாளமாகும்; செயல்களின் விளைவாகும் என்ற நிலைப்பாடு. இதில் அவர்கள் எவ்வளவு தூரம் சரியாகச் செயற்படுவார்கள்? எந்தளவு வெற்றியைப் பெறுவார்கள்? எவ்வாறான மாற்றங்களை நிகழ்த்துவர்கள்? எப்படியான மாற்றங்கள் நிகழும்? என்ற கேள்விகள் ஒரு புறமிருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்டாலும் பதில் கிடையாது. அவர்களுடைய ஆட்சியைக் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டியதுதான். இதன்படியேதான் என்.பி.பியின் நடவடிக்கைகள் அமைகின்றன. இதற்குச் சிறந்த உதாரணம், என்.பி.பி இந்திய உறவைக் கையாள்வது அல்லது இந்தியாவைக் கையாள்வதாகும். முதலில் இந்தியாவுக்கும் பிறருக்கும் ஜே.வி.பியையைப் பற்றி அல்லது என்.பி.பியைப் பற்றி வெளியே இருந்த அபிப்பிராயத்தை அது மாற்றியிருக்கிறது. உண்மையில் அநுரவின் வெற்றியையும் அதைத் தொடர்ந்து என்.பி.பி. பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற பெரும்பான்மை பலத்தையும் குறித்து இந்தியாவுக்குச் சற்றுப் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. அநுரவும் என்.பி.பியும் சீனாவுடன் நெருங்கக் கூடும். அல்லது சீனா என்.பி.பி. அரசாங்கத்தை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி, இலங்கையில் செல்வாக்கை வலுப்படுத்தக் கூடும். இதனால் தனக்கு நெருக்கடி உண்டாகலாம் என இந்தியா பதற்றமடைந்தது. பதவியேற்ற கையோடு இந்தியாவுக்கு முதற் பயணத்தைச் செய்து இதையெல்லாம் மாற்றிப் போட்டு விட்டார் அநுர. இதை என்.பி.பியின் சரணாகதி என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அப்படியல்ல. இதுதான் அரசியல். அரசுக்கு வெளியே – ஆட்சிக்கு வெளியே இருப்பது வேறு. அரசைப் பொறுப்பெடுத்து இயக்குவது வேறு. வெளியே இருக்கும்போது பலதையும் பத்தையும் பேசலாம். அப்படிப் பேசுவது சரியென்று சொல்லவில்லை. ஆனால், வெளியே இருக்கும்போது எதையும் பேசுவதற்கான சூழலும் சுதந்திரமும் இருக்கும். ஆட்சியிலிருக்கும்போது அப்படிச் செய்ய முடியாது. ஒவ்வொன்றுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டும்; பொறுப்பேற்க வேண்டும். ஆகவே ஒவ்வொன்றிலும் நிதானம் வேண்டும். ஒவ்வொன்றிலும் சரிகளைத் தவற விட்டால், அதற்கான எதிர்விளைவுகள் வந்தே தீரும். அதற்கெல்லாம் முகம் கொடுத்தே ஆக வேண்டும். இதேவேளை நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்.பி.பி என்பது கடந்த கால ஜே.வி.பி அல்ல. அது தன்னை மாற்றிக் கொண்ட ஒன்று. இன்று அது முற்றிலும் புதிய ஒன்று. அதில் பழைய ஜே.வி.பியின் சிறு குணங்கள் – பிசிறுகள் – இருக்கலாம். ஆனால், அதையும் விட அது மாறிய – மாற்றத்துக்குள்ளான – ஒரு அரசியல் இயக்கமாக, அரசியல் வடிமாகவே உள்ளது. ஆனால், பலரும் முந்திய ஜே.வி.பியைத்தான் இன்னமும்மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் அவர்களுக்கு இன்னமும் குழப்பங்களும் கேள்விகளும் எழுகின்றன. அவர்களுடைய விமர்சனம் அந்த அடிப்படையிலானதே. பலரும் ஒன்றைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். ஜே.வி.பி ஏன் என்.பி.பி யாக மாற்றமடைந்தது? எப்படி அது ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய நிலைக்கு வந்தது? மட்டுமல்ல, ஏன் இவர்களில் பலரும் என்.பி.பியின் இந்தத் திடீர் வளர்ச்சியையும் அது ஆட்சியைக் கைப்பற்றியதையும் கூட இன்னமும் நம்ப முடியாமல் – ஏற்றுக் கொள்ள முடியாமல்- புரிந்து கொள்ள முடியாமல்தான் உள்ளனர். ஆனால், இதொரு மறுக்க முடியாத உண்மை. இதொரு யதார்த்தம். யாரும் ஏற்கலாம், விடலாம். ஆனால், இதொரு வெற்றி. அதாவது ஜே.வி.பியினுள் நிகழ்ந்த மாற்றம், என்.பி.பியின் வெளிப்பாடாக, வெற்றியாக வளர்ச்சியடைந்துள்ளது. இதைப் புரிந்து கொண்டால், அநுர – மோடி இருவரும் இறுகப் பற்றித் தழுவிக் கொண்டதற்குப் பின்னால், இறுகப் பற்றிக் குலுக்கிய கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியலையும் யதார்த்தத்தையும் குழப்பமின்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இன்றைய சூழலில் இந்தியாவுக்கு இலங்கை மிக அவசியமானது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிர்நிலையிலேயே உள்ளன. அல்லது இந்தியாவுக்கு மாறான உளநிலையிலேயே இருக்கின்றன. ஆகவே இலங்கையையாவது தன்னுடைய நெருக்கத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவுக்குள்ளது. என்பதால்தான் அது இலங்கையுடன் நிபந்தனையற்ற உறவைக் கொண்டுள்ளது. அநுரவின் ஆட்சிக்கு முன்பு, சீனாவின் மடியில் ராஜபக்ஸக்கள் தலையை வைத்திருந்த காலத்திலும் இந்தியா மிகப் பொறுமையாக – நிதானமாக இலங்கையுடனான உறவைத் தொடர்ந்தது. இதற்கு வாய்ப்பாக இலங்கையின் நெருக்கடிகளில் பங்கேற்கும் தரப்பாகத் தன்னைத் தொடர்ந்தும் வைத்திருக்கிறது. போரிலும் பொருளாதார நெருக்கடியிலும் இந்தியாவின் இலங்கைக்கான உதவிகளை இங்கே நினைவு கொள்வது நல்லது. இலங்கை இந்தியாவை விட்டு மேற்குலகம், சீனா என்று சற்று விலகிச் சென்றபோதும் அதைக் கண்டும் காணாததைப்போல இருந்து கொண்டு தொடர்ந்தும் உறவிலும் உதவித்திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது இந்த அடிப்படையிலேயே. இலங்கையோடு பகை நிலையைக் கொண்டால், அது (இலங்கை) முற்று முழுதாக சீனா, பாகிஸ்தான் என்ற இன்னொரு உறவு வளையத்துள் சென்று விடக் கூடும் என்ற அச்சம் இந்தியாவுக்குண்டு. இந்த நிலைமை இலங்கைக்குச் சாதகமான ஒன்று. இதைப் புரிந்து கொண்டிருக்கிறது என்.பி.பி – அநுரகுமார திசநாயக்க அரசாங்கமும். தாம் எப்படி ஆட்சியைக் கைப்பற்றும் தரப்பாக மாறுதலுக்கு உட்பட்டோமோ, அதைப்போல,ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் மாறுதல்கள் வேண்டும் என்பதே என்.பி.பியினரின் நம்பிக்கையாகும். எனவேதான் இந்தியாவுக்கு முதற் பயணத்தை அநுரகுமார திசநாயக்க மேற்கொண்டார். இந்திய எதிர்ப்புவாதத்தின் பின்னணியிலிருந்து வந்த ஒருவர், ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் இந்தியாவுக்கு முதல் வருகை செய்வதை இந்தியா வரவேற்றதும் இலங்கையைத் தன்னுடைய நட்பு வளையத்துள் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற நலன் நோக்கு அடிப்படையிலேயே. அதாவது ஒவ்வொருவருக்குமான பரஸ்பர நன்மைகள், லாபங்களின் அடிப்படையில். இதனால் ஜனாதிபதி அநுரவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு டெல்லியில் அளிக்கப்பட்டது. இதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அநுரகுமார திசநாயக்க முயற்சித்தார். குறிப்பாக இலங்கை சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரு துணைக்கரமாக இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ள விளைந்தார். அதற்கான தொடர்பாடலின் விளைவாக – வெற்றியாக – மோடியின் இலங்கைப் பயணம் அமைந்தது. மோடிக்கு இலங்கையில் செல்லுமிடமெங்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. வழியெங்கும் நிறைந்திருந்த சனங்கள் மோடியை வாழ்த்திப் பாடினார்கள். இந்தப் பயணத்தில் பல விடயங்களை பேசப்பட்டன. சில விடயங்கள் இருதரப்பு உடன்பாட்டுக்குள்ளாகின. சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சில விடயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றோடு சேர்ந்து இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு போன்ற வழமையான விவகாரங்களும் அமைந்துள்ளன. இவையெல்லாம் இந்த ஆட்சியின் தொடக்க ஆட்டம்தான். ஏனென்றால், இந்தியாவுக்கு இலங்கையில் எத்தகைய நன்மைகள் வேண்டியிருக்கிறதோ, அதற்கு நிகராக இந்தியாவிடத்திலிருந்தும் பலவிதமான நன்மைகளைப் பெற வேண்டிய தேவை இலங்கைக்குள்ளது. என்பதால்தான் இது இருதரப்பு உறவாக – உறவாடலாக இருக்கிறது. எனவே இந்தத் தொடராட்டம் மேலும் நீடிக்கப்போகிறது. திசநாயக்கவின் அரசாங்கம் முதல் ஆட்டத்தைச் சிறப்பாகவே ஆடியிருக்கிறது. எப்படி அது ஐ.எம்.எவ்வுடன் ஒரு சுமுகமான ஆட்டத்தில் உள்ளதோ, அவ்வாறே இந்தியாவுடனும் உறவாடுகிறது. மோடியின் இந்த இலங்கைப் பயணத்தில் அவருக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதை – மகிழ்ச்சி உண்டாகியதை – அவருடைய சமூக வலைத்தளப் பதிவுகள் காட்டுகின்றன. இதற்கு முன்பு அவர் மூன்று தடவை இலங்கைக்கு வந்திருக்கிறார். ஆனால், இந்தத் தடவையே அவர் உற்சாகமாக இருந்ததாக உணர முடிகிறது. ஏதோ நீண்டகால நண்பர்களைப்போல அநுரவும் மோடியும் காட்டிய நெருக்கம் இதற்குச் சான்று. 1980 களின் இறுதியில் இலங்கைத்தீவில் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்புகள் இந்தியாவைக் கடுமையாக எதிர்த்தன. ஒன்று ஜே.வி.பி. மற்றது விடுதலைப்புலிகள். ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தி, மாற்றியமைத்தது. அதனால்ஆட்சியைக் கைப்பற்றியது. இப்பொழுது அந்த ஆட்சியைத் திறம்பட நிகழ்த்திக் காட்ட முற்படுகிறது. விடுதலைப்புலிகள் மாற்றத்தைப்பற்றிக் கவனத்திற் கொள்ளவில்லை. சூழலின் – காலத்தின் மாற்றத்தைப் பொருட்படுத்துவதில் தவறிழைத்தது. அதனால் அது களத்தில் இருந்து அகற்றப்பட்டது. மாக்ஸிஸத் தத்துவம் எப்போதும் வலியுறுத்துவது, “மாற்றம் என்பது நிகழ்ந்தே தீரும். மாறாதவை அழிவடையும்” என்பதாகும். என்.பி.பி (ஜே.வி.பி) இதைப் புரிந்துள்ளது என எண்ணலாம். ஆகவே, அடுத்த கட்டமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் மேலும் பல அனுகூலங்கள் சித்திக்கக் கூடும். பல புதிய திட்டங்களுக்கான வாசல்கள் திறக்கப்படலாம். அதில் சில நெருக்கடிகளைத் தருவனவாகவும் இருக்கலாம். அதையெல்லாம் கையாள்வதுதான் அரசியல். அதுதான் அரசியல் ஆளுமையும் தலைமைத்துவமும் ஆகும். அநுரகுமார திசநாயக்க இளைய தலைவர். என்.பி.பிக்கு இது புதிய ஆட்சி அனுபவம். ஆனாலும் விடயங்களைக் கையாள்வதில் முதிர்ச்சியான போக்குத் தென்படுகிறது. இலங்கையின் இராசதந்திரமும் கொள்கை வகுப்பாளர்களும் எப்போதும் வியப்பூட்டும் வகையில் செயற்பட்டதே வரலாறு. தலைக்கு வருவதையெல்லாம் அவர்கள் தலைப்பாகையோடு தள்ளி விடுவார்கள். என்றபடியால்தான் இந்தச் சின்னஞ்சிறு தீவு, புவியியல் ரீதியாக நெருக்கடிப் புள்ளியிலிருந்தாலும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சிந்திக்கக் கூடியவர்களின் வரலாறு எப்போதும் முன்னோக்கியே பயணிக்கும். பின்னோக்குவதில்லை. நதிகள் பின்னோக்கிப் பாய்வதில்லை. என்.பி.பி. தன்னை ஒரு நதியாக உணர்ந்துள்ளது போலும். வரலாறு அதைச் சொல்ல வேண்டும் https://arangamnews.com/?p=11945
  14. பிள்ளையான் கைது: ஒன்றும் ஒன்றும் இரண்டா….? April 12, 2025 — அழகு குணசீலன்— தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சில நாட்களாகிறது. இந்த செய்தி அறிந்து வெடிக்கொழுத்தி சித்திரைப் புத்தாண்டை முன்கைட்டியே கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள். பிள்ளையானுக்காக ஒப்பாரி வைக்காவிட்டாலும் கவலைப்பட்டு நினைத்து பேச கணிசமானவர்கள் நிச்சயம் இன்னும் இருக்கிறார்கள். வழக்கம்போல் இந்தக் கைது விடயத்தில் மட்டக்களப்பு சமூகம் இரண்டாக இரு வேறுபட்ட நோக்குகளுடன் பிரிந்து கிடக்கிறது. பிள்ளையானின் கைதுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது ஒரு தரப்பினரின் பார்வை. அப்படி இல்லை இது கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியான சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும், நீதி, நிர்வாகத்தை அரசியல் பிடியில் இருந்து விடுவிக்கும் மற்றொரு நடவடிக்கை என்கின்றனர் மறுதரப்பினர். இதனால்தான் இதனை ஒன்றும்,ஒன்றும் இரண்டா? அல்லது அதற்கும் மேலா?என்று கேட்கவேண்டி உள்ளது. முதலில் கைது செய்யப்பட்டதற்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்ட போதும், பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ். ரவீந்திரநாத் 15, டிசம்பர்,2006 இல் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமைக்காக இந்த கைது இடம்பெற்றதாக தெரியவந்தது. இது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்களையும், சட்டப்பிரிவுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதால் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று நாட்கள்/ 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம் பெறுவதாகவே அறிய வந்தது. பின்னர் அது நீடிக்கப்பட்டுள்ளது. பின்னர் பாராளுமன்றத்தில் இது பற்றி பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையானுக்கு ஈஸ்டர் படுகொலைகளோடு கணிசமான தொடர்புகள் இருப்பதாக அறிவித்தார். இது பயங்கரவாத சட்டத்திற்குள் இழுத்து விடுவதற்கான காரணம் தேடலாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் ஈஸ்டர் படுகொலைகள் தொடர்பாக பிள்ளையான் பல தடவைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் சிறையில் இருந்தவர். இது குறித்து சிறைச்சாலையில் நடந்த சில நிகழ்வுகளையும் தனது நூலில் எழுதியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்திலும் இது போன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டா. தற்போது உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார காலத்தில் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு அரசியல் பின்னணியைக்கொண்டது என்பதற்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இதனை ஆதாரம் காட்டுகிறது. இதைவிடவும் கடந்த தேர்தல் காலத்தில் மட்டக்களப்பு வந்திருந்த அநுரகுமார திசாநாயக்க பிள்ளையானையும் அவரது கட்சியையும் கடுமையாக எச்சரிக்கும் தொனியில் அவரது வழமையான பாணியில் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த பிள்ளையான், “எங்களுக்கு முதலில் ஆயுதம் தந்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான் என்றும், பின்னர் அவர்கள் ஆயுதம் கேட்டபோது நாங்கள் கொடுக்கவில்லை……” என்றும் கூறினார். பிள்ளையானின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி. இதுவரை பதிலளித்ததாக தெரியவில்லை. அண்மையில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்ற கட்சியின் பெயரை பிள்ளையான், கருணா, வியாழேந்திரனின் கட்சிகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக பயன்படுத்துவது குறித்து இரு தரப்பாலும் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பெயர் குறித்து விவாதிப்பதற்கு இப்பத்தி பொருத்தமற்றது என்பதால் இனி வரும் காலங்களில் இதற்கு வெளிச்சம் போடப்படும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரைப்பொறுத்தமட்டில் தமிழரசுகட்சிக்கு அடுத்து என்.பி.பி.க்கு சவாலாக கிழக்கு கூட்டமைப்பு அமையும் என்று நம்புகின்றனர். இதனால் கடந்த பாராளுமன்ற தேர்தல் போன்று இப்போதும் பிள்ளையானின் தலையில் குட்ட அநுரகுமார அரசு முனைகிறது என்கிறார்கள் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள். வியாழேந்திரன், பிள்ளையானுக்கு அடுத்து கருணா மீது புலனாய்வு பிரிவினர் பாய்வார்களா? என்ற கேள்வியும் மட்டக்களப்பில் நிலவுகிறது. ஜனாதிபதி அநுரகுமார சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு வந்தார். அதற்கு முன்னர் திட்டமிட்டு, கணக்கு பார்த்து பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இந்த “கணக்கு பார்ப்பில்” கவனிக்கத்தக்கது என்னவெனில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு தற்போது நீதிமன்ற விடுமுறை காலமாகும். ஏப்ரல் 22 ம் திகதியே நீதிமன்றங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கும் இதுவும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்கிறது ரி.எம்.வி.பி. ஆக, பிள்ளையான் இல்லாத மட்டக்களப்புக்கு வருவதும், ஈஸ்டர் படுகொலையை அரசியல் பிரச்சாரமாக்குவதும் ஜனாதிபதியின் உள்திட்டம் என்று கூறுகிறார்கள் அவர்கள். முதலாவது தரப்பினரின் கருத்துக்களை வடிகட்டியதில் கிடைத்த மற்றொரு தகவல் வடக்கில் என்.பி.பி. தனது ஆதரவை அதிகரிக்க புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை நாடியிருப்பதாகவும், அந்த டயஸ்போராவின் நிபந்தனையை நிறைவு செய்யவே, பிள்ளையான் கைது, வீதித்தடை நீக்கம் போன்றவை இடம்பெறுகின்றனவாம். தமிழ் டயஸ்போராவின் நிபந்தனைகளில் டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன் ஆகியோர், உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைத்த தகவல் ஒன்றில் அறியக்கிடைத்தது. டக்ளஸ் தேவானந்தா ஊழல், இலஞ்சம் மற்றும் சிறிதர் தியேட்டர் சொத்து சேர்ப்பு சம்பந்தமாகவும், சித்தார்த்தன் அவரது புளட் இயக்க தோழர், ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம் என்றும் கதையடிபடுகிறதாம். என்.பி.பி. வடக்கில் பாராளுமன்றமன்ற தேர்தலில் கிடைத்த ஆதரவை தக்கவைக்க முயற்சிக்கிறது. எனினும் எப்படித்தான் இருந்தாலும் புலிகளை எதிர்த்து, உயிரைப்பணயம்வைத்து ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை வலியுறுத்தியவர் டக்ளஸ் கொமறாட் என்று அநுரகுமார கருதுவதாகவும் ஒரு கசிவு தகவல் உண்டு. இது இவ்வாறு இருக்க, தமிழ்த்தேசிய வெடித்தரப்பும், அரசாங்கத் தரப்பும் பிள்ளையான் கைது செய்யப்பட்டதில் சத்தியமாக அரசியல் பின்னணி இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்து வருகிறார்கள். அண்மையில் தென்னிலங்கையில் பேசிய பிரதி அமைச்சர் ஒருவர் திறைசேரி அந்நியச் செலாவணி இருப்பு குறித்து “அம்பே அப்பே” என்று அம்மா மேல் சத்தியம் செய்தது போல் இல்லாமல் இவர்களின் சத்தியம் இருந்தால் சரிதான். என்.பி.பி. அரசாங்கத்தின் இலஞ்ச, ஊழல் அற்ற, நீதி, நிர்வாகத்தில் சுதந்திர செயற்பாட்டை கொச்சைப்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சாரம் அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது என்று அவர்கள் நம்புகின்றனர். ராஜபக்சாக்களின் சொத்து சேகரிப்பு, ஈஸ்டர், பட்டலந்த படுகொலைகள் போன்று படிப்படியாக ஒவ்வொன்றும் வெளிச்சத்திற்கு வரும் என்று வாதிடுகின்றனர். அப்படியானால் அரசாங்க அரசியல் வாதிகள் அடிக்கடி கைதுகள் குறித்து முன்கூட்டியே பேசுகின்றனரே அரசியல் தலையீடு இல்லாத நீதி நிர்வாகத்தில் இது எப்படி சாத்தியம் என்றும் மறு தரப்பு கேட்கிறது. முன்னாள் தமிழ்த்தேசிய ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளவர்கள் பிள்ளையான் – கருணா குழுவினிரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்று பிள்ளையானின் கைதை நியாயப்படுத்தியுள்ளார். அதைப்படித்தபோது இஸ்ரேல் மொசாட் புலனாய்வு பிரிவின் தலைவர் ஒருவர் முக அடையாளத்தை மறைக்க ஒரு கண்ணை மறைத்து இருப்பார். அதுதான் நினைவுக்கு வந்தது. அந்த அதிகாரியின் பெயர் தயான். அது போன்று ஒரு கண்ணால் பார்த்ததாலோ என்னவோ அரியத்தாருக்கு புலிகள் செய்த கொலைகள் / கொலை முயற்சிகள் தெரியவில்லை. அந்த பட்டியலில் அ.தங்கத்துரை, கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, முன்னாள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மௌனகுருசாமி, கிங்ஸ்லி இராசநாயகம், சம்பந்த மூர்த்தி, ராஜன் சத்தியமூர்த்தி, நிமலன் சௌந்தரநாயகம், சாம்.தம்பிமுத்து, வாசுதேவா போன்றவர்கள் மீதான கொலைகள் அவருக்கு தெரியவில்லை. இதில் வேடிக்கை என்ன வெனில் அனேகர் தமிழரசுக்கட்சிக்காரர், தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், அவரின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்படி அரசியல் செய்வதால்தான் தமிழரசு இன்று “சின்னவீடு” ஆகி இருக்கிறது. சங்கு சின்னத்தில் ஜனாதிபதிக்கு போட்டியிட்டதால் சந்திரா பெர்ணான்டோ, வணசிங்கா, ஊடகவியலாளர் நித்தியின் கொலைகள்/ தாக்குதல்களையும் மறக்கவேண்டியதாயிற்று. இந்த நாட்டில் மொத்தமாக 50 ஆண்டுகாலமாக ஆயுத வன்முறை நிலவியது. இன்னும் நிலவுகிறது. ஜே.வி.பி.யும், தமிழ் இளைஞர்களும் அவரவர் அரசியல் நோக்கை அடைவதற்காக ஆயுதம் தூக்கி ஆயிரக்கணக்கான படுகொலைகளை செய்து இறுதியில் தோற்றுப்போயினர். இவ்வாறான சூழலில் பல்வேறு சிறிய ஆயுதக்குழுக்களும், அரசாங்க படைகளுடன் சேர்ந்து செயற்படும் குழுக்களும், ஊர்காவற்படைகளும் இருந்தது வெளிப்படை. கலவர காலத்தில் ஜனநாயக அரசாங்கமோ, சட்டம் ஒழுங்கோ நாட்டில் இருக்கவில்லை. ஆயுதமேந்தியோர் ரில்வின் சில்வா சொல்வதுபோல் என்ன காரணத்தை சொன்னாலும் இந்த ஜனநாயக ரீதியான, நிறுவனரீதியான கட்டமைப்புக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இதன் போது மனித உரிமைகள் மீறல், ஜனநாயக மறுப்புக்கள், கொலைகள், கொள்ளைகள் , சட்டமறுப்புக்கள், மீறல்கள் உள்நாட்டு போர் நடந்த நாடுகள் போன்று இலங்கையிலும் இடம்பெற்றன. இந்த கொடூரத்திற்கான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கவேண்டும். இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். என்பதில் வேறு கருத்துகள் இல்லை. அப்படி இல்லாமல் இனப்படுகொலை அழிவுகளையும், இறுதியுத்த அழிவுகளையும் செய்த அரசபயங்கரவாத இராணுவ இயந்திரத்தை பாதுகாத்துக்கொண்டு என்.பி.பி.யினால் எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி.னால் கொல்லப்பட்ட 1300 பேரின் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு ஜே.வி.பி.யின் நீதி என்ன? இது வரை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே எம்.பி. இது இழகிய இரும்பை கொல்லன் ஓங்கி அடிக்கும் கதை. புதிய அதிகாரம் பழைய அதிகாரத்தை பாதுகாத்தல். இளம் ராசபக்சாக்கள் மட்டும் விசாரணை என்று அழைக்கப்பட்டார்கள், எதுவும் நடக்கவில்லை. மகிந்த ராஜபக்சவை அரசாங்க வீட்டில் இருந்து கூட எழுப்ப முடியவில்லை. அமைச்சர் பிமல் ரத்நாயக்க சர்வதேச ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார். அரியநேத்திரனின் கண் மறைப்பைதான் இவரும் செய்துள்ளா. இறுதியுத்தகால அழிவை விசாரிக்க உள்ளகபொறிமுறை தான் என்று சர்வதேச பொறிமுறையை நிராகரித்தவர்கள், ஆனால் ஜே.வி.பி.க்கு எதிரான பட்டலந்தை கொலைகளை விசாரிக்கவும் ரணிலுக்கு தண்டனை வழங்கவும் சர்வதேச ஆதரவை பெறப்போகிறார்கள். இதற்கு பெயர் இனவாதத்திற்கு இந்த நாட்டில் இனி இடமில்லை? இங்கு எப்படி ஒன்றும், ஒன்றும் இரண்டாகும்…….? https://arangamnews.com/?p=11941
  15. இந்தியப் பிரதமரின் வருகை : அனுர யாரோடு ? - நிலாந்தன் நான்கு தடவைகள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து விட்டார். இந்த நான்கு தடவைகளிலும் அவர் நான்கு இலங்கை ஜனாதிபதிகளை சந்தித்திருக்கிறார். பத்தாண்டு காலத்துக்குள் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு நான்கு பேர்களிடம் கைமாறும் அளவுக்கு இச்சிறிய தீவின் அரசியல் ஸ்திரமற்றதாக இருந்து வருகிறது.ஆனாலும் பிரதமர் மோடியின் வருகையின்போது மாறாத இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாடு. இரண்டாவது,மீனவர்களின் விவகாரம்.அதுவும் தமிழ் மக்களோடு தொடர்புடையதுதான். இந்தியப் பிரதமரின் வருகையை மூன்று தளங்களில் வைத்துப் பார்க்க வேண்டும்.முதலாவது பிராந்தியத் தளம். இரண்டாவது கொழும்பு. மூன்றாவது தமிழ் நோக்கு நிலை. பிராந்தியத்தில் இந்தியா “அயலவர் முதலில்” என்று கூறிக்கொள்கிறது. ஆனால் நடைமுறையில் அதன் அயலில் உள்ள சிறிய நாடுகளை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் இருந்து சீனா எங்கே கழட்டி எடுத்து விடுமோ என்ற நிச்சயமின்மைதான் காணப்படுகின்றது.நேபாளம், பங்களாதேஷ், மாலை தீவுகள் ஆகிய மூன்று நாடுகளிலும் இந்தியாவின் பிடி சகடயோகமாகத்தான் இருக்கிறது. இலங்கையிலும் அப்படித்தான். இப்பொழுது இலங்கையில் ஆட்சி செய்து கொண்டிருப்பது சீன இடதுமரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்திதான். இப்படிப்பட்டதோர் பிராந்தியப் பின்னணிக்குள் இந்தியப் பிரதமரின் வருகையின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்,காணொளிகளில் பிரதமர் மோடிக்கு அருகே அனுர பணிவான ஒரு இளைய சகோதரனைப்போலவே காணப்படுகிறார்.அயலில் உள்ள சிறிய நாடுகளுக்கும் தனக்குமான பிடி சகடயோகமாகக் காணப்படும் ஒரு பின்னணிக்குள் இலங்கைத்தீவில் தேசிய மக்கள் சக்தியை எப்படித்தன் செல்வாக்கு மண்டலத்துக்குள் பேணுவது என்பதுதான் இப்பொழுது இந்தியாவுக்குள்ள பிரதான சவால். இது முதலாவது. இரண்டாவது,கொழும்பு.இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் குழந்தை.பொருளாதார நெருக்கடியைத் தீர்க்காவிட்டால் அதற்கு எதிர்காலம் இல்லை.சில தசாப்தங்களுக்கு முன்பு இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராகக் காணப்பட்ட ஜேவிபிக்கு இப்பொழுது இந்தியா தொடர்பான அதன் கொள்கைகள் மாறியிருப்பதைக் காட்டவேண்டிய நிர்பந்தம் உண்டு. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.அவர் இங்கு ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்கள் நல்கிய ஆதரவை பாராட்டிப் பேசினார். அதாவது சீனா, புதிய அரசாங்கத்தை எதிர்பார்ப்போடு பார்க்கிறது என்று பொருள்.இந்த எதிர்பார்ப்பானது ஏற்கனவே தனக்குள்ள இந்தியாவின் எதிரி என்ற படிமத்தைப் புதுப்பிக்கக் கூடியது என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெரிகிறது.எனவே பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்காமல் எப்படிப் பொருளாதாரத்தை நிமிர்த்துவது என்பதுதான் அவர்களுக்குள்ள சவால்.அதை நோக்கியே அவர்கள் இந்தியாவை அணுகுவார்கள். மேலும் இந்தியாவை அரவணைப்பதன்மூலம் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்களையும் குறைக்கலாம். மூன்றாவது தமிழ் நோக்கு நிலை.கடந்த 15 ஆண்டுகளிலும் இந்தியா தமிழர் தொடர்பான அதன் நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் காட்டியிருக்கவில்லை.13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது யாப்பில் இருப்பதை அமுல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப் பாடாகக் காணப்படுகின்றது.ஆனால் இந்த கோரிக்கையை இந்தியா கொழும்பிடம்தான் முன்வைக்க வேண்டும். மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.13ஆவது திருத்தம் என்பது இந்தியாவின் குழந்தை.எனவே கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அதனை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற கேள்வியை இந்தியா கொழும்பிடமும் தன்னிடமும்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். இலங்கைத் தீவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் 13ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.ஆனால் கடந்த 38 ஆண்டுகளாக அந்த நிறைவேற்று அதிகாரம் அந்த திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தாமல் தடுப்பதற்குத்தான் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.அதாவது யாப்புக்கு எதிராகத்தான் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டதோர் அபகீர்த்தி மிக்க யாப்புப் பாரம்பரியத்தை கொண்ட ஒரு நாட்டிடம் திரும்பத் திரும்ப 13ஐ அமுல்படுத்து என்று ஏன் இந்தியா கூறிக் கொண்டிருக்கிறது? தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் கொழும்பைப் பகைத்துக் கொள்ள இந்தியா தயாரில்லை?13ஆவது திருத்தம் என்பது இலங்கைத்தீவில் இந்தியாவின் இயலாமையைக் காட்டும் ஒரு குறியீடுதான். இந்த விடயத்தில் 13ஆவது திருத்தம் மற்றும் இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு பொருத்தமானது.கடந்த வாரம் இந்தியப் பிரதரைச் சந்தித்தபின் கஜேந்திரகுமார் பின்வருமாறு கூறியிருக்கிறார்…”இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு மட்டும்தான் அதன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒரு பார்வை;பங்களிப்பு;உரித்து இருக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்று அங்கீகரிக்கின்றோம்…வேறு எந்த நாட்டுக்கும் தங்களுடைய தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இலங்கையை அணுகும் உரிமையோ,அருகதையோ இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்தினோம்….இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு என்ற அம்சத்தில் இலங்கைத் தீவு இந்தியாவுக்கு மற்றைய நாடுகளை விட முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டைக் குறிப்பிட்டோம்….விசேடமாக வடக்கு,கிழக்கில் அந்த உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என்பதை இந்தச் சந்திப்பில் சொன்னோம்….” இது முன்னணியின் புதிய நிலைப்பாடு அல்ல. இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பாக முன்னணி தொடர்ச்சியாக இதே கருத்தைத்தான் கூறி வருகிறது.இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கிலான அந்த அணுகுமுறை மிகவும் தெளிவானது; பொருத்தமானது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன்மூலம் கொழும்பைப் பகைத்துக்கொள்ளத் தயாரில்லை என்ற செய்தியை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது.ஆனால் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் சீனா எப்பொழுதோ நுழைந்துவிட்டது.அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா 100ஆண்டு குத்தகைக்குப் பெற்றுவிட்டது.கொழும்பில் ஒரு துறைமுக நகரத்தை கட்டியெழுப்பி வருகிறது. இப்படிப்பட்டதோர் உள்நாடு பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் சூழலின் பின்னணியில் வைத்தே இந்தியப் பிரதமரின் வருகையை விளங்கிக்கொள்ள வேண்டும் இரு தசாப்தங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் எதிரியாக காணப்பட்ட ஒரு கட்சியானது இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கௌரவப் பட்டம் வழங்கியிருக்கிறது.அரசியலில் நிரந்தரப் பகைவரும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை. ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்துக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது. ஆனால் அதே சீனாதான் ஜேவிபிக்கு கொம்யூனிச புத்தகங்களையும் வழங்கியது.ஜேவிபியின் முதலாவது போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் சிறை வைக்கப்பட்ட ஜேவிபிக்காரர்களிடம் ஒரு சிறை அதிகாரி என்னென்ன புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள்.அநேகமானவை சீன கொம்யூனிச புத்தகங்கள். அந்தப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்த அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே தன் கையில் வைத்திருந்த ரி-56 ரக ரைஃபிளைக் காட்டிச் சொன்னாராம்,”சீனா உங்களுக்கு இந்தப் புத்தகங்களைத் தந்தது, எங்களுக்கு இந்த துவக்கைத் தந்தது” என்று இதுதான் அரசியல். அன்றைக்கு சீனா மட்டுமல்ல இந்தியாவும் சிறீமாவோவின் அரசாங்கத்துக்கு ஆதரவாக நின்றது. இது நடந்தது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு. அதன்பின் இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய பின் ஜேவிபி அதன் இரண்டாவது போராட்டத்தைத் தொடங்கியது.அது முழுக்க முழுக்க இந்திய படையினரின் பிரசன்னத்துக்கு எதிரானது.அந்த இரண்டாவது போராட்டத்தோடு ஜேவிபியின் ஆயுதப்போராட்ட முனைப்பு முற்றாக நசுக்கப்பட்டது. இவ்வாறு சீன இந்திய உதவிகளோடு நசுக்கப்பட்ட ஒரமைப்பு. இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கௌரவப் பட்டத்தை வழங்குகிறது. இதுதான் அரசியல். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தரப் பகைவர்களும் இல்லை. சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு.பெரிய இனம். ஆனால் ராஜதந்திரம் என்று வரும் பொழுது விவேகமாக முடிவுகளை எடுக்கின்றார்கள்.அரசற்ற சிறிய இனமாகிய தமிழ் மக்களும் விவேகமான முடிவுகளை எடுக்கவேண்டும். விவேகமான முடிவென்பது 13ஐ ஏற்றுக்கொள்வதோ அல்லது “எக்கிய ராஜ்ஜிய”வை ஏற்றுக்கொள்வதோ அல்லது நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தைக் கைவிடுவதோ அல்ல. உடனடியாகவும் முதலாவதாகவும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்..கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் கொடுத்த வெற்றி நிரந்தரமானது அல்ல என்பதனை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும்.மோடியின் வருகையையொட்டி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் ஆங்கிலத்தில் முகநூலில் பின்வருமாறு எழுதியிருந்தார்….”தென்னாசியாவின் சக்தி மிக்க தலைவர்கள். ஒருவர் தனது சிறுபிராயத்தில் புகையிரதத்தில் தேநீர் விற்றவர்.மற்றவர் புகையிரதத்தில் சிற்றுண்டிகள் விற்றவர். இருவருமே ஒரு காலம் அரசியல் இயக்கங்களின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.ஒன்று ஆர்.எஸ்.எஸ்.அதிலிருந்து பிஜேபி எழுச்சி பெற்றது.மற்றது,ஜேவிபி. அதிலிருந்து என்பிபி எழுச்சி பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும், இரண்டு கட்சிகளுமே ஊழலுக்கும் சுதந்திரத்திற்கு பின் தத்தமது நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய உயர் குழாத்துக்கும் எதிரானவை.இந்த இரண்டு ஐதீகப்பண்புமிக்க தலைவர்களும் தென்னாசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடும்.” இப்படிப்பட்ட பிராந்தியக் கனவு ஏதாவது தேசிய மக்கள் சக்தியிடம் இருக்குமாக இருந்தால் முதலில் அவர்கள் உள்நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் முழு இலங்கைக்கும் பாதுகாப்பு இல்லை மட்டுமல்ல இந்தப் பிராந்தியத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்பதுதான் கடந்த 15 ஆண்டுகால அனுபவமாக உள்ளது. https://www.nillanthan.com/7302/
  16. இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது!! Vhg ஏப்ரல் 12, 2025 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை தளபதியாக இயங்கிய கருணா,தன்னுடைய பதவி காலத்தில் நடைபெற்ற அத்தனை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் மட்டக்களப்பில் பிரதான சுடரினை ஏற்றி மடிந்த வீரர்களுக்காக அஞ்சலித்து வந்திருக்கிறார் . இறுதியாக 2003 கார்த்திகை இருபத்தி ஏழில் தனது இறுதி அஞ்சலியை தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் செலுத்தினார். விடுதலைப்புலிகளின் பாரம்பரியத்தை மீறி அந்த ஆண்டில் சில புதுமைகளை சேர்த்து அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்.முன்னேற்பாடுகளிலும் வீரர்களின் அணிநடைமற்றும் அஞ்சலிக்கும் முறை என்பவற்றையும் தானே முன்னின்று பயிற்சி வழங்கி வழிநடத்தினார். சமாதான உடன்படிக்கை காலத்தில் அந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்திருந்தமையால் தரவை மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றன.மரபை மீறிய அந்த மாவீரர் நாள் நிகழ்வு பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தின. அந்த இறுதி நிகழ்வோடு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு பிரிந்த அவர்,அதன் பின்னர் போராளிகள் தொடர்பிலான எந்த ஒரு அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை. 2003 ற்கு பின்னரான மாவீரர் நாள் அனுட்டானங்கள் நடைபெறும் பொழுதுகளில் ,கருணா நிறைந்த மது போதையில் கிடப்பதாகவே அவரது அருகாமையாளர்கள் காதோடு காது வைத்து பேசிக்கொள்வர். தனது கட்டளையை ஏற்று சண்டையிட்டு மடிந்து போன வீரனைகூட நினைவில் கொள்ளும் நிலையில் அவர் இருப்பதில்லை என்பதுதான் தகவல். ஆனால்,திடீரென ஞானம் வந்தது போல் கதிரவெளியில் கடந்த 10 ஆம் திகதி போய் நின்றிருக்கிறார் கருணா. சித்திரை 10 ஆம் திகதியை பிள்ளையான் அணியினர் சிவப்பு சித்திரை எனும் பெயரில் வெருகல் துறை மற்றும் ஏனைய இடங்களில் தம்மோடு இருந்து மாண்டு போன அல்லது தமிழினத்தை காட்டிக்கொடுத்தனர் என குற்றஞ்சாட்டி விடுதலை புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சில உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வந்திருந்தனர் . தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் இதுவரை இடம்பெற்று வந்த அந்த நினைவேந்தல் முதல் தடவையாக இம்முறை கருணா அவர்களின் கைக்கு மாறியிருக்கிறது. 21 வருடங்களுக்கு பின்னர் போராளிகளை அஞ்சலிக்கச்சென்ற கருணா,யாரை நினைவுகூர்ந்திருப்பார்? கருணா என்ற ஒற்றை நபருக்காக தான் கொண்ட கொள்கை,கோட்பாடு எல்லாவற்றையும் மறந்து வெருகல் துறையில் களமாடிய பாரதிராஜாவை நினைவு கூர்ந்திருப்பாரா?அம்மான் என்ற பெயரைக்கேட்டாலே புல்லரித்து நின்ற மாபெரும் தளபதி ராபட்டை நினைவுகூர்ந்திருப்பாரா?அல்லது ஊரவன் என்ற அடிப்படையில் தன்னை நம்பி வந்த ஜிம்கலி தாத்தாவை நினைவுகூர்ந்திருப்பாரா? அல்லாது போனால் கருணா தலையீடு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுள் இருக்கவேண்டும் என்று வாதாடியதால் பிள்ளையானுக்காக கொல்லப்பட்ட நந்தகோபனை நினைவுகூர்ந்திருப்பாரா?பிள்ளையானின் கோட்டைக்குள் நின்று கருணாவுக்காக கொக்கரித்து வெல்லமுடியாது போகவே சையனைட் அருந்தி மாண்டுபோன மருத்துவ போராளி திலீபனை நினைவுகூர்ந்திருப்பாரா? எத்தனை எத்தனை பெறுமதியான உயிர்களை தனது சுயநலத்திற்காக பலியிட்ட கருணா அவர்கள்,நேற்றுவரை அந்த நினைவுகளே இன்றி கிடந்து,இன்று வந்து விளக்கேற்றி அஞ்சலிப்பதன் மாயமென்ன? இங்கே இரண்டு கேள்விகள்தான் தொக்கி நிற்கின்றன. 1.இனி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு கருணாதான் தலைவரா? 2.இனி பிள்ளையானை இந்த அரசாங்கம் சிங்களவர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்கள் நடாத்திய அத்தனை கொலைகளுக்கும் காரணகர்த்தாவாக்கி சிறையிலேயே அடைத்துவிடபோகிறதா? வியாளேந்திரனின் சிறை பிரவேசம்,பிள்ளையானின் கைது,கருணாவின் மீளுருவாக்கம் என்பனவெல்லாம் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் நல்ல வரலாற்று பாடங்களை கற்றுத்தந்துகொண்டுதான் இருக்கின்றன. "இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது" https://www.battinatham.com/2025/04/blog-post_99.html
  17. சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்தியவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும் - ஜனாதிபதி வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கிலிருந்து அநாவசியமாகப் பணத்தை பெற்று அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த வங்கிக் கணக்கை நிறைவுறுத்தி பணம் பெறுமாறு தாமே அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுகிறார். அவ்வாறெனில் தற்போது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் இவ்வாறான உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை காணப்பட்டது. தற்போது அதனை நாம் மாற்றியுள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கோ, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கோ வராதவர்கள் தற்போது விசாரிக்கப்படுகின்றனர். விசாரணைகளை முன்னெடுக்க உரிய சட்டஅமுலாக்க நிறுவனங்களுக்கு நாம் சுதந்திரம் வழங்கியுள்ளோம். முன்னர் காவல்துறையினருக்கு பயந்து குற்றவாளிகள் தலைமறைவாகினர். தற்போது முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காவல்துறைமா அதிபரே தலைமறைவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வாகனங்களைக் கொண்டுவந்தனர். அவர்கள் அத்தகைய வாகனங்களைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்தினர். அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்படவில்லை. ஏனையோருக்கே சட்டம் உரித்தானது என அவர்கள் செயற்பட்டனர். எனவே, அவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய சிலர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளனர். அவ்வாறானவர்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியலொன்று உள்ளது. இது அரசியல் பழிவாங்கல் அல்ல, நாம் சட்டத்தை முறையாக செயற்படுத்துகிறோம் என்பதையே இது காட்டுகிறது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/402764/சட்டவிரோதமாக-வாகனங்களைப்-பயன்படுத்தியவர்களின்-பெயர்-பட்டியல்-விரைவில்-வெளியாகும்-ஜனாதிபதி
  18. புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு செய்திகள் மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகிய 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் அமையவுள்ளது. விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும். இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், உள்ளக வீதி வசதிகள், மின்சார வசதிகள் என்பன கிடைக்க வசதி செய்யப்படும். இதற்கு மேலதிகமாக முதலீட்டு ஊக்குவிப்பாக முதலீட்டுக் கழிவுரிமை 200 வீதம் வழங்கப்படும். இது ஏனைய பகுதிகளில் 100 வீதமாக உள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் 30 வருட குத்தகைக்கு வழங்கப்படும். இது பொதுவான நடைமுறை. தேவையை பொறுத்து இதனை நீடித்துக் கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு தேவையான அனுமதிகளை முதலீட்டு சபை ஒழுங்கமைத்து வழங்கும். தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், கட்டட நிர்மாணத்திற்கு தேவையான பொருட்கள் போன்றவற்றிற்கு இறக்குமதி தீர்வை விலக்களிக்கப்படும். ஏற்றுமதி நோக்கிலான தொழில் முயற்சிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை தீர்வை இன்றி இறக்குமதி செய்யலாம். எனவே மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை இந்த 3 வலயங்களிலும் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறோம். இதன் மூலம் வடமாகாணம் பொருளாதார ரீதியாக முன்னேறவும், தேசிய ரீதியாக எமது உற்பத்தியின் பங்களிப்பை அதிகரித்து கொள்ள முடிவதுடன் வடமாகாணத்தில் அதிகளவானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். மேற்படி பிரதேசங்களில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் தமது விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு சமர்ப்பிக்க முடியும். ஆகவே இந்த வருட இறுதியில் இவ் மூன்று வலயங்களும் உருவாக இருப்பதனால் விரைவாக விண்ணப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் முதலீட்டாளர்களை கோருகின்றது. இது தொடர்பாக மேலதிக விபரங்களை 021 222 1336, +9477 777 6606, மின்னஞ்சல் - jeyamanonr@boi.lk, முகவரி - சிரேஸ்ட பிரதிப்பணிப்பாளர், இலங்கை முதலீட்டு சபை, வடமாகாண காரியாலயம், NHDA கட்டடிம், கண்டி வீதி, யாழ்ப்பாணம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும். இது பொருளாதார ரீதியாக கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம். இதனை முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெறுவதற்கு யாழ் வணிகர் கழகத்தை தொடர்புகொள்ளலாம் - என்றார். https://adaderanatamil.lk/news/cm9efqa1j00a1hyg3e8djsodq
  19. யாழில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித! நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றினார். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித ஹேரத் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் நேற்று கலந்து கொண்டிருந்தார். இதன் போது தனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் எனக் கூறி பல இடங்களிலும் சிறிது நேரம் தமிழ் மொழியில் உரையாற்றியிருந்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கு தமிழில் பேசவே விரும்புகிறேன். எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். அதனால் தமிழில் கொஞ்சம் உரையாற்றிவிட்டு தொடர்ந்து சிங்களத்திலும் கதைக்கிறேன். எங்களுக்கு இன மத சாதி பேதமிஎல்லை. நாங்கள் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டும். ஏனெனில் நாங்கள் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளே. நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை - என்றார். https://adaderanatamil.lk/news/cm9f5ca7t00aihyg3q6xspai5
  20. ஞாயிறு 13 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 11 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 12 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் ஏராளன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 07 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் நுணாவிலான் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  21. நான் நித்திரைக்குப் போகமுதல் போடலாம்! ஆனால் அதுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு!
  22. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சாய் சுதர்சனும், சுப்மன் கில்லும் வேகமாக அடித்தாடி அரைச் சதங்களைப் பெற்று சிறந்த அடித்தளத்தைக் கொடுத்திருந்தாலும் பின்னர் வந்த வீரர்கள் விக்கெட்டுகளை விரைவாகப் பறிகொடுத்தமையால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்களான எய்டன் மார்க்கம், நிக்கொலஸ் பூரன் மிகவேகமான அடித்தாடி வெற்றி இலக்கை நோக்கி விரைவாக முன்னேற உதவியதால் 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் மின்னல் வேக துடுப்பாட்டங்களுடனும் மார்கோ ஜென்ஸெனின் நான்கு சிக்ஸர்களின் உதவியுடனும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதியுச்ச வெற்றி இலக்கை அடையும் நோக்கோடு ஆரம்பத்தில் இருந்தே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் மழைபோலப் பொழிந்தனர். அபிஷேக் சர்மா ஐபில் 2025 தொடரின் அதிகூடிய 141 ஓட்டங்கள் எடுத்ததும் ட்ராவிஸ் ஹெட்டினது 66 ஓட்டங்களும், முதல்விக்கெட் இணைப்பாட்ட சாதனையான 171 ஓட்டங்களும் வெற்றி இலக்கை அடைய உதவின. இறுதியில் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த @ரசோதரன் க்கு புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.