Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஐபிஎல் 2025 இன் 12வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுடன் சுருண்டது. அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரியான் ரிக்கெல்ரனின் அதிரடியான ஆட்டமிழக்காது எடுத்த 62 ஓட்டங்களுடன் 12.5 ஓவர்களிலேயே இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 121 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் | Sri Lanka News | Ada Derana | Truth First செய்திகள் பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (30) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தை முதல் தடவையாக பார்வையிட்ட அமைச்சர் விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும் அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். இதன் போது விமான நிலையத்தின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஹர்ச அபய விக்ரம மற்றும் ஏனைய ஊழியர்களுடன் சேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார். இதன் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர், பழைய அரசாங்கம் போல் நாம் பொய் கூற மாட்டோம் விமான நிலையத்தின் திட்டமிடல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வேலை திட்டங்கள் நிறைவடைந்துள்ளன எனவே அதனுடைய திட்டமிடலுக்கு ஏற்ப நான்கு மாதங்களுக்குள் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cm8wj9shi00gd10a66zsm12sr
  3. ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி மீண்டும் ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது." "பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இதற்குப் பொறுப்பான ஒரு குறிப்பிடத்தக்க குழுவை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது," என்றார். https://adaderanatamil.lk/news/cm8vk9kfl00gwnr5txjy1pg4f
  4. கணணியில் ஒன்றுமில்லை! எல்லாம் கூகிள் கிளவுட்டில்தான்! அது எல்லாம் 2, 3 பூட்டுப் போட்டுப் பத்திரமாக இருக்கு😎
  5. GMT நேரப்படி நாளை திங்கள் 31 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் மாத்திரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் அகஸ்தியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  6. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஐபிஎல் 2025 இன் 10வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களையே எடுத்தது. அனிகெற் வேர்மா மாத்திரம் 74 ஓட்டங்களை சிறந்த அடிவீதத்தில் எடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த அடித்தளத்தைக் வேகமாக அடித்தாடிக் கொடுத்ததால், ஃபஃப் டுபிளெஸிஸின் 50 ஓட்டங்களோடு 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் இல்லை! -- ஐபிஎல் 2025 இன் 11வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிதிஸ் ராணாவின் மின்னல் வேக அடியில் எடுத்த 81 ஓட்டங்களுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை எடுத்தது. பிற வீரர்களில் ரயான் பராக் 37 ஓட்டங்களை எடுத்து ஒத்துழைப்புக் கொடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திரா முட்டையுடன் வெளியேறியதாலும் ருதுராஜ் கைக்வாட்டின் 63 ஓட்டங்களைத் தவிர பிறர் சோபிக்காததாலும் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @செம்பாட்டான் வெள்ளி திசையில் வீறு நடைகொண்டு முன்னேறுகின்றார். @suvy மீண்டும் துணை முதல்வராக அமைந்துள்ளார்.. இறுதிப் படிகளில் ஐவர் அப்படியே அமர்ந்துள்ளனர்!
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @யாயினி 🎉🎂🎊
  8. CSK ஆறு பந்தில் 20 ஓட்டங்கள் அடிப்பார்களா? வயசாளி வெல்ல உதவுவாரா? இல்லை! தோனி அவுட்!
  9. சரியான நேரத்தில் சரியான கூட்டு ? - நிலாந்தன் “அனுரவின் அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்திய ஊடகவியலாளரான மீரா சிறீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். புதிய யாப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்து அந்த யாப்பை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. தமிழர்கள் ஒரு தரப்பாகத் திரண்டு நின்றால்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமாக வெளிப்படுத்தலாம். மிகக் குறிப்பாக சுமந்திரனும் அவருடைய கூட்டாளிகளும் இணைந்து முன்பு தாங்கள் தயாரித்த “எக்கிய ராஜ்ய” என்கிற இடைக்கால வரைவை மீண்டும் மேசைக்கு எடுப்பதைத் தடுப்பது என்றால் தமிழ்த் தரப்பு ஐக்கியப்படுவது தவிர்க்கமுடியாதது. அதேசமயம் யாப்பை நோக்கி மட்டும் தமிழ்த் தரப்பு ஐக்கியப் படக்கூடாது, மாறாக தேர்தல்களை நோக்கியும் சமயோசிதமான,தந்திரோபாயமான கூட்டுக்களுக்குப் போகவேண்டும். அல்லது குறைந்த பட்சம் போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைகளுக்காவது போகவேண்டும் என்பதனை நான் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன். அதற்கு ஒரு அடிப்படைக் கோட்பாட்டு விளக்கம் உண்டு. தேர்தல் கூட்டுகள் பெரும்பாலும் தந்திரோபாயமானவை. ஆனாலும் தமிழ்மக்கள் ஒரு தரப்பாக தங்களை பலப்படுத்த வேண்டும் என்று சிந்தித்தால், தேர்தலுக்கும் அங்கே ஒரு பங்கு உண்டு. தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாகத் தோற்கும் பொழுது பின்னர் நாடாளுமன்றத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்பு பலமாக நின்று பேச முடியாது. எனவே ஒரு தரப்பாக தமிழ் மக்களைப் பலப்படுத்துவது என்று பார்த்தால் அது நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, மாகாண சபைகள்,உள்ளூராட்சி சபைகள் என்று எல்லாத் தேர்தல் களங்களிலும் தமிழ் தரப்பை ஆகக்குறைந்த பட்சம் தந்திரோபாய நோக்கத்தோடாவது ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாய கூட்டுக்களுக்குத் தயாராக இல்லை. அவர்கள் கொள்கை வழிக் கூட்டுக்களுக்கே தயாராக இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்.கடைசியாக இயங்கிய உள்ளூராட்சி சபைகளின் கடைசி கட்டத்தில் காரைநகரில் ஒரு பிரச்சினை வந்தது. அங்குள்ள சுயேட்சைக் குழு தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைக்க விரும்பியது. அது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு நான் உரையாடினேன். அவர்கள் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி குறிப்பிட்ட சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். அதேசமயம் அந்த உரையாடலின் போது, செல்வராசா கஜேந்திரன் என்னிடம் சொன்னார், “அண்ண இது போன்ற விடயங்களில் நீங்கள் என்ன கேட்டாலும் நாங்கள் செய்வோம். ஆனால் ஐக்கியத்தைப் பற்றி மட்டும் கேட்டு விடாதீர்கள்” என்று. அந்தளவுக்கு அவர்களுக்கு ஐக்கியம் அலர்ஜிக்காக இருந்தது. இருக்கலாம். அரங்கில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத சக்திகளே அதிகமாக இருக்கலாம். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், ஒரு தரப்பாக தமிழ் மக்களை பலப்படுத்துவது என்று சொன்னால் அதனை தந்திரோபாயமாகத்தான் செய்யலாம். அதுவும் தேர்தல் வழியில் தந்திரங்கள்தான் அதிகம். நான் திரும்பத்திரும்பக் கூறும் ஒர் உதாரணம் உண்டு. சுத்தமான தங்கத்தை வைத்து ஆபரணங்களைச் செய்ய முடியாது. தங்கத்தில் நகை செய்ய வேண்டுமானால் குறிப்பிடத்தக்க அளவுக்கு செப்பைக் கலக்க வேண்டும் வேண்டும். இந்த பூமியிலே பெரும்பாலான விடயங்கள் அப்படித்தான். அதிலும் அரசியலில், குறிப்பாக தேசியவாத அரசியலில்,அதுதான் நடைமுறைச் சாத்தியமானது. அரசியலில் புதுமையானது,நீதியாயானது,புனிதமானது, சரியானது, பிழையானது…போன்ற அனைத்துமே சார்புக் கணியங்கள்தான். ஒப்பீட்டு முடிவுகள்தான். நடைமுறை வாழ்வில் முழுப் புனிதமானது எதுவும் இல்லை. முழுத் தூய்மையானது எதுவும் இல்லை. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரையும் முசோலினியையும் தோற்கடிப்பதற்காக இரண்டு கொள்கை எதிரிகள்தான் கூட்டுச் சேர்ந்தார்கள். அதாவது முதலாளித்துவமும் கொம்யூனிசமும் கூட்டுச்சேர்ந்தே இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தன. கொள்கைப்படி பார்த்தால் அது ஒரு பிழையான கூட்டு. ஆனால் அது உலகப்போரை நிறுத்திய கூட்டு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது உருவாக்கியிருக்கும் கூட்டில் இருப்பவர்களில் அநேகர் முன்பு வெவ்வேறு கூட்டுக்களில் இருந்தவர்கள்; வெவ்வேறு தரப்புகளோடு சேர்ந்து உழைத்தவர்கள். இறந்த காலத்தைக் கிண்டினால் யாருமே புனிதரில்லை. ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தான். கஜேந்திரக்குமாரின் தகப்பனார் குமார் பொன்னம்பலம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் 1980களின் இறுதிக் கட்டத்தில் கொழும்பில் உள்ள தனது இல்லத்தின் பாதுகாப்புக்கு புளட், டெலோ ஆகிய இயக்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றிருந்தார். அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்ற தமது அனுபவத்தை ஏற்கனவே சிவாஜிலிங்கம் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.புளொட் இயக்கத்தின் சிவநேசனும் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் அதற்காக பின்னாளில் குமார் சிந்திய இரத்தத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதுதான் அரசியல். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாயமாகக் கூட்டுக்களை வைத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை.கொள்கை வழிக் கூட்டுக்கே தங்கள் தயார் என்று திரும்பத்திரும்பக் கூறிவருகின்றது.தங்கள் கொள்கையில் வழுக்காதவர்கள் என்று கூறுவதன் மூலம் மற்றவர்களை கொள்கைகளில் வழுக்கியவர்கள் என்று முத்திரை குத்தி வந்தது.அதன் விளைவாக கடந்த 15 ஆண்டுகளாக அவர்களால் தாங்கள் முன்வைக்கும் இலட்சியத்தை நோக்கி அவர்களுடைய சொந்தக் கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை;தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. இப்பொழுது யாப்புருவாக்க முயற்சியில் தமிழ் மக்கள் பேரவையின் முன் மொழிவின் அடிப்படையில் ஒன்றுசேர வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் பேரவையை செயல்படாத நிலைக்கு தள்ளியதில் அவர்களுக்குப் பொறுப்பு இல்லையா? அவர்கள் நினைத்திருந்தால் தமிழ் மக்கள் பேரவையை அதன் அடுத்தகட்டக் கூர்ப்புக்குக் கொண்டுபோய் இருந்திருக்கலாம்.பேரவை என்ற தாயின் முடிவுக்குக் காரணமாக இருந்து கொண்டு அந்தத் தாய் ஈன்ற பிள்ளையாகிய முன்மொழிவை இப்பொழுது காவுகின்றார்கள். அப்படித்தான் பொது வேட்பாளரின் விடயத்திலும் முன்னணி அந்த கூட்டுக்குள் இணைந்து இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாகப் போயிருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் இருந்தே பொது வேட்பாளரை முன்னணி எதிர்த்தது. மட்டுமல்ல, பொது வேட்பாளருக்கு ஆதரவானவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள், முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூறியது.பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் சந்திப்புகளின்போது குடிமக்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை நோக்கி கஜேந்திரன் பின்வருமாறு சொன்னார் “இந்த முயற்சியில் நீங்கள் வெற்றிபெற்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்று எங்களுக்குத் தெரியும்.அதை நன்கு தெரிந்து கொண்டுதான் உங்களை எதிர்க்கிறோம்” என்று. ஆனால் பொது வேட்பாளருக்கு முன்னணியின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் வாக்களித்தார்கள். தேர்தல் முடிவுகளின் பின் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை கஜேந்திரக்குமார் தமிழ்த்தேசியத் தன்மை மிக்க வாக்குகள் என்று கூறினார். அதெப்படி வெளிநாட்டின் ஏஜென்ட்கள் தமிழ் தேசிய தன்மைமிக்க வாக்குகளைத் திரட்டலாம்? கெட்ட கூட்டு எப்படி நல்ல விளைவைத் தரும் ? தமிழ் மக்கள் பேரவையின் சிதைவுக்குக் காரணமாக இருந்த ஒரு தரப்பு கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளின் பின் அதே பேரவையின் முன் மொழிவை கையில் எடுத்திருப்பது எதைக் காட்டுகின்றது? ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமற்றது என்பதைத்தானே? பொது வேட்பாளரைத் தவறு என்று கூறிவிட்டு அவர் பெற்ற வாக்குகளைத் தேசியத் தன்மை மிக்கவை என்று கூறுவது எதைக் காட்டுகின்றது? எட்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் எடுத்த முடிவு தவறானது என்பதைத்தானே?பொது வேட்பாளருக்காக முன்னணியில் நின்று உழைத்த ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் கூறுவதுபோல “முன்னணியானது சரியான வேளைகளில் பிழையான முடிவை எடுக்கிறது. பிழையான வேளைகளில் சரியான முடிவை எடுக்கின்றது” என்பது சரியா ? இப்பொழுது முன்னணி எடுத்திருக்கும் முடிவானது சரியான வேளையில் எடுக்கப்பட்ட சரியான முடிவா? கடந்த 15 ஆண்டுகால அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னணி அப்படி ஒரு முடிவை எடுத்திருக்குமாக இருந்தால் அதை வரவேற்க வேண்டும். ஒப்பீட்டளவில் பெரிய கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது.அதை வளர்த்தெடுக்க வேண்டும்.ஒப்பீட்டளவில் யார் தேசத்தைத் திரட்டும் நம்பிக்கைகளை பலப்படுத்துகின்றார்களோ,அந்த நம்பிக்கைகளுக்காக உண்மையாக உழைக்கின்றார்களோ,அவர்களை தமிழ்மக்கள் ஆதரிக்க வேண்டும். பொது வேட்பாளருக்குப் பின் மீண்டும் ஒப்பீட்டளவில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரு கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது. அது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளுக்கும் உண்டு.குறிப்பாக வாக்களிக்கப் போகும் மக்களுக்கு உண்டு. https://www.nillanthan.com/7257/#google_vignette
  10. மனோஜ் சவப்பெட்டி மீது ஏறியது கொடுமையான செயல்! தமிழ் சினிமாவில் புரட்சிகரமான பங்களிப்பை அளித்த இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனும், நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா, கடந்த மார்ச் 25, 2025 அன்று தனது 48-வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது திடீர் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மனோஜின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், அவரது மறைவுக்கு மன அழுத்தமே காரணம் என்று சிலரும், அது உண்மையல்ல என்று மற்றவர்களும் பேசி வருகின்றனர். இதனிடையே, மனோஜின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது ஏறி வீடியோ எடுத்த சிலரின் அநாகரிக செயலும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் பாரதிராஜா, மார்ச் 25 அன்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருந்தார். வெகு நேரமாகியும் அவர் எழாததால் குடும்பத்தினர் பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வைத்திய பரிசோதனைக்கு சென்றபோதும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு அவரது உயிரை பறித்துவிட்டது. இது அவரது குடும்பத்தினரையும், திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனோஜின் மறைவுக்கு மன அழுத்தமே காரணம் என்று சிலர் கூறி வந்தனர். சிறு வயதிலிருந்தே இயக்குனராக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த மனோஜ், தனது தந்தை பாரதிராஜாவின் விருப்பத்தால் நடிகராக மாறினார். 1999-ல் ‘தாஜ்மஹால்’ படம் மூலம் அறிமுகமான அவர், ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகராக வெற்றி பெற முடியாத நிலையில், பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 2023-ல் ‘மார்கழி திங்கள்’ படத்தை இயக்கி, இயக்குனராகவும் அறிமுகமானார். இருப்பினும், இயக்குனராக பெரிய வெற்றியைப் பெற முடியாத வருத்தம் அவருக்கு இருந்ததாகவும், அதுவே மன அழுத்தத்திற்கு வழிவகுத்து, இதய நோயை ஏற்படுத்தியதாகவும் சிலர் பேசினர். ஆனால், இயக்குனர் பேரரசு இதை மறுத்து, மனோஜின் மறைவுக்கு மன அழுத்தம் காரணமல்ல என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், “மனோஜ் மன உளைச்சலில் இறந்தார் என்று பேசுபவர்களிடம் அவர் தனது மன உளைச்சலை பகிர்ந்தாரா? நான் பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். அங்கு மனோஜை பார்க்கும்போது, அவர் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். அவரது மறைவுக்கு உடல்நிலை மட்டுமே காரணம், மனநிலை அல்ல. தேவையில்லாமல் பழி சுமத்தக் கூடாது,” என்று தெரிவித்தார். பேரரசுவின் இந்த கருத்து, மனோஜின் மரணம் குறித்து வெளியாகியிருந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது. மனோஜின் மறைவு செய்தி அறிந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் வந்திருந்தனர். அவர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். சூர்யா, பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தபோது, சிலர் மனோஜின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது ஏறி, அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்தனர். இதைப் பார்த்து பிரபலம் ஒருவர் கடும் வருத்தம் தெரிவித்தார். “இதெல்லாம் எவ்வளவு மோசமான செயல் தெரியுமா? மதியம் வரை சாப்பிட்டு தூங்கியவர், உயிர் இல்லாமல் இருக்கிறார். அந்த வருத்தத்தில் குடும்பமே அழுது கொண்டிருக்கும்போது, சிலர் வீடியோ எடுக்கிறேன் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். அடுத்தவர்களின் கஷ்டத்தை கூட காசு பார்க்க பயன்படுத்துகிறார்கள்,” என்று அவர் குமுறினார். இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற செயலாக கண்டிக்கப்பட்டது. https://akkinikkunchu.com/?p=318401
  11. கிழக்கில் உரிய விசாரணை முன்னெடுக்காது விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் பழைய கச்சேரி மண்டபத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. 1950 ,60,70,80, 90, 2000 க்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் இப்படிப்பட்ட பல்வேறு விடையங்கள் நாட்டிலே நடந்திருக்கின்றது. 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்துவிட்டது அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம். எனவே, நாங்கள் பழிவாங்கும் செயற்பாடுகளுடன் செயற்பட்டிருந்தோம் என்றால் எவ்வளவே வேலையை செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் சட்டரீதியாக ஒப்புவிக்கப்படுவதன் பிரகாரம் நாங்கள் அவர்களுக்கு எதிராக சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் கூட எதிர்வரும் காலங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதுவும் அரசியல் பழிவாங்கல் அல்ல பிழை செய்திருந்தால் உங்களுக்கு எதிராக அரசாங்கம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம். இதற்கு தான் மக்கள் எங்களுக்கு அனுமதியளித்துள்ளனர். பட்டலந்தை ஆணைக்குழு தொடர்பான விவாதம் இப்போதாவது வந்தது என்பது சந்தோஷமானது. சம்பவம் துக்கமான விடையமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக இப்போது பெரும் விவாதமாக எடுக்கப்படுகின்றது இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணிக்கு நடந்தது என்று பார்ப்பதை விட இது ஒரு உதாரணம் இந்த நாட்டில் சட்டவிரோதமான படுகொலைகள் அரச ஒடுக்கு முறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இருந்தது என சொல்வதற்கான ஒரு உதாரணம் இது இது நீண்ட ஒரு கறுப்பான யுகத்தில் ஒரு உதாரணம் இது பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகின்றதுடன் நடைபெற்ற எல்லா விடயங்கள் தொடர்பாக விசாரிக்கப்படும் அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் போது உண்மை அறியும் ஆணைக்குழுவை நியமித்து இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தோம். அதற்காக மக்கள் 5 வருடத்துக்கு ஆட்சியை தந்துள்ளனர். அதன் பிறகு மக்கள் ஆட்சியை தரப் போகின்றனர். எனவே படிப்படியாக அறிக்கை செய்யப்பட்ட விடையங்களை ஒரே தடவையில் தீர்மானிக்க முடியாது எனவே இந்த விடயங்களை செய்ய 6 மாதகாலம் செல்லும். இந்த அடிப்படையில் உண்மையறியும் ஆணைக்குழு முக்கியமாக நல்லிணக்கத்தை கட்டியொழுப்புவதற்கு சாதகமாக இருக்கும் அதேவேளை நல்லிணக்கத்தை குலைக்கின்றதாக இருக்க முடியாது இது ஒரு நீண்ட தூர பயணம். நாட்டில் ஜனநாயக ரீதியாக ஒரு பாரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம் இவ்வாறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயக ரீதியாக மாற்றம் இடம்பெறவில்லை அந்த அடிப்படையில் இன்று பாரிய மாற்றம் வந்துள்ளது இருந்தபோதும் ஆங்காங்கே பழைய ஆட்சியாளர்களின் எச்சங்கள் வெளிவருவது இருக்கின்றது இருந்த போதும் ஒட்டு மொத்தமான மக்கள் இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கை சுமை படிப்படியாக குறைந்து வருகின்றது. ஊழல் மோசடி இலல்லாத கலாச்சாம் மற்றும் அரசியல் கலாச்சாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சரே அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பல வாகனங்களில் பிரயாணித்தனர். அதற்கு டீசல், பெற்றோல் மக்களின் பணத்தில், ஆனால் இன்று நாங்கள் வாகனத்தை குறைத்து பாதுகாப்பு இல்லாமல் செய்தமையால் யாரே ஒருவருடைய சாப்பாட்டு தட்டில் உணவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களால் மக்களுக்கு வரப்பிரசாரங்கள் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது எனவே, இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதே ரீதியில் நாட்டில் ஒரு குரோதத்தை வளர்க்க இடமளியோம். அந்த வகையில் எல்லோரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் எனவும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=318404
  12. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம் 30 Mar, 2025 | 01:00 PM கிளிநொச்சியில் வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தங்கள் கையினால் கையளித்த தங்களது உறவுகளை மீட்டு தருமாறு கோரியும் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தியும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210620
  13. பிரித்தானியாவின் தடையை வரவேற்கிறோம் ; முன்னாள் ஜனாதிபதிகளையும் உள்ளடக்கவேண்டும் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் 30 Mar, 2025 | 01:54 PM போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவிதித்துள்ளதை நாம் வரவேற்ப்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்படவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதிக்கு முன்பாக அவர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கை அரசானது நீண்டகாலமாக பொறுப்புக்கூறலில் இருந்து தவறியுள்ளது. இதனால் நாம் சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறோம். இன்று போர்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவித்துள்ளதன் மூலம் இனப்படுகொலைஒன்று இங்கு நடந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை உணரமுடியும். இவ்வாறு தடைவிதிக்கப்படவேண்டிய இன்னும் பல இராணுவத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளும் உள்ளனர். அவர்கள் மீதும் இவ்வாறான தடைகளை விதிக்கவேண்டும். அனைத்துலக நாடுகளும் இந்த பயணத்தடைகளை விதித்து குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி சர்வதேச பொறிமுறையூடாக எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்பு இதேவேளை 19காணாமல் போனஉறவுகள் உயிருடன் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினர் அண்மையில் கூறியுள்ளனர். அவர்கள் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை.நாம் தந்த சாட்சியங்களில் ஒன்றைகூட அந்த அலுவலகத்தினர் கண்டுபிடிக்கவில்லை. மாறாக சர்வதேசத்துக்கு அப்பட்டமான பொய்களை சொல்கின்றனர். பொய்யான அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர். எனவே எமது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இந்தநிலையில் சர்வதேச நீதிப்பொறிமுறையூடாகவே எமக்கான நீதியை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர். https://www.virakesari.lk/article/210625
  14. எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி! எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 'வெற்றி நிச்சயம் - கிராமம் நமதே' எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நேற்று மித்தெனியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பல கட்சிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் இணைந்து ஆட்சியமைக்கின்றனர். அவ்வாறெனின் எதற்காகப் பிரிந்து போட்டியிட வேண்டும். எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் மீட்டுவருவதுடன், எதிர்வரும் காலங்களில் முழுமையாக நாட்டை நாம் மீட்டெடுப்போம். இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து இலங்கைக்கு பாரியதொரு தொகை கிடைக்கப்பெறும். தனியார் நிறுவனம், காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்யவுள்ளது. குறைந்த விலையில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் நாம் அண்மையில் கையெழுத்திட்டோம். தெற்காசியப் பிராந்தியத்தில் இன்னும் 3 அல்லது 4 வருடங்களில் குறைந்த மின்கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் எனத் தாம் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/401595/எதிர்காலத்தில்-மிகக்-குறைந்த-மின்சாரக்-கட்டணத்தை-கொண்ட-நாடாக-இலங்கை-மாறும்-ஜனாதிபதி
  15. ‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’ முருகானந்தம் தவம் ஜே .வி.பியினரின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆயுதக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கவென 1988, 1989களில் நடத்தி செல்லப்பட்டதாகக் கூறப்படும் ‘பட்டலந்த வதை முகாம்’ தொடர்பான ‘பட்டலந்த அறிக்கை’ 25 வருடங்களின் பின்னர், தூசி தட்டப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு தற்போதைய ஜே.வி.பி., என்.பி.பி. அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாள் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கை தொடர்பில் இலங்கையில் மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சி புரிந்த காலத்தில், இளைஞர் விவகார, தொழில் வாய்ப்புக்கள் அமைச்சராகவும், பின்னர் கைத்தொழில் அமைச்சராகவும் இருந்த ரணில் விக்ரமசிங்கவே இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ சூத்திரதாரியென்ற குற்றச்சாட்டுக்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டு, அவரைக் கைது செய்ய வேண்டும், குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்ற குரல்கள் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன. ஆட்சியாளர்களும் நாம் விசாரணை நடத்துவோம், நீதி வழங்குவோம் என உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் கிரிபத்கொட- பியகம வீதியின் சந்தியிலிருந்து தெற்காக சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் உரத் தொழிற்சாலை ஒன்று உள்ள பகுதியிலேயே இந்த பட்டலந்த வதை முகாம் இருந்தது. இந்த பட்டலந்த வதை முகாமில் வைத்தே ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பலர் படுகொலை செய்யப்பட்டனர். இளைஞர், யுவதிகள் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்படுவதை இந்த வதை முகாமின் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்படும் அப்போதைய அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறான நிலையில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995இல் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய பட்டலந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதையடுத்து, 1988, 1989களில் பட்டலந்த உரத் தொழிற்சாலையில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில் நடத்திச் செல்லப்பட்ட வதை முகாம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகின. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் தப்பியவர்கள் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளை ஆணைக்குழு முன்னிலையில் அடையாளப்படுத்தினர். இந்நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ படுகொலைகள் பற்றி குற்றத்தடுப்பு பிரிவினராலும், ஜனாதிபதி ஆணைக் குழுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார். ஆனால், அந்த விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. அதன் பரிந்துரைகள் வெளிப்படுத்தப்படவும் இல்லை. அறிக்கை சந்திரிகா அரசினால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இவ்வாறான நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ சித்திரவதைகள், படுகொலைகளை, அதுதொடர்பிலான ஆணைக்குழு அறிக்கையினை மக்களும் இந்த நாடும் மறந்து விட்டன. ஏன்? பட்டலந்த வதைமுகாமில் தமது ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்த இன்றைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர் கூட, பட்டலந்த அறிக்கையை மறந்து விட்டனர். இவ்வாறான நிலையில்தான், கடந்த 06-03-2025 அன்று அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு முன்னாள் ஜனாதிபதியும் ‘பட்டலந்த வதைமுகாம்’சூத்திரதாரியென குற்றம் சாட்டப்படுபவருமான ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியும் அதில் ஜே.வி.பி. ஆயுத கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, மற்றும் படுகொலை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய பதில்களும் மீண்டும் பட்டலந்த வதைமுகாமை மக்கள் முன் கொண்டு வந்துள்ளதுடன், அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக, அப்போது ஆயுத கிளர்ச்சியாளர்களாக இருந்தவர்களும் தற்போது ஆட்சியாளர்களாக உள்ளவர்களுமான ஜே.வி.பியினர், அந்த ‘பட்டலந்தை வதைமுகாம்’ தொடர்பான அறிக்கையை 25 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மாளிகையிலிருந்து எடுத்து தூசு தட்டி, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் பாயும் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் தற்போது நாட்டில் உள்ள அனைத்து நெருக்கடிகளும் மறக்கடிக்கப்பட்டு ‘பட்டலந்த அறிக்கை’ முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ செயற்பட்ட காலத்தில் அந்த வதைமுகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள், ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்த தற்போதைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர். ‘பட்டலந்த அறிக்கை’யைத் தயாரிக்க உத்தரவிட்ட அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவினரின் கட்சியினரும் இந்த ஜே.வி.பியினரால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில், 2005இல் இந்த ஜே.பி.யினர் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அரசின் பங்காளிகளாக இருந்ததுடன், அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். அப்போது ஜே.வி.பியினருக்கு இந்த ‘பட்டலந்த அறிக்கை’ தேவைப்படவில்லை.அதன்பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிபீடம் ஏற இதே ஜே.வி.பியினர் பேராதரவு வழங்கியதுடன், பக்க பலமாகவும் இருந்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் இவர்கள் கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை. அதன் பின்னர், 2015இல் ரணில் விக்ரமசிங்க அரசுக்கும் ஆதரவளித்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. தற்போது தமது ஆட்சி அமைந்த நிலையில் கூட, அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பும் வரை அந்த அறிக்கை தொடர்பில் ஒரு துரும்பைக்கூட இந்த ஜே .வி.பியினர் நகர்த்தவில்லை. அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பிய பின்னர்தான் ஏதோ அப்போதுதான் ‘பட்டலந்த வதைமுகாம்’ தொடர்பான அறிக்கை ஒன்று இருப்பதனை அறிந்து கொண்டதுபோல, துடித்தெழுந்து அதை ஜனாதிபதி மாளிகையின் இருட்டறையிலிருந்து தேடிக் கண்டுபிடித்து எடுத்ததாகக் கூறி பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க அந்த ‘பட்டலந்த அறிக்கை’யை சமர்ப்பித்து உணர்ச்சிகரமாக உரையாற்றியதும் சபாநாயகர் கண்கலங்கியதும் ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் அமைச்சர்கள் எம்.பிக்கள் இறுகிய, துயரம் தோய்ந்த முகங்களுடன் அமர்ந்திருந்தது எல்லாம் அப்பட்டமான அரசியல் நாடகம். நடிப்பு கடந்த காலங்களில் சந்திரிகா அரசாங்கம், ராஜபக்‌ஷ அரசாங்கம் ஆகியவற்றில் பங்காளிகளாக இருந்த போது, இந்த ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் வாய்திறக்காதவர்கள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தாதவர்கள், தற்போது இவர்கள் சித்திரவதைக்காரர் என்று குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து. 2015இல் அரசாங்கத்தை அமைத்த போது கூட, ‘பட்டலந்த அறிக்கை’யைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தாதவர்கள் ஒருவருக்கும் தெரியாத இந்த அறிக்கையை அல்-ஜஸீரா தொலைக்காட்சி கண்டுபிடித்து அறிவித்ததையடுத்தே அது தொடர்பில் தெரிந்து கொண்டவர்கள் போல, உணர்ச்சிவசப்படுவது, கண்கலங்குவது, துயரமடைவது ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல் நாடகமின்றி, நடிப்பின்றி வேறு என்னவாக இருக்க முடியும்? அதேவேளை, ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’ தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 16ஆம் திகதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், முழுமையான அரசியல் அவதூறு பிரசாரத்தை நோக்கமாகக் கொண்டு ‘பட்டலந்த ஆணைக்குழு’ நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. அறிக்கையின் முடிவுகளில், ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர் மூலம் பொலிஸாருக்கு வீட்டு வசதி வழங்குவது எனக்கு சரியாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளை ஐ.ஜி.பியிடம் ஒப்படைத்து, அவர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே சரியான முறையாக இருக்க வேண்டும். இந்தச் செயலுக்கு நளின் டெல்கோடாவும் நானும் மறைமுகமாகப் பொறுப்பு என்று ஆணைய அறிக்கை கூறுகிறது. ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விடயங்கள் எதுவும் எனக்கு பொருந்தாது. 1988இல் ஜே.வி.பி. மேற்கொண்ட ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் அவதானிப்புகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளன. பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டுகளும் எனக்கு பொருந்தாது. அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன் என்று கூறியுள்ளார். எனவே, ஆட்சிபுரிந்த அனுபவமற்ற ஜே .வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றவாளியாக்க வேண்டும், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அனுதாப வாக்குகளை அள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவசரப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இந்த ‘பட்டலந்த அறிக்கை’ விவாதத்திற்கு வரும்போது, பட்டலந்த வதைமுகாமில் சித்திரவதைப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஜே.வி.பியினரைப் பற்றி மட்டுமல்லாது, அப்போது ஆயுதக் கிளர்ச்சி என்ற பெயரில் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் படுகொலைகளையும் அம்பலப்படுத்தப் போகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் வீசிய ‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’ இறுதியில் ஜே.வி.பி. என்.பி.பி. ஆட்சியாளர்களையே மோசமாகத் தாக்கப் போகின்றது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பட்டலந்த-அறிக்கை-என்னும்-பூமராங்/91-354662
  16. இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் ; சரத் பொன்சேகா தெரிவிப்பு! மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜகத் ஜயசூரிய, வசந்த கரன்னாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன். அதேபோன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திரசில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும். மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றார். https://newuthayan.com/article/இராணுவத்தினர்_மனித_உரிமை_மீறல்களில்_ஈடுபட்டிருந்தால்_தண்டிக்கப்பட_வேண்டும்_;_சரத்_பொன்சேகா_தெரிவிப்பு!
  17. மோடியை காப்பாற்றுவது எமது நோக்கம் அல்ல! எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ அல்லது மோடியைக் காப்பாற்றுவதோ அல்ல என்று அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வுக்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தியப் பிரதமரின் வருகை குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருடன் உரையாடலை மேற்கொள்ளவுள்ளார் என்றார். இந்தியப் பிரதமரின் வருகை வெறுமனே மீனவர் பிரச்சினைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தியாவுக்கும் எமக்கும் எந்தவித பகையும் இல்லை. இந்திய மீனவர்களுக்கும் எமக்கும் எந்தவித கோபமும் இல்லை. இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட ட்ரோலர்களைப் பயன்படுத்தி உங்களது கடற்பரப்பில் செயல்படுவது சரியான வேலை அல்ல. வடக்கில் உள்ள கடற்பரப்பை முற்றாக அழித்து ஒழிக்கும் நடவடிக்கையையே அவர்கள் மேற்கொள்கின்றனர். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், இன்னும் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளில் கடல் பாலைவனமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. இதனை யாரும் அனுமதிக்க முடியாது. எனது வேலை இந்திய அரசாங்கத்தைப் பாதுகாப்பதோ, இந்தியத் தூதுவரைப் பாதுகாப்பதோ, இந்தியப் பிரதமரைப் பாதுகாப்பதோ அல்ல. எமது மீனவர்களைப் பாதுகாப்பதே எனது பணி. அந்த வேலையை நான் சரியாகச் செய்கிறேன் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்." https://newuthayan.com/article/மோடியை_காப்பாற்றுவது_எமது_நோக்கம்_அல்ல!
  18. மோடி - தமிழர் தரப்பு சந்திப்பு; இன்னமும் முடிவு இல்லை! சுமந்திரன் தெரிவிப்பு! அடுத்த வாரம் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கும்படி தமிழரசுக் கட்சியினர் உட்பட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கோரியிருக்கின்றோம். ஆனால், இன்னமும் சந்திப்புக்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சந்திப்பு நடக்குமா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. அந்தச் சூழ்நிலையில் தமிழர் தரப்பில் யார் சந்திப்பார்கள் என்ற கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது என தெரிவித்தார். இந்தியப் பிரதமரை அவர் உட்பட்ட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவர் என்று வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சந்திப்புக்கான வாய்ப்பு கிடைக்குமா என்பது இதுவரை தெரியவில்லை. இந்திய அதிகாரிகள் இன்னும் தெளிவான பதில் எதனையும் எங்களுக்குத் தரவில்லை. சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலையில் அது பற்றி பேசுவது அர்த்தமற்றது. - என்றார். https://newuthayan.com/article/மோடி_-_தமிழர்_தரப்பு_சந்திப்பு;_இன்னமும்_முடிவு_இல்லை!_சுமந்திரன்_தெரிவிப்பு!
  19. நாளை ஞாயிறு 30 மார்ச் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC எதிர் SRH 07 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வசீ ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா கந்தப்பு வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 06 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி செம்பாட்டான் வாதவூரான் நந்தன் புலவர் அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  20. ஐபிஎல் 2025 இன் 09வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சனின் அரைச் சதத்துடனுன் சுப்மன் கில், ஜொஸ் பட்லரின் அதிரடியான ஆட்டங்களாலும் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவைத் தவிர பிறர் ஆட்டத்தில் சோபிக்காததால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  21. வடமராட்சியில் செம்பாட்டு மண் இருக்கு. புகையிலை, மிளகாய் எல்லாம் விளையிற இடம்.. இப்போது கல்யாண முருங்கையால் நிறைந்திருக்கு!
  22. இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை Vhg மார்ச் 29, 2025 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தொடர்பாக, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று, ஒட்டாவாவில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை பிரெட் ஜி. பாரெட் அரினா – மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நினைவுகூர திட்டமிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவு அதேநேரம் வட கரோலினாவில் உள்ள தமிழ் அமைப்புகள், கேரி, NCஇல் தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளன. மேலும் FeTNA தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை இணையவழியாக இரவு 9 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், கனடா நாடாளுமன்றம் இலங்கையில் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அறிவித்தது. இதனையடுத்து 2023 மே 18 அன்று, கனடா பிரதமர் முதல் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை அறிவித்தார். இந்தநிலையில் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர். நல்லிணக்கத்திற்கான முதல் படி இதேவேளை ஒன்டாரியோ அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம்”, ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று முடிவடையும் ஏழு நாள் காலத்தை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரமாக அறிவித்துள்ளது. இதேவேளை இந்த செயற்பாடுகள், தமிழ் இனப்படுகொலையால் இழந்த உயிர்களை கௌரவிப்பதுடன் மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் தலைமுறை தலைமுறையாக அதிர்ச்சியடைந்தவர்களுக்கு நம்பிக்கையையும் அளிக்கிறது. அத்துடன் ஆற்றுப்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கான முதல் படியைக் குறிக்கிறது என்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.battinatham.com/2025/03/tgm.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.