Everything posted by கிருபன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் கணக்குப் பார்க்கவில்லை. மோகன் களத்தைப் புதுப்பித்து கொண்டு வந்த மாற்றத்தால் கூகிள் ஷீற்றில் இருந்து வர்ணங்களுடன் இணைக்க முடியாது. படமாகப் பதிய நேரம் எடுக்கின்றது!
- IMG_0120.jpeg
- IMG_0121.jpeg
- IMG_0121.jpeg
- IMG_0119.jpeg
- IMG_0120.jpeg
- IMG_0119.jpeg
- IMG_0118.jpeg
- IMG_0118.jpeg
- IMG_0117.jpeg
- IMG_0117.jpeg
- IMG_0116.jpeg
- IMG_0116.jpeg
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: யாழ் கள போட்டியின் வெற்றியாளர் இன்னும் முடிவாகவில்லை!
- IMG_0115.jpeg
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சம்பியப்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 இன் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இந்திய சுழல்பந்து வீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் அதிகம் ஓட்டங்களை எடுக்கமுடியாமல் இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடியான 76 ஓட்டங்களுடனும் ஷ்ரேயர் ஐயர், கே எல் ராகுலின் நிதானமான ஆட்டங்களுடனும் நியூஸிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்களைச் சமாளித்து 49 ஓவர்களின் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கான இலக்கை எட்டியது. முடிவு: இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி சம்பியன்ஸ் கிண்ணம் 2025 ஐச் சுவீகரித்துக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்களில் இந்திய அணியில் வெற்றியைச் சரியாகக் கணித்த 10 பேருக்குத் தலா 5 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. மற்றையவர்களுக்கு புள்ளிகள் கிடையாது! இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஸ்ரேயர்ஸின் கட்சை ஜேமிஸன் தவறவிட்டுவிட்டார்.. 😡
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
NZ 251/7 இந்தியா 252 ரண்ஸ் அடிக்கவேண்டும்!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டியே புள்ளிக்காகத்தானே! இந்தியா தோற்றால்தான் எனக்கு முன்னேற வாய்ப்பிருக்கு! ஆனால் நியூஸிலாந்து சுழலில் சருகாகிவிட்டது🥵
-
வரலாற்றில் கற்றுக்கொள்ள மறுத்த பாடம் - கருணாகரன்
வரலாற்றில் கற்றுக்கொள்ள மறுத்த பாடம் March 8, 2025 — கருணாகரன் — இலங்கை அரசியலில் பேரலையாக எழுச்சியடைந்திருக்கும் தேசியமக்கள் சக்தி (NPP) யை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்கு(எதிரணிகளுக்கு) சவாலே மிஞ்சுகிறது. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்திருக்கும் NPP அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு பலமான தரப்புகள் எதுவுமே தற்போதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. NPPயை விமர்சிப்பதற்குக் கூட பலமான காரணங்களை எதிரணிகள் கண்டுபிடிக்கவில்லை. பாராளுமன்றத்திலும் வெளியிலும் சில காரணங்களை அவை சொன்னாலும் அவை ஒன்றும் சனங்களிடம் எடுபடக் கூடிய அளவுக்கில்லை. இதனால் எந்த ஊடகங்களிலும் அவற்றுக்கு முன்னிலை இல்லை. மலையில் எறும்பு ஊர்வதைப்போலவே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உள்ளன. இது அரசியல் அரங்கில் தேசியமக்கள் சக்தியை மேலும் உயரத்துக்கே கொண்டு செல்லவைத்துள்ளது. இதனால், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகியவற்றில் பல இடங்களிலும் NPP வெற்றியடையக் கூடிய சூழலே காணப்படுகிறது. இந்த நிலையை எதிர்கொள்வதற்கு எதிர்த்தரப்புகளில் ஐ.தே.க வும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்று அவற்றின் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். அதற்காக ஐ.தே.க வுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் (ரணிலுக்கும் சஜித்துக்கும்) இடையில் உள்ள பனிப்போர் இன்னமும் முடியவில்லை. இரு தரப்பையும் உடன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படும் சமரச முயற்சிகள் இன்னும் பெரியளவுக்குப் பயனளிக்கவில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் எப்படியாவது இரண்டு தரப்பையும் ஒன்றாக்கவேணும். குறைந்த பட்சம் சில அடிப்படைகளிலேனும் ஒருங்கிணைந்து செயற்படவைக்க வேண்டும் என இரு தரப்பிலும் உள்ள விக்கிரமாதித்தியன்கள் மனந்தளராமல் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்களைக் கொடுப்பதற்கான காலம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடியப்போகிறது. மறுபக்கத்தில் வெறுங்கையோடு நிற்கும் பொதுஜன பெரமுன, வீம்புக்காகக் காற்றில் வாளைச்சுழற்றுகிறது. பொழுதுபோகவில்லை என்பதற்காக அதில் உள்ளவர்கள் அவ்வப்போது ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக வந்த ஜோக், ‘ஊழல் இல்லாதவர்களுக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாதவர்களுக்கும் மட்டுமே உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெரமுன இடமளிக்கும்‘ என்று அது சொல்லியிருப்பதாகும். இது உண்மையென்றால், பொதுஜன பெரமுனவில் யாருமே இருக்க மாட்டார்கள். கட்சியே இருக்காதே! இந்த நிலையில் பெரமுன எப்படி NPP யை எதிர்கொள்வது? மட்டுமல்ல, பொதுஜன பெரமுனவின் முன்னாள் – இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் அமைச்சர்களையும் இலக்கு வைத்து, அதைப் பலவீனப்படுத்துவதற்கு தேசியமக்கள் சக்தி (NPP) வியூகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. மக்களிலிருந்து இவர்களைத் தனிமைப்படுத்தும் விதமாகக் குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன. அநேகமாக அடுத்த சில மாதங்களில் பெரமுனவிலுள்ள சில தலைகள் சிறைக்குள் தள்ளப்படலாம். இதேவிதமாகப் பலவீனமாகவே உள்ளது சிறிலங்கா சுதந்திரக்கட்சியும். சுதந்திரக் கட்சிக்கு இப்பொழுது யார் தலைமை என்று கட்சிக்கும் தெரியாது. மக்களுக்கும் தெரியாது. 1977 இல் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர். ஜெயவர்த்தன சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்து, சுதந்திரக் கட்சியை முடக்கினார். இப்பொழுது தானாகவே சுதந்திரக் கட்சி முடங்கி விட்டது. அதை முன்னரங்குக் கொண்டு வருவதற்கான வீரர்களும் இல்லை. சூரர்களுமில்லை. அதிசயம், அற்புதம் என்று சிங்கள மக்களிடத்தில் ஏதாவது மாற்றங்கள் நடந்தால் மட்டுமே சுதந்திரக் கட்சி உயிர்ப்படையக்கூடிய நிலை. இடதுசாரிகளைக் கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் காணவேயில்லை. 2009 க்குப் பின்னர் வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டி.யு. குணசேகர, தினேஸ் குணவர்த்தன போன்றோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தேசிய மக்கள் முன்னணியின் அலையில் இவர்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர். இதற்கு முன் அவ்வப்போது இடதுசாரிகள் ஆட்சியதிகாரத்தில் பங்கேற்றிருந்தனர். இந்தத் தடவை பாராளுமன்றத்திலே ஒருவர் கூட இல்லை என்றாகிவிட்டது. சிங்களப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் கட்சிகளின் நிலை இப்படியென்றால், வடக்குக்கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் பிராந்தியத்திலும் ஏறக்குறைய இதே நிலைதான். முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குமுன்னே உள்ள அரசியல் நிலைமைகள் குறித்தோ, உருவாகிக் கொண்டிருக்கும் அபாயங்களைப் பற்றியோ சிந்திப்பதாகத் தெரியவில்லை. உள்ளுரக் கவலைகளிருந்தாலும் அதை எப்படிச் சரி செய்வது என்று அவற்றுக்குத் தெரியவில்லை. ஆனால் அவை இப்படியே தொடர்ந்தும் குண்டுச்சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்க முடியாது. இதைப்புரிந்து கொண்டாலும் இதிலிருந்து வெளியே வருவதற்கு அவற்றுக்கு உளத் தடைகளுண்டு. தேவையற்ற அச்சமுண்டு. அப்படித்தான் மலையகக் கட்சிகளும் ஆளுக்கொன்றாகத் திசைக் கொன்றாகச் சிதறிப்போயுள்ளன. இவற்றை ஒருங்கிணைக்கவே முடியாது. அப்படி ஒருங்கிணைப்பதாக இருந்தால், அதற்கு மேலும் மக்கள் தண்டனை அளிக்கவேண்டும். அதாவது நெருக்கடியைக் கொடுக்கவேண்டும். அல்லது மலையகத்தில் தேசிய மக்கள் சக்தி மேலும் பலமடைய வேண்டும். இங்கே ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். சிங்களக்கட்சிகள் (அப்படித்தான் நடைமுறையில் உள்ளன) தற்போது சோர்வையும் பின்னடைவையும் சந்தித்திருந்தாலும் அடுத்த சுற்றில் எப்படியோ தம்மைச்சுதாகரித்துக் கொள்ளும். அல்லது சிங்கள மக்கள் அடுத்த சுற்றில் இன்னொரு வகையானஅரசியற் தேர்வுக்கு வழி செய்து, அதிகாரம் ஒரே இடத்தில் குவிவதைத் தடுத்துக்கொள்வார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மீண்டும் இந்தக்கட்சிகளில் ஒன்றோ இரண்டோ மேலெழுந்து கொள்ளும். அல்லது இவற்றின் புதிய கூட்டொன்று உருவாகும். அல்லது இன்னொரு புதிய கட்சியேனும் உதயமாகலாம். சிங்களச் சமூகம் தமிழ்ச் சமூகத்தினரைப் போலல்ல. அவர்கள் எந்த நிரந்தரங்களையும் ஏற்பதில்லை. எதிலும் திருப்தி அடைவதில்லை. ஒப்பீட்டளவில் தங்களுடைய அரசியலில் மாற்றங்களை எப்போதும் நிகழ்த்திப் பார்க்கும் ஆவலைக்கொண்டவர்கள் சிங்கள மக்கள். அதாவது ஜனநாயகத்தின் நரம்பைக் கெட்டுப்போக விடுவதில்லை அவர்கள். ஆனால், தமிழ்க்கட்சிகளின் – தமிழ் அரசியலின் நிலை? அதுதான் மிக மோசமாகச்சிதைந்து போயுள்ளதே. தேசிய மக்கள் சக்தியிடம் தோல்வியைச் சந்தித்து, தமிழ் அரசியல் பின்னடைவுக்குள்ளாகிய பின்னும் தம்மை நிதானப்படுத்திக் கொள்வதில் தமிழ் அரசியற் தரப்புகள் தவறுகின்றன. இந்த நெருக்கடியை, தளர்வை, சீர்செய்வதற்கு இவை முயற்சிக்கவில்லை. பதிலாக ஒன்றையொன்று கண்டித்துக் கொண்டும், ஒன்றையொன்று குற்றம்சாட்டிக் கொண்டும் உள்ளன. இதில் இன்னும் உச்சமாகவும் சிரிப்பாகவும் இருப்பது இந்த நிலையிலும் இவை துரோகி – தியாகி விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதுதான். தென்னிலங்கைத் தீவிரவாதம் துரோகி – தியாகி என்று பார்த்து தன்னுடைய அரசியலை மேற்கொள்ளவில்லை. அது ஒட்டுமொத்தமாகவே அனைத்துத் தமிழ்த்தரப்பின் அரசியலையும் காலியாக்குவதற்கு முயற்சிக்கிறது. இதில் அது (NPP) கணிசமான அளவுக்கு முதற்கட்ட வெற்றியையும் பெற்றுள்ளது. அடுத்த கட்ட வெற்றிக்குத் தயாராகிறது. ஏற்கனவே தமிழ் அரசியற் தரப்பில் நிலவிய துரோகி – தியாகி விளையாட்டைத் தமக்குச் சாதமாக்கிக் கொண்டு, விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தது ராஜபக்ஸ தரப்பு. அதன் மூலம் தனக்குச் சவாலாக இருந்த வலுச்சமனிலை அரசியலை அது உடைத்து நிர்மூலமாக்கியது. இதற்காக அது போரை ஒரு நிலையிலும் தேர்தல் அரசியலை இன்னொரு வகையிலும் பயன்படுத்தியது. தனக்கு வாய்ப்பான முறையில் தமிழ்த்தரப்பில் ஒரு சாராரை வளைத்துப் பிடித்து வைத்துக் காரியமாற்றியது. அதற்குப் பிறகும் மிஞ்சியிருந்த தமிழ் அரசியலையும் அதனுடைய அடையாளத்தையும் இப்போது துடைத்தழித்து விட முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி (NPP). இதற்கு அது முற்று முழுதாகவே தேர்தல் அரசியலை அதாவது ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய தீர்ப்பு என்று காட்டி இதைச் சாதிக்க முயற்சிக்கிறது. தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைசார் அரசியலையும் அடையாள அரசியலையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் தேசிய மக்கள் சக்தி, தந்திரோபய ரீதியில் இந்த விடயத்தைக் கையாள முற்படுகிறது. இதைப் புரிந்தும் புரியாத மாதிரி நடந்து கொள்கின்றன தமிழ் அரசியற் தரப்புகள். சிங்களக் கட்சிகளிடத்திலும் இதே வகையான குறைபாடுகளும் பலவீனங்களும் இருந்தாலும் சிங்களச் சமூகம் அதை ஏதோ ஒரு கட்டத்திலாவது Breack பண்ணும். சீர்திருத்திக் கொள்ளும். ஆனால், தமிழ்ச்சமூகத்திடம் இந்தக் குணமும் பண்புமில்லை. அது கேள்விக்கிடமில்லாமல் தன்னுடைய தலையை பலிபீடத்தில் வைக்கும். என்பதால்தான் அது தொடர்ந்தும் தோல்விகளையே வரலாறாகக் கொள்கிறது. ஆம், முள்ளிவாய்க்கால் தோல்வியையும் விடப் பெரிய தோல்வியாக இப்போதைய தோல்வி அமைகிறது. எதிர்காலத் தோல்வியும் அப்படித்தான் அமையும். வரலாற்றிலிருந்து எதையும் படித்துக் கொள்ள மறுக்கும் சமூகம் தமிழ் மக்களுடையதல்லவா! என்பதால் இலங்கை முழுவதிலும் தேசிய மக்கள் சக்திக்கே இப்போதைக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதைச் சற்றுத் திருத்திக் கொள்ள வேண்டும், பெரும்பாலும் என. ஏனெனில் அரசாங்கத்தின் மீது மெல்லிய எதிர்ப்புணர்வும் சலிப்பும் ஒரு சாராரிடம் உருவாகி வருகிறது. எத்தனை நாளைக்குத்தான் வண்ணம் கெடாமல் அலங்காரம் நீடித்திருக்கும்? https://arangamnews.com/?p=11875
-
இசையில் நனைந்த லண்டன்… சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா
இசையில் நனைந்த லண்டன்… சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா 9 Mar 2025, 7:34 AM லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா தனது நீண்ட நாள் கனவான சிம்பொனியை இந்திய நேரப்படி இன்று (மார்ச் 9) நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். கடந்த ஆண்டு, தான் சிம்பொனி எழுதி வருவதாகவும் விரைவில் அதனை அரங்கேற்ற உள்ளதாகவும் இளையராஜா தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். இதற்காக இளையராஜா முழு மூச்சில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், லண்டனில் சிம்பொனி அரங்கேற்றுவதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடந்த மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து இளையராஜா லண்டன் சென்றார். வேலியன்ட் என்று பெயரிடப்பட்ட சிம்பொனியை லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் இளையராஜா அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைத்தனர். இளையராஜா சிம்பொனி அரங்கேற்றம் முடிந்ததும் ரசிகர்கள் கரகோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். மொத்தம் 3,665 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. கடந்த இரண்டு நாட்களாகவே இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் தொடர்புடைய பதிவுகள், வீடியோக்கள் பலவற்றை பதிவேற்றி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? - நிலாந்தன்
யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? - நிலாந்தன் அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டது. அதன் பெயர் “டெலிஸ்” . அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது. முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஆஸ்பத்திரி வீதியில்,வேம்படிச் சந்திக்கு அருகாக உள்ள சூழலில் உயர்தர உணவகங்கள் பல திறக்கப்பட்டுள்ளன. பீட்சா கடைகளில் இருந்து பிரியாணி கடைகள்வரை பல்வேறு வகைப்பட்ட உணவகங்கள் மிகக்குறுகிய தூர இடைவெளிக்குள் உண்டு. இந்த உணவகங்கள் தவிர இவற்றிற்கு முன்னரே திறக்கப்பட்ட உயர்தர விருந்தினர் விடுதிகள் உண்டு. அங்கேயும் இரவில் நூற்றுக்கணக்கானவர்களைக் காணமுடியும். அவரவர் அவரவர் நுகர்வுக் கொள்ளளவுக்கு ஏற்ப உணவகங்களை நாடிச் செல்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ்ச் சமூகத்தில் நுகர்வுத் தாகம் அதிகரித்து வருவதை;ஒரு நுகர்வு அலை எழுந்திருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த நுகர்வுப் பசியும் தாகமும் அதிகரித்துச் செல்கின்றன. போரினால் மூடப்பட்டிருந்த ஒரு சமூகம் வெளியுலகத்துக்குத் திறந்து விடப்படுகையில் நுகர்வுத்தாகமும் பசியும் அதிகமாக இருக்கும். புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவிகள் மட்டும் இதற்குக் காரணமல்ல. ஆயுத மோதலுக்கு பின்னர் தமிழ்மக்கள் தமது வாழ்க்கையைப் படிப்படியாகக் கட்டியெழுப்பி வருகிறார்கள் என்பதன் குறிகாட்டிகளில் ஒன்றாக மேற்படி உயர்தர உணவகங்களின் பெருக்கத்தைக் கூறலாம். ஒரு மாற்றத்திற்காக வெளியில் போய்ச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது வித்தியாசமாகச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது கூடியிருந்து சாப்பிடுவதைக் கொண்டாட விரும்புகிறவர்கள் அவ்வாறு உயர்தர விருந்தகங்களை நோக்கிப் போகிறார்கள். வசதிபடைத்த மேல்நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்லஅன்றாடம் உழைப்பவர்கள் அதிகமுடைய கிராமங்களிலும்கூட இரவு உணவுக்காக பேக்கரிகளில் தங்கியிருக்கும் ஒரு நிலையைக் காணலாம். உதாரணமாக,சில ஆண்டுகளுக்கு முன்பு உரும்பிராயில் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஸ்தாபகருடைய நினைவு தினத்தைக் கொண்டாடுவதற்காக போயிருந்தோம். பெருமாளவிற்கு அன்றாடம் உழைப்பவர்களைக் கொண்ட ஒரு கிராமம் அது. நாங்கள் அங்கேயிருந்த சுமார் 5 மணித்தியால காலப்பகுதிக்குள் 8 பேக்கரி வாகனங்கள் அப்பகுதிக்குள் வந்துபோயின. அவற்றுள் சில ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வந்தன. அந்த கிராமத்தவர் ஒருவரிடம் கேட்டேன்,”இவ்வளவு அதிக தொகையாக பேக்கரி வாகனங்கள் வருகின்றனவே அந்த அளவுக்கு நுகர்வு உண்டா? என்று. அவர் சொன்னார்,”ஓம் பெருமளவுக்கு உடல் உழைப்பாளிகளாகிய எமது கிராமத்தவர்கள் இரவுகளில் ஆறுதலாக இருக்க விரும்புகிறார்கள். இரவில் சமைப்பதைவிடவும் இந்த பேக்கரி உணவுகளை வாங்கினால் பெண்கள் ஆறுதலாக இருந்து திரைத்தொடர்களைப் பார்க்கலாம்” என்று சொன்னார். சமையல்,பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒரு கடமை என்று கருதும் ஒரு சமூகத்தில் இவ்வாறு விருந்தகங்களுக்குப் போவதன் மூலம் பெண்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.பொதுவாக கிழமைக்கு ஒரு நாளிலாவது அல்லது ஒரு நாளில் ஒரு வேளையாவது சமையாமல் இருப்பதை பெண்கள் பெருமளவுக்கு ஆறுதலாகக் கருதுகிறார்கள். எனினும் இவ்வாறு உணவை கூடியிருந்து சாப்பிடுவதை ஒரு கொண்டாட்டமாகக் கருதும் பலரும்,உயர்தர உணவகங்களில் உணவுக்கு ஓர்டர் கொடுத்துவிட்டு,மேசையைச் சுற்றியிருந்த அவரவர் அவரவருடைய கைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒன்றாக உட்கார்ந்து உணவைச் சுவைப்பது ஒரு கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்துக்குள்ளும் கைபேசி ? மேற்சொன்ன உயர்தர உணவகங்களில் ஒரு தொகுதி கோர்ப்பரேட் வலப்பின்னலுக்குள் வருபவை.உதாரணமாக ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருக்கும் ஆர்ஆர் பிரியாணி இந்தியாவை மையமாகக் கொண்டது. அதற்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கிளைகள் உண்டு.அடுத்ததாக காலித் பிரியாணியும் சென்னையை மையமாகக் கொண்டது.பெருந்தொற்று நோய்க்காலத்தில் மூவர் இணைந்து உருவாக்கிய உணவகங்களின் சங்கிலி வலையமைப்பு அது. கோப்பரேட் உணவகங்கள் உலகப் பொதுவான கோப்பரேட் சுவையைப் பரப்புகின்றன. யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரான சனாதனன் கூறுவார் எல்லா பேரங்காடிகளுக்கும் ஒரே மொழிதான் என்று. அங்குள்ள தட்பவெட்பம், அங்கு மென்மையாகத் தவழும் இசை, உணவு வேகும் வாசம் போன்ற எல்லாமும் உலகின் எல்லாப் பேரங்காடிகளுக்கும் ஒரே மாதிரியானவைதான்.அப்படித்தான் கோப்பரேட் உணவகங்களும் உலகப் பொதுச் சுவையை பரப்புகின்றன. ஆனால் இதனால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன என்று கூறமுடியாது. ஏனென்றால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகளில் வழமையாக உணவு அருந்துபவர்கள் எப்பொழுதும் அங்கே போவார்கள்.ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் உயர்தர உணவகங்களை நோக்கியும் குறிப்பிட்ட சில பேரங்காடிகளை நோக்கியும் போகிறார்கள். “உயர்தர உணவகங்களில் பிரியாணி வகை உணவைச் சாப்பிடுவது என்பது ஒரு அந்தஸ்தை,சமூகத் தராதரத்தை காட்டும் விடயம்” என்று கனடாவில் வசிக்கும் கீதா சுகுமாரன் கூறுகிறார்.அவர் உணவுப் பண்பாட்டை தனது கலாநிதிப் பட்ட ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டவர்.பிரியாணி என்பது எல்லாவிதமான பொருட்களும் கலந்து சமைக்கப்படும் ஓர் உணவு.விருந்துகளில் அது அந்தஸ்தைக் குறிப்பது.பிரியாணிக் கடைகளில் சாப்பிடுவதை ஒரு சமூக அந்தஸ்தாக கருதும் ஒரு பிரிவினர் அங்கே போகிறார்கள்.என்றும் அவர் கூறுகிறார். ஆனால்,அதனால் உள்நாட்டுச் சுவையும் உள்நாட்டு உணவும் கைவிடப்படுகின்றதா?இல்லை.அவ்வாறெல்லாம் ஏங்கத் தேவையில்லை. வீடுகளில் இப்பொழுதும் உள்நாட்டு சமையல்தான்.உள்ளூர் சுவைதான்.ஒரு வித்தியாசத்துக்காக,ஒரு மாற்றத்திற்காக அல்லது தமது அந்தஸ்தைக் காட்டுவதற்காக பிரியாணிக் கடைக்கு போகின்றவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரியாணிக் கடைகளிலேயே சாப்பிடுவதில்லை.அவ்வாறு தினசரி பிரியாணிக் சாப்பிடுகிறவர்கள் யாழ்ப்பாணத்தில் அந்தக் கடைகளில் இருந்து குறுகிய தொலைவில் காணப்படும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தங்களுடைய கொலஸ்ட்ரோலைக் கரைப்பதற்கான சிகிச்சைகளையும் பெறுகிறார்கள். அதாவது ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலை விற்கிறார்.ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலைக் கரைக்கிறார்.ஆக மொத்தம் கோப்பரேட்களின் ஆய்வு கூடமாக மாற்றப்பட்ட உள்ளூர் உடல் ? கோப்பரேட் சுவை என்பது உலகப் பொதுவானது.உள்ளூர்ச் சுவை என்பது அதிகம் தேசியத் தன்மை மிக்கது.ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பண்பாடு.பொதுப் பண்பாட்டுக்குள் உணவுப் பண்பாடும் அடங்கும்.எனவே உணவுப் பண்பாடானது ஒரு மக்கள் கூட்டத்தின் தேசியத் தனித்துவங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது.1966இல் மேதினத்தன்று இடதுசாரிகள் தமிழ்மக்களுக்கு எதிராக எழுப்பிய கோசத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்.“தோசே மசால வடே அப்பிட்ட எப்பா”.இது தமிழர்களை அவர்களுடைய உணவுக்கூடாக விழித்த ஒரு கோஷம்.தோசையும் மசாலா வடையும் வேண்டாம் என்று பொருள்.அதாவது தோசையும் வடையும் அங்கே தமிழ் மக்களின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டன. ஈழத் தமிழர்கள் மத்தியில் வடக்கிலும் கிழக்கிலும் வித்தியாசமான உணவுப் பண்பாடுகள் உண்டு.வடக்கில் யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையே வித்தியாசங்கள் உண்டு.யாழ்ப்பாணத்திலேயே வடமாராட்சி,தீவுப் பகுதிக் கிடையே வித்தியாசமான உள்ளூர் உணவுப் பண்பாடுகள் உண்டு.ஒரு தேசிய இனத்தின் உள்ளூர் உணவு பண்பாட்டுக்குள்ளேயே பல வகைகள் உண்டு.அவை எக பரிமாணத்தைக் கொண்டவை அல்ல. இந்தப் பல்வகைமையின் திரட்சிதான் ஈழத் தமிழர்களுடைய பொதுவான உணவு பண்பாடாகும். உலகில் தூய உணவுப் பண்பாடு என்று ஒன்று கிடையாது என்று கீதா சுகுமாரன் கூறுகிறார்.எல்லா உள்ளூர் உணவுப் பண்பாடுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவைதான். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே கோப்பரேட் உணவுப் பண்பாட்டையும்,உள்ளூர்,தேசியத் தனித்துவம்மிக்க உணவுப் பண்பாடுகளையும் பார்க்க வேண்டும். ஆயுத மோதல்களுக்கு பின்னரான நுகர்வுப் பசி,தாகம் என்பவற்றின் பின்னணியில் ஒரு தேசமாக திரள்வதன் மூலம் மட்டுமே தனது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தமிழ்ச் சமூகமானது,தனித்துவம் மிக்க தனது சொந்தச் சுவையைக் குறைத்து மதிப்பிட்டு, அதை “லோக்கலானது” என்று இகழ்ந்துவிட்டு, கோப்பரேட் சுவை மீது பசி தாகமுடையதாக மாறிவிடுமா ? கோப்பரேட் உணவகங்களின் பெருக்கத்தின் மத்தியில் உள்ளூர்த் தனித்துவங்களைப் பாதுகாப்பதை ஒரு வாழ்க்கை முறையாக, பெருமைக்குரிய வாழ்க்கை முறையாகக் கட்டமைப்பது என்பது ஒரு சமூகத்தின் அரசியல் சமூக பண்பாட்டுத் தலைமைத்துவங்களின் வேலை.அது தொடர்பாக அந்த சமூகத்தின் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்கள் மத்தியில் பொருத்தமான விழிப்பும் தூரநோக்கிலான அரசியல் தரிசனங்களும் இருக்க வேண்டும்.துறைசார் அறிஞர்கள் இதுதொடர்பான கற்கைகளை காஸ்ரோ நஷனலிஸம் (Gastro nationalism)என்று அழைக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் புலப்பெயர்ச்சி காரணமாக ஏற்கனவே உலகமயப்பட்டு விட்டார்கள்.தாங்கள் உலகமயப்பட்டு விட்டதாகக் காட்டிக்கொள்வதை ஒரு பகுதியினர் பெருமையாகவும் கருதுகிறார்கள். தமிழ்மக்கள் பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்டவர்கள். பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு சமூகம் தன்வசமிழந்து தனது தனித்துவங்களை ‘லோக்கல்’ ஆனவை என்று இகழ்ந்து எதிர்ப்பின்றி உலகப் பொதுப் பண்பாட்டுக்குள் கரைந்துவிடாது. ஆனால் ஒரு சமூகத்தை தோற்கடிக்க விரும்பும் சக்திகள் அந்தச் சமூகத்தின் பண்பாட்டுத் தனித்துவத்தையும் செழிப்பையும் அதைவிட பலமான ஒரு பண்பாட்டிற்குள் கரைத்து விட முயற்சிக்கும்.எனவே அதை எதிர்கொள்வதற்கான சமூக,அரசியல், பொருளாதார,பண்பாட்டு விழிப்பு என்பது கலெக்டிவ் ஆனது.அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட வேண்டியது.கோப்பரேட் சுவையைப் பரப்பும் உயர்தர உணவகங்களுக்கு நிகராக உள்ளூர்ச் சுவையை,உள்ளூரில் தனித்துவமான உணவுப் பண்டங்களை உலகத் தரத்துக்கு உற்பத்தி செய்வதற்கு தமிழ் மக்களிடம் வளம் இல்லையா? உள்ளூர் நண்டுக் கறி,உள்ளூர் றால்கறி,உள்ளூர் பிரட்டல்,உள்ளூர் பொரியல்,உள்ளூர் சுண்டல்,உள்ளூர் கீரை,உள்ளூர் ஒடியல் கூழ்,உள்ளூர் பலகாரம்… என்று தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை வெளிப்படுத்தும் உணவுச் சாலைகளை கட்டியெழுப்ப உள்ளூரிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள முதலீட்டாளர்கள் முன் வரவேண்டும். சூழலியலாளர்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவார்கள்.உள்ளூர் மரங்களில்தான் பறவைகள் கூடுகட்டும்.பூச்சி புழுக்களும் அந்த மரங்களைத்தான் மொய்க்கும்.அவற்றுக்குத் தெரிகிறது உள்ளூர் மரம் எது? “ஹைபிரிட்” மரம் எது? என்று.பண்பாட்டுச் செழிப்பு மிக்க தமிழ் மக்களுக்கும் அது தெரியும்.தமது சுவை எது? கோப்பரேட் சுவை எது என்பது.பண்பாட்டு விழிப்பில்லாமல் தேசிய விழிப்பு இல்லை. https://www.nillanthan.com/7204/
-
முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் ; வெடித்தது புதிய சர்ச்சை
முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் ; வெடித்தது புதிய சர்ச்சை 09 Mar, 2025 | 12:51 PM இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம் குறித்து சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரர் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தரிகாமியின் கரிசனையை பகிர்ந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட் இது பாரதூரமான விடயம் இது குறித்து சட்டசபையில் விவாதம் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள விவசாய அமைச்சர் இந்த விவகாரம் வருமான திணைக்களத்தின் கீழ் வருவதாகவும் எனினும் இது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208695
-
ரணிலுக்கு எதிராக புதிய விசாரணைகள் - சுனில் வட்டகல
ரணிலுக்கு எதிராக புதிய விசாரணைகள் - சுனில் வட்டகல Published By: Rajeeban 09 Mar, 2025 | 12:57 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம புதிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்தே விசாரணையில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் இந்த இரண்டும் ரணில் விக்கிரமசிங்;கவின் பதவிக்காலத்திலேயே இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி வெளிப்படை தன்மை குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208698
-
கொக்குத்தொடுவாய் - கோட்டைக்கேணி பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்
கொக்குத்தொடுவாய் - கோட்டைக்கேணி பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர் 09 Mar, 2025 | 01:10 PM கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சனிக்கிழமை (08) நேரில் சென்று பார்வையிட்டார். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும், விளைச்சலையும் கொண்டு சென்று வருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக இந்த வீதியே இருந்து வரும் நிலையில் அதைப் பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதாக விவசாயிகள் ஆளுநருக்கு இதன்போது சுட்டிக்காட்டினர். இந்த வீதியின் சில பாலங்களும் அமைக்கப்படவேண்டியிருப்பதை இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆர்.விஜயகுமார் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார். வீதியை அபிவிருத்தி செய்வதற்கும் அத்துடன் பராமரிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்புடைய திணைக்களங்களுடன் கலந்துரையாடலை விரைவில் நடத்தி முடிவு எடுப்பதாக ஆளுநர் இந்தப் பயணத்தின்போது விவசாயிகளிடம் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/208699