Everything posted by கிருபன்
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
தமிழீழத் தேசியத் தலைவரின் வீரச்சாவு அறிவிப்பு… (காணொளிப்பதிவு) மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்புமேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள். March 10, 2025 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு 10 மார்ச் அன்று உத்தியோக பூர்வமாக வெளியாகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாட்டில், தேசியத் தலைவரின் வழிநின்று களமாடிய போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்த ஒன்றுகூடலில், தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி வெளியிடப்பெற்ற தமிழீழ மாவீரர் பணிமனையின் அறிவிப்பு, 10.03.2025 அன்று உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றது. தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தும் அறிவிப்பானது காணொளிப் பதிவாகவும் அதேவேளை அறிக்கை வடிவிலும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இத்தகவலை மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப் பிரிவு அனைவருக்கும் அறியத்தருகின்றது. சி. அறிவுமணி இணைப்பாளர் ஊடகப்பிரிவு, மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். காணொளிப் பதிவாகவு தரவிறக்கம் செய்து கொள்ள https://app.filemail.com/d/yzyjbebhklsubhr 10.03.2025- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு (காணொளி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழீழத் தேசியத் தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு – உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே! எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந் தலைவருமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதிதளராது, முப்பத்தாறு ஆண்டுகளாக எதிரிப்படைகளோடு அடிபணியாது போராடி நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச்சமரில் வீரகாவியமானார். சிறிலங்கா அரசுக்கும் அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சி திட்டங்களையும் எதிர்கொண்டு , அனைத்து தடைகளையும், தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக தேசியத் தலைவர் திகழ்ந்தார் . தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரையும் உறுதி குலையாது படைநடத்தி,தான் வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமாரஏற்று, உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை துணிவோடு களமாடி எமது தேசியத்தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்த நாள் 2009 ஆண்டு மே மாதம் 18 என்று தமிழீழ மாவீரர் பணிமனை முடிவு செய்து அறியத்தருகிறது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயர்மிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும்,அவரை ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு தமிழீழ மாவீரர் பணிமனையூடாக உறுதிப்படுத்தி வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு சிதைந்து கொண்டிருந்த ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த ஒரு சூரிய தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து, தமிழினத்தின் அதிஉச்ச வீர அடையாளமாக அவர் திகழ்ந்தார். வரலாற்றிலிருந்து எவராலும் அழிக்கப்பட முடியாதவாறு, எதிரியாலும் போற்றப்படும் போரியல் அறத்துடனும் உயர்ந்த இராணுவ ஒழுக்கத்துடனும் தமிழர் வரலாற்றில் அவர் நிலைபெற்றுவிட்டார் என்பதால், செம்மொழியாம் எம் தாய்த் தமிழ்மொழி வாழும் காலமெல்லாம் எம்தேசத் தலைவரும் நிலைபெற்று நித்திய வாழ்வு வாழ்வார் . எமது அன்பிற்குரிய தாயத்தமிழ் உறவுகளே! தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்திலிருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குடைத்து, கொண்ட கொள்கையில் உறுதி தளராது, மாவீரர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார். தமிழினத்தின் விடிவிற்காக தனது உயிரை அர்ப்பணித்த எம் தேசியத் தலைவருக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு அவரை நெஞ்சங்களில் நிலைநிறுத்தி, தமிழீழப் போராட்ட வரலாற்றின் மிகப்பெரும் அடையாளமாக அவரை இறையாக்கி எமது இதயக் கோயிலில் வைத்து பூசிக்கப்படக்கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் மிகப்பெரும் கடமையும் பொறுப்புமாகும் . ஆகவே வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எமது தேசத்தலைவருக்கு, தலைவரின் தலைமையில் போராடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர் மற்றும் தாயக – தமிழக மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது இறுதி வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் நடாத்தும் அதேவேளை அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஐரோப்பிய நாட்டொன்றிலும் வரும் 2025 ஆம் ஆண்டு் நடுப்பகுதியில் உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக முன்னெடுப்போம் என உறுதி அளிக்கிறோம் . எங்கள் பெருந் தலைவர் அவர்களால் கட்டமைத்து, வளர்த்தெடுக்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி இலட்சியத்தை அடைவோமென எம் தேசியத் தலைவர் மீதும் மாவீரர்கள் மீதும் உறுதியெடுத்துக் கொள்கிறோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.” இ. பிரசாத் இணைப்பாளர் மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். 10.03.2025. https://www.uyirpu.com/?p=19537
-
மொஸ்கோ மீது உக்ரைன் ‘பாரிய’ ட்ரோன் தாக்குதல்
மொஸ்கோ மீது உக்ரைன் ‘பாரிய’ ட்ரோன் தாக்குதல் March 11, 2025 12:31 pm ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ஒரு “பாரிய” ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து விமான நிலையங்கள் மூடப்பட்டதாகவும், குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யாவுடன் பகுதி போர்நிறுத்தத்திற்கான திட்டத்தை உக்ரைன் அமெரிக்காவிற்கு முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு (01:00 GMT) தொடங்கிய இந்த தாக்குதலின் விளைவாக ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் மொஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் கூறினார். எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் போது ஒரே இரவில் 337 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாகவும், அவற்றில் 91 மொஸ்கோ பிராந்தியத்தில் இருந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ட்ரோன் தாக்குதலின் விளைவாக, நகரத்தின் தெற்கே டோமோடெடோவோ, வுனுகோவோ மற்றும் ஜுகோவ்ஸ்கி மற்றும் வடக்கே ஷெரெமெட்டியோ உள்ளிட்ட நான்கு மாஸ்கோ விமான நிலையங்களில் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சவுதி அரேபியாவில் கூடியுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/ukraine-launches-massive-drone-attack-on-moscow/
-
Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்!
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி! கனடாவின் மார்க்காமில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (09) அந்த வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதா ஆல்பிரட் துரையப்பாவின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. 20 வயதுடைய ரகுதாஸ் நிலாக்ஷி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற இந்த பெண் இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அந்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த பெண்ணுடன் வசித்து வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரிகள் வீட்டைக் காத்துக்கொண்டிருந்த நாயையும் சுட்டுக் கொன்றதாகக் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நால்வர் கெப் ரக வாகனத்தில் தப்பிச் செல்வது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக கனேடிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை கனடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Hiru Newsகனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி!கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி! . Most visited website in Sri Lanka.
-
பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை அறிவிப்பு
பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை அறிவிப்பு உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் பட்டியல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனத்தினால் பயங்கரவாதத்தின் தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப் படுத்துதல் இந்த உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் மேற்கொள்ளப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 99.7 சதவீத மக்களை உள்ளடக்கிய, 163 நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்து, உலகளாவிய பயங்கரவாத குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகில் அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக புர்கினா பாசோ முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, பயங்கரவாத ஆபத்து மிகக் குறைந்த நாடாக, உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் இலங்கை 100வது இடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்தில் இருந்த இலங்கை, 64 இடங்கள் பின்தங்கி, பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக இலங்கை மற்றும் பூட்டான் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2019 முதல் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக குறித்த அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cm83tuvsb000c10a688c6t72j
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டியில் கலந்துகொண்ட @ஈழப்பிரியன் ஐயா, @alvayan வெற்றிபெற வாழ்த்துக்கள்! இதுவரை 3 பேர் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் பலர் இந்த வாரத்தில் கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தெரிவுசெய்து பதிந்தால் தரவேற்ற உதவியாக இருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.
- IMG_0141.jpeg
- IMG_0140.jpeg
- IMG_0140.jpeg
- IMG_0136.jpeg
- IMG_0137.jpeg
- IMG_0139.jpeg
- IMG_0138.jpeg
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பல தேடல்களுக்குப் பின்னர் சாதனையாளர்களின் பட்டியலைக் X தளத்தில் கண்டுபிடித்தேன். Official ICC தரவுகளைக் கைவிட்டு தொலைக்காட்சியில் காண்பித்த சாதனைகளை வைத்து யாழ்கள வெற்றியாளரை அதிகாரபூர்வமாகப் பின்னர் அறிவிக்கின்றேன். ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக்காட்டிய @Eppothum Thamizhan க்கு நன்றி பல.
-
அல்ஜசீராவில் ரணில்!
ரணிலைத் தூற்றுவது சரிதானா? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்-ஜசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதில்களும் உலகளவில் பல விமர்சனங்களை தோற்றுவித்திருக்கிறது. அதற்கெதிரான விமர்சனங்களாக ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று காஸா, மியன்மார், காஷ்மீர் பிரச்சினைகள் பற்றி டிரம்ப், புட்டின், மோடி, நெத்தன்யாகு போன்றவர்களிடம் கேள்விகளைக் கேட்க முடியுமா என்ற வகையிலான கருத்துக்களும் வந்த வண்ணமிருக்கின்றன. இது போலவே டி.டப்ளியு. தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்திருந்த நேர்காணலும் விமர்சனங்களைக் கொண்டுவந்திருந்தது. உலகில் அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை மிகச் சரியாகப் பயன்படுத்துகின்றார்களா என்றால், அது கேள்விக்குறிகளையே தோற்றுவிக்கும். அது இலங்கைக்கு மாத்திரமல்ல அனைத்து நாடுகளுக்கும்இது பொதுவானதாகவே இருக்கும்.ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகள் யாரும் அவர்களுடைய ஆட்சிக் காலங்களில் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்து முடித்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். அதனை நிரூபிப்பதாகவே ஒவ்வொருவருடைய ஆட்சிக்காலங்களின் பின் ஏற்பட்ட மாற்றங்களே சாட்சியாக இருக்கிறது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மன் என பல நாடுகளை உதாரணமும் காட்டலாம். இலங்கையில் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டே வந்திருக்கிறார்கள். நாட்டுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அக்காலங்களில் உருவான தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தங்களுடைய ஆதரவுகளை வழங்கினார்கள். ஆனால், ஆட்சியிலிருந்து சிங்களத் தலைவர்கள் யாரும் அந்த அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்குத் தீர்வை முன்வைக்கவேயில்லை. முன்வைத்தாலும் அவை சிங்கள அடிப்படைவாதிகளால் இல்லாமலாக்கப்பட்டன. அதற்கு டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம், சந்திரிகா அம்மையாரின் இடைக்கால நிருவாக சபை, சுனாமி நிவாரணத் திட்டம், மைத்திரிபால சிறிசேன கால புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்றவற்றை அதற்கு உதாரணமும் காட்டலாம். ஏன்? இந்தியாவின் முழுமையான பங்குபற்றலுடன் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனால், உருவான 13ஆவது திருத்தத்தையும் கூறலாம். 13ஆவது திருத்தம் இதுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படாமலிருப்பதும் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை ஆளுநர்கள் வசம் வைத்திருக்கின்றமை வேறுகதை. அகிம்சை வழிப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒருமித்து இருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பிரிவுகளாக மாறத் தொடங்கினார்கள். அதற்கு ஒவ்வொருவரும் கைக்கொண்ட கொள்கைகள் காரணமாக இருந்தன. ஒருவர் ஒருவழியை முன்வைக்க மற்றையவர்கள் வேறு ஒரு முறையையே கையாண்டிருக்கின்றனர். எவ்வாறிருந்தபோதிலும், தமிழ் மக்களின் சுதந்திரமான அரசியல் உரிமைக்கான சுய நிர்ணயக் கோரிக்கைக்கு ஏற்ற தீர்வு வழங்கப்படவில்லை. அது தமிழ் அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்களையே ஏற்படுத்தியிருந்தது. இப்போதும் அவ்வாறான விமர்சனங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பக்கம் சாய்வதற்கு அதுவும் ஒரு காரணமாகும். அரசியல் ரீதியான முயற்சிகளின் இயலாமை காரணமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. அந்த ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி ஆட்சியிலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரையும் அச்சம் கொள்ள வைத்திருந்தது என்பதற்கப்பால் பிரமிக்கவும் செய்திருந்தது. பிற்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு இறுதியில் ஆயுத ரீதியாகவே அடக்கப்பட்டது. இலங்கையை பொறுத்தவரையில், தமிழ் மக்களது போராட்டமானது ஒட்டு மொத்த சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு திசை திருப்பப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் ஏதோ தமிழர்களுடைய போராட்டத்தை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரே என்றும் சொல்லப்பட்டது. அதனால்தான் இலங்கையின் ஏகபோக ராஜாவாக மகிந்த புகழாரம் சூடப்பட்டிருந்தார். ஆனால், சிறிது காலத்திலேயே அவர்கள் ஒன்றுமே இல்லாதவர்களாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். இறுதியில் தேசியப் பட்டியல் ஊடாக மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டிய நிலையையும் கொண்டுவந்தது, இது சிங்கள மக்கள் தங்களுக்கிருந்த நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த தரப்பினரையே மக்கள் ஒதுக்கியதையே காட்டுகிறது. ஒருவகையில் பார்த்தால், உலகமே பிரமிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்காக மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி நோர்வேயின் உதவியுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைப்பாடுகள் காரணமாகப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். அவரது அந்த தந்திரமான கனகச்சிதமான வேலைப்பாடு ஆயுத ரீதியாக புலிகள் பலமிழக்கும் நிலையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துவந்த கிழக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் பங்களிப்பு குறைவதற்கு அல்லது இல்லாமல் போவதற்கு புலிகளின் பிளவு காரணமாக இருந்தது. அதனைச் செய்து முடித்தவர் ரணில் விக்ரமசிங்க ஆகும். ஆயுதப் போராட்டத்தின் முடிவு, அதனால் ஏற்பட்ட நாட்டின் அமைதி நிலை, இயல்பு வாழ்க்கை போன்றவற்றின் பின்னரே சிங்கள மக்கள் தங்களது மற்றைய விடயங்களைப் பற்றி சிந்திப்பதற்கான காலத்தைக் கொடுத்திருந்தது. அதற்காக ரணிலுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த தலைவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு, விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பங்களிப்புச் செய்யவில்லை என்ற கருத்தாகாது என்பதும் இதில் கவனிக்கப்படவேண்டியது. இந்த இடத்தில்தான், அல்-ஜசீராவின் சமீபத்திய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில், பத்திரிகையாளர் புலனாய்வு அதிகாரி போல் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தார். ரணில் பதிலளிக்க நேரம் கொடுக்காமல் கதைத்து கொண்டிருந்தார். பதிலளிக்கும் நேரத்தில் இடைஞ்சல் செய்து கொண்டே இருந்தார் என்பதெல்லாம் ஒருவகையில் பார்த்தால், ரணில் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டார் என்பதாகக் கொள்ளலாம். உண்மையில் அவர் குற்றவாளியல்ல. இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பியதை ஏற்படுத்த அவருடைய ஆட்சி, அதிகார காலங்களில் அவர் முயற்சியைச் செய்திருந்தார். ரணிலைப் பொறுத்தவரையில், இலங்கையை உலகமயமாக்கலின் சூழலுக்கேற்பவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் நகர்த்தியே வந்திருக்கிறார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் எதிர்பார்த்த ஆட்சியொன்றை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நிறைவேற்ற முன்னின்றார். அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலர் இணைந்தே இருந்தனர். ஆனால், அந்த முயற்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருகையாலும், கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததால் கைகூடாமல் போனது. அந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கு மக்கள் எதிர்பார்க்காத விடயமான இயற்கை விவசாய முறை அறிமுகம் காரணமாக இருந்தது. மகிந்த குடும்பத்தாருக்கு அரசியலே வேண்டாமென்று ஒதுங்கவேண்டிய நிலையையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கலைத்து விட வேண்டும் என்று சிந்திக்கும் அளவிற்கு தற்போதைய நிலையையும் கொண்டுவந்திருக்கிறது. இருந்தாலும், அந்நேரத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி மக்கள் எதிர்பார்க்கின்ற இலங்கையை ஏற்படுத்தவே ரணில் விக்கரமசிங்க முயற்சியை மேற்கொண்டார். அக்காலத்தில் அவர் மேற்கொண்டிருந்த பிரயத்தனங்கள் சாதாரணமானவையல்ல. பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையை சர்வதேச அளவில் தூக்கி நிறுத்திவிடவேண்டும் என்றே அவர் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓரளவிற்கு அதில் வெற்றியும் கண்டார். அதனாலேயே அவர் இப்போதும் விமர்சிக்கப்படுகின்றார் என்றே சொல்லாம். ஒருவகையில் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த, இலங்கையின் தேசிய செல்வத்தை அழித்து கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரையே ஒன்றுமில்லை என்றாக்கிய மக்கள் ரணில் விக்ரமசிங்கவை மிகச் சாதாரணமாகவே பார்ப்பர் என்பதில் தவறொன்றும் இருக்கப் போவதில்லை என்றே சொல்லாம். ஒரு அரச தலைவர் தன்னுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் விமர்சிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை. இருந்தாலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தேவையற்ற விடயங்கள் அரசியல் நாகரீகமற்றதாகவே பார்க்கப்படவேண்டும். அந்தவகையிலேயே, ரணில் விக்ரமசிங்க மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் அவரை ஒன்றும் செய்து விடப் போவதில்லi என்பதுடன், இலங்கை அரசியலில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே கொள்ளலாம். அதே நேரத்தில், தமிழ் மக்களின் விடயத்தில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும், வேறு ஒரு கோணத்தில் அணுகப்படாமலிருப்பதும் இதுபோன்றதொரு நிலையே என்பதும் மறைப்பதற்கில்லை. ன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்-ஜசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதில்களும் உலகளவில் பல விமர்சனங்களை தோற்றுவித்திருக்கிறது. அதற்கெதிரான விமர்சனங்களாக ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று காஸா, மியன்மார், காஷ்மீர் பிரச்சினைகள் பற்றி டிரம்ப், புட்டின், மோடி, நெத்தன்யாகு போன்றவர்களிடம் கேள்விகளைக் கேட்க முடியுமா என்ற வகையிலான கருத்துக்களும் வந்த வண்ணமிருக்கின்றன. இது போலவே டி.டப்ளியு. தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்திருந்த நேர்காணலும் விமர்சனங்களைக் கொண்டுவந்திருந்தது.உலகில் அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை மிகச் சரியாகப் பயன்படுத்துகின்றார்களா என்றால், அது கேள்விக்குறிகளையே தோற்றுவிக்கும். அது இலங்கைக்கு மாத்திரமல்ல அனைத்து நாடுகளுக்கும் இது பொதுவானதாகவே இருக்கும். ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகள் யாரும் அவர்களுடைய ஆட்சிக் காலங்களில் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்து முடித்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். அதனை நிரூபிப்பதாகவே ஒவ்வொருவருடைய ஆட்சிக்காலங்களின் பின் ஏற்பட்ட மாற்றங்களே சாட்சியாக இருக்கிறது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மன் என பல நாடுகளை உதாரணமும் காட்டலாம். இலங்கையில் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டே வந்திருக்கிறார்கள். நாட்டுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அக்காலங்களில் உருவான தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தங்களுடைய ஆதரவுகளை வழங்கினார்கள். ஆனால், ஆட்சியிலிருந்து சிங்களத் தலைவர்கள் யாரும் அந்த அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்குத் தீர்வை முன்வைக்கவேயில்லை. முன்வைத்தாலும் அவை சிங்கள அடிப்படைவாதிகளால் இல்லாமலாக்கப்பட்டன. அதற்கு டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம், சந்திரிகா அம்மையாரின் இடைக்கால நிருவாக சபை, சுனாமி நிவாரணத் திட்டம், மைத்திரிபால சிறிசேன கால புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்றவற்றை அதற்கு உதாரணமும் காட்டலாம். ஏன்? இந்தியாவின் முழுமையான பங்குபற்றலுடன் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனால், உருவான 13ஆவது திருத்தத்தையும் கூறலாம். 13ஆவது திருத்தம் இதுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படாமலிருப்பதும் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை ஆளுநர்கள் வசம் வைத்திருக்கின்றமை வேறுகதை. அகிம்சை வழிப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒருமித்து இருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பிரிவுகளாக மாறத் தொடங்கினார்கள். அதற்கு ஒவ்வொருவரும் கைக்கொண்ட கொள்கைகள் காரணமாக இருந்தன. ஒருவர் ஒருவழியை முன்வைக்க மற்றையவர்கள் வேறு ஒரு முறையையே கையாண்டிருக்கின்றனர். எவ்வாறிருந்தபோதிலும், தமிழ் மக்களின் சுதந்திரமான அரசியல் உரிமைக்கான சுய நிர்ணயக் கோரிக்கைக்கு ஏற்ற தீர்வு வழங்கப்படவில்லை. அது தமிழ் அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்களையே ஏற்படுத்தியிருந்தது. இப்போதும் அவ்வாறான விமர்சனங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பக்கம் சாய்வதற்கு அதுவும் ஒரு காரணமாகும். அரசியல் ரீதியான முயற்சிகளின் இயலாமை காரணமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. அந்த ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி ஆட்சியிலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரையும் அச்சம் கொள்ள வைத்திருந்தது என்பதற்கப்பால் பிரமிக்கவும் செய்திருந்தது. பிற்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு இறுதியில் ஆயுத ரீதியாகவே அடக்கப்பட்டது. இலங்கையை பொறுத்தவரையில், தமிழ் மக்களது போராட்டமானது ஒட்டு மொத்த சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு திசை திருப்பப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் ஏதோ தமிழர்களுடைய போராட்டத்தை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரே என்றும் சொல்லப்பட்டது. அதனால்தான் இலங்கையின் ஏகபோக ராஜாவாக மகிந்த புகழாரம் சூடப்பட்டிருந்தார். ஆனால், சிறிது காலத்திலேயே அவர்கள் ஒன்றுமே இல்லாதவர்களாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். இறுதியில் தேசியப் பட்டியல் ஊடாக மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டிய நிலையையும் கொண்டுவந்தது, இது சிங்கள மக்கள் தங்களுக்கிருந்த நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த தரப்பினரையே மக்கள் ஒதுக்கியதையே காட்டுகிறது. ஒருவகையில் பார்த்தால், உலகமே பிரமிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்காக மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி நோர்வேயின் உதவியுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைப்பாடுகள் காரணமாகப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். அவரது அந்த தந்திரமான கனகச்சிதமான வேலைப்பாடு ஆயுத ரீதியாக புலிகள் பலமிழக்கும் நிலையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துவந்த கிழக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் பங்களிப்பு குறைவதற்கு அல்லது இல்லாமல் போவதற்கு புலிகளின் பிளவு காரணமாக இருந்தது. அதனைச் செய்து முடித்தவர் ரணில் விக்ரமசிங்க ஆகும். ஆயுதப் போராட்டத்தின் முடிவு, அதனால் ஏற்பட்ட நாட்டின் அமைதி நிலை, இயல்பு வாழ்க்கை போன்றவற்றின் பின்னரே சிங்கள மக்கள் தங்களது மற்றைய விடயங்களைப் பற்றி சிந்திப்பதற்கான காலத்தைக் கொடுத்திருந்தது. அதற்காக ரணிலுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த தலைவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு, விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பங்களிப்புச் செய்யவில்லை என்ற கருத்தாகாது என்பதும் இதில் கவனிக்கப்படவேண்டியது. இந்த இடத்தில்தான், அல்-ஜசீராவின் சமீபத்திய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில், பத்திரிகையாளர் புலனாய்வு அதிகாரி போல் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தார். ரணில் பதிலளிக்க நேரம் கொடுக்காமல் கதைத்து கொண்டிருந்தார். பதிலளிக்கும் நேரத்தில் இடைஞ்சல் செய்து கொண்டே இருந்தார் என்பதெல்லாம் ஒருவகையில் பார்த்தால், ரணில் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டார் என்பதாகக் கொள்ளலாம். உண்மையில் அவர் குற்றவாளியல்ல. இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பியதை ஏற்படுத்த அவருடைய ஆட்சி, அதிகார காலங்களில் அவர் முயற்சியைச் செய்திருந்தார். ரணிலைப் பொறுத்தவரையில், இலங்கையை உலகமயமாக்கலின் சூழலுக்கேற்பவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் நகர்த்தியே வந்திருக்கிறார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் எதிர்பார்த்த ஆட்சியொன்றை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நிறைவேற்ற முன்னின்றார். அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலர் இணைந்தே இருந்தனர். ஆனால், அந்த முயற்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருகையாலும், கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததால் கைகூடாமல் போனது. அந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கு மக்கள் எதிர்பார்க்காத விடயமான இயற்கை விவசாய முறை அறிமுகம் காரணமாக இருந்தது. மகிந்த குடும்பத்தாருக்கு அரசியலே வேண்டாமென்று ஒதுங்கவேண்டிய நிலையையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கலைத்து விட வேண்டும் என்று சிந்திக்கும் அளவிற்கு தற்போதைய நிலையையும் கொண்டுவந்திருக்கிறது. இருந்தாலும், அந்நேரத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி மக்கள் எதிர்பார்க்கின்ற இலங்கையை ஏற்படுத்தவே ரணில் விக்கரமசிங்க முயற்சியை மேற்கொண்டார். அக்காலத்தில் அவர் மேற்கொண்டிருந்த பிரயத்தனங்கள் சாதாரணமானவையல்ல. பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையை சர்வதேச அளவில் தூக்கி நிறுத்திவிடவேண்டும் என்றே அவர் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓரளவிற்கு அதில் வெற்றியும் கண்டார். அதனாலேயே அவர் இப்போதும் விமர்சிக்கப்படுகின்றார் என்றே சொல்லாம். ஒருவகையில் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த, இலங்கையின் தேசிய செல்வத்தை அழித்து கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரையே ஒன்றுமில்லை என்றாக்கிய மக்கள் ரணில் விக்ரமசிங்கவை மிகச் சாதாரணமாகவே பார்ப்பர் என்பதில் தவறொன்றும் இருக்கப் போவதில்லை என்றே சொல்லாம். ஒரு அரச தலைவர் தன்னுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் விமர்சிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை. இருந்தாலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தேவையற்ற விடயங்கள் அரசியல் நாகரீகமற்றதாகவே பார்க்கப்படவேண்டும். அந்தவகையிலேயே, ரணில் விக்ரமசிங்க மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் அவரை ஒன்றும் செய்து விடப் போவதில்லi என்பதுடன், இலங்கை அரசியலில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே கொள்ளலாம்.அதே நேரத்தில், தமிழ் மக்களின் விடயத்தில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும், வேறு ஒரு கோணத்தில் அணுகப்படாமலிருப்பதும் இதுபோன்றதொரு நிலையே என்பதும் மறைப்பதற்கில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலைத்-தூற்றுவது-சரிதானா/91-353428
-
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானம்
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானம் editorenglishMarch 10, 2025 எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுகின்றமை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் கொழும்பு மாநகரசபையின் கீழ் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளன. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலையை ஏற்ப்படுத்தியுள்ளது. இங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (09/03/2025) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த கூட்டத்தில் பதில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன்,குகதாசன்,சிறிநாத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/213040/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் கடைசிப் பந்துக்கு அப்பால் பார்க்கவில்லை. Cricinfo மற்றும் Official ICC Stats இல் உள்ளபடிதான் ஹென்றியை முதலாவதாகக் கொடுத்துள்ளேன். @புலவர் ஐயாவும் @வீரப் பையன்26 உம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ICC மீது வழக்கு வைக்கலாம்😃 https://www.espncricinfo.com/records/tournament/bowling-best-figures-innings/icc-champions-trophy-2024-25-16814 https://www.icc-cricket.com/tournaments/champions-trophy-2025/stats
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.
- IMG_0129.jpeg
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 28) இலிருந்து 33) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Ibrahim Zadran (AFG) 177 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Ibrahim Zadran (AFG) 177 சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன் நுணாவிலான் 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy (IND) O: 10 R: 42 W: 5 E: 4.25 சரியாகக் கணித்தவர்: வாதவூரான் 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Varun Chakravarthy (IND) O: 10 R: 42 W: 5 E: 4.2 சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி நுணாவிலான் வாத்தியார் செம்பாட்டான் வாதவூரான் எப்போதும் தமிழன் கந்தப்பு பிரபா 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Ravindra (NZ) 263 Runs, 3 Wickets, 5 Catches சரியாகக் கணித்தவர்: ஈழப்பிரியன் 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Rachin Ravindra (NZ) 263 Runs, 3 Wickets, 5 Catches சரியாகக் கணித்தவர்: சுவைப்பிரியன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படி இல்லையே! 1 Matt Henry 2 VarunChakaravarthy Matt Henry 8 ஓவர்களில் 5/42 எடுத்துள்ளார். Varun Chakaravarthy 10 ஓவர்களில் 5/42 எடுத்துள்ளார். குறைந்த ஓவர்களில் 5 விக்கெட் எடுத்ததால் Matt Henry முதலாவதாக உள்ளார் என்று நினைக்கின்றேன். https://www.icc-cricket.com/tournaments/champions-trophy-2025/stats
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கேள்விகள் 27) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:
- IMG_0128.jpeg
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 22) இலிருந்து 27) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) New Zealand 362/6 சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன் புலவர் 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) England 179 குறிப்பு: அவுஸ்திரேலியாவின் 109/1 மழையால் தடைப்பட்டதால் தவிர்க்கப்பட்டுள்ளது. சரியாகக் கணித்தவர்: கோஷான் சே 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) R Ravindra (NZ) 263 சரியாகக் கணித்தவர்: ஈழப்பிரியன் 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) R Ravindra (NZ) 263 சரியாகக் கணித்தவர்கள்: வசீ சுவைப்பிரியன் 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Matt Henry (NZ) 10 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Matt Henry (NZ) 10 சரியாகக் கணித்தவர்: நீர்வேலியான்