Everything posted by கிருபன்
-
கல்முனையில் சந்தேகிக்கப்படும் தீவிரவாதக் குழு; விசாரணைகள் தீவிரம்!
கிழக்கில் அடிப்படைவாதம்” என்ற கூற்றினூடாக இஸ்லாமியர்களை முடக்க முயற்சி editorenglishMarch 6, 2025 பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம். இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (05/03/2025) இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்… கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். இவ்வாறான கூற்றுக்களை கொண்டு பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே இந்தக்கூற்றின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயம் தேசிய பத்திரிகைகளில் பிரதான செய்தியாக, புதன்கிழமை (05/03/2025) வெளிவந்துள்ளன. குறிப்பாக, கல்முனை பகுதிகளில் மத அமைப்புக்களினால் பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் அதன் காரணமாக உளவுத்துறையினர் கண்காணிப்புக்களை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தக் கூற்றினால் எமது பிரதேச மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.. கூற்றுக்களில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அமைப்புக்களின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.கல்முனை ஜும்மா பள்ளிவாசல், பள்ளிவாசல் சம்மேளனம், ஜம் இய்யதுல் உலமா சபை உட்பட இஸ்லாமிய அமைப்புகள் உட்பட இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதம் தொடர்பான விசாரணைகளுக்கும், தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளனர் என்றார். இவ்வாறான அடிப்படைவாதப் போக்குகள் உள்ள குழுக்களின் பின்னணியையும், அவர்களுக்கு யார் நிதி வழங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள எமது மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே புலனாய்வு விசாரணைகள் சட்டத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.. இதற்கு முன்னரும் முஸ்லிம் சமூகம் பல விடயங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்தும் உரிய அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படாதவில்லை. இதனால் சஹ்ரானின் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன . இன்னொரு சஹ்ரானின் சம்பவம் இந்த நாட்டில் இனி ஒருபோதும் இடம் பெறக் கூடாது என்றார். கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீய சக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். அதிகாரபூர்மற்ற அறிவிப்புக்கள் வீண் அச்சம் மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறான பொதுவான கூற்றுக்களினால் சமூகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் செயல்படுகிறது என்ற பழைய தவறான அபிப்பிராயம் மீண்டும் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, கிழக்கில் அடிப்படைவாதம் என்ற அமைச்சர்களின் கூற்றுக்களை தெளிவுப்படுத்தி அரசாங்கம் பொதுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/212750/
-
தமிழ் அரசியல் தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறது ஈ.பி.டி.பி
தமிழ் அரசியல் தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறது ஈ.பி.டி.பி editorenglishMarch 6, 2025 வடக்கில் கிறீஸ் பூதம் கடந்த காலங்களில் ஏவப்பட்டது போன்ற சூழலை உருவாக்கத் திட்டமிடப்படுகிறதா? என்று சந்தேகத்தை வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம், இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். யாழ். ஊடக மையத்தில், புதன்கிழமை (05/02/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தயாராக இருப்பதாக சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றன. அதுதொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, கடந்த காலங்களைப் போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அது ஒருபுறமிருக்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரையில், தற்போதைய அரசாங்கத்தைக் கண்மூடித்தனமாக விமர்சிக்கும் நோக்கம் இல்லாத போதிலும், சரியான விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தார்மீக கடப்பாடு இருப்பதாக இருப்பதாகக் கருதுகிறோம். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்ற போது எமது பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது. சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மற்றுக் கருத்தில்லை. எமது மக்களைப் பொறுத்தவரையில், காணிகள் விடுவிக்கப்படும், காணாமல் போனோர் விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும், அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற விடயங்கள் சொல்லப்பட்ட போதிலும், இதுவரையில் அவை தொடர்பான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் ஆயுத ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற போது வடக்கில் கடந்த காலங்களில் கிறிஸ் பூதங்கள் ஏவி விடப்பட்டது போன்று மீண்டும் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும், இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/212737/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆசை, தோசை அப்பளம் வடை!🤪 போட்டியில் இல்லாத அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்கு முதலிலேயே முட்டைகள் 🍳 கொடுக்கப்படும். புஸ்டியான ஆகாரத்தோடு மட்சைப் பார்க்கலாம்! இந்தியா வெல்லும் என்றவர்களுக்கு ட்ரம்ப் - செலன்ஸிக்கான லஞ்ச்சில் கவியார்🍱🧆🥗 மாதிரி எக்ஸ்பென்சிவ் ஐயிட்டம் எல்லாம் ரெடி. செலன்ஸ்சி மாதிரி இந்தியா மட்சைக் கவிட்டால் எல்லோருக்கும் கூழ்முட்டைதான்🥚🥚😂🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முன்னர் பெரிய குடும்பி வைச்சிருந்தேன்😜 சம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றதால் உள்ளூர் சாதகம் இருக்கும் என்று பாகிஸ்தானை நம்பி குணா குகையில் விழுந்தவன் மாதிரி ஆகிவிட்டேன்😩 இனி மட்டன் வாங்குவதைத் தவிர்த்து வேறு ஒன்றிலும் பாகிஸ்தான்காரரை நம்பமாட்டேன்😜
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.. நம் கனவு அண்ணன் தயவால் பலிக்கும்🥳
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ரச்சின் ரவிந்திராவினதும் கேன் வில்லியம்ஸினதும் செஞ்சுரிகளுடனும் க்ளென் பிலிப்ஸின் அதிரடியான 49 ஓட்டங்களுடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி சவாலான ஓட்ட இலக்கை அடித்தாட முடியாதவாறு நியூஸிலாந்து சுழல் பந்துவீச்சு இருந்தது. டேவிட் மில்லர் மாத்திரம் அடித்தாடி செஞ்சுரி அடித்தாலும் பிற வீரர்களின் ஒத்துழைப்பின்மையால் 312 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்த @சுவைப்பிரியன் க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
-
உக்ரைன் யுத்தம் - சமாதான தேவதையும் பிசாசுகளும்!
சமாதான தேவதையும் பிசாசுகளும்! sudumanal கடந்த வெள்ளியன்று (28.02.2025) அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுக்கும் ட்றம் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவர்களுக்கும் இடையில் யாரும் எதிர்பாராத விதத்தில் விவாதம் முற்றியது. இது பேசப்படும் பொருளாக ஊடகங்களிலும் அரசியலாளர்களிடமும் புத்திஜீவிகளிடமும் மாறியிருந்தது. இது ஏதோ அந்த இடத்தில் தோன்றிய முரண்பாடாகத் தெரியவில்லை. இதற்கு முன்னராக மூடிய அறைக்குள் தொடங்கிய ஒன்றாகவே கருத இடமுண்டு. இராஜதந்திரங்கள் பலவும் சம்பிரதாயபூர்வமாக மக்கள் கண்களில் சாந்தமான ஜனநாயக அணுகுமுறை போலவும், நான்கு பக்க சுவர்களுக்குள் வல்லான் அழுத்தங்களினாலும் பயமுறுத்தல்களினாலும் நிறைவேற்றப்படுகிற அரங்க நிகழ்வுகளாகும். இது பல நாடுகளிலும் காலங்காலமாக தொடர்கிற ஒன்று. இந்த இரட்டைத்தன்மை வாய்ந்த இராஜதந்திர வடிவத்தின் சம்பிரதாய மீறலானது வெளிப்படையில் செலன்ஸ்கியை அவமானப்படுத்தியதாக எம்மை வந்தடைகிறது. கணவன் மனைவி சண்டையை வீதிக்கு கொண்டுவருவது போன்ற செயல்தான் அன்று நடந்தது. இது திட்டமிடப்பட்டு ட்றம்ப் குழுவால் நிகழ்த்தப்பட்டதாகவே எனக்குப் படுகிறது. இந்தக் கள்ளத்தனமான செயற்பாட்டை செலன்ஸ்கி ஓர் இராஜதந்திரியாக இருந்திருந்தால் அந்த இடத்தில் தவிர்த்திருக்க முடியும். அதே பாசாங்கை அவர் செய்திருக்கலாம். ஆனால் அவர் நேரடித்தன்மை அல்லது வெளிப்படைத்தன்மை வாய்ந்தவராக இருந்தார். போரில் நலிந்துபோய் செய்வதறியாது பரிதவிக்கும் ஒரு நாட்டுத் தலைவரின் உளவியல் அழுத்தத்தை நாம் புரிந்துகொண்டால், அவர் அவ்வாறு பேசத் தலைப்பட்டதையும் புரிந்துகொள்ளலாம். இந்த உளவியலை ஒரு கருவியாக ட்றம்ப் குழு பாவித்து உணர்ச்சிமயமான சூழலுக்குள் தள்ளினார்கள். அவரது உடை குறித்தும்கூட அங்கு நின்ற செய்தியாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) பிரஸ்தாபித்து, அது அமெரிக்காவை அவமானப்படுத்துவது போன்றது என்று முட்டாள்தனமாக சொல்லவும் செய்தார். இந்த ஆத்திரமூட்டும் சூழ்நிலைக்குள் செலன்ஸ்கி வீழ்ந்தார். ட்றம்ப் “உன்னிடம் துருப்புச் சீட்டு இல்லை. அது என்னிடமே இருக்கிறது” என சொன்னபோது, செலன்ஸ்கி அதை தனது நிலையில் நின்று புரிந்து, “இது துருப்புச் சீட்டு விளையாட்டல்ல. நான் சீரியஸாக பேசுகிறேன்” என அர்த்தப் பிறழ்வோடு சொல்ல நேர்ந்தது. அதை நாம் புரிந்துகொண்டே ஆக வேண்டும். ஐரோப்பாவில் நின்று வீரம் பேசிய பிரான்சின் மக்ரோனும் பிரித்தானியாவின் ஸரார்மரும் தனித்தனியாக ட்றம்பை சந்தித்தபோது சம்பிரதாய நடிப்பை செவ்வனே செய்துவிட்டுத்தான் வந்தார்கள். அடிக்கடி ஒவ்வொரு கோணத்தில் கையைப் பிடிப்பது, தோளில் தட்டுவது, தடவுவது, துடையில் தொட்டு கதை சொல்வது, வெகுளித்தனமாக இளிப்பது என அவர்கள் காட்டிய உடல்மொழி கேவலமாக இருந்தது. இது செலன்ஸ்கிக்கு வாய்க்கப் பெறவில்லை. ஓவல் அலுவலக சந்திப்பிலிருந்து கோபத்தோடு வெளியேறிய செலன்ஸ்கியை அந்த சூடான வார்த்தைப் பரிமாறல்களின் ஈரம் காயுமுன்னர், பிரித்தானிய பிரதமர் ஸ்ராமர் அழைத்து கட்டியணைத்து வரவேற்றார். ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் கனடா தலைவர் ஆகியோருடனான ஒரு திடீர் சந்திப்பை இலண்டனில் நிகழ்த்திக் காட்டினார். “இந்தா பார் நீ உதாசீனப்படுத்திய செலன்ஸ்கியை நாங்கள் கௌரவித்துக் காட்டுகிறோம்” என ஒரு வீம்புச் செய்தியை ட்றம்ப் க்கு காட்ட வேண்டும் என்பது போல் அது இருந்தது. அதைத் தாண்டிய பிரச்சினை என்னவென்றால் இந்த சுடுதண்ணிச் செயற்பாடானது செலன்ஸ்கியை இன்னொரு பொறியுள் விழ வைத்திருக்கிறது. ஒரு கையால் இராணுவ உதவிகளை கொடுத்தபடி, இன்னொரு கையால் சமாதான முயற்சி செய்யும் விநோதமான அணுகுமுறை ஸ்ராமரினதும் மக்ரோன் இனதும் திட்டமாக இருப்பது ஒரு முரண்நிலை செயற்பாடாகும். அத்தோடு சமாதானப் படை என்ற பெயரில் ஸ்ராமரும் மக்ரோனும் உக்ரைனுக்கு படை அனுப்ப துடியாய்த் துடிக்கிறார்கள். ஒரு நிழல் போரை நடத்தி உக்ரைனை இந்தப் பேரழிவுக்குள் விட்டுவிட்டவர்கள் அவர்கள்!. உக்ரைனுக்கு படையனுப்பி அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்நிபந்தனையாக சமாதானம் உருவாக்கப்பட வேண்டும். அத்தோடு ஐநா என்ற ஒன்று இருப்பதே இவர்களுக்கு மறந்துபோய்விட்டது. இவர்கள் நினைப்பதுதான் சர்வதேச விதிகள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். ஐநா அனுப்பிய அப்படியான படைகள் பிரச்சினைக்குள் சிக்கிய ஏழை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு செக்குமாடாய் செயற்பட்டது இன்னொரு வரலாறு. உருப்படியாக எதுவும் நடந்ததில்லை. பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அவற்றால் பண்பாட்டு ரீதியில் பாதிப்புத்தான் ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு சமாதானப்படை அனுப்பும் முயற்சியை ரசியா நேற்றோவின் விஸ்தரிப்புவாதமாக எடுத்துக் கொள்ளவே செய்யும். இது சமாதானத்தை கேள்விக் குறியில் நிறுத்திவிடும். சமாதானம் என்பது இப் பிரச்சினையின் மூலவேர்களை கண்டறிந்து அதை களைவதில்தான் நிலைத்து நிற்கும். ஐரோப்பாவின் செயற்பாடு இதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சமாதானம் அல்ல முக்கியம். “ரசியாவை பலவீனப்படுத்துவது” என்ற தமது இலக்கை முடிந்தவரை உக்ரைன் மக்களின் சாம்பலிலிருந்தாவது உயிர்ப்பித்து அடையத் துடிப்பதுதான். “ரசியா சோவியத் யூனிய சாம்ராச்சியத்தை மீண்டும் நிறுவத் துடிக்கிறது. அது ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அழித்தொழிக்கக் கூடியது. உக்ரைனின் போராட்டமானது எங்களுக்கும் (ஐரோப்பாவுக்கும்) சேர்த்த போராட்டம்தான்” என அவர்கள் மக்களின் மூளைக்குள் கட்டியெழுப்பத் துடிக்கும் கதையாடலில் உண்மையில்லை என்பது இந்தத் தலைவர்களுக்குத் தெரியும். இதற்கு புட்டின் போர் ஆரம்பித்தபோதே பதில் கூறியிருந்தார். “சோவியத் இன் அழிவு குறித்து கவலைப்படாதவருக்கு இதயம் இல்லை. சோவியத் மீண்டும் உருவாகும் என சொல்பவர்களுக்கு மூளை இல்லை” என்றார். சோவியத் இன் அழிவு 1990 இலிருந்து அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை நிறுவியது. எதிர்க் கடை இல்லாத வியாபாரமாய் அடுத்தடுத்து அமெரிக்கா போர்களை உற்பத்திசெய்து விற்றது. இவைதான் இந்தக் காலப் பகுதியில் நடந்த துயர நிகழ்வுகள். இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இறைத்த இராணுவ உதவிகளானது போரில் ரசியாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனபோதும் கூட, இப்போ அமெரிக்கா இல்லாத இந்த கூட்டணியால் என்னத்தை பிடுங்கிவிட முடியும். அது அவர்களுக்குத் தெரியாததல்ல. இது செலன்ஸ்கிக்கு தெரியாமல் போவதுதான் வருத்தமளிக்கிறது. அன்றைய இலண்டன் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அரைவாசி நாடுகளுக்கு மேல் பங்குபற்றவில்லை. அநேகமும் அந்த நாடுகள் ஏழை கிழக்கு ஐரோப்பிய நாடுகள். ஹங்கேரியின் பிரதமர் விக்ரன் ஓவன் அவர்கள் வெளிப்படையாகவே மேற்கு ஐரோப்பிய நாடுகள் “போர் வெறியர்கள்” என பேட்டியொன்றில் மிக அண்மையில் சொல்லியிருக்கிறார். இத்தாலி பிரதமர் மெலோனி அவர்கள் ட்றம்ப் க்கு ஆதரவாக இருக்கிறார். ஜேர்மனி சமாதானப் படை அனுப்ப தயங்குகிறது. இவ்வாறாக, பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை குலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் பெரியண்ணன் இல்லாத நேற்றோவானது பலத்தை இழக்க நேர்ந்துள்ளது. (அது சிலவேளை ட்றம்ப் ஆட்சிக் காலத்தின் பின் மீண்டும் தடத்தில் ஓடலாம்). இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய நிதி 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியைவிட அதிகமானதாகும். சுயத்தை அமெரிக்காவிடம் அடகுவைத்திருக்கும் ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதம் அரைவாசியும் அமெரிக்காவில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பாவுக்கென சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்ளை கூட இல்லை என்கிறார் அமெரிக்கப் பேராசிரியர் ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள். இந்த சீத்துவத்துள் தோல்வியடைந்து கொண்டிருக்கும் உக்ரைனுக்கு (பிரித்தானியா உட்பட்ட) ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதாக செலன்ஸ்கிக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். தலைவர்கள் தேர்தலில் முளைத்து தேர்தலில் மறைபவர்கள். அவர்கள் வருவர், போவர். உக்ரைன் போரால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு. அந்த நாட்டின் இராணுவம் உட்பட மக்களின் உயிர்கள் திரும்ப முளைக்கப் போவதில்லை. எல்லாமே சுரண்டல்தான். எரியிற நெருப்பில் எஞ்சியதை பிடுங்கிற எத்தனம். பெரும் கனிம வளங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிற உக்ரைனின் வளங்களை கொள்ளையிடும் நுட்பம் தெரிந்தவர்கள் அவர்கள். உதவியளிக்கிறோம் என சொல்லி உக்ரைனுக்குள் ஆயுதங்களை இறைத்துவிட்டு, இப்போ தாம் வழங்கிய உதவிக்கு உக்ரைனின் வளங்களை பிய்ச்சுப் பிடுங்கிற போட்டியில் இறங்கியிருக்கிறார்கள், அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்சும்!. இனி ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கிளம்பலாம். போரில் அழிவுண்ட ஒரு நாடு தன்னை கட்டியெழுப்ப அதன் கனிமவளங்கள் உதவும் என்ற ஓர் அறம்கூட இந்த நாடுகளிடம் கிடையாது. காலனிய காலத்திலிருந்து அவர்களின் மூளையைத் தொடரும் களவு மனநிலையும் அதிகாரத்துவ உளவியலும் நீங்கப் போவதில்லை என்பதை இது காட்டுகிறது. பிரித்தானியா இப்போ பார்த்திருக்கும் வேலை இன்னமும் உக்ரைனுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற வேலை. ரசியா மீதான பொருளாதாரத் தடை மூலமாக உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசிய சொத்துகளிலிருந்து (சர்வதேச விதிமுறைகளை மீறி) 2.84 பில்லியன் பவுண்ட்ஸ் இனை எடுத்து உக்ரைனுக்கு கடனாக வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது. இது புதிய சிக்கல்களை உருவாக்க வல்லது. சமாதானப் பாதைக்கு குறுக்கே போடப்படுகிற பாறாங் கற்கள் இவை. மக்ரோன் ட்றம்ப் இனை சந்தித்தபோதும் ரசியாவின் உறைநிலை சொத்துக் குறித்து தடுமாற்றத்துடனும் வெகுளித்தனமான அவரது உடல்மொழியுடனும் ஒன்றைச் சொன்னார். தாம் உறைநிலையில் வைத்திருக்கும் ரசியாவின் சொத்துக்களை தாம் எடுப்பது சர்வதேச விதிமுறைக்கு முரணானதுதான் என்றாலும், தாம் உக்ரைனுக்கு அளித்த உதவிக்காகவும் உக்ரைனை ரசியா அழித்ததற்காகவும் அதை தமக்கு விட்டுக் கொடுத்தால் super என சொன்னார். அதன்போதுதான் ட்றம் “ஓம் அவர்கள் (ஐரோப்பிய ஒன்றியம்) தங்கடை பணத்தை திருப்பி எடுக்கப் பார்க்கினம்.. எடுப்பினம்” என நையாண்டி செய்யும் உடல் மொழியில் சொன்னார். உடனே மக்ரோன் “இல்லையில்லை. நாம் உக்ரைனுக்கு கடனாகவும் அன்பளிப்பாகவும் உதவியாகவும் அதாகவும் இதாகவும்..” என சொற்களை தடுமாறவிட்டுக் கொண்டிருந்தார். உக்ரைனின் கனிமவள பேரத்தில் (அமெரிக்காவுடன்) பிரித்தானியாவும் பிரான்சும் பங்கெடுக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து ஐரோப்பா சார்பாக சமாதான வரைவு ஒன்றை தயாரித்து அதை நேரில் ட்றம்ப் உடன் கலந்தாலோசிக்க உள்ளோம் என்கிறார்கள். உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதத்தை தந்தால், தான் கையெழுத்திடுகிறேன் என செலன்ஸ்கி சொல்லியிருந்தார். ட்றம்ப் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.கனிமவள உடன்படிக்கையில் செலன்ஸ்கி கையெழுத்திடாமல் அமெரிக்காவிடமிருந்து தப்புவது கடினம். அதேபோல் அமெரிக்காவின் சமாதான முயற்சிக்கு செலன்ஸ்கி பச்சைக் கொடி காட்டாவிட்டால் அவரின் பதவி கைமாறப்பட்டு செய்துமுடிக்கப்பட அமெரிக்க உளவுத்துறைக்கு நேரம் ஆகாது. அதனால் செலன்ஸ்கி “மீண்டும் வருகிறேன்” என ட்றம்புக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். தலையை முந்நூற்றி அறுபது பாகையில் திருப்பித் திருப்பி பார்த்தாலும் இதற்குள் ஒளிந்திருக்கும் இரத்தப் பிசாசை கண்டறிய முடியாமல் இருக்கிறது. திரைமறைவில் என்னவெல்லாம் அரங்கேறுகிறதோ தெரியவில்லை. இன்று இறைமை என்பது களவாடப்பட்டு அழகாக உச்சரிக்கப்படுகிற வார்த்தையாக உருமாறியிருக்கிறது. வலிமையற்ற நாடுகளுக்கு இறைமை என்பது சொல் அலங்காரம் மட்டுமே. ஐரோப்பாவே அமெரிக்காவை விட்டு இறைமையுள்ளதாக மாற வேண்டும் என குரல் எழுப்புகிறபோது, வலிமையற்ற நாடுகளுக்கு இது எம்மாத்திரம். வலிமையுள்ளவர்களை சார்ந்திருப்பதே வலிமையற்றவர்களின் இறைமை என்பதுதான் ஓரவஞ்சனையான அரசியல் நியதியாக உள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் காப்பாற்ற உக்ரைனுக்குள் -அதாவது ரசிய எல்லைவரை- படையனுப்பத் துடிப்பவர்கள், ரசியா தனது பாதுகாப்பு உத்தரவாதம் கருதி உக்ரைன் நேற்றோவில் சேராமல் நடுநிலையாக இருக்கக் கோருவதை எந்த தர்க்கம் கொண்டு நிராகரிக்கிறார்கள். உதாரணத்துக்கு பிரான்ஸின் எல்லையோரம் ஏதாவதொரு நாட்டில் ரசியாவோ சீனாவோ படைத்தளம் அமைத்து ஏவுகணையை அல்லது அணுவாயுதத்தை நிற்பாட்டினால், பிரான்ஸ் அமைதியாக இருந்துவிடவா போகிறது. ஆக, போரற்ற உலகில்தான் சமாதானம் உயிர்வாழும். மனிதகுலம் மேம்படும். இது யதார்த்ததில் சாத்தியமில்லாமல் ஆகியிருக்கிறது. வலியவர்களின் உலகம் இது. அவர்களுக்கொரு நீதி. மற்றவர்க்கொரு நீதி. எனவே இதற்குள் இராஜதந்திரம் என்ற வெட்டியோடல்தான் ஜனநாயக மேக் அப். “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என எந்த நாடோ விடுதலை இயக்கமோ பயணிக்க முடியாது. அது தற்கொலைக்கு ஒப்பானது. உக்ரைனுக்கும் இது விதிவிலக்கல்ல. எதிர்கால உக்ரைனாக மாறும் அபாயமுள்ள தாய்வானுக்கும் இது விதிவிலக்கல்ல. சோவியத் அழிவோடு வார்சோ ஒப்பந்த நாடுகளின் இராணுவக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டபோதே “நேற்றோ” மரணப் படுக்கைக்குப் போயிருக்க வேண்டும். அதை உயிர்ப்பிக்க நேற்றோ விஸ்தரிப்பு தேவைப்பட்டது. கம்யூனிச பூச்சாண்டி கலைந்தபின் மற்றைய நாடுகள் மேல் அதிகாரம் செலுத்த அவர்கள் தொடர்ந்து காப்பாற்றிய இராணுவ அரக்கன்தான் நேற்றோ அமைப்பு. 1990 க்குப் பின்னான எல்லாப் போர்களையும் இந்த அரக்கனையும் அதன் சாரதியான அமெரிக்காவையும் தவிர்த்து வியாக்கியானப் படுத்தவே முடியாது. எனவே இந்த மேற்குலகிடமிருந்து விடுபட்டு ரசியாவும் உக்ரைனும் -இருவரும் உடன்படக்கூடிய- மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பிரச்சினையின் மூல வேர்களைக் களைந்து சமாதானத்தை நோக்கி இயன்றவரை முயற்சிப்பதுதான் சிறந்த வழி! ravindran.pa https://sudumanal.com/2025/03/04/சமாதான-தேவதையும்-போர்ப்/
-
நவீன இலக்கியத்தை எப்படி வாசிப்பது?
நவீன இலக்கியத்தை எப்படி வாசிப்பது? by ஸ்ரீதர் ரங்கராஜ் • March 1, 2025 தீவிர இலக்கியம் அதன் வாசகர்களிடமிருந்து வெறும் நுகர்வைக் காட்டிலும் அதிகமாகக் கோரக்கூடியது — அதற்கு ஈடுபாடு, பொருள்கொள்ளுதல், சிக்கலான தன்மையுடன் ஊடாடும் விருப்பம் தேவை. நேரியல் முறையிலான கதைசொல்லல் மற்றும் உடனடி நுகர்வை வளர்க்கும் வெகுஜனப் புனைகதைகளைப் போலல்லாமல் தீவிர இலக்கியம் அடுக்குகள், பலபொருள்படும் தன்மை கொண்டது, பெரும்பாலும் எளிமையான புரிதலுக்கு மறுமுனையில் இருப்பது எனலாம். தீவிர இலக்கிய வாசிப்பின் உண்மையான மகிழ்ச்சி புறவயமான நுகர்வு அனுபவத்திலிருந்து அல்லாமல் அதன் உள்ளார்ந்த பொருளைக் கண்டறிவதில், கட்டமைப்பை ரசிப்பதில், கருப்பொருள்கள் குறித்து விவாதிக்கும் செயலில் பங்கேற்பதன் மூலம் வருகிறது. தீவிர இலக்கியத்தை வாசிப்பது என்பது ஆர்வம், பொறுமை மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் ஒரு படைப்பை அணுகுவதே. இதற்கு வாசகர் வரலாற்றுச் சூழல், மொழியியல் நுணுக்கங்கள் மற்றும் மொழிபுக் கட்டமைப்புகள் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஈடுபாடு வாசகரின் அறிவுத்திறன் மற்றும் உணர்ச்சி ஆழத்தை மேம்படுத்தி இலக்கியத்தை வெறும் கதைசொல்லல் என்பதிலிருந்து தத்துவ விசாரம், சமூக விமர்சனம் மற்றும் கலைப் புதுமைகள் நிகழக்கூடிய ஊடகமாக மாற்றும். தீவிர இலக்கியத்தை வாசிப்பதால் விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் திறனும் ஒருவரது உடனடி யதார்த்தத்திற்கு அப்பால் மனித அனுபவங்களைப் புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும். பிறரது உணர்விடத்திலிருந்து சிந்திப்பது, உரையாடலை ஊக்குவிப்பது, முன்முடிவான கருத்துகளை மீளாய்வு செய்வது என தீவிர இலக்கியம் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவும். கூடுதலாக, தொடர் வாசிப்பு உள்ளார்ந்த கருப்பொருள்கள், கட்டமைப்பு வடிவங்கள், சொல்லாட்சி நுட்பங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்கும் திறனையும் வளர்க்கும். அவ்வகையில் தீவிர இலக்கிய வகைமையில் பொருந்தக்கூடிய ஒரு படைப்பை மேலோட்டமாக வாசிப்பது என்பது வாசகருக்கு மேற்கூறிய பலன்கள் எதையும் அளிக்காது என்பதால் அவ்வாறான படைப்பை வாசிப்பது எப்படி என்பதையும் விளக்க வேண்டியதாகிறது. இந்தக்கட்டுரை என் புரிதலிலிருந்து அதற்கான முயற்சியே. 1. மேற்பரப்பிற்கு அப்பால் நகர்தல் சாதாரண வாசிப்புக்கும் தீவிர இலக்கிய வாசிப்புக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு, மேற்பரப்பிற்கு அப்பால் பார்க்கும் திறன். மேற்பரப்பு என்பது என்ன? படைப்பில் விவரிக்கப்பட்டுள்ள கதை மற்றும் சம்பவங்களே மேற்பரப்பு. அப்படைப்பின் கதை, களம் உங்களை மகிழ்விக்கக்கூடும், ஆனால் தீவிர இலக்கியம் என்பது வெறும் சம்பவங்களின் வரிசை மட்டுமல்ல — அது, அந்தச் சம்பவங்கள் அடிப்படையில் எதை உணர்த்த முயல்கின்றன? என்பதைப் பற்றியது. தீவிர இலக்கிய வாசகன் கேட்கவேண்டிய கேள்வி: இந்தச் சம்பவங்களுக்கு அப்பால் அல்லது இந்தச் சம்பவங்களின் மூலம் எழுத்தாளர் எதை வெளிப்படுத்த முயல்கிறார் என்பதே. உதாரணமாக: சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ — இந்த நாவல் தனிப்போக்குடைய ஓர் எழுத்தாளனின் வாழ்க்கையைப் பற்றியது மட்டுமல்ல, கருத்துகள், சித்தாந்தங்கள், நோக்கங்கள், பார்வைகள் என எல்லாமும் மாறிவரும் இன்றைய சமூகத்தில் இலக்கிய உலகில் நிலவும் பண்பாடு, அறிவுஜீவித்தனம் மற்றும் தனித்துவம் குறித்த கூர்மையான விமர்சனம். மேற்பரப்பிலான வாசிப்பு இந்த அடுக்குகளைத் தவறவிட்டுவிடும், ஆழமான ஈடுபாட்டுடன் கூடிய வாசிப்பு அதன் பரந்துபட்ட இருத்தலியல் கவலைகளை, பிம்பங்கள் உருவாகிக் கலைவதை, உயர்ந்த தத்துவங்களின் கள யதார்த்தத்தை, வெளிப்படுத்துகிறது. இவ்வாறு படைப்பின் ஆழத்தை அடைய வாசகர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்ன? முதலில் ஒரு புத்தகத்தை விரைவாகப் படித்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தவிர்க்கவேண்டும். எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள் என்பது இங்கு முக்கியமே அல்ல. நீங்கள் குறைவான எண்ணிக்கையில் வாசித்திருந்தாலும் ஒரு படைப்பை எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியம். படைப்பில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு காட்சியைப் பற்றிச் சிந்திக்க இடைநிறுத்துவது, சிக்கலான பகுதிகளை மீண்டும் மீண்டும் படிப்பது, குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சொற்றொடரை எழுத்தாளர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று கேள்வி கேட்டுக்கொள்வது பிரதியை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும். அதோடு, அப்படைப்பு சார்ந்த விமர்சனக் கட்டுரைகள், எழுத்தாளரின் நேர்காணல்கள் அல்லது கதை எழுதப்பட்டுள்ள வரலாற்றுச் சூழலை அறிந்து கொள்ளுதல் போன்ற துணை வாசிப்புகள் படைப்பின் மீதான புதிய கண்ணோட்டங்களைத் திறக்கும். 2. மொழி மற்றும் பாணியில் கவனம் செலுத்துதல் தீவிர இலக்கியம் அதன் மொழியிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதது. சொற்களின் தேர்வு, அதன் இசைமை, வாக்கிய அமைப்பு மற்றும் உருவகங்கள் ஆகியவை வெறும் அலங்காரங்கள் மட்டுமல்ல, அவை அர்த்தத்துடன் ஒருங்கிணைந்தவை. யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவலை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இந்நாவல் கவித்துவமான உரைநடையில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒன்று. அப்படைப்பின் மொழியிலுள்ள இசைமை, நாவலின் கருப்பொருளான காதல் மற்றும் ஏக்கம் குறித்த அதன் கவனத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் பத்திகளில் அதை நீங்கள் உணரக்கூடும்: “நான் என்ன செய்வேன் ஜீவிதா… உங்கள் மெலிந்த உருவம்.. வட்டச் சிறுமுகம்… வரண்டாவில் நடக்கும்போதான புடவைச் சரசரப்பு… அசைவுகள்… புன்னகை… பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப் போலவும் ஞானியைப் போலவும் நடந்தேன். இந்தச் சந்தோஷ நேரத்திற்கு — எனக்கு நான் மிகப்பெரியவனாகத் தோற்றமளிக்கிற இந்தத் தருணத்திற்கு — அன்பு சுரந்து ததும்புகிற இந்தப் பிரகாச நிலைக்கு — எல்லையற்று விரிந்து விகாசங்கொள்ளும் மனநிலைக்கு — பாடுகள் அத்தனையிலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்தலுக்கு — என்றென்றைக்குமாக உங்களுக்கு என் நன்றி.” “இருளின் குமிழ்களைப்போல் உங்கள் புடவை அசைகிறது. மிகச்சன்னமாக ஒலிக்கின்றன உங்கள் கொலுசு மணிகள். தெளிந்து வருகிறது தலையில் சூடியிருந்த பூச்சரம். நடந்து நடந்து அகன்று கொண்டிருந்தீர்கள். ஒரு காலெடுத்து அடுத்த அடி வைக்கும்போது உங்கள் செருப்பிலிருந்து உதிரும் மணல், என்னை உட்கொண்டு திறந்திருக்கும் புதைகுழியை மூடுகிறது சிறுகச் சிறுக.., அலைகளை மிதித்தபடி கடலோரமாய் நடக்கத் துவங்கினேன்.” *** இந்த இடத்தில் தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலையும் குறிப்பிடவேண்டும். அதில் பாபுவின் தாபம் மற்றும் உளத்தடுமாற்றம் குறித்த கவனத்தை மேம்படுத்த அதன் மொழி உதவுகிறது. நாவலில் வரும் இந்தப் பத்தியை வாசித்துப் பாருங்கள்: ”யமுனாவின் முகத்தையும் கண்ணையும் வனப்பையும் பார்த்தான் பாபு. இவளிடம் ஏதோ அசாதாரணமான ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அணுகமுடியாத, தொடமுடியாத ஒரு முழுமை, பொலிவு, சந்தனக்கட்டையின் வழவழப்பு, வர்ணம். நீண்ட விரல்கள், நீண்ட கைகள், நீண்ட பாதம். உண்மையாகவே இவள் தொடக்கூடாதவளா? நெருங்க முடியாதவளா? நெருங்கத் தகாதவளா? அறிவைத் தவிர, எண்ணங்களைத் தவிர வேறு ஒன்றுமே இவளுக்குக் கிடையாதா? இவள் சரீரத்திற்கு, தங்கச்சுரங்கமான இந்தப் புறஅழகிற்குப் பலனே கிடையாதா? இவளும் ஒருகணத்தில், ஒளிமங்கிய முக்கால் இருளில் தனிமையின் கைமறையும் அந்திமங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும். தனிமையின் தயங்கும் துணிச்சலில், இருள்-ஒளிக் கலவையின் மறைவில், ஆகாயத்தை மட்டும் ஆடையாக அணிந்து நாணம் மின்னி நெளிய, குன்றியும் ஒடுங்கியும் எழுச்சி பெற்று நினைவழியத்தானே வேண்டும்.” *** இங்ஙனம் மொழியில் முனைந்து உருவாக்கப்பட்டவற்றை அடையாளங்காண்பது தீவிர இலக்கிய வாசிப்பில் முக்கியமானதொரு செயல்பாடு — என்ன சொல்லப்படுகிறது என்பதைத் தாண்டி எப்படிச் சொல்லப்படுகிறது என்ற இடத்திற்குச் செல்வது. இதையுணர, சில பகுதிகளை வாய்விட்டுச் சத்தமாக வாசிப்பது, பயன்படுத்தப்படும் சொற்களில், வாக்கிய அமைப்பில் கவனம் செலுத்துவது, தொனியில் உருவாகும் மாற்றங்களைக் கவனிப்பது ஆகியவை எழுத்தாளரின் மொழிப்பயன்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். 3. கதைகூறலின் நுட்பங்களைப் புரிந்துகொள்வது தீவிர இலக்கியத்தில் கதை அமைப்பு முக்கியமானது, பொதுவாக வழக்கத்திற்கு மாறானது. வெவ்வேறு கதைகூறல் நுட்பங்களை அடையாளங்காண்பது வாசகருக்கு படைப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் பிரதியைப் புரிந்துகொள்ளவும் உதவும். எடுத்துக்காட்டாக சில கதைகூறல் நுட்பங்கள்: நேரியல்முறை அல்லாத கதைகூறல்: சுந்தர ராமசாமியின் ’ஒரு புளியமரத்தின் கதை’ நாவலின் கதை, மாறிமாறி வரும் காலவரிசை, பகுதிபகுதியான கதைசொல்லல் மூலம் எழுதப்பட்டுள்ளது. வாசகர்கள் அதன் பொருளை ஒன்றிணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அகவயமான கதைசொல்லிகள்: ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில், கதைசொல்லியின் கண்ணோட்டத்திலிருந்து வரும் கருத்துகள், ஒழுக்கம் குறித்த பார்வைகள் உண்மையின் அகநிலைத் தன்மையை எடுத்துக்காட்டுபவை. வேறுபட்ட கண்ணோட்டங்கள்: சோ.தர்மனின் கூகை நாவல் சாதிய ஒடுக்குமுறைகளை, சமூகக் கட்டமைப்புகளை பல்வேறு கதாபாத்திரங்களின் கண்ணோட்டங்கள் வழி முன்வைக்கிறது, இதன்மூலம் பல அடுக்குகள் கொண்ட வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. மீபுனைவு: ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் வழமையான கதைசொல்லலைத் தவிர்த்து புராணம், வரலாறு மற்றும் தத்துவத்தைக் கலந்து, கதை குறித்த வாசகரின் பார்வைக்குச் சவாலான வகையில் கட்டமைக்கப்பட்டது. தீவிர இலக்கியம் பெரும்பாலும் எளிமையான, ஒற்றை-நோக்கில் கூறப்படும் கதைகளை நிராகரிக்கிறது, அதற்குப்பதிலாக வாசகரின் பங்களிப்புத் தேவைப்படும் துண்டு-துண்டான, பல அடுக்குகள் கொண்ட கதைசொல்லலைத் தேர்வு செய்கிறது. மொழிபிலுள்ள மாற்றங்கள், கண்ணோட்டத்தில் நிகழும் மாற்றங்கள், கட்டமைப்பு ரீதியிலான புதுமைகள் ஆகியவை கருப்பொருளின் மீதான தாக்கங்களைக் கொண்டிருப்பதால், வாசகர்கள் அவற்றைக் கவனிக்கத் தங்களைப் பயிற்றுவிக்க வேண்டும். 4. மையக்கருத்துகள், மறைபொருளைத் தேடுதல் தீவிர இலக்கியப் படைப்பு ஒருபோதும் அதில் நேரடியாகச் சொல்லப்படும் கதையைப் பற்றியது மட்டுமல்ல — அது எப்போதும் அறிவுசார், தத்துவ உரையாடலின் பகுதி. இலக்கியத்திலுள்ள அடிப்படை மையக்கருத்துகள், மறைபொருள்களை அடையாளம் காண வாசகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சில உதாரணங்கள்: பாமாவின் கருக்கு: சுயசரிதை நாவல் என்பதைத் தாண்டி, சாதிய ஒடுக்குமுறை, எதிர்ப்புத்தன்மை மற்றும் சுய அடையாளத்தை ஆழமான தனிப்பட்ட பார்வை மூலம் ஆராய்கிறது. ஜெயமோகனின் வெள்ளை யானை: காலனித்துவ விடுதலைக்கால வரலாற்றுநாவல் மட்டுமல்ல, நம்பிக்கை, கண்ணோட்டங்கள் மற்றும் யதார்த்தத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையிலான இடைவினை குறித்த ஆய்வு. ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால்: இடப்பெயர்வு, பண்பாட்டு மாறுதல் மற்றும் உயிர்வாழ்வதற்கான போராட்டம் ஆகியவற்றை விவாதிப்பது மட்டுமின்றி காலனித்துவ, பிந்தைய காலனித்துவ யதார்த்தங்கள் குறித்த விமர்சனம். தீவிர இலக்கியத்தில் கருப்பொருள்கள் அல்லது மையக்கருத்துகள் அரிதாகவே நேரடியாகக் கூறப்படும்; அவை மீண்டுமீண்டும் சொல்லப்படும் காட்சிகள், உருவகங்கள், உரையாடல்கள் மூலம் யூகிக்கப்பட வேண்டியவை. தீவிர இலக்கிய வாசகர் காலப்போக்கில் இந்த நுணுக்கங்களைக் கண்டறியக் கற்றுக்கொள்கிறார். வெளிப்படையாகக் கூறப்படாதவற்றைப் போலவே, சொல்லப்படாமல் விடப்பட்டவற்றிலும் கவனம் செலுத்துவது தீவிர இலக்கிய வாசிப்பில் மிக முக்கியமானது. 5. பொருள் கொள்ளுதல் தெளிவான தீர்வுகளை வழங்கும் வெகுஜன எழுத்துகளைப் போலல்லாமல், தீவிர இலக்கியம் தெளிவின்மையில் (Ambiguity) செழித்திருப்பது. ஒரு பிரதிக்கு வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறு விதமான விளக்கங்களை அளிக்கலாம், ஒவ்வொன்றும் படைப்பின் செழுமையை அதிகரிக்கின்றன. கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்: கதை சொல்லியின் பயணம் நேரடியான பயணமா அல்லது சமூக மாற்றத்திற்கான ஓர் உருவகமா? ஜோ டி’ க்ரூஸின் ஆழி சூழ் உலகு: தனிமனித ஒழுக்கத்தை விமர்சிக்கிறதா அல்லது சமூகத்தின் கடுமையான கட்டமைப்புகளை விமர்சிக்கிறதா? அசோகமித்திரனின் தண்ணீர் : இந்த நாவல் மையப்படுத்துவது ‘80களில் இருந்த சென்னையின் வாழ்க்கை முறையையா அல்லது திரைப்படத்துறையில் உள்ள அவலங்களையா அல்லது மனிதசமூகத்தின் குணவியல்புகளையா? பொருள் கொள்ளுதல் என்பது தொடர்ச்சியான செயல்முறை; இலக்கியப் படைப்பு ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய அர்த்தங்களை வெளிப்படுத்தக் கூடியது. வாசகரின் வளர்ந்து வரும் கண்ணோட்டத்தால் புதுவடிவம் பெறுவது. இலக்கிய விவாதங்களில் பங்கேற்பது, பல பகுப்பாய்வுகளைப் படிப்பது என்பதோடு ஒருவரின் சொந்தக்கருத்துகளை எழுதுவதும் கூட பொருள் கொள்ளும் அனுபவத்தை ஆழப்படுத்த கூடியதே. 6. விமர்சனச் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுதல் இலக்கியத்தை ஆழ்ந்து வாசிப்பதென்பது ஒரு படைப்பை அதன் பிரபலத்திற்காக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அதைக் கேள்விகேட்பதை உள்ளடக்கியது. அதாவது படைப்பை வெவ்வேறு வகையில் ஆராய்வது. எடுத்துக்காட்டாக சில விமர்சனச் சிந்தனைகள்: எழுத்தாளரின் பார்வை: எவ்வகையான சார்புகள் அல்லது சித்தாந்தங்கள் படைப்பை உருவாக்கியுள்ளன? வரலாறு மற்றும் பண்பாட்டுச் சூழல்: படைப்பிலுள்ள காலம் மற்றும் இடம் அப்படைப்பின் மையப்பொருள்களை எவ்வாறு வடிவமைக்கின்றன? மாற்று வாசிப்புகள்: வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகள் — மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம், பின்காலனித்துவம் போன்றவை — படைப்பை எவ்வாறு மறுபரிசீலனைக்கு உள்ளாக்குகின்றன? உதாரணமாக, இமயத்தின் கோவேறு கழுதைகள் நாவலை சமூக ஏற்றத் தாழ்வுகளின் வர்ணனையாக அல்லது தலித்திய படைப்பாக அல்லது தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் அடக்குமுறையாக அல்லது ஆண்சமூகம் பெண்ணை எவ்வாறு பார்க்கிறது என்பதாக, ஆராயப்படும் கண்ணோட்டத்தைப் பொறுத்துப் பொருள்கொள்ளலாம். விமர்சனக் கோட்பாடுகள் சார்ந்து படைப்பை வாசிப்பது வாசகர்கள் அவற்றின் மேலோட்டமான அர்த்தங்களுக்கு அப்பால் படைப்புகளை மறுகட்டமைக்க உதவுகிறது, அதிகாரக் கட்டமைப்புகள், கருத்தியல் நிலைப்பாடுகள் மற்றும் பண்பாட்டு மறைபொருள்களை கேள்விக்குள்ளாக்க உதவுகிறது. 7. ஆழ்ந்து வாசிப்பதற்கான உத்திகள் இலக்கிய வாசிப்பில் ஆழமாக ஈடுபடுவதற்கு நிச்சயம் தீவிரமான முயற்சி தேவை. அதற்கு சில நடைமுறை உத்திகள் உள்ளன. வரிகளைக் கோடிடுதல்: முக்கியமான சொற்றொடர்களை அடிக்கோடிடுதல், எண்ணங்களைக் குறிப்புகளாக எழுதுதல், தனித்து நிற்கும் பகுதிகளைக் குறித்து வைத்துக் கொள்ளுதல் போன்றவை புத்தகத்துடனான உரையாடலை உருவாக்க உதவும். மெதுவாக மீண்டும்மீண்டும் படிப்பது: பல இலக்கியப் படைப்புகள் தொடர்ந்த பல வாசிப்புகளில் மட்டுமே அவற்றின் ஆழத்தை வெளிப்படுத்தும். மற்றவர்களுடன் விவாதிப்பது: படைப்பை வாசித்த வெவ்வேறு நபர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் வெவ்வேறு விளக்கங்களை வெளிப்படுத்தி புரிதலை வளப்படுத்தலாம். முன் ஆய்வு: எழுத்தாளரின் சார்புநிலை அல்லது எந்தச் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர், படைப்பின் வரலாற்றுப் பின்னணி என்ன, அப்படைப்பு ஏதேனும் குறிப்பிட்ட இலக்கிய இயக்கம் சார்ந்து எழுதப்பட்டிருந்தால் — உதாரணமாக பின் நவீனத்துவம் — அதுகுறித்து அறிந்துகொள்வது படைப்பைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கும். வாசிப்பு நாட்குறிப்பு: வாசிக்கும்போது தோன்றும் எண்ணங்கள், கேள்விகள், நீங்கள் நிகழ்த்திய பகுப்பாய்வுகளைப் பதிவு செய்வது, சிக்கலான கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு வாசகராக உங்களது தனிப்பட்ட வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் உதவும். 8. தவிர்க்க வேண்டிய விஷயங்கள் தீவிரமாக வாசிக்க முனையும்போது, வாசகர்கள் அவர்களது ஈடுபாட்டைச் சிதறடிக்கும் சில விஷயங்களில் மாட்டிக்கொள்ளும் சாத்தியமுண்டு. கதையில் மட்டும் கவனம் செலுத்துதல்: ‘அடுத்து என்ன நடக்கிறது’ என்பதில் மட்டும் கவனத்தை நிலைநிறுத்தும்போது மையப்பொருள்கள் மற்றும் நுட்பங்களைத் தவற விட்டுவிடலாம். உடனடித் தெளிவை எதிர்பார்ப்பது: சில படைப்புகள் தெளிவற்றதாகவும் திறந்த முடிவாகவும் இருக்கும்; இதை ஏற்றுக்கொள்ளாத தன்மை வாசிப்பின் மகிழ்ச்சியைத் தடுத்துவிடும். அறிமுகமில்லாத படைப்புகளைப் புறக்கணித்தல்: சிரமம் அல்லது பண்பாட்டு வேறுபாடுகள் காரணமாக சவாலான நூல்களைத் தவிர்ப்பது வாசகர்களின் இலக்கியத் திறப்பைக் (Literary Exposure) குறைக்கும். ஒற்றை விளக்கத்தைத் திணித்தல்: இலக்கியம் பல அர்த்தங்களுக்குரிய வாய்ப்பைக் கொண்டுள்ளதே அதன் சிறப்பு; ‘சரியான ஒற்றை அர்த்தம்’ இருக்க வேண்டுமென விரும்புவது, ஒரே கண்ணோட்டத்தில் — உதாரணமாக பெண்ணியம், மார்க்சியம், தலித்தியம் — அனைத்துப் படைப்புகளையும் பார்ப்பது அதன் செழுமையைக் குறைத்துவிடும். மொழிநடை மற்றும் கட்டமைப்பைப் புறக்கணித்தல்: ஒரு கதை சொல்லப்படும் விதம் அதன் உள்ளடக்கத்தைப் போலவே முக்கியமானது. இதுகுறித்து ஏற்கனவே விளக்கியுள்ளேன். 9. தனிப்பட்ட அனுபவத்தின் பங்கு ஒவ்வொரு வாசகரும் தங்கள் சொந்தப்பின்னணி, உணர்ச்சிகள், கண்ணோட்டத்தைக் கொண்டு படைப்பை அணுகுகிறார்கள். அவர்கள் அதை எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்கள், பிரதியோடு எவ்வாறு தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் என்பது நபருக்கு நபர் வேறுபடும். இந்த அகநிலை என்பது அதன் தனிச்சிறப்பு, வரம்பு அல்ல. ஒரு நாவல் ஒரு வாசகரின் பண்பாட்டு, சமூக அல்லது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வெவ்வேறு வாசிப்புகளை அளிக்கக்கூடும். உதாரணமாக: ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாசகர் ஒரு நாவலின் ஒடுக்குமுறை சார்ந்த மையப்பொருள்களை மிகவும் கூர்மையாக உணரலாம். வெளிநாட்டில் வாழ்ந்த ஒருவர் இடப்பெயர்ச்சி மற்றும் அடையாளச்சிக்கல் சார்ந்த கதைகளின் கருத்துகளுடன் முரண்படலாம். இழப்பு, காதல் அல்லது சிரமங்கள் போன்ற வாழ்க்கை அனுபவங்கள், இலக்கியத்தின் உணர்ச்சி ஆழத்தை ஒருவர் உணரும் விதத்தை வடிவமைக்கின்றன. புதிய விளக்கங்களுக்குத் திறப்புடன் இருந்து மற்றொருவரின் பார்வையை ஏற்றுக்கொள்வது வாசிப்பு அனுபவத்தை வளப்படுத்தும், இலக்கிய வாசிப்பு என்பதை தொடர்ந்து மாறும், வளரும் உரையாடலாக மாற்றும். *** இறுதியாக, இலக்கியத்தைத் தீவிரமாக வாசிப்பதென்பது, ஒரு படைப்பை வாசித்து அடையும் இன்பத்திற்குப் பதிலாக அவ்விடத்தில் பகுப்பாய்வை வைப்பதல்ல, மாறாக நுண்ணறிவு மூலம் வாசிக்கும் இன்பத்தை ஆழப்படுத்துவது. இது வாசிப்பு என்ற செயலை புறவயமான நுகர்விலிருந்து முழுமையான அகவய ஈடுபாடாக மாற்றுவது, ஒவ்வொரு புத்தகத்தையும் ஓர் அறிவுசார் உரையாடலாக மாற்றுவது. மேற்பரப்பிற்கு அப்பால் பார்ப்பதன் மூலம், மொழியின் நுட்பங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், கருப்பொருள்களை கேள்விக்கு உட்படுத்துதன் மூலம், பிரதியைப் பொருள்கொள்ளுவதன் மூலம், வாசகர்கள் தீவிர இலக்கியப் படைப்பின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியும். அப்போது இலக்கிய வாசிப்பு என்பது வெறும் கதைவாசிப்பதாக மட்டுமின்றி, கருத்துகள், பண்பாடு மற்றும் மனித அனுபவத்துடன் நிகழும் ஓர் உயிருள்ள உரையாடலாக மாறும். https://vallinam.com.my/version2/?p=10142
-
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி; உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி; உறுதிப்படுத்தினார் சுமந்திரன் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கொழும்பு மாநகர சபையில் ஆசனங்க ளைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி சி.இரத்தின வடிவேல் சுட்டிக்காட்டினார். அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்தத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புப வர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப் பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகால மாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் https://akkinikkunchu.com/?p=314887
-
ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்!
ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்! எகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா காசாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு போட்டியாக இந்த ஒப்புதல் வந்துள்ளது. கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், காசாவின் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கும். இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட அரபு லீக் தலைவர் அகமட் அபூல் கெய்ட், “எகிப்துத் திட்டம் இப்போது ஒரு அரபுத் திட்டமாகும்” என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி ட்ரம்பின் கருத்துக்களை குறிப்பிடாமல், “தன்னார்வமாகவோ அல்லது கட்டாயமாகவோ எந்தவொரு இடப்பெயர்ச்சியையும் நிராகரிப்பதே அரபு நிலைப்பாடு” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்துடன், இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எந்தவொரு முன்மொழிவுகள் அல்லது யோசனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதிக்கான ஒரு பெரிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார். அரபுத் திட்டம் என்றும் அழைக்கப்படும் எகிப்தின் திட்டம், 2030 ஆம் ஆண்டுக்குள் காசாவை அதன் மக்கள்தொகையை அகற்றாமல் மீண்டும் கட்டியெழுப்புவதை முன்னறிவிக்கிறது. முதல் கட்டத்தில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் எஞ்சியிருக்கும் 50 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றுவதும், வெடிக்காத குண்டுகளை செயலிழக்கம் செய்வதைத் தொடங்குவதும் அடங்கும். இந்தத் திட்டம், அடுத்த ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் “நிலையான, பசுமையான மற்றும் நடக்கக்கூடிய” வீடுகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளை முழுமையாக மறுவடிவமைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இது விவசாய நிலங்களைப் புதுப்பித்து, தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பெரிய பூங்கா பகுதிகளை உருவாக்குகிறது. இது ஒரு விமான நிலையம், ஒரு மீன்பிடி துறைமுகம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்கவும் அழைப்பு விடுக்கிறது. 1990 களில் ஒஸ்லோ அமைதி ஒப்பந்தங்கள் காசாவில் ஒரு விமான நிலையம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்க அழைப்பு விடுத்தன, ஆனால் அமைதி செயல்முறை சரிந்ததால் திட்டங்கள் கைவிடப்பட்டன. காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசங்களிலிருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை அரபுத் தலைவர்கள் நிராகரிப்பதை மதிப்பதாகக் கூறி, ஹமாஸ் வரவேற்ற இந்தத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது. இதற்கிடையில், வெள்ளை மாளிகை அரபு நாடுகளின் உள்ளீடுகளை வரவேற்பதாகக் கூறியது, ஆனால் ஹமாஸ் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்க முடியாது என்றும் வலியுறுத்தியது. போருக்குப் பிந்தைய காசாவுக்கான தனது துணிச்சலான தொலைநோக்குப் பார்வையில் ஜனாதிபதி உறுதியாக நிற்கும் அதே வேளையில், பிராந்தியத்தில் உள்ள எங்கள் அரபு கூட்டாளிகளிடமிருந்து உள்ளீடுகளை அவர் வரவேற்கிறார். அவரது திட்டங்கள் இந்தப் பிரச்சினையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்குப் பதிலாக பிராந்தியத்தை பேச்சுவார்த்தைக்கு வரத் தூண்டியுள்ளன என்பது தெளிவாகிறது – என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ் கூறினார். அரபு நாடுகள் அங்கீகரித்த திட்டத்தில், சீர்திருத்தப்பட்ட பாலஸ்தீன ஆணையம் கட்டுப்பாட்டை ஏற்கும் வரை, ஹமாஸ் அரசியல் சுயேச்சைகளின் இடைக்கால நிர்வாகத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கும். கடந்த மாதம், காசாவில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் முன்மொழிந்து, பிராந்தியத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ட்ரம்ப்பின் கூற்றுப்படி, அமெரிக்கா அந்த நிலத்தை மீட்டு மத்திய கிழக்கில் ஒரு “ரிவியரா”வாக மாற்றும். பாலஸ்தீனியர்கள், அரபு நாடுகள் மற்றும் மனித உரிமை நிபுணர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட அவரது திட்டம், இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று கூறியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=314890
-
யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு !
செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதிக்கு மேலதிக கண்காணிப்புக்கு ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவு 05 Mar, 2025 | 10:56 AM யாழ்ப்பாணம் - அரியாலை, செம்மணி பகுதியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் மீட்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கினுடைய கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலும், முறைப்பாட்டாளர் சார்பிலும் சட்டத்தரணிகளும், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறித்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு உரிய வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக குறித்த மயானத்தினுடைய அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகளால் கோரப்பட்டது. இதனை ஆராய்ந்த நீதவான் மயான அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் ஐந்து உறுப்பினர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கினார். வழக்கு தொடர் விசாரணைக்காக திகதியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208319
-
ராணுவ ரகசியம்
எனக்கு டக்கென்று தெரிந்துவிட்டது! நான் முதன்முதலாக இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷன் செய்தது இந்திய இராணுவத்துக்குத்தான்! பள்ளிக்கூட யுனிபோர்மில் (வெள்ளை சேர்ட், நீலக் காற்சட்டை) சைக்கிளில் போன என்னை மறிச்சு அவர்கள் பிடித்து வைத்திருந்த ஒருவரிடம் ஒரு வேலையை விளக்கச் சொன்னார்கள். பெரிதாக ஒன்றுமில்லை. பனையோலைகளை வெட்டித் தரவேண்டுமென்று கேட்டார்கள். மிரண்டுபோய் இருந்தவர் ஆசுவாசப்பட்டு அதற்கு பெரிய கத்தி வேண்டும்; தான் வீட்டுக்குப் போய் எடுத்து வருகின்றேன் என்றார். இந்தியன் ஆமி அவ்வளவு மொக்கர் இல்லை. ஆள் கழண்டுவிடுவார் என்று என்னையே கத்தியை அவரின் வீட்டில்போய் எடுத்துவரச் சொன்னார்கள். அந்தத் தொட்டாட்டு வேலையும் மொழிபெய்ர்ப்பு வேலையையும் செய்தேன். 😀
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (05 மார்ச்) இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், தென்னாபிரிக்கா அணி (குழு B முதல் இடம்) எதிர் நியூஸிலாந்து அணி (குழு A இரண்டாவது இடம்) 07 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒரே ஒருவர் மாத்திரம் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக்கணித்துள்ளார். போட்டியில் இல்லாத வேறு அணிகளைக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! நாளைய அரையிறுதிப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி வீரர்கள் தொடர்ந்து நிலைத்து ஆடமுடியாததால் 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி சாதாரணமான இலக்கை விராட் கோலியின் 84 ஓட்டங்களுடனும், கேஎல் ராகுலின் அதிரடியான 42 ஓட்டங்களுடனும் 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களை எடுத்து எட்டியது. முடிவு: இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 17 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. முதலாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @Eppothum Thamizhan மீண்டும் முதல்வராகியுள்ளார்! நிலைத்து நிற்பாரா?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
IND 225/5 42.4 overs Kohli is out!
-
அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா? - கருணாகரன்
அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா? March 1, 2025 — கருணாகரன் — அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியில் சமூக, அரசியல் மட்டத்திலும் பொருளாதார வட்டாரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. “இது ஒரு மாறுதலான வரவு செலவுதிட்டம். மக்கள் நலன், தேசியப் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியதாக இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறது அரசாங்கம். அரசாங்கத்தை ஆதரிப்போரின் கருத்தும் இதுவே. ஆனால், “இதில் எந்தப் புதுமையும் இல்லை. ஐ.எம். எவ்யையும் ரணில் விக்கிரமசிங்கவையும் கடந்து எந்தப் புதுமையையும் காணமுடியவில்லை. ஐ.எம்.எவ் – ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டு வடிவத்தின் இன்னொரு பிரதிமையே இந்த வரவு செலவுத் திட்டம்” என்கின்றன எதிர்க்கட்சிகள். “வரவு செலவுதிட்டத்தில் வடக்கிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அரசாங்கம், கிழக்கிற்கு வழங்கத் தவறியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள். “வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி யாழ்ப்பாணத்துக்குள் மட்டும் செலவழிக்கப்படாமல், வன்னிக்கும் பகிரப்பட வேண்டும். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்கின்றனர் வன்னித் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் அமைப்பினரும். “தேசிய பொருளாதார வளர்ச்சியை எட்டுவதாக இருந்தால் அல்லது அதை நோக்கி முயற்சிப்பதாக இருந்தால் அதற்குரிய வகையில் தேசியப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதைச் செய்யாமல் இந்த மாதிரியான சிறு சீரமைப்பு முயற்சிகள், பொருளாதார வளர்ச்சி என்ற கற்பனையான உலகத்தையே உருவாக்கும். அது மக்களுக்கோ நாட்டுக்கோ பெரிய நன்மைகளைத் தராது” என்கிறார்கள் பொருளாதாரத் துறையினர். “ஒப்பீட்டளவில் முன்னேற்றமான பாதீடாக இருந்தாலும் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட செலவீனம் நாடு, பொருளாதாரத் துறையில் முன்னோக்கிச் செல்வதைப் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்கவில்லை என்பதைக்காட்டுகின்றது. இந்த அரசாங்கத்துக்கும் தடுமாற்றங்கள் உள்ளன என்பதைக் காட்டுகிறது” என்று கூறுகிறார்கள் இன்னொரு தரப்பினர். இப்படிப் பல விதமான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும் இந்தப் பாதீட்டு விவாதத்தின்போது நாம் சில விடயங்களைக் கவனப்படுத்த வேண்டும். வரவு செலவுத்திட்டத்தில் இப்போதே துண்டுவிழும் தொகையாக 2,200 பில்லியன் உள்ளது. எதிர்பார்க்கப்படும் வருமானத்தின் மதிப்பீடு, 4,990 பில்லியன் ரூபாய். செலவு 7,190 பில்லியன் ரூபாய். என்றால் வரவுக்கு மீறிய செலவே. ஆக வரவைக் கூட்டுவதைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். அதாவது அதற்கான ஏற்பாடுகளை. இதற்கு கிராமியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை 3 – 4 வீதமாக அதிகரிக்க முடியும் – வலுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம் 1400 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த அடிப்படையிலான எண்ணக் கருவைப் பகிரவும் திட்டமிடவும் மாவட்டச் செயலாளர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுடன் உரையாடலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதியோ அரசாங்கமோ எதிர்பார்க்கின்றபடி – நம்புகின்றபடி – இதில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்பது கேள்வியே! ஏனென்றால், கடந்த காலத்தில் அரச நிர்வாகம் மிகப் பலவீனமானமுறையிலேயே செயற்பட்டுள்ளது. மாவட்டச் செயலகங்களின் திட்டமிடலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பெருங்குறைபாடாகவே இருந்தது. குறைந்த பட்சம் தமது திட்டங்களின் பெறுபேறு என்ன? அவை உருவாக்கிய சமூக விளைவுகள் என்ன என்பதைக் கூட அவை திரும்பிப் பார்த்ததும் இல்லை. மதிப்பீடு செய்ததும் இல்லை. வேண்டுமானால், இதைக்குறித்து மாவட்டச் செயலாளர்களிடத்திலும் திட்டமிடற் பணிப்பாளர்களிடத்திலும் ஜனாதிபதி விளக்கம் கேட்கலாம். அப்படிக் கேட்டால் அதற்குக் கதை சொல்லக் கூடிய (கதை விடக்கூடிய) அளவுக்கு நிபுணத்துவத்திறனைக் கொண்டிருக்கிறார்கள் அத்தனை அதிகாரிகளும். பதிலாக குறைபாடுகளை நிவர்த்தி செய்வதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இதில் அபூர்வமாக ஒரு சிலர் விலக்காக இருக்கலாம். மற்றும்படி பலருடைய நிலை இதுதான். இதற்குக் காரணம், கடந்த ஆட்சிகளில் நடந்த தவறுகளும் பழக்கங்களும்தான். போதாக்குறைக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவித்திட்டங்கள். கருத்திட்டங்கள், பயிலரங்குகள், பயிற்சித்திட்டங்கள், உதவிகள், கலந்துரையாடல்கள், கள ஆய்வுகள் என்றெல்லாம் பெரும் செலவிலும் பெரும் எடுப்பிலும் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்களும் பல நடவடிக்கைகளும் தோல்வியடைந்ததே வரலாறு. இதை மறுத்தால், ‘அவை எத்தகைய பெறுபேறுகளை உருவாக்கின?‘ என்ற புள்ளி விவரத்தைச் சான்றாதாரங்களுடன் எந்த மாவட்டச் செயலகமாவது வெளியிடத் தயாரா? எனவேதான் மாவட்டச் செயலக அதிகாரிகளை நம்பி அரசாங்கம் கிராமியப் பொருளாதார அபிவிருத்தியைப் பற்றிப் பேசுவது பொருத்தமானதல்ல. ஆனால், அவர்களைக் கொண்டுதான் இதைச் செயற்படுத்தவும் வேண்டும். அவர்கள் மாவட்டத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள். அவர்கள்தான் அரசின் நேரடிப் பணிப்புக்கும் செயலாக்கத்துக்கும் பொறுப்பானவர்கள். ஆகவே என்னதானிருந்தாலும் அவர்களுக்கூடாகத்தான் எதையும் செய்ய முடியும். அப்படியென்றால், அவர்களை குணமாற்றம் செய்ய வேண்டும். பொறிமுறைகளை முற்றாக மாற்றியமைக்க வேண்டும். திட்டமிடற் செயலகங்களின் மூளையையும் மனதையும் புதிதாக்க வேண்டும். முழுமொத்தமாக புத்தாக்கத்துக்குரிய வகையில் நிர்வாகத்தையும் அதை இயக்கும் தரப்பினரையும் மாற்றியமைக்க வேண்டும். இதனால்தான் முறைமை மாற்றம் (Systrm change) வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதை அரசாங்கமும் ஏற்றுள்ளது. ஆனால், அதைச் செய்வதற்குத் தயக்கம் காட்டப்படுகிறது? இது ஏன்? நாட்டுக்குத் தேவையாக இருப்பது அறுவைச் சிகிச்சையே. அதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள். என்பதால்தான் வழமைகளுக்கு மாறாக அவர்கள் NPP யை ஆதரித்தனர். அநுர குமார திசநாயக்கவை – விரும்பினர் – நம்பினர், நம்பிக் கொண்டிருக்கின்றனர். பதிலாக பழைய புண்ணுக்கு மேலே களிம்பைப் பூசுவதால் பயனில்லை. இதொன்றும் கடினமான விமர்சனமல்ல. அரசாங்கத்தை உற்சாகப்படுத்துவதற்கான சொற்களேயாகும். கடந்த ஆட்சிகளின்போது நடந்த தவறுகளைப் பட்டியலிடுவது, அதற்கான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்துவது எல்லாம் அரசியல் நடவடிக்கைகள். இவையெல்லாம் தேர்தல்கால நிகழ்ச்சிகளைப்போலவே உள்ளன. ஒரு சிறிய மாற்றம் என்றால், தேர்தல் மேடைகளுக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் அவை பட்டியற்படுத்தப்படுகின்றன – வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே அவை காற்றில் கரைந்து விடாமல் வரலாற்றில் இறக்கம் செய்யப்படுகின்றன. என்பதால் அடுத்த கட்டமாக அவை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன என உணரலாம். இதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள். சட்டத்தின் முன் குற்றவாளிகள், தவறானவர்கள், நாட்டைக் கெடுத்தவர்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முன் அவர்களை நிர்வாணப்படுத்துவது நல்லதே. அதேவேளை வரவு செலவுத்திட்டத்தில் மக்களைக் குறித்து, உற்பத்திப் பொருளாதாரம் குறித்து மேலும் சிந்திக்கலாம். உதாரணமாக, அரசாங்கம் வாகனங்களுக்கான வரியை உச்சமாக்கியிருக்கிறது. இதில் ஒரு சிறிய நெகிழ்ச்சியை பொருளாதார வளர்ச்சி கருதி ஏற்படுத்த வேண்டும். விவசாயம்,மீன்பிடி மற்றும் கைத்தொழில் முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமைகாவி வாகனங்களுக்கும் உழவு மற்றும் அறுவடை, பதனிடல் அல்லது இறுதிசெய் இயந்திரங்களுக்கும் வரிக் குறைப்புச் செய்யப்படுவது அவசியமாகும். இங்கே வரி விலக்குக் கேட்கப்படவில்லை. வரிக்குறைப்பே கோரப்படுகிறது. அப்படி அமையும்போதுதான் உற்பத்திசார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அது உற்சாகத்தையும் சிரமக்குறைவையும் ஏற்படுத்தும். இதைப்போல எளிய மக்களின் போக்குவரத்துக்கு உதவும் முச்சக்கர வண்டிகள், 150 CC க்கு உட்பட்ட மோட்டார்ச் சைக்கிள்கள் போன்றவற்றுக்கும் வரிக்குறைப்புச் செய்ய வேண்டும். இவை நாளாதாந்த உழைப்பு, வருவாயீட்டல், பணிக்குச் செல்லுதல் போன்றவற்றுக்கு ஏற்புடையதாக இருக்கும். மட்டுமல்ல, இவையெல்லாம் சாதாரண மக்களுக்குரியவை. ஆகவே மக்கள் நலன் அரசு – ஆட்சி என்ற வகையில் இவ்வாறான விடயங்களைக் குறித்துப் பொருத்தமாகச் சிந்திப்பது அவசியமாகும். கூடவே இளையோருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியமானது.அதற்கு முதலீடுகள் அவசியம். முதலீட்டாளர்கள் பலரும் அதைச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். உள்நாட்டிலும் உள்ளனர். புலம்பெயர்ந்தோரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவர்கள் தங்களுடைய முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நடைமுறைப் பிரச்சினைகள், நிர்வாக இழுபறிகள், அரசியற் பேரங்கள் எல்லாம் தடையாக உள்ளன. இவற்றைச் சீராக்கம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உருவாக்கினால் புதிய தொழிற்துறைகள் பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இதற்காக சிறப்பு அலகு ஒன்று (A special Unit) உருவாக்கப்படுவது கட்டாயமானது. முதலீட்டாளர் ஒருவர் அல்லது ஒரு கொம்பனி அதற்கான கோவையைச் சமர்ப்பித்தால், அதைப் பொறுப்பேற்று, பரிசீலித்தபின் தேவையான திணைக்களங்களோடு தொடர்பு கொண்டு உரிய அனுமதிகளை விரைவாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அந்தப் பிரிவு. இப்போதுள்ள நிலைமை அப்படியானதல்ல. ஏராளமான இழுபறிகள்,தாமதப்படுத்தல்கள், தட்டிக் கழிப்புகள் நிர்வாக ரீதியாக உள்ளது. இதை மாற்றியமைக்க வேண்டும். இப்படிப் பல விடயங்களில் அரசாங்கம் கவனத்தைச் செலுத்தும்போதுதான் பொருளாதார வளர்ச்சியும் மீட்சியும் ஏற்படும். அடுத்த ஆண்டுப் பாதீட்டுக்கு முன் அரசாங்கம் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கையில் (Restructuring action) னில் ஈடுபட வேண்டும்.அது கட்டாயமானது. அரசாங்கத்திற்குள்ள பொறுப்புகள் அதிகம். கடந்த 75 ஆண்டு காலக் குப்பையை அகற்றுவதென்பது எளிதல்ல. ஆனாலும் அதைச் செய்வதாகவே அது தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. உறுதியின் முன்னே நிறுத்தியிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அதன் மீதே கட்டப்பட்டுள்ளது. கடந்த (ரணில்) அரசாங்கம் வரியிறுக்கம், தொழிலின்மை, புதிய வாய்ப்புகளைத் தேடுவதில் சிரத்தின்மை போன்றவற்றினால் அழுத்தங்களை உருவாக்கியது.இதனால் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். அப்படி வெளியேறுவதையே ரணிலும் விரும்பினார். இது மிகப் பெரிய தவறாகும். ஒரு நாட்டின் வளங்களில் முக்கியமானது மனித வளம். அதிலும் உழைப்பாளர்கள், இளையோர், திறனாளர்கள், துறைசார் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதும் வெளியேற்றப்படுவதும் மிகத் தவறானது. பாதகமானது. ஆனால், அதையே அன்றைய அரசாங்கம் ஊக்குவித்தது. கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒருவரை வளர்த்து, ஆளாக்கி, துறைசார் – தொழில்சார் வல்லுநராக உருவாக்கியபின் அவரை வெளியே விடுவதும் அவர் இன்னொரு நாட்டில் சென்று அந்த நாட்டுக்காக உழைப்பதும் எவ்வளவு இழப்பாகும். அதேவேளை எந்தச் செலவுமே இல்லாமல் பிற நாடுகள் அந்தத் திறனாளரை – உழைப்பாளரை தமக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதை புதிய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும். இந்த நாட்டை விட்டுச் சென்றவர்களும் இந்த மண்ணுக்கு வரும் வகையில் ஆட்சியை – பொருளாதாரத்தை – வாழும் சூழலை மாற்ற வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படையானது பாதீடாகும். அந்தப் பாதீட்டை விவாதித்து, வளப்படுத்துவதே ஆயிரமாயிரம் வாசல்களைத் திறக்கும். ஆம், சரியான ஒரு பாதீடு, நாட்டின் நெருக்கடியைத் திறக்கும் சிறப்பானதொரு திறவு கோலாகும். அநுர குமாரவின் (NPP) யின் கைகளில் அந்தத் திறவுகோலை வரலாறு ஒப்படைத்துள்ளது. அந்தத் திறவுகோலை திறப்பதற்குப் பயன்படுத்துவதா இல்லை பூட்டுவதற்கு உபயோகிப்பதா என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.வரலாறு அந்தப் பொறுப்பை அவர்களுக்கு அளித்துள்ளது. வரலாற்றுக்கு அவர்கள், தமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும். https://arangamnews.com/?p=11856
-
உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்திய ட்ரம்ப்!
உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியைஇடைநிறுத்தியது அமெரிக்கா -ரஸ்யா வரவேற்பு 04 Mar, 2025 | 03:59 PM உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை இடைநிறுத்தும் அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்றுள்ள ரஸ்யா தனது நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு உண்மை என்றால் இது உக்ரைன் அரசாங்கத்தை சமாதான முயற்சிகளை நோக்கி உண்மையாகவே திருப்பிவிடும் என கிரெம்ளின் பேச்சாளர் திமிட்ரிவ் பெஸ்கோ தெரிவித்துள்ளார். சமாதானத்திற்கான மிகச்சிறந்த பங்களிப்பு இதுவென அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திக்கொண்டால் உக்ரைனிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் முயலக்கூடும் என தெரிவித்துள்ள கிரெம்ளின் பேச்சாளர் ஆனால் முக்கியமான அதிகளவான ஆயுதங்கள் அமெரிக்காவிடமிருந்தே கிடைக்கின்றன என தெரிவித்துள்ளது. ரஸ்யாவிற்கு எதிரான தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவகின்றது என வெளியான தகவல்களையும் மொஸ்கோ வரவேற்றுள்ளது https://www.virakesari.lk/article/208263
-
கூட்டமைப்பாக செயற்பட தமிழரசின் கதவுகள் திறந்தே உள்ளது
கூட்டமைப்பாக செயற்பட தமிழரசின் கதவுகள் திறந்தே உள்ளது Mar 4, 2025 - 10:49 AM - கூட்டமைப்பாக செயற்பட தமிழரசு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது.. தமிழரசுக் கட்சியோடு ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய மூன்று கட்சிகளுமாக நான்கு கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக செயற்பட்டு வந்திருந்தோம். ஆனால் கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் தனித் தனியாக போட்டியிட்டு கூட்டாக செயற்படுவதென தமிழரசுக் கட்சி தீர்மானித்தது. ஆனால் அதனை தவறாக சித்தரித்து தமிழரசு தனிவழி என்றவாறாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியிருந்தன. நாங்கள் கூட்டமைப்பை உடைக்க வேண்டுமென நினைக்கவில்லை. இப்போது கூட முன்னரைப் போல மீளவும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து இயங்குதவற்கான அழைப்பையே விடுத்திருக்கிறோம். அந்த முயற்சியின் தொடராக கூட்டமைப்பில் இருந்த கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன். ஆனால் இக் கட்சிகளின் தலைவர்களை நான் சந்தித்த போது சாதகமாக பரிசீலிப்பதாக சொன்னவர்கள் மறுநாளே தாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர். இப்படி ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கிறது என்றால் அதனை நேரடியாகவே எங்களிடத்தே சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து ஏமாற்று வித்தை காட்டியமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அவர்களிண் புதிய கூட்டணியை எதிர்க்கவில்லை. அது அவர்களது உரிமை. ஆனால் அவர்களின் செயற்பாடே எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தான் நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் தாம் ஒரு கூட்டணியை அமைத்துள்ளதாகவும் எங்களது கட்சியின் மத்திய குழுவோடு பேசிவிட்டு வருமாறும் புளொட் தலைவர் சித்தார்த்தன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது. நாங்கள் ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது. ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பா இயங்குவோம் வாருங்கள் என்றே இணக்கத்தின் இடிப்படையில் அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து உங்களது கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாக சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் மிகவும் அப்பாவித்தனமாக நாங்கள் இருந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நாங்கள் இப்போதும் கூறுகிறோம் கூட்டமைப்பில் இருந்து செயற்பட்டவர்கள் மீளவும் கூட்டமைப்பிற்கு வருவதற்கான கதவுகள் திறந்தே உள்ளன. அவர்கள் வராவிட்டால் தமிழரசுக் கட்சி மீண்டும் தனி வழியில் போவது இயல்பானது. ஆனாலும் தமிழ்த் தலைமைகளைக் கொண்ட கட்சிகளுக்கே தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும். அதற்காக எங்களுக்கு பயம் என்றில்லை. தந்தை வழியில் வந்தவன் நான். தேசிய தலைவரின் கொள்கையில் நிற்கிறேன். எனக்கு பயம் கிடையாது. ஆனால் தமிழர் நலன் சார்ந்து செயற்பட வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் தான் சில முயற்சிகளை எடுத்துச் செயற்படுகிறோம் என்றார். https://adaderanatamil.lk/news/cm7uda00p000isleop7olmlo4
-
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் (04) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே, பதவி வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு, பொதுச் சேவைக்கு 64%, எங்களுக்கு 58% நீதியா!, OT வீதத்தை மாற்றாதே, MCA குறைப்பை நிறுத்து போன்ற கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டன. நாடாளாவியரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம்...யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் (04) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான...
-
ஸ்டாலின் தலையீடு… ஏலத்துக்கு வந்த சிவாஜி வீடு… பரபர பஞ்சாயத்து!
ஸ்டாலின் தலையீடு… ஏலத்துக்கு வந்த சிவாஜி வீடு… பரபர பஞ்சாயத்து! 3 Mar 2025, 11:19 PM நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடான, அவரது நினைவுச் சின்னமாக இருக்கும் சென்னை. தி.நகர் அன்னை இல்லத்தை ஜப்தி செய்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, சிவாஜி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். கடன் திருப்பி செலுத்தவில்லை. இது வழக்கு விவகாரமானதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க மத்தியஸ்தர் உத்தரவிட்டிருந்தார். பட உரிமைகளை வழங்க சிவாஜி பேரன் மறுத்தார். இதனால், மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட கோரி தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த்துக்கு சொந்தமான நிறுவனம் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பதிலளிக்காததால் அன்னை இல்லத்தின் மொத்தமுள்ள 53 ஆயிரம் சதுர அடியில், 13 ஆயிரம் சதுர அடியை ஜப்தி செய்து பொது ஏலமிட்டு பணத்தை அந்நிறுவனத்துக்குக் கொடுக்க உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 3) உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிவாஜிக்கு நெருக்கமானவர்களோ சிவாஜி குடும்பத்தின் சொத்துப் பிரச்சினை இரு வருடங்களுக்கு முன்பே முதல்வர் ஸ்டாலினிடம் சென்றது. அப்போது முதல்வர் சில அறிவுரைகளை வழங்கினார். ஆனால் அவற்றை ஏற்று சிவாஜி குடும்பத்தினர் செயல்படுத்தவில்லை. அதனால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இதுகுறித்து விசாரித்தபோது, “மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு ஆகிய 2 மகன்களும் சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். மகள்கள் இருவரும் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன், தந்தை சிவாஜி கணேசன் தன் உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களில் எங்களுக்கு பங்கு கொடுக்க எங்கள் சகோதரர்கள் ராம்குமார், பிரபு மறுக்கிறார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே… சாந்தி தியேட்டர் பங்குகளை தங்களுக்குத் தெரியாமலேயே ராம்குமாரும், பிரபுவும் இன்னொரு பில்டருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் இன்னொரு வழக்கு போட்டனர். அதாவது, சாந்தி தியேட்டர் நிறுவனத்தில் சிவாஜி, கமலா ஆகியோர் பெயரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அவர்களது மறைவுக்குப் பிறகு ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் எங்களுக்குத் தெரியாமல் விற்றுவிட்டனர், அங்கே கட்டுமானம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தனர். இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். இந்த பரிவர்த்தனைகள் 2010 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதாகவும் குடும்பப் பிரச்சினை காரணமாக இப்போது இதை எழுப்பியிருக்கிறார்கள் என்றும் இதை வாங்கிய அக்ஷயா ஹோம் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாதாடியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிவாஜியின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதேநேரம் சொத்துப் பிரச்சினைக்காக பிரதான வழக்கு தொடர்ந்து நடந்தது. ”சென்னை தி. நகரில் இருக்கும் சிவாஜி இல்லமான அன்னை இல்லம் சிவாஜியால் கட்டப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் ராம்குமாரும், பிரபுவும் அங்கே வசிக்கிறார்கள். அன்னை இல்லத்தில் எங்களுக்குப் பங்கு கொடுக்கப்படவில்லை. கோபாலபுரத்தில் இருக்கும் சிவாஜி என்கிளேவ் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் எங்களுக்குப் பங்கு வேண்டும். மேலும் சென்னை ராயப்பேட்டையில் சிவாஜி நான்கு வீடுகளை வாங்கினார். அதில் ஒரு வீட்டில் நாங்கள் (மகள்கள்) வசிக்கிறோம். மற்ற மூன்று வீடுகளின் வாடகையும் ராம்குமார், பிரபுவுக்குத்தான் போகிறது. அந்த வாடகையிலும் பங்கு கொடுக்கப்படவில்லை. அசையா சொத்துகள் மட்டுமல்ல… அசையும் சொத்துகளான சிவாஜிக்கு சொந்தமாக ஆயிரம் சவரன் தங்க நகைகளும், 500 கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் இருக்கின்றன. இவற்றிலும் எங்களுக்கு பங்கு வேண்டும்” என்பதுதான் சிவாஜி மகள்களின் வழக்கு. சிவாஜி உயிரோடு இருந்தபோது, நடிகர் நடிகைகளின் பல்வேறு குடும்பப் பிரச்சினைகளை பேசித் தீர்த்து வைத்திருக்கிறார். இந்நிலையில் சிவாஜி மறைவுக்குப் பின் அவரது குடும்பத்திலேயே சொத்துப் பிரச்சினை தலை விரித்தாடிய தகவல் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 2022 அக்டோபர் 1 ஆம் தேதி சிவாஜியின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் இருக்கும் சிவாஜி மணிமண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது ராம்குமார், பிரபு உள்ளிட்டோருடன். சில நிமிடங்கள் முதல்வர் தனியாக உரையாடினார். இந்நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி சாந்தி தியேட்டர் பங்கு வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தது. இதற்கு சில நாட்கள் கழித்து பிரபுவின் வழக்கறிஞரான எஸ்.ராமனிடம் முதல்வர் தரப்பில் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அப்போதே முதல்வர் ஸ்டாலின் தனக்குத் தெரிந்த சில பில்டர்ஸ் நிறுவனத்தினரிடம் இதுபற்றி பேசிவிட்டு… முக்கிய ஆலோசனைகளை சிவாஜி குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். தனது தந்தை கலைஞரின் உற்ற நண்பரின் குடும்பம் என்ற அடிப்படையில் சிவாஜி குடும்ப பிரச்சினையைத் தீர்க்க முதல்வர் ஸ்டாலின் முயன்றார். ஆனால் சிவாஜி குடும்பத்தினரிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் முதல்வர் ஓரளவுக்கு மேல் அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்டார். முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப் படி செயல்பட்டிருந்தால் இன்று அன்னை இல்லம் ஏலத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது” என்கிறார்கள் நடந்ததை அறிந்த இரு தரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள். https://minnambalam.com/political-news/sivaji-family-property-issue-stalin/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (04 மார்ச்) முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், இந்திய அணி (குழு A முதல் இடம்) எதிர் அவுஸ்திரேலியா அணி (குழு B இரண்டாவது இடம்) 17 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். மூவர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக்கணித்துள்ளனர். போட்டியில் இல்லாத வேறு அணிகளைக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது! நாளைய அரையிறுதிப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
-
மே முதல் வாரத்தில் குட்டி தேர்தல்?
மே முதல் வாரத்தில் குட்டி தேர்தல்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில், இந்த வாரத்திற்குள் திகதி குறித்து கலந்துரையாடவும் இறுதி முடிவை எட்டவும் ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார். "அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். "நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு இணங்க திகதி அறிவிக்கப்படும்," என்று ஆணைக்குழுத் தலைவர் வலியுறுத்தினார். வரவு செலவுத் திட்ட விவாதம் முடியும் வரை வேட்புமனுக்களை தாக்கலைத் தாமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன, அதே நேரத்தில் அரசாங்கம் முன்கூட்டியே அறிவிக்க வலியுறுத்தியுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) இந்த செயல்முறையை விரைவுபடுத்துவது தொடர்பில் குரல் கொடுத்து வருகிறது. முதலில் 2023 இல் திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கிய பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. பல அரசியல் கட்சிகள் இந்த தாமதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன, 2025 தேர்தலுக்கும் அதே வேட்புமனுப் பட்டியலைப் பயன்படுத்துவது நியாயமற்றது என்று வாதிட்டன. புதிய நியமன செயல்முறைக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் தேவைப்படும் என்று நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்தது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மே-முதல்-வாரத்தில்-குட்டி-தேர்தல்/150-352966
-
நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை!
எரிபொருள் விநியோக சீர்குலைப்பு - சி.ஐ.டியில் முறைப்பாடு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் சலுகை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையால் எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு முயற்சிப்பதாகவும், இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சாதாரண பொது வாழ்க்கையை சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை உருவாக்கி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cm7sps4ak0045vbgn23b9l8dk
-
ஆஸ்கர் விருதுகள் பலவற்றை வென்ற ‘அனோரா’
ஆஸ்கர் விருதுகள் பலவற்றை வென்ற ‘அனோரா’ 2024ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இது 97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்: சிறந்த இயக்குநர்: ஷான் பேகர் (அனோரா) சிறந்த திரைப்படம்: அனோரா சிறந்த நடிகை: மிக்கி மேடிசன் (அனோரா) சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்) சிறந்த உறுதுணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்) சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஃப்ளோ சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிளேவ் சிறந்த அசல் திரைக்கதை: அனோரா சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்கெட் சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட் சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட் சிறந்த ஆவணக் குறும்படம்: ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா சிறந்த எடிட்டிங்: அனோரா சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: தி சப்ஸ்டன்ஸ் சிறந்த ஒரிஜினல் பாடல்: எல் மால் (எமிலியா பெரேஸ்) சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: விக்கெட் சிறந்த அனிமேஷன் குறும்படம்: இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: ஐ ஆம் நாட் ஏ ரோபோ சிறந்த ஒலி: ட்யூன் 2 சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ட்யூன் 2 சிறந்த சர்வதேச திரைப்படம்: ஐ ஆம் ஸ்டில் ஹியர் சிறந்த ஒரிஜினல் இசை: தி ப்ரூட்டலிஸ்ட் இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. https://www.samakalam.com/ஆஸ்கர்-விருதுகள்-பலவற்றை/
-
தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை!
தேசபந்துவை தேடும் பொலிஸ்! முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாக கூறப்படும் 5 வீடுகளை குற்றப் புலனாய்வு பிரிவு சுற்றிவளைத்துள்ளனர். சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, அவரைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்ற நிலையில் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளில் மூன்று வீடுகளும் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இந்த சுற்றிவளைப்பின் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை, வெலிகம, பெலேன பகுதியில் உள்ள W15 என்ற சுற்றுலா ஹோட்டலில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அதற்கு பழிவாங்கும் வகையில் வெலிகம பொலிஸாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கொழும்பு குற்றப்பிரிவின் சார்ஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொரு அதிகாரி காயமடைந்த சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் ஆறு அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். -(3)