Everything posted by கிருபன்
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
ஐரோப்பியர்கள் வாயால் மட்டும் உதவாமல் செயலாலும் உதவுவார்களா? ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் சமாளிக்கமுடியாவிட்டால், செலன்ஸ்கி பேசாமல் ஹங்கேரி, துருக்கியின் உதவியுடன் புட்டினோடு ஒரு டீல் பேசலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை சனி (01 மார்ச்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 14 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் 10 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். தென்னாபிரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி ரசோதரன் நுணாவிலான் குமாரசாமி நியாயம் வாதவூரான் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு பிரபா இங்கிலாந்து ஏராளன் சுவி அல்வாயன் தமிழ் சிறி வசீ வாத்தியார் நந்தன் செம்பாட்டான் சுவைப்பிரியன் கிருபன் இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பத்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்குத் தாக்குப் பிடித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, ராவிஸ் ஹெட்டினது அதிரடியான ஆட்டத்தால் 12.5 ஓவர்களில் 109 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை வந்து தடைப்பட்டது. போட்டி மீண்டும் மீள ஆரம்பிக்கமுடியாமையால் அவுஸ்திரேலியா வெற்றியை எட்டமுடியவில்லை. முடிவு: முடிவில்லை! எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. @goshan_che யின் ஒருநாள் முதல்வர் ஆகும் கனவும் இன்று நிறைவேறவில்லை! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆப்கானிஸ்தான் அடித்த ரண்ஸ் காணாது! கோஷானுக்கு ஒரு நாள் முதல்வர் பதவி நிச்சயம்😁 @வீரப் பையன்26 ஐ இந்தப் பக்கம் காணவில்லை! ஐபில் வேறு தொடங்குகின்றது! இன்னொரு போட்டித்திரி திறக்க பையன் வந்து ஆதரவைத் தரவேண்டும்☺️
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
கட்டாயமாக சீமானுக்கு சாதகம்தான். மனைவி கயல்விழி, முன்னாள் அதிமுக சபாநாயகர் காளிமுத்துவின் மகள் தயவில் பணக்காரர்கள் இருக்கும் நீலாங்கரையில் வசிக்கின்றார். இன்னும் வளர்ச்சியைப் பெற்று அதிபணக்காரர்கள் விரும்பும் போயஸ் கார்டன், அடையாறு பகுதிகளில் வசிக்கமுடியும்😁 Boat Club இல் லம்போகினி, ஜகுவாரில் போய் இறங்கவும் முடியும்😃
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
யொஹானியின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ததே நேசன் என்ற தமிழர்தானாம்! Yohani’s London show met with protests outside venue British Tamils gathered in central London last week, to protest against a performance by Sri Lankan singer Yohani, condemning her history of supporting war criminals responsible for the genocide of Tamil civilians. The protest was held outside the Harley Lounge, a Tamil-owned venue that hosted the event despite Yohani’s documented praise for Sri Lankan war criminals, including her father, Major General Prasanna De Silva. Protesters held placards and chanted slogans denouncing the decision to allow her to perform in London, highlighting her ties to individuals accused of grave human rights violations. “It was brought to our attention that an event was being planned by a Tamil organiser, Nesan, to host Yohani, a singer known for her support of war criminals who committed a genocide against the Tamil people,” said Theevan, a member of Phoenix TNG, a Tamil youth group based in London. “We as Eelam Tamils have a civic duty to the movement and our people, to call out injustice. Boycotts were simply not enough.” The venue and event organisers had reportedly disabled comments on promotional posts about the event after Tamil activists voiced their outrage. “The response to our grievances during the boycott from Harley Lounge and Nesan was to disable comments on posts, silencing us further. Automatically, the next step would be to protest the event,” Theevan explained. “Thankfully, despite the challenges we faced, many Tamil people attended the protest to show solidarity amongst each other and show opposition in the face of this disgraceful event taking place.” Dozens of protestors were outside the venue, chanting slogans that demanded justice for genocide, and war criminals such as Yohani's father, be held to account. Sources told the Tamil Guardian that staff from the Sri Lankan High Commission were also present at the event, with some of those going to see Yohani perform stop and take photographs of the protestors. A significant Metropolitan Police presence was also noted. Joining Phoenix TNG were members from the Movement for Self-Determination of Tamil Eelam (MSDTE). “We would like to thank the Tamil people and the few organisations that did attend for their support and camaraderie,” Theevan said. Yohani has drawn widespread criticism for her continued praise of Sri Lankan military leaders responsible for the killing of tens of thousands of Tamil civilians. She is the daughter of Major General Prasanna De Silva, who led Sri Lanka’s 55th Division during the final stages of the armed conflict in 2009. A United Nations investigation documented how hospitals in the Vanni were repeatedly shelled under the command of the 55th Division. Silva himself has been linked to enforced disappearances, and his security detail was once caught transporting pistols in a white van with altered license plates, a vehicle infamously used by Sri Lankan security forces to abduct and disappear Tamils. Yohani has openly praised her father in her music, referring to him as a "hero" in a Sinhala-language song, Rawwath Dasin, where she is dressed in a military-style costume and surrounded by flaming wreckage. In addition, she has personally met Shavendra Silva, who has been banned from entering the United States due to his role in executing surrendering Tamils, and sang for Gotabaya Rajapaksa, the former defence secretary accused of overseeing war crimes. https://www.tamilguardian.com/index.php/content/yohanis-performance-london-met-tamil-protests
-
மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்! -சந்திர மோகன் ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய வி.வி.ஐப்பிக்களின் வருகையோடு ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா அரங்கேறுகிறது! ஒரு ஆன்மீக மையம் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் என ஆகப் பெரிய அதிகார மையங்களை இதற்கு தொடர்ந்து அழைப்பது ஏன்? அதிகார மையங்களிடம் இருந்து விலகி நிற்றல் அல்லவா ஆன்மீகத்தின் இயல்பாக இருக்க முடியும். காரணம், மிக எளிமையானது! தன்னுடைய சட்ட விரோத, சமூக விரோத செயல்பாடுகள் மீது அரசு அமைப்புகள் எதுவும் நடவடிக்கை எடுக்க நினைத்து பார்க்கவே அச்சப்பட வேண்டும் என்பது தான்! கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சுமார் 400 ஏக்கர் வன நிலத்தில் நிலத்தில் – யானை வழித்தடத்தில் – ஆக்கிரமிப்பு செய்து வன & கட்டிட விதிகளை மீறி, 5 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது; சுமார் 5,000 பேர் நிரந்தரமாக தங்குகின்ற இடமாக – பல்லாயிரம் தன்னார்வ தொண்டர்கள் தங்கள் சேவையை கட்டணமின்றி தந்து செல்லும் இடமாக – தினசரி சுமார் 5,000 முதல் 10,000 சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக ஒரு சாம்ராஜ்யம் போல எழுந்து நிற்கும் இந்த இடம் பல அராஜகங்களுக்கு மத்தியில் தான் எழுந்து நிற்கிறது. இந்த இடம் உருவாக இலட்சக்கணக்கான மரங்கள், காட்டுயிர்கள் சந்தன மரங்கள் உட்பட பழமையான, அரிதான மரங்கள், செடிகள் அழித்தொழிக்கப்பட்டன. ஆசிரமத்தை சுற்றியும், சட்டவிரோதமான மின்வேலிகள் அமைக்கப்பட்டன. யானைகள் தடம் மாறியதால், பழங்குடியினர் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. விலங்கு- மனித மோதல்கள் நடைபெற்றன. 2006-11 காலங்களில் மட்டும் 50 யானைகள் இறந்ததாகவும், 57 மனிதர்கள்! பாஜக , ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், பார்ப்பன VIP கள், பெரு முதலாளிகள், செல்வந்தர்கள், நடிகர்கள், உயர்தர மற்றும் மத்திய வர்க்கத்தினர், சுற்றுலாவாசிகள், பக்தர்கள் எனப் பலரும் இந்த ஈஷா மகா சிவராத்திரியில் பங்கேற்கின்றனர். இப்படி அதிகார மைய வி.வி.ஐபிக்கள் வருகையில் முக்கியமான அரசு சார்பிலான செலவுகள் :- 1) டெல்லி- கோவை வந்து போன விமானப்படை தனி விமான வாடகை—–? 2) கோவை விமான நிலையம்-ஈசா மையம் சென்ற, திரும்பிய ஸ்பெஷல் ஹெலிகாப்டர் + ஸ்பேர் ஹெலிகாப்டர் இரண்டுக்கும் வாடகை…..? 3)மேடைக்கு செல்ல கொண்டு வரப்பட்ட குண்டு துழைக்காத கார் வாடகை…? 4) ஈசா மையத்தில் வான்வெளி கண்காணிப்புக்காக போடப்பட்ட ஆளில்லா விமானங்கள் (UAV-2 & Tether Copter -1)மற்றும் ADGP + IG பொறுப்பிலான கண்ட்ரோல் ரூம் செலவுகள்…? 5) அதிகார வி.வி.ஐ.பிக்களுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு சம்பளம், படிகள், போக்குவரத்து செலவுகள்….? 6) வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணிக்காக போடப்பட்ட 6,000 காவல்துறையினர்( காவலர்கள் + அதிகாரிகள், சிறப்பு அதிரடிப் படையினர், மத்திய மாநில உளவு, நக்சல் ஒழிப்பு பிரிவினர்) சம்பளம், போக்குவரத்து செலவுகள்……? 7) கோவை மாநகரம் – பேரூர் வரை போக்குவரத்து முறைப்படுத்த அமர்த்தப்பட்ட 1300 மாநகர காவல் துறை சம்பளம்….. இந்த கார்ப்பரேட் திருவிழாவிற்கு இவை போன்ற செலவு எல்லாம் அரசாங்கம் சார்ந்தது! குவியும் பணம்; இந் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கெடுத்துக் கொண்டனர். இது புதிது அல்ல! இவர்களின் ஒரு நாள் வருகையாலும், அதிரும் ஒலி பெருக்கிகள் பாடல்களாலும், அங்கு சேரும் மனித கழிவுகளாலும் அந்த வனப் பகுதி பாழ்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, இது ஏதோ அந்தக் கால ராஜாங்க விழாவைப் போல நடந்தேறுகிறது, 5,000 முதல் 5 லட்சங்கள் வரை இங்கு அமர்வதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. உத்திராட்ச மாலை உள்ளிட்ட பக்தி அயிட்டங்கள், ஜக்கியின் காலடி போட்டோவின் விலை ரூ 3,200 ..ஆகியவற்றின் விற்பனை பல லட்சங்களை தாண்டும். இசை உலகின் மிகப் பிரபலங்களை இந்த நிகழ்விற்கு பாடவும்,இசைக்கவும் அழைக்கிறார்கள். அவர்கள் அதற்காக கட்டணங்கள் வசூலிப்பதில்லை. இதை ஒரு ஆன்மீகத் தொண்டாகவே செய்கிறார்கள் அவர்கள்! பல பெரு நிறுவனங்கள் இதற்கு ஸ்பான்சர் செய்கின்றன. அதனால், இரண்டு இலட்சம் பேருக்கு மஹா அன்னதானம், பிரமாண்டமான ஒளி, ஒலி அமைப்புகள், ஒருவார கால ஆட்டம் பாட்டம், இசை- பாடல்கள், நாட்டிய, சொற்பொழிவுகள் எனப் பல செலவுகள் யாவற்றையும் பணக்கார பக்தர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். ஏன் இந்த மெஹா ராத்திரி என்றால், அதிகார மையங்களுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை உணர்த்தி, இலட்சக்கணக்கான பக்தர்களிடம் பார்ப்பனீய இந்துத்துவா அரசியலை நிறுவிக் கொள்வதோடு, மிகப் வருவாய் ஈட்டுவதாகும். இவை எதற்கும் முறையான கணக்கோ, வருமான வரியோ ஈஷா மையம் கொடுப்பதில்லை. ஜக்கி உண்மையான துறவியா? ஜக்கியின் வார்த்தையை உண்மையென நம்பி 500-க்கும் மேலானோர் இதுவரை துறவறம் எடுத்திருப்பார்கள். வாயில் நுழையாத பெயர் மாற்றம், அவர்கள் முக்திக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினர் அனைவரின் முக்திக்கும் (முக்திக்கும் மட்டும்) உத்திரவாதம், மறுபிறவி இல்லை என்ற உறுதி எல்லாம் கொடுப்பார். அவர்களை தனது அங்கங்கள் (ஈஷாங்க) என்று வர்ணிப்பார். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அனைவர்க்கும் தான் ஒரு கவசமாக இருந்து காப்பாற்றுவேன் என்றெல்லாம் நம்பவைப்பார்; அனைவருக்கும் வருடம் தவறாமல் Health insurance premium கட்டிவிடுகிறார். “ஆன்மீக பாதைக்கு துறவற வாழ்க்கைதான் சிறந்தது என்றும், குடும்ப வாழ்கை ஒரு சுமையோடு மலை ஏறுவது போல கடினமானது” என்றெல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவார். இதை கேட்டு, பலர் தங்கள் குடும்பங்களை (கணவன்/மனைவி) துறந்திருக்கிறார்கள். அவர்களிடம் வரும்போது மறக்காமல் அவர்கள் சொத்துக்களை பிரித்து வாங்கி வந்து விடுமாறு அறிவுறுத்துவார். கரூரில் பிரபலமான பரமேஷ் என்பவரின் குடும்ப கதையே இதற்கு சான்று. 2017 -ல் மோடி வந்த போது எனினும், இதுவரை 150-க்கும் மேலான சாமியார்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள். மேலும்,குடும்ப வாழ்கையில் இருந்து கொண்டும் ஆன்மீக தொண்டு என்று இவர் கூறியதை நம்பி வந்தவர்களில் வெளியே சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தை தாண்டும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பாலமுருகன் என்னும் பஞ்சாப் cadre IAS 5 வருட காலம் ஈஷாவின் CEO வாக சம்பளம் இல்லாமல் தொண்டு புரியும் ஆவலோடு வந்தவருக்கு இரண்டு வருடத்திலேயே பல உண்மைகள் புரிய வெளியேறிவிட்டார். 20-25 ஆண்டு காலம் ஈசாவின் மேல் மட்டத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த பலர் வெளியேறிவிட்டார்கள். குறிப்பாக திலிப் அண்ணா என்கிற திலிப்/ AUDITOR ராஜரத்தினம் ஈஷாவின் Managing Trustee யாக 1999-2010வரை இருந்து வந்தார். ‘விஜியின் இறப்பின் மர்மத்தில் தான் கைது செய்யப்படுவோம்’ என்று எதிர்பார்த்து ஜக்கி அவருக்கு பதிலாக இந்த பதவியில் திலிப்பை அமர்த்தினார். நிலங்கள் வாங்குவதில் ஜக்கி காட்டும் பேராசையையும், குறுக்கு வழிகளையும் கண்டு Managing Trusteeயாக கையெழுத்திட பயந்து ஜக்கியை எதிர்க்க, அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவித்து விட்டார். ஈஷாவில் இருந்து விலகிய திலீப் 2014 அக்டோபர் மாதம் கோத்தகிரி மலைப்பாதையில் ஒரு மர்மமான விபத்தில் மரணம் அடைந்தார். கர்மா, விழிப்புணர்வு, சம்போ, சிவசம்போ, அண்ணா, அக்கா போன்ற வார்த்தைகளை மட்டுமே அதிகம் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும். ஜக்கி வளர்க்கும் சித்தா, மல்லி, லீலா சம்சன் போன்ற பெயர் கொண்ட பல ஜாதி நாய்கள் முதல் மாடுகள் வரை மேய்க்கும் பொறுப்புகள் கொடுக்கப்படும். சிஷ்யர்களுக்கு என்று கொடுக்கப்படும் சில தனிப்பட்ட பயிற்சிகள் எப்போதும் இவர்களை ஒரு அரை மயக்கத்தில் வைத்திருக்கும். நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் வேலை வாங்கப்படும். தங்கள் கர்மாவை வேகமாக கழிக்க பல மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று ஜக்கி அறிவுறுத்துவார். அதாவது ஒரு ஆள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் கழியும் கர்மாவை 18 மணி நேரம் செய்து 18 நாள் கர்மாவை ஒரே நாளில் கழிக்க முடியும் என்று பாடம் சொல்லித்தருவர். ஒரு ஆளுக்கு 3 ஆள் வேலை கொடுத்து விரட்டுவார். காலை 5மணி முதல் இரவு 12-1 மணி வரை வேலை. இரண்டு வேலை உணவு, தீவிர ஹட யோகா என்று உடலை பிழிந்து எடுத்து இரவு படுத்தால் பிணம் போல் கிடப்பார்கள். ஓய்வு என்று கொடுக்கும் காலத்தில் கூட மௌனத்தில் (silence) இருக்க செய்து விடுவார். இப்படியாக அவர்கள் கவனத்தை சிதற விடாமல் ஒரே திசையில் வைத்திருப்பார். இதுபோல சுமார் 10-20 வருடம் வேலை செய்தும் கர்மாவை முழுவதும் கழிக்க முடியாமல் பலர் வயதாகி திணறிக்கொண்டு இருக்கிறார்கள். யாராவது “எனக்கு கைவலி கால்வலி” என்று ஜக்கியிடம் சொன்னால், … “உன் கர்மா மூட்டை வெயிட் அதிகம். உனது முக்திக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் ” என்பார். இதைக்கேட்கும் மற்றவர்கள் அடுத்து அப்படி கேட்க மாட்டார்கள் இல்லையா ! சந்நியாசிகளுக்குள் பிணக்கு ஏற்படும் போது அவரிடம் முறையிடும் நபரை “நீ ஏன் அவன் கர்மாவை சுமக்கிறாய்? போச்சு போ உன் அக்கௌண்டில் புது கர்மாவும் சேர்த்துவிட்டது. கோட்டை அழி மொதல்ல இருந்து துவங்கு” என்று கூறி விடுவார். இங்குள்ள இளம் சிறார்களுக்கான பள்ளியில் படிக்கும், ஆண், பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுவதான குற்றசாட்டுகள் சுமார் 20 வருடங்களாகவே தொடர்ந்து வெளி வந்த போதும், இது வரை அவை குறித்து தீவிர விசாரணையோ, வழக்கு பதிவோ, குற்றப்பதிவோ அரசு தர்ப்பில் இல்லை. அவை குறித்து தற்போது பல புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஜக்கி ஒரு இண்டெலக்சுவல் ப்ராடு சாமியார்! கட்டுரையாளர்; சந்திர மோகன் https://aramonline.in/20890/isha-jakki-vasudev-fraud-godmen/
-
தேசிய மக்கள் சக்தியை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளால் சமாளிக்க முடியுமா?
தேசிய மக்கள் சக்தியை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளால் சமாளிக்க முடியுமா? Sivarasa Karunakaran Photo, Anura Kumara Dissanayake fb official page தேசிய மக்கள் சக்தியின் அலையைக் கடந்து, வடக்குக் கிழக்கின் அரசியலைத் தமிழ்த் தரப்புகள் முன்னெடுப்பது எப்படி? இந்தச் சவாலும் நெருக்கடியும் தமிழ்த் தரப்புகளுக்கு மட்டுமல்ல, வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் தரப்புகளுக்கும் உண்டு. ஏன் மலையகக் கட்சிகளும் இதை எதிர்கொள்ள வேண்டிய சவாலாக – நெருக்கடியாக – இந்தச் சூழல் உருவாகியுள்ளது. நேரடியாகச் சொன்னால், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது இந்தச் சூழல். மறுவளமாகப் பார்த்தால் பிராந்திய அரசியல் கேள்விக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் சமூகம்சார் பிராந்திய அரசியல் (Socio Regional Politics) என்பது தேசிய அரசியலின் போதாமையினால் (Inadequacy of National Politics) உருவாகியதே. ஆனால், சிலர் இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், இதை வேறுவிதமாக வியாக்கியானப்படுத்த முற்படுகிறார்கள். இதில் ஒரு தரப்பினரின் அபிப்பிராயம், NPP க்குச் சாதமாக உள்ளது. அவர்கள் சொல்கிறார்கள், “NPP ஒரு மாற்றுச் சக்தியாக இப்போதுதான் அதிகாரத்துக்கு வந்துள்ளது. அது தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உரிய வேலைகளைச் செய்வதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும், அவசரப்பட்டு, எல்லாவற்றையும் குழப்பக் கூடாது” என்று. இதற்கு அவர்கள் சொல்கின்ற நியாயம், “ஏற்கனவே ஒடுக்குமுறையைச் செய்து வந்த ஐ.தே.கவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் ராஜபக்ஷர்களுக்கும் தாராளமாகச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. இருந்தும் அந்தத் தரப்புகள் தமிழ் பேசும் சமூகங்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. பதிலாக மேலும் மேலும் நெருக்கடிகளையே உருவாக்கின. இறுதியில் ஊழல், அதிகார துஸ்பிரயோகம், பொருளாதார நெருக்கடி என நாட்டையே படுகுழிக்குள் தள்ளிவிட்டுள்ளன. இதையெல்லாம் ஒழித்துக் கட்டி, மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக, ஒரு மாற்றுச் சக்தியாக NPP வந்திருக்கிறது. அதுவும் இலங்கையின் வரலாற்றில் புதிய சக்தியாக. அதற்கொரு சந்தர்ப்பத்தை வழங்காமல், அவசரப்பட்டு நெருக்கடிகளைக் கொடுப்பது ஏற்கனவே இருந்த தீய சக்திகளை (UNP, SLFP, NPP போன்றவற்றை) மீளக் கொண்டு வருவதற்கே வழிவகுக்கும். இது வழமையைப்போல மக்களுக்கு விரோதமான அதிகாரத் தரப்புகளின் இரகசியக் கூட்டாகும். இதற்கு இடமளிக்க முடியாது” என. மட்டுமல்ல, “NPP யின் எழுச்சியும் அதற்கு தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதும் அறுதிப் பெரும்பான்மையோடு அது ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதும் புதிய அரசியல் ஒன்றுக்கான முழு மக்களின் அங்கீகாரமாகும். அதை எப்படி மறுதலிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள். இவர்கள் NPP ஐ முற்று முழுதாக நம்புகிறார்கள். அதனால் கேள்விக்கிடமில்லாமல் அதை ஆதரிக்கிறார்கள். அது தவறு செய்தால் அல்லது அது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்வது? என்பதற்கு இவர்களிடம் பதிலே இல்லை. மாறாக “அதற்கு வாய்ப்பொன்றைக் கொடுத்தால் கெட்டா போய் விடுவோம்?” என்று மட்டும் திரும்பத்திரும்பக் கேட்கிறார்கள். அரசியலில் நம்பிக்கை முக்கியமான ஒன்றுதான். நம்பிக்கையில்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற கருத்தையும் மறுதலிக்க முடியாது. ஆனால், எந்த நம்பிக்கையையும் ஒன்றுக்குப் பல தடவை சந்தேகிக்க வேண்டும். ஒவ்வொன்றைப் பற்றியும் ஒன்றுக்கு பத்துத் தடவை கேள்வி எழுப்புங்கள் என்பதும் அரசியல் மந்திரமே. நம்பிக்கையில் முதலீடு செய்யப்பட்ட போராட்டங்களுக்கும் அரசியலுக்கும் நடந்த கதையெல்லாம் தெரிந்தவர்கள் நாம். நம்முடைய வரலாறே நம்பிக்கைத் தோல்வியின் கசப்புகள் நிரம்பியதுதான். ஆகவே, கண்களை மூடிக்கொண்டு நம்பிக்கையின் கயிற்றைப் பிடித்துப் பின்தொடர முடியாது. அந்தளவுக்குப் பொறுத்திருக்கக் கூடிய நிலையில் தமிழ் பேசும் சமூகத்தினர் இல்லை. அதாவது, ஒடுக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட – மக்கள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களிடம் அளவுக்கு மிஞ்சிய காத்திருப்பையும் பொறுமையையும் யாரும் எதிர்பார்க்கவும் முடியாது. அதைக் கோரவும் கூடாது. அது நீதியற்றது. இன்னொரு தரப்பினரோ “இந்தப் பிராந்திய அரசியலின் காலம் முடிந்து விட்டது. அதாவது, இனத்துவ அடையாளத்தை முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியலுக்கு (Ethnic Politics) இனி இடமேயில்லை. எப்படியென்றாலும் அது இனவாதத்தில்தான் போய் முடியும். அதைத் தொட்டாலும் சரி, தொடர்ந்தாலும் சரி, எதிர்த்தரப்புகள் தமது இனவாதத்துக்கு அதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும். ஏதோ வகையில் இப்பொழுது மக்களும் அதை நிராகரித்து விட்டனர். மட்டுமல்ல, அவ்வாறான அரசியலினால் மக்களுக்குக் கிடைத்த நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். அந்த அரசியல் பெற்ற வெற்றிகளை விட அடைந்த தோல்விகளே கூடுதல். ஆகவே, அந்த அரசியலை இனியும் முன்னெடுப்பதால் பயனில்லை. அதற்கான காலச் சூழலும் இனி இருக்காது. சர்வதேச நிலவரங்களும் பிராந்தியச் சூழலும் உள்நாட்டின் நிலவரங்களும் மக்களின் உளநிலையும் அதைக் கடந்ததாகவே உள்ளது. இதை மக்கள் புரிந்து கொண்டபடியாற்தான் அவர்கள் NPP க்கு ஆதரவளித்துள்ளனர். இனி இந்த நிலைதான் தொடரும்” என வாதிடுகின்றனர். இதற்கு இவர்கள் சொல்கின்ற காரணங்களில் ஒன்று, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசியற் சக்திகளை மக்கள் ஓரங்கட்டி, NPP க்கு ஆதரவு அளித்ததை. இவர்களும் ஏதோ ஒரு வகையில் NPP க்குச் சார்பாகவே உள்ளனர். NPP க்குச் சார்பாக இருப்பது தவறில்லை. அது அவர்களுடைய அரசியல் விருப்பாகவும் உரிமையாகவும் இருக்கலாம். ஆனால், இங்கே உள்ள கேள்வியும் தவிர்த்துச் செல்ல முடியாத பிரச்சினையாகவும் இருப்பது, தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய அரசியற் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? அதாவது, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தேசிய இனங்களுடைய பிரச்சினைக்கு, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்குத் தீர்வு என்ன? அதை NPP எப்படி, எப்போது வழங்கப்போகிறது? அதற்கான உத்தரவாதம் என்ன? என்பதாகும். அந்தப் பதில் எத்தகைய அழகான – புனிதப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கும் அப்பால், நடைமுறைச் செயல்களாக இருக்க வேண்டும். அதுவே NPP யும் அதை ஆதரிப்போரும் கூறிவரும் “நம்பிக்கைக் கொள்ளுங்கள். நன்மை நடக்கும்” என்பதை உறுதிப்படுத்தும். அதன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆனால், NPP யும் சரி, அதனை ஆதரிப்போரும் சரி இதில் கவனம் கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் பிரச்சினையைப் பொதுமைப்படுத்தப் பார்க்கின்றனர். இலங்கையில் அடிப்படையாக இருப்பது பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையே. அதுவே முதன்மையானது. அதனோடு இணைந்ததாகவே (வேலை வாய்ப்புப் பிரச்சினை, அபிவிருத்திச் சிக்கல்கள், சமநிலைக்குறைவு, முரண்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் என) ஏனைய பிரச்சினைகள் (இனப்பிரச்சினை உட்பட) எனக் கருதுகிறார்கள். 75 ஆண்டுகளுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையை அவ்வாறு பொதுமைப்படுத்துவது, இந்தச் சமூகத்தினருக்கு மாறானது மட்டுமல்ல, இன்றைய உலகின் நடைமுறைகளுக்கும் போக்கிற்கும் கூட எதிரானது. அப்படிப் பார்க்க முற்பட்டதன் விளைவுகளே, இலங்கையில் அதிகாரத்துக்கு வெளியே உள்ள சிங்களரல்லாத மக்களாகிய தமிழ், முஸ்லிம், மலையக சமூகத்தினர் ஒடுக்குதலுக்குள்ளாக வேண்டியிருப்பதாகும். இது பின்நவீனத்துவ யுகம் (Postmodern Era). இந்த யுகம் அதாவது பின்நவீனத்துவக் காலம் மையநோக்கை ஏற்பதில்லை. மையம், அதிகாரம் மூலம் உருவாக்கப்படுவது. யதார்த்தமும் உண்மையும் கோருவது, மையத்தைச் சிதைத்து அல்லது உடைத்து அதிகாரத்தைப் பகிருமாறும் பரவலாக்கம் செய்யுமாறுமே. இலங்கையில் உள்ள பிரச்சினையும் இதுவரையும் நடந்த போராட்டங்களும் இப்போதுள்ள சிக்கலும் கூட அதிகாரத்தைப் பகிர்வதிலும் பரவலாக்கம் செய்வதிலும் உள்ள தயக்கத்தினாலும் மறுப்பினாலும் உருவாகியவையே. ஆகவே, இவற்றையெல்லாம் புரிந்துகொண்டே NPP யும் அதனை ஆதரிப்போரும் பேச வேண்டும். சில காரணங்களால் சில சந்தர்ப்பங்களில் மக்கள், சில அலைகளின் பின்னால் செல்வதுண்டு. அது தற்காலிகமானது. 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கை செய்யப்பட்டபோதும் அதையொட்டி இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வடக்குக் கிழக்கிற்கு வந்தபோதும் அதைத் தமிழ் மக்கள் வரவேற்றனர். உச்சக்கட்டமாக இந்திய அமைதிப்படைக்கு மாலை அணிவித்து வரவேற்ற நிகழ்ச்சிகளும் உண்டு. 1994 இல் சந்திரிகா குமாரதுங்க அதிகாரத்துக்கு வந்து சமாதானப் பேச்சுகளை ஆரம்பித்தபோதும் ஒரு நம்பிக்கை அலை அடித்தது. “தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் உண்டு. அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாதத்துக்காக – சிங்கள மேலாதிக்கத்துக்காக – வெட்கப்படுகிறேன்; வருந்துகிறேன். அவர்களுடைய பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்” என்று கூறி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை அவர் ஆரம்பித்தபோது, சமாதானத் தேவதையாகச் சித்தரிக்கப்பட்டார். மட்டுமல்ல, சந்திரிகா சீப்பு, சந்திரிகா Bag, சந்திரிகா செருப்பு என்று அன்றாடப் பாவனைப் பொருட்களுக்குப் பெயர் சூட்டி மகிழும் அளவுக்கு சந்திரிகா குமாரதுங்க மீதான விருப்பு அலை அடித்தது. ஆனால், பின்னர் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த விருப்பு அலை, வெறுப்பு அரசியலாக மாறியது. ஆகவே, இங்கே கவனிக்க வேண்டியிருப்பது, இனப்பிரச்சினையை அல்லது தமிழ் பேசும் சமூகங்களின் பிரச்சினையை அதனுடைய அடிப்படைகளிலிருந்தும் ஆழத்திலிருந்தும் புரிந்துகொண்டு, தீர்வைக் காண வேண்டும் என்பதேயாகும். மேலோட்டமாக அவற்றை வியாக்கியானம் செய்ய முற்படுவதோ, அதை வேறு விதமாக மடைமாற்றம் செய்வதோ அல்ல. தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் பேசும் சமூகத்தினர் வழங்கிய ஆதரவு என்பது, தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தை அளித்திருப்பதாகவே கருத வேண்டும். உண்மையும் அதுதான். இதை விட்டு, தமிழ் பேசும் மக்கள் சமூகப் பிராந்திய அரசியலில் அல்லது இனத்துவ அரசியலில் சலிப்புற்று, தேசிய அரசியலில் கரைந்துள்ளனர். இனி இனத்துவ அரசியலின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். தொடர்ந்தும் தேசிய அரசியலுக்கே அவர்கள் ஆதரிவளிப்பர் என்று அர்த்தப்படுத்தினால், அது மிகப் பெரிய தவறாகவே அமையும். அது NPP மீதான நம்பிக்கையிழப்பாக மட்டுமன்றி, அதன் மீதான வரலாற்றுக் கறையாகவும் மாறும். நாட்டை மீண்டும் இருண்ட யுகமொன்றுக்குள் தள்ளும். ஏனென்றால், பிரச்சினை தீர்க்கப்படாத வரையில் முரண்பாடுகள் நீடிக்கும். முரண்பாடுகள் நீடிக்கும் வரையும் பகையுணர்ச்சி தீராது. பகையுணர்ச்சி நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் அமைதிக்கும் எதிரானது. ஒருமைப்பாடின்மையும் அமைதியின்மையும் நீடிக்குமாக இருந்தால் நாடு பின்னோக்கியே செல்லும். NPP யின் தற்போதைய உளநிலையில் இனப்பிரச்சினையைப் பற்றிய அதனுடைய புரிதல் மேலோட்டமானதாகவே உள்ளது. இல்லையென்றால், அதற்குக் கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பைக் கொண்டு, அரசியமைப்பை மாற்றி அமைக்க முற்பட்டிருக்கும். அதற்கே முன்னுரிமை அளித்திருக்கும். அதைத் தாமதிக்க முற்படாது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அது பின்னடைவை நோக்கியே செல்கிறது என்று அர்த்தமாகும். இந்தச் சூழலில்தான் சமூகப் பிராந்திய அரசியலை அல்லது இனத்துவ அரசியலை முன்னெடுக்கும் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியற் சக்திகள் தம்மை மீளெழுச்சிக்குள்ளாக்குவதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அந்த மீளெழுச்சி என்பது மேலோட்டமானதாக – மறுபடியும் அதே பலவீனமான வழிகளில் அமையக்கூடாது. எவ்வாறான தந்திரோபயங்களைப் பயன்படுத்தி, NPP யிடமிருந்து தமிழ் பேசும் மக்களைப் பிரித்தெடுக்க வேண்டும்? என்று சிந்திப்பதற்கு அப்பால், தாம் எத்தகைய அரசியலை முன்னெடுக்க வேண்டும்? அதை எப்படி முன்னெடுப்பது? அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது – வெற்றியடைய வைப்பது? என்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும். முக்கியமாக தோற்றுப்போன அரசியற் பிரகடனங்களையும் வழிமுறைகளையும் தயக்கமின்றி விலக்க வேண்டும். தற்போதைய அவதானிப்பில், ‘இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு முரண்பாடுகள் – வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்ச் சக்திகள் அனைத்தும் ஒருமுகப்பட்டு, ஒன்றிணைந்து நிற்பது அவசியம்’ என்ற கருத்து மேலெழுந்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, தமிழ் அரசியற் கட்சிகள் மட்டுமன்றி, தமிழ்ச் சக்திகள் என்ற வகையில் அனைத்துச் சக்திகளும் ஒருமுகப்பட்டு நிற்பது என. அதற்கான முயற்சிகளும் நடக்கின்றன. இது ஒரு வகையில் தேவையானதுதான். ஆனால், இது மட்டும்போதாது. மட்டுமல்ல, இந்த ஒருங்கிணைவும் ஒரு முகப்படுதலும் நீடித்து நிற்கக் கூடியதல்ல. அதுவும் தேர்தல் அரசியலில். ஆகவே, அதற்கு அப்பாலும் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதேவேளை, இந்த ஒரு முகப்படுதலையும் ஒருங்கிணைவையும் தமிழ் இனவாதத்தின் திரட்சி (Accumulation of Tamil Racism) என்று NPP யும் ஏனைய சிங்களத் தரப்பும் வெளியுலகும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய அபாயமும் உண்டு. மட்டுமல்ல, அப்படி ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கி, NPP அரசாங்கம் தன்னுடைய வரலாற்றுப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கும் வேறு விதமாக இனப்பிரச்சினையைக் கையாள்வதற்கும் காரணமாகி விடும். ஆகவே, இதற்கெல்லாம் இடமளிக்கக் கூடாது. மாறாக, அதற்கேற்ற வகையில் இதை மிகப் புத்திசாலித்தனமாகக் கையாள வேண்டும். அதில் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று, NPP அரசாங்கத்தை முற்று முழுதாக எதிர்ப்பதாகக் காட்டாமல், அதனுடைய சரிகளுக்கு ஆதரவாகவும் தவறானவைகளுக்கு எதிராகவும் நிற்கிறோம் என வெளிப்படுத்துவது. அடுத்தது, நிரற்படுத்த வேண்டிய வேலைப்பட்டியலைப் பரிந்துரைப்பது – பகிரங்கப்படுத்துவது. அதை மேற்கொள்ளும் வகையில் அழுத்தங்களை சினேகபூர்வமாகவும் அதற்கப்பாலும் அழுத்துவது. இவ்வாறு செய்யும்போது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் அடிப்படையான உண்மைகள் தெளிவாகும். தவறான புரிதலுக்கு இடமிருக்காது. இன்னொன்று, சமூகப் பிராந்திய அரசியலின் முக்கியத்துவத்தை (Importance of Socio-Regional Politics) வழமையான வாய்பாட்டு அறிதல்களுக்கு அப்பால், உணர்த்துவது. அதாவது, இனரீதியான அல்லது சமூக ரீதியான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இன்னும் இருப்பது ஏன் என்பதை விளக்க வேண்டும். அதனுடைய நியாயத்தைத் தெளிவாக்குவது அவசியம். இது மிக மிக அவசியமானது. இதில்தான் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். இனவாதமாகச் சுருக்கவும் திரிவுபடுத்தவும் கூடிய அபாயமுள்ள இந்த விடயத்தை (அப்படித்தான் அதை மடைமாற்றம் செய்து வந்துள்ளனர்) பக்குவமாக – புத்திபூர்வமாகக் கையாள வேண்டும். கூடவே தனியே தமிழ் மக்கள் மட்டுமென்றில்லாமல், தமிழ் பேசும் சமூகத்தினர் என்ற அடிப்படையில் NPP ஐ எதிர்கொள்ள வேண்டியிருப்பதைப் பற்றிச் சிந்திப்பதும் நல்லது. குறைந்தபட்சம் வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம்களோடாவது ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும். வரவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்ச் சமூகத்தின் சமூகப் பிராந்திய அரசியலை (Socio-Regional Politics) நெருக்கடிக்குள்ளாக்குவதற்கே NPP முயற்சிக்கும். ஆளும் தரப்பு அப்படி முயற்சிக்கும். அதற்காக அது கடுமையாகப் பாடுபடும். தேர்தல் அரசியலில் இது வழமையே. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததால் தமது ஒட்டுமொத்த அரசியலும் பின்னடைந்து விட்டதாகவோ, அதற்கு இனிமேல் இடமில்லை என்றோ யாரும் கருத வேண்டியதில்லை. அப்படியென்றால், பெரும்பாலான காலமும் தோல்வியின் தளத்திலேயே நின்ற – பயணித்த ஜே.வி.பி. எப்போதோ இல்லாதொழிந்து போயிருக்க வேண்டும். அப்படி நிகழவில்லையே. அது தன்னுடைய அரசியலைப் புத்தாக்கம் செய்வதாக, தன்னுடைய அணுமுறைகளையும் வடிவத்தையும் மாற்றிக் கொள்வதாகவே கொண்டிருந்தது. அதன் விளைவே NPP யும் அதனுடைய வெற்றியுமாகும். தமிழ்த் தரப்பும் தன்னை முன்னிலைப்படுத்துவதற்குத் தகுதியாக்கம் செய்ய வேண்டும். அது வெறுமனே தேர்தற் கூட்டுக்கான ஒருங்கிணைவாக இல்லாமல், சமூகப் பிராந்திய அரசியலுக்கான (Socio-Regional Politics) அந்த அரசியலின் வெற்றிக்கான ஒருமுகப்படுதலாக இருக்க வேண்டும். அதுவே அதனுடைய நெருக்கடிகளிலிருந்து அதை விடுவிக்கும். அந்த மக்களையும்தான். இதற்கு அதனுடைய வரலாற்றுப் படிப்பினைகள் உதவும். கருணாகரன் https://maatram.org/articles/11989
-
எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை February 28, 2025 11:18 am வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களும் ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தினர். ஏவுகணை கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவின் பாதுகாப்பு சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 1,587 கிலோமீட்டர் பயணம் செய்து 130 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அதன் இலக்கை அடைந்ததாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்து கிம் ஜாங்-உன் திருப்தி வெளியிட்டுள்ளார். போர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணு பாதுகாப்பு கூறுகளின் செயல்திறனை மதிப்பிடுவதன் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் வடகொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும். டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு நடத்தப்படும் இரண்டாவது சோதனை இதுவாகும். கிம் ஜாங்-உன்னுடன் தான் உடன்படுவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் கிம் ஜாங் உன் ஒரு புத்திசாலி நபர் என்றும் டிரம்ப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/warning-to-enemies-north-korea-tests-missile-again/
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையே இன்று சந்திப்பு February 28, 2025 12:13 pm அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் வருகையும் ட்ரம்ப் உறுதிப்படுத்தியிருந்தார். அவரது இந்த விஜயத்தின் போது அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஒரு விரிவான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று டிரம்ப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் எதிர்காலத்தில் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அமெரிக்கா எதனையும் வழங்காது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/meeting-between-trump-and-chelensky-today/
-
ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா?
ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா? February 28, 2025 11:10 am முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் சில அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளையே பின்பற்றி வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் ரணில் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளையே அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. அதற்கு ஏற்றால்போல் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளில் இருந்து விலகி செயல்பட முடியாதென அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சமகால அரசாங்கத்துக்கும், தமது கொள்கைகளுக்கும் பாரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்பதை வெளிகாட்டும் முகமாகவும் ஓர் அரசாங்கத்துக்கு உள்ள செல்வாக்கும் சர்வதேச ரீதியில் தமக்கு தனிப்பட்ட ரீதியில் இருப்பதாகவும் வெளிகாட்டும் வகையிலான நிகழ்ச்சி நிரலொன்றின் கீழ் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டு வருவதாக தெரியவருகிறது. அதன் காரணமாகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்தியப் பயணத்துக்கு முன்பும், பின்பும் இரண்டுமுறை ரணில் விக்ரமசிங்க புதுடில்லிக்கு பயணங்களை மேற்கொண்டதாக தெரியவருகிறது. அதன் பின்னர் கடந்த 16ஆம் திகதி ஓமானில் நடைபெற்ற இந்தியன் ஓசன் மாநாட்டில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஜெய்சங்கரை சந்தித்ததற்கு இணையான சந்திப்பு போல் காட்டப்பட்டது. ஓமானில் விஜித ஹேரத் மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தப் பின்னணியில் இன்று இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார். இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்துகொள்ள உள்ளார். புதுடில்லியில் இந்திய பிரதமர் மோடியுடன் ரணில் விக்ரமசிங்க முக்கிய சந்திப்பொன்றை நடத்த உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. அத்துடன், அமைச்சர் விஜித ஹேரத்துடனும் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாகவும் தெரியவருகிறது. சமகால அரசாங்கம் தமது கொள்கைகளை பின்பற்றுவததாக மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கிலான அரசியல் நகர்வுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதன் பின்புலத்திலேயே பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் அறிய முடிகிறது. சமகால அரசாங்கம் தமது கொள்கைகளின் கீழ் செயல்படுவதாக மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை நிறுத்திவிட்டால் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக மீண்டும் ஸ்திரமான இடத்தை அடைய முடியும் என ரணில் விக்ரமசிங்க கருதுவதாகவும் தெரியவருகிறது. https://oruvan.com/ranils-moves-are-they-a-danger-to-the-anuradhapura-government/
-
சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்
சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம் February 28, 2025 11:41 am மறைந்த சாந்தனின் ஓராண்டில் துயிலாலயம் இன்று காலை எள்ளங்குளம் இந்து மயானத்தில் அவரை புதைத்த இடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் சாந்தன் உயிரிழந்தார். அவரின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தாயக மண்ணில் விதைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் துயிலாலயம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/the-dedication-of-the-temple-to-santhan/
-
சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் - சிறிதரன் எம்.பி
சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் - சிறிதரன் எம்.பி சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற வார்த்தைக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறிதரன் உரையாற்றியிருந்தார். 4 விடங்களை முன்வைத்து நீதியமைச்சரிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் வினவியிருந்தார். 1. தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்? 2. இந்த தமிழ் அரசியல் கைதிகள் எந்தெந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? 3. இவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்? 4. மனிதாபிமான அடிப்படையிலோ,ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையிலோ இவர்களை விடுதலை செய்ய முடியுமா?என்ற கேள்விகளை சிறிதரன் சபையில் முன்வைத்தார். இந்த கேள்விகள் முக்கியமானவை எனவும் இந்த விடயம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை வழங்க தாம் எதிர்பார்ப்பதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். எனினும் பாதீட்டினுடைய செலவு அறிக்கையை நாளை சமர்ப்பிக்கவுள்ளதால் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எனவே ஒருவார கால அவகாசம் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்த சிறிதரன் எம்.பி அமைச்சரின் கருத்துக்கு தலைசாய்ப்பதாகக் குறிப்பிட்டார். மனிதாபிமான அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதேவேளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயரைக் குறிப்பிட்டும் அவர்களது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் குறிப்பிட்டவர்களின் பெயர் விபரங்களை இன்றைய தினம் தனக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். Hiru Newsசிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற அடிப்படையில் தமிழ் அரசியல...சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் - சிறிதரன் எம்.பி. Most visited website in Sri Lanka.
-
தனித்தே போட்டி; சுமந்திரன் அறிவிப்பு
தனிவழி செல்வதில் சுமந்திரன் விடாப்பிடி சுரேஷ் சுட்டிக்காட்டு! நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்து தனிவழியில் செல்லும் முடிவில் மாற்றங்கள் இன்றியே பயணிக்கின்றார் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர் இன்று நேற்று அல்ல. இரண்டு வருடங்களின் முன்னரும் இதே கொள்கையிலேயே இருந்தார். இன்றும் அதே முடிவுடன் தான் அவர் இருக்கின்றார். தமிழ்மக்களைப் பொறுத்தவரை அனைவரும் ஓரணியாகத் திரளவேண்டும் என்பது அவர்களுடைய தேவையாக இருக்கின்றது.அதனை அனைவரும் புரிந்துகொண்டு ஓரணியில் திரள்வது தொடர்பாகப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடவேண்டுமென்றால் அது அவர்களின் முடிவு-என்றார். https://newuthayan.com/article/தனிவழி_செல்வதில்_சுமந்திரன்_விடாப்பிடி%C2%A0சுரேஷ்_சுட்டிக்காட்டு!
-
யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனாவில் இடம்பெறும் தொழிற்சங்கப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்; பணிப்பாளர் நம்பிக்கை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குவரும் என்று யாழ்ப்பாணம் போதனா பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். போராட்டத்தை மேற்கொண்டுவரும் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். https://newuthayan.com/article/போதனாவில்_இடம்பெறும்_தொழிற்சங்கப்_போராட்டம்_விரைவில்_முடிவுக்கு_வரும்;_பணிப்பாளர்_நம்பிக்கை%C2%A0
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கார்டினல் மால்கம் ரஞ்சித்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அது காதில் விழவில்லை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார், அரசாங்க புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தனர் என்று கூறினார். “தாக்குதலுக்கு முன்பே நாங்கள் கார்டினலை அணுகி அவருடன் நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தோம். இருப்பினும், அவர் எங்கள் எச்சரிக்கைகளை புறக்கணித்தார்,” என்று அவர் குற்றம் சாட்டினார். “பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் என்ற முறையில், தாக்குதல் குறித்து தொடர்புடைய பணியாளர்களுக்குத் தெரிவிக்க எங்களுக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்புப் படைகளைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை. புலனாய்வுப் பிரிவுகளால் கூட அணுக முடியாத பல ரகசியத் தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன,” என்று ஞானசார தேரர் கூறினார். “2014 முதல் தாக்குதல் குறித்து நான் எச்சரித்து வந்தேன். அந்த நேரத்தில் அந்தந்த அரசாங்கத் தலைவர்களுக்கு 17 கடிதங்களை அனுப்பினேன். நாட்டில் வேறு பல தீவிரவாதக் குழுக்கள் தோன்றுவது குறித்தும் நான் கவலை தெரிவித்தேன்,” என்று அவர் கூறினார். அரசாங்கத்தின் எந்த உதவியும் இல்லாமல், இந்தத் தகவல்கள் அனைத்தையும் நாங்கள் சுயாதீனமாகச் சேகரித்தோம். நாட்டின் இன ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நலன்களுக்காக நாங்கள் இதைச் செய்தோம்,” என்று அவர் கூறினார். “இறுதியாக, நாங்கள் அறிக்கையை ஒப்படைத்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தன்னிடம் இருக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு தற்போதைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/ஈஸ்டர்-தாக்குதல்-எச்சரிக/- இஷா கோபிகரை நினைவூட்டும் ‘என் சுவாசக் காற்றே’!
இஷா கோபிகரை நினைவூட்டும் ‘என் சுவாசக் காற்றே’! 26 Feb 2025, 8:10 PM சில திரைப்படங்கள் சில நினைவுகளின் எச்சங்களாகத் திகழும். அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களே அதனை மறந்திருந்தாலும், அதனைப் பார்த்து ரசித்தவர் மனதில் கோடானுகோடி எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். எந்தவொரு கலைப்படைப்புக்கும் அது பொருந்தும். அந்த வகையில், ‘என் சுவாசக் காற்றே’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீதமிருக்கிறது. அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தந்த பாடல்களைக் கேட்டுவிட்டு, ‘மிஷன் இம்பாஸிபிள்’ டாம் க்ரூஸ் போன்று அரவிந்த் சாமி சாகசம் செய்யும் ஸ்டில்களை பார்த்துவிட்டு ஆவலோடு அப்படத்தைக் காண தியேட்டருக்குச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. வீணான ‘காஸ்ட்டிங்’! ஒரு அழகான நாயகன். அழகழகான நாயகி. இரண்டு பேருக்கும் காதல் மெதுவாக மலர்கிறது. அதனைச் சிதைக்க ஒரு வில்லன் வருகிறார். அவர் நாயகனுக்கு நன்கு தெரிந்தவர். நாயகனை ஒரு மனிதர் ‘வளர்ப்பு மகன்’ ஆகப் பாவிக்கிறார். அவரது ஒரிஜினல் மகன் தான் வில்லன். ‘உன் அப்பனை கொன்னுடுவேன்’ என்று சொல்லியே சிறு வயது முதலே தனக்குச் சாதகமாகச் சில தவறுகளைச் செய்ய வைக்கிறார். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. நம் நாயகன் வளர்ப்பு தந்தையின் மீது பாசம் கொண்டவராக மட்டுமல்லாமல், ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கர் ஆகவும் இருக்கிறார். அவ்வாறு ஒரு குற்றத்தைச் செய்யும்போது அவர் மாட்டிக்கொள்ளும் சூழல் வருகிறது. உயிருக்கே ஆபத்து எனுமளவுக்கு நிலைமை மாறுகிறது. அதன்பின் நாயகன் என்னவானார்? நாயகி உடனான அவரது காதல் என்னவானது? அந்த வில்லன் என்னவானார் என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை. இதில் நாயகனாக அரவிந்த் சாமி, நாயகியாக இஷா கோபிகர், வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். நாயகனை வளர்ப்புமகனாக கருதும் மனிதராக ரகுவரன் தோன்றியிருந்தார். இது போக தேவன், சந்தானபாரதி, தலைவாசல் விஜய் உட்படப் பலர் இதில் நடித்திருந்தனர். ரகுவரன், பிரகாஷ்ராஜ் இருவரும் அக்காலகட்டத்தில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட வில்லன் நடிகர்கள். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து தோன்றிய காட்சிகள் எதுவும் விசிலடித்துக் கொண்டாடும் அளவுக்கு அமையவில்லை. சின்னி ஜெயந்த், வடிவேலுவைக் கொண்டு நகைச்சுவை ட்ராக் ஒன்றும் இதில் சேர்க்கப்பட்டிருந்தது. ‘கோபப்படுற மாதிரி காமெடி பண்ணக்கூடாது’ என்று சொல்கிற அளவுக்கு அவர்களது காட்சிகள் இருந்தன. சிறப்பானதொரு ‘காஸ்ட்டிங்’ இப்படத்தில் இருந்தும், தகுந்த காட்சியமைப்பு இல்லாததால் அவர்களது பங்களிப்பு வீணாகிப் போனது. ரஹ்மானின் இசை! நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு ஏற்றவாறு படத்தில் சில காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குனர் கே.எஸ்.ரவி. இவர் தெலுங்கி ‘ஆக்ரஹம்’, தமிழில் ‘ஹானஸ்ட்ராஜ்’, ‘மிஸ்டர் ரோமியோ’ படங்களை இயக்கியவர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரையும் இவரையும் வித்தியாசப்படுத்த முடியாமல், அக்காலகட்டத்தில் பத்திரிகைச் செய்திகளில் குழப்படி நடந்ததுண்டு. ’பாடல்களை எழுதிய வைரமுத்துவே, அதற்கு முன்னதாக வரும் காட்சிகளுக்கு வசனம் எழுதினாரோ’ என்று நினைக்கும் அளவுக்கு அக்காட்சிகள் அமைந்திருக்கும். அதனால் படத்திற்கு எந்தப் பயனும் இல்லை. தூய தமிழில் வசனங்கள் அமைந்தாலும், அதனைக் கொண்டாடும்விதமான பாத்திர வார்ப்போ, காட்சிச் சூழலோ படத்தில் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், ஒரு ஐரோப்பியப் படத்தில் தமிழ் ஆடியோவைச் சேர்த்தது போலிருந்தது இப்படம் தந்த அனுபவம். அதே நேரத்தில், ‘தீண்டாய் மெய் தீண்டாய்’ எனும் காலத்தால் அழியாப் பாடலை இதில் தந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். காதல் இணையின் முதல் ஸ்பரிசத்தை என்றென்றைக்கும் நினைவுகூரத்தக்க பாடல் அது. ’சின்னச் சின்ன மழைத்துளிகள்’ பாடலானது, மழையில் நனையும் ஒவ்வொரு கணமும் என் நினைவினில் வந்து போகும். ‘என் சுவாசக் காற்றே நீயடி’ பாடல் மயிலிறகொன்று முகத்தைக் கொஞ்சுகிற அனுபவத்தைத் தரும். ‘காதல் நயாகரா’, ‘திறக்காத காட்டுக்குள்ளே’ பாடல்களும் காதல் மழையைப் பொழியும். இவை போதாதென்று ‘ஜும்பலக்கா’ பாடலிலும் காதல் பாடம் எடுத்திருப்பார் கவிஞர் வைரமுத்து. இந்தப் பாடல்களின் காட்சியாக்கம் இப்போதும் ’கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்’ தரத்தில் இருக்கும். அந்த வகையில் கண்களுக்கு விருந்து படைத்திருப்பார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன். பாடல்கள் படம்பிடிக்கப்பட்ட இடங்களையும் இப்படக்குழு தேடித் தேடித் தேர்ந்தெடுத்ததை உணர முடியும். போலவே, இப்படத்தில் கலை இயக்குனரும் ஆடை வடிவமைப்பாளரும் ஒவ்வொரு பிரேமும் ’கலர்ஃபுல்’ ஆக இருக்க வேண்டுமென்று உழைத்திருப்பார்கள். ’தீண்டாய்’ பாடலுக்கு முன்பாக, ‘லைட் பர்பிள்’ வண்ணத்தில் சேலையணிந்து இஷா கோபிகர் வரும் காட்சி படத்தில் உண்டு. அந்தக் காட்சி மற்றும் அப்பாடலில் இஷா கோபிகர் இடம்பெற்றவற்றின் ஸ்டில்கள் பத்திரிகைகளை அந்தக் காலகட்டத்தில் அலங்கரித்தன. கூடவே, ‘மிலிட்டரி கட்’ ஹேர்ஸ்டைலில் அரவிந்த் சாமி வேறுவிதமாகத் தோற்றமளிக்கும் ஸ்டில்களும் வெளியாகின. இப்போதும் ‘என் சுவாசக் காற்றே’ பார்க்கும்போது அவற்றைச் சிலர் நினைவுகூரக்கூடும். தியா மிர்சா அறிமுகம்! இந்தியில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்தவர் தியா மிர்சா. உலக அழகிப்போட்டியில் பங்கேற்றவர். இப்படத்தில் வரும் ‘ஜும்பலக்கா’ பாடலில் ராஜு சுந்தரத்தோடு, மிங்க் எனும் நடிகை ஆடியது நமக்குத் தெரியும். இதில் கூட்டத்தில் ஒருவராக நடிகை தியா மிர்சாவும் ஆடியிருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல். ஆக, அவர் திரையுலகில் அறிமுகமான திரைப்படம் ‘என் சுவாசக் காற்றே’ என்று சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அச்சம்பவத்தை நினைவுகூர்ந்த தியா, படப்பிடிப்பு முடிந்ததும் நல்லதொரு சம்பளம் தந்ததாக கூறியிருக்கிறார். அதேநேரத்தில், அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ரஹ்மான் என்பதை மறந்து, ‘கீரவாணி இசையமைத்த பாடல் அது’ என்று சொல்லியிருந்தார். ’என் சுவாசக் காற்றே’வை இன்று காணும்போது பாடல்களையும் சண்டைக்காட்சிகளையும் படம்பிடித்துவிட்டு, பின்னர் அரவிந்த் சுவாமி, இஷா கோபிகர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டு, இறுதியாக செண்டிமெண்ட், நகைச்சுவை உள்ளிட்ட இதர காட்சிகளை ஆக்கியதாகத் தோன்றுகிறது. அக்காட்சிகளை வரிசைப்படுத்தினால், அவற்றின் உள்ளடக்கத்தில் இருக்கும் பட்ஜெட் குறைபாடு தெளிவாகத் தெரியும். படம் முழுக்க ஒரேமாதிரியான தரம் ‘மெயிண்டெய்ன்’ செய்திருக்கப்பட்டிருக்காது. இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம் அது. இப்படத்தில் பிரகாஷ்ராஜ் வருமிடங்களில் ஒலிக்கும் ‘ஷெனாய்’ வாத்திய இசை மனதைப் பிறாண்டியதாகத் தோன்றியிருக்கிறது. பின்னாட்களில்தான், இப்படத்தில் ரஹ்மானுக்குப் பதிலாக ‘சபேஷ் முரளி’ பின்னணி இசை அமைத்தனர் என்பது தெரிய வந்தது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு அப்பாத்திரம் இயல்பில் இருந்து விலகியதாகத் தெரிந்தது. ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் தென்பட்ட டேனியல் பாலாஜி மற்றும் அவரது நண்பராக வந்தவரின் வில்லத்தனத்தைப் பார்த்தபோது, எனக்கு ‘என் சுவாசக் காற்றே’தான் நினைவுக்கு வந்தது. மகன் – வளர்ப்பு மகன் ‘ஈகோ’ மோதல், மணிரத்னம் பட பாணியில் காதலர்கள் பேசுகிற வசனங்கள், விளம்பரப்படம் போன்று அமைந்திருந்த காட்சியாக்கம், அவற்றுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு கதை என்று இருந்தது ‘என் சுவாசக் காற்றே’. ஆனாலும் அரவிந்த் சாமி, இஷா கோபிகர், ரகுவரன், ரஹ்மான், ஆர்தர் வில்சன், ராஜு சுந்தரம் என்று சில ஆளுமைகளுக்காகத் தன்னில் இருக்கும் பொலிவை மங்க விடாமல் தங்க வைத்திருக்கிறது இப்படம். https://minnambalam.com/cinema/en-swasa-kaatre-reminds-isha-gopikar/- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் டிரைவருக்கு நீதிமன்றக் காவல்! 28 Feb 2025, 8:40 AM நடிகை அளித்த புகாரில் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழித்து காவலர்களை தடுத்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளி மற்றும் உதவியாளருக்கு வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்து, 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, சீமான் மனுவையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி. இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க கிருஷ்ணகிரி சென்றதால் நேற்று ஆஜராகவில்லை. இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப்ரவரி 28-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் போலீசார் கண்முன்னே சம்மன் கிழிக்கப்பட்டது. உயரதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு இதுதொடர்பாக விசாரிக்க நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் சீமான் வீட்டுக்குள் சென்றனர். ஆனால் அங்கே சீமான் வீட்டு பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ், போலீஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட அமல்ராஜை கைது செய்த போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமான் வீட்டு டிரைவர் சுபாகரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், ஆயுதச் சட்டம், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், ஓட்டுநர் சுபாகர் மீது 3 பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், பாதுகாவலர் மற்றும் சீமான் உதவியாளர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு அமல்ராஜ், சுபாகர் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விஜயலட்சுமி வழக்கில் சீமான் இன்று ஆஜராகவில்லையென்றால், அவர் கைது செய்யப்படுவார் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று தனது வீட்டில் நடந்த சம்பவத்தையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் ‘நாளைக்கு நான் ஆஜராக போவதில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/political-news/judicial-custody-for-amalraj-and-subakar/- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
வெளி மாநிலத்துக்கு தப்ப முயன்றாரா… போலீஸ் வளையத்துக்குள் சீமான் 27 Feb 2025, 5:27 PM நாளை போலீஸில் ஆஜராகாத பட்சத்தில் சீமான் கைதுசெய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை கடுமையாக விமர்சித்து வந்தார். அவருக்கு எதிர்க்கட்சியான அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. திராவிட கழகத்தினர், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆகியோர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். சீமானின் தொடர் விமர்சனம் இதனால் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முன்பு திருச்சி சரக டிஐஜியான வருண் குமார் மீது சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் திருச்சி காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி , திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரையும் சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நேரத்தில, பெரியாரை விமர்சனம் செய்த வழக்கில் கைது செய்தால் அரசியல் ரீதியாக சீமானுக்கு ஆதரவு பெருகும் என்று கருதி பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்தால்தான் சரியாக இருக்கும் என்று காவல்துறையினரும், ஆட்சியாளர்களும் முடிவெடுத்திருக்கின்றனர். இந்தநிலையில் தான் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து, மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தி 164 ஸ்டேட்மெண்ட் பெற்று மேல் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் இருந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை நாடினார் சீமான். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் விஜயலட்சுமி புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் தான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, இன்று (பிப்ரவரி 27) சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் நேற்று பெங்களூருவில் உள்ள விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற டீம் விசாரணை மேற்கொண்டது. போலீஸுக்கு வந்த தகவல் இதில், விஜயலட்சுமி ஆடியோ வீடியோ ஆதாரம், புகைப்படங்கள் ஆகியவற்றை கொடுத்திருந்தார். இதற்கிடையே சீமான் நேற்றும், நேற்று முன்தினமும் ராணிப்பேட்டை, வேலூரில் நிர்வாகிள் கூட்டத்தை நடத்தினார், இன்று கிருஷ்ணகிரி சென்று நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்ததால், நேற்று இரவே கிருஷ்ணகிரி சென்று ஹோட்டலில் தங்கிவிட்டார். அதனால் சீமானால் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று வாய்தா கேட்டு மனு கொடுத்தனர். அதேசமயம் நேற்றிரவு சீமான் தங்கியிருந்த ஹோட்டலை போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். காரணம், கிருஷ்ணகிரியில் இருந்து அண்டை மாநிலமான பெங்களூரு வழியாக சீமான் தப்பித்துவிடலாம் என்று தகவல் கிடைத்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள். இந்தசூழலில் நீலாங்கரை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று போலீசார் சம்மன் கொடுத்தனர். வீட்டில் உள்ளவர்கள் சம்மனை வாங்க மறுத்ததால், கேட்டில் அதை ஒட்டினர். அப்போது சீமான் வீட்டின் டிரைவரான சுபாகர் ஆவேசமாக வந்து கேட்டில் ஒட்டிருந்த சம்மனை கிழித்து எறிந்தார். இதை கண்ட அங்கிருந்த போலீசார் தட்டிக்கேட்ட போது, போலீசாருக்கும் சீமான் வீட்டில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு செக்யூரிட்டியாக இருந்த அமுல்ராஜ் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுக்க, உடனடியாக அவரை மடக்கி பிடித்து இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றினார்கள் போலீசார். சம்மனை கிழித்த சுபாகரையும் கைது செய்தனர். இவர் சென்னையை சேர்ந்தவர். செக்யூரிட்டி அமுல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், இதற்கு லைசென்ஸ் இருக்கிறதா, ரினிவெல் செய்யப்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர். கைதாக வாய்ப்பு? மேலும் இன்று வழங்கப்பட்ட சம்மனுக்கு சீமான் நாளை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்றால் அதிரடியாக கைது செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். நீலாங்கரையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கிருஷண்கிரியில் உள்ள தனது கணவருக்கு தொடர்புகொண்டு சீமான் மனைவி பதற்றமாக தகவலை தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில், நாளையும் நான் நேரில் ஆஜராகமாட்டேன். என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், நான் தர்மபுரியில் நடக்கும் கூட்டத்துக்கு செல்கிறேன் என்று பேட்டி அளித்திருக்கிறார் சீமான் . இதனால் அடுத்து என்ன நடக்க போகும் என்ற எதிர்ப்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது https://minnambalam.com/political-news/seeman-in-police-surveillance-what-happened/- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (28 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS ஒரே ஒருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் மற்றைய 23 பேரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எப்போதும் தமிழன் இப்போட்டியில் 23 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது ஆப்கானிஸ்தார் இங்கிலாந்து அணிக்கு கொடுத்த அதிர்ச்சி போன்று அவுஸ்திரேலியா அணிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அரையிறுதிக்கு முன்னேறுமா?- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையேயான ஒன்பதாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. எனவே யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோருக்கும் மழை முட்டைகளைப் பொழிந்துள்ளது! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):- வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? — கருணாகரன் —
வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? February 26, 2025 — கருணாகரன் — யுத்தத்தினால் அழிந்து சிதிலமடைந்திருக்கின்ற வடக்குப் பிரதேசங்களை அபிவிருத்தியினால் மேம்படுத்துவதும் அங்குள்ள மக்களை உளரீதியில் புதுநிலைப்படுத்துவதும் ஒன்றாக நடக்க வேண்டும். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் இவை சரியாக நடக்கவேயில்லை. 2013 – 2018 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் இருந்தது. அப்போதும் வடக்கின் அபிவிருத்தியைப் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் நிலையைப் பற்றியும் பொறுப்பானவர்கள், பொறுப்பாகச் சிந்திக்கவில்லை. இதனால்தான் இன்னும் இங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள். புதிய (NPP) அரசாங்கம் எல்லாவற்றிலும் மாற்றங்களையும் புதுமைகளையும் செய்ய முயற்சிக்கிறது. என்பதால், வடக்கின் நிலைமைகளிலும் நியானமான – அவசியமான – மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதைச் செய்ய வேண்டிய கடப்பாடு, மாற்றங்களை வலியுறுத்தும் அரசாங்கத்துக்கு உண்டு. அதை ஓரளவு உணர்ந்திருக்கிறபடியால்தான் வடக்கின் அபிவிருத்திக்கென 5000 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. வட பிராந்தியத்திற் சில சிறப்புத் திட்டங்களை விருத்தி செய்வதற்கும் முயற்சிக்கிறது. வடக்கின் அபிவிருத்தியில் முக்கியமான ஒன்று, சுற்றுலாத்துறையை வளர்ப்பதாகும். சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்வதன் மூலமாக பிரதேச அபிவிருத்தியைச் செய்ய முடியும். பொருளாதார ரீதியிலும் வளர்ச்சியை உருவாக்கலாம். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இது உதுவும். ஒரே கல்லில் மூன்று காய்கள். பொதுவாகச் சுற்றுலாத்துறையில் பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றில் வளர்ச்சி ஏற்படுவதுண்டு. மக்களுக்கான தொழில் வாய்ப்புகளும் பெருகும். ஆகவே அரசாங்கம் வடக்கில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதைப்பற்றிக் கவனத்திற் கொள்ள வேண்டும். அதற்கான வளங்களும் வாய்ப்புகளும் வடக்கிற் தாராளமாகவே உண்டு. 1. இயற்றை வளங்களோடு இணைந்திருக்கும் சுற்றுலா மையங்களை அடையாளம் கண்டு, அவற்றை வளப்படுத்தி, சுற்றுலாவுக்கேற்ற மாதிரி வடிவமைப்பது. இதற்கு பூநகரி – கௌதாரிமுனை மணல்மேடுகள், கௌதாரிமுனைக் கடற்கரை (Beach), வேலணைக் கடற்கரை, நெடுந்தீவு, இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரி பறவைகள் சரணாலயம் (Nature Park), மன்னார் கடற்கரைகள், முல்லைத்தீவு – நாயாற்றுக் கடற்கரை, இரணைமடுக்குளம், வன்னேரிக்குளம் பறவைகள் சரணாலயம், காரைநகர்க் கடற்கரை (Casuarina Beach) போன்றவை உண்டு. இதை விட வேறு மையங்களையும் அடையாளம் காண முடியும். இவை ஏறக்குறைய மாலைதீவு, கியூபா போன்ற நாடுகளில் உள்ள சுற்றுலாவுக்கு நிகரானவையாக இருக்கும். இயற்கையோடிணைந்த உணவு முறைகளையும் இங்கே சேர்த்துக் கொள்வதாக இருக்கும். 2. பண்பாட்டுச் சுற்றுலா (Cultural tourism) வுக்குரிய இடங்களை விருத்தி செய்வது. இது குறித்த பிராந்தியத்தின் பண்பாட்டு அடையாளங்கள், சொத்துகளின் மீது கவனத்தைக் குவிக்கும் வகையிலானது. இதற்கு நல்லூர், சந்நிதி, நயினாதீவு, கீரிமலை, மாவிட்டபுரம், மடு, திருக்கேதீஸ்வரம், புல்லாவெளி, பொன்னாலை, கந்தரோடை போன்ற இடங்களிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பௌத்த சின்னங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி அமைப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். கூடவே இதற்குத் தோதாக வடக்கின் கலை வெளிப்பாடுகளைக் (கூத்து, நாடகம், நடனம், ஓவியக் கூடம்) காணக் கூடியவாறு செய்ய வேண்டும். கேரளாவின் கதகளி, கண்டிய நடனம் போன்றவை உதாரணம். இந்தச் சுற்றுலாவில் பண்பாட்டைத் தேடி அறிய விரும்புவோரும் ஆன்மீக யாத்திரிகர்களும் அதையொட்டிய சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக வரக்கூடும். 3. காலனிய கட்டிடங்கள் மற்றும் அதையொட்டிய மரபுரிமைகளை மையப்படுத்திய சுற்றுலா. (Colonial architectural heritage tourism). இதற்கு ஏற்கனவே உள்ள யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்றுறைக் கோட்டை, மன்னார்க் கோட்டை, நெடுந்தீவில் உள்ள புராத கட்டிடங்கள், யாழ்ப்பாணம் பழைய கச்சேரி, சங்கானைத் தேவாலயம் மற்றும் மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, மன்னார் அரிப்பு அல்லிராணி மாளிகை போன்ற புராதன சின்னங்களை மையப்படுத்த வேண்டும். அவற்றின் சூழலைச் சுற்றுலாவுக்குரியவாறு மாற்றியமைக்க வேண்டும். மேலும் பூநகரி, இயக்கச்சி, ஆனையிறவு, வெற்றிலைக்கேணி, பருத்தித்துறை போன்ற இடங்களில் உள்ள காலனித்துவ காலக் கோட்டைகள், வெளிச்ச வீடுகள் யுத்தத்தினால் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றையும் மீளமைப்புச் செய்தால், அவையும் இந்த வகைச் சுற்றுலாவுக்கு பெரிதும் உதவும். இதற்கு ஹொலண்ட் அரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். அல்லது அந்த நாட்டின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். 4. இதற்கு அப்பால் புதிதாக சுற்றுலா மையங்களை உருவாக்குவது. உதாரணமாக, வடமராட்சியில் முள்ளிக்குளம் மருதங்கேணிக்கும் இடையிலுள்ள களப்பை அகழ்ந்து படகுச் சவாரிகளை உருவாக்குவது. இதற்காக வெளிநாட்டுக் கடனைப் பெற்றாலும் அது பயனுடையதே. ஏனென்றால் அது செலவீனத்தை விடப் பன்மடங்கு வருவாயை ஈட்டித் தரக் கூடியது. அந்தக் களப்பு இயற்கை வளம் நிறைந்த அழகான சூழலில் அமைந்துள்ளது. பசுமைச் சுற்றுலாவாக இதை உருவாக்கலாம். அருகே வங்காள விரிகுடாவுடன் இணைந்த இந்து சமுத்திரமுண்டு. அதனுடைய கரை அழகான கடற்கரையகும். இங்கே கடலுணவும் கடற்கரைக் காட்சியும் மேலதிக வாய்ப்பாக உள்ளன. இதைப்போல இன்னோரிடம், நெடுந்தீவு உட்பட அனலைதீவு, எழுவை தீவு, கௌதாரிமுனை போன்ற இடங்களுக்கான படகுச் சவாரிகளை உருவாக்குவது. இந்த இடங்கள் மிக அழகானவை. அங்கே சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகளையும் கலை மற்றும் விற்பனைப் பொருட்களையும் உருவாக்கினால் போதும். அந்த இடங்களும் அபிவிருத்தியடையும். 5. வடக்கின் பிரத்தியேகமான அறிவுத்துறை, தொழிற்துறை சார்ந்த இடங்களை விருத்தி செய்தல். இவையும் ஒரு தொகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடியவையே. இவ்வாறு வடக்கின் சுற்றுலாவை பல வகையில் விருத்தி செய்யலாம் – செய்ய வேண்டும். இலங்கையின் பிரதான வருவாயில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். அதற்கு வடக்கு மாகாணமும் தாராளமாகப் பங்களிக்க முடியும். சம நேரத்தில் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலாவுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெறக் கூடியதாகவும் இருக்கும். ஆனால், புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வடக்கின் சுற்றுலாத்துறைக்கென சிறப்பான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அது குறித்த சிரத்தையைக் காணவும் முடியவில்லை. இது புதிய அரசாங்கத்தின் முதலாவது பாதீடு என்பதால், அடுத்த ஆண்டுகளில் இதைக் குறித்த அக்கறைகள் மேலெழக் கூடும். அதைக்குறித்த சிந்தனை இருக்குமானால், எதிர்காலத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாணசபையில் சுற்றுலாத்துறைக்குப் பொறுப்பாக இருப்போருக்கு இதைப்பற்றிய புரிதலோ கற்பனையோ போதாது. அவர்கள் வழமையான – பாரம்பரியமான சில இடங்களை (மையங்களை) யே அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். அந்த இடங்கள் பலரும் பார்த்துப் பழகியவை என்பதை விட அனைவரையும் கவரக் கூடியவையும் அல்ல. புதிய இடங்களைத் தேடிக் காணும் முயற்சியோ, அவற்றைச் சுற்றுலாத்துறைக்கு ஏற்றமாதிரி மேம்படுத்தக் கூடிய அக்கறையோ இல்லை. கேட்டால், தமக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று ஒற்றை வரியில் தமது பொறுப்பை முடித்துக் கொள்கிறார்கள். இந்த விமர்சனம் அவர்களைக் குற்றம் சாட்டுவதற்கானதல்ல. பதிலாக அவர்களுடைய பொறுப்பை உணர வைப்பதற்கும் அவர்களை முயற்சிக்குமாறு தூண்டுவதற்குமானதாகும். சுற்றுலாத்துறையின் அடிப்படைகளில் ஒன்று, கொண்டாட்டத்தையும் அறிவூட்டலையும் வியப்பையும் சமனிலையில் அளிப்பதாகும். அதுவே தீராத கவர்ச்சியையும் தாகத்தையும் உண்டாக்குவது. பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டுவதாக இருத்தல். எண்ணும்தோறும் வியப்பூட்டுவது. பார்க்க முன்பும் பார்த்த பின்பும் தேடலுக்கு உரியதாக இருத்தல். இவை இருந்தால்தான் பலரையும் கவர முடியும். இவையில்லாத சுற்றுலா மையங்கள் விரைவில் சலிப்படைய வைத்து விடும். ஆகவே சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் சுற்றுலா மையங்களின் சூழலையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்புகளையும் புத்துணர்வாக்கம் செய்து கொண்டேயிருக்க வேண்டும். புதிய மையங்களை அறிமுகப்படுத்த வேண்டும். எப்போதும் பளபளப்பாக இருக்கக் கூடியவாறு நாம் சில பொருட்களையோ பாத்திரங்களையோ மினுக்கி, நேர்த்தியாக அடுக்கி வைப்பதில்லையா? அதைப்போல இந்தச் சுற்றுலா மையங்களை மினுக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். உலகம் விந்தைகளால் நிரம்பியுள்ளது. இயற்கையாகவும் செயற்கையாகவும் இந்த விந்தை உள்ளது. அவற்றைப் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் என்று மக்கள் பெருந்தொகை பணத்தைச் செலவழித்துப் பயணம் செய்கிறார்கள். கூடவே தங்களுடைய நேரத்தையும் செலவிடுகிறார்கள். அப்படிச் செல்வோரை நாமும் கவர்ந்திழுக்க வேண்டும் என்றால் அதற்கான ஈர்ப்பை உண்டாக்கக் கூடிய சுற்றுலாப்புள்ளிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். மட்டுமல்ல, இதொரு உலகளாவிய போட்டி என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பல நாடுகள் சுற்றுலாப் பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவற்றுடன் நாம் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே இதற்கமைய எங்களையும் எங்களுடைய சுற்றுலா மையங்களையும் மேம்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். வடக்கில் சில சுற்றுலா மையங்கள் இயல்பாக, இயற்கையாக இருக்கின்றன. அவற்றை மேலும் விரிவாக்கிப் புதுக்குவது அவசியம். குறிப்பாக பூநகரி கௌதாரிமுனையில் உள்ள Beach சும் இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரியில் உள்ள பறவைகள் சரணாலயம் மற்றும் Nature Park க்கும். போக்குவரத்துக்கு வாய்ப்பாக வீதிகளைப் புனரமைத்து, தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளோடு இவற்றை சற்று வளமாக்கினால், மிகச் சிறப்பான சுற்றுலா மையங்களாக மிளிரும். கௌதாரிமுனை Beach ஆழம் குறைந்த கடலைக் கொண்டது. மிக நீண்ட Beach. சுற்றயல், மணல் மேடுகளும் தாழம் புதர்களும் நிறைந்த அழகான இயற்கை அரண். நீராடுவதற்கும் நீந்திக் களிப்பதற்கும் அருமையான இடம். இதை இப்பொழுது படையினரே நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதை மாற்றிச் சுற்றுலாத்துறை அமைச்சிடம் வழங்க வேண்டும். அத்துடன் இந்த Beach க்குச் செல்லக் கூடிய போக்குவரத்துப் பாதையைச் சீராக்கி, போக்குவரத்தையும் குறைவான செலவில் உருவாக்கலாம். இந்த Beach க்கு அண்மித்ததாக மண்ணித்தலையில் சோழர் காலச் சிவன் கோயில் ஒன்றுள்ளது. அதனுடைய சிதைவுகளே எஞ்சியுள்ளன. ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மாதிரி வரலாற்று எச்சங்கள்தான் ஈர்ப்புக்குரியவை. அங்கிருந்து 15 நிமிடத்தில் யாழ்ப்பாணத்துக்குப் படகில் செல்ல முடியும். அதற்கான இறங்குதுறை ஒன்றை அமைத்தால், உள்ளுர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக இந்த Beach இல் நிறைவர். இதைப்போல இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரியோடிருக்கும் Nature Park கும் பறவைகள் சரணாலயமும் (Bird sanctuary) சற்று விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். சரணாலயத்தை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதைப் பறவைகளே விரிவாக்க வேண்டும். ஆனால், அந்தச் சூழலை நாம் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். அதைப் பார்க்கச் செல்லும் வழிகளைப் புனரமைப்புச் செய்ய வேண்டும். அங்கே 136 பறவை இனங்கள் உண்டு. 187 தாவரங்கள் இருப்பதாக ஆய்வு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் பறவைகள் தங்குவதற்கான வில்லுகளும் (குளங்களும்) நீண்ட வெளியும் உண்டு. ஓரம் நீளத்துக்கும் களப்புக் கடலும் கண்டற்காடுகளும். மறுபக்கத்தில் அலைமோதிக் கொண்டிருக்கும் இந்து சமுத்திரம். நமது பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டுமாக இருந்தால், அதற்குரிய சிறப்பம்சங்கள் அங்கங்கே இருக்க வேண்டும். அல்லது அவற்றை உருவாக்க வேண்டும். கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் என்ற வணிகக் கட்டிடம் இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அதைப்போல எல்லா இடங்களிலும் கட்ட முடியாது. அதற்கு மக்களிடமுள்ள தாங்குதிறன் இடமளிக்காது. ஆனால், வெவ்வேறு பிராந்தியங்களில் அந்தந்தப் பிராந்தியங்களின் வளங்கள், வாய்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொன்றையும் உருவாக்கலாம். அது அந்தந்தப் பிராந்தியங்களின் அடையாளங்களைக் கொண்டிருந்தால் சிறப்பு. யுத்தம் முடிந்த பிறகு, மிக அதிகமானோர் வடக்கு நோக்கி வந்தனர். நீண்டகாலமாக யுத்தம் நடந்த ஒரு பிரதேசத்தை, யுத்த்ததினால் அழிந்த பகுதிகளை, யுத்த காலத்தில் முழுதாகவே மூடப்பட்டுத் தடை செய்யப்பட்டு, இருண்டிருந்த ஒரு பிராந்தியத்தைப் பார்ப்பதற்கு விரும்பினார்கள். யுத்தத்தின் எச்சங்களையும் வடுக்களையும் கண்டு திரும்பினார்கள். இது யுத்தம் முடிந்த பிறகான சூழல். இனியொரு புதிய யுகத்தைக் காண்பதற்கான காலம். அதற்கான அக – புற விழிகளை நிறைக்கும் வகையில் இன்றைய – நாளைய சுற்றுலா அமைய வேண்டும். சுற்றுலா மட்டுமல்ல, இன்றைய நாளை நாட்களும் சூழலும் அமைவது அவசியம். அதற்கான வாசல்கள் திறக்கப்படட்டும். https://arangamnews.com/?p=11848- யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும்
யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும் February 25, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இறங்குவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்ற மறுகணமே அவர் பிறப்பித்த உத்தரவுகள் தொடக்கம் கடந்த ஒரு மாதகாலமாக அவரது நிருவாகத்தின் நடவடிக்கைகள் சர்வதேச கடப்பாடுகளில் இருந்து விலகுவதே அவரது வெளியுறவுக் கொள்கையின் தீர்க்கமான அம்சமாக இருக்கிறது என்பதை மீணடும் தெளிவாக நிரூபித்து நிற்கின்றன. உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றில் இருந்து விலகியதை தொடர்ந்து அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கும் ட்ரம்ப் நிருவாகம் தீர்மானித்தது. அமெரிக்காவின் உலகளாவிய உதவிக்கான ஒரு கட்டமைப்பாக ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக செயற்பட்டு வந்திருக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் ‘யூ.எஸ். எயிட்’ (United States Agency for International Development – USAID) செயற்திறன் அற்றதாகவும் கோட்பாட்டு முரண்பாடுகளை கொண்டிருப்பதாகவும் ஒரு காரணத்தைக் கூறி ட்ரம்ப் நிருவாகம் வெளிநாட்டு உதவிகளை 90 நாட்களுக்கு முடக்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தை மூடி இராஜாங்கத் திணைக்களத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்க அரசாங்கத்தின் நிறுவனங்கள் அமெரிக்காவின் உலக மேலாதிக்க மற்றும் மூலோபாய நலன்களை பேணிப்பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற போதிலும், உலகம் பூராவும் வாஷிங்டனின் மென் அதிகாரத்தை (Soft Power) மேம்படுத்தும் ஒரு முக்கிய கருவி என்று வர்ணிக்கப்பட்டுவந்த யூ.எஸ். எயிட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான டொலர்கள் உதவிகளை நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கிவருகிறது. வெளிநாட்டு உதவிகளை முடக்கும் ட்ரம்ப் நிருவாகத்தின் தீர்மானத்தின் விளைவாக உயிர் வாழ்வுக்காக அமெரிக்க உதவியில் தங்கியிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்படப் போகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் செயற்திறன் திணைக்களத்தின் (Department of Government Efficiency) தலைவரான உலகின் பெரிய தனவந்தர் இலன் மஸ்க் யூ.எஸ். எயிட் நிறுவனம் அமெரிக்கவை வெறுக்கும் தீவிரவாத இடது – மார்க்சியவாதிகளினதும் நம்பமுடியாத பயங்கரமான கும்பல்களினதும் கூடாரமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். எந்தவிதமான சான்றையும் முன்வைக்காமல் யூ.எஸ். எயிட்டை ‘கிறிமினல் அமைப்பு ‘ என்று வர்ணித்த மஸ்க் ‘அந்த நிறுவனம் சாவதற்கான நேரம் வந்து விட்டது’ என்றும் கூறினார். அதேவேளை, ஜனாதிபதி ட்ரம்ப் யூ.எஸ்.எயிட் தீவிரவாத கிறுக்கர்கள் கும்பல் ஒன்றினால் நிருவகிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்களை தாங்கள் வெளியேற்றிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறினார். வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு இதுகாலரை அமெரிக்க நிருவாகங்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் கொள்கைகளும் நடைமுறைகளும் பல சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் நலன்களுக்கும் விழுமியங்களுக்கும் முரணானவையாக அமைந்திருப்பதாக கருதும் ட்ரம்ப் “அந்த உதவிகள் வெளிநாடுகளின் சிந்தனைகளை மேம்படுத்துவதற்கும் நாடுகளுக்குள்ளும் நாடுகள் மத்தியிலும் இணக்கப்போக்கான, உறுதிவாய்ந்த உறவுகள் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுத்திருப்பதாக” கூறுகிறார். ட்ரம்ப் நிருவாகத்தின் இந்த தீர்மானங்களை உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் கடுமையாக கண்டனம் செய்துவருகின்ற அதேவேளை, இலங்கையில் இரு அரசியல்வாதிகள் ஆதரித்து விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டு ட்ரம்பின் விசிறிகள் போன்று நடந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவுமே அவர்கள். இலங்கையில் யூ.எஸ். எயிட்டின் நிதியுதவிகள் குறித்து விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த நாமல் ராஜபக்ச “மற்றைய நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யாத” ட்ரம்பின் கொள்கையை பாராட்டியிருப்பதுடன் அமெரிக்க வரியிறுப்பாளர்களின் நிதி ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வெளிநாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சிகளை தூண்டிவிடும் நடவடிக்கைகளுக்கு யூ.எஸ். எயிட்டின் நிதி பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருப்பது நாமல் ராஜபக்சவை கவர்ந்திருக்கிறது போன்று தெரிகிறது. தங்களது ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருந்ததாக கூறும் ராஜபக்சாக்களுக்கு உலகம் வெறுக்கின்ற ட்ரம்ப் ஒரு ‘சிறந்த அரசியல்ஞானியாக’ தெரிவது விசித்திரம். அதேவேளை, அமெரிக்காவை வெறித்தனமாக தாக்கிப் பேசுவதை வழக்கமாகக் கொண்ட விமல் வீரவன்சவும் யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் ‘தவறான செயல்களை’ ஜனாதிபதி ட்ரம்ப் அம்பலப்படுத்துவதாகக் கூறி அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் ” அமெரிக்க தனவந்தர் ஜோர்ஜ் சோரோஸ் ஊடாக வழங்கப்படும் யூ.எஸ். எயிட் நிதியுதவி இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் தோற்றுவித்த நெருக்கடிகளை அம்பலப்படுத்துகின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி. குழப்ப நிலைகளுக்கு ஆதரவளிக்கின்ற தூதுவர்களையும் அம்பலப்படுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்பை வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையீடுகளைச் செய்யாத வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிப்பவராக ராஜபக்சவும் வீரவன்சவும் ‘கண்டு பிடித்திருப்பது’ தான் இங்கு விசித்திரமான ஒரு விடயமாகும். டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாகவும் மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றிவிட்டு அந்த பள்ளத்தாக்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போவதாகவும் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்குவதற்கு விரும்புவதாகவும் ட்ரம்ப் கூறியதை அறிந்த பின்னரும் கூட இந்த இரு இலங்கை அரசியல்வாதிகளும் ட்ரம்பை ‘தலையீடு செய்யாத கொள்கைக்காக’ பாராட்டுகிறார்கள் என்றால் அதை என்னவென்று சொல்வது? ராஜபக்சவும் வீரவன்சவும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மீதான தங்களது வெறுப்பின் காரணமாகவே யூ.எஸ். எயிட் மீதான ட்ரம்ப் நிருவாகத்தின் தாக்குதலை ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் ஆட்சியை வீழ்த்திய மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெறும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் செயற்பட்டதாக இவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள். பல தொண்டர் நிறுவனங்களுக்கும் சிந்தனைக் குழாம்களுக்கும் (Think Tanks) எதிரான தங்களது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கு யூ.எஸ். எயிட்டுக்கு எதிராக ட்ரம்ப் நிருவாகம் நடவடிக்கையில் இறங்கியிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். வீரவன்சவை பொறுத்தவரை, உள்நாட்டுப்போர் காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் செய்த மனிதாபிமான உதவிகளைக் கூட பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் வழங்கப்படும் ஆதரவு என்று விமர்சித்தவர். இராணுவ ரீதியாக அன்றி அரசியல் ரீதியாக தேசிய இனப்பிரச்சினைக்கு இணக்கத் தீர்வைக் காணவேண்டும் என்று குரல் கொடுத்த தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான விசமத்தனமான பிரசாரங்களின் முன்னரங்கத்தில் வீரவன்ச போன்றவர்கள் நின்றார்கள். அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக ‘போர்க்கொடி’ தூக்கியவர்கள் பெரும்பாலும் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாதவர்கள். இன்று இத்தகையவர்கள் நிறவெறியையும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான உணர்வுகளையும் கொண்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியை பாராட்டுவதில் திருப்தி காண்கிறார்கள். அமெரிக்க மக்களின் வரிப்பணம் வெளிநாடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ச தங்களது குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதில் இருந்த வெளிப்படைத் தன்மையின் இலட்சணத்தை ஒருகணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவர்களுக்கும் ட்ரம்புக்கும் இடையே உணர்வுகள் ஒத்துப் போவதற்கு காரணம் ‘மற்றவர்கள்’ மீதான வெறுப்பேயாகும். குறுகிய மனப்பான்மை என்பது பெரும்பாலும் வெறுப்புணர்வில் இருந்தே வெளிக் கிளம்புகிறது. அமெரிக்காவில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் எதிரான வெறித்தனமான உணர்வைக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப்பை, தங்களது அரசியல் மீட்சிக்கு இனவாதத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்டிருக்கும் இவர்கள் கோட்பாட்டு அடிப்படையிலான தங்களது நேசசக்தியாக வரித்துக் கொள்வதில் காட்டும் நாட்டம் ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தம் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அத்தகைய நிறுவனங்கள் சகலதுமே வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாகவும் செயற்படுகின்றன என்று கூறமுடியவிட்டாலும், உண்மையில் சமூகங்களின் நலன்களுக்காக பயனுறுதியுடைய செயற்திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளரான கலாநிதி ஜெகான் பெரேரா கடந்த வாரம் ‘முற்றுகைக்குள்ளாகியிருக்கும் யூ.எஸ். எயிட்டும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ‘ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பட்டினிக் கொடுமை மற்றும் போர்ச் சூழல்களில் மக்களின் இடர்பாடுகளைத் தணிப்பதில் அமெரிக்க உதவி முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகிக்கும் உலகின் பிராந்தியங்களில் பெரும் எண்ணிக்கையான மக்களின் உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்கின்ற அதேவேளை, யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தம் இலங்கையில் முற்றிலும் வேறுபட்ட காரணத்துக்காக செய்திகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையிலும் உலகம் பூராவும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு இதுகாலவரையில் மிகவும் பெரியளவில் நிதியுதவியைச் செய்த நிறுவனமாக யூ.எஸ். எயிட் விளங்கி வந்திருக்கும் நிலையில், நிதியுதவி இடைநிறுத்தம் பல தொண்டர் நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைப்புச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது மாத்திரமல்ல, சில தொண்டர் நிறுவனங்கள் ஏற்கெனவே மூடப்பட்டும் விட்டன என்றும் ஜெகான் பெரேரா கூறியிருக்கிறார். முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அரசியல்வாதிகள் ஊழல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களே மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக பிரசாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். தங்களது வீழ்ச்சிக்கு தவறான ஆட்சிமுறையும் ஊழல் முறைகேடுகளுமே உண்மையில் காரணம் என்பதை இந்த அரசியல்வாதிகள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. யூ.எஸ். எயிட்டின் நிதியுதவியைப் பெற்றுவந்த அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் சதி வேலைகள் காரணமாகவே தாங்கள் இடைநடுவில் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்றும் ஜெகான் பெரேரா எழுதியிருக்கிறார். யூ.எஸ். எயிட் உதவி திடீரென்று இடை நிறுத்தப்பட்டதனால் இலங்கை உதவிகளைப் பெறுவதற்கு ‘மாற்றுவழிகளை நாடவேண்டியிருக்கும்’ என்று அரசாங்க பேச்சாளரான சுகாதார, தகவல்துறை அமைச்சர் நாளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார். யூ.எஸ். எயிட் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அந்த நிறுவனம் இலங்கைக்கு 200 கோடி டொலர்களை (சுமார் 72 ஆயிரம் கோடி ரூபா) உதவியாக வழங்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது. கெடுபிடியுத்தம் (Cold War) உச்சக்கட்டத்தில் இருந்த காலப்பகுதியில் உலக நாடுகளில் சோவியத் யூனியனின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான ஒரு அங்கமான வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக ஜனநாயக கட்சி ஜனாதிபதியான ஜோன் எவ். கென்னடியினால் 1961 ஆம் ஆண்டில் யூ.எஸ். எயிட் நிறுவனம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. https://arangamnews.com/?p=11836- ‘காதல் என்பது பொது உடைமை’ - தன் பாலினம்… காதலோடு அங்கீகாரமும் பொது உடைமையாகட்டும்!
தன் பாலினம்… காதலோடு அங்கீகாரமும் பொது உடைமையாகட்டும்! 26 Feb 2025, 5:41 PM அ. குமரேசன் சில திரைப்படங்கள் எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தாலும் அதை வெளிப்படுத்தும் கலையாக்கத்தாலும் பேசப்பட வேண்டிய படைப்புகளாக இருக்கும். வேறு சில படங்கள் அவற்றில் பேசப்பட்ட கருத்துகளைப் பற்றிச் சமுதாயத்தையே பேச வைப்பவையாக இருக்கும். பேச வைக்கிற ஒரு படம்தான் ‘காதல் என்பது பொது உடைமை’. காதல் மதம் பார்த்து, சாதி பார்த்து, இனம் பார்த்து, வயது பார்த்து, நாடு பார்த்து – ஏன் பாலினம் பார்த்துக்கூட – வருவதல்ல. எதிர்ப் பாலினத்தவர்களிடையே மட்டும்தான், பெண்ணுக்கும் ஆணுக்கும்தான், காதல் பூக்கும் என்றில்லை. சமுதாயத்தில் அப்படித்தான் நம்பப்படுகிறது, அதுதான் இயற்கை என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. (எதிர்ப் பாலினத்தவர்களின் இயற்கையான காதலை மட்டும் சமுதாயம் ஏற்றுக்கொள்கிறதா என்ன? அப்படி ஏற்றுக்கொள்ளுமானால் எதற்காக ஆணவக் கொலைகள் நடக்கின்றன?) தன்பாலின ஈர்ப்பாளர்கள்தான் நாயகப் பாத்திரங்கள் என விளம்பரப் படங்களாலும் விமர்சனங்களாலும் ஏற்கெனவே தெரிந்துவிட்டது. ஆகவே, தன் மகள் சாம் யாரையோ காதலிக்கிறாள் என்றறிந்ததும் அவனை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லும் தாய்க்கு, அவளுடைய காதல் இணை “அவன்” அல்ல, ”அவள்” என்று தெரிய வருகிற இடம் நமக்கு எதிர்பாராத திருப்பமாக இல்லை. ஆனாலும், தாய் லட்சுமி, மகள் சாம், அவளது இணை நந்தினி, அவளை அழைத்து வந்த நண்பன் ரவீந்திரன் இவர்களுக்கிடையே அதிர்ச்சியும் ஆத்திரமும் அழுகையுமாக அந்த நிமிடத்தில் எழுகிற உணர்ச்சிப் பேரலை நம்மையும் மூழ்கடிக்கிறது. லட்சுமியிடமிருந்து மணவிலக்குப் பெற்ற தேவராஜ், பிரிவுக்கான காரணம், முன்பு சாமை காதலித்தவன்தான் ரவீந்திரன், அவளுக்கும் நந்தினிக்கும் காதல் துளிர்த்த பொழுது என்ற விரிவாக்கங்கள் கதைக் கட்டுமானத்திற்கு வலுச் சேர்க்கின்றன. படத்தில் மூன்று அணைப்புக் காட்சிகள். முதலாவது சாம்–நந்தினி காதல் அணைப்பு; இரண்டாவது கலங்கி நிற்கும் சாமுக்கும் நந்தினிக்கும் ரவீந்திரனின் தோழமை அணைப்பு; மூன்றாவது கொந்தளிப்பான உச்சத்தில் லட்சுமி–சாம்–தேவராஜ் பாச அணைப்பு. அந்த அணைப்புகள் பார்வையாளர்களுக்கு ஒரு கதகதப்பைக் கடத்துகின்றன. பால் புதுமையினர் எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய புரிதலின் கதகதப்பு அது. இவர்களின் தேர்வு இயற்கையானதென்று புரிந்துகொள்ள முதல் அணைப்பும், தோழமைகள் ஆதரவாகத் தோள் கொடுக்க இரண்டாவது அணைப்பும், குடும்பங்கள் தெளிந்து அங்கீகரிக்க மூன்றாவது அணைப்பும் வேண்டுகோள் விடுப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். இரு பெண்களிடமும் வீட்டுப் பணிப்பெண் மேரி கேட்கிற பாமரத்தனமான கேள்வியும், படித்தவர்களுக்கே பாதை காட்டும் பேச்சும் அழகானவை. லட்சுமி தனக்குக் கூடுதலாகக் கொடுக்கும் 500 ரூபாயைத் திருப்பிக்கொடுக்கிற இடம் பணத்துக்காக அல்ல, பண்பாடாகவும் வீட்டில் நடந்ததை வெளியே சொல்ல மாட்டேன் என்கிற பக்குவமிகு சுயமரியாதையைக் காட்டுகிறது. கலையாக வரும் கருத்து ‘லேடீஸ் அன் ஜென்டில்விமன்’ என்ற ஆவணப்படம் ஒன்று 2017இல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான சமூக அங்கீகாரத்தைக் கோரும் அந்த ஆவணப்படத்தை இந்த மக்களின் உரிமைக் களத்தில் நிற்பவரும் இயக்குநருமான மாலினி ஜீவரத்தினம் உருவாக்கியிருந்தார். அதில் பங்கேற்று, இவர்களின் இயற்கைத் தன்மை, மனித உரிமை உள்ளிட்ட பார்வைகளில் கருத்துகளைக் கூறும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.. இக்கருத்துகள் ஒரு கலைப் படைப்பாகவும் உருவாக்கப்பட்டால் பலரையும் சென்றடையுமே என்று விரும்பினேன். அதை இந்தப் படம் நிறைவேற்றியிருக்கிறது. இத்தகையோரைத் துணைப் பாத்திரங்களாகக் கொண்ட சில படங்களும் வலைத் தொடர்களும் வந்திருக்கின்றன. இவர்களையே மையப் பாத்திரங்களாகக் கொண்ட முதல் தமிழ்ப்படம் இதுவாகத்தான் இருக்கும். முன்பு கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிப்பிலும் வந்த “வேட்டையாடு விளையாடு”, தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரு ஆண்களைக் கொலை வன்மக் கொடூரர்களாகச் சித்தரித்தது. வடிவேலு போலீஸ் ஏட்டய்யாவாக நடித்த ஒரு படத்தின் ஒரு காட்சியில், இவர்களில் ஒருவர் நகைச்சுவைக்கு உரியவராக (“அவனா நீயி?”) நடக்கவிடப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட படங்களோடு ஒப்பிட்டால் இது எவ்வளவு மேன்மையான படைப்பு என்று புரிந்துகொள்ளலாம். ஆங்கிலத்தில் ‘கரோல்’, ‘இமேஜின் மீ அன் யூ’, ‘சேவிங் ஃபேஸ்’, ‘பாட்டம்ஸ்’, ‘கால் மீ பை யுவர் நேம்’, ‘லவ் சைமன்’, ‘புரோக் பேக் மவுன்டெய்ன்’, ‘ஷெல்டர்’ ஆகியன உள்ளிட்ட சில படங்கள் இவர்களை மையப்படுத்தி வந்திருக்கின்றன. மலையாளத்தில் வந்த ‘காதல் தி கோர்’ படம் தன்பாலின ஈர்ப்புள்ள இரு ஆண்களின் கதையைக் கூறியது. தமிழில் முதல்முறையாக வந்துள்ள இந்தப் படம், முதல் முயற்சிகளுக்கே உரிய சவால்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. கருத்தாக்கம், கலையாக்கம் இரண்டிலும் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. முற்போக்கான சிந்தனைகளோடு வெளியான பல படங்கள் செய்நேர்த்தியில் தோல்வியடைந்திருக்கின்றன. இந்தப் படம் இடைவேளைக்குப் பிறகு முழுக்க முழுக்க உரையாடலாகவே அமைந்திருக்கிறது. ஆனால் அது பாத்திரங்களுக்கு இடையேயானதாகப் போய்விடாமல் பார்வையாளர்களுடனான உரையாடலாக மாறிவிடுகிறது. ஒரே பாலினத்தவர்கள் இணைவது இயற்கைக்கு மாறானதில்லையா, அப்படி வாழ்ந்தால் குழந்தை எப்படிப் பிறக்கும், குடும்ப உறவு என்னாகும், உளவியல் ஆலோசனைகளால் சரிப்படுத்திவிட முடியாதா என்றெல்லாம் சுற்றி வருகிற கேள்விகளுக்கு வானவில்லாகப் பதில்கள் கிடைக்கின்றன. பால் புதுமையினர் கதையாகக் காட்சியளித்தாலும் உண்மையில் இது அம்மா–மகள் கதைதான். அம்மாவின் இடத்தில் சமூகத்தை வைத்துப் பார்க்கலாம். மாறுதலும் ஆறுதலுமான இப்படிப்பட்ட படங்களுக்கென்றே வந்தவராகத் திகழும் ரோகிணி தாயாகவும், சாம், நந்தினி பாத்திரங்களில் லிஜோமேல் ஜோஸ், அனுஷா பிரபு ஆகியோரும், நண்பனாக காலேஷ் ராமானந்த், தகப்பனாக வினீத், மேரியாக தீபா சங்கர் என அனைவரும் சிறப்பான நடிப்பால் அந்தக் கதாபாத்திரங்களின் மேல் காதலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களோடு பார்வையாளர்களைப் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரணவன். உமாதேவியின் பாடல் வரிகளுக்கு லயம் சேர்த்து, தேவையான இடங்களில் மௌனத்தையும் இசையாக்கியிருக்கிறார் கண்ணன் நாராயணன். சீராகத் தொகுத்தளித்திருக்கிறார் டேனி சார்லஸ். கருத்தும் கலையும் இரண்டறக் கலந்ததாகத் தமிழ் சினிமாவை உலகத் திரைகளுக்குக் கொண்டு செல்வோரின் அணியில் இணைந்திருக்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இக்குழுவினருக்கு ஆடுகளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்களும் வெளியீட்டாளர்களும் அழுத்தமான கைகுலுக்கலுக்கு உரியவர்கள். பேசுவது முக்கியம் படத்தைப் பற்றிப் பேசுவதோடு நில்லாமல், படம் பேசுகிற செய்தி தொடர்பாகப் பேசுவது முக்கியம். வரவேற்றோ எதிர்த்தோ கூட பொதுவெளியில் பேசப்பட வேண்டும். ஒரு படைப்பாக்கம் அப்போதுதான் முழு வெற்றி பெறும். படத்தை உருவாக்கியவர்கள் அதைத்தான் விரும்புவார்கள். இந்தியாவில் இவர்களின் திருமண உரிமையை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. உலகில் அந்த உரிமையை ஏற்கெனவே அங்கீகரித்த நாடுகள் இருக்கின்றன. நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நார்வே, ஸ்வீடன், போர்ச்சுகல், ஐஸ்லாந்து, அர்ஜென்டினா, டென்மார்க், பிரேசில், பிரான்ஸ், உருகுவே, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, கிரீன்லாந்து, கொலம்பியா, பின்லாந்து, ஜெர்மனி, மால்டா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், கோஸ்டாரிகா, சிலி, ஸ்விட்சர்லாந்து, கியூபா, ஸ்லோவேனியா, அன்டோர்ரா,. எஸ்டோனியா ஆகிய நாடுகள் சட்டப்பூர்வமாக தன்பாலினத்தவர் மணவாழ்வை அங்கீகரித்திருக்கின்றன. மெக்சிகோவின் பல்வேறு மாகாணங்களில் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வேறு சில நாடுகளிலும் இந்த அங்கீகாரத்திற்கான இயக்கங்கள் தொடர்கின்றன. ஆகவே இது மேற்கத்திய நாகரிகம் என்று சட்டென்று தள்ளுபடி செய்ய சிலர் முயல்வார்கள். ஆனால், நாட்டின் தொன்மையான இலக்கியங்களில் இந்த மக்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன. ஆலயச் சிற்பங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், இடையில் ஊடுறுவிய மேல்தட்டுத்தனமான கருத்துகளால் தன்பாலின உறவே ஒழுக்கக்கேடானது என்ற வெறுப்பு வளர்க்கப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்த சமுதாயத்தில் இந்த உறவை நாடுகிறவர்கள் சிறிய எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களின் உணர்வுப் பூர்வமான உறவு இயற்கைக்கு மாறானதாகிவிடாது. சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ள நாடுகளில், பல்வேறு சமூகப் பாதுகாப்புகள் உள்ளன. மருத்துவம், காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன. பாகுபாடுகளைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தகைய சட்டப் பாதுகாப்புகள் தங்களுடைய உறவை வெளிப்படையாக அறிவிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன. சமூக அரவணைப்பை உறுதிப்படுத்தியுள்ளன. எளிமையாகச் சொல்வதென்றால் இணையராக உறவினர் இல்லங்களுக்கும் பொது நிகழ்வுகளுக்கும் சென்று வர முடிகிறது. தாங்கள் தனிமைப்பட்டுவிடவில்லை என்ற தன்னம்பிக்கை மேலோங்குகிறது.அங்கீகாரத்தால் விளையும் தன்னம்பிக்கை ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்தில் இவர்களையும் பங்கேற்கச் செய்கிறது. கலை, அரசியல், தொழில் வணிகம் என பல்வேறு துறைகளில் கம்பீரமாக ஈடுபடும் தன்பாலின இணையர்கள் பலர் இருக்கிறார்கள். அயர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் லியோ வரட்கர், அவரது கூட்டாளி மாத்யூ பர்ரட் இருவரும் பெயர் பெற்ற தன்பாலின இணையராவர். போலந்து அரசியலில் அன்னா கிராவ்போஸ்கா, இசபெல்லா கிராவ்போஸ்கா இரு பெண்களும் தங்களின் பணிகளுக்காக மதிக்கப்படுகிறவர்கள். ஜெனீவா ரோசெல். பார்பரா லின்: இருவரும் அறிவியலில் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக் தனது பாலின ஈர்ப்பு அடையாளத்தை வெளிப்படையாக அறிவித்தவர். டென்னிஸ் நட்சத்திரம் மார்ட்டினா நவரத்திலோவா தனது பாலியல் தேர்வைத் தயக்கமின்றி வெளிப்படுத்தியவர். உலகறிந்த எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்ட் தயக்கக் கயிறுகளை அறுத்துக்கொண்டவர்தான். ஹாலிவுட் திரைப்படத் துறையில் நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் இத்தகைய இணையர்களாக இயங்குகிறார்கள். இவர்கள் பொதுச் சமூகத்தில் இவர்களைப் பற்றிய நேர்மறைக் கண்ணோட்டத்தை உருவாக்குவதிலும் சிறப்பாகப் பங்களித்து வருகிறார்கள். எதிர்ப்பதில் மத ஒற்றுமை! உலகின் இத்தகைய காட்சிகளைக் காண மறுத்து இது ஒழுக்கக்கேடு என்றும், இதை அனுமதித்தால் சமூக ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்றும் கூறி, குறிப்பாக மதம் சார்ந்த அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்தியாவில் இவர்களைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகக் கூறும் பழைய விக்டோரியா காலத்துச் சட்டத்தைத் (சட்ட உரை 377) தள்ளுபடி செய்யக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் தங்களையும் இவர்களின் எதிர்த் தரப்பினராக இணைத்துக்கொள்ளக் கோரி பல அமைப்புகள் இணைந்துள்ளன. இவ்வாறு இணைந்திருப்பதில் எல்லா மதங்களையும் சேர்ந்த அமைப்புகள் இருப்பது கவனிக்கத்தக்கது. இதிலே மத ஒற்றுமை! மதம் சார்ந்த கோட்பாடுகள் இவர்களை அங்கீகரிப்பதற்கு முக்கியமானதொரு தடையாகப் பல நாடுகளிலும் இருக்கின்றன. தனி மனித ஒழுக்கம் அல்லது சமூகச் சீர்குலைவு ஆகியவற்றை விட அந்த அமைப்புகளின் கவலை, இது அங்கீகரிக்கப்படுமானால் வேலிகளைத் தாண்டிய உறவுகள் வலுப்பெறும், அது மத ஆதிக்கத்திற்கு சவாலாக வரும் என்ற அச்சம்தான் என்று ஊகிப்பது கடினமல்ல. சாதி அமைப்புகளுடைய எதிர்ப்பும் இந்த அச்சத்திலிருந்தே வருகிறது. அவர்கள் யோசிக்க மறுப்பது என்னவென்றால், எதிர்ப் பாலினத்தவரிடையேயான ஈர்ப்புதான் ஆகப் பெரும்பான்மை. தன் பாலின ஈர்ப்பு கொண்டோர் மிகக்குறைவே. அந்த எண்ணிக்கையாலும் எதிர்காலத்தில் அது பெருகிவிடுவதாலும் மதமோ சாதியோ தகர்ந்துவிடும் என்று கவலைப்படுவது கற்பனையான பேய் பிசாசை நினைத்துப் பயப்படுவது போன்றதுதான். இந்நிலையில், இவர்களுக்குரிய அங்கீகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அடுத்த விசாரணை ஏப்ரல் 18 அன்று நடைபெற இருக்கிறது. அந்த விசாரணை எங்கே இட்டுச் செல்லுமோ என்ற கவலையுடன் இந்த மக்கள் அந்த நாளை எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓர் ஆறுதல் இதனிடையே, ஒரு ஆறுதலாக, தமிழ்நாட்டில் இவர்களுக்கான கொள்கை ஒன்றை உருவாக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டிருக்கிற செய்தி வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த இரு பெண்களின் உறவுரிமை தொடர்பான ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான ஆய்வுகளைப் படித்து, இடைக்கால ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். அதில், உச்சநீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டல்படி மாறுபாலினத்தவர்களுக்கான கொள்கையை உருவாக்குவதில் தற்போதைய நிலவரம் என்னவென்று கேட்டதுடன், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் சேர்த்து ஒரே கொள்கையாக உருவாக்கலாம் என்ற கருத்தையும் கூறியிருந்தார். அரசுத் தரப்பிலிருந்து, தனித்தனிக் கொள்கைகள் உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனிக் கொள்கைகளாக உருவாக்கப்பட்டாலும் முதலில் ஒன்று, பிறகு இன்னொன்று என்றில்லாமல் இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியிடப் பணித்துள்ளார். வரும் செப்டம்பரில் அடுத்த விசாரணை நடைபெற உள்ளது. தனித்தனிக் கொள்கைகளாக வேண்டாம், ஒருங்கிணைந்த ஒரே கொள்கையாகவே உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாறுபாலினத்தவர்கள் சிலரும், தன்பால் ஈர்ப்பாளர்கள் சிலரும் முன்வைத்திருக்கிறார்கள். தனித்தனிக் கொள்கைகளாக இருந்தால், ஒவ்வொரு பிரிவினருக்குமான கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினருக்கான வாய்ப்புகளில் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடும் என்று கருதுகிறேன். எப்படியானாலும், இந்தக் கொள்கைகளை வகுப்பதில், மாறுபாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், அறிவியலாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோருடன் விரிவான கலந்துரையாடலை அரசு நடத்த வேண்டும், எல்லோரும் ஏற்கத்தக்கக் கொள்கை ஆவணங்களை உருவாக்க வேண்டும். கடந்த காலம் எப்படியோ, இனி வரும் காலத்தில் இத்தகைய மக்களின் இத்தகைய அங்கீகாரங்கள் நிலைபெற்றால்தான் நாகரிகமடைந்த சமுதாயம் என்று சொல்லிக்கொள்ள முடியும் https://minnambalam.com/cinema/kadhal-enbadhu-podhu-udaimai-review-may-love-and-recognition-become-common/ - ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.