Everything posted by கிருபன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 வணக்கம், 18வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2025 சீசன் மார்ச் மாதம் 22 இல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி ஏடென் கார்டன்ஸில் மே 25 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 எனினும் பத்துப் பேருக்குக் குறைவாகப் பங்குபற்றினால் போட்டி நடாத்தப்படமாட்டாது! இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) 1. Chennai Super Kings Ruturaj Gaikwad (c ), Matheesha Pathirana, Shivam Dube, Ravindra Jadeja, MS Dhoni, Noor Ahmed, Ravichandran Ashwin, Devon Conway, Syed Khaleel Ahmed, Rachin Ravindra, Anshul Kamboj, Rahul Tripathi, Sam Curran, Gurjapneet Singh, Nathan Ellis, Deepak Hooda, Jamie Overton, Vijay Shankar, Vansh Bedi, Andre Siddarth, Shreyas Gopal, Ramakrishna Ghosh, Kamlesh Nagarkoti, Mukesh Choudhary, Shaik Rasheed. 2. Delhi Capitals Axar Patel, Kuldeep Yadav, Tristan Stubbs, Abishek Porel, KL Rahul, Mitchell Starc, T. Natarajan, Jake Fraser-McGurk, Mukesh Kumar, Harry Brook, Ashutosh Sharma, Mohit Sharma, Faf Du Plessis, Sameer Rizvi, Donovan Ferreira, Dushmantha Chameera, Vipraj Nigam, Karun Nair, Madhav Tiwari, Tripurana Vijay, Manvanth Kumar L, Ajay Mandal, Darshan Nalkande. 3. Gujarat Titans Rashid Khan, Shubman Gill (c ), Sai Sudharsan, Rahul Tewatia, Shahrukh Khan, Jos Buttler, Mohammad Siraj, Kagiso Rabada, Prasidh Krishna, Washington Sundar, Sherfane Rutherford, Gerald Coetzee, Glenn Phillips, R. Sai Kishore, Mahipal Lomror, Gurnoor Singh Brar, Mohd. Arshad Khan, Karim Janat, Jayant Yadav, Ishant Sharma, Kumar Kushagra, Kulwant Khejroliya, Manav Suthar, Anuj Rawat, Nishant Sindhu. 4. Kolkata Knight Riders Rinku Singh, Varun Chakravarthy, Sunil Narine, Andre Russell, Harshit Rana, Ramandeep Singh, Venkatesh Iyer, Quinton De Kock, Angkrish Raghuvanshi, Spencer Johnson, Moeen Ali, Rahmanullah Gurbaz, Vaibhav Arora, Ajinkya Rahane (c ), Rovman Powell, Umran Mailk, Manish Pandey, Anukul Roy, Luvnith Sisodia, Mayank Markande. 5. Lucknow Super Giants Nicholas Pooran, Ravi Bishnoi, Mayank Yadav, Mohsin Khan, Ayush Badoni, Rishabh Pant (c ), Avesh Khan, Akash Deep, David Miller, Abdul Samad, Mitchell Marsh, Shahbaz Ahamad, Aiden Markram, Matthew Breetzke, Shamar Joseph, M. Siddharth, Arshin Kulkarni, Rajvardhan Hangargekar, Yuvraj Chaudhary, Prince Yadav, Akash Singh, Digvesh Singh, Himmat Singh, Aryan Juyal. 6. Mumbai Indians Jasprit Bumrah, Suryakumar Yadav, Hardik Pandya(c ), Rohit Sharma, Tilak Varma, Trent Boult, Deepak Chahar, Will Jacks, Naman Dhir, Mujeeb Ur Rahman, Mitchell Santner, Ryan Rickelton, Lizaad Williams, Reece Topley, Robin Minz, Karn Sharma, Vignesh Puthur, Arjun Tendulkar, Bevan John Jacobs, Venkata Satyanarayana Penmetsa, Raj Angad Bawa, Shrijith Krishnan, Ashwani Kumar. 7. Punjab Kings Shashank Singh, Prabhsimran Singh, Shreyas Iyer (c ), Yuzvendra Chahal, Arshdeep Singh, Marcus Stoinis, Marco Jansen, Nehal Wadhera, Glenn Maxwell, Priyansh Arya, Josh Inglis, Azmatullah Omarzai, Lockie Ferguson, Vyshak Vijaykumar, Yash Thakur, Harpreet Brar, Aaron Hardie, Vishnu Vinod, Xavier Bartlett, Kuldeep Sen, Pravin Dubey, Pyla Avinash, Suryansh Shedge, Musheer Khan, Harnoor Pannu. 8. Rajasthan Royals Sanju Samson (c ), Yashasvi Jaiswal, Riyan Parag, Dhruv Jurel, Shimron Hetmyer, Sandeep Sharma, Jofra Archer, Tushar Deshpande, Wanindu Hasaranga, Maheesh Theekshana, Nitish Rana, Fazalhaq Farooqi, Kwena Maphaka, Akash Madhwal, Vaibhav Suryavanshi, Shubham Dubey, Yudhvir Charak, Ashok Sharma, Kunal Rathore, Kumar Kartikeya Singh. 9. Royal Challengers Bengaluru Virat Kohli, Rajat Patidar (c ), Yash Dayal, Josh Hazlewood, Phil Salt, Jitesh Sharma, Bhuvneshwar Kumar, Liam Livingstone, Rasikh Dar, Krunal Pandya, Tim David, Jacob Bethell, Suyash Sharma, Devdutt Padikkal, Nuwan Thushara, Romario Shepherd, Lungi Ngidi, Swapnil Singh, Mohit Rathee, Abhinandan Singh, Swastik Chhikara, Manoj Bhandage. 10. Sunrisers Hyderabad Heinrich Klaasen, Pat Cummins (c ), Abhishek Sharma, Travis Head, Nitish Kumar Reddy, Ishan Kishan, Mohammad Shami, Harshal Patel, Abhinav Manohar, Rahul Chahar, Adam Zampa, Simarjeet Singh, Eshan Malinga, Jaydev Unadkat, Kamindu Mendis, Zeeshan Ansari, Sachin Baby, Aniket Verma, Atharva Taide, Wiaan Mulder. போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே. Most runs Runs Player Team 741 Virat Kohli Royal Challengers Bengaluru 583 Ruturaj Gaikwad Chennai Super Kings 573 Riyan Parag Rajasthan Royals 567 Travis Head Sunrisers Hyderabad 531 Sanju Samson Rajasthan Royals Source: ESPNcricinfo[161] Most wickets Wickets Player Team 24 Harshal Patel Punjab Kings 21 Varun Chakravarthy Kolkata Knight Riders 20 Jasprit Bumrah Mumbai Indians 19 T Natarajan Sunrisers Hyderabad 19 Harshit Rana Kolkata Knight Riders Source: ESPNcricinfo[162] Most Valuable Player Points Player Team 450.0 Sunil Narine Kolkata Knight Riders 315.5 Virat Kohli Royal Challengers Bengaluru 274.0 Travis Head Sunrisers Hyderabad 273.5 Abhishek Sharma Sunrisers Hyderabad 259.0 Pat Cummins Sunrisers Hyderabad Source: IPLT20[165] End of season awards Award Prize Player Team Emerging player of the season ₹10 lakh (US$11,000) Nitish Kumar Reddy Sunrisers Hyderabad Striker of the season ₹10 lakh (US$11,000), trophy and a car Jake Fraser-McGurk Delhi Capitals Fantasy player of the season ₹10 lakh (US$11,000) and trophy Sunil Narine Kolkata Knight Riders Most sixes ₹10 lakh (US$11,000) and trophy Abhishek Sharma Sunrisers Hyderabad Most fours ₹10 lakh (US$11,000) and trophy Travis Head Sunrisers Hyderabad Catch of the season ₹10 lakh (US$11,000) and trophy Ramandeep Singh Kolkata Knight Riders Team fairplay award ₹10 lakh (US$11,000) – Sunrisers Hyderabad Purple Cap (most wickets) ₹10 lakh (US$11,000) Harshal Patel Punjab Kings Orange Cap (most runs) ₹10 lakh (US$11,000) Virat Kohli Royal Challengers Bengaluru Most Valuable Player ₹10 lakh (US$11,000) and trophy Sunil Narine Kolkata Knight Riders
-
டிரம்ப்பால் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள்… தவிப்பில் உலக நாடுகள்!
டிரம்ப்பால் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள்… தவிப்பில் உலக நாடுகள்! 7 Mar 2025, 7:05 AM பாஸ்கர் செல்வராஜ் கடந்த வாரம் உலகம் கற்பனை செய்து பார்த்திராத இரு சம்பவங்களைக் கண்டது. ஒன்று ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐநா தீர்மானத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து எதிர்த்தது. இரண்டாவது உலக ஊடகங்களின் முன்னால் உக்ரைன் அதிபரும் அமெரிக்க அதிபரும் போரையும் அமைதியையும் மையப்படுத்தி கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டது. உக்ரைன் போரை தலைமையேற்று நடத்திய அமெரிக்கா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததும் அதன் பின்னால் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் ஐநாவில் ரஷ்ய எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதும் யாரும் எண்ணிப் பார்த்திராத ஒன்று. அதுமட்டுமல்ல வார்த்தைப் போரில் ஈடுபட்ட செலன்ஸ்கியை ஆதரித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிக்கை விடுவதோடு போரினைத் தொடர அனைத்து உதவிகளையும் வழங்கி தலைமை ஏற்க முன்வருகின்றன. போரை முன்னின்று நடத்திய நாடு, போரிட்ட நாட்டுடன் சேர்ந்து அமைதியை ஏற்படுத்தப் போகிறேன் என்கிறது. போரினால் நாட்டையும் மக்களையும் இழந்து நிற்கும் உக்ரைனும் போரினால் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளும் போரைத் தொடர வேண்டும் என்கின்றன. விலை அதிகம் கொண்ட அமெரிக்கர்களின் எரிபொருளை வாங்கிக் கொண்டிருக்கும் இந்நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர முனைவார்கள்; பைடன் ஆட்சிக் காலத்தில் உடைக்கப்பட்ட நோர்டு எரிவாயுத் தாரை 2 (Nord Stream 2) திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர எத்தனிப்பார்கள் என்று பார்த்தால் முதலாவது ஆட்சிக் காலத்தில் அதன்மீது பொருளாதாரத் தடை விதித்த டிரம்ப்பின் கோடீஸ்வர நண்பர்கள் அந்தக் குழாயை முதலீட்டுச் சரிசெய்து இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகச் செய்திகள் கசிகின்றன. டிரம்ப் பதவியேற்ற சில மாதங்களில் நடக்கும் இந்தத் தலைகீழ் மாற்றங்கள் உலகில் என்ன நடக்கிறது என்று புரியாமல் எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்கர்களால் எழுதப்பட்டது உலக விதி இல்லை! இது குறித்த ஊடக இரைச்சலைத் தாண்டி இம்மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தற்போதைய அமெரிக்க அரசின் செயலர் ருபியோ பாக்ஸ் செய்தி நேர்காணலில் “ஒற்றைத் துருவ உலகம் இயல்பானது அல்ல; அது பிறழ்வு (anomaly); பனிப்போரின் விளைவு; நாம் மீண்டும் பல வலுவான நாடுகள் உலகின் பல பகுதிகளில் இருக்கும் பல்துருவ உலகத்தை அடையும் புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று சொன்ன வாக்கியங்களை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். இது முந்தைய அமெரிக்க செயலர் பிளிங்கன் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்த “உலக விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு” (Rules based order) என்ற நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. எப்படி இந்த ருபியோவின் பல்துருவ கருத்தாடல் வேறுபட்டது என்பதைப் புரிந்து கொள்வதற்கு பிளிங்கன் கூறிய உலக ஒழுங்கின் விதி என்ன என்று தெரிய வேண்டும். கெடுவாய்ப்பாக ஐநாவின் உலக நாடுகளுக்கான விதி தெரியும்; இவர்கள் கூறும் உலக விதி எங்கே இருக்கிறது? யாரால் உருவாக்கப்பட்டது? என்று நீண்ட அனுபவம் கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சரே கேட்கும் நிலை. ஏனெனில், அப்படி அமெரிக்கர்களால் எழுதப்பட்ட உலக விதி என்ற ஒன்று இல்லை. ஆனால், செயல்படுத்திய விதி ஒன்று இருந்தது. அது உலக நாடுகள் டாலரைத் தவிர மற்ற நாணயங்களில் பரிவர்த்தனை செய்வதற்கு இருந்த தடை. அது எப்படி செயல்படுத்தப்பட்டது என்று கேட்டால் அது ஐம்பதுகளில் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட டாலரை மையப்படுத்திய பரிவர்த்தனையில் தொடங்கி பின்பு எழுபதுகளில் உலக எண்ணெயின் விலையும் பரிவர்த்தனையும் டாலரில்தான் என்பதாக மாறி வங்கிகளின் வழியான எல்லா உலக கொடுக்கல் வாங்கல்களும் ஸ்விப்ட் (swift) எனப்படும் கட்டமைப்பின் வழியாக மட்டுமே நடப்பது என்பதாக வளர்ந்து நிலைபெற்றது. அதில் விடுபட்ட சோவியத் ஒன்றிய நாடுகளும் உலகமயத்துக்குப் பிறகு அதில் இறுக்கமாகச் சேர்த்துக் கட்டப்பட்டன. அத்தனை நாடுகளின் வங்கிகளின் பணப்பரிமாற்ற செய்திகளையும் திறம்பட கையாளும் ஸ்விப்ட் கட்டமைப்பும் அதற்குத் தேவையான இணையம், மீத்திறன் வாய்ந்த கணினிகள் (Super computers) அதற்கான சில்லுகளை உருவாக்கும் நுட்பம் எல்லாம் அமெரிக்கர்களிடம் மட்டுமே இருந்தது. எனவே, மாற்று வழியில் சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் தவிர இந்த வலைப்பின்னலைத் தாண்டி யாரும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியாது என்பதால் எரிபொருளின் விலை அமெரிக்க டாலரிலும் அதற்கான டாலரைக் கொடுத்து வாங்க அவர்களின் இணைய கணினி நுட்பங்களில் செயல்படும் கட்டமைப்பிலும் அதுவும் அமெரிக்க வங்கிகள் வழியாகவும் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது விதியாக மாறியது எனவும் அதுவே பிளிங்கன் சொல்லும் உலக ஒழுங்கு விதி எனவும் கொள்வோம். அமெரிக்கர்களின் சதுரங்க ஆட்டம்! அப்படி உருவான ஒழுங்கு விதிக்கு இப்போது என்னவானது என்று பார்த்தால் ரஷ்யா தனது எரிபொருளை சீனாவுக்கு குழாய் அமைத்து சொந்த நாணயத்தில் பரிவர்த்தனை செய்து கொள்ள ஆரம்பித்தது. அது எப்படி சாத்தியமானது என்று கேட்டால் சீனா இணைய நுட்பங்களில் அமெரிக்காவுக்கு இணையாக வளர்ந்து இந்த இரு நாடுகளும் யாரும் உள்ளே நுழைய முடியாத இணைய அரணை (Firewall) ஏற்படுத்திக் கொண்டதோடு பணப்பரிவர்த்தனைக்கான இணையக் கட்டமைப்புகளையும் (CHIPS, SPFS) ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்ததுதான் காரணம். இதன் வழியாக “அமெரிக்க டாலரில் எண்ணெய் விலை அவர்களின் இணைய வங்கிக் கட்டமைப்பின் வழியாக மட்டுமே வணிகம்” என்ற ஒழுங்கு விதியை உடைத்திருக்கிறார்கள் அல்லது மீறி இருக்கிறார்கள் என்று முடிவுக்கு வரலாம். அதனால்தான் சீன, ரஷ்ய நாடுகளை எதிர்த்து சண்டையிடுவதும் விதியை மதித்து நடக்க நெருக்கடி கொடுப்பதும் மாற்று நாணயத்தில் வணிகம் செய்தால் வரி விதிப்பேன் என்று மிரட்டுவதுமாக அமெரிக்கர்கள் இருந்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு சீனர்கள் மாற்று சூரிய, காற்று மின்னாற்றல் மற்றும் சேமிக்கும் மின்கல நுட்பங்களில் தேர்ந்து உற்பத்தியைப் பெருக்கியதோடு மாற்று மின்சார மகிழுந்துகளை மலிவாக உற்பத்தி செய்து பழைய எரிபொருளின் தேவையைக் குறைத்து அதனால் இயங்கும் மகிழுந்துகளின் சந்தையையும் இல்லாமல் ஆக்கி வருகிறார்கள். இப்படி மாற்று நாணய எரிபொருள் வணிகம், மாற்று எரிபொருள் இணைய மின் மகிழுந்துகள் உருவாக்கத்தின் மூலம் உலகமய கோட்டையையும் அதற்கான ஒழுங்கு விதியையும் ரஷ்யாவும் சீனாவும் உடைத்து வந்திருக்கின்றன. அப்படி உடைக்கும் ரஷ்யாவின் ஐரோப்பிய சந்தை மற்றும் எரிபொருள் வளத்தைக் கைப்பற்றவும் சீனாவின் மாற்று எரிபொருள் இணைய நுட்பத்தை முடக்கவும் அமெரிக்கர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள். அப்படிச் செய்த மறைமுக சிரிய, உக்ரைன் பதிலிப் போர்கள், சீனாவுடனான வர்த்தகப்போர், ஹாங்காங் உள்நாட்டுக் குழப்பம், தைவான் விடுதலை மிரட்டல், சில்லுகள் ஏற்றுமதி மற்றும் உற்பத்திக் கருவிகளுக்குத் தடை என அமெரிக்கர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றியும், சில்லுகளுக்கு விதித்த தடையை உடைத்து ஏழு நானோமீட்டர் சில்லுகளைச் சொந்தமாக உருவாக்கி இணையப் பொருள்களுக்கான சந்தையைச் சீனா தக்கவைத்ததும் இதுவரையிலுமான அமெரிக்கர்களின் சதுரங்க ஆட்டத்தை முடித்து வைத்திருக்கிறது. அது இழப்பை ஏற்றுக்கொண்டு இருப்பதைக் காப்பாற்றிக் கொள்வது அல்லது இன்னும் மூர்க்கமாக மோதி போரை விரிவாக்குவது என்ற இரண்டு தெரிவுகளை மட்டுமே அமெரிக்கர்களின் முன் நிறுத்தி இருக்கிறது. எண்ணெய் மற்றும் தொழிற்துறை முதலாளிகள் நிறைந்த குடியரசுக் கட்சி ராணுவ வலிமை கொண்ட சீன, ரஷ்யர்களுடன் மோதி வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து முதலாவது தெரிவை ஏற்று இருக்கிறது. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த டிரம்ப் நிர்வாகத்தின் செயலர் ருபியோ பல்துருவ உலகத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என்று அறிவித்து தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அந்த முடிவின் வெளிப்பாடாக டிரம்ப் போரினை நிறுத்தி ரஷ்யாவுடன் சமாதானம் பேசுகிறார். போரில் இழந்த பணத்தை ஈடுசெய்ய உக்ரைனின் கனிம வளத்தைக் கொடு என்று கழுத்தை நெறிக்கிறார். பதிலுக்கு எதுவும் தரப்படவில்லை என்பதால் செலன்ஸ்கி முரண்டு பிடித்திருக்கிறார். ஒரே துருவமாக இருக்கும் அமெரிக்கா… இனி? இதன்படி முந்தைய டாலர் உலக ஒழுங்கு உடைந்துவிட்டதை அமெரிக்கா ஏற்று முன்னோக்கி நகர முனைந்து இருக்கிறது; வலுவான சீன, ரஷ்ய நாடுகளின் டாலர் அல்லாத பரிவர்த்தனைகளை அமெரிக்கா ஏற்க தயாராகி விட்டது; அப்படியான உலகமே வரப்போகும் பல்துருவ உலகம் என்று பொருளாகிறது. அப்படியான மாற்று பரிவர்த்தனைக்கு வெறும் இணையக் கட்டமைப்பு மட்டும் போதாது. மற்றவர்களை ஏற்க செய்ய வலுவான உற்பத்தி வலிமையும் மற்ற நாடுகள் ஏற்க வேண்டிய தேவையும் இருக்க வேண்டும். உலக நாடுகளுக்குத் தேவையான எரிபொருள், கனிமங்கள், உணவுப்பொருள்கள், ஆயுதங்கள் என பெரும் உற்பத்தி வலிமை கொண்ட ரஷ்யாவும் மாற்று எரிபொருள், மின்கலம், இணையம், செயற்கை நுண்ணறிவு என நவீன நுட்பங்கள் அனைத்தும் பெற்ற சீனாவும் அவர்களின் நாணயத்தில் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பைப் பெற்று உலகின் முக்கிய துருவங்களாகின்றன. ஒருதுருவமாக இருக்கும் அமெரிக்கா இவ்விரு நாடுகள் வைத்திருக்கும் அத்தனை நுட்பங்களையும் வளங்களையும் பெற்று இருப்பதால் உருவாகிக் கொண்டிருக்கும் பல்துருவ உலகின் முக்கிய துருவமாகத் தொடரும் வாய்ப்பைப் பெறுகிறது. இதன்படி உருவாகும் பல்துருவ உலகம் மூலப்பொருள்கள், கனிமங்கள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப வலிமை வாய்ந்த நாடுகள் மற்ற நாடுகளுடன் அவரவர் வலிமைக்கு ஏற்ப அவரவர் நாணயத்தில் பணப்பரிவர்த்தனை செய்துகொள்வது என்பதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவின் மகுடிக்கு ஆடும் பாம்புகள்! சீன, ரஷ்ய நாடுகளைப் பொறுத்தவரையில் இது ஏற்கனவே கட்டி எழுப்பப்பட்ட நடைமுறை எதார்த்தம். ஆனால், அமெரிக்கா இனிதான் கட்டி எழுப்ப வேண்டும். அப்படிக் கட்டியெழுப்ப பழைய டாலர் எரிபொருள் மைய உலகமயக் கட்டமைப்பை உடைக்க வேண்டியது முன்நிபந்தனை. உலகமய எரிபொருள் டாலர் இணைய வங்கிக் கட்டமைப்பின் மூலம் கொழுத்த அமெரிக்க வங்கி மூலதனம் உலகம் முழுக்க பாய்ந்து மலிவாக உற்பத்தி செய்து கொண்டுவந்து அமெரிக்காவில் விற்று சொந்த நாட்டின் உற்பத்தியாளர்களை சந்தையில் இருந்து வெளியேற்றி பணத்தின் மதிப்பைத் திரித்து பொருள்களின் விலையைக் கூட்டி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வாங்க வழியற்றவர்களாக மாற்றி இருக்கிறது. எதிர்காலத்தில் சம்பாதிக்கப் போகும் வருவாயை இப்போதே கடனாகக் கொடுத்து செலவழிக்க வைத்து எல்லோரையும் கடன்காரர்களாக்கி இருக்கிறது. அமெரிக்க அரசு வருவாய் பற்றாக்குறைக்கு வெளியிட்ட டாலர் கடன் பத்திரங்களின் அளவு 36 ட்ரில்லியனை எட்டிவிட்டது. வெளிநாட்டவர் இதில் முதலிடுவதை நிறுத்திவிட்டார்கள். போட்ட பணம் திரும்ப வரும் என்ற நம்பிக்கை பொய்த்து எல்லோரும் தங்கத்துக்கு மாறி வருகிறார்கள். பற்றாக்குறையைக் குறைக்கவில்லை என்றால் இன்னும் மூன்றாண்டுகளில் அமெரிக்கா நெஞ்சுவலி வந்து துடிப்பது தவிர்க்கவியலாதது என்கிறார் பணப்பொதி நிறுவனர் (Hedge fund) டாலியோ. சுருக்கமாக எதிர்கால வருவாயை நம்பி கடன் வாங்கிய அரசும் மக்களும் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையை எட்டி இந்தக் கட்டமைப்பு இனியும் தொடர முடியாத நிலையை எட்டிவிட்டது. இதற்கான தீர்வு, கடன்காரர்களான வங்கி முதலாளிகளுக்கு மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பதுதான். அதற்கான ஏற்பாடாக மின்னணு நாணய பரிவர்த்தனைக்கு டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதைப் போல் தெரிகிறது. மின்னணு நாணய கையிருப்பு குறித்த செய்திகள், வரி விதித்து இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியைக் கூட்டும் வேலைகள் அதற்கான தொடக்கமாக இருக்கலாம். அமெரிக்கத் தொழிற்துறை இதனால் பலனடைந்து வரவேற்றாலும் பாதிக்கப்பட போகும் வங்கி மூலதனம் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து கொண்டு எதிர்த்து நிற்கிறது. முன்பு வண்டிகளைப் பெருமளவு உற்பத்தி செய்து பழைய எண்ணெய் சார்ந்த உலகமய விரிவாக்கத்தில் பலனடைந்தது ஐரோப்பா. தற்போது எந்த இயற்கை வளமோ, புதிய மாற்று எரிபொருள் இணைய மின் மகிழுந்து உற்பத்தி நுட்பமோ இன்றி வங்கி மூலதனத்துடன் ஒத்துழைத்துத் தோற்றுப்போன உக்ரைன் போரைத் தொடர வேண்டும் என்கிறது. அது இறப்பு உறுதியான நோயாளியின் சுவாசக்குழாய் உயிர்வளியை எடுக்க மனமில்லாத உறவினர்களின் நிலையைப் போன்றது. எனவே ஐரோப்பியர்களின் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது. உண்மையை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா தனது மகுடிக்கு ஆடும் பாம்புகளான இவர்களையும் மற்ற அணியையும் கிள்ளுக்கீரையாக மதித்துப் புறம்தள்ளி விட்டு ரஷ்யாவுடன் சேர்ந்துகொண்டு ஐரோப்பிய எரிபொருள் சந்தையைப் பகிர்ந்துகொள்ள தயாராகிறது. உடைக்கப்பட்ட எரிவாயுக் குழாயைச் சீர்செய்து ஐரோப்பிய சந்தையை ரஷ்யாவுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள தயாராகி விட்டதுபோல் தெரிகிறது. அதன் நீட்சி ஈரான் உள்ளிட்ட மற்ற எண்ணெய் வள நாடுகளையும் இதில் இணைத்துக்கொண்டு உலகச் சந்தையைப் பகிர்ந்து கொண்டு எல்லோருக்கும் பொதுவான நாணய பரிவர்த்தனை முறையை உருவாக்குவதை நோக்கியதாக இருக்கலாம். சொந்த வங்கி மூலதனமும் அணிகளின் டாலர் கையிருப்பும் நாளையே இல்லை என்றானால் அவர்களால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. ஆனால், எழுநூறு பில்லியன் டாலர் கடன் பத்திரத்தை வைத்திருக்கும் சீனா ஏற்றுமதியை நிறுத்தினால் எல்லாமே அமெரிக்காவில் நின்றுபோகும். அதோடு உற்பத்தியை மீளக்கட்டமைப்பது அவர்களின் துணையின்றி சாத்தியமில்லை. எனவே, எரிபொருள் வணிகத்தின் தலைமையான ரஷ்யாவுக்கும் புதிய உற்பத்தி மையமான சீனாவுக்கும் ஏற்புடைய பணமதிப்பு, பணப்பரிவர்த்தனை விதிகளையும் அதற்கான ஒப்பந்தத்தையும் எட்டும் திசையில் அமெரிக்கா நகர்கிறது என்று அனுமானிக்கலாம். அமெரிக்கா தமது அணிகளைக் காவு கொடுத்து தன்னுடைய நலனை எதிரிகளுடன் இணைந்துகொண்டு காத்துக் கொள்ளலாம். இந்தக் கெட்ட கனவு உண்மையானால் மற்ற ஐரோப்பிய ஆசிய அணிகளின் எதிர்காலம் நிச்சயம் இருண்ட காலம்தான். மிக சமீபத்தில் அமெரிக்க அணியான இந்தியாவின் கதி… என்று இழுக்க வேண்டாம் அது அதோ கதிதான். https://minnambalam.com/political-news/reversal-changes-caused-by-trump/
-
மேதகு வே.பிரபாகரன் "வீர நாள்" (மே 17 2025)
தலைவர் பிரபாகரனுக்கு விரைவில் வீரவணக்க நிகழ்வு: நினைவெழுச்சி அகவம் அறிவிப்பு தலைவர் பிரபாகரன் அவர்களது நினைவெழுச்சி தொடபான சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று (05.03.2025) புதன்கிழமை இடம்பெற்றது. இணையவழியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு “மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின்” ஊடகப்பிரிவு இணைப்பாளர் அறிவுமணி தலைமையில் இடம்பெற்றது. “மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” நிறுவப்பட்டதன் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக அகவத்தின் செயலாளர் புரட்சி விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டவிருந்த காணொளி இணைய வழியில் காண்பிக்கப்பட்டது. அடுத்து கேள்வி - பதிலுக்கான நேரம் வழங்கப்பட்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்களையும் தெளிவுபடுத்தல்களையும் அகவத்தின் முதன்மை செயற்பாட்டாளர்களில் ஒருவரான இளங்குட்டுவன் வழங்கினார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், இவ்வாண்டு எட்டாம் மாத முற்பகுதியில் ஒருங்கிணைந்து ஐரோப்பாவில் ஒரு நாட்டிலும் சம நேரத்தில் தாயகம், தமிழகம் உட்பட ஏனைய நாடுகளிலும் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வு இடம்பெறும் என்றும் அது தொடர்பான அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தேசியத் தலைவர் தொடர்பான பல்வேறு விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தற்போது தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நிகழ்த்துவது தொடர்பாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். சந்திப்பின் இறுதியில் தெளிவுபடுத்தலுடன் கூடிய தொகுப்புரையினை, “மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின்” தற்போதைய இணைப்பாளர் சங்கீதன் வழங்கினார். தொகுப்புரையின் போது தேசிய தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வின் ஆரம்ப பணிகள் பற்றியும் எதிர்காலத்தில் அது எவ்வாறு நகர்ந்து செல்லும் என்பது பற்றியும் ஊடகவியாளர்களாக விடயங்களை மக்கள் மத்தியில் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு உறவுகளிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென்றும், திட்டமிடப்பட்டிருக்கும் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வினை அதி உச்சமாகவும் உணர்வுபூர்வமாகவும் நடத்துவதற்கு உலகமெங்கும் பரந்து வாழும் உறவுகளின் ஒத்துழைப்பினையும் அவர் கேட்டுக் கொண்டார். https://ibctamil.com/article/memorial-planed-for-leader-pirapakaran-1741249764
-
வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்
வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள் இறக்குமதியாளர் ஒருவரால் 6 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% சதவீதத்தை பதிவு செய்யத் தவறினால், குறித்த இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், தேவையற்ற முறையில் வாகனங்களின் சேமிப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தனிப்பட்ட ரீதியாக வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் அதற்குப் பொருந்தாது என்றும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்க நிதிக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. "2020 ஆம் ஆண்டில் வாகனங்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்காலிக இடைநிறுத்தத்தை நிறுத்தி வைப்பதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதற்கான அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைவாகவே வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது. HS குறியீடு 304 இன் கீழ் உள்ள வாகனங்கள் இலங்கைக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் CIF-இல் 3% அபராதம் விதிக்கப்படும், அதிகபட்சம் 45% வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அளவில் 25% வீதமானவை 6 மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், அவர்களின் இறக்குமதி நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும். அந்த நிபந்தனைகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்படும் அனுமதி இடைநிறுத்தப்படும்." https://adaderanatamil.lk/news/cm7y8wiy30008kqlsaqlzj4g6
-
மேதகு வே.பிரபாகரன் "வீர நாள்" (மே 17 2025)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அஞ்சலிக்க ஏற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அஞ்சலிப்பதற்கு தாயகத்திலும், புலத்திலும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 'மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்' என்ற அமைப்பொன்று புலம்பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் ஊடாகவே இந்த அஞ்சலிப்பு நிகழ்வை நடத்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் பிரபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை தாயகத்திலும் புலத்திலும் சமநேரத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைவர் தொடர்பான பல்வேறு விவாதங்கள் அண்மைக்காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஊடகச் சந்திப்பையும் அவர்கள் இணையவழியில் நடத்தியதுடன், சிறப்பு ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர். https://newuthayan.com/article/தமிழீழ_விடுதலைப்_புலிகளின்_தலைவர்_பிரபாகரனை_அஞ்சலிக்க_ஏற்பாடுகள்
-
இலங்கையில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று உத்தரவாதம் இல்லை - சத்தாதிஸ்ஸ தேரர்
இலங்கையில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று உத்தரவாதம் இல்லை சத்தாதிஸ்ஸ தேரர் பரப்புரை நாட்டில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, படைக்குறைப்புச் செய்யும் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் மேலும் தெரிவித்ததாவது: தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு பெண்களே பெரும் பங்களிப்பு வழங்கினர். வீடு வீடாக சென்று அந்தக் கட்சியின் பெண்கள் பொய்யுரைத்தனர். எனவே, அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு எமது அணியிலுள்ள பெண்களுக்கு உள்ளது. மக்கள் மனம் அறிந்து சேவையாற்றுவதே சிறந்தது. நுகேகொடையில் இருந்து கொழும்புவரை நபரொருவர் மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக பயணித்துள்ளார். மூன்று இடங்களில் எரிபொருளும் நிரப்பியுள்ளார். கடுகண்ணாவை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பாதுகாப்பு நிலைவரம் இவ்வாறுதான் உள்ளது. தேசியப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க முற்படுவது பாரதூரமான விடயமாகும். எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் போர் ஏற்படுமா, இல்லையா என்பதை தற்போது திர்மானிக்க முடியாது. கிழக்கில் அடிப்படைவாத குழுவொன்று இருப்பதாக புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது. எனவே, எந்த நேரத்தில் தாக்குதல் நடக்கும் எனக் கூறமுடியாது. ஆதலால், இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு லட்சம்வரை குறைப்பது ஆபத்தானது – என்றார். https://newuthayan.com/article/இலங்கையில்_எதிர்காலத்தில்_போர்_ஏற்படாது_என்று_உத்தரவாதம்_இல்லை
-
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு March 7, 2025 11:07 am யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்று மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பிரதிய அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய தலைவர் ஒருவரின் வழிநடத்தலுடன் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதுடன் 150 பேருக்கு அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று செல்வம் அடைக்கலநாதன் எம். பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேற்படி ஓட்டுத் தொழிற்சாலை 1990 ஆண்டு காலங்களிலேயே யுத்தம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் அந்த தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அது சாத்தியப்படவில்லை. அந்த வகையில் கடந்த வருடம் திறைசேரி மூலம் 15 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொண்டு அதனை ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முடியாமற் போயுள்ளது. எனினும் எமது அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களில் அந்த ஓட்டு தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து புதிய தலைவர் ஒருவரை நியமித்து அவரது தலைமையில் தற்போது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இன்று (நேற்று) இந்த தொழிற்சாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுவதுடன் இது வடக்கு மக்கள் மகிழ்ச்சியடையும் சந்தர்ப்பமாகும். அந்த மக்கள் குறைந்த விலையில் ஓடு மற்றும் செங்கற்களையும் அதன் மூலம் கொள்வனவு செய்து கொள்ள முடியும். 5800 ஓடுகள் கொள்ளளவோடு 150 பேருக்கு தொழில் வாய்ப்புகளும் இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்றது. தேவைப்படும் மேலதிக நிதியை அமைச்சின் மூலம் பெற்று சாத்தியமான வகையில் வெற்றிகரமாக இந்த தொழிற்சாலையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://oruvan.com/reopening-of-the-abandoned-ottusuddan-wheel-factory-during-the-war/
-
சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் - இனியபாரதி குற்றச்சாட்டு
சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் - இனியபாரதி குற்றச்சாட்டு செய்திகள் பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட ஊடக மையத்தில் இன்று (06) மாலை சாணக்கியன் எம்.பி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி விசேட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது அப்பட்டமான பொய். முதுகெலும்பு இருந்தால் நேரடியாக வந்து இவ்வாறு ஊடக மாநாட்டில் அவ்விடயத்தை நிரூபிக்கட்டும். நான் அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்தை மறுக்கின்றேன். அவருக்கு பாராளுமன்ற சிறப்புரிமை இருக்கிறது என்பதற்காக மற்றவரின் சுய கௌரவத்தை உரிமையை இழுக்கும் உரிமை அவருக்கு இல்லை. பிள்ளையானின் சகா நான் என குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையே முரண்பாடுகள் தான் அதிகம். இவ்வாறு இருக்க இவ்வாறு என்னை இழுத்து இருக்கின்றார். அது மாத்திரமல்ல நான் கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு சென்றதாக பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களில் நான் கொழும்பு செல்லவே இல்லை . எனது சாரதி சுதா என்று சொல்கின்றார். முடிந்தால் அந்த சுதாவை காட்டுமாறு சவால் விடுகின்றேன் .எனவே தான் பாராளுமன்றத்தில் பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்ற அவரின் இந்த சித்து விளையாட்டுகளை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் நான் முறைப்பாடு ஒன்றை வழங்கவுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமாக இருந்தால் அவர் இவ்வாறான ஊடக மாநாட்டை நடத்தி பகிரங்கமாக நேருக்கு நேர் கூறட்டும் என சவால் விடுகின்றேன் என்றார்.
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
அல்ஜசீரா நேர்காணல் குறித்து ரணில் அதிருப்தி editorenglishMarch 7, 2025 அல்ஜசீராவில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குறித்து ரணில் விக்ரமசிங்க,அதிருப்தி தொிவித்துள்ளாா். நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே இது தொடா்பில் அவா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளாா். அல்ஜசீரா தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில் இருவர் விடுதலைப் புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அவா் தொிவித்துள்ளாா். “மனித உரிமைகள் வழக்கறிஞரும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையருமான அம்பிகா சத்குணநாதன் இந்த விவாதத்தில் பங்கேற்பார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எங்கள் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், நான் அவரை அறிந்திருப்பதால், அதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், பின்னர் அவருக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களுடன் தொடர்பு கொண்ட இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை அறிந்தேன்,” என அவா் குறிப்பிட்டுள்ளாா். நேர்காணலின் வடிவத்தையும் விமர்சித்த அவர் தனது பதில்களின் முக்கிய பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளாா். “நான் உள்ளூர் ஊடகங்களுடன் பேசும்போது, அது நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது, எனவே நல்லது கெட்டது இரண்டும் வெளிவரும். இருப்பினும், அல் ஜசீரா இரண்டு மணி நேரம் என்னை நேர்காணல் செய்தது, ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது, அதில் பெரும்பகுதியைத் திருத்தியது” என்று அவர் தொிவித்துள்ளாா். https://globaltamilnews.net/2025/212831/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஷோபாசக்தியின் எல்லாக் கதைகளையும் படித்திருப்பேன். புத்தகம் வாங்குவது எழுத்தின் அபிமானத்தால்தான். அவர் எழுத்தை வைத்து பிழைப்பதாக நான் நினைக்கவில்லை. சர்மிளா செய்யத் துருக்கியில் போய் இருந்தார். இப்போதும் அங்குதான் என்று நினைக்கின்றேன். சிலவேளை அநுர சகோதரயவின் ஆட்சியில் நல்லதே நடக்கும் என்று ஊர் போனாவோ தெரியாது!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஏதாவது செட் ஆகுமா?? ஷோபாசக்தி கதைகள் 1997-2024 தீக்குடுக்கை - அனோஜன் மணிமேகலை - அ.மார்க்ஸ் இடபம் - கண்மணி தாயைத்தின்னி - தில்லை சிவப்புச் சட்டைச் சிறுமி - ஸர்மிளா செய்யத்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓம். பெளசர் 6 புத்தகங்கள் எடுத்து வைச்சிருக்கின்றார். பெருமாள் முருகனையும் பாத்ததாகவும் இருக்கும்!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சாரி! சில்லறை வாங்கிப் பழக்கமில்லை..😂 மொத்தமாக வாரிச் சுருட்டித்தான் பழக்கம்😝
-
பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும் — வீரகத்தி தனபாலசிங்கம் —
பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும் March 5, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது அதன் குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையான விவாதங்களில் பெரும்பாலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டின் பொருளாதாரத்தை விடுத்து பட்ஜெட்டின் அரசியலையே பேசினார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் பொருளாதாரத்தை கையாளும் ஜனாதிபதி திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் பட்ஜெட்டை சமர்ப்பித்திருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கூறினார்கள். ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளை தேசிய மக்கள் சக்தி கைவிட்டு விட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்புகிறார்களா அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றுவதை வரவேற்கிறார்களா என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பதற்காக தர்க்கரீதியாக பொருத்தமில்லாத வகையில் பாராளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை, ஜனாதிபதி திசாநாயக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தனது அரசாங்கத்துக்கு தொடர்ந்து கிடைத்து வருவது குறித்து பெருமைப்படுகிறார் என்றே தோன்றுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கப்போவதில்லை என்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பை தாங்கள் பொய்யாக்கிவிட்டதாக அவர் திருப்திப்படுகிறார் என்பதை அவரின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன. ஜே.வி.பி.யின் கோட்பாடுகளை தாங்கள் கைவிடவில்லை என்று அழுத்தம் திருத்தமாக இப்போது ஜனாதிபதி கூறுவதில்லை. சிலவேளை அவர் அவ்வாறு கூறியிருந்தால், காலத்துக்கு ஒவ்வாத கொள்கைகளில் இன்னமும் கூட அவர் நம்பிக்கை கொண்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் மறுதலையாக குற்றஞ்சாட்டவும் தவறமாட்டார்கள். தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு கூறியதைப் போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உள்ளாக்குவது என்பது சுலபமாகச் சாத்தியமாகக்கூடியது அல்ல என்பதை ஜனாதிபதி திசாநாயக்க தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளையே திசாநாயக்க தொடர்ந்து முன்னெடுக்கிறார் என்று ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் பிரகாரம் தொடர்ந்து செயற்பட்டால் இலங்கை முழுமையான பொருளாதார மீட்சியை அடையமுடியுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, தற்போதைய தருணத்தில் அதன் நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் பொருளாதாரம் மேலும் மோசமடையக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதே கசப்பான யதார்த்தமாகும். இதே போக்கில் சென்றால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் பொருளாதாரக் கொள்கைகளை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி. இதற்கு அரசாங்க தலைவர்களினால் உகந்த பதிலைக் கூறக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. இது இவ்வாறிருக்க, அண்மைய நாட்களாக கடுமையாக தீவிரமடைந்திருக்கும் பாதாள உலக கொலைகள் பட்ஜெட் விவாதத்தை பெருமளவுக்கு கிரகணம் செய்துவிட்டன. மக்களின் கவனம் துப்பாக்கி வன்முறைகள் மீது திரும்பியிருக்கிறது. விவாதங்களின்போது பட்ஜெட் பற்றி பேசுவதை விடுத்து தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொலைகள் குறித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும்போது அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கும் தடுமாற்றத்தை அம்பலப்படுத்துகின்றன. குறைந்தபட்சம் இரு கொலைகளாவது இடம்பெறாமல் ஒரு நாளும் கூட கடந்த செல்வதாக இல்லை. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலக குழுவின் ஒரு தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவர் பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டுக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரைச் சுட்டுக்கொலை செய்தவர் ஒரு சட்டத்தரணி போன்று வேடமணிந்து நீதிமன்றத்திற்குள் வந்திருந்தார். கொழும்பு புதுக்கடையில் நீதிமன்றத்திற்குள் வைத்து பாதாள உலக பேர்வழிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை அல்ல. 2004 ஜனவரியில் இதே போன்றே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் தம்மிக்க அமரசிங்க என்ற பாதாள உலக பேர்வழி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலைசெய்தவர் சட்டத்துறை மாணவனாக வேடமணிந்து நீதிமன்றத்துக்கு வந்தார். அதே வருடம் நவம்பரில் மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய அவரது கொழும்பு வாசஸ்தலத்துக்கு முன்பாக பாதாள உலகத்தவர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விரும்பிய விதத்தில் தாக்குதல்களை மேற்கொள்வதில் தங்களுக்கு இருக்கும் ஆற்றலை பாதாள உலக கும்பல்கள் பொலிசாருக்கு சவால் விடுக்கும் வகையில் நிரூபித்த பல சம்பவங்களை கூறமுடியும். ஆனால், அரசாங்கங்களும் பொலிசாரும் முன்னைய சம்பவங்களில் இருந்து எந்த படிப்பினையையும் பெறவில்லை. சம்பவத்துக்கு பின்னர் சகலரும் புத்திசாலிகள் போன்று பேசுவது சுலபம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னரும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதாள உலக கும்பல்களை முற்றாக ஒழித்துக் கட்டப்போவதாக அரசாங்கங்கள் சூளுரைத்தன. ஆனால் நாளைடைவில் எல்லாமே மறக்கப்பட்டுவிடும். அரசாங்கம் மீண்டும் உஷாரடைவதற்கு இன்னொரு பாதாள உலக வனமுறைச் சம்பவம் இடம் பெற வேண்டியிருக்கும். ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 2023 பிற்பகுதியில் பாதாள உலகக் கும்பல்களையும் போதைப்பொருள் கடத்தலையும் ஒழித்துக் கட்டுவதற்கு அன்றைய பொதுப் பாதூகாப்பு அமைச்சர் ரிறான் அலஸும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனும் பெரும் ஆரவாரத்துடன் ‘யுக்திய’ என்ற நடவடிக்கையை தொடங்கினார்கள். கடுமையான அத்துமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு்க்களுக்கு மத்தியில் சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையின் விளைவாக பாதாள உலக வன்முறைகளும் போதைப்பொருள் கடத்தலும் பெருமளவுக்கு ஒடுக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் பிரகடனம் செய்தார். அதன் இலட்சணத்தை கடந்த பல மாதக்களாக நாட்டின் பல பாகங்களிலும் தொடரும் பாதாள உலக கொலைகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. பாதாள உலக கும்பல்களையும் போதைப்பொருள் வியாபாரத்தையும் இரு போயா தினங்களுக்குள் ஒழித்துக் கட்டப்போவதாக சூளுரைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அண்மைய சம்பவங்களுக்கு பிறகு முன்னைய அரசாங்க தலைவர்களைப் போன்றே ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது அமைச்சர்களும் பாதாள உலக கும்பல்கள் முற்றாக துடைத்தெறியப்படும் என்று சூளுரைக்கிறார்கள். தீவிரமடைந்திருக்கும் துப்பாக்கி வன்முறைகளின் விளைவாக அரசாங்கம் கடுமையான நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. குற்றச்செயல்களின் அதிகரிப்பின் பின்னணியில் சதித்திட்டம் ஒன்று இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கூறுகிறார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளை தடம்புரளச் செய்வதற்கும் நாட்டின் உறுதிப்பாட்டைக் குலைக்கவும் முயற்சியொன்று மேற்கொள்ளப்டுவதாக தங்களுக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கடந்தவாரம் அவர் ஊடகங்களுக்கு கூறினார். பாதாள உலக கும்பல்களுக்கும் போதைப்பொருள் மாபியாவுக்கும் எதிரான தனது போரைச் சீர்குலைக்கும் நோக்குடனேயே 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது தற்போது நினைவுக்கு வருகிறது. அப்போது குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பாக இருந்த ரவி செனவிரத்ன இப்போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சீர்குலைக்கும் நோக்குடனேயே பாதாள உலக கும்பல்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக கூறும் விசித்திரத்தை காண்கிறோம். தற்போதைய வன்முறைகள் வெறுமனே பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவானவையா அல்லது அவற்றின் பின்னால் மறைகரங்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி திசாநாயக்கவும் கூறியிருக்கிறார். தற்போதைய துப்பாக்கி வன்முறைகளின் பின்னணியில், அரசாங்க தலைவர்கள் தேசிய பாதுகாப்பு என்பதற்கு வெவ்வேறு வியாக்கியானங்களை அளிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த வாரம் கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி பாதாள உலக குழுக்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெறுகின்ற போதிலும், அண்மைய சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கோ அல்லது மக்களின் பாதுகாப்புக்கோ அச்சுறுத்தலை தோற்றுவிக்வில்லை என்று கூறினார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தேன்றியிருப்பதாக கருதுவதற்கு மோதுமானளவு பாரதூரத்தன்மை கொண்டவையாக தற்போதைய வனமுறைகளை ஜனாதிபதி நோக்கவில்லையா? தேசிய பாதுகாப்பு என்பது தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும் வெளியில் இருந்துவரும் அச்சுறுத்தல்களை தடுப்பதுமாக மாத்திரம் அர்த்தப்படாது. நாட்டு மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத அளவுக்கு பயங்கரமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கக்கூடியதாக தீவிரமடைந்திருக்கும் துப்பாக்கி வன்முறைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ளவேண்டும். பாதாள உலக கும்பல்களுடன் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களும் வன்முறைகளும் திடீரென்று தோற்றம் பெற்றவை அல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. சடடவிரோத போதைப் பொருள் வியாபாரம், பயங்கரமான ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் அரசியல் அனுசரணை ஆகியவற்றின் ஒரு கலவையே இன்றைய இந்த பயங்கரமான நிலைவரத்துக்கு காரணமாகும். கடந்த பல தசாப்தங்களாக, அரசாங்கங்கள் அரசியல் நோக்கங்களுக்காக பாதாள உலக குழுக்களை பயன்படுத்தி வந்திருக்கின்றன. பணபலமும் அடியாள் பலமும் சேர்ந்து அரசியலைக் குற்றச் செயல்மயமாக்கியிருப்பதுடன் குற்றச் செயல்களை அரசியல்மயமாக்கியிருக்கின்றன. இந்த விசச் சுழலில் இருந்து இலங்கையை விடுவிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. குற்றச்செயலும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கி்ன்றன. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு தடவை பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், “மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் நாளடைவில் அவற்றை தயாரிப்பதை தொழிலாகக் கொண்டு சொத்துக்களைக் குவித்து இறுதியில் பாராளுமன்றத்திற்குள்ளும் வந்துவிட்டார்கள்” என்று கூறியது நினைவுக்கு வருகிறது. அவரின் ஆட்சிக் காலத்திலும் பாதாள உலக கும்பல்களுக்கு அரசியல் அனுசரணை இருந்தது. ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு பிறகு பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளின் ஆட்சிகளிலும் பாதாள உலக கும்பல்கள் அரசியல் அனுசரணையுடன் செயற்பட்டன. கொலை, பாலியல் வல்லுறவு, பணம்பறிப்பு போன்ற குற்றச்செயல்களுக்காக சிறைவாசம் அனுபவித்த பாதாள உலக பேர்வழிகளுக்கு ஜனாதிபதிகள் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து சமாதான நீதிவான் பட்டமும் கொடுத்த வரலாறும் இருக்கிறது. இனநெருக்கடியின் விளைவாக மூண்ட மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரும் தென்னிலங்கையில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளும் சமூகத்தில் ஆயுதங்கள் பரவலாக புழக்கத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களாகும். வன்முறைகளை தூண்டிய அரசியல் கலாசாரத்தின் விளைவுகளையே இலங்கை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிக்கப் போவதாக கூறிக்கொண்டு பதவிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி தற்போதைய நிலைவரத்தை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை அறிவதற்கு நாமெல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஸ்ரீலங்காவை ‘கீளீன்’ பண்ணுவது சுலபமான வேலை அல்ல. https://arangamnews.com/?p=11861
-
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 6 Mar 2025, 12:13 PM ஆனந்த விகடனின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூன் ஆனந்த விகடனின் இணைய இதழான விகடன் பிளஸ் இதழில் வெளியானது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. ஆனந்த விகடன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், “கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குவது என்பது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல்” என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பரதசக்கரவர்த்தி, ஆனந்த விகடன் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்ய வேண்டும் என்று ஆனந்த விகடனுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். https://minnambalam.com/tamil-nadu/madras-high-court-order-central-govt-removes-vikatan-blocked/
-
நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன்
நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன் March 6, 2025 10:46 am நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு சில விடயங்கள் நீண்ட கால அடிப்படையில் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்தார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். நெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டினர். வடதாரகை படகின் மின்விசிறிகள் இயங்காமையால் மிகவும் இன்னல்படுவதாக மக்கள் தெரிவித்த நிலையில் அதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், வடதாரகைப் படகின் மின்பிறப்பாக்கியில் திருத்தவேலை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். இயன்றவரையில் விரைவாக சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகப் பதிலளித்தார். நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் காணாமல்போயுள்ள நிலையில், தற்காலிகமாக எழுதாரகைப் படகின் நங்கூரத்தை நெடுந்தாரகைப் படகுக்கு பயன்படுத்துவதற்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆளுநர் இணக்கம் தெரிவித்தார். நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைப்பதற்கான திட்டங்கள் கடற்படையினரிடம் இருப்பதாகவும் அது தொடர்பில் தன்னுடன் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர், வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்தே அதனை புனரமைப்புச் செய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நெடுந்தீவில் சுற்றுலாத்துறையை நீண்டகால நோக்கில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகார சபை ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதன்போது நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். நெடுந்தீவு கடற்றொழில் சமாசத்துக்குச் சொந்தமான அலையரசி படகு திருத்த வேலை காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இந்தப் படகு திருத்தத்துக்கான நிதி ஐ.ஓ.எம். நிறுவனம் வழங்கவிருந்த நிலையில் நிர்வாகச் சிக்கல் காரணமாக அந்த நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டதாக பிரதேச செயலர் குறிப்பிட்டார் நிர்வாகச் சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கை வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக விரைவில் முன்னெடுக்கப்படும் என்று இதன்போது பிரதம செயலாளர் குறிப்பிட்டார். நெடுந்தீவு கடற்கரையோரத்தைச் சூழ தடுப்பணை அமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும், பெருமளவு நிதி ஒதுக்கீடு இதற்குத் தேவை என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. படகுச் சேவையின் நேரத்தை கருத்தில் கொண்டு நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் இங்கு குறிப்பிட்டார். நெடுந்தீவில் வீதி விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்த பிரச்சினைக்கு ஆளுநர் உடனடியாகத் தீர்வை வழங்கினார். மேலும், நெடுந்தீவில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தை திருத்தியமைத்து தருமாறு மக்கள் கோரினர். இதேவேளை, நெடுந்தீவில் 150 வகையான மருத்துவ மூலிகைகள் காணப்படுவதாக கண்டறிந்துள்ளதாக வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார். அதை மக்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களுக்கு அதன் ஊடாக வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார். https://oruvan.com/governor-vedanayagan-provided-solutions-to-major-issues-in-neduntheevu/
-
பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது
பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது March 6, 2025 9:08 am களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் பேரிலேயே முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://oruvan.com/marvin-silva-arrested-on-charges-of-money-laundering/
-
உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்திய ட்ரம்ப்!
இராணுவ உதவிகள் நிறுத்தம் – ட்ரம்பிடம் சரணடைந்தார் ஜெலென்ஸ்கி இராணுவ உதவியை நிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் சரணடைந்தார். இந்நிலையில், அமைதிக்காக டிரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தைக்கு எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். உக்ரைன் மக்கள் அமைதியை அதிகம் விரும்புபவர்கள். டிரம்பின் பின்னால் உறுதியாக நிற்போம்” என அவர் எக்ஸ் தள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டை நிறுத்த உக்ரைன் தயாராக உள்ளது. உக்ரைன் ஏவுகணைகள், நீண்ட தூர ட்ரோன்கள், குண்டுகள் அல்லது பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தாது. இருப்பினும், ரஷ்யாவும் இந்த விடயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான கனிம ஒப்பந்தம் எந்த நேரத்திலும் கையெழுத்தாகலாம் என்றும், அது உக்ரைனுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் என்று நம்புவதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார். கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப்க்கு இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி ட்ரம்ப் ஊடகங்கள் முன்னிலையில், உக்ரைன் ஜனாதிபதியை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனால் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தைகள் முறிந்ததது. அமெரிக்காவில் இருந்து உடனடியாக வெளியேறிய உக்ரைன் ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்த நிலையில், அவருக்கு அமோக வரவேற்று அளிக்கப்பட்டிருந்தது. இது அமெரிக்காவை மேலும் ஆத்திரமடையச் செய்தது. இந்நிலையில், உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. எவ்வாறாயினும், தற்போது அமைதிக்காக டிரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=314957
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம் என்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம் என்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி March 6, 2025 ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு தமிழ் மக்களின் சம்மதத்தினை பெற வேண்டுமாயின் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும், புதிய தீர்மானம் அவசியம்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் தொடர்பில் இணைஅனுசரணை நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது. 2021 ஜனவரி 15ம்திகதியும் பெப்ரவரி 24ம் திகதியும் செப்டம்பர் 8 ம் திகதியும் 2022 பெப்ரவரி 25ம் திகதியும் கூட்டாக வெளியிட்ட கடிதங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்துக்காட்டியுள்ளது. அந்த தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என தெரிவித்திருந்தோம். ‘அனைத்து முன்னைய தீர்மானங்களும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை தேக்கமடையச் செய்கின்றன’. ‘மேலும் இவை இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குகின்றன’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இரண்டு உறுப்பினர்களை கொண்டுள்ள இணை அணுசரனை நாடுகள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம்’. ‘இலங்கையில் தொடரும் வன்முறைகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்காக விசேட அறிக்கையாளரை நியமிக்கும் வகையிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ‘இலங்கை குறித்த முதலாவது தீர்மானம் 2012 இல் நிறைவேற்றப்பட்டு பல வருடங்களாகிவிட்டது’. ‘எங்களின் எச்சரிக்கைகள் ஒவ்வொன்று சரியானவை என்பது நிரூபணமாகியுள்ளது’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. ‘இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னைய தீர்மானங்களை, இலங்கை விவகாரத்தில் தலையிடுபவை, அரசியல் நோக்கம் கொண்டவை என நிராகரித்துள்ளதுடன் உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்படும் எந்த பொறிமுறையும் உண்மையை கண்டறிவதை நோக்கமாக கொண்டிருக்கும் மாறாக பொறுப்புக்கூறலை நோக்கமாக கொண்டிராது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ‘இவ்வாறான சூழ்நிலைகளில் இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை போல குற்றவாளிகளிற்கு எதிராக சுயவிருப்புடன் நடவடிக்கைகளை எடுக்காது என்பது மிகவும் தெளிவாக தெரியவந்துள்ளது’ என்று இணை அனுசரணை நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ‘குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்பதையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வலியுறுத்திவருகின்றனர்’. ‘மீளநிகழாமைக்கு இது மிகவும் அவசியம்’ என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. https://www.ilakku.org/இலங்கையை-சர்வதேச-குற்றவ-4/
-
நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு
நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு கனகராசா சரவணன்,பாறுக் ஷிஹான் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புதன்கிழமை (05) மாலை தகவல் வழங்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் இந்த சடலம் தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது. குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர் இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வியாழக்கிழமை (06) காலையில் சென்று சடலத்தை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாகவும் இதுவரை சடலம் அடைiயாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதுடன் 5 அடி உயரம் கொண்டதாக காணப்படுவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/நின்றுகொண்டிருந்த-சடலம்-மீட்பு/175-353193
-
கல்முனையில் சந்தேகிக்கப்படும் தீவிரவாதக் குழு; விசாரணைகள் தீவிரம்!
கிழக்கில் அடிப்படைவாதம்” என்ற கூற்றினூடாக இஸ்லாமியர்களை முடக்க முயற்சி editorenglishMarch 6, 2025 பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம். இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (05/03/2025) இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்… கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். இவ்வாறான கூற்றுக்களை கொண்டு பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே இந்தக்கூற்றின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயம் தேசிய பத்திரிகைகளில் பிரதான செய்தியாக, புதன்கிழமை (05/03/2025) வெளிவந்துள்ளன. குறிப்பாக, கல்முனை பகுதிகளில் மத அமைப்புக்களினால் பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் அதன் காரணமாக உளவுத்துறையினர் கண்காணிப்புக்களை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தக் கூற்றினால் எமது பிரதேச மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.. கூற்றுக்களில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அமைப்புக்களின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.கல்முனை ஜும்மா பள்ளிவாசல், பள்ளிவாசல் சம்மேளனம், ஜம் இய்யதுல் உலமா சபை உட்பட இஸ்லாமிய அமைப்புகள் உட்பட இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதம் தொடர்பான விசாரணைகளுக்கும், தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளனர் என்றார். இவ்வாறான அடிப்படைவாதப் போக்குகள் உள்ள குழுக்களின் பின்னணியையும், அவர்களுக்கு யார் நிதி வழங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள எமது மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே புலனாய்வு விசாரணைகள் சட்டத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.. இதற்கு முன்னரும் முஸ்லிம் சமூகம் பல விடயங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்தும் உரிய அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படாதவில்லை. இதனால் சஹ்ரானின் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன . இன்னொரு சஹ்ரானின் சம்பவம் இந்த நாட்டில் இனி ஒருபோதும் இடம் பெறக் கூடாது என்றார். கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீய சக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். அதிகாரபூர்மற்ற அறிவிப்புக்கள் வீண் அச்சம் மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறான பொதுவான கூற்றுக்களினால் சமூகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் செயல்படுகிறது என்ற பழைய தவறான அபிப்பிராயம் மீண்டும் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, கிழக்கில் அடிப்படைவாதம் என்ற அமைச்சர்களின் கூற்றுக்களை தெளிவுப்படுத்தி அரசாங்கம் பொதுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/212750/
-
தமிழ் அரசியல் தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறது ஈ.பி.டி.பி
தமிழ் அரசியல் தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறது ஈ.பி.டி.பி editorenglishMarch 6, 2025 வடக்கில் கிறீஸ் பூதம் கடந்த காலங்களில் ஏவப்பட்டது போன்ற சூழலை உருவாக்கத் திட்டமிடப்படுகிறதா? என்று சந்தேகத்தை வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம், இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். யாழ். ஊடக மையத்தில், புதன்கிழமை (05/02/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தயாராக இருப்பதாக சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றன. அதுதொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, கடந்த காலங்களைப் போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அது ஒருபுறமிருக்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரையில், தற்போதைய அரசாங்கத்தைக் கண்மூடித்தனமாக விமர்சிக்கும் நோக்கம் இல்லாத போதிலும், சரியான விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தார்மீக கடப்பாடு இருப்பதாக இருப்பதாகக் கருதுகிறோம். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்ற போது எமது பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது. சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மற்றுக் கருத்தில்லை. எமது மக்களைப் பொறுத்தவரையில், காணிகள் விடுவிக்கப்படும், காணாமல் போனோர் விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும், அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற விடயங்கள் சொல்லப்பட்ட போதிலும், இதுவரையில் அவை தொடர்பான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் ஆயுத ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற போது வடக்கில் கடந்த காலங்களில் கிறிஸ் பூதங்கள் ஏவி விடப்பட்டது போன்று மீண்டும் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும், இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/212737/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆசை, தோசை அப்பளம் வடை!🤪 போட்டியில் இல்லாத அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்கு முதலிலேயே முட்டைகள் 🍳 கொடுக்கப்படும். புஸ்டியான ஆகாரத்தோடு மட்சைப் பார்க்கலாம்! இந்தியா வெல்லும் என்றவர்களுக்கு ட்ரம்ப் - செலன்ஸிக்கான லஞ்ச்சில் கவியார்🍱🧆🥗 மாதிரி எக்ஸ்பென்சிவ் ஐயிட்டம் எல்லாம் ரெடி. செலன்ஸ்சி மாதிரி இந்தியா மட்சைக் கவிட்டால் எல்லோருக்கும் கூழ்முட்டைதான்🥚🥚😂🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முன்னர் பெரிய குடும்பி வைச்சிருந்தேன்😜 சம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றதால் உள்ளூர் சாதகம் இருக்கும் என்று பாகிஸ்தானை நம்பி குணா குகையில் விழுந்தவன் மாதிரி ஆகிவிட்டேன்😩 இனி மட்டன் வாங்குவதைத் தவிர்த்து வேறு ஒன்றிலும் பாகிஸ்தான்காரரை நம்பமாட்டேன்😜
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.. நம் கனவு அண்ணன் தயவால் பலிக்கும்🥳