Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. சிரியா கலவரத்தில் பலி 1000+ ஆக அதிகரிப்பு மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஆசாதுக்கு ஆதரவாக இருந்த அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை (06) அன்று அந்த நாட்டின் தற்போதைய அரசு ஆதரவாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது இந்த கலவரத்துக்கு காரணமாக அமைந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதற்கு பதில் தாக்குதலை ஆசாத் ஆதரவாளர்கள் கொடுத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு டிசெம்பரில் துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) கிளர்ச்சி படை சிரியாவை கைப்பற்றியது. அதையடுத்து அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பினார். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அந்த நாட்டின் வடமேற்கில் உள்ள கடலோர பகுதிகளான டார்டஸ் மற்றும் லடாகியா மாகாணங்களில் சிரியா பாதுகாப்பு படை மற்றும் ஆசாத் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. அங்கு நிலவும் அசாதாரணச் சூழலை கட்டுப்படுத்த கூடுதல் படைகளை அந்தப் பகுதிக்கு அனுப்பியது அந்த நாட்டின் இடைக்கால அரசு. அதன் பலனாக தற்போது வன்முறைச் சம்பவம் கட்டுக்குள் வந்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் வடமேற்கில் உள்ள கடலோர பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. இரு தரப்புக்கும் இடையே இரண்டு நாட்களாக நடந்த மோதலில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 745 பேர் பொதுமக்கள், 125 பேர் பாதுகாப்பு படையினர், 148 பேர் ஆசாத் ஆதரவாளர்கள் என்பதை சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது. முந்தைய அதிபர் ஆசாத் ஆட்சியில் தற்போது குறி வைக்கப்பட்டுள்ள அலவைட் சிறுபான்மை பிரிவினர் அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளனர். தற்போது அங்கு புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், அவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை இடைக்கால அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தால் லடாகியா பகுதியில் மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசாத் ஆதரவு சிறுபான்மையினரின் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், தீ வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சிலர் லெபனானுக்கு தப்பி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு ஆடையை அகற்றி நிர்வாணமாக வீதியில் அழைத்து செல்லப்பட்ட அவலமும் அரங்கேறியதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்படியே வீதிகளில் கேட்பாரற்று இருப்பதாகவும், தாக்குதலுக்கு அஞ்சி உடல்களை யாரும் கொண்டு செல்ல முன்வரவில்லை எனவும் தெரிகிறது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/சிரியா-கலவரத்தில்-பலி-1000-ஆக-அதிகரிப்பு/50-353358
  2. யூடியூப்பரின் செயல்; பெண்களின் தனித்துவம் – பாதுகாப்புக்கு எதிரானவை adminMarch 9, 2025 இலங்கையின் பெண்களின் பாதுகாப்புக்காக செயலாற்றும் Unity for Women Safety Sri Lanka (UWSSL) என்ற அமைப்பு, சமீபத்தில் ஒரு YouTube Content Creator இனால் இடம்பெற்ற அவமதிப்பு சம்பவத்தை உறுதியுடன் கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், உதவிக்காக அணுகிய குடும்பத்திற்கு உதவுவதற்குப் பதிலாக, அக்குடும்பத்திலிருந்த இளம்பெண், தனது தனிமனித உரிமையையும், மரியாதையையும் காக்க விரும்பி, காணொளியில் இடம்பெற மறுத்ததைக் காரணமாக கொண்டு, அவரை அவமதிக்கும் விதத்தில் வலியுறுத்தி, அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தினார். அந்த YouTuber கூறிய சில வார்த்தைகளில் சில: “இவ என்ன ஐஸ்வர்யா இவைய காட்டித்தான் எண்ட video வ ஓட பண்ணோணுமா? வீடியோக்கு வரமாட்டியா?” “யாரையும் லவ் பண்றியா?” “18 வயதாகியும் இன்னும் பால்குடி மறக்கவில்லையா?” “இப்படி நடித்தால் எனக்கு கோவம் வரும் ” “அம்மாட கஷ்டம் தெரியாத பிள்ளை ” இவ்வாறான நடத்தைகள் எவ்விதத்திலும் ஏற்க முடியாதவை என்றும், பெண்களின் மரியாதை, தனித்துவம் மற்றும் பாதுகாப்புக்கு எதிரானவை என்றும் அறிவிக்கின்றோம். https://globaltamilnews.net/2025/213015/
  3. மதப் பிரச்சாரகர்கள் உட்பட 15 இந்திய பிரஜைகள் நாடுகடத்தப்பட்டனா் adminMarch 9, 2025 சுற்றுலா விசாக்கள் மூலம் நாட்டுக்குள் சென்று யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் தீவிரவாத மதப் பிரச்சாரகர்களாகவும், மரவேலை செய்பவர்களாகவும் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் 15 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை புலனாய்வாளர்கள் குழுவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனா். இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாகளின் கீழ் நாட்டிற்கு சென்றுள்ளனா். அவர்களில் இருவர், யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் நோய்களை குணப்படுத்துவதற்கான தீவிரவாத மத சேவையை நடத்த தயாராகி வந்தனர், இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள இந்து தேசியவாத அமைப்புகளால் அவர்களுக்கு எதிராக ஒரு போராட்டடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு மத குருமார்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் , யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த மேலும் 08 இந்தியப் பிரஜைகளும் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்து வந்த 05 இந்தியப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டு, பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு நேற்று சனிக்கிழமை (08) நாடு கடத்தப்பட்டுள்ளனர். https://globaltamilnews.net/2025/213022/
  4. இப்போது எடிற் பண்ணக்கூடியதாக இருக்கும் @ஈழப்பிரியன் ஐயா.
  5. எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 இன் இறுதிப் போட்டி நாளை ஞாயிறு (09 மார்ச்) நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் இந்தியா அணி (IND) எதிர் நியூஸிலாந்து அணி (NZ) 10 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ள்ளார். ஒருவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. போட்டியில் இல்லாத பிற அணிகள் வெல்வதாகக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது! இந்தியா வீரப் பையன்26 அல்வாயன் நுணாவிலான் செம்பாட்டான் குமாரசாமி நியாயம் வாதவூரான் நீர்வேலியான் கந்தப்பு பிரபா நாளைய இறுதிப் போட்டியில் இந்தியா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கும் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் வாய்க்குமா? அல்லது எல்லோருக்கும் நன்கு பொரித்த முட்டைகளா? குறிப்பு: யாழ் கள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றிவாகை சூடுபவர் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி 2025 இன் சாதனைப் தரவுகளுக்கான இன்னும் 12 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னரே அறிவிக்கப்படுவார்!!!
  6. கதை நன்றாக இருக்கின்றது சுமே ஆன்ரி😀 “தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி” என்ற கண்ணதாசன் பாட்டுக்கேட்டு வளர்ந்த ஆண்களின் சிந்தனை முன்னேறிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தால் மாறாதுதானே!
  7. கட்டப் பஞ்சாயத்து நடத்திய சர்வதேச ரவுடி டிரம்ப்! சாவித்திரி கண்ணன் வரலாற்றில் இப்படி ஒரு முன் உதாரணமே கிடையாது – ஒரு நாட்டு அதிபர் அவமானப்பட்டதற்கு! அராஜகம், அடாவடித்தனம், திமிர்த்தனம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக டிரம்ப் இந்த உரையாடலில் வெளிப்பட்டார். ‘நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது, தன்னலம் மட்டுமே பிரதானம்’ என்பதே டிரம்பின் தாரக மந்திரமோ..! அழைக்கப்பட்ட நாடு, ‘வெறும் மூன்றரை கோடி மக்களை கொண்ட சுண்டைக்கா நாடு தானே’ என்ற எண்ணமா? ‘நம்ம உதவியைக் கொண்டு தானே இத்தனை நாள் தாக்கு பிடித்தார்கள்.. எனவே, ஏன் நமக்கு கூழைக் கும்பிடு போட வேண்டியது தானே’ என்ற மனோபாவமா? ஆனால், யாரும் எதிர்பாரா வண்ணம் உலகறிய அனைத்து நாடுகளும் பார்க்கும் வண்ணம் நேரலை செய்யும் தொலைகாட்சி சேனல்களை நிறுத்தி வைத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வறுத்தெடுத்துவிட்டார் டிரம்ப். ஏற்கனவே ஒரு பேரரசை எதிர்த்து போரிடும் ஜெலன்ஸ்கி தைரியசாலி தான் என்றாலும், நம்பகமான நண்பன் என்று இது நாள் வரை அவர் நம்பி வந்த அமெரிக்காவின் அதிபர் பொது வெளியில் இவ்வளவு பெரிய அவமனத்தை செய்வார் என ஒரு போதும் எதிர்பார்த்திருக்கமாட்டார். எனவே தான், அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு புறப்பட்டவுடன் அதிபர் ஜெலன்ஸ்கியும் வெளியேறினார். ஆனால், இந்த சந்திப்புக்குப் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, மதிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை ஏற்கும் மன நிலையில் உக்ரைன் குழ்வினர் இல்லை. அத்துடன் அமெரிக்க மாளிகை அதிகாரிகளே நாகரீகக் குறைவாக உக்ரைன் குழுவினர் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும்படி கூறிவிட்டனர். தன் அழைப்பை ஏற்று வந்த ஒரு நாட்டின் தலைவரை தனிப்பட்ட முறையில் யாருக்கும் தெரியாமல் மிரட்டுவது என்பது வேறு! ஆனால், இதற்கு முன்பு இப்படி ஒரு அவமரியாதை இப்படி ஒரு நாட்டுத் தலைவருக்கு அடுத்த நாட்டில் நடந்திருக்குமா? தெரியாது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பின் ரஷ்யா- உக்ரைன் போரில் காட்சிகளும் மாறத் தொடங்கின. பைடனுக்கு பதிலாக அதிபரான டிரம்ப், எதையுமே வியாபாரக் கண்ணோட்டத்துடன் மட்டுமே அணுகுபவர். இந்தப் போரை அமெரிக்கா ஊக்குவித்து, உதவி வந்ததினால் அடைந்த பயன் என்ன..? என்று தான் கணக்கு போட்டார். புதின் புத்திசாலி! டிரம்பின் பல்சை நன்கு அறிந்து வைத்திருந்தார்! ‘இன்னும் எவ்வளவு நாட்கள் உக்ரைனுக்கு கோடிக் கோடியாய் கொட்டிக் கொடுத்து அமெரிக்கா, இழந்து கொண்டிருக்க போகிறது! போரை முடிவுக்கு கொண்டு வந்தால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு என்னென்ன நன்மைகள்..’ என பட்டியலிட்டு டிரம்பிற்கு செய்தி அனுப்பினார். வியாபார புத்தியும், அமெரிக்க நலனுமே பிரதானமாக கருதும் டிரம்ப் எப்போதும் ‘டிலீங்’ பேசுவதில் கில்லாடி! தடாலென்று ‘யூ டர்ன்’ அடித்து, ரஷ்யாவுடன் கைகுலுக்கி, ஜெலன்ஸ்கிக்கு அதிர்ச்சி வைத்தியம் தர அமெரிக்காவிற்கே அழைத்து அவமானப்படுத்திவிட்டார். அத்துடன் உக்ரைனுக்கு அமெரிக்கா இது வரை செலவழித்த பணத்திற்கு பிரதியுபகாரமாக ”உக்ரைனில் உள்ள கனிம வளங்களை தாரை வார்க்க வேண்டும்” என்று கண்டிஷனும் போட்டுள்ளார். ஏற்கனவே பல பேரிழப்புகளை சந்தித்து உருக்குலைந்து கிடக்கும் உக்ரைன் நாட்டிடம் மேலும் உருவி எடுத்து ஆதாயம் அடைவது குறித்து ஒரு சிறிதும் யோசிக்க தயங்காத மனநிலை என்பது பெரு முதலாளித்துவத்தின் பேராசை குணாம்சத்தின் இயல்பாகும். சோவியத் ரஷ்யாவின் ஒரு அங்கமாக ஒரு காலத்தில் இருந்த நாடு தான் உக்ரைன். தேசிய இனங்களுக்கான பிரிந்து செல்லும் உரிமையின்படி தற்போது தனி நாடாக உள்ளது. எப்படி பார்த்தாலும் ரஷ்யாவும், உக்ரைனும் அண்ணன் தம்பிகள் தான்! அண்ணன் – தம்பிகளுக்குள் பிணக்கு ஏற்படுவதும் புதிதல்ல. பெரிய அண்ணன் தோரணையில் ரஷ்ய அதிபர் பூட்டின் நடந்து கொண்டார் என்பது உண்மையே. இதனால் உணர்ச்சிவசப்பட்ட மிகவும் சின்னஞ்சிறு நாடான உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பும் கிடைக்கும். ரஷ்யாவும் தன்னிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் என எண்ணியது. நேட்டோ நாடுகள் என்பவை அமெரிக்காவை தலைமையாக கொண்ட ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இவர்கள் ரஷ்யாவை எப்போதும் எதிரியாக நினைப்பவர்கள். ரஷ்யாவை மிரட்டி பணிய வைக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருந்தவர்கள். ஆகவே, இந்தச் சூழலில் நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைனில் அமெரிக்க படைகள் வந்து தங்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக வந்து நிற்கும் என்பதால், ”உக்ரைன் நேட்டோவில் சேரக் கூடாது” என ரஷ்யா கட்டளையிட்டது. ரஷ்யாவின் நோக்கம் இதுவாக இருக்கும்பட்சத்தில், உக்ரைன் ரஷ்யாவிற்கு தன்னை கண்ணியமாக நடத்த வேண்டி சில கோரிக்கைகளை நிர்பந்தமாக வைத்து ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு வந்திருக்கலாம். அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனை உசுப்பி விட்டனர். ஜெலன்ஸ்கி அதற்கு பலியானார். விளைவு, ரஷ்யாவின் மூர்க்கமான தாக்குதல்கள். இதில் உக்ரைன் பேரிழப்பை சந்தித்துள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்க அழைப்பை ஏற்று நேற்று முன் தினம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை சென்றார், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடன் இருந்தார். இந்த சந்திப்பு ஒருவரை ஒருவர் தொடும் தூரத்தில் நெருக்கமாக சேர் போடப்பட்டு அமைக்கப்பட்டு இருந்தது. இதில் வேண்டுமென்றே கம்பர்டபளாக உட்காராமல் பேச்சு வார்த்தை ஆரம்பமானதாகத் தெரிந்தது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு ரஷ்யாவுடன் இணக்கமாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்ற வலியறுத்தலுடன் ஜே.டி.வான்ஸ் பேச்சுவார்த்தை தொடங்கினார்! ஜே.டி.வான்சும் சரி, டிரம்ப்பும் சரி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனை கடுமையாக இந்த பேச்சுவார்த்தைகளில் விமர்சித்தனர். இதை அமெரிக்க மக்களே விருமபமாட்டார்கள். அடுத்த நாட்டுத் தலைவரிடம் நம் நாட்டுத் தலைவரை பகிரங்கமாக அவமானபடுத்திய இவர்களின் பேச்சு அமெரிக்க மக்களுக்கே அதிர்ச்சி தந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஜே.டி.வான்ஸ் எடுத்த எடுப்பில், ’’நான்கு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக இருந்த பைடன், உக்ரைனில் ஊடுருவியதற்காக ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தார். ஆனால், புதின் தொடர் தாக்குதல் நடத்தி உக்ரைனின் பெரும் பகுதியை அழித்துவிட்டார். இனி பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண்பது தான் வழியாகும்’’ என்றார். ஜெலன்ஸ்கி: உக்ரைனின் பெரும்பகுதியை புதின் ஆக்கிரமித்துவிட்டா். 2014-ம் ஆண்டே அவர் ஆக்கிரமிப்பை தொடங்கிவிட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ட்ரம்ப், பைடன் காலத்திலேயே அவர் ஆக்கிரமிப்பை தொடங்கினார். ஆனால் யாரும் அவரை தடுத்து நிறுத்தவில்லை. அவர் உக்ரைன் மக்களை கொன்று எங்கள் நாட்டை ஆக்கிரமித்தார். 2014 முதல் 2022 வரை இதே நிலைதான் இருந்தது. புதினுடன் நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார். ஜே.டி., நீங்கள் என்ன மாதிரியான ராஜதந்திரத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன அர்த்தப்படுத்துகிறீர்கள்? வான்ஸ்: உங்கள் நாட்டின் அழிவை முடிவுக்குக் கொண்டுவரப் போகும் ராஜதந்திரத்தைப் பற்றி நான் பேசுகிறேன். ஜெலென்ஸ்கி: ஆம், ஆனால் நீங்கள்… வான்ஸ்: திரு. ஜனாதிபதி அவர்களே, மதிப்புடன் கூறுகிறேன், நீங்கள் ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன் இதைப் பற்றி வாதாட முயற்சிப்பது அவமரியாதை என்று நான் நினைக்கிறேன்.இப்போது, உங்கள் நாட்டில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, நீங்கள் கட்டாய ராணுவ ஆள் சேர்ப்பை அமல்படுத்துகிறீர்கள். நீங்கள் ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும். ஜெலென்ஸ்கி: உக்ரைனுக்கு வந்து எங்களுடைய சிக்கல்களை நேரில் பார்த்துள்ளீர்களா? வான்ஸ்: நான் உண்மை நிலைமை பற்றிய காட்சிகள் மற்றும் செய்திகளை பார்த்துள்ளேன், நன்கு அறிவேன். நீங்கள் பிரச்சார சுற்றுப்பயணம் நடத்துகிறீர்கள், ஜனாதிபதி. உங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்ப்பதில் சிக்கல்கள் இருந்ததைக் நீங்கள் மறுக்கிறீர்களா? உங்கள் நாட்டின் அழிவை தடுக்க முயற்சிக்கும் அமெரிக்க நிர்வாகத்தை வெள்ளை மாளிகைக்கே வந்து தாக்கி பேசுவதை அவமதிப்பு என நீங்கள் நினைக்கவில்லையா? ஜெலென்ஸ்கி: முதலாவதாக, போரின் போது, அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன ஏன் அமெரிக்கவிற்கும் உள்ளன. டிரம்ப்; உங்களிடம் நல்ல தீர்வுகள் உள்ளன, இப்போது நீங்கள் அதை உணரவில்லை, ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் அதை உணருவீர்கள். பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் முயற்சிக்கிறோம். எங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என நீங்கள் சொல்லாதீர்கள். டிரம்ப்: அது உங்களுக்குத் தெரியாது. நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று எங்களிடம் சொல்லாதீர்கள். நாங்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கிறோம். நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று எங்களிடம் சொல்லாதீர்கள். ஜெலென்ஸ்கி: நான் உங்களுக்குச் சொல்லவில்லை, நான் பதிலளிக்கிறேன்… வான்ஸ்: நீங்கள் சரியாக அதைத் தான் செய்கிறீர்கள்… டிரம்ப் தனது குரலை உயர்த்தி: நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்பதை நீங்கள் கூறும் தகுதியில் நீங்கள் இல்லை. நாங்கள் நன்றாகத் தான் இருக்கிறோம், வலுவாகத்தான் உணர்கிறோம். மோசமான நிலைக்கு உங்கள் நாடு செல்ல நீங்களே அனுமதித்துள்ளீர்கள். கோடிக்கணக்கான மக்களின் உயிருடன் நீங்கள் விளையாடுகிறீர்கள், மூன்றாம் உலகப் போருடன் நீங்கள் விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது இந்த நாட்டுக்கு மிக அவமதிப்பானது. ஜெலென்ஸ்கி பேச முயற்சிக்கிறார். டிரம்ப்: நீங்கள் இப்போது நல்ல நிலையில் இல்லை. நீங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்க உங்களை அனுமதித்துவிட்டீர்கள். உங்களிடம் இப்போது அட்டைகள் இல்லை. எங்களிடம், நீங்கள் அட்டைகளைப் பெறத் தொடங்குகிறீர்கள். நீங்கள் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களுடன் சூதாடுகிறீர்கள், மூன்றாம் உலகப் போருடன் சூதாடுகிறீர்கள், நீங்கள் செய்வது இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதை. வான்ஸ்: நீங்க ஒரு முறையாவது நன்றி சொன்னீர்களா? ஜெலென்ஸ்கி: பல முறை. வான்ஸ்: இல்லை,இந்த சந்திப்பில் கூறினீர்களா? உங்கள் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் அமெரிக்காவையும், அதன் அதிபரையும் பாராட்டீனீர்களா? ஜெலென்ஸ்கி: ஆமாம், போரைப் பற்றி மிகவும் சத்தமாகப் பேச வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். டிரம்ப்: அவர் சத்தமாகப் பேசவில்லை. உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது. இல்லை, இல்லை, நீங்கள் நிறையப் பேசிவிட்டீர்கள். உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது. ஜெலென்ஸ்கி: எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும். டிரம்ப்: நீங்கள் இதில் வெற்றி பெறவில்லை. எங்களால் தான் நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர நல்ல வாய்ப்பு உள்ளது. ஜெலென்ஸ்கி: போரின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் வலுவாக இருக்கிறோம், நாங்கள் தனியாக இருக்கிறோம், மேலும், நாங்கள் நன்றி என்று சொல்கிறோம். ஜெலென்ஸ்கியைப் இடைமறித்து பேசிய டிரம்ப்: நீங்கள் தனியாக இல்லை… நாங்கள் உங்களுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கினோம். உங்கள் ஆட்கள் துணிச்சலானவர்கள், ஆனால் அவர்களிடம் எங்கள் இராணுவம் இருந்தது. உங்களிடம் எங்கள் இராணுவ உபகரணங்கள் இல்லையென்றால், இந்தப் போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும். ஜெலென்ஸ்கி: இதே வார்த்தைகளை போர் தொடங்கிய மூன்று நாட்களில் புடினிடமிருந்து கேட்டேன். டிரம்ப்: இது போன்று வியாபாரம் செய்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். வான்ஸ்: நன்றி மட்டும் சொல்லுங்க. ஜெலென்ஸ்கி: அதை நான் நிறைய முறை சொன்னேன். வான்ஸ்: நீங்கள் தவறாக இருக்கும் போது கருத்து வேறுபாடுகள் இருப்பதை ஏற்றுக் கொண்டு, அமெரிக்க ஊடகங்களில் அதை எதிர்த்துப் போராட முயற்சிப்பதை செய்யாதீர்கள்.நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். டிரம்ப்: நீங்கள் அங்கே புதைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் வீரர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். அமெரிக்க செய்த உதவிகளினால் தான், நீங்கள் இவ்வளவு காலம் தாக்கு பிடித்தீர்கள், அமெரிக்கா இல்லையென்றால், உங்களால் தாக்குபிடித்திருக்க முடியாது. ஆனால், போர் நிறுத்தத்தை விரும்ப வில்லை, போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என நீங்கள் கூறிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லை, கேளுங்கள் … பின்னர் நீங்கள் எங்களிடம்,. நீங்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தால் கஷ்டம்தான். நீங்கள் நன்றியுடன் நடந்து கொள்ளவில்லை. இது நல்லதல்ல. நான் நேர்மையாகச் சொல்வேன், இது நல்லதேயில்ல. டிரம்ப்; ஆல் ரைட்! நாம போதுமான அளவுக்குப் பார்த்துட்டோம்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க…? நான் சொல்லுவேன். கிரேட் டெலிவிஷன்! இவ்வளவு அட்டூழியமாக நடந்து கொண்ட பிறகு – பல முறையை நன்றி சொல் என மிரட்டி பெற்ற பிறகு – சமூக ஊடகத்தில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட செய்தியில், ‘‘ ஜெலன்ஸ்கி அமெரிக்காவை அவமதித்து விட்டார். அமைதி பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி தயாராக இருக்கும்போது அவர் மீண்டும் வரலாம். ’’ என குறிப்பிட்டார் என்பது தான் கவனத்திற்கு உரியது. மறுபுறம், ‘’இந்த காரசார விவாதத்துக்காக அதிபர் ட்ரம்பிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியது கொடுமை! ஆனால், ”அதிபர் ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது” என ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்து விட்டார். உண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபரை மட்டும் அவமானப்படுத்தவில்லை. நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அனைத்தையுமே அவமானப்படுத்தியதோடு நட்டாற்றில் விட்டுவிட்டதாகவே கருதப்படுகிறது. ஒரு மிகப் பெரிய நாட்டின் தலைவர் பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொண்டது அந்த நாட்டு மக்களுக்கும் சங்கடத்தையே ஏற்படுத்தி உள்ளது. சாவித்திரி கண்ணன் உரையாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு; வெங்கடேசன் https://aramonline.in/20925/conversation-of-trump-zelenskyy/
  8. சிவாஜி வீட்டை ஏன் நினைவு இல்லமாக்க வேண்டும்? -சாவித்திரி கண்ணன் தமிழ் சினிமாவின் மகத்தான அடையாளங்களில் ஒன்று கலைத் தாயின் தலைமகன் சிவாஜி வாழ்ந்த வீடான அன்னை இல்லம். தற்போது நீதிமன்றத்தால் ஜப்தி செய்ய சொல்லும் அளவுக்கு உள்ள அந்த இடம் சிவாஜியின் நினைவு இல்லமாக்கப்பட்டு, அவரது சாதனைகளை நினைவூட்டும் கண்காட்சி மற்றும் ஆவணங்களுடன் பராமரிக்கப்படுமா? இதன் கம்பீரமும், அழகும் மட்டும் இதற்கு காரணமல்ல, கலைத் தாயின் தலை மகனாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்து, நடமாடிய இடம். அப்படிப்பட்ட அன்னை இல்லத்தை இன்று நீதி மன்றம் ஜப்தி செய்ய ஆணையிட்ட செய்தி தமிழக மக்கள் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் அன்றைய தினம் இந்த வீட்டில் கால் பதிக்காத சினிமா கலைஞர்களும் இருக்க முடியாது, பத்திரிகையாளர்களும் இருக்க முடியாது. அந்த வகையில் பற்பல கலைஞர்களுக்கும் அங்கு பசுமையான நினைவுகள் அதிகம் இருக்கும். இந்த அன்னை இல்லத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை; ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்திற்கு இலக்கணமாக சிவாஜி குடும்பம் திகழ்ந்தது! அனைத்து உறவுகளையும் விட்டுக் கொடுக்காமல் அவர் வாழ்ந்தார்! அங்கு தினசரி விருந்துக்கு தயாரிப்பது போலத் தான் விதவிதமான அசைவ உணவுகள் தயாராகும். சூட்டிங் ஸ்பாட்டில் அவர் வீட்டுச் சாப்பாட்டை ருசிக்காத கலைஞர்களும், இயக்குனர்களும் மிக அபூர்வமாகத் தான் இருக்க முடியும். சிவாஜி சம்பாதித்த பெரும் சொத்துக்கள் பலவற்றை அவருடைய வாரிசுகள் ஒவ்வொன்றாக விற்ற வண்ணம் இருந்தனர். இது தவிர ஏகப்பட்ட கடன்கள் வேறு. தற்போது எஞ்சி இருப்பது இந்த அழகிய வீடு மட்டும் தான்! இது ஏற்கனவே ஏலத்திற்கு போவது போன்ற ஒரு நெருக்கடி ஏற்பட்ட போது நடிகர் ரஜினிகாந்த் உதவி செய்து காப்பாற்றினார். இதை சிவாஜி வாரிசுகள் காலத்துக்கும் காப்பாற்றுவார்களா? காலியாக்கிவிடுவார்களா..? என்ற சந்தேகம் உள்ளபடியே அனைவருக்கும் இருந்தது. அந்தப்படியே தற்போது நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அவ்வப்போது சிலர் உதவினாலும் கூட மீண்டு வர முடியாத நிலையிலேயே அவரது வாரிசுகள் உள்ளனர்! வாரிசுகளால் காப்பாற்ற முடியாத சிவாஜி இல்லம் யாராவது ஒரு வட நாட்டு மார்வாடி கைகளுக்கோ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ போனால், அந்த வீடு இடிக்கப்பட்டு பெரும் ஷாப்பிங் காம்பிளக்ஸ் ஆகலாம். அல்லது பல அடுக்கு மாடிகள் கொண்ட குடிய்ருப்பாகலாம். தமிழ் சினிமாவின் தனிப் பெரும் அடையாளமாக வாழ்ந்த சிவாஜி கணேசன் வாழ்ந்த அழகிய , கம்பீரமான இல்லம் சிவாஜியின் நினைவு இல்லமாக வேண்டும். இதற்கு தமிழக அரசே அவரது குடும்பத்திடம் நல்ல விலை கொடுத்து வாங்கி, சிவாஜியின் நினைவு இல்லமாக இதை பராமரிக்க வேண்டும். சிவாஜிக்கு எதற்காக நினைவு இல்லம் அமைக்க வேண்டும்; உலக அளவிலான சினிமா கலைஞர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தவர். ஒப்பாரும், மிக்காருமில்லா கலை உலக பிதாமகன்! தமிழ் மொழி உச்சரிப்பில் தலை சிறந்து விளங்கியவர். தமிழ் உச்சரிப்பை பயில அவர் படங்களே வருங்காலத்தில் பாடமாகலாம். உன்னத தியாகிகளான வ.உ.சிதம்பரனார், பகத்சிங், வாஞ்சி நாதன், திருப்பூர் குமரன் ஆகியோர் வேடங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே நாட்டுப் பற்றை விதைத்தார். அவருமே சிறந்த தேச பக்தராக திகழ்ந்தார்! 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்கு அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நிதி திரட்டிய போது, தனது மனைவி கமலாவின் நகைகள், தன்னுடைய நகை என 500 பவுன் நகையை தந்தார். பல்வேறு இயற்கை சீற்றங்கள் மக்களை பாதித்த நேரங்களில் நிதி உதவியாக பெரும்,பெரும் தொகைகளை வழங்கியவர். தான் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை அரசாங்க கல்விக் கூடங்கள் உருவாகவும், அரசு மருத்துவமனைகள் உருவாகவும் அள்ளித் தந்துள்ளார்! புராண, இதிகாச கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்தவர். அப்பராக, சுந்தர மூர்த்தி நாயனாராக, திருநாவுக்கரசராக, சேக்கிழாராக, பெரியாழ்வாராக, திருமங்கை ஆழ்வாராக, வீரபாகுவாக தன் அற்புத நாடிப்பாற்றல் வழியாக அறம் சார்ந்த வாழ்க்கை விழுமியங்களை உணர்த்தியவர். சிவாஜியின் பெரும்பாலான படங்கள் குடும்ப பாசத்தை, சகோதர நேசத்தை, பெரியோர்களை மதிக்கும் பண்பை மக்களிடையே தோற்றுவித்தன! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சாதனைகளை விஞ்ச இனி இன்னொருவர் திரை உலகில் உருவாகும் வாய்ப்பே இல்லை. அவர் திரை உலகின் பல்கலைக் கழகமாவார்! வீர மன்னர்களை நினைவூட்டும் வீர பாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், வள்ளலுக்கு இலக்கணம் சொன்ன கர்ணன், சகோதர பாசத்திற்கு பரதன் என அவர் உயிர்பித்து உலவிய வேடங்கள் காலத்திற்கும் கலை உலக கரூவூலங்களாகத் திகழத்தக்கவையாகும். ஆகவே, தமிழக அரசு தாமதிக்காமல் சிவாஜி வாழ்ந்த அன்னை இல்லத்தை அவரது நினைவில்லமாக்க வேண்டும். இங்கே, # சிவாஜி நடித்த அனைத்து திரைப்படங்களின் புகைப்படங்கள். # அந்த திரைப்படங்கள் குறித்த அரிய தகவல்கள்! # அவருக்கும், அவரது சம காலத்து இந்திய அளவிலான கலைஞர்களுக்குமான நட்பை உணர்த்தும் புகைப்படங்கள். # அவருக்கும் பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, இந்திரா காந்தி, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ..போன்ற அரசியல் தலைவர்களுக்குமான நட்பை உணர்த்தும் வகையிலான நல்ல புகைப்படங்கள் ஆகியவற்றை திரட்டி நிரந்தர புகைப்பட கண்காட்சியை வைக்க வேண்டும். இது சினிமாவில் இருப்பவர்களுக்கும், சினிமாவிற்குள் நுழைய விரும்புவர்களுக்கும் , சிவாஜியின் ரசிகர்களுக்கும் ஒரு ஆதர்ஷ இடமாகத் திகழ வேண்டும். இங்கு சினிமா துறையினர் அடிக்கடி வந்து செல்லும் வகையில் பிரிவுயூ ஷோக்களை திரையிடும் அரங்காகவும் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம். மற்றொரு பகுதியை கலை மற்றும் நடிப்பு பயிற்சி பட்டறை நடத்தும் இடமாக்கலாம். இவை தமிழக அரசுக்கு இந்த இடத்தை பராமரிக்கும் செலவுகளுக்கு உதவியாக இருக்கும். சிவாஜியின் நெருங்கிய நண்பர் கலைஞர் அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடினார். தற்போது ஸ்டாலின் அதைவிட ஒருபடி மேலே சென்று பறிபோகவுள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தை அவரது நிரந்தர நினைவு இல்லமாக்கினால், அது தமிழக சினிமா கலைஞர்களாலும், தமிழக மக்களாலும் பெரிதும் வரவேற்கப்படும் கலைக் கோவிலாகவே திகழும். கலைத் தாயின் தவப் புதல்வன் சிவாஜியை பெரிதும் நேசிக்கும் தமிழ் மக்களின் இந்த விருப்பத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமல்ல, சினிமா துறையில் இருந்து வந்த துணை முதல்வர் உதயநிதி அவர்களுக்கும் கவனப்படுத்துகிறோம்.! தமிழக அரசே, இதற்கு முழுப் பணத்தையும் செலவழிக்காமல் கலை உலகத்தினரிடமும், பொது மக்களிடமும் கூட பங்களிப்பை பெறலாம். தாராளமாக அள்ளித் தருவார்கள்! சிவாஜியின் பெயரால் செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்ற பெயர் பெற்ற சாலையில் சிவாஜி இருந்த வீடே தடையமில்லாமல் போய்விடலகாது. அது தமிழக அரசாலும், தமிழ் திரை உலகின் கூட்டு முயற்சியாலும் அவரது நினைவு இல்லமாக்கப்பட வேண்டும். வாழ்க, கலைத் தாயின் தவப் புதல்வன் சிவாஜி கணேசனின் புகழ்! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20935/sivaji-house-must-memorial/
  9. தாயுமானவன் எங்கள் தலைவன்.- நிலவன். March 07, 2025 கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களைஎழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை. தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்ச்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவன் சமூகப் பணியின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவன். எந்த நேரத்திலும் எந்த வகையான பணியினைக் கொண்டிருந்தாலும் தேச விடுதலைக்காய் சலிப்பின்றி நேர்த்தியான முறையில் திறம்படத் தன்னம்பிக்கையோடு செயற்படும் பல்துறை ஆளுமைமிக்க போராளி அறிவுச்சோலை நிலவன். அமுதன்:- தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமானது எவ்வாறுதோற்றம் பெற்றது? அதன் அடிப்படைக் கோட்பாடு என்னவாக இருந்தது?. நிலவன் :- தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது? விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்? போராட்ட வரலாறு என்ன? எதற்காகப் போராடினார்கள்? தெரிந்து கொள்ள வேண்டும். தமிழினத்தை தலை நிமிர்த்தி தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாகவும் உலகிற்கு அடையாளப் படுத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். புரட்சிகர ஆயுதப் போராகவும், எழுச்சிமிகு வெகுசனப் போராட்டமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய விடுதலைப் போரை முன்னெடுத்தார்கள். தமிழீழ பூமியில் உக்கிரமாகப் பௌத்த சிங்கள அரசின் கொடுமைகளுக்கும், கொலை வெறிக்கும், தமிழ் இன அழிப்புக்கும், ஆளாக்கப்பட்ட தமிழினத்தைக் காக்க வேண்டியும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ மரபுவலி இராணுவமாக வளர்ச்சி பெற்று ஒரு நடைமுறை அரசினை அமைத்து ஆட்சி செய்து வந்தார்கள். தமிழினம் உருத்தோன்றிய காலம்முதல் வாழ்ந்துவந்த எமது பூர்வீக மண்ணினதும் எமது மக்களினதும் விடுதலைக்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் போராடினார்கள் தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்து மாவீர்களா விதையாகிப் போனார்கள். உறுதியும், அடங்காத தாய்மண் பற்றும், தன்னலமற்ற விடுதலைக்கு உலக அரங்கில் எமது இனத்தைத் தலைநிமிர வைத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற வாக்கியம் தமிழீழ விடுதலைப் புலிகளின்தேசிய எழுச்சிக் கோசத்தின் இலட்சியம் ஆகும். தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும், அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும் திகழ்ந்தார்கள். தேச விடுதலை என்பது, ஒற்றையாட்சி, சமஷ்டி ஆட்சி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட விடுதலை. அதை எந்தச் சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத- யாருக்கும் கீழ்ப்படியாத ஒட்டுமொத்த சுதந்திரம். அதனை அடைவதற்கான போராட்டத்தை விடுதலைப் புலிகள் மட்டுமே இறுதி வரை முன்னெடுத்தனர். தமிழ் இனத்தின் விடிவிற்காகவும், தமிழீழ தாயகத்தின் பூரண சுதந்திரத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட, தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டத்தை நடத்தினார்கள். தமிழீழ அரசின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது நாற்பது ஆண்டு காலமான, நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. “தமிழீழம்” எனும் தமிழர் தாயக பூமி முழுமையான விடுதலையைக் காண்கின்ற வேளையில் அங்கே ஆதரவற்றர்கள், இயலாமையில் வாழ்பவர்கள், ஏழைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், கையேந்தி நிற்பவர்கள், என்று யாருமே இருக்கக்கூடாது. போரினால் ஏற்படும் நிரந்தரமான தாக்கங்களுள் மக்கள் நசுங்கிப் போக இடமளிக்கக்கூடாது. மாறாக எல்லா வகையிலும்தலை சிறந்த நாடாக, இந்த உலகிற்கே முன்மாதிரியான ஒரு நாடாகத் தமிழீழம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மிகமிக உறுதியாக இருந்தார், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபகரன் அவர்களுன் தலைமையில் நடைபெற்ற தேச விடுதலைக்கான இன விடுதலைப் போராட்டம் ஒரு புனிதமானது, அது அறம் வீரம், தியாகம், விடுதலை உணர்வு ஆகிய உயரிய இலட்சியப் பண்புகளைக் கொண்ட இலட்சியமாக திகழ்வது. தமிழீழ மக்களின் தேசிய அபிலாசையாக வரலாற்றுரீதியாக எழுந்த தனியரசுக் கோரிக்கைக்கு ஒரு செயற்பாட்டு வடிவம் கொடுத்து, அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் இலட்சிய உறுதியுடனே போராளிகளாய் நாம் போராடியிருந்தோம். அமுதன் :- தமிழ் மக்களின் போற்றுதற்குரிய “மேதகு வே. பிரபாகரன்” அவர்களால் “தமிழீழ விடுதலைப் புலிகள் ” என்ற கட்டமைப்பு உருவாக்கம் எவ்வாறு இருந்தது? நிலவன் :- 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (Liberation Tigers of Tamil Eelam) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார். அன்றுதொட்டு வளர்ந்து விருட்சமாகி தரை கடல் வான் என விரிந்து பல்வேறு இராணுவ துறை சார் மக்கள் சார் கட்டமைப்புகளாக விரிந்து, தமிழர்களுக்கான தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய சமநேரத்தில், தனிநாடு என்ற கட்டமைப்புக்கான அனைத்து கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. தமிழர்களின் போரிடும் ஆற்றலை உலகறியச் செய்து, உலகை வியக்க வைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் இயக்கத்தின் போராட்ட சாதனையால் தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டம் அன்று உலகப் பிரசித்தி பெற்ற விடுதலைப் போராகச் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. மனித சுதந்திரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டது . எல்லாவித ஒடுக்கு முறையும் சுரண்டலும் ஒழிக்கப் பட்ட மக்களின் உண்மையான சனநாயகமாகத் திகழ்ந்தது. தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து, தமது பண்பாடு ,கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும் என்பதை நடை முறையில் நிகழ்த்திக் காட்டினார். விடுதலைப் புலிகள் முப்படைகளுடன் கரும்புலிகள் என்ற சிறப்பு இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கில் தமிழீழக் காவல்துறை, நீதித்துறை குற்றப் புலனாய்வு பிரிவு என பல பிரிவுகளும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்காக இயங்கியது. பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத் திட்டங்களையும் உருவாக்கினார் எங்கள் தாயுள்ளம் படைத்த தலைவர் அவர்கள். தமிழீழம் என்ற எம் தாய் நாட்டிற்கு வந்திருந்த ஐ.நா.அதிகாரிகள் விடுதலைப் புலிகள் அமைப்புக்களின் வளர்ச்சி கண்டு வியந்தார்கள். போரின் அனர்த்தங்களுக்கு மத்தியில் சிறிவர்கள் , முதியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாலிகளுக்கு இப்படியும் ஒரு அரும்பணியா? என்று அவர்கள் வியப்புடன் வினவியுள்ளனர். அமுதன் :- “காந்தரூபன் அறிவுச் சோலை” இல்லத்தின் உருவாக்க வரலாறு பற்றிக் குறிப்பிடுக? நிலவன் :- காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லம் பற்றி அதன் உருவாக்கம் பற்றியும், அதற்கு காரணமானவர் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்!. சிறுவயதில் இருந்து தாய்தந்தையை, இழந்திருந்த கடற்கரும்புலி மேஜர்.காந்தரூபன் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவரினால் வளர்க்கப் பட்டவர்களில் ஒருவன். தமிழீழக் கனவு மற்றும் கொள்கைகள் பிடித்துப் போகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதை விடுத்து ஆரம்பத்தில் தலைவர் அவர்களினால் படிப்பதற்கு ஊக்கப்படுத்திட காந்த ரூபனோ தான் இந்த நாட்டிற்காக போராடுவதையே உயர்ந்ததாக நினைப்பதாக தலைவரிடம் கூறினான். 1987 இன் ஆரம்பத்தில். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படை முகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தார். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில் எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டு விடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சக நண்பர்களால் மீட்கப்பட்டு காப்பாற்றப் பட்டார்.இருந்தபோதும், குப்பி (சயனைட் ) விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென மருத்துவ ஆலோசனை வழங்கப் பட்டிருந்தது. காந்தரூபனிற்கு இப்போது நிறை உணவு தேவைப்பட்டது. சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கு பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர் வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப்பசு ஒன்றைக் காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிற்பார். தலைவர் அவர்களுடன் மணலாற்றுக் காட்டில் நின்ற 1988, 1989ம் ஆண்டு காலப் பகுதியில்…. அப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றார். ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தார். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர். ‘”அண்ணை…. என்னைக் கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ’” என்றார். தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கமைவாக அவரது பாதுகாப்புப் பிரிவிலிருந்து “கடற்புறா” அணிக்குக் காந்தரூபன் அவர்களை அனுப்பினார். காலங்கள் கடக்க காந்தரூபன் கரும்புலியாக தான் போக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதனை தலைவர் அவர்களிடம் கூறினார் காந்தரூபன். கரும்புலிகள் அணியில் இணைவதை ஆரம்பத்தில் தலைவர் அடியோடு அதனை மறுத்து விட்டார். சில ஆண்டுகளில் காந்தரூபன் தனது திறமையினால் கடற்புலிகள் அணியோடு இணைந்து அதில் தனது தனித்துவமான திறமைகளை வெளிக் காட்டியதுடன் கடற் புலிகளின் சிறப்புத் தளபதியான கேணல்.சூசை அவர்களிடம் தனது கரும்புலி ஆசையைக் கூறி நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அனுமதி கிடைத்தது. ஏற்கனவே, பெரிதாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று சகபோரளிகளுக்குச் சொல்லிக்கொண்டும் அதற்கான நடவடிக்கைகளில்ஈடுபட்டுக் கொண்டு மிருந்தவன்தான் காந்தரூபன் மற்றும் கொலின்ஸும். மணலாற்றுக் காட்டில் தலைவர் அவர்களின் பாதுகாப்பணியில் இருந்து செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் தலைவர் அவர்களிடம் நேரடியாக கேட்டுத் தன்னைக் கரும்புலிகளணியில் இணைத்துக்கொண்டிருந்தான்.இவர்களுடன் வடமராட்சி அணியிலிருந்து ஏற்கனவே கரும் புலிகளிணியில் தன்னை இணைத்திருந்த வினோத்தும் “எடித்தாரா”வைத் தாக்கியழிப்பதற்கான கடும்பயிற்சிகளை மேற்கொண்டனர். 1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இலங்கை இராணுவத்திற் கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத் தொடங்கி யிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்த காலம். தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் காந்தரூபன் தலைவரிடம் சொன்னார்.”தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள்… அப்பா அம்மா இல்லாம சொந்தக்காரரின் ஆதரவில்லாமல் அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாமல் படிக்க வசதி இல்லாமல் எவ்வளவோ ஏக்கங்களோடையும் துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை நான் அனுபவித்ததில் கண்டனான் அண்ணை….நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேண்டும்” என்றார். “அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …”. தலைவரின் இதயத்தை இந்த வார்த்தைகள் தொட்டன. இந்த தமிழீழ மண்ணில் இனி யாரும் அநாதைகளாக இருக்க கூடாது. அவர்களுக்கு தாங்கள் தாயாகவும், தந்தையாகவும் இருக்க வேண்டும்” இதுவே என இறுதி ஆசை என கூறினார். அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீது, 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர். அமுதன் :- காந்தரூபன் அறிவுச் சோலை இல்லத்தின் உருவாக்கமும் அதன் எதிர்கால நோக்கமும் என்ன என்பதைத் தலைவரின் தெளிவுபடுத்தலிலிருந்து பதிவு செய்க? நிலவன் :- 1993 நவம்பர் 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அவர் ஆற்றிய உரையில் “எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள் .எமது போராளிகள் அனைவருமே இவர்களின் சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணை பிரியாத அங்கமாக இணைந்துள்ளனர். தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டு வளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச்சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேருன்றி வளரும். இத்தகைய நற்பண்புகளுடன் இவர்கள் கல்வியறிவுபெற்று இந்தத் தேசத்தின் நிர்மானிகளாகவும் உருப்பெற்று எமது மக்களுக்குப் பெரும் பணியாற்றுவார்கள். நாங்கள் ஒரு புறம் மண்மீட்புப் போரை நடத்துகின்றோம். மறுபுறம் குழந்தைகளுக்கான வேலைத்திட்டங்கள் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றோம். ஆனால் இத்தகைய சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்கவேண்டும்” என்று கூறினார்.பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பித் தலைவரிடம் கேட்டு கரும்புலியாய்ச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ” யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப்புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப்போல , தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்கவேண்டும் ” என்றுகேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறை வேற்றும் முகமாக “காந்த ரூபன் அறிவுச்சோலை” எனப்பெயரிடப்பட்டது. என அவர் பேசியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். அமுதன் :- தலைவரின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப் பட்ட இல்லங்கள்,கல்விக் கூடங்கள் பற்றிய விளக்கங்களையும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தருக? நிலவன் :- தமிழ் இன மீட்புக்கான இன விடுதலைப் போரை நடாத்திக் கொண்டு மறுபுறம் தமிழீழத்தின் எதிர்காலத்தைச் சிறப்பான முறையிற் கட்டியெழுப்பும் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார் தலைவர் அவர்கள். அந்த வகையில் தமிழீழத்தில் உருவான சேவை வழங்கும் கல்விக் கூடங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் தோற்றம் கண்டது. அவற்றில் “செஞ்சோலை” “காந்தரூபன் அறிவுச்சோலை,” அன்புச் சோலை, வெற்றிமனை, லெப். கேணல் நவம் “அறிவுக்கூடம்” போன்றவை ஆகும். யுத்தத்தினாலும் சந்தர்ப்ப சூழ் நிலைகளாலும் தாய்தந்தையரை இழந்து தவிக்கும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதே செஞ்சோலைச் சிறுவரில்லம். ஆண் குழந்தைகளைக் காத்து வளர்த்தது காந்தரூபன் அறிவுச்சோலை. ஆதரவற்ற முதியோர்களுக்காக அன்புச்சோலையும், போர் அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வெற்றிமனையும், யுத்தகளங்களிலும், விமானக்குண்டுத் தாக்குதல்களிலும் அங்கங்களை இழந்தவர்களுக்காக லெப். கேணல் நவம் அறிவுக்கூடமும் உருவாக்கப்பட்டன. 1991ம் ஆண்டு யூலை மாதம் 10ம் திகதி 15 மாணவிகளுடன் செஞ்சோலை மகளிர் பாடசாலை ஆரம்பமானது. யாழ் கல்வளை சண்டிலிப்பாயில் ஓர் சிறப்பான இல்லம் நிர்மாணிக்கப்பட்டு 1991ம் ஆண்டு ஐப்பசி மாதம் 22ம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 23 மாணவர்களுடன் ஆரம்பமான செஞ்சோலை காலப்போக்கில் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட இல்லமாக விளங்கியது. போர்ச்சூழலால் செஞ்சோலை இடம்பெயர வேண்டிய நிர்ப்ந்தங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. சண்டிலிப்பாயிலிருந்து நகர்ந்து மானிப்பாய், கோப்பாய், போன்ற இடங்களில் தற்காலிகமாக சிறிது காலம் இயங்கி வந்தது. பின்பு 1993,1994,1995ம் ஆண்டு காலப்பகுதியில் அரியாலையிலும் மட்டுவிலிலும் செஞ்சோலை தன் செயற்பாடுகளை நிரந்தரமாக்கிக் கொண்டு செயற்பட்டு வந்தது . அதுவும் நீடிக்கவில்லை. இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக 1995ம் ஆண்டு பிற்பகுதியில் மீண்டும் செஞ்சோலை கிளிநொச்சியிலுள்ள திருவையாறு என்னுமிடத்திற்கு இடம் பெயர்ந்தது. தொடர்ந்து கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து மல்லாவியில் வடகாடு, முல்லைத்தீவு, வள்ளிபுனம், இரணைப்பாலை மீண்டும் வள்ளிபுனம் கிளிநொச்சி என ஓடி ஓடி ஓய்து போகாமல் பிள்ளைகளின் கல்வி மற்றும் வினைத்திறன் செயற்பாடுகள் அங்கும் தொடர்ந்தன. தலைவரின் நேரடிக் கண்காணிப்பில், பாதுகாப்பில் வளர்க்கப்பட்டனர் குழந்தைகள் செஞ்சோலைப் பிள்ளைகள். பல்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள் அங்கு கைக் -குழந்தைகள் முதல் 18 வயது வரையான பெண் பிள்ளைகள் தங்கள் எதிர்காலம் நோக்கி கல்வி வழங்கப் படுகிறது. இங்கு முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்பாடசாலை போன்ற கல்வி முறைக்கேற்ப கல்வியறிவூட்டப்பட்டது. கல்வியின் நோக்கம் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதல்ல வாழ்க்கைக்குத் தேவையான பூரண ஆளுமை உள்ளவர்களை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது. கலைகள், விளையாட்டுக்கள் , கைவினைத்திறன்கள் வெளிக்களச் செயற்பாடுகள் போன்றவற்றுடன் நல்லொழுக்கம், நல்மனப்பாங்கு, நற்பண்புகள், ஆளுமைத்திறன், துணிச்சல் முற்போக்குச் சிந்தனை போன்றவற்றை மேம்படுத்துவதற்கு ஏதுவான சிறப்பான பாடத்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன. அமுதன் :- தலைவர் மேதகு அவர்களின் சீரிய சிந்தனை நோக்கில் பாதுகாப்பு, அரவணைப்பு முறைமைகளோடு நிர்வகிக்கப்பட்ட இல்லங்கள் பற்றிய விரிவான தகவல்கள் பற்றிக் குறிப்பிடுக? நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகளினால் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தாய்தந்தையரை இழந்து மற்றும் பிரிந்து தவிக்கும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதே செஞ்சோலைச் சிறுவரில்லம். ஆண் குழந்தைகளைக் காத்து வளர்த்தது காந்தரூபன் அறிவுச்சோலை. செஞ்சோலை’ ‘”காந்தரூபன் அறிவுச்சோலை’” அமைப்புக்களில் எமது எதிர்கால வாரிசுகள் கட்டுக்கோப்பான முறையில் வளர்கப்பட்ட அதே வேளை முல்லைத் தீவில் செந்தளிர் சிறுவர் இல்லம், 2000 ஆம் ஆண்டு ஆராம்பிக் கப்பட்டது. கைக் குழந்தை முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காகக் குருகுலம் ஒன்றும், தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தால் நடத்தப் பட்டது. காந்தி நிலையம் என்ற பெயரில் சிறுவர் பராமரிப்பு இல்லம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் நடாத்தப் பட்டது. மேலும், தாய் மண்ணிற்கான தமது பிள்ளைகளை ஈந்து தனித்து நிற்கும் பெற்றோரை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தனது நேரடிக் கண்காணிப்பில் ஆதரவற்ற முதியோர்களுக்காக, ‘”அன்பு முதியோர் பேணலகம்’” போர் அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக “வெற்றிமனையும்”, யுத்தகளங்களிலும், விமானக்குண்டுத் தாக்குதல்களிலும் அங்கங்களை இழந்தவர்களுக்காக “லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்” இவர்களுக்கு பொதுக் கல்வி, கணினிப் பயிற்சி, தொழிற் கல்வி அளிக்கப்பட்டு புனர்வாழ்வும் அளிக்கப்பட்ட்டது. அதோடு மனநோயாளி களுக்காக “மயூரி இல்லம்” “சந்தோசம் உளவள மையம்” என பல அமைப்புக்களையும், பல உள்கட்டு மானங்களையும் உருவாக்கினார்கள். கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் ஐந்து இல்லங்கள் உட்பட, தமிழர்கள் வாழும் எட்டு மாவட்டங்களில் கிட்டத்தட்ட நாற்பத் தைந்து சிறுவர் இல்லங்கள் இயங்கின. போரினால் இழப்புகளை ச் சந்திக்காத குடும்பங்களே இல்லை என்ற நிலையில், குடும்பத்தை இழந்த குழந்தைகளின் நிலை மிகவும் வேதனைக் குரியதாகும். உளவியல் சிக்கல்கள் உட்படப் பல்வேறு சிக்கல்களுக்கு ஆட்பட்டு, திசை மாறிப் போகும் நிலை அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளின் நிலை இன்னும் அதிக சிக்கலானது. இந்நிலையை மாற்றி, போரினால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற ஆண் பெண் குழந்தைகளைப் பராமரிக்கவும், அவர்களது எதிர்காலத்திற்கு நல்வழி காட்டவும் உருவாக்கப்பட்ட சிறிவர் இல்லங்களாக அன்று இயங்கின. போரின் அனர்த்தங்களினால் சொந்தங்களை இழந்த சின்னஞ் சிறுசுகளை ஒன்றிணைத்து ஒழுங்கான கல்வி புகட்டும் மாபெரும் கைங்கரியம் ஒன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் 2009கு முன்னர் வரை செவ்வனே நடந்து கொண்டிருந்தது. அமுதன் :- ஒரு மக்கள் மயமாக்கப்பட்ட விடுதலை இயக்கமான “தமிழீழ விடுதலைப் புலிகள்”பற்றிய மாறுபட்ட கருத்தைக் கொண்ட சர்வதேசத்திற்கும் அதனைச் சார்ந்தவர்களுக்கும் அந்த அமைப்பு பற்றிய தீர்க்கமான நிதர்சனம் யாதாக இருக்கும்? நிலவன் :- விடுதலைப் புலிகளை “பயங்கரவாதிகள்/தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே! உங்கள் சுயமூளையுடன் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் விடுதலைக்கு போராடும் ஈழத் தமிழர்களாய் வளர்ந்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை! தமிழர்கள் பயங்கரவாதிகள் / தீவிரவாதிகள் என்றும், ஆயுத விரும்பிகள் என்றும் இலங்கையின் பௌத்த சிங்கள பேரினவாத அரசினால் செய்யப்படும் பிரச்சாரங்கள் உண்மைக்கு மாறானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேறு பல நாடுகளில் நிலை கொண்டிருந்த சர்வதேச பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்று வகைப் படுத்தப்பட்ட அமைப்புக்களுடன் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை ஒப்பிட்டமை எமது விடுதலைப்போரிற்கு ஒரு இருண்ட காலமே ஆகும். தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை 2009ஆம்ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற சிங்களத்தின் எதிர்பார்ப்பு பகற் கனவாகியிருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல, ஏற்கனவே இத்தாலியின் நாப் போலி மாநகர நீதிமன்றம், டென்மார்க் உயர்நீதிமன்றம், ஐரோப்பிய நீதிமன்றம், விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல என்று தீர்ப்பளித்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றமும் விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று கூறி நீதிமன்றமானது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 16 ஜூன் 2018இல் வழங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என நெதர்லாந்தின் த ஹேக் மாவட்ட நீதிமன்றம் தீப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப் போராளிகள் என இலங்கை அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக 21ஏப்ரல்2019ஆம் ஆண்டின் ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன. புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது. CNN – அமெரிக்கா.- இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம். BFM – பிரான்ஸ்.-விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்க வில்லை. சிறீலங்கா அரசு- அதே வேளை கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கும் பின் விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகள் என எண்ணிவந்த சிங்கள மக்களும் இன்று பயங்கரவாத்துக்கும் விடுதலைப் போராட்டத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை . தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராகக் காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டு ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய விடுதலைப் போராளிகள் விடுதலைப் போராட்டத்தை உலகம் பார்த்து அதிசயிக்க வைத்தவர்கள். தமிழினத்தின் வீரத்தையும், தமிழீழ சுதந்திர தாகத்தையும் உலகறியச் செய்தார்கள். மனிதநேயமிக்க மனவலிமை படைத்த மகத்தான தலைவனை கொண்ட தமிழீழத்தில் ‘செஞ்சோலை’, ‘காந்தரூபன் அறிவுச்சோலை’ சிறார்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் பல அர்த்தங்கள் உண்டு. “செஞ்சோலை” ‘”காந்தரூபன் அறிவுச்சோலை’” சிறார்கள் எந்தளவு எதிர்பார்ப்புடன் வளர்க்கப்பட்டார்கள் என்பதை தமிழீழத் தேசியத் தலைவரின் இந்த உரைகள் விளங்குகின்றன. “எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ள வேண்டும். ஆற்றல் மிக்கவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக ஒரு புதிய, புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மானிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்.” என தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமது உள்ளக் கிடக்கைகளை வெளிப் படுத்தியிருந்தார். “இந்தக் குழந்தைகள் யாருமற்றவர்களல்ல, தமிழன்னையின் புதல்வர்கள். வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப்போராட்டச் சூழலில் இந்த இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விரூட்சங்களாக மாறி, ஒரு காலம் தமிழீழத் தேசத்தின் சிந்தனைச் சோலையாக சிறப்புற வேண்டு மென்பதே எனது ஆவல்.” இது தலைவர் அவர்களின் உள்ளக் கிடக்கைப் பேரவா என்று கூடச் சொல்லலாம் இவைகளே நினைவுக்கு வருகின்றன. ஒரு வீரஞ்செறிந்த விடுதலை வரலாற்றின் அற்புதமான அர்ப்பணிப்புகளாக எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக தமிழர் இராணுவமாக வாழ்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெரும் விருட்சத்தை வெட்டி வீழ்த்த நினைத்து தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களைச் சிங்கள ஆக்கிரமிப் பாளர்கள் சிதைத்தி ருந்தாலும் தமிழர்களின் இன விடுதலைக்கான சுதந்திர வேட்கையினைச் சிதைத்து விட முடியவில்லை. தமிழர் தாயகப்பூமியில், தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு உருவாகு வதனைத்தவிர ஈழத்தமிழர் தேசத்தின் தேசிய இனச்சிக்கலுக்கு வேறு எந்தத்தீர்வும் அமையப்போவதில்லை. அடக்குமுறைகளையும் தடைகளையும் தாண்டி, தன்னெழுச்சியால் மேலிடும் உணர்வுகளோடு, தமிழீழத் தாய்மண்ணில் பேரெழுச்சிகொண்ட போராளிகளாய் எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை பின்னடைவுகள் வந்தாலும் நாம் எமது இலட்சியத்தில் உறுதி பூண்டு தமிழீழம் விடுதலையடையும்வரைத் தொடர்ந்தும் போராடுவோம். -தொடரும் https://www.uyirpu.com/?p=19525
  10. உக்ரைனை சமாளிப்பது கடினம்; ரஷ்யாவை சமாளிப்பது எளிது; டிரம்ப் கருத்து உக்ரைனை சமாளிப்பது மிகவும் கடினம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரைனை சமாளிப்பது கடினம் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அமைதியை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். போர் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், உக்ரைன் கிடைக்கும் வாய்ப்பில் வேலையை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் “அவர்கள் உக்ரைனை தொடர்ந்து தாக்குகிறார்கள். இந்த விஷயத்தில் உக்ரைனை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினம் இருக்கிறது”. ரஷ்யாவிடம் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, அவர்களிடம் சிறப்பான நிலைமை இருந்த போதிலும், அவர்களை சமாளிப்பது சுலபமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், புடின் அமைதியை விரும்புகிறாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆம்….நான் புடினை நம்புகிறேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=315340
  11. போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு! போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் தற்போது 1.3 மில்லியன் இராணுவ வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் போலந்து நாட்டின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சம் ஆகும். தற்போதுள்ள இரண்டு இலட்சம் வீரர்களை 5 இலட்சமாக அதிகரிப்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/399212/அனைத்து-ஆண்களுக்கும்-கட்டாய-இராணுவ-பயிற்சி-டொனால்ட்-டஸ்கின்-அதிரடி-அறிவிப்பு
  12. இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை! இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை (09) நடைபெறவுள்ளது. வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் நாளைய தினம் அவதானம் செலுத்தப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். https://www.hirunews.lk/tamil/399225/இலங்கை-தமிழரசு-கட்சியின்-மத்திய-குழு-கூட்டம்-நாளை
  13. மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட் – விமான சேவைகள் முடக்கம்! March 8, 2025 8:30 am தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. முன்னதாக கடந்த ஜனவரி 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் 7 ராக்கெட் வெடித்துச் சிதறிய நிலையில், ஸ்டார்ஷிப் 8-ஐ உள்ளூர் நேரப்படி (அமெரிக்கா) கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ராக்கெட்டுடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறையினர் இழந்தனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட வான்வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களை நிறுத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பிறகு, கட்டுப்பாட்டை இழக்கும் பட்சத்தில் ராக்கெட் தானாக வெடித்துச் சிதறும் வகையில் செய்யப்பட்டிருந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளனர். ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் கரீபியன் கடற்பகுதியில் விழுந்தது. எரிந்துகொண்டே பூமியை நோக்கி வந்த பாகங்களை விடியோ எடுத்த பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராக்கெட்டின் பாகங்கள் விழுந்த பகுதிக்கு அருகிலிருந்த 5 விமானங்கள் இரவுவரை தற்காலிகமாக மூடப்பட்டன. அங்கு தரையிறங்க இருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், “ராக்கெட் குப்பைகளில் எந்த நச்சுப் பொருள்களும் இல்லை, இதனால், கடல் உயிரினங்கள் மற்றும் நீரின் தரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதுபோன்ற சோதனையின் மூலம், நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி கிடைக்கிறது. இன்றைய ஸ்டார்ஷிப், நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும். அமெரிக்க விமானத் துறையுடன் இணைந்து முழுமையான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது. https://oruvan.com/elon-musks-rocket-explodes-again-air-services-suspended/
  14. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி March 8, 2025 12:40 pm உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்ந தாக்குதல் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல குடியிருப்பு கட்டிடங்களும் நிர்வாக கட்டிடமொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை வலுவாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதையடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://oruvan.com/russian-strike-kills-11-in-town-near-donetsk-ukraine-says/
  15. அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை March 8, 2025 2:22 pm அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து அமைச்சரிடம் வினவினர் இதற்கு பதிலளித்த அமைச்சர், அதானி நிறுவனத்தின் மின்சாரத் திட்டத்தின் விலைகள் அதிகமாக இருந்ததால், அதை மறுபரிசீலனை செய்வதற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார். இந்திய தாய் நிறுவனமான அதானியிடமிருந்து இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாகத் தெரிவித்து இலங்கை முதலீட்டு சபைக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அதன்படி, முதலீட்டு சபை இது குறித்து அமைச்சுக்கு தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார். இருப்பினும், காற்றாலை மின் திட்டம் குறித்து இலங்கையில் உள்ள அதானி நிறுவனத்தின் பிரதிநிதி அலுவலகத்துடனே கலந்துரையாடப்பட்டதாகவும், எனவே இந்த விடயத்தை பரிசீலிக்க நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். https://oruvan.com/adanis-wind-power-project-has-not-been-canceled/
  16. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் போராட்ட முன்னணி March 8, 2025 9:53 am முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அல்ஜஷீராவுக்கு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியதன் ஊடாக, அந்த அறிக்கை அரச கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படாத ஒன்று எனக் குறிப்பிடுவதாக துமிந்த நாகமுவ கூறியுள்ளார். ஜனாதிபதியினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும், அவ்வாறானால் அப்போதைய ஜனாதிபதி எதற்காக அதன் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பயணத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார் என குற்றம் சுமத்திய அவர் படலந்த ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வெளிநாட்டு ஊடகங்களுடனான கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் அதனால் ஜே.வி.பி பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசாங்கத்தின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து, அந்த பணியை அது நிறைவேற்றுமா என்பதைப் பார்க்கிறேன் எனத் தெரிவித்தார். https://oruvan.com/former-president-ranil-wickremesinghes-citizenship-should-be-revoked-peoples-struggle-front/
  17. கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம் கனடா (Canada) - டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் டொரோண்டோவின் - ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டரிலுள்ள கேளிக்கை விடுதியில் நேற்று (மார்ச் 7) இரவு இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை இந்நிலையில், அங்கு விரைந்த மீட்புப் படையினர் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதாகவும், சுமார் 12 பேருக்கு லேசானது முதல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய குற்றவாளி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அந்த குற்றவாளியைப் பிடிக்க அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து டொரோண்டோ ஆளுநர் ஒலிவியா சோவ் கூறுகையில், இந்த துயர சம்பவத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/12-injured-in-shooting-at-pub-in-toronto-canada-1741422565#google_vignette
  18. போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளுவதற்கு நன்றி பல. கூகிள் ஷீற்றைப் பாவித்தால் 10 நிமிடங்களில் 90 கேள்விகளுக்கும் பதிலளிக்கலாம். எனக்கும் தரவேற்ற இலகுவாக இருக்கும். முதலாவதாகக் கலந்துகொண்ட @vasee வெற்றிபெற வாழ்த்துக்கள்😀
  19. முகநூலில் இருந்து… யார் இந்த மெகதி ஷசன், நேற்றிலிருந்து இலங்கை முழுவதும் ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி போன நபர். ஒரு சிலருக்கு இவர் புதிதாக இருக்கலாம் ஆனால் உலக அரசியலை அவதானிப்பவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனம் தான். நேற்றைய பேட்டியில் ரணில் ஒரு இடத்தில் shout என்கிற வார்த்தையை மெகதி ஷசனை நோக்கி சொல்லுவார். காரணம் இவருடைய கேள்விகள் யாராக இருந்தாலும் அம்பை போல பாயும். இஸ்ரேல் -காசா , ரஷ்யா- உக்ரைன், விக்கிலீக்ஸ் என உலக அரசியலை மையமாக கொண்டவர்களை இவர் பேட்டி எடுத்துள்ளார். அல் ஜசீரா என்பது கட்டாரை தலைமையகமாக கொண்ட சர்வதேச தொலைகாட்சி ஒன்றாகும்,செனல் 4 போல இனி ரணில் ராஜபக்ச தரப்புக்கு அல் ஜசீரா இவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு செய்திகள் சொல்லுகிறது என்று சர்வ சாதாரணமாக சொல்லுவார்கள். நேற்றைய உள்ளூர் பேட்டியில் ரணிலின் இனவாத கருத்து தெள்ளத்தெளிவாக விளங்ககியது. எங்கேயோ போய் அடிபட்டு தூர வந்து கத்தும் நாய் போல அங்கே அடிபட்டு இலங்கையில் வந்து மகாநாயக்கர்கள் பெரியவர்கள் எனும் கருத்தை ரணில் சொல்லியது, இன்னும் சிறுபிள்ளை போல எண்ணுவதாக உணர்கிறேன். ரணில் அனுபவமிக்க தலைவர், அரசியல் சாசனம் கரைத்து குடித்தவர் என்பது உண்மையே ஆனால் இலங்கைக்குள் மட்டுமே அவரின் சாணக்கியதனம் பலிக்கும். சாதாரணமாக 6 முறை பிரதமராகவும் 1 முறை ஜனாதிபதி பதவியில் இருந்து ஒருவருக்கு உள்ளூர் அரசியல்வாதிகளை சமாளித்து விடுவார். ஒன்று கல்வி அறிவு இல்லாத அரசியல்வாதிகள், இன்னொன்று லஞ்சம், இன்னொன்று அவர்களுடைய குற்றங்கள் அட்டவணைப்படுத்தி பயமுறுத்தல், என்று சொல்லி கொண்டே போகலாம். ரணில் நாட்டை காப்பாற்றினார் என்பது கட்டமைக்கப்பட்ட நாடகம், இலங்கையின் பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்பட்டால் போதும், உதாரணமாக இலங்கைக்கு ஒரு மாதம் சுற்றாலா பயணிகளும் ஒரு மாதம் ஏற்றுமதியும் சீராக இருந்தாலே பிரதான பிரச்சினைகள் தீரும். காரணம் இலங்கையின் புவியியல் அமைப்பு பிரதான காரணம் ஆகும். சர்வதேச அரங்கில் ரணில் பற்றி தெரிந்து இருந்தும் IMF முதற்கட்டமாக பணத்தை ரணில் கையில் எதற்காக வழங்கினார்கள் என்றால் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தார். உதாரணமாக ஜப்பான் அரசாங்கம் ஊழல் லஞ்சம் காரணமாக உதவி திட்டங்களை நிறுத்தி இருந்தது, ஆனாலும் IMF கொடுத்ததுக்கான காரணம் உறுப்பு நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஆகும். அது அவ்வாறு இருக்க நேற்று ரணில் Head to head நிகழ்சியில் பங்குபற்ற பிரதான காரணம், உலக அரங்கில் பலராலும் பார்க்கபடுகிற நிகழ்ச்சி , அடுத்த வருகிற பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சிறிய பின்னடைவு சந்திக்க வாய்ப்பு உள்ளது, காரணம் பிரதான கட்டமைப்பு வேகத்தை மக்கள் ஏற்று கொள்ள நேரம் தேவைபடுகிறது.ஆகவே அதை சாதமாக கொண்டு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை கொண்டுவந்து மீண்டும் அரகல போல ஒன்றை‌ உருவாக்கும் திட்டத்தின் முதற் கட்டமாகும். தன் கதையாலும்,நகைச்சுவை பேச்சாலும் இலங்கை ஊடகவியலாளர்களை மயக்கியது போல மெகதி ஷசனை மயக்காலாம் என்று எதிர்பார்ப்போடு, ரணில் ராஜபக்ச கருத்தியலை விதைத்து சர்வதேச அரசியலை திசை திருப்பலாம் என்றே யோசித்து இருந்து இருப்பார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சர்வதேச ஊடகத்திற்கு வழங்கி செவ்வியில் "do you think we are second class country" எனும் கவுண்டரை போட்டு செவ்வி எடுப்பவரை மடக்கியது போல பெரும் கனவோடு சென்றிருந்தார். ஆனால் பட்டலந்த அறிக்கை முதல் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் விடையளிக்க முடியாமல் அவருடைய கைகள் நடுங்க தொடங்கியது அவதானிக்க கூடியதாக இருந்தது. இலங்கை தேவாலயங்கள் தாக்குதல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நகைச்சுவையாக அனுக முற்பட்ட ரணிலை " it's not a funny, they were killed 100 of people" என்று சொன்னதும் ரணில் நிலை தடுமாறி போனார். ரணிலுக்கு ஆதரவு வழங்க வந்த European parliament member ஒருவர் ரணிலால் சமாளிக்க முடிவில்லை என்று அறிந்தும் " you were bringing wrong person,and u should bring gottabaya rajagapaksha , because he destroyed ranil political " என்று சொன்னதும் உடனடியாக சுதாகரித்து கொண்ட மெகதி"எவ்வாறு இவருடைய அரசியல் வாழ்வை சிதைத்தவர் பிறந்தநாள் பார்ட்டியில் பாட்டுபாடினார் " என்றே கேட்டதும் ரணிலின் முகம் கோபத்தால் நிலை குழைந்து போனது. ரணில் ஓநாய் என்பது அரசியலை அதிகமாக நோக்குகிறவர்களுக்கு தெரியும்.மகிந்தவுக்கு இணையான ஒரு இனவாதி தான் ஆனால் "slow poison" என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி எதற்காக இவ்வளவு தடுமாறுகிறது என்றால் இலங்கையின் முழு system மும் மாற்ற வேண்டும். அதற்கு மிக நீண்ட காலம் தேவை. இலங்கையின் முழு அரசியல் கட்டமைப்பு மக்களுக்கானது இல்லை, அது இலகுவான விடயமில்லை , வியாபார‌ அரசியலை மக்கள் அரசியலாக மாற்ற வேண்டியதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும், அதில் அரைவாசி கடந்தும் விட்டார்கள். என்னதான் அரசியல் சாணக்கியனாக இருந்தாலும், சரியான இடத்தில் மூக்கு உடைப்படும் என்பதற்கு ரணில் சான்று! https://www.facebook.com/share/p/165oXSWwgF/?mibextid=wwXIfr
  20. வட, கிழக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவியுங்கள் மாவீரர்களுடைய உறவுகளும், தமிழ் மக்களும் மாவீரர்களை விதைத்த இடத்தில் கண்ணீர் சிந்தி நினைவுகூருவதற்காக, வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மாவீரர்துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் இக்கோரிக்கையை விசேடமாக முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இறந்தவர்களை நினைவு கூருதலென்பது அங்தந்த சமயங்களுக்கேற்ப மக்கள் செய்து வருவது வழமையாகும். எங்களுடைய மக்கள் வடக்கு, கிழக்கில் நினைவுநாளாக நவம்பர்-27 அன்று துயிலுமில்லங்களிலும், மே-18 அன்று முள்ளிவாய்க்காலிலும் நினைவு கூருவார்கள். கடந்தவருடம் உங்களுடைய ஆட்சியில் தடைஇல்லாமல் உணர்வுபூர்வமாக நவம்பர் 27 நாளினை நிம்மதியாக நினைவு கூர்ந்தார்கள். துயிலுமில்லங்கள் சிலவற்றில் இராணுவத்தினர் இருக்கின்றார்கள். இராணவத்தினர் எண்ணிக்கையும் வடக்கு, கிழக்கில் அதிகமாகவும், முல்லைத்தீவில் இன்னும் அதிகமாகவும் இரண்டு மக்களுக்கு ஒருபடையினர் என்று உள்ளதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். மக்கள் தங்களுடைய உறவுகளை எண்ணி நினைத்து, ஒருசொட்டுக்கண்ணீர் சிந்தி, தமது மனத்தை ஆறுதல் படுத்துவதற்கு, இராணுவம் அத்துமீறி கையகப்படுத்திவைத்துள்ள முள்ளியவளை, அளம்பில், தேராவில்,ஈச்சங்குளம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கிலுள்ள இன்னும்சில துயிலுமில்லங்களையும் விடுவியுங்கள். வடக்கு, கிழக்கு தமிழ்மக்களின் சார்பாக இந்தக் கோரிக்கையினை முன்வைப்பதாகவும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=315293
  21. பாசிக்குடாவில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை செய்திகள் மட்டக்களப்பு பாசிக்குடாவில் ஹோட்டல் என்ற பெயரில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு, பெண் முகாமையாளர் உட்பட மூன்று பெண்களை நேற்று (07) மாலை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாசிக்குடா பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்தினவின் ஆலோசனைப்படி, பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதற்காக, அவர்கள் முதலில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து, அனுமதி பெற்ற பின்னர், சம்பவ தினமான வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் விடுதியை முற்றுகையிட்டனர். முற்றுகையின் போது, விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியை நிர்வகித்த பெண் முகாமையாளர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cm7zhp5zc0000d9o2zdvs4xxx
  22. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் குழு செய்திகள் யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழு நேற்று (7) காலை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினரே சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டனர். குறித்த சீமெந்து தொழிற்சாலை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு கையளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் குழுவினரின் குறித்த விஜயம் அமைந்துள்ளது. இதன்போது, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா , யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டனர். அத்துடன் குறித்த குழுவினர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் அதன் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தது தேவைப்பாடுகள் பற்றி ஆராய்ந்தனர். https://adaderanatamil.lk/news/cm7zq2s9m0006d9o2hzf1ctw6
  23. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1kcsdXNbmjH_DgikjBBctvJFH2ulbAnjaEcdBUmVBdxI/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 218 குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR எதிர் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK எதிர் RCB 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC எதிர் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS எதிர் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB எதிர் RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT எதிர் LSG 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI எதிர் DC 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR எதிர் PBKS 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG எதிர் SRH கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) #2 - ? (3 புள்ளிகள்) #3 - ? (2 புள்ளிகள்) #4 - ? (1 புள்ளி) 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வியாழன் 20 மார்ச் 2025 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  24. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1kcsdXNbmjH_DgikjBBctvJFH2ulbAnjaEcdBUmVBdxI/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 218 குழுநிலைப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 25 மே 2025 அன்று ஏடென் கார்டன்ஸ் மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வியாழன் 20 மார்ச் 2025 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.