வணக்கம் வாத்தியார்......!
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே
உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே........!
---காதல் சடுகுடு---