வணக்கம் வாத்தியார்....!
பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதி வச்சாங்க, அவ பூமிபோல பூகம்பத்தால் அழிப்பதனாலா
பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்து வச்சாங்க, ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா...!
--- ஏமாந்தவன்---
வன்னியன் நீங்கள் முதல்நாளே வகுப்புக்குள் வாசலால வராமல் பின்னால சுவர் ஏறிக் குதித்து வந்து என்ன பாடம் நடக்குது என்று புரியாமல் முழிக்கக் கூடாது. மறைந்திருந்து பார்ப்பதெல்லாம் இங்கு ஒரு பிரச்சனையே இல்லை. பாராளமன்றக் கூட்டம் போல சும்மா ஜாலியா ஒரு வருகைப் பதிவேடு, அதோடு கூட ஒரு செய்தி. அப்புறம் நீங்கள் கன்டீனுக்குப் போகலாம், மெரீனாக்குப் போகலாம், அதுவும் போரடிச்சால் வெளிநடப்பும் செய்யலாம். ஆனால் அடுத்தநாள் அட்டன்சன் குடுக்க வேணும் அவ்வளவுதான்....!
வணக்கம் வாத்தியார்....!
ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தை என்ன, தேடிய செல்வம் என்ன, திரண்டதோர் சுற்றம் என்ன.
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன. வீடுவரை உறவு, வீதிவரை மனைவி ,
காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ...!
--- மேலே பார் கண்ணா ---
வணக்கம் வாத்தியார்...!
உயரத்தைக் குறைத்தால் இமயம் ஏது, துயரத்தைக் கழித்தால் வாழ்க்கை ஏது
மழைத்துளி எல்லாம் முத்துக்கள் ஆனால் மனிதர்கள் பருக குடிநீர் ஏது...!
--- தத்துவம் ---
வணக்கம் வாத்தியார்....!
நான் தூரத் தெரியும் வானம், நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் 25 வயதை ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய் ஓ..ஓ....
---காதலின் வலிமை ---
வணக்கம் வாத்தியார்...!
மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே அங்கு மங்கையில் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே நெஞ்சில் இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே....!
---- சுகம் ----