ஆண்டவா அதிகாலையிலேயே அக்கப் போராய்க் கிடக்கு...! என்றாலும் வ்ளக்கம் தரவேண்டியது என் கடமை....!
நீங்கள் காலச் சக்கரத்தில் கொஞ்சம் பின்நோக்கிப் போகனும் பிரதர்...!
அன்று 16 / 01 / 2016. எல்லோருக்கும் போல் எனக்கும் என் கணணிக்கும் நன்றாகத்தான் பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் தமிழரசுவிடம் இருந்து அந்தப் பொல்லாத செய்தி நிர்வாகத்துக்கு வருகின்றது. அது:
கடந்த இருநாட்களாக செய்திகளை இணைக்கும் போது அதில் உள்ள படங்கள் காணொளிகள் விடுபட்டு போகின்றன காரணம் புரியவில்லை . ஏன் அப்படி நடக்கின்றது ? ....!
யாரும் கவணிக்கவில்லைப் போல....! பின் நவீனனிடம் இருந்தும் அதே செய்தி. அதாவது:
இதுதான் எனது கேள்வியும் ....!
உடனடியாக நிர்வாகம் உசாராகிறது. மற்ற அதிகாரிகள் காட்டுக்கும், வீட்டுக்கும் ஓடிவிட திரு . மோகன் இந்தப் பிரச்சனையை மிகவும் சாதுரியமாகக் கையாளுகின்றார். உடனடியாக அவர்களின் பிரச்சனை சரி செய்யப்பட்டு " முன்னர் போலவே மீன்டும் படங்களை இணைக்க முடியும்" என்று அறிவிக்கின்றார். அவர்கள் நன்றியும் சொல்லிவிட்டுப் போகின்றார்கள்.
17/01/2016.
எனது கணணிக்கு காச்சல் பிடித்துக் கொள்கிறது. உடனே நான் தலைமைச் செயலகத்துக்கு தகவல் தருகின்றேன்.
எனக்கு யூ டியூப் பாடல்கள் இணைக்க முடியவில்லை மோகன்..! முன்பு நேற்றுவரை நன்றாக இருந்தது...!!
படங்கள் இணைக்க முடியுது....!
உடனே திரு. மோகனும்;
Youtube காணொலி சரியான முறையில் இயங்குகின்றதே. நீங்கள் நேரடியாக Youtube காணொலி முகவரியினை ஒட்டினால் போதுமானது. வேறு எதுவித code களும் இணைக்கத் தேவையில்லை.
என்று தகவல் அனுப்புகின்றார். நானும் அவர் கூறியபடி முயன்று பார்த்தும் முடியவில்லை. எனக்கு ஒரு சம்சயம் எனது கணணியில் கணக்கக் கிடக்கிற இந்தத் தொழில் நுட்பங்களை திருடி அவர்களுக்கு பகிர்ந்தளித்து விட்டாரோ என்று.இராமன் தவளையின்மேல் வில்லைப் போட்ட து போல் என்நிலை. நான்:
மோகன் , நீங்கள் இன்றைய பாடல்களில் பார்த்தால் தெரியும், நேற்று இன்றும் இணைத்த பாடல்கள் படம் வரவில்லை...!
திரு. மோகன்;இங்கு நீங்கள் youtube இணைப்பினுடன் மேலதிகமாக &feature=player_detailpage போன்றவை இணைபதே காண்பிக்காமைக்கு காரணம். ஒரு காணொலியினை இணைக்க விரும்பின் அந்தக் காணொலியின் கீழ் உள்ள share என்பதை அழுத்தி அதில் உள்ள இணைப்பினைப் பிரதி செய்து இங்கு ஒட்டினால் போதுமானதும் அதுவே சரியாக முறையுமாகும்.
நானும் youtupe பைத் தவிர மற்ற அத்தனையையும் அழித்து அழித்து இணைத்தும் முடியவில்லை.
மனசாட்சி; சுவி உன்னைவிடத் தமிழரசுக்கும் நவீனனுக்கும்தான் இது முக்கியம். அவர்கள்தான் நிறைய விடயங்களைத் தருகின்றவர்கள்.உன்ர நச்சரிப்பால கிண்டிக் கிளறப்போய் அவர்கள் சிரமப்படக் கூடாது என்று ரொனால்டோவுக்கு கோலைத் தானம் செய்த ஆல்பார்ட் பான்ட்ரா போல் ஒரு சிறு செய்தி அனுப்பிவிட்டு இருந்து விட்டேன். (பின் சில பாடல்கள் இணைக்க வருகுது).
நான்: நன்றி மோகன்...! கொஞ்சம் இடிக்குதுதான் என்றாலும் நான் திருந்திடுவன்...!
இப்ப சும்மா வந்த ஸ்மைலியும் வராமல் ஒரே சுத்தாய்ச் சுத்துது....! ( இதில கூட அதைப் போட முடியவில்லை.)