Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. ட்ரம்பிற்கு மூளையில் நிரந்தரமாகத் தங்கி விட்ட சில விடயங்கள் இருக்கின்றன, அவற்றுள் ஒன்று இந்த "காட்டுத் தீ வராமல் இருக்க, காட்டின் நிலத்தைக் கூட்ட வேண்டும்!" என்ற ஐடியா. ஒரு தும்புத் தடியால் தன் வீட்டையே கூட்டியிருக்காத ட்ரம்பிற்கு கலிபோர்னியா, ஒறிகன் பகுதிகளின் அடர்ந்த மலைக்காடுகளைக் கூட்டிப் பெருக்குவது எவ்வளவு செலவு பிடித்த வேலை எனத் தெரியாமல் இருப்பது அதிசயமில்லை😂. எங்கேயோ சிறிய ஐரோப்பிய நாட்டில், குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் மலைக் காடுகளை அவர்கள் கூட்டிப் பெருக்குவதைக் கண்டு விட்டுத் தான் அலட்டிக் கொண்டு திரிகிறார்!
  2. ட்ரம்ப் மீது 34 நியூ யோர்க் மாநில மோச (felony) குற்றங்கள் நிரூபிக்கப் பட்டன. வர்த்தக ஆவணங்களை பொய்யாக மாற்றி எழுதிய குற்றச் சாட்டு. இது நியூ யோர்க் மாநிலச் சட்டப் படி Class "E" non-violent felony. இப்படி ஒரு மோசடி செய்தால் "0" முதல் 7 வருடங்கள் வரை சிறை. 34 மோசடிகள் என்பதால், நிச்சயம் சிறை சாதாரண ஒருவருக்குக் கிடைத்திருக்கும். ட்ரம்ப் என்பதால் "0" வருடங்கள் சிறை. ஆனால், நீதித் துறை சும்மா விட்டு விடவில்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ட்ரம்ப் மீண்டும் மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபணமானால், முன்னர் குற்றம் செய்தவர் (Non-violent Predicate) என்ற அடிப்படையில் மீண்டும் தீட்டுவார்கள்😂!
  3. ஆம், 2010 இல் பிறந்தவை Gen alpha! என் பிள்ளையின் தலைமுறை. ஏராளமான செல் போன் செயலிகளில் வீட்டில் இருக்கும் வயசாளிகளை விட அதிக பரிச்சயமுடையவர், இதனால் சில சமயங்களில் என் தொழில் நுட்ப ஆலோசகர்😂.
  4. எனக்கு தனிப்பட நட்டம் கிடையாது (ஏனெனில் நான் எதிலும் முதல் போட்டு விட்டுக் காக்திருக்கும் ஆளல்ல😂). ஆனால், எங்கள் இனத்தின் மைய அடையாளமான தமிழ் மொழியின் எதிரிகளைக் கொஞ்சம் பார்ப்போமா? 'பேச்சுக்கு "ஸ்" போட்டு ஸ்பீச் வந்தது' என்று கைதட்டலுக்காக சீமான் லூசுத் தனமாக பேசியதால் தமிழ் பெருமை பெற்று விட்டது என்கிறீர்களா? உண்மையான மொழி ஆய்வாளர்கள் தமிழுக்கு வழங்காத பெருமையை சீமான் வளர்த்து வரும் போலி மொழி ஆர்வலர்கள் வழங்கிய ஒரு உதாரணமாவது இருக்கா உங்களிடம்? 2010 இல் இருந்து சீமான் தம்பிகளின் யூ ரியூப், சமூக வலைப் பதிவுகளில் தமிழ் மொழிப் பாவனை எப்படி இருக்கிறதென அவதானித்தீர்களா? சிறு குழந்தைகளைக் கூட மரியாதையோடு அழைக்கும் பாரம்பரியத்தில் வந்த ஈழத்தமிழர்களிடையே இருந்து வந்து சீமான் தம்பிகளாக மாறி நிற்கும் நபர்களிடம் இன்று என்ன மாதிரியான உரையாடல் பண்பு இருக்கிறது? "செருப்பால் அடித்தார்", "ஓட விட்டு அடித்தார்", "இருக்க வைத்து அடித்தார்" போன்ற சாக்கடை மட்டத்திற்கு தமிழைக் கொண்டு சென்ற போது உங்கள் தமிழுக்கு சீமான் "சேவையா" ஐயா செய்தார்😎? இதையெல்லாம் தமிழுணர்வு என்று நீங்கள் போற்றுவது, நீங்கள் ஒப்புக் கொண்டிருப்பது போல "முட்டாளாக" இருப்பதால் செய்யவில்லை - மாறாக உள் நோக்கோடு தான் செய்கிறீர்கள். 2026 வருகிறது, தேர்தல் வருகிறது. வழக்கம் போல "சல்லிக் காசு இல்லாமல் பிரச்சாரம் செய்து ஓட்டுக் கேட்க வேண்டிய" தேவை வந்திருக்கிறது சீமான் ரீமுக்கு. எனவே, உங்கள் போன்றோரை இப்படி உசுப்பேத்தி அவர் இலவச பிரச்சாரம் செய்வார். யாழில் இந்த இலவச சீமான் பிரச்சாரம் தொடர்ந்தால், என் எதிர்ப்பும் தொடர்ந்து இருக்கும்!
  5. சூசை அவர்கள் மட்டுமல்ல, ஏனைய தளபதிகளும், சில வன்னி அரசியல் தலைமைகளும் கூட இறுதி யுத்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்த பிரமுகர்கள், செயற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்று தான் நான் அறிந்தேன். ஆனால், சீமான் குழுவுக்கு மட்டும் தான் இந்த ரணகளத்திலும் சூசை அவர்களின் உரையாடலை ஒலிப்பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்திருக்கிறது என்றால், அவர்களின் உள்ளே இருந்தது உணர்வா அல்லது இலாப நட்டக் கணக்குப் போடும் மூளையா என்பதை சொந்தமாக மூளை இருக்கும் ஒருவர் யோசிப்பார். சீமான் அடிப்பொடிகள் யோசிக்க மாட்டார்கள் என்பது அதிசயமல்ல😂!
  6. புலவர், இந்தக் குப்பை வீடியோக்களை இணைத்து சேவர் இடத்தை வீணாக்காமல், உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். எப்பவும் பொய்களில் புரளும் சீமான் இப்பவும் அதையே செய்திருக்கிறார் என நினைக்கிறீர்களா?
  7. "படம் பார்" ரீமின் தில்லாலங்கடி வேலைகளுக்கு இலகுவாக "காதைக் கொடுத்து பூ வாங்கும்" ஆள் என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்😂. கீழே இதை தகவல் சரிபார்க்கும் ஒரு இணையத்தளம் சரி பார்த்த விபரம் இருக்கிறது! கண்டு களிப்படையுங்கள்! https://tamil.factcrescendo.com/factcheck-periyar-not-commented-sexually-in-11th-may-1953-edition-of-viduthalai/ NB: விடுதலை ஏடு இதழில் 1953 இல் இப்படியொரு வாக்கியத் தொடர் அச்சாகி இருக்காது என்பதற்கான இன்னொரு ஆதாரமும் வாக்கியத் தொடரின் ஒரு சொல்லில் இருக்கிறது. தமிழ், தமிழன் என்று புலம்பும் "பச்சைத்" தமிழர்களின் 😎 தமிழறிவை சோதிக்க நல்ல சந்தர்ப்பம்!
  8. அது "பிழைப்பிற்கு" அல்லவா? அதை நீங்கள் குறை சொல்லக் கூடாது! சீமான், சீமான் கட்சியினருக்கும் வாயும் வயிறும் இருக்குது தானே😂?
  9. இதன் உண்மைத் தன்மை என்ன? விடுதலை ஏடு என்ற இதழில் ஒரு அறிவுரையாக இதைக் கூறினாராமா அல்லது ஒரு பந்தியில் யாருக்கோ அவர்களின் காமம் பற்றிய கண்டனத்தைப் பதிவு செய்யும் போது இப்படி எழுதினாராமா? அனேகமாக இது "படம் பார், பாடம் படி" 😎 ரீமின் மீமை நம்பி சீமான் பேசியிருக்கிறாரென நினைக்கிறேன். இப்படி முன்னரும் நடந்திருக்கிறது.
  10. விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் நலமாக இருப்பாரென நம்புகிறேன். பகிடி என்னவென்றால், தாயகத்தில் இருக்கும் என் சொந்தக் குடும்ப உறவுகளுக்கு நான் அமெரிக்காவில் எங்கே வசிக்கிறேன் என திக்குத் திசை தெரியாது. ஆனாலும் இன்னும் ஒருவரும் ஒரு கோல் எடுத்து "நீ ஓகேயா?" எனக் கேட்கவில்லை. யாழ் மூலம் பழக்கமான ஏராளன் மட்டும் தான் பனிப்புயல் வந்த போனவாரமே "அண்ணை நீங்கள் ஓகேயா?" என்று செய்தி அனுப்பியிருந்தார். "சட்டை கிழிஞ்சாலும்" யாழில நிண்டு அடிபடுறது இதுக்காகத் தான்😂!
  11. இன்னும் குறைந்தது 4 வருடங்கள் பொறுக்க வேண்டும். ட்ரம்ப் ஆட்சியில் இலங்கை, தமிழர், இனப்படுகொலை, யுத்தக் குற்றம், எல்லாக் கோப்புகளும் அடியில் போய் விடும்! 4 வருடம் கழித்து ஆட்சி மாறினால் தூசி தட்டி எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இலங்கையில் இருப்போரே மறந்து கடந்து போய் விடுவர், பிறகேன் எடுப்பான்?
  12. 20 வருடங்கள் முன்பு வவுனியாவில் நடந்த சம்பவம், இது தான் உங்கள் விடயத்திலும் நடந்திருக்கிறது என நினைக்கிறேன். உள்ளூராட்சி சபையினர் மூலம் இலவச றேபிஸ் தடுப்பூசியை வீடுவீடாகக் சென்று நாய்களுக்குப் போட்டார்கள். சில நாட்களில், ஊசி போட்ட நாய்களில் றேபீஸ் போன்ற குணங்குறிகள் தோன்றி பல நாய்கள் இறந்தன. ஆனால், வந்தது றேபிஸ் அல்ல, சில குணங்களில் றேபிஸ் போலவே தென்படும் இன்னொரு வைரஸ் நோயான Distemper என்ற நோய். ஒரு தடவை பாவிக்க வேண்டிய (single use) ஊசியை, ஊழல்/அறிவின்மை காரணமாக, பல தடவைகள் பல நாய்களில் றேபிஸ் தடுப்பூசி போடப் பாவித்திருக்கிறார்கள். Distemper வைரஸ் ஊசி மூலம் தொற்றி நாய்களைக் கொன்று விட்டது. சிறிலங்காவில் றேபிஸ் தடுப்பூசிகளை நாடுவோர் பின்வரும் விடயங்களைக் கவனியுங்கள்: 1. றேபிஸ் தடுப்பூசி குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப் பட்டுப் பயன்படுத்தப் பட வேண்டும். சும்மா யாராவது வெளியே இருந்து எடுத்துத் தந்தால் கேட்டு உறுதிப் படுத்துங்கள். 2. ஊசியை நாயின் தொடையிலோ, முதுகில் இருக்கும் தோலிலோ போட வேண்டும். 3. ஊசி புதிதாக இருக்க வேண்டும். உங்கள் கண்கள் முன்னாலேயே புதிய ஊசியை பக்கெற்றில் இருந்து எடுக்கிறார்களா என்று கவனியுங்கள். பாவித்த பின் ஊசியை வீசுகிறார்களா என்றும் கவனியுங்கள். இவை தெளிவில்லா விட்டால், கேட்டு உறுதி செய்யுங்கள். 4. வசதி இருந்தால், மிருக வைத்திய அலுவலகத்திலேயே ஊசியைப் போட்டுக் கொள்ளுங்கள். அங்கே இருப்போர், அனேகமாக உள்ளூராட்சி சபை ஊழியர்களை விட நாயின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பர். 5. ஊசி போட்ட பின்னர் 2 நாட்களுக்கு நாயை அவதானியுங்கள். ஏதாவது வித்தியாசம் தெரிந்தால், மிருக வைத்தியரிடம் எடுத்துச் செல்லுங்கள்.
  13. அண்மையில் பெற்ற இரு அனுபவங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு முட்டாள் தலைமுறையை உருவாக்கி விடுமென்ற அச்சத்தை எனக்குத் தந்திருக்கிறது. 1. ஒரு மாணவர் ஆராய்ச்சி பழகுகிறேன் என்று வந்தார். ஆனால், வரவேண்டிய நாட்களில், நேரங்களில் வருவதில்லை. நானே அவர் சம்பந்தப் பட்ட வேலைகளை முடித்து விட்டு இருந்த போது புள்ளிகள் பெற கடைசி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய காலம் வந்தது. வேலை செய்யாமல் எப்படி அறிக்கை எழுதுவது? எனவே இரக்கப் பட்டு "ஒரு தியரிப் பேப்பர் எழுது, புள்ளிகள் தரலாம்" என்று சலுகை கொடுத்தேன். மாணவரின் அறிக்கை, கிடைக்க வேண்டிய இறுதி நாளில் வந்தது. ஒரு பிழையுமில்லாமல் திறமாக இருந்த அறிக்கை சந்தேகம் தரவே, 4 வெவ்வேறு AI detectors மூலம் சோதித்துப் பார்த்தேன். நான்கிலும் "இந்த ஆவணம் 98 முதல் 100 வீதம் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப் பட்டது" என்ற தீர்ப்பு வந்தது. அப்படியே அந்த தீர்ப்பை அவரது மேற்பார்வையாளருக்கு அனுப்பி விட்டு "இனி இங்கே வராதே" என்று துரத்தி விட்டேன். 2. சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்க முதல் குறைந்தது 2 பேர், துறை அனுபவம் இருப்போர் (peer reviewers) பரிசோதித்து பிரசுரிக்க தகுதியானதா என்று சோதிக்க வேண்டும். சீனாவில் இருந்து அப்படி அனுப்பப் பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை என்னிடம் பரிசீலிக்க அனுப்பி வைத்தார்கள். ஒரு இலக்கண, எழுத்துப் பிழை கூட இல்லாமல் இருந்த கட்டுரை சந்தேகம் தரவே, சஞ்சிகை இதை பரிசோதிக்க வேண்டுமெனக் கேட்டேன். சஞ்சிகையின் பரிசோதனையில், "80 முதல் 90 வீதம் செயற்கை நுண்ணறிவு எழுதிய கட்டுரை" என முடிவு வந்தது. என்னுடைய துறை/வேலைப் புலம் சாதாரண உலகத்தில் இருந்து ஒரு மூலையில் (niche) இருக்கலாம். ஆனால், இந்த துறையில் செயற்கை நுண்ணறிவை துஷ்பிரயோகம் செய்வதால் வரும் விளைவுகள் பெரும் எண்ணிக்கையானோருக்கு அநீதி விளைவிக்கும். உழைத்து எழுத வேண்டிய அறிக்கைகளை, இப்படி உழைக்காத சோம்பேறிகள் உரிமை கொண்டாட செயற்கை நுண்ணறிவு இலகுவாக வழி செய்திருக்கிறது. 10 வருடங்களில், பொதுவான சமூகத்தில் இதன் விளைவுகள் வெளிப்படும்.
  14. நன்றி இணையவன். இதைப் பற்றி நாளை என் அனுபவங்களை எழுதுகிறேன். ஆனால், சுருக்கமாக, Multilevel Marketing (MLM) எனப்படும் பிரமிட் மோசடி முறையின் ஒரு அங்கம் தான் இந்த Herbalife கம்பனி. வெவ்வேறு பெயர்களில் இவர்கள் வந்தாலும் வாலை மறைக்க மறந்து விடுவதால் உடனே பிடிபட்டு, மீண்டும் பெயரை மாற்ற வேண்டி வருகிறது😂.
  15. இப்படி சில விடயங்கள் நடந்திருக்கின்றன. மேலதிக தகவல்கள் ஏதாவது இருந்தால் தந்துதவுங்கள். 1. போட்டது விசர் நாய் தடுப்பூசியா அல்லது வேறெதும் நோய்களுக்கான தடுப்பூசியா? 2. ஊசியை தொடையில் போட்டார்களா அல்லது முதுகில் தோலை உயர்த்திப் போட்டார்களா? 3. மிருக வைத்தியரிடம் சென்று அங்கே இருந்தோர் ஊசி போட்டார்களா அல்லது உள்ளூராட்சி சபை, பிரதேச சபை ஊழியர்கள் வீட்டுக்கு வந்து ஊசி போட்டார்களா? 4. ஊசி போட்ட பின்னர் புத்தகத்தில் பதிந்த ஊசி தயாரிப்புக் கம்பனியின் விபரம் இருக்கிறதா? 5. இறப்பதற்கு முன் நாயின் கண்கள், மூக்கில் இருந்து ஏதாவது சுரப்புகள் வெளிவந்தனவா? அல்லது நாய் நடக்க இயலாமல் அவயவங்கள் செயலிழந்த நிலை இருந்ததா?
  16. எந்த அர்த்தத்தில் "றிஸ்க் எடுத்து ஜக்கம்மாவைச் சாப்பிட வேண்டியதில்லை" என்று எழுதியிருக்கிறேன் என்று விளங்கிக் கொள்ளப் பாருங்கள். இல்லை "கீரைக்கடை" சின்ட்றோம் காரணமாக எழுதுகிறீர்கள் என்றால் தனியே அலட்டிக் கொண்டிருங்கள்! நமக்கு முக்கியமான வேலை இருக்கிறது😎!
  17. அத்தியாவசிய உணவாக மரவள்ளிக் கிழங்கு இருந்த காலம் வடக்கில் பொருளாதாரத் தடை இருந்த காலம் அல்லவா? மற்றபடி அது அத்தியாவசிய உணவாக இருந்ததில்லை, மக்களும் றிஸ்க் இல்லாத அரிசிச் சோற்றை எடுத்துக் கொண்டார்கள். நீங்கள் "எதையும்" சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள், உரிமை இருக்கிறது உங்களுக்கு😂!
  18. கட்டாக்காலி நாய்களை ஒழிப்பது பற்றி ஏன் பேசத் தயங்குகிறார்கள் என விளங்கவில்லை. வளர்ப்பு நாய்க்கு தடுப்பூசி போட்டுப் பேணுவது ஓரளவுக்குத் தான் மனிதர்களுக்கு றேபிஸ் தொற்றாமல் கட்டுப் படுத்தும். யாரும் கவனிக்காத கட்டாக்காலி (stray) நாய்கள் அல்லது ஊரே சேர்ந்து உணவு போட்டு வளர்க்கும் சமுதாய (community) நாய்கள் ஆகியவை இருக்கும் வரை இலங்கையில் றேபிசை கட்டுப் படுத்த முடியாது. மனித நடவடிக்கைகளும், சமுதாய நாய்கள் உருவாக ஒரு காரணம். தெருவோரங்களில் குப்பைகள், உணவுகளை வீசுவது முற்றாகத் தடுக்கப் பட வேண்டும். ஒரு சின்ன நாட்டையும், படித்த மில்லியன் கணக்கான மக்களையும் வைத்துக் கொண்டு றேபிசைக் கட்டுப் படுத்த இயலாமல் இருப்பது இலங்கைக்கு வெக்கக் கேடான ஒரு விடயம்!
  19. ஹிகாமா (ஜக்கம்மா😎) வை ருசிப்பதில் தவறில்லை! தோலைக் கவனமாக நீக்கிச் சாப்பிட வேண்டிய "இன்னொரு கிழங்கு", அவ்வளவு தான். (தோலை நீக்கா விட்டாலோ அல்லது ஏனைய தாவரப் பகுதிகளை அதிகளவில் உட்கொண்டாலோ, கிட்டத்தட்ட 'சயனைட்" சாப்பிடுவது போல ஒக்சிசன் இல்லாமல் மரணிக்க வேண்டி வரும்) ஆனால்: "இனுலின் இருப்பதால் குடல் பக்ரீரியாக்களுக்கு நல்லது", அல்லது "ஒட்சியேற்ற எதிரிகள் இருப்பதால் பல நோய்களைத் தவிர்க்க உதவும்" - இந்தக் கூற்றுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. உண்மையில், இனுலின் குடல் பக்ரீரியாக்களை மாற்றுகிறது என்று செய்த ஆய்வுகள் பல போலியான, விஞ்ஞான முறைமையற்ற ஆய்வுகள் என நிரூபித்திருக்கிறார்கள். குடலில் இருக்கும் பக்ரீரியாக்கள் தளைக்க வேண்டுமெனில், எந்த தாவர நார்ச்சத்துடைய உணவையும் எடுத்துக் கொள்ளலாம், "றிஸ்க்" எடுத்து ஜக்கம்மாவைச் சாப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை. Steven Gundry யின் போலி விஞ்ஞானத் தகவல்கள் பற்றியும் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். "The Plant Paradox" என்று இவர் எழுதிய புத்தகம் சக்கை போடு போட்டது விற்பனையில். பின்னர் மருத்துவ உலகம் புத்தகத்தில் மேற்கோள் காட்டப் பட்ட ஆய்வுகளைத் தேடிய போது, அப்படி ஒன்றையும் காணவில்லை. அப்படியான ஆய்வுகளே நிகழ்ந்திருக்கவில்லை. ஒப்ரா அறிமுகம் செய்த Dr. Oz போலவே, தனக்குத் தெரியாத விடயங்களை வியாபார நோக்கத்தில் "அற்புத நிவாரணிகளாக" பிரபலப்படுத்தி காசு பார்க்கும் இன்னொரு மருத்துவர் இவர்!
  20. செய்தியில் இருக்கும் தகவல்கள் சரியானவையல்ல. HMPV என்பது இன்புழுவன்சா, RSV போன்ற ஏனைய வைரசுகள் அதிகம் உலாவரும் குளிர்காலங்களில் சேர்ந்து வரும் ஒரு சாதாரண வைரஸ். சாதாரண சளிக்காய்ச்சலைத் தரும் இந்த வைரஸ் குளிர்காலம் நிலவும் சீனாவில் மட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பாவிலும் வருடாவருடம் நோயை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, இந்தியா உட்பட்ட பல தெற்காசிய , தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்கனவே இருக்கும் வைரஸ். இது முதன் முறையாக இப்போது கண்டறியப் பட்டதல்ல!
  21. "பிரபல்யம்" என்பது சரியானது என்று அர்த்தமல்ல. இங்கே இணைக்கப் படும் வரை நான் சுட்டிக் காட்டக் காரணங்களில்லை.
  22. ஒரு பழைய வில்லுப் பாட்டு நகைச்சுவை (தங்கவேலுவோ யாரோ நடித்த படத்தில் இருந்து) 80 களில் ஒலிநாடாவாக உலாவந்தது. அதில் ஹீரோவைப் பற்றி (ஹிற்லர் மீசையுடன் பிறந்தார் எங்கள் ஹீரோ....) இப்படிச் சொல்வார்: "ஒரு கையில் பென்சிலோடும், மறுகையில் அழிறப்பரோடும் பிறந்தவர், உடனே அழிறப்பரைத் துக்கிக் கடாசி விட்டாராம். ஏன் வீசினார்? தப்பா எழுதினாத் தானே அழிறப்பர் தேவை? ஹீரோ தப்பாவே எழுதமாட்டாரே??"😎
  23. கஜேந்திரகுமாரின் கட்சி பற்றி, இவையெல்லாம் ஏற்கனவே கேட்கப் பட்ட கேள்விகள் தான், பதில்கள் தான் அவரது தீவிர ரசிகர்கள் இன்னும் தரவில்லை. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடந்தால் புல "ரொய்லெற்" ஊடகங்கள் மூன்றில் உடனே மூன்று நாட்களுக்கு அது தான் செய்தி. நான் அந்த செய்திகளைப் பார்த்த படி யோசிப்பது, கஜேந்திரகுமாரின் கட்சியின் மத்திய குழுவில் எத்தனை பேர்? கடைசியாக மத்திய குழுக்கூட்டம் எப்ப நடந்தது? எத்தனை பேர் வந்தார்களாம்? மணியை விலக்கிய போது அந்த முடிவுக்கு மத்திய குழுவில் அங்கீகாரம் கிடைத்ததாமா?" இப்படி முடிவில்லாக் கேள்விகள்..😂
  24. நல்வரவு ஜெற் தமிழ்! அறிமுகமெதுவும் இல்லாமலே பதிவிட ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்கள் செய்தித் தளம் பார்த்தேன். அங்கே மருத்துவப் பகுதியில் ஆதாரமில்லாத தகவல்களை வைத்து "இயற்கை மருத்துவக்" கட்டுரைகள் இருப்பதைக் கவனித்தேன். யாழில் அவற்றை இணைத்து போலி மருத்துவங்களைப் பரப்ப மாட்டீர்களென நம்புகிறேன்!
  25. உங்கள் இந்த இணைப்பிலேயே இருக்கிறதே? போன ஆண்டை விட சனத்தொகை அதிகரிப்பு 0.9% குறைவாக இருந்திருக்கிறது 2024 இல். நீங்கள் பிறப்பு வீதம் உலகில் அதிகரிப்பதாக அல்லவா குறிபிட்டீர்கள்? 97% நாடுகளில் பிறப்பு வீதம் குறைந்து வருகிறது - இதன் காரணமாக உலக பிறப்பு வீதமும் குறைந்து வருகிறது. இதை நான் தந்த IHM இணைப்பிலேயே தெளிவாகக் காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.