Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. அது சரி, யார் இது "சுத்திரன்"? சுமந்திரன் லவ்வர்சின் PSTSD நோய்க்கு தற்காலிக மருந்தாகக் கொண்டுவரப் பட்டிருக்கும் ஏதாவது புதிய பாத்திரமா😂?
  2. தொடர்ந்து அவர் தேசியப் பட்டியலில் (பின் கதவால்) மட்டும் வந்து ஒன்றும் பேசாமல் "பின் குசினியில் வேலை" செய்திருக்கலாம் என்கிறீர்களா😂? ஐயா, 2 முறை தேர்தல் வென்றதையே சகித்துக் கொள்ளாமல் பொங்கிய பட்டாசு ரீம் தாங்களே போட்டுத் தள்ளியிருப்பர் சுமந்திரனை. ஆனால், இந்த சுமந்திரன் மீதான இவர்களின் ஒற்றை வன்மம் எப்படி இவர்களைத் தேர்ந்தெடுத்த குருடர்களாக - selective blind மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா? 1. ஈழவேந்தனை புலிகள் தேசியப் பட்டியல் (பின் கதவு) மூலம் வர வைத்தனர். நல்ல பேச்சாளர். லீவு போட்டு விட்டு ஊர் சுற்ற ஆரம்பித்து இறுதியில் அதனாலேயே பதவி பறி போனது. பதவி பறி போகும் தறுவாயிலும் தன் பா.உ குடியிருப்பு சலுகையை வைத்திருக்கப் போராடியவர் அமரர் ஈழவேந்தன். இதையெல்லாம் மறந்து விட்டு, அவருக்கு "தேசியப் புகழ் மாலை" சாத்தியவர்கள் இருக்கிறார்கள். 2. நம் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் முதல் முறை பா. உ ஆனது புலிகள் கிழக்கில் தெரிவான ஒரு கூட்டமைப்பு பா. உவை ஆயுத முனையில் மிரட்டி பதவி விலக வைத்தமையால் வந்த வெற்றிடத்திற்கு.இதைப் பின் கதவென்று கூட சொல்ல முடியாது, "கூரையைப் பிரிச்சு" இறங்கியதாகத் தான் சொல்ல முடியும்😂! இதுவும் கண்ணுக்குத் தெரியாமல் தேர்ந்த குருடர்களாக இருக்கிறார்கள்!
  3. அரச எம்பி?? இது சரியான தகவலல்ல என நினைக்கிறேன். நீலன் சந்திரிக்காவின் நண்பர், ஆனால் அவரை தேசியப் பட்டியல் மூலம் தீர்வுத்திட்டத்திற்காகவே உள்ளே கொண்டு வந்தது த.வி.கூ என்று தான் நான் அறிந்திருக்கிறேன். த.வி.கூ வின் உள்ளேயும், வெளியே பல தமிழ் தேசியர்களிடையேயும் வரவேற்பு தன் முயற்சிக்கு இல்லாமையால் தான் அவர் பதவி விலகினார்! தேசியப் பட்டியலை தமிழரசுக் கட்சி/த.வி.கூ இவ்வாறு துறை சார் நிபுணர்களை உள்ளே கொண்டு வரத் தான் பாவித்து வந்திருக்கிறது. அப்படி உள்ளே கொண்டு வரப் பட்டவர் தான் சுமந்திரன். "ரணில் மூலம் திணிக்கப் பட்டார்" என்ற ஆதாரமில்லாத பொய்களைச் சொல்லி தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக் கொள்கிறார்கள் சுமந்திரன் லவ்வர்ஸ் சிலர்😂.
  4. "யார் பெற்றார்கள்?" என்றால் நபர்களின் பெயர்கள் அல்லவா வர வேண்டும்? இது மாவட்டங்களின் பெயர்களோடு நின்றிருக்கிறது. கிழக்கு நகரொன்றில் இருந்த மதுபானசாலை சாணக்கியனுடையது என்று யாழ் களத்தில் "நம்பிக்கையான தகவல்களின் மூலமான" தமிழ்சிறி😎 சொன்ன நினைவு! அப்ப சாணக்கியனே துணிந்து தன்னைத் துகிலிருந்து கொண்டிருக்கிறார் போல இருக்கிறதே😂?
  5. (இந்தப் பதிவுக்கு மட்டுமல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து எழுதுகிறேன்) சுமந்திரன் அரசியலுக்கு வரமுதலும் புலி ஆதரவாளர் அல்ல, வந்த பின்னரும் ஆதரவாளர் அல்ல. இதை வெளிப்படையாகச் சொன்னதை நான் மட்டுமல்ல, தாயக வாக்காளர்கள் பலர் நேர்மையாகத் தான் கண்டிருக்கிறார்கள். நீங்கள் "அமசடக்கியாக" இருந்திருந்தால் அவர் தப்பியிருப்பார் என்கிறீர்கள். இந்தக் கருத்து எங்கள் தமிழ் சமூகம் பற்றிய ஒரு சங்கடமான தகவலைத் தான் சொல்கிறது, சுமந்திரனைப் பற்றியல்ல. In the long run, யாருமே இழக்க முடியாத அப்பாடக்கர் அல்ல என்பது உண்மை. ஆனால், 90 களில் இருந்த வாகன இறக்குமதி, சொத்து சேர்ப்பு, முகாமில் இருந்து ஆட்களை எடுத்து விடக் காசு என்று வலம் வந்த தமிழ் பா.உக்களில் இருந்து வித்தியாசமான பா. உ வாக இருந்த இருவர் சுமந்திரனும் , சம்பந்தரும். இதே போலத் தான் நீலனும், தேசியப் பட்டியலில் கொண்டு வரப் பட்டு தீர்வுத் திட்டத்தில் மட்டுமே குறியாக இருந்தார். ஒரு ஆண்டினுள், "கூட்டம் போட்டு அலட்ட மட்டுமே இவர்கள் லாயக்கு" என வெறுத்துப் போய் பதவி விலகினார். பதவி விலகிய பின்னரும் பாதுகாப்பு வழங்கப் பட்ட நிலையில் தற்கொலைக் குண்டு தாரி மூலம் கொல்லப் பட்டார் (இது சிலருக்கு கிச்சு கிச்சு மூட்டும், நான் பொறுப்பல்ல!😎) கல்விச் சான்றிதழ் தீர்வு முயற்சிகளுக்குக் கட்டாயமல்ல. கல்விச் சான்றிதழும், அதனோடு இணைந்து வரும் சில திறன்களும் நீங்கள் தேடும் "இராஜதந்திரி, பேச்சு வார்த்தையாளர்" ஆகியோருக்கு முக்கியம் என நினைக்கிறேன். வெளிநாட்டு/உள்நாட்டுப் பிரதிநிதிகளோடு இருக்கும் பரிச்சயமே இந்த அரசியல் பேச்சு வார்த்தைகளில் சில துரும்புகளை நகர்த்த உதவக் கூடிய ஆயுதமாகக் கூடும். ஏனைய நாடுகளின் வரலாற்றில் இது நடந்திருக்கிறது. எனவே தான் "பிள்ளையைத் தொட்டிலோடு எறியாமல்" சுமந்திரனை இந்த முறையும் பா.உவாக தமிழர்கள் வைத்திருக்க வேண்டுமென்று நான் உட்பட பல தாயக மக்களும் விரும்பினர். ஆனால், "பேசுவது பிடிக்கவில்லை, கோர்ட் சூட் போடுவது பிடிக்கவில்லை, அவரது ஆங்கிலம் பிடிக்கவில்லை" என்று சும்மா அலட்டிய கோஷ்டிகள் வாக்குகளையும் குறைத்திருக்கிறார்கள். இனி வேட்டி சட்டையோடு போய் சிறிதரனா பேசுவார்? பொன்னரை எந்த தூதரகமும் ரீ பார்ட்டிக்குக் கூட அழைக்காதென நினைக்கிறேன். எனவே, மக்கள் தீர்ப்பிற்கு விளைவுகள் இருக்கும். ஒரு விளைவு இது. சுமந்திரன் காதையை அப்படியே அடியோடு அழித்து விட்டு, புதிதாக துவங்க வேண்டும். பிழைக்க வழியில்லாமல் அரசியலுக்கு வந்து ஒழித்திருந்தவர் அல்ல சுமந்திரன். அவர் இனித் தன் அடுத்த அத்தியாயத்தை தமிழ் அரசியலுக்குள் இல்லாமல் வெளியே ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
  6. என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து, டிபிஸ் சொல்வது உண்மையாக இருந்தால், ஊரில் இருந்த சிலரை வைத்துக் கொலை முயற்சி கூடச் செய்திருக்கிறார்கள். மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும். நேற்று ஒரு திரியில், ஏராளமான தமிழ் அரசியல் அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள் என்று தான் நம்புகிறேன். வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration முடித்த அர்ச்சுனா போன்றோர் தான் இனி "அரசியல் அறிஞர்களாக" உழைக்க வேண்டும்😂!
  7. இதில் எழுதி ஒரு பயனுமில்லையானாலும், உங்கள் புலத்தமிழர் ஒற்றுமை பற்றிய வியாக்கியானம் கொஞ்சம் திசை மாறிப் போகும் போது சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த தீவிரமான புலிகளின் ஆதரவாளர்களை விலக்கி விட்டு புலத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மையாக இருக்கலாம் (செய்வது என்ன, பேசினாலே குடும்பம், பிள்ளை குட்டிகளை இழுத்துப் பேசி நமக்கேன் வம்பு என பேசாமல் விலகிப் போக வைத்து விடுவர்😂). இத்தகைய தீவிரவாத போக்கு என்பது புலிகள் மீதான அதீத பற்றினால் அன்றி ஒரு சுய இருத்தல் பற்றிய பயத்தினால் வருகிறது என ஐலண்ட் சொல்வது என் அனுபவத்தில் சரியாகப் படுகிறது. இதனால் தான் தீவிர தமிழ் தேசியர்கள் என்றாலே பலர் விலகிச் செல்கிறார்கள். இப்படியானவர்களை வைத்துக் கொண்டு ஒரு சுயாட்சி கிடைத்தால் கூட, அந்த ஆட்சி சுதந்திரம் பெற்ற எரித்திரியாவில் தற்போது நடக்கும் கடும்போக்கு/பிற்போக்கு வாத ஆட்சியாகத் தான் இருக்கும் என்ற அச்சமும் எனக்கு தனிப்பட இருக்கிறது. எனவே, என்னைப் பொறுத்தவரை தீவிர தமிழ் தேசியர்களின் பங்கு தாயக அரசியலிலும் சரி, புலத் தமிழர் பரப்பிலும் சரி குறைக்கப் பட வேண்டும். இது கறள் தீர்க்கும் மன நிலை அல்ல, எதிர்காலம் பற்றிய அச்சமும், அதை இப்பவே களையும் முயற்சியும் என்று தான் நான் கருதுகிறேன்.
  8. ட்ரம்ப் உலக அரங்கிலும், உள்நாட்டிலும் விசர்க் கூத்தாடிய போது ஆபத்பாந்தவனாக வந்து நம்பிக்கை தந்த பைடன் இப்படி சராசரி அரசியல் வாதியாக அரங்கிலிருந்து நீங்குகிறார். 4 வருடத்தில் அல்ல, இரண்டு வருடங்களில் வரும் இடைத்தேர்தலில் கூட நீலக் கட்சி சோபிக்காத வகையில் இந்தச் செயல்கள் விளைவைக் காட்டும்.
  9. நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள். புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு, நீண்டகாலத் தீர்வு பற்றியெல்லாம் அல்ல. இவர்களது தொடர்ந்த இருப்பு தொடர்பானது. நான் இப்படி அபிப்பிராயப் படக் காரணம், அவர்களே பல தடவைகள் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது போல, அவர்களுக்கு ஒரே தீர்வு தான். அந்த தீர்வைத் தவிர மிகுதி எதையும் ஆராயவோ, பேசவோ முற்படும் தரப்புகள் எல்லாம் துரோகிகள். இந்த வரட்டுக் கொள்கையினால், போர்க்காலத்தின் பின்னர் கூட தாயக மக்களை இங்கே இருந்த படி ரிமோட் கொன்ட்ரோல் வழி கட்டுப் படுத்த முயன்றனர். இப்போது "சிறிலங்கா" என்ற ஒரே சாக்கில் அனுர போட்டு அடிக்க முயல்வது போல, எங்கள் தீவிர தேசியர்களும் மிதவாதம், இணக்கம், என்று பேசிய அனைவரையுமே "துரோகி" என்ற ஒரே சாக்கில் போட்டு இன்றும் கூட அடித்து வருகின்றனர். இதைச் செய்ய, ஒன்று இவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும், அல்லது "செத்த வீடானாலும் நான் தான் பிணமாக இருக்க வேணும்" என்று நினைக்கும் சுயநலமிகளாக இருக்க வேண்டும். இவர்கள் முட்டாள்கள் அல்ல, நன்கு தம் வாழ்க்கை முறைக்குப் பழக்கப் பட்டு விட்ட சுயநலமிகளாகத் தான் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். இவர்களுக்கே பேரச்சம். மக்களில் அக்கறை கொண்டோர் "எது வரை போகிறதெனப் பார்க்கலாம்" என்று இருக்கிறார்கள். யாழ் களத்திலே இந்த இரு வகையான போக்கு நன்கு வெளிப்படுவதைக் காண்கிறேன்.
  10. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் வாக்குகளைப் பிரித்து விட்டால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதகமான NPP வென்று விடலாம் என்று நான் சொன்ன போது, "அவர்கள் ஆட்சிக்கு வந்து பொருளாதாரம் சரிந்தால் நமக்கென்ன? இப்போது இருப்போரை விட அவர்கள் மோசமானவர்களா நாம் எதையும் இழப்பதற்கு?" என்று கேட்ட ரஞ்சித்தே இன்று ஜேவிபி யின் ஆபத்துகளைப் பற்றித் தேர்வு செய்த கட்டுரைகளை இணைப்பது காலம் எவ்வளவு மாறி விட்டதெனக் காட்டுகிறது. ஏனெனில், புலத்தில் இருக்கும் தீவிர தமிழ் தேசியர்கள் பலர் எதிர்பார்க்காத ஒரு புதிய வகையான ஆபத்து அனுர அரசிடமிருந்து வந்திருக்கிறது. தமிழ் மக்களின் தேர்ந்தெடுத்த சில பிரச்சினைகளை அவர்கள் உணரக் கூடிய வகையில் தீர்ப்பதன் மூலம், அனுர அரசை நோக்கி ஒரு soft corner ஐ உருவாக்குவது. அந்த நட்புணர்வை வைத்து தீவிர தேசியம் மட்டுமல்ல, தீ கக்காத தேசிய உணர்வின் பக்கமிருந்து கூட தமிழர்களை இழுத்தெடுப்பது, என இந்த மென் முயற்சிகள் தான் அந்த ஆபத்து. வடமாராட்சியில், யுத்த காலத்தில் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவர் இப்படித் தான் மக்கள் "அங்கிள்" என்று அழைக்கக் கூடிய வகையில் மக்களோடு நட்பாக இருந்தாராம். "இதயத்தை வெல்லுதல்" என்ற புதிய அணுகுமுறையைக் கைக்கொண்ட அந்த சிங்கள அதிகாரி மாற்றலாகிச் செல்லும் வழியில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப் பட்டார். தமிழ் மக்களின் சில பிரச்சினைகளை கொஞ்சம் பரிவோடு ஒரு சிங்களத் தரப்பு அணுகினாலே தமிழ் மக்களின் தரப்பில் இருக்கும் தீவிர தரப்பிற்கு தங்கள் இருப்புப் பறிபோய் விடுமென்ற அச்சம் வந்து விடும். இந்த அச்சத்தையும், படபடப்பையும் மேலே இருக்கும் கட்டுரையிலும், யாழுக்கு வெளியே கேள்விப் படும் உரையாடல்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, நேற்று உள்ளூர் மாவீரர் தினம் இங்கே. இந்த தேர்தலைப் பற்றியும், தமக்கு உவப்பானோர் பலர் ஓரங்கட்டப் பட்டதைப் பற்றியும் விரக்தியோடு பேசினார்கள். அச்சம் அப்படியே வெளித்தெரிந்தது - palpable fear!
  11. இந்த தொகை குடும்பத்தினர் தெரிவு செய்த பெட்டி வகை, மலர்கள், உடை, வாகன வகை என்பவற்றைப் பொறுத்தது என நினைக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் அந்திம கால ஏற்பாடுகளை வவுனியாவில் என் மருமகனின் உதவியோடு நான் செய்த போது கிடைத்த அனுபவத்தின் படி, இந்தத் தொகை பெரிதாகத் தெரியவில்லை. இந்த ஏற்பாடுகளைச் செய்யும் அந்திம சேவையினர், கறக்க வேண்டிய சகல வழிகளிலும் குடும்பத்தினரிடம் பணம் கறந்து விட்டே விடுவர். ஒரு பக்கம் நேரடியாக சேவைகளுக்குரிய பணத்தை வாங்கிக் கொள்வர். மறுபக்கத்தில் அமரர் ஊர்தி ஓட்டுபவர், உடலை தயார் செய்தவர், மலர் விநியோகம் செய்பவர், என எல்லோரும் தலையைச் சொறிந்து கொண்டு, அருகில் வந்து நின்று மேலதிக tips பணம் வாங்கிப் போவர். வாழ்க்கை வெறுத்து விடும்😂!
  12. ஆம், சிறு நீரக செயலிழப்பு, இரத்த அழுத்த மாற்றம் என்பன இதைத் தான் காட்டுகின்றன. இந்த இடத்தில் கட்டுப் பாடற்ற வகையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (antibiotics) தாயகத்தில் பாவிக்கப் படுவதையும் சுட்டிக் காட்ட வேண்டும். இதனால், சாதாரணமாக இது போன்ற நோய்களில் பயன்படுத்தப் படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்புச் சக்தி (antibiotic resistance) உருவாகி, அந்த மருந்துகள் வேலை செய்யாமல் போகும் நிலை இருக்கிறது.
  13. மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்: 1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு. 2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை. 3. CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே, CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை. இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம். தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம். இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.
  14. தன்னைப் பற்றி இன்னொருவர் செய்த ஆய்வை அப்படியே அர்ச்சுனா தன் முகநூலில் பதிந்திருக்கிறார். அர்ச்சுனா அவர்களின் பிரச்சினை, நான் அறிந்த வரையில், அவரது கட்டுப் பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு பிரச்சினை. இந்த சவால்களோடு அவர் க.பொ.த உயரதரம் உயிரியல் பிரிவில் சித்தி பெற்று, மருத்துவ பீடம் சென்று அங்கேயும் பல பின்னடைவுகளுடன் மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவராக வெளிவந்தமை, அவரது தனிப்பட்ட சாதனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தன் சொந்த வாழ்க்கையில் காட்டிய அதே கட்டுப் பாட்டையும் ஒர்மத்தையும் பொது வாழ்க்கையில் காட்ட இயலாமல் தடுமாறுகிறார் என நினைக்கிறேன். இந்த தடுமாற்றத்திற்கான ஒரு பிரதான காரணி, இவரது தனிப்பட்ட சவால்களை அறியாமல் இவரைக் காட்சிப் பொருளாக்கி விட்டிருக்கும் யூ ரியூபர்களும், அதன் சந்தாதாரர்களும். தன்னுடைய வட்டத்தைக் குறுக்கிக் கொண்டு பொது வாழ்க்கையில் சில கட்டுப் பாடுகளைப் பேண வேண்டும் என்று புரிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்!
  15. நோ நோ, கலவரமெல்லாம் வராது! யாழ் கள மெம்பர்ஸ் அனைவரும் இல்லா விட்டாலும், ஓரிருவர் "மிகவும் டீசண்டானவர்கள்"! உங்கள் தனிபட்ட விபரங்களான மனைவிகள்/ கணவர்கள் எத்தனை பேர் குழந்தைகள் எத்தனை பேர் ஆகியவற்றை வெளிப்படுத்தாமல் கருத்தாடினால் டீசண்டான உறுப்பினர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்😎!
  16. இதிலென்ன ஆச்சரியம்? ஒரு அவதாரில் வந்து வைக்கும் அவியலுக்கு யாரும் ஆதாரம் கேட்டால், மாற்று அவதாரில் வந்து ஆதாரம் கேட்டவரைத் திட்டி விட்டு, மீண்டும் ஒரிஜினல் அவதாரில் வந்து திட்டலுக்குப் பச்சை குத்துவது..இப்படி பல "மானஸ்தன்கள்" உலா வந்த/வரும் இடம் இது😎!
  17. இதென்ன ரசோ சார்?🤣 நீண்ட விடுமுறை வரும் வாரத்தில் இப்படி "புரின் புரியன்மாரையும்" தமிழ் தேசிய தீகக்கும் dragon களையும் ஒரே நேரத்தில் கோபப் படுத்தி? றிஸ்க் எடுப்பது உங்களுக்கு றஸ்க் சாப்பிடுவது போலுள்ளதோ😎?
  18. உங்களைப் பொறுத்த வரையில் சினேகபூர்வமான ஒருவர் தவறிழைக்கும் போது வெள்ளைப் பெயின்ற் அடிப்பது ஒற்றுமையைக் கூட்டும் என்கிறீர்கள்? 😂 அப்படியானால் பல வருடங்களாக பெண் வெறுப்பு, சாதி சமய வெறுப்பு, பிரதேசவாதம், இனத்தூய்மை வாதம் -இப்படியான வாதங்களை இங்கே கருத்துக்களாக எழுதி வரும் உங்கள் "சினேக பூர்வமான" உறவுகளுக்கு நீங்கள் "கவர்" கொடுத்ததால் தமிழர் ஒற்றுமை கூடியிருக்கிறது என்கிறீர்களா? என்ன ஆதாரம் இருக்கிறது இந்த ஒற்றுமை பலமானதாக நீங்கள் கருதியமைக்கு? இங்கே சில உண்மைகளை சீனி தடவாமல் எழுதும் ஐலண்டையும், கபிதானையும் நீங்கள் போட்டுத் தாக்குகிற தீவிரத்தில், ஒரு வீதத்தையாவது இந்தப் பிற்போக்கு வாத சினேகிதர்களை நோக்கி நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? இதைச் செய்யாமல் "எல்லாரும் குறையுடயோர் தான் " என்று நீங்கள் பேசும் சுடலைத் தத்துவத்தை ஏன் கொல்லப் பட்ட, தற்போதும் அச்சுறுத்தப் படும் சில தமிழ் அரசியல் வாதிகள் விடயத்தில் உங்களால் பிரயோகிக்க முடியவில்லை? இவையெல்லாம் பதில் தேடும் கேள்விகள் அல்ல. தமிழர் ஒற்றுமையில் உங்களுக்கிருக்கும் அக்கறையைக் காட்டும் கேள்விகள். எனவே ஒற்றுமையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உங்கள் பணியைக் கவனியுங்கள்!
  19. பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறார் அர்ச்சுனா😂. கஜேந்திரன் ரீம் போல 6 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, கையொப்பமிட்டு, பதவியேற்று விட்டு, வெளியே வந்து "இரு தேசம்" என்று தமிழ் பகுதிகளில் மட்டும் முழங்காமல் வெள்ளந்தியாக இருக்க முயன்றிருக்கிறார்!
  20. 🤣😂 தமிழரசு இவர்களை விட்டு வெளியே போனதா? தமிழரசு எப்போது ரெலோவின் தலைமையின் கீழ் இருந்தது? 90 களுக்கு ஒத்த நிலையை வாக்காளர்கள் தந்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடையுங்கள்: "கப்பம்" , ரெலோ வென்ற பின்னர் "கட்சி நன்கொடை" ஆனது போல தற்போது செய்ய முடியாவிட்டாலும், வாகன இறக்குமதி பெர்மிற்றை வைத்தாவது உழைக்கலாம் அல்லவா? ஏன் குறைப் படுகிறார் செல்வம் பா.உ?
  21. இதைப் புற்று நோய்கள் போலப் பாருங்கள். எல்லா வகைப் புற்று நோய்களையும் வெட்டி, கதிர்வீசி அழிக்க முடியாது. ஆனால், அனேகமாக எல்லா வகைப் புற்று நோய்களையும் கண்டறிந்து "இது இருக்கிறது" என்று கண்டு, தண்டோரா போட்டு அறிவிக்கலாம். அப்படி அறிவிப்பதே இந்த "கேன்சர்" வியாதி இருப்போர் கருத்துரைக்காமல், ஒளிந்து மறைந்திருக்கச் செய்தால், அதுவும் வெற்றி தான். அவர்களை மாற்றுவது நோக்கமல்ல, ஆனால் சமூகத்தில் இத்தகைய குரல்கள் ஒலிக்கவோ, பெருப்பிக்கப் படவோ, செவிமடுக்கப் படவோ கூடாது என்பது தான் நம் நோக்கமாக இருக்க வேண்டும். இந்த முயற்சிக்குக் கூட தடையாக இருப்பது "சக பக்தியாளன்" 😎என்பதால் கேன்சர்களுக்கு வெள்ளையடிக்கும் யாழ் கள உறுப்பினர்கள். புகைக் குண்டெறியும் றௌடிகள் முதல் போலித் துவாரகாவை முன்னிறுத்தி பிசினஸ் செய்பவன் வரை "அவிங்க நல்லவங்க" என்று ஊக்குவிக்கும் போக்கு, எங்களுக்கு இரட்டை ஆப்புச் செருகும்: ஆப்பு 1, கேன்சர்கள் துணிந்து வளரும். ஆப்பு 2, "இது தான் உங்கட தமிழ் தேசியமா?" என்று மக்கள் NPP போன்ற கட்சிகளை நாடுவர். பிறகு இதே ஆட்கள் வந்து "ஐயோ தமிழ் தேசியம் தாயகத்தில் இல்லையே" என்று ஒப்பாரியும் வைப்பர்😂.
  22. 🤣இனி அர்ச்சுனா பா.உ வுக்கா ஆறடுக்கு அதிரடிப் படை பாதுகாப்பு? நல்ல விடயம்! எலிக்குக் கொறிக்க ஏதோ கிடைத்தது போல, இனி அர்ச்சுனாவைக் கரித்துக் கொட்டி சுய இன்பம் காணுவார்கள் சுமந்திரன் லவ்வர்ஸ்!
  23. யாழ் களத்தில் வலம் வருவோரிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் வைரவன்😂. பெரும்பாலானோர் தங்கள் வாசலில் நெருப்பு வரும் வரை "நமக்கேன் வம்பு?" என்று பேசாமல் இருப்போர். இன்னும் சிலர் உண்மையிலேயே "தொனிச் செவிடர்கள்", அவர்களுக்கு வெளிப்படையாக எழுதினால் ஒழிய இந்த உள் துவேஷம் (implicit bias) எல்லாம் கேட்காத அதிர்வெண்ணில் சஞ்சரிப்பவர்கள். மூன்றாவது தரப்பினர் தான் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள்: அவர்கள் தொனிச்செவிடரும் அல்ல, பேசா மடந்தைகளும் அல்ல. "நம்மோடு சேர்ந்து விக்கிரகத்தைச் சுமக்கிறானே?" என்ற பாசத்தில் பெயின்ற் வாளியோடு வந்து வெள்ளையடித்து விட்டுக் கடந்து போய் விடுவர்😎. இந்த மூன்றாம் தரப்பின் சொல்லும் செயலும் தான் "தமிழ் தேசியம்" என்று இவர்கள் பெயரிட்டு அழைக்கும் முட்டாள் தனத்திற்கு, கடந்த தேர்தலில் தாயகத்தில் பிடரியில் அடிவிழக் காரணம். அடுத்து வரும் உள்ளூராட்சி, (நடந்தால்) மாகாண சபைத் தேர்தல்களில் முகத்திலேயே தாயக வாக்காளர்கள் அறைந்தாலும் கூட இவையள் திருந்தாயினம். ஏனெனில் விக்கிரகம் சுமத்தல் என்பது இவர்களுக்கு புலத்தில் வியாபார வாய்ப்பு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.