Everything posted by Justin
-
முடிவுக்கு வந்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம்!
அமெரிக்காவின் "ஸ்லீப்பர் ஏஜென்ரான" புரின் 😎மூலமாக அமெரிக்கா அடைந்த வெற்றி என்றும் சொல்லலாம்!
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
மேலே செய்தியில் இருப்பதன் படி (இதே காரணங்கள் தான் முன்னைய வருடங்களிலும் இருந்திருக்கும்) தரமான கதைகள், தயாரிப்பு இல்லாமையால் தான் பெரும்பாலான படங்கள் தோல்வி என்கிறார்கள். இப்படி blockbusters ஓடு சேர்ந்து சிறிய படங்கள் வரும் நிலை தமிழக சினிமாவின் கடந்த காலத்திலும் இருந்த போக்கு. இதைக் கவனிக்காமல் "பாரிய படமெடுப்பவன் தன் கற்பனா சக்தியை சுருட்டி வைத்து உதவ வேண்டும்" என்று எதிர்பார்ப்பது ஒரு வரிசையில் நிற்கும் எல்லாரையும் ஒரே உயரமாக்குவதற்காக "முழங்காலோடு எல்லோரையும் தறித்து விடலாம்" என்ற "சமத்துவப் பார்வை" 😎என நினைக்கிறேன்.
-
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!
உலக ரீதியாக பிறப்பு வீதம் அதிகரித்திருக்கிறதா? தரவுகள் இந்தக் கருத்திற்கு எதிர்மாறாக இருக்கின்றன புலவர். கீழே இணைப்பைப் பாருங்கள்👇. https://www.healthdata.org/research-analysis/library/fertility-forecasts-and-their-implications-population-growth உலக ரீதியில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைகிறது. ஆனால், வீழ்ச்சியடையும் வீதம் ஏழை நாடுகளான சில ஆபிரிக்க நாடுகளில் குறைவாக இருக்கிறது. இந்த உலகப் போக்கிற்குக் காரணங்கள் சமூக ரீதியானவை. அதிக வீதமான பெண்கள் கல்வியில் முன்னேறுவதால் பிந்திய திருமண வயது, திருமணமான பெண்களும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்துவதால் குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் - இவை தான் காரணங்களேயொழிய, பொருளாதாரச் சுமையென்று ஆட்கள் பிள்ளை பெறாமல் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்களில்லை. அப்படியானால், ஏழை நாடுகளில் அல்லவா பாரிய பிள்ளைப் பேறு வீழ்ச்சி வர வேண்டும்? "இனத்தைப் பெருக்க சேவை" செய்வதற்காக, தமிழ் சமூகத்தில் பெண்களை பள்ளிக்கூடம் போகாமல் நிப்பாட்டிக் கல்யாணம் கட்டி வைக்கலாம் என்கிறீர்களா😂?
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
திருத்தியமைக்கு நன்றி. சாப்ரர் 1 ஐ அரண்மனை 4 ஓடு குழப்பிக் கொண்டேன். 1- ஓம். ஒரு , இரு கோடி போட்டால் ஆயிரம் கோடி இழப்பு வராது என்பது யாருக்கும் புரியும். 2-ஆயிரம் கோடி பற்றி நீங்கள் செவி வழி கேள்விப் பட்டிருக்கிறீர்கள், நான் கேள்விப் படவில்லை, இதை hearsay என்பார்கள். ஆதாரம் கணக்கெல்லாம் கிடையாது என்பதால் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், இன்னும் இந்த சிறிய படங்களின் தோல்விக்கு ஏன் லைக்காவை வைகிறீர்கள் என பதில் வரவில்லை.
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
1-இலட்சக் கணக்கில் செலவு செய்தால் எப்படி கோடிக் கணக்கில் அடி வாங்க முடியும் விசுகர்? போட்ட முதல் வராவிட்டால் நஷ்டம். அவ்வளவு தானே? 2-நீங்கள் சொன்னதாக நான் எங்கும் குறிப்பிடவில்லை. செய்தி இந்த ஒரு ஆண்டு பற்றியது. 2014 இல் தொடங்கிய லைக்கா சினிமா 10 ஆண்டுகளில் ஆயிரம் கோடியை இழந்திருக்கிறது என்று நீங்கள் வாசித்த செய்தியை இங்கே இணைத்தால் அதையும் அலசலாம்.
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
கணக்கைக் கவனியுங்கள்: 2024 இல் வெளியான 241 தமிழ்படங்களில் லைக்கா தயாரித்த படங்கள் 4 மட்டுமே. அவற்றில் 2 (வசூல் ரீதியில்) வெற்றிப் படங்கள் என்று செய்தியிலேயே இருக்கிறது (வேட்டையன், அரண்மனை 4). எனவே லைக்காவுக்கு 50% வசூல் வெற்றிப் படங்கள். ஆனால், லைக்கா எடுத்த எல்லாப் படங்களும் பெரிய செலவுப் படங்கள். எனவே, மொத்தமாக லைக்கா இழந்த தொகை ஏனையோரை விட அதிகமாக இருப்பது அதிசயமல்ல. குறைந்த செலவுப் படங்களில் பெரும்பாலானவை போட்ட காசையே எடுக்க முடியாமல் வசூல் தோல்வி. இந்தக் குறைந்த செலவுப் படங்களில் ஒன்றையும் லைக்கா தயாரிக்கவில்லை. ஏனையோரின் தோல்விகளுக்கும் லைக்கா காரணம் என்ற முடிவு எங்கேயிருந்து வருகிறதெனப் புரியவில்லை.
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
லைக்கா மீது அபிமானமில்லாமல் இருக்கலாம், ஆனால் வசூல் தராத படங்களுள் எத்தனை லைக்காவினுடையது என்று தேடிப் பார்த்தீர்களா? வேட்டையன் வெற்றிப் படம் (இரசனை ரீதியில் குப்பை) என்று வந்திருக்கிறது. லைக்கா தானே தயாரிப்பு?
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இல்லை
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
கந்தையரோடு உரையாடல் செய்வது "சுவிங்கம்" போல இழுபடுமென்றாலும்😂, தரவுகளுக்காக மட்டும்: 1. ஆங்கிலேயர் வரமுன்னர், பிள்ளைப் பேறு பார்க்கும் வேலை உள்ளூர் மருத்துவிச்சிகளுடையது (அதனால் தான் சிசு இறப்பு வீதம் அந்தக் காலத்தில் அதிகம், அதனால் தான் பெற்றோர் டசின் கணக்கான பிள்ளைகள் பெற்று, அவற்றுள் தப்பிப் பிழைக்கும் நாலைந்து பிள்ளைகளை வளர்த்தனர்!) 2. பின்னர் ஆங்கிலேயரோடு வந்த ஆங்கிலக் கல்வி முறையோடு மருத்துவப் பயிற்சியும் வந்தது. ஆங்கிலேய மத நிறுவனங்களின் வழியாக சில வெளிநாட்டு தாதியர் வந்தனர். உள்ளூரில், மருந்து கட்டுதல் போன்ற வேலைகளுக்கு சிலரைப் பழக்கினர் - இவர்கள் "தாதிகள்" என அழைக்கப் பட்டது உள்ளூர் மக்களால் மட்டும் தான் (மாட்டுக்கு ஊசி போடுபவர் எல்லாம் "மிருக வைத்தியர்" என்று நாம் இன்றும் அழைப்பது போல😎!) 1937 இல் முதல் தாதிய பயிற்சிக் கல்லூரியை கொழும்பில் ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, இங்கே பயின்றவர்களை மட்டுமே தாதிகள் என்று அடையாளப் படுத்தினார்கள். சிலர் இதற்கு முதலே இந்தியாவில் போய் படித்து விட்டும் தாதியராக வந்தார்கள்.
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
சிவமோகனுக்கு சாப்பாட்டு இடைவேளை, மத்திய குழுக் கூட்டம் எல்லாம் ஒன்றாகத் தெரிந்திருக்கிறது போல! கூட்டங்களில் தூங்கி விழும் வகையறா போல் தெரிகிறது. இவரது தூக்கக் கலக்கத்திற்கும் தமிழரசுக் கட்சி தான் அடிவாங்க வேண்டியிருக்கிறது😂!
-
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 179 பேர் பலி !
விமானிகளின் தவறு போலத் தெரிகிறதே? தற்போதிருக்கும் தகவல்களின் படி, இறங்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். "பறவைகள் கூட்டமாகப் பறக்கின்றன, கொஞ்சம் தாமதியுங்கள்" என்று சொல்லியிருக்கிறது கட்டுப் பாட்டறை. 2 நிமிடங்கள் கழித்து "பறவை இயந்திரத்தை மோதி விட்டது" என்று விமானிகள் சொல்ல இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் உடனே இறங்கியிருக்கிறார்கள், ஆனால் சக்கரத்தை (landing gear) இறக்கவில்லை. படபடப்பில் படிமுறைகளை மறந்து விட்டு சக்கரமில்லாமலே இறங்கியிருக்கிறார்களா?
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
இந்த சிறிதரன் தலைவராக தேர்வான தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக அல்லவா யாழில் செய்திகள் பகிரப் பட்டன? இந்த முறைகேடான தேர்வைப் பற்றி சிறியர் சொல்ல எதுவும் இல்லையாமா? சுமந்திரனும் இந்த தேர்தலில் நேர்மையில்லாமல் நடந்து கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், முறைகேடான வாக்குகளால் கிடைத்த பதவியை சிறிதரன் இன்னும் முறையானதாகக் கருதுகிறாரா😂?
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
"புரின் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அசர்பைஜான் அதிபரிடம்" என்று கிரெம்ளின் அறிக்கை விட்டிருக்கிறது. ஆனால், "சுட்டு வீழ்த்தினோம்" என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லையாம். மறக்காமல் "உக்ரைனிய பயங்கரவாதிகளின் ட்ரோன்களுக்கெதிராக குறொஸ்னியில் வான்பாதுகாப்பு செயல்பட்டதால் இந்த நிலை!" என்று சுட்டியிருக்கிறாராம்! இனி உலகெங்கும் பரந்து வாழும் "புரின் புரியன்மார்" மிகுதியைப் பார்த்துக் கொள்வர்😂!
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
இதைப் பற்றி கோசான் சொன்னது சரி தான் போல் இருக்கிறது. தமிழரசின் ஸ்தாபகர்கள், பெரிய தலைகள் அனேகர் சட்டத்தரணிகள், பரிஸ்டர்கள், QC/PC க்கள். இவ்வளவு முக்கியமான ஒரு விடயத்தை யாப்பில் தெளிவாக எழுதத் தெரியாத சான்றிதழ் சட்டத்தரணிகளாக இருந்திருக்கிறார்கள் போல.
-
ஆறுமுகம் இது யாரு முகம்?
அதிசயமான நிகழ்வுகள், நன்றாக எழுதியிருக்கிறீர்கள்👍! 2008 இல் பேர்லின் மத்திய பகுதிக்கு வந்து 4 நாட்கள் தங்கியிருந்தேன். உத்தியோகபூர்வமான வேலைகள் 4 மணியோடு முடிந்ததும், U Bahn எடுத்து, சில இடங்களில் இறங்கி, மைல் கணக்காக நடந்து கிழக்கு மேற்கு பேர்லின் பாதிகளை பார்த்து படங்கள் எடுத்துக் கொண்டேன் (அந்தப் படங்களில் சில என் "ஓயாத நிழல் யுத்தங்கள்" தொடரில் பயன்பட்டன). நீங்கள் சொல்லும் வெள்ளிக்கிழமை பியர் பார்ட்டிகள் உண்மையாகவே காணக் கிடைத்தன. பல பார்கள் பெரும்பாலும் ஆண்களால் நிரம்பி வழிந்தன. கூட்டம் குறைவான ஒரு பாரினுள் நுழைந்து , ஒரு ஜன்னலோரமாக அமர்ந்து தொலைவில் தெரிந்த Kaiser Wilhelm Memorial Church இனைப் பார்த்தபடி ஒரு பியர் குடித்து விட்டு நள்ளிரவு U Bahn எடுத்து ஹோட்டல் திரும்பினேன். அந்த நேரம் கையில் செல் போன் இருக்கவில்லை. ஒரு தனியார் போன் பூத்தில் இருந்து VOIP மூலம் வீட்டுக்கு போன் செய்யச் சென்ற போது, போன் பூத் உள்ளே பல ஸ்வாதிக்கா சின்னங்கள் வரையப் பட்டிருப்பதைக் கண்டேன். நாசிகள், நவநாசிகள் இன்னும் ஓயவில்லை என நினைக்கிறேன்.
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழரசுக் கட்சியின் தலைவரை - அவர் தானாக விலகினால் ஒழிய - பதவி நீக்க வேண்டுமாயின் எப்படி செய்வது? மத்திய குழுவில் வாக்கெடுப்பதா அல்லது முழுமையான கட்சியின் உறுப்பினர்களிடையே தேர்தல் வைப்பதா? (இப்படி கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் வைக்கும் வசதிகள் இலங்கையில் இருக்கின்றனவா?). இதைப் பற்றி கட்சியின் யாப்பில் கட்டாயம் இருக்க வேண்டுமே? யாருக்காவது தெரியுமா?
-
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
அமெரிக்காவைத் தான் விடுங்கள். 1950 களில் டெல்ரா வடிவ இறக்கையைக் கொண்ட மிக் (MIG) மிகையொலி விமானத்தை பாவிக்க ஆரம்பித்த சோவியத் ரஷ்யாவையும் மறந்து விட்டு சீனாவின் டெல்ரா இறக்கையை "புதிதாக" விற்கிறார் யூ ரியூப் வியாபாரி😂!
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இதை கடஞ்சாவும் மேலே எழுதியிருக்கிறார், ஆனால் நீளமாக இருப்பதால் யாரும் வாசிக்கவில்லை. வீட்டுக் கராஜில் வைத்துக் கம்பியூட்டர் தயாரித்த பில் கேட்ஸ், ஸ்ரிவ் ஜொப்ஸ், ஸ்ரிவ் வொஸ்னியாக் ஆகியோர் தான் கம்பியூட்டர் உலகின் ஜாம்பவான்களானார்கள். அதே போல கார் மெக்கானிக்குகளும் இருக்கலாம். இவர்களெல்லாம் முட்டாள்கள் அல்ல, அதீத புத்திசாலிகள். ஆனால்..இது வரை நான் மருத்துவத் துறையில் இப்படி முறைசார் பயிற்சியைக் கடாசி விட்டு மருத்துவ சேவையில் முன்னணி வகித்த எவரையும் பற்றி அறியவில்லை. இதற்குக் காரணம், கார், கம்பியூட்டர் போல அல்ல மனித உடல். சரியான அடிப்படை இல்லாமல் பிழையான நோயை நிர்ணயித்து, பிழையான மருந்தைக் கொடுத்தால் விளைவு பாரதூரமானது. இதனால் தான் தாதிகளும், மருத்துவர்களும், மருந்தாளர்களும் பயிற்சியை தவிர்த்து விட்டு தொழில் அங்கீகாரத்தை எதிர்பார்க்க முடியாத படி அரசுகள் licensing system வைத்திருக்கின்றன. மேலே கந்தையா, தாதிய உத்தியோகத்தருக்கும், காயத்திற்கு மருந்து கட்டுபவருக்கும் இடையேயான வேறுபாடு தெரியாமல் பதிவிட்டிருக்கிறார் என ஊகிக்கிறேன். எந்த வகுப்புப் படித்த ஒருவரையும் காய்ச்சல் மானியைப் பாவிக்க, காயத்திற்கு மருந்து கட்டப் பழக்கலாம். ஆனால், அவர் healthcare provider அல்ல. இப்படிப் பழக்கப் பட்டவர் பிழை விட்டால், அதனால் ஏதும் அனர்த்தம் நிகழந்தால் மருத்துவரின் லைசென்ஸின் கீழ் தான் அந்தத் தவறு சேர்க்கப் படும்.
-
அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!!
கனடாவிலும் "அவசரத்திற்கு பணம் கையில் வைத்திருங்கள்" என்று வேலையிடத்தில் அறிவுறுத்தியதாக ஒரு உறவு எழுதியிருந்தார். (அமெரிக்காவில் இருக்கும் நான் பியர் ஸ்ரொக் அப் செய்து வருகிறேன்) நிராஜ் டேவிட் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும்😎!
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
சிறிதரனுக்கும், சிறிதரன் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பான விடயம், இந்த சிபார்சு விடயத்தில் ஆவண ஆதாரம் - paper trail என்று எதுவும் இருக்காது. இதை கோசானும், அக்னியும் ஏற்கனவே இன்னொரு திரியில் விளக்கியிருக்கிறார்கள். இன்று மது வரி அதிகாரியும் உறுதி செய்திருக்கிறார். ஆச்சரியமான விடயம்: சிறியரால் "மதுபான அனுமதிக்கு சிபார்சு செய்தீர்களா?" என்ற கேள்விக்கு "இல்லை" என்று பதில் சொல்ல முடியவில்லை😂. சுத்தி வளைத்து எங்கெல்லாமோ போய் வருகிறார். அதைக் கேட்கும் போதே "சொல்லாமலே" பதில் கிடைத்து விடுகிறது. இப்படியான கள்ளர்களுக்கு நித்திக்குச் செய்தது போல மறைத்து வைக்கும் கமெராக்கள் மூலம் sting operation தான் சரிவரும்.
-
“ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து”
இந்த ஆபிரிக்க நத்தைகளை அமெரிக்காவின் சில பகுதிகளில் வெற்றிகரமாக கட்டுப் படுத்தியிருக்கிறார்கள். கட்டுப் படுத்தும் வழி கீழே: Metaldehyde is a pesticide used to control snails and slugs and is approved for use in a variety of vegetable and ornamental crops in the field or greenhouse, on fruit trees, small-fruit plants, in avocado and citrus orchards, berry plants, banana plants and in limited residential areas. Available products can be applied as granules, sprays, dusts or bait pellets. Applications are typically made to the ground around the plants or crops to be protected. Property owners inside the treatment area will be notified in person or by posted notice at least 24 hours in advance of the planned pesticide treatment. Metaldehyde works by disrupting the mucus production ability of snails and slugs. This reduces their digestion and mobility and makes them susceptible to dehydration. Snails and slugs that have eaten metaldehyde often seek hiding places, become inactive and begin to die within days. https://www.fdacs.gov/Agriculture-Industry/Pests-and-Diseases/Plant-Pests-and-Diseases/Invasive-Mollusks/Giant-African-Land-Snail/Pasco-County-Treatment-and-Quarantine-Information
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பது தான் . தமிழ் பகுதி நோக்கிய ஒரு சதி அல்ல. இவர்கள் தாதிகளாக (nurse) இருக்க வாய்ப்புக் குறைவு.நேரடியாக நோயாளிகளின் மருத்துவக் கவனிப்பைக் கையாளாமல் உதவும் தாதிய உதவியாளர்களாக (nurse assistants/auxiliary staff) இருக்கலாம் என ஊகிக்கிறேன். சிலர் பராமரிப்பு, சுத்திகரிப்பு ஊழியர்களாகவும் (janitorial) இருக்கக் கூடும். இப்படியான ஊழியர்களை சமயாசமய (casual) ஊழியர்கள் என அழைப்பார்கள் என நினைக்கிறேன். கல்வித் துறையில் "தொண்டர் ஊழியர்கள்" என்பார்கள். இங்கே இந்த ஊழியர்களின் உரிமைகள் எவையாவது மீறப் பட்டிருக்கிறதா என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது (மருத்துவ நிர்வாகப் பட்டப்பின் படிப்பை முடித்த அர்ச்சுனா கூட எந்த சட்டங்கள் மீறப் பட்டன என சொல்லப் போவதில்லை, அப்படிச் சொன்னால் அவருக்கு வீடியோ பிடித்துப் போட விடயம் இல்லாமல் போய் விடும்😎!). இது அங்கஜன், டக்ளஸ் கால நியமனங்கள் என்பது போல சிலர் திரிக்க முயல்வதையும் காண்கிறேன். பா.உக்கள் யாரும் இல்லாத போர்க்காலத்திலேயே இப்படியான நியமனங்கள், பின்னர் நிரந்தரமாக்க கோருதல் என்பன இருந்திருக்கின்றன.
-
கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்
சரியாகத் தானே சேர்த்திருக்கிறார்? லிபரல் அரசியல் : குடியேறிகளாக வருவோரை வரவேற்று, அவர்களுள் சிலருக்கு சோசல் காசும் கொடுத்து (அமெரிக்காவில் அல்ல), மூன்று பிள்ளைகள் பிறந்தால் மேலதிக உதவியும் கொடுத்து, கள்ளமாக முகவரி கொடுத்து உழைத்தாலும் கவுன்சில் வீடும் கொடுத்து நிமிர்த்தி விட்ட பின்னர், "பூட்டு எல்லையை, ஒருத்தனும் குடியேறியாக வரப்படாது!" என்று சொல்லும் போது "சிற்றிசன்களாக"😎 மாறியிருப்பார்கள்!
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
எலோன் தென்னாபிரிக்காவில் பிறந்து, குடியேறி அமெரிக்க பிரஜையானவர். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால், மன முதிர்ச்சி குறைந்த, சிறு பிள்ளைத் தனமான ஒருவரின் கையில் பணமும், அமெரிக்க ஜனாதிபதியின் "செவிகளும்" கிடைத்தால் சராசரி அமெரிக்கப் பிரஜைகளின் வாழ்க்கை எவ்வளவு சவாலாகும் என்பதற்கான முன்னோட்டம் கடந்த வாரம் கிடைத்தது😂!
-
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?
ஏனெனில் இதைப் பற்றிப் பேசுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த ட்ரோன் பறப்புகள் முதலில் பிரிட்டனில் ஒரு விமானப் படைத்தளத்தினை அண்டிய பகுதியில் இரவில் காணப்பட்டதாக மக்கள் ஊடகங்களுக்குப் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அது போன மாதம். அந்த படைத்தளம் கூட அதைப் பற்றி அறிக்கையெதுவும் விடவில்லை - எனவே அவர்களுடைய பறப்பாகக் கூட அவை இருக்கலாமென விடயம் அடங்கி விட்டது. பின்னர் நியூஜேர்சி, ஒஹையோ செய்தியில் வந்தன. நியூ ஜேர்சி செய்திகளின் படி, சில ட்ரோன்கள் இரவில் பறந்ததை ஊடகங்கள் பகிரங்கப் படுத்தியதும், இவ்வளவு நாளும் இரவு வானத்தைப் பார்க்காத மக்கள் அண்ணாந்து பார்த்திருக்கிறார்கள். பறந்த சில பொலிஸ் ஹெலிக்ப்ரர்கள், சிறு விமானங்கள் கூட ட்ரோன்கள் என சிலர் அறிக்கை விட ஆரம்பித்து ஏதோ சதி நடப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். "அமெரிக்க எல்லையில் தரித்து நிற்கும் ஈரானிய தாய்க்கப்பல்" ட்ரோன்களை அனுப்புவதாக ஒரு அரசியல்வாதி கற்பனைக் கதை வேறு வெளியிட்டிருக்கிறார்😂. உண்மையில்,அமெரிக்காவில் ட்ரோன்களை எந்த நேரத்திலும் FAA அனுமதி பெற்றுப் பறக்கலாம். பறக்கும் இடத்தின் முக்கியத்துவம் சார்ந்து அனுமதி இருக்கும். 2019 வரை, விமான நிலையங்களில் இருந்து 5 மைல் தொலைவில் அனுமதியின்றியே பறக்கலாம் என்பதை மாற்றி அதற்கும் முன் அனுமதி வேண்டுமென்று விதித்திருக்கிறார்கள். ஆனால், பிரதான விமான நிலையங்கள் தவிர்ந்த ஏனைய தளங்களைச் சுற்றி இத்தகைய அனுமதி கோரும் முறை இருக்கவில்லை. நியூஜேர்சி, ஒஹையோ செய்திகளை அடுத்து அந்த மாநிலங்களின் ஆளுனர்கள் இப்போது பெருமளவு பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை விதித்திருக்கிறார்கள் - அதுவும் 1 மாதம் மட்டும் செல்லுபடியாகும்.