Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. "கிறிஸ்தவர்கள் பொங்கலை அண்மையில் தான் கொண்டாட ஆரம்பித்தனர்" என்ற உங்கள் கருத்தின் முக்கியத்துவத்தை கொஞ்சம் விளக்குங்கள். "கிறிஸ்தவர்கள் தமிழர் என்ற இன அடையாளத்தை விலக்கி வைத்து விட்டு இப்போது மீள அணிந்து கொள்ள முற்படுகின்றனர்" என்ற கருத்துடன் இருக்கிறீர்களா?
  2. 😂 விசுகர், உங்களுக்கு ஒன்று இன்னும் புரியவில்லை: Candid ஆக சொல்ல முனைகிறேன் . நீங்கள் இங்கே ஷெரீப் அல்ல, எந்த அதிகாரமும் கொண்ட காவல்காரரும் அல்ல! இந்த "கவனம், ஜாக்கிரதை, எச்சரிக்கை" என்பவற்றை உங்கள் பிரெஞ்சுக் குக்கிராமத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இப்படி மறைமுகமாக வன்முறை அச்சுறுத்தல் விடுவதே கள விதிமுறைகளுக்கு எதிரானது. ஒரு கருத்து சொன்னால் அதற்கு பதில் எழுத இருந்தால் எழுத வேண்டும். இல்லா விட்டால் சிவப்பைக் குத்தி விட்டு போய் ஒளிந்து கொள்ள வேண்டும். இந்த சிவாஜி கணேசன் போஸ் இங்கே வேண்டாம், உங்களுக்குப் பொருந்தவில்லை!
  3. இது கண்டிக்கு அருகில் அம்பிட்டியவில் இருக்கும் கத்தோலிக்க குருக்கள் பயிற்சிக் கல்லூரி (National Seminary) யில் நிகழ்ந்த பொங்கல் நிகழ்வு: https://www.facebook.com/Philosophate.Kandy/ கபிதான் குறிப்பிட்ட மாற்றங்கள் 70 களில் நிகழ்ந்தன. இரண்டாம் வத்திக்கான் சங்கம் (Vatican Council II) என்ற தொடர் ஆய்வு 1965 வரை நடத்தப் பட்டு, ஒவ்வொரு இனமக்களினதும் பண்பாட்டு அடிப்படையில் வழிபாடு செய்யப் பட வேண்டுமென்ற அறிவுறுத்தல் 70 களில் கொண்டு வரப் பட்டது. ஆனால், 90 களில் தான் யாழ் மறைமாவட்டத்தில் இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை நடைமுறைப் படுத்த ஆரம்பித்தார்கள். "பண்பாட்டுத் திருப்பலி" என்ற முறையில் தமிழ் பாரம்பரியங்களில் ஒன்றாக பொங்கல் நிகழ்வுகளும் சேர்க்கப் பட்டன. கீழே இருப்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஆவணங்கள் பற்றிய இணைப்பு. https://www.britannica.com/event/Second-Vatican-Council
  4. இது துரோகம் தம்பி! நீங்க சொல்ல வேண்டியது: "அண்ணன் சாப்பிடுவதே இல்லை தெரியுமா?" (ஒரு படத்தில் " எங்க அண்ணன் பஸ்ஸில எதையும் பிடிக்காமத் தான் நிற்பார் தெரியுமா?" என்றது போல😂!)
  5. எந்த தாயகத்தைச் சொல்கிறீர்கள்? தாங்கள் 2003 இல் போன பின்னர் இன்னும் போக முடியாமல் இருக்கும் தாயகத்தையா சொல்கிறீர்கள்😎? இதற்குத் தான் சின்னத் திரையில் தாயகத்தையும், போராட்டத்தையும் பார்த்து அறிவு வளர்க்கக் கூடாதெனச் சொல்வது. ஆனால், பிரான்சில் இலகுவாக பச்சை மட்டை, துப்பாக்கி, கோடரியெல்லாம் நீங்கள் மீளக் கொண்டு வரலாம்! உங்கள் போன்ற ஆட்களுக்கு போடு தடியாக இருக்கக் கூடிய, அங்கே ஆவா குழுவில் இருந்து விட்டு ரிடையராகி வந்த இளையோர் பலர் இருப்பதால் பிரான்சில் செய்யலாம் என அறிந்திருக்கிறேன்! பரிதி அவர்கள் "கொள்ளை" ...சாரி "கொள்கை" வழுவியதால் தான் இப்படியாகத் தாக்கப் பட்டார் என அறிந்தேன்!
  6. தமிழ் பொது வேட்பாளர் தாயகத்தில் தோற்று, பின்னர் என்.பி.பி வடக்கில் சீற் வென்று, தற்போது வெளிநாடுகளில் மாவீரர் தினத்தைத் தவிர வேறெதற்கும் மக்கள் கூடாமல் விலகியிருக்கும் நிலையைப் பார்க்காமல் அப்படியே "மண்ணுக்குள் தலையைப் "புதைத்துக் கொள்ள வேண்டியது தான்😂! அடுத்த நிலை: புலத்தில் இருந்து வந்திருக்கும் "பச்சை மட்டைத்" தமிழ் தேசியர் என்பதை மறைத்துக் கொண்டு தான் தமிழர் தாயகப் பக்கமே உலவ வேண்டி வரும், இல்லையோ "பச்சை மட்டை" தான்!
  7. பின்னணி தெரியாததால், கவிதையை ரசிக்க, விளங்க முடியவில்லை! இதைப் பற்றி 5 வசனம் எழுதுங்கள்😂!
  8. அப்படியானால் நீங்கள் உங்கள் உறவுகளின் "மாவீரர் தியாகத்தை" எடுத்து நீங்கள் புடுங்கிய ஆணியாக அணிந்து திரிகிற ஒருவரா😂? இப்படி சீமான் பாணியில் "பிண அரசியல்" செய்யாமல், அமெரிக்காவில் நான் உழைத்து, உண்டு , உறங்கி வாழ்வதே ஒரு நல்ல செயல் அல்லவா? இதுக்கெல்லாம் "பொருப்பு" தேவையா தம்பி😎?
  9. தம்பி, பதறாமல் படத்தைப் போடுங்கோ! அது சரி என்ன படத்தைப் போடப் போறீங்க? உங்கள் உறவினர்களான மாவீரர் படத்தையா? அதுவா தம்பி உங்கட "ஆணி"?😎 நீங்களெல்லாம், சீமானுக்கு தம்பியாக இருப்பதில் ஏதாவது அதிசயமிருக்கிறதா? போய் யூ ரியுப்பைப் பார்த்துட்டுப் படுங்கப்பு!
  10. அப்படித் தான் நான் நினைக்கிறேன். அப்படிப் பதிவுக் கட்டணம் செலுத்திச் செல்வோரை "அழையா விருந்தாளிகள்" என்று பழிப்பது அறியாமையால் விளைந்ததெனச் சுட்டிக் காட்டினேன். ஏனெனில், இவை போன்ற மாநாடுகள் ஒன்றும் அழைக்காமல் போவோரை உள்ளே அனுமதிக்கும் நிகழ்வுகள் அல்ல. இதை விட, தமிழக அரசு அழைப்பிதழ் இவர்களுக்கும் அனுப்பியிருந்தால், அதை சும், சாணக்கியன், செல்வம் ஆகியோரிடம் தான் காட்டும் படி கேட்க வேண்டும்.
  11. பையனிடம் கேட்ட கேள்விக்கு பையனே பதில் தராமல் "கிறீஸ்" போத்தலோடு நழுவுவது கண்டு எனக்கு புரையேறுகிறது😂🤣!
  12. தம்பி, ஆணியைப் பற்றிக் கதைக்க முதல்: நீங்கள் 13 வயதில் இங்கால வந்த போதே, அதே வயதில் அங்கால இயக்கத்திற்குப் போன பிள்ளைகளை நான் அறிவேன். அங்கே வாழ்ந்து, படித்து, படிப்பித்து, தொழில் செய்து பின்னர் புலம் பெயர்ந்த பலரும் அறிந்திருப்பர்! அங்க முட்டைக் கோதுக்க இருந்து போட்டு, இங்க வந்து கதை விட முதல், செய்திகளையாவது வாசித்து நிலவரம் அறிய வேண்டும் நீங்கள்😂! அப்புறம் , அந்த "ஆணி" 😎நீங்கள் புடுங்கின ஆணியைக் காட்டினா, நானும் காட்டுறன்! உங்கட "மச்சான், அண்ணர்மார், அக்கா, தங்கை மார்" செய்த தியாகத்தை, நீங்கள் "புடுங்கின ஆணியாக" தூக்கிக் கொண்டு வராதீர்கள்! இப்படி செய்வது, உங்கள் சீமான் செய்வது போலவே, "அடுத்தவன் சிந்திய இரத்தத்தில் தனக்கு பதவி தேடும் பிண அரசியல்" என்று ஆகி விடும்!
  13. 😂🤣 அருமையான காரணம்! 2009 இலும் நீங்கள் சிறுவனா? அந்தக் காலப் பகுதியில் தானே ஆட்கள் காணாதென்று புலிகள் வலுக்கட்டாயமாக ஆட் சேர்த்தார்கள்? வெளிநாட்டிலிருந்து கூட சிலர் போனார்கள் என்று அறிந்தேன். இந்த சொத்தைக் காரணங்களை வைத்துக் கொண்டு "ஏனையோர் தப்பி வந்த கோழைகள், நான் சின்னப் பையன்" என்று அளக்காதீர்கள். சீமான் என்ற வாய்வீச்சு, தமிழக சராசரி அரசியல் வாதியை, நேரடியாக ஆயுதம் தூக்கா விட்டாலும் கூட துன்பங்களை அனுபவித்த ஈழவர்களோடு ஒப்பிட்டு ஈழ மக்களை அவமானம் செய்யாதிருங்கள்.
  14. உங்கள் தகவலுக்காக: மிருகங்களுடன் மிருக வைத்தியர் உரையாடுவதில்லை. வேறு வழிகள் இருக்கின்றன. அந்த வழிகளை இங்கே பெருமையுடன் நான் பகிர்ந்து கொண்டு "என்னைத் தலையில் தூக்கி வைத்திருங்கோ!" என்று நான் அந்தரப் பட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால், பேசுவதற்கு எதுவும் இல்லாத கையறு நிலையில் உங்களுக்கு எதிரே இருப்பவரின் சான்றிதழ் தான் உங்களுக்கு உடனே கண்ணுக்குள் குத்தும் என்ற விடயமும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது😂. இது உங்கள் பிரச்சினை, அதைத் தீர்க்க வேண்டியது நீங்கள். உங்கள் தாழ்வு/உயர்வு சிக்கல் பிரச்சினைக்காக ஏனையோர் தாம் பேச வேண்டியதையும், சுட்டிக் காட்ட வேண்டிய முட்டாள் தனங்களையும் கடந்து போக வேண்டியதில்லை! இந்த திரியிலேயே, மாநாடுகளில் பங்கு கொள்வோர் பற்றிய ஆழமான அறியாமையை, ஏனையோர் மீதான வசவாக பலர் வெளிப்படுத்தியிருக்க அதையெல்லாம் மறைமுகமாக ஆதரித்த படி, தகவல் பகிர்ந்த என்னை விறாண்டிக் கொண்டு நிக்கிறியள்😂. இதுவே உங்கள் போன்றோர் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தில் எதை முன்னிறுத்துகிறீர்கள் என்பதைக் காட்டும் ஒரு சுட்டியாக இருக்கிறதென நினைக்கிறேன். அதிர்ஷ்டவசமாக , உங்கள் போன்றோரின் பங்கு தமிழ் சமூகத்தில் ஓரங்கட்டுப் பட்டு வருகிறது என்பது நல்ல அறிகுறி!
  15. சரி! அப்ப உங்கள் ஐலண்டுக்கான கேள்வியை உங்களை நோக்கியே கேட்டிருக்க வேணும். பதில் குறு குறுப்பைத் தந்திருக்கும்!
  16. தம்பி, கேக்கிறது தனிபட்ட தேவைக்காக இல்லை. நீங்கள் எப்ப ஊரில் இருந்து புலம் வந்தீர்கள்? 2010??😎
  17. நான் எழுதியது: "இது போன்ற மாநாடுகளில் படிநிலை வேறுபாடுகள் ஊர்ச்சங்கப் பொன்னாடை போர்த்தும் நிகழ்வுகளில் இருப்பது போல நிலவுவதில்லை" என்று தான். ஆனால், "கண்ணில் நீர் வரும் அளவு ஆத்திரத்தோடு" வாசித்ததால்,உங்களுக்கு இன்னும் புரியவில்லை. அதை அப்படியே விடுங்கள். ஏனைய உங்கள் அலட்டல்களுக்கு நான் நீண்ட பதில் கூறி கௌரவம் செய்ய விரும்பவில்லை. இதை மட்டும் எல்லோரும் புரிந்திருக்கிறார்கள்: "பச்சை மட்டை" தமிழ் தேசியத்திற்கும் நீங்கள் தான் இங்கே இன்ஸ்பெக்ரர், இப்போது புங்குடுதீவுக்கும் நீங்கள் தான் ஓனர்!" இதை நீங்கள் உங்கள் தலைக்குள் வைத்து இன்பங் காண்வதை யாரும் தடுக்க உரிமையில்லை! ஆனால், உங்கள் தலைக்கு வெளியே இருக்கும் யாரும் இதை அங்கீகரித்துக் கருத்தாட வேண்டிய கடமையில்லை😎!
  18. ஒரு ரெக்னிகல் குயெஸ்ஷ்சன்: அடுத்த தேர்தலில வாக்கு வீதம் 8% இற்குக் கீழ இறங்கின கட்சி அங்கீகாரத்தை மீளப் பிடுங்கி விடுவார்களா😎?
  19. எந்த தவறை யார் மறைத்தார்கள் என்கிறீர்கள்? இது ஒரு சர்வதேச மாநாடு, இதற்கு யாரும் பதிவு செய்து உள்ளே செல்லலாம். அப்படிப் பதிவு செய்து சென்றவர்களை, "படிநிலைப்படுத்த" வேண்டுமென்று சொன்னது நீங்கள் ( "அழையா விருந்தாளி, நாய்கள்" என்று அழைத்தவரும் உங்களுக்கு பச்சை குத்தி மகிழ்ந்திருக்கிறார்😎!). மாநாடுகளில் இந்த படிநிலைப்படுத்தல் ஓரளவுக்குத் தான் நடக்கும் என்று உண்மையை நான் சொல்லியிருக்கிறேன். நீங்களோ, ஊர்ச்சங்கத்தில் "இன்னாரை உள்ளே விடாதே" என்று வாயிற்காப்பாளருக்குச் சொல்லி விட்டு நடத்தும் கூட்டங்களின் அனுபவத்தில் நின்று பேசுகிறீர்கள்! இதற்கு மேல் எப்படி உங்களுக்கு விளங்கப் படுத்துவது? ஒன்று செய்யலாம். இந்த ஆண்டு இதே போன்ற ஒரு மாநாட்டிற்கு ஸ்ராலின் பாரிஸ் வருகிறார் என நினைக்கிறேன். ஒரு தடவை பதிவு செய்து உள்ளே சென்று வாருங்கள். நான் சொல்வது புரியலாம்! எண்பதுகளில் புங்குடுதீவு முதலாளியின் கொழும்புக்கு ஓடிய கேஜி ட்ரவல்ஸ் உங்களுக்குத் தெரியாதா? அதைத் தான் சுட்டிக் காட்டியிருந்தேன் உதாரணமாக. புங்குடுதீவு என்றாலே "விசுகரைத் தான் கூப்பிடுகிறார்கள்" என்று நீங்கள் எண்ணுவது ஏன்😂? புங்குடுதீவு ஒரு ஊர், உங்களுக்கு மட்டுமே தொடர்புடைய ஒரு சொத்தல்ல!
  20. சரியாகச் சொன்னீர்கள்👍. இலங்கையில் இருந்து பல்வேறு விசாக்கள் வழியாக அமெரிக்கா வந்து (சிலர் அசைலம் மூலம் கூட வந்து, மாமன் மச்சானையெல்லாம் கூப்பிட்டு, பல்கிப் பெருகியிருக்கின்றனர்) பிரஜையான எம்மவர் பலர், ட்ரம்பிற்கு வாக்குப் போட்டிருக்கின்றனர். காரணம் குடியேறிகளைப் பிடிக்காது என்கின்றனர். "கமலா கறுப்பினம்" என்பதால் பிடிக்காதாம் என்றும் சிலர் சொல்கின்றனர். "1960 களில் MLK Jr. உயிரைக் கொடுத்துப் பெற்றுத் தந்த சிவில் உரிமைகள் சுவறியதால் தான் நீங்களே இன்று பாதுகாப்பாக அமெரிக்காவில் இருக்கிறீர்கள்!" என்று சுட்டிக் காட்டினால் இல்லையென்று மறுக்கும் அளவுக்கு "அறிவிழந்த, வாசிப்புமற்ற" வெற்று மண்டைகளாக விழிக்கின்றனர்😎!
  21. படிநிலையென்றால்... அழைத்த விருந்தாளிகளை ஆரம்ப நிகழ்வில் மேடையில் அமர வைப்பார்கள், பங்கு பற்றுவோரை மண்டபத்தினுள் அமர வைப்பார்கள் (வெளியே திண்ணையில் இருக்க வைத்து சிரட்டையில் ரீ கொடுப்பதெல்லாம் செய்ய மாட்டார்கள்😎!). மற்றபடி அனுமதி இருந்தால் யாரும் எங்கேயும் போய் வரலாம். இப்ப நான் மேல் விளக்கத்தை எழுதியதன் காரணம்: அழையா விருந்தாளி, "நாய்.." என்றெல்லாம் பங்கு பற்றியவர்களை மேலே எழுதியிருக்கிறார்கள். உங்களுக்கு அதெல்லாம் கண்டனத்திற்குரியதாகத் தெரியவேயில்லை! ஆனால் "படி நிலை" உறுத்தி விட்டது! "அங்க" நிற்கிறீர்கள் நீங்கள்😂! முன்னுக்கு பதிவு செய்தால் "முன் இருக்கை" கிடைக்க இது புங்குடு தீவு முதலாளியின் KG பஸ் அல்ல சாத்தான்😂. இது சர்வதேச மாநாடு. அழைத்தால் அழைக்கப் பட்ட விருந்தாளி, நீங்களே பதிவு செய்து போனால் விருந்தாளி அல்லது பங்கு பற்றுனர்! அது சரி, ஏதாவது மாநாட்டிற்கு நீங்கள் போயிருக்கிறீர்களா?
  22. இது வரை ஒரு "கிராமிய மட்ட" மாநாட்டில் கூட பங்கு பற்றாத பலர் இங்கே உலவுகிறார்கள் போல தெரிகிறதே😂? இணைக்கப் பட்டிருப்பது விழாவின் நிகழ்ச்சி நிரல் - எனவே விருந்தினர்களாக அழைக்கப் பட்டவர்களின் (invited guests) பெயர்கள் இருக்கும். நிகழ்ச்சி நிரல் என்பது அழைப்பிதழ் அல்ல. இது போன்ற மாநாடுகளுக்கு சில மாதங்கள் முன்பாகவே ஆர்வமுள்ள யாரும் பதிவு செய்து, கலந்து கொள்ளும் இணையத்தள இணைப்பும் வழங்கப் பட்டிருக்கும்👇. https://nrtamils.tn.gov.in/ அந்த இணைப்பில் சென்று பங்குப் பற்ற விரும்புவோர் ஒரு தொகையை செலுத்தி பதிவு செய்தால், அவர்கள் பங்கு பற்றுனர்களாக (attendees) அனுமதிக்கப் படுவர். இப்படி பதிவு செய்து பங்கு பற்றுவோருக்கு விசா அனுமதிகளுக்கு அவசியமெனில், ஒரு அழைப்பிதழ் கடிதமும் வழங்கப் படும். ஒரு விடயம் முழுதாகத் தெரியாவிட்டால், முதலில் தெரிந்து கொள்ள வேண்டும், பின்னர் "படம் பார் பாடம் படி"😎 அலட்டலைச் செய்யலாம்!
  23. சீமானின் கட்சி, "புத்திசாலிகளால் முட்டாப் பீசுகளுக்காக நடத்தப்படும் அரசியல் கட்சி" என்ற விம்பம் வலுவாக உருவாகி வருகிறது. "யாரும் பெரியார் நூல்களைப் பதிப்பிக்கலாம்" என்ற திறந்த பதிப்புரிமை இருக்கிறதாம். ஆனால், "பெரியாரின் வெளிப்படுத்தல்களை அரசுடைமையாக்கி வெளியிட்டால் தான் அதை ஏற்போம்!" என்று உடும்பாவனம் கார்த்திக் சொல்லியிருக்கிறாராம்😂. பிபிசி, விடுதலை பத்திரிகை மூலப் பிரதியை அப்படியே வெளியிட்ட பின்னரும், சீமானின் பொய்யை முரட்டு முட்டுக் கொடுத்து தாங்கும் வேலையைச் செய்வோர், 'தமிழ் மொழிக் காதலர்கள்" என்று நம்ப முடியவில்லை!
  24. இதை ஏதாவது பாரிய இயந்திரங்கள் வைத்து அகற்றுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். நிலத்தோடு கலக்க வேன்டிய சேதனப் பொருள் இன்னொரு இடத்திற்கு அகற்றப் படுகிறது (landfill குப்பையாக?). மழை வந்து தண்ணீர் ஓடும் போது மண்ணின் மேற்படையும் இல்லாமல் போய் கலிபோர்னியாவில் இருக்கும் காட்டுப் படுகைகள் 50 வருடங்களில் மறைந்து நெவாடா போல ஆகி விடும். காட்டுத் தீ வராது. ஆனால் காடும், நீர்ச்சுழற்சியும், மழை வீழ்ச்சியும் கூட இருக்கப் போவதில்லை. இது ட்ரம்பின் தூர நோக்கில்லாத உசார் மடையன் குணாதியசத்தைக் காட்டும் ஒரு ஐடியா😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.