Everything posted by Justin
-
குப்பையிலிருந்து குப்பை
கவிதை நன்று! இது உதித்தது இலங்கைத் தேர்தல் முடிவின் விரக்தியாலா அல்லது அமெரிக்கத் தேர்தல் முடிவின் சலிப்பினாலா?😂
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
ஓம், பாபத் என்று தான் நினைவு. மிருகவைத்திய பீடத்தில் இரண்டாம் ஆண்டிலேயே இறந்த ஆடு, மாடு, பன்றி, கோழி, யானை ஆகியவற்றை சிரேஷ்ட அணி வெட்டி மேய்ந்து பிரேத பரிசோதனை செய்யும் போது, சுற்றி நின்று பார்க்க வைப்பார்கள். இந்த விலங்குகளின் குடலைத் திறக்கும் போது உள்ளே வகை வகையாக ஒட்டுண்ணிப் புழுக்கள் இருக்கும். இதைப் பார்த்த பின்னர் எப்படி பாபத் சாப்பிட மனம் வரும்?😂 பெரும்பாலும் பொறியியல் பீட நண்பர்கள் உண்ணும் போது ஒன்றும் பேசாமல் அந்த "குட்டிப் பிளாஸ்ரிக் கப்பில்" ரீயை உறிஞ்சிக் கொண்டிருப்பது தான்!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
"சுமந்திரன் லவ்வர்சின்" தவிப்பைப் பார்க்கையில் பல பாடல்களை சிற்றுவேஷன் பாடலாகக் கொடுக்கலாம்..ஆனாலும் "இல்லையென்று சொன்ன பின்பும் இன்றியமையாது.."😂
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
பல்கலை மட்ட ஜேவிபி அடிப்படையில் உசார் மடையர்கள் தான். உடனே கை வைத்து விடுவார்கள். பின்னர் கை நீட்டியவன் மீது பல்கலை ஒழுக்க நடவடிக்கை எடுத்தால், மூன்று வேளையும் கன்ரீன் உணவைச் சாப்பிட்டு விட்டு வந்து வகுப்பிற்குப் போகாமல் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். மறந்தும் கூட "உண்ணாவிரதம்" போன்ற சுய ஒறுத்தல் போராட்டங்களில் ஈடு பட மாட்டார்கள்😂.
-
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்
சரியான முடிவு. பத்தாயிரக் கணக்கான மக்களைக் கொன்று விட்டு ஒருவரை சும்மா உலக வலம் வர அனுமதித்தால், இன்னும் இன்னும் அரச கொலைகாரர்கள் உருவாக வழியேற்பட்டு விடும். இந்த தலைமை வழக்கறிஞர் கான் அவர்களை பாலியல் குற்றத்தில் மாட்ட வைக்க முயற்சித்தார்கள். அது பலித்தாலும் கூட விடயம் இப்போது கைது ஆணையாக உருவாகி விட்டது. இந்த விவகாரத்தில், பன்னாடைத் தனமான பைடனின் கருத்திற்கும், பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தின் கருத்திற்குமிடையேயான வேறு பாடு குறிப்பிடத் தக்கது. ஐரோப்பாவும் பிரிட்டனும், மனித உரிமை விடயங்களில் தலைமையேற்கும் நிலை அடுத்த 4 வருடங்களுக்கு நல்ல சகுனம்!
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
🤣 சரி. உங்களுக்கு வாரம் முழுக்க விரதம் இருக்க வைக்கும் இன்னொரு விசயத்தையும் நினைவு படுத்தி விடுவம். மத்திய நூலகத்திற்கு அருகில், கூட்டுறவுக் கடைக்கு முன்னால் இருக்கும் WUS கன்ரீன் நினைவிருக்கிறதா? காலா காலமாக முஸ்லிம் முதலாளிகளால் நடத்தப் பட்ட இந்த கன்ரீனில் மதிய நேரத்தில் கூட்டம் அலை மோதும். "குடல் கறி" என்று ஒன்று விற்பார்கள். பிளேட்டில் குடல் கறியைப் போட்டதும், அதில் இருக்கும் எண்ணை தனியாகப் பிரிந்து பிளேட்டில் நிற்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்த என் வகுப்புத் தோழர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை!
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
இந்த பாராளுமன்றக் "கன்ரீன்" என்பது நம் அக்பர், அருணாசலம், ஹில்டா கன்ரீன் போல ஏழை மாணவர்கள் "அடு" எடுத்துச் சாப்பிடும் இடமல்ல! உண்மையில் இது கன்ரீனே அல்ல. இலங்கையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் வழங்கப் படும் பிளேட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் உணவை, மிகக் குறைந்த விலையில் பா.உக்களுக்கு வழங்கும் ஒரு சொகுசு உணவகம் இது. ஆனால், உணவிற்கான மிகுதி விலையை பொது மக்களின் வரிப் பணமும், வெளிநாடுகள் வழங்கும் பிச்சைப் பணமும் செலுத்துகின்றன. ஒரு பா.உவை சந்திக்கப் போகும் ஆட்களையும் பா.உ இந்த சலுகை விலையில் சாப்பிட அனுமதிக்கும் சலுகை முன்னர் இருந்தது, இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. நிதி விரயத்தில் உண்மையிலேயே NPP அக்கறை செலுத்தினால், இந்த குறைந்த விலை சலுகையை நீக்க வேண்டும். பா.உக்கள் தம் நண்பர்களை கூட்டிச் சென்று ஏறத்தாழ இலவசமாக சாப்பிட அனுமதிக்கும் சலுகையை நீக்க வேண்டும். மிக முக்கியமாக, "கொட்டுக்கொள" போன்ற ஆரோக்கியமான உள்ளூர் உணவுகளை அதிகரித்தால், பா.உக்கள் ஒரு வருடத்திலேயே "நிரந்தரக் கர்ப்பவதிகள்" போல தொந்தி வளர்ப்பதைத் தடுத்து அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்😂!
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
"புரின் சொல்வதை நம்புங்கள்" என்று தான் எழுதியிருக்கிறேன். ஆனால், "புரின் புரியன்மாருக்கே" உரிய மிகையுணர்திறன் காரணமாக, உடனே என் சட்டைக் கொலரைப் பிடித்து விட்டீர்கள்😎. (👇உங்களுக்கான பதில் அல்ல) புரின் சொன்னாலும், பைடன் சொன்னாலும், "பேராண்டி" சொன்னாலும், றொக்கற் பௌதீகவியல் ஒன்று தான்: ஏவுகணைகளின் பறப்புப் பாதையைப் பொறுத்து இரண்டு வகை: ஒன்று நேராகப் பறக்கும் cruise missile, மற்றது வளைவுப் பாதையில் மேலெழுந்து பின் கீழ் நோக்கி வரும் ballistic missile. நவீன கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணைகள் எல்லாமே ballistic தான். ஆனால், ballistic missile எல்லாம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணைகள் அல்ல. ஏன்? ஏவுகணை செல்லும் தூரத்தை (range) வைத்துத் தான் அது கண்டம் விட்டுக் கண்டம் பாயுமா என்று வகைப் படுத்துவர். இந்த தூரத்தைப் பொறுத்த வரையில், இது கண்டம் பாயும் ஏவுகணை அல்ல. https://armscontrolcenter.org/wp-content/uploads/2017/04/Ballistic-vs.-Cruise-Missiles-Fact-Sheet.pdf
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
இதைத் தான் நானும் யோசித்தேன். ஒபெக் -OPEC உறுபத்தி செய்யும் மசகெண்ணை பரல்களின் எண்ணிக்கையைக் கூட்டினால், உடனே பெற்றோல் விலை குறையும். ஆனால், மீன் அதிகம் பிடிபட்டாலும் விலை வட்டுக்குள்ளேயே நிற்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் capitalist greed போல தெரிகிறது😂!
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
புரின் சொன்னால் நம்புவீர்களா😂? "...President Vladimir Putin says this morning's attack in the central Ukrainian city of Dnipro was carried out with a "new conventional intermediate range" missile. It was code-named Oreshnik, he adds." நடுத்தர வீச்சுடைய, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் (Mach 10) செல்லும் hyper-sonic missile ஏவினோம் என்று புரின் சொல்லியிருக்கிறார். இது, இது வரை ஏவப் படாத வகையாக இருந்தாலும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணை அல்ல. இதை அமெரிக்காவும், ஏனைய மேற்கு நாடுகளும் சொன்ன பிறகு புரின் சொல்லியிருக்கிறார். இந்த யூ ரியூபர்களின் குப்பைகளை இணைத்து யாழின் சேர்வர் இடத்தை வீணாக்குகிறீர்கள். மோகனின் பாங்க் பலன்சுக்கு வந்த சோதனையாக இருக்கப் போகிறது😂!
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
முதலில் இளம்பிறையனை "யாழ் பல்கலை விரிவுரயாளர்" என்று அழைப்பதை தமிழ்வின் கைவிட வேணும். அவர் ஒரு "உடற்பயிற்சிப் போதனாசிரியர்" (demonstrator). "உடற்பயிற்சிப் போதனாசிரியருக்கும்" அரசியலுக்கும் என்ன தொடர்பு😂? சும்மா, பல்கலையில் காவல் கடமையில் இருக்கும் Marshal ஐ எல்லாம் கொண்டு வந்து ஒரு அரசியல் நிகழ்ச்சி செய்யும் ரொய்லெற் ஊடகங்கள் எங்கள் சாபக் கேடு!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
🤣 எல! (சிங்களத்தில் எனக்கு மிகப் பிடித்தமான வார்த்தை, slang ஆக இருக்குமென நினைக்கிறேன்!)
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நேற்று 10 ஆம் பக்கத்தில் விட்டுட்டுப் போய் வந்து பார்த்தால், இப்ப 26 போகுது. ஆனால், a mixed bag of gifts போல நல்ல, நல்லதல்லாத பல விடயங்கள் சில நடந்திருக்கின்றன: 1. சுமந்திரன், தாயக மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறார். எனக்கு ஏமாற்றம் தான், ஆனால் நான் அல்லவே வாக்காளன்? எனவே, மக்கள் முடிவின் படி, அவர் மீள எந்த வழியிலும் தமிழ் அரசியலில் பங்கு பற்றாமல் விலகி விட வேண்டும். இனி பேச்சு, ஏச்சு கேட்க வேண்டியதில்லை. அவருக்கு நிம்மதி😂! 2. சாணக்கியன் வென்றிருக்கிறார். படிப்படியாக தமிழரசின் தலைமையை அடையும் வரை அவர் தொடர்ந்திருக்க வேண்டும். 3. சிறிதரன், இனியாவது ஊழலை விட்டு விட்டு, கமுக்கமாகவாவது நல்ல விடயங்களைச் செய்ய வேண்டும். 4. அர்ச்சுனா: இவரது வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை அவர் புரிந்து கொள்வாரா என்பது தான் முக்கியமான கேள்வி😎. எல்லா இடத்திலும் அகலக் கால் வைக்காமல், லேசர் fபோகஸ் மாதிரி "மருத்துவ துறையில் முறைகேடான விடயங்கள், malpractice என்பன குறித்து புதிய சட்டங்களை இயற்ற, அல்லது இருக்கிற சட்டங்களை பலமாக்க முயற்சி செய்ய வேண்டும். அதை மட்டும் செய்தாலே முழு இலங்கைக்கும் பெரிய நன்மை செய்த பெருமை கிடைக்கும். 5. NPP யில் தெரிவான தமிழ் உறுப்பினர்கள்: இவர்களிடம் பாரிய எதிர்பார்ப்பு மக்களுக்கு இருக்கும். இதை NPP யோடு இணைந்து இவர்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. மணல் கொள்ளை, போதை, மது வியாபாரங்கள், வாள் வெட்டு, பொலிசின் நேர்மை இவை போன்ற விடயங்கள் மிக அடிப்படையான baseline விடயங்கள். இதெல்லாவற்றையும் விட பெரிய பொறுப்பு, புலத் தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு இருக்கிறது: அது sit on your hands! இது வரை செய்ய முயன்று தோற்ற ரிமோட் கொன்ட்ரோல் அரசியலைக் கைவிட்டு விட்டு "உங்கள் பிள்ளை குட்டிகளைப் படிக்க வையுங்கள்" - நானும் அதைத் தான் செய்யப் போகிறேன்🤐.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதில் அதிசயம் எதுவும் இல்லை. 2020 replay மாதிரி இருக்கிறது எனக்கு. அந்த நேரம் எல்லா "தீ கக்கும்" தேசியவாதிகளும் "சும்மை தூக்கு, சும்மை தூக்கு" என்று விசர்க் கூத்தாடிக் கொண்டிருக்க, இனப்படுகொலையாளியின் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் சத்தமே இல்லாமல் பாரிய வெற்றி பெற்றார். இப்போது இனப்படுகொலையோடு தொடர்பில்லாத NPP க்கு மக்கள் பெருவாரியாக வழங்கியிருக்கிறார்கள். தங்களுக்கு பிடரியில் செருப்படி விழுந்தது தெரியாமல் புலம்பெயர் பட்டாசு ரீம் இன்னும் சுமந்திரன் தான் காரணமென்று வாயில் எச்சில் வடிய புலம்பித் திரிகிறது😂. இனியென்ன, அடுத்த தேர்தல் 2028 ஆ? புதிசாக ஏதாவது "மேக்கப்" போட்டுக் கொண்டு இதே பட்டாசு ரீம் வரும், விசர்க்கூத்தாடும்! de javu தான்!
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
பந்தி பந்தியாக என்னவெல்லாமோ எழுதியிருக்கிறீங்கள், ஆனால் வடபகுதி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் தமிழக மீனவர்களை என்ன செய்வது என்று ஒன்றும் சொல்லவில்லையே? "சீமான் வழியில் அரசியல்" என எடுத்துக் கொள்கிறோம்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
FB?? இவைகளை நம்பிக் கருத்துரைப்பது வில்லங்கமான வேலை. சசிகலா ரவிராஜும் இப்படியான உறுதிப் படுத்த இயலாத முடிவுகளை நம்பி பிறகு ஒப்பாரி வைக்க வேண்டியிருந்தது😂!
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
கஜேந்திரகுமார் அவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள். ஊழல் இவர்களிடம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், "எங்கள் கொள்கையோடு ஒரே லைனில் வருவோரோடு மட்டுமே பேசுவோம்!" என்று தேர்தலில் பதவிகள் வென்று கொண்டிருந்தால், பா.உ பதவி மட்டும் தான் கிடைக்கும். சிங்களவரோடு, வெளிநாடுகளோடு, ஏனைய தமிழ் கட்சிகளோடு பேசாமல், ஒலிவாங்கியோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டிய நிலை வரும். மக்கள் இதைக் கண்டு விலகிப் போக முன்னர், சைக்கிள் காரர் கொஞ்சம் இறங்கி வர வேணும்!
-
மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்களால் உடலுக்கு ஆரோக்கியமா? ஆபத்தா?
ஆசியர்கள், அதுவும் கலிபோர்னியாவில் என்றால் சீன, கொரிய வம்சாவழியினராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அவர்கள் அவ்வளவு உறைப்பு சாப்பிடுவதாகத் தெரியவில்லை (Szechuan chicken ஒரு புறநடை😂). தென்னாசியாவில் உண்மையாக எவ்வளவு பேருக்கு ஞாபக மறதி நிலை இருக்கிறது என துல்லியமாகக் கணிப்பது கடினம். அதுவும் இந்தியா போன்ற மருத்துவப் பதிவுகள் அதிகம் துல்லியமாக இல்லாத நாடுகளில் இந்தக் கணக்கீட்டை எடுப்பது மிகக் கடினம்.
-
மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்களால் உடலுக்கு ஆரோக்கியமா? ஆபத்தா?
https://www.ucsf.edu/news/2016/02/401576/landmark-study-finds-dementia-risk-varies-significantly-among-racial-and-ethnic 👆 மேலே இருக்கும் ஆய்வு, கலிபோர்னியாவில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் செய்யப் பட்ட போது, வெள்ளையின மக்களுக்கும், ஆசியர்களுக்குமிடையே ஞாபக மறதியில் பாரிய வேறுபாடு இல்லை. உண்மையில் வெள்ளையின மக்களில் இது சிறிது அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், ஞாபக மறதி வரும் ஆபத்தில் உச்சத்தில் இருக்கும் இரு குழுக்கள், கறுப்பின மக்களும், சுதேச அமெரிக்கர்களும். இந்த இரு இன மக்களும், பல்வேறு சமூக, பொருளாதார (socioeconomic status) நெருக்கடிகள் காரணமாக, ஏனைய ஆரோக்கியக் குறைபாடுகளாலும் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். எனவே, கார உணவு ஞாபக மறதியின் ஆபத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாகத் தெரியவில்லை.
-
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
சில ஐடியாக்கள் சுமந்திரன் லவ்வர்சுக்கு: 1. மோகன் 15 முதல் 17 வரை யாழ் பராமரிப்புக் காரணமாக தடங்கலுக்குள்ளாகும் என்கிறார். "நான் சும் வாக்கு மாற்றிய வீடியோ 15 ஆம் திகதி இணைத்தேன், பராமரிப்பில் போய் விட்டது" என ஒரு கயிறு திரிக்கலாம். 2. இப்பவே "யாழ் அரச அதிபர் நேர்மையான தேர்தல் அலுவலர் அல்ல.." என்று கதையைக் கட்டி விடலாம் 3. சுமந்திரனோடு "பிஸ்ரல் ஏந்தி வந்த கடை வாயிற்காப்பாளர்" வாக்கை மாற்றி விட்டார் என்று இன்னொரு இணையத்தில் பொறுக்கிய படத்தை இறக்கி விடலாம்!
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
ஒமோம், அந்த இடத்திலேயே விட்டுட்டு வேற விசயங்களைக் கதைக்க வேணும்😂! #கிறீஸ் போத்தல்
-
தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
சிறிதரனை விட சுமந்திரனை எதிர்ப்பீர்கள் என்று தெரியும், நீங்கள் மட்டுமல்ல, இங்கே இருக்கும் "சுமந்திரன் லவ்வர்ஸின்" நிலையும் அதுவே. இதையெல்லாம் தாயக மக்கள் பார்க்கவில்லை, கணக்கிலெடுப்பதில்லை. அங்கேயிருக்கும் மக்களுக்கு விளங்கிய படி, சிறிதரன் தமிழர்களிடையே மிகப் பெரிய ஊழல் அரசியல்வாதி. வெளிநாட்டு தமிழரின் உதவிகளில் மூக்கை நுழைத்து செல்வாக்கு செலுத்துவது முதல், அரச அதிகாரிகளின் நியமனத்தில் தனது செல்வாக்கினால் பதவி நீக்கங்கள், இடமாற்றங்கள் என உள்ளூரில் பிரபலமானவர் சிறிதரன். இப்போது ஜேவிபியின் சார்பில் தேர்தலில் நிற்கும் சில முன்னாள் அரச பணியாளர்கள் கூட சிறிதரனின் ஊழலால் பாதிக்கப் பட்டு, ஜேவிபியின் ஊழியர் சங்கத்தினால் காப்பாற்றப் பட்டோர் என்றால், சிறிதரனின் செயல்களால் நீங்கள் காக்க முனையும் so-called "தமிழ் தேசியம்" மீதான விளைவுகள் புரிய வேண்டும். இந்த "பெட்டி மாறியது, குட்டி மாறியது" என்பதெல்லாம் "சசிகலா வாக்குகளை சுமந்திரன் தூக்கி வென்றார்" என்பது போன்ற வட்சப் அலட்டல்கள். அலட்ட உதவும், ஆனால் தாயக அரசியலுக்கு இதனால் ஒரு விளைவும் இல்லை.
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
பின்கதை என்னவாக இருந்தாலும், குழந்தையையும், தாயையும் தாக்கியது மிகவும் தவறான செயல். பிள்ளை நலமாக இருக்கிறதாமா?
-
தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
ஏன்? வீட்டுக்கு வாக்களிக்க விரும்புவோர் சுமந்திரன் உட்பட தனக்கு விருப்பமான ஒருவருக்கு அளிக்கலாம் அல்லவா? இவ்வளவு நாளும் சிறிதரன் பா.உவாக இருந்து சம்பாதித்த பார் வருமானம் போதாதாமா😂?
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
சுமந்திரனும், அவர் மனைவியும் தென்னிந்திய திருச்சபையின் யாழ் மாவட்டப் பிரிவில் (Diocese)பதவிகளில் இருக்கிறார்கள். இப்போதும் சுமந்திரன் அந்தப் பதவிகளில் இருக்கிறாரா தெரியவில்லை, ஆனால் மனைவி இருக்கக் கூடும். அப்படி இருக்கும் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து மாதாந்தம் அங்கிலிக்கன் மிஷன் பணம் அனுப்பினால் அது அதிசயம் இல்லை. இங்கே சச்சியர் சொல்வது, அது "சுமந்திரனுக்கு மனைவி பெயரில் வருகிறது, அதை சுமந்திரன் மதம் மாற்றப் பாவிக்கிறார்" என. ஏற்கனவே குடியேறிகள் மீது காண்டில் இருந்த அமெரிக்கக் குடிகளை நோக்கி , ட்ரம்ப் குடியேறிகள் பற்றி பொய்களை அவிழ்த்து விட்டது போல இதுவும் "சுமந்திரன் லவ்வர்ஸ்"😎 என்ற சிறுகுழுவை நோக்கி எறியப் பட்ட red meat மட்டுமே.