Everything posted by Justin
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
நன்றி ஏராளன். பொலித்தீனுக்குப் பதிலாக ஓலையை நெருக்கடி காலத்தில் பயன்படுத்தியது கூட ஒரு நல்ல மாற்றீடாகத் தெரியவில்லை. துளைகள் கொண்ட தார் ரோட்டின் மேற்படை தண்ணீரை அனுமதிக்கும், அது கீழே சென்று மண்ணை நெகிழ்வாக்கும். இரண்டு விளைவுகள் ஏற்படலாம் இதனால்: பாவனையின் போது வீதி buckle ஆகும், சகல படைகளுக்கும் ஊடாக வெடிப்பு ஏற்படும். மீள வீதி திருத்த வேண்டும். சில சமயம், நெகிழ்வான மண் அடர்த்தியிழந்து அந்த இடத்தை விட்டு அகன்றால் வீதியின் கீழே sinkhole உருவாகும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
உள்ளக ஆபத்து அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்த தேசத்திற்கு வந்தாலும் என்ன செய்ய வேண்டுமென்று யாப்பில் எழுதியிருக்கும். இப்போதும் ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது seditious conspiracy குற்றம் நீதிமன்றில் விசாரணை செய்து நிரூபணமாகி சிறையில் இருக்கிறார், நிலத்தின் கீழ் சித்திரவதைக் கூடத்தில் அல்ல😎. இப்ப இவை பற்றியா பேசுகிறோம்? ஒரு தனிக் குடும்பம் - அதுவும் சோசலிஸ்ட் பாத் கட்சி என்று கட்சிப் பெயரில் சோசலிசம் வைத்துக் கொண்டு- தான் ஆட்சியில் இருக்க செய்த படுகொலைகளைப் பேசுகிறோம். இதையெல்லாம் "சகஜமயப்படுத்த" நீங்கள், உங்களுக்கு பின்னால் இருந்து உசுப்பேத்த ஒருவர்😂. உங்கள் போன்ற போலிப் புத்திஜீவிகளால் தான் உலகம் இன்று ட்ரம்ப்,புரின், கிம், பராஜ், லீ பென் போன்ற ஆட்களையெல்லாம் "விடுதலை வீரர்களாகக்" கொண்டாடும் நிலையில் நிற்கிறது. இந்த முட்டாள் தனங்களை தமிழ் சமூகத்திலும் அறிமுகம் செய்தால் இன்னும் ஒரு தலைமுறையில் நம் கதையும் கந்தல் தான்!
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
நான் அறிந்தவரை பொலித்தீன் பலகாலம் அழியாமல் நிலைத்திருக்கும் (அதனால் தான் இப்போது சூழல் பாதுகாப்புக் கருதி பாவனையைத் தடை செய்கிறார்கள்). தாவரத்தின் பாகமான ஓலை உக்கி அப்படியே சேதனப் பொருளாக மாறி விடும். அப்படியானால் என்ன நோக்கத்திற்காக பொலித்தீனை காவோலையால் ஈடு செய்கிறார்கள் என அறிந்து சொல்ல முடியுமா?
- வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் ; பாதிக்கப்பட்டவரின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார்
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
இது, சத்தியமூர்த்தியோடு சேர்ந்து ஊழல் செய்த யாராவது விசில் ஊதும் வரை, சாத்தியமில்லாத விடயம். தாயகத்தில் ஊழல் விடயங்களில் குழுவாக ஈடுபடுவர். பதவி நிலையில் சத்தியமூர்த்திக்கு மேலே இருப்பவரும் செய்வார், கீழே இருப்பவரும் செய்வார். எல்லோரும் மௌனமாக இருந்து ஒருவரையொருவர் காப்பாற்றுவர். யாழ் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபரைப் பிடித்தது போல, யாராவது இரகசிய ஒலி/ஒளிப் பதிவு மூலம் தான் இவர் போன்றவர்களை மாட்ட வைக்க முடியும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அருமையான "சமப்படுத்தல்" செய்திருக்கிறீர்கள். "புரின் காதல்" முற்றினால் - அதுவும் புரின் புரியன்மாருக்கு Red Bull , மன்னிக்கவும், Red Pill முழுங்கினால்- இப்படி முரட்டு முட்டுக் கொடுக்கும் பலம் வந்து விடுகிறதென நினைக்கிறேன்😎. குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது வானத்தில் இருந்து இரசாயன ஆயுதம் வீசிய, ஹிற்லருக்கு இணையான ஒருவர் அசாத்- இவர் சிறுபான்மையினரான அலவைற்றுகளுக்காகவும், ஷியாக்களுக்காகவும் இதைச் செய்யவில்லை. "அசாத்" குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகச் செய்தவையே இந்த மனித குலத்திற்கெதிரான செயல்கள்.
-
திண்ணை
நாதத்தின் அவதாரைக் கனவில் கண்டீர்களா? அல்லது "நாதம்" என்று ஒருவர் அறிமுகம் செய்து கொண்டாரா கனவில்? ஒரு "கனவியல்" ஆராய்ச்சிக்காகத் தான் கேக்கிறேன்😎
-
திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு
லெப்ரோஸ்பைறோசிஸ் வைரஸ் அல்ல, பக்ரீரியா. இதனால் தான் இதைக் கட்டுப் படுத்துவது இலகு. 1. குளோரின் போட்ட தன்ணீரை மட்டுமே குளிக்கப் பாவியுங்கள். 2. கொதித்தாறிய தண்ணீரை மட்டும் குடியுங்கள். 3. நீர்ப்பாசன வாய்க்கால், ஏரி, குளங்களில் குளிக்காதீர்கள். 4. காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவரைப் பாருங்கள். மூன்றாம் நாள் வரை காத்திருந்தால் சிறுநீரகம் பாதிக்கப் படும், மீள்வது கடினம். சிகிச்சை மிகவும் இலகு முதல் நாளே ஆரம்பித்தால்.
-
திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு
இலங்கையில் காலாகாலமாக இருக்கும் எலிக்காய்ச்சலை (Leptospirosis) இரத்த மாதிரியில் இருந்து கண்டறியும் பரிசோதனைகளும் பல ஆண்டுகளாக இருக்கின்றன. ஆள் உயிரோடிருக்கும் போதே ஒரு நாளில் கண்டறியக் கூடிய பரிசோதனை இது. ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்? கண்டறிய முடியா விட்டாலும் கூட சிகிச்சை மிகவும் இலகுவானது. அனேகமான பென்சிலின், cephalosporin வகைகளே வேலை செய்யும்.
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள்
"உண்மையைச் சொல்கிறோம், சிவப்புக் குளிசையை அப்படியே முழுங்குங்கோ" என்று போட்டிருக்கிறார்கள். அப்படியே சாப்பிடுகிறார்கள்😂! 👇 "...Like in the ground-breaking movie, SouthFront offers you the choice of taking the “red pill”. Our long-term activity has formed a growing community of like-minded people seeking the truth. Accept the truth, participate in Southfront, and swallow the red pill..."😎
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதை சத்தியமூர்த்தியிடம் கேட்க வேண்டும். பணிப்பாளர் தரத்தில் இருப்பவர் அமைச்சு அனுமதி பெற்றுப் பேச வேண்டுமென்று விதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், இதே ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கில் தற்போது நடந்து வரும் காய்ச்சல் மரணங்கள் தொடர்பிலும் பேசுகிறார், எனவே "மருத்துவமனையைப் பாதிக்கும் எல்லாம் பற்றி மக்களுக்குத் தெளிவு படுத்தினேன்" என்று அவர் சொன்னால் அமைச்சும் எதுவும் செய்யாது. நிற்க. இப்ப அர்ச்சுனா விசர்கூத்தாடினதை மறைக்க சத்தியமூர்த்தியின் இந்த நடவடிக்கையைப் பெரிய கோடாகக் காட்ட முயல்கிறீர்களா😂?
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
யாழ்ப்பாண பா.உ யாழ் மருத்துவமனைகளுக்குள் வரலாம். பா.உ மட்டுமல்ல, எவரும் வெளிநோயாளர் போகக் கூடிய இடம் வரை வரலாம். ஆனால், மருத்துவமனைப் பொறுப்பாளரின் அனுமதியில்லாமல் விடுதியுட்பட்ட உள் பகுதிகளுக்கு யாரும் போக முடியாது. ஏன்? அந்தக் கட்டிடத்திற்குள் இருப்போரின் நலனுக்கு பொறுப்பாளர் தான் பொறுப்பு. "சந்திப்பு நேரம் நியமித்த பின்னர் வாருங்கள்" என்கிறார் சத்தியமூர்த்தி. அதுவே முறை. சாதாரண மக்களை விட, பா.உக்களுக்கு ஏராளமான சலுகைகள் (privileges) பாராளுமன்றத்தின் உள்ளேயும், பா. உ கடமையை செய்யும் போது பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருக்கின்றன. சும்மா திறந்திருக்கும் கட்டிடங்களுக்குள் நுழைந்து பா.உக்கள் "கடமை செய்கிறேன்" என்று "சலுகை" கேட்க முடியாது. உண்மையில், அர்ச்சுனாவைப் பாராளுமன்றம் அனுப்பிய வாக்காளர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். Elections have consequences😎!
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம். சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்பாடு யாழ் மக்களிடமிருந்து கிடைத்தால், அவர் நேரே முறைப்பாடு கிடைத்த இடத்திற்குப் போகலாம் என்று இலங்கை அரசியல் அமைப்பில் எழுதியிருக்கும் என நான் நம்பவில்லை. அர்ச்சுனா செய்திருக்க வேண்டியது, ஒரு கடிதம் அல்லது சந்திப்பு மூலம் சத்தியமூர்த்தியின் மேலதிகாரியான சுகாதார அமைச்சுக்கு அறிவிப்பது தான். யாராவது மெர்வின் சில்வாவிற்கு ரூபவாகினியில் நடந்ததை அர்ச்சுனா அவர்களுக்கு நினைவூட்டினால் நல்லது என நினைக்கிறேன். பி.கு: இது சத்தியமூர்த்தியின் செயலின்மையை ஆதரிக்கும் கருத்தல்ல. ஆனால், அவர் இந்த விடயத்தில் அர்ச்சுனாவை நடத்திய விதம் சட்ட விதிகளின் படி சரியானது.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஓ..அது தான் "லிஸ்ற் வந்திற்றா, லிஸ்ற் வந்திற்றா" என்று இலங்கையில் ஏ.எல் ரிசல்ட்டுக்காக ஏங்கும் மாணவன் போல அலைகிறார்களா?🤣😂
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இவை மிக முக்கியமான கருத்துக்கள், மீள மீள இங்கே பலராலும் வலியுறுத்தப் பட்டிருந்தாலும், இதைக் கவனிக்காமல் அடுத்த தலைமுறையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்க வேண்டுமென்று "வனைதல்-molding" முயற்சியில் இருக்கிறார்கள். "புனிதம் செய்கிறோம்" என்ற போர்வையில் , பொய் வரலாற்றைக் கூட பரப்பும் முயற்சிகள் நடக்கின்றன. உதாரணமாக, மிகுந்த உணர்வோடு வளவன் எழுதிய கருத்தில் "புலிகள் உட்பட பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டனர்.." என்று இருக்கிறது. இது எவ்வளவு உண்மை? 1987 இல் இந்திய இராணுவம் பலாலியில் வந்திறங்கிய போது வீடு வீடாகப் புலிகளின் அரசியற்பிரிவினர் சென்று மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்தது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு நினைவிருக்கும். சுது மலையில் பிரபாகரனின் உரையில் கூட முழுமையாக ஏற்றுக் கொள்ளல் இருக்கவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக, அமிர் யாரால், ஏன் கொல்லப் பட்டார்? இவையெல்லாம், '87 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதன் அடையாளங்கள் என்றால், வரலாறு "சுத்தம்" என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
சிங்களம் தெரியாது. எனவே, தற்போது கூட சமூக வலை ஊடகங்களிலும், செய்திகளின் பின்னூட்டமாகவும் சிங்கள மக்கள் எழுதுவதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது. பின்னர் எப்படி பெரும்பாலான சிங்களவர்களின் "அப்பாவித் தனத்திற்கு" அத்தாட்சி கொடுக்கிறீர்கள்? குறைந்த பட்சம் இலங்கையில் இருந்த போது சிங்களப் பகுதிகளில் வசித்தாவது அனுபவம் பெற்றிருக்கிறீர்களா? இல்லையென்று தான் ஊகிக்கிறேன். பின்னர் எப்படி ஐயா இப்படி பந்தி பந்தியாக அளக்கிறீர்கள்😂?
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மருத்துவர் சத்தியமூர்த்திக்கு மடியில் கனம் இருக்கிறது. யாழ் மருத்துவமனைக்கு என சேர்க்கப் பட்ட நன்கொடைகளை தன்னுடைய தனியார் மருத்துவ மனைக்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. கிடைத்த நன்கொடை பற்றிய தகவல்களை வெளியிட்டே இந்த குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்கலாம். சிறு குழந்தையின் கை அகற்றப் பட்ட கேஸ் பற்றிய விசாரணைக்கு என்ன ஆயிற்று? எல்லாவற்றையும் மௌனம் மூலம் மறக்கடிக்க முயற்சிக்கிறார் போல தெரிகிறது.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
எனக்கு விளக்கிய போது யாழ் களத்தில் உங்கள் "எல்லை" உங்களுக்கும் போல விளங்கியிருக்குமென நினைக்கிறேன், அதைப் பின்பற்றினால் மகிழ்ச்சி! இந்தக் குறிப்பிட்ட விடயத்தைப் பொறுத்தவரை, இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய திரியில் அதன் கடந்த காலம் பற்றி ஐலன்ட் எழுதியிருப்பது பொருத்தமானதே. அதைப் "பேசுவதால் இப்போது பயனில்லை" என்பதில் எனக்கு முழு உடன்பாடில்லை. அப்போது தூக்கியெறிந்தது போல இப்போதும் நடந்து கொள்ளக் கூடாதென்ற கருத்து அங்கே வெளிப்படுகிறதல்லவா? அது தான் ஐலன்ட் கருத்தின் பயன். "இதைப் பேசுவதால் பிரபாகரனையும், மாவீரர்களையும் கொச்சைப் படுத்தினார்கள், நெஞ்சில் மிதித்தார்கள்" என்று நீங்கள் சொல்வது உங்கள் உணர்ச்சிமயமான புரிதலின் பாற்பட்டது. உங்கள் கருத்திற்கு ஆதரவு தந்திருப்போர் அனைவருமே நியாயமான விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாமல் ஒரு மூலையில் முடங்கும் போது இறுதி அஸ்திரமாக "மாவீரர்கள், போராளிகள், பிரபாகரன்" கொச்சை என்று சவுண்ட் விட்ட படி எஸ்கேப் ஆகும் உறவுகள் தான்😎. என் அபிப்பிராயத்தில், இப்படியான செயல்கள் செய்வோர் தான் மேற்சொன்ன தரப்புகளை அதிகம் மலினப் படுத்துகிறார்கள்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
😂வளவனும், ரஞ்சித்தும் இன்னும் ஏதாவது பாஸ் அலுவலகம் நடத்துகிறீர்களா? "அனுமதி" யெல்லாம் யார் உங்களிடம் கேட்டது அல்லது நீங்கள் இருவரும் யார் அதைக் கொடுப்பதற்கு?
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
இனி அசாத்தும் "சிரியாவை வளர்த்த முன்னுதாரண ஆட்சியாளர்" என்று மேற்கு நாடுகளில் "கஷ்டப் பட்டு, இஷ்டமில்லாமல்" வாழும் எங்கள் தமிழ் குடிகளால் புகழப் படுவார் என நினைக்கிறேன்😎. சீரியசாகப் பார்த்தால்: அப்பன் அசாத்தின் மேற்குலகோடு இருந்த தொடர்பால், பிரிட்டனில் மேற்படிப்புப் படித்து கண் மருத்துவரான ஒருவர் சின்ன அசாத். பிரிட்டன் பிரஜையான மனைவி அஸ்மா 2011 இன் பின்னரும் கூட இங்கிலாந்தில் தான் வசித்தாரென நினைக்கிறேன். உள்நாட்டு யுத்த ஆரம்பத்தில், இந்த "கண் மருத்துவரின்" கட்டளையின் படி குளோரின் வாயுத் தாக்குதல் எதிர் தரப்பின் கட்டுப் பாட்டில் இருந்த மக்கள் மீது நடத்தப் பட்டது. குளோரின் வாயுவின் விளைவினால் மூச்சுத் திணறும் குழந்தைகளை மக்கள் தண்ணீரினால் கழுவும் காட்சிகள் வெளிவந்தன. "Do no harm" என்ற அடிப்படை மருத்துவ அறத்தினையே பின்பற்ற இயலாத இந்த இழிபிறவியை, கடாபியைப் போலவே தெருவில் இழுத்து வந்து சுட்டிருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
ரசோதரன் சொன்னது போல இது அறம் சம்பந்தப் பட்ட விடயம், சட்டப் படி முறையாக சாராயக் கடை வைத்திருப்போரை எதுவும் செய்ய இயலாது. சாராயக் கடை திறப்பதை சட்ட விரோதமாக்க வேண்டுமானால் சாராயப் பாவனையை சட்ட விரோதமாக்க வேண்டும். இதை யாராவது செய்திருக்கிறார்களா? ஆம், அமெரிக்காவில் 1920 களில் மதுத் தடை (prohibition) முழுநாட்டிற்குமாக அரசியலைப்பு மாற்றம் மூலம் வந்தது. அடுத்து நடந்த சம்பவங்கள் பற்றி இன்றும் புத்தகங்களும், திரைப் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. Moonshine எனப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் நபர்கள் பெருகினார்கள். இன்றும் கூட மலைவாழ் மக்கள் காய்ச்சுகிறார்கள். இன்னொரு பக்கம், மதுத் தடை இல்லாத கனடாவில் இருந்து கள்ளமாக கனேடிய விஸ்கியைக் கடத்தி வரும் bootlegging முதலாளிகள் பெருகினார்கள். சிலர் கனடாவில் இருந்து molasses எனப்படும் கால்னடைத் தீவனப் பொருளைக் கடத்தி வந்து உள்நாட்டில் கள்ளச சாராயம் காய்ச்சினார்கள். இவ்வளவு ஏன்? புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த வன்னியில் கூட உள்ளூர் சாராயம் உற்பத்தி செய்யப் பட்டது. தடை சாத்தியமில்லையென்ற காரணத்தால். அந்த உள்ளூர் சாராயம் கிடைத்த போதே, கசிப்புக் காய்ச்சும் ஆட்களும் அங்கே இருந்தார்கள். எனவே, முழுத்தடை சாத்தியமில்லை.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
"நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை. பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஒரு பாரிய மருத்துவ காப்புறுதிக் கம்பனியின் தலைமை நிர்வாகியை குறி வைத்துச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பயன்படுத்திய ரவையின் கோதுகளில், deny, defend, depose என்ற சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இவை, அமெரிக்காவின் இலாப நோக்கம் கொண்ட மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள், premium பணத்தை வாங்கிக் கொண்டு, நோயாளியின் மருத்துவத் தேவைக்கு உதவாமல் இலாபமீட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒரு தொழில் தந்திரம். இப்படி நோயாளிகளுக்கு சேவைகள் (claims) மறுக்கப் படுவதால் வரும் இலாபத்தில் பெரும்பகுதி, கொல்லப் பட்டவர் போன்ற நிறைவேற்று அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான போனசாக வழங்கப் படும். பாதிக்கப் பட்ட நோயாளிகளின் சார்பில் யாரோ சுட்டிருக்கிறார்கள். இனி அந்த மில்லியன் டொலர் போனசை என்ன செய்வது? தங்கத்தால் இழைத்த சவப்பெட்டி செய்வதா? எனவே, இளையோர் கவனிக்க வேண்டியது: வருமானம் எவ்வளவு வருகிறது என்பதை விட, வருமானம் ஈட்டிக் கொண்டே இரவில் நிம்மதியாக உறக்கம் வரும் வகையான தொழில்களைத் தேடிக் கொள்ளுங்கள்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
போன மாதம் வரையில் யாழ் திரிகளில் "ஆதாரம்" கேட்பது ஓரிருவர் தான்! இப்ப எல்லாரும் "ஆதார புருஷர்களாக" 😎மாறி விட்டார்கள். மகிழ்ச்சியடைவதா அல்லது "இனி நம் தொழில் என்னவாகிறது?" என்று அச்சமைடைவதா? என்று தெரியவில்லை!😂
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
ம்..அப்ப நான் தான் எரிஞ்சு போன LED மாதிரி இது விளங்காமல் இருந்திருக்கிறன் போல! ஆனால், இந்த விசாரணையெல்லாம் இவர்களின் அரசு செய்யாதென ஊகிக்கிறேன். இப்படி ஒரு வதந்தி நிலையிலேயே எல்லாரையும் வைத்திருப்பது இவர்களுக்கு இலாபம். எனவே, செய்ய மாட்டார்கள். எல்லோரும் "பார் மகளே பார்..." என்று அல்லாடிக் கொண்டிருக்க அடுத்த தேர்தலும் வந்து விடும்😂!
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
சரியான தகவல். சிபாரிசு செய்தவர்கள் பெயரை RIA மூலம் தான் பெற முடியும். நேற்று வணங்காமுடி இணைத்திருந்த இலங்கை மதுவரித் திணைக்கள இணைப்பை எல்லோரும் கடந்து போய் விட்டு இன்னும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இணைப்பில் போய் ஒருவர் மது விற்பனை அனுமதிக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னவென்று பார்த்தால் அதில் பா.உ அல்லது உள்ளூர் அதிகாரிகள் சம்பந்தமாக எதுவும் இல்லை. விண்ணப்ப தாரி குற்றவரலாறு இல்லாதவர் என்று விண்ணப்பதாரி சத்தியக் கடதாசி (affidavit) முடிக்க வேண்டுமென்று மட்டும் தான் இருக்கிறது. இலங்கையில் சத்தியக் கடதாசி முடிக்க சமாதான நீதவான் போதும். பா. உ அவசியமில்லை. என் கேள்வி: வேலை வாய்ப்பு, வெளிநாட்டில் அகதி அந்தஸ்து போன்றவற்றில் இருப்பது போல பா. உக்கள் சிபார்சுக் கடிதம் கொடுக்கும் நடைமுறை ஏதாவது அலுவலக ரீதியாக இல்லாமல் மேசைக்குக் கீழ் நடக்கும் பரிமாற்றமாக நடக்கிறதா?