Everything posted by Justin
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
டக்ளசை பொது மக்கள் விரட்டுவதையெல்லாம் பாதுகாப்புப் பிரச்சினையெனக் காட்ட முயற்சிக்கலாம் தான். ஆனால், 2009 இற்குப் பின்னர் டக்ளஸ் மீது ஒரு கொலை முயற்சியும் நடைபெறவில்லை. 2009 இற்கு முன்னர், பல முயற்சிகள் (விளங்குது😎! இதையெல்லாம் மறந்து போடோணும், இல்லாட்டிக் கஷ்டம் தான்)
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இந்த நித்திரை போல நடிக்கும் உறவுகளுக்கும், மூளை கழுவப் பட்ட சீமான் ஆதரவாளர்களுக்கும் எதையும் நிரூபித்து வெல்லும் வரை கட்டை வேகாதெனில், உங்களை தோழர் லெனின் போல போர்மலினில் தான் வைத்திருக்க வேண்டும்😂!
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
சரி! ஆனால் என் கேள்வி, தமிழ் நாட்டுத் தமிழர் ஏன் வீதிக்கு இறங்க வேண்டும்? இங்கே தமிழ் நாட்டுத் தமிழரைத் திட்டிக் கொண்டிருக்கும் சீமான் தம்பிகளே இறங்கவில்லை, மாறாக ஏறினார்கள் 😎: கிளாலிப் படகில், உழவு யந்திரத்தில், ட்ரெயினில், விமானத்தில்! இப்ப வந்து "வயசுக்கு வராமையால் ஏறினேன்" என்று சொல்லிக் கொண்டு தமிழ் நாட்டுத் தமிழர் எல்லோரும் ஈழவருக்காக தீ குளிக்க வேணுமெண்டு அட்வைஸ் வேற. இன்னொரு தரப்பு : ஆமி ஊருக்குள் நுழைய முன்னரே "ஆமி என்னைத் தேடினது" என்று வந்த ஆட்கள். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வெளிநாட்டில் இருந்து இணையப் போராளிகளாக படம் காட்டும் குழு தான் தமிழ் நாட்டுத் தமிழர் ஏதோ கடமை தவறி விட்டதாகக் காட்டாப்புக் காட்டுகின்றனர்!
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
மிகவும் துயரமான இந்த செய்தியில் என்ன எழுதுவது என்று கடந்து போய்க் கொண்டிருந்தேன், நிழலியின் கருத்தைப் பார்த்ததும் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். முதலில், ஏன் நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக ஓட வேண்டிய தேவை எழுகிறதென எனக்குப் புரிவதில்லை. விஞ்ஞான முறைப்படி, இன்ன வேகத்தில் போகும் வாகனம், பிறேக் போட்டால் இவ்வளவு தூரத்தில் ஓய்வுக்கு வரும் என்று கணக்கிட்டுத் தான் வேகக் கட்டுப் பாடுகளை நிர்ணயிக்கிறார்கள். பொலிசைக் கண்டு பிடிக்கும் றேடாரை அமேசனில் வாங்கிப் பொருத்திக் கொண்டு, பொலிஸ் இல்லாத இடங்களில் மிகவேகமாக ஓடும் சாரதிகள் புத்திசாலிகள் என்று தான் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களைப் போன்ற மூளை கெட்ட முட்டாள்கள் இல்லையென்று நான் நினைத்துக் கொள்வேன். இரண்டாவது, இறந்த ஒருவரின் உடலின் படத்தை, காணொளியை இணையத்தில் பரப்புவது அவமரியாதையான செயல். எதிர்காலத்தில், அந்தக் குடும்பத்தின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடிய ஒரு இழி செயல். யார் இதைச் செய்கிறார்கள்?
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சீமானிடம் ஈழப் போராட்ட வரலாறு கற்றோர் நம்புவது அதிசயமில்லை😂! இதற்கான பதில் ரசோதரன் ஏற்கனவே விளக்கி விட்டார், தேடி வாசிக்கலாம். அவரை விட தெளிவாக "விளக்க" வேண்டுமானால் நான் புளியும், தேங்காய்ப் பொச்சும் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்து தான் உங்களை "வெளக்க" முடியும்😎! Not worth it!
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
இது போன்ற வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்கள் யாழ் விதி மீறலாக இருக்கலாம். இப்படியாக வெளிநாட்டில் இருந்து வன்முறையை ஊக்குவித்து, இன்னும் ஒரு படி மேலே போய் அங்கே கொலை செய்ய முயற்சியும் செய்திருக்கிறார்கள். சந்தேக நபர்கள் சிலர் சிறையில் இருக்கிறார்கள். எனவே சுமந்திரனுக்குப் பாதுகாப்பு அவசியம் தான் என்பது என் கருத்து!
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
மன்னர் மன்னனுக்கு அவரது புத்தகங்களுக்காக விருது கொடுக்கப் பட்டது. அந்தப் புத்தகங்களில் பல, களத்திற்குப் போகாமல் இணையக் குப்பையில் தேடி தனக்கு உகந்த சில விடயங்களை வைத்து எழுதிய புத்தகங்கள். விருது கொடுத்திருக்கவே கூடாது, தவறு கண்டு பிடிக்கப் பட்டதும் மீள வாங்கி விட்டார்கள். மன்னர் மன்னன் தகவல் தொழில் நுட்பமும், மீடியா தொழில் நுட்பமும் படித்து விட்டு இணையத்தளங்கள் நடத்தும், நாணயங்கள் சேகரிப்பவர். இவரை "வரலாற்று ஆய்வாளர்" என்று அழைப்பது எங்கள் ஊரில் மருத்துவ மனையில் மருந்து கட்டுபவரை "மருத்துவர்" என்று அழைப்பது போன்றது😂.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இது என்ன வகை நடிப்பு என விளங்கவில்லை விசுகர்! உங்கள் சீமான் மீதான அபிமானம் அவர் "புலிகளை, பிரபாகரனை தன் பேச்சுகள் வழியாக தலை மேல் சுமக்கிறார்" என்பதால் இருக்கலாம், இப்படியான பல போலிகளை நீங்கள் சில இடங்களில் ஆதரித்து நின்றிருக்கிறீர்கள் என்பதால் இது எதிர்பார்க்கக் கூடியதே! ஆனால், சீமான் ஏனைய தமிழக கட்சிகள் போல அல்லாமல், ஈழத்தவரையும் பெரும்பாலான தமிழக மக்களையும் பகை மூட்டி, அதன் மூலம் பணமும் , பதவியும், இலவச தேர்தல் விளம்பரமும் தேடுகிறார். "எல்லோரும் எமக்கு வேண்டும்" என்ற உங்கள் காரணம் உண்மையாக இருந்தால், சீமானைக் கண்டிக்கும் தரப்பில் தான் நீங்கள் இருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. "ஒருவனது வாய்ப் பேச்சுத் தான் முக்கியம், பின்னணி, உள்நோக்கம் பற்றி அக்கறையில்லை" என்று இருக்கும் அளவுக்கு கலிபர் இல்லாதவர் அல்ல நீங்கள். எனவே இது நடிப்புப் போலத் தான் எனக்குப் படுகிறது.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இதுக்கு கேள்வி ஏன்? "பொட்டம்மானா? சீமானா?" என்று வந்த போதே "சீமான்" என்று நின்ற சின்னத்திரையில் போராட்டம் பார்த்த இளவல்களுக்கு இந்தத் தெரிவு no brainer 😂!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தம்பி, என்ன திரும்பவும் "அந்த மூலைக்க" போய் நிக்கிறியள்😂? இதைத் தானே என்னிடம் கேட்டு, நான் திருப்பி உங்களிடம் கேட்க, "நான் வயசுக்கு வராததால் குடும்பத்தோடு வெளிக்கிட்டு ஐரோப்பா வந்தேன்😎!" என்று பம்மினனீங்கள்? இப்ப என்னடாவெண்டால் வாலிக்கு "முக்கிக் காட்டுறன்" என்று நிக்கிறியள்? என் அபிப்பிராயப் படி, போராடப் போகாமல் வெளிக்கிட்டு வந்திருந்தாலும் கூட உங்களுக்கு புலிகள், போராளிகள், போராட்டம் பற்றிக் கதைக்க ஈழவர் என்ற முறையில் பிறப்புரிமை இருக்கிறது. ஆனால், பதவிக்கு வாயை விற்று விட்டு இருக்கும் சீமான் போன்ற சாக்கடை அரசியல் வாதிகளுக்கு அந்த உரிமை இல்லை!
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
உறவே, இந்த திமுக உருவாக்கிய செஞ்சொற்களை யாராவது ஈழவரிடையே காவி வந்து பயன்படுத்திய உதாரணங்களை 2010 இற்கு முன்னர் காட்ட முடியுமா? நான் 2007 இல் இருந்து யாழில் இருக்கிறேன். இந்தியக் கட்சிகள் தங்களுக்கிடையே பாவிக்கும் வசவுகளை யார் கணக்கிலெடுத்தார்கள்? 2010 இன் பின்னர் என்ன நடந்தது என்று அப்பாவியாகக் கேட்காதீர்கள்😎!
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
படிப்பறிவற்ற மக்களிடம் நான் அறிந்தவரையில் திமுக இப்படியான தமிழ் பற்றிய, தமிழ் தொன்மை பற்றிய போலித்தகவல்களை வைத்து வாக்கும், செல்வாக்கும் பெறவில்லை (வேறு ஊழல்கள் சீமான், திமுக, அதிமுக எல்லோருக்கும் பொதுவானவை). எப்படித் தெரியும் எனக்கு? நானே, தமிழ் நாட்டு அரசின் தமிழ் சொல்லாக்க முயற்சிகளில் பல முறை பங்கு பற்றி, எப்படி உண்மையான தமிழ் வரலாற்றைப் பரப்புகிறார்கள் என்று அனுபவம் பெற்றதால் எனக்குத் தெரியும். இந்த செயல்பாடுகளோடு ஒப்பிடுகையில், மேலே ஏகலைவன் , மன்னர் மன்னன், மேலும் கு.இராசேந்திரனார் ஆகியோர் செய்வது தமிழுக்கு இருக்கும் தொன்மையையும் கேலிக்குள்ளாக்குவது மட்டும் தான். சீமான் ஒரு படி மேல் சென்று தமிழுக்கு பல வட்டார வழக்குகளை அறிமுகம் செய்து, அது உலகத் தமிழரிடையே பரவ வழி விட்டிருக்கிறார். பிசிறு, பிக்காளி..இவையெல்லாம் ஈழவரிடையேயும் தமிழ் வளர்க்கும் சொல்லாக்க முயற்சிகளே😎!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இப்போது தான் கட்டுரையை வாசித்திருக்கிறீர்கள் போல. அதில் இருக்கும் ஒவ்வொரு விடுதலைப் புலிகளின் ஊடகங்கள், பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை நீங்கள் வாசிக்க அனேகமாக திரி நூந்து விடும்😂. ஆனால், இன்னும் உங்களுக்கு concept பிடிபடவில்லை! தலைப்பில் "திராவிடப்" புலிகள் என்பதில் திராவிடம் மேற்கோள் குறிக்குள் தரப்பட்டிருக்கிறது. இதன் அர்த்தமாவது தமிழைப் பெயரில் வைத்திருக்கும் உங்களுக்குப் புரிந்ததா? இல்லையென்று தான் ஊகிக்கிறேன். மேலும் திராவிடம் என்பது ஆரம்பத்தில் புவியியல், மொழிக்குடும்பம் குறித்த ஒரு சொல் . அது பின்னாளில் எப்படி தமிழரிடையே முற்போக்கின் அடையாளமாக மாறியது என்பதை ரசோதரன் ஏற்கனவே எழுதி விட்டார், அதையும் வாசியுங்கள்.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
இது சரியான தகவல் தான்! குப்பனும் சுப்பனும் (மேலே ஏகலைவன் வந்த வாக்கில் அமரர் ஒரிசா பாலுவின் கண்டு பிடிப்புகள் பற்றி வீடியோ போட்டிருப்பது போல😎) யூரியூபில் கொட்டுவது தான் இனி நூல்களுக்கு இணையான ஊடகம்! இது போன்ற மாற்றங்களால் எதையும் சொந்தமாகத் தேடிப் பார்க்க வேண்டுமென நினைக்காத ஒரு சோம்பேறி, முட்டாள் தலைமுறையொன்று உருவாகிறது. இந்த மாற்றம் தான் தமிழ் நாட்டில் சீமான் போன்றோரையும், மேற்கில் ட்ரம்ப் தரவழிகளையும் பிரபல தலைவர்களாக வர வைக்கிறது!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ஒப்பீடு தவறு👎. மாற்றி டப்பிங் செய்த வீடியோவைக் கேட்டு ஒருவர் ஏமாறுவது வேறு. எ.தவின் பிரச்சினை வேறு. நான் அவதானித்த வரையில், அவர் திரியில் ஒரிஜினல் பதிவையும் வாசிப்பதில்லை, திரியின் "கருப்பொருள்" விளங்கிக் கொள்ளாமல் தடுமாறுவார். உதாரணமாகப் பாருங்கள்: கட்டுரையே சீமானின் கருத்துக்கு எதிர் வினையாக இருக்கிறது என்ற பொருள் விளங்காமல், நாம் தான் சீமானை இழுத்து வந்திருக்கிறோமென்று குற்றஞ் சாட்டுகிறார். இவ்வளவு விளக்கக் குறைவையும் வைத்துக் கொண்டு, எதிர் கருத்தாளரை, "நாய்" என்று மறைமுகமாக விளிக்கும் presence of mind வைத்திருப்பார்😂!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
😅உங்களுடனான உரையாடல் எப்போதுமே நேர விரயம் தான்! சீமானின் உருட்டை தனது முதல் வரியில் கட்டுரையாளர் சுட்டிக் காட்டியதை வாசிக்காமல் நாம் சீமானை இழுத்து வந்தோம் என்கிறீர்கள். "கட்டுரையின் மேற்கோள் எதுவும் உத்தியோக பூர்வம் இல்லை" என்றீர்கள். இப்போது விடுதலைப் புலிகள் இதழில் வரவில்லை என்கிறீர்கள். கிருபன் 7 மணி நேரங்கள் முன்னரே இணைப்பைத் தந்ததையும் கவனிக்காமல். எப்படித் தான் ஏனையோர் தரும் ஆதாரங்கள், கருத்துக்களை வாசிக்காமல் கருத்தெழுதும் போது கூட ஒரு தெனாவட்டோடு எழுத முடிகிறது உங்களுக்கு😂?
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
உங்களைப் போலவும் கோசான் போலவும் "தெளிந்த தண்ணீர்" மாதிரி எப்படி எழுதுவது என்று யோசிக்கிறேன், முயற்சிக்க வேண்டும். அருமையான விளக்கம்👍. ஒரு இனக்குழு தன் அடையாளத்தை சில சமயங்களில் வரித்துக் கொள்வதும், சில சமயங்களில் தூர வைப்பதும் எல்லா இடங்களிலும் சாதாரணமாக நிகழ்வது தான். இது கிடைக்கும் சாதக, பாதகங்களைப் பற்றிய முடிவு. உக்ரைனியர்களும், ரஷ்யர்களும் சிலாவியர்கள் (Slavs) என்ற பாரம்பரிய இன அடையாளம் உடையோர், ஆனால் உக்ரைனியர்கள் இந்த சிலாவிய அடையாளைத்தை அடக்கி, உக்ரைனிய அடையாளத்தை இன்று முன்னிறுத்த ரஷ்யாவின் மேலாண்மை அரசியல் காரணம். மறு பக்கம், சேர்பியர்கள், ரஷ்யாவின் உதவியைப் பெறுவதற்காக தாம் சிலாவியர் என்பதை முன்னிறுத்துவர். சேர்பியர்களுக்கு அருகில் வாழும் குரோசியர்களும் சிலாவிக் மக்களே. ஆனால், அவர்கள் "கத்தோலிக்க" அடையாளத்தையே முன்னிறுத்தியிருக்கின்றனர், சிலாவிய அடையாளத்தை அல்ல. இப்படிப் பல உதாரணங்கள். திராவிட அடையாளத்தை வசவுகளோடு தூக்கியெறிவதால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை நிகழும் என்று திராவிட எதிர்ப்பாளர்களால் இது வரை நிறுவ முடியவில்லை. நான் நினைக்கிறேன் இது வெறும் சீமான் பின்னால் செல்லும் செம்மறி ஆட்டுப் போக்கு, கருணாநிதி மீதான கோபம் என்பன சார்ந்து வரும் திராவிட எதிர்ப்பே. தேவையில்லாத ஆணி!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ம்ம்..நீங்கள் சீமான் ஆதரவாளர் இல்லாமல் இரு தரப்பையும் சாடும் ஒருவரென்றால் இந்த "பறக்கும் வசவு" 😂வந்திருக்காது என ஊகிக்கிறேன். உங்கள் கேள்வி (பதில் எதிர்பார்க்காத rhetoric கேள்வி) யின் அர்த்தமே "இந்தக் கட்டுரையில் இருப்பது நம்ப இயலாத விடயம்" என்று சுட்டிக் காட்டும் நோக்கமுடையதாகத் தான் எனக்கு விளங்கியது. என் படிப்பு என் மூளையை மழுங்கடித்து விட்டதால் இருக்கலாம், இனிப் "படிக்காமல்" இருக்க முயற்சிக்கிறேன்!😂
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
"பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார்.." 👆 எல்லா சீமான் ஆதரவாளர்கள் போலவே நீங்களும் கட்டுரையின் முதல் இரு வரிகளை வாசிக்காமல் வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஈழப் போராட்டத்தில் திராவிடப் பாரம்பரியத்தில் வந்த (அதே போல கம்யூனிசம், மாவோயிசம், ரிரோயிசம் வழி வந்த) நல்ல அம்சங்கள் ஒரு package ஆக உள்ளீர்க்கப் பட்டிருந்தன. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் "திராவிடத்தை நிராகரிப்போம்" என்று திரைமறைவில் கூட சொல்லப் பட்டதாக பதிவுகள் இல்லை! இதற்கான பதிலைத் தேட நீங்கள் கட்டுரையில் இருக்கும் மேற்கோள்களை வாசித்தால் போதும், எந்த சாக்கடையிலும் முங்கி முத்தெடுக்கத் தேவையில்லை. ஆனால், இப்படிச் செய்ய சீமான் விசிறிகளுக்கு முடியாதென்பதும் புரிகிறது. ஆதாரம் இல்லாமல் சொல்வது "சத்தியம்", மீறி ஆதாரம் யாரும் காட்டினால் அது "கக்கா" என்று கடந்து போவதே தீவிர சீமானிசம்😎!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ஏனெனில் அவர்கள் அனைவரும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள். திராவிட மக்களின் விடுதலைக்காகப் போராடவில்லை. இதில் உங்களுக்கே குழப்பம் இருந்தால், தமிழ் நாட்டில் 35 இலட்சம் பேர் சீமான் வாக்காளர்களாக இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை😂!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
தம்பி, இந்த "மின்சாரமில்லாத ஊரில் வளர்ந்தேன்" என்பது ஊர் விடயங்களை அறியாமல் இருப்பதற்கு வலுவான காரணமாகத் தெரியவில்லை. நான் கபொத உயர்தரம் பரீட்சை எழுதிய போது யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணை கூட இல்லை, தேங்காயெண்ணையில் மிதக்கும் திரி விளக்குத் தான். கோடு போட்ட பேப்பரில் அச்சாகி வரும் அறிவுக்களஞ்சியம் , வெளிச்சம் எல்லாம் அப்போதும் வெளிவந்து கொண்டிருந்தன. யாழ் நூலகம் 3 இடங்களில் இயங்கியது. 3 இடங்களும் வாசகர்களால் நிரம்பி வழிந்தன. இப்படியெல்லாம் நாம் உலகை அறிந்து கொண்டிருக்க நீங்கள் வந்து "கரண்ட் இல்லாமையால் விசயம் தெரியவில்லை" என்றால் என்ன கதை அப்பன் இது?
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
😂🤣திரி மாறி வந்து விட்டீர்களா? இந்தத் திரியில் தானே சீமானின் உருட்டைப் பற்றி வந்த கட்டுரை பற்றிப் பேசுக் கொண்டிருக்கிறோம்? விடுதலைப் புலிகள் யாருடைய அதிகார பூர்வமான பத்திரிகை? சீமான் தமிழ்நாட்டுத் தமிழருக்குத் தான் காதில் பூ வைக்கிறார் என்றால் ஈழத்தவரான உங்களுக்கும் வைத்திருக்கிறாரா?
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
😂🤣 ஏன் சீமானின் புலிகள் பற்றிய உருட்டைப் புறக்கணித்து விட்டு இதை வாசிக்க வேண்டும்? அத்தோடு சேர்த்து வாசித்தால் தான் கட்டுரையின் நோக்கமே விளங்கும். சீமானின் உருட்டுக்கு, "அப்படியாக புலிகள் திராவிடத்தை எதிர்த்தோர் அல்ல!" என்று ஆதாரம் தந்திருக்கிறார்கள். ஒரிஜினல் உருட்டல் காரர் சீமானை அப்படியே "இருட்டு பக்றவுண்டில்" தள்ளி விட்டு கட்டுரையாளர் திராவிட பெயின்ற் அடிக்கிறார் என்று நிறுவ இவ்வளவு குத்தி முறிவா ஐயா? இப்படியெல்லாமா றூம் போட்டு யோசிப்பீங்கள்😂?
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ஓம், புலிகள் பற்றிய திரிப்பிற்கு திமுக ஊதுகுழல் ஆதாரமாகக் காட்டியிருக்கும் அனேகமானவை புலிகளின் வெளியீடுகள். எனவே "திரிப்பிற்கு ஆதாரமான வெளிப்படுத்தல்களும் திரிப்பே!" என்று மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ள வேண்டியது தான்😎!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
சீமானின் ஒரு உருட்டை ஆதாரங்களுடன் ஒரு கட்டுரை சுட்டிக் காட்டும் இடத்தில், சீமானுக்கு ஆதரவாக எவரும் எழுதாவிட்டால், ஒருவராவது வந்து "எதையாவது" எழுத வேண்டும் என்பது என்ன மாதிரியான "கொள்கை" என்று எனக்குப் புரியவில்லை. "எங்களுக்குத் தெரிந்த புலிகளைப் பற்றி சீமான் பொய்யாக ஒரு திரிப்பை எங்களிடமே உருவாக்கி எங்களை தன் இலாபத்திற்காக திராவிடக் கட்சிகளோடு மோத விடுகிறார்" என்று பட்டவர்த்தனமாக ஏற்றுக் கொள்வது ஏன் இன்னும் கடினமாக இருக்கிறது?