Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. 😂 கொஞ்சம் மூச்செடுத்து விடுங்கள், இப்போது வாசியுங்கள். முதலில் கோசானையும், ஜஸ்ரினையும் கோத்து விட்டுக் கூத்துப் பார்க்கிற உங்கள் குதர்க்கப் பார்வையை நிராகரிக்கிறேன். எங்களிடையே அடிப்படை ஒற்றுமை ஒரு விடயத்தில் உண்டு: "எருமை மாடு பறக்கிறது" என்ற ரீதியிலான கருத்துகளைக் கண்டால் நேராகக் கேள்வி கேட்கும் பழக்கம் ஒன்றே அந்த ஒற்றுமை. (ஜஸ்ரினைப் பிடிக்காமல் போனதால், விஞ்ஞான அறிவையே தூக்கிக் கடாசி விட்டு நாசாவைக் குழுவாகப் போட்டுத் தாக்கும் அளவுக்கு குழுவாதம் இருக்கும் யாழ் உறவுகளை விட கோசான் ஜஸ்ரின் ஒற்றுமையொன்றும் ஆரோக்கியமற்ற குழுவாதம் அல்ல!) உங்கள் பிரச்சினை நானோ, குழுவாதமோ, இணைய இம்சையோ அல்ல. ஆதாரமேயில்லாத அண்டப் புழுகுகளையெல்லாம் சொலிட்டான கருத்தாக இங்கே பதிந்து விடுவீர்கள். கேள்வி கேட்டால் cyber bullying என்று புதிதாக நீங்கள் கண்டு பிடித்திருக்கும் சொற்களின் பின்னால் ஒளிந்து கொள்வீர்கள். இவையெல்லாம் ஆதாரமற்றவை என்று உணரும் பொதுப்புத்தி உங்களிடம் நிறையவே இருக்கிறது, ஆனாலும் ஒரு சராசரி தமிழ் நாட்டு அரசியல்வாதியின் தொடர் பொய்களை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இவற்றை பல வருடங்களாக யாழில் தொடர்ந்து பரப்பி வருகிறீர்கள். இதை முகநூல், இன்ஸ்ரா, ரிக் ரொக்கில் செய்யலாம், யார் கேட்கப் போகிறார்கள்? யாழில் செய்தால் கேள்வி வருவது தவிர்க்க இயலாதது. பிரச்சினை இருந்தால் அப்படியே நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்து விடுங்கள்!
  2. Translation: நீங்கள் "கூகிள் மப்பில்" பார்த்து விட்டு தமிழ்நாட்டைப் பற்றி எழுதவில்லை👍!
  3. நாதம், இந்த "அவர், உவர், இவர்" கிறீஸ் போத்தல் விளையாட்டை என்று விளையாடாமல், யார் நீங்கள் குறிப்பிட்ட தமிழ் சிறி லங்கா ஆட்சியர் என்று சொல்லுங்கள்! அல்லது வேறு யாராவது "மணி" இதற்கும் மனது வைக்க வேண்டுமா😂?
  4. அறியும் என்பது சரி, ஜஸ்ரின் காவாலி தான், அவனை விடுங்கள்! யார் அந்த உருமறைத்து ஆட்சி பெற்ற சிறி லங்காத் தமிழர்? மொத்தம் ஒரு 25 பேர் தான் பட்டியலில்? யார் அவர்கள்?
  5. கொஞ்சம் பொறுங்கோ: இதற்கு முதல் "மனித பாஷை" பற்றி உங்களுக்கு நான் பாடம் எடுக்கவேயில்லை என்கிறீர்களா அல்லது அந்த நேரம் நீங்கள் மிருகமாக இருந்தீர்களா😎? "No copyright" என்றால் என்ன😂? இதை விளங்கிக் கொள்ளத் தானே செய்தி இணைப்பைத் தந்தேன்? இதை விட சீமான் தம்பிகளுக்கு எப்படி விளக்குவது? "என்னாது? காப்பி ரைற்றா?? அப்படீல்லாம் கிடையாது, நாம எப்பவும் ரீ தான்😂! இதில் கிறுக்குத் தனம் எங்கே இருக்கிறது? பதில் உங்களிடம் இல்லை, எனவே தரவில்லை😎! இது யாழுக்கும் புதிசில்லை, உங்களுக்கும் புதுமையில்லை!
  6. அப்ப இது பழைய நாதம் தான், ஒன்றும் மாறவில்லை😂: எதையாவது கோராவில் பார்த்து விட்டு அப்படியே நம்பி இங்கே எழுதுவது, சம்பந்தமில்லாமல் அலட்டுவது, பதில் அளிக்கப் பட்ட பிறகு மீளப் போய் தன்னுடைய ஒரிஜினல் பதிவை மாற்றுவது, பதில் தெரியாத இடத்தில் "ஐயாவுக்கு வயசு, எனவே மரியாதை" என ageism trope இனை எடுத்து விடுவது. இந்தக் கோலத்தில் நிழலிக்கு நாகரீக உரையாடலில் "memo" வேற😎!
  7. நிர்வாகம் தான் இதற்குப் பதில் சொல்ல முடியும் என்றாலும், நான் ஊகிப்பது: இது இரண்டையும் யாழ் களம் செய்ய முடியாது. 1. ஒருவரின் பழைய அவதாரை அவரது அனுமதியில்லாமல் யாழ் நிர்வாகம் வெளியிடாது. ஓணாண்டியார் அதை வெளியிட வேண்டாமென்று கேட்டிருக்கிறார், எனவே செய்ய மாட்டார்கள். 2. அவதூறு களத்தில் இருக்கும் இன்னொரு உறுப்பினர் மீதானதாக இருந்தால் யாழ் களம் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கும். இங்கே அவதூறு களத்தில் இல்லாத ஒருவர் மீது, கள உறுப்பினரால் . யாழ் களம் பொறுப்பெடுக்காது, ஆனால் அவதூறைச் செய்த உறுப்பினருக்குத் தான் அவதூறின் பொறுப்பு. இதைத் தான் கோசானும், வாலியும், வைரவனும் அந்த உறுப்பினரை நோக்கி எதிர்பார்த்திருக்கிறார்கள். (இந்த சட்டப் பொயின்ற்றுகள் நான் சட்டக் கல்லூரிக்குப் போய் படித்து எடுத்தவையல்ல! "விதி" பட திரைவசன ஒலி நாடாவை பதின்ம வயதில் அடிக்கடி கேட்டு வளர்ந்ததால் அறிந்தவை!😎)
  8. நாதம், சம்பந்தமில்லாமல் அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள். கீழே உள்ள பட்டியலில் மதம் மாறி, உருமறைப்புச் செய்த தமிழர்/கள் யார்? Sirimavo Bandaranaike Ranasinghe Premadasa Ranil Wickremesinghe Dudley Senanayake Ratnasiri Wickremanayake D. M. Jayaratne D. S. Senanayake Mahinda Rajapaksa Dingiri Banda Wijetunga S. W. R. D. Bandaranaike Dinesh Gunawardena John Kotelawala J. R. Jayewardene Wijeyananda Dahanayake Harini Amarasuriya Chandrika Bandaranaike
  9. இது வரை சிறி லங்கா 16 பிரதமர்களையும் , 10 ஜனாதிபதிகளையும் கண்டிருக்கிறது. யார் உருமறைப்புச் செய்த "தமிழர்கள்"?
  10. 😂உங்கள் இந்த "நிலைப்பாட்டை" றோவுக்கு சொல்லி விட்டீர்களா? அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? தேசிய பாதுகாப்பிற்கு உள் (domestic) அரசியலில் இருந்து ஆபத்து வந்தால் IB ஆ றோ வா எதிர்வினையாற்றும்? இருக்கிறது. மிக ஆரம்பத்திலேயே ரசோதரன் எழுதி விட்டார் . தெரிவு செய்து வாசிக்காமல் எல்லாக் கருத்துக்களையும் வாசித்த பின்னர் நேரத்தை விரயம் செய்வதா இல்லையா என்று யோசியுங்கள்!
  11. இந்த விடயங்களை எங்கே கேள்விப் பட்டீர்கள்? ஏனெனில், நிச்சயமாக நீங்கள் பெரியாரின் வெளியீடுகளை வாசிக்கவில்லை, துணுக்குகளாக-snippets யாரோ முகநூலில் வெட்டிப் போடுவதை context விளங்காமல் எடுத்து வந்து "இது பிற்போக்கு வாதம் என்கிறீர்கள்"😂. இது வழமையாக உங்கள் போன்ற தீவிர வலதுசாரிகள், தகவல் அறியும் ஆர்வமில்லாதோர் செய்வது தான். "தமிழ் எழுத்துக்கள் இலகுவாக்கப் பட வேண்டும், இப்போது தமிழ் காட்டு மிராண்டி மொழியாக இருக்கிறது" என்பதில் முன்பகுதியை நீக்கி விட்டு பின்பகுதியை மட்டும் சீமான் தம்பிகள் இங்கே தூக்கித் திரிந்தனர். இதே போன்ற பின்னணி விளங்காத ரிக் ரொக் மண்டையர்களின் வேலை தான்! பெரியாரின் மேற்கருத்துக்களை முழுவாக்கியங்களாக வாசிக்கப் பாருங்கள். முடியாவிட்டால், இது போல அறிவலட்சியத்தையாவது வெளிக்காட்டாமல் பேசாமல் இருங்கள்! இதைப் பற்றி ஏற்கனவே விளக்கியாகி விட்டது. பெரியாரின் பிரசுரங்களை , எழுத்துக்களைப் பகிரங்கப் படுத்த எந்த "மணி" 😎யும் மனசு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரியாரின் எழுத்துக்களை யாரும் தேடிப் பிரசுரிக்கலாம். வீரமணிக்கு பதிப்புரிமை இல்லை. செய்தி மிகவும் பழசு, ஆனாலும் அப்டேற் செய்து கொள்ளுங்கள்👇. https://www.thehindu.com/news/national/tamil-nadu/periyar-self-respect-propaganda-institution-withdraws-copyright-infringement-suit-related-to-republishing-of-dk-founders-literary-works/article66081301.ece https://timesofindia.indiatimes.com/city/chennai/high-court-refuses-permission-to-amend-periyar-copyright-plea/articleshow/7214075.cms https://www.newindianexpress.com/cities/chennai/2009/Jul/28/hc-rejects-plea-on-using-periyar-writings-71795.html சீமான் தரப்பின் விடய ஞானமில்லாத ஆட்களின் மண்டையைக் கழுவும் தில்லாலங்கடி வேலைகளுக்கு இந்த பதிப்புரிமை பற்றிய பொய் சிறந்த உதாரணம்.
  12. யாழ் களம் போன்ற தமிழ் தேசியத்தை வளர்க்கும் நோக்குடன் இருக்கும் களத்தில் எதைப் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்? தமிழ் தேசியத்தை, இனத்தூய்மை வாதம், அதற்குள் உருமறைத்த சாதிவாதம் என நச்சாக மாற்றும் ஒரு அரசியல் கட்சியின் உண்மை நிலையைச் சுட்டிக் காட்டும் செய்திகள், உண்மை வரலாறு என்பன பகிரப் பட வேண்டும். இதைச் செய்யா விட்டால் ஒரு தமிழக அரசியல் கட்சிக்கு நிதி திரட்டும் வகையில் பொய்யான தகவல்கள் ஈழ மக்களிடையே பரப்பப் படும். இத்தகைய பொய்ச் செய்திகளை நம்பி ஈழத் தமிழர்கள் பின் தொடர்ந்தால் எமக்கு நஷ்டம் இருக்கிறது என்பது தெரியாமல் சிலர் "போக்குவரத்துப் பொலிஸ்" வேலை செய்யப் பார்க்கிறார்களா? அல்லது யாழ் களமும் முகநூல் போல "ஹாய், ஹலோ" என்று முகமன் காட்டி விட்டுப் போகும் இடமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா?
  13. உறவே, சொல்கிறேன் என்று குறை நினைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் சீமான், நா.த.க விவாதத்தில் ஒவ்வொரு நுட்பத்தை அறிமுகம் செய்து கவர் கொடுப்பீர்கள். இந்த முறை பதிலுக்கு சளைக்காமல் பதில் எழுதுவோரை "இம்சையாளர்கள்" என்று குற்றஞ்சாட்டும் ஒரு புது நுட்பத்தோடு வந்திருக்கிறீர்கள். அதிலும் preaching to the choir போல உங்கள் "நாகரீக அட்வைஸ்" இருக்கிறதே? இதை உண்மையில் சீமான் தரப்பில் இருக்கும் தம்பிகளுக்குத் தான் நீங்கள் கொடுக்க வேண்டும். சீமான் பற்றி தற்போது ஓடும் 3 திரிகளிலும் நடவடிக்கைகள் எடுக்கும் அளவுக்கு "நாகரீகமாக" சீமான் ஆதரவாளர்கள் எழுதியிருக்கிறார்கள், மகிந்தவை எதிர்த்து அல்ல, சக கருத்தாளர்களை நோக்கி "நாகரீகமாக" எழுதியிருக்கிறார்கள். நீங்கள் என்னவெண்டால் ஒரு சராசரிக்கும் கீழான, சாக்கடை தமிழ் நாட்டு அரசியல் வாதிக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று விண்ணப்பமும் அட்வைசும் குடுத்து எங்களுக்கு சிரிப்பு மூட்டுறீங்கள்😂!
  14. பகுத்தறிவை முன்னிறுத்துபவர் கிறிஸ்தவ, இஸ்லாம், உட்பட்ட மதங்களைத் திட்டுவது புதிசா? அப்படித் திட்டாமல் இந்துக்களை மட்டும் திட்டினால் தான் நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டும். ஆனால், "நம்மிலும் கீழானோரை" என்று யாரை பெரியார் குறிப்பிட்டார்? சாதியை ஒழிக்கிறேன் என்பவர், இப்படி விளித்திருப்பாரானால், அது "பகுத்தறிவு" இல்லாத தரப்பைத் தான் குறித்திருக்கும். உங்களிடம் தான் ஆதாரம் இருக்கிறதே? யாரென்று சொல்லுங்கள், மேற்கொண்டு பேசலாம்! "பெரியார் பெண்களை இழிவு செய்தார்" என்பது உட்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் வீரமணியிடம் மட்டும் தான் இருக்கிறது என்கிறீர்கள். அப்ப ஏன் ஆதாரங்களைப் பார்க்காமல், கையில் எடுத்துக் கொள்ளாமல் குதிரைக்கு முன்னால் வண்டிலைப் போட்டுகிறீர்கள்😂? சும்மா சீமான் உளறி வைத்தார் தன் தேவைக்காக என்றால் நீங்களும் ஒத்து ஊதி விட்டு "வீரமணி மனது வைத்தால்" என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள்.
  15. ஐரோப்பாவில் யூதர்கள் உட்பட்ட மக்களை வதை/கொலை செய்த முகாம்கள் (concentration camps) விடுவிக்கப் பட்ட நினைவு நாளுக்கு அண்மையாக பொருத்தமான கட்டுரை. இதை வாசிக்க வேண்டிய புலம் பெயர் தமிழர்கள் எம்மிடையே இருக்கிறார்கள். இன்றும் ஜேர்மனியின் AfD போன்ற கட்சிகளை, ஏனைய குடியேறிகளுக்கெதிரான துவேசம் காரணமாக ஆதரிக்கும் புலத் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!
  16. 😂 ஓணாண்டியார், என்ன முதல் சதுரத்திலேயே வந்து நிண்டு அக்ரிங் குடுக்கிறீங்கள்? பெரியார் பிராமணரை மட்டும் தான் தீவிரமாக திட்டினார். சீமான் வளர்க்கும் தமிழ் தேசியம் திராவிட அடையாளத்தினுள் மலையாளி, தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றையும் திட்டி, "வாழ வரலாம் ஆள வரக் கூடாது" என்றெல்லாம் துவேஷம் பேசுவது தெரியாத மாதிரி என்ன நடிப்பையா இது? உங்களுக்கு "பச்சைத் தமிழன்" அடையாளம் வேணுமெண்டால் அணிந்து கொள்ளலாம், அதை விட்டு விட்டு வேறு மொழிவழி மூதாதையர் கொண்ட தமிழக மக்களை மஞ்சள் தமிழன் என்று முட்டாள் தனமாக வகைப் படுத்தல் யார் செய்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?
  17. ஏற்கனவே யூ ரியூப் குப்பைகள் கொட்டும் இடமாக யாழ் இருக்கிறது, இதில் இன்னொரு வீடியோ எதற்கு? என்ன அது "முழுமையான ஆதாரம்" என்று கொஞ்சம் எழுதி விட்டுத் தான் போங்களேன்?எதை நிரூபித்து விட்டார்கள்? தன் உண்மையான பெயரையே வெளியே சொல்லத் தயங்கும் ஒருவரது ஏமாற்று விளையாட்டுகளை இப்படியான குப்பை வீடியோக்கள் தானே எங்கள் இளையோரிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன?
  18. தம்பி, நான் சுட்டிக் காட்டிய அதே "ஸ்ரிக்கர்களை" நீங்கள் பெருமஒயோடு உங்கள் பங்களிப்பாகச் சுட்டிக் காட்டிய போதே கோசானின் பதில் தரப் பட்டது. உங்களுக்கு விளங்காமல் இன்னும் பழைய பல்லவியில் முட்டிக் கொண்டு நிக்கிறியள்! நீங்கள் பேசலாம், நானும் பேசலாம். உங்களுக்கு நானும், எனக்கு நீங்களும், இங்கே எழுதும் எந்த ஈழ உறவுக்கும் நாம் இருவரும் "முக்கிக்" காட்ட வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்து கொண்டு கருத்துகளை எழுதுங்கள்👍. "நியூஸ்18" லேபலைத் திருடி வழமை போல மீம் பாணியில் பொய்ச் செய்தியை சீமான் அணி பகிர்ந்திருக்கிறது! நீங்கள் காதில் பூ வாங்கிக் கொண்டு வந்து வீரமாக நிக்கிறியள்! பரிதாபம் தான் வருகிறது தம்பி!
  19. தம்பி, தூயவன் உள்ளிட்ட இன்ஸ்பெக்ரர் மாருக்கான பதிலை கோசான் எப்பவோ சொல்லி விட்டார்: "என் குடும்பத்தில் இத்தனை மாவீரர்கள், இத்தனை காசு, இத்தனை சோத்துப் பார்சல் கொடுத்தேன்.." இதெல்லாம் சிறு பிள்ளைகள் கொப்பிக்குள் சேர்த்து வைத்துக் கொள்ளும் "ஸ்ரிக்கர்" அல்ல! தோளில் அணிந்து கொண்டு காட்டாப்புக் காட்டும் ஆபரணங்களும் அல்ல! உயிரைக் கொடுத்தவன் தான் மிக உச்சத்தில், தன் வாழ்வைக் கொடுத்துத் தப்பி வாழ்பவன் அவர்களோடு அதே நிலையில், அதற்குப் பிறகு தான் மிச்ச எல்லாரும்! இந்த படி நிலையில், சீமான் போன்ற மாவீரர் தியாகத்தை விற்று வயிறு வளர்க்கும் சராசரி அரசியல் வாதிக்கு இடமேயில்லை! சீமான் போன்றோர் தேவையில்லாத ஆணி அல்ல, கிள்ளி எறிய வேண்டிய களை!
  20. தம்பி, நீங்கள் கேட்கலாம் துணிந்து😎! ஏனெனில் "வயசு வராமையால் போராடத் துடித்தாலும், பெரியோர் உங்களைத் தூக்கிக் கொண்டு இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து விட்டனர்" நான் அவதானித்த வரையில், நீங்கள் ஓரிருவர் இங்கே "இன்ஸ்பெக்ரர்" மார் போல உலாவருகிறீர்கள் பல வருடங்களாக. ஒவ்வொருவரும் தாயகத்தில் இருந்த போதும் சரி, புலத்திலும் சரி தமிழ் சமூகத்திற்காக சிறிதும் பெரிதுமாகச் செய்து விட்டு பேசாமல் இருக்க, ஒரு தமிழக பொய் அரசியல் வாதி சீமானுக்கு இணையத்தில் முட்டுக் கொடுத்து கருத்தெழுவதே பெரிய சாதனை என்று ஏனையோருக்கு முக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறீங்கள்😂!
  21. அதெல்லாம் தமிழ் புதுச்சொல்லாக்கம்! கண்டு கொள்ளாதையுங்கோ😎!
  22. என்ன "நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" மாதிரியே இருக்கிறீங்கள்😂? உள்ளூரில் கைதான அந்த மன்னார் ஆமிக்காரருக்கு, வெளியூரில் இருந்து கொலை செய்யக் கூலி கிடைத்ததை மறந்து/மறைத்து விட்டீர்கள். இப்போது, இதே தகவலை வைத்துக் கொண்டு, சில ஆண்டுகள் முன்னர், சுமந்திரனை கொல்ல முயன்றார்கள் என்று கைதான முன்னாள் போராளிகளுக்கு வெளிநாடு வாழ் சுமந்திரன் எதிர்ப்பு கூழ்முட்டைகள் காசு கொடுக்க முயன்றதையும் கொன்டு வாருங்கள்! Associative memory என்பது யாழில் பலருக்கு இல்லையென்றால், உங்களுக்கும் இல்லாமல் போய் விட்டதா😎?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.