Everything posted by Justin
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
எங்கள் இருவருக்கும் தெரிகிற யாழ் களம் ஒன்றா வெவ்வேறா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது, மேல் கருத்தைப் பார்க்கும் பொழுது😂. முழுமையான திரிப்புகளாலும் அரை உண்மைகளாலும், பிரபாகரன் விசுவாசிகளையும் பல ஈழத் தமிழர்களையும் திராவிட எதிர்ப்பு அடியாட்களாக மாற்றி விட்டிருப்பது சீமான் என்கிற கொள்ளிக்கட்டை மட்டுமே. ட்ரம்ப் "எப்பிடியும் வெல்ல வேண்டும்" என்பதற்காக பெண் வெறுப்பாளர்கள், இன, நிறவாதிகள், குடியேற்ற எதிர்ப்பாளர்கள், தீவிர கிறிஸ்தவர்கள், மோடி இந்துக்கள், முக்காடு போட்ட முஸ்லிம்கள் என்று எல்லோரையும் "வெறுப்பினால்" ஒன்றாக்கியது போல, சீமானும் திராவிட வெறுப்பை மட்டும் வைத்தே ஒரு தொகுதி ஈழத்தமிழர்களையும், கொஞ்ச தமிழக தமிழர்களையும் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
"பிரபாகரன் திராவிட மாயையை தன்னிடம் உடைத்தார்" என்று சீமான் உருட்டியதற்கு எதிர்வினையாக இந்தக் கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது. 1978 இல் இருந்து 1990 கள் வரையான பகுதிகளின் பல்வேறு பிரபாகரனின் மேற்கோள்களும், விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் கட்டுரைகளும் ஆதாரங்களாகக் காட்டுவது, பிரபாகரன் பெரியாரைத் தலைவராக வரித்துக் கொண்டார் என்று அல்ல. பிரபாகரனும், புலிகளும் நடைமுறைப்படுத்திய கொள்கைகளில் திராவிடத்தின் முற்போக்கான அம்சங்கள் இருந்தன என்று மட்டும் தான். மேலதிகமாக, 2008 வரை புலிகளின் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் கூட இங்கே இருக்கிறார்கள். திராவிடத்தை எதிர்த்து புலிகள் எதுவும் தங்கள் செய்திக் குறிப்புகளில், உள்ளூர் உரைகளில் கூட எதுவும் சொல்லவில்லை. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும், உங்களுக்கு சீமானின் பொய்களுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரே நோக்கத்தில், இதையெல்லாம் "வுட்ரா வுட்ரா" என்று ஒதுக்கி விட்டீர்கள் என நினைக்கிறேன்😂. நீங்களே இப்படி இருந்தால், பதின்ம வயதில் "எனக்கு போராட வயசு வரவில்லை" என்று வெளியேறி வந்து சீமானின் முகாமில் சிக்கிக் கொண்டோரின் நிலை என்ன என்று யோசிக்கிறேன்😎!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
"விடுதலைப் புலிகள்" யாருடைய பத்திரிகை😂?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
😂 நாதம், நேரடியாக மட்டு வந்து " நீங்கள் ஏன் இப்படி எழுதுறீங்கள்? விளக்கம் தேவை!" என்று அதட்டல் வாங்கின ஆட்களே இங்க நின்று தள்ளு முள்ளுப் படுறம். நீங்கள் இப்படி ஒரு குற்றச் சாட்டை சும்மா தூக்கிப் போட்டுட்டு நழுவுறீங்கள்? அது சரி, "திராவிடப் புலிகள்" கட்டுரையையாவது பார்த்தீர்களா?
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
எங்கப்பா கனதியான ஆட்களின் (heavy weights) அசுமாத்தங்களைக் காணவில்லை இந்தப் பக்கம்? #தொண்டையில முள்ளு😎
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
என்ன தம்பி இது? நீங்களே 2009 இல் சாகும் வரை கூட அல்ல, "வயிறு நோகும் வரை" கூட உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றிருக்கும் நிலையில், நம்மால் ஒரு நன்மையும் பெறாத இவர்களெல்லாம் ஏன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவில்லையெனக் குறைப் படுகிறியள்? உங்கள் கதை ஏதோ SNL ஜோக் பார்ப்பது போல இருக்குது!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஒரே கருத்தில் தான் நிலையாக இருக்கிறோம் உறவே: ஈழவரை வைத்து தன் கோமாளி அரசியலைச் செய்வதை சீமான் கைவிட்டால், சீமான் செய்திகள் யாழ் களத்தில் இணைக்கப் படுவதே குறைந்து விடும். "நாயகன்" பாணியில்: "அவன நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்துறேன்😂!"
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீண்ட பதிலுக்கு நன்றி, ஆனால் உங்கள் விளக்கங்களில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. முக்கியமாக, உங்கள் Image J ஆய்வில் மூன்று ROI க்களை எடுத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. முதல் ROI இன் பரப்பளவு (area) ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கிறதென விளங்கவில்லை. என்னுடைய கணிப்பை இன்று மாலை இணைக்கிறேன்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
Error Level Analysis (ELA) என்ற Image forensics வெளிப்பாட்டைத் (output) தவறாக விளங்கியிருக்கிறீர்கள் (அல்லது இதைப் பகிர்ந்த மூலம் தவறாக விளக்கியிருக்கிறார்). விஞ்ஞான சஞ்சிகைகளில் திரிக்கப் பட்ட படங்களைக் (doctored images) கண்டறியப் பாவிக்கப் படும் மிக எளிமையான சோதனை இது. எனக்கு விளங்கிய படி, JPEG இற்கு மட்டும் தான் இதனைப் பாவிக்கலாம். ஏனெனில், JPEG இல் பல முறை ஒரு படத்தைச் சேமிக்கும் போது படிப்படியாக அதன் விபரங்கள் (granularity) இழக்கப் படும். இந்த "இழப்புத்" தான் "error" எனப்படுகிறது. இந்த சோதனைக்காக மென்பொருள் பல தடவைகள் இந்தப் படத்தை மீள மீள சேமிக்கும். அப்படி சேமிக்கும் போது எல்லாப் பகுதிகளிலும் ஒரே அளவான "இழப்பு" ஏற்பட்டால் அந்தப் படம் "ஒரே படம்". இந்த விளக்கத்தை வைத்துக் கொண்டு இப்போது உங்கள் படத்தைப் பாருங்கள்: சீமான் வெள்ளையே (whiteness) இல்லாமல் கறுத்து விட்டார், பிரபாகரனிடம் இன்னும் "வெள்ளை" எஞ்சி இருக்கிறது. இதை வைத்துப் பார்த்தால், இரண்டு படங்களும் ஒரே படம் என்ற முடிவுக்கு வர முடியாது. ஆனால், இது qualitative analysis மட்டும் தான். இந்த வெளிப்பாட்டை ImageJ என்ற மென்பொருளில் தரவேற்றினால் அது இந்த வெள்ளை (whiteness) , கறுப்பு (blackness) நிறங்களை அளந்து என்ன வேறுபாடென்று ஒரு இலக்கத்தைத் தரும். இது quantitative analysis. இந்த quantitative analysis நான் செய்யலாமென இருக்கிறேன். ImageJ இலவசமாகக் கிடைக்கும் ஒரு மென்பொருள். நாளை நேரம் இருந்தால் அளந்து பார்க்கலாம்!
-
இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது?
காலத்திற்குக் காலம் மக்களிடையே இருக்கும் மருத்துவ, விஞ்ஞான அறிவின்மையையும், குழப்பங்களையும் மூலதனமாக வைத்து சில கம்பனிகள் உருவாகும். Venture capitalists எனப்படும் பண முதலைகளிடமிருந்து முதலீட்டைப் பெற்று சில போலி விஞ்ஞான செயல்பாடுகளைச் செய்து போக்குக் காட்டிய பின்னர், கம்பனியை நல்ல விலைக்கு விற்று விட்டு, அடுத்த கோல்மால் வேலைக்குப் போய் விடுவர்😎. "உலக அழிவு - Armageddon வரப் போகிறது" என்று பயத்தை ஊட்டி, தப்பி வாழக் கூடிய நிலக்கீழ் வீடுகளைக் கட்டி விற்கும் கம்பனிகள் இன்றும் அமெரிக்காவில் இருக்கின்றன. கோடீஸ்வரர்கள் இந்த நிலக்கீழ் மாளிகைகளை வாங்கி விட்டிருக்கிறார்கள். அதே போன்ற ஒரு கோல்மால் தான் இந்த உயிர் மீட்கும் கம்பனியும். "இது வேலை செய்யாது" என்பதற்கான காரணங்கள் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கின்றன: மூளையை ஒருவர் இறக்கும் இறுதிக் கணத்தில் காப்பாற்றினாலும், அதை மீளச் செயல்படும் வகையில் உயிர்ப்பிப்பது இயலாத காரியம் - உயிரியல் ரீதியில் சாத்தியமற்றது. கீழே இணைப்பில் உள்ள படி, இறந்த பன்றிகளின் மூளையை உடனடியாக உயிர்ப்பிக்கும் ஒரு ஆய்வை பொஸ்ரனில் செய்திருக்கிறார்கள். https://www.bu.edu/articles/2019/did-researchers-bring-dead-pigs-back-to-life/ மூளையின் கலங்கள் சில கலத் தொழிற்பாடுகளை (cellular functions) மீளப் பெற்றன. ஆனால், நினைவாற்றல், சிந்தனையாற்றல், உணரும் ஆற்றல் போன்ற சிக்கலான மூளைத் தொழிற்பாடுகளை மீளப் பெற்றதற்கான அறிகுறிகள் இல்லை. உடனடியாக மீட்டாலே இது கிடைக்கவில்லையானால், வருடக் கணக்காக உறை நிலையில் வைத்த பின்னர் என்ன மூளை மீட்சியை எதிர்பார்க்க முடியும்?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இப்படி ஒரு எடிற் செய்ய செயற்கை நுண்ணறிவு அவசியம் என்று நினைக்கும் அளவுக்கு சாட்டையின் உலக அறிவு இருப்பது வியப்பில்லை😂. 1930 களில், பிலிம் (film) கமெராக்களில் எடுத்த போட்டோக்களையே மிக நுணுக்கமாக வெட்டி, ஒட்டி, பெரிதாக்கி தன் விம்பத்தை செதுக்கிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் தோழர் ஸ்ராலின்! உருமாற்றிய போட்டோக்களை வைத்து அரசியல் விம்பங்களை உருவாக்கும் வழமை இருந்திருக்கிறது.ஆர்வமுள்ளோருக்கு கீழே ஒரு கட்டுரை: https://www.history.com/news/josef-stalin-great-purge-photo-retouching
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஜிங்சாங் போடாமலா அவர் ஒருமையில் எழுதியதைக் கடந்து வந்து இங்கே முரட்டு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் தாத்தா ஒன்றும் அப்பழுக்கில்லாத வெள்ளையுள்ளத்தினர் அல்ல! அவருக்கு சிங்சாங் போட நீங்கள் உட்பட பலர் இருப்பதால் அவர் ஒருமையில் எழுதினாலும் அவரை யாரும் ஒன்றும் செய்யாமல் பாதுகாப்பு இருக்கிறது. சாதாரணமாக இப்படி ஆதரவு கிடைப்போர், காலப் போக்கில் அதை உணர்ந்து திருந்துவர், இவரிடம் அந்த வாய்ப்புகள் இல்லை. எனவே, நேர்மையாக நடந்த விடயங்களை அவரிடம் போன் போட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள்! *****
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
80 களிலேயே தமிழ் நாட்டில் திரிந்த பிரபாகரனை, 90 களில் நெடுமாறன் வந்து சந்தித்த பிரபாகரனை , அவர் இல்லாத 2010 இல் சீமான் தமிழ் நாடில் பிரபலமாக்கினார் என்ற சின்னத்திரை கதையை நீங்கள் நம்பலாம்! ஏனையோர் இதைப் பார்த்து சிரித்துக் கடப்பர்! ஆனா, நீங்கள் நம்புங்கள், தம்பி! வைச்சுக் கொண்டு வஞ்சகம் செய்பவரல்ல நீங்கள்😎!
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
அன்றைய நிலையின் மீளோட்டம் தான் இன்றைய நிலை. செய்தியில் மில்லியன் சிரியர்களில், ஒரு சிரியன் செய்த கொலை வீடியோவாக வெளிவர அதைப் பார்த்து விட்டு எல்லா சிரியனும் குற்றம் செய்கிறான் என்று AfD உங்கள் போன்றோரை மண்டை கழுவுவர்!
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
உங்களுக்கு ஆசை! எனக்கோ பிரார்த்தனை😎! (வேறெந்த வழியில் தான் இதைப் புரிய வைப்பது?) இதுக்குத் தான் நீங்கள் வாழும் நாடுகளின் வரலாற்றை சிற்றிசன்ஷிப் சோதனைக்கு மட்டுமில்லாமல், சொந்த அறிவுக்காகவும் வாசிக்க வேண்டுமென்பது. 30 களில் யூதர்கள் ஒழுங்காக ஜேர்மனிக்காக நீங்கள் உழைப்பதை விட அதிகம் உழைத்து, வரியெல்லாம் கட்டிக் கொண்டிருந்த போது தான் நாசிக் கட்சி உருவானது. அல்பேர்ட் ஸ்பியரின் புத்தகங்கள் ஜேர்மனியில் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்!
இது எனக்கும் விளங்கவில்லை. கஜேந்திரகுமாரின் கட்சி இப்படி மத்திய குழுக் கூட்டமெல்லாம் வைப்பது போல எதுவும் தெரியவில்லை. பள்ளிக் கூட சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள் போல வட்சப்பிலேயே எல்லா முடிவுகளையும் எடுத்து விடுவார்கள் போல😎!
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
நான் நினைக்கிறேன் இது நகரசபை அனுமதி சம்பந்தப் பட்ட பிரச்சினை. திருவள்ளுவர் உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்தவர் - எந்த மதத்திற்கும் தொடர்பில்லாதவர். தமிழுக்கு மட்டுமே தொடர்பானவர். இனி "கிறிஸ்தவன் திருவள்ளுவரைத் தூக்கி" விட்டானென்று (நீங்கள் அல்ல) பலர் "சூலாயுதத்தோடு" வரக்கூடும்😂!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திகள், விடயங்கள் அலசப் படுவது தவிர்க்க முடியாதது! வைரவன் போலித் துவாரகா விடயத்தையும் இங்கே இணைத்து வாசகர்களுக்குத் தெளிவூட்டிய ஒருவர் என்பதை மறக்கக் கூடாது: Don't shoot the messenger!
-
ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்
அஞ்சலிகள்! நேரடியாகச் சந்தித்திருக்கா விட்டாலும், இவர் எழுதிய "மண் சுமந்த மேனியர்" நாடகத்தை ஒரு நிதி சேகரிப்பிற்காக பழகி அரங்கேற்றிய போது இவர் பற்றி அதிகம் அறியக் கிடைத்தது!
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
ஆயிரம் பேர் விண்ணப்பம் கொடுக்கும் ஒரு தேர்தலில், "ஒவ்வொருவரும் சொல்வது உண்மையா?" என்று விண்ணப்பம் வாங்குபவர் வெளியே சென்று விசாரிக்க ஆரம்பித்தால் தேர்தல் நடத்த ஒரு வருடம் தான்டி விடும்😂! இது போன்ற விண்ணப்பங்களை நிரப்பும் போது "என் அறிவுக்கெட்டியவரையில் நான் சொல்வது உண்மை. அப்படி உண்மைக்கு மாறாக இருந்தால் கிடைக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வேன்" என்று இருக்கும் பந்தியின் கீழ் தான் விண்ணப்ப தாரி கையெழுத்து வைப்பார். இதை "under penalty of perjury" என்பார்கள். எனவே, விண்ணப்பத்தில் அர்ச்சுனா தவறான தகவலைக் கொடுத்திருந்தால், தான் தவறுக்கு பொறுப்பு என்றும் அன்றே கையெழுத்து வைத்து விட்டார்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அப்ப தமிழர் "ஜாவாவில்" இருந்து வந்த வந்தேறு குடிகளா? இது தமிழர்-திராவிடர் பிணக்கிற்கு புதிய பரிமாணமொன்றைத் தருகிறதே😎?
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நித்திக்கு லட்சக் கணக்கில் பக்தர்கள் இருப்பது போல, இதுவும் அவர்களது உரிமை. ஆனால், நித்தி குழுவுக்கும், இந்து/சைவ மதத்திற்கும் வேறுபாடு தெரிந்து கொள்ள வேண்டியது நோக்கர்களின் கடமை! இப்படியான "கடமையை" உங்களிடம் நான் எதிர்பார்த்து இங்கே கருத்தாட ஆரம்பிக்கவில்லை😂!
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
"Ignorance breeds fear and hatred" அறிவின்மை என்பது பிரிவினைக்கு ஊற்றாகும் அச்சங்களின் விளை நிலம்! நிறுவனமயமான கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும், உதிரிகளாக திரியும் ஓரக் குழுக்களான கிறிஸ்தவக் குழுக்களுக்குமிடையேயான வேறு பாடுகள் பற்றிய உங்களுடைய "அறிவின்மை" பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது (மேலே இஸ்லாமியர் பற்றி கேள்வி கேட்டவருக்கும் அதுவே பிரச்சினை😎). இது ஏன் உங்களைப் போன்ற சில சைவர்களிடம் மட்டும் இருக்கிறதென எனக்கு விளங்கவில்லை. ஏனெனில், நித்தியின் கூத்துகளைப் பார்த்து இந்துக்களை வேறு மதத்தவர் எடை போடுவதில்லை! சச்சியைப் பார்த்து "இலங்கை பீகார் போல ஆகி விட்டது" என நாம் யாரும் அச்சம் கொள்வதில்லை😂! ஆனால்: மேலே, நிழலி சுட்டிக் காட்டியிருப்பது போல உங்களைப் போல ஏனைய மதங்கள் பற்றிய அறிவின்மையை தங்கள் முடிவுகளுக்கு அடிப்படையாகக் கொள்வோரால், ஈழம் பீகாராக மாற வாய்ப்புகள் இருக்கின்றன.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
முதல் வரியில் இருப்பதை மானசீகமாக எழுதியிருந்தால் இரண்டாவது கேள்வி வந்திருக்காதே😂? தேவாலயத்திற்குள் தமிழர்கள் இருப்பதால், பொங்கல் தேவாலயத்தினுள்ளும் செல்ல முடியும். கிறிஸ்தவர்கள் தமிழர்களாக இருப்பதால் வேறென்ன எல்லாம் தேவாலயத்தினுள் எடுத்து செல்லப் பட்டன என்று தேடிப் பார்த்தால், இப்படியான முக்கியத்துவமற்ற கேள்விகள் எழாது: வண.சிங்கராயர், வண.இம்மானுவேல், இன்னும் பல கத்தோலிக்க, கிறிஸ்தவ தலைவர்களால் தமிழர்களுக்கெதிரான அநீதிகள் பற்றிய கதையாடலும் தேவாலயத்தினுள் நுழைந்தது. மறு பக்கம், சைவ சித்தாந்தத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று, அதை யாழ் பல்கலையில் முக்கிய துறையாக உருவாக்கிய வண. மரியசேவியர் அவர்களால், சைவம் பற்றிய அறிவூட்டல் கூட தேவாலயத்தினுள் நுழைந்தது (திருமறைக்கலா மன்றத்தில், அவர் நடத்திய சைவ சித்தாந்த வகுப்புகளுக்குச் சென்றோருக்கு இது புரியும்!). எனவே, மீண்டுமொருமுறை: தரவுகள், தகவல்களை நல்ல நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம்!
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பேராசிரியர் சண்முகதாஸின் ஒரு உரையில் கேட்டிருக்கிறேன். ஜப்பானிலும் பொங்கலை "அறுவடை நாள், நன்றி கூறல்" என்ற நிகழ்வாகக் கொண்டாடுவார்களாம். இந்தப் பண்டிகை koshogatsu என்பார்கள் . ஊரில், 90 களில் யாழ் நகரின் மத்தியில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்கல் கொண்டாடிய நினைவிருக்கிறது. ஆனால், கத்தோலிக்கர், ஏனைய கிறிஸ்தவர்களின் வீடுகளில் பொங்கலைக் கொண்டாடியதை 90 களில் நான் காணவில்லை. சில தரவுகள், தகவல்களை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திலும் பயன்படுத்தலாம்😂. 1960 களில், கத்தோலிக்க திருச்சபையில் இப்படியான ஒரு சிந்தனை உருவானது: "நாம் உலகம் முழுவதும் பல்வேறு இனங்கள் நாடுகளிடையே பரவி விட்டோம். ஐரோப்பிய மொழியான லத்தீனில் வழிபாடு செய்யும் படி இந்த ஐரோப்பியரல்லாத மக்களைக் கேட்க முடியாது. எனவே, அந்தந்த இனங்கள், நாடுகள், பாரம்பரியங்களின் படி வழிபாடு செய்ய விதிகளை வகுக்க வேண்டும்" இதன் விளவு தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம். இதன் முடிவில் உருவான மாற்றங்களுள் சில உடனே அமலுக்கு வந்தன. உதாரணமாக, வழிபாட்டு மொழி, கீதங்கள் என்பன உடனே தாய்மொழிக்கு மாற்றப் பட்டன. சில மாற்றங்கள் நடைமுறையாக நீண்ட காலங்கள் எடுத்தன. பொங்கலை கத்தோலிக்க நிறுவனங்கள் கொண்டாடுதல் என்பது இப்படி நீண்ட நாட்களின் பின் அமலான மாற்றம். இது கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்குரிய விளக்கம். இங்கிலாந்து திருச்சபை - தமிழ் நாட்டில் வேரூன்றியிருப்பதால்- அவர்களும் பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஆனால், பெந்கோஸ்து, யெஹோவா போன்ற non-denomination இல் இருக்கும் மக்கள் பொங்கல் இன்னும் Paganism என்று தான் பார்ப்பர். இந்த வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளின் வரலாறு தெரியாதோருக்கு, குருடன் யானை பார்த்தது போன்ற "தெளிவு" கிடைக்கும்😎.