Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. இந்த சாராய அனுமதிப் பத்திரம் பற்றிய செய்திகளை சற்று அவதானமாகக் கையாளா விட்டால் சுன்னாகம் எண்ணைப் படிவுக் கேஸ் போல ஆகி விடுமென நினைக்கிறேன் (கடைசியில் தண்ணீரின் கழிவெண்ணை கலந்ததா அல்லது நீரிறைக்கும் பம்பியின் மண்ணெண்ணை கலந்ததா என்ற தெளிவே கிடைக்காமல் அந்த விடயம் முடிந்தது). சும்மா வட்சப்பிலும், முகநூலிலும் வரும் செய்திகளையெல்லாம் உண்மையென்று நம்பிப் பின்னால் போகாமல், இந்த அனுமதிப் பத்திரம் பெற உண்மையில் என்ன மாதிரியான விண்ணப்பம் கோரப் படுகிறது என்ற தகவலை யாராவது சீரியசாக எழுதுவோர் இங்கே பதிவிடுங்கள். விக்கி ஐயா சொன்ன தகவல் படி, அவர் சிபார்சு கொடுத்திருக்கிறார் சாராய அனுமதி பெற்ற ஒருவருக்கு. இது அரசு கோரும் ஒரு நிபந்தனையா அல்லது பா.உ வலிந்து போய் செய்வதா என்று யாருக்காவது தெரியுமா? அப்படி சிபார்சு செய்ததாலேயே "இந்த பா.உ பெயரில் சாராயக் கடை" என்று கூற முடியுமா? தாயகத்தில் இருக்கும் யாராவது இங்கே அலட்டிக் கொண்டிருக்கும் "ஜோக்கர்களை" ஒதுக்கி விட்டுப் பதில் தாருங்கள். @ஏராளன்?
  2. 👍 இந்த இரு கருத்துக்களும் முக்கியமானவை. சோசலிச மக்கள் கட்சியின் சிறிதுங்க ஜெயசூரிய (இப்போதும் இருக்கிறாரா தெரியவில்லை)இலங்கை ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே "தமிழர் நலன் விரும்பும் ஒரு சிங்கள ஜனாதிபதி" என்று நாம் ஆர்ப்பரிக்க முடியும். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தில், எங்கள் வாழ்வு காலத்தில் அது நடக்காத காரியம்😂. ஆகவே, எப்போதும் போல "அடுத்த சிறந்த தெரிவு - the next best thing" என்ற ஒரு படி கீழே இறங்கி நின்று தான் மதிப்பிடலாம் ஒரு சிங்கள ஜனாதிபதியை. ராஜ்பக்ச போல வெளிப்படையாகவே தமிழின எதிர்ப்பாளரா? சந்திரிக்கா போல "கோபம்" வந்தால் தமிழின எதிர்ப்பாளரா? ரணில் போல வெளிப்படையாக தமிழின எதிர்ப்பையும் காட்டாமல், தமிழருக்கு எதுவும் செய்யத் துணிவில்லாத பதவி லோலனா? காலம் தான் பதில் சொல்லும்!
  3. இந்த "சங்கம்" இணையம் பற்றிய அவதானிப்பையும் இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். "இலங்கைத் தமிழ் சங்கம்-ITS என்ற அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தை பௌதீக மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட பழம் பெரும் ஈழத்தமிழர் அமைப்பின் இணையத் தளம் இது. இந்த தளத்தையும் (சங்கத்தையும்) நடத்துவோரையும் அறிவேன் - சிலர் என் நண்பர்கள். பல் வேறு காரணங்களால் புலம்பெயர்ந்து, இடையிடையே இலங்கைக்கு விடுமுறை போய் வரும் இந்த நிர்வாகிகள், ஈழத்தமிழர் பிரச்சினை என்றதும், உடனே தீவிர நிலைப்பாடுகள் பக்கம் மட்டுமே நிற்பர். பல உதாரணங்கள் காட்டலாம் என்றாலும் ஒரு அண்மைய உதாரணம்: சம்பந்தனும், ஈழ வேந்தனும் சில மாதங்கள் முன்பு காலமானார்கள். சம்பந்தனின் மரணச் செய்தி ஒரு செய்திக் குறிப்பாகக் கூட சங்கம் இணையத்தில் வெளிவரவில்லை. ஈழ வேந்தனுக்கு ஒரு இரு பாக நினைவுக் கட்டுரை சச்சி சிறிகாந்தாவினால் எழுதப் பட்டிருந்தது. என்ன வேறு பாடு இரு அமரர்களுக்கும்? சம்பந்தன் தாயகத்திலேயே இருந்து அரசியல் செய்த ஒருவர். அமரர் ஈழவேந்தன், தேசியப் பட்டியலில் கூட்டமைப்பு பா.உ பதவி கிடைத்த கொஞ்சக் காலத்திலேயே லீவு போட்டு விட்டு உலகம் பூராகவும் குடும்ப சுற்றுப் பயணம் செய்த ஒருவர். பின்னர் இந்த லீவு காரணமாகவே பதவியை இழந்து, கனடாவில் தஞ்சமடைந்தார். சங்கம் இணையத்தின் "ஈழவர்களுக்கு யார், அல்லது எது முக்கியம்?" என்ற கேள்விக்கான பதில் கிட்டத்தட்ட ரஞ்சித் போன்ற தீவிர தேசியவாதிகளின் பதிலோடு ஒத்துப் போகும். அதனால், சங்கம் இணையத்தை ரஞ்சித் மூலமாகப் பாவிப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை!
  4. ஒரு கட்டுரையின் தொனிக்கு (உள்ளடக்கத்திற்கு அல்ல!) எதிர் கருத்து வைப்பது எப்ப இருந்து "முட்டுக் கட்டையாகப்" பார்க்கப் படுகிறது? "சில கட்டுரைகளையே இணைக்க முடியாது" என்ற எழுதாத விதி இருக்கும் யாழ் களத்தில், எதிர் கருத்தும் இப்போது முட்டுக் கட்டை என்று தடை பெறும் என்கிறீர்களா😂?
  5. யாழ். முகப்பில் இருக்கும் திரியின் தலைப்பில் ரஞ்சித் கொடுத்த தலைப்புத் தான் இன்னும் இருக்கிறது.
  6. இது இன்னொரு திரியில் பேசப்பட்ட, 2020 தேர்தல் முடிவுகளோடு தொடர்பானது என்பதால் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்: யாழ் அரச அதிபர் வேதநாயகம் 2020 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னர் அரசினால் இடம் மாற்றப் பட்டார். அந்த வேளையில் இடமாற்றத்தை இடை நிறுத்தும் படி பாராளுமன்றத்தில் வற்புறுத்தியது சுமந்திரனும், சரவணபவனும். பின்னர் வந்தவர் தான் அரச அதிபர் மகேசன். 2020 தேர்தல் நேரம், இவர் தான் யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுலவலர். 2020 இல் வாக்குகள் திருடப் பட்டன/மாற்றப் பட்டன என்று முறையிடும் நபர்கள், உண்மையில் மகேசனைத் தான் விசாரிக்கத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால், அரச அதிபர் மகேசனோ நேர்மையான ஒரு நிர்வாகி எனப் பெயர் பெற்றவர். நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையிடாமல் கறாராக இருந்த ஒருவர். இதனால் தான் டக்ளஸ், அங்கஜன் ஆகியோரின் தூண்டுதலால் கென்யாவுக்கான இலங்கைத் தூதுவராக அனுப்ப ப்பட்டார் என நம்பப் படுகிறது. இங்கே பொயின்ற் என்னவென்றால்: அரசியல் காழ்ப்புணர்வினால் பரப்பப் படும் போலித் தகவல்கள், வதந்திகள் victimless crimes அல்ல! "2020 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் முறைகேடுகள் நடந்தன" என கதை பரப்புவோர், மகேசனின் நேர்மையையும் களங்கப் படுத்துகிறார்கள். நூற்றுக் கணக்கான தேர்தல் பணியாளர்களின் சேவையையும் களங்கம் செய்கிறார்கள்.
  7. இதென்ன பிரமாதம்? இன்னொரு திரியில் 2020 இல் சிவகரன் தினக்குரலுக்குக் கொடுத்த அறிக்கையை, திகதி, விளக்கம் எதுவுமில்லாமல் கொண்டு வந்து இணைத்திருந்தார். சுமந்திரனை எதனாலும் அடிக்கலாம், அது பொய்யா, மெய்யா, செருப்பா என்பதெல்லாம் பொருட்டல்ல, அடிக்கோணும் - அவ்வளவு தான்😂!
  8. முன்னர் ஒரு சர்தார்ஜி பகிடி சொல்வார்கள் - இன அடையாளங்களை நக்கல் செய்வது கண்டனத்திற்குரியது என்பதால், சர்தார்ஜியை நீக்கி விட்டு அந்தப் பகிடி இப்போது பல வடிவங்களில் உலவுகிறது. ஒருவர் ஒரு கடையில் "பளபளப்பான தொலைக்காட்சிப்" பெட்டியைக் கண்டு, உடனே கடைக்காரரிடம் போய் "இந்த தொலைக்காட்சிப் பெட்டியை நான் வாங்க வெண்டும்" என்றிருக்கிறார். கடைக்காரர் முடியாது என்று விட்டார். வாங்க வந்தவருக்கு ஒரு வேளை "என் தோற்றம் காரணமாக கடைக்காரர் இதை விற்க மறுக்கிறாரோ?" என்ற சந்தேகம். மேலும் இரு முறைகள், வெவ்வேறு மாறு வேடங்களில் வந்து "இந்த தொலைக்காட்சிப் பெட்டியை" எனக்கு விற்பாயா என்று கேட்டிருக்கிறார். கடைக்காரரோ மறுத்து விட்டார். இறுதியில் வெறுத்துப் போய் "ஏன் நான் எந்த வேடத்தில் வந்தாலும் இப்படி விற்க மறுக்கிறாய்?" என்று கேட்ட போது தான் கடைக்காரர் சொன்னாராம்: "நீ எந்த வேடத்தில் வந்தாலும் நான் அந்த தொலைக்காட்சிப் பெட்டியை விற்க முடியாது, ஏனெனில் அது தொலைக்காட்சிப் பெட்டியல்ல, மைக்ரொவேவ் சூடாக்கி" . ஊரில் என்ன நினைக்கிறார்கள் என்பது ஏராளனுக்குத் தெரிந்திருக்கும் - மறுக்கவில்லை. ஆனால், மேலே தமிழ் வின்னின் படங்களைப் பார்க்கையில் "சுமந்திரனைத் தூக்க வேண்டும்" என்பதை மாறு வேடத்தில் வந்து கேட்கும் வழி தான் இந்த "இளைஞர்களை முன்னுக்கு விட வேண்டுமென்ற திடீர் அக்கறை". மாறு வேடத்தைக் கூடச் சரியாகப் போடத் தெரியாமல் தள்ளாடுகிறது சுமந்திரன் எதிர்ப்பு ஊடகமான தமிழ்வின்😂!
  9. முட்டாள் தனத்தை முட்டாள் தனமென்று தான் சொல்ல முடியும்.
  10. இது எப்போது எழுதப் பட்ட கட்டுரை நுணா? 2020? "மக்கள் தமிழ் தேசியவாதிகளை விட்டு விட்டு, மிதவாதிகளைத் தேர்ந்திருக்கிறார்கள்" என்று சரியாகக் குறிப்பிட்டு விட்டு "மக்கள் அப்படி இருக்கக் கூடாது" என்று குமுறியிருக்கிறார்! 2020 நிலை? 2024 இல் இது இன்னும் தேசியக் கட்சிகள் நோக்கி சாதகமாக மாறும். ஏன் அப்படி மாறும் என்பது பற்றித் தான் கருத்து வேறு பாடுகள்!
  11. இந்த அமைப்புகளைப் பற்றி நிலாந்தனும் எழுதியிருந்தார். வர்த்தக சமாசங்கள், இன்ன பிற என்று சில இருந்தன. இவற்றின் சார்பாக பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவெடுத்தவர்கள் "மக்கள் பிரதிநிதிகள்" என்று அடையாளப் படுத்தப் பட முடியாதவர்கள். உதாரணமாக "வவுனியா வர்த்தகர் சங்கம்" என்றால் "வர்த்தகர்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் - trade body, "வவுனியா மக்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் என்று சொல்லி அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தரமுயர்த்த இயலாது. அவர்கள் வாடி வீட்டில் கூடிக் கதைத்து எடுத்த பொது வேட்பாளர் முடிவை "ஜனநாயகம்" என்று மெச்சும் நீங்கள், தமிழரசுக் கட்சியின் பா. உக்கள் கட்சியின் மத்திய குழுவில்எடுத்த 19/23 முடிவை "இருவரின் முடிவு" என்று நிராகரிக்கிறீர்கள்😂. உங்களிடம் ஏன் இந்த வேறுபாடென்று விளக்கம் கேட்க முயலவில்லை. ஆனால், இப்படியான முட்டாள் தனங்களைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்பதற்காக சொல்லியிருக்கிறேன்.
  12. அது தான் வித்தியாசமென்றால், அதையல்லவா சுட்டிக் காட்ட வேண்டும்? தேசியப் பட்டியலிலும், தேர்வானவரைத் தூக்கி விட்டும் முதல் பதவி எடுத்தவர் உங்கள் பார்வையில் "மண்ணுக்காக" குரல் கொடுத்தால் எப்படி வந்தார்கள் என்பது பற்றிக் "கள்ள மௌனம்"😂. ஏனையோர் "குரல் கொடுக்கவில்லை" என்று நினைத்தால் அவர்களை வாக்காளர்கள் தேர்வு செய்தாலும் "பின் கதவு" என்ற வசவு. இந்த இரட்டை நீதிக் கூத்தை ஆமி ஊருக்குள் வர முன்னரே வெளிநாட்டுக்கு வந்து விட்ட சில புலம்பெயர் தமிழர்கள் செய்வது, தாயக புலம் பெயர் தமிழர்களை எதிரெதிர் திசைகளில் நகர்த்தி வருகிறது என்பது பொது வேட்பாளர் தோற்ற பின்னரும் கூட உங்களுக்கு புரியவில்லையா? இது உங்கள் கேள்வியா இல்லையா? இதற்குத் தான் பதில். இப்ப கேள்வி வேற என்கிறீர்களா?😂
  13. நீங்களும், விசுகரும், ஈழப்பிரியனும் "பக்கத்தில் நின்று பார்த்து விட்டு" எழுதுகிறீர்கள் என்று முதலே சொல்லியிருந்தால் நான் அப்பவே சரணடைந்திருப்பேனே ஐயா😎? ஏன் இவ்வளவு லேற்றாக இந்த முக்கிய விடயத்தைச் சொல்கிறீர்கள்? முதலில் "ஒருவரைத் தூக்கி விட்டு பதவிக்கு வந்து" பின்னர் ஒரு தேர்தல் வென்ற அரியநேத்திரன் "முன்வாசல்". முதலில் தேசியப் பட்டியலில் வந்து, பின்னர் இரு தேர்தல்கள் வென்ற சும் "பின் வாசல்". இது என்ன புதுக் கணக்கு😂? இதே கேள்வி அமரர் ஈழவேந்தன், அரியநேத்திரன் ஆகியோர் குறித்து உங்களுக்கு எழவில்லையே, ஏன்😂?
  14. உங்களுக்கு தேவையான தகவல்கள் இப்போது கிடைத்திருக்குமென நம்புகிறேன். சுமந்திரனும், சாணக்கியனும் தேர்தல்களில் நின்று வென்றவர்கள். அரியநேத்திரன், தற்போது இருக்கும் கஜேந்திரன், அண்மையில் அமரரான ஈழவேந்தன், ஒரு காலத்தில் ஜோசப் எம்.பி இவர்களெல்லாம் உங்கள் மொழியில் "பின்கதவு". "எல்லோரும் பின்கதவு என்றார்கள், நானும் நம்பினேன், சொன்னேன்" என்பது எவ்வளவு தூரம் முதிர்ச்சியான வாதமென நினைக்கிறீர்கள்? வாத்தியார் சொன்னது போல "மொள்ளக் கடந்து" போங்கள்😂!
  15. ஒமோம், வலு கவனமாக, பூனைப்பாதங்களால் சத்தமின்றிக் கடந்து செல்வோம்😂!
  16. இந்த "தலைமையேற்கக் காத்திருக்கும்" இளைஞர்கள் யார்? ஒருவரையாவது சுட்டிக் காட்டுங்கள். இவர்களின் வழியை யார், எப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள்?
  17. 2004 தேர்தலை மட்டுமா "கள்ள மௌனத்தோடு கடந்து போயிருக்கின்றனர்? இந்த திரி பொது வேட்பாளர் தொடர்பானது. பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்கள். அவரது முதல் பா. உ ஆசனம் கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தேர்தலில் நின்று வென்ற ஆசனம். அவரை "இனந்தெரியாதவர்கள்😎" கடத்திச் சென்று மிரட்டி பதவி விலக வைத்த இடத்திற்குத் தான் அரியநேத்திரன் அவர்கள் நியமிக்கப் பட்டார் (இதைப் பின்கதவு, கீழ் கதவு, கூரைக் கதவு வழி வந்த அரியநேத்திரன் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்). இதையும் கூட செலக்ரிவாக மறந்து விட்டு, இரு தடவைகள் தேர்தலில் வாக்குகள் வென்ற சுமந்திரனை இன்னும் "பின்கதவு" என்பார்கள். சிரிக்காமலே ஜோக் அடிப்பதில் வல்லவர்கள் இவர்கள்😂!
  18. கூட்டத்திற்கு வராத 20 உறுப்பினர்களுக்கு வாக்கு இருந்திருக்காது. அப்ப வந்த 23 பேரில் 19 பேர் ஆதரித்திருக்கிறார்கள் என்கிறீர்கள்? "இருவர் மட்டும் எடுத்த முடிவு என்று மேலே நீங்கள் பரப்பியது " புரளி என்று புரிகிறதா? நான் சிலுவை தான் சுமக்கிறேன், உங்கள் போன்ற தகவல்களின் தரக்கட்டுப் பாடு அறியாத "தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு😎" எதிராகத் தான் சிலுவையேயொழிய, எந்த அரசியவாதிக்காகவும் அல்ல! அப்படி உலகம் சொல்லி நான் காணவில்லை. உங்கள் உலகம் எது? ஆதவன், அக்கினிக்குஞ்சு, தமிழ்வின், முகநூல்?
  19. தலைவர் யார்? மாவையா சிறிதரனா? காலை, மதியம், மாலை என்று ஒவ்வொரு வேட்பாளர் பக்கம் நின்ற மாவை சொல்வதை நம்புகிறீர்கள். ஆனால் ஒரு முடிவெடுத்து அதன் படி நின்ற சும்மையும், சாணக்கியனையும் சந்தேகிக்கிறீர்கள்😂! அந்த முடிவெடுத்த கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்த்திருந்தால், வாக்கெடுப்பு நடந்திருக்கும். அதன் படி தான் முடிவும் எடுக்கப் பட்டிருக்கும். ஆனால், இந்த நடைமுறைகள் பற்றி எதுவும் தெரியாமல் தான் எல்லோரும் ரொய்லெற் ஊடகங்களை நம்பிக் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்! "காப்பாற்றி விட்டார்கள்" என்பது மனித உரிமைக் கூட்டத் தொடரில் நிகழ்ந்தவை பற்றி எதுவும் அறியாமல் தமிழ் வின் அவித்த பொங்கலை "அப்படியே சாப்பிட்டவர்களின்" நம்பிக்கை😂. இதைப் பற்றி ஏற்கனவே எழுதியாகி விட்டது, இனி மீண்டும் முதலில இருந்தா😅?
  20. சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂? பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார். ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி முறிகின்றனர்😂! என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?
  21. 😂 சரி, 53% வரவு. எனவே கூட்டம் நடத்த quorum இருந்திருக்கிறது. அல்லது யாப்பில் quorum வர எத்தனை பேர் தேவையென்று இருக்கிறதாமா? இந்த 23 பேரில் எத்தனை பேர் சஜித்தை ஆதரித்தார்களாம்? ஏதாது தகவல் அதைப் பற்றி?
  22. மத்திய குழுவில் எத்தனை பேர்? வவுனியா கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்? இருட்டுக்குள் சும் நடந்து போக "கள்ளா" என்று கத்தின ஒரு நிமிட வீடியோவை வைத்துக் கொண்டு இப்பவும் நம்புகிறீர்கள் ஒரு வதந்தியை! நிச்சயம் "வேரோடு புல்லை மேய்ந்திருக்கிறீர்கள்" என நம்புகிறேன்😂!
  23. இது பதிலடி😂? இதற்கு சும் பதில் சொல்ல முதல் பொது வேட்பாளராக சிறிகாந்தா அவர்கள் ஏன் நிற்க முன்வரவில்லை என்பதற்கு பதில் கொடுத்து விட்டாராமா😎? பலியாடு போல அரியநேத்திரன் அவர்களை முன்னிறுத்தி விட்டு, வரும் பொதுத் தேர்தலில் இவர்கள் போன்றோர் நின்று, வென்று பாராளுமன்றக் கன்ரீனில் திண்டு கொழுக்கிற பிளானில் இருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் இந்த அர்த்தமில்லாத கேள்விகள் வேற?
  24. இந்தப் பந்திகளில் இது வரை எழுதாத எதையும் நீங்கள் புதிதாக எழுதவில்லை! ஆனால், இங்கே சிலர் காதில் அமிர்தமாகக் கேட்க விரும்பும் வசவுகளைச் சேர்த்து எழுதியிருக்கிறீர்கள்😂! தேர்தலில் உங்கள் நிலைப்பாடு- என் புரிதலின் படி- வாக்காளர்கள் பயனற்றது என்று கருதியதால் தோற்றிருக்கிறது. அவ்வளவு தான் விடயம். இதனால் இப்போது உங்கள் நிலை apoplectic ஆக இருக்கிறது. உங்கள் நிலைப்பாடு , வருகின்ற பொதுத் தேர்தலிலும் பொது வேட்பாளர் தோற்ற அதே காரணங்களுக்காகத் தோற்கும். தாயக மக்களின் கரிசனைகள், நோக்கங்களில் இருந்து வெகு தூரத்தில் நிற்கிறீர்கள் என்பதை எப்ப தான் உணரப் போகிறீர்களோ தெரியவில்லை!
  25. ஆம், இப்போது இங்கே சிலர் தம் தேவைக்காக வதந்திகளை வைத்து செய்கிற அரசியல் அப்போதும் நடந்தது. சம்பவம் நடந்து மறு நாள், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அங்கஜன் மூவரும் சசிகலாவை சந்தித்து "இதை நீங்கள் விடக் கூடாது, நாம் உயர் நீதிமன்றில் வழக்குப் போட உதவுகிறோம்" என்று உசுப்பேத்திய அரசியல் நடந்தது. இதில் வெட்கக் கேடான விடயம் என்னவென்றால், இந்த மூவரும் தேர்தல் வேட்பாளராக அனுபவம் கொண்டவர்கள். இந்த வாக்குகள் திருடிய விடயம் நடந்திருக்கவே முடியாது என்பது நன்கு தெரிந்த ஆட்கள். தங்கள் அனுபவ அறிவை ஓரமாய் சுருட்டி வைத்து விட்டு "சுமந்திரன் லவ்" காரணமாக சசிகலா அவர்களை மேலும் அசிங்கப் படுத்த முயற்சித்தார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.