Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. சிறு திருத்தம்: 2009 வரை அல்ல, 2012 வரை. உங்களைப் போல பிறக்கும் போது "தப்பா எழுதினாத் தானே அழிறப்பர் தேவை?"😎 என்றி அழி றப்பரை நான் தூக்கியெறிந்து விடாததால், "எவரும் பக்திக்குரியவர்கள் அல்ல" என்று உணர்ந்து கொண்டேன். இதை "அவர் மன்னிக்கப் பட்டார்" என்று எழுதி வரும் தேசியத் தூண்களிடம் அல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்😂? என்னிடம் ஏன்?
  2. அவ்வளவு நேரமில்லாத பிசியென்றால் உண்மையென்று தெரியாத விடயங்களைக் குப்பை போல கொண்டு வந்து யாழில் கொட்டாமல் இருக்கலாமே? பொறுக்கியெறிய சும்மா நாம இருக்கிறோம் என்ற துணிச்சல் போல😎! நேராக இலங்கையின் நீதியமைச்சின் தளத்திலேயே சொல்லப் பட்டிருக்கிறது: வயது 21 இற்கு மேல் இருக்க வேண்டும் சாட்சிக் கையெழுத்து வைப்பதற்கு. இதை விட வயது தகுதிகள் இல்லை. ஆனால், சிலர் சாட்சிக் கையெழுத்து வைக்க தடைகளை நீதிமன்றம் ஏற்படுத்தலாம். ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு வெளியே பிணையில் இருப்பவர் சாட்சியாக வரமுடியாமல் இருக்கும். அனுபவம் இதுவாக இருக்கக் கூடும், அதை வெளியே சொல்லத் தயக்கத்தில் "என் வயது 61 என்பதால் என்னை சாட்சியாக ஏற்றுக் கொள்ளவில்லை" என்று யாராவது பெருமாளுக்கு சொல்லி வைக்க, அதை அவர் நம்பி விட்டார். இது அதிசயமில்லை😂!
  3. இந்த 6 வது புள்ளியைப் பார்த்ததும், இதை எழுதிய பதிவரின் "சஞ்சய் ராமசாமி" ஞாபக மறதி வெளிப்பட்டு சிரிப்பை வரவழைத்தது😂!
  4. அந்த இருவரும் தோற்றால் தான் , இவர் பா.உ வாக அடுத்த சில வருடங்களுக்கு சலுகைகளை அனுபவித்து bucket list இனை பூரணப் படுத்தலாம் என்கிறார்😂.
  5. அது அமெரிக்கப் பொலிஸ் பாதுகாப்புக் கொடுத்ததால் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பார்கள்!
  6. சுரேஷ் துரோகியென்று யாரும் எழுதினார்களா தெரியவில்லை. ஆனால், சுரேஷ் அப்பாவித் தமிழர்களைக் கொன்று வயிறு வளர்த்த ஒரு கொலைக்குழுத் தலைவர். இது வரை அவர் தன் கொலை பாதகங்களுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. உங்கள் "இறைவன்" அவரை மன்னித்தவுடன் அவர் சுத்தமாகி விட்டார் என்று நீங்கள் நம்ப உங்கள் "பக்தி" காரணம். ஏனையோருக்கு அவரை மன்னித்துப் போற்ற வேண்டிய அவசியம் இல்லை!
  7. "படம் பார் பாடம் படி" ரீம் தலீவர் இணைத்த படத்தில் ஆயுதங்கள் இருக்கின்றனவா? ஏதோ கடைத்தெருவில் சுமந்திரன் நடந்து செல்லும் படத்தில் ஒரு கடை வாயிற்காப்பாளர் இருக்கிறார். இவரை "ஆயுதப் படை" என்று நம்பும் அளவுக்கு தாயகத்தை கார்ட்டூனில் பார்த்து கருத்தெழுதும் புலப் பட்டாசு ரீமிற்காக மட்டும் இது இணைக்கப் பட்டிருக்கிறது😎. அவையள் வெடிக்கட்டும், நீங்கள் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?
  8. இந்த ரொய்லெற் ஊடகங்கள் புகழ்பாட வேண்டுமென்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஊடகங்கள் என்றால் நிருபர்கள், சம்பவங்களை அறிந்தோர், ஆய்வாளர்கள் என்று சிலரை வைத்து எழுத வேண்டும். இவர்கள் ஒருவர் அல்லது இருவர், காலமை எழும்பி கொமட்டில் முக்கிக் கொண்டிருக்கும் போது வரும் எண்ணங்களை எழுதி விட்டு "ஊடகங்கள்" என்றால் விபரமானவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. விசிலடிச்சான் குஞ்சுகள் அப்படியே சாப்பிடுவர்😎, தாயக மக்கள் விசில் குறூப் அல்லவே?
  9. சுமந்திரன் எதிர் பட்டாசு ரெஜிமென்ற்றின் "தோசை, இட்லி, குண்டு தோசை" என்று, ஒரே சரக்கை நேரத்திற்கேற்ப மாற்றிப் போடும் நிலையில்லா மூளைக்கு, இந்த செய்திக்கு அவர்கள் இட்டிருக்கும் பதில்கள் நல்ல உதாரணம்😂. இதே சுத்த இனவாதியான கம்மன்பில, 2016 இல் இருந்து புலிகள் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியும் சொல்லியிருப்பவை பொய் என்பார்கள், ஆனால் சுமந்திரன் பற்றி அவர் இப்பொது சொல்வது உண்மை என்கிறார்கள்! இந்த பட்டாசு படையணியை தாயக மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டு 10 ஆண்டுகள் ஆகி விட்டன! புலத்தில் மட்டும் தான் இந்த சத்தம்!
  10. கொஞ்சம் சிக்கலான நிலை ட்ரம்பினுடையது. ட்ரம்பும் அவரது சிவப்புக் கட்சியும் தீவிர இஸ்ரேல் ஆதரவாளர்கள். ட்ரம்பின் மருமகனும், மகளும் (திருமணத்தின் பின்) யூத மதத்தவர்கள். ஆனால், ட்ரம்பின் வெள்ளையின மேலாண்மைப் பேச்சுக்கள் சில சமயங்களில் யூதர்களையும் தாக்கியிருக்கிறது. "ஹிற்லர் சில நல்ல காரியங்களும் செய்திருக்கிறார்" என்று ட்ரம்ப் தன் உள்வட்டத்தில் கூறியது போன வாரம் ஒரு கட்டுரையில் வெளிவந்திருக்கிறது. இது தான் ட்ரம்பின் நிலை. ஆனால்,சில குடியேறி அமெரிக்கர்களும், முஸ்லிம் அமெரிக்கர்களும் "பைடனும் கமலாவும் இஸ்ரேலைக் கட்டுப் படுத்தவில்லை" என்ற கோபத்தில் ட்ரம்பை நோக்கிப் பழிவாங்கல் வாக்களிப்பாக செயல்படவும் முயல்கிறார்கள். ஆனால், ட்ரம்ப் வந்தால் நெரன்யாஹு அவிழ்த்து விட்ட வேட்டை நாய் போல ஆகி விடுவர் என்பதை உதாசீனம் செய்து விடுகிறார்கள்😂.
  11. கமலாவுக்கு வாக்களிக்க பல காரணங்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு இருக்கின்றன. ஆனால், ஈழத்தமிழர்களுக்கு தீர்வு, இறையாண்மை தருவார் என்பது அந்தக் காரணங்களில் ஒன்றாக இல்லை. ஆனால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்க ஈழவழி வந்த தமிழர்கள், ட்ரம்ப் நோக்கிக் கவரப் பட்டிருப்பதை அவதானிக்கிறேன். குடியேறிகள் மீதான வெறுப்பு (நாம தான் உள்ள வந்திட்டமே, பூட்டு கேற்றை மென்ராலிரி😂!), வரி கட்ட வெறுப்பு, கறுப்பின மக்கள் மீது வெறுப்பு, தற்போது புதிதாக இஸ்ரேல்/யூதர் மீது காண்டு எனப் பல காரணங்கள்.
  12. சும் பற்றி உங்கள் "உண்மை விளம்பி ஊடகங்கள்😎" சொன்ன பொய்கள் எதுவும் இது வரை தாயக வாக்காளர்களை மாற்றவில்லை. புலம் பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைத் தாமே சொறிந்து இன்பங்காண மட்டுமே இந்த ஊடகங்கள் உதவுகின்றன. பலருக்குச் சுகமாக இருக்கும் இந்த ஊடகங்கள் முதுகைச் சொறிந்து விடும் போது😂!
  13. அர்ச்சுனா, தன்னுடைய சிறுபிள்ளை விளையாட்டுகளை அரங்கேற்றும் தளமாக இந்த தேர்தலை மாற்றி விட்டார் போல தெரிகிறது. "ஈமெயிலைக் கண்டுபிடித்த தமிழனான" 😎 ஐயாத்துரையும் (2016 இல் என நினைக்கிறேன்), ஒரு மாநிலத்தேர்தலில் இங்கே போட்டியிட்டார். இது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயல்களில் ஈடுபட்டு "கோணங்கி" என்று பெயர் வாங்கினார். மக்கள் சீரியசான தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும், இந்தக் கோமாளிகளை உதாசீனம் செய்து ஒதுக்கி வைப்பது நல்லது!
  14. இதற்கெல்லாம் ஆதாரம் எதிர்பார்க்கிறீர்களே😂? வரும், பொறுத்திருங்கள்😎! தமிழ்வின், 2015 இலும், 2020 இலும் இதை விட மோசமான விமர்சனங்களுடன் தாக்கியது. இரு தேர்தல்களிலும் சுமந்திரனுக்கு மக்கள் வாக்களித்து வெல்ல வைத்தனர். இதன் பின்னராவது தமிழ்வின் போன்ற ரொய்லெற் ஊடகங்கள் ஏன் திருந்தவில்லை என்றும் கேட்டு வையுங்கள்😂!
  15. ஜேவிபியை தமிழரசு பின்பற்றுகிறது என்று நான் சொன்னேனா? தவறாகப் புரிந்திருக்கிறீர்கள். "ஜேவிபியை பின்பற்றி புதியவர்கள் இளையோர்" வரவேண்டுமென்று சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் புதிய பொல்லோடு வந்தார்கள். அந்தப் பொல்லையே எடுத்து சுமந்திரனிடம் வாங்கிக் கட்டியிருக்கிறார்கள்😂. புதியவர்கள் வரவேண்டுமென்று கோரியோர் ஏன் "காலாகாலமாக கட்சிக்குள் இருப்பவர் தான் வரவேண்டுமென்று" இப்போது தாளத்தை மாற்றியிருக்கிறார்களாம்? ஏனெனில் இந்த "புதியவர், இளையோர்" வரவேண்டுமென்ற கோரிக்கையே சுமந்திரனையும், சாணக்கியனையும் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய எடுத்த முகமூடி தான்! என்னுடைய அபிப்பிராயம்: இந்த எதிரெதிர் தரப்புகளை போட்டியிட அனுமதியுங்கள் - எந்தக் கட்சியிலாவது அல்லது சுயேட்சையாக. வாக்காளர்கள் தீர்மானிக்கட்டும். ஒற்றுமை என்ற பெயரில் கொள்கைகளில் இருக்கும் பன்முகத் தன்மையை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. ஒற்றுமை என்பது என்பது ஒரே அச்சில் வார்த்த கொள்கையாக இருக்க வேண்டியதில்லை (unity is NOT uniformity). நாம் வடகொரியாவைப் பின்பற்ற வேண்டியதில்லை.
  16. இதில் சிந்திக்க என்ன இருக்கிறது? " தெற்கில் ஜேவிபி இளைஞர்கள் புதியவர்களை ஊக்குவிக்கிறது, எனவே நாமும் அப்படிச் செய்வோம்" என்று "சுமந்திரன் எதிர்ப்பாளர்கள்" புது முகமூடியோடு வந்தார்கள்😂. அதே "முகமூடியை" வைத்து சுமந்திரன் அணி "உள் வீட்டுக் காரரும், 60 தாண்டியவருமான" தவராசா அவர்களை தவிர்த்து புதியவர்களை, இளையோரை போட்டியிட வைத்தது. இது பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய அல்லது "பூமராங்" திரும்பி வந்து எய்தவரையே தாக்கிய ஒரு உதாரணம். வேறேதுவும் இதில் குழம்பிக் கொள்ள இல்லை!
  17. இப்போது வரும் அட்டைகளில் தொடுகை மூலம் பரிமாற்றம் செய்யும் RFID இருப்பதால் இது முடிகிறது. shimming என்பார்கள். இதைத் தடுக்க சில வழிகள் இருக்கின்றன. கடனட்டைகளை வேறு அட்டைகளோடு அடுக்கி அதை பேர்சினுள் வைத்திருக்க வேண்டுமாம். இப்படி வைத்திருந்தால் இலகுவாக தொடர்பை ஏற்படுத்த முடியாது என்கிறார்கள். எங்காவது புதிய இடத்திற்குப் போய் கடனட்டை பாவிக்கும் போது ஒரு குறிப்பிட்ட கடனட்டையை மட்டும் பயன்படுத்தினால் அதில் ஏதாவது சந்தேகம் தரும் செயல்கள் நடந்திருக்கின்றனவா என்று இலகுவாகக் கண்காணிக்க முடியும். அனேகமாக எல்லாக் கடனட்டைகளும் தற்போது zero liability கொண்டவையாக இருக்கின்றன. இதன் அர்த்தம் நீங்கள் செலவழிக்காத ஒரு தொகையை நீங்கள் கண்டு பிடித்து கம்பனியிடம் "இது என்னுடையது அல்ல" என்று முறையிட்டால், அந்தத் தொகையை உங்கள் கணக்கில் இருந்து அகற்றி விடுவர்.
  18. 1891 இல் தென்னிந்தியாவைத் "திராவிட நல்நாடு" என்று தான் அழைத்திருப்பர், தமிழர் நல் நாடு என்று சொல்லக் கூடிய நிலை இப்போது இருந்தாலும்,அப்போது திராவிட மொழிகளின் நிலம் தான்.
  19. “வழக்கம் போல்தான். நீங்கள் ஒரு சேவையைப் பெறக் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அங்கு நீங்கள் தான் விற்கப்படுகிறீர்கள்” 😂அழகான வாக்கியம். சில தனியார் நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் இருக்கும் சில ஆயிரம் பரிமாற்றங்களை "ஒரு செய்திக்கு இத்தனை டொலர்கள்" என்று விலைபேசி தம் ஆராய்ச்சிகளுக்காக (consumer research) வாங்கிக் கொள்வதாக அறிந்திருக்கிறேன். அப்படி கம்பனிகள் செலவு செய்யும் சில ஆயிரம் டொலர்கள், பின்னர் அவர்களுக்கு மில்லியன்களாக மீளக் கிடைக்கும் வாய்ப்புகள் வரும். பூட்டி விட்டு பேசாமல் இருங்கள். விளம்பரம் வருவது கூட பரவாயில்லை.உங்களையே விற்று காசு பார்ப்பார் சக்கர்பேர்க். இவரோடு சேர்ந்து மில்லியன் டொலர்கள் சம்பளத்திற்கு வேலை செய்து செற்றிலான சிலர், பின்னர் வெளியேறி வந்து "சமூகவலைத் தளங்களின் தீமைகள்" என்று புத்தகம் போட்டு, நேர்காணல்கள், உரைகள் ஆற்றி மேலும் சில மில்லியன்கள் பார்ப்பர்😂.
  20. 😂 "எல்லோரும் ஒரு பதவிக்காக இருந்தார்கள்". தவராசா அவர்கள் "சீற்றுக்காக" கடைசிவரை இருந்து அது கிடைக்காததால் வெளியேறினார். கதை மிகவும் சுருங்கியது, ஆனால் வேற கதை தான் சொல்வார்கள். அதை விடுவோம்: தமிழரசுக் கட்சி அல்லது அதை "தனிக் கம்பனியாக" வைத்திருக்கும் சுமந்திரனின் செயல்களில் இருந்து நீங்கள் எப்படி வித்தியாசமாக நடந்து கொள்வீர்கள் என்று சொன்னால் வாக்காளர்களுக்குப் பயன் இருக்கும். இந்த "கம்பனி" கதையால் என்ன பயன்?
  21. அதைத் தான் நானும் எதிர்பார்த்திருக்கிறேன். சுவாரசியமாக இருக்கும்😂. இந்த முறை (பின் கதவு என்று பலர் குறிப்பிடும்😎) தேசியப் பட்டியலில் வந்தது போல கஜேந்திரன் பா.உ வரமுடியாத நிலை ஏற்படலாம். எனவே, பாடம் எல்லாருக்கும் கிடைக்கும். ஆனால், "தேர்தலில் அழாப்பி விட்டீனம்" என்று அழுவதை ஒரு தரப்பு மட்டும் செய்யும்!
  22. யாழ் பல்கலைக்கழக சமூகம் வடக்குத் தமிழர் என்ற சமூகத்தின் முக்கியமான ஒரு அங்கம். அந்த வகையில் அவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்றுக் கொள்வோர் ஏற்றுக் கொள்வர், மறுப்பு இருப்போர் தெரிவிப்பர். இதில் ஏன் இவ்வளவு அக்கப் போர் என்று தெரியவில்லை😂. என் தனிப்பட்ட கருத்து: யாழ் பல்கலை மாணவர் சமூகம், பல விடயங்களில் வடக்குத் தமிழ் மக்களின் கருத்தைப் பிரதிபலித்ததாக நான் காணவில்லை. இதே சமூகத்தில் இருந்து வந்தவர் தான் கஜேந்திரன் பா உ. மாணவர் தலைவராக இருந்த போது வைத்திருந்த அதே கொள்கைகளை வைத்து, அவரால் தேர்தலில் வெல்லக் கூட இயலுமாக இருக்கவில்லை. அதே போல சில கண்மூடிப் பழக்கங்களின் காப்பிடமாகவும் இதே யாழ் பல்கலை மாணவர் சமூகம் இருந்திருக்கிறது. ஒரு பீடத்தின் பெண் மாணவிகள் "வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டி வர வேண்டுமென்று" அறிவித்தல் விட்டதும் இதே சமூகத்தில் இருந்து வந்த "படித்த" இளைஞர்கள் தான்! எனவே, பேசட்டும், கேட்போம்!
  23. என்னது? "நாங்கள் மலையாளிகளா?" தொலைந்தீர்கள் நீங்கள்😂! அமுக்க வெடியில் (pressure mine) கால் வைத்து விட்டீர்கள், இனி காலை எடுக்காமல் அப்படியே அசையாமல் நில்லுங்கள்!
  24. அது தான் மேலோட்டமாக வாசித்தேன் என்று சொலியிருக்கிறேனே? கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் தராமல் உங்களை நீங்களே "பிரகாசிக்கும் சூரியனாக😂" கற்பனை செய்து மேகங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சுமந்திரன் செய்த "முறைப்பாடு" உங்களுக்காவது ஆவணமாகக் கிடைத்ததா? அல்லது நீங்களும் இணையக் குப்பையில் பொறுக்கி வெட்டி ஒட்டி ஒப்புவிக்கும் இன்னொரு automaton ஆ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.