Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. தேர்தல் கால மழைக்கு இப்படியான முகநூல் காளான்கள் முளைத்து, ஒலியெழுப்பி பின்னர் மறைந்து போவது வழமை. இவர்கள் சொல்வதையெல்லாம் சீரியசாக எடுத்து பதில் தேடாதீர்கள்!
  2. இந்த முறை இடம் வழங்கும் போது தேர்தலில் போன தடவை வென்றவர்களும், புதியவர்களானால் இளையோரும் போட்டி போட வாய்ப்புக் கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள். இந்த இரு வகைக்குள்ளும் தவராசா அவர்கள் வரவில்லை! ஆனால், இன்னொரு வகைக்குள் மிக இலகுவாக வருகிறார்😎, அதனாலும் அவரை வெட்டி விட்டிருப்பர். இது காரணமென்றால், நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறார்கள் என்பேன்!
  3. அரியநேத்திரன் அவர்களுக்குக் கிடைத்தவை இரண்டேகால் இலட்சம் வாக்குகள், இரண்டரை அல்ல, (கணக்கைச் சரி பாருங்கள்!). அந்த வாக்குகள் கூட உங்கள் "மண்டையில் போடும்" தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு இனியொரு காலமும் கிடைக்காது. இது நவம்பர் மாதம் "சங்கு மார்க்கில்" போட்டி போடும் மண்டையன் குழுவினர் தூக்கியெறியப் பட்டால் (அதை நீங்கள் சதிக்கதைகளைத் தாண்டி நம்பினால்😎!) உங்களுக்கு உறைக்கலாம். அது வரை வாயை விடாதீர்கள்! நீங்களோ , யாரோ மதிக்க வேண்டுமென்று நானுட்பட யாரும் சான்றிதழ் பெறுவதில்லை. அது பொன்னாடையல்ல யாரும் பணப்பையைக் கண்டதும் வந்து போர்த்தி விட😂! மாறாக உழைப்பினால் வந்தது, யாரும் தரவோ பறிக்கவோ இயலாது. நீங்கள் ஏற்கனவே அளவுக்கதிகமான நேரத்தை இவர்களுடன் செலவழித்து விட்டீர்கள் என்று நான் அபிப்பிராயப் படுகிறேன்! 😂
  4. "படம் பார், பாடம் படி!" அங்கேயே நில்லுங்கோ😂! NB: இது 2018 மே தினத்தில் எடுத்த படம், 6 வருடப் பழசு. அதை "சுமந்திரன் காதலர்கள்" கொண்டு வந்து இப்போது முன்னிலைப் படுத்தினால், "மே தினம் எப்ப கொண்டாடப் படுகிறது" என்று தெரியாத "படம் பார் பாடம் படி" ஆட்களுக்கு குழப்பம் வருவது இயல்பு தானே😂?
  5. ஒருவரின் கருத்திற்கு எதிராக கருத்து எழுத முடியாத ஒருவர் (அவரால் இயலுமான ஒரே விடயமான) நக்கல் செய்கிறார். அதற்கு நீங்கள் வந்து சிரிப்புக் குறி போட்டு ஊக்குவிப்பு வேற. இந்த லட்சணத்தில் நீங்களெல்லாம் "தேசிய தூண்கள்" என்ற நினைப்பு வேற! இப்பவாவது புரிகிறதா ஏன் தாயகத்தில் "புலம் பெயர் தேசியத் தூண்களை" மக்களும் வாக்காளர்களும் "அந்த" இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று? உங்கள் போன்றவர்கள் தான் காரணம்!
  6. ஏன் இது அதிசயமாக இருக்கிறது உங்களுக்கு? எதிர் தரப்பில் இருந்து "வார்த்தைகளால் சுட்ட" ஒருவரை தமிழரசுக் கட்சி உள்வாங்கிக் கொள்வதையே இப்படி அதிசயத்துடன் பார்க்கிறீர்கள். 90 கள் வரை புலிகளின் உறுப்பினர்கள், மக்கள், ஆதரவாளர்கள் என்று எல்லோரையும் ஆமியிடம் காட்டிக் கொடுத்து அந்த வருமானத்தில் திளைத்த மண்டையன் குழு, ரெலோ, புளொட் எல்லாவற்றையும் தலையில் விக்கிரகத்தைக் காவின உடனே மன்னித்து மறந்து ஏற்றுக் கொன்டு இப்போது ஆதரவு கூட கொடுக்கிறீர்களே? எப்படி😂?
  7. சித்தார்த்துடன் சுற்றித் திரிந்த பெண்ணும், சித்தார்த்தனும் தமிழரிடையே இருக்கும் சாதித் தடிப்புகளைப் பற்றிக் குறிப்பிட்ட தகவல்கள் உண்மை தானே? அவர்களது அணுகுமுறைக்கு நான் ஆதரவில்லை, ஆனால் சாதிவாதம் பற்றிய தகவல்கள் சரியானவை. சாதிவாதம் இன்னும் இருக்கிறது என்பதற்கு சாட்சியாக விளங்குபவர் தான் இந்த இளம்பிறையன். ஒரு தீவகப் பாடசாலையில் அதிபராக வேறு சாதிக்காரர் வரக் கூடாது என்று குத்தி முறிந்த தரப்பின் தலையாரி அவர், யாழிலேயே இதைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறோம். பட்டாசு ரீமின் குணம், எந்தச் சமூகக் கிருமியையும் சுமந்திரன், சாணக்கியனைத் திட்டி, புலிகளை தலையில் தூக்கி வைத்தால் உடனே நிபந்தனையின்றி ஆதரவு! இந்தக் குணத்தாலேயே மக்கள் முன்னாட்களில் தொழுநோயாளிகளைக் கண்டு ஓடியது போல விலகி ஓடுகிறார்கள், பட்டாசு ரீமிடமிருந்து😂!
  8. நெருப்பு எப்படி அணையும்? மேலே நுணாவிலான் விபரமான ஒரு கட்டுரையை இணைத்திருக்கிறார். அதைக் காணாதது போல "கடிவாளம் போட்ட குதிரைகள்"😎 நேரே போய் விட்டன! அப்படிக் காணாதது போல போனால் தானே இந்தப் பொய்யைக் காவித்திரிய முடியும்? இந்தப் பொய், உண்மையாகா விட்டால், தாயக மக்கள் 2020 இலேயே புலம்பெயர் தேசிய வீரர்களுக்கு தம் வாக்குகள் மூலம் குட்டு வைத்தார்கள் என்பது உண்மையாகி விடுமல்லவா? அந்த உண்மையை எப்படித் தான் ஜீரணிப்பது😂? எனவே, பொய் தொடரும், நெருப்பும் அணையாது. வரும் மாதம் திரும்பவும் வாக்குகள் மூலம் இன்னொரு உச்சந்தலைச் சம்மட்டி அடி கிடைத்தாலும், புதிய பொய்க்கு இப்பவே தூபமும் போட்டாச்சு! டொட்.
  9. 2020 இலும் முயற்சித்தாரென நினைக்கிறேன். கிடைக்கவில்லையென்றதும் இது போல பதவி விலகவில்லை. ஆனால், உள்ளே இருந்தே சுமந்திரன் எதிர்ப்பை ஊக்குவித்துக் கொண்டிருந்தார். சுமந்திரன் ஒரு பேட்டியில் "தான் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கவில்லை" யென்று சொல்ல, வெகுண்டெழுந்து தன்னை புலிகளின் விசுவாசியாகக் காட்டிக் கொண்டார். அனேகமாக கஜேந்திரகுமார் போல இருப்பார் என ஊகிக்கிறேன். இரண்டு கஜேந்திரகுமார்கள் தமிழர்களுக்கு அவசியமில்லை!
  10. இது பதில் இல்லையே? ஏன் ஒரு கருத்தைத் திரித்து விளங்கிக் கொள்கிறீர்கள் என்று தான் கேட்டிருந்தேன். இப்படியே பொய் வதந்திகளையும், சதிக்கதைகளையும் நம்பிப் பட்டாசு கொழுத்திக் கொண்டிருந்தால், நவம்பர் 16 இற்குப் பின்னர் அனுர அணி வடக்கு கிழக்கில் கொண்டாடுவார்கள் பட்டாசு கொழுத்தி! சேடம் இழுப்பது தமிழரசு மட்டுமல்ல, தீவிர தேசிய பட்டாசு ரீமும் தான்😂!
  11. 🤣பிள்ளையில்லாத வீட்டில் வயசாளி துள்ளி விளையாடின மாதிரியாக இருக்கிறது உங்கள் சிறு பிள்ளைத் தனமான கருத்துக்கள்! நிழலி எழுதியதை எல்லோரும் பார்த்தார்கள், அவர் சொன்னது "எல்லாப் பத்திரிகைகளிலும் இப்போது நம்பகத் தன்மையில்லாத செய்திகள் வருகின்றன, ஆனால் fact-check செய்வதால் செய்தியின் நம்பகத் தன்மையைப் பரிசோதித்து உண்மை அறியலாம்" என்று மட்டும் தான். அந்தக் கருத்தில், இதை விட மேலதிகமாக, ஏன் போலியான செய்திகளை நீங்கள் உண்மையென்று நிரூபிக்கப் பாடுபடுகிறீர்கள் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. முக்கியமான அந்தக் கருத்தை ஒரு காதால் எடுத்து, மறு காதால் வெளியே அனுப்பி விட்டு,இங்கே வந்து ஒரு வசனத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ன தான் நோக்கம்😂?
  12. சுமந்திரன் (ஒரு கட்டத்தில் சித்தார்த்தனும்) போய் மகேசன் அவர்களைச் சந்தித்த இடம் அவரது முன்னரங்க அலுவலகம். அது இருந்தது றொமெய்ன் மண்டபம். இந்த மண்டபத்தில் இருந்து வாக்கு எண்ணப் படும் பின்னால் இருந்த கட்டிடத்திற்கு உள்ளால் வழியேதும் இல்லை. அந்த வாக்கு எண்ணப் பட்ட கட்டிடத்திற்கு வெளியே கொட்டகை போட்டுக் காத்திருந்தவர்கள் தான் கஜேந்திரகுமார், சசிகலா, அவரது மருமகன் ஆகியோர். யாரும் வாக்கு எண்ணப் படும் இடத்திற்குப் போவதானால் இந்தக் கொட்டகையைக் கடந்து தான் போயிருக்க வேண்டும். மத்திய கல்லூரியில் கற்ற, வேலை செய்த, அதனல் அதன் உள்ளக கட்டடங்கள் பற்றித் தெரிந்த எல்லோருக்கும் நான் சொல்வது விளங்கும் (அப்படி விளங்கினாலும் சுமந்திரன் வாக்கை மாற்றினார் என்று வாதாடும் மத்தியின் மைந்தர்களும் இருக்கீனம்🤣!). இந்த எளிய விடயங்கள் கூடப் புரியாத ஒருவரை கூட்டமைப்பு சீற் கொடுத்து தேர்தலில் விட்டதில் தான் எனக்கு ஆச்சரியம்!
  13. ஓம், எனக்குத் தான் "விளக்கம்" குறைவாகப் போய் விட்டது! நீங்கள் தெளிவாகத் தான் இருக்கிறீங்கள்🤣! அது சரி, மேலே நிழலி எழுதியிருப்பதையாவது வாசித்தீர்களா அல்லது அதையும் கடந்து போய் விட்டீர்களா? கடந்து போனால் தானே அடுத்த முறையும் இதே விடயம் வரும் போது இதே சுமந்திரன் வாக்குத் திருடின பல்லவியை மீளப் பாடலாம்😎?
  14. 🤣உங்களுக்கும், விசுகருக்கும் போலிச் செய்திகளை முன்னிறுத்தியாவது ஒரு தரப்பை போட்டுத் தாக்க வேண்டுமென்ற மனப்பாங்கு இருக்கிறது. சில நாட்கள் முன்பு தான், மகேசன் பற்றி நீங்களே "அவர் நேர்மையாளர்" என்று எழுதி, அந்த இடத்தில் நானும் "மகேசன் தான் தேர்தல் பொறுப்பதிகாரி, ஏன் றொமெய்ன் மண்டபத்தினுள் போகலாம், காஷ் கட்டிடத்தினுள் இருந்த எண்ணும் நிலையத்திற்குப் போக முடியாது" என்று விளக்கம் தந்திருந்தேன். அப்ப பேசாமல் போய் விட்டு, இப்ப திரும்பவும் வந்து "பேப்பரில் வந்தது , அதை நம்பினோம்" என்கிறீர்கள். எந்த பேப்பரில் வந்தது? வீர கேசரி, தினக்குரல்? புலத்திலும், உள்ளூரிலும் இருந்த இருந்த ரொய்லெற் ஊடகங்களிலும், யூ ரியூப் குப்பைகளிலும் வந்ததெல்லாம் வைத்துக் கொண்டு இன்னும் போலிச் செய்திகளை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் போன்ற வயது அனுபவம் இருப்போரே இப்படி பொய் எது உண்மை எது என்று தெரியாமல் அப்பாவி கோயிந்தனுகளாக இருந்தால், இங்கே இருக்கும் "பட்டாசு றெஜிமென்ற்" பாடு தான் பரிதாபம்😂! புலிக்காய்ச்சல் இருந்து விட்டுப் போகட்டும், யாருக்குப் பாதிப்பு அதனால்? ஆனால் சீட்டுக்குப் போட்டி போடும் புழுக்கள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றிற்கு போலிச் செய்திகளை வைத்து முரட்டு முட்டுக் கொடுக்கும் உங்கள் போன்றவர்களால், இப்ப "தமிழ் தேசிய .." என்று எவராவது வாய் திறந்தாலே தாயகத்தில் மக்கள் விலகிப் போய் விடும் நிலை தான் அதிகரித்திருக்கிறது. 2020 இலேயெ அங்கஜனோடு ஆரம்பித்த போக்கு, இந்த முறை அனுர அணியோடு இன்னும் தீவிரமாகும். எல்லாப் புகழும் புலி வால்களுக்கே😂!
  15. நாய் செத்தாலென்ன, ஒட்டுண்ணிகளுக்கு வேற நாய், நரி, முதலை இப்படி கிடைக்காமலா போகும்? ஆனால், ஒட்டுண்ணி தலையில் ஒரு சின்ன "விக்கிரகத்தைத்" தூக்கி வைத்தாலே போதும், அது ஒட்டுண்ணியாக இருந்தாலும் "புலி" ஆக்கி விட நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்😂!
  16. வாழ்த்துக்கள் பெண் வீராங்கனைக்கும், அணிக்கும்! என்னவெல்லாம் நடக்கப் போகுதோ இந்த திரியில😂!
  17. அப்ப ஒட்டுண்ணிகளாக இது வரை உறிஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார்களென ஒத்துக் கொள்கிறீர்கள்😂?
  18. கவியர், இவர்கள் வாழ்வது சமாந்தர பிரபஞ்சத்தில்! அந்தப் பிரபஞ்சத்தில் தரவுகள், ஆதாரங்கள், எண்ணிக்கை எதுவும் கணக்கிலெடுக்கப் படாது! மூளையின் random firing உம் தகரடப்பா ஒலியும் தான் கணக்கு😂!
  19. பலர் அம்மணமாக உலவும் கடற்கரையில் உடுப்பு போட்டவன் விசித்திரமாகத் தான் தெரிவான். அப்படியே மேலே போய் ஐலண்ட் எழுதியிருப்பதையும் பார்த்து "ஒரு பக்கப் பார்வையை பிரச்சாரம் செய்யும் ஊதுகுழல் ஊடகம்" என்பதன் அர்த்தம் புரிகிறதா என்று முயற்சியுங்கள்😎. இங்கே ஊதுகுழல் ஊடகங்களை - தமிழோ, சிங்களமோ- நம்புவோரின் பிரச்சினை, சம்பவங்கள் நடக்கும் போது தாயகத்தில் இருக்காமல், இந்த ஊது குழல் ஊடகங்களில் மட்டும் பார்த்து கேட்டு அப்படியே "சாப்பிட்டிருப்பார்கள்"! யாரும் எதையும் அப்படியே சாப்பிடலாம், ஆனால் சாப்பிட்டதை இங்கே கொண்டு வந்து உண்மை வரலாறு எழுதுகிறேன் என்று வரலாறு எழுதுவோரை அவமானம் செய்யக் கூடாது😂!
  20. அவருக்கும் தெரிந்திருக்கும், உங்களுக்கும் தெரிந்திருக்கும் ஊருக்கே தெரிந்திருக்கும், ஆனால் இங்கே எழுத முடியாது! நல்ல கிறீஸ் போத்தல் வாதம் தான் போங்கள்😂!
  21. "சசிகலா சொன்னது தான் சத்தியவாக்கு, ஆதாரம்" என்று நம்பும் அளவுக்கு , சதிக்கதைகளில் அமிழ்ந்து போய் கிடக்கிறீர்கள்😂! "இந்த ஆதாரத்தை வைத்து அவர் ஏன் அரச அதிபர் மகேசனை நீதிமன்றில் சந்திக்கவில்லை?" யென்று கேட்ட போது பதில் இல்லாமல் இருந்தவர்களையும் தேடுகின்றேன்! இருக்கிறார்களா இங்கே😎? இந்த முறையாவது முகநூல் பதிவை நம்பி பின்னர் ஏமாந்து ஒப்பாரி வைக்காமல், சசிகலா அவர்கள் தேர்தல் பற்றிய அறிவோடு முடிவை எதிர் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறோம்!
  22. இதில் அரசியல் என்ன இருக்கிறது? இங்கே நான் கேட்பது தரவுகள், ஆதாரங்கள். ஏன் நாம் அறிந்து கொள்ள முடியாது? ஆதாரங்கள் எங்கேயாவது கொள்ளிமலை இரகசியமாகப் புதைக்கப் பட்டு உங்களுக்கு மட்டும் தெரிகிறதா😎? 83 கலவரத்தில் பங்கு கொண்டவர்களில் ஜேவிபியினர் முக்கியமானவர்களா? ஜேஆர் அரசு ஒர் கல்லில் இரு மாங்காய்களாக ஜேவிபி தான் பிரதான சூத்திர தாரிகள் என்று தன் கட்சிக் காரரைக் காப்பாற்ற சொன்ன திரிப்பை நீங்கள் இப்போது நம்புகிறீர்கள் - இதற்கு முன்னர் இதைப் பற்றி யாரும் பேசவில்லை. என் படிப்பை, பட்டத்தை விடுங்கள் , தரவுகளை தேடிச் செல்லும் பழக்கத்தைத் தரும் என் படிப்பு உங்கள் போன்றவர்களின் காலச் சூழ்நிலைக்கேற்ற மாதிரி வசதியான தரவுகளை மட்டும் பொறுக்கிப் பாவிக்கும் நிலையில் இருப்போருக்கு எப்போதும் கீழாகத் தான் தெரியும். இங்கே ஜேவிபியை பெரிய கற்பனை முதலையாகக் காட்டி, மோசமான மனித உரிமை மீறல்கள் செய்த மண்டையன் குழுவை சிறு புழுவாகக் காட்டும் உங்கள் நிலை, "தலையில் அந்தப் புழு யாரைச் சுமக்கிறது" என்ற விடயத்தைப் பொறுத்தது என நினைக்கிறேன். உங்கள் நிலைப்பாட்டின் நீதி: என்ன அநியாயமும் செய்யுங்கோ, ஆனால் புலிகளையும், தேசியத்தையும் பற்றி வாயளவில் பேசுங்கோ - எங்கள் வாக்கு உங்களுக்கே!😂
  23. எங்கே இருந்து இந்த தகவல்களை எடுக்கிறீர்கள்? ஜேவிபி தமிழர்களை மண்டையில் போட்டார்களா? உண்மையிலேயே நீங்கள் பிரான்ஸ் போன பின்னர் சின்னத்திரையில் தான் தாயகத்தில் நடந்ததைப் பார்த்தீர்களா? சிறி லங்காவின் இராணுவத்தில் ஜேவிபி ஆதரவாளர்களும் இருந்திருக்கின்றனர். ஆனால், ஜேவிபி என்ற கட்சி தமிழர்களை கடத்திச் சென்று, சுரேஷ், பரந்தன் ராஜன் குழுக்கள் போல கொன்றது நான் அறியவில்லை.
  24. சிங்கள, ஆங்கில, தென்னிலங்கை ஊடகங்களில் இருந்து பெற்று, வடிகட்டிய பின்னர் வெளியிடுகின்றன என்பதே சரியானது. தமிழ்நெற்றில் வருபவை எல்லாம் "வரலாற்று உண்மைகள்" என்றால் "லங்கா புவத்தில்" சிங்கள தரப்பு சொல்வதும் உண்மைகள் என்று ஏற்றுக் கொண்டு "முள்ளிவாய்க்காலில் மக்களைக் காக்க சிறிலங்கா யுத்தம் செய்தது" என்பதும் வரலாற்று உண்மையாகி விடும். தமிழ்நெற் தமிழர் பக்க ஊதுகுழல், லங்காபுவத் சிங்கள ஊதுகுழல். இந்த வேறுபாடு தெரியாமல் நீங்கள் சிறந்த நகைச்சுவையாளராக வலம் வருகிறீர்கள்!
  25. "பெட்டி வாங்குறார், கஞ்சா விற்கிறார், கஞ்சா விற்பவர்களை பொலிசில் இருந்து பாதுகாக்கிறார்" என்று ஒரு பெரிய போலி அவதூறுப் பட்டியல் இருக்கும் சுமந்திரனே சும்மா இருக்க, இந்த ஒரு மேட்டருக்கு சிறிதரன் ரென்சனாகியிருக்கிறார்😂! சீரியசாக: நான் இதையே விக்கி ஐயா தொடர்பான செய்தியில் கேள்வியாகக் கேட்டிருந்தேன்: விற்பனை அனுமதி எடுக்க, என்ன நடைமுறை, யார் பெயரில் அனுமதி கொடுக்கப் படுகிறது என்ற எந்த விளக்கமும் இல்லாமல் சும்மா யூ ரியூபில் வடை சுட்டவர்கள் கொஞ்சம் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்தால் நல்லது தான்😎!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.