Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. சுரேஷ் தமிழர் என்பதால் தான் பேச வேண்டியிருக்கிறது. சிங்களவன் தமிழரைக் கொல்வது புதுமையா? அப்படியிருந்தும் சிங்கள தேசியவாதி அனுரவின் அணி தமிழர்களை நேரடியாகக் கடத்திச் சென்று, சித்திரவதை செய்து, மண்டையில் போட்டு வீதியில் வீசியமை இது வரை நடக்கவில்லை. இனி நடந்தால் அது வேறு கதை. உங்களைப் பொறுத்தவரை, சுரேஷ் என்ற மண்டையன் குழுத் தலைவரின் கதை, அவர் 2002 இல் புலிகளின் தோட்டாக்களின் மீதான பயத்தால் "புலிகளையும் தமிழ் தேசியத்தையும் சிரமேற் சுமக்க ஆரம்பித்த நாள்" முதல் தான் ஆரம்பிக்கிறது. எங்கள் போன்றவர்களுக்கு 89 இல் பள்ளிக்கூடத்திற்கும், விளையாட்டு மைதானத்திற்கும் கூட ஒளித்துத் தான் போக வேண்டிய அவல நிலையோடு இவர்களின் கதை ஆரம்பிக்கிறது. என் சமகால பாடசாலை வகுப்பினரிடையே, இந்த ஒட்டுண்ணிகளின் தொல்லையால் படிப்பை விட்டு வெளிநாடு போய் தம் எதிர்காலத்தை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படிப் பல கல்வி ஆர்வத்துடன் இருந்த அப்பாவி இளையோரை ஊரை விட்டுத் துரத்தி விட்டு, பின்னர் தமிழ் தேசியத்தை தலையில் தூக்கிக் கொண்டு பா.உ ஆன சுரேஷ் ஒரு ஒல்லிப் பித்தானாக இருந்த ஆயுததாரி. இப்ப பா.உ பதவியால், எல்லாப் பக்கத்தாலும் ஊதிப் பருத்து சொகுசாக இருக்கிறார். இவர் போன்றவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!
  2. பிந்திய செய்தி: இந்த தீவின் இறைமையை மொரீசியசிடம் மீளா ஒப்படைக்கப் போகிறார்களாம். ஆனால், டீகோ கார்சியா அமெரிக்க பிரிட்டன் கூட்டுத் தளம் அப்படியே இருக்கும். அனேகமாக, இங்கேயிருக்கும் தஞ்சக் கோரிக்கையாளர்களை மொரீசியசுக்கு அனுப்பி விடுவார்களென ஊகிக்கிறேன்.
  3. நல்ல ஜோக்கராக மாறி வருகிறார் சுரேஷ்! கூட்டமைப்பின் அடையாளம் இல்லா விட்டால் எப்பவோ இவர்கள் அரசியல் மேடையில் இருந்து மறைந்திருப்பர் என்பது கூட விளங்காமல்😂?
  4. இது தினக்குரல் டிஜிற்றல் ரீமின் தவறு. இதற்கு நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை ஏராளன்! ஆனால், முற்றிலும் தவறான ஒரு செய்தியை இணைத்தால் கூட, அது தங்களுக்கு விருப்பான செய்தியாக இருந்தால் சில வாசகர்கள் அப்படியே சாப்பிடுவார்கள் என்பதற்கு ஒரு சாட்சியாக இது இருக்கிறது!
  5. அப்படியாக நீங்கள் பெருமாள் போன்றோர் நடந்து கொண்டால் சுபம் தான். சும்மா தனிப் பட்ட வெறுப்பை வைத்துக் கொண்டு பெருமாள் (இதை அவர் செய்யா விட்டால் தான் அதிசயம், அது தான் அவர் நிலை!😎) ஒரு கீழத்தரமான தாக்குதல் செய்கிறார். அதை எடுத்துக் கொண்டு நீங்க ஏதோ "ஊர் நலத்தில் அக்கறை கொண்ட பெரியவாள்" போல என்னைக் குறித்து நக்கல் செய்கிறீர்கள். ஏதோ இதற்கு முன் ஜீவன் சிவா போன்றோரை நீங்கள் நடத்திய விதங்கள் ஏனையோருக்குத் தெரியாது என்ற நினைப்பு உங்களுக்கு. நீங்களெல்லாம் "தாத்தா" என்று வேசம் போட்டுக் கொண்டு இப்படியாக இங்கே நடந்து கொள்ளும் போது, ஊரில் வயசாளி செய்தியில் இருப்பது போல நடந்து கொள்வதில் என்ன அதிசயம் இருக்கிறது? இரண்டு வகை செயல்களும் ஒரே குட்டையில் ஊறியதால் வந்த நாற்றங்கள் தான்😂! வேலை தெரிஞ்சால் ஏன் இங்க நிண்டு முக்குறீங்கள்! போய் அதைச் செய்யுங்கோ! ஏதோ நான் மெனக்கெட்டு உரையாடலை ஆரம்பித்த மாதிரி தோற்றம் வேற. கூட்டுகளுக்கு - அவர்கள் என்ன நாற்றத்தை யாழுக்கு எடுத்து வந்தாலும் - முக்கி முட்டுக் கொடுக்கும் உங்கள் இயல்பால், நீங்கள் தான் என்னை நோக்கி தேவையற்ற கருத்தை நேற்று வைத்தீர்கள்! அது கூட மறந்து விடும் மூளையா உங்களுக்கு😎?
  6. கவனித்தேன். ஒரு விடயத்தை காரணம் சொல்லி தவறு என்றால், காரணத்தைப் பார்க்காமல் "செய்தியை வேஸ்ற் என்றவன் இந்த வேலைகள் செய்ய விரும்புவன்" என்று நாசூக்காக எழுதுகிறார்! இந்த நாசூக்காக எழுதும் அளவுக்கு இயலுமை இல்லாததால் நேற்று ஒருவர் வெளிப்படையாக எழுதிய கருத்தை நீக்கினார்கள், விசுகரின் கருத்து நீக்கப் படாது! தலைகளாக இருப்பவர்கள் எல்லோரும் இப்படித் தான் இருப்பார்கள் போல😂!
  7. இரண்டையும் ஏன் ஒருவரே செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? புலிகளை விமர்சனம் செய்தால் "ஏன் பழசக் கிளறுகிறீர்கள்😂?" என்று கருத்து வைப்பதும், ஏனைய தரப்புகளின் வரலாற்றை "Just நினைவு படுத்துகிறோம்" என்று glorify செய்வதும் தான் இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது. இதை விட விமர்சனம் யாருக்கும் முழு நேரத் தொழில் கிடையாது இங்கே!
  8. இன்னும் நீங்கள் 7 - 8 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மாதிரியே இருக்கிறீங்கள் தம்பி! "ஒண்டிக்கு ஒண்டி வா" என்று போக இதென்ன கள்ளுத் தவறணைச் சண்டையா? ரஷ்யாவுக்கே ஈரானும், வடகொரியாவும் ஆயுதம் கொடுத்துத் தான் முட்டுக் குடுத்திருக்கிற நிலையில, இஸ்ரேல் தனிய நிற்க வேணும், வெல்ல வேணுமெண்ட கதையெல்லாம், என்ன மொக்குத் தனமான கதை?
  9. மற்ற இயக்கங்கள், ஜேவிபி, எல்லாரையும் பரிசோதனை செய்யலாம், ஆனால் புலிகளை மட்டுமல்ல, "புலிகளின் பின்னால் இருக்கும் வாலைக்" கூட விமரசனம் செய்யக் கூடாது என்பது தானே "தமிழ் தேசிய வியாதி?" இந்த தீர்க்க இயலாத வியாதியை வைத்துக் கொண்டு , "மக்கள் எங்களை வெல்ல வைக்கவில்லையே!" என்று புலம்புவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?
  10. அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. பிரிட்டனும், பிரான்சும் அமெரிக்காவோடு சேர்ந்து ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதலைக் கண்டித்தன என்பது தான் இந்த விடயத்தில் வந்த கடைசித் தகவல்.
  11. இப்படியான "திட்ட வட்டமான அறிவிப்பு" எங்கே வெளியிடப் பட்டதாம்? யாராவது இணைப்பைத் தர முடியுமா?
  12. முக்கியமான செய்திகள் இருக்கும் போது இது தேவையா என்பது தான் என் கேள்வி! ஆனால், நேரடியாக பல இடங்களில் கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடும் "வீர தீரர்கள் " பெருமாளின் தலைமையில் திரண்டிருக்கிறார்கள் போல தெரிகிறதே😂?
  13. இதைப் பார்க்கையில் உங்களுக்கு யாழ் விதிகள், நடைமுறைகள் தெரியவில்லையா அல்லது உலக நடைமுறையே தெரியவில்லையா என்ற யோசனை வருகிறது. கருத்துக் களத்தில் எழுதுகிறீர்கள், ஆனால் ஏனையோர் "சாமரம் வீசும்" கருத்துக்களை மட்டுமே வைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு இருக்கிறீர்கள். இதே முறைப்பாட்டை, உங்கள் ஏனைய தேசிய நாட்காட்டிகளிலும் கேட்ட நினைவு. "அனுரவை தமிழ் மக்கள் நல்ல ஒளியில் பார்த்து விடக் கூடாது" என்கிற நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் - எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக நீங்கள் பயன்படுத்தும் மூலங்கள் தமிழ்நெற்றும், சங்கம் தளமும் - இவை இரண்டினதும் வடிகட்டியெடுத்து செய்தி/ஆய்வுகள் போடும் "நடுநிலை" 😎எல்லோரும் அறிந்ததே! நான் நினைக்கிறேன், தமிழ் வேட்பாளர் தோல்வியின் பலனாக ஒரு துன்ப grieving அனுபவத்தில் இருக்கிறீர்களென. முதலில் denial. பின்னர் கோபம். இப்போது "தோல்வியின் காரணம் வேறு யாரோ" எனும் blaming. "சும், சம், மாவை தான் இன்று ஒரு சிங்களவர் பக்கம் தமிழ் இளையோர் சாயக் காரணம்" என்ற உங்கள் கருத்தில் இந்த blaming தான் தெரிகிறது. உங்கள் போன்றோரின் தீவிர தேசிய நிலைப்பாடுகளும், சகிப்புத் தன்மையின்மையும் இறுதி வரை உங்களுக்கு ஒரு மறைக்காரணியாகத் தெரியப் போவதேயில்லை! நான் பல இடங்களில் சுட்டிக் காட்டியிருப்பது போல தீவிர தமிழ் தேசிய நிலைப்பாடும், ஒரு அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும், மேலுல் தமிழர்களை உங்களிடமிருந்து அன்னியப் படுத்தும்.
  14. இரண்டு பகுதியையும் அவதானிக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு உவப்பாகத் தெரிவதை உண்மையென்று நம்புகிறீர்கள்😂. இது தான் நான் கவனித்தது. ட்ரம்பின் 34 குற்றச்சாட்டுகளின் ஆதாரங்கள் கோர்ட் தளத்திலேயே இருந்த போதும், நீங்கள் ஒரு வலதுசாரி செய்தியைப் பார்த்து விட்டு, அமெரிக்க நீதித் துறையை குறைவாக மதிப்பிட்டதைக் கவனித்தேன்.
  15. தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!
  16. பையன், இப்ப என்ன சொல்லி விட்டேன் என்று பதற்றம்😂? நீங்கள் யூ ரியூபில் வரும் "எல்லாவற்றையும்" நம்பும் ஒருவர், நான் அப்படியல்ல. அதற்காக இஸ்ரேலுக்குள் ஒன்றுமே விழவில்லை என்று நம்பும் அளவுக்கு பற்றி அறியாத மடந்தையும் அல்ல! அது தான் பிபிசியில் வந்திருக்கிறது என்கிறேன். நீங்கள் மறைக்கிறார்கள் என்கிறீர்கள். எப்படி மறைப்பது இந்த ரிக் ரொக், இன்ஸ்ரா என்று எல்லோரும் திரிகிற காலத்தில்? ஏன்? "பார்க்கும் ஊடகத்தைப் பிரகடனப் படுத்தினால் தான் யாழில் எழுதலாம்" என விதி இருக்கிறதா?😂
  17. வினோ எம்பி 90 களில் இருந்து வேலைவாய்ப்பு முதல் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்த தமிழ் மக்களை வெளியே எடுத்து விடும் வேலை என்று செய்து பார்த்த காசு கோடிகள் தாண்டும். அவரிடம் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன என்ற கணக்கு அவருக்கே தெரிந்திருக்காது, இனியேன் வினோ எம்பி க்கு உழைப்பு அவசியம்? இருந்தே சாப்பிடலாம்😂!
  18. இதில் ஒரு சிறிய திருத்தம்: இலங்கையில் சட்டக் கல்லூரியில் முடிக்கும் சட்டக் கல்வியின் பட்டம் LLB- இளமாணிப் பட்டம். இது இருந்தால் இலங்கையில் சட்டத் தொழில் செய்யலாம். மேலே தரப்பட்டிருக்கும் LLM என்பது சட்ட முதுமாணிப் பட்டம் - இதனை அவுஸ்திரேலிய மொனாஷ் பல்கலையில் பெற்றார். இன்னொரு தகுதியைக் குறிப்பிட மறந்திருக்கிறீர்கள். "ஜனாதிபதி சட்டத்தரணி-President's Counsel" என்ற கௌரவம் சும்மா "பள்ளிக் கூடம் ஒதுங்காத"😎 ஆட்களுக்குத் துக்கிக் கொடுக்கும் நிலை இன்னும் இலங்கையில் ஏற்படவில்லை. சுமந்திரன், கனக ஈஸ்வரன் , சிவா பசுபதி, கமலசபேசன் , எங்கள் விக்கி ஐயா ஆகிய சில தமிழ் சட்டத்தரணிகள் இந்த கௌரவம் பெற்றிருக்கிறார்கள். பி.கு: கல்வித் தகுதிகளில் ஆர்வம் மிகுந்த விசயகாரரான பெருமாள் transcripts கேட்பார்! றெடியாக வைச்சிருக்கிறீங்களா😂?
  19. இப்படிக் "கெட்டப் போல் கதையை" உங்களுக்குச் சொன்ன மேற்குலக ஊடகங்களை நான் பார்ப்பதில்லை - அவை நுணாவின் விருப்ப ஊடகங்கள்! பிபிசி கூட இந்த முறை அதிக ஈரானிய ஏவுகணைகள் உள்ளே விழுந்ததாகச் சொல்லியிருக்கிறது. இந்த கல், கெட்டப் போல், நீங்கள் David's Sling என்ற இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு சிஸ்ரத்தின் பெயரைப் பார்த்துக் குழம்பியதால் வந்ததோ எனவும் யோசிக்கிறேன்😎! உங்கள் புரிதல் பல இடங்களில் அப்படி!
  20. ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு😂! எழுதினவர் இன்னொரு "பெரிய ரூமாகப் போட்டு" இதையும் யோசிப்பாரா? பாலை மட்டுமா சோறு உறிஞ்சியதாம்? இன்னொரு தட்டில், தண்ணீரை மட்டும் சாதத்தோடு சேர்த்து, அதையும் உறிஞ்சுகிறதா எனப் பார்த்தாராமா?
  21. 12 நிமிடம் எடுக்கிறதென்றால் 515 மைல்/மணி வேகம். இது போயிங் 747 இன் உச்ச வேகமான 600 மைல்/மணியை விடக் குறைவாக இருக்கே? முறிகண்டியில் நிண்டு ரீ யெல்லாம் குடிச்சு விட்டு வந்திருப்பாங்களோ😂?
  22. "சந்தனத்தில்" (சந்தனக் கட்டை இருப்பதால்) தயாரித்த சோப்பாக இருக்கும்! அல்லது புகழ்பெற்ற ஈழத்தயாரிப்பான "மில்க்வைற்" ஆகவும் இருக்கலாம்😂!
  23. அட்ரா ..அட்ரா😂! அருமையான வசனங்கள், சொற்கள் - ஆனால் இந்த சொற்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தமென்று ஒரு சொற்களஞ்சியமும் - Glossary சேர்த்து வெளியிட்டால் மக்களுக்கு வசதியாக இருக்கும்! பொதுக்கட்டமைப்பு என்று ஆரம்பித்த போதே backroom players ஆக இருக்கும் பலருக்கு "பாராளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டு ஆசை" வந்து விட்டது என்ற சந்தேகம் இருந்தது, இப்ப உறுதியாகி விட்டது!
  24. சுன்னாகம் எண்ணையை மண்ணுக்குள் அனுப்பியதாக செய்தி வந்தது. கிணற்று நீரில் எண்ணை மிதக்கும் படங்கள் வந்தன. ஆனால், கிணற்று நீரை எடுத்து அரச பகுப்பாய்வாளரிடம் (Govt. Analyst) அனுப்பிய போது எண்ணைக் கலப்பைக் கண்டு பிடிக்கவில்லை, அளவுக்கதிமான நைதரசன் உரமாசு இருப்பதாகத் தான் கண்டறிந்தார்கள். நான் குறிப்பிட்டது, பேராதனையில் எண்ணைப் படிவு மாசு பற்றிய நிபுணத்துவம் உடைய ஒரு பேராசிரியர் இருந்த போதும், அப்படியான ஒருவரையும் அணுகாமல் சும்மா அரசியல்வாதிகள் தங்கள் அலட்டல்களால் கழிவெண்ணை தண்ணீரில் வந்ததா என்பது இன்னும் தெரியாது என்பதைத் தான். நன்றி. கிராமசேவகர், பிரதேச செயலாளர் போல பா.உ வும் ஏதும் சாராய விற்பனை அனுமதிக்கு அத்தாட்சி வழங்கும் நடைமுறை இருக்கிறதா தெரியவில்லை.
  25. "சிங்களவர்கள் சிந்திக்கத் தொடங்கினர்" என்பதை நீங்களாகவே "சிங்களவர்கள் நியாயமாகச் சிந்திக்கத் தொடங்கினர்" என்று எடுத்துக் கொண்டு கவியர் சொன்னதை திசை திருப்புகிறீர்கள்😂. கொழும்பிலும், தென்பகுதியிலும் தமிழருக்கு 70, 80 களில் இல் நடந்ததும், 1930 களில் பேர்லினில் யூதர்களுக்கு நடந்ததும் ஒரே வகையான அநீதி என்று நான் நம்புகிறேன். இரு சந்தர்ப்பங்களிலும் ஒரு சிறுபான்மை இனம் பல துறைகளில் கோலோச்சினர். பெரும்பான்மையினர், இதனால் எரிச்சல் கொண்டனர். இது தமிழர்களினதோ, பேர்லின் யூதர்களினதோ தவறல்ல. சிறு பான்மையினரின் முன்னேற்றம் தமக்கு ஆபத்து என்று நோக்கிய பெரும்பான்மையினரில் தான் தவறு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.