Everything posted by Justin
-
சம்பந்தர் காலமானார்
😂 இந்தா அடுத்த இலக்கு றெடி! உண்மையில், சும்மிற்குப் பிறகு போட்டு மொங்கவும் ஆள் றெடி: "சிங்களக் காதலி" வைத்திருக்கும் சாணக்கியன். இனி அடுத்த 20 வருடத்திற்கு மொத்தல் பைக்கு (punch bag) பஞ்சமில்லை. தமிழர்களுக்கு புதிய தலைவர்களும் தேவையில்லை எனலாம்😎.
-
சம்பந்தர் காலமானார்
உண்மையிலேயே இது நடந்து தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் யாரோ அமெரிக்க அதிகாரியிடம் (றொபர்ட் பிளேக் அல்லது தென்னாசிய வெளியுறவு இணைச் செயலாளராக இருக்கலாம்) "யுத்தத்தை நிறுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுங்கள்" என்று ஒரு தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பில் கேட்ட போது "புலிகளை மக்களை வெளியேற அனுமதிக்க நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனப் பதில் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு "நீங்கள் எங்களுக்கு Hobson's choice தந்திருக்கிறீர்கள்" என்று அந்த தமிழ் பிரதிநிதிகள் கூறியதாக நினைவில் இருக்கிறது. Hobson's choice: ஒரேயொரு தெரிவு மட்டும் இருக்கும் போது பல தெரிவுகள் இருப்பது போல தெரியும் மாய நிலை - an illusion of choices.
-
சம்பந்தர் காலமானார்
ஒரு சொற்பிரயோகம் இருக்கிறது: "தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் சேதம்- self-inflicted injury". அதைத் தான் இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விபரிப்பின் படி வன்னித் தலைமையின் சிந்தனை "மக்கள் போகாமல் தடுத்துப் பார்ப்போம், சிங்களவன் - எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே- மக்கள் மீது குண்டு போட்டுப் பேரழிவை ஏற்படுத்துவான். அந்த நேரம் தெற்கில் இருக்கும் கூட்டமைப்பை இதைப் பகிரங்கப் படுத்தி சிங்களவனை யுத்தத்தை நிறுத்த நிர்ப்பந்திப்போம்" இதையா பேசி வைத்த திட்டம் என்கிறீர்கள்? இதில், இந்த "தடுத்தல்" என்ற முதல்படியை, முடிவை எடுத்திருக்கா விட்டால் இழப்பு இன்னும் குறைந்திருக்குமே? சிம்பிள் கணக்கு. தடுத்து வைக்கும் முதல் முடிவை - நீங்கள் சொல்வது போல திட்டமிட்டு - எடுத்த தரப்பை எவ்வளவு ஆக்ரோஷமாக நீங்கள் திட்ட வேண்டும் நியாயப் படி?
-
சம்பந்தர் காலமானார்
கொழும்பு செய்திகள் பல "State Patronage" ஓடு சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் நடக்கவிருப்பதாகச் சொல்கின்றன. ஆனால், எடின்பரோவிலும், தாயகத்தில் குட்டிச் சுவரிலும் இருந்து வெளிவரும் "நம்பகமான😎" முகநூல் செய்திகள் தூக்க ஆளில்லாமல் விமானப்படை தூக்கி வந்தது என்று எழுதினால், இங்கே நம்பிக் குதூகலிக்கும் நிலையில் வாசகர்கள் இருக்கிறார்கள். "அரச ஆதரவு" என்றால் மரியாதை நிமித்தம் படையினர் தான் தூக்குவர். சம்பந்தர் என்ன தான் செத்தால் உடனே தீக்குளிக்கும் தமிழ் நாட்டு பாணி தொண்டர் படைக் கட்சியா நடத்தினார் "தொண்டர்கள்" வந்து மாரில் அடித்து அழ?
-
சம்பந்தர் காலமானார்
ஆனால், "ஆம்/இல்லை" என்று பதில் தரக்கூடிய "தடுத்து வைத்ததால் மக்கள் செத்தனரா?" என்ற கேள்விக்கு இன்னும் உங்களிடம் பதில் இல்லை. எனவே, உங்களுடைய கணிப்பு, ஏதோ ஒரு தரப்பிற்கு வெள்ளைப் பெயின்ற் அடிக்க நீங்களே உருவாக்கி வைத்திருக்கும் கற்பிதம் மட்டுமே என்பது என் அபிப்பிராயம்!
-
சம்பந்தர் காலமானார்
என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும் இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
கட்சிக் காரருக்கு "ஜூலை 4 ஆம் திகதிக்கு முன்பாக மூடும் உத்தரவு கிடைக்கவில்லை" என்கிறார். வடமாகாண சபை தளத்தில் ஜூலை 4 ஆம் திகதிக்குரிய செய்தியில் மூடும் உத்தரவு பற்றிய செய்தி இருக்கிறது. அதையே ஒரு பத்திரிகை பிரசுரிக்கலாம். ஆணை புறாவின் காலில் கட்டி கட்சிக் காரருக்கு கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டிய சட்டத் தேவை இல்லை. அனேகமாக இது நீதிமன்றம் போய் இழுபடும் கேஸாக தெரிகிறது. இனி கொடுக்கும் நன்கொடையில் ஒரு பகுதி சட்டத்தரணிகளிடம் போய்ச் சேருமென நினைக்கிறேன்.
-
சம்பந்தர் காலமானார்
உங்கள் மிகையான முறைப்பாட்டு மனநிலை அர்த்தமற்றது. இங்கே "ஆயுதங்களை விட ஆபத்தானது சம்பந்தன் போன்றோர் காத்த மௌனம்" என்று கூறி, வன்முறை வழிகளை விட சம்பந்தரை கீழாக இறக்கி வைக்க நீங்கள் முயன்றீர்கள். இப்படி முன்னரும் நீலன் திரியில் நடந்திருக்கிறது. இங்கேயும் , சுமந்திரன் பற்றி வரும் புலி நீக்க விமர்சனங்களிலும் பொதுக் காரணியாக இருப்பது புலிகள். அதனால் பேச வேண்டி வருகிறது. எனவே, புலிகளை இங்கே இழுத்து வந்தது புலிக்காய்ச்சல் இருப்போர் அல்ல, அளவுக்கதிகமாக புலிகள் பற்றிய பக்தி கண்ணை மறைக்க, ஏனையோரை போட்டுத் தாக்கும் உறவுகள் தான். இதைக் குறைத்தால், புலிகள் பற்றிய விமர்சனங்களும் இங்கே பேசப் படாது. இதை பல தடவைகள் எழுதியாகி விட்டது. தாயக உண்மை நிலை தெளிவாக தேர்தல்களில் வெளிப்படுகிறது. மரண வீடுகளில் அல்ல. தேர்தல் முடிவுகளை ஒதுக்கி விட்டு தாயக மக்களைப் புரிந்து கொள்ள இயலாது!
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
அப்படியோ? நான் நினைத்தேன் நீங்கள் "கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேணுமென்ற" காரணத்திற்காக-மேட்டர் எதுவும் இல்லா விட்டாலும் கூட- விவாதிப்பவர் என்று - ! எப்படி இந்தியாவில் இருந்து இந்து மதத்தையும், மத்திய கிழக்கில் இருந்து இஸ்லாம் மதத்தையும் அகற்ற முடியாதோ, அதே போல ஐரோப்பாவில் இருந்து கிறிஸ்தவத்தை அகற்ற முடியாது . ஆனால், இந்து, இஸ்லாம் மதங்கள் இன்று இருப்பது போல "வாதக் குணம்" இல்லாமல் விளங்கும் கிறிஸ்தவ மத நிறுவனங்கள் தான் மக்களிடம் பிரபலமாகின்றன. தீவிர Evangelical கிறிஸ்தவத்தை இளையோர் அண்டுவதில்லை. எனவே, ஏனைய மதங்களையும் அவர்கள் வரவேற்பர். உதாரணமாக ஜேர்மனியில் அலகு குத்தி, காவடி எடுத்து தேர் இழுக்கலாம், ஊரில் தனியார் வீட்டில் யெகோவா பிரார்த்தனைக் கூட்டம் வைத்தால் கூட ஊர் கொந்தளிக்கும். வித்தியாசம் புரிகிறதல்லவா?
-
சம்பந்தர் காலமானார்
சும்மா அலட்டி நேரத்தை விரயமாக்காதீர்கள். முள்ளிவாய்க்காலுக்காக சம்பந்தனை திட்ட முதல் (அல்லது வேறெவரையும் திட்ட முதல்) ஆயுத முனையில் மக்களை தடுத்து வைத்தவர்களையும், அவர்கள் மீது குண்டு போட்டவர்களையும் தான் திட்ட வேண்டும். அதைச் செய்ய பக்தி முத்தி தடுத்தால் அது உங்கள் பிரச்சினை. அவ்வளவு தான் மேட்டர். இதையெல்லாம் 2017 வரை இங்கே பேசியிருக்கிறோம். அந்த நேரம் "இனிப் பேசாதேயுங்கோ, முன்னகர்வோம்" என்று யாழ் நிர்வாகமும் பகிரங்கமாக அறிவித்து, (உங்களுக்குப் பச்சை போட்டவர்களில் இருவரும்😎) கை கூப்பிய பின்னர் நான் புலிகள் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தே வருகிறேன். ஆனால், உங்கள் போன்ற "மூடனுக்கு பீ அப்பினால் மூன்று இடத்தில் அப்பும்" என்ற மாதிரி நடந்து கொள்ளும் ஆட்களால், மீள நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அது சரி, இப்ப சம்பந்தரும் போய் விட்டார். சுமந்திரன் அடுத்த தேர்தலில் வெல்லாமல் தாயக மக்கள் வாக்களிக்கிறார்கள் (விரட்டியடிக்கிறார்கள்😂) என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓணாண், ஒட்டுண்ணி எல்லாம் கிளியர். யார் உங்கள் அடுத்த தலைவர் என நினைக்கிறீர்கள்?
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
கிறிஸ்மசுக்கு இலங்கையிலும் லீவு, அமெரிக்காவிலும் லீவு, ஜேர்மனியிலும் இருக்கும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் அதிக இந்தியர்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் தீபாவளிக்கும் பாடசாலைகள் விடுமுறை இருக்கிறது. இது எல்லா மதத்தினரும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டுமென்ற முற்போக்கின் விளைவேயன்றி, மதத்தைத் தூக்கித் தலையில் வைக்கும் அரசின் செயல்பாடல்ல. ரஷ்யா மதச்சார்பில்லாத நாடென்று இன்று நீங்கள் சொல்லித் தான் கேள்விப் படுகிறேன். புரினுக்கு முட்டுக் கொடுக்கும் Patriarch Kirill எந்த மதத்தின் தலைவர்?
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தன் எங்கே பிரித்தார்? தமிழ் கூட்டமைப்பின் ஒரேயொரு நிரந்தர முகமாக இருந்தார். யார் பிரிந்து போனார்கள் என்று நியூசில் வாசிக்காமலா இங்கே எங்களுக்கு பாடமெடுக்கிறீர்கள்😂? வாகன இறக்குமதிப் பெர்மிற் விற்பனை, அரச வேலைக்கு கையூட்டு, இடைத்தங்கல் முகாமில் அடை பட்ட தமிழர்களை வெளியே எடுக்க கையூட்டு, இரகசிய கப்பம் என்று குஜாலாக இருந்த கூட்டமைப்பின் முன்னாள் ஆயுத தாரிகளான பா. உக்கள் சம்பந்தனின் அரசியலில் இதை இழக்க விரும்பாமல் பிரிந்தார்கள். வன்முறை அரசியல் சாரா சுமந்திரன் போன்றோர் இணைந்தார்கள். இதெல்லாம் உங்களுக்கு கூட்டமைப்பின் பிரிப்பாக தெரிகிறது, உங்கள் பார்வை அப்படி. எனக்கு இந்த முன்னாள் ஆயுத தாரிகளின் விலகலால் நல்ல திசையில் கூட்டமைப்பு நகர்வதாகத் தெரிகிறது.
-
சம்பந்தர் காலமானார்
சாத்தான், அமைதி கொள்ளுங்கள். உங்கள் போல ஹோம் வேர்க் செய்யாமல் வந்து உணர்ச்சி/பக்தி மயமாகக் கருத்தெழுதுவோருக்குப் பதில் சொல்ல புலிகளைக் குறிப்பிட்டு எழுத வேண்டியிருக்கிறது - உடனே "புலிகளை ஏன் இழுக்கிறீர்கள்?" என்று சண்டைக்கு வருகிறார்கள் -திரி திசை மாறுகிறது. எனவே உங்கள் அப்பிரண்டீசு வேலையை நிறுத்தினாலே எவரும் புலிகளை கையைப் பிடித்து இழுக்க வெண்டு வராது😎! பி.கு: காயம்பட்ட பொது மக்களை ஏற்ற கப்பல் அனுப்பியது ICRC யும், MSF உம். கப்பல் அனுப்ப வேண்டி வந்தததன் காரணம், இராணுவப் பகுதிக்கு மக்கள் தரை வழியாகத் தப்பிப் போக முடியாமல் தடை இருந்ததால் (தடுத்திருந்தது சிங்கள இராணுவம் அல்ல!). கப்பலில் போக முயன்றவர்களைக் கூட "முழங்காலுக்கு கீழே போயிருந்தால் போகலாம், பாதம் போயிருந்தால் போக முடியாது" என்று கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டன. "கப்பலில் இடம் காணாதல்லோ?" என்று நீங்கள் அடுத்த புருடாவை விட முதல்: கப்பல் பாதி நிரம்பித் தான் எப்போதும் புறப்பட்டது. எனவே, முள்ளி வாய்க்கால், இறுதிப் போர் பற்றிய உங்கள் "அம்புலிமாமாக் கதைகளை" நிறுத்தினால், நாமும் புலிகளைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விடலாம். அதை விட வேறு வழிகள் இல்லை!
-
சம்பந்தர் காலமானார்
உங்கள் கருத்துடன் முற்றாக உடன்பாடில்லை, எனவே அந்த "டொட்" தாண்டி இதை எழுத அனுமதியுங்கள்: 1. மேலே கள உறவான @நியாயம் தான் சம்பந்தன் பற்றிய துல்லியமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்: "அவர் பாராட்டப் பட வேண்டியவரும் அல்ல, அதே நேரம் இங்கே பலரும் செய்வது போல தூசிக்கப் பட வேண்டியவருமல்ல". ஆனால், விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவரும் அல்ல (ஆனால், புலிகளை விமர்சிப்பது புலிக்காய்ச்சலால் மட்டும் தான் என்பது வேறு விடயம்😎!). 2. ஒவ்வொருவரும் தன் நிலைக்கேற்ப செயல் பட்ட காலத்தில், சம்பந்தன் தன்னால் செய்யக் கூடியதைச் செய்தார். இதற்குப் பயன் இல்லை என்பதால் யாரும் குறை சொல்ல முடியாது. அப்படிப் பயன் இல்லாத செயல் செய்தார்கள் என்று ஒரு தரப்பைத் திட்டுவதானால் புலிகளையும் திட்ட வேண்டிய நிலை வரும். இதை @island சுட்டிக் காட்டியதில் அர்த்தம் இருக்கிறது. திரிக்குத் தொடர்பும் இருக்கிறது. 3. ஆனால், "பயனற்ற செயல்கள் செய்தார், செயலே செய்யாமல் இருந்தார்" என்று சம்பந்தரை வைதோரை விட , "புலிகளை மானசீகமாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்தார்" என்று கருதியோர் தான் அவர் மரணத்தை இங்கே கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களுக்கு, புலிகளை இழுக்காமல் எப்படி பதில் சொல்வது என நீங்கள் ஏதாவது வழி வைத்திருக்கிறீர்களா? என்னிடம் அப்படியெதுவும் இல்லை. 4. இந்த சம்பந்தன் மீதான வசவையெல்லாம் "எதிர்கால தமிழ் தலைவர்களுக்கு பாடம் கற்பிக்க செய்கிறோம்" என்று நேராகவே ஒருவர் எழுதியிருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்று நினைக்கிறீர்கள்? "2009 இற்கு முன்னர் இருந்த அதே நிலைப்பாட்டோடு, புலிகளின் பாரம்பரியத்தை தலையில் சுமக்காத தலைமையாக இருந்தால், செத்தாலும் திட்டுவோம், உயிரோடிருக்கும் போதும் செருப்பால் அடிப்போம்" என்று என்று தான் எனக்கு விளங்குகிறது. இந்த அணுகுமுறையின் விளைவு என்னவென்று நினைக்கிறீர்கள்? தாயகத்தில், அடுத்த நிலையில் ஒரு தமிழ் அரசியல் தலைமையும் இளையோரிடமிருந்து இப்போது இல்லை. இனியும் அவர்கள் வரப் போவதில்லை. இப்படி வெளிநாட்டில் சொகுசாக இருந்த படி தாயக அரசியல் வாதிகளுக்கு செருப்புக் காட்டும் "மண்ணு லாறி" கூட்டங்கள் இருக்கும் வரை, தாயக தமிழர்களுக்கு அரசியல் தலைமையும் புதிதாக வராது, அரசியல் ரீதியாக முன்னேற்றமும் வராது. இத்தகைய ஒரு பேரிடர் நிலை வராதிருக்க, பேசித்தான் ஆக வேண்டும்.
-
சம்பந்தர் காலமானார்
🤣😂மக்களை அடைத்து வைத்து, எதிர் ஆயுதங்களை அவர்கள் மீது தாக்க விட்டதை விட, அது நடந்த போது ஓடி ஒழிந்தது மோசமான செயலா விசுகர்😎? தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் சாக, சம்பந்தர், கருணாநிதி, ஒபாமா, ஹிலாரி எல்லாரும் காரணம். காயம் பட்டவனை ஏற்ற வந்த கப்பலில் கூட மக்களை ஏற்ற அனுமதிக்காத சிறைப்படுத்தல் காரணமேயில்லை😎! நல்லா நடத்துங்க விசுகர்! வார்த்தைகள் இல்லையென்பதை விட நீங்கள் வழமையாகப் பதுங்கும் மூலை வந்து விட்டதென்று சொல்லி விடை பெறுங்கள்!
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தர் மட்டுமல்ல, இப்போது இருக்கும் தமிழ் பா.உக்கள் சிலரும் கூட சிங்கள அரசின் அநியாயங்களைப் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். பாராளுமன்றிலும் பேசினர், பேசுகின்றனர். ஒரு படி மேலே சென்று, வெளிநாட்டு அரச பிரதிநிதிகளிடமும் பேசுகின்றனர். இதைத் தேடி அறிய இயலாதவரா நீங்கள்? புலிகள் செய்ததையும், அரசு செய்ததையும் பேசிய சம்பந்தரை தேர்தலில் தெரிவு செய்த மக்கள் கொடுத்த பதவியில் அவர் இருக்க யாருடைய அனுமதியும், ஆதரவும் அவசியமில்லை. மக்கள் விரும்பா விட்டால் தூக்கி எறிந்திருப்பர், அவரும் பேசாமல் போயிருப்பார். கஜேந்திரன் போல பின் கதவால் வந்திருப்பாரென நினைக்கவில்லை.
-
சம்பந்தர் காலமானார்
இதில் இருப்பதெல்லாம் பொய் என்கிறீர்களா? நீலன் திருச்செல்வம் கதை மாதிரி "புலிகள் மட்டும் தான் ஆயுதம் வைத்திருந்தார்களா?" என்று கிறீஸ் போத்தலோடு வர மாட்டீர்களென நம்புகிறேன்.
-
ஜோ பைடனை மாற்ற வலியுறுத்தல்: வேட்பாளராகிறார் மிச்சைல் ஒபாமா?
என்னைப் பொறுத்த வரையில் இது தேவையற்ற ஒரு பதற்றம் நீலக்கட்சியின் பக்கமிருந்து. ஒருவர் தெளிவான குரலில் 90 நிமிடங்கள் பொய்களையும், தரவேயில்லாத கற்பனைகளையும் அள்ளி வீசுகிறார் (Border crisis .."..they are raping and killing our women.."😂). அவர் வாதத்தில் வென்று விட்டார் என்கிறார்கள். மற்றையவர், இவற்றை சுருக்கமாக மறுத்து விட்டு, உண்மையான நிலையை பலம் குறைந்த குரலில் சொல்கிறார். அவர் தோற்று விட்டார் என்கிறார்கள் - பலவீனமான குரலில் அவர் சொன்னது 90 வீதம் உண்மையான தகவல்கள் என்றாலும் கூட. இது ட்ரம்ப்- பைடன் குரல் வளப் பிரச்சினை தாண்டி இன்றைய உலகில் எவ்வளவு இலகுவாக "காற்றில் இருந்து கற்பனையைப் பிடிங்கிப் போட்டு" மக்களை ஏமாற்றலாம் என்பதற்கான உதாரணமாக விளங்குகிறது. ஹிற்லர் இந்தக் காலத்தில் இருந்திருந்தால், ஆட்சிக்கு வர 3 - 4 வருடங்கள் போராடியிருக்க வேண்டியிருந்திருக்காது, தன் அல்ப்ஸ் மலை சொகுசு மாளிகையிலிருந்தே ஒரு வருடத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பார்! - அப்படி பட்ட உலகில் வாழ்கிறோம்!
-
சம்பந்தர் காலமானார்
இந்த உரையில் சம்பந்தர் சொல்லியிருப்பவை நிகழ்ந்த சம்பவங்கள் தானே? இவையெல்லாம் நிகழ்ந்தை மறந்து, மன்னித்து விட்டார்களாமா? நடந்தவற்றை ஒலி வாங்கியின் முன்னால் சம்பந்தர் பேசியது தான் மன்னிக்க இயலாமல் இருக்கிறதாமா? யார் இந்த தமிழர் போராட்ட வரலாறு தெரியாது அரைவேக்காடு கேசுகள்😂? ஒரு மைக்கையும், 30 டொலர் கமெராவையும் தூக்கித் திரிபவரெல்லாம் ஊடகவியலாளர் என்று ஏற்றுக் கொண்டால் இப்படியான கீச்சுக்கள் தான் விளைவாகும்!
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அவருடைய நீண்ட சேவைக்கு நன்றிகளும்! இங்கே எழுதும் சில உறவுகள் போல என்னால் சம்பந்தரைத் திட்ட இயலவில்லை. உயிருக்கு அச்சுறுத்தல் இரு தரப்பிலிருந்தும் வந்த போதும், இந்தியாவைத் தாண்டி எங்கும் போகாமல் நாட்டிலேயே இருந்தவர், போட்டியாளர்களை துப்பாக்கியால் போட்டுத் தள்ளி விட்டு தலைமையை/பதவியைப் பிடித்துக் கொண்டிருக்காதவர், தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆகாயக் கோட்டை கட்டி மக்கள் காதில் பூச்சுத்தாமல் இயலக் கூடிய தீர்வை மட்டும் பேசியவர். இந்தக் காரணங்களாலேயே உலக அரசுகளின் பிரதிநிதிகளால் இறுதி வரை மரியாதையோடு நடத்தப் பட்டவர். சம்பந்தரை, அவரது மரண வீட்டில் வைத்து "வேஸ்ட்டு" என்று விமர்சிக்கும் எவரும் நிச்சயம் அவரை விட முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார்கள், அதன் பலன்களை மக்களுக்குக் கொடுத்து விட்டு தமக்கு எதுவும் வேண்டாமென்று இப்போது அமைதியாக ஒதுங்கி வாழ்கிறார்கள் என்று தான் ஊகிக்கிறேன்😎.
-
இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி
நல்ல விடயம். சில கேள்விகள். அண்மைய கருத்துக் கணிப்பில் கொன்சர்வேரிவ் கட்சிக்கு ஒப்பாக ஆதரவைப் பெற்ற றிபோம் யூகே- Reform UK இந்த நிகழ்வுக்கு வரவில்லையாமா? அந்த கட்சியின் ஈழப் பிரச்சினை தொடர்பான நிலைப்பாடு களத்தில் இருக்கும் நைஜல் ஆதரவாளர்கள் யாருக்காவது தெரியுமா? முக்கியமாக, "பிரிட்டன் தேர்தல் பற்றி திரி தொடங்குவேன்" என்று எங்கள் தலையில், கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்த @goshan_che எங்கே😂?
-
பூமியைத் தாக்கப் போகும் சிறுகோள்!
தவறான செய்தி மொழிபெயர்ப்பு. நடத்தப் பட்டது ஒரு ஒத்திகை (table top exercise/simulation). "பூமியை ஒரு விண்ணுடல் தாக்கினால் அதை எதிர்கொள்ள பூமியின் கட்டமைப்புகள் தயாராக இருக்கின்றனவா?" என்ற கேள்விக்கு விடை காண simulation செய்தார்கள். அதன் போது கிடைத்த விடை தான் "அப்படியொரு நிலை வந்தால் 72% அது பூமியைத் தாக்கும், நாம் தயாராக இல்லை" என்பதாக இருந்திருக்கிறது. பூமியை நோக்கி வரும் சிறு கோள் எதுவும் கண்டறியப் படவுமில்லை, அது தாக்கும் நாள், நேரம் கணிக்கப் படவுமில்லை. தினக்குரலுக்கு வந்த சீரழிவு பெரும் சீரழிவு😂. இந்தியன் எக்ஸ்பிரசில் வரும் செய்திகளை மூலம் கூட போடாமல் அப்படியே கொப்பி பேஸ்ற் - இந்த வெட்டி ஒட்டலைக் கூட மெசின் தான் செய்யுமென நினைக்கிறேன்.
-
கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு
இந்த மோடி ஜீயின் , இஸ்லாமியரின் சத்தம் சந்தடிக்கப்பால், யோகாசனம் மிகச் சிறந்த உடல் தளர்த்தி (relaxant). 30 வருடங்களுக்கு முன்னர் நல்லூருக்கு அருகில் இருந்த ஒரு மண்டபத்தில் வசித்த யோகேந்திர சரஸ்வதி சுவாமியிடம் கற்றேன். இன்னும் muscle memory இருக்கிறது. வெளியே ஓட்டம் செய்ய முடியாத நாட்களில், அல்லது ஓட்டம் கூடி கை, கால்கள் இறுகியமாதிரி உணர்ந்தால், யோகா செய்தால் அப்படியே ஒரு தளர்வான உணர்வு வந்து விடும். இதன் விஞ்ஞான அடிப்படை, தசைகளை யோகாசனம் மூலம் மெதுவாக நீட்டிக்கும் போது, தசைகள் தளர்வாகும். மாலையில் யோகாசனம் செய்த பின்னர், அடுத்த நாள் காலையில் தெருவோட்டம் போனால், அரை மைல் தூரம் அதிகம் ஓடலாம். மூச்சு உள்ளெடுத்தல், வெளி விடுதல் பயிற்சிக்காக ஒரு பயிற்சியாளரிடம் கற்ற பின்னர் நீங்களாகவே செய்வது நல்லது.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
நீங்கள் ஜேர்மனியில் ஒரு கட்சியின் உறுப்பினர் என நினைக்கிறேன். அந்தக் கட்சியினர் புவி வெப்பமாதலைத் தடுக்கும் கொள்கைகளை வைத்திருக்கின்றனரா அல்லது நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவோம் எனக் கூறுகின்றனரா? அப்படி ஒர் நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த கிறெரா துன்பேர்க்கை நீங்களே யாழில் காய்ச்சி எடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கு மறந்து விட்டதா😎? நீங்கள் ஆதரிக்கும் ட்ரம்ப், "இன்னும் எண்ணை தோண்டுவேன்" என்கிறார். நீங்கள் எதிர்க்கும் பைடன் கொண்டு வந்த சூழல் பாதுகாப்புச் சட்டங்களை ரத்துச் செய்வேன் என்கிறார். முரண்பாட்டின் மொத்த வடிவமா நீங்கள் அல்லது குழப்பத்தின் வடிவமா😂? யார் புவியை வெப்பமாக்குகிறார்கள்? யார் பசுமைத் தொழில் நுட்பத்தால் உலகை அடுத்த சந்ததிக்கு விட்டு செல்ல முயல்கிறார்கள் என்ற தெளிவாவது இருக்கிறதா?
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சில கருத்துக்களை, படங்களைப் பார்க்கும் போது எவ்வளவு தூரம் பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் என்ற ஆச்சரியம் வருகிறது😂. BDSM (Bondage, Domination, Sadism, Masochism) என்ற வினோதமான (queer) பாலியல் செயன்முறைகள் (முன்னர் deviant sexual behaviors என்று அழைக்கப் பட்டவை இவையெல்லாம்) எதிர்ப்பால் இணைகளிடையே பிரபலமாக இருக்கும் நடைமுறைகள். இதையெல்லாம் ஓர் பால் தம்பதிகள் சமூகத்திற்கு அறிமுகம் செய்ததாக புதுக் கதைகள் யாரும் சொன்னால், உடனே நம்பும் அளவுக்கு இருக்கிறார்கள்.