Everything posted by Justin
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
பாஞ் ஐயா, இது தவறான தகவல் என நினைக்கிறேன். வில்லியம் கொபல்லாவ தமிழர் அல்ல!
-
வயகரா ஏற்படுத்தும் மாற்றம் : ஆய்வில் வெளியான புதிய தகவல்
வயாக்ரா (அல்லது வயாக்ராவின் குடும்பத்தில் இருக்கும் மருந்துகள்) எப்படி வேலை செய்கின்றன என்று அறிந்து கொண்டால் இந்த விளைவைப் புரிந்து கொள்ளலாம். ஆண்குறியினுள் எழுச்சியின் போது உட்செல்லும் இரத்தம் அதனுள் தேங்கி நிற்பதால் தான் எழுச்சி (erection) ஏற்படுகிறது. இந்த தேங்கி நிற்றலுக்கு ஆண்குறியில் இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைய (relax) வேண்டும். இந்த இரத்த நாளங்கள் விரிவடைவது குறைந்தால் (தீவிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், வேறு சில நோய்கள் காரணமாக) இரத்த தேக்கமும் குறைந்து, ஆண்குறி எழுச்சியும் பாதிக்கப் படுகிறது. வயாக்ராவில் இருக்கும் மருந்து, இந்த இரத்த நாளம் விரிவடைவதை ஊக்குவிப்பதால் ஆண்குறி எழுச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால், ஆண்குறியில் மட்டுமல்லாமல், உடலின் ஏனைய பகுதிகளான மூளை, இதயம் என்பவற்றிலும் இரத்தக் கலன்களை வயாக்ரா வகை மருந்து விரிவடையச் செய்யும் போது சில பக்க விளைவுகள் உருவாகும். ஞாபக சக்தி அதிகரிப்பிற்கு, மூளையின் இரத்தக் கலன் விரிவடைதல் காரணமாக இருக்கலாம். ஆனால், இதய நோய் இருப்போர் இதயத்தில் வயாக்ரா காரணமாக இரத்தக் கலன் விரிவடைவது குறித்து அவதானமாக இருக்க வேண்டும். இதய நோய் இருப்போரில் இரத்தக் குழாய்கள் இதயத்தில் விரிவடைந்தால் இரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாம், இதனால் ஒட்சிசன் கிடைப்பது குறைந்து மாரடைப்பு ஏற்படலாம். https://www.health.harvard.edu/mens-health/are-erectile-dysfunction-pills-safe-for-men-with-heart-disease வயாக்ரா இல்லாமலே ஆண்குறி எழுச்சியை சாதாரணமாக வைத்திருக்க ஒரு வழி கிரமமான உடற்பயிற்சி. ஒரு ஆய்வில்👇, ஒரு வாரத்தில் இரண்டரை மணி நேரங்கள் ஓட்டம் போன்ற பயிற்சிகளைச் செய்தோரில், ஆண்குறி எழுச்சியில் பிரச்சினைகள் வருவது 30% குறைந்ததாகக் கண்டறிந்தார்கள். https://www.health.harvard.edu/blog/exercise-and-erectile-dysfunction-ed-201104261574
-
God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
என்னுடைய புரிதல்: நீங்கள் etymology எனும் சொற்பிறப்பியலை மிகவும் தவறாக இந்த விடயத்தில் கையாள்கிறீர்கள். வெற்றிடத்தில் ஒரு சொல் உதிப்பதில்லை. அந்த நேரம் இருந்த மானிடவியல்/வாழ்க்கை நிலைமைகளில் பெண்கள், தாய்மை என்ற சந்ததியை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் தாய்மை திருமணத்திற்கு மையமாக இருந்தது. தற்போது "கனேடிய விசா" கூட திருமணத்திற்கு காரணமாக, மையமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இதைத் தான் உங்களுக்கு விளக்க முயன்று வெறுத்துப் போய் இருக்கிறேன்😎. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் தரவில்லையென்கிறீர்கள். ஆனால், என்ன கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்? உதாரணமாக: "அன்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு?" என்று கேட்டிருக்கிறீர்கள். இது கேள்வி? இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் விதண்டாவாதம் பற்றி முறைப்பட உங்களுக்கு ஏதும் காரணங்கள் இருக்கின்றனவா ஐயா? Romantic love அதன் பிறகு just plain love ஆக வளர்கிற அன்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பென்று உங்களுக்கு நான் விளக்க வேண்டுமா😂? எனவே, சொற்களில் மனிதர்களை, அவர்களது வாழ்க்கையை அடக்கும் "செருப்பிற்காக காலை வெட்டும்" வேலையை நீங்கள் தொடரலாம். அதை எதிர்ப்போரை விதண்டாவாதம் செய்கிறார்கள் என்றும் கூறலாம். ஆனால், வாசிப்பவர்களுக்கு எந்தப் பக்கம் ஓட்டை இருக்கிறதென்பது தெளிவாகத் தெரியும்! கவலை வேண்டாம்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
மிகவும் தெளிவான கருத்து. ஓரின இணைகளில் மட்டுமல்ல, எதிர்ப்பால் இணைகளிடையேயும் கூட பாலியல் உறவு என்பது ஒரு மிகச்சிறு வீதத்தில் தான் அவர்களது பிணைப்பைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. அதுவும் பிள்ளைகள், குடும்பம் என்று உண்மையான பயணம் (அதுவும் கஷ்டமான பகுதி) சூடு பிடிக்கும் போது, செக்ஸ் என்பதை நினைக்காமலே பிணைப்பிலும், பாசத்திலும் இருக்கும் நிலை இருக்கிறது. ஆனால், "ஓரினச் சேர்க்கையாளர்" என்றவுடனேயே, பல எதிர்ப்பாளர்களின் மனதில் அவர்கள் எப்படி உடலுறவு செய்வர் என்ற கேள்வியும், அது பற்றிய நக்கல்களும் தான் முதல் துலங்கலாக இருக்கின்றன. இது பார்ப்பவன் கண்ணின் குறையேயன்றி, பார்க்கப் படுபவனின் பிரச்சினை அல்ல😂! வந்திறங்கிய நாள் முதல், அமெரிக்காவின் நீல மாநிலங்களில் தொடர்ந்து வாழ்ந்த அனுபவத்தில், இரண்டு அம்மாக்கள், இரண்டு அப்பாக்கள் கொண்ட குடும்பங்கள் சிலவற்றைக் கண்டு பழகிய அனுபவம் இருக்கிறது. எனக்குப் புரிந்த வரை, இவர்கள் சாதாரணமான மனிதர்கள். சில விடயங்களில், சாதாரணத்தைத் தாண்டி, வேறு காரணங்களுக்காக ஒதுக்கப் படும் மக்களின் பக்கம் நிற்கும் நல்ல மனிதர்கள். இவர்களை நாம் ஒதுக்கி வைக்க ஒத்துழைத்தால், குடியேறிகளின் வம்சாவழியினராக வாழப் போகும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பாக இருக்கக் கூடிய ஒரு தரப்பைப் பகைத்து எமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்ளும் முட்டாள்களாக இருப்போம்!
-
God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
திருமணத்துடன் "தாய்மையை, பிள்ளைப்பேற்றை முடிச்சுப் போட்டு விவாதிப்பது எங்கள் இருவரில் யார்😂? உங்கள் ஒரிஜினல் வாதமான "திருமணத்தின் ஆதிப் பெயரின் அடிப்படையை மாற்றக் கூடாது, திருமணத்தின் ஆதிப் பெயரின் அடிப்படை "Matri" என்பது உங்களுக்கே மறந்து போய் விட்டதா? அதில் இருந்தல்லவா இந்தக் கேள்விகளெல்லாம் என்னிடமிருந்து வந்தன? சமூகம் மாறுகிறது, புதிய புரிதல்களும், இது சரி, இது தவறு என்ற புதிய தகவல்களும் கிடைக்கின்றன. சொற்களின் - குறிப்பாக மனிதர்கள் ஆதியில் உருவாக்கிய கலாச்சாரக் கட்டமைப்புகளின் அடிப்படையிலான சொற்களும் புதிய அர்த்தம் பெறுகின்றன. ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். நீங்கள் உங்கள் எண்ணத்தின் அடிப்படையில் அவர்களுள் ஒருவராக இல்லா விட்டாலும், சொற்பிறப்பியல், மனித வரலாறு, முன்னேற்றம் என்பன பற்றிய உங்கள் ஒற்றைப் படையான புரிதலால் இந்தப் பழமை வாதிகளுக்கு ideological aid ஆக இருக்கிறீர்கள் என அஞ்சுகிறேன். இதில் எனக்குப் புரிதல் குறைபாடு, குழப்பம் இருப்பதாக நான் கருதவில்லை. திருமணத்தின் அடிப்படை அர்ப்பணிப்பும் காதலும் என்று சிம்பிளாக வரைவிலக்கணம் இருக்கும் போது வேர்ச்சொல் ஆய்வெல்லாம் அவசியமில்லை. Love is Love!
-
God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
மீண்டும் மன்னிக்க வேண்டும்: உள்பொருளை விளங்காமல் திருமணம் என்ற சொல்லின் அர்த்தத்தை குறுக்கிக் கொள்வது நீங்கள் தான் என கருதுகிறேன். நீலக்கண், வெள்ளைத் தோல் சிலாவ் மக்களில் இருந்து வந்தோரை அழைத்த சிலேவ் சொல், பின்னர் நீலக்கண், வெள்ளைத் தோல் இல்லாத ஆனால், அதே நிலையில், சமூக அந்தஸ்தில் இருந்த ஏனையோரையும் குறிக்கப் பயன்பட்டது எப்படி? சமூகத்தில், உலக வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம். மேலும், சங்க காலத்தில் உருவான திருமணம் புனிதம் குறித்து மட்டுமே குறிக்க, நீங்கள் கிரேக்கத்தின் "தாய்மை" என்ற அர்த்தத்தை எங்கேயிருந்து தமிழ் சொல்லான திருமணத்தில் இணைத்தீர்கள்? இதைத் தான் சொன்னேன், திருமணம் என்றால் தாய்மை, பிள்ளை பெறுதல் என்ற பாரம்பரியமான பார்வையின் பால் உருவான கருத்தே உங்கள் வாதத்தின் அடிப்படை. ஒரு பேச்சுக்கு, உங்கள் பாரம்பரிய திருமணம் என்பதன் குறுகத் தறித்த அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் கூட, அதை இன்றைய ஆண்-பெண் இணைகளுக்கு முழுவதுமாக பிரயோகிக்க இயலுமா? தத்தெடுத்து குழந்தை வளர்ப்போர் திருமணத்தில் இல்லையென்றும், வாடகைத் தாய் மூலம் பிள்ளை வரம் பெறுவோர் திருமணத்தில் இல்லையென்றும் வியாக்கியானம் கொடுப்பீர்களா? பிள்ளை வேண்டாமென்று இருப்போர் திருமணத்தில் இல்லை என்பீர்களா? "பிள்ளை பெறும் சாத்தியம் (natural potential) இருக்கிறது, அதனாலேயே அது திருமணமாகக் கொள்ளலாம்" என்ற வாதத்தின் அர்த்தம் இந்த நவீன கால ஆண்-பெண் இணைகளின் தெரிவுகளின் முன்னால் அடிபட்டுப் போகிறதே?
-
God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
மிக்க மரியாதையோடு உங்களுடைய இந்த வியாக்கியானத்துடன் முரண்படுகிறேன். 1. முதல் பிரச்சினை: கிரேக்கத்தில் உருவாகி, ஆங்கிலத்தில் இருக்கிற matrimony தான் தமிழில் இருக்கிற "திருமணம்" என்ற முடிவுக்கு நீங்கள் வர என்ன காரணம்? பாரம்பரியமான திருமணம் பற்றிய உங்கள் பார்வை தான் காரணம். "திருமணம்" என்பது ஒரு புனிதத்தின் முன்னொட்டான "திரு" சேர்ந்து இருவரின் இணைவைக் குறிக்கிறது என்பது தான் என் புரிதல். எனவே, தமிழில் கிரேக்கத்தின் Matri சொற்பிறப்பு (etymology) இணைய வேண்டிய தேவை இல்லை என்பது என் கருத்து. 2. உங்கள் வாதம் "ஆதியில் உருவான சொற்பிறப்பையொட்டியே பிற்காலத்திலும் ஒரு சொல் பயன்படுத்தப் பட வேண்டுமென்பதாக" இருக்கிறது. "திருமணம்" போன்ற சமூகக் கட்டமைப்பு (social construct) விடயங்களுக்கு இவ்வளவு இறுக்கமான கட்டுப் பாடு அவசியமில்லை, சாத்தியமும் இல்லை. ஒரு உதாரணம் மானிடவியலில்/வரலாற்றில் பார்ப்போம்: அடிமையைக் குறிக்கும் slave என்ற சொல் கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது. ஐரோப்பா முழுவதும் இந்த சிலாவ் மக்கள் அடிமைகளாக நோர்ஸ்க் கடலோடிகளாலும், முஸ்லிம்களாலும் விற்கப் பட்ட காலத்தில் சிலாவ் என்பதில் இருந்து சிலேவ் என்ற சொல் வந்திருக்கிறது. இது நடந்தது கி. பி 1000 இற்கு முன். தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது. slavery ஒரு social construct . திருமணம் ஒரு social construct . இது போன்ற சமூகக் கட்டமைப்பு சார் பதங்களை நாம் அவை உருவான காலத்து வேர்ச்சொல் சார்ந்தே பாவிக்க வேண்டுமென்பது மொழியியலாளர்கள் கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலைப்பாடு.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
ஒரு தேர்தலில் தோற்றவரை ஒதுக்க வேண்டுமென்ற கருத்தில் நான் சொல்லவில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக தோற்றார் என்று தெரிந்தால், இவருக்கும் சிவாஜிலிங்கத்திற்குக் கிடைத்த வரவேற்பே ஜனாதிபதி வேட்பாளராகக் கிடைக்குமா என்று ஊகிக்கலாம். எனவே தான், ஏன் தோற்றார், எந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்றார் என்று கேட்டேன். இது போன்ற baggage ஓடு வருவோரை பொது வேட்பாளராக நிறுத்த சிவில் அமைப்புகள் தயங்குவதும் இதனால் தான்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
விளங்க முடியாமல் குழப்பமாக எழுதியிருக்கிறீர்கள். (எனக்கு விளங்கிய வரையில்) உங்கள் கருத்துகளுக்கு அடிப்படையாக இருப்பவை இரண்டு விடயங்கள்: 1. ஆண் - பெண் குடும்பம் தான் பூரண குடும்பம் என்ற உங்கள் "நம்பிக்கை". 2. ஓரினச் சேர்க்கையாளர் மீதான அச்சம் - homophobia இது இரண்டையும் தவிர, எந்த ஆதாரங்களையோ, முன்னுதாரணங்களையோ, மேற்கத்தைய சமூகங்களில் , நாடுகளில் இருக்கும் உதாரணங்களையோ அடிப்படையாக வைத்து முடிவெடுக்கும் இலக்கு உங்களிடம் இல்லை. இந்த மனநிலை இங்கே மட்டுமல்ல, முன்னரும் சில மானிடவியல், வரலாறு தொடர்பான திரிகளில் நீங்கள் வெளிக்காட்டியது தான். எனவே, ஆச்சரியமில்லை.
-
God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
நன்றி ஏராளன். அனேகமாக நான் மற்றைய திரியில் சொல்ல முனைந்த தகவல்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறார். இதை செவி மடுத்து பதில் எழுத வேண்டியது இதற்கான எதிர் நிலையை எடுத்திருக்கும் ஏனைய உறவுகளின் தெரிவு. ஆனால், இங்கே சுருக்கமாகச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது: 1. ஓரினக் கவர்ச்சி என்பது ஒரு நோய் நிலை (pathology) அல்ல. 1970 இற்கு முன்னர், அமெரிக்க மனநல வைத்தியர்களின் அமைப்பு (American Psychiatric Association) இது நோய் நிலை என்ற தவறான புரிதலில் இருந்த போது, ஓரினக்கவர்ச்சி உடையோருக்கு பாலுணர்வை குறைக்கும் மருந்துகள் (chemical castration) மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார்கள். சிகிச்சையின் பின்விளைவாகச் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மறைந்து வாழப் பழகிக் கொண்டனர். 70 களின் பின் நிலைமை மாறியது. வெளிப்படையாக இருக்க ஆரம்பித்தனர். 2. ஆனால் இன்னும் பல நாடுகளில், திருமணம் செய்து வாழ சட்டத்தில் இடம் இல்லை. 2015 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்கா முழுவதும் ஓரினத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கித் தீர்ப்பளித்தது. கொஞ்சம் அமெரிக்காவில் கெடு பிடி குறைந்தது இதன் பின்னர். 3. "LGBTQ இனை சமமாக மதித்து அங்கீகரித்தால், சமூக சீரழிவு, சமநிலை குறைந்து விடும்" என்று வாதிடுவோருக்கு முகத்தில் அறையும் சாட்சிகளாக 80 களிலேயே ஓரினக் கவர்ச்சி, ஓரினச் சேர்க்கை என்பவற்றை சட்டபூர்வமாக்கிய ஸ்கண்டினேவியன் நாடுகள் விளங்குகின்றன. டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய இந்த நாடுகளின் வாழ்க்கைத் தரமும், சமூக சமநிலையும் உலகமறிந்தது. ஒரு ஒப்பீட்டிற்கு, ஓரினச் சேர்க்கையாளர்களை "பின் பக்கத்தில் உதைத்துத் துரத்தும்" 😎ரஷ்யாவில் பிறப்பு வீதமும் குறைவு, வாழ்க்கைத் தரமும் இந்த ஸ்கண்டினேவிய நாடுகளை விட மிகக் குறைவு. 4. "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன். திருமணம் என்றால் என்னவென்று மணம் செய்து கொள்ளும் நபர்கள் தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படை உண்மையான, நீடித்த, பரஸ்பர அர்ப்பணிப்புத் தான் என்றால் அது திருமணம் தான். இதை வேறு பெயர் கொண்டு அழைக்க வேண்டியதில்லை.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
2020 பொதுத் தேர்தலில், விக்கி ஐயாவின் தலைமையில் ஆனந்தி சசிதரன் நின்று தோற்ற போது வென்ற வாக்குகள் எத்தனை? ஏன் மக்கள் அவரை அந்த நேரம் தம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? யாருக்காவது தெரியுமா?
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
🤣எதிர்பார்த்த படியே சொல்லியிருக்கிறீர்கள்: "34 ஆய்வுகள் யாரையோ திருப்தி செய்ய யாரோ செய்த ஆய்வுகள்". இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இல்லாமல் (ஆனால் formation இற்கு வாழும் சூழல் முக்கியம் என கருத்தை நீங்களே முதலில் சொல்லி விட்டு) அடுத்த சந்ததியில் சீரழிவு நிகழும் என்கிறீர்கள். இது மூக்குச் சாத்திரம், ஆனால் அதையும் சீரியசான ஆய்வு முடிவு போல உங்களால் நீட்டி முழக்கிச் சொல்ல முடிகிறது😂. சிறு பான்மை, பெரும்பான்மையெல்லாம் ஏன்? இதற்கும் ஓர் பால் தம்பதிகளுக்கு உரிமைகள் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? "everybody is a minority somewhere, that doesn't mean they should be deprived of their basic rights" சொன்னது நான் அல்ல, ரோக்கியோ நகரில் "ஒரு பால் தம்பதிகளின் உரிமையை மட்டுப் படுத்த வேண்டும்" என்று நகர மேயர் போட்ட வழக்கை நிராகரித்து ஒரு ஜப்பானிய நீதிபதி சொன்னது. கட்டாயம் ரக்கர் கால்சன் சொல்வது இந்த ஓர் பாலின விடயங்களில் நம்பிக்கையான தகவலாகத் தான் இருக்கும். கார்ல்சனுக்கு ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் பரஸ்பர சம்மதத்தோடு உறவு வைத்திருப்பது கண்ணில காட்டக் கூடாது! ஆனால், கூட வேலை செய்யும் பெண்களிடம் அவர்கள் அனுமதியில்லாமலே கையைக் காலை நீட்டுவது பூரண சம்மதமான விடயமாக இருந்திருக்கிறது😎. அதனால் தான் Fox News இல் இருந்து வேலை நீக்கப் பட்டார்!
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
கவர்ச்சிகரமான "தியரி"! முகட்டைப் பார்த்து யோசித்தால் அல்லது காலையில் ரொய்லெற்றில் இருக்கும் வேளைகளில் இது போன்ற தியரிகள் சிலருக்கு (எனக்கல்ல!) உதிக்கலாம்😂 ஆனால், இப்படியான தியரிகளை உண்மை போல பொது இடங்களில் பரப்ப முதல், இதைப் பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா என்று தேடிப் பார்க்க வேண்டும். ஆய்ந்திருக்கிறார்களா? ஆம், 34 ஆய்வுகள், அந்த 34 ஆய்வுகளை systematic review இனால் மீள ஆராயும் போது கிடைக்கும் பதில்: ஓர் பால் பெற்றோரின் பிள்ளைகள் சில விடயங்களில் எதிர்ப்பாலின பெற்றோரின் பிள்ளைகளை விட சிறப்பாக இருக்கிறார்கள். மற்ற படி மன நிலைகளில் எதிர்ப்பாலின பெற்றோரின் பிள்ளைகளை விட வேறுபாடுகள் இல்லை. இதன் சாதாரண மொழி இணைப்புக் கீழே: https://www.forbes.com/sites/roberthart/2023/03/06/kids-raised-by-same-sex-parents-fare-same-as-or-better-than-kids-of-straight-couples-research-finds/ இனி என்ன சொல்லப் போகிறீர்கள்? "liberal intelligentsia ஷதி தான் இந்த ஆய்வு" என்று புது தியரியோடு வருவீர்களா😎?
-
தமிழ்ப் பொதுவேட்பாளரால் சமஷ்டிக்குப் பாதிப்பில்லை! - விக்னேஸ்வரன் விளக்கம்
சுமந்திரன் சொன்ன "மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் ஆணை வழங்கினர், சிவில் சமூக அமைப்புகளுக்கு அல்ல", என்பது சரியான கருத்தென நினைக்கிறேன். இதை விக்கி ஐயா கொஞ்சம் தீவிரமாக்கி, ஊதிப் பெருப்பித்து கீழே இருக்கும் கருத்தாக மாற்றியிருக்கிறார்: "...சுமந்திரனின் கருத்துப்படி ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் தேர்தலில் வென்று விட்டால் அவர் அடுத்த ஐந்து வருடங்க ளுக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளலாம் என்பதே" உண்மையில், அப்படி நடக்கும் பிரதிநிதிகளை மக்கள் தேர்தலில் தோற்கடித்து, இன்னொருவரைத் தெரிவு செய்யலாம். ஆனால், சிவில் சமூக அமைப்புகளில் சில நேரங்களில் உள்ளக ஜனநாயகமே இல்லாத நிலை இருக்கிறது. ஒரு கட்டுரையில் கருணாகரன் சுட்டிக் காட்டியிருப்பது போல, சில சிவில் அமைப்புகள் மக்களைப் பிரதிபலிக்கும் அமைப்புகள் அல்ல, தமக்கென ஒரு agenda வை வைத்துக் கொண்டு அதை அரசியலில் அழுத்தமாகப் பிரயோகிக்கும் அமைப்புகள்.
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
எழுத்தாளர் துமிலனுக்கும், பெருமைக்குரிய அவர் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்! ஆசியப் பெற்றோர் வெளிநாடுகளில் "மருத்துவர், பொறியியலாளர், முதலீட்டு வங்கியாளர்" என்ற தடங்களில் மட்டும் தங்கள் குழந்தைகளைத் தள்ளி விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பத்திரிகைத் துறையில் பிள்ளையை அனுமதித்து, பிரகாசிக்க விட்டிருக்கிறீர்கள். எழுத்தாளர் முத்துலிங்கத்தின் மகன், ஒரு National Geographic ஒளிப் படக்கலைஞராக ஒளிர்கிறார் என்று அவரது தந்தையின் ஒரு கட்டுரையில் அறிந்தேன். எல்லாத் துறைகளிலும் எங்கள் ஆட்கள் கொடி நாட்ட வேண்டும்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நீங்கள் இந்தக் கட்டுரையை முதலே இணைத்திருக்கிறீர்களென நினைக்கிறேன். தற்போது இது கவனம் பெற்றிருக்கிறது. உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ஏலவே ஓர்பாலின உறவை எதிர்ப்போர் முன்வைத்து, பரவலாகப் பதில்கள் கொடுக்கப் பட்ட வழமையான சந்தேகங்கள் தான். ஒரு மாதிரிக்கு, 1. மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா? மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்? ஹாவார்ட் கூர்ப்பியல் நிபுணர் டானியல் லிபர்மானின் கருத்துப் படி. "கூர்ப்பு என்பது எப்போதுமே எண்ணிக்கையை அதிகரித்தல்/தப்பி வாழ்தல் என்ற நோக்கத்தில் இயங்குவதில்லை". அது மட்டுமல்லாமல், தற்போது நிகழும் ஹோமோ சேபியன்சின் கூர்ப்பு என்பது, இயற்கையினால் பெரிதும் கட்டுப் படுத்தப் படும் நிலையில் இல்லை என்றும் சொல்கிறார். இதற்கான பல உதாரணங்கள் அவரது சுவாரசியமான நூலான The Story of Human Body இல் தருகிறார். எனவே, நான் ஒரு எதிர் கருதுகோளை முன்வைக்கிறேன்: சமூக மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, சகலரையும் (பால் கவர்ச்சி, தோல் நிறம், உடல் இயலுமை) சமமாக நடத்தினால், உலகில் ஒரு பல்லினத் தன்மையான ஹோமோ சேபியன்ஸ் உருவாகும். அதன் எண்ணிக்கை சிறிது குறைகிறதென்றே வைத்துக் கொள்வோம் ஒரு பேச்சுக்கு. ஆனால், தப்பி வாழும் ஹோமோ சேபியன்ஸ், நியண்டதாலை சேபியன்ஸ் கொன்றது போல ஒருவரை ஒருவர் மறுத்து ஒதுங்கி நிற்க/ ஒளித்திருக்கச் செய்யாமல் ஸேபியன்ஸ் என்ற இனம் முன்னேற உழைப்பவர்களாக மாற்றும். இது கூர்ப்பு ரீதியில் தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா? 2. இன்னொரு மாதிரியாக: இதை அனுமதித்தால், incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding) நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது. விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம். ஏன்? ஒரு உடலுறவில் consent இல்லை என்றால் அது சட்ட ரீதியான consensual உறவு அல்ல! விலங்குகள் எப்படி consent கொடுக்கும் என நினைக்கிறீர்கள்? எனவே, அழகாக எழுதியிருக்கிறீர்கள், ஆனால், உங்கள் வாதம் உறுதியான அடித்தளத்தில் இல்லை!
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
ஏற்கனவே நானும் , வேறு சிலரும் எழுதியிருக்கும் பதில் புரியா விட்டால் நீங்கள் 1000 தடவைகள் கேட்டாலும் ஒரு விளக்கமும் வராது. ஆனால், இடியப்ப சிக்கலான ஒரு பிரச்சினை பற்றிய உங்கள் பார்வை மிகவும் ஒற்றைப் படையான, "ஒத்த றூட்" பார்வையாக இருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக, இதே பார்வையை புலிகளின் தலைமையின் சில தரப்புகளும் கொண்டிருந்தன, அதன் விளைவு பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டியிருப்பதே, நாம் இன்னும் 100 வருடங்கள் கடந்தாலும் எதுவும் முன்னேறாது என்பதற்கான அறிகுறி! உரையாடலுக்கு நன்றி, இனி எனக்கு சோறு போடும் வேலையைப் பார்க்கக் கிளம்புகிறேன்🙏!
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இப்ப விளங்குதா? ஏன் மேற்கு நாடுகள் உங்களைப் போன்றவர்களை உள்ளே எடுக்க அச்சப் படுகிறார்கள் என?
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஊக்குவிக்காமல் இருப்பது என்றால், வெளிப்படையாக இருக்காமல் ஒளிந்திருத்தல்😎. தமிழ் கல்யாண வீடுகளில் துணையிழந்தவர்கள் முன்னே வராமல் ஒளிந்து நிற்பது போல! அல்லது 83 கலவரத்தின் பின்னர் கொழும்பில் பஸ்ஸில் பயணம் செய்த தமிழ் பெண்கள் நெற்றிப் பொட்டு இல்லாமல் பயணம் செய்ததைப் போல! ஓரினச்சேர்க்கையாளர்கள் இப்படி மறைவாக இருந்தால், இந்த homophobic ஆக இருப்பவர்களுக்கு மனக்கிலேசம் ஏற்படாது, எனவே அவர்கள் "நாம் நோர்மலான ஆட்கள்" என்று பெருமிதமும் அமைதியும் கொள்வர். இங்கே யாருக்கு உளவள ஆலோசனை / சிகிச்சை தேவை என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது இப்போது😂!
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கந்தையர், உங்கள் சகல கருத்துக்களிலும் "தீர்வு" என்று 100 தடவைகளுக்கு மேல் எழுதியிருக்கிறீர்கள். இங்கே ஏனையோர் தீர்வைப் பற்றியல்ல பேசுகிறார்கள். அந்தக் காலப் பகுதியில் தீர்வு வருமா இல்லையா என்பதை விடுத்து இயக்கத்தைக் காப்பாற்ற, தலைமையைக் காப்பாற்ற, முக்கியமாக பொது மக்களைக் காக்க என்ன செய்திருக்க வேண்டுமென்றே பேசுகிறார்கள். நீங்கள் குறிப்பிடும்" தீர்வு" என்பது என்னவென்று உங்களுக்கே தெளிவில்லை என ஊகிக்கிறேன். புலிகள் எதிர்பார்த்த தீர்வு தமிழீழம் மட்டும் தான் என்று பல தடவைகள் மறைமுகமாகத் தெரியப் படுத்தியிருக்கிறார்கள் (நீங்களும் அவர்கள் பேச்சுவார்த்தைக்குப் போனது மட்டும் தான் தவறு என்பதன் மூலம் அதனையே தீர்வென நம்பியிருக்கிறீர்களென ஊகிக்கிறேன்). தீர்வை எந்தக் காலத்திலும் ஒரு சிங்களத் தலைவர் தன் சட்டைப் பொக்கற்றில் இருந்து தூக்கித் தர முடியாது. இது தான் 1950களில் இருந்து நாம் கண்ட சம்பவங்களின் பாடம்! எனவே, இழுபட வேண்டும், தள்ளு முள்ளுப் பட வேண்டும். தற்போது பலஸ்தீனத்தைப் பாருங்கள். அவர்கள் இரண்டாகப் பிரிந்திருந்தாலும், தங்கள் இரு தலைமைகளையும் பேணிக் காப்பதில் சில சமயங்களில் காலை முன் வைத்தும், சில நேரங்களில் (தற்போது ஹமாஸ் செய்வது போல) பின்வாங்கியும் உலக அரங்கில் அங்கீகாரத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இது சிலருக்கு பார்க்க முட்டாள் தனமாகத் தெரியலாம், ஆனால் தீர்வுகள் இப்படித் தான் அடையப் படுகின்றன. "தீர்வு இல்லையா? அப்ப வா அடிபடுவம்!" என்று அவசரப் பட்ட அமைப்புகள் தீர்வை மட்டுமல்ல, தீர்வுக்கு எடுத்து வைத்த ஆரம்ப அடிகளையும் பயனற்றதாகி விடுவர். நாமே உதாரணமாகியிருக்கிறோம்!
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
நடந்த சம்பவங்களை ஐலண்ட் சொல்கிறார், நீங்கள் "கதை" என்கிறீர்கள். இப்படி வரலாற்றைத் திரித்து யாருக்கு என்ன பயன்? கிளிநொச்சி வீழ்ந்தது ஜனவரி, 2009? அந்த நேரம் போர் நிறுத்தம் கோரியது சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள். அவற்றிற்குப் பதிலாக கோத்தாவும், சிங்கள அரசும் சொன்னவை மேலே ரஞ்சித் இணைத்த செய்தியில் இருக்கின்றன. ஆனால், வழமையாக செரிப் பழம் பிடுங்கும் போது நிகழ்வது போலவே - புலிகள் அமைப்பு அந்த நேரம் போர் நிறுத்தம் கோரியதா என்பது பற்றி எதுவும் அந்தக் கட்டுரையில் காணவில்லை. என் நினைவுக்கெட்டியவரை, அப்படி ஒரு அறிவித்தல் அந்த நேரம் புலிகளிடமிருந்து வரவில்லை. பெப்ரவரி இறுதியில் இன்னொரு வாய்ப்பு வந்தது: அமெரிக்க செனற் உபகுழு கூட்டம் இலங்கை நிலைமைகள் பற்றி நடந்தது, அந்த வேளையிலும் மக்களை விடுவிக்க வேண்டும், போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப் பட்டது. மே 13 இல் தான் ஒபாமா - மேலே நிழலி சுட்டியிருப்பது போல - லேற்றாக புலிகள் இலங்கை அரசிடம் சரணடைய வேண்டுமென்றும், மக்களைச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்றும் கோரியிருந்தார். எனவே, ஐலண்ட் சொல்லியிருப்பவை கற்பனைகள் அல்ல. எல்லாவற்றையும் நேர ஒழுங்கின் படி பார்த்தால், புலிகளும் போரை நிறுத்த முயலவில்லை என்பது புலனாகும்.
-
பொது வேட்பாளர் விவகாரத்தால் குழப்பம்: சுமந்திரனுக்கு சிறீகாந்தா செருப்படி
பேசியோர் நாகரீகமாகப் பேசியிருக்கிறார்கள், பார்க்க எங்களிடையே நாகரீகமான அரசியல் பரிமாற்றம் இருப்பது பெருமையாக இருக்கிறது. ஆனால், தலைப்பில் மட்டும் "செருப்படி, குழப்பம்" என்று இருக்கிறது😂. தமிழ் நாட்டு "யூ ரியூப் வழி தூசணச்சாரிக்" கட்சியொன்றின் பாணியில் எங்கள் அரசியலையும் இழுத்து விடும் முயற்சி போல தெரிகிறதே?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
இந்த தமிழ் தலைவர்களுள் புலிகளும் அடக்கமா? அப்படியானால், "சமஷ்டியைப் பிரிசீலிக்கிறோம்" என்று சொன்ன பாலசிங்கத்தாரை ஏன் ஓரங்கட்டினார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா கந்தையர்😂?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
இன்னொருவரோடு ஒத்த கருத்து ஒரு விடயத்தில் இருப்பது காவடி அல்ல! உங்களுக்கு நடக்கும் உரையாடலில் ஆக்கபூர்வமாக எதுவும் பங்களிக்க இல்லையென்றால் மௌனம் நல்ல தெரிவென நினைக்கிறேன். உங்கள் வெறுமை, வறுமை 😎 என்பனவாவது வெளித்தெரியாமல் இருக்குமல்லவா? அதானே, எங்க உங்களுக்கு ஒரு விடயமாவது தெரிந்திருக்கப் போகுதென்று ஒரு கணம் நானும் நினைத்து ஏமாந்து விட்டேன், Sorry Sir😎!
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
தமிழருக்கு நல்லது செய்ய வேண்டுமென என்ன தேவை அல்லது அழுத்தம் ரணிலுக்கு இப்போது இருக்கிறது? இல்லையல்லவா? எனவே, ரணில் எதுவும் தரப் போவதில்லை. ஆனால், கெடுபிடிகளில் ரணில் ஆட்சி இருக்கிற காலங்களில் சில தளர்வுகள் இருக்கும். இது மக்களை நோக்கிய ரணிலின் "இதயம் வெல்லும்" முயற்சி, இது தாயக மக்களிடம் வேலை செய்கிறது. அது சரி, "இராசதந்திர ரீதியாக யோசித்து" புலிகள் ஆட்சிக்குக் கொண்டு வந்த பக்ச குழு என்ன நன்மை தமிழருக்குச் செய்திருக்கிறதென்று நீங்கள் சொல்லுங்கள்😎?