Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. அப்படியோ? நா.த.கவின் பெயரைக் காணோம். "வேறு-others" என்ற வகைக்குள் சேர்த்தே வீதம் போட்டிருக்கிறார்கள். எப்படி இந்த வீதங்களெல்லாம் கண்டு பிடிக்கிறீர்கள்🥰?
  2. மோடி எதிர்பார்த்த தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகக் கூடும் என்கிறது பிபிசி?. காங்கிரஸ் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறதா? வந்தால் இலங்கையில் சந்தி சந்தியாக வைத்த சிலையையெல்லாம் அகற்ற வேண்டி வருமோ😎?
  3. பகுதியளவில் சரியான அவதானிப்பு. ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியானாலும் கூட மாநில வழக்குகளின் தீர்ப்பில் இருந்து மன்னிப்புப் பெற (தனக்குத் தானே pardon வழங்கிக் கொள்ள) முடியாது. இதனால் தான் இந்த நியூ யோர்க் தீர்ப்பும், ஜோர்ஜியாவின் மாநில வழக்கும் முக்கியமாகப் பார்க்கப் படுகின்றன. ஆனால், தீர்ப்புகளால் அவருக்காகத் "தீக்குளிக்கக் காத்திருக்கும் அடிப்பொடிகள்" அவருக்கு வாக்களிக்காமல் விடப் போவதில்லை. நடு நிலையாக இருக்கும் (படித்தோர், பெண்கள், இளையோர், நம்மைப் போன்ற லிபரல் குடியேறிகள்) ஆட்களின் வாக்குகளைத் தான் ட்ரம்ப் இழப்பார். பென்சில்வேனியா, கொலராடோ போன்ற ஊசலாடும் (swing) மாநிலங்களில் இது நிகழ்ந்தால், தோல்வி வரலாம். எனவே தான், சேர்த்த காசு வெற்றியைத் தீர்மானிக்கும் பாரிய காரணியல்ல. எந்தக் குழுவின் வாக்குகளை தீர்ப்புகள் பாதிக்கும் என்பது தான் காரணியாக இருக்கும். அடுத்த 4 வருடங்களில் பைடனுக்கு ஏதாவது ஆனால், அடுத்த நிலையில் இருக்கும் கமலா ஜனாதிபதியாக வந்து விடுவார் என்ற அச்சம் இருக்கிறதல்லவா? அந்த அச்சம் உண்மையில் பெண் வெறுப்பும், நிறவாதமும் கலந்த துவேஷத்தின் வெளிப்பாடு. இந்த துவேஷம் எங்கள் ஆசிய வம்சாவளி அமெரிக்கர்களிடையேயும் இருப்பது தான் ஆச்சரியமான விடயம். இது தவறு தான் என்றாலும், நீலக்கட்சி இதைக் கணக்கிலெடுத்திருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.
  4. நாற்பதுக்குக் குறைந்த இளைஞர்கள் தமிழ் தேசிய அரசியலுக்கு வராமல் ஒதுங்க, அவர்கள் பிழைப்பை நாடி ஓடும் வயதினராக இருப்பது மட்டுமல்ல காரணம். உழைப்பையும், படிப்பையும் முடித்து விட்டு நாட்டுக்குத் திரும்பி இப்போது பா.உ ஆக இருக்கும் சாணக்கியனை எப்படி நடத்தினோம் என்று ஒரு தடவை நிலாந்தன் தேடிப் பார்த்து தன் ஆய்வைப் பூரணப் படுத்த வேண்டும். அவரை அறிமுகம் செய்தவர் முதல், கற்பனையாக சிலர் உருவாக்கிய சாணக்கியனின் சிங்களக் காதலி வரை சாணக்கியனை தூக்கி மிதிக்கக் காரணங்களாக இருந்திருக்கின்றன. இது ஒரு உதாரணம். அம்பிகா சற்குணநாதன் என்ற இன்னொரு இளையவருக்கு நடந்தது இன்னொரு உதாரணம். இப்படி தகுதிகள் இருப்போரை எதையோ தூக்கி அவர்கள் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திட்டித் துரத்தினால், உருப்படியான தகுதி இருக்கும் யாரும் இனி வர மாட்டார்கள். (அல்லது வருவோர் பார்லிமென்ற் கன்ரீனில் முழுக்கட்டுக் கட்டி வயிறு வளர்த்து, வாகன இறக்குமதி அனுமதியை விற்று இலாபம் பார்த்து, அரச வேலை வாய்ப்பை விற்று லாரி வாங்கி ஓட விடும் pre-2000s பா.உ க்களாக வருவார்கள்😎) இதைப் புரியாமல் நிலாந்தன் புலம்பி ஒரு பலனும் இல்லை!
  5. மகிழ்ச்சியான செய்திகள். ஒரு விடயத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்: பல் கலைக் கல்வியால் "பயன் இல்லை அல்லது உரிய தொழில் கிடைக்காது" போன்ற காரணங்களை முன் வைத்து பல் கலை போகாமல் விடும் மாணவர்களின் தொகை கடந்த பல வருடங்களாக அதிகரித்து வருகிறது எனக் கேள்விப் பட்டுள்ளேன். 3 , 4 வருடங்கள் செலவு செய்து பல் கலைக் கல்வியையும், அனுபவத்தையும் பெறுவது பெரிய விரயமல்ல, ஒரு back-up plan ஆகவாவது ஒரு பட்டத்தை எடுத்து வைத்துக் கொள்வது புத்தி சாலித்தனம். ஆசிரியர்களும், பெற்றோரும், வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களும் இதனை இந்த மாணவ அணியிடம் வலியுறுத்த வேண்டும்.
  6. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது😂? "பகட்டு" உணவு என்று அபிலாஷ் குறிப்பிடும் பீசாவும், ஏனைய உணவுகளும் ஆரோக்கியமான உணவுகளை விட விலை குறைவு தான். அதனால் வசதியில்லாதோர் பாதிக்கப் படுவதும் உண்மை தான். ஆனால், எங்கள் உடலுக்கு நாம் தான் பொறுப்பு. இந்தியா, இலங்கையை எடுத்துக் கொண்டால் பல விடயங்களை இலவசமாகத் தரும் அரசாங்கம், ஆரோக்கிய உணவையும் சமைத்துக் குழைத்து எங்கள் வாயில் ஊட்டி விட வேண்டுமென்று எதிர்பார்ப்பது கொஞ்சம் மிகையான எதிர்பார்ப்பு. விற்பவன் பளபளப்பாக காட்டுகிறான் என்பதற்காக வாடிக்கையாளன் ஆராயாமல் வாங்கி முழுங்குவது வாடிக்கையாளன் தவறேயொழிய அரசினதும், வியாபாரியினதும் தவறல்ல.
  7. இது சுற்றி சுற்றி ஒரே கொல்லையில் நிற்கும் circular உரையாடல். ஆனால் தீர்வை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்: தேர்தல், வாக்குகள், பதவி நீக்கம். இதை சரியான வழியில் ஊக்குவிப்பதை விட்டு விட்டு ஏன் சும்மா பேசிக் கொண்டும், கிட்டத் தட்ட அரசியல் வாதிகளைப் "போட்டுத் தள்ள வேண்டும்" என்ற தொனியிலும் பேச வேண்டும்?. இந்த தீவிர தேசிய ranting தான், பலரைத் தள்ளி வைத்திருக்கிறது. இவற்றில் நின்று விலகி நிற்போருக்கு நேரமும் மிச்சம், அமைதியும் கிடைக்கும். தீவிர தமிழ் தேசியர்கள் எல்லாவற்றையும் செய்து முடித்து வெற்றி பெறட்டும், யாரும் போய் பங்கு கேட்கப் போவதில்லை!
  8. உங்கள் அவதானிப்பின் அடிப்படையை ஒருக்கா எனக்கும் சொல்லுங்களேன்? நெடுக்கர் தந்த இணைப்பு (அவர் வாசித்திருக்க மாட்டார், தலைப்பைத் தாண்டி😎) தெற்கில் ஒரு பரவலான பிரச்சினை. அந்த இணைப்பில் இருக்கும் தகவல் படி, கறுப்பின மக்கள், லோயர் வைக்கவும், பிணை கட்டவும் இயலாத ஏழைகள், இந்த நீதிபதிகளால் பாதிக்கப் படுகிறார்கள் என்று காட்டுகிறது. தம்பு போன்றோர்- ஒரு பில்லியனர், ஒரு லோயர் படையணியோடு வலம் வருபவர்- இந்த வகை நீதிபதிகளால் பாதிக்கப் படுவதில்லை. உண்மையாகப் பார்த்தால், அவர் போன வருடம் நியமித்த ஒரு நீதிபதி தன் நன்றிக் கடனாக அவருக்கெதிரான சமஷ்டிக் கேஸ் ஒன்றை தள்ளி வைத்து உதவியிருக்கிறார். எனவே, இந்த றொய்ரர்ஸ் இணைப்பின் படி, நீதிபதிகளால் தம்பு பாதிக்கப் படவில்லை. இது சாமான்ய மக்களை உள்ளடக்கிய ஜூரர் தீர்ப்பு என்பதையும் கவனிக்க வேண்டும்.
  9. பந்தி பந்தியாக எழுதியிருக்கிறீர்கள், ஆனால் ஏற்கனவே மேலே 3 பதிவுகளில் உங்களுக்கும் பிரபாவுக்கும் சுருக்கமாக எழுதிய பதில்களை வாசிக்காமலே கடந்து வந்து விட்டீர்களா அல்லது உங்களுக்குப் பிடித்த பதில் கிடைக்கும் வரை அலட்டிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? அவை தான் என் பதில்கள், அவற்றை விட வேறெதுவும் எழுதும் அளவுக்கு எனக்கு தீவிர தேசியத்தில் அக்கறையும் இல்லை, நேரமும் இல்லை!
  10. ☝️ மேலே தம்பு பாவிக்கும் "வாழைப்பழக் குடியரசு - Banana Republic" என்றால் என்னவென்று பார்க்கலாம். (தம்புவிற்கே அர்த்தம் தெரியாமல் இருக்கும்): பலம் குன்றிய அரச நிர்வாகம், ஊழல் ஒரு சிறு குழு- அனேகமாக செல்வந்தர்களின் குழு- கையில் அவர்கள் நலனுக்காக ஆட்சி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் சாதாரணமாக நிலவுதல்... வெயிற் அ மினிற்: இதெல்லாம் தம்பு வெள்ளை மாளிகையில் இருந்த 4 வருடத்தில் அல்லவா நடந்தன😂? நேற்று நியூ யோர்க்கில் நடந்தது, இதெல்லாவற்றிற்கும் நேர் எதிரான, சட்ட ஆட்சி, 34 வர்த்தக ஆவணங்களின் உண்மைத் தன்மையை வற்புறுத்தும் நிர்வாக நேர்மை, ஊழல் பேர்வழிக்கு அவரது பண, பதவி நிலையைக் கடந்து 12 ஜூரர்கள் வைத்த ஆப்பு! எனவே, "வாழைப்பழக் குடியரசு" நன்மை என்று யோசிப்போர் தம்புவை ஆதரிக்கலாம்! ஏனையோருக்கு தெரிவு மிகவும் தெளிவு!
  11. ஒரு நோயாளியில், அவரது உடலின் கலங்களை எடுத்து, அவற்றில் இருந்து stem cells இனை பிரித்து எடுத்து, திரும்பவும் அவரது ஈரலுக்குள் பதித்திருக்கிறார்கள். கீழே அந்த அறிக்கை இருக்கிறது, ஆர்வமுள்ளோருக்காக. https://www.nature.com/articles/s41421-024-00662-3 இப்படி autologous stem cell transplant மூலம் சில புற்று நோய்களைக் குணமாக்கும் முறை சிகிச்சையாக மேற்கு நாடுகளில் இருக்கிறது. ஆனால், செலவு மில்லியன் கணக்கில் வரும். எனவே, இதொன்றும் புதுமையான சிகிச்சையோ, இருக்கும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளுக்கு விரைவான மாற்றீடோ அல்ல. இப்போதைக்கு தியரி மட்டும் தான்.
  12. இதில் எனக்கு உடன்பாடு பூரணமாக இல்லை. வெளிநாட்டுச் சக்திகளுக்கும், அமைப்புகளுக்கும் ஒரே முகமாக எம்மைப் பிரதிநிதுத்துவம் செய்யாமல் பிரிந்து நிற்பது தான் தமிழ் அரசியல் தலைவர்களின் பிரதான தவறு. இதை வெளிநாட்டு அதிகாரிகளே நேரடியாகச் சொன்ன பிறகும் திருந்தாமல் இருப்பது மன்னிக்க இயலாத எருமை மாட்டுக் குணம், இதை மக்கள் தங்கள் வாக்குகளால் திருத்த வேண்டுமென நினைக்கிறேன். ஆனால், தமிழ் மக்களிடையே பிளவின் தோற்றுவாய் அரசியல் தலைமைகளிடமிருந்து ஆரம்பிக்கவில்லை. கடந்த காலத்தின் சில இருண்ட கூறுகளைக் கூட இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டுமென்ற கடும் போக்கு நிலையும், அது சில இடங்களில் மறைமுகமான/சொல் வன்முறையாக வெளிப்படுவதும் தான் பிளவின் காரணம் என நினைக்கிறேன் . உதாரணமாக, நீலனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ஒருவர் யாழில் நக்கல், நையாண்டியும், சில சமயம் கடும் சொல்லும் கேட்காமல் கடந்து போக முடியாது! ஏன்? நியாயமில்லாத செயல்களைக் கூட எங்கள் legacy என்ற பெயரில் வெள்ளைப் பெயின்ற் அடித்து காவித் திரிய வேண்டுமென்ற மனப்பாங்கு. அந்த மனப்பாங்கினால் தான் தற்போது இருக்கும், ஒரு கல்லைத் தானும் யாருக்கும் எறியாமல் இருக்கும் அரசியல் வாதிகளையும் கூட சிங்களவரின் அதிரடிப் படை காவல் காக்க வேண்டிய நிலை. இப்படியான மெலிதாக மறைக்கப் பட்ட (thinly-veiled) வன்முறை நிலைப்பாடுகளை ஊக்குவிப்போருடன் என்னைப் பொறுத்த வரை சேர்ந்து நிற்க முடியாது. என்னைப் போல பலர் இருக்கிறார்கள். தமிழர்களில் பெரும்பான்மையானோர் தற்போது மௌனமான பெரும்பான்மையினராக (silent majority) மாறி விட்டனர்.
  13. இருக்கலாம். உங்களுடையது கொஞ்சம் நம்பிக்கையான optimistic பார்வை. ஆனால், நானும், நீங்களும் சொல்லும் நிலைகள், மனித உயிர் இழப்பைக் கழித்து விட்டுப் பார்த்தால் நல்ல தெரிவுகள் தான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. சீட்டு விளையாட்டில், கையில் இருக்கும் சீட்டுகளை வைத்துக் கொண்டு தான் விளையாட முடியும் (you play with the cards you are dealt with), இல்லாததை வைத்துக் கொண்டு கனவு காண முடியாது. இதே நிலையில் இப்போது நிற்கிறோம் என நினைக்கிறேன்: ரணில், சஜித், பொன்சேகா, அனுர இவர்களில் நிலத்தில் இருக்கும் மக்களுக்கு குறைந்த பாதகம் செய்வோரை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். இந்த யதார்த்தத்தை சொல்வோர் அனைவரும் இவர்களில் ஒருவரின் இரகசிய ஆதரவாளராக பிரச்சாரம் செய்கிறார் என்ற குற்றச் சாட்டு, பதில் இல்லாமல் போகும் போது போய் முடங்கும் மூலையாகத் தான் எனக்குத் தெரிகிறது.
  14. இந்த "இப்போதிருக்கும் நிலை" என்ன? ட்ரம்ப் இருந்ததை விட, அல்லது ட்ரம்ப் இனி வந்தால் இருக்கப் போவதை விட எவ்வளவு கீழான நிலை அல்லது மேலான நிலை? நான் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டிருப்பது போல, மனனப் போட்டியில், அல்லது ஒலிம்பிக்கில் ஓடிப் பதக்கம் வாங்கக் கூடிய ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டியதில்லை. அதற்கு தனியாக அமெரிக்காவில் ரீம் இருக்கிறதென நினைக்கிறேன்😂. இது புரியாத வாக்காளர்களுக்கு பைடனை விட ட்ரம்ப் உசத்தியாகத் தெரிவதில் வியப்பில்லை. ஆனால், இப்படியான வாக்காளர்களால் தேர்தல் வெற்றி தீர்மானிக்கப் படப் போவதுமில்லை!
  15. இந்தப் பிளவுக்கு என்ன காரணம் என்று எப்பவாவது யோசித்திருக்கிறீர்களா? யாழ் களத்தை மட்டும் ஒரு சாம்பிளாக எடுத்துப் பாருங்கள்: புலிகள் மீதான விமர்சனம், தற்போது இருக்கும் "புலி வால்கள்" என நான் அழைக்கும் தீவிர தேசியர்கள் மீதான விமர்சனம் ஆகியவை சுயம்புவாக யாழில் உருவாகின்றனவா அல்லது ஒரு கருத்திற்குப் பதில் சொல்லும் போது உருவாகின்றனவா? என் அவதானிப்பு, சில தவறுகள், முட்டாள் தனமான knee-jerk முடிவுகள் என்பவற்றை தவிர்த்து விட்டு ஆய்வுகளை (நிலாந்தன் செய்திருப்பது போல) பிரச்சார நோக்கிற்காக முன் வைக்கும் போது, அந்த தவறுகளை மீண்டும் பேச வேண்டியேற்படுகிறது. இதன் பிறகு வந்து, "ஏன் இன்னும் இதையே பேசுகிறீர்கள்?" என்று மூக்கால் அழுவதில் என்ன பயன்? மேலே, ரஞ்சித் எழுதியிருக்கும் உதாரணமே இதைச் சுட்டிக் காட்டுகிறதே? 2005 புலிகளின் ரணில் மீதான கோபத்தின் வெளிப்பாடு, மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டு வந்து மக்களையும் அழித்து, புலிகளையும் அழித்தது. இதில் இருந்து இலங்கையில் கூட elections have consequences என்ற பாடத்தைக் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல ரணில் மீதான கோபத்தைத் தான் இந்த தேர்தலிலும் காட்ட நிற்கிறார்கள். எனவே, பேச வேண்டியிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டுவோர் "ரணிலை மீட்பராகப் பார்க்கின்றனர்" என்ற அர்த்தம் தொனிக்க எழுதுவதும், "சிங்ஹல தெமிழர்" என்பதும் தமிழர்களை தமிழ் தேசியத்தின் பக்கம் இழுத்து ஒற்றுமையைக் கூட்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்😂? குறுகத் தறித்த தமிழ் தேசியத்தை வைத்துக் கொண்டு புலத்தில் மட்டும் தான் நாம் கொடி கட்டிக் கொண்டாடலாம். நிலத்தில் நிலைமை வேறாக இருக்கும். ஏற்கனவே வேறாகி விட்டது என்பதே என் அவதானிப்பு.
  16. 2005 இல் மகிந்த இல்லாமல் ரணில் வந்திருந்தால் புலிகள் தொடர்ந்து பலவீனப் பட்டிருப்பர் என நினைக்கிறேன். கருணாவைப் பிரித்து புலிகளைப் பலவீனப் படுத்தியதன் பின்னர் இது தொடர்ந்திருக்கும். இதனோடு, மேற்கின் அழுத்தமும் சேர்ந்து புலிகளும் அரசும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இருந்திருக்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். இதன் முடிவு, முள்ளி வாய்க்காலாக இருந்திருக்காது என்பது என் கருத்து. இதற்கு என்ன பதில் உங்களிடமிருந்து வரும் என கொஞ்சம் ஊகிக்க முடிகிறது: புலிகள் பலவீனமாகியிருந்தால் அதன் பிறகு தமிழர்களை தீர்வில்லாமலே ஆக்கிரமித்திருப்பர் என்பீர்கள். இப்போது இருக்கும் நிலையும் அப்படித் தான். ஒரே வித்தியாசம்: பத்தாயிரக் கணக்கான தமிழ் சிவிலியன்களையும், புலிகளின் தலைமையையும் பலி கொடுத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். ரணில் வென்றிருந்தால், அப்படிப் பலி கொடுக்காமல் இந்தப் புள்ளிக்கு வந்திருப்போம். இந்த இரண்டாவது தெரிவு எனக்கு சிறந்ததாகத் தெரிகிறது. நான் "சிங்ஹல தெமிழனாக" இருப்பதால் இருக்கலாம்😎. உங்களுக்கு அப்படித் தோன்றாதென நினைக்கிறேன்.
  17. தேர்தல் பற்றி என்ன முடிவாகவில்லை என்கிறீர்கள்? சிவப்புக் கட்சியின் வேட்பாளர் தம்பு தான், இது ஜூன் மாத RNC மாநாட்டில் தான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படும், ஆனால் வேறெல்லா வழிகளிலும் உறுதியாகி விட்ட முடிவு இது. வேறு யார் நிற்கிறார்கள் தம்புவை எதிர்த்து? உறுதியாகாத ஒரே விடயம், நடுவில் இருக்கும் பக்கம் சாரா வாக்காளர்கள் ஒரு குற்றவாளிக்கு வாக்களிப்பார்களா என்பது மட்டும் தான்.
  18. சில சமயங்களில் நீங்கள் deadpan comedy ஆக எழுதுகிறீர்களா சீரியசாக எழுதுகிறீர்களா என்று எனக்கு விளங்குவதில்லை😂. யாழ் களத்தில் எதைப் பற்றியும் கருத்துரைக்கும் சாமான்யர்கள் தான் எல்லோரும் என நான் நினைக்கிறேன். அறத் திசைகாட்டி சரியாக இருந்தால் எதைப் பற்றியும் கருத்துரைக்கும் மன நிலை இருக்கும். வேலை செய்யாத அறத்திசைகாட்டியோடு, பலமான நாடுகள் செய்யும் அநியாயங்களை பூசி மெழுகும் மன நிலையில் மிகச் சிலர் இருக்கிறார்கள் தான். யார் என்று உங்களுக்கு ஊகிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், யாழ் உறுப்பினர்கள் முயல வேண்டுமென்கிறீர்கள். பகிடியா இது? உறவே, நாம் அடைந்த இனப் படுகொலைக்கே நாம் நீதி தேட இயலாமல் முட்டுப் பட்டு நிற்கும் போது எப்படி பலஸ்தீனர்களைக் காப்பாற்ற யாழ் உறவுகளால் முடியும் என நினைக்கிறீர்கள்? மூஞ்சூறும் விளக்குமாறும் போல இருக்கிறது!
  19. நன்னடத்தைப் பிணை (தண்டனைக் குறைப்பு) முன்னர் ஒரு போதும் குற்றவாளியாகக் காணப்படாத ஒருவருக்கு மட்டும் தான் சாத்தியம். இந்த வழக்கு நடந்த 6 வாரங்களிலேயே "தம்பு" 9 தடவைகள் நீதிமன்ற கட்டளையை மீறினார் என்று பத்தாயிரம் டொலர்கள் இதே நீதிம்ன்றில் அபராதம் கட்டியிருக்கிறார். எனவே, தம்புவின் "நன்னடத்தையை" முன்னிட்டு தண்டனைக் குறைப்பு வராது. ஆனால், சிறைக்கு அனுப்புவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கலால் சிறைத் தண்டனை கிடைக்காமல் போகலாம். சிறை சென்றால் கூட இவர் தேர்தலில் நிற்கலாம், வெல்லலாம், ஜனாதிபதியாகலாம். அமெரிக்க அரசியலமைப்பில் இதைத் தடை செய்யும் எந்த சரத்துகளும் இல்லை.
  20. இது ஒரு திட்டமிட்ட செயலாக இருக்குமென்று தான் நான் கருதுகிறேன். கார்த்திகைப் பூ, இலங்கையில் மிகவும் பிரபலமான பூ அல்ல என நினைக்கிறேன். அது பொது வெளியில் பேசப்படுவதற்கு பிரதான காரணம் தமிழர்கள் தான். அதை தேர்வு செய்து செருப்பில் அலங்காரமாகப் பதித்தது தற்செயலான செயல் அல்ல. சிறி லங்காவின் தேசிய மலரான நீலோற்பலத்தை (Blue Water-Lily) இப்படி செருப்பில் பதித்திருந்தால், சிங்கள பௌத்தர் யாராவது வழக்குப் போட்டிருப்பர். ஒரு பிரிட்டன் பெண், உல்லாசப் பயணியாக இலங்கைக்கு வந்த போது மாலுமிச் சக்கரத்தை (Sailor's Wheel) தன் உடையில் பதித்திருந்தார். "அசோகச் சக்கரத்தை அவமானப் படுத்தி விட்டார்" என்று பொலிஸ் வழக்குப் போட்டது. பின்னர் "அசோகச் சக்கரம் இப்படி தான் இருக்கும்" என்று நீதி மன்றில் நிரூபிக்க இயலாமையால் வழக்குத் தள்ளுபடியானது. பௌத்த அடையாளங்களை உடலில் ஆடையாகக் கூட அணிய முடியாது என்ற பாரம்பரியம், முன்னுதாரணம் இருக்கும் பின்னணியில் தான் செருப்பில் கார்த்திகைப் பூ பதிக்கப் பட்டதையும் நாம் பார்க்க வேண்டும்.
  21. அமெரிக்காவில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா?? அண்மையில் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப் பட்ட மே 18 பிரேரணையை இப்படி விளங்கிக் கொண்டிருக்கிறதா தமிழ் வின்?
  22. விக்கி ஐயாவுக்கு வயதானாலும், "சேர், இவர் நுள்ளுறார் என்னைய" என்ற பாணியில் அறிக்கை விடும் சிறு பிள்ளைத் தனம் இன்னும் விட்டுப் போகவில்லை😂. மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள், மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்த்து அவர்கள் முடிவெடுக்க உதவாமல்..நாங்க முடிவு எடுத்திட்டோம், பேசத்தேவையில்லை என்றால்..இவரெல்லாம் எப்படி இலங்கையில் உயர் நீதிமன்றில் நீதிபதியானார்??
  23. எப்ப இருந்து நிக்கி ஹேலி அமெரிக்காவின் முகமானார்😂? நிக்கி ஹேலி ஒரு அமெரிக்க அரசியல்வாதி. தெளிவாகச் சொல்வதானால் மக்கள் வரிப்பணத்தில் ஏதாவதொரு அரச பதவியை எடுத்து தன் குடும்பத்தின் வயிற்றை வளர்க்கும் நோக்கோடு மாதத்திற்கொரு கொள்கையோடு அலையும் ஒட்டுண்ணி😎! அண்மையில், ட்ரம்பின் மீது தான் வைத்த எல்லா விமர்சனங்களையும் அம்னீசியாவில் மறந்து விட்டு, உபஜனாதிபதி ரிக்கற்றிற்காக ட்ரம்புடன் சேர முயற்சிக்கும் ஒரு நாடக நடிகை. அவர் கட்சி சார்ந்த மக்களே இவரைத் தூக்கி எறிந்து விட்டனர். எனவே இப்படியான குறளி வித்தை காட்டித் தான் அவர் இனி நிலைத்திருக்க முடியும். அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள காசா, இஸ்ரேல் தொடர்பாக அந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். முன்னர் போல இஸ்ரேலை யாராவது கண்டித்தால் antisemitism என்று சண்டிக் கட்டோடு வரும் Anti-defamation League இப்போது அடக்கி வாசிக்கிறது. பல்கலைகள், மௌனமாக யூத ஆதரவுக் குழுக்களிடம் இருந்து நன்கொடை வாங்கும் செயல்களை தயக்கத்துடன் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. மாணவர்களின் போராட்டங்களால் வந்த ஒரு விளைவு இது. "இஸ்ரேலைக் கண்டித்தால் அது யூத எதிர்ப்பு துவேசம் தான்" என்று கீழ் சபை இயற்றிய இஸ்ரேல் சார்பான சட்டம், மேல் சபையான செனட்டில் தோற்கப் போகிறது. மிக முக்கியமாக, ஜனாதிபதித் தேர்தலில் பைடன் அணி இளைய வாக்காளர்களின் ஆதரவை இழக்கப் போகிறது - இது இஸ்ரேல் எதிர்ப்பு அறிக்கையாக இருக்கும். சிவப்புக் கட்சி உண்மையிலேயே புத்தி சாலிகளாக இருந்தால், ட்ரம்பை நீக்கி விட்டு ஒரு ட்ரம்ப் சாராத வேட்பாளரை நிறுத்தினால் பைடன் அணி மோசமான தோல்வியைச் சந்திக்க வைக்கலாம். ஆனால், அவர்களிடம் புத்திசாலித்தனம் மிகக் குறைவு.
  24. ஆங்கிலத்தில் இங்கே இருப்பது மேலே செய்தியில் இருக்கிறது. நீங்கள் கீழே👇 சும் சொன்னதாக எழுதியது எங்கே இருக்கிறது? உங்கள் தலைக்குள் மட்டும்😎?? "2004 தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காமல் உங்கள் வெற்றியை அவர்கள் கேள்விக்குறியாக்கியதை இப்போது மனப்பூர்வமாக உணர்கிறார்கள்" ...
  25. சலிப்பினால் வாக்களிக்காமல் விட்ட சந்தர்ப்பங்கள் பற்றி இங்கே குறிப்பிடப் படவில்லையென நினைக்கிறேன். 2005 இல் மகிந்த வெல்வதற்கு, ரணில் மீதான கோபத்தினால் வாக்களிக்க வேண்டாமென புலிகள் கேட்டுக் கொண்டது தான் காரணம். தற்போது, தமிழ் பொது வேட்பாளரை ஊக்குவிக்கும் தரப்புகள் எல்லாம், மிகக் கவனமாக இந்த 2005 தேர்தல் விளைவை மௌனத்துடன் கடந்து செல்வதைக் கவனிக்கலாம் - Cherry-picking😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.