Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    6121
  • Joined

  • Last visited

  • Days Won

    68

Everything posted by Justin

  1. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லாமே அனேகமாக ரஷ்ய ஆதரவு இணையங்களில் பரப்பப் பட்டிருக்கும் கதையாடல் - narrative தவிர இதிலே தரவு ரீதியாக ஒன்றும் இல்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எப்போது, எப்படி? நேட்டோவின் உள்ளே உக்ரைனை எடுத்துக் கொள்ள பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் உக்ரைன் இருக்க, அமெரிக்கா எப்படி அழுத்தம் , யாருக்குக் கொடுத்தது? ரஷ்யாவின் எரிவாயு, உயிர் சுவட்டு எரி பொருள் இரண்டையும் எந்த நாட்டினாலும் மேவ முடியாது. அதுவும், அமெரிக்காவில் சூழல் பாதுகாப்புக் கரிசனை காரணமாக எரிவாயுக் கிணறு தோண்டுவதைக் கட்டுப் படுத்திய நிலையில், ரஷ்யாவுக்கு போட்டியாக அமெரிக்கா வர நினைத்தது என்பது வேடிக்கையான ஒரு வாதம். இரசாயன உணவு உற்பத்தியென்பது அமெரிக்காவில் மட்டும் நடக்க , ஏனைய நாடுகளில் இயற்கை விவசாயமா நடக்கிறது? இன்றைய உலக விவசாயம், கால்நடை எல்லாமே நவீன முறைகளால் தான் உலகில் பஞ்சமின்றிக் காக்கிறது. இவற்றில் தீமைகள் உண்டு, ஆனால் அமெரிக்கா தான் இரசாயன உணவுகளை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்பது உலக உணவு உற்பத்தி, நகர்வுகளின் நிலை தெரியாதோரின் கற்பனை. இதனால் தான் அங்கதத்தில் சொல்லியிருந்தாலும் சுட்டிக் காட்டியிருந்தேன்: இவ்வளவு நொய்மையான remotely possible கொக்கியால் அமெரிக்கா புட்டினை போருக்கிழுத்தது, புட்டினும் இழுபட்டு வந்தார் என்றால், புட்டின் எவ்வளவு ஒரு மட்டி மடையரென அது நிரூபிக்கிறது?
  2. மனிதன்-யானை மோதல் (human-elephant conflict) இலங்கையில் இருக்கிறது (யானை பாதுகாக்கப் படும் ஒரு விலங்கினம்). அதே போல மனிதன்-குரங்கு மோதலும் (human-monkey conflict) இலங்கையின் சில விவசாயப் பிரதேசங்களில் பல வருடங்களாகவே இருக்கிறது. கீழே இருக்கும் ஆய்வு 2019 இல் வந்திருக்கிறது. https://www.karger.com/Article/Fulltext/496025 சில எழுத்துப் பிழைகளுடன் இருந்தாலும், இலங்கையின் விவசாயிகளில் ஒரு சிறு மாதிரிக் குழுவினர் குரங்குகளின் பாதிப்புப் பற்றி என்ன நினைக்கின்றனர் என இந்த ஆய்வில் தெரிகிறது. நான்கு குரங்கினங்கள் இலங்கையில் இருக்கின்றன - அவற்றுள் இரண்டு பாதுகாக்கப் பட்ட இனங்கள் (protected Species). இந்தப் பாதுகாக்கப் பட்ட குரங்கினங்கள் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதில்லை (எண்ணிக்கை மிக குறைவு, மனிதர்களை எதிர்கொள்ள அவை விரும்புவதில்லை!). எண்ணிக்கையில் மிக அதிகமாகி விட்ட மகாக் (Macaque) குரங்குகள் தான் விவசாயிகளுக்கு நட்டம் விளைவிப்பவையாக இருக்கின்றன. இந்த மகாக் குரங்குகளையே சீனா காசு கொடுத்து வாங்க விரும்புகிறது.
  3. பின்லாந்து, சுவீடன் இரண்டும் தம்மளவில் நேட்டோ கேட்கும் தகுதிகளை, இப்ப அல்ல, 30 ஆண்டுகள் முன்பே கொண்டிருந்த நாடுகள் - அவர்களே நடு நிலைமையோடிருந்தார்கள் உக்ரைன் தாக்கப் படும் வரை. மொல்டோவா, உக்ரைன், ஜோர்ஜியா மூன்றும் தம் நாட்டிற்குள் தீர்க்க வேண்டிய நிபந்தனைகள் பிரச்சினைகள் உண்டு, எனவே நேட்டோவிற்கு விண்ணப்பித்தாலும் உடனே இணைய முடியாது! இது நியூஸ் வாசிக்கும் ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய fact - தரவு. படிச்ச நாய் சொன்னாலும், படிக்காத தெய்வம் சொன்னாலும் fact இது தான் .😎 உரையாடல் என்பது இப்படித் தான் இருக்க வேண்டுமேயொழிய சும்மா ஒன்றைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது அரை குறையாகப் புரிந்து கொண்ட வெற்றிடத்தை வசவுகளால் நிரப்புவதால் அல்ல!
  4. நேட்டோவில் இணைய வரும் நாடுகள் சில தகுதி நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இங்கே யாழில் பல முறை விளக்கப் பட்டிருக்கு மருதர்! உக்ரைன் இன்னும் பல ஆண்டுகளுக்கு நேட்டோவில் இணைந்திருக்க முடியாது. இது நன்கு தெரிந்து கொண்டு தான் ரஷ்யா படை எடுத்தது. ஆனால், இது எதுவும் தெரியாத உங்கள் போன்ற நோக்கர்கள் தான் சதிக்கதைகளால் நிலவரத்தை விளக்க முனைகிறீர்கள்
  5. ஒருவரின் முகம், அடையாளம் எதுவும் தெரியாமல் (ஆனால் பல்கலையில் படித்தவர் என்பது மட்டும் தெரிந்து கொண்டு) இவ்வளவு வக்கிரம் பூசி எழுதியிருக்கிறீர்கள், ஆனால் ஒரு பகிடிக்கு நின்று பிடிக்க இயலாதவராக இருக்கிறீர்களே? மேலே நான் சொல்லியிருக்கும் காரணங்கள் சார்ந்து என்ன சொல்கிறீர்கள்?
  6. உங்கள் முதல் பந்தி உங்கள் வழமையான கோபத் தாக்குதல், உங்கள் அடிப்படை மன நிலையின் பிரதிபலிப்பு, எனவே நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்👍 விடயத்திற்கு வாருங்கள்: அமெரிக்காவில் ஏன் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் நிகழ்கின்றன என்ற துல்லியமான பின்னணியை ரஞ்சித் உட்பட மேலே மூவர் எழுயிருக்கின்றனர். இதில் உக்ரைன் போரை யார் கொண்டு வந்தது? அது எப்படி அமெரிக்காவின் துப்பாக்கிப் பிரச்சினயை விளக்குகிறது? உணவுத் தட்டுப்பாடு, ரஷ்யா உக்ரைன் என்ற பிரதான தானிய ஏற்றுமதி செய்யும் நாட்டை ஆக்கிரமித்து, தெற்கில் இருக்கும் துறைமுகங்களை தடுத்ததால் ஏற்பட்டது. அப்ப, ரஷ்யா பஞ்சம் வர வைக்க முயன்றது என்றல்லவா சாதாரணமாக யோசிப்பில் தெரிகிறது? இதை எப்படி அமெரிக்கா செய்தது என்கிறீர்கள்? இன்னொரு பக்கம், இப்போது ஆபிரிக்காவிற்கு அமெரிக்கா தானிய ஏற்றுமதி செய்யவில்லை என்கிறீர்களா? அமெரிக்காவின் நீட்டரிசி (long grain rice) மேற்கு ஆபிரிக்காவிற்கு USDA ஊடாக ஏற்றுமதி ஆகிறதே? ஆனால், அதில் அமெரிக்காவிற்கு இலாபமில்லை, எங்கள் வரிப்பணத்தில் ஒரு உதவியாகத் தான் போகிறது. இந்த நிலையில், எப்படி அமெரிக்காவிற்கு ஆப்ரிக்கப் பஞ்சம் உதவும் என நினைக்கிறீர்கள்?
  7. எப்போதும் தமிழன், இப்ப புட்டினை இழுத்ததால் கோபமா அல்லது எங்களுக்கு விளங்கவில்லையென்ற கோபமா?😎 உக்ரைன் ரஷ்யா மோதலுக்கு சிம்பிளாக கண் முன்னால் முழுசிக்கொண்டிருக்கும் காரணம் என்ன?: 1. உக்ரைன் நேட்டோவில் சேர முனைந்தது (நேட்டோ உக்ரைனின் உள்ளக அரசியல் சீராகும் வரை சேர்த்திருக்காது என்பது வேறு கதை!) 2. ரஷ்யா சேராதே என்றது. 3. உக்ரைன் மசியவில்லை. 4. ரஷ்யா படையெடுத்தது. 5. மேற்கும் நேட்டோவும் ரஷ்யாவின் சண்டித்தனத்திற்கு முடிவுகட்ட வேண்டுமென்று உக்ரைனை ஆதரிக்கின்றன (மறைமுகமாக ஏனைய உடனே சேரக் கூடிய நாடுகளைநேட்டோவில் இணைத்தும் கொண்டன). சரி பிழைகளுக்கப்பால், இந்தக் காரண காரியத் தொடர்பை மறுக்க முடியுமா? இதை விட்டு விட்டு தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் சதிக்கதைகளால் பலன் என்ன? குறைந்த பட்சம் நடக்கும் சம்பவங்களாவது இக்கதைகளை ஆதரிக்கின்றனவா? எப்படி? அமெரிக்கா எப்படி சோவியத் ரஷ்யாவை உடைத்தது? ஒருக்கா விளக்குங்கோவன்?
  8. ம்..உணவுப் பஞ்சம் நாடிய போர்! அப்ப இங்க பலர் சொல்வது போல நேட்டோவை வளர்க்கிற அமெரிக்காவின் உள்நோக்கமும், ரஷ்யாவின் வளங்களைச் சூறையாடுகிற கபட நோக்கமும் உக்ரைன் ரஷ்யா போரின் நோக்கங்களில்லைப் போல! நாளுக்கொரு காரணம் சொல்லி , புட்டினை ஏதோ மட்டி மடையனாகக் காட்டி கடைசியில அந்தாளும் ஈழத்தமிழரைக் கைகழுவி விடப்போகுது!😂
  9. இது அமெரிக்காவின் நவீன வரலாறும் ஆட்சி முறையும் பற்றி நீங்கள் அறியாததால் வந்த கருத்து. 1994 முதல் 2004 வரை இராணுவம் பாவிக்கும் தாக்குதல் (assault) துப்பாக்கிகளை சிவிலியன்களுக்கு விற்காமல் தடுக்கும் சட்டம் இருந்தது. "10 ஆண்டுகள் தடை" என்று கிளின்டன் அரசின் காலத்தில் கொண்டு வரப்பட்ட தடை, புஷ் ஆட்சியில் இருந்த போது காங்கிரசினால் புதுப்பிக்கப் படவில்லை. 2012 இல் மீண்டும் ஒபாமா அரசு முயற்சி செய்த போது சிவப்புக் கட்சியினர் NRA இன் காசை வாங்கிக் கொண்டு ஒத்துழைக்க மறுத்தனர். ஆனால், காலம் மாறி வருகிறது. இப்போது NRA இனை விட நிதி, சமூக ஊடுருவல் பலம் கொண்ட சில துப்பாக்கிக் கலாச்சார எதிர்ப்பு அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. NRA, அதன் தலைமையில் இருந்தவரின் ஊழலால் அடிபட்டு நொந்து போய் இருக்கிறது என்பதும் இன்னொரு நல்ல செய்தி!
  10. நல்லது! இனி அப்படியே சரியாத எழுத்துகளில் இருப்பதையும் வாசித்து விடுங்கள்!
  11. ட்ரம்ப் உட்பட்ட சிவப்புக் கட்சிக் காரர்கள் அனைவருமே இந்த gun lobby எனப்படும் NRA இன் பணத்தை வாங்கிக் கொண்டு துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை காங்கிரசில் நிறைவேற்ற விடாமல் செய்துவரும் பேர்வழிகள். "குழந்தைகளின் உயிரா அல்லது கொடுக்கும் பணமா?" என்று வரும் போது பணமே என்று நிலையெடுத்து விட்டு, மற்றப்பக்கம் வலதுசாரிக் கிறிஸ்தவ வாக்காளர்களிடம் "கருக்கலைப்பு என்பது மனிதக் கொலை, அதைத் தடுக்க சிவப்பிற்கு வாக்களியுங்கள்" என்று கேட்கும் மூன்றாம் உலக நாட்டு லெவெல் அரசியல் வாதிகள்! இதை ஆழமாக விளங்கிக் கொள்ளும் அளவுக்கு அமெரிக்காவுக்கு வெளியே வாழும் சில யாழ் கள உறவுகள் இல்லையென நினைக்கிறேன்!
  12. இணைப்பிற்கு நன்றி! இந்த கலைப்படைப்புகள் திருட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த ஒரு நாசி, ஹேர்மன் கோறிங். தனது காலமான மனைவியின் நினைவாக Carinhall என்ற ஒரு மாளிகையை ஒரு விஸ்தாரமான காட்டுப் பகுதியில் கட்டிய கோறிங், ஐரோப்பிய நாடுகளில் நாசி ஆக்கிரமிப்பின் போது திருடிய பல கலைப்படைப்புகளால் அந்த மாளிகையை அலங்கரித்தார். இடையிடையே ஹிற்லருக்கும் வழங்கினார்.
  13. கருத்திற்கு நன்றி! ஆனால், இது மொழிபெயர்ப்பல்ல, தொகுப்பு (synthesis) என்பதே சரி (தரப்பட்ட மூலங்களை வாசித்து நீங்களே புரிந்து கொள்ளலாம்!). உங்கள் கேள்விக்கான பதில் சில பாகங்களில் சரிவெழுத்துகளால் தரப்பட்டிருக்கிறது. அவை நுனியிலும் அடியிலும் இல்லை, நடுவில் இருக்கின்றன.
  14. செயற்கை முறைக் கருத்தரித்தல் (IVF) உரிய கட்டுப்பாடுகளின்றி பிசினசாக நடக்கும் போது ஏற்படும் இன்னொரு அநியாயம், பயன்படுத்தப் படாத முளையங்கள் (embryo) வீசப்படுவது. ஒன்றுக்கு மேற்பட்ட முட்டையோடு விந்தணுக்களைச் சேர்த்துத் தான் செயற்கை முறையில் வளர்ப்பர். கருக்கட்டப் பட்ட 4 முட்டைகளில் சில சமயங்களில் 1 வளரும், சில சமயம் 4 உம் வளரும். ஒன்றைத் தான் தாயின் கருவறையில் பதிப்பர். எஞ்சியவற்றை என்ன செய்வது என்பதை சட்டம் தீர்மானிக்க வேண்டும். சட்டம் இல்லையெனில், மேலதிக முளையங்களுக்கு என்ன நடக்கிறதென பிசினஸ் செய்பவரைத் தவிர யாருக்கும் தெரியாது!
  15. நொச்சி, நன்றி வாசித்துக் கருத்துப் பகிர்ந்தமைக்கு. 1. இறையாண்மை, தெளிவான பௌதீக எல்லை என்பன கொண்ட நாடுகள் யுத்தம் முடிந்த பின்னர் முன்னோக்கி நகர்வது இலகுவானது. இதில் தோல்வி கண்ட நாடு முன்னோக்கி நகர அந்த நாட்டின் ஒருமித்த தேசிய அடையாளம் (national identity) பலமாக இருந்தால் முன்னோக்கி நகர்வது இன்னும் இலகு. உதாரணம் ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி. 2. ஆனால், இப்படி ஒருமித்த அடையாளம் இல்லா விட்டால் இறையாண்மை கொண்ட நாடுகள் கூட சிதைந்து போகும்: உதாரணம், ஈராக் (சுனி, ஷியா, குர்து, கிறிஸ்தவர்), லிபியா (லிபிய தேசிய அடையாளம் என்ற ஒன்று இல்லை), ஆப்கானிஸ்தான் (தாஜிக், பஷ்ரூன், இன்ன பிற அடையாளங்கள், ஆப்கான் தேசிய அடையாளம் மிகவும் நொய்மையானது!). 3. இப்ப, எங்கள் பிரச்சினை சட்டரீதியாக (de jure) தமிழர் தரப்பு இறையாண்மை கொண்ட நாடாக இருக்கவில்லை, எனவே எல்லோருக்கும் அது உள் நாட்டு யுத்தம். உள் நாட்டு யுத்தத்தில் வெல்லும் தரப்பின் மனநிலை தான் தோற்ற தரப்பின் முன்னோக்கிய நகர்வைத் தீர்மானிக்கும். சிங்கள மனநிலை என்னவென்று நான் விளக்க வேண்டியதில்லை, எனவே முட்டுப் பட்டு நிற்கிறோம். ஆனால், நாம் சர்வதேசத்தை எதிர்பார்ப்பதற்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து விட்டா சர்வதேசத்தின் முகத்தைப் பார்க்கிறோம்? இல்லையென்று தான் நினைக்கிறேன். உதாரணமாக: ஈழத்தமிழருக்கு இப்போது தேவையான 5 விடயங்களை, ஒரு முக்கியத்துவ (priority)அடிப்படையிலான பட்டியலாக ஈழத்தில் இருக்கும் தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒருமித்து தயாரித்திருக்கின்றனவா? அந்தப் பட்டியலோடு, சிங்களவரிடம் பேசப் போயிருக்கின்றனரா? எங்கள் தரப்பிலிருக்கும் இந்தப் பெரிய ஓட்டையை சாமான்யன் நானே அடையாளம் கண்டு கொண்டிருக்கும் போது, சிங்களவருக்கும், சர்வதேசத்திற்கும் இது தெரியாமலிருக்குமா?
  16. அபிலாஷுடைய சில உடல்நலம் தொடர்பான தகவல்களை சும்மா இணையத் தேடலில் எடுப்பார் போலிருக்கிறது, அவ்வளவு அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் தொப்பை என்பது வெறும் கொழுப்பு மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வயிற்றின் மூன்று பிரதான தசைகள் தொய்ந்து போகும் அதே நேரம், வயிற்றறையினுள் கொழுப்புப் படிவதால் தான் தொப்பை உருவாகிறது. எனவே, கொழுப்புக் குறைக்கும் உடற்பயிற்சிகள், உணவால் மட்டும் தொப்பை குறையாது. இவற்றோடு, வயிற்றுத் தசையைப் பலமாக்கும் abdominal crunch போன்ற பயிற்சிகளும் செய்தால் தான் தொப்பை குறையும். இதைச் செய்யாவிட்டால், கொழுப்புக் குறையும், ஆனால் தொய்ந்த வயிறு பின்னே போகாது. மேலும், இடுப்பின் கீழ், தொடைகளில் தேங்கும் கொழுப்பை விட, வயிற்றறையில் தேங்கும் கொழுப்பு உடல்நலத்திற்கு ஆபத்தானது. எனவே, வயிற்றுக் கொழுப்பைக் குறைக்காமல் நீரிழிவு, இதய நோய்கள் என்பவற்றிலிருந்து பாதுகாப்பது கடினம். https://www.health.harvard.edu/staying-healthy/abdominal-fat-and-what-to-do-about-it
  17. அமெரிக்கா, ஐரோப்பாவை விடுவம், அவர்கள் ஏற்கனவே ஐ.நா வழியாக ஏதோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த மியன்மார் இராணுவமும், பௌத்த குருக்களும் சேர்ந்து அகதிகளாக்கிய றொகிங்கியா மக்களை "காணி பிடிக்க அலையும் மக்கள்" என்று நக்கலடித்த ஆக்களும் எங்களிடையே இருக்கீனம்! இந்த லட்சணத்தில், தமிழர் இனப்படுகொலையை அமெரிக்கா கேக்க வேணும், ஐ.நா தட்டிக் கேட்க வேணுமென்ற அழுகையை யாராவது கேட்பார்களா?
  18. ஓம், வெளியே போகாமல், போனாலும் சூரிய ஒளி பெரிதும் படாமல் இருத்தல் ஒரு பிரச்சினை. ஆனால், அதை விட முக்கியமான பிரச்சினை: தோலின் கருமை நிறம். சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர், தோலின் மேற்பரப்பை ஊடுருவினால் தான் விற்றமின் டி உருவாகும். இது வெள்ளைக் காரர்களில் இலகுவாக நிகழும், கறுப்பு, பிறவுண் தோல்களில் ஊடுருவல் கடினம். ஆனால், புற ஊதாக்கதிர் வெள்ளைக்காரர்களின் தோலில் இலகுவாக தோல் (melanoma) புற்று நோயை உருவாக்கும், கருமை கொண்ட தோலுடைய எமக்கு இந்த ஆபத்துக் குறைவு!
  19. யூ ரியூப்பினால் எனக்கு நன்மை எப்பவாவது வீட்டில் சிறு திருத்த வேலைகள் செய்ய வேண்டியிருந்தால் அதை உரிய நிபுணர் எப்படி செய்கிறாரென்று பார்த்து விடுவது. மற்றது வடிவேல் பகிடி பார்ப்பது. தீமை? எனக்கல்ல தனிப்பட, ஆனால் ஒட்டு மொத்தமாக சமுதாயத்திற்கு. உதாரணமாக நேற்று "ஜப்பானில் குறையாக உருவான மனித குழந்தைகளை உணவாகச் சாப்பிடுகிறார்கள்"😎 என ஒருவர் யூ ரியூபில் பார்த்த பின்னர் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் நம்பும் ஆட்களை உருவாக்கி, இன்று எந்தக் குப்பையைப் போட்டாலும் நம்பும் ஒரு முட்டாப்பீஸ் சமுதாயத்தை உருவாக்கிய பெருமை யூ ரியுப்பிற்கே உரித்தானது!
  20. இறுதியில் இது ஒரு பணம் பார்க்கும் வியாபார உத்தியாகத் தான் பயன்படுமென நினைக்கிறேன். ஏவுகணை விற்கும் இஸ்றேல், ஏவுகணையை தடுக்கும் தொழில்நுட்பத்தை எதிர் தரப்பிற்கு விற்பது போல, இந்த வகையான தொழில்நுட்பத்தை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யாது தடுக்கும் நுட்பத்தையும் கல்வி நிலையங்களுக்கு விற்க ஒரு கம்பனி கிளம்பும்! லொக்டவுண் பிறவுசர் போல ஒரு தயாரிப்பு வரலாம் விரைவில். ஆனால், Open AI போன்ற செயற்கை அறிவுத் தயாரிப்புகளால், அறிவுச் சோம்பேறிகள் அதிகம் உருவாவர் என நினைக்கிறேன். ஏற்கனவே யூ ரியூப்பில் வருபவன் சொன்னால் வேதமென்று இருக்கும் ஆட்களுக்கு, இனி இது தான் கைத்தடி. சமூகம் இன்னொரு 10 வருடத்தில் இதன் விளைவை உணரக் கூடும்!
  21. ஆனால், நின்ற நிலையில் மாடு 30 லீற்றர் கறக்க புண்ணாக்கு (ஓம், புண்ணாக்குத் தான்!😎) மற்றும் மாட்டின் ரகம் (breed) காரணம். உதாரணம், ஜேர்சி மாடு, பிறீசியன் மாடு இரண்டும் நல்ல கறவை மாடு. ஆனால், ஜேர்சி மாட்டை வன்னியில புல்லு மட்டும் மேய விட்டால் அது 3 லீற்றர் தான் கறக்கும். அம்பேவலவில உள்ள கட்டி வைச்சு புண்ணாக்குப் போட்டால் 20 கறக்கும்! விளங்கி விட்டுதே இப்ப புண்ணாக்கின் மகிமை😎?
  22. நீங்கள் சொல்வது சராசரி வயது. வீச்சு (range) என்னவென்று பார்த்தால் 8 வயது, இருந்திருக்கும். பருவமடையும் வயதை பல நாடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் தான் அளக்கவே ஆரம்பித்தார்கள், ஒரு ஆரோக்கியக் குறிகாட்டியாக. பி.கு: கடைசிப் பல்லான "ஞானப்பல்" முளைக்கும் வயது முதல், பருவமடையும் வயதும் கூட ஆதிகாலத்தில் தற்போதிருப்பதை விடக் குறைவாக இருந்திருப்பதாக தொல்லியல் சான்றுகள் சொல்கின்றன. ஏன்? ஆதிகாலத்தில் ஆயுட்காலம் குறைவு, உடனே பருவமடைந்து, பிள்ளை பெற்று, பெண்கள் இறந்தும் போவார்கள்.
  23. அஞ்சலிகள்! வடக்கு கிழக்கு போர் நிலவரங்களை காய்தல் உவத்தலில்லாமல் பி.பி.சி வழியாக உலகம் அறியச் செய்தவர். இவர் போன்ற ஊடகவியலாளர்கள் இப்போது தமிழூடகப் பரப்பில் அருகி வருகிறார்கள்!
  24. தாய் பூப்பெய்திய வயதை நெருங்கியதாக மகள்மாரின் பூப்பெய்தும் வயதும் இருக்கும். இந்தப் பரம்பரை தான் பெருமளவு பூப்பெய்தும் வயதைத் தீர்மானிக்கும் ஒற்றைக் காரணி! ஏனைய காரணிகளெல்லாம் இதன் பின்னர் தான்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.