Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. சுமந்திரனின் ரணில் துதி பாடல் அவசியமற்றது. ஆனால், ☝️இது உண்மை தானே? "இப்போது 2005 தேர்தல் பகிஷ்கரிப்பை நினைத்து வருத்தப் படுவர் என நினைக்கிறேன்" என்பதைத் தான் இன்னொரு திரியில் "உளப்பூர்வமாக தவறென்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் மக்கள்" என்று அப்படியே ஒரு stretch கொடுத்து @Sasi_varnam எழுதியிருந்தார்! இப்படி, உரைகளையும், செய்திகளையும் "பரோட்டா மாவு" போல இழுத்தே பல கதையாடல்கள் இங்கே நடக்கின்றன. உண்மையான சம்பவங்களும், அதில் இருந்து பெறக்கூடிய படிப்பினைகளும் இந்த திரிப்புகளில் மறைந்து போகின்றன. இன்னும் 20 வருடங்கள் இது தான் நடக்கும் என நினைக்கிறேன்😎.
  2. ஒவ்வொரு உறுப்பின் கல்லும் உருவாகும் காரணங்கள் வெவ்வேறானவை. சிறு நீரகக் கல் உருவாகும் காரணங்கள் சிறு நீரைச் செறிவடைய வைக்கும் காரணிகளாக இருக்கும். உமிழ் நீர் சுரப்பிகளில் வெளியேறும் வழி அடைக்கப் படுவதால் கல் உருவாகலாம். பித்தக் கல், பித்தம் வெளியேற இயலாமல் தேங்கி, செறிவாகி விடும் போது ஏற்படும். தடுப்பு முறைகள் ஒவ்வொன்றுக்கும் வேறு வேறாக இருக்கும். சிலருக்கு பிறப்பு வாசி என்று சொல்லக் கூடிய genetics இனால் ஏனையோரை விட கல் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
  3. ஏவாளுக்கு தொப்புள் (belly button) இல்லாதது போலவே, மோடி ஜீக்கும் தொப்புள் இருக்காதென நினைக்கிறேன்😂. கொசுறு தகவல்: "வானில் இருந்து குதித்த நீலக்கண் தேவதையான" கரோலினா குர்க்கோவா என்ற அழகிக்கும் தொப்புள் இல்லை என்கிறார்கள்!
  4. இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும். 2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா?) ஒரு பேட்டியின் போது "சுமந்திரனுக்கு விழும் வாக்குகள் தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிரான வாக்குகளாக இருக்கும்" என்ற தொனியில் பேசியிருந்தார். சுமந்திரனுக்கு வெல்லப் போதுமான வாக்குகள் விழுந்தன, அவர் இப்போதும் பா.உ ஆக இருக்கிறார். எனவே "தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிராக ஆயிரக்கணக்கான மக்கள் யாழ் மாவட்டத்தில் இருக்கிறார்கள்" என்று தமிழரின் எதிரிகளான எவரும் நிறுவவில்லை - தமிழ் தேசியரான காக்கா அண்ணாவே தன் கருத்து மூலம் நிறுவினார். (அதே தேர்தலில் சுமந்திரனை விட அதிக வாக்குகள் தமிழ் தேசியமே பேசாத மகிந்தவின் அணியின் அங்கஜனுக்கு கிடைத்தன என்பதும் ஒரு கவனிக்க வேண்டிய தகவல்!). மேல் தகவலை நான் நினைவூட்டுவதன் காரணம்: தீவிரமான கண்ணாடியூடாக சாதாரண விடயங்களை பெரிதாக்கிப் பார்த்து, அதனாலேயே மக்களின் மன நிலையை தவறாகப் புரிந்து கொள்வதும், அவர்களை வையப் போய், பின்னர் அவர்கள் "இந்த தீவிரப் பார்வை எமக்கு வேண்டாம்" என்று விலகி நடப்பதும் எங்களுக்கு நன்மை செய்யாது. தமிழ் தேசிய உணர்விற்கும், வெசாக் கூடு பார்க்க ஒரு இரவு மக்கள் உலவுவதற்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பொழுது போக்கு, அவ்வளவு தான். இதே மக்களிடமிருந்து தான், நியாயமான கோரிக்கைகளான அரசியல் கைதிகள் விடுதலை, காணி ஆக்கிரமிப்பு நீக்கம், போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டியும் இருக்கும் என்பதை மக்களைத் திட்டும் போது நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படி நினைக்காமல், சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் தாக்கினால், அடுத்த தலைமுறையில் "தமிழ் தேசியம்" என்று வாய் திறந்தாலே ஊரில் அடி தான் விழும்.
  5. வாதவூரான், குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்!
  6. அமெரிக்கன் வியற்நாமில் கொன்றான், ஐரோப்பியன் அதற்கு முன் அவுசிலும், அமெரிக்காவிலும் கொன்றான், எனவே நாம் சதாமையும், கடாபியையும், இப்ப றைசியையும் மனிதாபிகள் றேஞ்சுக்கு வைத்துக் கும்பிட வேண்டுமென்ற புளித்துப் போன வாதம் பல காலமாய் பரவி வருவது தான். இரண்டு தரப்பையும் நேர்மையாகச் சுட்டிக் காட்டுவதில், கண்டிப்பதில் என்ன பிரச்சினை ஒரு மனிதனுக்கு இருக்க முடியும் என்கிறீர்கள்? இதை நான் செய்திருக்கிறேன் (நீங்கள் வாசித்தே இருக்க மாட்டீர்கள்), ஆனால் நீங்கள் செய்திருக்கிறீர்களா? ஆயிரக் கணக்கில் தம் மக்களையே கொன்று குவிக்கும் சர்வாதிரிகளைக் குறை சொன்னால் உங்களுக்கும், தாத்தாவுக்கும் ஏன் உங்களையே குற்றம் சொன்னது போன்ற ஆத்திரம் வருகிறதென யோசிக்கிறேன்! ஒரு பதில் தான் கிடைக்கிறது😎.
  7. ஓம், சதாமும் அவர் மச்சான் "கெமிக்கல் அலியும்" சேர்ந்து தேன் கூடு தான் வளர்த்தாய்ங்க😎! அதே போல கடாபி "நீங்கள் வந்து அடைக்கலம் புகுந்த ஜேர்மனியில்" ஒரு குண்டு வைத்து ஆட்களைக் கொன்றது அவர்களை மேலே 72 கன்னியருடன் அனுப்பி வைக்க மட்டும் தான், கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது அவருக்கு! சீரியசாக மேலும் சொல்லலாம், ஆனால் உங்கள் மெமறி பிரச்சினை சரிவரும் வரை நான் நேரம் விரயம் செய்யத் தயாரில்லை!
  8. துரோகிகளைக் கிழிச்சுத் தொங்க விட்ட வீடியோ ஏன் "கிழிச்சுக் கிழிச்சு, பிறகு வைச்சுத் தைச்சது மாதிரி😂" இருக்குது? தலைப்பிற்கேற்ற மாதிரி மாற்றி விட்டாங்களா?
  9. நீங்கள் எந்தத் தளத்தில் "ஏனைய நாடுகளோடு நல்ல நட்பைப் பேணினார்.." என்று கேட்கிறீர்களோ பார்க்கிறீர்களோ தெரியாது. இது வரை கருத்து வெளிப்படுத்திய எல்லா நாடுகளும் "ஈரானுக்கு அனுதாபங்கள்" என்று தான் சொல்லியிருக்கின்றன - இது ஒரு நாகரீகமான செயல்முறை, அவ்வளவு தான். ஆனால், ஈரான் போலவே இருக்கும் காட்டுச் சட்ட நாடுகள் (இதில் இந்தியாவும் கூட வரலாம், மலிவு எண்ணை வாங்கியதால்😎!) மட்டும் தான் "நல்லவர் வல்லவர், உலகத் தலீவரை இழந்தோம்" என்று புலம்பியிருக்கின்றன. இவை எந்த நாடுகள் என்று தேடி, ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் இயலுமை உங்களுக்கு இருக்கிறதென நம்புகிறேன்.
  10. மரண வீட்டிலும் உங்களுக்கு ஜோக் கூடிப் போய்ச்சுது😂! வெனிசுவெலாவைக் கொள்ளையடிச்சு தன் சட்டைப் பைக்குள் போட்ட நிக்கலஸ் மதுரோ, ஆப்கானின் தலிபான் (பெண்களை பள்ளிக் கூடம் போனால் கொல்கிற கூட்டத்தின்) அமைச்சர், இவை போன்றவை மனதில் நிச்சயம் நீங்கா இடம் பிடித்திருப்பார். அப்படி பிடிக்கா விட்டால் தான் அது செய்தி!
  11. துருக்கி தற்போது வெளியிட்டுள்ள தகவலின் படி, உலங்கு வானூர்தியைக் கண்டு பிடிக்க உதவும் signaling கருவி (transponder?) செயலில்லாமல் இருந்திருக்கிறது அல்லது அந்த ஏற்பாடே இல்லாமல் இருந்திருக்கிறது. ஆனால், ஈரான் துருக்கியைத் தொடர்பு கொண்டு "உலங்கு வானூர்தியின் சிக்னலைத் தேடித் தருமாறு" கேட்டிருக்கிறது. இதைப் பார்க்கையில், ஏதோ கோல்மால் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது😎!
  12. கற்பனை என்பதை விட நப்பாசை என்று சொல்லலாம்😂. இதைச் சுற்றி நடக்கும் சில விடயங்களைக் கவனியுங்கள் - போன வருடம் இருந்ததை விட தற்போது நிலை இஸ்ரேலுக்கு பாதகமாக மாறி விட்டது புலப் படும். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த ICC நீதி மன்றுக்குக் கட்டுப் படாதவை, எனவே நெரன்யாஹு அமெரிக்காவிற்கு வந்து போகலாம். ஆனால், ஏனைய 120 வரையான நாடுகள் - இவற்றுள் டசின் கணக்கான ஐரோப்பிய நாடுகள் - நெரன்யாகு இனி சாதாரணமாக வந்து போக முடியாத நிலை இருக்கும். அந்த நாட்டிற்கு வருகிறார் என்று அறிவித்தல் வந்தாலே, ஏதாவது அமைப்பு உள்ளூர் கோர்ட்டில் இந்த ஆணையைக் காட்டி வழக்குப் போடும் நிலை இருக்கிறது. அந்த நாட்டு அரசு, "ராஜதந்திர பாதுகாப்பு -diplomatic immunity இருக்கிறது" என குத்தி முறிய வேண்டிய நிலை ஏற்படும். இதை விட, இந்த நகர்வில் "நெரன்யாஹுவின் குழுவும் ஹமாஸ் தலைவர்களும்" ஒன்றே என்ற செய்தியையும் இஸ்ரேலுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு அவமான முத்திரை இஸ்ரேலுக்கு. அமெரிக்காவின் இதற்கான எதிர்வினை தீவிரமாக இல்லை. ஏன்? தேர்தல் வருகிறது. பைடன் நிர்வாகம் இதனை தீவிரமாக எதிர்த்தால், தற்போது சவர அலகு மெல்லிதாக இருக்கும் வெற்றி வாய்ப்பும் இஸ்ரேல் எதிர்ப்பு வாக்காளர்களினால் இல்லாமல் போய் விடும் ஆபத்து இருக்கிறது. இந்த இஸ்ரேல் எதிர்ப்பு வாக்காளர்கள் ட்ரம்புக்கு வாக்களிக்க மாட்டார்கள், ஆனால் வாக்களிக்கப் போகாமல் இருந்து விடுவர், அதுவே போதும் பைடன் தோற்க.
  13. விபத்தாக இருக்கலாம். அப்படியில்லா விட்டாலும் கூட ஈரான் வெளிப்படுத்தப் போவதில்லை- கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு என்பதால்! ஆனால், சில ஆச்சரியம் தரும் விடயங்கள் இருக்கின்றன. ஈரானிடம் ஆயுதங்களும், நிதியும் பெறும் ஹௌதிகள் பளபளக்கும் உலங்கு வானூர்திகள் வைத்திருக்கிறார்கள், ஒரு வீடியோவில் கொமாண்டோக்கள் போல வந்து ஒரு கப்பலைக் கைப்பற்றுகிறார்கள். ஆனால், ஈரான் 50 வருடப் பழைய உலங்குவானூர்தியை அதன் இரண்டாம் நிலைத் தலைவர் பயணம் செய்யப் பாவிக்கிறது. இன்னொரு பக்கம், ஈரானின் உள்ளூர் தொழில்நுட்பத்தில் உருவான சாஹிட் ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவுக்கு தானமாக வழங்கப் படுகிறது. அந்த தொழில் நுட்பத்தின் ஒரு துளியை எடுத்து பழைய பெல் வானூர்தியை retrofit செய்ய ஈரானால் முடியவில்லை. அதிசயமான விடயங்கள்!
  14. இதெல்லாம் எங்கே கேள்விப் பட்டீர்கள்? இலங்கையில் தேசிய அடையாள அட்டை தொலைந்தாலே, அதற்கு பொலிஸ் துண்டு எடுக்க - அதுவும் தமிழராக இருந்தால்- பிழிந்து எடுத்து விடுவார்கள். இந்த நிலையில், கடவுச் சீட்டைக் காசை விட்டெறிந்து எடுக்கிறார்களா😂?
  15. மிகச் சிறப்பான நடவடிக்கை. நெரன்யாஹுவின் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு, தனிமைப் படுத்தப் படும் நிலை வர வேண்டும். உள்நாட்டு அரசியலில் , கோத்தாவிற்குக் கொடுத்தது போல, "பதவி விலகினால், பேசாமல் இருக்க விடுகிறோம்" என்ற டீலை தீவிர வலதுசாரிகள் அல்லாத எதிர் தரப்பினர் கொடுத்து, ஆட்சியை மாற்றி, இராணுவ நடவடிக்கையை நிறுத்த வைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
  16. இது எந்த நாட்டுக்குப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் பொதுவாக முன்னரே விசா குத்த வேண்டிய சந்தப்பங்களில் அடுத்த 6 மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். சில நாடுகள், நேரடியாக தங்கள் குடிவரவுத் தளத்திலேயே கால எல்லையைத் தெரிவித்திருப்பார்கள்.
  17. நான் இந்தக் கதையில் கண்டது கில்லரின் மூலம் தலை வெட்டும் கொடூரமான முறை 1977 வரை பாவனையில் இருந்திருக்கிறது என்ற அதிர்ச்சியின் வெளிப்பாட்டைத் தான். ரெட் பன்ரி போன்ற கேஸ்களை சிறையில் வைத்துச் சாப்பாடு போடாமல் கொல்லத் தான் வேண்டும். ஆனால், அப்படிச் செய்யும் போது இன்னொரு ரெட் பன்ரியாக அரசும், சட்டத்துறையும் மாறக் கூடாதென நினைக்கிறேன். எனவே, குறைந்த வன்மம் கொண்ட, சித்திரவதை இல்லாத முறைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்தால், அரசுக்கு ஒரு moral high ground கிடைக்கும்.
  18. இது போன்ற தவறுகள் ஆசிய நாட்டுக் கடவுச் சீட்டுகளில் சாதாரணமான விடயங்கள். எனக்குத் தெரிந்த ஒருவரின் இலங்கைக் கடவுச் சீட்டில் அவரது பால் மாறிப் பதியப் பட்டிருந்ததைப் பார்த்தேன். அந்தக் கடவுச் சீட்டை அவர் தொடர்ந்து பாவித்து வந்தார். பின்னால் இருக்கும் Observations பக்கத்தில் அவரது சரியான பால் அடையாளத்தை க் குறிப்பிட்டு Immigration Controller இன் சீல் அடித்துக் கொடுத்திருந்தார்கள். ஆனால், பக்க இலக்கங்கள் மாறி அச்சிட்டிருந்தால் அதற்கு correction கொடுக்க வேண்டுமா என்பது தெரியவில்லை. RFID Chip இல் எல்லாம் பதியப் பட்டிருக்கும் இந்தக் காலத்தில் எழுத்தில் இருப்பது பெரிய விடயமல்ல. ஆனால் "ஸ்தான்" என்று முடியும் எந்தக் காட்டு நாடும் நவீன முறைகளுக்கு மதிப்பளிக்காது😂.
  19. மிகவும் தரம் குறைந்த ஒரு ஆய்வு இது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப் பட்ட இந்த BBV152 கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டோர் 1000 பேரை ஒரு வருடம் அவதானித்து சில நோய், ஆரோக்கிய நிலைமைகளை (Adverse Effects of Special Interest, AESI) பதிவு செய்திருக்கிறார்கள். ஆய்வை நடத்தியவர்களே சுட்டிக் காட்டியிருப்பது போல, இந்த நோய் நிலைமைகள் கோவாக்சினை எடுத்துக் கொள்ளாத ஒரு குழுவில் கணிக்கப் படவில்லை. உதாரணமாக, "வயிற்றுக் கோளாறுகள் (Gastrointestinal disturbances)" , தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத (அல்லது வேறு வகைத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட) குழுவில் அதேயளவு இருந்ததா? என்று கணித்திருக்க வேண்டும். இதைச் செய்வது அவ்வளவு கடினமல்ல, ஆனால் செய்து, முடிவு "வித்தியாசமில்லை" என்று வந்தால் எப்படி பேப்பர் போடுவது என்று அஞ்சி செய்யாமல் விட்டிருப்பார்களென ஊகிக்கிறேன்😂. யாரோ தரங் குறைந்த peer reviewers , கேள்வியே கேட்காமல் பிரசுரத்தை அனுமதித்திருக்கிறார்கள். வாசிக்க விரும்புவோருக்கு கீழே இணைப்பு: https://link.springer.com/article/10.1007/s40264-024-01432-6
  20. வெயிற்..வெயிற்..அங்கால முக்காடு போடச் சொல்லி வற்புறுத்தும் முஸ்லிம் ஆட்களை தட்டிக் கேட்காமல், எப்படி நீங்கள் இதை மட்டும் சுட்டிக் காட்டலாம்? இளகின இரும்பு என்பதாலா😎?
  21. அன்றாட பொருளாதாரப் பற்றாக்குறை எப்படி மூன்று கரண்டி சீனி போட்டுக் குடிக்க வைக்கிறதெனப் புரியவில்லை😂. உண்மையில், சீனியைக் குறைத்தால் வீட்டுச் செலவு குறையும். சில ஆண்டுகள் கழித்து, நீரிழிவுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துச் செலவும் குறையும். எனவே, வரவு தானேயொழிய செலவு அல்ல!
  22. தொழில் நுட்ப ரீதியான விளக்கங்களுக்கு நன்றி. நாணய நிதியத்தின் சீர் திருத்தங்கள் நன்மை தான் செய்யும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இப்படி NPP கட்சி நினைக்க வேண்டும், அப்படி நினைக்காது என்பது தான் என் அவதானிப்பும், எதிர்வுகூரலும். எனவே, நீங்கள் எழுதும் எதுவும் JVP/NPP யின் காலங்காலமாக இருந்து வரும் கொள்கைகளான வர்க்கப் போர், முதலாளித்துவ எதிர்ப்பு, மேற்கு எதிர்ப்பு, தனியார் துறை எதிர்ப்பு ஆகியவற்றை மாற்றாது. இதனால் தான் IMF இனை தங்கள் தேர்தல் வெற்றியின் பின்னர் மீளப் பேச அழைத்து 2008 இல் முறிந்த அரசு-புலிகள் பேச்சுவார்த்தைகள் போல ஆக்குவார்கள் என நினைக்கிறேன். சஜித்தை விட்டு விட்டு நான் NPP பற்றிப் பேச இன்னொரு காரணம், IMF போன்ற வெளி நிறுவனங்கள் சில கடின நிபந்தனைகளை விதிக்கும் போது, உள்ளூர் மக்களிடையே ஒரு தேசிய அலை பலம் பெறுவது வழமை. அப்படியான தேசியவாத அலையை மகிந்த தரப்பு அறுவடை செய்ய இயலாத நிலையில், JVP/NPP தான் அதன் பயனாளியாக இருக்கும். இது தான் அவர்கள் IMF இனை நேரே எதிர்க்காமல், வெல்லும் வரை பொறுத்திருக்கக் காரணம். வென்றால் நிலைமை வேறு - நிழலி சொன்னது போல "எதிர்த்தோம்" என்றும் சொல்லலாம், "எதிர்க்கவில்லை" என்றும் மழுப்பலாம். ஆனால், இதெல்லாம் ஏன் தமிழ் பொது வேட்பாளரோடு தொடர்பாகிறது என்பதே பிரதான கேள்வி: யாருக்குப் போடும் வாக்கை தமிழ் வேட்பாளர் குறைப்பார் என்பதே பிரதான கேள்வி.
  23. இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.
  24. நிச்சயமாக அப்படிச் சொல்லவில்லை: உண்மையில் "கோத்தா தாமதமாக நாணய நிதியத்தை நாடினார், அதனால் பேரிழப்பு" என்று கூட அனுர கூறியிருந்தார். இதைத் தான் மேலே குறிப்பிட்டிருந்தேன் "மக்கள் ஆணைக்கு ஏற்ப இருக்கும் IMF நிபந்தனைகளை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம்" என்பது NPP யின் தற்போதைய நிலைப்பாடு. சர்வதேச நாணய நிதியம் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்தவர்கள், மக்கள் ஆணையை விட போட்ட காசு இழக்காமல் இருக்க வேணும் என்ற கொள்கையில் அவர்கள் இயங்குவதை அறிவார்கள். NPP இனை ஆதரிக்கும் மக்கள், பெரும்பாலும் IMF இன் கசப்பு மாத்திரைகளை விழுங்க விரும்பாத மக்களாகவும் இருக்கும் போது, முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. இப்படி நாணய நிதியம் விலக வேண்டிய ஒரு நிலை வரும் போது, மேற்கின் ஏஜெண்டான ஜப்பானிடமோ, அயல் நாடான இந்தியாவிடமோ ஒரு எதிர்கால NPP அரசு போகாது. சீனா தான் சரணாகதி.
  25. உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ள இயலாத tone-deaf ஆட்கள் அல்ல யாழில் இருப்பது😂! மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் இதய நலனுக்கு ஒவ்வாதவை என்பது மருத்துவ அறிவியல் உண்மை. ஆனால், அந்த மருத்துவக் காரணங்களாலா "மாட்டிறைச்சி தடை" கேட்கிறார்கள் என்கிறீர்கள்? இங்கே இவர்கள் கேட்பது "பெரும்பான்மையாக இந்தப் பிரதேசங்களில் வாழும் இந்துக்களால் வணங்கப் படும் ஒரு விலங்கை, இந்து அல்லாதோரும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்" என்ற திணித்தல் முயற்சி. இது தான் எதிர்க்கப் பட வேண்டியது. ஒருவருக்கு தன் ஆரோக்கியம் காரணமாக மாட்டிறைச்சி சரி வரவில்லையானால் தாராளமாக அவர் தவிர்க்கலாம். ஆனால், தனக்குப் பக்கத்தில் இருப்பவனும் சாப்பிடக் கூடாதென்று சட்டம் இயற்றக் கோருவது, சாப்பாட்டை ஒரு மத நம்பிக்கைக்கேற்ப கட்டுப் படுத்தும் அவசியமற்ற திணிப்பு. இதே போன்ற தொனியில் ஒரு தீவகப் பாடசாலையில் மச்ச உணவுத் தவிர்ப்பு அறிவிப்பு வந்து நீண்ட விவாதம் இங்கே நடந்தது. அப்போதும் "சுத்தம், ஆரோக்கியம்" என்று மொட்டாக்கைப் போட்டுக் கொண்டு சந்து பொந்துக்கால் ஓடிக் களைத்து, இறுதியில் "உள்ளே கோயில் இருக்கிறது, அது தான் காரணம்" என்று பம்மினார்கள்😎.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.