-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
பனாகொட மகேஸ்வரன் (தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்??) என்பவர் தான் TEA இனை ஆரம்பித்தவர். 2024 இல் காலமானார்.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இதை சிறிலங்கா பொலிசுக்கு வக்காலத்தாகப் பார்க்காதீர்கள். இரண்டு இடங்களில் பொலிஸ் நிறுத்தும் படி கட்டளை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. மிக இலகுவான கேள்விகள்: ஏன் நிறுத்தவில்லை? தப்பி ஓட வேண்டிய தேவை என்ன இருந்தது? மரணம் துயரத்திற்குரியது தான். ஆனால், மரணத்தை விட மோசமா சார் சிங்களப் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் நிறுத்துவது? இதே போல ஒரு யாழ் பல்கலை மாணவர் சில ஆண்டுகள் முன்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்று பொலிஸ் சுட்டதும், மக்கள் கொதித்ததும் நடந்தது. லைசென்ஸ் இருந்தால் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் என்ன செய்ய வேண்டுமென்றும் தெரிய வேண்டுமல்லவா? விதியை மீறி விட்டு இனி அழுது என்ன பயன்?
-
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள்
வாய்ப் புற்று நோய்க்கு பிரதான காரணமாக வெற்றிலை, பாக்கு, புகையிலை மெல்லுதல் தெளிவாக அடையாளம் காணப் பட்டிருக்கிறது. மார்பகப் புற்று நோய் தடுப்பிற்கு வருடாந்த மார்பகப் பரிசோதனை (mammogram) மிகச் சிறந்த தடுப்பு முறை. கருப்பைவாயில் (cervix) புற்று நோய்க்கு Human Papillomavirus (HPV) என்ற வைரஸ் சில சமயங்களில் காரணமாக இருப்பதால், பெண் குழந்தைகளுக்கு பதின்ம வயதில் HPV தடுப்பூசி போட வேண்டும். இலங்கையில் இது நடைமுறையில் இருக்கிறதா தெரியவில்லை. மேற்கு நாடுகளில் HPV தடுப்பூசி ஆண், பெண் இருபாலாருக்கும் பரிந்துரைக்கப் படுகிறது. வாய் மூலப் பாலியல் (oral sex) நடவடிக்கைகளில் ஈடு பட்டால், ஆண்களில் வாய், தொண்டையில் புற்று நோய் ஏற்படவும் HPV காரணமாகலாம் என்பதால் இந்தப் பரிந்துரை.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
சுவாரசியமான பாம்புக் கதைகள்! இந்தக் கதைகளை வாசிக்கையில் 1980/85 அளவில் யாழ்ப்பாணத்தில் வசித்த நசீர் என்ற கின்னஸ் சாதனை முயற்சியாளர் நினைவுக்கு வருகிறார். நசீர் அவர்களுடைய ஒரு சாதனை முயற்சி ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் சில டசின் பாம்புகளுடன் பல நாட்கள் வசிக்கும் முயற்சி. அப்பாவுடன் சென்று நாம் பார்த்த நினைவு, இடம் நினைவில்லை. சுற்றி வரப் பல வகையான பாம்புகள் அலைந்து திரிய, கூண்டின் நடுவில் ஒரு கட்டிலில் அமர்ந்து செய்திப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். சப்பாத்து அணிந்து, நீளக் காற்சட்டையின் கீழ் பகுதியை கிளிப் மூலம் கால்களோடு இறுக்கமாகக் கட்டியிருந்தார். இல்லா விட்டால் உறங்கும் போது கால் சட்டையின் கீழ் வழியாக ஏதாவது பாம்பு உள்ளே நுழைந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு😂.
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
தாக்கியெல்லாம் பேசவில்லை. எந்த ஒரு தனிப்பட்ட கல்வி/தொழில் அடைவு நிலையும் ஒரு தனிப் பட்ட ரீதியான சாதனை தான். நாம் இது குறித்து மகிழ வேண்டும். அதுவும் உலகம் அறியாமையைப் பெருமையாகப் போற்றிக் கொண்டிருக்கும் தற்கால யுகத்தில், நிச்சயம் இவை மகிழ்ச்சிக்குரிய விடயங்கள்! என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால், ஏன் இது செய்தியாக வர வேண்டுமென்பது தான். இவரைப் போல டசின் கணக்கான விஞ்ஞான ஆய்வாளர்களை இங்கே ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். எனவே எங்கள் சமூகத்தில் இது மிகச் சாதாரணமான விடயம். இதை அறியாதோர், அல்லது அறிந்தும் "தமிழன் பெருமை" என்று வெற்றுப் பந்தாவில் இருப்போர் இந்த சாதாரண விடயங்களைச் செய்தியாக்கி, அல்பர்களாக எங்கள் சமூகத்தை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அனுமதிப் பத்திரம் இல்லாமல் லஞ்சத்தை மட்டும் நம்பி வண்டி ஓட்டியிருக்கிறார். இலங்கைப் பொலிசிடம் மேற்கு நாட்டுத் தராதரத்தை எதிர்பார்த்து (வண்டியின் பதிவைப் பார்த்து வீடு தேடி வந்து கைது செய்வார்கள் என்று) நிறுத்தாமல் சென்றிருக்கிறார். விதிகளை மீற நினைக்கும் ஏனையோருக்கு இது தான் பாடம்: விதிகளை இப்படிப் பட்ட பிரச்சினைகள் வரும் வரை மீறலாம், ஒரு விக்கினமும் இல்லை, ஆனால், இப்படி எங்காவது மாட்டுப் பட்டால் உயிரே போய் விடும்.
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
இலங்கை போன்ற நாடுகளில் அரசு மிகவும் கவனமெடுக்க வேண்டிய ஒரு விடயம் இந்த விசேட உடல் தேவையுடையோர் இயன்றளவு சுதந்திரமாக நடமாடும், பயணம் செய்யும் வசதியை உருவாக்குவது. சில அரச கட்டிடங்களில், சக்கர நாற்காலி செல்வதற்கான சாய்தளப் பாதை (ramp) கூட இல்லாமல் இருப்பதை 2016 இல் வந்த போது கவனித்தேன். இப்போது எப்படியோ தெரியாது. பஸ்களில் kneeling bus என்றொரு வகை இருக்கிறது. வயதானோர், கைத்தடியோடு வருவோர், இலகுவாக ஏறும் வகையில், ஒரு hydraulic gear மூலம் பஸ்ஸின் முன்பகுதி நிலத்தோடு பதியும் படி செய்வார்கள். ஏறும் படிகளின் கீழேயே மடிக்கப் பட்ட சக்கர நாற்காலிக்குரிய சாய்தளம் இருக்கும். இந்தப் புதிய பஸ்களில் இவை இருக்கும் என நம்புகிறேன்.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
"முந்தானை முடிச்சு" திரைப் படம முருங்கைக் காய் விடயத்தை தமிழர்களிடையே பரப்பிய மாதிரி, சிறீப்பிரியா நடித்த "நீயா" படம் இந்தச் சோடிப் பாம்பு பற்றிய கதையைப் பரப்பியது. பாம்பு, பென்குயின் போல ஒரே சோடியோடுவாழ் நாளைக் கழிக்கும் உயிரினம் அல்ல. அப்படியெல்லாம் அடித்தவரைச் சோடி அடையாளம் கண்டு வருவதானால், ஒரு சோடிகளின் படையே வர வேண்டும். அந்தளவுக்குப் பல தார மணம் செய்வது பாம்பினம். அப்படியெதுவும் நிஜத்தில் நடப்பதில்லை, திரையில் பார்த்து ரசிக்க வேண்டியது தான்!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அப்பாவிகளையும், பத்திரிகையாளர்களையும் கொன்ற டக்கியை நீங்கள் "ஜனநாயக நீரோட்டத்தில்" இணைந்தவர் என்று கருதுவதாலா இந்தக் கேள்வி😂?
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ் களத்தின் சக உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து தான் கண்டிக்கிறார்கள். உங்களுக்குச் சரியாகத் தெரியும் ஒரு கருத்து இன்னொருவருக்கு கடைந்தெடுத்த இனக் குரோதக் கருத்தாகத் தெரிந்தால் அவர் நிச்சயம் சுட்டிக் காட்ட வேண்டும். அதைத் தான் செய்திருக்கிறார்கள், "எங்கள் அங்கீகாரம் பெற்றுக் கொண்டு எழுதுங்கள்" என்று யாரும் சொல்ல வரவில்லை!
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
ஜெய்ப்பூர் அறிவிடமிருந்து ஒரு சாம்பிளுக்கு... Several Sri Lankan-born researchers and professionals hold fellowship or senior academic positions in Australia, spanning fields from the arts to health and data science. Notable examples include Dr. Amaara Raheem (2026 Forrest Creative Fellow, Edith Cowan University), Dr. Nirukshi Perera (Research Fellow at Curtin University), and Rashmika Nawaratne (Adjunct Research Fellow at La Trobe University). Key Individuals and Roles Dr. Amaara Raheem: A Sri Lankan-born artist-in-residence/researcher awarded the 2026 Forrest Research Foundation Creative Fellowship to develop a digital archive for performance art at Edith Cowan University. Dr. Niru Perera: A sociolinguist at Curtin University (PRECRU) specializing in health communication, multilingualism, and language policy, with research focusing on Sri Lankan languages in the diaspora. Rashmika Nawaratne: An AI and Data Science researcher at La Trobe University, specializing in machine learning and IoT. Chinthani Rathnayake: Postdoctoral Research Fellow at the University of Melbourne. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd முகநூல் செய்தி ஊடகத்தின் படி "Fellow" என்றால் "ஆள்கிறார்" என்று அர்த்தம்😇!
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
இலங்கையைப் பொறுத்த வரை 5 முக்கியமான விசப் பாம்புகள் இருக்கின்றன. 1. நாக பாம்பு -Cobra- பல பெயர்களால் அழைக்கப் பட்டாலும், இது ஒரே வகையான இந்திய நாக பாம்பு தான். உதாரணமாக, கருநாகம் என்பது நன்கு வயது முதிரும் போது கருமையாக மாறி விட்ட நாக பாம்பு. பற நாகம் என்பது கற்பனைப் பெயர். "பறக்கும் நாகம்" என்ற மிகைப் படுத்தலினால் உருவான கற்பனையாக இருக்கலாம். இலங்கையில் ராஜநாகம் -King Cobra என்ற இன்னொரு வகையான பாம்பும் இருக்கக் கூடும், ஆனால் நான் அங்கிருந்த காலத்தில் அறியவில்லை. ராஜநாகம், பெயரில் நாகம் இருந்தாலும் , நாக பாம்பு அல்ல! நாக பாம்பையே உணவாக உட்கொள்ளக் கூடிய 20 அடிகள் வரை வளரக் கூடிய வேறொரு இனப் பாம்பு. 2. கண்ணாடி விரியன்-Russel's viper: இது முக்கியமான புடையன் வகைப் பாம்பு. நாகத்தை விட மூர்க்கமான பாம்பு. 3. சுருட்டை விரியன்-Saw-scaled viper: இதுவும் ஒரு புடையன் பாம்பு. கண்ணாடி விரியனை விடச் சிறிதென்றாலும் விசம் கண்ணாடி விரியன் போன்றது. வன்னியில் "முத்திரைப் புடையன்" என்று பெயர் கேள்விப் பட்டிருக்கிறேன். இது கண்ணாடி விரியனைக் குறிப்பதா அல்லது சுருட்டை விரியனைக் குறிப்பதா என இன்றும் எனக்குக் குழப்பம். இந்த இரு புடையன்கள் கடித்தாலும் சிறு நீரில் இரத்தம் வெளியேறும் என்பதால், "மூத்திரப் புடையன்" என்று இரண்டுமே அழைக்கப் படுகின்றனவோ தெரியவில்லை. 4. கண்டங்கருவளை-common krait - மூர்க்கம் குறைந்த ஆனால், நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் விசம் கொண்ட பாம்பு. 5. Hump-nosed viper - இதுவும் சிறிய ஒரு புடையன் பாம்பு. உள்ளூர்ப் பெயர் கோடாலிப் பாம்பு, கோடாலிப் புடையன் என்பதாக இருக்கலாம். இதன் மூக்குப் பகுதி தெளிவாக மேல் நோக்கி வளைந்திருப்பதால் இந்தப் பெயர்.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
தாயகத்தில் நாம் சிறுவர்களாக இருக்கையில் நம்பிய பாம்புக் கதைகளை நினைத்தால் இப்போது சிரிப்புத் தான் வருகிறது. கொம்பேறி மூக்கன் விசமில்லாத பாம்பு. கூகிள் தேடலில் இந்தப் பாம்பின் ஆங்கிலப் பெயர் Bronzeback tree snake என்று வருகிறது. எல்லா வகைப் பாம்புகளும் லாவகமாக மரங்களில் ஏறுவதில்லை. கொம்பேறி மூக்கன் மரங்களில் ஏறி மரங்களிலேயே வாழக் கூடிய ஒரு பாம்பு வகை. இதையொட்டி இட்டுக் கட்டிய கற்பனைக் கதை தான், "ஆளைக் கடித்து விட்டு மரத்தில் போய் ஏறிக் கொள்ளும் கொம்பேறி மூக்கன், கடித்த ஆள் இறந்து எரிக்கப் படும் புகை தெரியும் வரை மரத்தை விட்டு இறங்காது" என்ற கதை. (இதனால், "சும்மா எதையாவது எரித்து புகை கிளப்பினால், கொம்பேறி மூக்கன் இறங்கி வரும்" என்று சில ஊர்ப் பெரிசுகள் கதையை கௌதம் மேனன் பாணியில் நீட்டித்துச் சொல்லவும் கேட்டிருக்கிறேன்). கொம்பேறி மூக்கன் பற்றிய இன்னொரு அபாண்டமான பழி, இது "ஆண் சாரைப் பாம்பு" என்ற கதை. சாரைப் பாம்பும் கொம்பேறி மூக்கனும் வெவ்வேறு இனப் பாம்புகள். சாரை (Indian rat snake) மரங்களில் வேகமாக ஏற முடியாமல் தரையில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு விசமில்லாத பாம்பு. ஆனால், இரண்டுமே மிகவும் அச்சுறுத்தப் பட்டால் ஒரு சீறல் (hissing) ஒலியை எழுப்பக் கூடியவை, கடிக்கவும் செய்யும். ஆனால், விசப் பல் இல்லாமையால் சாதாரண காயம் ஏற்படும். உயிருக்கு ஆபத்துக்கள் இல்லை.
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
இப்பிடியும் ஒண்டு போகுதா? யார் இந்த மொக்கராசு, திரு திருக்குமரன்? என்ன ஆராய்ச்சிக்கு ஹூல்கள் உதவினார்கள் என்றே தெளிவாகச் சொல்கிறார்? இவரும் பங்கு பற்றியிருப்பாரோ😂??
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
🤣 தென்கச்சி கோ சுவாமிநாதன் மாதிரி "இன்று ஒரு தகவலா? அல்லது, "இந்த எளிமையான விளக்கம் இல்லாமையால் நான் அவர்களைக் கண்டித்து விட்டேன்" என்கிறீர்களா😂? "ஐலண்ட் இஸ்லாமியர்" என்றும் திட்டுகிறார்கள். இதன் அர்த்தம் அவர் தமிழினம் அல்லாத வேற்றினம் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். பிறகெப்படி இஸ்லாமியரும் தமிழரும் ஒரே மரத்தில் இருந்து வருவதாம்? அடிப்படையான விடயம் என்னவென்றால், நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாமல் மூலைக்குள் மாட்டுப் படும் போது, இது போன்ற வசவுகள் தான் ஒரே வழி!