-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
😂அடுத்த "ஞானபீட" விருது யாருக்கு? ஜெமினி, சுனோ??
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
ட்ரம்ப் செய்கிற குறுக்காஸ் வேலைகளுக்கெல்லாம் முரட்டு முட்டுக் கொடுக்கும் ஒரு நண்பர்கள் குழு ஒன்று (அமெரிக்க இலங்கையர்கள், தமிழர்கள் தான் எல்லோரும்) இங்கே என் ஊரில் இருக்கிறது. மஸ்க் தாறு மாறாக மத்திய அரசின் வேலையாட்களை வீட்டுக்கனுப்பி குடும்பங்களை வறுமையில் தள்ளிய போது, இப்படி "ஒரு மூவாயிரம் டொலர் செக் எல்லோருக்கும் மஸ்க் அனுப்புவார்" என்று முட்டுக் கொடுத்தார்கள். தற்போது இந்த நண்பர்கள் கொடுக்கும் ஒரு முட்டு இருக்கிறது, என்ன தெரியுமா? "ட்ரம்ப் தான் ஆட்சியில் இருந்து போக முன்னர் சகல அமெரிக்கர்களுக்கும் வருமான வரியை இல்லாமலாக்கி விடுவார்" என்பது தான் அந்த முட்டு! வருமான வரி இல்லாத அமெரிக்கா😂! இதைக் கேட்டால் ட்ரம்பே அதிர்ச்சியில் போய் சேர்ந்து விடுவார்!
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
என்னுடைய இரத்த உறவினர் (அவருக்கும் எனக்கும் ஒரே "பிளட் குறூப்", அப்ப இரத்த உறவினர் தானே?) ஒருவர் வட கொரியாவின் உழைப்பாளர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரைப் றைற்றர் திருத்துபவராக இருக்கிறார். அவர் மூலம் தான் நான் தலைவன் கிம் பற்றிய சகல தகவல்களையும் பெற்று இங்கே பகிர்கிறேன் . இதை வாய் (oral) மூலம் நான் பெற்றுக் கொண்ட தகவல் என்று சொல்லக் கொஞ்சம் கூச்சமாகத் தான் கிடக்குது, என்றாலும் oral ஐ எண்டு oral தானே சொல்லலாம்😎?
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
🤣ஈலோன் மஸ்க்கும் ட்ரம்பும் டோஜி-DOGE மூலம் சிக்கனமாகச் சேமித்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தந்த மூவாயிரம் டொலர் இலாபச் செக்கே இன்னும் செலவழித்து முடியவில்லை! இதற்கிடையில் இந்த எண்ணை ஏற்றுமதி இலாபத்தையும் ட்ரம்ப் எங்களுக்குத் தந்தால், கடவுளே எங்க கொண்டே நாங்கள் காசைக் கட்டி வைக்கிறது😂?
-
உணவுமுறை, எண்ணெய் வகைகள் பற்றிய புதிய தகவல்களுடன் மருத்துவர் பிரகாஸ்மூர்த்தியுடனான உரையாடல்
இதை முன்னரும் நிழலி ஒரு தடவை கேட்டிருந்தார். மத்திய தரை (Mediterranean) நாடுகளில் ஒலிவ் எண்ணையை உணவின் மீது தெளித்து, சூடாக்காமல் பாவிப்பதால் இந்த தவறான புரிதல் என நினைக்கிறேன். சாதாரண வதக்கல் (frying), தீவிர வதக்கல் (deep frying): முட்டை பொரித்தல் அல்லது அல்லது எதையாவது கொஞ்ச எண்ணையில் வறுத்தல் போன்றவற்றிற்கு தூய ஒலிவ் எண்ணை (extra virgin olive oil) பாவிக்கலாம். எண்ணையின் smoke point ~400 F வரை இருப்பதால் கருகிய பக்க விளைவுகள் உருவாகாது. அதை விட அதிக வெப்ப நிலை வேண்டும் மீன் பொரித்தல் போன்ற தேவைகளுக்கு light-tasting olive oil என்ற ஒரு வகை இருக்கிறது. இதன் smoke point ~470 F வரை இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு. இந்தப் பாதுகாப்பிலும் திருப்தி இல்லையெனில், அவகாதோ எண்ணை பொரிக்கப் பாவிக்கலாம். இதன் smoke point ~520 F வரை இருக்கும். அதே வேளை ஒலிவ் எண்ணையின் ஆரோக்கிய அம்சங்கள் அவகாதோ எண்ணையிலும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், எங்கள் அனேக சமையல் தேவைகளுக்காக ஒலிவ் எண்ணையைச் சூடாக்கலாம்.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
ஓம், இதை நானும் கேள்விப் பட்டேன். சுவிசில் வாழ்ந்த எம் தலைவன் கிம் அந்த நாட்டுச் சொக்கலேற்றினால் அதிகம் கவரப் பட்டு, வட கொரியா வந்த பின்னரும் கூட விசேட வழிகளில் சுவிஸ் சொக்கலேற்றை வரவழைத்து அனுபவிப்பதாக அறிந்தேன்! கோவிட் காலத்தில் நாட்டை முற்றாகப் பூட்டிய வேளையில் கொரிய மக்கள் பட்டினியை எதிர் கொண்டதாக அறிந்த தலைவன் கிம் "No bread? why can't they eat chocolate?" என்று வினவியதாகவும் அறிந்தேன்😎!
-
உணவுமுறை, எண்ணெய் வகைகள் பற்றிய புதிய தகவல்களுடன் மருத்துவர் பிரகாஸ்மூர்த்தியுடனான உரையாடல்
இந்தத் தகவல்கள் "புதியவை" என்று சொல்வதை விட "விசித்திரமானவை" என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். தெற்காசியர்கள் - இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், வங்கதேசத்தினர் - வெள்ளையின மக்களையும், கிழக்காசிய மக்களையும் விட 4 மடங்கு இதய நோய் தாக்கும் ஆபத்துடையவர்கள் ! இதற்குக் காரணங்கள் அவர்களுடைய ஜீன்களிலேயே இருக்கின்றன. இரத்தம் இலகுவாகக் கட்டியாகும் நிலை (thrombosis). இரத்தக் கொழுப்பு ஆரோக்கியமற்ற நிலை (dyslipidemia). அழற்சி (inflammation) அதிகரிக்கும் நிலை ஆகிய 3 காரணிகள் இந்த 4 மடங்கு அதிகரித்த இதய நோய் வாய்ப்பின் காரணங்கள். இந்த 3 காரணிகளுள் முதலாவதைக் கட்டுப் படுத்த மாத்திரைகள் தேவைப் படலாம் (blood thinners). ஏனைய இரண்டையும் கட்டுப் படுத்த உணவும், உடற் பயிற்சியும் பயன்படுத்தலாம். 1. இரத்தக் கொழுப்பு நிலை: இதை நாம் உள்ளெடுக்கும் எண்ணையில் இருக்கும் கொழுப்பு பிரதானமாகத் தீர்மானிக்கும். தேங்காய் எண்ணை, பாம் எண்ணை என்பவற்றில் இருக்கும் நிரம்பிய கொழுப்பமிலம் இரத்தத்தின் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் காரணி. இவர் குறிப்பிடும் பாமோலின் எண்ணை கூட 50% வரை நிரம்பிய கொழுப்புக் கொண்டது. அதைச் சாதாரணமாக "விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆலோசனை சொல்வது ஆபத்தானது. 2. PUFA இனைப் பொரிக்க/வதக்கப் பாவித்தால் அதில் இருந்து புற்று நோய் உருவாக்கும் காரணிகளும், அழற்சியைக் கூட்டும் பொருட்களும் உருவாகும் என்பது உண்மை. MUFA இனைச் சூடாக்கினால் இந்த ஆபத்துக்கள் குறைவு. இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவு செய்யும் எண்ணை வகை ஒலிவ் எண்ணை: அதில் இருக்கும் கொழுப்பமிலம் பெருமளவு MUFA வகை. நிரம்பிய கொழுப்பும் குறைவு. இதை விட்டு விட்டு பாமோலின் எண்ணையை எடுத்துக் கொள்ளும் படி சொல்லும் ஆலோசனைக்கு என்ன விஞ்ஞான அடிப்படை இருக்கிறதெனத் தெரியவில்லை.
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
எல்லாவற்றையும் ஐரோப்பிய, வட அமெரிக்க தரத்திற்கே இலங்கையில் கொண்டு வரக் கூடிய இயலுமை இருக்குமாக இருந்தால், நாங்களெல்லாம் ஏன் இங்கே இருக்கிறோம்? வாகன ஓட்டிகள் திருந்த வேண்டும், அப்படித் திருந்தும் வரை சைக்கிளோடுவோர் உயிரைப் பணயம் வைத்துப் பயணிக்க வேண்டும்!
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
அது அந்தக் காலம் கந்தப்பு. அப்ப நீங்கள் சைக்கிளோடிய வீதியில் எத்தனை கார்கள், பஸ்கள், ரிப்பர்களைக் கண்டீர்கள் என்று நினைவிருக்கிறதா? 2012 இலங்கை போன போது நானும் சைக்கிள் தான் ஓடினேன், வவுனியாவில். 2016 இலும் - கொஞ்சம் ஆபத்தாகத் தெரிந்தாலும் - சைக்கிள் ஓடினேன். இந்த ஆண்டு போகிறேன், ஆனால் "சைக்கிள் ஓட முயற்சிக்காதே" என்று தான் ஆலோசனைகள் வருகின்றன! அந்தளவுக்கு வீதிகள் வாகனங்களுக்காக செம்மை செய்யப் பட்டு, ஓரங்கள் (shoulders) குறுகி சைக்கிள் ஓடுவதை ஏதோ ஆபத்தான செயல் போல மாற்றி வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் வவுனியாவில் இது தான் நிலை.
-
அரசியல் தூஷணம் - நிலாந்தன்
தமிழ் தேசிய முகமூடி அணிந்த றௌடிகளின் சேட்டைகளுக்கெல்லாம் "தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவப் போட்டி" என்ற ஒரே காரணத்தோடு வருவது நிலாந்தனுக்கே ஒரு கலர் கண்ணாடியினூடாகத் தான் எதையும் பார்க்க முடிகிறது எனக் காட்டுகிறது. அம்பிகா சற்குணநாதனை இதே போன்ற தூசணங்களால் திட்டி ஒதுங்க வைத்த போது, சுமந்திரனை அவுசில் வைத்துத் தூசணங்களால் திட்டிய போது, சும்மா ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்ப வந்து வேசம் போடும் நிலாந்தன் போன்றோர் தான் ஈழத்தமிழர்களின் "சிந்தனைத் தலைவர்கள் - thought leaders" 😎 என்றால், நமக்கு விடிவேயில்லை என்று தான் அர்த்தம்!
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
கெதியாகச் செய்யுங்கோ, கட்டாயம் சமூக வலைத்தளத்தில் எரிப்பதை வீடியோவும் போடுங்கோ! ட்ரம்ப் ரீமின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் "இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல்" என்று விசேட விசாவும் கொடுத்து, உங்களைத் தட்டி வைக்கும் படி அனுரவுக்கு அழுத்தமும் கொடுப்பார்கள்😇!
-
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
உலகின் பலம் வாய்ந்த நாட்டின் உச்ச பதவிக்கு வந்தாலும்..ஒரு பன்னாடை பன்னாடையாகவே தான் இருக்கும் என்பதற்கு தம்பு ஒரு உதாரணம்😂!
-
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்
யாழ். மத்திய கல்லூரி என்பது ஒரு வகையில் ட்ரம்ப் கூட்டம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த அமெரிக்கா போன்றது. காசுள்ளவன், இல்லாதவன், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சாதி காரணமாக ஒதுக்கப் பட்டவர்கள் என எல்லோரையும் உள் வாங்கி ஒரு மட்டத்திற்கு உயர்த்தி வெளியே விடும் கல்லூரி. இதனால் தான் குண்டு சுற்றிவர விழுந்து கொண்டிருந்த நிலையிலும், 90 களில் கல்லூரியை மூடிவிடாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் உயிரைப் பணயம் வைத்து கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள். சதீஸ்கரனைப் பற்றி: நான் அறிந்த வரை கறாரான பேர்வழி. அந்தக் காலத்தில் (~30 ஆண்டுகள் முன்பு) கொஞ்சம் முன் கோபக் காரர். ஒரு கல்லூரி மாணவர் அமைப்பில் என் கனிஷ்டராக இருந்தார். நான் உட்பட எந்த சிரேஷ்ட உறுப்பினருக்கும் சதீஸ்கரன் என்றால் ஒரு அச்சம், பணிவு😂!
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஜெயமோகனுடன் இந்த விடயத்தில் எனக்கு உடன்பாடு. அதிக புத்தகங்களை வெளியிடுவது, அதிக திரைப் படப் பாடல்களை எழுதுவது என்பன வர்த்தக வெற்றிகள். "வர்த்தக மயப்படுத்திய தமிழ்" என்ற பிரிவில் ஒரு விருது இருந்தால் அதற்கு வைரமுத்து அவர்கள் உரித்தானவர். "நவீன தமிழ் இலக்கியம்" என்ற பிரிவில் உச்ச அடைவாக வைரமுத்துவின் கவிதைகளையும் பாடல் வரிகளையும் வகைப் படுத்த இயலாது. அதிலும் குற்றஞ் சாட்டப் பட்டிருப்பது போல அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் அதை அவரே முயன்று பெற்றிருக்கிறார் எனும் போது, இது மிக மரியாதை குறைந்த ஒரு விருதாகிறது.
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
தமிழக கட்சிப் பிரமுகர்களில் எனக்கு விளங்காத விடயம்: கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொள்பவர்களுக்கு தவறாமல் இணை/துணை கொ.ப.செ பதவி கொடுத்து விடுகிறார்கள்! உடுப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒருவர் "மொடலாக" வருவது போல இதுவும் ஒரு மெக்கானிசம் போல😂!