Everything posted by ரஞ்சித்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அந்தர விஷ்ய வித்யாலய சங்கம - பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர்கள் அமைப்புக்களின் சம்மேளனம். இதன நடப்புத் தலைவர்தான் வசந்த முதலிகே. அந்தரேயின் பின்னால் நிற்பது மக்கள் விடுதலை முன்னணி. அந்த அமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவர் தமிழ் மக்களின், தமிழ் மாணவர்களின் இன்னல்களின்போது தமது அமைப்பு மெளனமாக இருந்தது உண்மைதான் என்று பி பி சி யிடம் கூறிய பேட்டி கீழே. JVP student leader admits war silence IUSF admits that it did not protest when human rights violations were committed against Tamil students but stresses it is 'not racist' The leading student body in Sri Lanka has admitted that it did not protest when human rights violations were committed against Tamil students during the long conflict between the security forces and the LTTE. The pro JVP Convenor of the Inter University Student Union (IUSF) told journalist KS Udayakumar that the biggest student union in Sri Lanka had to "keep quite" while students were abducted and killed in a period of war against "separatist terrorism". However, he stressed that the student movement in Sri Lanka was "never racist". "The situation was different then and today. There might have been human rights violations during the war and of course we had to keep silent at a time of war against a separatist terrorism. But the student movement never worked on a racist agenda," he said. In TID custody In a letter to President Mahinda Rajapaksa, the IUSF for the first time has urged the government to release a Tamil university student and other students detained in refugee camps. The situation was different then and today. There might have been human rights violations during the war and of course we had to keep silent at a time of war against a separatist terrorism. But the student movement never worked on a racist agenda IUSF convenor, Udul Premaratne It seeks immediate release of Rasaiah Dvaraka, an undergraduate at Peradeniya University. The IUSF is widely regarded as being controlled by the Janatha Vimukthi Peramuna (JVP). Many former IUSF leaders have later become JVP parliamentarians and activists. The IUSF also calls on the authorities to release all other school and university students currently in camps for internally displaced people (IDPs). Addressing journalists in Colombo, the IUSF convenor Udul Premaratne said the continuous detention of Tamil students might result in Tamils being pushed towards separatism once again. Udul Premaratne stressed that the IUSF will continue protests until Ms. Dvaraka, currently detained by police Terrorism Investigation Division (TID), released. மக்கள் விடுதலை முன்னணி எனும் பூனையின் பாதங்களே பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்புக்களின் சம்மேளனம் எனும் தலைப்பில் 2010 இல் வெளியான கட்டுரை. IUSF JVP's cat's-paw Disna MUDALIGE Inter University Students Federation (IUSF) is used by the JVP to regain their declining power in the country by creating an artificial and unpleasant environment in Universities, said Sri Lanka Freedom Students Organization (SLFSO) Secretary Sumudu Wijewardena. Addressing a media conference held at the Sri Lanka Foundation Institute yesterday, he noted that the intention of the IUSF powered by the JVP is to push the University administration to close the universities and to show off the international community that the country is in a severe crisis. This has become a nuisance to the university students. He also said that hardly any student from second, third and final years has joined in these violent activities of the IUSF. As a result the freshers have become innocent victims, and they are subjected to physical and mental intimidation, he explained. He also challenged the IUSF to organize a picketing or rally without first year students. "Usually most of the violent incidents are reported during the time of freshers arrival. The IUSF has been unable to gather at least 100 students without the first years. There are peaceful means to find solutions to the existing problems of students. Without clashing with the Government all the time, these can be negotiated through the administrative level. But the IUSF always chooses the most aggressive mean even for the smallest issue," he said. He also pointed out that due to disgraceful behaviour of the IUSF, an opinion in the country is emerging that the involvement of undergraduates in politics should be prohibited. "As the SLFSO we are ready to line up students against the aggressiveness of the IUSF. We try to use peaceful means in this effort. There should be a dialogue between students and administration over the existing problems. We also request to increase the Mahapola scholarship to Rs 3,000 considering the present situation," he said. SLFSO Deputy Chairman Awantha Amaraweera noted that the future of the Universities will be peaceful if the necessary legal actions are taken against those who provide leadership for the students to adhere in aggressive and violent activities. SLFSO Coordinating Secretary Gihan Madushanka and Media Secretary Deshapriya Ratnayake also spoke.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
வசந்த முதலிகேயையும் மக்கள் விடுதலை முன்னணியையும் வேறு வேறாகச் சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன இங்கு. பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்புக்களின் சம்மேளனம் , சிங்களத்தில் அந்தரே என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மாணவர் அமைப்பின் பின்னால் இருப்பதே மக்கள் விடுதலை முன்னணி தான். சரி, விடயத்திற்கு வரலாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான போராட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டு வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்தார், சரி. இன்று நடப்பது அவரது மாணவர் அமைப்பின் பின்னால் இருக்கும் அரசுதானே? ஏன் நேரடியாக அரசிடமே இதனை நீக்குங்கள் என்று அவர் கேட்கக் கூடாது? ஆக, அவர் அன்றைக்கு வந்தது மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் செயற்படும் தனது அமைப்பிற்கெதிராக ரணிலும், ராஜபக்சேக்களும் எடுத்த நடவடிக்கைகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காகத்தான். ஆனால் இன்றோ நிலைமை வேறு, தனது கட்சியே ஆட்சியில் இருக்கிறது, ஆகவே தடைச் சட்டத்தை நீக்கவேண்டிய தேவை அவருக்கில்லை, ஆகவே அவர் அதுகுறித்து இனிமேல் பேசபோவதுமில்லை. அடுத்தது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் "உங்களின் பிரச்சினை வேறு எங்களின் பிரச்சினை வேறு" என்று கூறினார்களாம். சரி, தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று இன்றுவரை கூறும் கட்சியின் பின்புலத்தில் செயற்படும் வசந்தவிடம் வேறு எதைத்தான் யாழ் மாணவர்கள் கூறுவது? இவ்வளவு காலமும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பேரினவாதிகளிடம் அடிபடும் பொழுது இவரோ, இவரது அமைப்போ அல்லது பின்னால் நின்று இயக்கும் கட்சியோ என்ன செய்தது? ஆக தமக்கு அடிவிழும்போது, தம்மீது தடைச் சட்டம் பாயும்போது தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அடையாளம் துறந்து இலங்கையர்களாக மாறுவோம், சிங்களத் தேசியத்திற்குள் இணைவோம் என்று கூப்பாடு போடுவோர் தாங்கள் தமிழர் இல்லை, தமக்கென்று தனித்துவமான அடையாளம் இல்லை, தமக்கென்று தனியான கலாசாரமும், தேசமும், பண்பாடும் இல்லை என்று வெளிப்படையாக இங்கே கூறிவிட்டு அதனைச் செய்யட்டும், மீதியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சிறு திருத்தம். அவர்கள் பயங்கரவாதச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் என்று கூறவில்லை. பயன்படுத்தப்படாத சட்டத்தினை வைத்திருப்பதில் என்னபயன், அதனை நீக்கிவிடலாமே என்று ஏன் எவரும் இதுவரை கேட்கவில்லை? அதாவது சட்டம் நீக்கப்படப்போவதில்லையென்பதனூடாக, அவ்வபோது பாவிக்கப்படப்போகிறது என்பதை நாம் ஊகித்துக்கொள்ளலாம். இச்சட்டத்தினை ஊடகவியலாளர்களுக்கெதிராகவும், செயற்பாட்டாளர்களுக்கெதிராகவும் பயன்படுத்துவதையே எதிர்க்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதாவது சட்டம் நீக்கப்படப்போவதுமில்லை, பாவிக்கப்படாமல் இருக்கப்போவதுமில்லை என்பதுதான் உண்மை.
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தமிழர்களுக்கான நிர்வாகச் சுதந்திரம் அவர்களின் கைகளுக்கு வரும்போது அவர்களின் பொருளாதாரச் சுதந்திரமும், தன்னிறைவுப் பொருளாதாரமும் அவர்களின் கைகளுக்குத் தானாக வந்துவிடும். அப்படி வரக்கூடாது, தமிழர்கள் தெற்கையே எல்லாவற்றிற்கும் தங்கியிருக்க வேண்டும் என்ற சிங்களப் பேரினவாதத்தின் கொள்கையின்படியே இவை யாவும் நடந்துவருகின்றன. தமிழர்களை பொருளாதாரத்தில் நலிந்தவர்களாக மாற்றி, பேரினவாதத்தின் கொடுங்கரங்களில் இருந்து தமக்கு ஏதாவது பிச்சை கிடைக்காதா எனும் ஏங்கும் நிலை திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்று அநுர எனும் சிங்கள இனவாதிக்குக் காவடி தூக்கும் சில சந்தர்ப்பவாதிகள் இதனை நன்கு உணர்ந்துகொண்டே பின்னால் செல்கின்றனர். அவர்களைப்பொறுத்தவரையில் அவர்களது இலாபம் முக்கியம், இதில் மகிந்த ஆட்சியில் இருந்தாலென்ன, அநுர இருந்தாலென்ன, அவர்களுக்கு வித்தியாசம் இல்லை.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்பாகப் பேசுவோரும் புலநாய்வுத்துறையினரால் இன்றுவரை அச்சுருத்தப்பட்டே வருகின்றனர். அப்படியான ஒருவர்தான் பவநேசன். தமிழர் தாயகத்தின் அனைத்து மூலைகளுக்கும் (எல்லையோரக் கிராமங்கள் உட்பட) சென்று காணொளிகளைப் பதிவிடுவது, ஊரவர்களுடன் பேசுவது, முன்னைய காலங்களுக்கும் இன்றிருக்கும் நிலைமைகளுக்குமான வித்தியாசத்தினை மக்களிடமிருந்தே கேட்டு அறிவது, சிறுவர்களுடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வது என்பது இவரது வழமை. இவரை அண்மைக்காலமாக எல்லையோரக் கிராமங்களுக்குச் செல்வதையோ, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிவுற்றிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதையோ செய்யவேண்டாம் என்று வீட்டிற்கு வந்த புலநாய்வுத்துறையினர் அச்சுருத்தியிருந்தனர். இதன் பின்னர் அவர் அவ்வாறான காணொளிகளை வெளியிடுவதை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்குள் இருக்கும் சில ஊர்களுக்குச் சென்று வரத் தொடங்கினார். இதனையும் செய்யவேண்டாம் என்று மீண்டும் புலநாய்வுத்துறையினர் இவரது வீட்டிற்குச் சென்று அச்சுருத்தியிருந்தனர். அநுர ஆட்சிக்கு வந்தபின்னர் அவரது ஆட்சியில் நடக்கும் நல்ல விடயங்கள் குறித்தும், தமிழர்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் என்றும் அடிக்கடி இப்போது பேசிவரும் நிலையில் நேற்றைய முந்தினம் அவரை உடனடியாக யாழ்ப்பாணம் புலநாய்வுத்துறை அலுவலகத்திற்கு வந்து தமக்கு விளக்கம் தருமாறு கோரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இவர் மாவீரர் தினம் குறித்தோ, தலைவரின் பிறந்த தினம் குறித்தோ ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதுதான் உண்மை. ஆக மகிந்த - கோத்தா ஆட்சிக்கும் சந்தர்ப்பவாதத் தமிழர்கள் கடவுளாகப் போசிக்கும் அநுரவிற்கும் இடையே தமிழர் நலன் என்று வரும்போது வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அப்படியென்றால் அநுரவையும் அவனது கூட்டத்தையும் எதற்காக சிலர் வராது வந்த மாமணியாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வங்காலையில் குருவானவர் மேரி பஸ்ட்டியானைச் சுட்டுக் கொன்று, உடலருகில் ஆயுதங்களைப் பரவிப் புகப்படம் எடுத்து, பின்னர் உடலைக் காணாமலாக்கிய சிங்கள இராணுவம் மன்னாரில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவக் காடையர்கள் நடத்திய இரண்டாவது படுகொலை தை மாதம் 5 ஆம் திகதி வங்காலையில் இடம்பெற்றது. வங்காலை புனித ஆன் தேவாலயத்தின் பங்குக் குருவானவர் மேரி பஸ்ட்டியானும் கூடவிருந்த இன்னும் எட்டுத் தமிழ் மக்களும் அன்றிரவு சிங்கள இராணுவக் காடையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை குறித்த அறிக்கையொன்றினை தைமாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் வெளியிட்ட ஆயர்களின் தலைவரும், சிலாபம் மறைமாவட்டத்தில் ஆயருமான மார்க்கஸ் பெர்ணான்டோ, 38 வயதான குருவானவர் மேரி பஸ்ட்டியான் தனது பங்கு அறையினுள் இருந்தவேளை அங்கு சென்ற இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறினார். தேவாலயம் ஒன்றினுள் தனது மதப் பணிகளை ஆற்றிவந்த குருவானவர் மீது வேண்டுமென்றே இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொலை என்று இதனை அவர் வர்ணித்திருந்தார். மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் தோமஸ் செளந்தரநாயகமும் இப்படுகொலையினை அறிக்கையொன்றின் ஊடாகக் கண்டித்திருந்தார். "வங்காலையில் 6 ஆம் திகதி காலை, இறைபணியாற்றிக்கொண்டிருந்த வேளை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட 38 வயதான இளங்குரு மேரி பஸ்ட்டியான் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது. ஆனால், தகவல் வழங்கும் திணைக்களத்தினூடாக குருவானவரின் படுகொலை குறித்து பாதுகாப்பு அமைச்சு வழங்கிய அறிக்கை இப்படுகொலை தொடர்பாக முற்றிலும் மாறுபட்ட செய்தியொன்றினைக் கூறியது. அமைச்சின் அறிக்கையின்படி, "இரவு 11 மணியளவில் ஆலயச் சுற்றாடல்ப் பகுதியினை இராணுவம் சுற்றிவளைத்த வேளை, அங்கிருந்து இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐந்து பயங்கரவாதிகள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது இடையில் அகப்பட்டு ஒரு குருவானவரும் பெண்ணொருவரும் கொல்லப்பட்டனர்" என்று கூறியது. ஆனால், லலித் அதுலத் முதலி இப்படுகொலை குறித்துப் பேசும்போது, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையினை முற்றாக மறுத்திருந்தார். குருவானவர் மேரி பஸ்ட்டியானின் உடல் அங்கு கண்டெடுக்கப்படவில்லை என்றும், மாறாக அவரது ஆலயத்தில் துப்பாக்கிகளும் குண்டுகளும் காணப்பட்டதாகவும், ஆகவே அதனைப் பயங்கரவாதிகள் தமது தளமாகப் பாவித்திருப்பது உறுதியாகிறது என்றும் வாதிட்டார். எனினும் அரசால் இப்படுகொலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையினை கத்தோலிக்கத் திருச்சபை முற்றாக நிராகரித்தது. "ஆலயத்தினைச் சுற்றிவளைத்த இராணுவத்தினரின் அணியொன்று அதன்மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. ஆலயத்திலிருந்து இராணுவத்தினரை நோக்கி எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை. மேலும் ஆலயத்தில் பெண்ணொருவர் அப்போது இருக்கவில்லை. குருவானவரின் பெயரிற்குக் களங்கம் கற்பிக்கவே பெண்ணொருவருடன் குருவானவர் இருந்ததாக அரசாங்கம் காண்பிக்க முயல்கிறது. மேலும் அங்கு ஆயுதங்களும், குண்டுகளும் காணப்பட்டன என்று அரசாங்கம் கூறுவது உண்மைக்குப் புறம்பானது" என்று கத்தோலிக்கத் திருச்சபை தனது கண்டன அறிக்கையில் கூறியிருந்தது. மேலும் கொல்லப்பட்டவர்களிடையே குருவானவர் மேரி பஸ்ட்டியானின் உடல் காணப்படவில்லை என்று லலித் அதுலத் முதலி கூறியதையும் கத்தோலிக்கத் திருச்சபை மிகக் கடுமையாகச் சாடியிருந்தது. குருவானவர் மேரி பஸ்ட்டியான் இத்தாக்குதலில் கொல்லப்படவில்லையென்றும், படகேறி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறி வந்திருந்தார். கத்தோலிக்கக் குருவானவர் ஒருவரை தனது இராணுவம் கொலை செய்திருக்கும் செய்தி சர்வதேசத்தில் வெளிப்படுமிடத்து தனது அரசாங்கம் மீதான சர்வதேச அதிருப்தி தோன்றுவதைத் தடுக்கவே குருவானவர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக லலித் அதுலத் முதலியினால் வேண்டுமென்றே இக்கதை புனையப்பட்டு, மீண்டும் மீண்டும் அரச ஊடகங்களில் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் பேசிய ஆயர்கள், குருவானவர் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதற்கான கண்ணால்க் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும், அரசாங்கம் இப்படுகொலை குறித்து நடத்திய விசாரணையின் விபரங்களை வெளியிட மறுத்து வருவது கண்டனத்திற்குரியது என்றும் கூறியிருந்தார்கள். சர்வதேச மன்னிப்புச்சபை இப்படுகொலை தொடர்பாக சுதந்திரமான விசாரணையொன்றினை நடத்தியது. அவ்விசாரணைகளின் அடிப்படியில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு, "இதுவரையில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் எடுக்கப்பட்ட முயற்சிகளின்படி குருவானவர் மேரி பஸ்ட்டியான் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்தச் சாட்சியங்களும் இல்லை. இதுவரை மேரி பஸ்ட்டியான் அவர்களது உடல் கண்டெடுக்கப்படவில்லையாயினும், அவர் ஆலயத்தில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டிருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் எம்மிடம் இருக்கின்றன. தை மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவிற்கும், 6 ஆம் திகதி அதிகாலைக்கும் இடையிலான நேரத்தில் ஆலயத்தைச் சுற்றி வளைத்துக்கொண்ட இலங்கை இராணுவத்தினர், குருவானவரின் வாசஸ்த்தலத்தின் பின்புறத்தினூடாக உள்ளே நுழைந்து அவரது பெயரைக் கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். தனது பெயரைக் கூறி இராணுவத்தினர் அழைப்பதைக் கேட்ட குருவானவர் மேரி பஸ்ட்டியான் முன்னே வரவும், வாசஸ்த்தலத்தின் விறாந்தைப் பகுதி யன்னல்களூடாக இராணுவத்தினர் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர் . குருவானவர் கொல்லப்பட்ட பல மணிநேரத்திற்குப் பின்னர் அவரது உடலை இழுத்துச் சென்று அருகிலிருந்த மகளீர் பாடசாலையின் படிக்கட்டுக்களில் எறிந்து, அவரைச் சுற்றி ஆயுதங்களையும், இன்னும் சில வெடிபொருட்களையும் பரவி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் 6 ஆம் திகதி காலை தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து வெள்ளை நிற வானில் வந்திறங்கிய இன்னொரு தொகுதி இராணுவத்தினர் குருவானவரின் உடலை எடுத்துச் சென்றனர்" என்று கூறப்பட்டிருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கென்ட், டொலர் குடியேற்றங்கள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கலாக நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலியிட்ட சிங்கள இராணுவம் கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்கள் நடைபெற்ற மறுநாளே தமிழ் மக்கள் மீதான தனது பழிவாங்கல்த் தாக்குதல்களையும், அவர்களின் பூர்வீக வாழிடங்களிலிருந்து அவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்தது. வவுனியா தடைமுகாம் படுகொலை வவுனியா இராணுவத் தடை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 20 தமிழர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. தப்பியோட எத்தனித்தபோது அவர்களைத் தாம் சுட்டுக் கொன்றதாக இராணுவம் கூறியது. ஆனால் இப்படுகொலையினை விசாரித்த மனிதவுரிமைச் சபை உள்ளிட்ட இன்னும் சில மனிதவுரிமை அமைப்புக்கள் இராணுவம் கூறிய படுகொலைகளுக்கான காரணத்தை முற்றாக நிராகரித்திருந்தன. இப்படுகொலைகள் நேரடியாகப் பார்த்த சாட்சிகளைப் பேட்டிகண்டவேளை, அடைத்துவைக்கப்பட்டிருந்த 20 தமிழர்களையும் முகாமின் எல்லைக்குக் கொண்டுசென்ற இராணுவத்தினர், அவர்களைத் தப்பியோடுங்கள் என்று கட்டளையிட்டதாகவும், அவ்வாறு இளைஞர்கள் தப்பியோடும்போது பின்னாலிருந்து அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருக்கிறார்கள். வவுனியா, நெடுங்கேணிப் பகுதிகள் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களைப் புலிகள் என பெயரிட்ட லலித் அதுலத் முதலி புலிகளின் தாக்குதல் நடைபெற்ற மறுநாள் இராணுவத்தினரும், விமானப்படையினர் நடவடிக்கையில் இறங்கினர். மார்கழி 1 ஆம் திகதி காலை வானில் தோன்றிய விமானப்படையின் உலங்குவானூர்திகள் தமிழ்க் கிராமங்களான வவுனியா மற்றும் நெடுங்கேணி மீது சரமாரியான இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதுடன், குண்டுகளையும் வீசினர். பதவியா சிங்களக் குடியேற்றத்தின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த பராக்கிரமபுர இராணுவ முகாமிலிருந்தும், வவுனியாவில் அமைந்திருந்த இணைந்த கூட்டுப்படைகளின் படைப்பிரிவிலிருந்தும் புறப்பட்ட இராணுவத்தினர் தேடியழிக்கும் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று மாலை தமது இராணுவ நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்ட லலித் அதுலத் முதலி, கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடியழிக்கும் நடவடிக்கைகளைத் தாம் ஆரம்பித்திருப்பதாகக் கூறினார். மேலும் தப்பியோடும் பயங்கரவாதிகள விமானப்படையினர் வானிலிருந்து கண்காணித்து அவர்களை தாக்கி அழித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மார்கழி 2 ஆம் திகதி வெளிவந்த சண்டே ஒப்சேர்வர் மற்றும் வீரகேசரிப் பத்திரிக்கைகள் தேசிய பாதுகாப்பு அமைச்சினால் தமக்கு வழங்கப்பட்ட தாக்குதல் தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தன. அதன்படி 68 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 42 பேர் காயப்படுத்தப்பட்டதாகவும், மேலும் 35 பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறி 145 தமிழ் மக்களுக்கான கணக்கினைக் காட்டியிருந்தன. சிங்கள மக்களுக்கு தேசிய பாதுகாப்பு அமைச்சு வழங்கிய செய்தியில், "நாம் அவர்களில் இன்னும் பலரைக் கொன்றிருக்கிறோம்" என்பதாகும். வீரகேசரி இன்னும் இரு செய்திக் குறிப்புகளை மேலதிகமாக வெளியிட்டிருந்தது. பத்திரிக்கையின் மாகாணச் செய்தியாளர்களினூடாக இச்செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. வவுனியா நிருபர் அனுப்பியிருந்த செய்தியின்படி விமானப்படையினர் வவுனியாவிலும், நெடுங்கேணிப்பகுதியிலும் தமிழ் மக்கள் குடியிருப்புக்கள் மீதே தாக்குதலை நடத்தியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவரும் அப்பாவித் தமிழ் மக்களே என்றும் அச்செய்தி கூறியது. திருகோணமலை மாவட்டத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள் திருகோணமலை மாவட்டத்திலிருந்து வந்த செய்தியறிக்கையில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்களக் காடையர்கள் அருகிலிருந்த தமிழ்க் கிராமங்களுள் நுழைந்து படுகொலைகளில் ஈடுபட்டதாகக் கூறியது. திருகோணமலையில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவருமே அப்பாவித் தமிழ் மக்களே என்றும் அச்செய்திக் குறிப்புக் கூறியது. இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்கள் குறித்து ஆரய்ந்திருந்த மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்ககழக ஆசிரியர்கள் அமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் சட்டர்டே ரிவியூ ஆகியவையும் வீரகேசரிப் பத்திரிக்கைச் செய்தியினை உறுதிப்படுத்தியிருந்தன. இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான பழிவாங்கும் தாக்குதல்களையடுத்து அமிர்தலிங்கம் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியிடம் இதுகுறித்து முறையிட்டிருந்தார். இதனையடுத்து ரஜீவின் வேண்டுகோளிற்கு அமைவாக இத்தாக்குதல்கள் குறித்து ஆராயவென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மூதுருக்கான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவருமான தங்கத்துரையை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. இக்காலப்பகுதியில் வெளிவந்த இந்த அறிக்கைகளும், இவற்றைத் தொடர்ந்து வெளிவந்த இன்னும் இரு அறிக்கைகளும் 1984 ஆம் ஆண்டு மார்கழி மற்றும் 1985 மார்கழி ஆகிய காலப்பகுதிகளில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்க் கிராமங்கள் மீது அரச படைகளும், சிங்களக் காடையர்களும் நடத்திய தாக்குதல்கள் குறித்துப் பேசியிருந்தன. திரு விஜயரட்ணம் என்பவரால் மணல் ஆறு எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகத்தின் 23 ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் அமரவயல் எனும் புராதனத் தமிழ்க் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த சில விடயங்களையும், குருநாதன் என்பவரால் எழுதப்பட்ட தென்னைமரவாடி எனும் இன்னொரு தமிழ்க் கிராமம் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின் தொகுப்பிலிருந்து சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பதவியா சிங்களக் குடியேற்றத்தால் விழுங்கப்பட்ட தமிழ்க் கிராமம் அமரவயல் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளுக்கும் பதவியா சிங்கள்க் குடியேற்றத்திற்கும் நடுவே அமைந்திருந்த தமிழர் கிராமமான அமரவயல் பகுதியிலிருந்து 1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் திகதி தமிழ் மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். சரித்திர காலம் தொட்டு தமிழர்களின் விளைச்சல் மிக்க விவசாயக் காணிகள் அமைந்திருந்த அமரவயல் பகுதி பதவியாக் குடியேற்றத்துடனும், கென்ட் , டொலர் பண்ணைகளுடனும் இணைக்கப்பட்டு தெற்கிலிருந்து சிங்களக் குடியேற்றவாசிகளால் நிரப்பப்பட்டது. அமரவயலைப் போன்றே அப்பகுதியைச் சுற்றியிருந்த இன்னும் பல தமிழ்க் கிராமங்களும் தமிழ்நீக்கம் செய்யப்பட்டு அதே நாட்களில் சிங்களக் குடியேற்றங்களுக்குள் உள்வாங்கப்பட்டன. செம்மலையிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் (2+) தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்களில் செம்மலையும் ஒன்று. அன்று காலை செம்மலைப் பகுதிக்கு வந்த இராணுவ ஜீப் வண்டியொன்று அங்கிருப்பவர்களை உடனடியாக அங்கிருந்து ஓடித் தப்புமாறும் இல்லாதுவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்றும் அறிவித்தது. ஜீப் வண்டியிலிருந்த இராணுவத்தினர் அங்கிருந்த மக்கள் மீது உடனடியாகக் கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். இரு தமிழ் மக்கள் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டு விழ ஏனையோர் ஓடத் தொடங்கினர். அக்கிராமம் முழுவதும் இரு நாட்களுக்கு அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் உயிர்காக்க ஒளித்திருந்தது. தமிழர்களை செம்மலையிலிருந்து விரட்டியடித்த இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் கிராமத்திற்குள் நுழைந்து, தமிழர்களின் வீடுகளையும், வயற்குடில்களையும் கொள்ளையிட்டு விட்டு எரியூட்டினர்.தமது வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டதை செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தமது புராதன வாழிடத்தைக் கைவிட்டு முல்லைத்தீவு நோக்கி நடக்கத் தொடங்கினர். ஒதியாமலைப் படுகொலைகள் (32+) திருகோணமலை மாவட்டத்தின் இன்னொரு தமிழ்க் கிராமமான ஒதியாமலை மீதும் இராணுவத்தினரும், சிங்களவர்களும் அதேநாள் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதல் மிகவும் குரூரமானது. மார்கழி 1 ஆம் திகதி மாலை பதவியா இராணுவ முகாமிலிருந்து இராணுவ வாகனங்கள் வந்திறங்கிய இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் கிராமத்தின் முகப்பில் அமைந்திருந்த ஊர்க்காவலன் ஆலயத்தின் முன்னால் கூடினர். அன்றிரவு முழுதும் ஆலயத்தில் தங்கியிருந்த சிங்களத் தாக்குதல் அணி மறுநாள் காலை கிராமத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டது. பின்னர் கிராமத்தினுள் புகுந்து இளவயது ஆண்களைக் கைதுசெய்து இழுத்துவந்து கிராமத்தின் சனசமூக நிலையக் கட்டிடத்திற்குள் அனைவரையும் வரிசையில் நிற்கவைத்துச் சுற்றுக் கொன்றது. படுகொலையினை நிறைவுசெய்துவிட்டு முகாம் திரும்புகையில் ஐந்து வயதான தமிழர்களை அவ்வணி இழுத்துச் சென்றது. சுமார் இரு வாரங்களுக்குப் பின்னர் கென்ட் பண்ணைக்கருகில் உழவு இயந்திரத்துடன் சேர்த்து எரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒதியாமலைப் படுகொலைகள் நடந்த மறுநாள் அப்பகுதிக்குச் சென்ற முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், பிரதான மருத்துவ அதிகாரியும், கிராமத் தலைவரும் கொல்லப்பட்ட 27 தமிழர்களின் உடல்களைக் கண்டனர். அங்கு வருகை தந்த அதிகாரிகள் சாட்சியங்களைப் பதிவுசெய்ய, கிராமத் தலைவரும் உறவினர்களும் கொல்லப்பட்ட தமிழர்களை அடையாளம் காண, ஏனைய அதிகாரிகள் அவர்களின் பெயர் விபரங்களைப் பதிவுசெய்துகொண்டபின்னர் அவற்றிற்கு தீமூட்டி இறுதிக் கிரியைகளை நடத்தினர். இப்படுகொலைகளில் பலியான தமிழர்கள் அனைவரையும் பெயரிட்டு, பயங்கரவாதிகள் என்று மறுநாள் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. தென்னைமரவாடிப் படுகொலைகள் (24+) கொக்கிளாய், நாயாறு சிங்கள் குடியேற்றங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கலாக மார்கழி 3 ஆம் திகதி மற்றுமொரு படுகொலையினை இலங்கை இராணுவம் முன்னெடுத்தது. திருகோணமலை மாவட்டத்தின் மிகவும் வடக்கான பகுதியில் அமைந்திருக்கும் இன்னொரு புராதன தமிழ்க் கிராமமான தென்னைமரவாடி மீது இராணுவத்தின் கவனம் திரும்பியிருந்தது. அன்று காலை கிராமத்தினுள் நுழைந்த கண்ணில் அகப்பட்ட 13 ஆண்களை வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றனர். பின்னர் கிராமத்திலிருந்தவர்களை அச்சுருத்திய இராணுவம் உடனடியாக அனைவரையும் அங்கிருந்து வெளியேறி ஓடிவிடுமாறு கட்டளையிட்டது. இதனையடுத்து அங்கிருந்த 200 தமிழர்களும் அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவு மாவட்டத்தின் பொன்னகர் பகுதியில் சென்று அடைக்கலம் தேடிக் கொண்டனர். அதேநாள் கொக்கிளாய், நாயாறு பகுதிகளுக்கருகில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராணுவம் அங்கிருந்த மேலும் 12 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து சுட்டுக் கொன்றது. செம்மடுப் படுகொலைகள் (எண்ணிக்கை தெரியவில்லை) மார்கழி 4 ஆம் திகதி இன்னும் இரு கொடூரமான படுகொலைகளை சிங்கள இராணுவமும் சிங்களக் காடையர் அணியும் நடத்தின. கென்ட், டொலர் பண்ணைகளில் இருந்து 16 கிலோமீட்டர்களில் அமைந்திருக்கிறது புராதன தமிழ்க் கிராமமான செம்மடு. அன்று காலை செம்மடு கிராமத்தினுள் புகுந்த இராணுவமும் காடையர்களும் ஒரு வயோதிபப் பெண்மணியையும், சில சிறுவர்களையும் மட்டுமே விட்டுவிட்டு ஏனையோர் அனைவரையும் இழுத்துச் சென்றது. ஆனால் இதுகுறித்த கேள்விகள் எழுந்தபோது அக்கிராமத்திற்குள் தாம் நுழையவே இல்லை என்று இராணுவம் மறுத்தது. ஆனால் இழுத்துச் செல்லப்பட்ட கிராம வாசிகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டர்டே ரிவியூ மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றின் அறிக்கைகளின்படி அன்று இழுத்துச் செல்லப்பட்ட தமிழர்களும் அனைவரையும் இராணுவம் கொன்றுவிட்டதாக அறிய முடிகிறது. முருங்கனில் சிங்கள் காடையர்கள் அரங்கேற்றிய நரவேட்டை (107+) மார்கழி 4 ஆம் திகதியின் இரண்டாவது தமிழினப் படுகொலை மன்னாரின் முருங்கன் பகுதியில் நடைபெற்றது. இராணுவ வாகனம் ஒன்றின் மீது போராளிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட இன்னும் அறுவர் காயமடைந்தனர். தமது சகாக்களில் ஒருவன் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கற் தாக்குதலில் ஈடுபட்ட தள்ளாடி முகாமின் இராணுவக் காடையர்கள் 107 தமிழ் மக்களைப் படுகொலை செய்தனர். இப்படுகொலைகள் குறித்த விலாவாரியான அறிக்கையொன்றினை சட்டர்டே ரிவியூ வெளியிட்டிருந்தது. இப்படுகொலைகள் குறித்து முழுமையான விபரங்களை சர்வதேசக் குற்றவியல் ஆயத்தின் வேர்ஜினியா லியரியும் வெளியிட்டிருந்தார். இவ்வறிக்கைகளின் அடிப்படியில் அன்று நடந்த கொடூரம் குறித்து செய்திகளை வெளியிட்டிருந்தன. தாக்குதலில் ஈடுபட்ட் அனைத்து இராணுவத்தினரும் மிகுந்த போதையில் காணப்பட்டனர். கண்ணிவெடித் தாக்குதல் நடைபெற்ற பகுதியின் வீதியின் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்குக் காணப்பட்ட வீடுகளும், கடைகளும் அவர்களால் தீமூட்டப்பட்டன. வீடுகள் தீயிடப்படுமுன் அவற்றினுள் நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்த அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.அப்பகுதியில் நடைபெற்றுவந்த தாக்குதல்களையடுத்து உப தபால் அலுவலகத்திற்குள் பலர் ஓடித் தஞ்சமடைந்திருந்தனர். அங்கும் வந்த இராணுவத்தினர் உள்ளிருந்த அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அலுவலகத்திற்கும் தீமூட்டினர். நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளை அறியாது அப்பகுதியூடாக வந்த பஸ் வண்டிகளும் மறிக்கப்பட்டு, உள்ளிருந்த தமிழர்கள் கீழே இறக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் அப்பிரதேசத்தின் வயற்காணிகளில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளில் உயிர் தப்பியவர்களை செவ்விகண்டபோது, "நான்கு மணித்தியாலம் நடந்த கோரத் தாண்டவம்" என்று அப்படுகொலைகளை அச்சம் மிக வர்ணித்திருந்தனர். இலங்கையின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் வரிசையில் முருங்கன் படுகொலையும் மிகவும் முக்கியமானது என்றால் அது மிகையில்லை. படுகொலைகளுக்கான சாட்சியங்களைக் கொண்டு சென்றதற்காகக் கொல்லப்பட்ட மெதடிஸ்த்த பாதிரியாரின் குடும்பம் ஆனால் மன்னாரில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவத்தின் படுகொலைகள் முருங்கனுடன் மட்டுமே அன்று நின்றுவிடவில்லை. அந்நாட்களில் மேலும் பல படுகொலைகளை அவர்கள் அரங்கேற்றியிருந்தனர். முருங்கன் படுகொலை நடைபெற்று ஒரு சில நாட்களுக்குப் பின்னரும், 1985 ஆம் ஆண்டு தை மாதத்தின் முதலாம் வாரத்திலும் இவை நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களில் முதலில் பலியானவர்கள் முருங்கன் மெதடிஸ்த்த திருச்சபையின் போதகர் ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம், அவரது சிங்கள மனைவி பிரிஜ்ஜெட், அவர்களின் வாகனச் சாரதி மற்றும் அவர்களுடன் கொழும்பு நோக்கி டட்சண் பிக்கப் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த மேலும் இருவர் என ஐவரைச் சிங்கள இராணுவம் வழிமறித்துச் சுட்டுக் கொன்றது. போதகர் தன்னுடன் முருங்கன் படுகொலைகள் தொடர்பான ஒளிநாடாக்கள், கண்ணால்க் கண்ட சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் படுகொலைகளின் ஆதாரங்களான புகைப்படங்கள் ஆகியவற்றை தன்னுடன் கொழும்பிற்குக் கொண்டு சென்றதாக அறியக் கிடைக்கின்றது. தமது படுகொலைகள் வெளியே தெரிவதைத் தடுக்க இன்னும் அப்பாவிகள் ஐவரைச் சிங்கள இராணுவம் படுகொலை செய்தது. ஆனால் வழமை போலவே போதகரின் படுகொலைக்கும் தமக்கும் தொடர்பேதும் இல்லை என்று அரசாங்கம் கையை விரித்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கச் சபதம் எடுத்த பிரபாகரனும், தமிழினத்தையே பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்ட லலித் அதுலத் முதலியும் கென்ட் மற்றும் டொலர் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல் குறித்து தொண்டைமான் மகிழ்வடைந்திருந்தார் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். சில தினங்களுக்குப் பின்னர் இன்னொரு தமிழ் அமைச்சரான தேவநாயகமும் இதே விதமான உணர்ச்சியை வெளியிட்டிருந்தார். ஆனால் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்துவந்த தமிழர்கள் மத்தியிலும் இத்தாக்குதல் வரவேற்பினைப் பெற்றிருந்தது என்று கூறுவதுதான் சரியானது. தமிழ் நாட்டில் இத்தாக்குதல் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டிருந்தது. சில பத்திரிக்கைகள் இத்தாக்குதலை தலைப்புச் செய்தியாகக் காவி வந்தன. என்னைப்பொறுத்தவரையில் கென்ட், டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல் விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான மைல்க்கற்களில் ஒன்று என்று கூறுவேன். இத்தாக்குதல் தமிழரின் உள்ளக்கிடக்கையான "தனியான தேசத்திற்குரியவர்கள் நாங்கள்" எனும் உணர்வினை வெளிப்படுத்தியிருந்தது. 1983 ஆம் ஆண்டின் தமிழின அழிப்பின்போது வெளிப்படாத இந்த உணர்வு கென்ட் , டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலின்போது பீறிட்டுக் கிளம்பியிருந்தது. 83 ஆம் ஆண்டு இனப்படுகொலை தமிழர்களுக்குத் தமது தாயகம் வடக்குக் கிழக்குத் தான் எனும் உணர்வினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இலங்கையின் வடக்குக் கிழக்கில் மட்டுமே தாம் பாதுகாப்பாக வாழமுடியும் என்கிற உணர்வினை 83 இனக்கொலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. ஆனால் வலி ஓயாச் சிங்களக் குடியேற்றத்தினூடாக தமிழ மக்களின் பாதுகாப்பான தாயக உணர்வினை சிங்களவர்கள் அழிக்கக் கங்கணம் கட்டியிருப்பது அவர்களுக்குப் புரிந்தது. அன்றிலிருந்து தமது தாயகத்தைக் காக்கவேண்டிய தேவையும், உணர்வும் தமிழர்களிடையே பரவி வளர ஆரம்பித்திருந்தது. கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலினூடாக தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டிருப்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொண்டனர். நான் முன்னைய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருந்ததைப் போல, 1974 ஆம் ஆண்டின் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சிங்களப் படைகளால் படுகொலைசெய்யப்பட்ட ஒன்பது அப்பாவித் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கான வீரன் ஒருவனைத் தமிழர்கள் தேடிக்கொண்டிருந்தனர். துரையப்பா அரங்கில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்ட உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அனுமதியை இரத்துச் செய்வதனூடாக அன்றைய படுகொலைகளுக்கான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்த அல்பேர்ட் துரையப்பாவை பிரபாகரன் தண்டித்தபோது அவரை தமது வீரனாக தமிழ மக்கள் அன்று கண்டனர். அவ்வாறே தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பைச் சிதைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றமான வலி ஓயவை அழிப்பதற்குத் தமக்கென்று ஒரு படைத்தளபதி தேவையென்பதை தமிழ் மக்கள் உணர்ந்தனர். அதனைச் செவ்வணே நிறைவேற்றி வைத்த பிரபாகரனை தமிழ் மக்கள் விரும்பி ஆதரிக்கத் தொடங்கினர். சிங்களக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்த அதேவேளை, சிங்கள மக்களை அது ஆத்திரங்கொள்ள வைத்தது. அப்பாவிச் சிங்கள மக்களைப் புலிகள் படுகொலை செய்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். 1996 ஆம் ஆண்டு மாசிமாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் புலிகளால் செய்யப்பட்ட படுகொலைகள் எனும் பட்டியலை வாசித்த அன்றைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அநுருத்த ரத்வத்த, அரசால் பதிவுசெய்யப்பட்ட சிங்கள மக்கள் மீதான படுகொலைகளின் 1984 ஆம் ஆண்டிலிருந்து 1996 வரையான பட்டியல் என்று அதனை முன்வைத்திருந்தார். தமிழ்ப் போராளி அமைப்புக்களால் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்டதாக அரசு கூறும் தாக்குதல்களை மட்டுமே அப்பட்டியல் கொண்டிருந்தது. கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களோடு இப்பட்டியல் ஆரம்பமாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து கொக்கிளாய், நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றங்கள் மீதான தாக்குதலும், 1985 வைகாசியில் அநுராதபுரம் மீதான புலிகளின் தாக்குதலும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையென்னவென்றால், கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் பலநூற்றுக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் சிங்கள அரச படைகளாலும், ஆயுதமயப்படுத்தப்பட்ட சிங்களக் காடையர்களாலும் படுகொலைசெய்யப்பட்டே வந்துள்ளனர். அன்று பாராளுமன்றத்தில் ரத்வத்தையால் முன்வைக்கப்பட்ட பட்டியல் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்கள் குறித்து எதனையும் வெளிப்படுத்தவில்லை. ஆண்டாண்டு காலமாக கொல்லப்பட்ட அனைத்துத் தமிழர்களையும் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துவிடும் அரசாங்கங்களின் கங்கரியத்தையே அநுருத்த ரத்வத்தையின் பட்டியலும் செயற்படுத்தியிருந்தது. கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களை அரசாங்கம் பயங்கரவாதிகளாகவே கருதும் என்கிற அரசின் நோக்கத்தினை கென்ட் , டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலின் பின்னர் பாராளுமன்றத்தில் பேசும்போது லலித் அதுலத் முதலி வெளியிட்டார். "யார் பயங்கரவாதி? துப்பாக்கியைப் பயன்படுத்துபவன் பயங்கரவாதியா அல்லது துப்பாக்கியைப் பயன்படுத்துபவனுக்கு அருகில் நின்று ஆதரவு கொடுப்பவன் பயங்கரவாதியா? சிங்களவர்களைக் கொல்வதற்காக துப்பாக்கியை வைத்திருப்பவனுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுப்பவனும் பயங்கரவாதியன்றோ? இராணுவ நடமாட்டத்தைக் கண்காணித்து, பயங்கவாதிகளுக்கு தகவல் கொடுத்து, அந்தப் பக்கம் போகவேண்டாம், இராணுவம் நிற்கிறது என்று கூறுபவனும் பயங்கரவாதிதானே?"
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
தமிழ்த் தேசியம் செத்துவிட்டது, சிங்கள இனவாதிகளை தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிற செய்திகளும், இலங்கையராக இணைவோம் என்கிற கூச்சல்களும் இப்போது எங்கே போய்விட்டன? தமிழினம் தலைவரையும் மாவீரர்களையும் எப்போதும் மறக்காது என்பதற்கு இன்றைய மாவீரர் தின நிகழ்வுகள் சாட்சி. வீரவணக்கம் !!!
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வதில் பெருமைப்படுகிறேன்!!! இருந்தால் நீ தலைவன், இல்லையென்றால் நீ எங்களின் இறைவன்!!!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான புலிகளின் தாக்குதல் தமிழர் தாயகத்தின் எல்லைகளில் உருவாக்கப்பட்டு வந்த சிங்கள குடியேற்றக் கிராமங்களினால் பல எதிர்பாராத , விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாயின. இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை இக்குடியேற்றங்களை எப்படியாவது தடுத்தே தீருவது என்கிற தமிழ்ப் போராளி அமைப்புக்களின் உறுதியான நிலைப்பாடு, போராளிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைகள், இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகளினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் பாரிய இடப்பெயர்வுகள், தமிழ் மக்கள் சர்வதேசமெங்கிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்தமை, தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டமை, போராளி அமைப்புக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தமை என்பவற்றோடு, சிங்களக் குடியேற்றவாசிகளை எப்பாடுபட்டாவது பாதுகாத்தே தீருவோம் என்று அரசும் இராணுவமும் சிங்கள மக்களுக்கு உறுதிவழங்கியமையினையும் குறிப்பிட முடியும். தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களால் அக்காலத்தில் வெளியிடப்பட்டு வந்த அறிக்கைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்டு வந்த நுட்பங்கள், அவர்களின் போராட்டக் களத்தின் விரிவாக்கம் ஆகியவை சிங்களக் குடியேற்றங்களுக்கெதிராகப் போராடுவது எனும் அவர்களின் உறுதிப்பாட்டினை எடுத்தியம்பியிருந்தது. 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்தியாவிலிருந்து வெளிவந்த தி ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பிரபாகரன் வழங்கிய செவ்வியில் குடியேற்றங்களுக்கெதிரான தனது உறுதியான நிலைப்பாடு குறித்து அவர் பேசியிருந்தார். கேள்வி : தமிழர்களின் மாவட்டமான திருகோணமலையிலிருந்து தமிழ மக்களை விரட்டியடித்துவிட்டு அப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்ற அரசாங்கம் முனைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பிரபாகரன் : இதனை எதிர்த்துப் போராடுவதைத்தவிர வேறு வழிகள் எமக்கு இல்லை. அவர்களின் திட்டங்களைத் தோற்கடிக்க எம்மால் ஆன அனைத்து வழிகளிலும் போராடுவோம். 1984 ஆம் ஆண்டின் மூன்றாம் வாரத்தில் சென்னையில் தங்கியிருந்த தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களை சட்டர்டே ரிவியூ பத்திரிக்கையின் ஆசிரியரான காமிணி நவரட்ண சந்தித்தபோது, சிங்களக் குடியேற்றங்களுக்கெதிராகப் போராடுவது எனும் தமது உறுதிப்பாடு குறித்து அவர்கள் தெளிவாகக் கூறியிருந்தனர். புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்களின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்த காமிணி நவரட்ண, அரசாங்கத்திற்கும் போராளித் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையினை ஒழுங்குசெய்வதனூடாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வொன்றை உருவாக்க முனைந்திருந்தார். கொழும்பில் ஜெயவர்த்தனவையும், லலித் அதுலத் முதலியையும் சந்தித்து விட்டே அவர் சென்னைக்குப் பயணமாகியிருந்தார். ஜெயாரின் விருப்பத்தின்பேரிலேயே நவரட்ணவின் பயணம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக அரசியல் அவதானிகள் அன்று தெரிவித்திருந்தனர். நவரட்ணவுடன் பேசிய போராளிகளின் தலைவர்கள் அரசியல்த் தீர்வுகுறித்து ஜெயாருடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் கூறினர். இதன்பின்னர் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காமிணி நவரட்ண, ஜெயவர்த்தனவுடன் அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதற்கு எந்தப் போராளித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான உகந்த சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர் என்று கூறினார். தமிழர்களுக்கான தீர்வினை இராணுவ ரீதியில் வழங்கவே ஜெயவர்த்தன முழுமூச்சுடன் முயன்றுவருவதாக நவரட்ணவிடம் தெரிவித்த போராளிகள், ஜெயார் விரும்பியபடி தாமும் அதே பாணியிலேயே அவருக்குப் பதிலளிக்கக் காத்திருப்பதாகக் கூறினர். நவரட்ணவுடனான சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் பேசிய பாலசிங்கம், "எம்மை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது எனும் யதார்த்தத்தினை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும்வரை அதன் மீதான இராணுவத் தாக்குதல்களை நாம் தீவிரப்படுத்துவோம்" என்று கூறினார். மாசி 13 ஆம் திகதி போராளிகளின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அன்றிரவு இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்றின்மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது ஆர்.பி.ஜீ க்கள், மோட்டார்கள் மற்றும் கிர்ணேட்டுக்கள் கொண்டு சுமார் 100 போராளிகள் அடங்கிய புலிகளின் அணி தாக்குதலில் ஈடுபட்டது. சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீடித்த இத்தாக்குதலில் இராணுவத்தினரில் 106 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும், தமது தரப்பில் 16 போராளிகள் வீரமரணம் எய்தியதாகவும் சென்னையில் புலிகள் அறிவித்தனர். இத்தாக்குதலினால் சிங்களவர்கள் அச்சமடையக் கூடும் என்று அஞ்சிய அரசாங்கம் இத்தாக்குதலை மூடி மறைக்க எத்தனித்தது. ஆகவே இத்தாக்குதல் குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிக்கையில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பயங்கரவாதிகளில் 14 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும் கூறியிருந்தது. ஆனால் கொக்கிளாய்ச் சண்டையின் முக்கியத்துவம் குறித்து இராணுவ ஆய்வாளர்களும், விமர்சகர்களும் பேசியிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கெதிராகப் போராடுவது எனும் தமிழ்ப் போராளிகளின் உறுதிப்பாட்டை, குறிப்பாக புலிகளியகத்தின் உறுதிப்பாட்டையே கொக்கிளாய் இராணுவ முகாம் மீது அவர்கள் நடத்திய தாக்குதலின் வீரியமும், அவர்கள் பயன்படுத்திய உத்திகளும் சுட்டிக் காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் கொக்கிளாய்ச் சமரை முழு அலவிலான ஆயுத மோதல் என்றும் அவர்கள் கணித்தனர். மிக அண்மையில் உருவாக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கட்டியமைக்கப்பட்டிருந்த கொக்கிளாய் இராணுவ முகாமையே தமது இலக்காக புலிகள் தேர்ந்தெடுத்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. கொக்கிளாய்ச் சண்டையில் ஈடுபட்ட புலிகளின் அணி இத்தாக்குதலுக்கென்று பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததுடன், பலவகையான ஆயுதங்களையும் இத்தாக்குதலின்போது பாவித்திருந்தது. முற்றான இராணுவச் சீருடையில் காணப்பட்ட புலிகள், தம்முடன் உணவுப் பொட்டலங்கள், குடிநீர், மருந்துப்பொருட்கள் என்பவற்றையும் எடுத்து வந்திருந்தனர். இரவுநேரத்தில் பார்க்கும் வசதி கொண்ட கண்ணாடிகள், நவீன ஏ கே 47 வகை இரக தானியங்கித் துப்பாக்கிகள், எம் 16 ரைபிள்கள், மோட்டார்கள், உந்துகணைச் செலுத்திகள் போன்ற ஆயுதங்கள் புலிகளால் பாவிக்கப்பட்டன. மேலும் சண்டையின்போது எதிரியைத் தேடுவதற்கான தேடும் விளக்குகளையும் அவர்கள் கொண்டுவந்திருந்தனர். சண் பத்திரிக்கை இத்தாக்குதலை பத்தோடு பதினொன்றாவதாக கூறிக் கடந்து செல்லவில்லை. மாறாக பாரிய இராணுவ முகாம் ஒன்றினை நேருக்கு நேர் எதிர்த்து அழிக்க புலிகள் நடத்திய தாக்குதல் என்று வர்ணித்தது. தேசிய பாதுகாப்புச் சபைக்கு இத்தாக்குதல் குறித்து விளக்கமளித்த ரவி ஜயவர்த்தன புலிகளின் இத்தாக்குதல் மிகவும் மூர்க்கத்தனமான நேரடிச் சண்டையாக இருந்ததாகவும், இதன்மூலம் அவர்கள் மிகவும் திறமையான எதிரியாக வளர்ந்திருப்பது தெளிவாகிறது என்றும் கூறியிருந்தார். மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய ஜெயார், கொக்கிளாய் தாக்குதலின் மூலம் இலங்கையின் ஆயுதப்போரின் குணாதிசயம் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூறினார். அன்றிலிருந்து தொடர்ச்சியாகப் போராடிவரும் புலிகள் இயக்கம், 2000 ஆம் ஆண்டில் ஜெயாரினால் 1985 ஆம் ஆண்டிலிருந்து சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் தாயகத்தின் குறிப்பிடத்தக்களவு பிரதேசத்தினை விடுவிக்கும் வல்லமையினைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 2002 இல் பிரபாகரனின் தளபதியாகவிருந்த கருணா குறிப்பிடும்போது, பதவியாவரை எம்மால் செல்லக்கூடிய பலம் இருந்தது ஆனால் தலைவர் அதனைச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டார் என்று கூறியிருந்தார். தமது போராடும் அணிகளைப் பரவலாக்கி, செறிவைக் குறைப்பதை விரும்பாததானாலேயே தலைவர் அதனைச் செய்யவில்லை என்றும் கருணா ஊடகவியலாளர்களிடம் கூறினார். சில தமிழ் இராணுவ ஆய்வாளர்கள் இன்னும் சில விடயங்களைக் கூறியிருந்தனர். வெலி ஓயவில் இராணுவத்தினரின் ஒரு பகுதியை முடக்கிவைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்கவைப்பதும் பிரபாகரனின் நோக்கமாக இருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வெலி ஓய சிங்களக் குடியேற்றத்தைப் பாதுகாக்க தனியான படைப்பிரிவொன்றினை உருவாக்கிய ஜெயவர்த்தன கென்ட், டொளர் பண்ணைகள் மற்றும் கொக்கிளாய், நாயாறு மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள் தள்ளியிருந்தன. வட மாகாணத்தின் எல்லைகளில் இஸ்ரேலிய பாணியில் பாரிய இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் ஜெயவர்த்தனவின் எண்ணத்திற்கு இத்தாக்குதல்கள் பெரும் அச்சுருத்தலாய் மாறியிருந்தன. கடுமையான தாக்குதல் ஒன்றின் மூலம் ஜெயவர்த்தனவின் திட்டத்தின் அடித்தளத்தையே புலிகள் புரட்டிப் போட்டிருந்தனர். புலிகளின் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட சிங்கள அகதிகள் எனும் புதிய பிரச்சினையினையடுத்து தனது குடியேற்றத்திட்டத்தினை ஜெயவர்த்தன அப்போதைக்குக் கிடப்பில் போட்டார். பதவிய பகுதியில் குடியேறி வாழ்ந்துவந்த சிங்கள விவசாயிகளும், திருகோணமலை - முல்லைத்தீவு கரையோரங்களில் குடியேறியிருந்த சிங்கள மீனவர்களும் தமது சொந்த ஊர்களுக்கே திரும்பத் தொடங்கியிருந்தனர். தமது கைகளில் எடுத்துக்கொண்ட பொருட்களையும், குடும்பங்களையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ரவி ஜெயவர்த்தன பதவிய பகுதிக்கு விரைந்துசென்ற ரவி ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் சிங்கள மக்கள் அப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறிச் செல்வதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நின்றனர். வெளியேறிக்கொண்டிருந்த சிங்களக் குடியேற்றக்காரர்களுடன் பேசிய ரவி ஜெயவர்த்தன, அவர்களின் குடியேற்றப் பண்ணைகளுக்குத் தம்மால் பாதுகாப்பு வழங்கமுடியும் என்றும், அவற்றைக் கைவிட்டுச் செல்ல வேண்டாம் என்றும் கேட்கத் தொடங்கினார். சிங்கள தேசியத்தைக் காப்பதற்காகவாவது அவர்கள் அங்கு தொடர்ச்சியாக தங்கி வாழவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தமது குடும்பங்களின் பாதுகாப்புத் தொடர்பான தமது கரிசணையினை சிங்களக் குடியேற்றக்காரர்கள் ரவி ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தனர். "புலிகள் எங்களைத் தாக்குகிறார்கள், ஆகவே இங்கே தொடர்ந்து வாழ்வது பாதுகாப்பானது அல்ல" என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அவர்களுக்குப் பதிலளித்த ரவி ஜயவர்த்தன, "இராணுவத்தினர் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்" என்று கூறவும், "புலிகள் வந்தபோது இராணுவத்தினரே முதலில் ஓடித்தப்பினார்கள்" என்று சிங்களக் குடியேற்றக்காரர்கள் அவரிடம் தெரிவித்தனர். பின்னர் கொழும்பில் ரவி ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் கூட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்தனர். கென்ட் மற்றும் டொளர் பண்ணைகள் மீதான தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தாக்கம் பற்றி அவர்கள் ஆராய்ந்தனர். இப்பகுதிகளில் இருந்து சிங்களக் குடியேற்றக்காரர்களின் வெளியேற்றமானது தமது குடியேற்றத் திட்டங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்று அவர்கள் முடிவுசெய்தனர். தமிழ் ஆயுதக் கிளர்ச்சியை வட மாகாணத்திற்குள் மட்டுமே மட்டுப்படுத்திவிட உலக வங்கியின் ஆதரவில் தாம் மேற்கொண்டுவந்த சிங்களக் குடியேற்றத் திட்டம் புலிகளின் தாக்குதலினால் தடைப்பட்டு விட்டதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். இத்தாக்குதலின் மூலம் இந்தியாவின் முன்னாலும், சர்வதேசத்தின் முன்னாலும் தமது திட்டம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டதையும் அவர்கள் உணரத் தலைப்பட்டனர். எஸ்.எல்.குணசேகர தேசிய பாதுகாப்புச் சபையும் புலிகளின் தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தாக்கம் குறித்து விரிவாக ஆரய்ந்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் தமிழர் தாயகத்தில் தீவிரமான சிங்களக் குடியேற்றங்களை தொடர்ந்து முன்னெடுப்பது என்று அது முடிவெடுத்தது. புலிகளின் தாக்குதலால் காயப்பட்டுப் போயிருந்த சிங்களத் தேசியத்தின் மனக்கிடக்கையினை மீளவும் கட்டியெழுப்ப அது முடிவெடுத்தது. சிங்களக் குடியேற்றக்காரர்களின் மனோதிடத்தை மீளவும் உசுப்பேற்றி, அவர்களைத் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் குடியேற்றவென்று பேர்பெற்ற சிங்கள இனவாதிகளான எஸ்.எல்.குணசேகர மற்றும் தவிந்த சேனநாயக்க ஆகியோரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை தமது அடிப்படை ஆவணமாகக் கொண்டு செயற்படுத்த தேசிய பாதுகாப்புச் சபை முடிவெடுத்தது. ஜானக பெரேரா குணசேகரவின் அறிக்கை இரு விடயங்கள் குறித்துப் பேசியிருந்தது. இவற்றுள் முதலாவது சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கி ஆயுதமயப்படுத்துவது. இரண்டாவது மணலாறு (வலி ஓய) பிராந்தியத்தில் இராணுவப் படைப்பிரிவொன்றினை நிரந்தரமாகவே நிலைநிறுத்துவதுடன், சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாக்கவென சிறிய இராணுவ முகாம்களை சங்கிலிபோல அப்பகுதியில் நிறுவுவது. இந்த ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட தேசிய பாதுகாப்புச் சபை, மணலாற்றில் படைப்பிரிவின் தலைமையகத்தை நிறுவியதுடன், அப்பகுதியைச் சுற்றி சிறிய இராணுவ நிலைகளையும் கென்ட் பண்ணையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சங்கிலி போன்ற அமைப்பில் உருவாக்கியது. இராணுவத்தின் முன்னாள் பிரதானியான ஜானக பெரேரா இப்புதிய படைத் தலைமையகத்திற்கு கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரில் ஜனகபுர எனும் புதிய சிங்களக் குடியேற்றக் கிராமம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. அவரது மனைவியான கல்யாணியின் பெயரில் கென்ட் பண்ணை "கல்யாணிபுர" என்று அழைக்கப்பட, அவரது மகனான சம்பத்தின் பெயரில் இன்னொரு புதிய சிங்களக் குடியேற்றமான "சம்பத்நுவர" உருவாக்கப்பட்டது. சிங்களக் குடியேற்றக்காரர்களை பயிற்சியளித்து, ஆயுதமயமாக்கும் வேலைகள் 1985 ஆம் ஆண்டு, தை மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. ரவி ஜெயவர்த்தனவும் அவரால் உருவாக்கப்பட்ட சத் செவன எனும் அமைப்பும் இந்த நடவடிக்கையில் இறங்கினர். இதற்கான நிதியினை அரசாங்கமே வழங்கியது. சத் செவன அமைப்பினரால் பதவிய பகுதியில் இருந்து திருகோணமலை மாவட்டத்தின் கொமரன்கடவல பகுதிவரையான சிங்களக் குடியேற்றங்கள் ஆயுதமயப்படுத்தப்பட்டன. சித்திரை மாதத்தின் இறுதிப்பகுதியில் மண்லாற்றின் அனைத்துச் சிங்களக் குடியேற்றங்களும் முற்றாக ஆயுதமயமாக்கப்பட்டுவிட்டன. 1985 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த அனைத்துச் சிங்களக் குடியேற்றங்களும் பூரண இராணுவமயப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால், கிராமங்களை முற்றாக இராணுவமயப்படுத்தியபோதும் அப்பகுதிகளின் வாழ்ந்துவந்த சிங்கள குடியேற்ற விவசாயிகளுக்கு அது நம்பிக்கையினை வழங்கவில்லை. மாறாக சிங்கள தமிழ் இனங்களுக்கிடையேயான பகைமையினையே அது வளர்க்க உதவியிருந்தது. பூரண ஆயுத மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களினால் இப்பகுதிகளில் தமிழ்ப் போராளிகளின் செயற்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. இதனால் இலங்கை இராணுவத்தின் ஒரு முற்றான படைப்பிரிவே இப்பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை எடுத்துத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆம்
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
பெளத்த மதத்தினை மற்றைய மதங்களைக் காட்டிலும் முன்னிலைப்படுத்தி அதற்கான அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்குவது சிறிலங்காவின் அரசியலமைப்பு பெளத்த மதம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்கும். ஆகவே பெளத்த மதத்தையும், பெளத்த சாசனத்தையும் பாதுகாத்துப் பேணி வளர்ப்பது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும்". தம்மை மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் கூறிக்கொண்டபோதிலும், அடிப்படையில் அவர்களும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த தேசியவாதிகள் தான் என்பதனையே அவர்களின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன. தனது கட்சியின் இந்த நிலைப்பாட்டினை அநுரவும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, நியாயப்படுத்தி வருகிறார். அரசியலமைப்பினை மாற்றக்கூடிய பாராளுமன்றப் பலம் தற்போது அநுரவிற்குக் கிடைத்திருக்கின்ற போதிலும் அவரோ அவரது கட்சியோ அதற்கெதிரான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தல் நாடைபெறுவதற்கு சில தினங்கள் இருக்கும் வரையிலும் பெளத்த மதத் துறவிகளைப் போற்றிப் புகழ்வதிலும், கெளரவிப்பதிலும் அநுர சிரத்தையெடுத்து நடந்துகொண்டார். அவ்வாறான சந்தர்ப்பமொன்றான மகரகமவில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் சுமார் 1500 பெளத்த பிக்குகள் முன்னிலையில் பேசிய அநுர, "பெளத்த மதத்திற்குரிய அதி உன்னத ஸ்த்தானத்தினை வழங்குவேன், அதன் புனிதத்தினை எப்பாடுபட்டாவது பாதுகாப்பேன்" என்று உறுதிமொழி வழங்கினார். மேலும் அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினை எக்காரணத்திற்காகவும் தனது அரசு கைவிடாது என்றும் அவர் உறுதியளித்தார். அநுரவின் பெளத்த மதம் சார்ந்த நிலைப்பாடே கட்சிக்குள்ளும் பரவிக் கிடக்கின்றது. கட்சியின் முக்கியஸ்த்தரான கே.டி.லால்காந்த, இனவாதப் பிக்குகள் அமைப்பான பொதுபல சேனவின் ஸ்த்தாபகர் ஞானசாரத் தேரவுடன் நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் என்பதுடன் வெளிப்படையாகவே அவருடன் இணைந்து செயற்பட்டும் வருபவர். இவ்வருடம் மாசியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் மிச்செல் பாக்லெட் இலங்கை தொடர்பாக எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். "இலங்கையில் இராணுவமயமாக்கல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது. அரச நிறுவனங்களிலும் நிர்வாக அமைப்புக்களிலும் சிங்களத் தேசியவாதமும், பெளத்தமயமாக்கலும் முன்னெடுக்கப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இது சிறுபான்மையினங்களிடையே அச்சத்தினையும், ஸ்த்திரத்தன்மையீனத்தையும் ஏற்படுத்தியிருப்பதுடன், அச்சமூகங்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவும் இந்நிலைமை அழுத்தம் கொடுக்கின்றது. இதனால் சமூகங்களுக்கிடையே இணக்கப்பட்டினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவது கடிணமாக்கப்பட்டு வருகின்றது" என்று அவ்வெச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
இனக்கொலைக்கான பொறுப்புக்கூறல் முள்ளிவாய்க்கால் இனக்கொலையின்போது சிறிலங்கா இராணுவம் 167,676 தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. உணவும், மருந்துப்பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்ததுடன், காயப்பட்டவர்களைப் பராமரித்து வந்த வைத்தியசாலைகளும் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்தன. தமிழ்ப்பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் சிங்கள இராணுவத்தினரால் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்காணோர் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்காணோர் காணாமலாக்கப்பட்டதோடு இன்றுவரை அவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் வடக்குக் கிழக்கில் நீதிகோரிப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளும், போராட்டங்களும் இன்றுவரை உதாசீனம் செய்யப்பட்டே வருகின்றன. இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக பல ஐ.நா அறிக்கைகள் வெளிவந்திருப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்களும் காலத்திற்குக் காலம் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. தமிழ் மக்கள் ஒரு இனமாகவும், ஐ. நா மனிதவுரிமைச் சபையினூடாகவும் இறுதி யுத்தத்தில் தம்மீது நடத்தப்பட்ட பாரிய போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சர்வதேச மயப்படுத்தப்பட்ட யுத்தக் குற்ற விசாரணைகளுக்கெதிராக அநுர குமார திசாநாயக்கவும் அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டினையே எடுத்திருக்கின்றனர். இவ்வருட ஆரம்பத்தில் பேசிய அநுர குமார திசாநாயக்க, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்டதாக நம்பப்படும் போர்க்குற்றங்களையோ, மனிதவுரிமை மீறல்களையோ செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுவோரை தமது அரசு ஒருபோதும் தண்டிக்கப்போவதில்லை" என்று உறுதிபடக் கூறியிருந்தார். "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே தமக்கான நீதியினைக் கோரவோ, யுத்தக் குற்றங்களை விசாரிக்கும்படியோ என்னிடம் கோரவில்லையே" என்றுகூட அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஆனால், தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணை ஒன்றினூடாக விசாரித்து நீதி வழங்குங்கள், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் என்கிற ஒட்டுமொத்தக் கோரிக்கையினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற பின்புலத்தில் அநுரவினால் இவ்வாறான கூற்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதேவேளை இறுதி யுத்த காலத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று நன்கு அறியப்பட்ட பல முன்னாள்த் தளபதிகளை அநுரவின் கட்சி அரவணைத்து வருகிறது. ஹெயிட்டியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டு பல சிறுமிகளை பாலியல் தொழிலுக்காகக் கடத்தியவர்கள் என்று கண்டறியப்பட்ட இலங்கையின் மூன்றாவது பட்டாலியன் படைப்பிரிவின் தளபதியான ஜெனரல் அனுர ஜயசேகரவை அநுர தனது அரசின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்திருக்கிறார். மேலும் இலங்கை விமானப்படை தாக்குதல்ப் பிரிவின் தளபதியாக இருந்து இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலைகளில் நேரடியாகப் பங்காற்றிய ஒருவனை படைகளின் பிரதானியாக அநுர நியமித்து கெளரவித்திருக்கிறார். அநுர ஜனாதிபதியாகப் பதிவியேற்று சில தினங்களுக்குள் மேற்கொண்ட முக்கியமான இராஜதந்திர நகர்வாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை தனது அரசு முற்றாக நிராகரிக்கிறது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததைக் காணலாம். சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளைப் பாவித்து இறுதி யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடும் காலத்தை நீடிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதனை நிராகரித்தே அநுர குமார இந்த அறிவிப்பை மேற்கொண்டிருந்தார். சென்றமாதம் பேசிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சர்வதேச விசாரணைகள் தொடர்பான தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை மீள உறுதிப்படுத்தியதோடு, தமிழ் மக்களால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாக குற்றச்சாட்டுக்களை தமது அரசு விசாரிக்க முன்வரும் என்று கூறியிருந்தார்.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
13 ஆம் திருத்தச் சட்டம் குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருடனான சந்திப்பொன்றில் பேசும்போது 13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தனது ஆதரவு இருக்கும் என்று அநுர கூறியிருந்தார். ஆனால், அநுரவின் இந்தக் கூற்றினை அவரே மறுதலிக்குமாற்போல் அவரது யாழ்ப்பாணக் கூட்டத்தின் உரை அமைந்திருந்தது. "13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என்று பொய்கூறிக்கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்டு நான் வரவில்லை" என்று அவர் யாழ்ப்பாணத்தில் கூறினார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே செய்யப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாணசபை அடிப்படையிலான தீர்விற்கான ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கப்போதுமானது அல்ல என்று நிராகரித்திருந்த அதேவேளை, சிங்களவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக நாடு பிளவுபடும் என்று அதனை எதிர்த்து வந்தார்கள். 1987 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து அநுர தலைமை தாங்கிவரும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அது மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கெதிராக நடத்திய இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் 80 களின் இறுதிப்பகுதியில் நடத்தப்பட்ட இரத்தக்களறி நிறைந்த ஆயுதக் கிளர்ச்சி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை எதிர்த்தே நடத்தப்பட்டது. 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை எதிர்த்தே பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் பலியிடப்பட்ட கிளர்ச்சியை அது நடத்தியிருந்தது. "ஒரு அரசியட் கட்சியாக, சில தசாப்த்தங்களுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம், அது அமுல்ப்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்க்கிறோம். இலங்கையின் இறையாண்மையினைப் பாதுகாப்பதே எமது மிக முக்கிய கரிசணை என்பதோடு, அதனை அடைந்துகொள்வதற்காக எத்தனை உயிர்களைத் தியாகம் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம்" என்று அக்கட்சியின் முக்கிய பிரமுகர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். "இதுதொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை. இந்த நாட்டின் அரசியல்ச் சரித்திரத்தில் எமது நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் எமது இலட்சியத்தின் மேல் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு எப்போதும் ஒரேமாதிரியாகவே இருந்து வருகிறது, இனிமேலும் அது அப்படியே இருக்கும் என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதுதொடர்பாக எமது கட்சியின் உறுதிப்பாடு எப்போதுமே மாறதென்பதை எமது நாட்டு மக்கள் நிச்சயமாக நம்பலாம்" என்று அவர் மேலும் கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டு தி ஐலண்ட் எனும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், சமஷ்ட்டி அடிப்படையிலான எந்தத் தீர்வையும் தமது கட்சி எதிர்க்கும் என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் அவர் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறார். "இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக எழுந்தமானமாக இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரித்துப்போட்டதே எமது கட்சிதான். வடக்குக் கிழக்கு மாகாணஙகளைப் பிரிப்பதற்கு எமது கட்சி மூன்று வழக்குகளைப் பதிவுசெய்து போராடியது" என்றும் அவர் நினவுகூர்ந்தார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்றம் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை தனித்தனியே வட மாகாணம் என்றும் கிழக்கு மாகாணம் என்றும் நிரந்தரமாகவே பிரித்துப் போட்டது. இத்தீர்ப்பு வெளியானபோது நீதிமன்ற முன்றலில் கூடியிருந்த மக்கள் விடுதலை முன்னணியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பெருத்த கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 2010 ஆம் ஆண்டு அநுர குமார திசாநாயக்க பேசும்போது, "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு அரசியலமைப்பினூடாக எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தமது கட்சி எதிர்க்கும்" என்று கூறியிருந்தார். அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்திலும் "இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் பாதுகாப்பதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை" என்று மீளவும் ஆணித்தரமாகக் கூறியிருந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இறுதியாக அதிகாரத்தில் இருக்கப்போவது அநுர குமார திசாநாயக்கவா? இலங்கையில் ஆட்சிக்கு வந்த பல ஜனாதிபதிகள் நீண்டகாலமாகவே ஒரு விடயத்தைக் கூறி வந்திருக்கின்றனர். அதுதான் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையினை இல்லாதொழிப்பதென்பது. அந்தவழியில் அநுரவின் கட்சியினரும் தமது விஞ்ஞாபனத்தில் இம்முறையினை ஒழிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். புரட்டாதி மாதவாக்கில் கூட்டமொன்றில் பேசிய அக்கட்சியின் பிரமுகர் சுனில் ஹந்துநெட்டி, அநுரவே இறுதியான நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருப்பார் என்று குறிப்பிட்டிருந்தார். "நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்கிவிடக்கூடிய ஜனாதிபதியொருவர் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறார். இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவினைத் தருமாறு மக்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கோரியிருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியினை நீக்குவதனூடாக சர்ச்சைக்குரிய ஆட்சிமுறையொன்றினை இல்லாதொழிப்பது மட்டுமன்றி, ஜனநாயக ரீதியிலான மாற்றங்களையும் எம்மால் செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார். மக்களின் ஆதரவோடு இலங்கையின் அரசியல்ப் பாதையினை தம்மால் செப்பனிட முடியும் என்றும் அவர் கூறினார். "இது ஆரம்பம் மட்டும்தான், மக்களின் ஆதரவோடு இந்த நாட்டினை நாம் கட்டியெழுப்புவோம்" என்று அவர் கூறினார். மாகாண சபைகளை மீள செயற்படுத்துவது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தனது தேர்தல்ப் பிரச்சாரங்களின்போதும் தான் ஆட்சிக்கு வந்தவுடன் மாகாணசபைகளை ஒருவருட காலத்திற்குள் மீளவும் இயங்கச் செய்வதனூடாக மக்களும் அரசாட்சியில் பங்குகொள்ளும் சூழ்நிலையினை உருவாக்கப்போவதாக அநுர கூறியிருந்தார். இரத்தினபுரியில் பேசும்போது மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் தனது நோக்கத்தையும், உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் தனது நோக்கத்தினையும் அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார். "ஒரு ஜனாதிபதி, பலமான மந்திரிசபை, பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளூராட்சிச் சபைகள், நகர சபைகள் உள்ளிட்ட ஒரு அரசியல் பொறிமுறை இந்த நாட்டிற்கு மிகவும் அவசியம். நாம் ஆட்சிக்கு வந்த ஒருவருடத்திற்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவோம். அதுமட்டுமல்லாமல் உள்ளூராட்சிச் சபைகள், பிரதேச சபைகள், நகர சபைகள் போன்றவற்றிற்கான தேர்தல்களையும் நடத்தவிருக்கிறோம்" என்று அநுர அப்பேச்சின்போது குறிப்பிட்டிருந்தார்.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை இல்லாதொழித்தல் அநுர, தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்கள் மீது அடக்குமுறையினைக் கட்டவிழ்த்துவிடும் சட்டங்களை நீக்கப்போவதாகக் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அகற்றப்படவிருக்கும் சட்டங்களுள் மக்களின் சுதந்திரமான பேச்சிற்கும், ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கும் எதிராக இருக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டமும் உள்ளடக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 1979 ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் பின்னர் நிரந்தரமாகவே அமுல்ப்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தினூடாக தனிநபர்களை காரணமின்றித் தடுத்து வைப்பது, அவர்களைக் கால வரையறையின்றித் தடுத்து வைப்பது ஆகிய அதிகாரங்கள் தமிழர்களைக் குறிவைத்தே அரசுகளால் உருவாக்கப்பட்டுப் பாவிக்கப்பட்டு வந்தன. சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக எழுந்தமானமான கைதுகள், நீதிக்குப் புறம்பான விசாரணைகள், சித்திரவதைகள், அழுத்தங்களினூடான வாக்குமூலங்கள் ஆகியவற்றிற்கு காவல்த்துறையினருக்கும், இராணுவத்தினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஆனால், ஜனாதிபதியாக அநுர பதவியேற்ற சில நாட்களின் பின்னர் பேசிய ஜனாதிபதியின் செயலகத்தின் இயக்குநர் விஜேபண்டார இதுகுறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டினை இவ்வாறு தெரிவித்தார். "பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருக்கும் சிக்கல் என்னெவென்றால், அது சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிராகப் பாவிக்கப்படுகிறதென்பதேயன்றி அச்சட்டமே தவறென்பதென்பதில்லை" என்று பொருள்படக் கூறியிருந்தார். மேலும், "சரியான ஆதராங்கள், சாட்சியங்களைப் பாவிப்பதனூடாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீதியான முறையில் அமுல்ப்படுத்தப்படுதல் அவசியம். அரசியல்ப் பழிவாங்கல்களுக்காக இச்சட்டம் பாவிக்கப்படுவதையும் நாம் எதிர்க்கிறோம்" என்று அவர் கூறியிருந்தார். "இச்சட்டம் சரியான முறையில் பாவிக்கப்படுமிடத்து, எந்தப் பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, அவ்வளவுதான்" என்று வெகு சாதாரணமாகக் கூறியிருந்தார். இதேவேளை பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்துப் பேசிய அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் விஜித்த ஹேரத், "சட்டத்தை நீக்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை. சில மாற்றங்களைச் செய்யலாம், ஆனால் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நாம் பெறவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அன்று கேட்டுக்கொண்ட பாராளுமன்றப் பெரும்பான்மையும் இப்போது அவருக்குக் கிடைத்திருக்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைக் கோருவதைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்பதுடன் பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற அரச மயப்படுத்தப்பட்ட கொடூரமான அடக்குமுறை என்பதும் குறிப்பிடத் தக்கது.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? தேசிய மக்கள் கட்சியினர் நேற்றைய பாராளுமன்றத் தேர்தல்களில் அடைந்திருக்கும் பெரும்பான்மை வெற்றியின் ஊடாக அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர். இக்கட்சியினர் முன்னர் தமிழ் மக்கள் தொடர்பாக சில விடயங்களைச் செய்வதாக உறுதியளித்திருந்தார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை அடைந்திருக்கும் இன்றைய நிலையில் இக்கட்சியினர் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வாறான விடயங்களைச் செய்யலாம் என்பதுபற்றிப் பார்க்கலாம். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இக்கட்சியினர் 159 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இவ்வாறு வெற்றிபெற்றவர்களுள் பெரும்பான்மையினர் முதற்தடவையாக பாராளுமன்றம் வருபவர்கள். இவர்களுள் சிலர் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள். அரசியல்க் கைதிகளின் விடுதலை தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். தமிழர்களின் இரு முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகியவற்றில் தனக்கான ஆதரவினைப் பலப்படுத்தும் நோக்கில் அப்பகுதிகளில் கூட்டங்களை அவர் நடத்தினார். வவுனியா கூட்டத்தில் பேசும்போது தமிழ் அரசியல்க் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்கும் நோக்கம் தனக்கில்லை என்று பொருள்பட அவர் பேசினார். "பிரதம நீதியரசர் முன்வைக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல்க் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளை நாம் முன்னெடுப்போம்" என்று அங்கு அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்தல் வவுனியா கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அநுர, முன்னைய அரசாங்கங்களினாலும், அரச அதிகாரிகளினாலும் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழருக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க தான் ஆவன செய்வதாகக் கூறியிருந்தார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது சிங்கள மொழி உரையில் தமிழர்களிடமிருந்து அடாத்தாக அரசுகளால் பிடுங்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க விரும்புவதாகவும், தமிழ் மக்கள் பல தசாப்த்தங்களாக முகங்கொடுத்து வருகின்ற அரச அடக்குமுறைகளைத் தணிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்."நாம் வடக்கில் காணிகளை வழங்கினால் தெற்குக் கொந்தளிக்கிறது, அவ்வாறே தெற்கிற்கு வழங்கினால் வடக்கு கொந்தளிக்கிறது" என்று அவர் பேசினார். வடக்குக் கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று தொனிப்படவே அவரது கருத்து அமைந்திருந்தது. ஆனால் தனது கருத்திற்கான ஆதாரங்களை அங்கு முன்வைப்பதை அவர் தவிர்த்துக்கொண்டார். முள்ளிவாய்க்கால் இனக்கொலை நடந்தேறி பதினைந்து வருடங்களை கடந்த நிலையிலும் இன்றுவரை வடக்குக் கிழக்கில் பெருமளவு பிரதேசங்களை சிங்களப் படைகள் ஆக்கிரமித்தே வைத்திருக்கின்றன. இதே காலப்பகுதியில் சிங்கள பெளத்தர்கள் தமிழர் தாயகத்தில் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி மேலும் பல பிரதேசங்களை தொல்லியல்த் திணைக்களமும், வனப் பாதுகாப்புத் திணைக்களமும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. வடக்குத் தமிழரின் நிலங்கள் முன்னைய அரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் எவ்வாறு இருந்தபோதிலும் நாம் அவற்றினை விடுவிக்க ஆவன செய்வோம் என்று அவர் வவுனியா உரையில் கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தியில் விஞ்ஞாபனத்தில் "நிலப் பகிர்ந்தளிப்பில் காணப்படும் பாகுபாடுகள் தனியார்மயப்படுத்துவதனால் உருவாக்கப்பட்டவை" என்று குறிப்பிட்டிருந்தது. ஆக, காணிகள் தனியார்மயப்படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுவதாலேயே அதுகுறித்த அரசியல்ப் பிரச்சினை உருவாகிறது என்று அது நியாயப்படுத்தியிருந்தது. ஆகவே இக்காணிப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்க தற்காலிக நீதித்துறை அமைப்பொன்றினை உருவாக்கி, இப்பிரச்சினைக்கான நீதியானதும், விரைவானதுமான தீர்வுகளை வழங்க தான் விரும்புவதாக அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் தெரிவித்திருந்தது. இன்றைய நாள்வரை தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களும், சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களும் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டிலும் அருச்சுணாவிற்கே வாக்களித்திருக்கலாம் என்று நீங்கள் சொல்கின்ற காலம் விரைவில் வரும். அதேவேளை யுடியூப்பில் அநுர புராணம் பாடி சொந்த வயிறு வளர்க்கும் கயவர்களின் கைங்கரியத்தினால் சிங்கள இனவாதிகள் தமிழர் தாயகத்தை ஊடறுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்
படுதோல்வியடைந்த நிலையில் அநுரவிற்கு வகுப்பெடுக்கும் சுத்துமாத்து- அரசியல் சதிகள் அம்பலம்
அழைப்பிற்கு நன்றி சிறி, ஆனால் எதுவும் இங்கு எழுதத் தோன்றவில்லை, பார்க்கவும் பிடிக்கவில்லை. சிங்கள இனவாதிகளைத் தமிழர்களே தூக்கிக்கொண்டாடும் காலத்தில் இருக்கிறோம். இதில் பேசுவதற்கென்று எதுவுமில்லை. நடப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.